Popular Posts

Saturday, 30 April 2016

மாண்ட தோழர்களே உங்களுக்கு வீரவணக்கம்



மாண்ட தோழர்களே உங்களுக்கு வீரவணக்கம்


மே 1 பேரெழுச்சி ஏற்பாடுகள்....
மேமாதம் என்றால் எல்லோரும் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து புறப்பிட்டு விடுவர். இவர்கள் எல்லோருமே தத்தம் நாட்களில் முக்கிய தினமாகக் கொண்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தொழிலாளர் வர்க்கத்தின் தினத்தையும் அபகரித்துக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்கு போட்டி போட்டுக் கொண்டு உலகில் இருக்கின்ற தொழிலாளர் விரோத சக்திகள் அனைவரும் புறப்பட்டு விடுவார்கள். இதுதான் பல பத்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இவைகளில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். உண்மையான வர்க்க முகாம் எது என்பதை தெளிவுபடுத்தி விழிப்புணர்வு கொள்ள வைப்பது அவசியமாகும்.
மே தினம் உழைப்பாளருக்கு உரியது இது
உற்பத்தி சாதனத்தை உடமையாகக் கொள்ளாதவர்கள் > உற்பத்தி சக்தியை விற்றுப் பிழைப்பவர்கள்
உற்பத்திச் சாதனத்தை அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்என்று  போராட வேண்டும் என்று அறிவுறுத்தும் நாள்
உற்பத்தி சக்தி விற்றுப் பிழைப்பவர்கள் உற்பத்திச் சாதனங்களை கட்டுப்படுத்தும் உரிமையை அறிவுத்தும் நாள்.
தமது உரிமைக்காக போராடும் நாள். தெருக்களில் நனையப்பட்ட இரத்தங்களை கொடியாகக் கொண்டு ஒன்றிணையும் நாள். தமது உரிமைப் போராட்டம் சர்வதேசியம் கொண்டது என்று வலியுறுத்தும் நாள். ஆகவே இந்த நாளை எமக்காக விட்டு விடுங்கள்.
உலக வரலாறு தொழிற்துறை யுகத்திற்கு வந்த பொழுது தொழிற்சாலை ஊழியர்களை உருவாக்கிக் கொண்டது. இவர்கள் மூலதனத்தை தமதாக்கிக் கொள்ளவில்லை. இவர்கள் மூலதனம் கொண்ட பணக்காரர்களின் ஆலைகளில் தமது உழைப்பை விற்றுப் பிழைத்தனர்.
தாம் பெறும் ஊதியத்திற்கு பதிலாக தமது உழைப்பினை 16- 20 மணித்தியாலங்கள் விற்கவேண்டியிருந்தது. இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டியே முதலில் போராட்டத்தைத் தொடங்கினர்.
முதலில் குறைந்த நேரம் கேட்டுப் போராடி வந்தனர். இந்த நேரம் 10மணித்தியாலங்கள் என நிர்ணயித்தே போராடினர். அமெரிக்க நகராகிய பிடடெல்பியா மாநிலத்தில 1806 முதல் முதலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தலைவர்கள் பலரை சதி வழக்குகளில் அவர்களை சிக்கவைத்தனர். இவைகள் அனைத்துக் காலத்திலும் போராட்ட முன்னணி வீரர்கள் கொல்லப்படுவதை சரி வழக்குகளில் சிக்கவைப்பது பணம் படைத்த வர்க்கத்தவர்களின் நடைமுறையாகவே இருந்து வந்துள்ளது. இவற்றையும் மீறி பல போராட்டங்கள் சிதைவுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தன.
உலகின் முதலாவது தொழிற்சங்கம் அமெரிக்க நகராகிய பிடடெல்பியா மாநிலத்தில் தான் உருவாகியது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பிரித்தானியாவில் தொழிற்சங்கங்கள் உருவாகியது. 1827ல் பிடடெல்பியா கட்டிடத்தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் தான் 10 மணிநேர வேலை நேரம் குறித்த கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களுக்காக வாதிடுபவன் (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை கொண்டுவரப்பட்டது.
1837இல் சில இடங்களில் 10 மணி வேலை நேரம் அழுலுக்கு வந்தது. இதேபோல 1856ல் அவுஸ்ரேலியாவில் 10 மணி வேலை நேரம் அழுலுக்கு வந்தது.
இவ்வாறு பல தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டு போராட்;டங்களின் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு என்பது அடையாளம் காட்டப்படுகின்றது. இந்தக் காலத்தில் தோன்றிய பலதலைவர்கள் மனித குலத்திற்கு முன்னேற்றம் கொண்ட பாதைகளைக் காட்டினார்கள். இந்தக் கால இடைவெளிகளில் பொதுவுடமை அறிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த அறிக்கையின் மூலம் போராட்டத்திற்கான வழியைக் காட்டியது. இதே போல ஆசான் மார்க்ஸ் எழுதிய மூலதனமும் முதலாளித்துவ வர்க்கத்தின் கொடிய முகத்தை உழைக்கும் மக்கள் முன் கொண்டு வந்தது. அவர் முதலாளித்துவ வர்க்கத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
இந்தக் காலத்தில் முதலாம் அகிலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டியது. உலகத் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை பெருக்க போராடியது. இவர்கள் இன, மத, மொழி,தேச எல்லை கடந்து தொழிலாளர் வர்க்கம் என்ற உயர் விழுமியத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது.
மேதினத்திற்கு காரணமாக இருந்த போராட்டத்தின் தயாரிப்பை 1885களில் தொழிலாளர்களின் உரிமை (Rights of Labour) என்ற அமைப்பு ஒழுங்கு செய்தது. அதில் உறுப்பினர்கள் உணர்வு பூர்வமாக சேர்ந்தனர். இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியது. போராட்டங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்தன. பல தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தங்கள் தொடரப்பட்டன.
1886ம் ஆண்டு இடதுசாரி தொழிலாளர் இயக்கத்தின் ஐக்கிய முன்னணியினால் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.

1886 நடைபெற்ற மே தின ஊர்லவத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் பலர் காயமடைந்தனர், ஒரு இராணுவ அதிகாரி, 7 காவலர்கள், 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னராக பல போராட்டத்தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களின் போராட்டம் என்பது ஆரம்பத்தில் வேலைநேரக் குறைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  இது இருந்த பொழுதிலும் தொழிற்புரட்சியினால் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம் என்பது மற்றைய நாடுகளிலும் இவ்வாறான உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முதலாம் சர்வதேச அகிலம் குரல் கொடுத்தது, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இதன் பின்னர் உருவாகிய இரண்டாம் அகிலமும் போராட்டங்களை முன்னடத்தியது, தலைமை தாங்கியது,அறிவுறுத்தல்கள் வழங்கியது.
1889ல் கூடிய இரண்டாம் சர்வதேச அகிலத்தின் 1வது மாநாட்டில் 8மணி நேர வேலைக்கு போர்க்குரல் கொடுப்பதாக அறிவித்தது. அந்த மாநாட்டில் 'எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணிநேரத்தை சட்ட பூர்வமாக்க கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பரீஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது." இதன் அறிவுறுத்தலின் பேரில் உலகில் அனைத்து நாடுகளிலும் போராட்டத் திகதியாக்கப்பட்டது.
இது குறித்து ஏங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகின்றார்.

 'நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. ஆது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணிநேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காக திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சியை உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும்,  நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியை பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்.." இவ்வாறு தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்.

இதே காலத்தில் மேதினத்தை வெறும் ஓய்வு நாளாகவும் பொழுது போக்கு நாளாகவும் மாற்றவும் முயற்சிகள் நடைபெற்றேறியது. எனினும் போராட்ட முன்னணிப் போராளிகளின் முயற்சியால் காலத்துக்கு காலம் அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் இன்றைய நிலை என்பது வெறும் பிற்போக்குத் தனத்தின் கூடாரமாகவே மேதினம் நினைவு கூரப்படுகின்றது.
நினைவு கூறலா அல்லது விடுமுறை தினமா அல்லது போராட்டத்தை தொடருவதற்கான பயிற்சிப் பட்டறையா?


ஐரோப்பிய நிலை....
ஐரோப்பாவில் இரண்டாம் அகிலத்தின் போராட்டப் பாதையின் தெரிவானது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதான இருந்தது. இவர்கள் சொல்லில் சமதர்மத்தையும், செயலில் முதலாளித்துவத்தையும் பின்பற்றினர். இவர்களை சமூக ஜனநாயகவாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே உருவான பிரபுத்துவ பிரிவினருக்காக கொள்கைகளை மாற்றிக் கொண்டனர். இதனால் முதலாளித்துவப் பாதையாளர்களாக மாறினர். சமூக ஜனநாயகவாதிகள் இரண்டாம் அகிலம் என்ற சர்வதேச தொழிலாளர் வர்க்க அமைப்பையே தமது அமைப்பாக பின்னாளில் கொண்டு வந்தனர். பிரபுத்துவ வர்க்கப் பிரிவினரே மேதினத்தை கழியாட்ட விழாவாகக் கொண்டு வந்தனர். இதனால் சர்வதேச உழைப்பாளிகள் இதனைத் தவிர்த்தி மே தினத்தில் வருகின்ற முதலாவது ஞாயிறு அன்று உழைப்பாளிகள் தினத்தை அனுசரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதில் இருந்து மாறுபட்டு 1917 நடைபெற்ற முதலாவது சமதர்ம நாட்டின் உருவாக்கம் என்பது உலகின் எல்லாப் பாகங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஊட்டியது. இந்தப் புரட்சியும்,  அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற உத்வேகமும் இந்த தினத்தில் உறுதிமொழி எடுக்கும் தினமாகவும், மக்களை அணிதிரட்டும் தினமாகவும் கொள்ளப்பட்டது.
ஆனால் தொடர்ந்தும் சமூக ஜனநாயகவாதிகள் தொடர்ச்சியாக அவர்களும் உழைப்பாளர் பிரிவாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு மேதினத்தை அனுசரிக்கின்றனர். இருந்த போதிலும் மேதினத்திற்கு என்றே ஒருக்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்தி ஒரே ஊர்வலமாக அனேக சந்தர்ப்பங்களில் நடைபெறுகின்றன. இந்த ஊர்வலத்தின் போது அவரவர் பதாதைகளை தாங்கிச் செல்கின்றனர்.
இந்தப் ஊர்வலத்தில் யாரும் விண்ணப்பிக்க முடியும். இந்த ஊர்வலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு அமைய பிற குழுக்களை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு இணைந்து கொள்கின்ற மற்றைய தேசத்தவர்கள் தத்தம் கருத்துக்களை முன்கொண்டுவர சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது.
அதே வேளை ஒருங்கிணைப்புக்குழுக்களிடையே முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. அது குறிப்பாக சமூக ஜனநாயக கட்சிகளுக்கும் - பொதுவுடமைவாதிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதுண்டு. அவ்வேளை வெவ்வேறான ஊர்வலங்களை நடத்திக் கொள்வர். சிலவேளைகளில பிரதான ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னரே தமது ஊர்வலங்களை நடத்துவர்.
இங்கிருக்கின்ற பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டதுதான். உழைக்கும் வர்க்கம் வர்க்க ரீதியாக விழிப்படையாமல் இருப்பதாலும்> பிரபுத்துவ வர்க்கதன்மை கொண்ட தொழிலாளர்கள் தமது பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தும் கோசங்களையும்> நாடாளுமன்றத்தில் ஊறித்திளைத்த கட்சிகளின் கொள்கை பிழைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறான கட்சிகள் ஐரோப்பாவில் தொழிலாளர் கட்சி அல்லது சமூக ஜனநாயகக் கட்சி அல்லது சோசலிசக் கட்சி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கட்சிகள் சோலிசப் பாதையை கைவிட்டு விட்டார்கள். இவர்களின் அரசியல் முதலாளித்துவ பொருளாதார சித்தாந்தத்தை பின்பற்றுவன. இந்தக் கட்சிகளின் ஆட்சியில் தான் உலகின் பல யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. முதலில் முதலாம் உலக யுத்தத்தின் போது தாயகத்தைப் பாதுகாப்போம் என்று மற்றைய தேசத்தின் உழைக்கும் வர்க்கத்தவர்கள், சொந்த உழைக்கும் மக்களின் புதல்வர்கள் களத்தில் மாண்டு மடிய ஆதரவு கொடுத்தனர். இவர்கள் செய்திருக்க வேண்டியது என்னவெனில் சந்தையைப் பிடிப்பதற்காக தொடுக்கப்படும் யுத்தத்திற்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டும்.
இவர்களின் வழிவந்தவர்களே இன்று பெயரில் சமதர்மக் கட்சிகள் என்று கூறிக் கொண்டு உலகின் பலபாகங்களிலும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் புதிய உலக ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான போரை ஆதரிக்கின்றனர். இவர்கள் படைகளை அனுப்பி உலகத்தில் இருக்கின்ற வளங்களை தமக்கு இலகுவாக கிடைப்பதற்கு வழிவகை செய்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா தவிர்ந்த உலகம் வறிய நாடுகளை இவர்களின் கழிவுகளை சுமக்கும் நாடுகளாகவும், மலிந்த வகையில் கனிவளங்களையும், மூலப்பொருட்களையும் கொடுக்கும் நாடுகளாக தொடர்ந்து வைத்திருப்பதை கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். சோசலிசத்தின் பெயரில் இயங்கும் முதலாளித்துவ பாதுகாவலர்கள் தொடர்ந்தும் தொழிலாளர் வர்க்க நலன் என்றும், ஜனநாயகத்தை (promoting) விதைப்பதான கூறிக் கொண்டு மற்றைய தேசங்களின், தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்கின்றனர்.


இதில் ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தேசியம் என்ற குடையின் செல்பவர்கள் தொழிற் சங்கத்ததைப் பற்றியோ அல்லது தொழிலாளர் வர்க்கப் போராட்டம் பற்றியோ தெளிவு இல்லாதவர்கள். இலங்கையில் பழக்கப்பட்ட சமூக உறவின் எச்சங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதாவது ஆணவம், அகம்பாவம், ஆதிக்கத்திமிர், ஆண்டான் அடிமைச் சிந்தனையான இவர்கள் கீழானவர்கள் என்ற மனப் போக்கு இவைகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இவர்கள் தான் கொடி பிடித்துக் கொண்டு செல்பவர்கள். இவர்களுக்கு மேதினம் என்றால் தேசியத்திற்காக கொடிபிடிப்பதுதான் அர்த்தம் என விதைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூறும் உலகத் தொழிலாளர் ஒற்றுமைதான் என்ன? இதுபற்றிய சிந்தனையை 2009 பின்னராக காலத்தில் கூட கண்டடைய முயற்சிக்கவில்லை.

மே தினம் என்றாலே எமது நாடுகளில் ஏதே திருவிழாவிற்கு ஆயத்தம் செய்வது போல அனைத்துக் கட்சிகளும் ஆயத்தத்தில் இறங்கி விடுகின்றனர். இவர்கள் ஏன் இதனை அனுசரிக்கின்றனர் என் எந்த அடிமட்ட தொண்டனும் கேட்பதும் இல்லை. அதுபற்றி விளக்கம் கொடுக்க கட்சியும் இல்லை. இதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விளக்கத்தை தருவர். இவற்றில் இருந்து இன்றைய நிலையைப் பார்ப்போமானால் முதலாளித்துவ கட்சிகளின் கழியாட்ட விழாவாக இன்று மாறியுள்ளது. முதலாளித்துவ கட்சிகளுக்கும் மே தினத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா?
இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே முதலாளித்துவத்தின் சுரண்டலை எதிர்த்தே. இங்கு உற்பத்தி சாதனத்தை உரிமையாகக் கொண்டவர்கள் கட்சியை வழிநடத்துகின்றனர். இவர்களின் அரசியல் என்பது முதலாளிகளின் நலன் கொண்டதாகவே இருக்கின்றது.  
வர்க்க முரண்பாடுகள் கொண்டிக்கும் நிலையில்   சக்திகள் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கின்ற  போது வர்க்கங்களுக்கு அப்பால் நடுநிலையாக நிற்பதாக வெளியில் காட்டிக்கொண்டு நிற்கும் அரசு உள்ளது.
 இன்றைய கட்சிகளை எடுத்துக் கொண்டால் திறந்த பொருளாதாரம் தான் எனக் பிரகடனப்படுத்துகின்றனர். தேசியத்தை பேசிக் கொண்டு அவர்களும் திறந்த பொருளாதாரம் என்றுதான் பிரகடனப்படுத்துகின்றனர்.
இவ்வாறாயின் சொத்துரிமையை பாதுகாப்பவர்களுக்கும் கூலிக்கு உழைப்பை விற்பவர்களின் நலனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? இவர்கள் இருவரின் நலனும் வெவ்வேறானவையாகும். ஓன்று சுரண்டுபவர் மற்றது சுரண்டப்படுபவர்.
இவர்கள் இவ்வாறு இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் கழியாட்டமாக இந்த நாளை பயன்படுத்துகின்றனர். இவர்களின் மேடைகளில் திரைப்பட நடிகர்கள், பிரபல இசையமைப்பாளரால் இசைக் கச்சேரி நடத்தப்படும். இது ஒரு பெரும் திருவிழா போல நடத்தப்படும்.
பிரதான மைதானத்தை தமக்குரியதாக்க  இப்பவே போட்டிகள் பிரதான கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளன.  ஆனால் சுதந்திரமான தொழிலாளர் அமைப்புக்கள் நிர்மூலம் செய்ப்பட்ட நிலையில் தான் முழு தேசம் இருக்கின்றது. வடக்கில் இராணுவ பிரசன்னம் மக்களை சாப்பிட மட்டுமே வாயைத் திறக்கவும் நிலைதான் இருக்கின்றது.
அதேவேளை மற்றைய தேசிய இனங்களை அடக்கிய நிலையில் பிற்போக்கு தேசியமாக உருவெடுத்த நிலையில் தொடர்ச்சியாக அதிகார கட்டமைப்பை தமது கையில் வைத்திருக்கவும், உழைக்கும் மக்களை திசைதிருப்பிக் கொள்ளவும் இந்த மேதினம் பயன்படுத்தப்படுகின்றது. இடதுசந்தர்ப்பவாதிகளும் தேசத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டால்  எங்கே சிங்கள பெருந்தேசிய மக்களின் உணர்வு பாதிக்கப்படுமே என்று செயற்படுகின்றார்கள்.


குறுக்கீடுகள்.....
தொழிலாளர்களை பிரித்து வைப்பதற்கோ அல்லது வர்க்க உணர்வைப் பெற முடியாது செய்வதற்கு பல சக்திகள் இன்றைய பொருளாதார அமைப்பால் உருவாக்கப்படுகின்றனர். இவைகள் ஊடகங்கள், உப கலாச்சாரங்கள், புதிய மதக்குழுக்கள், புதிய நோய்தீர்க்கும் ((Healing Therapy) பாதைகள் என புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவற்றின் மூலமாக மக்களின் சமூக உறவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றனர். இவர்களில் பொருளாதார அமைப்பினால் உருவாக்கப்படும் துன்பியல் விளைவுகளை சரிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தப் பொருளாதார அமைப்பின் விழைவே எல்லாவற்றிற்கும் காரணம் என தெரிந்தும் ஆழும் வர்க்கத்தின் ஆதரவுப் பிரிவுகள் உப வழிகளைக் காட்டி மக்களை திசைதிருப்புவதுடன் அவற்றை ஒரு சந்தையாகவும் பயன்படுத்துகின்றனர்.

அரசியல் கட்சிகள் போலவே குறிப்பாக கிறிஸ்தவ மதப்பிரிவினரும் மேதினத்தைக் அணுசரிக்கின்றனர். இவர்கள் இதற்கு மத அடையாளம் கொடுக்கின்றனர். இலங்கையில் சூசையப்பரை தொழிலாளர்களின் தெய்வமாக வழிபடுகின்றனர் என. இந்தத் திகதியிலே சூசையப்பர் தினமாக நினைவு கூர்கின்றனர்.
கட்சிகளின் தொழிற்சங்கங்கள் என்று ஒவ்வொரு கட்சிகளும் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அவர்களின் வர்க்க நலன் பொருட்டு ஒன்று சேர விடாது. தத்தம் கட்சியின் மீதான வெறிப்பார்வைகளை ஊட்டிக் கொண்டு உழைப்பாளிகளை நடிகர்களின் ரசிகர் மன்ற உறுப்பினருக்கு கீழாகவே இவர்கள் வைத்திருக்கின்றனர். இந்த நிலமை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் ஒரே நிலமைதான் இருக்கின்றது.


சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க, இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் உட்பட மற்றைய கட்சிகள் எடுத்துக் கொண்டால் எல்லாக் கட்சிகளுமே உற்பத்தி சாதனத்தை உடமையாக கொண்ட வர்க்கத்தவர் நலன்பேணும் கட்சிகளாகவே இருக்கின்றன. இவ்வேளையில் இவர்கள் தமக்கென தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டு உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இன்றைக்கு தொழிற்சங்கம் என்ற போர்வையில் அதன் தலைமையில் இருப்பவர்கள் முதலாளிகளே. தொண்டைமான்கள் என்ன ஒன்றும் இல்லாத ஏழையா? இல்லைவே இல்லை. இவர்கள் மக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு வருகின்ற காரணத்தினால் இவர்களால் இவர்களின் வர்க்க நலனைப் பாதுகாக்கும் பொருட்டு எந்தக் கட்சி வந்தாலும் அமைச்சர்களாக இவர்களால் இடம் பிடிக்க முடிகின்றது.
தொழிலாளர் வர்க்க நலன் என்று கதைத்துக் கொண்டு அரசு என்பதே உழைக்கும் மக்களுக்கான ஒடுக்குமுறை ஸ்தாபனம் தான். இந்த அமைப்பிற்கு உட்பட்டதுதான் இராணுவம், பொலீஸ், நீதித்துறை என்பன உழைக்கும் மக்கள் எழுச்சி கொள்கின்ற போது அடக்கும். இவர்கள் முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலர்களே. இவ்வாறான வேளையில் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் அமைப்பினுள் அங்கம் வகித்துக் கொண்டு உழைக்கும் மக்களுக்காக போராட முடியும் என்று எவரும் கூற முடியாது. இது உழைப்பாளிகளுடன் எப்பொழுதும் முரண் கொண்ட ஒரு நிறுவனம் அமைப்பு.
ஏன் ஜே.வி.பி, ல.ச.ச.க, இ.க.க இவைகளை அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளாக இருந்திருக்கின்றார்கள்.  உழைக்கும் மக்களின் நலனைப் பேணக் கூடியதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. ஏன் ஜே.வி.பி, ல.ச.ச.க, இ.க.க இவைகளை இவ்வாறான வரையறைக்குள் இருந்துதான் இதனைப் பார்க்க முடியும். இவ்வாறு இருக்கையில் உழைக்கும் மக்கள் இவ்வாறான பிற்போக்குவாதிகளுக்குப் பின்னால் அணிதிரள்வது அவர்கள் தமது தலையிலே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பாகும்.
இனி மறுபடியும் மேதினத்தை உழைக்கும் மக்களுக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும். போராட்ட வரலாற்றில் முன்னர் 8 மணிநேர வேலை என்று தொடரப்பட்ட பொருளாதார குறிக்கோளுக்கான போராட்ட உள்ளடக்கம் காலத்துக்கு காலம் மென்மேலும் வளர்ச்சிடைந்தே வந்திருக்கின்றது.

இன்று சுவீடன் நாடு 6 மணிநேரத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இங்கு தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை மென்மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இங்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கமாகும். இங்கு தனியே  தொழிலாளர் வர்க்கத்தின் உரிமையை உறுப்படுத்துவது நோக்கமாகும். இனிவருங்காலத்தில் 6 மணிநேரத்திற்கான போராட்டப்பாதையை வகுக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் மேலதிகமாக உழைப்பாளர்களை வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு ஓய்வு பெறும் வயதை அதிகரித்துக் கொண்டு செல்வது என்பது உபரியாக தொழிலாளர்களை வைத்திருப்பதற்காகும். இவ்வாறு உபரி வேலையில்லாத தொழிலாளர்களை வைத்துக் கொள்வதன் ஊடாக தொழிலாளர்களை பிரித்தாள இலகுவாக இருக்கும் என்பதாகும்.
தொழில் வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆண்தொழிலாளர்களே உழைப்பை விற்கின்ற நிலைக்கு வந்தனர். இவர்களை நம்பியே இவர்ககளின் குடும்பம் இருந்திருக்கின்றன. தொழிற்துறை வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழிற்பிரிவினை என்பது சிறுவர்கள், பெண்கள் என உழைப்பை விற்பதற்காக சந்தைக்கு வந்தனர். இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஆண் தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியை விட குறைவானதாக இருந்தது. இந்த நிலையை மாற்றும் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறாவிடினும் பல மாற்றங்களை இன்று கண்டுள்ளது.
தொழிற்சங்கத்தின் மூலம் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றும் காலம் வரைக்குமான போராட்டத்தின் படிமுறை வளர்ச்சியாக ஒவ்வொரு போராட்டத்தையும் சட்டரீதியான, சட்ட ரீதியற்ற போராட்டங்கள் மூலம் பெற முடிகின்றது. மூலதனத்தின் பெருக்கத்தின் அவசியம் கருதி முதலாளித்துவமும் எழுத்துருவில் தொழிலாளர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதித்துள்ளது.  அவ்வாறு இருந்த போதிலும் மூலதனத்திற்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது அதன் உழைப்பாளிகள் மீது தடைகளை ஏற்படுத்தி மூலதனத்தைப் பாதுகாத்து வந்துள்ளது. இந்த வேளையில் இன்றைய காலமானது உரிமைகளை வெறும் பேச்சுக்கும், ஐரோப்பிய பாணி என புகுத்தல் மூலம் உலகை தமது சந்தைக்கான ஒரு தளங்களாக பயன்படுத்தும் நிலையும் இருக்கின்றது. இந்த நிலையைப் எதிர்ப்பது என்பது வெளிமூலதனத்தின் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாகின்றது.
தொழிற்சங்கத்தின் மூலம் பொருளாதாரப் போராட்டங்களில் மாத்திரம் திருப்பி கொள்ளாது மென்மேலும் வெற்றி கொள்வதற்கான அணுகுமுறை கொண்ட போராட்ட வடிவங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கப் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தின் அம்சமாகும்.
இவற்றிற்கு எல்லாம் எதிரியாக வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் உழைக்கும் மக்களின் எதிரிகளே. இந்த நாளில் மே தினத்தினை உழைக்கும் மக்களுக்கு உரியதாக்க உள்ள அளவுகோல் இதுவாகும். இதனைக் கொண்டு உழைக்கும் மக்கள் யார்? உற்பத்தி சாதனங்களை பாதுகாக்கும் வர்க்கத்தவர் யார்? என்ற அளவுகோல் முக்கியமானதாகும்.
மேதினத்தை உழைக்கும் மக்களுக்காகவே விட்டுவிடுங்கள், உங்களுக்கோ பல விழாக்கள் இருக்கின்றன. உங்கள் வர்க்கத்தின் தேவையை அங்கே தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் உழைக்கும் மக்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் நனைந்த இந்த நாளை உழைக்கும் மக்களின் முன்னணி படைகளாக உருவாக்க இந்த தினத்தை மறுபடியும் எடுக்க வேண்டும். இந்தத் தினம் வெறும் சாத்திர சம்பிரதாயங்களுக்குள்ளான சோக வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும். எங்கள் நாளை நாமே நினைவு கோர உரிமையுடையவர்கள்.

முதலாளித்துவ- தேசிய - ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தின் ஊடாகவே உழைக்கும் மக்களின், மறுகாலனியாதிக்கத்தில், சிங்கள பேரினவாதத்தின் ஓடுக்குமுறையில் இருந்து வெற்றிபெறமுடியும்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!!!!!!

Thursday, 21 April 2016

மதம்- பொருளாதாரம்- மாற்றப்படும் அடையாளங்கள்!!!




மதம்- பொருளாதாரம்- மாற்றப்படும் அடையாளங்கள்!!!

1. அறிமுகவுரை

இன்றைய காலத்தில் மதங்களைப் பற்றிய விவாதங்களும் கருத்துக்களும் வெவ்வேறு புரிதல்களுடன் இடம்பெறுகின்றன. கடவுளையும், மதங்களின் வளர்ச்சிப் போக்கினை புரிந்து கொண்டு விவாதிப்பவர்கள் வெகுசிலரே இருக்கின்றனர். விஞ்ஞான முறையிலான புரிதல்களை அற்ற காரணத்தினால் முறையான வழிகளில் விவாதிக்கவும், புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவும் தடையாக இருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் உள்ளது போன்ற  பகுத்தறிவுப் பிரச்சாரப் பாரம்பரியமும் செயற்பாடுகளும் இருக்கவில்லை. இது ‘‘பாரம்பரிய இடதுசாரிகள்‘‘ அல்லது விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட பெரிதாக கவனம் கொள்ளப்படவில்லை.  மதம் பற்றிய விவாதங்கள் என்பது முக்கியமானதும் அவசியமானதாக இருக்கின்றது.  இலங்கையில் சமூக அமைப்புகள், தனிநபர்கள், அரசியல் அமைப்புக்கள் மதம் பற்றிய பிரச்சனையில் பின்வாங்கிய நிலையில் தான் இருக்கின்றது. மதம் பற்றி போதியவகையில் கருத்தாக்கம் செய்ய முனைவதில்லை. இந்தப் புத்தகத்தை பதிப்பிக்க கேட்டு அணுகியபோது ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தாக்குகின்றது என்ற அதிர்ச்சிப் பதிலும்  சில சக்திகளிடம் இருந்து கிடைத்தது. இவ்வாறான கருத்து என்பது அதீத நம்பிக்கை வைக்கின்ற போது ஏற்படுகின்ற தனிமனித அதிர்ச்சி மாறாக அது சமூக அமைப்பில் இயல்பான நிலையில் இருந்து பார்க்கின்ற போது அதிர்ச்சி கொள்ளத் தேவையில்லை. 
இங்கு குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றியதாக கொள்ளத் தேவையில்லை. இந்தக் கட்டுரை எழுதப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இது கிறித்துவத்தின் உள்ளீடு தேசிய இறையியலே! என்ற சிறு விரிவுரைக்கு எழுதப்பட்ட விமர்சனமாகும். மதங்களின் பிடியில் இருக்கின்ற சமூகத்தில் இருந்து எழும் கேள்விகளில் அடிப்படையில் மேலும் விரிபுபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இங்கு விமர்சனம் கட்டுரையாளரை நோக்கி கேள்வி  எழுப்புவதில் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் கட்டுரையாளர் ஒரு பெரும் ஆய்வாளர். இவ்வாறான விமர்சனத்தை கவனத்தில் கொள்ளப் போவதில்லை. ஆனால் இக்கட்டுரையை வாசித்தவர்கள் பல விமர்சனங்களையும், விளக்கங்களையும் பெறவேண்டியது அவசியமாகின்றது. எனவே கட்டுரையாளரை விமர்சிப்பதை தவிர்த்து கருத்தின் மீதான விமர்சனமாக இங்கு வரையறுத்துக் கொள்ளப்படுகின்றது.

இங்கு அதிக மேற்கோள்கள் விடயங்கள் கிறிஸ்தவ மதத்தினை கொண்டதாக இருக்கின்ற காரணத்தினால் அது தனியே குறிப்பிட்ட மதத்தினை மாத்திரம் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் மாறான உலகக் கண்ணோட்டங்களில் உள்ள மாறுபாடுகளை பொருத்தமான வகையில் உள்வாங்கப்படுகின்றது.
அதவாது இன்றைய வாழ்வில் எவ்வாறு மதவாதிகள் ஆதிக்கத்திற்காக மேற்கொள்ளும் வாதப்பிரதிவாதங்கள் அணுகுமுறைகளை போன்றவற்றை எதிர்த்து வாதங்கள் கொடுக்கக்கூறிய முறையில் இருந்து முழு ஆக்கமும் எழுதப்படுகின்றது.
மதங்களில் இருந்து நல்ல விடயங்களை உள்வாங்க முடியும் என்பது எந்த வரையறைக்கு உட்பட்டது என்பதை இங்கு ஆராயப்படுகின்றது. இந்தப் பிரச்சனை என்பது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகியவற்றிற்கு இடையேயான கருத்து வித்தயாசங்களுக்கு இடைப்பட்டதாகவே இருக்க முடியும்.


மதங்களின் புனிதத் தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டு மோதல்களும் இடம் பெறுகின்றது.  படித்தறிவது, மதங்கள் போதிக்கும் சிந்தனை பற்றிய விஞ்ஞான முறையிலான வரலாற்றுப் புரிதல் இல்லாத காரணத்தினால் தனிமனிதர்களிடையே மோதலும்,  குரோதமும், மதப்பிரிவினர்களிடையே மோதல்களும் இடம்பெறுகின்றது.


உழைக்கும் மக்கள் தேசியஇனரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு மார்க்சியர்கள் வர்க்க விடுதலைபற்றி விவாதிப்பவர்கள் போலவே வெவ்வேறு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் வெவ்வேறு பாதைகளை முன்வைக்கின்றனர். இவ்வாறான வெவ்வேறு திசை கொண்டவர்களிடத்தில் இருந்து மாறுபட்டதாகவும்,  சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காக போராடக்கூடிய சித்தாந்தத்தை தேடியே இவ்வாக்கம் செல்கின்றது.

உழைக்கும் மக்கள் பின்பற்றக் கூடிய சித்தாந்தத்தை மக்கள் முன்செல்ல வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையில் வர்க்க விடுதலையை முதன்மையாகக் கொண்டு ஆபிரகாம் வழிவந்த சமயங்களைக் கொண்ட மதங்களின் ஒன்றைப் பற்றி ஆராயப்படுகின்றது. கருத்துமுதல்வாதத்தினை விதைக்கும் மதமானது எவ்வாறு வர்க்க விடுதலைக்கு இடையூறுறாக இருக்கின்றது என்பதை ஆராயப்படுகின்றது. ஆபிரகாம் வழிந்த சமயங்களான யூத, கத்தோலிக்க, இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒற்றைத் தன்மையைக் கொண்டதாக இருக்கின்றது. இது புதிய சிந்தனை வடிவங்களை  ஏற்றுக் கொள்வதில்லை. இது குறிப்பாக இலங்கை போன்ற முதலாளித்துவம் வளர்ச்சியடையாத  நாடுகளில் மிகப் பிற்போக்குத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. இவற்றில் எவ்விதத்திலும் அதிக ஜனநாயகத்த வழங்கக் கூடிய நிலையில் பௌத்தமோ, வைணவமோ, சைவமோ இல்லை. இங்கு அனைத்து மதங்களும் சிந்தனை வடிவத்தில் ஒரு தளத்தில் தான் இருக்கின்றது.


மதம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாக சமூகத்தில் இருக்கின்றது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு, தாழ்வு, மரணம், நோய்நொடி எல்லாவற்றிற்கும் ஒரு சக்தி இருப்பதாக அது நம்பவைக்கின்றது. மனிதர்களின் பிறப்பு ஏதோ மதத்தின் பெயரில் தான் அமைந்து விடுகின்றது. நல்லது கெட்டது அனைத்தையும் தீர்மானிப்பது மதம் என்ற அபினி. இது மென்மேலும் பிற்போக்கு கருத்தியலை மக்களிடையே ஆழவூன்றி நிற்கின்றது. கடவுள் விதித்ததை மனிதர் மாற்ற முடியாது எனவும் நம்பவைக்கின்றது.

மதங்களை வைத்து அரசியல் நடத்தும் நிலைக்கு சமூகத்தில் வேரூன்றியிருன்ற சிந்தனைகளை ஆளும் வர்க்கம் திறம்பட பயன்படுத்திக் கொள்கின்றது. சமூகத்தின் பிரச்சனைகளை ஆளும் வர்க்கம் தீர்ப்பதற்கு பதிலாக தேவையான போது அவற்றை அமைதியாக இருக்க விடுவதும் பின்  அதனை ஒன்றுடன் ஒன்று மோதவிடுவமே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. சமய முரண்பாடுகளை முட்டி மோத விடுவதில் எடுக்கப்படும் செயற்திட்டங்களை நடத்தி முடிப்பவர்கள் கருத்துருவாக்கிகளாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊடாக சர்வதேசிய சக்திகளும் அவர்களின் தயவில் உருவாகும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,  துணைபுரிகின்றார்கள். இன்றைய பொருளாதார அமைப்பானது மதத்தினை பயன்படுத்திக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்கின்றது.

மதம் சமூகத்தை அமைப்பை பாதுகாக்கும் கருத்துக்களை மறுவுற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாக அரசிற்கு துணைநிற்கின்றது. உலகில் முதல்முதலில் அரசில் இருந்து தனியாக மதத்தினை பிரித்தெடுக்கப்பட்டது மதச்சார்பின்மை என்பது பிரான்ஸ் நாட்டில் தான் முதலில் நடைமுறைப்படுத்தப் பட்டது. மதம் என்பது தனிமனிதர்களின் சொந்த விவகாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அப்படியான நாட்டில் இஸ்லாமியர்கள் முகத்திரை போடுவதை தடைசெய்த நாடும் அதுதான். அப்படியான சட்டத்தை எவ்வாறு எதிர்க் கொள்வதில் என்பதில் கூட முற்போக்குச் சக்திகளுக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டது என்றால் மதத்தின் மீதான தனியே அழுத்தம் என்று சொல்ல முடியாது. பொருளாதார ஒடுக்குமுறை எல்லாவிதமான அரசியல் ஒடுக்குமுறையையும், சமூக இழிநிலையையும்; வெகுஜனங்களது அறநெறிவாழ்வை மதவுணர்வுக்கள் உள்வாங்கியிருக்கின்றது. இஸ்லாமியர்கள் மீதாக மற்றைய மக்கள் islamophobia - இஸ்லாம் எதிர்ப்பை வளர்ந்து விடுவது என்பது உலகத்தினை மறுபங்கீட்டுக்காய் யுத்தங்களில் ஈடுபடுவதை திசைதிருப்பும் தேவையுள்ளதையும் கவனத்தில் கொள்ளல் அவசியமாகின்றது.

பண்டைய மதச் சிந்தனை கோட்பாடுகளில் இருந்து செயற்பட வேண்டும் என்றும், குறிப்பாக ஆபிரகாம் தோத்திர வழிமங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாமின் நெறிகளை கடுமையாக முன்னிறுத்துகின்றது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் தேவையில் அமைந்த சமூக உறவுகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நிலையில் பண்டைய முறைகளை இன்றும் பயன்படுத்த வேண்டும் வாதிடுபவர்களும், இவை இன்றைய பொருளாதார அமைப்பிற்கு பொருந்தாது என்று வாதிடும் எதிர்நிலையையும் காணமுடிகின்றது.  இங்கு புதிய  வாழ்முறைக்குள் தமது அடையாளத்தை சிதைப்பதில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது அரைநிலமானிய சிந்தனை பயன்பாட்டுக்குள் வருகின்றது. மனிதர்களின் ஆழ்மனதில் பதிந்த மதச் சிந்தனையானது மக்களை மதச்சார்பற்று சிந்திப்பதை தடையாக இருக்கின்றது.
சத்தியத்தை வைத்தே மனிதர்களை அளவிட வேண்டும் மாறாக மனிதர்களை வைத்து சத்தியத்தை அளவிடுவது பிழை என்று போதித்துக் கொண்டிருக்கின்றது.  தனிமனிதர்கள் அன்றாட வாழ்வில் எவ்வாறு சமூக உறவு இருக்க வேண்டும் என்று போதிக்கின்றது. மனிதர்கள் பொதுவெளியில் எவ்வாறு ஆண்பெண் உறவு இருக்க வேண்டும், உடுபுடவை என சத்தியத்தின் பெயரால் தீர்மானிக்கப்படுகின்றது.
தொல் பழங்குடிவாழ்வில் மனிதர்கள் சுதந்திரமாக இருந்துள்ளார்கள். இவ்வாறான கள்ளச் சிந்தனை என்பது இருந்தது இல்லை. இது நவீன சமூகம் அதுவும் இந்த யுகத்தில் தனிமனிதனின் படுக்கையறை வரை மதம் நுழைந்துவிடும் அவலம். சொத்துடமையை பாதுகாக்கும் நோக்கில் உருவான நிலமானியச் சமூகத்தின் தூய்மை வாதத்தினை இன்றும் தொடர முற்படுகின்றார்கள். இதுவும் மதத்தீவிரவாதம் தான். சத்தியங்கள் எல்லாம் பொருளாதார முறைக்கேற்ப மாறிக் கொண்டுதான் வருகின்றது. இங்கு சந்தியங்களை அளவிடுவது பொருளாதார கட்டமைப்புச் சார்ந்ததாகும்.
மதநம்பிக்கை கொள்வது என்பதை ஒரு உளவியல் நோய் என்பதாய் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. மனிதர்களின் கூட்டுச் சிந்தனை வடிவம் என்பது தனிமனிதக் கூறாக கொள்வது உளவியல் நோய்க்குறியாக கொள்ள முடியுமா என்பது ஆய்விற்கு உரியதாகும். மனித கூட்டுசிந்தனை வடிவத்தையும், சமூகக் கட்டமைப்புப் பற்றிய புரிதலை பொருளாதாரக் கட்டமைப்பில் கண்டறிய முற்படாத போக்கின் வெளிப்பாடு ஆகும்.


உலக அரசியலை கற்றுக் கொள்ளவதற்கு கிறிஸ்தவ, யூதமையவாதச் சிந்தனை எவ்வகையான தாக்கத்தை எற்படுத்துகின்றது என்பதை அறிந்திருத்தல் வேண்டும். சிந்தனைகள் வர்க்கங்களை சார்ந்து நிற்பதினால் உலகக் கண்ணோட்டை அலசியாராய்வது அவசியமானதாகும். அன்றாட வாழ்க்கையில் வரலாற்றை பற்றிப் பேசுபவர்கள் ஐரோப்பியர் கற்பித்த வரலாற்றில் இருந்தும், யூதவரலாற்றில் இருந்தும் அல்லது தமது மதபோதனைகளின் இருந்தும் வரலாற்றை ஒப்பிக்கின்றதே பொதுப்புத்தியாக இருக்கின்றது.  

சமூக விஞ்ஞான சிந்தனையற்ற நிலையில் இருக்கின்ற சமூக நிலையில் இவைகள் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கின்றது. இன்றைய கல்விமுறையானது உலகக் கண்ணோட்டங்களயும், சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாதவாறான கல்விமுறை இருக்கின்றது. கல்வியமைப்பு கொலணித்துவ கால தேவைகளையொட்டி உருவாக்கப்பட்டவைகளை அடிமைத் தேசங்கள் பின்பற்றி வந்தன. பின்னர் ஆளும் வர்க்கம் தத்தம் நலன் கொண்டு கல்வித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டன. இத்துடன் நம்மீது திணிக்கப்பட்ட சம்பிரதாயங்கள், சிந்தனைகள், கடவுள்கள், சாதிய ஆச்சாரங்கள் போன்ற மேற்கட்டுமானத்தில் அமைந்த விழுமியங்கள் எம்மை ஆளுமை செலுத்துகின்றன. நம்மீது திணிக்கப்பட்ட சம்பிரதாயங்கள், சிந்தனைகள், கடவுள்கள், சாதிய ஆச்சாரங்கள் புதியவகையான சிந்தனையைக் கொண்ட சமூகத்திற்கும் பண்பாட்டிற்கும் வரலாற்றிற்கும் உரிய கூறுகளை அறிய முடியாதவாறு எம்மீது அணியப்பட்ட அங்கிகளை தொடர்ந்தும் அணிந்து கொண்டே இருக்கின்றோம்.

நாம் குரங்கில் இருந்து வந்தோம் என்று ஆய்வினை தொடர்கின்ற போது நாம் குரங்குகள் போலத்தான் வாழ முயற்சிக்கின்றோம் என்ற முடிவிற்கு வரவேண்டியதில்லை. ஒவ்வொரு சமூகமும் தமது வரலாற்றையும் பெருமைகளையும் கொண்டுள்ளது. இவைகள் தூய்மையற்றவையாகவும் குறிப்பாக வரலாற்றில்  மனிதவினங்கள் மற்றவர்களிடத்தில் அதிக கலப்பு இல்லாமலும், கலப்படம் அடைந்து புதிய இனங்களாகவும் புதிய உலகக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவும் மனித இனம் வாழ்கின்றது. தற்காலத்தில் ஏடறியாக் காலத்தில் இருந்து இன்று வரையான காலத்தின் வரலாற்று ஒட்டத்தை கற்றுணரத் தொடங்கி இருக்கின்றன.

சொந்த தேசியஇனத்தின் வரலாற்றை கண்டுகொள்வது ஒரு மனிதஇனத்தின் மீது தொடுக்கப்பட்ட ஐதீகங்களை அகற்றிக் கொள்வதற்கும் விஞ்ஞான பூர்வமற்ற வரலாற்றை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையினர் பின்பற்றுவதை தடுப்பதற்கும் வரலாற்றை மீளக் கற்பது அவசியமாகும். போலியான வரலாறுகளையும் போலிச் சிந்தனைகளையும் ஊட்டும் மதவாதிகளின் கருத்தியல் தாக்குதலினை தவிர்ப்பதற்கு இனத்தின் உலகப்பார்வையை இயங்கியல் வரலாற்று,  பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்விற்கு உட்படுத்துவது அவசியமாகும்.

சமூக அமைப்பில் உள்ள சாதிய சமய வேற்றுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் கருத்துமுதல்வாதச் சக்திகள், கட்டுக்கதைகளையும் கதையாடல்களை எமது சமூகத்தின் புனைவதன் ஊடாக ஊசலாடும் மனித மனங்களை குறுகிய நலனுக்காக பயன்படுத்தும் பிற்போக்கு சக்திகளை நாளாந்தம் எதிர்கொள்ளும் வகையான சிந்தனைப்பாடு அவசியமாகும்.
குறிப்பாக மதப்பிரச்சாரம் செய்பவர்களும் வரலாற்றில் தத்தம் மதங்கள் உண்மையானது எனக் கூறி பிரச்சாரப்படுத்தும் கிறிஸ்தவ உண்மையானது என்றும் உலக மதம் என்றும் பிரச்சாரம் செய்து மக்களை தமது ஆழுமையின் கீழ் கொண்டு வரும் வழிமுறைகளை முறியடிப்பதற்கும் வரலாற்றுப் பார்வை அவசியமானதாகும். இந்த ஆக்கமானது மதப்பிரச்சாரர்களிடம் எவ்வாறு எதிர் பிரச்சாரத்தினை தொடுக்க உதவும் நோக்கம் கொண்டும் எழுதப்படுகின்றது. மனிதர்களின் பலவீனமான நிலையை மதங்கள் பயன்படுத்துகின்ற போது அவற்றை எதிர்ப்பதற்கான முறைமையை வளர்க்கும் நிலையில் இப்பதிவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

ஈழப் போராட்டத்தின் போது 1980களில் விடுதலை இறையியல் என்ற கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது இன்று சாதியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலித்தியக் கோட்பாடு முன்வைப்பது போலாகும்.  தமிழ் மக்கள் விடுதலைக்கு கோட்பாட்டு உதவியாக முன்னிறுத்தப்பட்டது. இது அன்றைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தொடர்புகளைகள் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இதனை பிரநிதிதித்துவம் பெறக்கூடிய நிலை அளவில் இல்லாவிடினும் விடுதலை இறையியல் போக்கு நிலவியது. ஆனாலும் விடுதலை இறையியலின் உள்ளார்ந்தக் கருத்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கு உதவுமா என்றும் ஆராயப்படுகின்றது. உழைக்கும் மக்களின் இறுதி இலட்சியம் உற்பத்தி சக்தியை கைப்பற்றுவதேயாகும். இதுவே தான் போராட்டத்தில் இலக்கு, இலக்கை அடைவதற்கு உதவும் வர்க்கங்களும், இடையூறாக இருக்கக் கூடிய வர்க்கத்தின் சித்தாந்தப் போக்கையும் ஆராய்வது அவசியமானதாகும்.

விடுதலை இறையியல் திசைவழிப் போக்கு கத்தோலிக்கத்தில் இருந்து உருவாக்கம் பெற்றதாகும். ஆனாலும் விடுதலை இறையியல் பற்றிப் பார்க்கின்ற போது உதவி நிறுவனங்கள், கொலனித்துவகாலம், சாதியம், போன்ற பல விடயங்களையும் இங்கு அலசப்படுகின்றது. இங்கு அலசப்படும் விடயங்களுக்கும், விடுதலை இறையியலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என வினவக் கூடும். சமயத்தின் கோட்பாட்டில் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக் கொள்ளும் தந்திரோபாயம் நலன் தருமா என்ற கேள்வியின் அவசியம் காரணமாகவும் இவைகள் பற்றியும் இங்கு ஆராயப்படுகின்றது. இதன் மூலம் பாதிவழிக் கூட்டாளிகளையும் இனம் கண்டு கொள்ள துணைபுரிகின்றது. எமது அடையாளத்தை தேடுவதன் மூலமும், புதிய அடையாளங்களை தவிர்த்துக் கொள்வதும் தேவையாக உள்ள போது, தேசியத்தை நிலைநிறுத்துவது தனியே எல்லையை வரையறுத்துக் கொள்வதில் மாத்திரம் அன்று. புதிய ஜனநாயக வடிவம் கொண்ட கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பழைய உற்பத்தி முறையில் இருக்கின்ற ஒடுக்கும் கூறுகளை களைந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
சொந்த தேசியஇனம் மற்றைய சமுதாயத்தின் வளர்ச்சியைப் போல சமத்துவமான தனக்கே உரித்தான வரலாற்றைக் கொண்டது என்பதிலும், கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதிலும், அன்னிய மூலதனத்தின் தலையீடு ஆகியவற்றில் தேசியத்தை (சுதேசிய) நிலைநிறுத்துவதையும், அவ்வாறு தேசியத்தை முன்னிறுத்தும் சக்திகள் தம்மளவில் யூத மையவாதச் சிந்தனையின் அழுத்தத்தை கிறிஸ்தவத்தின் ஊடாக உள்வாங்கப் படுவதை உணர்ந்து கொள்வதில்லை.

சுரண்டும் சமூகத்தின் சிந்தனையில் இருந்து மனித குலத்தை விடுவிப்பது என்பதை இலக்காக கொண்டே இருக்கின்றது. சுரண்டும் வர்க்கச் சிந்தனை, சுரண்டும் வர்க்கத்தில் இருந்து விடுவிக்கும் சிந்தனை ஆகியவற்றிற்கும் இடையே மாறுபாடுகள் இருக்கின்றது. ஆனால் சுரண்டும் வர்க்கத்தின் சிந்தனைகள் மாறுபட்ட கோணங்களில் சமூகத்தில் வெளிப்படுகின்றது. சுரண்டும் வர்க்கச் சிந்தனையிடையே எது நல்லது என்ற கருத்தாய்வுக்கும், சுரண்டும் வர்க்கத்தின் சிந்தனைக்கும் சரணடையும் போக்கையும் தவிர்த்து நிற்பதன் மூலமே மக்களை சுரண்டும் சக்திகளிடம் இருந்து விடுதலை பெற முடியும்.

இன்றைய கிறிஸ்தவ உள்ளடகத்திலும் சரி, அதன் நிர்வாகத்திலும்,  அமைப்பிலும் சரி பல மாற்றங்களை வரலாற்றில் ஏற்பட்டிருக்கின்றது. கிறிஸ்து இறந்தபின்னர் சவுல் (Paul) என்கின்ற போலின் செயற்பாடுகளின் மூலம் விவிலியத்தில் மாற்றங்கள் உண்டாகின. போல் (Paul) எழுதியவை பல விவிலியத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இவரின் சிந்தனைப் போக்கே அன்று விருத்தசேதனம் அல்லது சுன்னத்து செய்வது கிறிஸ்தவர்களுக்கு (புறயினத்தாருக்கு) அவசியம் இல்லை என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டது. அனைத்து மத நம்பிக்கைகளும் மாற்றத்திற்கு உட்பட்டதே.


2. அணுகுமுறை பற்றி

மதத்தினைப் பற்றிய ஆய்வினை விஞ்ஞான வளர்ச்சி கொண்ட சித்தாந்தத்தின் முறைமையின் துணையுடன் சமூகத்தின் கருத்தியல் எவ்வாறு ஆழமாக ஊடுருவி இருக்கின்றது என்பதைப் ஆராயப்படுகின்றது. இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளடக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் மார்க்சினால் கொடுக்கப்பட்டது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை  அது காட்டுகிறது.

உலக வரலாற்றில் மனிதஇனங்களுக்கிடையே கலப்புக்களும் மொழிகளுக்கிடையே கலப்புக்களும் ஏற்பட்டுத் தான் புதிய மொழிகளும் புதிய தேசிய இனங்களும் தோன்றியிருக்கின்றன.  பொதுப்புத்தியமைந்த கருத்தியல் மேலாதிக்கம் குறிப்பாக பழங்குடிகளைப் பற்றிய உலகக் கண்ணோட்டத்தினை விளங்கிக் கொள்வதில் பற்றாக் குறையே காணப்படுகின்றது. நாகரீகம் வளர்ச்சி என்பதை கொள்கின்ற பார்வையே அவர்களை தீர்மானிக்கின்றது. இது அவர்கள் மீது நாம் தொடுக்கும் பண்பாட்டு தாக்குதலாகும். அவர்களின் வாழ்வை யாருடைய மையவாதச் (எந்த வர்க்கச்) சிந்தனையில் இருந்து அளவிடுவது சம்பந்தமானதே நாம்  அவர்களை காண்டுமிராண்டி வாழ்க்கை வாழ்வதாக நாம் கூறுகின்றோம்.

பழங்குடிகள் அவர்கள் வழிபாடுகள், ஆடல்பாடல் என்பனவும் அவர்களின் உலகக் கண்ணோட்டம் பற்றி பார்வை சமூகத்தில் விஞ்ஞான பார்வை போதாமையாகும்.  உடம்பில் வர்ணங்கள் பூசுவது, குலவிச் சத்தம் (தென் அமெரிக்க, ஆபீரிக்க, தமிழ் மக்களிடமும் காணப்படுகின்றது ஒன்றுமை குறிப்பிடத்தக்கதாகும்) துணிகளினால் ஆன உடுபுடவை அற்ற நிலையில் வாழ்வதை நாம் காண்டுமிராண்டிகள் என்கின்றோம். ஆனால் அந்த வரையறை மாற்றப்பட வேண்டும். அவர்களின் இருப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். கலாச்சார பண்பாட்டு ஆதிக்கச் சிந்தனை பற்றிய சிந்தனையில் நாம் எம்மை பரிசீலனை செய்தல் வேண்டும்.  ஆனால் வளர்ச்சி நாகரீகம் என்பது ஒரு காலத்தில் பொருளாதார உற்பத்தி சார்ந்தது. அங்கு உற்பத்திச் சாதனம் வளர்ச்சியடையவில்லை என்பது ஒரு புறமிருக்க அவர்களிடம் மக்களிடம் கலாச்சாரம் இருக்கின்றது பண்பாடு இருக்கின்றது. அவர்களை அவர்களாக வாழ விடாது நாம் ஒரு உங்கள் மையவாத நிலையில் இருந்து ஒரு கலாச்சார அங்கி ஒரு மத அங்கி ஒரு நாகரீக அங்கி புதிய நோய்களைக் கொடுக்கின்றோம். எமது கருத்தியல் மேலாண்மை அவர்கள் மீது செலுத்தப்படுகின்றது.  பின்னர் அவர்களை நாம் எமது பொருளாதார உற்பத்திக் கேற்ப தங்கி நிற்கும் நிலையை உருவாக்கி அவர்களின் வளங்களை கொள்ளையடிக்கின்றோம்.

இந்திய, இலங்கைச் சூழலில் இனக்குழுமங்களை சாதியாக வரையறுத்தல்  அது முதலில் தவறானதாகும். சாதி என்று வரையறை செய்வதே வர்ணாசிமத்தின் எச்சமாகின்றது. இனக்குழுக்களுக்கான அதிகார அலகை நோக்கிய விழிப்புணர்வு இன்றைக்கு முக்கியமான செயற்திட்டமாக உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. முதலாளிய சமூக உறவிற்குள் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை படிமுறை வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது. அவர்களுக்கான அதிகார அலகை அவர்களின் உயிர்பாதுகாப்பு என்ற மைய நிலையில் இருந்து தொடங்கவேண்டிய கட்டாய வரலாற்றுக் கடமை இருக்கின்றது. இவ்வாறு நோக்காது மதவாதம் பழங்குடிகளின் பழங்கங்களை காட்டுமிராண்டித்தனம் என முத்திரை குத்துகின்றது.
பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை அல்லது எம்முன்னோர் எவ்வாறு பண்டைய காலத்தில் வாழ்க்கை முறை என்ன என்பது பற்றியோ அல்லது அந்த சமூக அமைப்பில் இருந்த சமூக உறவினை புரிந்து கொள் முடியாத நிலைதான் இருக்கின்றது. பழங்குடி மக்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்வின் தத்துவத்தில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேற்கு நாட்டு கலாசாலை என்பது ஒரு சனரஞ்சக ஆய்வுகூடமாகப் பாதுகாத்து அவர்களின் வாழ்வைப் பாதுகாக்க முற்படுகின்றது. மானிடவியல் பாடத்திட்டத்திற்கு அல்லது மானிடவியல் பார்வைக்கு எழுத்துக்களுக்கு முதன்மையாக இருப்பது அரசு, குடும்பம் தனித்சொத்து ஆகியவற்றின் தோற்றம் இது தோழர் ஏங்கொல்ஸ்சால் எழுதப்பட்டதாகும். இதனைப் படித்தறிவதன் மூலம் பழங்குடிமக்கள் பற்றிய சரியான கோட்பாட்டு முடிவிற்கு வரமுடியும். மனிதர்களின் சிந்தனை இறைவன் கொடுத்தவையல்ல. ஏங்கெல்சின் அணுகுமுறை என்பது மனித குலவரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த அடிப்படையில் இருந்து மனிதர்களின் சிந்தனை, மதங்களில் வெளிப்பாடு, சமூக அமைப்புப் பற்றிய புரிதலை பெற்றுக் கொள்ள முடியும்.
 பருப்பொருள் என்பது சிந்தனையின் உற்பத்திப் பொருள் அல்ல, சிந்தனை என்பது பருப்பொருளின் உன்னதமான விளைபொருளே தவிரவேறில்லை. இது பச்சையான பொருள் முதல்வாதம் என்பது உண்மையே’ (ப. 35 லுத்விக்ஃபாயர்பாகும் - ஏங்கெல்ஸ்)
’சூழ்நிலைகள், வளர்ப்பு ஆகியவை உற்பத்தி செய்த பொருட்களே மனிதர்கள், ஏற்கனவே வேறு சூழ்நிலைமைகளின் மாறுபட்ட மனிதர்கள் என்னும் பொருள் முதல்வாதப் போதனை, மனிதர்கள் தாம்  சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும் கல்வி கற்பிக்கிறவனுக்கே கல்வி கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. எனவே, இப்போதனை தவிர்க்க முடியாததாகச் சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் வந்து சேருகிறது. அதில் ஒன்று சமுதாயத்திற்கு மேலாக உள்ளது () சூழ்நிலைகளின் மாற்றமும் மனித நடவடிக்கைகளும் பொருந்திப் போவதை, நடைமுறையானது புரட்சி கரமானதாக ஆக்கப்படுகிறது என்று மட்டுமே கருத்தில் கொள்ளமுடியும், பகுத்தறிவு ரீதியான அப்படித்தான் புரிந்து கொள்ளமுடியும். (மார்க்ஸ் ப. 96 லுத்விக்ஃபாயர்பாகும்.- ஏங்கெல்ஸ்)
இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதர் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும் ஆகும்.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும் என்றார் -மார்க்ஸ்.

பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை  வெளிக் கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதாக விளக்கினார் என்கின்றார் லெனின்.  பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார்.  பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது.  மூலதனம் இந்த பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார்.
தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது.  மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய்.  உபரி பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று லெனின் நிரூபித்தார்.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் என்பது மூலதனத்தின் உருவாக்கம் வெகுவாக மட்டுப்படுத்ததாகவும், பயன்பாட்டுப் பெறுமானத்தை முதன்மை உற்பத்தி முறையைக் கொண்டதாக அதன் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. சொத்து உருவாக்கத்தின் ஊடான வளர்ச்சிக்கு முன்னர் இருந்த வாழ்க்கை முறையானது  முறையில் கூட்டுச் சிந்தனை, பொதுநலன் கொண்ட சிந்தனை கொண்டதாக சமூக உறவு அமைந்திருக்கின்றது. சொத்துருவாக்கம் பெருமளவு உருவாக முறையில் அமைந்து உற்பத்தியில் அமைந்த சமூக உற்பத்தி முறையில் மற்றவர்களை சுரண்டாமலும், உபரி உற்பத்தி என்பது பொதுப்பயன்பாடு கொண்ட அறநெறிக்கும் உட்பட்ட சமூகத்தன்மையாகக் கொண்டது.  ஆனால் குலத்தின் தலைவன் தன்னுடைய அந்தஸ்து பேணும் பொருட்டு உபரி உற்பத்தியை தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.

இன்றையக் காலத்தில் பாப்புவா நியூகினியாவில் உள்ள பழங்குடி மக்களிடையே  உள்ளவர்கள் பன்றிகளை வளர்ப்பதும், அதனையே பரிசுப் பொருளாக தமது உறவுகளிடையே பரிமாறிக் கொள்வதையும் காணமுடியும். பொருளாதார நலிவினைப் போக்கும் உற்பத்தி முறையாக பன்றி வளர்ப்பும் இருக்கின்றது. பரிசுப் பொருளாக பெறப்படும் பொருளான பன்றி குலத்தலைவனைப் பொறுத்தவரை உபரி மதிப்புள்ளதாக மாறுவதில்லை. அதே போல அது பரிவர்த்தனைக்கு உள்ளாக்கப்பட்டு பணமாக மாறுவதில்லை. வறுமை ஏற்படுகின்ற போது பன்றியானது மீளவும் சமூகத்திடம் சென்றடைகின்றது.
இவ்வாறாக உபரி உழைப்பு, பண்டங்களின் உற்பத்தி என்பது சொத்துருவாக்கத்திற்கோ மூலதனத் திரட்சிக்கு உள்ளாகாத உற்பத்தி முறையைக் கொண்டதாக இருக்கின்ற பழங்குடிகளின் சமூகப் பொருளாதார உறவை சரிவரப் புரிந்து கொள்ளாத நிலை சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் உள்ளது.
அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பு சார்ந்ததாகும். பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது.
மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டம் தான்  எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே வந்திருக்கின்றது.
சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டமைப்பாகும்.
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளின் அடிப்படையில்  இருந்தே அணுகுமுறை பயன்படுத்தப்படுகின்றது.  இவ்வாறான உயர்ந்த சமூக வளர்ச்சிக் கோட்பாடான இயங்கியல், வரவாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் (spiritualism) ஆத்தீகத்தினை ஆராயப்படுகின்றது.


3. வரலாறு ஒரு பார்வை

மனித இனம் எங்கு தோன்றியது என்பது பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அதுபோலவே கண்டங்கள் பிரிந்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. மனித வளர்ச்சிப் போக்கு மதங்கள் கற்பிற்கும் ஒழுங்கு முறையில் இருந்து உருவாகிய ஐதீகமே  இன்று பெரும்பான்மையானவர்களிடையே புரையோடிப் போய்யுள்ளது. இங்கு வரலாற்றுப் பார்வையூடாக தமிழ் மக்களுக்கான பூர்வீக சரித்திரம் ஒன்று இருக்கின்றது. உலகப்படைப்பு, எல்லைகளை அனைத்தையும் மதங் கூறும் சிந்தனை வடிவத்தில் இருந்து கற்பிக்கப்படுவதால் வரலாற்றை அறியாது இருக்கின்றார்கள்.
மனித இனம் 150 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபீரிக்காவில் முழுமனித இனவகையாக தோன்றி உலகின் பலபாகங்களுக்கு பரந்து சென்றனர் என்றும், 60 000 - 40 000ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவிற்கு பரந்து சென்றனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
லெமூரிய என்ற நிலப்பரப்பானது அவுஸ்ரேலியா, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் ஆபீரிக்கா இணைந்து இருந்தது என்றும் அதில் உருவானது தான் மனித இனம் என்றும் கருதுகின்றனர். ஆனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக இருந்த கண்டம் விலகியுள்ளது. இவற்றைக் கவனத்தில் கொள்ளாது லெமூரியா என்பது ஏதோ அண்மைக்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வு போன்று பொதுப்புத்தியில் பேசுவதும் உண்டு.  வரலாற்றை சுருக்கி தமிழர் பெருமைக்காக லெமூரியாவில் தோன்றிய ஆதிக்குடி என்று விஞ்ஞானத்திற்கு புறம்பாக பெருமை பேசப்படுகின்றது.
திராவிடத்தின் (அவுஸ்ரலெயிட்) வரலாறு 5000 வருடங்களுக்கு மேல் பழமையான சிந்து வெளி நாகரீகத்தினை உருவாக்கி பெருமையுடன் வாழ்ந்த இனம். தமிழினம் தன்னை கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி என பெருமைப்பட்டுக் கொள்கின்றது. லெமூரியா கண்டத்தில் பிறந்த மனித இனம் என்றும் பெருமை கொள்கின்றது. ஆனால் லெமூரியா என்பது பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் ஒன்றிணைந்திருந்த நிலப்பரப்பாகும். விவிலியம் பரவுவதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இனங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. புத்தளம் - பொன்பரப்பி, ஆதிச்ச நல்லூர் போன்ற இடங்களில் கண்டு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி போன்றவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள் தமக்கான தொன்மைய்க் கொண்டு வந்திருக்கின்றார்கள். தற்பொழுது 10000-8000 வருட பழமையான நகரத்தினை மும்பாய் நகரில் இருந்து 8 கி.மீட்டர் தொலைதூரத்தில் கடலில் அடியில் கண்டுபிடித்துள்ளார்கள். இதே வடிவொத்த நகரினை பூம்புகார் பகுதியிலும் கண்டெடுத்துள்ளார்கள்.

வள்ளுவர் முன்னர் 3000 -1500 காலப்பகுதியில் சிந்து வெளியில் தமது கலாச்சாரத்தை ஏற்படுத்தி வாழ்ந்திருந்தனர். அவர்களின் கலாச்சாரம் அழிந்தாலும் அதன் தொடர்ச்சி இலங்கையிலும், (சிந்துவெளி எழுத்து கண்டெடுக்கப்பட்டது.) தென்னிந்தியாவிலும் அதன் தொடர்ச்சி ஏற்படத்தான் செய்தது. சிந்துவெளி கலாச்சாரம் ஏற்பட்ட வேளையில் தென்னிந்தியாவிலும் வெவ்வேறான அளவில் கலாச்சாரம் (கட்டிட வளர்ச்சி இல்லாமல்) ஏற்பட்டிருக்க முடியும் என்ற கருத்தும் இருக்கின்றது. தமிழ் சமுதாயம் தனது உலகக் கண்ணோட்டத்தை வளர்ச்சி கொண்டிருந்த காரணத்தினால் தான் தொல்காப்பியத்தை உருவாக்க முடிந்தது. இதற்கு அடிப்படையாக இலக்கியம் உருவாக்கப்பட்டது. இலக்கியம் என்பது சில ஆண்டுகள் போதாது. அது உற்பத்தி சக்தியின் வளர்ச்சியானது தீர்மானகரமான சக்தியாகின்றது. எனவே அந்தச் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகள் தான் இலக்கியத்தின் தரத்தினை உறுப்படுத்துகின்றது.

இந்தியா, இலங்கையில் உள்ள மக்களின் நாகரீக வளர்ச்சி, குடியிருப்புக்கள் என்பன மற்றைய இடத்தில் ஏற்பட்ட காலத்தில் இடம் பெற்றிருக்க வாய்ப்பிருக்கின்றது. முன்னர் மூன்று சங்கங்கள் இருந்ததும் என்றும் கடற்கோள் கொண்டு அழிக்கப்பட்டது என்றும் இலக்கியத்தின் பாடப்படுகின்றன.
தொல்லியல் மூலம் மனித எழும்பு கூடுகள், பண்டைய குடியிருப்புக்கள் போன்றவற்றைக் கொண்டு வரலாறு மறுவெழுத்துக்கு உள்ளாகின்றது. ஆனால் மதங்களின் தோற்றுவாய் பொருளாதார வளர்ச்சி ஊடாகவே புரிந்து கொள்ள முடியும். பொருளாதார வளர்ச்சி புதிய தேவைகளையும் புதிய நுகர்வுவையும் நோக்கிக் செல்கின்றன
மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகைகள் என்பனவும், பொன், வெண்கலம்,  போன்ற அரியகல் முதலான மணிகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்ச நல்லூரில் 3800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 100க்கு மேற்கட்ட  ஏக்கர்  பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன.

இந்த நிலப்பரப்பில் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறே புத்தளம் பொன்பரப்பியில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளும் பல வருடங்கள் பழமையானதாகும்.
பொன்பரப்பியில் (புத்தளம்) கண்டெடுக்கப்பட்ட நான்கு அடி உயரமும் இரண்டரையடி அகலமும் கொண்டதாகவும் இருக்கின்றது. இறந்தவர்களைப் புதைக்கின்ற போது அவருக்கு விருப்பமான உணவு, நீர், மற்றும் பொருட்கள் சேர்த்து இவற்றினுள் வைத்து புதைக்கும் பழக்கமானது தென்னிந்திய பழக்கத்திற்கு ஒத்ததாக கொள்கின்றனர். இவ்வாறான பழக்கத்தை சாமனிசம் (shamanism) என்று அழைப்பார்கள்.
தமிழ் (திராவிட சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழின் மூலமொழியை தாமீழம் (Thamillam -proto dravidian) என்பார். தமிழ் தேசிய இனம் தனது எழுத்துருவில் தனது வரலாற்றை எழுதி வைக்காத போதிலும், தொல்பொருள் தடயங்களை வைத்தே பழமையான மக்கள் இனம் என நிரூபிக்கக் கூடியதாக இருக்கின்றது. அப்படி பழமையான இனமான இருக்கின்ற போது தனது உலகக் கண்ணோட்டத்தையும் ஸ்திரமானதாகவே கொண்டிருக்கும். மனித குலத்தின் ஒரு பகுதியினர்
இவ்வாறே விவிலியம் பல்வேறு மக்கள் பற்றிய அறிவைக் கொண்டிருக்கவில்லை. சங்க இலக்கியத்தில் இன்றைய இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளை குறிப்பிடுகின்றது. தென்தமிழகத்தில் இருந்து மயில் பலஸ்தீன மன்னனிடம் கிடைத்திருக்கின்றது. ஆனால் புனித நூல் என்று சொல்லப்படும் விவிலியத்தில் சங்க இலங்கியங்களில் சொல்லப்படும் இடங்கள் போன்றவற்றை காணமுடிவதில்லை. இங்கு மத்திய கிழக்கில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சிக்கு இணையாக அல்லது அதற்கு மேல் நிலையில் சமூகப் பொருளாதார அமைப்பு சிந்துவெளி தொடக்கம் இந்திய துணைக்கண்டமெங்கும் பரவியிருக்கின்றது. இவ்வாறான வளர்ச்சி அந்தப் பிரதேசத்திற்குரிய  பொருளாதார வளர்ச்சியின் ஊடாக பண்பாடு, இலக்கியம், வாழ்வியல் வளர்ச்சி இருந்துள்ளது. இவற்றை மறுத்துரைப்பதே யூதமையச் சிந்தனையில் இருந்து உலகினை ஆராய்வதாகும்.

உலகின் ஒவ்வொரு முனைகளிலும் இருந்த மக்கள் தமக்கேயுரித்தான வரலாற்றைக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். நாம் ஒவ்வொரு கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் பழமையான வரலாற்றைக் கொண்டிருப்பதை அறியலாம். தென்அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் வள்ளுவர் பின்னர் 1 ம் நூற்றாண்டில் மெக்சிக்கோ நாட்டில் ஒரு நகரத்தில் வாழ்ந்த செவ் இந்தியர்களின் தொகை அதே காலத்தில் லண்டனில் வாழ்ந்த மக்களின் சனத்தொகைக்கு ஈடாக இருந்தாக தற்கால ஆய்வுகள் கூறுகின்றன. அவ்வாறாயின் 1500களில் எவ்வளவு சனத்தொகை இருந்திருக்கும் என்பதை ஓரளவிற்கு அனுமானிக்க முடியும். அவர்கள் கொலனித்துவாதிகளால் ஆக்கிரமிக்கப்படால் இருந்திருப்பார்களாயின் இன்றைய சனத்தொகை என்னவாக இருந்திருக்கும். ஆனால் அன்று தொடங்கிய இனவழிப்பு கடந்த நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்துள்ளது.

பேரு போன்ற நாடுகளில் இறந்தவர்களை (எகிப்தியரின் மம்மிகள் போல) பக்குவமாக பாதுகாத்து வந்துள்ளனர். மம்மிகளாக பாதுகாக்கும் பழக்கம் புவியியல் தொடர் அற்ற நிலையில் கூட அறிவைப் பெற்று இருந்துள்ளனர். 4000 ஆண்டு முன்னர் கௌக்காசியர்கள் சீன மக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்ததையும் தற்கால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. லவ்லான் (Laulan) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மம்மியின் காலம் 4000 ஆண்டுகள் என கணிப்பிடப்படுகின்றது.  (xinjiang) சின்யிஜங் மாகாணத்தின் இன்னொரு பகுதியில் (Charchen) செர்சென் எடுக்கப்பட்ட மம்மி 3200 ஆண்டுகள் என கணிப்பிடப்படுகின்றது. இதிலிருந்து சீனத்துடன் ஏற்பட்ட தொடர்பை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு வெவ்வேறு காலகட்டத்தில் மனிதர்களின் உழைப்பாலும், மூளைவளர்ச்சியாலும் அறிவுவிருத்தியும் கலாச்சாரமும் வெவ்வேறு உலகின் பாகங்களில் வளர்ச்சியடைந்திருப்பதை அவதானிக்க வேண்டும்.

யூதர்கள் தங்கள் முன்னோர்கள் பற்றி கூறும் போது இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாமிற்கு தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும், பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் முதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (பக்கம் 1.மத்தேயு, 1. அதிகாரம். 17 வசனம்) யூதரின் தந்தையாக ஆபிரகாம் கொள்ளப்படுகின்றார். இவர் 4000 (Kiryat Arba) என்ற இடத்தில் புதைக்கப்பட்டதாக நம்புகின்றனர்.) வருடங்களுக்கு முன்னர் இறந்திருப்பார் என யூதர்கள் நம்புகின்றனர். யூத நிலையில் இருந்து பார்க்கின்ற போது காலத்தை குறுக்கிப் பார்ப்பது விதைக்கப்படுகின்றது. மனித இனவளர்ச்சி பல ஆயிரம் ஆண்டு பழமை கொண்டது. சிந்தனை, எழுத்தறிவு ஏற்பட்ட காலத்தை மட்டுமே விவிலியத்தில் காணமுடிகின்றது.


தொல்காப்பியத்தில் அன்றைய காலத்தின் வாழ்க்கை நெறி, மக்களின் வாழ்க்கை முறை, சுற்றம் சூழல் என்பனவற்றை தெரிவிப்பதாக இருக்கின்றது. தொல்காப்பிய காலத்தை மு. வரதராசன் வள்ளுவர் முன்னர் 500- வ.பி 200 காலம் என்பார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் ஆக்கப்பெற்ற தொல்காப்பியம் (குணா-30, தமிழர் வரலாறு) காலத்தை கணிப்பதில் வேறுபாடுகள் இருப்பினும் தமிழ் மக்களிடையே உலகக் கண்ணோட்டம் மற்றைய கலாச்சார வளர்ச்சியில் ஏற்பட்டது போல உருவாகியிருந்தது என்பதை சிந்துவெளி ஆதாரங்களும், தென் திராவிட வரலாற்றில் இருந்தும் அறிய முடிகின்றது.
பண்டைய வரலாற்றில் போக்கில் அமைந்தது போலவே பல முற்போக்கான கருத்துக்களைக் கொண்டதாகவும், உலக நெறியாகவும் கருதப்படும் திருக்குறள் உருவாக்கப்பட்டது. இதனை எழுதிய வள்ளுவரின் காலத்தை கி.முன் 20 ஆம் வருடத்திலே ஆசிரியர் திருக்குறள் அரங்கேறிய பின்னரும் பத்து வருடங்கள் இருந்தாரெனக் கொண்டு, பண்டைக் காலத்து மக்களெல்லாம் நெடு நாளுயிர்ந்திருப்பதோர் முறைபற்றி ஆசிரியரும் எண்பத்தைந்து வருடம் இருந்தாரெனக் கொள்வோமாயின் இவர் கி.மு 95 ஆம் ஆண்டிலே பிறந்தாரென்று நிலைநிறுத்தப்படும். (பக்கம் அ.அ. திருக்குறள் ஆராய்ச்சி-மறைமலைஅடிகள்) 85 வருடங்கள் உயிர் வாழ்ந்தார் என கணிக்கப்படுகின்றது. வள்ளுவர் காலத்தை கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 25 ஆண்டுகள் என இன்று வழக்கத்தில் கொள்ளப்படுகின்றது.

பௌத்தம், சமணம், வள்ளுவம்  என்று தத்துவ வளர்ச்சி என்பது இந்திய மரபில் இருந்துள்ளது. இவ்வாறே இந்திய சிந்தனை வளர்ச்சியில் இருந்து தான் அணுக்கொள்கை உருவாக்கப்பட்டது என கலாசாலை அறிவியலில் மேலாதிக்கம் கொண்ட மேற்கத்தைய அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அணுக் கொள்கை (அணுக்குண்டு அல்ல) வரலாறு பற்றி ஆய்வாளர் குணா வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற பெயரில் பெரும் ஆய்வுநூலை வெளிவிட்டுள்ளார். இவ்வாறான அறிவியலில் வளர்ச்சி பெற்றிருந்த திராவிட, Thamillam -proto dravidian சிந்தனை வளர்ச்சியை மறுத்து, யூத மையவாதத்தில் இருந்து ஆராயப்படுவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. யூதமையவாதச் சிந்தனையில் இருந்து உலகைப் பார்க்கின்ற போது தமிழின அல்லது மற்றைய சமூகத்தின் தனித்துவமான வளர்ச்சிப் போக்கையும், உலகக் கண்ணோட்டத்தினையும் மறுதலிக்கின்றது. இந்தியவரலாற்றை மனுதர்மம் வகுக்கும் வர்ணாசிரமச் சிந்தனை வழிவந்த கோட்பாட்டின் ஊடாக சமூகத்தினை ஆராய முற்பட்டாலும் சமூகத்திற்கு கேடேயாகும்.


மனித வரலாற்றில் காலத்தை குறுக்கிப் பார்ப்பது என்பது கடவுள் நம்பிக்கை, குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியல் சிந்தனை, வரலாறு, உலகின் ஒரு பாகத்தில் இருப்பவர்கள் மற்றைய பாகங்களில் இருக்கின்ற திசையை முழுமையாக அறிந்திராத நிலை இருந்த சமூகச் சிந்தனையில் அடிப்படையில் இருப்பது சமூக விஞ்ஞானப் பார்வையாக இருக்க முடியாது. இன்றைக்கு 2200 வருடங்களுக்கு முன்னர் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பு இருந்தும் இந்தியாவை சென்றடையப் புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவிற்கு சென்றடைந்தான். மார்க்கோ போலோ 1311 இந்தியாவைச் சுற்றி பயணம் மேற்;கொண்டிருந்தான். 14ம் நூற்றாண்டு நவீன காலத்திற்கு உரியதாகும். எனினும் நவீன காலத்தில் கூட தொலை தேசங்கள் பற்றி முழுமையான அறிவைப் பெற்றிருக்க முடியவில்லை.

இதேபோல இவர்களுக்கு முன்னரே வைக்கிங் (viking)  ஸ்கண்டிநேவியர்கள் அமெரிக்கா சென்றதாகவும் தமக்குள் மோதிக்கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் 2000களுக்கு முன்னர் அமெரிக்கர்களைப் பற்றியோ அல்லது அவுஸ்ரேலியர்களைப் பற்றியோ விவிலியத்தில் எழுதிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த புவியியல் நிலைகளே அவர்களின் உலகமாக இருந்திருக்கின்றது. உலக நிலப்பரப்பை குறுக்கிப் பார்க்கும் பார்வையை மதங்களின் தோற்ற வளர்ச்சிக் கோட்பாடுகள் முன்வைக்கின்றன. இவ்வாறு குறுகிய ஒரு இனக்குழுமத்தின் உலகக் கண்ணோட்டம் என்பது இன்று மற்றைய உலகக் கண்ணோட்டத்தினை சிதைத்து அதன் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. இனக்குழும வாழ்வின் எச்சங்களும் அதன் வளர்ச்சியும் நிறுவனமயப்பட்ட சமய நெறிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எங்கும் தொடர்ந்தும் உயிர்வாழ்கின்றது. இனக்குழுமவாழ்வில் வாழ்ந்த மானிடம் எவ்வாறு சிந்தனை வளர்ச்சி கொண்டதாக இருந்திருக்கும் என்ற அடிப்படைப் பார்வை அவசியமாகின்றது.
நாம் சிந்திக்க வேண்டிருக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக சொந்த தேசிய இனத்தின் வரலாறு தெரிந்து கொள்ளாமல் இருக்கின்ற வேளையில் வரலாற்றில் நம்மீது திணிக்கப்பட்ட சம்பிரதாயங்கள், சிந்தனைகள், கடவுள்கள், சாதிய ஆச்சாரங்கள் இவைகள் எமது பண்பாட்டிற்கு உரியவைதான எனக் கேட்டுக் கொள்ளாமல் எம்மீது சுமந்தப்பட்ட அங்கிகளை நாம் தொடர்ந்து அணிந்து கொண்டே இருக்கின்றோம். விவிலியத்தினை, மகாபாரம், கீதை, இராமாயணம், குரான் போன்றவற்றை ஒப்பிக்கின்றனர். ஆனால் தொல்லியல், சமூகவியல், மானிடவியல் சார்ந்து வரலாற்றை  அறிந்து கொள்ள முனைவதில்லை.

ஒவ்வொரு மக்களினங்களும் தமது  அடையாளத்தையும், வரலாற்றையும் கண்டு கொள்வது அவசியமாகின்றது. இதன் பொருள் நாம் மறுபடியும் குரங்குகளாக மாறி பழைய வாழ்க்கை முறைக்கு செல்வதற்காக அல்ல. மாறாக எம்மிடம் தோன்றியுள்ள சாதிய, மத, மொழி வேற்றுமைகளை வெற்றி கொள்வதற்கு எமது அடையாளத்தை இயங்கியல் ரீதியாக தேடுவதே ஒரே வழியாகும்.


4 யூதமையவாதம்
இங்கு யூதமையவாதம் எனக் குறிப்பிடுவது எனில் யூதரின் நம்பிக்கையின் உருவான விவிலியம் (பழைய ஏற்பாடு) புத்தகத்தை ஒட்டியதும் அதன் பின்னர் வந்த கிறிஸ்தவ மதமானது உலகின் படைப்பு, மனிதர்களின் உருவாக்கம், பூமியின் எல்லை என யூதர்களின் உலக கண்ணோட்டம் கற்பிக்கும் கோட்பாட்டைச் சுற்றிய சிந்தனை வெளிப்பாட்டை அர்த்தப்படுகின்றது.
விவிலியத்தை பறைசாற்றவும், ஓரிறைக்கொள்கைச் சிந்தனையை மக்களிடத்தில் புகுத்துகின்ற காரணத்தினால், யூதரின் வரலாற்றை மாத்திரமே உண்மை எனக் கொண்டு மற்றவர்களிடத்தில் வலியுறுத்துவதை இன்னும் சாதாரண மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல, படித்த மக்களிடத்திலும் ஆழமாக ஊன்றியிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தாம் வாழ்ந்த பூமியைத் தவிர மற்றைய நாடுகள், பிரதேசங்கள் பற்றி அறிவு இருந்திருக்க நியாயம் இல்லை. பண்டைமாற்று தொடங்கும் காலத்தில் தான் போக்குவரத்து வசதி அதிகரிப்பதன் ஊடாக புதிய இனங்களுடனான தொடர்புகளும், பரிவர்த்தனைகளும் ஏற்பட்டன. முற்காலத்தில் மக்களுடனான தொடர்பு வளர்ச்சியடையாத காலத்தில் தாம் வாழுகின்ற உலகம் குறுகியதாக இருந்திருக்கும்.


மனித கூட்டம் தமக்கென தனியான கலாச்சாரத்தைக் கொண்டு இருந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகவோ அல்லது வாக்களித்த தேசம் பற்றிய உலகக் கண்ணோட்டம் இலங்கையில் வாழ்ந்த மக்களுக்கு ஏன் ஏற்படவில்லை. யூதருக்கு தம்மையும் தமது நாட்டையும் சுற்றியிருந்த மக்களையும் தவிர வேறு மக்கள் இருந்திருப்பதாக தெரியவில்லை. வளர்ச்சியடைந்த கலாச்சாரம் பிறபாகங்களில் இருந்தது பற்றி விவிலியம் அறிந்திருக்கவும் இல்லை, அவை பற்றி எவ்வித கருத்தும் கூறவும் இல்லை.
ஆதாம், ஏவாள் தான் முதல்மனிதர்களாக விவிலியத்தில் கூறப்படுகின்றது. ஆனால் படைப்பைப் பற்றி ஒவ்வொரு உலகக் கண்ணோட்டம் வெளிப்படுத்துவது போலவே பௌத்தமும் வெளிப்படுத்துகின்றது. இந்தியப் பெருங்கடல் தரை ஆராய்ச்சியோடு தந்திர நூல்களின் ஆய்வும் லெமூரியப் புதிர் பற்றிய புதிய ஒளியை வழங்கலாம். (மனிதக் குரங்கிலிருந்து மனிதன் தோன்றி இந்தியாவில் அறிவு மனிதனாக மாறி உலகெங்கணும் பரவினான் என்பது பௌத்தக் கொள்கை) (இந்துமா கடல் மர்மங்கள் -பக்கம் 119) இங்கு ஒரு இனக்குழுமத்தின் (யூத) வரலாற்றானது மற்றைய இனங்களின் உலகக் கண்ணோட்டத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் ஆளுமையை செலுத்துகின்றது தற்கால கிறிஸ்தவ சமயத்தவர் ஊடாக. நாம் யூதமையவாதத்தின் தத்துப்பிள்ளையான ஐரோப்பிய மையவாதத்தில் இருந்து கடந்த காலத்தைய கலாசாலை ஆய்வு முறை ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்ட ஆரம்பத்தில் தேசியம் தன்னுடைய இனப்பெருமையை முன்னிறுத்தியே தமிழ் தேசத்தினை அடைவதற்கான சிந்தனையை வளர்த்தெடுத்திருந்தது. தன்னுடைய பெருமையை, தேவையை மட்டும் வைத்துப் போராடும் போது (தேசிய இனம் தேசமாக வளரும் இதுஒருபுறமிருக்க) இனமையவாதமும் நுழைந்து விடுகின்றது. எனவே தமிழ் இனமையவாத கருத்து தோன்றியிருக்கின்ற போது ஏற்கனவே யூத இனம் மையவாத கருத்தில் ஊன்றி நிற்கின்றது. இவ்வாறு இருக்கையில் யூதமையவாதக் கருத்தை முன்னிறுத்தும் விவிலியத்தை ஏற்றுக் கொள்கையில், எவ்வாறு ஒரு மையவாதக் மதத்தின் கருத்து இன்னொரு மையவாதக் கருத்தை ஏற்றுக் கொள்ளும்? ஒருவர் தேசியவாதியாக இருக்கின்ற போது கிறிஸ்தவர் சைவத்தை, சாதிய - வர்ணாசிரமத்தை ஏற்றுக் கொள்வது சுயமுரண்பாட்டிற்கு உட்பட்டதே

யூதமையவாதக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தமிழ் மையவாதம் தனது கருத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். தமிழ்தேசியவாதி மேலானதாக மதநம்பிக்கை ஆழுமை கொள்கின்றது.  இங்கு தேசியவாதம் என்பது அடிப்படையில் மதச் சிந்தனையில் அமைந்திருப்பது முற்போக்கு (பழைய உற்பத்தி, சிந்தனைமுறையை மாற்ற வேண்டிய) தேசியவாதமாகவும் மாற்றத்தை கொடுக்கும் பாதையாகவும் இருக்கும். மதவாதம் கடந்து சிந்திக்கும் முனைப்பு தமிழ் தேசத்தின் போராட்டத்தின் போது கட்டமைக்கப்படவில்லை. யூத மையவாத, வர்ணாசிரமக் கருத்தை ஆதரிப்பதினால் தமிழ் மையவாதம் கூட தன்னுடைய கருத்தில் நேர்மையற்ற தன்மையையும் எதிர்க் கொள்ள வேண்டிவருவதுடன், தன்இன மையவாதத்திற்கே போலியாக நடந்து கொள்கின்றது.

இன்று உலகின் பழைய நாகரீகம் எகிப்து என்றுதான் அறியப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கலாச்சாரத்திற்கே அடி அத்திவாரமாக சகாரா பாலைவனப்பகுதி இருந்திருக்கலாம் என்று கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் தடயங்களைக் கொண்டு கருதிக் கொள்கின்றனர். மனிதனின் அறிவின் முதிர்ச்சி ஏற்பட்டு காவியங்கள், கதைகளை உருவாகும் முன்னரே தோன்றிய மனித குலத்தில் வயதோ பல ஆயிரம் ஆண்டு பழமையானதாகும். உலகம் முழுவதும் பரந்து சென்ற மனித உயிரினம் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப தம்மை மேம்படுத்திக் கொண்டு தான் வந்திருக்கின்றன.



5. வரைவிலக்கணம் பற்றி

நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சியின் பின்னரே தேசிய இனம் உருவாக்கப்படுகின்றது. தேசங்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் உருவாக்கப்படுகின்றது. ஆபிரகாம் குலச்சமுதாயத்தை பிரதிபலிக்கின்ற காலத்தை குறித்து நிற்கின்றார். அத்தடன் ஒரு குலத்தின் தவைவனாகவே வர்ணிக்கப்படுகின்றது. இவ்வேளையில் இன்றைய காலத்தின் தேசிய எழுச்சியுடன் எவ்வாறு பொதுமைப்படுத்த முடியும்?
எகிப்தில் நிலக்கிழார் முறையை (Feudalism) அறிமுகப்படுத்தியது (பக்.9) சூசை என கருதுகின்றார். ஆனால் இன்று ஆராய்ச்சியின்படி வரலாற்றில் (விவிலியத்தில்) குறிப்பிடப்படும் பாரவோனை விட பல நூற்றாண்டு பின்னர் கொண்ட பாரவோன் பரம்பரையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவை மாத்திரம் அல்ல பண்டைய எகிப்திய வரலாற்றை ஆய்வு செய்யப்பட்ட வரலாறுகளில் இருந்து புதிது புதிதாக எழுதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். நிலவுடமைச் சமூகத்தின் தோற்றத்துடன்; அரசபரம்பரையின் ஆட்சிமுறை உருவாக்கப்படுகின்றது. ஆனால் அரச பரம்பரை என்பது எடுத்த எடுப்பிலேயே பேரரசர்கள், பெரிய இராச்சியம் என உருவாகியிருக்க முடியாது.
சமுதாயத்தில் கீழ் நிலையில் இருந்த மக்களைக் கொண்டு தான் எகிப்தின் பிரமிட் கோபுரங்கள், தலிபான் அரசு இடித்துத் தள்ளும் 62 அடி உயர புத்தர் சிலை, கோவில் உட்பீடத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படும் இன்றைய சைவ, வைணக் கோவில்களைக் கட்டியவர்கள், உலக அதிசயங்களில் ஒன்றாக கணிக்கப்படும் தாஜ் மகாலைக் கட்டியது உட்பட பல உயர்ந்த கோபுரங்களைக் கட்டியவர்கள் வறிய மக்களே. யூதகள் அடிமைகளாகத் தான் இருந்துள்ளார்கள். எகிப்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசர்களைக்  கொண்டு ஆட்சியை கொண்டிருக்கின்றது. சூசை என்பவர் கோத்திரம்- குலத்தின் தலைவனாகக் கொள்வது என்பது இனக்குழும வாழ்விற்கு உட்பட்டதாகும்.
பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் போக்கு சொத்துக்களையும் அடிமைகளையும் கொண்டு தமது சிறப்பை காட்டுவதற்காக கோவில்கள், மாளிகைகள், சிற்பங்களை செருக்க முடிந்தது. யூதர்களே எகிப்தில் நிலப்பிரபுத்துவத்தை அறிமுகப்படுத்தியது என்ற கருத்தானது நாம் அறியும் வரலாற்றிற்கு முரணானதாகும்.

இனவொடுக்கல் என வரையறுத்துக் கொள்வது சரியானதா? (ப.11 கிறித்துவத்தின் உள்ளீடு தேசிய இறையியலே) குலச்சமுதாயத்தில் இருந்து பிடிபட்ட அடிமைகளைக் துன்புறுத்துவது, அடிமைப்படுத்துவது, அடிமைகள் மீது வேலைப்பழுக்களை சுமத்துவது வரலாற்றில் நடைபெற்று வந்துள்ளது. இனக்குழுமங்களிடையே வளங்கள்,  இருப்பு, தமது குலத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அடிக்கடி மோதல்கள் நடப்பது இயல்பானதாகும். ஒரு குலம் தமது குலத்தைப் பாதுகாப்பது என்பது தமது பங்காளிகளின் உதவியுடன்  மேற்கொள்ளப்படுவதாகும். தமது குலத்தின் அலகை பாதுகாக்கும் பொருட்டு அகமணமுறையும் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு தமது குலத்தின் எண்ணிக்கை பாதுகாக்கப்படுகின்றது.  இனக்குழுமம் (tribal) இன்னொரு இனக்குழுமத்தின் மீதான தாக்குதல் என்பதை இனவொடுக்கலாகக் கொள்ள முடியாது.
யூதர்களை விசேடமாக ஒடுக்கும் நிலை ஏற்பட்டது எனக் கூறுவது யூத மைதவாதக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பார்வைக்கு உட்பட்டதாகும். ஆனால் வரலாறு என்பது நீண்ட நெடிய பாதையைக் கொண்டது. ஒவ்வொரு இனக்குழுமங்கள் வலாற்றை எழுதியும், எழுதப்படாதாகவும், எழுத்துருவம் பெறாத சமூக அமைப்புக்களும் இருந்திருக்கின்றது. இந்தப் பார்வையை நாம் கற்றும் விவிலியம் ஏறுறுக் கொள்வதில்லை. ஒவ்வொரு வரையறைகளும் ஒவ்வொரு பொருளாதார அமைப்பு ஏற்ப மாறுபடுகின்றது.



6. உலகக் கண்ணோட்டங்கள்
ஒவ்வொரு மனித கூட்டமும் தான் வாழும் உலகத்தின் படைப்பையும் தன்னுடைய நாளாந்த வாழ்வின் நல்லது கெட்டது போன்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் காரணமாக ஒரு சக்தி இருக்கும் நம்புகின்றனர். கடவுளையும், மதத்தையும் நம்பும் மனிதர்களே பெரும்பான்மையாக இந்த உலகத்தில் வாழ்கின்றார்கள்.

இன்றைய சமூக அமைப்பின் வாழ்க்கை முறைக்கும் மதங்கள் போதிக்கும் அறநெறிக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றது. இன்றைய பொருளாதார உற்பத்திற்கு எற்ப அதன் சமூக வளர்ச்சியில் பழைய அறநெறிகளையும், உலகக் கண்ணோட்டத்தினால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு மாற்றாக புதிய உலகக் கண்ணோட்டங்களை தேடிச் செல்கின்றனர். இவை குறிப்பாக கடவுள் சக்தி என்பதற்கு அப்பால் அன்றாட வாழ்க்கையில் மனவுழைச்சலுக்கு உள்ளாகாது தமது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் புதிய வகை மதக்குழுவாகவும் (நீதிநெறிமுறைக் குழுக்கள்) இன்றைய மனிதர்கள் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கண்ணோட்டமானது தானாக தோற்றியதல்ல, மாறாக ஒவ்வொரு பொருளாதார அமைப்பைக் கொண்டே தீர்மானம் பெறுகின்றது. பொருளாதார அமைப்பு என்னும் போது அடிக்கட்டுமானத்தில் இருந்து (உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின்) மனிதனுடைய உழைப்பு, பொருள் உற்பத்தி செய்யப்படும் உபயோகிக்கப்படும் உபகரணம் இவற்றைக் கொண்டே பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்படுகின்றது. மனிதருடைய உழைப்புச் தேர்ச்சி மாறுபடவும், அதன் மூலம் பொருள் உற்பத்தி உபகரணங்களும் மாறுபடுகின்றது. இதனால் புதிய பொருளாதார அமைப்பு (மேற்கட்டுமானம்) உருவாக்கப்படுகின்றது. இதிலிருந்து உருவாக்கப்படும் நிறுவனங்களான (இதன் மீது தான் மேற்கட்டுமானங்களான) குடும்பம், அரசு, சட்டம், நீதிமன்றம், இராணுவம், (சமயம்) மதக் கோட்பாடுகள் மனித வாழ்வைக் கட்டுப்படுத்தி வைப்பதுடன், பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கப்படும் வகையில் மறுஉற்பத்தி செய்யப்படுகின்றது.

இவ்வாறே பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிந்தனையும் மறுஉற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் சிந்தனை தேசங்களில் பலவடிவங்களில் சர்ச்சைக்கு உரியதாக்கியுள்ளது. இந்தச் சிந்தனையை கருத்துமுதல்வாதம் என வரையறுத்துக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.
உற்பத்தி உறவு, உற்பத்தி சக்திக்கு மேல் கட்டப்படும் பழைய உற்பத்தி முறை சிதைக்கப்பட்டும் ஆனால் அதன் பழைய சிந்தனை வடிவம் தொடர்ந்து கொண்டிருக்கும். இதனை அக முரண்பாடு எனலாம் இது  எம்மிடம் உள்ள மனக்கசப்பு கருத்துமுதல்வாதம் - மனிதர்களில் இருக்கும் போலியுணர்வு ( சிந்தனை, மனக்கசப்பு, உலகம் பற்றி புரிதல் இது இனக்குழும வாழ்வியல், நிலமானிய வாழ்வியல் சிந்தனைகளின் தொடர்ச்சியாக இருப்பது- சாதியுணர்வு, மத உணர்வு, பிரதேச உணர்வு என விரிந்து செல்கின்றது.  இவ்வாறு பல விடயங்களை உள்ளாகியிருப்பது இனக்குழுமத்தின், நிலமானியத்தின் எச்சமாக தொடர்கின்றது. இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -socially stigmatized) மனிதர்களை பிரிக்கின்றது, அடக்குகின்றது, வளர்ச்சியை தடுக்கின்றது. இதன் இன்னொரு வெளிப்பாடு பிரதேசவாதமாகும் இது centric- மையவாதம்- யாழ்மையவாதம் என்பது நிலமானிய சிந்தனை அடித்தளமாக இருக்கின்றது.
மதத்தின் வெளித் தோற்றத்தையும் செயற்பாட்டையும் வைத்துக் கொண்டு மதம் மனிதரை வழிநடத்துகின்றது என்று கூறுவதன் மூலம் சிந்தனை என்பது ஒரு சமூக அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட சிந்தனை வடிவம் என்பதை இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
மனித குலத்தின் வரலாறு பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டைக் கொண்டது. நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற போதிலும் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒரே மாதிரியான வரலாற்றுப் போக்கை கொண்டதாக இல்லை. ஏற்றத் தாழ்வுகள், எது சரியான கோட்பாடு, எது உண்மையான கடவுள் என்ற பிரச்சனைகள் எல்லாம் இடையில் வந்த குழப்பங்கள் தான். மனித குல வரலாற்றில் சிந்தனை மூலம் சேமித்து சேமித்து தமது அனுபவத்தின் மூலம் பல வெற்றிகளை அடைந்து, மேலும் மேலும்; வளர்ச்சியடைந்துள்ளது. முன்னேற்றம் ஏற்படுகின்ற போது மனிதர்களுக்கு தமக்கு மீறிய செயற்பாடுகள் மீது ஒரு வித பயம் எற்பட்டது. இப்பயத்தினை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கைமாறாக ஏதாவது செய்தால் தமக்கு நல்லது நடக்கும் என எண்ணியிருக்கலாம். இறந்தவர்களின் ஆன்மாவை வழிபட (animism) ஆரம்பித்தார்கள் எனலாம். அத்துடன் இறக்காதவர்களின் ஆன்மாவையும் (மரம், மலை, மிருகம்) (animatism) நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர் எனலாம். இவற்றை ஆவி வழிபாடாக கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக மனிதர்களே தான் செய்த பொருளை சக்தி உள்ளது என நம்பும் நிலை ஏற்பட்டதினால், அந்தப் பொருளையே ஆற்றல் கொண்ட சக்தி என வழிபட்டிருக்க முடியும். ஆற்றல் கொண்டதாக கருதிய சக்திiயை திருப்திப்படுத்தும் பொருட்டு சடங்குகளை செய்யத் தொடங்கினர். சடங்குகள் சமுதாயத்தின் நலன் கருதியும், சமூகத்தை மென்மேலும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும் மந்திரங்கள், சடங்குகளில் பாடப்பட்டன. மந்திரங்களை இராகங்கள் இசைத்து பாடப்பட்டதுடன், சடங்கின் போது ஆடலும் இடம் பெற்றன.
சடங்கினை குலத்தின் தலைவர் (ஆண் அல்லது பெண்) ஏற்று நடத்தியிருப்பார். சடங்குகளின் போது உணவு படைக்கும் பழக்கமும் ஏற்பட்டது. (தற்காலத்தில் இறந்தவர்களின் சட அடக்கத்தின் பின்னர் விளக்கினை ஏற்றிவைப்பர், 3 அல்லது 7 நாட்கள் (எட்டுச் செலவு என்பர், திதி) உணவினையும் சேர்த்து வைப்பர். அத்துடன் நினைவு தினத்தன்று உணவைப் படைக்கும் பழக்கமும் இருக்கின்றது. இவற்றை ரஸ்யாவில் வாழும் பழங்குடிகள், சீனத்தில் வாழ்பவர்களிடையேயும் அவதானிக்க முடியும்.) சடங்குகளை நடத்துபவர்களை (Shaman) வெவ்வேறு பேர் கொண்டு அழைக்கப்படுகின்றது. இவர்களை வைத்தியர், பரியாரி, வள்ளுவர், தற்காலத்தில் பில்லி, சூனியம், பேய்யோட்டுபவர் மந்திரவாதி, மாந்திரீகர்கள், தேவராட்டி, தேவராளன் என அழைக்கப்படுகின்றனர். (Shaman) ஆவதற்கு இருபாலரினதும் தகுதியானவர்களாக இருந்தனர்.
இறந்தவர்களையும் (தாழியில் அடக்கம் செய்வது), வீரர்களையும் நினைவுகூர்வதும் (நடுகல்) கன்னிப்பெண்கள் (சுமைதாங்கி) இறந்தால் அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் எழுப்பப் பட்டு வந்துள்ளது. இது நடுகல்வணக்கமாக வளர்ந்து வந்துள்ளதையும் பலதேசங்களிலும் ஒருமைப்பாடு உள்ளன. இவ்வாறான எச்சங்கள் பொன்பரப்பி, ஆதிச்சநல்லூர் போன்ற  இடங்களிலும் தமிழகமெங்கும் நடுகற்கள் கண்ணெடுக்கப்பட்டதை இங்கு பொருத்தி நோக்குவது தகும்.

புலிகளின் காலத்தில் போராளிகளை எரிப்பதற்கு பதிலாக புதைந்தனர். போராளிகள் புதைக்கப்பட்ட இடத்தில் நடுகள்- நினைவுக் கற்கள் நடப்பட்டன.  இவ்வாறு புதைப்பதை அனைத்து மதப்பிரிவினர்களும் அங்கீகரிக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. இவ்வாறு எரிப்பதற்கு பதிலாக (சைவ) அல்லது கிறிஸ்தவர்கள் எதிர்க்கவில்லை அத்துடன் இது நாஸ்தீகச் செயற்பாடு என்று கூறுப்படுகின்றது. இறந்தவர்களை புதைப்பது, நடுகல் நடுவது என்பது ஒரு நம்பிக்கை. இவைகள் எல்லாம் மதச் சாயமற்ற நிகழ்வுகள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது சாமானிசம் (shamanism) என்ற வழிபாட்டுச்சடங்கு வகைக்குள் உட்பட்டதாகும். 


மனித குலத்தின் ஆரம்பத்தில் தாய்வழிச் சமுதாய அமைப்புத் தான் இருந்தது. அந்த குலத்தின் தலைவியாய் இருந்திருக்கின்றனர். தாயானவள் உயிரை ஈன்றெடுக்கும் வல்லமையானது புதிய விடயமாகவும், ஆச்சரியப்படத்தக்க சக்தியைக் கொண்டவராக தாய் இருந்திருக்கின்றமையால் இயல்பாகவே தாய்மீதும் மதிப்பும், சமூகத்தின் முக்கிய இடமும் ஏற்பட்டிருந்தது. புதிய சக்தியை கொடுக்கும் தாய் என்பதால் விளைநிலங்களையும், கடலையும், தாய்தெய்வங்களை கொண்டதாக சமூகம் இருந்து வருகின்றது. இதுதான் மனிதர்களிடையே ஏற்பட்ட முதலாவது வேலைப்பிரிவினையாகும். சமூக எச்சத்தின் வாயிலாக தாய்வழிச் சமூக அமைப்பின் எச்சங்களும், தாய் வழி உறவுமுறையும் சமூகத்தில் தொடர்கின்றது. எல்லாப் புராணக் கதைகளும் கற்பனையிலும் அதற்கூடாகவும் இயற்கைச் சக்திகளைத் தன்வயப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி, அவற்றிற்கு உருகொடுக்கின்றன. ஆகவே மனிதன் இயற்கைச் சக்திகளுக்கு மேலாக ஆதிக்கம் பெற்ற பின்னர் இவை மறைந்து விடுகின்றன. (மார்க்ஸ்- ப. 68 முரண்பாடுபற்றி) மனித வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புக்களும், இயற்கையை வெல்கின்ற போது புதிய வகை பொருளுற்பத்திக்கு வழிவகுக்கின்றது. புதிய வகை பொருளுற்பத்தி தனியுடமைச் சமூகத்தின் தோற்றம் பெறுகின்ற போது தாயிடம் சக்தி இருந்தது என்று நம்பிய சமூக அமைப்பு அதில் இருந்து விடுபட்டுக் கொண்டது. இதன் பின்னரே ஆணாதிக்க சமூகத்தின் தோற்றம் பெறுகின்றது.

இவ்வாறு வளர்ந்து வந்த இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தமது அடையாளமாக குலக்குறிகளை (Totem) கொண்டிருப்பர். இதனை தமிழர் வரலாற்றில் காணமுடியும். குலத்தின் குறியினை ஒரு குலம் கொண்டிருக்கும் போது அவை இன்றைய காலத்துப் பார்வையில் பகுத்தறிவிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குலக்குறியானது தமது குலத்துக்கு நன்மை தந்தது என்று அமைந்து கொள்ளலாம். தமது முன்னோர்கள் மரம், விலங்கு, மீன்வகைகள் போன்றவற்றில் இருந்து தோன்றியதாக இருக்கலாம்,    அல்லது, தாம் வாழ்ந்து வந்த சூழலின் நினைவாக இருக்கலாம், அல்லது தமக்கு ஆபத்தினைக் விளைவிக்கக் கூடியதாக இருந்திருப்பின் அதனை மரியாதை செய்வது இயற்கையின் சீற்றத்தை தணிப்பதற்காக கூட அமைந்திருக்க முடியும்.
கதைகள், வீரகாவியங்கள் மக்களிடையே வளர்ந்து வந்துள்ளது. இவைகள் உண்மையாக தமது முன்னோர்கள் பட்ட அனுபவம், மக்களின் கற்பனைத் திறன் என்பன வாய்மொழியூடாக பரம்பரை பரம்பரையாக தொடரப்பட்டது. தொடரும் வாய்மொழிக் கதைகள், இலக்கியங்களாக வந்தவைகள் முன்னர் ஆன்மீக, சமய சிந்தனை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் உழைப்பில் இருந்து மூளை உழைப்பினை பிரிக்கும் நிலையை பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இவ்வாறு மனித சமூகம் பின்பற்றிவரும் ஐதீகங்களும், பண்பாட்டு எச்சங்களும் பின்னாளில் தேசிய இனங்களாக வருகின்ற போது அவை தேசிய இனங்களின் குறிப்பானாக (symbol) தேசியக் கொடியாக உருவாகின்றது.
மனித குலவரலாற்றில் கற்றுக் கொண்டதை மேலும் சிறப்புப் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாகின்றனர். இவர்கள் மற்றவர்களைவிட பலவிடயங்கள் தெரிந்தவர்களாக சமூகத்திற்கு அடையாளம் காட்டப்படுகின்றனர். இந்த வர்க்கப் பிரிவே பொருளாதார வளர்ச்சியைப் பயன்படுத்தி பல விடயங்களை நிறைவேற்றும் சக்தியாக சமூகத்தில் உருவாகின்றனர். அரச உருவாக்கத்தின் பின்னர் அந்த ஆட்சியாளர்களின் சடங்குகளை நிறைவேற்றும் பூசாரிகளாக உருவாகின்றனர். இவ்வாறு உருவாக்கப்படும் மதபோதகர்கள் உயர் வர்க்கத்தில் இருந்தே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றனர். பிராமணர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வருகின்றனர். இங்கு ஐயர், பிராமணர்களே சைவ, வைணவக் கோவில்களில் பூசை செய்யும் ஏக உரிமை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இலங்கையில் அனைத்து சமூகத்தவர்களும் அர்ச்சகர்களாக முடியும் என்ற கோரிக்கை இன்னும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டுச் சூழல் அல்லது இலங்கைச் சூழலில் சிறுபராயத்தில் இருந்து குருத்துவ மடத்தில் சேர்தே குருக்களாக உருவாகின்றனர். கடந்த 20வருடங்களில் சில மாற்றங்கள் நடத்திருக்கின்றன. ஆனாலும் சாதியும் குருக்களின் உருவாக்கத்தை நிர்ணயம் செய்யும் ஒரு நிறுவன அமைப்பாக இருக்கின்றது. உயர் வர்க்கத்தில் இருந்து உருவாக்கப்படும் குருக்களானவர்கள் எந்த வர்க்கத்தில் சமூகமயப்படுத்தப்படுகின்றனரோ, அதே வர்க்கத்தின் சிந்தனையே மறுவுற்பத்தி செய்கின்றனர்.
பொருளாதாரம் வளர்ச்சி பெற சமுதாயம் பழைய சமூகஉறவுகள், சிந்தனைகள் இருந்து சிதைவு பெறுகின்றது. சிதைவினால் ஏற்படும் சமூக உறவை சீர்செய்வதற்கு ஏற்ற உளவியல் மருந்தாக (கருத்து முதல்வாதம்) ஆன்மீகம் உருமாற்றம் பெற்றது. எம்மிடத்தில் இருக்கின்ற சமயங்கள், போதிக்கப்படும் புராண, இதிகாசங்கள் போன்ற கோட்பாடுகள் இவ்வாறு உருவாக்கப்பட்டவை தான்.
தொல்லியச் சான்றுகளில் இருந்து பண்டைய மக்களின் பல்வேறு வகைப்பட்;ட கடவுள்களை வணங்கி வந்திருக்கின்றனர் என அறிய முடிகின்றது. வேதப்பாடங்களையும், கடவுள்களையும் உருவாக்கிய ஆரியர்கள் இந்திய நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தொல்லிந்தியர் வழிபாடு தன்னுள் அடங்கிக் கொண்டது என்று இந்தியவியலாளர் கருதுகின்றனர். அகழ்வாராய்ச்சிகளிலிருந்து சிவன் போன்ற உருவ வழிபாடு தொல்லிந்தியர்களிடையே இருந்து வந்தது என்று தெளிவாவதால் வேதங்களையும் விடத் தொன்மையானவன் சிவன் என்று சைவர்கள் கொண்டாடும் உரிமை சரியே.
தொல்லிந்திய முத்திரைகளில் விலங்குகளால் சூழப்பெற்ற பன்முகக் கடவுள் உருவம் காணப்படுகின்றது. கால்களை யோக நிலையில் பரப்பி அரியணையில் அவ்வுருவம் அமர்ந்துள்ளது. இதிலிருந்தும் சிவ வழிபாட்டினர் யோகிகளின் தலைவன் யோகேஸ்வரன் என்னும் சிவன் என்று வழங்குவதனாலும் யோக தரிசனத்துக்குப் பிதாவென்றழைக்கப்படும் பதஞ்சலிக்கும் முற்பட்டது, தொன்மையானது யோகம் என்பது தெளிவு. அணிகலன் பூண்டகைகள், இருபறமும் எருமைக் கொம்புகள் நிற்கும் விசிறி போன்ற தலைப்பாகை, இந்த உருவத்தில் காணப்படுகின்றன. யானையும் பெண்புலியும் இருமான்களும் யாளியும் எருமையும் சூழ்ந்திருக்கின்றன. புதைபொருள் ஆய்வுக்குழுத் தலைவரான ஜோன் மார்‘ல் என்பார் இவ்வுருவம் விலங்குக்கரசனான பசுபதியையே சுட்டுகிறது என்று துணிந்து கூறுகின்றார். இந்தியாவின் மிகத்தொன்மையான சிவவழிபாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்ற கருத்து இதனால் வலுப்பெறுகின்றது. தொல்லிந்தியர் இக்கடவுளைச் சிவன் என்றேயழைத்தனர் என்று கூறிவிடமுடியாது. இக்காலத்தில் இதுபோன்ற கடவுளைச் சிவன் என்றiழைக்கிறோம். (இந்துமா கடல் மர்மங்கள்- லெமூரியாக் கண்டம் - அலெக்சாந்தர் கோந்த்ரதோவ் பக்கம் 112-3) இங்கு சிந்துவெளியில் கட்டெடுக்கப்பட்ட குறியீடு என்பது நேரடியாக சிவன் என்று கொள்வது  ஆய்விற்கு உரியதாகும்.  காரணம் சிவன் என்ற கடவுள் பக்தி இலக்கியத்தின் பின்னரான காலத்திலேயே பிரபல்யமாகின்றது.
சிந்துவெளி நாகரீக காலத்தில் கடவுள்கள் இன்றைக்கு பலமாற்றங்களுக்கு உள்ளாகி சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. சிந்துவெளிக் காலத்திலே shaman குலத்தலைவனான (shamanism)  என்பவர் அடுத்த உருவக் கடவுகள்  உருப்பெற்றுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஆராய்கின்றார்கள். சிந்துவெளி எழுத்துக்களை கொண்டு முருகவழிபாடு இருந்துள்ளதாக என்றும் ஆராய்கின்றனர். ஆனாலும் சாமனிசத்தின் (shamanism) எச்சங்கள் இன்று வரை முழுமையாக மறைவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்;.

ஐந்து திணைகளைக் கொண்ட இனக்குழுமச் சமூகங்களையும் தெய்வழிபாடுகளும் இலக்கியங்களில் பேசப்படுகின்றது.
குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் சேயோன், வேலனை வணங்கினர்.
முல்லை காடும் காடுசார்ந்த இடங்களும் திருமால்
மருதம் வயலும் வயல்சார்ந்த நிலத்தில் வேந்தன்
பாலை வரண்ட நிலங்கள் கொற்றவை
கடலும் கடல்சார்ந்த நிலத்தில் வருணன் என்பவனே கடவுளாகும்.
இன்றைய சமயம் தொல்பழங்குடிவாழ்வின் சாமனிசத்தின் (shamanism) எச்சங்கள் எனப்படுவது 5000 ஆண்டுகளுக்கு முன்னராக எம்முன்னோர்களின் தாம் வணங்கிக் கொண்ட இறந்தவர்களின் ஆவி, தமது மூதாதேயர்கள், தெய்வங்கள், இவைகளின் தொடர்ச்சியே ஆகும்.
தமிழர் வரலாற்றை எடுத்துக் கொண்டால்
-சிந்துவெளி கால தெய்வங்கள் (யோகி, லிங்கம்- குண்டலினி) வரலாற்றுத் தொடர்ச்சி
- ஐந்து திணைகளை கொண்ட மக்கள் கூட்டத்தின் கடவுள்களும்;
- ஆரிய வழிவந்த தெய்வங்களான விஸ்ணு வழிபாட்டு முறைகள்
- ஆகமவழிபாட்டில் அமைந்து கொண்ட சிவ வழிபாடு, லிங்க வழிபாடுகள்
- அண்ணன்மார், நாச்சிமார், அய்யன், அம்மன், காளி போன்ற கிராமிய (folk gods) தெய்வங்கள் என்பன
- பக்தி இயக்கத்தின் உண்டாக்கப்பட்ட கடவுகள் உருவங்கள், வழிபாடுகள், சைவசித்தாந்தங்கள் என பல கூறுகளாக சமூகத்தில் வெளிப்படுகின்றது.

இன்றைய சமூகம் என்பது தொல்லிந்திய நம்பிக்கைகளுக்கு அப்பால்  இஸ்லாம், கிறிஸ்தவம், புதிய மதநம்பிக்கை (religious sect/ cult) கொண்ட உலகக்கண்ணோட்டங்கள் மக்களிடையேயான நம்பிக்கையாக இருக்கின்றது. இன்று இலங்கையில் தொல்குடிகளின் வழக்கங்களில் இருந்து வரும் அம்சங்கள் மக்களில் வாழ்வியலில் தொடர்ந்து வந்துள்ளது.
இலங்கையில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தின் தாக்கம் அவ்வளவாக இருந்தில்லை. கோவூரின் பகுத்தறிவுச் செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்திருக்கின்றது. இதேவேளை இடதுசாரிய இயக்கமும், விடுதலை இயக்கங்கள் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுவதில் அதிகம் கவனம் செலுதவில்லை என்றே கொள்ளமுடிகின்றது. ஆனாலும் இடது சிந்தனை கொண்டவர்களிடையே மதத்தின் மீதான எதிர் கருத்தாக்கம் ஏற்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் ஆழுமைக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் மதம்- சாதி போன்றவற்றின் மீதான சமரசப்போக்கு இருந்த வேளையில் சாதி -மத முரண்பாடுகள் தலைதூக்கியிருந்தது. (சாதியத்தின் பொருளாதார அடித்தளம் சிதைக்கப்பட்ட போதிலும் சிந்தனை உணர்வு தொடரவே செய்யும் எனினும் இது ஆச்சரியமானதல்ல) 2003களில் மாட்டிறைச்சி விற்கக் கூடாது என்பன போன்ற முரண்பாடுகள் தோன்றியிருந்தன.
முன்னைய சைவ விவகார அமைச்சராக இருந்தவர் இந்து விழா எடுத்து இந்துத்துவாவிற்கு வழியமைத்துக் கொடுத்தார். எனினும் அவரால் நந்தியை முதன்மைப்படுத்துவதை தடுத்துவிட முடியவில்லை. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் கிராமிய தெய்வ வழிபாட்டின் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இன்று மிருகங்களை பலியிடுவது இயல்பான தொல் பழங்குடியில் இருந்து வருபவைகளை இல்லாதொழித்தல் நடைபெறுகின்றது. இது அடிப்படையில் மிருக நலன் போல் காட்சி கொடுக்கப்படுகின்றது. இந்த வேள்வியின் தடையின் பின்னால் உள்ள சிறுதெய்வ வழிபாடு அழிப்பும் இந்துத்துவா என்ற ஒற்றை அங்கியை இங்கு முன்னிறுத்தப்படுகின்றது. கிராமிய வழிபாடுகளான சிறுதெய்வ வழிபாட்டு அழிப்பு என்பது இந்துத்துவாவை இன்றும் அதிவேகத்துடன் இலங்கையில் நுழைப்பதற்கு அவசியானது. இன்று இந்துத்துவ  லெபிகளின் செயற்பாட்டு வெற்றி (2015இல் சுமார் 10 பேருக்கும் குறைவானோர் உண்ணாவிரதம் இருந்தது. அவர்கள் சமூகத்தின் கருத்துருவாக்கிகள் என்பது இந்த நடப்பின் ஊடே பொருத்திப் பார்ப்பது நல்லது.) மிகப்பெரிய அனுமான் உருவச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, பொதுபலசேனாவுடனான இந்துத்துவ அமைப்புக்களின் தொடர் என்பன இந்துத்துவாவின் கைகள் இலங்கையில் செல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துத்துவா அங்கியை போடமுனையும் அரசியலுக்கு இந்து என்ற சமயம் இல்லை என்பது தெரிந்திருக்கப் போவதில்லை.




7. சிந்து இந்துவாகி..!!!
இந்து என்று இந்தியாவில் உள்ள உலகக் கண்ணோட்டத்தின் பிரதான போக்குக்களை இணைத்துக் கொள்ளப்பயன்படுகின்றது. இந்து பாரசீகர்களே சிந்துநதிக்கு அப்பால் உள்ளவர்களை சிந்து என்று அழைத்தார்கள். பாரசீகர்கள் சிந்து வெளிக்கு அப்பால் வசித்து வந்தவர்களைப் குறிக்கப் பாவிக்கப்பட்ட பதமானது பின்னர் 1000 களில் பாரசீகர்களினால் முசுலீம்களை தவிர மற்றவர்களை குறிக்கும் பொருட்டு பாவிக்கப்பட்டது. இதற்கு பின்னராக கொலனித்துவ காலத்தில் தமது மதமான கிறிஸ்தவ மதத்தவர்களையும் மற்றையவர்களையும் விழிப்பதற்காக பயன்படுத்தினர். இதனையே பிற்பட்ட காலத்தில் நவஇந்துத்துவவாதிகள் இந்திய மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்களை இந்து என்று தன்வலையில் வீழ்த்தியிருக்கினர்.
குறிப்பாக கொலனித்துவ காலத்தில் தம்மை விட மற்றை மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் எனவும் தம்மைத் தவிர அனைவரும் கீழ்நிலையானவர்கள் என்ற எண்ணப்பாட்டிற்கு ஆதாரம் பல இடங்களில் காணலாம். இந்தப் பிரச்சினை கொலனித்துவவாதிகளால் இந்தக் கருத்து முதலில் அறிமுகமாகியது. ஆட்சி செய்யதவர்கள் இந்தியர்களைக் குறிப்பிட பனியன் (Banians) பயன்படுத்தினர்.
இவை மாத்திரம் அன்றி தமது மதத்தையும் இந்திய மதங்களையும் பாகுபடுத்தும் பொருட்டு Heathen =Gentoo எனவும் வரையறுத்துக் கொள்ளும் நோக்கில் (மாற்றுச் சமயத்தினர்- புறயினத்தார்) அச்சொல்லை பாவித்தனர். முன்;பு பாரசீகர்களினால் பாவிக்கப்பட்ட சிந்து என்ற சொல்லின் கருவலான இந்து‘‘ (hindoo) (திரு. Von Stietencron- Hinduism Reconsidered) என அழைத்தனர். இந்து என்பதை ஒரு சமயத்தைக் குறிக்க முதன்முதலாக 1818ஆம் ஆண்டில் James Mill என்பவர் தனது "History of British India" என்ற நூலில் பயன்படுத்தியிருந்தார். ‘‘
கொலனித்துவ ஆட்சியில் மற்றவர்களை பிரித்துக் காட்டும் முகமாக பயன்படுத்தப்பட்டது. தம்மையும் எமது தேசத்தவர்களையும் மத நம்பிக்கை கொண்டவர்களையும் பிரித்து வரையறுத்துக் கொள்ளும் நோக்கில் பாவிக்கப்பட்ட இந்தப் பதம் இழிநிலை கொண்டு அழைக்கவே பாவிக்கப்பட்ட சொல்லாகும்.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள உலகக் கண்ணோட்டத்தை இந்து என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனை பெரும்பான்மையினர் எவ்வித முரணற்றவிதத்தில் ஏற்றுக் கொள்வதாக சமூகமயப்படுத்தப்பட்டு பொது உண்மையாக சித்தரிக்கப்படுகின்றது.  
நானும் இந்து நீயும் இந்து என்று அடிக்கடி விவாதங்களில், தொடர்பு சாதனங்களில் கேட்க முடிகின்றது. இந்திய பண்டைய நம்பிக்கைகளில் உருவான சிந்தாந்தங்களில் ஒற்றுமையின்மை, வழிபாட்டு கிரிகைகளில் பங்கெடுக்கும் உரிமையற்ற (அர்ச்சகரா) கோவில் கருவறைக்குள் சென்றுவரும் உரிமையற்ற, தொழில்களில் வர்ணம் என்று பிரிந்துள்ளது. இவ்வகையாக பாகுபாடுகளைக் கொண்டதாகத் தான் நடைமுறையில் இருக்கின்றது. உரிமைகள் கிடையாது ஆனால் இந்து என்று ஏற்றுக் கொள்ள குரல்களை எவ்வாறு எதிர்க்கொள்வது?

இந்திய தவிர்ந்த நாடுகளில்----
இந்தியாவைத் தவிர்ந்த தேசங்களில் உலகமயமாதலுக்கு முந்தைய சமயமாக சைவம் இருந்திருக்கின்றது. வழிபாடுகளையும், தெய்வங்களையுமம் சைவத்துடனே இணைந்து தம்மை அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள். இந்தச் சமூகத்தினை இந்து என்ற அடையாளத்துடனாக தம்மை வெளிப்படுத்தும் ஒரு அசாதாரண நிலையை தற்பொழுது காணமுடிகின்றது. 1980களில் சாதாரணமாக உங்கள் மதம் என்ன என்றால் சைவம் என்றே தம்மை அழைத்திருப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் அதே மக்களிடம் இன்று அவர்களிடத்தில் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இந்து என்ற வரைவிலக்கணம் திணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை அழைத்துக்கொள்ளும் புறஅழுத்தம் என்பது ஏற்பட்டிருக்கின்றது. புறஅழுத்தம் அவர்கள் தமது அடையாளங்களை இழக்க வேண்டிய நிலையும் புதிய (இந்து) அங்கியை அணிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் உருவாகியுள்ளார்கள்.
குறிப்பாக கொலனித்துவக் காலத்தில் வேலைக்காக கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்கள் பழைய முறையைக் கொண்ட வழிபாட்டு முறையை வெளிப்படுத்துவதை தற்காலத்தில் காணொளிகளில் காண முடிகின்றது. இவைகள் தனியாக ஆராயப்பட வேண்டியவேண்டிய தேவையுள்ளது.  இந்துத்துவ என்ற அடையாளத்திற்கு அப்பால் கிராமிய வழிபாட்டு முறையும், கூத்துக்களை தொடர்ச்சியாக பாதுகாப்பது பலநூற்றாண்டு கடந்தும் நடக்கின்றது.
ஒரு சிந்தனை மற்றையதை விழுங்கி ஏப்பம் விடுவதுபோல இந்திய - இலங்கையில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்கள் என்ற வரையறைக்குள் விழுவது முதலில் உயர் வர்க்கத்தவர்களே. சமூகத்தின் உயர்வர்க்கத்தவர்களும் ஆட்சியில் இருப்பவர்களும் கொடுக்கும் கருத்தியல் மேலாண்மைக்கு கட்டுப்பட்டு இயங்கும் நிலையே இந்த சமூக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனை இந்திய வல்லாதிக்க பண்பாட்டுத் திணிப்பாக கருத முடியும். நாம் எமது சம்மதம் இன்றியே புதிய அங்கியை அணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதே போலவே மொழியில் கூட திணிப்பினை அறிந்து கொள்ள முடியும். நகைக்கடை விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் ‘‘‘சுவாகா‘‘‘ என்ற சொல்லானது தமிழ் அல்ல. அதன் அர்த்தத்தினை புரிந்து கொள்ளும் வசதியும் இல்லை. அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும் அது சமூகமயமாக்கப்படுகின்றது.
இவ்வாறான நாம் வேறோர் நாடுகளில் வாழ்கின்றோம் ஏன் நான் மற்றவர்களின் அடையாளத்தை சுமந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
இதையே சாதாரண மக்களும் கேள்வி கேட்கின்றார்கள். அதாவது கறுப்புசாமி என்பது தன் குலதெய்வம் என்னை எவ்வாறு இந்து என்று அழைக்கச் சொல்வாய் என்று கேள்வி எழுப்புவதில் உள்ள நியாயப்பாட்டை சமூகத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இவ்வகையான அகண்ட இந்துத்துவா கருத்தியலை எதிர்ப்பது கூட இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும். 


பாகுபாடுள்ள சமூக அமைப்பு
வர்ணாசிரமக் கோட்பாடுகள் கோலோஞ்சும் வேளையில் மனிதர்களுக்கு சமத்துவம் என்பதே இல்லை. இன்றையப் வரையில் கூட எல்லாரும் அர்ச்சகராக முடியும் என்று சட்டம் இயற்றினாலும் அவை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், சிவ ஆலயங்களில் சிவவழிபாடுகளை மேற்கொள்ள முடிவதில்லை. நந்தன் சென்ற பாதையை இன்றுவரை அடைத்துவைத்துள்ள அவலத்தினை தமது வசதிக்கு ஏற்ப மறந்தே விடுகின்றனர். வர்ணாசிரமத்தைப் போற்றும் கீதையை திணிப்பதும், சமஸ்கிருதம் மற்றவர்கள் படிப்பதே குற்றமாக்கப்பட்ட மொழியை திணிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாதிப்பாட்டினை கொண்டு சமூகத்தை பிரிந்து வைப்பதில் சமய பூசாரிகள் முக்கிய பங்காற்றுகின்றார்கள். சாதிப்பாகுபாடு சமூகத்தில் ஏற்படுத்தி பிரிந்திருப்பதற்கு காரணம் மனுதர்ம சித்தாந்தமே. இந்த சித்தாந்தத்தை எதிர்த்து வந்த பௌத்தம், சமணம் மதங்களை தம்முள் அடக்கிக் கொண்டிருக்கும் மோசடிச் சமய வரலாறாகவே இந்திய சித்தாந்த வரலாறுகள் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களை சமயக் காரியங்களில் ஒதுக்கி வைத்துக் கொண்டு நானும் நீயும் ஒன்று என்று அழைப்பதை ஒரு மோசடி என்றே அழைத்துக் கொள்ள முடியும்.


இவ்வாறு பற்பல உலகப்பார்வையைக் கொண்டதாக இருந்த சமூகம் இன்று பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு “இந்து” என்று அழைக்கும் நிலைக்கு மாற்றம் கொண்டிருக்கின்றது. சிவவழிபாடு, விஸ்ணு வழிபாடு என்றும் தத்துவவிளக்கங்கள கொடுக்கப்பட்டு சிறுதெய்வங்கள் கிராமிய வழிபாடுகள் அனைத்தையும் விழுங்கி இந்துவா என்ற பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றது.
சிவ வழிபாடு, மாலியமும் தோன்ற முன்னரே வேலன் போன்ற குலத்தலைவர்களைக் கொண்ட இனக்குழுக்கள் இருந்திருக்கின்றது அல்லது வேலனை வணக்கும் மக்கள் கூட்டமும் இருந்திருக்கின்றது. வேலன் என்ற அடையாளம் நிறுவப்பட்டது அல்லது இதுதான் வேலன் என்று வரையறுப்பது என்பது சிந்தனை வளர்ச்சியின் பின்னரே சாத்தியமாகும். எனவே இனக்குழும வழி வழிபாட்டு முறை என்பது தொல்குடி மரபு சார்ந்ததாகும். இது இன்றைய கால வரையறை கொண்டு தனியான தூய்மை கொண்டதாக நிறுவுவது அபர்த்தமாகும்.
நாகர்களின் தெய்வமாக நாகமும், இயக்கர்களின் சின்னமாக அரச மர இலையும் இருந்திருக்கின்றன. சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட லிங்க வடிவம், அத்துடன் திராவிட கடவுளாகிய அனுமான் வழிபாடு வைணவத்தில் சென்று மாபாரதத்தில் இடம் பெற்று பிராமணர்களுக்குரிய கடவுளாகியது. இவ்வாறு பல தேசிய கடவுள் அழிக்கப்பட்டு புதிய தேசிய கடவுள்கள் உருவாக்கப்பட்டனர். இவ்வாறே உலக மதங்கள் என இன்று அறியப்பட்டவை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகக் கண்ணோட்டங்கள் தேசிய எல்லைகளைக் கடந்து நாடுகளின் சுதேசிய சிந்தனைகளை அழித்துக் கொண்டு மக்களை தம்வசம் வைத்திருக்கும் முக்கியமான மதப்பிரிவுகளாக

1. பௌத்தமதம் (தெரவாடா, மகாயண, ஹினயான பிரிவுகள்)
2. இஸ்லாம் (சின்னி, சியா, பாகி (Bhahi)
3. சைவம், வைணவம் பிரிவுகள் பொதுவாக இந்து என்று அழைக்கப்படுகின்றது.
4. இனமதமாகிய யூதமதம்
5. சமணம்
6. கிறிஸ்தவமதம் இதற்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன
அ. கத்தோலிக்க மதம் ரோமன் கத்தோலிக்கம், கிழக்கு பிரிவு எனப்படும் ரஸ்ய, கிரேக்க, எத்தியோப்பிய பழைமைப் போக்கு பரிவுகள்
ஆ.லூதர் கால்வினின் எழுச்சியின் பின்னர் உருவான பிளவுபட்டு புரட்டஸ்தாந்து என அழைக்கப்படுகின்றது
இ.அங்கிலிக்கன்
ஈ.ஜெகோவா, பெந்தக்கோஸ்ட் (இலங்கை பிரிவு என்று தனியே) என இதரபலவும்
7. புதிய குழுக்கள் (sect ) இந்தப் பிரிவுகளில் புத்தம், சைவ, வைணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சிந்தனைகளில் இருந்தும் வெளிப்பட்ட பாகி (bhahi) கரேராமா கரேகிறிஸ்ணா, ரஜனீஸ், நித்தியானந்தா, சாய்பாபா,  scientology யோகாச் சிந்தனை போன்றவைகளும் கூட்டாக தற்கொலை செய்வது, அல்லது சமயத் தலைவரால் நயவஞ்சமாக கொலைக்கு உள்ளாக்கப்படுவது சரியானதாகும். இந்தக் குழுவின் தலைமையானது தனது உறுப்பினர்களை சுயசிந்தனையை (எல்லா மதங்களும் தான்) இழக்க வைக்கின்றது பின்னர் தலைமை இசைவா உறுப்பினர்களை ஆட்டிப்படைக்கின்றது)
8. பழங்குடிகளின் உலகக் கண்ணோட்டம் (shamanism - மந்திரவாதி அல்லது குலத் தலைவர் அன்றாடச் சடங்குகளுக்கு தலைமை தாங்குவது தமிழ் சமுதாயத்தில் அண்ணன்மார், நாச்சியார்மார், அய்யன் போன்ற (folk gods) கிராமிய தெய்வங்கள் என்பன.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் பல நீதிமுறைகளைக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் குறிப்பாக பௌத்தம், இசுலாம், யூதம், சைவம், வைணவம், சமணம் ஆகியன சில வகைகளில் முற்போக்குத் தன்மை கொண்டு தான் இருக்கின்றது. இவற்றை ஒரு காலத்தைக் கொண்டே நியாயம் பெறுகின்றது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பௌத்தம், இஸ்லாம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் இலங்கை பௌத்த பேரினவாத மற்றும் இஸ்லாம் தீவிரவாதிகளாகத் தான் நாம் அறிந்திருப்போம். நாம் அறியும் மதத்தின் வெளிப்பாடு அவைகள் அல்ல. இம்மதங்கள் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறியிருக்கின்றன. இந்தச் சமயங்களில் இருக்கும் முற்போக்குக் கருத்துக்கள் புனிதமாக இருப்பதற்கு காரணம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதல்ல. மாறாக மனிதர்களால் காலத்திற்கு காலம் வளர்ந்து வந்த பொருளாதார அமைப்பின் நிலைக்கு தேவையான ஒழுக்க, அறநெறி (நீதி) முறை என்பதனாலாகும்.

மேற்குறிப்பிட்ட சமயங்கள் பல தேசிய இனங்களின் கடவுள்களை அழித்துத் தான் ஆதிக்கத்தில் தற்பொழுது இருக்கின்றன. இதனால் அழிக்கப்பட்ட கடவுள்கள், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற கடவுள் இவைகள் மனிதஇனத்தின் உற்பத்தி தான். இங்கு ஆதிக்கம் கொண்டு வரும் சமயங்கள் தனியே கடவுளை மாத்திரம் நம்பிக்கை கொண்டு முன்வருதில்லை. மாறாக ஒரு பொருளாதார அமைப்பினை பாதுகாத்துக் கொள்ள வைக்கின்ற குறிக்கோளையும், சிந்தனையை உடையதாகும். பொருளாதாரத்தை பாதுகாக்கக் கூடிய அறநெறியை சமயம் சிந்தனையாக பிரதிபலித்துக் கொண்டு ஒரு பொருளாதார அமைப்பை பாதுகாப்பதற்கு சிந்தனைகளை மறுஉற்பத்தி செய்கின்றது. மதச் சிந்தனை சமூகத்தில் எவ்வாறு இயங்குகின்றதை உள்ளே ஆழமாகப் பார்ப்போம். இன்று தமிழ் வழிபாடுகளும் “இந்து” என்ற வரையறைக்குள் இருந்து அழைக்கப்படுகின்றது.



8 புதிய நீதிநெறிக்குழுக்கள் (Sects) 

இந்தியாவில் ஏற்பட்ட சமய சமுதாய சீர்திருத்தத்தின் பயனாக புதிய குழுக்கள் உருவாக்கம் பெற்றன. இந்திய வரலாற்றில் இருந்த மிகமோசமான பழக்கங்களான உடன்கட்டை ஏறல், தீண்டாமை, பெண்சிசுக் கொலை, சிறுவயது திருமணம் செய்தல், விதவைகள் மறுமணமறுப்பு ஆகியவற்றிற்கு எதிரான கிறிஸ்தவ மதப்பிரிவின் தீவிர பிரச்சாரமும், மேற்கத்தைய கல்வி முறையில் கல்வி கற்ற இந்தியர்களின் அதிகரிப்பும் சீர்திருத்தத்திற்கு வித்திட்டது..
இதில் ராஜாராம் மோகன்ராய் (1774) முக்கியமானவராக கொள்ளப்படுகின்றார். இவர் உருவ வழிபாட்டை எதிர்த்து நின்றதுடன் இஸ்லாமிய மார்க்கத்தை அதிகம் பின்பற்றலானார். இதனால் இவர் உருவ வழிபாட்டை எதிர்த்தார். பின்னர் ஓரிறைவன் வழிபாட்டு கொள்கை பற்றி ஆராய்தார். “அமைதிக்கும் ஆனந்தத்துக்கும் ஆதாரமாகிய ஏசநாதரின் கட்டுரைகள்” என்ற ஆய்வையும் வெளியிட்டார். இதனால் கிறிஸ்தவ பிரிவினரிடம் இருந்து இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இவரின் வேதாந்தக் கல்லூரியின் நடவடிக்கையால் எதிர்ப்புக் கொண்ட வைதீக சமயத்தவர்கள் இதற்கு எதிரான தர்மசபை என்ற சபையை உருவாக்கி சமய புத்துயிர்ப்பிற்கு காரணமாக இருந்தார்கள். இந்த இருசபையினரும் ஓரிறைவன் என்ற கொள்கையை முன்வைத்து செயற்பட்டதுடன், ஓரிறைக் கடவுள் கோட்பாட்டை புதுப்பித்தனர்.
இவர்களின் காலத்தின் பின்னர் ஆதிபிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிரு‘;ணா சபை என்று தோற்றம் பெற்றது இதில் பிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது ரஸ்ய நாட்டைச் சேர்ந்த (Helene Petrovaa blavatsky) - (Hendy Olcott  பிளாவத்ஸ்கி, ஒல்கொட் என்பவர்களால 1875களில் உருவாக்கப்பட்டது.
பிளாவத்ஸ்கி இந்திய சித்தாந்தங்களின் பின்னணியாகக் கொண்டு The secret Doctrine 1888 என்றும் Isis Unveiled 1877 மேற்கத்தைய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். 1876 களில் இந்தியா வந்து சென்னை அடையாறில் தலைமையை உருவாக்கிக் கொண்டனர். இதில் அன்னி பெசன்ட் 1886களில் பிரம்பஞான சபையில் சேர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் சமய புத்துணர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்கள் இந்திய தத்துவத்திலும், கிரேக்க மாயக் கொள்கைகளிலும், கிறிஸ்தவத்தில் இருந்தும் தமக்கான நம்பிக்கையை பின்புலமாக கொண்டனர்.
இவர்கள் அறிவின் பிறப்பிடமாக எகிப்தைக் கொண்டனர் எந்த மதமும் உண்மையை விட பெரியதில்லை என்று நம்பினர். ஆனால் எல்லா மதங்களும் உண்மையை அடைவதற்கான வழி என்று ஏற்றுக் கொண்டனர்.
வாழ்க்கையின் உண்மையை ஆரிய அல்லது வெள்ளை சகோதரத்துவம் என்ற உயர்ந்த நிலையை அடையும் வழி என்று நம்பினர். இவர்களின் சித்தாந்தத்தின் மூலம் உயர்குலத்தை உருவாக்க முடியும் எனவும் கருதினர்.
இவர்களின் தத்துவ நிலைப்பாட்டை புத்தரின் முக்தி நிலைக்கு ஒப்பானதாகக் கொள்வர். இந்தச் சிந்தனையின் உற்பத்தியாகிய இலங்கையைச் சேர்ந்த அனாகரிக தருமபாலா என்ற புத்த துறவி இவர்களின் ஆரிய வெள்ளை சகோதரத்துவக் கருத்துப் பால் ஈர்ப்பு கொண்டு அவர்களின் ஒரு சீடராக இருந்துள்ளார்.
ஆனாகரிக தர்மபாலா சிங்கள இயக்கத்தின் தந்தையாக ஆரியமே உயர்ந்தது என்ற கருத்தாக்கத்துடன் நாட்டின் விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவராவார். ஆரிய மேன்மைக் கருத்துருவாக்கத்தின் சிங்கள பெருந்தேசியவெறிச் சிந்தனைக்கு ஒரு உரம் போட்ட நிகழ்வாகக் கொள்ள முடியும்.
அனாகரிக தர்மபாலாவின் நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பின் சிதைவினை எதிர்க் கொள்ள முடியாமையும், பொருளாதாரம் மாற்றமடைந்து வருவதை விளங்கிக் கொள்ள முடியாமையாகும்.  நிலபிரபுத்துவ உற்பத்தி முறையில் ஏற்பட்ட சிதைவினால் எதிர்காலத்திற்கான நிச்சயமற்ற தன்மை, சுயபொருளாதார அமைப்பு மாற்றம் பெற்று தொழிலாளர்கள் தமது உழைப்பை கூலியாக விற்கும் நிலையை அடைகின்றார்கள். பழைய உற்பத்தி முறையில் இருந்து விடுதலை பெற்றதை புரிந்து கொள்ள முடியாத அறிவு முதிர்ச்சியின்மை தர்மபாலாவின் வெளிப்பாடாகும். இது ஆற்றல்வளம் கொண்ட தேசியஇனமான சிங்கள தேசிய இனம் என்பது தேசத்தின் பண்பை நோக்கி வளர்ந்து கொண்டிருந்த காலப்பகுதியாகும். பொருளாதாரத்தில் மாற்றங்களினால் வேலையில்லாதோர், பொருளாதாரத்தில் எதிர்காலம் பற்றிய பதற்றமும் மற்றைய தேசிய இனத்தவர்களே காரணம் என கற்பித்தது. தர்மபாலாவின் ஆரியவுண்மை என்ற கருத்தாக்கமானது பௌத்தமத எழுச்சியினுள்ளும், சிங்கள தேசியக் கருத்துக்களினுள்ளும் சரணாகதியடைந்தது. பௌத்த -சிங்கள தேசியவாதமும் இனங்களை அடக்குவதற்கு துணைபோனது.


9 சமய உட்கிளைகள்

பெரும் மதங்களில் இருந்து வெவ்வேறு காரணங்களுக்காக முரண்பாடு கொண்டு  பிரிகின்றது. இவற்றின் நோக்கம் என்பதே மதம் ஒரு அபினாக  இருக்க வேண்டும் என்ற தேவையை பேணும் நோக்கமாகும்.
இன்றைய காலத்தின் வெளிப்பாடாக பல நீதிநெறிமுறைக் குழுக்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றில் ஒன்று உளச்சோர்வு, மனவுழைச்சல் போன்றவற்றை தீர்க்கும் காரணிகளாகவும் இருக்கின்ற மதங்களில் இருந்து வரும் முரண்பாடுகளினால் ஏற்பட்ட பிரிவினைகள் ஊடாக ஒரு குழுவாக உருவாகிக் கொண்டவர்கள். இந்தக் குழுக்களில் பாரம்பரிய மதப் பிரிவுகளில் இருந்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவைகள் மக்களிடம் இருக்கின்ற பழமைக் கருத்தில் இருந்தும், வரலாறுகளில் இருந்தும் புதுப்பிக்கப்படுகின்றதையும் அவதானிக்க முடியும்.

இன்றைய காலங்களில் கிறிஸ்தவத்தில் இருந்து புதிய பிரிவுகள் தோற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றன. இவர்களின் ஒரு பிரிவான விசுவாச (Faith church of god) தேவசபையை எடுத்துக் கொண்டால் பெத்தக்கோஸ்த் சபையின் கடும்போக்கில் போக்கில் இருந்து மாறுபட்டு தாராளப் போக்கை கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர். பெத்தக்கோஸ்த் சபையை விட கலை இலக்கிய நிகழ்ச்சிகளை, களியாட்டங்களை ஏற்றுக் கொள்ளல், நகை அணிவது, நிறச் சேலைகளை அணிவதை (இலங்கை பெத்தக்கோஸ்த் சபை வெள்ளைச் சேலையை மாத்திரம் அங்கீகரித்தது) அங்கீகரிப்பது போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்கின்றனர். இதனால் மற்றைய மதத்தவர்களை உள்வாக்கிக் கொள்வதிலும் தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர்.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து பல பிரிவுகளாக பிரிந்துள்ளதைப் போன்றே பல சிறு நீதிநெறிக்குழுக்கள் தமது நம்பிக்கைகளை சமூகத்தினுள் புதிதாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுக்களும் தம்முள் முரண்பட்டுக் கொண்டு தத்தம் பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
இதில் பெரும் பணப் புழக்கத்தினை பின்புலமாக கொண்டியங்கும் அமைப்புக்களாக இறுதிநாள் வருகை (scientheology) ஸ்கின்தியோலோஜி, சாய்பாபா, ரஜனீஸ் புதிதாக நித்தியானத்தாவும் இருக்கின்றதுடன். கூட்டாக தற்கொலை செய்யும் புதிய (New age) நெறிக்குழுவும் இருக்கின்றது.
யோகப்பயிற்சிப் பட்டறைகள், தியான பயிற்சிப் பட்டறை, நிறக்கல் மூலம் குணமடைதல், நிறைகுறையும் முயற்சிகள், பழைய இனத் தெய்வ வழிபாடு புதுப்பிக்கப்படல், பாரம்பரிய சமயங்கள் போதிக்கும் ஓழுக்க நெறிகளுக்கு அப்பால் இருந்து உண்மை நிலையைத் தேடிப்போவது போன்ற வகையான புதிய மதக்குழுக்களை குறிப்பிடலாம்.

மேற்கத்தைய சமூகத்தை தனிநபர்களாக உருப்பெற்று தனித்துவவாத சிந்தனையில் ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தனிமை மனவுழைச்சல் என்று பல சமூக நோய்கள் உருவாகியிருக்கின்றன. இந்த நோயை பாரம்பரிய மதப்பிரிவினரால் உள்வாங்கிக் கொள்ளவோ தனிநபர் தேடும் பாதுகாப்பை கொடுப்பதில் ஏற்படும் அவநம்பிக்கையால் புதிய தேடலைத்தேடி ஓடுகின்றனர். தனித்துவவாத, மதசார்பற்ற சிந்தனை முறையில் சிந்திக்கின்ற சமூகத்தில் பழைய நீதி நெறிகள் தமது ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்வதில்லை.
புதிய நீதிநெறிக்குழுக்கள் (Sects)  மேற்குநாடுகளில் உருவாகியிருக்கின்றது. இதில் யோகா பயிற்சி நெறி என்பது பிரபல்யமான மாற்று சிந்தனை  (meditation) ஒழுங்கமைவாக தியானப் பயிற்றி செழித்து வளர்ந்துள்ளது. இது பெரும் சந்தைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த நிலையில் Yoga  ஐ.நா முக்கிய ஒரு அம்சமாக முன்னிறுத்தி அதனை பிரசித்தமானதாக மறுபடியும் இந்தியா போன்ற நாடுகளில் மேற்கோள்கின்றது. இது சந்தையையும், மக்களுக்கு மாற்றீடாக போக்காகவும் கொள்கின்றது. மதம் என்பது அடிமைத்தனத்தின் காரணத்தை அறியவிடாது தடுக்கும் ஒரு நிறுவனக் கட்டமைப்பாகும். ஆனால் இந்துத்துவ அணியும், மேற்கின் நிகழ்ச்சி நிரலும் ஒன்று சேரும் இடமாக யோகா பிரகடனம் உள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாது இந்தியாவின் சிந்தனை வடிவத்தை ஐநா அங்கீரித்துள்ளது என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

புலம்பெயர் மக்களை எடுத்துக் கொண்டால் அரைநிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தில் உள்ள அனைத்துவகை பண்புகளையும் பாதுகாக்க வேண்டுமென்ற முயற்சியில் அவதானமாக இருக்கின்றனர். அரைநிலப்பிரபுத்துவ பண்புகளாக அகமணவுறவுகள், குடும்ப உறுப்பினர்களிடையேயான அதிகார வரம்பை பாதுகாப்பது, கூட்டுக்குடும்ப பண்புகளை பாதுகாப்பது, புறம்பேசுவது, மற்றவர்கள் பிரச்சனைகளில் (தனித்துவத்தை மீறக்கூடிய) தலைவிடுவது, பிள்ளைகள் தனித்துவவாதிகளாக மாறப்படுவதை தவிர்ப்பதற்காக, குறுகிய வட்டத்தில் தமது அந்தஸ்தை பேணுவது (தாம் மற்றவர்களை உயர்ந்தவர்கள்) என்று பிரித்துப் பார்க்கின்ற பார்வையை மத-சாதி அடையாளங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த அனைத்துப் பிரிவுகளில் இருந்து ஒரு பொதுவான போக்கை அவதானிக்க முடியும். அதாவது இன்று பொருளாதார வளர்ச்சியால் மாற்றமடைந்துவரும் மனித இனத்தின் சமூக பழக்கவழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றிற்கு மாற்றீடாக ஒரு பாதுகாப்பான இனத்தை தெரிவு செய்து அதில் தஞ்சமடையும் போக்கை காணமுடியும்.
சமூக மாற்றத்தினால் ஏற்படும் சிதைவுகளை பாதுகாத்துக் கொள்ளுதல் சிதைக்கப்பட்ட காயத்திற்கு மருந்து போடுவதற்கென்றே பல புதிய மதநிறுவனங்கள் கோட்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இவைகள் மக்களை நோக்கி விளம்பரங்கள்; மூலம் கவர்ந்து விடுகின்றனர். இவை இன்று பெரும்வியாபார முயற்சிகளாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.
புலம்பெயர்ந்த, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடையே சமயப்போதகர்கள் ஆளுமையை செலுத்துகின்றனர். புலம்பெயர்ந்த மக்களை எடுத்துக் கொண்டால் சமயப்பிரச்சாரத்திற்கென இந்தியா, இலங்கையில் இருந்து பலர் உல்லாசப் பயணத்தினை தொடர்கின்றனர். இவர்கள் இங்கு வந்த மக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்துடன் வியாபாரிகளும் புதிய புதிய கோவில்களை நிர்மாணித்துக் கொண்டு பெரும் வர்த்தக மையமாக மாறியுள்ளதை காணமுடிகின்றது.
இன்றைய சமூகத்தின் அவலத்தின், ஒடுக்குமுறைக்கான காரணத்தை அறியவிடாமலும், ஒடுக்குமுறைக்கு எதிராக போராட விடாது திசைதிருப்பும் பொருட்டு திட்டமிட்ட வகையில் பல புதிய குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுக்கள் மக்களை பலவேறு நூறு பிரிவுகளாக கூறுபோடுகின்றன.
உலகக் கண்ணோட்டங்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. சாய்பாபா, நித்தியாணந்தா, செக்ஸ் சாமியார் என்று அழைக்கப்பட்ட ரஜனீஷ்  ஒசோ போன்றவர்களும் உருவாகியிருக்கின்றார்கள். ஆன்மாவை (உளவியல் பிரச்சனைகளை) தேடும் பாதையைக் காட்டும் இந்த பொருளாதார அமைப்பு அவர்களை பலகோடி சொத்துக்களைக் கொண்டவர்களாக உருவாக்கி விடுகின்றது.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து குரூஸ் திவாகர், சாது செல்லப்பா, தினகரன், மோகன் சி லாசரஸ், வின்சன் செவ்வகுமார், சாது சுந்தர்செல்வராஜ் போன்று புதியவர்களை கிறிஸ்தவ சமயம் உருவாக்கியுள்ளது. இவைகளின் நம்பிக்கையில் யேசுகிறிஸ்து மையமாக இருக்கின்றார். எனினும் இவர்கள் பாரம்பரிய கிறிஸ்தவ நிறுவனத்தில் இருந்து தனிமனித மையப் புள்ளியாக இயங்குகின்றனர். இவர்களின் சொத்துருவாக்கத்திற்கு காரணமான அடித்தளத்தை பின்னர் ஆராய்வோம்.

பிரமுகர்கள் மதம்மாறுவது!
மதம் மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்ற வேளையில் பிரமுகர்கள் மதமாறுவதை வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் தமது கொள்கைக்கான ஆதாரமாக கொள்கின்றனர். ஆனால் மதம் மாறுவதற்கு இங்கு உளவியல் காரணமும் ஒன்று என்பதை மதவாதம் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆன்மீகம், கடவுள் என்பதன் ஊடாக சமூகத்தினை கட்டிவைப்பதற்கு மனிதரில் ஆழ்மனதில் பதியும் அம்சங்கள் நிர்ணயம் செய்கின்றன. ஆழ்மனதில் பதியும் படிமங்கள் தொடர்ச்சியாக அன்றாட வாழ்வில் எதிரொலிக்கின்றது. அன்றாட காரியங்கள் ஆற்றுகின்ற போது எதிரொலிப்பதன் காரணத்தினால் ஆழ்மனது நிர்ணயமான ஒன்றாகின்றது. “வேப்பமர உச்சியில் இருந்து பேய் ஒன்று ஆடுதென்று விளையாடப் போகும் போது சொல்லிவைப்பாங்க” என்ற பாடல் ஊடாக எவ்வாறு சிறுபராயத்தில் இருந்து பேய், பயம் இரண்டையும் ஆழ்மனதில் ஊட்டப்படுகின்றது என்பதை  அறிந்து கொள்ள முடியும். ஆழ்மனதில் உள்ள வடுவை அன்றாடம் பிரசாச்சாரம், பிரசங்கத்தின் ஊடாக மீண்டும் மீண்டும் புதிப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு ஆழ்மனதின் அழுத்தத்தினால் மதம்மாறுவது இயல்பான ஒன்றே.
மேலும் விண்ணுலக வாழ்வில் (ரம்ஜான் நோன்பு நாட்களில் இல்லாதவர்களுக்கு தானம் செய்தல் உட்பட) (இஸ்லாமிய பிற்போக்கு ISIS- அமைப்பினர் பெண்களால் கொல்லப்பட்டால் மோட்சம் கிடைக்காது என்று நம்புகின்றார்கள்.) நல்ல இடம் (மோட்சம்) கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தரும காரியங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இரட்சனிய சபை வரலாற்றில் உருவாக்கப்பட்டது. விண்ணுலகினை நோக்கிய மனிதர்களின் நோக்கத்தையும், ஆன்மீக நோக்கத்தையும் நிறைவேற்ற மதங்களை பிரமுகர்கள் தெரிவு செய்கின்றார்கள். இவை ஊடாக மக்களின் சேமிப்பை கொடுப்பதன் ஊடாக தமது குற்றவுணர்வை சீர்செய்ய முடியும். முரண்பட்ட சிந்தனைகளை இந்த பொருளாதார அமைப்பு ஏற்படுத்துகின்றது. இவ்வாறான தனிமனிதர்களின் முடிவுகள், செயற்பாடுகள் தனிமனிதனின் தேவையின் நிமித்தம் வெளிப்படுபவையாகும்.
  
அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களால் மதமாற்றம்  மேற்கொள்ளப்படுகின்றது. மேற்குநாடுகளில் குறிப்பான சபைகள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவது பழைய முறையாகினும் புதிய தன்மை கொண்டதாக புதுப்பிக்கப்படுகின்றது.
மேற்கு நாட்டில் உள்ள அரசியல் பொருளாதார சிதைவு என்பது அவர்களை அன்னியப்படுத்துகின்ற போது அதற்கு ஈடாக ஒரு புதிய சபைகளை தெரிவு செய்து பிரமுகர்களில் ஒரு பகுதியினர் மதம்மாறுவது, போதகராப் போவதும், மதங்களைப் பின்பற்றும் தனிமனிதர்களை கொண்டு தமது மதமே உண்மையானது என நிலைத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இங்கு பிரபலயமான நடிகைகள், பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் புதிய மதமார்க்கத்தை பின்பற்றுகின்ற போது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.



11. யூதமும் கிறிஸ்தவமும்

யூத இனத்தின் குலத்தலைவனா ஆபிரகாமுடன் தொடர்புபடுத்துகின்றதுடன் பண்டையக் காலத்துடன் தொடர்பு கொண்ட வரலாற்றை கொண்டது. இதன் பின்னர் யூதர்களின் கதையைக் கூறும் விவிலியத்தில் உருவாக்கப்பட்ட கதைகளையும் தற்காலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய உணர்வையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். வாய்மொழியாக வழங்கப்பட்ட புனிதவரிகளை (talmud) தால்மூட் ஆகும். சட்டப்புத்தகம் (Thorah) எனப்படும் முதல் ஐந்து புத்தகங்களே ஆரம்பமானவையாகவும், இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட சட்டம் என்று நம்புகின்றனர்.
இங்கே இறைவன் யூதருடன் உடன்படிக்கை செய்து கொண்டார் எனவும் அதன்படி இறைவன் அவர்களை பாதுகாப்புடன் அவர்களை தலைமை தாங்குவதற்காகவும் வாக்குறுதியளித்தார் எனவும், மக்கள் தம்பங்கிற்கு சட்டத்தை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அகதிகளாக நாடுகடந்து சென்றதற்கான காரணம் மக்கள் இறைவனின் சட்டத்திற்கும் உடன்படிக்கைக்கும் இசைவாக செயற்படாமையே என நம்புவதுடன் பரந்து வாழ்வது இறைவனின் திட்டமென்றும், கடவுள் தமது நேரம் வருகின்ற வேளை மெசியாவை அனுப்பி யூதரை தமது வாக்களித்த தேசத்திற்கு அழைத்துச் செல்வார் என்றும் இறைவனே யூதரின் கஸ்ட துன்பங்களை போக்குவார் என்றும் நம்புகின்றனர். இது தற்கால தேசிய கருத்துருவாக்கதிற்கு முரண்பட்ட ஒன்றாகும். ஏனெனில் யூதரின் விடுதலை என்பது மெசியாவின் வருகையின் மூலமமாகவே நடைபெறும் என்று நம்புகின்றனர்.
வாய்மொழியாக யூதர்களிடையே இருந்த சட்டங்கள் வள்ளுவர் முன்னர் 200 களிலும் பின்னர் வள்ளுவர் பின்னர் 500 பலஸ்தீனத்திலும் பபிலோனியாவிலும் எழுத்துருவில் கொண்டு வரப்பட்டதாகவும் கருதுகின்றனர்.  

இன்றைய கத்தோலிக்க மதம் அன்றைய சிற்றாசியாவிலும் அதனை சுற்றிய பிரசேதங்களில் இருந்த சிறுதெய்வங்கள், சிந்தனை முறைகள் பலவற்றை உள்வாங்கியே தன்னை ஒரு பெரும் சமயமாக உள்வாங்கியிருக்கின்றது.


கெநொஸ்ரிக் (Gnostic)
அன்றைய காலத்தில் உலகக் கண்ணோட்டத்தை கொண்டவர்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான சொற்பதமாகும். இவர்கள் ஒரு சமய வழிபாட்டு முறைகளையும் ஒழுங்கமைத்திருந்த மதக்குழுவாகும். அலெக்சாந்திரியர்களான Basilides, Valentinus ஆகியோரின் செயற்பாடுகள் 100 களில் முக்கியமானதாகும். இவர்களை இருமைவாதிகள் (Dualist) என்று அழைக்கப்படுகின்றனர். பரிசுத்த ஆவியின் செயற்பாட்டை அதிகம் நம்புபவர்கள். உலகம் சாத்தானின் பிடியில் இருப்பதாகவும், உலகை உருவாக்கிய யாவேயின் கிருமை அவசியம் என்றும், மனிதர்கள் பக்குவமடையாதவர்கள், இறைவனை அறியாதவர்கள் பரம்பொருளாக இருக்கின்ற இறைவன் உலகை ஆழ்கின்றார் என்றும் இதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே கெநொஸ்ரிக் என நம்பினர்.
உலக அடிமைத்தனத்தில் இருந்து மீளவும், சொந்த அடையாளத்தையும், இறைவனின் அடையாளத்தையும் அறிந்து கொள்ள கெநொஸ்ரிக் ஆகுவதன் மூலமே முடியும் என நம்பினர். யேசுவின் வழியை பின்பற்றினாலும் இவர்கள் அதற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவர்களின் ஒவ்வொரு பிரிவினரும் (sect) தத்தமது புத்தகங்களையும் அதற்கான ஆழ்ந்த விளக்கங்களையும் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ கெநொஸ்ரிக்கள் தனிமனித இறைவழியையும், சன்னியாசத்தையும் அதிகம் நம்பியிருந்தனர். இவர்கள் கிரேக்க சிந்தாந்தங்கள், மாயைக் கொள்கைகள், கட்டுக் கதைகளையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் உயர்சமய நிலையை அடையலாம் என நம்பினர். குறிப்பாக பழைய ஏற்பாட்டில் மூலமாக படைப்பைப் பற்றிய மாயைக் கருத்துக்களை நம்பினர். ஆசீர்வதிக்கப்படுவது, இறுதிநாள் வருகை ஆகியவை பற்றி இவர்கள் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவில்லை.

மொனொரேயிசம் (Monotheism)  (ஒருமைவாதிகள்)
மொன்தானுஸ் என்பர் பெயரால் அழைக்கப்படும் சமயக்குழுவானது 172 களில் தோன்றியது. நிறுவனமயப்பட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ சபையில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட சிந்தனைகளை வளர்த்தெடுக்க முனைந்தார். ஆனால் கிறிஸ்தவ சபையினரோ கிறிஸ்துவின் மறுவருகையைப் பற்றி கருத்துக்களை கொண்டிருந்தனர். தன்னுடைய சபையானது இறுதிநாள் வருகைக்கான கிறிஸ்தவ போதனை எனவும், 1000 (மெலனியம்) ஆயிரமாம் ஆண்டு கிறிஸ்து மறுபடியும் வருவார், வந்து தமது இறையரசை நிறுவுவார் என மெசியாவின் மறுவருகையை மறுவுயிர்ப்புச் செய்தார். இறையரசின் நம்பிக்கையை யோவான் ஆகமத்திலும், (Prisca, Maximilla)  ஆகியவற்றில் இருந்து உந்துதலைப் பெற்றனர்.
இவர்கள் தமது சமூக நடப்பில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு ஒதுங்கினர். இவர்கள் நாட்டின் ஒதுங்கிய இடத்தில் சென்று தமது சன்நியாச வாழ்க்கையை தொடங்கினர். இவர்கள்  வேதசாட்சியாக (Martyr)  (தியாகிகளாகவும்) உருவாகியதுடன் இவர்களே இறைவனின் வெளிப்பாட்டை அடையமுடியும் எனவும் நம்பினர். தனிமனிதராக ஆண், பெண் என மாறுபாடு இன்றி முக்தி நிலை, அல்லது இறையருழைப் பெறுவதில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இது சிற்றாசியா, வடஆபீரிக்கா மற்றும் ரோமிலும் பரவியது. இவர்கள் இறைவருகையே அதியுயர் நிலை என நம்பியதுடன் கிறிஸ்தவ சபையின் சம்பிரதாயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இவர்களின் வளர்ச்சியானது கிறிஸ்தவ சபையின் அதிகாரத்துவத்திற்கு சவாலக இருந்துள்ளது.
கிறிஸ்து கொல்லப்பட்ட பின்னர் போலின் (Paul) செய்திகளில் ரோமர்கள் விரைவாக தோற்கடிக்கப்படுவார்கள். உலகத்தின் முடிவு விரைவாக இருக்கும் என்று எழுதியுள்ளார். இறைவருகையை எதிர்பார்த்தவர்கள் அன்றைக் காலத்தில் தமது சாவைப் பற்றி கவலை கொள்ளாது இறைவருகையை முதன்மைப்படுத்தியுள்ளனர். இறுதிநாளின் மனிதர்கள் உயிர்த்தொழுவார்கள் என்ற நம்பிக்கை பல ஆண்டுகள் கழிந்தும் இன்றும் கோவில்களிலும், வெவ்வேறு சிந்தனை வடிவங்களிலும் இன்றையக் காலத்தில் வெளிப்படுகின்றன. இறுதிவருகையை எதிர்பார்த்தும், உயிர்த்தெழும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டு தமது சாவினைப் பற்றி பயம் அற்றவர்களாகவும், இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் படியும் நித்தம் கோவில்களில் போதிக்கப்படுகின்றுது.

துறவறம் என்பது கூட நிலப்பிரபுத்துவத்திற்கு பின்னரான ஆன்மாவைப் பற்றிய வழிமுறைத் தேடலாகும். அலெக்சாந்தார் அரசமதமாக்கும் வரையில் தலைமறைவு சமயமாகவே இருந்துள்ளது.
மெசியாவந்துவிட்டார் (யேசுநாதர்) வந்து விட்டார். இதன் பிறகு உலகின் முடிவிற்காலம். இறைவருகையின் காலம் என்பது வெகுவிரைவில் வரும் என்று போதிக்கப்பட்டு வந்த காலமாகும்.
இன்றும் கூட திருப்பலில் உலகின் முடிவிற்காலம் என்று செபிக்கப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வேளையில் தமது சொத்துக்கள் என்பது தேவையற்றதாக இருந்துள்ளது. கிறிஸ்தவம் உயர் வர்க்கத்தவர்களின் மதமாக இருந்தாக வரலாற்றாசிரியர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ளல் நன்று.
எனவே சொத்துக்களை விற்று விட்டு பொதுவான கம்யூன் வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது காலப் பொருத்தத்திற்குரிய வரையறையாக இருக்க முடியாது. ஆன்மாவை முன்றுத்துவதும் ஆன்மாவை மறுப்பதும் ஒன்றல்ல.

இங்கு துறவறத்தினை நிலவுடமைக்காலத்திற்கு உட்பட்ட நிலையில் விவிலியத்தில் உள்ளதை மார்க்சின் தத்துவத்துடன் ஒப்பிட்டு பேசுவது மதவாதிகளுக்கு வேண்டுமென்றால் ஆர்வத்திற்குள்ளான பொருளாக இருக்கும்.

மார்கியோன் Markion 85-160   
கெநொஸ்ரிக் (Gnostic) மதக்குழுவில் நம்பிக்கை கொண்டிருந்த மார்க்கியோன் என்ற கப்பல் வணிகர் (சிற்றாசியாவைச் சேர்ந்தவர்) இதற்கு உந்துதலாக இருந்துள்ளார். இவர் கிறிஸ்தவ சபையின் திருமறையாக்கத்திற்கு (Canonize) முக்கிய உந்துதலாக இருந்திருக்கின்றார். இவர் ரோமில் இருப்பிடமாக தெரிவு செய்திருந்தார். அங்கிருந்து கொண்டு கிறிஸ்தவ சபைக்கு எதிராக ஒரு சபையை நிறுவிக் கொண்டார்.
Contradictions இவர் எழுதியதாகும். குறிப்பாக யூதபாரம்பரியத்தின் அடிச்சுவடுகள் கிறிஸ்தவ சிந்தனையில் இருக்கக் கூடாது என கவனத்தில் கொண்டார். இதனால் பழைய ஏற்பாட்டில் இருந்து தனித்துவத்தை பேணும் நிலையில் செயற்பட்டார். இதனால் பவுல் அவர்களின் சுவிசேசங்களில் பலவற்றை தவிர்த்துக் கொண்டார். இந்தக் குழுவினர் பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக யேசு மெசியாவாக இடம்பிடித்திருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
யேசுவின் போதனை சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு போன்ற சிந்தனைகளுக்கும் பழைய ஏற்பாட்டில் கூறப்படுகின்ற கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், சிறுவர்களே வாருங்கள் என்ற சிந்தனைக்கும் தொடர்ச்சி இல்லை என கருதினார். இவைகள் விவிலியம் போதிக்கும் கருத்துக்களுக்கு முரணாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
யேசுக்கிறிஸ்து இறந்த பின்னர் கிறிஸ்தவ சிந்தனையில் நம்பிக்கை கொண்ட குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தனர். இந்தப் பிரிவினர் புத்தியீவிகளாக இருந்ததுடன், அரசில் பல பொறுப்புக்களை வகித்தனர். இருந்த போதும் அரசிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்திக் கொள்ளதான அமைதியான மதப்பிரிவாக (உயர் சமூகத் தட்டு) இருந்தனர். இருந்த போதிலும் இந்தப் பிரிவினரில் தம்மை உண்மையான உயர்குடிகள் என்ற வாதிட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் சிறுகுழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் இயேசுகிறிஸ்து இறந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னர் (இக்கினேசியஸ் கடிதங்கள்) ஆயர் (1 உறுப்பினர், கடவுளுக்கு சமமானமாகவும், யேசுவின் பிரதிநிதியாக கொள்ளப்பட்டது) குருக்கள் (12 உறுப்பினர்கள்) சேவையாளர் (பலர்) என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொண்டனர்.
கத்தோலிக்கத்தின் நிர்வாகத்தில் போப் முதன்மையாளராக இருக்கின்றார். ஆண்களே குருக்களாகவும் தலைக் குருக்களாகவும் வரமுடியும் என்று இருந்த நிலையில் வரலாற்றில் போப் (pope Joan) (இதனை வத்திக்கான் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை) பெண்ணாக இருந்துள்ளதையும் தற்போதைய வரலாறுகள் வெளிப்படுத்தியுள்ளது.

ரோம இராச்சியத்தில் வ.பி 313 கிறிஸ்தவம் மற்றைய மதங்களுக்கு ஈடாக ஒப்புக் கொள்ளப்பட்டதுடன், பல கோவில்கள் கட்டப்பட்டன. இராணுவத்தில் பங்கெடுக்க வேண்டும் என்றோ அல்லது வரிசெலுத்த வேண்டியதில்லை என சலுகைள் கொடுக்கப்பட்டது. மன்னர் கொண்ஸ்ரன்ரையின் சூரிய விழாவை நத்தால் பண்டிகையாக பிரகடனப்படுத்தனார். இப்போ கடவுளும் அரசனும் சமம் (தமிழர்வரலாற்றில் கோன் குடியிருந்த இடமே கோவில் ஆகியது) என்ற கொள்கை கொண்ட கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 337களில் கொண்ஸ்ரன்ரையின் திருமுழுக்குப் பெற்றார். இவை மாத்திரமல்லாமல் கொண்ஸ்ரன்ரையின் புதிய மோசஸ் ஆக வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டது.
361-363 சூரிய விழாவை நடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. ஏனெனில் அன்றையக் காலத்தில் அன்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததும் ஒரு காரணமாகும். கிறிஸ்தவ சமயம் என்பது முழுமையாக சமூகமயப்படுத்தாமையினால் எழுந்த இந்த முரண்பாடுகள் ஆகும். இவைகள் அவவிசுவாசிகள் என்ற நிலையில் இருந்து கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். வ.பி 380-392 (Theodosius) கோவில்களின் ஏகபோகம் அதிகரித்த காலமாகும். அவவிசுவாசிகளின் நம்பிக்கைகள், சடங்குகள் தடைசெய்யப்பட்டன. இரத்தப் பலிசெய்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது. இதனை செனற்சபை உறுப்பினர்களும் மற்றைய மதநம்பிக்கை கொண்டவர்களும் எதிர்க்கத் செய்தனர். ரோமாபுரியின் பழைய நம்பிக்கைகள் ஒடுக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் புதிய உலகக் கண்ணோட்டம் அந்த மக்கள் மீது ஆட்சியாளர்களினால் திணிக்கப்பட்டது.
யூத இனத்தின் வரலாற்றை பழைய ஏற்பாட்டில் இருந்து அறியமுடியும். அதேபோல் யூத இனத்தில் இருந்து தோன்றிய கிறிஸ்தவத்தின் வரலாற்றை புதிய ஏற்பாட்டில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இவை இரண்டையும் சேர்ந்து கிறிஸ்தவர்கள் விவிலியம் என்பார்கள். இவை இரண்டின் வரலாறுகளும் இணைந்திருக்கும் காரணத்தினால் இதன் வரலாற்று வளர்ச்சி பற்றி இங்கு பார்ப்போம். இதனை உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை என்ற புத்தகத்தில்இருந்து தொகுத்து தரப்படுகின்றது.
முற்கால யூதர்கள் பாறைகளையும், ஆடுகளையும், மாடுகளையும், குகையிலும், கிணறுகளிலும் வாழும் ஆவிகளையும் வணங்கி வந்தார்கள். அவர்கள் ரெரபீம்  (Teraphim) ரோமானியரிடம் இருந்து பெற்ற லார்ஸ் (Lares)  தெய்வச்சிலை போன்றவற்றை வணங்கி வந்தனர். செழிப்புச் சடங்கான (நம்மிடையேயுள்ள பூப்புனித நீராட்டுவிழா, பொங்கல், பல் முளைப்பது, பெயர் சூட்டுவது, பெயர் வைப்பது, காதுகுத்துவது போன்றன--) மகோத் (Mazzoth), சபோத் (Shabuoth)  (Sukkoth) சுக்கோத் விழாக்களை கொண்டாடினர். அத்துடன் முதல் அறுவடை முடியும் காலத்தில் கொண்டாடப்படும் வௌ்ளாட்டினை பலியிடும் (Pesoch) பீசாக் எனப்படும் விழாவும் யூதர் வெற்றி கொண்ட கெனாட்ஸ் என்ற இனத்தவர்களிடம் இருந்து பெறப்பட்டதாகும். வெள்ளாட்டுக் குட்டி உண்மையில் கெனானிட் இனத்தவரின் குலச்சின்னமாகும். இது கிறிஸ்துவ மதத்திற்கு தாவி அக்னஸ் டை (Agnus Dei) என்ற கிறிஸ்துவின் கொடி சின்னமாக கொள்ளப்பட்டது.
போர்த்தெய்வமான எருது வடிவில் இருக்கும் ஜெகோவா யூத கடவுளானார். இது கூட பல இனங்கள் யூதருக்குள் உள்வாங்கப்பட்டதன் பிறகு வந்ததாகும். யூதவேதமான பென்ரராச் (Pentateuch) இயற்றப்பட்ட காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை வழக்கத்தில் இருந்தது. உலகத் தோற்றம் பற்றிய கதையில் உலகம் ஜெகோவாவிடம் இருந்து தோன்றியதாகவும், பிறகு கடவுள் என்ற சொல்லுக்குப் பன்மையான ஏலோகிம் (Elohim) லிருந்து தோன்றியதாகவும் கூறப்பட்டது.
வ.மு 7 நூற்றாண்டில் விவிலியம் தொகுக்கப்பட முன்னராகவே பெர்சியர்கள், போனிசியர்கள், சால்டியர், பபிலோனியர் ஆகியோரிடத்தில் உலகத் தோற்றம், ஏடன் தோட்டம் போன்ற கட்டுக் கதைகள் பொதுவாக இருந்தன. யூத இனமானது தனக்கான உலகக் கண்ணோட்டதை வளர்த்துக் கொண்டதற்கு மக்களிடத்திலே ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியே காரணமாகும். வளர்ச்சியின் காரணமாக அம்மக்கள் வேற்று இனத்தவர்களிடையே கலந்து கொண்டனர். இதனால் யூதர்களின் நீதிக் கருத்துக்கள் கிரேக்கர்களின் தத்துவ, சமய கோட்பாடுகளோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டது.
பழங்கால புராணங்களுக்கு இருந்த செல்வாக்கு கிறிஸ்தவ திருமுறைக் கோட்பாட்டை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. கடவுளின் குழந்தை என்ற கருத்தும், கன்னி மரியாளுக்குப் பிறந்த மீட்பர், மனிதர்களின் பாவங்களை போக்குவதற்காக சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர், மீண்டும் உயிர்த்தெழுவார் போன்றவை எல்லாம், கிறிஸ்தவ சமயத்திற்கு முன்னமே பல மதங்களில் காணப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் கிருஸ்ணர், எகிப்தில் கிராஸ், மெக்சிக்கோவில் க்யூசால் கோட்டில் ஆகியவனவாகும்.
உயிர்த்தெழும் நம்பிக்கையை கிரேக்கர்களால் சித்திரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டும், நரகத்தில் வீழ்ந்து மீண்டும் உயிர்த்தெழுந்த ஆர்பியர் கடவுளாகக் கருதப்பட்டான். கடவுள்கள் மனிதர்களாக மாறுவது பழங்கால நம்பிக்கைகளில் பொதுவாக இருந்தது. சீனாவில் 160 அவதாரக் கடவுள்கள் உருவாக்கப்பட்டு வழிபட்டிருக்கின்றனர். கிறிஸ்தவ கடவுளாக ஆக்கப்பட்ட பின்னர், பழைய கோட்பாடுகளையும் சேர்த்துக் கொள்ளப்பட்டதையும் அவதானிக்க முடிகிறது. புனித எண்ணான மூன்றுக்கு அளவை இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தது. புனிதமாக இருந்ததினால் தொடர்ந்தும் அதனை வேறு உருவத்தில் தொடரும் நிலையும் எற்பட்டது.
யூத மரபினர் ஒரு கடவுள் கோட்பாட்டை கடைப் பிடித்ததினால் யுத்தக் கடவுளான ஜெகோவா அழிந்து அன்பும், இரக்கமும் கொண்ட யேசுநாதர் அந்த இடத்தைப் பெற்றார். பாவத்தைப் போக்குகின்ற கடவுள் உருவாக்கப்பட்டது மாத்திரம் அல்ல, மும்மூர்த்திக் கோட்பாடும் வலுக்கப்பட்டது. இந்துக்கள் (இந்தோ -ஐரோப்பிய வருகையினால் ஏற்பட்ட கடவுள்கள் மாற்றங்களின் பின்னர் உருவான பிரிவுகளாகும்), எகிப்தியர்கள், ஃபெனீசியர்கள், அசீரீயர்கள், ரோமானியர்கள் ஆகியோர் மும்மூர்த்திகளை மூன்று கடவுளாகவே வணங்கினர். யூதர்களிடையே ஒற்றுமை உருவாக்குவதற்காக மூன்று கிறிஸ்தவக் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) கடவுள்களையும் ஒன்றிணைத்து ஒரு மும்மூத்தியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கிறிஸ்தவம் வீஸ், ஆப்ரோடைட், இஸ்டார், அஸ்சிஸ், பிரிசியா, வழிபாட்டுக்குரிய தாய் ஆகிய அனைவரின் இடங்களையும் சேர்த்து மேரி பெற்றாள். மார்ஸ் ஆக்கேஞ்சலாகவும், மேர்க்கியூரி ரெபேல் கபிரியலாகவும் வடிவம் பெற்றனர்.
தற்காலத்தில் கடவுள்களின் பிரதிநிதிகளாக கத்தோலிக்கத்தில் தோற்றம் பெறும் புனிதர்கள் பல புறச்சமயத்தின் சிறுகடவுகளின் வாரிசுகளாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேசமும், நகரமும், கூட்டுறவுக் குழுவும் அவ்விடத்துப் பண்டைய கடவுள்களைப் போல் புனிதத் திருத்தொண்டர்கள் பாதுகாவலர்களாக இருந்தனர். இதனால் மனிதனிடத்தில் இயற்கையாக இருந்த பல கடவுகள் கோட்பாடு மீண்டும் புத்துயிர் பெற்றது.
பழைய திருவிழாக்களும் அனைத்து ஆன்மாக்களின் விருந்து, ஜோர்ஜ் துறவி விருந்து, ஞானஸ்ஞான யோவான் விருந்து ஆகிய விழா நாட்கள் கிறிஸ்துவுக்கு முன்னான புனித நாட்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டது. ஈஸ்ரர் (பாஸ்கா) விழா யூதர்களின் விடுதலைத் திருவிழா, பபிலோனியர்களின் இஸ்தர் சடங்குகள், கிரேக்கர்களின் அடோனிஸ் (மறுபிறப்பு) கடவுளின் உயிர் மீட்டெழுச்சி விழா ஆகியவற்றை இணைத்தனர். நத்தார் (கிறிஸ்மஸ்) விழாவானது உண்மையில் சூரியனின் பிறந்த நாளைக் கொண்டாடும் எகிப்தியர்களின் விழாவாகும். குளிர்காலக் கதிர் திருப்பம், புனித ஒளிவட்டம் வடக்கு நோக்கி நகரும் பொழுது, நாள்கள் நீண்டதாக தொடங்குகின்றன. புதிதாகப் பிறக்கும் சூரியக் கடவுளை ஒரு குழந்தையின் வடிவில் காண்பார்கள். அதை மதகுருமார்களைக் கொண்டு மக்களுக்கு காட்டுவர். ஞானஸ்ஞானம் என்பது இளைஞனாகும் உரிமை பெறும் காலத்தைக் குறிக்கும் பண்டைய சடங்காகும். இது புனித வடிவம் பெற்று வாழ்க்கைக் கடலில் மூழ்காமல் காக்கும் புதுப்பிறப்பை உணர்த்தும் சடங்காகப் பாவிக்கப்படுகின்றது.
யேசுநாதரின் இறுதி இராப்போசன விருந்தானது கடவுளைச் சாப்பிடும் வழக்கத்தில் இருந்து வளர்ச்சி பெற்றதாகும். யேசுநாதரின் இறுதிவிருந்தானது இன்றைய காலத்தில் யூதரிடம் இருந்து எடுத்துக் கொண்ட சமய உடுப்புக்களுடன், இசையுடன் யூதர்களின் முன்னைய வழிபாட்டுத் தலம் இருந்தது போலவே தொடர்கின்றது. இச்சடங்குகள் தலைமுறை தலையாக வளர்ந்து மிகவும் கடினமான சமயக் கோட்பாடுகள் நம்புதற்கரியனவாக மாறிவிட்டது. மதகுருமார் இறைக்கோட்பாட்டிலும், சமயச் சடங்கிலும் தேர்ந்தவர்களாக கருதப்பட்டு, பாவம் செய்த மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் அவர்களுடைய பாவங்களைத் தணிப்பதற்கு உள்ள சில குறிபிட்ட புனித (உதாரணம் பாவசங்கீர்த்தனம்) வழியை அறிந்தவர்களாக சமுதாயத்தில் மேன்மை பொருந்தியவர்களாக வளர்ந்தவர். (உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வையில் இருந்து தொகுத்து தரப்படுகின்றது)
யேசுக்கிறிஸ்து இறந்த பின்னர் கிறிஸ்தவ சிந்தனையில் நம்பிக்கை கொண்ட குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தனர். பல நாடுகளிலும் தலைமறைவுக் குழுக்களாக இயங்கி வந்திருக்கின்றார்கள். இந்தப் பிரிவினர் ரோமாபுரியில் புத்தியீவிகளாக இருந்ததுடன், அரசில் பல பொறுப்புக்களில் இருந்தனர். இருந்தும் இவர்கள் அரசுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத அமைதியான மதம், அவர்களே உண்மையான குடிகள் என வாதிட்டு வந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
கிறிஸ்தவம் ரோமைத் தலைநகராகக் கொண்டும் அரசமதமாக மாற்றப்பட்ட பின்னரான வரலாற்றில் வத்திக்கானும் பாப்பரசரும் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

12. திருமறையாக்கப்படல் (Canonized)
மோசசின் காலத்தை வள்ளுவர் முன்னர் 500 எனக் கொள்கின்றனர். வாய்மொழியாக வழங்கப்பட்ட புனித வரிகள் எனப்படுவது (Talmud) தால்மூட் ஆகும். வள்ளுவர் பின் 200 களிலும் பின்னர் வள்ளுவர் பின் 500 களில் பலஸ்தீனத்திலும் பபிலோனியாவிலும் எழுத்தில் கொள்ளப்பட்டதாக நம்பப்படுகின்றது.
விவிலியத்தை அறியும் இடத்தில் அது பல வரலாற்று நிகழ்வுகளையும் காலத்தால் பழமையான சம்பவங்களையும் கொண்டுள்ள ஒரு புத்தகமாக அறிகின்றோம். இந்த புத்தகம் அதன் காலத்தால் வெவ்வேறு கட்டங்களில் ஒரு புத்தகமாக திருமறையாக்கப்பட்டது (Canonized) இதன் காலத்தைப் பற்றி ஒரு பொதுவான உடன்பாடு இல்லை என்பதையும் கவனித்தல் வேண்டும். பழைய ஏற்பாட்டில் சட்டப்புத்தகம் புத்தகமானது வ.மு 1000 த்திலும், அதன் பிந்திய (டானியல் ஆகமம்) 200 வ.மு விலும், எஸ்ரா (4) வ.பி 1ம் நூற்றாண்டில் பபிலோனியாவில் இருந்து திரும்பியதற்கு பிற்பாடு அவர்களின் உதவியாளரின் (எஸ்ராவின்) உதவியுடன் ஒரு புத்தக வடிவமாக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. (4.எஸ்தர் 14.45)
நேமியர் (மோசஸ் ஆகம் 8) கடவுள் மோசஸ் மூலமாக வெளிப்படுத்தப் பட்ட சட்டப்புத்தகம் எனப்படும் முதல் (Torah) ஐந்து புத்தகங்கள் இவைகளே ஆரம்பப் புத்தகமாகவும், இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட சட்டம் என்று நம்பப்படுகின்றது. இது சுமாரியர்கள் யூதர்களுடன் கொண்டிருந்த தொடர்பை முறித்துக் கொள்வதற்கு முன்னராக அதாவது 300 வ.மு இற்கு முதல் ஒருங்கமைக்கட்டிருக்க வேண்டும். ஏனெனில் சுமாரியர்கள் முதல் ஐந்து புத்தகத்தினை மாத்திரம் தான் ஏற்றுக் கொள்கின்றன. இறைதூதர் ஆகமம் (சீரா 44) இது 130 களில் கருத்துருவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கொள்கின்றன.
வ.மு 3ம்நூற்றாண்டில் எகிப்திய மன்னனாக இருந்த பிரொமியுஸ் (Ptolemeus 2 Philadelpus 284-247 ) என்பவர் தனது நூலகத்தில் வைத்துக் கொள்வதற்காக மொழிபெயர்ப்பு வேண்டும் என எண்ணிய போது அன்றைய ஜெருசலேமிற்கு கோரிக்கை விட்டபோது 72 அறிஞர்களை அலெக்சாந்திரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 72 நாட்களில் ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மொழிபெயர்ப்பை செய்து முடித்தனர். Septuagina (70 என்று பொருள்படும்) என்ற கிரேக்க பெயரிலான பழைய ஏற்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவை இருந்த போதிலும் ஜெருசலேமின் தலைமைக்குருக்களின் ஒப்புதல் என்பது அவசியமாக இருந்தது. அன்றைய காலத்தில் எகிப்தின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டிருந்ததால் ஒப்புதலைப் பெறுவது கூட சிரமமாக இருக்கவில்லை. ஆனாலும் மொழிபெயர்ப்பினை எதிர்த்துக் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்தனர். இவர்கள் மொழிபெயர்ப்பினால் தமது சம்பிரதாயம், பழமைகள் அழிந்து போய்விடும் என்றும் அச்சம் கொண்டனர். குறிப்பாக வாய்மொழி ரீதியாக அதிகாரம் பெற்ற தலைமைக்குருக்களின் ஊடாக பிற்பற்றப்பட்டு வந்தவற்றையே பழமைவாதிகள் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை மொழி பெயர்ப்புக்களை செய்கின்ற போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் அன்றையக் காலத்திலும் இருக்கத்தான் செய்திருக்கும்.
மொழி பெயர்ப்பிற்கு சரியான வரலாற்றுப் பின்புலம் அறிந்திருக்க வேண்டும்.
கலைச் சொற்கள் இருந்திருக்க வேண்டும்.
பண்பாட்டு, சிந்தனாமுறை (code and communication)  மாறுபட்டிருக்கும்.
சிலமொழிகளில் உபயோகிக்கப்படும் சொற்களுக்கு இணையாக சொற்கள் இருந்திருக்க வேண்டும் போன்ற பிரச்சனைகள் மொழிபெயர்ப்பில் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
தற்காலத்தில் முதலாளித்துவ தொழிற்புரட்சி என்பது ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட வேளையில் அதற்கு இணையாக தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறான வேளையில் எல்லோருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளத்தக்க மொழிவளர்ச்சி அடைதற்கு பல காலங்கள் தேவையாகும். அவ்வாறே ஒரு மொழியின் வளர்ச்சியின் போது ஏற்படுகின்ற சிக்கல்கள் மொழிபெயர்ப்பில் உருவாகின்ற பிரச்சனைகளாகும். இவ்வாறாக மொழிபெயர்ப்பில் பிரச்சனை தோன்றுகின்ற போது விவிலியத்தில் அவ்வாறான பிரச்சனைகளும், கருத்து மருவல்களும் நிச்சயம் ஏற்பட்டிருக்க முடியும்.
சவுல் என்று அழைக்கப்படும் போல் புதிய ஏற்பாட்டில் அதிக ஆழுமையை செலுத்துவதாக வரலாற்ராசிரியர்கள் கருதுகின்றார்கள்.  முன்னர் பரிசேயராகவும், குருவாகவும் இருந்த போல் பின்னர் கிறிஸ்தவத்திற்கு மாறினார். இவர் யேசுநாதர் கூறியதாக பல செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். போலினால் எழுதப்பட்ட விவிலியச் செய்திகள் விவிலியத்தில் அதிக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜெருசலேமானது அன்னியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது போது யூதமதத்திற்கும் பின்னடைவாக இருந்தது. இருந்தும் யூத சம்பிரதாயங்களை, வழிபாட்டினை பரிசேயர்கள் பின்பற்றி வந்தனர். இவர்களின் வழிவந்தவர்களின் வ.பி 90 களில் யவ்பா (Jaffa) விற்கு அருகில் (Canonizing) கூடி திருமுறைப்படுத்துவதற்கு இணக்கம் கொண்டனர்.
இந்நிலையில் 130 களில் (Qumran) கும்ரான் என்ற மதக்குழுவினர் கிரேக்கத்தில் இருந்து விலிலியத்தினை தமது மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டனர்.
கிரேக்கத்தில் இருந்து வ.பி 100-200 களில் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட்டன. Aquila,Theodotion, Symmachos போன்றவர்களின் பெயரால் அழைக்கப்பட்டது. இவ்வாறு மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட்ட போதும் (சுயடிடிin) ரபின் என்றழைக்கப்படும் மதகுருக்களின் வழக்கத்தில் இருந்தவை அதாவது வாய்மொழி ரீதியாக பாதுகாக்கப்பட்டு வந்தவை கீபுரு மொழியில் கொண்டு வரப்பட்டது. இதனை தால்முட் (Talmud) என்றழைக்கப்பட்டது.
கத்தோலிக்க பிரிவினரின் திருமறையாக்கம் முறையே (Valgata) 1546களில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1672 இல் கொந்ஸ்தாந்துநோபிள் கவுன்சிலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில்  (Apocrypha) அப்போகரிப்பா என்பது விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது இவ்வாறு இருக்க சிரிய, அர்மேனிய, எத்தியோப்பிய பிரிவுகள் இவர்களை விட மேலும் பல புத்தகங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. 
இன்றைய கத்தோலிக்கத்தில் இருந்து 6 ஆகமங்களை (பகுதிகளை) புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவ பிரிவினர் ஏற்றுக் கொள்வதில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். (பல்கலைக்கழக விரிவுரைகளின் குறிப்புக்களில்இருந்து பெறப்பட்டது)



13 யூததேசியம்

விவிலியத்தில் யூதரின் வரலாறு பல ஆகமங்களாக பிரிக்கப்பட்டும், பல ஆசிரியர்களை எழுத்தாளர்களாக் கொண்டு உள்ளது. வரலாற்றினை தொகுத்த போது முன்னுக்குப் பின்னாக வரலாறு கூறப்படுவதினால், அதன் காலமும் மாற்றம் கொண்டுள்ளது. யூத மக்கள் பொருளாதார வளர்ச்சியடைந்த பிற்பாடு ஏற்பட்ட மாற்றத்தினால் ஏற்படும் வர்க்க பேதங்களினால் கீழ் நிலைக்கு வருகின்றனர். பொருளாதார வளர்ச்சியினால் உயர் வர்க்கத்தின் (ஆழுமை கொண்ட இனத்தின்) தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தினால் போராட தொடங்குகின்றனர். மக்களை ஒன்றுதிரட்டிப் போராடுவதற்கு உண்மை எனக் கொள்ளக் கூடிய கருத்துருவத்தை உருவாக்க வேண்டியது அன்றைய காலத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இவ்வாறாக உருவாக்கப்பட்டதாக
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்
கடவுள் வாக்களித்த தேசம்
இந்த இரண்டு கருத்துக் கொண்ட சின்னங்கள் யூத, கிறிஸ்தவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது. இந்த இரண்டு முக்கிய கருத்துக்கள் தமிழ் மக்களை மாத்திரம் அல்ல மற்றைய இனங்கள் எதனையும் சமத்துவமான இனவகை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக (புறயினத்தார் (ப.25 குணா) எனக்கருதியது ரோமரை என்பது ஆய்வுக்குரியதாகும்) புறவினத்தாரிடம் சென்று நற்செய்தியைப் போதியுங்கள் என்ற கோட்பாட்டுக்கமைய தமது கருத்துருவாக்கத்தை பரப்பி மற்றைய மக்களின் உலகக் கண்ணோட்டத்தை அழித்து தமது உலகக் கண்ணோட்டத்தை பரப்புவதன் மூலம் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இங்கு தாம் மற்றவர்கள் என்ற பிரிவினை  இஸ்லாம் இல்லாதவர்கள் ஒருநாளும் சொர்க்கத்திற்கு போகமுடியாது. காபிர்களுக்கு சொர்க்க வாசனையே கிடையாது"   பிற்காலத்தில் பரவிருப்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.
யூதர்களின் இனவிடுதலையை முதலில் மெசியாவிடம் விட்டு விட்டனர். தமது விடுதலையை பெற்றுத் தர ஒரு மெசியா வருவார் என இன்றும் நம்புகின்றனர். இதனால் 'முறைப்பாட்டு மதிலில்” முறையிடும் பழக்கத்தை இன்றும் நடைமுறையில் கொள்கின்றனர். யூதர்களின் இனவெறி மிருகத்தனமானதாக உருவெடுத்துள்ளது.

2000 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் எல்லோரும் யேசுவை மெசியா என ஏற்றுக் கொள்ள வில்லை. பல கடவுகள்களுக்கு மாறாக ஒரு கடவுள் சிந்தனை கொண்டது யூத மக்களாகும். மெசியா கடவுள் அல்ல. யாவே தான் ஒரே கடவுள், மெசியா என்பவர் கடவுளுக்கும் இடையில் இருக்கின்ற முகவர் போல் ஆகும். ஆனால் கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்த வரை மெசியா என்றழைக்கப்படும் கிறிஸ்து ஒரு கடவுளின் மகன் என அழைக்கப்படுகின்றது. யூதயினத்தவராக அல்லது யூத கண்ணோட்டத்தை பின்பற்றுபவர்கள் இரத்த வழியில் வந்தவர்களே யூத மக்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படுகின்றனர். இஸ்லாமிய மதமானது யூத, கிறிஸ்து போன்றவற்றை தம்முடைய முன்னோர்கள் என்றும், கிறிஸ்து உட்பட மற்றைய மெசியாக்களை ஏற்றுக் கொள்கின்றது.
ஆனால் முகமதுவே இறுதியான இறைவனின் தூதன் என நம்புகின்றனர். இங்கு இஸ்லாமியரிடத்தில் இருக்கின்ற உள்ளடக்கும் தன்மையை அறிந்து கொள்ளவும் முடிகின்றது. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள், விவிலியம் கூறும் வரலாற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பிறயினத்தாரே அல்லது அவவிசுவாசிகளாவார்கள்.
யேசுவின் தேசிய உணர்வு பற்றியும் பேசப்படுகின்றது போது முதலில் அவரை யூதர்கள்  அனைவரும் மெசியா என ஏற்றுக் கொள்ளவில்லை. தற்காலத்தில் யேசுவை மையமாகக் கொண்ட மதத்தவர்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு அவரின் போக்கை பலர் ஏற்றுக் கொண்டனர் எனக் கொள்ள முடியாது. யேசுவின் காலத்தில் பரபாஸ் என்பவர் இருந்தார். இவர் தான் யேசுவை விடுதலை செய்வதா அல்லது பரபாசை விடுதலை செய்வதா என்கின்ற போது விடுதலை செய்யப்படுகின்றார். (Barabas) பரபாஸ் என்பவர் தீவிரவாதி, அவர் ஆக்கிரமிப்புச் சக்திகளை கொலை செய்வதன் மூலம் எதிரிகளை விரட்ட முடியும் என கருத்துக் கொண்டிருந்தார் என கொள்ளப்படுகின்றது. அன்றைய காலத்தில் பாதைகளில் கூட மாறுபாடு இருந்தது என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.
யேசுவின் காலத்தில் மக்களின் துன்பங்களுக்காக போராடிய ஒரு மனிதர் என்று கருதிக் கொள்ளலாம். அத்துடன் யூத மக்களின் வரலாற்றுப் புத்தகமாகிய பழைய ஏற்பாட்டின் ஒரு தொடர்ச்சியாக கிறிஸ்தவர்கள் கொள்கின்ற போதிலும், யூதர்கள் புதிய ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. பழைய ஏற்பாடு மனிதகுலத்தின் சரித்திரத்தை மாத்திரம் தான் கூறுகின்றது. ஆனாலும் இன்று பல இனத்தவர்கள் தமது சொந்த வரலாற்றை கற்று அறிந்து கொள்வதை விட்டு யூதயினத்தின் வரலாற்றை கற்ரறிந்து அதன் பார்வை ஊடாக மற்றைய தேசிய இனங்களை வளர்ச்சிடையாத மக்கள் கூட்டம் என எள்ளிநகையாடுகின்றனர்.

தேசியப்பிரச்சினையாக யூதரின் வரலாற்றை விவிலியத்தில் கணிப்பது வரைவிலக்கணத்தை வலிந்து திணிப்பது போல் அமைந்து விடுகின்றது. ஆய்வுகள் மேற்கொள்ளும் போது வரைவிலக்கணங்கள் உபயோகிக்கப்படுவது இயல்பாகின்றது. இவ்வாறான வரைவிலக்கணம் எல்லாக் காலத்திலும் பயன்படுத்த முடிவதில்லை என்ற கருத்தும் தேவை கருதி நடைமுறையில் இருக்கின்ற வரைவிலக்கணத்தை பயன்படுத்தும் கருத்து மாறுபாடும் இருக்கின்றது. ஒரு வரைவிலக்கணம் காலத்தை (பொருளாதார அமைப்பை) சேர்ந்ததாகும் என்பதை மறுத்து விடும் போக்கு வரலாற்றை திரித்து தத்தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் போக்கை ஏற்படுத்துகின்றது.
நாடோடிகளாக உலகம் பூராகவும் பரந்து யூதர்கள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகினர். கிறிஸ்தவ வளர்ச்சியானது ஐரோப்பாவெங்கும் யூதர்களை யேசுவைக் காட்டிக் கொடுத்த இனமாகவும் துரோகிகளாவும் முத்திரை குத்தியிருந்தது. இவர்கள் வாழும் தேசங்களில் இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்பட்டார்கள். இவர்கள் தமது அடையாளத்தைக் அரசின் ஒடுக்குமுறையும் ஒரு காரணமாயிற்கு. ஒடுக்கப்பட்ட இனமானது பழைய ஏற்பாட்டில் இருந்தும் நவீன அரச கோட்பாடுகளில் இருந்து விடைதேடினர். ஆனாலும் இரண்டாம் உலக யுத்தம் இவர்களுக்கு என்றே ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுத்தது.
வாக்களிக்கப்பட்ட தேசம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தியலின் காரணமாக இஸ்ரேல் நாட்டவருக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலே ஒரு (வல்லரசுகளால் திணிக்கப்பட்ட) சமாதான தீர்வை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. இஸ்ரேலிய நாட்டவரின் எதேர்ச்சாதிகாரத்தை நிலைகொள்ள வைப்பது அமெரிக்க, ஐரோப்பிய தேசத்தவர்களுடன், கிறிஸ்தவ உலகத்தவர்களின் உதவிகளேயாகும். ஒரு இனத்தினை தாழ்த்தி, தம்மை உயர்த்திக் கொள்ளும் தேசிய உணர்வு கொண்டுள்ளது. கிறஸ்தவ இறையியலைக் கொண்டு ஏன் பல நூற்றாண்டுகளாக தொடரும் யூத-பலஸ்தீனப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை? தேசியஇனம் என்பது நிலப்பிரபுத்துவத்துடன் தோன்றுகின்றது எனினும் தேசியப் பிரச்சனை என்பது முதலாளித்துவக் கட்டத்தை சார்ந்த அரசியல் பொருளாதார வகைசார்ந்ததாகும். முதலாளித்துவ பொருளாதார அரசியல் சார்ந்ததை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புடன் பொருத்துவது காலப் பொருத்தமற்றதாகும்.


14 சியோனிசம்
சியோனிசத்தின் வரலாறு ஐரோப்பாவில் தொழில் புரட்சியினால் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும். யூததேசியவாத உணர்ச்சியினை இரண்டு காலப்பிரிவுகளாக பிரித்துக் கொள்ள முடியும். பண்டையக்காலம், தொழிற்புரட்சிக்கும் அதனால் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு முற்பட்ட காலப்பகுதியில் அந்த மக்கள் ஏற்பட்ட மீது தொடுக்கப்பட்ட இன ஒடுக்குமுறைகளையும் கவனத்தில் கொள்ளதல் வேண்டும். யூதர்கள் தமது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான பல செயற்பாடுகளை கொண்டிருந்தார்கள். யூதர்கள் எந்ததெந்த நாடுகளில் குடியேறினார்களோ அந்தந்த நாட்டுச் சரித்திரத்தை அறிந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்;. ஆனால் இங்கு ஒவ்வொரு நாடுகளின் சரித்திரத்தை பிரத்தியோகமாக தெரிந்து கொள்வது நோக்கமல்ல.

தொழிற்புரட்சி ஏற்பட்ட போது முதலாளித்துவ ஐனநாயகம் மக்களுக்கு கிடைக்கப் பெற்றது. பல நாடுகளிடையே இருந்த யூதர்களின் உரிமைகள் படிப்படியாக உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும் முதல்முதலாக 1789 பிரான்சில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் முன்னர் யூதர்கள் தனி (getto) குழுமமுறையின் கீழ் தமது வாழ்க்கையை நடத்தினர். யூதர்கள் தம்மிடையே மாத்திரம் ஓரு குறுகிய வட்டத்தினுள் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். இதனால் மற்றைய சமூகத்தில் இருந்து தனிமைப்பட்டிருந்தனர் எனலாம். அவர்களின் வாழ்க்கை மதத்தை நம்பிக்கையை மையமாகக் கொண்ட சமூக உறவானது அகமணவுறைக் கொண்டதாகவும், வாழ்கையின் தெரிவுகள் சமூகத்தின் உறுப்பினர்களின் தேவையின் மையத்தில் இருந்துதான் தெரிவுகள் இடம்பெற்றிருந்தது. இவர்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது தனிமனிதர்களின் சுதந்திரத்தை கட்டிப் போட்டு வைத்திருந்தது. சமூகவியலாளரான பிரான்ஸ் நாட்டு அறிஞர் (Emil Durkheim)  எமில் டுர்க்கெயிம் தற்கொலை என்ற ஆய்வுப் புத்தகத்தில் யூதச் சமூகத்தில் அதிகமான ஒப்புறவைக் (social intergration) கொண்டதாகவும், ஒருவருக்கொருவர் தார்மீக உரிமை எடுத்துச் செயற்படுபவர்களாகவும், குடும்ப உறவில் அதிக கவனம் செலுத்திய சமூகமாக தனது ஆய்வில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யூதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் தம்மிடையே தொடர்புகளையும், அடையாளங்களையும் தொடர்ந்தும் பாதுகாக்கும் ஒரு சமூகக் கூட்டமாக வாழ்திருந்தார்கள். அறிவுவளர்ச்சி, நாகரீக வளர்ச்சி, பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றமானது அவர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தது. பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற மாற்றம் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவுளிடையே மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதன் போக்கானது யூத அடையாளத்தை, பழமையை பேணவேண்டும் என்ற சிந்தனையோட்டம் உருவாக்கப்படுகின்றது.
இவர்களில் ஒரு பிரிவினர் தமது மதக் கோட்பாடுகளிடையே ஏற்பட்ட மாறுதல்களைக் கொண்டிருந்தாலும் சமூக ஓட்டத்தில் பல சமூகத்தாருடன் ஒருமித்து வாழவும் தொடங்கினர். அவ்வாறே அந்தந்த சமூகத்தவர்களுடன் ஒன்றித்து போவது.
ஐரோப்பி நாடுகளில் இருந்தே தமது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வது
புதிதாக ஒரு இடத்தை தெரிவு செய்து அந்தநாட்டில் (Theodor Herzl - Autralian Jew) குடியேறுவது
அல்லது இஸ்ரேலுக்கு குடியேறுவது என்ற கருத்து.
இவ்வாறான கருத்துக்கள் நிலவி வந்தன. இதேவேளை கலாச்சார, இலக்கிய மொழி விழிப்புணர்வுகளும் மக்களுடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல அமைப்புக்களும் தோற்றம் பெற்றன. இந்த அமைப்புக்கள் ஜெருசலேம், பலஸ்தீனம், இசுரேலியர் என்ற மைய அடிப்படையில் யூதர்கள் சியோனிய (Hovevei Zion 1880) அமைப்பு உருவாக்கினர். இவர்கள் யூத தேசியவாதக் கருத்துக்கள் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிவிலே அதிகமாக வெளிப்பட்டது. 1800களின் இறுதியில் யூத இனத்தவர்களுக்கெதிரான சிந்தனையை பல நாடுகளிலும் தோன்றியிருந்தது.
இதேவேளை கலாச்சாரம் பண்பாட்டை உறுதியாக பின்பற்ற வேண்டுமென்ற உணர்வு அதிகரித்தது இந்தக் காலப்பகுதியிலாகும். “யூதத்தன்மை பொருந்திய அனைத்தையும் பாதுகாத்தல், யூத தேசிய இனத்தின் அனைத்துத் தன்மைகளையும், அவை பாட்டாளி வர்க்கத்திற்கு தீமை பயக்கும் என்றால் கூட அவற்றைப் பாதுகாத்தல், யூதத்தன்மை இல்லாத அனைத்திலிருந்தும் யூதர்களை பிரித்து வைத்தல் மருத்துவமனைகள் கூட யூதர்களுக்கென்று தனியாக வேண்டும் என்று சொல்லல் (ப.73 ஸ்ராலின் மார்க்சீயமும் தேசிய இனப்பிரச்சனையும்) இதிலிருந்து தேசியவாதம் எவ்வகையாக வளர்ச்சியடைந்திருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதேபோல இஸ்ரேல் தேசத்தில் தமது நிலையைப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் வளர்ந்து வந்தது. இந்த வேளையில் Theodor Herzl என்பவர் ஒரு இடத்தை தெரிவு செய்து அங்கு யூதர்களை குறியேற்றி அமைதியாக வாழ்க்கை உருவாக்கிக் கொள்வதும், தமது அடையாளத்தை பேணுவது பற்றியும் கருத்தைக் கொண்டிருந்தனர். இவர் யூத இனத்தின் வரலாற்றையோ, மத பற்றுதல், இனப் பெருமைகளை அதிகம் முன்னிறுத்தவில்லை. மாறாக யூத மக்கள் மற்றைய இனத்தைப் போல சமமான அந்தஸ்தையும், இறைமையையும் உடைய மக்களாக வாழ வழியைத் தேடினார். இதனால் இவரின் கருத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இவரும் பிற்காலத்தில் இஸ்ரேலிய தேச உருவாக்கத்திற்கு உடன்பட்டுச் சென்றார். இவரையே சியோனியத்தின் மூலகாத்தா என்று அழைக்கின்றனர்.
உலக சியோனிய அமைப்பு 1897 இல் தமது அமைப்புக் கொள்கையையும் வெளியிட்டனர். “The aim of Zionism is to create for the jewish people a home in Palestine secured by public law. The congress contemplates the following means to the attainment of this end: -The promotion, on suitable lines, of the colonization of Palestine by Jewish aricultural and industrial worker. - The orgaization and the binding together of the whole of Jewry by means if appropriate institutions, local and the internationla, in accordance with the laws of each country. - The strenghtening and fostering Jewish national sentiment and conciousness. - Preparatory steps towards obtains government consent, where necessary, to the attainment of the aims of Zionism. (p.11 Laqueur/Rubin Then Israel - Arab Reader) இதேவேளை 1905களில் பிரித்தானியாவினால் உகண்டாவில் ஒரு பகுதியை யூதக் கொலனியாக்குவது என்ற திட்டத்தை முன்மொழிந்தனர். உலக சியோனிய அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பல முரண்பட்ட கருத்தைக் கொண்ட நிலையில் உலக சியோனிய அமைப்பு இருந்துள்ளது. இந்த அமைப்புகள் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்குரிய அபிப்பிராயத்தை மேற்கொண்டு வந்தனர். சியோனிய அமைப்பினர் மத அடிப்படைச் சிந்தனையில் இருந்து (ளநஉரடயச) மதசார்பற்ற நிலையில் தோற்றம் பெற்றது எனினும் முரண்கொண்ட கருத்துக்கள் ஒன்றை ஒன்று மேலான்மை கொண்டது. இதனை கீழே பார்ப்போம் In the ~rational of millenarianism| the redemption is not perceived as a mythical history - apocalyptical event but take place within a historical framwork. National-religious zionism does not view the foundation of the State of Israel as a triumph of national liberation, but as the beginning fo a divinely inspired process of Redemption. One of the most important elements in this process is the territorial integrity of Eretz Israel" (p97, Seliktar, Ofira New Zionism and the Foreign Policy System of Israel)

இவ்வாறு வரலாற்றை எழுதுகின்ற போதும் மதத்திற்கும் உருவாக்கப்படும் சிந்தனைக்குமான தொடர்பினை ஏற்றுக் கொள்வதில்லை. தேசிய உருவாக்கத்திற்கு வரலாற்றுப் பெருமிதம் என்பதை தேசிய சின்னங்களில் இருந்தும் பரம்பரையாக பரம்பரையாக பரிமாறிவரும் கட்டுக்கதைகளும் பங்கு வகிக்கின்றன. இன்றைய சியோனிச வெறியின் உருவாக்கத்திற்கு யூதர்களிடையே இருந்துவந்த சிந்தனையானது செயல்வடிவம் பெற்று பலஸ்தீனர்களை அகதிகளாக உலகம் முழுவதும் அலைய விட்டு யூத தேசம் என்பது விலிவியத்தின் வழியொற்றி பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.


15 பிரச்சாரத்தில் கருத்தியல் மேலான்மை

ஆபிரகாம் வழிவந்த மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களின் மதப்பிரசாரங்கள் மற்றைய மதங்கள் மீதும் உலகக் கண்ணோட்டத்தின் மீதும் தாழ்வானதாகக் கருதிக் கொண்டே அணுகுகின்றது. மற்றைய மதங்கள் தம்மை விட கீழான சமயமாகவே பார்க்கப்படுகின்றது. அநாகரிகமாவும், அவவிசுவாசச் (Heathen புறயினத்தார்) செயல்கள் என்றும் சாத்தானுக்கு உகந்தது என்று கருதுகின்றனர். தாழ்வானதாகவும் ஏளனமாகவும் பார்க்கும் பார்வையே மற்றவர்களின் சுயமரியாதை மீது முதல் தாக்குதல் நடத்துவதாகும்;. அநாகரிகம் என்றும் தூய்மையானதாகவும் அல்லது புனிதமானதாகவும் மற்றைய மதத்தவர்களை தாக்குகின்றனர்.  

மனித குலத்தில் வரலாற்றில் குலச்சமூகத்தின் எச்சங்களும், இனக்கடவுள்களைக் கொண்டதாகவுள்ள உலகக் கண்ணோட்டத்தில் உடலில் சாம்பல் அல்லது பூச்சுப் பூ சுவது, மரங்கள், மிருகங்கள், ஆவி, இறந்தவர்களை வணங்குவது எல்லா இனங்கள் மத்தியிலும் காணப்பட்டது. காலங்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு செயற்பாடுகளுக்கு ஒவ்வொரு காரணம் மனிதர்கள் கற்பிற்க முற்பட்டனர். ஆனால் மக்கள் இனத்தினரிடையே ஒரே மாதிரியான கருத்துக்கள் உருவாகியது கிடையாது. அவ்வாறு உருவான கருத்தைக் கொண்டு தற்பெருமை கொண்ட இனங்கள் தமது கருத்து தான் சரியானது என வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் கருத்து முதல்வாத, பொருள் முதல்வாதக் கருத்துக்கள் முட்டி மோதிக் கொண்டும் இருக்கின்றன. குறிப்பாக கருத்து முதல்வாதமே தற்பொழுது உலகில் அனைத்துப் பாகத்திலும் ஆதிக்கத்தில் இருக்கின்றன. பழைய சிந்தனை முறைகளின் எச்சங்கள் வளர்ச்சியடைந்த சமூகத்தில் கூட மாற்றமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னர் குறிப்பிட்டது போல் காட்டு மிராண்டித் தன்மை கொண்ட வழிபாட்டு, சடங்கு முறைகள் மக்கள் இனங்கள் அறிவு முதிர்ச்சியடையாத காலத்தில் இருந்தே பின்பற்றி வருகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் விளக்கங்கள் என்பது ஒரு காலத்திற்கு ஏற்பவே நியாயம் பெறுகின்றன.

பழங்குடி வாழ்வியலில் அன்றாடம் வெவ்வேறு சடங்குகளை மேற்கொள்கின்றார்கள்.  கலகாரி (ஆபீரிக்க Bushmen) மக்கள் வேட்டையின் பின்னர் இரத்தத்தினால் உடலைக் கழுவுகின்றார்கள். இது வேட்டியின் பின்னரான சடக்குகாக கொள்ள முடிகின்றது.  இது அவர்களின் வாழ்வியல் சார்ந்து இருக்கின்றது. இவ்வாறே கிழக்கு ஆபீரிக்க பழங்குடிகள், அவுஸ்ரேலிய (aboriginal australians) மக்கள்  உடலில் விபூதி பூசுவது போன்று உடலில் வர்ணம் பூசுகின்றார்கள்.  இது இயற்கை வழியான சடங்கைக் கொண்டதாக இருக்கின்றது. இவைகளை இன்றைய வாழ்வியலைக் கொண்டு அளவிட முடியாது.

இவ்வாறு மக்களிடையே பின்பற்றப்பட்ட வழிபாட்டு, சடங்கு முறைகள் தரக்குறைவானதாகக் காட்டி மற்றைய மக்களை கீழானவர்களாக காட்டி, மற்றைய இனத்தவரை தரப்படுத்தும் சிந்தனை ஒட்டம் நாகரீகமடையாத மக்கள் கூட்டமாக பார்ப்பது கருத்து மேலாதிக்க நிலையை காட்டுவதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவான சடங்கு, வழிபாட்டு முறைகள் மாறுபட்டு கிறிஸ்தவ மதத்தில் பின்னர் வேறுவடிவம் பெற்றிருப்பதை கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் சிந்திப்பதில்லை.
அத்துடன் அவர்களின் மதப்பிடிப்பு அந்த நிலையை ஏற்றுக் கொள்ளவும் விடுவதில்லை. அதாவது கிறிஸ்துவின் இரத்தம், சரீரத்தின் அடையாளமாக திராட்சை இரசமும், அப்பமும் கொடுக்கப்படுகின்றது. ஆனாலும் இவ்வாறு படைத்தல் என்ற செயற்பாடு ஆபிரகாம் காலத்தில் ஆட்டை பலியிட்டு இறைவனுக்கு செலுத்துவது வழக்கமாக இருந்தது. காலம் செல்லச் செல்ல பழக்கங்களும் மாற்றமடைகின்றது. இவ்வாறே கிறிஸ்தவத்திற்கு முற்பட்ட மத்திய கிழக்கில் சமயச் சடங்கான விருத்தசேதனம், கல்லால் எறிந்து கொல்வது, சிலுவையில் அறைந்து கொல்லல், தலைவெட்டுதல் குற்றத்தடுப்புச் சட்டங்கள் என்பன மாற்றம் பெற்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நவீன கால சின்னமாக தோற்றம் பெற்றிருப்பவை பல பண்டைய காலத்தில் காட்டுமிராண்டித் தன்மைகள் கொண்டதாக இருந்தவையாகும். இவை கால மாற்றத்தில் நவீன கிறிஸ்தவத்தில் நவீன காலத்துக்குரிய சின்னமாக பிரதிபலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதே போல் ஒரு இனத்தின் மக்கள் பகுதி தனது நம்பிக்கையை கொண்டு இருப்பது போலவே மற்றைய இனத்தின் மக்கள் பகுதியும் உலகக் கண்ணோட்டத்தைத் கொண்டு வாழ்கின்றன. பல உலக கண்ணோட்டங்கள் இருக்கையில் கிறிஸ்தவ மதமானது திருமுழுக்கு பெறாத அனைவரும் சாத்தானின் பிள்ளைகள் என கூறுகின்றன. குறிப்பாக சிறு குழந்தைகளையும் சாத்தானின் பிள்ளை எனக் கூறுகின்றது. இவ்வாறு அழைப்பதன் ஊடாக மனித வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் ஜனநாயக உரிமை மீறலாகும். இவ்வாறாக ஒரு இனத்தின் சரித்திரத்தை மாத்திரம் கூறும் விவிலியம் பிறயினத்தார், காட்டுமிராண்டிகள் அல்லது உருவத்தை வழிபடுபவர்கள் பழித்து கூறுகின்றது. இந்தக் கருத்தை எந்தப் பகுத்தறிவுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறுவது சரிதானா? இந்தக் கருத்துக்கு கிறிஸ்தவ சபையில் இருந்தே எதிர்க்கருத்து தெரிவிக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் பாலசூரியா குழந்தைகள் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் திருமுழுக்கு பெறாத அனைவரும் சாத்தானின் பிள்ளைகள் எனக் கூற முடியாது எனக் எதிர்க்கருத்தைக் கொண்டுள்ளார். இவர் அக்கருத்தை தொடந்தும் வைத்துக் கொள்ள திருச்சபை அனுமதிக்கவில்லை. இவர் இடையூறுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தார். ஒரு மனிதர் சாத்தானின் பிள்ளை எனக்கூறி ஏன் அவர்களை தாழ்த்த வேண்டும். ஒவ்வொரு மனிதரும் பிறக்கும் போதே சுதந்திரமானவர்களாகத் (வர்க்க அடிமைத் தனத்தை இங்கு கருதவில்லை) பிறக்கின்றனர். அவர்களின் பிறப்பில் குறை இருப்பதாக போதிப்பது நமது நாட்டில் வர்ணாசிரமக் கோட்பாடாகிய சாதிய சிந்தனைக்கு ஒப்பானதாகும். சாதியம் பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவர் பிராமணர், தோளில் இருந்து பிறந்தவர் சத்திரியர், இடையில் இருந்து பிறந்தவர் வைசியர், காலில் இருந்து பிறந்தவர் சூத்திரர் என பிரிக்கின்றது. இங்கு ஏற்றத் தாழ்வுகளை மக்களிடத்தில் ஏற்படுத்தி மக்களை தன்நம்பிக்கையை இழக்க வைத்து மதத்தலைமைகள் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் நிர்ணயம் புரிபவர்களாக மாறிவிடுகின்றனர்.
இது பார்ப்பனியம் (நிலபிரபுத்துவ சிந்தனை) எவ்வாறு சுரண்டும் வர்க்கத்திற்கு உதவி புரிகின்றது என்பது தெரிந்தாலும் மக்கள் வர்க்க உணர்வு பெறாத நிலைகாரணமாக பார்ப்பனியம் தனது நச்சுக் கருத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது. இதே போல தான் கிறிஸ்தவமதமும் ஆகும். கிறிஸ்தவம் மற்றைய மதங்களைப் பிறயினத்தார் நல்வழியைத் தேடாதவர்கள் எனமுத்திரை குத்தி விட்டிருக்கின்றன. இதனால் பாதை தடுமாறி நடப்பதினால் இறைவனுக்கு ஏற்றவர்களா இல்லை எனப்பார்க்கின்றது.

பேய், பில்லி, சூனியம், மந்திரியம், போன்றவற்றில் எம்மவர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களை காட்டுமிராண்டிகளாக அழைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு மற்றைய இனத்தவர்களை கீழ்த்தரமான பார்வை கொண்டு பார்க்கின்றது. இதன் விழைவே நற்செய்தி அறிவிப்பது, பாவிகளை மனம் திருப்புவது போன்ற கருத்துக்களில் உலவி வருகின்றனர். இந்தக் கருத்துக்களை பார்க்கும் போது ஒரு இனக் கூட்டம் மிகவும் மட்டமான உலகக் கண்ணோட்டத்தையும், வரலாற்று பெருமைகள் அற்றவர்களாகவா இருக்கின்றனர்? இவ்வாறு மேலாதிக்க கருத்தைக் கொண்டிருக்கின்ற சமயம் நாசிக் கிட்லரின் இனத் தூய கொள்கைக்கு ஒப்பானதே. நாசிக் கொள்கையை எடுத்துக் கொண்டால் ஆரிய இனத்துவ பெருமையை முன்வைக்கின்றது. இனத்துவ மேலான்மையை விவிலியத்தில் இருந்து பெற்றுக் கொண்டு இனவெடுக்கலை தென் ஆபீரிக்காவில் மேற்கொண்டனர். அதேபோல கிறிஸ்தவம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கொள்கையிலும், வாக்களிக்கப்பட்ட தேசம் என்ற கருத்திலும் கவனம் செலுத்துகின்றது.
விவிலியம் ஒரு இனத்தின் வரலாற்றைப் பற்றிக் கூறுகின்றது. யூதஇனம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கருத்தையுடைய இனத்தின் வழியில் வந்த மதத்தின் சரித்திரத்தில்; உண்மை, பொய்கள், உள்ளடங்கிய வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருக்கின்றது. இவற்றைக் கற்றுக் கொள்பவர்கள் தமிழர் வரலாற்றை அல்லது விவிலியத்தை மனப்பாடம் செய்யும் இனக்குழுக்கள் சொந்த சரித்திரத்தில் தேர்ச்சி பெற்றுக் கொள்வதில்லை. யூத உலகக் கண்ணோட்டத்தில் அமைந்த வரலாறானது மற்றைய இனங்கள் தமக்கே உரித்தான வரலாற்றைக் கொண்டது என்பதையும், சமத்துவமான இன வகை என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமது சொந்த வரலாற்றை விட்டு யூதச் சரித்திரத்தை கற்றுக் கொள்கின்றனர்.

நிலப்பிரபுத்துவத்தின் பின் ஆன்மீகம் மக்களிடத்தில் ஆழமாக புதைந்து கொண்டது. ஆன்மீகம் மக்களின் அனைத்து தளங்களிலும் வெற்றி கொண்ட போது, ஆன்மீகத்திற்கு முன்பிருந்த பல கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டது. இன்று மதத்தின் சடங்காக போற்றப்படுபவை, முன்னர் மக்கள் வாழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்ட பழக்க வழக்கங்களாகும். (இவை கருத்து முதல்வாத, பிற்போக்குத் தன்மையாகவும் இருக்கலாம்.) ஆனால் இன்று மதத்தின் அடையாளமாக காட்டப்படும் மக்களின் பழக்கவழக்கங்களை காண்டுமிராண்டித்தனம் என பொதுப்படையாக கணிப்பது கருத்து மேலாதிக்கமாகும்.
மக்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பலவற்றை இந்துப் பண்பாடாக பார்க்கும் நிலையும் இருக்கின்றன. பண்பாடுகளை மதத்தில் இருந்து பிரித்து எடுப்பதன் மூலமே மதவாதம் தவிர்ந்த கலாச்சாரத்தை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு பறை என்ற வாத்தியக் கருவி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சொந்தமானது என முத்திரை குத்தப்பட்டுள்ளது. தோலில் இருந்து செய்யப்படும் கருவி என்பது தொல்பழங்குடி மக்களின் வாழ்வியலில் இருந்து தொடர்வதாகும். தோலில் இருந்து செய்யப்படும் கருவிகள் என்பது வளர்ச்சியடைந்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கின்றது.  பறையானது பல பாகங்களில் வாழும் மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்டதாகும். தேவராளர் சடங்கின் போது தமது முன்னோர்களுடன் பேசுவதற்கு பாவிக்கப்பட்ட கருவியாகும். (இதே போல எமது சமுதாயத்திலும் இருந்திருக்கலாம், இதற்கு உடுக்கு பாவிக்கும் பழக்கத்தையும் இங்கு கவனிப்பது தகும்.) எமது சமுதாயத்தைப் பொறுத்தவரை பறை ஒடுக்கப்பட்ட சமூகத்துக்குரியதாக முத்திரை குத்தப்பட்டிருப்பதை வெல்லவேண்டும். பறை என்பது ஆதிமனிதனிடத்தில் தோன்றி மாத்திரம் அல்ல வர்க்க சமுதாயத்தில் உழைக்கும் மக்களுக்குரியதாகும். பறையைச் சாதிவெறியர்களிடம் இருந்து வெற்றி கொள்வது போலவே. மதத்தின் பிடியில் இருந்து கலாச்சாரத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழ் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக இந்திப் பாட்டுகள், படங்கள் என்பவற்றை தொலைத் தொடர்ச் சாதனங்களில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை ஒரு மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்குப் பதில் இன்னொரு மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகும். இதே போல் பார்ப்பனியத்தை எதிர்க்கப் போய் மாற்று மதத்தில் சரணாகதி அடைந்து போக்கு இருக்கின்றது. மதங்களில் நல்ல விடயங்கள் இருப்பதாக கூறி கிறிஸ்தவத்தின் மேலாதிக்கப் கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

ஒரு இனக்கலாச்சாரத்தை முன்னிறுத்தியும், அதன் அளவுகோளாகக் கொண்டு மற்றையவர்களை விமர்சிப்பதற்கு மேலாதிக்க கருத்தைக் கொண்டவர்களை அனுமதிக்கும் போது தமது கலாச்சாரத்தையே முன்னுதாரணமாகவும், அளவுகோளாகவும் முன்னிறுத்துவர். அனைத்து தொடர்புச் சாதனங்களும் ஒடுக்குபவர்கள் கைகளில் இருப்பதினால் மேலாதிக்க கருத்தை திணிக்கக் கூடியதாக இருக்கின்றது. எமது கலாச்சாரத்தில், சிந்தனையில் எல்லாச் சமூகத்தைப் போன்றே மூட நம்பிக்கை (கருத்துமுதல்வாதம்), பல பிற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. பிற்போக்குச் சிந்தனைகளை களைந்தெடுத்து மக்கள் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வது அந்தந்த நாட்டு இன மக்களின் அடிப்படை உரிமையாகும்.

தொன்மை வழிபாட்டு முறைகளை சிதைத்துக் கொண்டு சமூகத்தில் மாற்றங்களுக்கு உள்ளாகின்ற போது தமிழ் மக்களும் தமக்குச் சொந்தமான சிந்தனையை விட்டு விட்டு இரவல் சிந்தனையை பற்றிக் கொண்டிருக்கின்றனர். வர்ணாசிரமக் கோட்பாடாகிய சாதியச் சிந்தனை, கிறிஸ்தவ மதச் சிந்தனை, இசுலாமியச் சிந்தனை போன்றவற்றுடன் இந்திய கருத்துமுதல்வாதச் சிந்தனை மதங்களான பௌத்தம், சமணம், வைணவம், சைவம் ஆகிய மதங்களை போற்றி நிற்கின்றனர். தற்காலத்தில் காதலர் தினம், மெலேனியம் அல்லது புத்தாயிரம் போன்ற நிகழ்வுகளை தமிழ் தேசியம் எதிர்த்தார்களா? புத்தாயிர நிகழ்வை இந்திய உழைக்கும் வர்க்கப் போராளிகள், (தாய்லாந்து நாட்டில் புத்த பிக்குனிகள்) எதிர்த்தனர். ஆனாலும் புத்தாயிராம் கொண்டாட்டத்தை தமிழ் தேசியம் திட்டமிட்ட முறையில் அமைப்பு வடிவம் கொடுத்து ஏன் எதிர்க்கவில்லை. மேற்கத்தை, கத்தோலிக்க, கிறிஸ்தவ அங்கியை அணிந்து கொள்ள, தமது வர்க்கத்தின் தேவை பூர்த்தி செய்யப்பட்டால் போது என்ற நிலையில் தேசியம் பேசுபவர்கள் அதற்கு மேல் தான் எங்கு தான் செல்ல முடியும்?
இது உலகமயமாதலின் பலனாக ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பொருளாதார உற்பத்தி முறையிலும் சரி, சிந்தனை யெற்பாட்டிலும் சரி ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என எண்ணம் கொண்டு பல முனைகளிலும் செயற்படுத்துகின்றனர்.
மேற்கில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்  சிந்தனை வடிவம் என்பது நுகர்வுக் கலாச்சாரத்தையும், தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான சந்தையாகும் நிலை நிறுத்திக் கொள்வதாகும்.
நுகரும் பொருளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எமது சுவையை மாற்றம் கொள்ள வைக்கின்றனர். சுவையை மாற்றங்கொள்ள வைப்பதன் ஊடாக அவர்களின் பண்டத்தை வாங்கும் படி தூண்டுகின்றனர். இதன் மூலமே பொருளிற்கான சந்தையை உருவாக்கின்றனர். முன்னர் உற்பத்தி செய்யப்பட்ட பொருளிற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட சுவைக்கான பொருளின் தேவையை இருப்பதனால் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்பட்ட பயிரை கைவிடுகின்றனர். இவ்வாறு சுவையில் கூட சுயதிருப்பதி அடைந்திருந்த நிலை மாற்றம் பெற்று அன்னியச் சுவையில் மோகம் கொள்ளும் நிலை காரணமாக சுதேசிய பொருளாதாரம் கூட மாற்றம் பெறுகின்றது. இவ்வாறு சர்வதேச வேலைப்பிரிவினை ஊடாக மற்றைய நாடுகளின் உற்பத்தியை கட்டுப்படுத்துகின்றது. இவற்றிற்கு மாறாக, அதாவது ஏகாதிபத்திய கலாச்சாரத்திற்கும், பிற்போக்குச் சிந்தனையையும் எதிர்க் கொண்டு, புதிய கலாச்சாரத்தை படைப்பது உரிமையாகும்.

மனித இனத்தின் வளர்ச்சியில் இருந்து பெற்றுக் கொண்ட அறிவினை பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சி காரணமாக மற்றைய இனத்துடன் தொடர்பு ஏற்படுகின்ற போது சிந்தனைகளும் பரவுகின்றன. மனித இனத்தின் வரலாற்றில் கடனாகப் பெற்ற பிற இனக்குழுமங்களின் சிந்தனை, பழக்கவழக்கங்கள் எம்மக்களிடையே புகுந்து, இன்று ஆழுமை செலுத்துகின்றது என்பது பற்றி பல முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. தமிழ் மக்கள் தமது சிந்தனைகளை கடன் வாக்கியிருக்க முடியும். இதில் சிவவழிபாடு, முன்னுக்கு வந்ததா? அல்லது பிற்பாடு ஏற்பட்டதா என்பதல்ல வாதம். மாறாக சிந்தனை சிந்தனையோட்டத்தின் வளர்ச்சியை ஆராய்வதன் ஊடாக பார்க்கப்பட வேண்டும்.
உலகின் பல தத்துவ கோட்பாடுகள், சிந்தனைகள் வளர்ந்துதான் வந்திருக்கின்றன. வ.மு 600களில் கிரேக்கத்திலும், சீனத்திலும் தத்துவவளர்ச்சி ஏற்பட்டது. அதேவேளை இந்தியாவிலும் மாவீர், புத்தர் காலத்தில் இவ்வாறான மறுமலர்ச்சி ஏற்பட்டது. இது ஒருபுறமிருக்க சிவவழிபாடு, மாலியமும் தோன்ற முன்னரே தொம்மையார் (தொம்மையார் இந்திய வந்தார் என்பது ஒரு ஐதீகமே அதனை நிரூபிப்பதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை) மூலம் கிறிஸ்தவம் ஏற்பட்டு விட்டதினால், உலகக் கண்ணோட்டம் இல்லாத மக்களிடத்தில் புதிய கண்ணோட்டத்தை விதைத்தாக மறைமுகமாக கருதும் போக்கினை பல முனைகளில் இருந்தும் உருவாகின்றது. இதேபோல வள்ளுவர் எழுதிய திருக்குறலினை விவிலியத்துடன் ஒப்பிட்டும், கிறிஸ்தவத்தில் இருந்து கடன்பெற்றதாக கருதும் துர்ப்பாக்கிய நிலையை ஆதரிக்கும் கிறிஸ்தவ சமயத்தவர்கள் இருக்கின்றார்கள்.  குறிப்பாக திராவிடதேசியம் பேசி கிறிஸ்தவ மதத்தை (தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நலன்பால்) முன்தள்ளும் முயற்சியும் மேற் கொள்ளப்படுகின்றது. மதங்கள் பழைய சிந்தனை முறையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாக இருக்கின்றது. இவ்வாறே வர்ணாசிரமக் கோட்பாட்டை எதிர்க்கின்ற சமயம் முற்போக்கானதா அல்லது அது தமிழ் இல்லை என்பதற்காக அதனை எதிர்த்துப் போராடிய ஆழ்வார்கள், நாயன்மார்கள் முற்போக்குவாதிகளாகவும் ஆகிவிட்டனர். “தமிழுடன் ஒன்றிமயங்கவல்ல” என்ற காரணத்தினால் கிறிஸ்தவம் புகழ்ச்சிக்கு உரித்தாகிவிட்டது. புதிய உலகக் கண்ணோட்டம் என்பது உள்வாங்கப்பட்டாலும் அவை அதன் தொடர்ச்சியான பழைய வடிவத்தில் இருக்க முடியாது. அதேவேளை பழைய உலகக் கண்ணோட்டத்தின் வடிவம் தான் இப்பொழுது உள்ளது என்று வாதிடுவதும் அபர்த்தமான பார்வையாகும்.
கிறிஸ்தவம் “தமிழ் தேசியத்திற்கு” நெருக்கமானது எனக் கருதுகின்ற போது பணம்படைத்த மேற்கு நாடுகளுடன் நெருக்கமாக இருக்கும் காரணத்தினால் மேற்கு நாடுகள் கொடுக்கும் அங்கியை (uniform) அணிந்து கொள்ள வேண்டுமா? ஒரே அங்கியை அணிந்து கொள்ளும் பொருளாதாரத்திட்டத்தின் மூலம் நிதிமூலதனம் திட்டமிட்டு புகுத்துகின்றதற்கு உடந்தையாக மதங்கள் இருக்கின்றன.


16 கிறிஸ்தவத்தின் மறுபக்கம்
கிறிஸ்தவம் இன்று அன்புக்குரியதாகவும், மனிதர்களை மதிக்கும் மதமாகவும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. கிறிஸ்தவத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்கின்ற போது மார்க்ஸ் கூட தனது அடிப்படைத் தத்துவத்தை கிறிஸ்தவத்தில் இருந்து பெற்றதாக பிரச்சாரத்தின் போது கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகின்றனர். இன்றைக்கு கிறிஸ்தவமாக உலகை செல்லாக்குக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றது. கிறிஸ்தவம் அதன் ஆரம்ப காலத்தில் பல தொல்லைகளை அனுபவித்ததோ, அதேபோல கிறிஸ்தவம் பெரிய இயக்கமாக வளர்ந்த வரலாற்றில் பெரும் கொடுமைகளை விழைவித்துத் தான் இருந்திருக்கின்றது.
கிறிஸ்தவம் ஆட்சிமதமாகிய பின்னர் தலைமறைவு காலத்தில் அதிகார வரம்பைக் கொண்ட அமைப்பு வடிவம் உருவாக்கப்படுகின்றது. இந்த படிமுறை அதிகார அமைப்பில் போப் தலைவராகவும், மேலாயர், ஆயர், குருக்கள், மற்றும் துறவிகள் என்ற அமைப்பு வடிவம் உருவாக்கப்பட்டது. கிறிஸ்துவின் இறப்பிற்கு பிற்பாடு 325களில் (ROME) ரோமின் அரச மதமாகவும், கடவுளாகவும் மாற்றம் பெறுகின்றது. இதன் பின்னர் ரோமைத் தலைமையாக கொண்ட கிறிஸ்தவ மதமானது பெரும் சமயமா உருப்பெறுகின்றது. வரலாற்றில் அரசர்களின் ஆதரவு பெற்ற மதமாக மாற்றம் பெற்ற காலத்தின் பின்னர் அரசர்கள் தமது ஆட்சியை விஸ்தரிப்பதற்கும், கிறிஸ்தவ மதத்தை போதிப்பதற்கும் ஏற்றவாறான தந்திரோபாயத்தை கொண்டு செயற்பட்டனர். கிறிஸ்தவம் ஆட்சியாளர்களின் மதமாக மாற்றம் பெற்ற பின்னர் தலைமறைவு காலத்தில் கிறிஸ்தவ மதத்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஈடாக அதே அளவிற்கு கிறிஸ்தவமும் கொடுமைகள் செய்துதான் இருக்கின்றனர். இதனை ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும், சிலுவைப் போரின் எதிர்விழைவுகளையும் ஆராயும் போது ஒரு கொடுமைகள் விபரமாக தெரியவரும்.
ஐரோப்பிய தேசங்களின் அரச வம்சத்தின் வளர்ச்சியின் ஊடாக வளர்ந்த கிறிஸ்தவமதமானது, ஆதிக்கத்தை விஸ்தரிப்பை மேற்கொள்ளும் நோக்கத்தில் அமைந்து கொண்ட யுத்தங்களுக்கு போப்பின் உதவியும் தேவைப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கு தேசங்களை ஆதரித்த போப்பும் அதனை எதிர்த்த கிழக்கு தேசங்களும் கத்தோலிக்க சமயம் இரண்டாக பிளவுண்டது. ஆட்சியாளர்களின் அதிகார வர்க்கப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் சிலுவைப் போர் ஆரம்பிக்கப்பட்டு 1200 களில் கொன்ஸ்ராந்திநோபிள் (Istanbul-Turkey) என்ற நகரத்தை அழித்தனர். இதே காலத்தில் முஸ்லீம் தேசங்களின் மீது தாக்குதல் நடத்தினர். ஜெருசலேமை மீட்கும் முயற்சி என்ற பெயரில் முஸ்லீம்களை கொண்றும் குவித்தனர். முன்னர் இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தில் இருந்த தேசங்களான ஸ்பானியா, போத்துக்கல் ஆகியவை கிறிஸ்தவத்தின் கைகளுக்கு மாறியது. இன்று மிசனரிகள் எனப்படுபவை ஒரு உளவுத் துறையாகவே முன்னர் பயன்பட்டது. “கிறிஸ்த மி‘னரிகளின் பொருள் இன்றிருப்பது போல் இல்லை. அப்போது போர்த்துக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதி இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தன. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப் கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ”மினரிகள்” அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாக இருந்த மிசனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாகப் பரிணமித்தன.” (பக்கம் 18 புதிய கலாச்சாரம் யூன் 2001)
சிலுவைப் போர்க்காலத்தில் சித்திரவதை செய்வதில் பல புதிய முறைகளை பயன்படுத்தி எதிரிகளை துன்புறுத்தினர். சித்திரவதை மூலம் துன்புறுத்தல்களை மேற்கொள்ளும் போது முதலில் தமது உயிர் சம்பந்தப்பட்ட நிலையில் பயத்தை ஏற்படுத்துகின்றது. உளவியல் ரீதியில் மனிதர்களை சிதைப்பதே முதல் தந்திரோபாயமாக எதிரிகள் மீது மேற்கொண்டனர். ஒரு மனிதரின் உயிர் போவது மாத்திரம் அல்ல, அவ்வுயிர் போன பிற்பாடு அவர்களது குடும்பம் நிர்க்கதியாக போகும் என்ற பயம் ஆட்கொள்கின்றது. இந்த அவலத்தினால் ஏற்படுகின்ற துன்பங்கள் சமூகத்தின் பேச்சுக்கும் ஆளாகப்படுகின்றது. சித்திரவதைகளை இன்றைய தேசங்கள் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக கிறிஸ்தவ மதத்தவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
பலநூற்றாண்டுகள் ஸ்பெயின் நாடானது அராபியர்களின் செல்வாக்கின் கீழ் இருந்தது. இதனால் பல மக்கள் இஸ்லாமை பின்பற்றினர். இவ்வாறு இஸ்லாமை பின்பற்றிய மக்களுக்கு எதிரான களையெடுப்பு ஸ்பெயின் நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கின்றன. இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களை மாத்திரம் அன்று பழைய நம்பிக்கைகளை (shamanism) பின்பற்றி மக்கள் மீதும் களையெடுப்புகள் நடைபெற்றன. 1492களில் ஸ்பெயின் தேசத்து ஆட்சியாளார்களாக இருந்த இசபெல்லா, பேடினன்ட் (Isabella, Ferdinand) ஆகியவர்களின் ஆசியுடன் நடைபெற்றது. இதே காலத்தில் யூதர்கள் ஸ்பெயின் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் காலத்தில் இசபெல்லா, பேடினன்ட் ஆகியோருக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தது. ஒன்றுபட்ட ஸ்பெயின் தேசத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கமும், கத்தோலிக்க மதத்தை நிலைப்படுத்துவதுமாகும். இவ்விரண்டு நிலைப்பாடுகளையும் அன்றைய (Sixtus) போப் ஆதரித்திருந்தார். போப்பின் ஒப்புதலும், அரசரின் ஒத்துழைப்புடனும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது.
கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை (inquisition) செய்யப்பட்டது. முதலில் விசாரணை மன்றத்தின் மூலமும் விசாரணை செய்வது மாத்திரம் அல்ல. சிறைகளின் தரமானது மிகவும் மட்டமான நிலையிலும், குளிர், பசி, துர்நாற்றம், நோய் போன்ற நிலையில் வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். சிறைக்கைதிகளை சித்திரவரை செய்வதன் மூலம் குற்றம் செய்யாதவர்களும் தாம் குற்றம் செய்ததாக ஒப்புக் கொண்டு விடுதலை பெறவும் முயற்சித்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களின் (inquisition) மீதான தாக்குதல் 1808 களில் நெப்போலியன் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் பின்னர் தொடரப்பட்டு 1834 விசாரணை (inquisition) செய்வது முற்றாக நிறுத்தப்பட்டது. அன்புக்கும், சமத்துவத்திற்கும் ஆதாரமான சமயமானது, முன்னர் தனது காட்டுமிராண்டித்தனத்தை கொண்டிருந்ததை வரலாறுகள் சாட்சியாகின்றது.
அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கின்ற போது கத்தோலிக்க திருச்சபையின் ஆழுமையை நிரூபிக்கும் நிகழ்வுகள் இங்கே பார்க்கலாம். இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் இன்று புனிதர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பிரான்சிஸ் சேவியரின் அரசியலை “கோஸ் மே டி பாய்வா கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகளை விற்றதால் சேவியருக்கும் தளபதி கோஸ் மே டி பாய்வாவுக்குமிடையில் கருத்து வேறு பாடு எழுந்தது. சவேரியாரோ உன்னி கேரள வர;மனுக்கு ஆதரவாக இருந்தார;. 1544-ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வடுகர்களின் தாக்குதலில் தளபதி கோஸ் மே டி பாய்வாவின் வீடும் படகும் கொளுத்தப்பட அவர் தீவுகளுக்கு மக்களுடன் தப்பிச் சென்றார்.” (அருள்எழிலன்) இங்கு இவர்கள் உழைக்காது சொகுசு வாழ்க்கைக்காக தமது அரசியல் நிலைப்பாடுகள் எடுத்திருக்கின்றார்கள். மதத்தின் உயர்பிரிவு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நல்லுறவுடனும் ஆதரவாகவும் இருந்திருக்கின்றார்கள்.
ஐரோப்பாவிலும் சரி கொலணித்துவ காலங்களிலும் சரி கத்தோலிக்க திருச்சபையின் ஆளுமை அரச வர்க்கத்திற்கு இருந்திருக்கின்றது. இவர்களே நிலப்பிரபுத்துவத்தை ஆதரித்து வந்துள்ளார்கள். தொழில் புரட்சிக் காலத்தில் இவர்களால் மதத்தினை அரசியல் இருந்து பிரிக்கும் புரட்சிகரமான நிலைப்பாட்டை ஆதரித்து நிற்க முடியவில்லை.


17 தென்னிந்தியாவில் மதமாற்றம்:
மதமாற்றம் செய்து கொள்வதற்கு பற்பலகாரணங்கள் இருக்கின்றது. பெரும்பான்மையினர் சமூகத்தில் ஏற்பட்ட அழுத்தங்களில் இருந்து வெளியேறவே மதமாற்றம் மேற்கொண்டுள்ளனர். தனிமனித இருப்பும் அதன் சார்ந்த காரணங்களை நாம் ஆராயவேண்டும். அரசியல் பொருளாதாரக் காரணங்களை பல வகையாக ஆராயமுடியும்.
தென்னிந்தியாவில் கடற்கரையையொட்டிய மக்களே முதலில் மதம் மாற்றப்பட்டவர்கள். இவர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு நேர் எதிரே பொருளாதார சுரண்டலுக்கும் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளவுமே மதம் மாற்றப்பட்டனர். “கீழ்த்திசை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரிலும் இம்முத்துக்குளித்துறையைச் சேர்ந்த மக்களே மிகவும் சிறந்தவர்கள்” என பல்தார் டி கோஸ்தா என்று தென்னிந்திய மக்களை குறிக்கும் வகையில் எழுதப்பட்ட வரலாற்றை பார்க்கின்ற போது, அவர்கள் எவ்வகையான பொருளாதார வளங்களை கொண்டிருந்தார்கள் என்பதையே இங்கு குறித்து நிற்கின்றது. இவ்வாறான வரலாற்று போலவே தென்னமெரிக்க நாட்டில் எவ்வாறு யேசுசபையினர் மதத்தை (The mission-film) பரப்பினர் என்பதை பார்க்க முடிந்தது. விவிலியத்தை ஆக்கிரமித்த தேசங்களின் மக்களிடத்தில் திணித்தனர்.
முத்துக்குழிக்கும் மக்களாக தென்னாட்டில் இருந்த மக்கள் முத்துக்குழிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காது பாதுகாப்பதற்காக மூர்களிடம் இருந்து போராடினர். முத்தினால் வரும் வருவாயை கவனத்தில் கொண்டு மூர்கள், விஜயநகர் பேரரசு, மதுரை நாயக்கன் மன்னர், கயத்தார் மன்னன் வெட்டுப்பெருமாள், உன்னி கேரள வர்மன் போன்ற ஆட்சியாளர்களினால் காலத்துக்கு காலம் தென் கடலோர மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்திருந்தனர். “கன்னியாக்குமரியிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான முத்துக்குளித்துறைக்கு கடற்பகுதியில் வாழ்ந்த பரதவர்கள் அரேபிய மூர்களின் கொடூரமான தாக்குதலுக்கு கி.பி 16ம் நூற்றாண்டில் ஆளானார்கள. உள்நாட்டு குறநில மன்னர்கள் அரேபியர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு திருச்செந்தூர் முருகனையும் மதுரை மீனாட்சியையும் குலத்தெய்வமாக வணங்கி வந்த பரதவர்களின் தலையைக் கொய்து அரேபியர்களிடம் கொடுத்து தலைக்கு ஐந்து பணம் பெற்றனர். அதிக தலைகள் வந்ததன் விளைவாக ஐந்து பணம் என்பது ஒரு பணமாக குறைக்கப்பட்டது. இதை எதிர் கொள்ள முடியாதநிலையில் கத்தோலிக்கர்களாக போத்துக்கீசர்களின் உதவியைப் பெற்று தங்களைப் பாதுகாத்துக் கொண்ட பரதவர்கள் ஓட்டுமொதமாக கத்தோலிக்கர்களாயினர்.” (அருள் எழிலன்- பத்திரிகையாளர் தமிழ் நாடு) படுகொலையில் இருந்து தப்பிக்கொள்ளும் வகையில் வெளியேறிய பரதவ குலத்தவர்களை இலங்கையின் மேற்குக் கரைகளில் குடியேறியிருக்க முடியும் என ஊகிக்க முடியும். இவர்களின் ஒரு பகுதியினர் இலங்கையின் மேற்குப்பகுதியில் சிங்களவர்களாக மாறியுள்ள தமிழ் கத்தோலிக்கர்களாவர்.

இஸ்லாமிய ஆட்சி செல்லைச் சீமையில் நிகழ்ந்த போது நாடார் சமூகத்தின் மீது “சாணர் வரி” என்ற பெயரில் வரி விதித்தார்கள். இவ்வரியில் இருந்து விடுபட நாடார் சமூகத்தினர் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை தழுவினர் என்று கால்டுவெல் குறிப்பிடுகின்றார். (மதமாற்றமும் மறுமதமாற்றமும் ஆ. சிவசுப்பிரமணியன்)
மேலும் பஞ்சத்தை பயன்படுத்தி 1876 - 1878 அவர்களுக்கு கஞ்சியைக் கொடுத்தும் மதமாற்றம் செய்தனர். இவ்வாறு சீர்திருத்த கிறிஸ்தவர்களாகட்டும், கத்தோலிக்கமாகட்டும் சமூகத்தில் இருந்த முரண்பாடுகளை பயன்படுத்திக் கொண்டதை வரலாற்றில் பார்க்க முடிகின்றது. சாதியத்தின் ஆதிக்கம் என்பது ஒரு மக்கள் பிரிவினர் உடுத்தும் உடுபுடவைகளின் மீதான கட்டுப்பாடு இன்றையப் பார்க்க அன்று கடுமையானதாக இருந்ததை அறியமுடிகின்றது. “திருவாங்கூர் மன்னரிடம் பேசி குப்பாயம் என்ற மேல்சட்டை அணியும் உரிமையை கிறித்தவர்களாக மாறிய பெண்களுக்கு வழங்கும்படி செய்தனர். குப்பாயம் அணியும் உரிமையை வாங்கிப் பெண்களின் மானத்தை கிறித்தவம் காப்பது அறிந்து மேலும் பலர் கிறித்தவர்களாக மாறினர்” ஆ.சிவசுப்பிரமணியன்) இவ்வாறே 1950களில் யாழ்ப்பாணத்தில் சட்டை போடக் கூடாது என்ற வேளாளர்களின் (கள்ளர், மறவர், அகம்படியர் வேளாளர்களாகியவர்களும்) கட்டுப்பாட்டை மீறி ஒரு சமூகம் கல்வியில் முன்னேறி வந்திருக்கின்றார்கள்.
மதமாற்றமானது தம்மை இருக்கின்ற சமூதாயத்தில் இருந்து தமது அந்தஸ்தினை உயர்த்திக் கொள்வதற்கும், ஒடுக்குமுறையில் இருந்து தப்புவதற்கும் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பாக திராவிட இனக்குழுமத்தின் மீதான சாதியம் பின்பற்றப்பட்ட பின்னரான சமூகம் என்பது பூசாரிகளையும், கோவிலையும் மையமாகக் கொண்டு சாத்திர சம்பிரதாயங்களை ஊங்குவித்துத் தான் சமூக இயக்கம் இருந்தது. பார்ப்பாணுக்கு எதிரான செயற்படுவது முதல் பாவமாக கருதப்பட்டிருந்தது.
இதில் வேதமதங்களின் பண்பாடானது தீண்டத்தகாத மனிதர்கள் என்று கோவில் பிரதான பகுதியில் இருந்து அன்னியப்படுத்தியே வைத்திருந்தது. வரலாற்றில் நந்தன் கோவிலுக்குள் செல்ல அந்தனர்களால் மறுதலிக்கப்பட்ட வேளை அவனை ஏமாற்றி நந்தி நகர்ந்து உன்னை உள்வரவேண்டாம் என்று சிவனே சொல்வதாக கூறினர். இங்கு மனிதர்களுக்கும் கடவுளுக்குமான உறவு கூட அர்ச்சனை செய்யும் பார்ப்பணர்களே தீர்மானித்தனர்.
ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமான உறவை கோவில்கள், பள்ளிவாசல்களில் இவற்றில் சாதாரண மக்களின் பங்களிப்பையோ அல்லது பிரசன்னத்தையோ தடுத்து நிறுத்தவில்லை. வேத மதங்களுக்கு மாறாக மனிதரையும் கோவிலையும் இணைப்பதில் இருந்த நெகிழ்ச்சித் தன்மை என்பது ஒடுக்குதலுக்கு உட்பட்ட மக்களிடையே ஒரு புதிய உணர்வை தோற்றிவித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மதமாற்றத்திற்கு உள்ளான மக்களில் பலர் இலங்கையில் குடிபெயர்ந்ததையும் (யாழ்ப்பாணச் சரித்திரம் மு. இராசநாயகம்) குறிப்பிடுகின்றார். இவர்கள் போத்துகேயருக்கும் ஒல்லாந்தர்களுக்கும் துணையாக இலங்கை சென்றும் இருக்கின்றார்கள். இலங்கையில் இடம்பெற்ற மதமாற்றத்தில் பொருளாதார நலன்கருதியே மதம் மாறினர். இதில் மதம் மாறியவர்களில சிலர் வெளியில் கிறிஸ்தவ அடையாளச் சின்னங்களையும், மேற்கத்தைய பாணியிலான அங்கிகளை அணிந்து சென்றனர். ஆனால் தமது வெளிக்காரியங்கள் முடிந்த பின்னர் வீட்டுக்குள் வந்த பின்னர் தமது பழைய குலக்கடவுளையும், சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
சாதியச் சமூகத்தில் திருமண உறவு மூலமும் மதமாற்றம் நடைபெற்றுள்ளது. ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் தமது சாதிக்குள்ளேயே உள்மணவுறவுமுறையின் காரணமாக இன்று கிறிஸ்தவர்களாக உருவாகியிருக்கின்றனர். இவ்வாறு திருமணவுறவு இடம் பெற்ற வேளையிலும் உறவுகள் என்பது சிதைவடையவில்லை. உறவுகள் நீடித்து இருந்த போதும் அடுத்த சந்ததியினர் மதத்தில் கலக்காது திருமணவுறவு முறையை பேணி வந்துள்ளனர். இதனால் சொந்தங்களுடனான உறவு அருகிக் கொண்டே போயிருக்கின்றது. மூன்று அல்லது நான்கு தலைமுறைக்கு அப்பால் தொடர்பற்று போயிருக்கின்ற நிலையை நாம் காணமுடிகின்றது.
குறிப்பாக மேற்குப் பகுதியில் சிலாபம், நீர்கொழும்பு பகுதியில் இருப்பவர்கள் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே என்று முதலியார் இராசநாயகம் கூறுகின்றார். நீர்கொழும்பில் உள்ளவர்கள் சுமார் 40 வருடங்களுக்கு அதிகமான தமிழ் பாடசாலைகள் இயங்கி வந்திருக்கின்றன. இவர்கள் சந்ததிசந்ததியாக தமிழையும் பாதுகாத்து வந்துள்ளனர்.சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சிந்தனை என்பது தமிழ் சமூகத்தினை இல்லாதாக்கும் அரசியலுக்கு காரணமாகியது.
 இவர்கள் தம்மை கேரளத்தில் இருந்து தமது முன்னோர்கள் வந்ததாக கூறுகின்றனர். இவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் மற்றைய தமிழ் பிரதேசங்களில் திருமண உறவையும் கொண்டுள்ளனர்.
சிலாபத்தில் உள்ள மக்கள் அவர்கள் கிறிஸ்தவர்களே. இவர்களைப் போல பேசாலை, வங்காலை, தலைமன்னார் போன்ற இடத்தில் இருப்பவர்களும் கிறிஸ்தவர்கள். இவர்கள் இந்தியாவில் இருந்து கொலணித்துவ ஆட்சிக் காலத்தில் படையினராக வந்தவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு வந்தவர்களில் ஒரு பகுதியினர் சங்கிலின் படையினரால் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அவர்களை வேதசாட்சிகளாக கருதுகின்றனர். ஆனால் இன்னொரு கண்ணோட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களாக கொள்ள முடியும்.


18 முகவர்களாக அறிவாளிகள்
மனிதர்கள் மதம் சமாற பல காரணங்கள் இருக்கின்றது அதேபோல ஒரு சிந்தனையை மழுங்கடித்துக் கொண்டு சமூகத்தில் பழைய சிந்தனை முறை இலகுவில் மரித்துப் போவதில்லை. சிந்தனை மாற்றம் இலகுவில் நடந்து விடுவதில்லை. அது பெரும் போராட்டங்களின் ஊடே பொருளாதாரத்திற்கு மாற்றம் கொண்டு சிந்தனையும் மாற்றம் கொள்கின்றது.
சிரியக் கிறிஸ்தவம் கேரளாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. கொலனித்துவ காலத்தில் கிறிஸ்தவ சபையினரும் 1500 பின்னர் செயற்பட்டனர். இதில் தொம்மையார் கிறிஸ்தவ சமயமானது நிறுவனமயப்படுத்தப்படுவதற்கு முன்னர் (வழிபாட்டு முறை, போப், மற்றும் ஆயர், குருக்கள், துறவிகள் என்ற படிமுறை அதிகார வரம்பு ஏற்படுவதற்கு முன்னராகவே இஸ்ரேல் நாட்டைவிட்டு (தொம்மையார்) வெளியேறிவராகும்.) நிறுவன மயப்படுத்தப்படாத காலத்தில் தோன்றி மதத்திடம் கட்டுக்கோப்பான கருத்தமைப்புக் தோன்றியிருக்கவும் இடமில்லை. யேசுவின் கருத்தை பரப்புவதற்காக மாத்திரம் செயற்பட்டிருக்க முடியும். இத்துடன் தொம்மையார் (Thomas) இந்தியாவிற்கு வந்திருக்க நியாயம் இல்லை எனவும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. மதம்பரப்புவதற்காக போப் என்ற கிறிஸ்தவ பாதிரியினால் கட்டவிழித்துவிடப்பட்ட கட்டுக்கதை என்ற விமர்சனமும் இருக்கின்றது.
தமது சமூக அமைப்புடன் ஒன்றித்துப் பார்தல் அவசியமும் கூட. ஏனெனில் நாடுபிடிக்க வந்தவர்களுடன் ஒன்றாக வந்த மதபீடம் கட்டுக் கதைகளை உருவாக்கியே விடுகின்றது. சிரிய கிறிஸ்தவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  மேற்கு இந்தியக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டது கவனிக்கத்தக்கதாகும். ஆனாலும் போத்துக்கேயர்கள் வரும் வரையில் அச்சமயம் பரவலாக மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தவில்லை.
இன்றைய காலத்தில் கூட விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் அற்ற நிலையில் பல கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் மத போதகர்கள் மக்களிடத்தில் விதைப்பதில் வாய்மை உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
இவ்வாறாக போல் அல்லது பவுல் என்றழைக்கப்படும் போதகர் (இவர் யேசு காலத்தவர் ஆனால் இவர் யேசுவை எந்தக் காலத்திலும் சந்தித்தது கிடையாது. ஆனால் யேசுவின் தம்பியான ஜேம்ஸ் என்பவரைச் சந்தித்துள்ளார்.) இவர் இத்தாலியில் அல்ல ஸ்பெயின் நாட்டில் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கின்றது. பழைய கால வரலாற்றை முடிந்த முடிவில் நின்று விவாதிக்கும் பொழுது பல பிற்சேர்க்கைகளை மறுதலிக்கும் போக்கும் வரலாறு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏற்படுகின்றது.
தொம்மையார் வந்த காலத்தில் நிலப்பிரபுத்துவ, இனக்குழுமச் சமுதாய உறவைக் கொண்டதாகவும், குறைவிருத்தி கொண்ட தேசிய இன வளர்ச்சியடைந்தாக இருந்திருக்கும். அதாவது இனக்குழும எச்சங்கள் நிலமானியத்திலும் இருந்திருக்க நிறையவே சாத்தியப்பாடுகள் உண்டு. குலச் சமுதாயத்தில் இருக்கின்ற போது வளர்ச்சியடைந்த சமூகத்தின் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வதற்கு சிரமாக இருந்திருக்கும். ஒரு காலத்தின் சிந்தனையை விளங்கிக் கொள்வதற்கு சிரமாக இருந்திருப்பதை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கான சமூக பொருளாதார வளர்ச்சியின் சிந்தனையின் ஆழுமையைக் கருத்தில் கொண்டே ஆராயப்பட வேண்டும். ஆனால் நிச்சயம் ஒவ்வொருவருடைய கருத்துக்களும் சமூக அமைப்புக் கேற்ப மாறுபட்டு இருக்கின்றது. தனிமனிதனாக வந்திருந்த தொம்மையாரின் கருத்து விதைப்பதற்கு வலிமையுள்ளவராக இருப்பின் மற்றைய சமுதாயம் நலிந்த நிலையில் இருக்க வேண்டும். இத்துடன் ஆட்சியாளர்களின் ஆதரவு என்பதும் மிக முக்கியமானதாகும்.  அரச ஆதரவு இருந்திருப்பதற்கான  எவ்வித வரலாற்றுத் தரவுகளும் கிடைக்கப்பெறவில்லை.
யவனரின் தமிழகத்தின் ஊடான வர்த்தக தொடர்பை வைத்துக் கொண்டு யூதம், கிறிஸ்தவம் ஆகியவையூடாக பண்டைய காலத்தில் யூத சிந்தனை தமிழரிடையே புகுந்திருக்க முடியும் எனவும் வாதிப்பவர்கள் உள்ளனர். தமிழரிடையேயும் யவனர் என்றழைக்கப்படும் ரோம், கிரேக்கத்தவரின் உலகக் கண்ணோட்டம் கூட எவ்வளவு ஆழுமையைச் செலுத்தியிருக்கும் என்பது பற்றியும் கருத்து பேதம் இருக்கின்றது. தொம்மையார் மூலமாகவும், யவனர்கள் மூலமாகவும் பழைய சிந்தனையை சிதைத்து புதிய சிந்தனை மாற்றம் கொண்டதாக கருதுபவர்களும் உண்டு. “யவனர் குடியிருப்புகள் தமிழ் நாட்டில் இருந்ததும், யவனர் மதுவைத் தமிழ்நாட்டார் அருந்தியதும், யவன வீரர் தமிழ் மன்னருக்கு மெய்க்காப்பாளராக விளங்கியதும், யவனர் காசு தமிழ் நாட்டில் விளங்கியதும் ஆகிய இவை யாவும் வரலாற்றுண்மைகள். யவனர் வாழ்க்கை முறையும் கருத்துக்களும் தமிழ் நாட்டிற் செல்வாக்குப் பெற்றனவா? அங்கனம் பெற்றிருந்தால், அச்செல்வாக்கின் அளவு எத்தகையது என்பவற்றைப் பற்றி ஒன்றும் நிச்சயமாக அறிந்து கொள்ள இயலாதிருக்கின்றது.” (பக்.8 ஆ. வேலுப்பிள்ளை தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழ்புத்தகாலயம்) இவ்வாறான கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன.

“தமிழ் மரபுடன் நன்கு ஒன்றிமயங்கவல்ல இயல்பினதாக இருந்து” (குணா) எனக் கூறி, அதன் காரணத்தினால் தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்து போய்விட்டது என மேலும் கூறுகின்றது. ஒரு சமூகத்தின் சிந்தனையோட்டம் உள்வாங்கப்படுவது இயல்பு இரண்டு சிந்தனையா பல சிந்தனையோ கலந்து அறிவொளியுடையாதவும் இருக்க முடியும். ஆனால் ஒன்றிமயங்கல்ல என்ற காரணத்தினால் அல்ல. பெரும் சமூகத்தில் மொழி தெரியாத ஒரு அன்னியன் மதச் சிந்தனையை என்வாறு முழுமையான பரப்பியிருக்க முடியும். ஓரு பெரும் கூட்டம் சில அடிப்படைகளை தம்முடன் இணைத்துக் கொண்டிருக்க முடியும். அப்படியாயினும் பல நூற்றுக் கணக்கான குலங்கள் வாழ்ந்துவந்த நேரத்தில் ஒரு சில குலங்கள் உள்வாங்கியிருக்க முடியும். மாறாக இன்றைய காலத்தில் தேசிய இனமாக வளர்ந்திருக்கின்ற தமிழ் தேசிய இனம் முழுவதும் கிறிஸ்தவ சிந்தனையை பெற்றிருக்க முடியும் என்பது ஆய்விற்குரியதாகும். ஏனெனில் தமிழரின் ஆட்பலம், வேரோடிய சிந்தனைப் பலம், வாழ்க்கை (உலகக் கண்ணோட்டம்) யோட்டம் அவ்வளவு பலயீனமானதா?
மதத்தை பிரதிநிதித்துவம் செய்த மதக்குறவர்கள் முதலில் மதத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள் தமது நோக்கத்தை முதன்மையாக செயற்பட்டிருப்பர். முதலில் இறைவனின் சித்தத்திற்கு கீழ்படிந்து நடந்த பின்னர் தான் மதக் குறவர்களுக்கு வந்த தமிழ் பற்றாக இருந்திருக்கும். கிறிஸ்தவ சமயம் பல நாடுகளில் முதன்முதலில் அச்சுபதிப்பு முறைகளை அறிமுகப்படுத்தினர். அதன் மூலம் மக்களுக்கு எழுத்தறிவை ஏற்படுத்தினர். இதன் எழுத்தறிவை ஏற்படுத்தும் பயன்பாடு முதலில் விவிலியத்தை அறிமுகப்படுத்துவதே நோக்கமாக கொண்டது. அதன் பின்னர் பொருளாதார அமைப்பின் லிகிதர் உத்தியோகத்திற்கும் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களாவும் எழுத்தறிவு பயன்படுத்தப்பட்டது. (வ.பி 100-200 நூற்றாட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ரோம் தேசத்தில் கிறிஸ்தவர்கள் பலர் எழுத்தறிவு பெற்றிருந்தனர். இவர்கள் பல உத்தியோகத்தில் இருந்தனர். இதனால் கிறிஸ்தவர்கள் ரோம் தேசத்தின் விரோதிகளாக கணித்த பொழுதிலும் ரோம் அரசினால் துன்புறுத்துவது பல வேளைகளில் தவிர்க்கப்பட்டது. அதிகார வர்க்கத்தவர்களை எதிர்ப்பதற்கு இக்கட்டான நிலை கூட ரோம் அரசிற்கு ஏற்பட்டது.
கொலனித்துவ காலத்தில் விலிலியத்தை அறிமுகப்படுத்தியன் ஊடாக எழுத சாதாரண மக்களுக்கு எழுதவாசிக்க முடிந்தது. ஆனால் அமெரிக்காவில் கறுப்பர்கள் எழுத்தறிவு பெறக் கூடாது என்பதில் வௌ;ளையர்கள் அவதானமாக இருந்தனர். இது வரலாற்று உண்மையாகும். அன்றைய காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு விவிலியத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் மற்றவர்களுக்கு பரப்பும் நோக்கமாகக் கொண்டே எழுத்தறிவு கொடுக்கப்பட்டது. எழுத்தறிவு கூட ஒரு காலகட்டத்தின் பொருளாதார அமைப்பில் தான் தங்கிருக்கின்றது.
ஒரு செய்தியை பரப்ப முயற்சி செய்பவர்கள் மொழி தெரியாமல் அச்செயலை நிறைவேற்ற முடியாது. முதலில் அவர்கள் நோக்கம் நிறைவேறிய பின்னரே தமிழ் மொழி ஆர்வம் ஏற்பட்டிருக்க முடியும். கிறிஸ்தவம் பரப்பப்பட்ட காலத்தில் இன்றைக்கு இந்து (சைவ, வைணவ) சமயத்தின் வேதம் முக்கிய இடத்தைப் பெற்றது. வேதத்திற்கு நிகரானது என்ற கருத்தோட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை கொலனித்தவ காலத்தில் ஏற்பட்டது என்ற கருத்து உள்ளது. இதன் காரணத்தினாலேயே கிறிஸ்தவ சமயம் தம்மையும் வேதக்காரர் என அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது. வேதம் பலவாறாக உபயோகிக்கப்படுகின்றது. (கிறிஸ்தவ வேதம், சமயம் என்றால் வேதம் என்பது) எனவே வீரமாமுனிவரின் தமிழ்பற்று மதத்திற்கு அப்பால் செல்ல முடிமாயின் அவர் ஒரு உண்மை கிறிஸ்தவராக இருக்கமாட்டார். ஏனெனில் மதக்கண்ணோட்டத்தில் ஒரு சமய நெறிக்கு உட்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறு தான் இருக்க முடியும். சுரண்டலை விஸ்தரிப்பை தொடர்ந்து கொள்ள அந்தச் சமூகத்தின் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதையும் தொழிற்பாடாக கொண்டுள்ளது.
மதமாறிய மக்களிடத்தில் இருந்து பெற்ற செல்வமானது கத்தோலிக்க சபைகளிடையே போட்டியை உருவாக்கியிருந்தது. இவர்களின் போட்டியானது பலிகொண்டது சுதேசிய மக்களையும் அவர்கள் செல்வங்களையும் ஆகும்.
மக்களிடம் இருந்து பெற்ற நிதியைக் கொண்டு குருத்துவக் கல்லூரி, வைத்தியசாலை, அச்சுக் கூடம் உருவாக்கப்பட்ட வேளையில் சபையானது கோவில்கள் என உருவாக்கப்பட்டதும் உபரியாக உருவாக சொத்தின் காரணமாகும். உடல்உழைப்பை கொடுக்காது சொத்துக்களை எவ்வாறு சேர்க்க முடியும் என்பதை பின்னால் பார்ப்போம்.
தனிமனிதத்தை முதன்மைப்படுத்து அதாவது பல நாடுகளில் பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைப் பரப்பியவர்கள் தமிழர்கள் என தொடங்கி அதனை பெருமைக்குரியதாக கொள்ளப்படுகின்றது. மதங்கள் ஒரு காலகட்டத்தின் பொருளாதார அமைப்பை பாதுகாத்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக் ஆதரவாக செயற்படும் செயற்பாட்டை மறுதலிப்பவர்கள் நிச்சயம் இருக்க முடியும். இவ்வாறாக ஒடுக்குமுறைக்கு துணைபுரிந்த, துணைபுரிகின்ற மதங்களை பரப்பியவர்களை பெருமை கொள்வது உடலுழைப்பில் இருந்து, மூளையுழைப்புப் பிரிவாக மாற்றமடைந்த பின்னர், உழைக்காமல் இருந்த வர்க்கத்தைப் பற்றி போற்றிப் பாடுவது, தமிழர்கள் என்ற காரணத்தினால் இவர்கள் ஒரு வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, அல்லது வர்க்க பேதம் இல்லை என்ற கருத்தை சுட்டி நிற்கின்றது. மதப் பிடிப்பினால் ஏற்படுகின்ற பெருமிதமாக காண்பிற்கப்படுகின்றது. ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது நிலையில் இருந்து கொண்டு அந்தச் வர்க்கச் சிந்தனையில் வாழ்வதற்கே சமூகம் இடம் கொடுக்கின்றது.  சுரண்டும் பொருளாதார அமைப்பில் உருவாகும் அதிகாரம் வர்க்கம் என்பது மக்களை அடக்கி ஆள்வதற்காகும்.


19 கொலனித்துவத்தின் தூணாக
கொலனித்துவத்தின் சுரண்டல் சிந்தனையை ஊட்டுவதற்கு ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. கொலனித்துவத்தில் ஒரு இடத்தை ஆக்கிரமிப்புச் செய்த பிரதேசங்களை நிர்வகிக்க வேண்டும் என்றால் பயிற்றப்பட்ட ஊழியர்கள் அவசியமாகும். பயிற்றப்பட்ட ஊழியர்களைக் கொண்டே அரசாங்கத்தை நிர்வகிக்க முடியும். ஊழியர்கள் அரசாங்க நிர்வாகத்தில் பங்கெடுக்கும் போது மக்களுடனான தொடர்புகளைப் பேணுவதற்கு ஊழியர்கள் தேவையான போது வேறு நிறுவனங்களிடம் இருந்து உதவி பெறுகின்றனர். இவ்வாறான செயற்பாட்டிற்கு உதவியவர்களே கிறிஸ்தவ சமயக் குருக்களாவர். மக்களை நிர்வகிப்பதற்கு ஊழியர்களாக இருந்த வேளையில் மக்கள் கிளர்ச்சி ஏற்படாதவாறு கவனித்துக் கொண்டனர். மீறும் பட்சத்தில் தண்டணை கொடுத்து சமூகம் உதிர்ந்து போகாமல் பாதுகாத்தனர். கொலனித்துவ நாடுகளில் பொருளாதாரத்துக் கேற்ப சிந்தனையைப் புகுத்துவது கிறிஸ்தவ மதம் துணையாக இருந்தது. சமூக உறவில் மாற்றத்தை ஏற்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானதாகும். மாற்றமானது பெரும் புரட்சிகரமான குறிப்பிட்ட நாட்களில் முடிந்திருக்க வேண்டியதில்லை. இவ்மாற்றம் நீண்ட கால மூடிமறைக்கப்பட்ட தந்திரோபாயத்தில் (இறைவனுக்கு பணிந்து என்ற போர்வையணிந்து) சித்தத்தின் கீழ் நடைபெற்றதாகும். இவ்வாறான ஆரம்ப முயற்சிகள் கூட தெளிந்த போக்குக் கொண்டதாகவும் இருந்திருக்கவும் நியாயமில்லை. இவ்வாறான சிந்தனைப் போக்கானது காலவரலாற்றில் ஒரு கோட்பாடாக பின்பற்றும் அளவிற்கு வளர்ந்தது எனலாம்.
மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றம் கொள்ள வைப்பதுடன் உலகக் கண்ணோட்டத்தையும் வலுக்கட்டமாக மாற்றினர். மக்கள் தமது சொந்த உலகக் கண்ணோட்டத்தை பின்பற்றுவதற்கு தடைகள் போட்டனர், மக்களை கடுமையாக தண்டித்தனர்.
சுதந்திரமாக இருந்த தேசத்தை வலுக்கட்டாயமான வளர்ச்சிக்கும், சிதைவுக்கும் காரணமானவர்கள் கொலனித்துவ வாதிகளாவர். “ஏற்றுமதி வர்த்தகத்துக்கென்றே அமைந்த மேற்கிந்தியத் தீவுகள் போன்ற தோட்டத் தொழில் காலனிகளிலும், சூறைக் களமாகி விட்ட மெக்சிகோ, இந்தியா போன்ற செல்வச் செழுமையும் மனித வளமும் வாய்ந்த நாடுகளிலும் பூர்வ குடிகளை நடத்திய விதம் இயல்பாகவே பயங்கரமானதாய் இருந்தது. ஆனால், முறையாகக் குடியேற்ற நாடுகள் எனப்படுகின்றவற்றிலும் கூட, ஆதித் திரட்டலின் கிறித்துவத் தன்மை பொய்யாகி விடவில்லை. 1703 இல் நியூ இங்கிலாந்தின் பியூரிட்டானியர்கள், புரட்டெஸ்டண்ட் சமயத்தின் இந்த நயத்தக் நல்லறிஞர்கள், தமது பேரவையின் ஆணைகள் மூலம், செவ்விந்தியக் குடுமித் தோல் ஒவ்வொன்றுக்கும் பிடிபடும் சிவப்புத் தோலர் ஒவ்வொருவருக்கும் 40வீத விலை நிர்ணயித்தார்கள். (மார்க்ஸ்-1013 மூலதனம்) இங்கு குறிப்பிடப்படும் கொலனித்துவ கால நிலைபற்றிப் பார்க்கின்ற போது மதமும் ஒடுக்கு முறைக்கு துணைபோயிருக்கினர் என்பதை அறிந்து கொள்ள முடியும். கிறிஸ்தவ மதம் கடந்த காலத்தில் கொலனித்துவவாதிகளுடன் உறவு கொண்டு நடத்தை மறுக்கும் தன்மை காணப்படுகின்றது.
தென்னிந்தியாவை எடுத்து கொண்டால் மதத்தினை மையமாக் கொண்டு கிறிஸ்தவம் தனது ஆதிக்கத்தை நிறுவியதைக் காணமுடிம். இன்றையக் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நிதிநிறுவனங்கள் வறிய தேசங்களில் காலடியெடுத்து வைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. நிறுவனங்கள் தமது தேவைக் கேற்ப தொழிலாளர்களை உற்பத்தி செய்ய வேண்டியது முன்னிபந்தனையாகின்றது. தொழிலாளர்களை உருவாக்குவதற்கு உள் ஊர் முகவர்களான ஆட்சியாளர்கள், ஏவலுக்கு தயாராக இருக்கும் வர்க்கத்தினர் உதவி புரிகின்றனர். உற்பத்தி செய்யப்படுகின்ற தொழிலாளியும் புதிய உற்பத்தி முறைக்கு ஏற்றவாறான சமூக உறவை தனதாக்கிக் கொள்ளக் கூடியதாகவே உருவாக்கப்படுகின்றார்கள்.
நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தவர்களை சுதந்திரமான  தொழிலாளிகளாக உருவாக்கியது. இன்றைய பொருளாதார அமைப்பு உருவாக்கும் சமூக உறவானது தனித்துவவாதச் சிந்தனை கொண்ட உறவுமுறையைத் தான் தோற்றுவிக்கின்றது. தனித்துவவாதச் சிந்தனை கொண்ட சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலமே வேகமான உற்பத்தியை பெருக்க முடியும் என்பது முதலாளித்துவ பொருளாதார அடிப்படைப் பாடமாகும். கொலனித்துவத்துடன் வந்தடைந்த கிறிஸ்தவ மதப்பிரிவு என்பது மதமாற்றத்தினை பிரதான போக்காகக் கொண்டதாக இருந்திருப்பினும் அவர்கள் கொலனித்தவ ஆட்சியதிகாரத்தில் ஒரு அங்கமாகிய அதிகார வர்க்கமாகும் . கொலனித்துவ அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்ட வளர்ந்த ஜனநாயக வடிவங்கள் என்பது முதலாளித்துவ ஆரம்பக் கட்டத்தில் சமூகத்திற்கு அமைய தேவையான சீர்திருத்தங்களும் மாற்றமும் ஆகும். இது கிறிஸ்தவ மதத்தவர்களால் சட்டைபோடும் உரிமை என்ற எண்ணற்ற சீர்திருத்தங்களுமாகும்.

பழைய உற்பத்தி உறவின் போது தான் மாத்திரம் அல்ல, தன்னுடன் நெருக்கிய குடும்ப உறுப்பினர்களின் நலன்பால் முடிவெடுத்துச் செயற்பட்ட சமூக உறவில் இருந்து தன்னை மையமாகக் கொண்ட சமூக உறவை ஏற்படுத்துவதாகும். (பொருளாதாரத்தில் தன்னிறைவு அற்ற காரணத்தினால் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தங்கி நிற்கின்றனர். தங்கி நிற்கும் நிலைக்கு தனிநபர்களே காரணம் எனக்கூறி பொருளாதார அமைப்பானது கவனத்தை திசை திருப்புகின்றது. அதாவது தனிநபர்கள் இதற்கு பொறுப்பாளியாக முடியாது. மாறாக பொருளாதார அமைப்பே காரணமாகும்.) தனித்துவவாதமென்பது முடிவுகள், தெரிவுகள் எல்லாம் தனிமனிதப் போக்கில் இருந்து எழுவதாகும். இங்கு தனிமனித சுதந்திரம் முழுமையாக பெறப்படுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்திக் கொள்ளும். உறவுகளிலும் அராஜகத்தை உருவாக்கின்றது.
முன்னர் கொலனித்துவ காலத்தில் அடிமைப்பட்டிருந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் வர்க்கம் அன்றைய தொழிற்துறை வளர்ச்சிக்கு ஏற்றவாறு இசைந்து போவதற்கு தயாராக இருக்க வில்லை. அதுமாத்திரம் அல்ல புதிய பொருளாதார வளர்ச்சிக்கு மாற்றம் பெறுவதற்கு நிறுவனத்தில் செயற்பட்ட அனுபவம் என்பது அவசியமாகின்றது. ஒவ்வொரு பொருளாதார அமைப்பிலும் அவற்றை நிர்வகிப்பதற்கு நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றது. அதாவது இன்றைய காலத்தில் உலக மயமாதலுக்கு கிறிஸ்தவம் முக்கிய துணையாக இருக்கின்றது என்பதையே இங்கு கருதப்படுகின்றது. இதன் பொருள் என்பது நிதிமூலதனத்தின் சந்தையை மறுத்துக் கொள்ள இந்துத்துவா, இஸ்லாமிய மதங்கள் எவ்வகையிலும் எதிர் இல்லை. ஆனால் பழைய சிந்தனை முறையை மாத்திரம் சிதையவிடாது பாதுகாக்க மதவெறி ஊட்டப்படுகின்றது. மேற்கின் அன்புமுக ஜனநாயக வடிவத்தைப் போல நீதிநெறி, பொருளாதாரம், சிந்தனையில் ஒரே போக்கு, சுவை என்று கருத்துருவாக்கிகளைக் கொண்டு பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

கொலனித்துவத்தினை விஸ்தரித்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பிற்கு கிறிஸ்தவ சமயம் வகித்த பாத்திரத்தை வரலாற்றில் இருந்து அகற்ற முடியாது. இனத்தூய்மை என்ற பெயரில் தொடரப்பட்ட விஸ்தரிப்பும், இனவழிப்பும், கிட்லரின் மூன்றாவது இராட்சியமும் உலகை பெரும் அழிவிற்கு இட்டுச் சென்றது. இந்த அழிவிற்கு வெவ்வேறு நாட்டு ஆழும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் முகவர்களாக மாறினர். இதேபோல மதத்தின் பாதுகாவலர்களும் கிட்லரின் பாசித்துக்கு துணைபோயிருந்தனர். முசோலியினால் சேர்க்கப்பட்ட யூதர்களின் நிதியை வத்திக்கானில் வைப்பில் இட்டதாக இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இறையரசைப் போதிக்கும் கத்தோலிக்கத்தின் தலைமைக் குருவான போப் பயஸ் கிட்லரின் கொள்கைக்கு துணைபோயிருந்தார். தற்பொழுது புனிதர்பட்டம் அளிக்கலாமா என உத்தேசிக்கின்றனர். இவரைப் போலவே தற்பொழுது இருக்கும் போலந்து நாட்டவரான போப் ஜோன் போலும் ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கு ஐரோப்பிய உடைவிற்கு சதிநடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போ போலந்தைச் சேர்ந்த ஜோன் போலுக்கு புனிதர் பட்டம் கிடைத்துள்ளது.

மேற்கூறிப்பிட்ட இரண்டு போப்பாண்டவர்களின் செயற்பாடும் இறையரசைப் பற்றி போதிப்பதும், மக்களை இறைவழிப்படுத்துவதுமாகும். ஆனால் மக்களின் பொருளாதார சுதந்திரத்தை பறித்தெடுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும், கிட்லரின் இனவெறி அரசுக்கும் துணைபோனதும் எவ்வகையில் இறைவனுக்கு விசுவாசமாக செயற்படுவதாகும். அநியாயத்திற்கு துணைபோவது எக்காலத்திலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்திருக்கின்றது. இலங்கையில் சிங்கள குரவர்கள் தம் இனத்திற்காக குரல் கொடுப்பது, லெபனானில் கிறிஸ்தவ ஆயுதப்படை என்பன இஸ்ரேலிய நாட்டவர்களுடன் துணைபுரிந்து பலஸ்தீனர்களையும், லெபனியர்களையும் அழித்தனர். சிலிநாட்டின் எற்பட்ட ஆட்சிக் (1973) கவிழ்ப்பின் போது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி உதவிபுரிந்தனர். மதம் என்பது இறையரசை மாத்திரம் அல்ல, ஒரு காலத்தின் பொருளாதார நலனை சார்ந்து நிற்பதையும் இங்கு அவதானிக்க முடிகின்றது. இவ்வாறாறே ஏகாதிபத்திய நலன் கொண்டு சேவையுமாகும். கத்தோலிக்க மதத் தலைமை ஐரோப்பாவை தலைமையாக கொண்டு இயங்கி வருவதினால் ஏகாதிபத்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிறுவனமாகவும் இருக்கின்றதுடன், உலகக்கூட்டை ஏற்படுத்துகின்றது.


20 பொருளாதார அமைப்பும் மதமும்
தமிழ் சமுதாயத்தின் வரலாற்றை படிக்கின்ற போது பக்தி இலக்கியத்திற்கு முற்பட்ட காலத்தில் வணிக வர்க்கம் ஆதிக்கத்தில் இருந்ததை அறிய முடிகின்றது. அந்தச் சமூகத்தின் உற்பத்தியில் தன்னிறைவடைந்தும், உபரி உழைப்பும், உபரி உற்பத்தி பரிவர்த்தனைக்கு உண்டான போது சொத்துக்களும், மூலதனமும் உருவாகிக் கொள்கின்றது.
எனவே சமூக வளர்ச்சிப் போக்கில் உற்பத்திப் பொருட்கள் உபரியாக உற்பத்தி செய்கின்ற போது தான் வணிக வர்க்கம் உருவாகிக் கொள்கின்றது. ஆனால் நாம் வரலாற்றைப் பார்க்கின்ற போது விவசாய உற்பத்தியை மீறி முதல் வணிகம் வர்க்கம் வளர்ந்தது போல வரலாறு தோண்றுகின்றது எனினும் அவ்வாறிருக்க முடியாது.
விவசாயத்தை செய்வதற்கு ஆழுமை கொண்ட வர்க்கங்கள் தமது செல்வச் செழிப்பின் மூலம் பெரும் வர்க்கமாக உருவாகிக் கொண்டன. இந்த வர்க்கம் கூட கூட உடழுழைப்பை வழங்காமல் தமது மூலதனத்தினை பயன்படுத்தி உழைப்பை வாங்கக் கூடிய நிலையை அடைகின்றனர். உழைப்பை விற்கக் கூடிய நிலையில் இருக்கின்ற வர்க்கத்தவர் (கூலி விவசாயிகள், அடிமைகளாகவும்) களை கொண்டு உற்பத்தியை மேற்கொள்கின்றனர்.
அடுத்தது வணிகர்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்று பணத்தை சேகரித்து, பெரும் வணிகர்களாகவும் மாறுகின்றனர். இந்த வர்க்கத்தவர்கள் கூட உடல்லுழைப்பில் இருந்து தம்மை பிரித்துக் கொண்ட வர்க்கத்தவர்களே. வணிக வர்க்கத்தவர்களே முன்னர் உயர் இடத்தில் இருந்ததுடன், அளவு கடந்த சுரண்டலையும் மேற்கொண்டனர்.  வணிகர்களின் பின்னால் இருந்த பௌத்த, சமணத்தின் பின்புலமாகும்.
செல்வச் செழிப்புடன், அரச அதிகாரத்திற்கு பக்க பலமாக இருந்தது வணிகர் வர்க்கம். அத்துடன் வளர்ந்து வந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கு போட்டியாக இருந்தது வணிக வர்க்கமாகும். இவர்கள் தமது ஆளும் வர்க்க நலனைப் பேணிக் கொள்வதற்காக போராடத் தொடங்கினர். பெரும் நிலக்கிழார்கள், நிலப் பண்ணைக்காரர்கள் சைவத்தவர்களாகவும், சிறுபொருள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் வைணவத்தை தமது சமயங்களாக கொண்டிருந்தனர்.
வணிக, நிலக்கிழார் வர்க்கமும் முரண்பாடு வெடித்த போது சைவ பக்தி இயக்கமானது மோதலை பயன்படுத்திக் கொண்டது. முரண்பாடு வணிக வர்க்கத்தினருக்கும், உழவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. வணிக வர்க்கத்தின் சுரண்டல் அதிகரிக்கின்ற போது ஏற்படுகின்ற எதிர்ப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும் காரணத்தால் மோதல் ஏற்படுகின்றது.
வணிக வர்க்கத்தின் சமயமாக சமணம் அமைந்திருந்தது. அரசிற்கு செல்வத்தை கொடுத்து அதிகாரத்தில் பலத்தில் இருந்த வணிக வர்க்கத்துடன் அரசின் மதமாகவும் சமணம் (பௌத்தமும் கூட) இருந்து. சைவத்தவர்கள் வணிக வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துகின்ற வேளையில் சமணம், புத்த இயக்கத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தனர். சுரண்டும் வர்க்கம் ஏற்றுக் கொண்ட எதிர்ப்புத் தத்துவம் பக்தி இயக்கமாகவே இருந்தது. இவற்றை நோக்கின்ற போது மதச் எழுச்சியின் ஊடாக பொருளாதார நலனுக்கு உதவியாக இருந்ததை அவதானிக்க முடிகிறது.
ஆனால் “ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழரிடையே தோன்றிச் சைனம், புத்தம் போன்ற அயல்புல ஆரிய மதங்களைத் தமிழ் மண்ணில் இருந்து விரட்டியடிப்பதற்கென்று இறைப்பற்று (பக்தி) இயக்கத்தை” உருவாக்கவில்லை மாறாக ஆதிக்க வர்க்கத்தின் கருத்தியலை மூளை உழைப்பினை பிரித்து, அந்தச் சக்திகள் ஆட்சிப்பீடத்தில் பலம் பொருந்தியவர்களான அமரும் போட்டியில் தான் மதத்தை எதிர்த்துப் போராடினர். பக்தி இயக்கத்தின் போது மற்றைய மதத்தவர்களைக் கொண்றனர், கோவில்களை சைவத்திற்கு உரிமையாக்கினர், சொத்துக்களை கொள்ளையடித்தனர்.
தேசியத்திற்கு உதவ வேண்டுமென இறையியலை உதவியை நாடுபவர்கள். தமிழ் தேசியத்தினை வலியுறுத்திக் கொண்டிருக்கும் பகுதினரே நாடுகின்றனர். கிறிஸ்தவ இறையியல் லத்தீன் அமெரிக்காவில் இருந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக ஏற்பட்ட ஒரு மறுமலர்ச்சி இயக்கம். இந்த சிந்தனைக்கு ஒரு அரைநூற்றாண்டு ஆவதற்கு முன்னரே இச் சிந்தனையை வத்திக்கான் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது. இந்தச் சிந்தனை வறிய மக்களின் முதலாளித்துவ உரிமைகளை வென்று எடுப்பதற்காக முன்வைக்கப்பட்டதாகும்.

இந்த மதங்கள் பலவற்றில் மனிதனுடைய நாளாந்த சமூக உறவானது பல மனிதர்களின் நலனை மையமாகக் கொண்டு அமைகிறது. இங்கு தனிமனிதர்கள் முதன்மை இடம் எடுப்பதில்லை. மாறாக கூட்டுச் சமூகத்தின் நலன் முதன்மை பெறுகின்றது. தனிமனிதர்கள் தமது மத நம்பிக்கையைப் பேணுவது கூட கூட்டு அமைப்பின் நீதி முறைக்கு அமையவே அமைதல் வேண்டும். இதனால் ஒவ்வொரு மனிதர்களும் அந்த வரையறைக்குள் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைக்கு மாறாக கத்தோலிக்க சமயத்திற்கு எதிராக கிளர்ச்சி 1600 களில் ஏற்பட்டது. இந்தச் சிந்தனையானது மதச் சுதந்திரம் கூட தனிமனிதன் நிர்ணயிக்க முடியும் என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டது.
வரலாற்றில் சமயம் கூட பொருளாதார உற்பத்தி முறைக்கு துணைபுரிந்துள்ளதை இங்கு கவனிப்போம். 'ஆனால் ஒப்ந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும்என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ”சுதந்திரமான” 'சமத்துவமான” மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.(பக்கம் 130, பி. ஏங்கெல்ஸ் - குடும்பம். அரசு. தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்) மதத்தின் மீதான பற்றை தனிமனிதச் சுதந்திரமாக தனித்துவப்படுத்தி, அதனை உறுதிப்படுத்துவதன் ஊடாக முதலாளித்துவத்திற்கு உதவி புரிந்தது. மதத்தின் மீதான நம்பிக்கைக்கு சாதி, ஏற்றத் தாழ்வு அவசியம் இல்லை என்ற முற்போக்கான கருத்தும் இராமனுஜர் முன்வைத்தார். இருந்தும் முதலாளித்துவ பொருளாதார உற்பத்திக்கு உதவி புரியக்கூடிய சிந்தனைப் போக்காக கிறிஸ்தவ மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் மற்றைய மதங்கள் இவ்வாறான போக்கிற்கு இடம் கொடுக்கவில்லை.
இன்றைய காலத்தில் 1600களில் இருந்ததைப் போல் வர்க்க முரண்பாடு இருக்கவில்லை. உழைக்கும் மக்கள் இழப்பதற்கு தமது கோவணத்தை தவிர ஒன்றும் இல்லாத காலம் இன்றையப் போல் இல்லை. ஏகாதிபத்தியத்தின் காலகட்டம், ஒடுக்கும் சிந்தனை, ஒடுக்குபவர்கள் எல்லாம் வெளிப்படையாக தென்படுவன. ஏங்கெல்ஸ் கருதுவது போல் அன்றைய காலத்திற்கு தேவையான மனிதர்களின் சிந்தனையை படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது. ஏகாதிபத்திய காலகட்டத்தில் உலகமயமாதலுக்கு துணை நிற்பதை பார்க்கும் இடத்தில் அன்றைக்கு புரட்டஸ்தாந்து பிரிவு மட்டும் தான் போட்டிப் பிரிவாக இருந்தது. சிந்தனைப் போக்கில் இருக்கின்ற தாராளப் போக்கு கடும் போட்டியுடனும், தொழிற்புரட்சியுடனும் ஏற்பட்டிருந்தது.
இன்றைய காலத்தில் உலகமயமாதலினால் சிந்தனையின் பரவல் என்பது மிகவேகமான நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், இருக்கின்ற மதங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இணைந்து செல்லக் கூடிய மதமாக இருக்கக் கூடியது கிறிஸ்தவமே. இங்கு கத்தோலிக்கம் இதற்குள் அடங்குகின்றது. இங்கு மதத்திடம் முற்போக்கு தன்மையை காண்பதில் மாத்திரம் நிறைவு கொண்டு நட்பு சக்திகளை ஐக்கியப்படுத்த முடியாது. மதச்சக்திகளை ஐக்கியப்படுத்த நினைப்பது நம்மை நாமே தற்கொலைக்கு உள்ளாக்குவது போல் ஆகும். குறிப்பாக தற்காலத்தில் இந்தியாவிலும் அதன் எதிரொலியாக இலங்கையிலும் உயிர்பெற்றுக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியின் வளர்ச்சியை நோக்கிப் பார்க்கின்ற போது மதத்துடனான கூட்டை ஏற்படுத்திக் கொள்கின்ற போது போராடும் சக்திகளின் ஐக்கியத்திற்கு இடையூறாக மதங்கள் அமைந்துவிடும்.


21 விடுதலை இறையியல்
விடுதலை பற்றி மதங்கள் போதிப்பது இந்த உலகவாழ்க்கையில் உரிமையுடனும், சுதந்திர மனிதர்களாக, பொருளாதார ஏற்றத் தாழ்வில்லாத வாழ்க்கை பற்றி எந்த மதமும் போதிப்பது இல்லை. அவை சாவிற்கு பின்னான வாழ்வைப் பற்றித தான் போதிக்கின்றது. மதத்தில் உள்ள நல்ல விடயங்களை முன்னிறுத்தியும், யேசுவின் போதனைகளை அடையாளமாகக் கொண்டும் அநீதிகளுக்கு எதிராக போராட முடியும் என்ற கருத்தாகும்.

விடுதலை இறையியல் ஆரம்பித்த இடம் லத்தீன் அமெரிக்காவாகும். இது மெடலின் (Medellin) என்ற நகரத்தில் 18 குரவர்களால், போதகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு திசை வழிப் போக்காகும். இவர்கள் கத்தோலிக்கர், தமது கடவுள் நம்பிக்கை, விவிலியத்தின் மீதான நம்பிக்கை என்பவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. விடுதலை இறையியல் பாதையை முன்னெடுத்தவர்களில் குருவான சப்றினோ, ரொனி ரெறி, லியனார்டோ பொவ் (Sabrino, Tony Terry, Prof. Leonardo Boff) ஆகியோர் வறிய மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகிய காரணத்தினால் வறுமையில் வாடிய மக்களின் பொருளாதார மேம்பாடு முக்கியம் எனக் கருதினர். மக்கள் போராடுகின்ற போது பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தலுக்கு ஆளாகிய போது அவர்களுக்காக குரல் கொடுத்தனர்.

விவிலியத்தில் அரசனுக்கு பனிந்து நடப்பது அவசியம் எனக் கூறுகின்றது. அரசன் இறைவனின் பிரிதிநிதி எனப் போதிக்கின்றது. இந்தப் பகுதியினர் குறவர்கள் அரசியல் கோரிக்கைகளில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு பகுதியினர் யேசுநாதர் ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடினர் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபடுவது, கிறிஸ்துவும் புரட்சி செய்தார் என்ற கருத்தைக் கொண்டும் இருக்கின்றனர். இவர்கள் இருபகுதியினரும் விவிலியத்தை தத்தமது தேவைகளுக்காக கருத்துக்களை பிரதியிடுகின்றனர். இரண்டு பகுதியினரிடையேயும் ஒருமித்த கருத்து பெறமுடியாத போதிலும் மதபீடம் மக்கள் வறுமையிலும், அதிகார வர்க்கத்தின் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்ற போது ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர். அரசியல் போராட்டத்தின் அவசியம் குறித்தும் பிரசங்கம் செய்கின்றனர். கோவில் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு மக்களை போராட அணிதிரட்டினர். இதனால் மதகுருமாரும் கொலை மிரட்டலுக்கும், கொலையும் செய்யப்பட்டனர். இவ்வாறாக கொலை செய்யப்பட்டவர்களில் ஆயர் சல்வடேர் ரொமேரோவும் (Salvador Romereo) ஒருவராவார். இவர் திருப்பலிப் பூசை நடத்திக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ்வாறான போக்கின் பிரதிபலிப்பாக 1983களில் இலங்கையில் தமிழர் போராட்டங்களிலும் எதிரொலிக்கப்பட்டது. சில குருமார் மக்கள் அரசியல் ரீதியாக அணிதிரட்டப்படாத காலத்தில், அரசியல், ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை ஒரு பொதுக் கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்ய முடியாத காலத்தில் பிரசங்கங்களில் மேடையாக பயன்படுத்திக் கொண்டனர். அன்றைய காலத்தில் லத்தீன் அமெரிக்க குருமார்களைப் போல் இலங்கைத் தமிழ் மதகுருமாரிடையே ஒரு கோட்பாட்டு நிலை கொண்டிருந்தனர் எனக் கூற முடியாதுள்ளது. ஆனாலும் இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர். அத்துடன் இலங்கை கத்தோலிக்க தலைமை இரண்டு பிரிவுகளாக பிரிந்திருந்தது. ஓவ்வொரு தலைமையும் தம் தேசியஇனத்துவ வரையறைகளில் இருந்து செயற்பட்டனர். இவர்களில் ஓர், இரு ஆயர்கள் மற்றும் சில குருமார் தவிர்ந்த சிங்கள தேசிய இனத்தவர்கள் சேர்ந்தவர்கள் பேரினவாத அரசிற்கு பக்க துணையாக இருந்து கொண்டனர். தமிழ் ஆயர்கள் தேவையான போது அறிக்கைகள் விட்டனர், ஒரு சில தமிழ் குருமார் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலும் குருமாரின் ஆதரவு ஆயுதப் போராட்டத்திற்கு இருந்தது எனக் கொள்ள முடியாது. தற்செயலான ஒரு ஆதரவு நிலைப்பாட்டிற்கும், மனிதாபிமான செயற்பாட்டிற்கும் அப்பால் செல்ல முடிந்திருக்க நியாயமில்லை.
திஸ்ச பாலசூரியா என்ற கத்தோலிக்கத்தைச் சேர்ந்த மதகுருவானவர். இவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் பொருட்டு புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இவரின் சில கருத்துக்கள் கத்தோலிக்க தலைமையான வர்த்திக்கானை திருப்திப்படுத்தவில்லை. இவரின் சில கருத்துக்களாவன.
பாவம் பரம்பரையானது இல்லை.
பிறக்கும் பிள்ளைகள் சாத்தானின் பிள்ளையில்லை.
இத்துடன் மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றார்.
இவற்றிற்கு மாறாக கத்தோலிக்க சபையின் கருத்தானது எல்லோரது பாவங்களுக்காகவே யேசு மரித்தார் எனக் கூறுகின்றது. கடவுளைப் பெறுவதன் மூலமே பாவத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள், நரகத்திற்கு செல்வதில் இருந்து தப்பிக்க முடியும் எனக் கருதுகின்றது.
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை திருமுழுக்கு பெறாதவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்து விடுதலை பெறமுடியாது. இவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகத் தான் இருக்க முடியும் எனக் கருதுகின்றது.
மரியாள், மற்றும் புனிதர்கள் கடவுள் அல்ல, ஆனால் இவர்களுடாக கடவுளிடம் மன்றாட முடியும்.
பாலசூரியா தனது கருத்தை மாற்றி, கத்தோலிக்க தலைமையின் ஏகோபித்த முடிவின் படி செயற்படும் வரை அவரை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். பாலசூரியாவின் நிலைப்பாடு தொடர்பாக விசாரிப்பதற்கான ஒரு விசாரணை குழு அமைக்கப்படும் வரை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்ட குருவாக இருந்தார். விசாரணை நடந்த பின்னர் பொறுப்புக்களில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சம்பியா நாட்டைச் சேர்ந்த (bishop Milingo Emanual -Rome) ஆயர் இம்மானுவல் திருப்பலி நடத்துவதுடன் நின்று விடாமல் பேய் ஒட்டுவது, மற்றும் நோயாளிகளை குணப்படுத்துவது போன்றவற்றை செயற்படுவதனால் வர்த்திக்கானிலேயே வாழ வேண்டிய நிற்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார். வர்த்திக்கான் (ரோம்- Vatican) அதிகார பீடத்தின் ஒப்புறுத்தல் இல்லாமல் எந்தச் செயற்பாட்டையும் நடைமுறைப்படுத்த கிறிஸ்தவ மதப்பீடம் எந்த மட்டத்திலும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு கிறிஸ்தவ மதப்பீடம் தன்னிடத்தில் புகுந்து கொள்ளும் முரண்பட்ட சக்திகளை ஈவிரக்க இன்றி இல்லாது ஒழிக்கின்றது. தமிழகத்தில் தேசிய விடுதலை இறையியலை வடிகால் அமைக்க முடியுமா?
தென் அமெரிக்காவின் விடுதலை இறையியலை உள்நாட்டுத் தலைமைப்பீடம் ஓரளவிற்கு ஏற்றுக் கொண்டனர். திட்டமிட்ட போராட்டத்தின் மூலம் ரோம் தலைமை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ரோம் தலைமையில் அமைந்த நிறுவனப்பட்ட நிலைப்பாட்டிற்கும் உள்நாட்டின் (Inculturalation) எச்சசொச்சங்கள் அமைந்து கொண்ட ஆச்சிரம வடிவத்தை கத்தோலிக்க தலைமை ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி  எழுகின்றது. கிறிஸ்தவம் மற்றைய கோட்பாடுகளுடன் சரணாகதி அடைவதில்லை.


22 கிறிஸ்து கம்யூனிஸ்டா - மார்க்ஸ் கண்டுபிடிப்பும் ஒன்றா?
மார்க்ஸ் தனது தத்துவத்தை படைத்த போது ஹகலில் தத்துவத்தில் இருந்து அதனை புரட்டியே தாம் இயங்கியல் (ஆன்மாவை மறுப்பது) இ வரலாற்று பொருளாதாரத்தினை வந்தடைந்ததாக கூறுகின்றார்கள். ”இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளடக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் மார்க்சினால் கொடுக்கப்பட்டது.
இந்த பொருளாதார அமைப்பு (உற்பத்தி உறவு (தொழிலாளர்) உற்பத்திசாதனம்  (உடமையாளர்கள்) மேல் கட்டப்பட்ட அனைத்து நிறுவனங்களாகும். மேற்கட்டுமானத்தில்   அமைந்த நிறுவனங்களாக  குடும்பம், மதம், இராணுவம், அரசாங்கம் என்பனவாகும்.  உழைக்காது சுரண்டும் வர்க்கம் எந்த மதமானாலும் எதிர்த்துப் போராடுவதே ஒரே வழி. மதபீடத்தில் இருப்பவர்கள் உடல் உழைப்பில் இருந்த மனித மூளையில் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டபின்னர் சமயக் குரவர்கள் உடல் உழைப்பில் ஈடுபடாமலே ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டது. இவ்வாறாக ஒரு பொருளாதார அமைப்பை தாங்கி நிற்பவர்களிடம், சிந்தனையிடம் சரணடைவது மக்களின் விடுதலையை முழுமையாக வென்றெடுக்க பயன்படாது.

மார்க்சின் போதனையானது உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், தொடர்ந்தும் போராட்டங்களின் மூலம் பெற்ற வெற்றியை தங்க வைத்துக் கொள்வதாகும். இவ்வாறான போதனையை கிறிஸ்தவத்திடம் கண்டு கொள்ள முடியாது.  கிறிஸ்தவம் உரைப்பது விண்ணுல விடுதலை என்பது பற்றியதே என்பதை முன்னர் பார்த்தோம். கிறிஸ்தவத்திற்கும், மார்க்சின் கொள்கைக்கும் நிறைவே மாறுபாடுகள் உண்டு. இரண்டும் வெவ்வேறு துருவங்களாகும்.
புதிய வகை உலகக் கண்ணோட்டத்தினை கொண்டு குழுக்கள் (religious sect -) அதிகமாக கூட்டுவாழ்க்கையைக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றார். பௌத்த மதத்தவர்கள் கூட மற்றவர்களிடம் இரந்துண்டு,  கூட்டாக வாழ்ந்துள்ளார்கள். இன்றும் மதக்குழுக்குள் வெவ்வேறு கோட்பாடுகளை முன்னிறுத்தி சமூகத்தில் இருக்கின்றது. அவைகளும் கூட்டுவாழ்க்கை வாழ்கின்றார்கள்.

கத்தோலிக்க குருக்கள் மடங்களும் இவ்வாறான கூட்டுவாழ்க்கை, சுய உற்பத்தி என்று மேற்கொள்கின்றார்கள்.  குருக்கள் மடத்தை எடுத்துக் கொண்டால் சுய உற்பத்தி, பன்றி வளர்ப்பது என்று செய்து கொண்டிருக்கின்றார்கள். கூட்டுவாழ்க்கை சுய உற்பத்தி என்று செய்து தான் உள்ளார்கள். இங்கு கூட்டுவாழ்க்கை அல்லது யேசு போதித்ததாக கூறப்படும் சிந்தனை வடிவத்திற்கும் கம்யூச சமூதாயத்திற்கும் தொடர் இல்லை. இதிலும் ஒரு படிமேலே போய் மதம் ஒரு அபினி என்று பிரகடனப்படுத்தினார்கள். காரணம் சமூகத்தின் விழிப்பு கொள்ள வைக்காது உறக்கத்தில் வைத்திருப்பதனால் ஆகும்.

கிறிஸ்துவை நம்பிக் கொண்ட புதிய வகை உலகக் கண்ணோட்டத்தைக் கொண்ட குழு என்பது தலைமறைவாகத் தான் இருந்து வந்துள்ளது. இந்த புதிய உலகக் கண்ணோட்டத்தினை நம்பிய குழு என்பது சமூகத்தின் மேட்டுக்குடி சார்ந்தவர்களாகவும், தலைமறைவு வாழ்விற்கும் உட்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ளல் நன்று. இங்கு துறவறத்தினை நிலவுடமைக்காலத்திற்கு உட்பட்ட நிலையில் விவிலியத்தில் உள்ளதை மார்க்சின் தத்துவத்துடன் ஒப்பிட்டு பேசுவது மதவாதிகளுக்கு வேண்டுமென்றால் ஆர்வத்திற்குள்ளான பொருளாக இருக்கும். ஆனால் வக்கப் புரட்சிக்கு அல்ல.
பௌத்தத்தில் இரந்துண்டுவாழ்வது என்ற வகையில் பொதுமக்களிடம் இரந்து உண்கின்றார்கள். பௌத்த துறவிகள் பொருள் (இப்போ ஈடுபடுகின்றார்கள்) உற்பத்தியில் நேரடியாக ஈடாமல் மற்றவர்களின் உழைப்பில் தான் உண்கின்றார்கள். இவ்வாறே இன்றும் பாவம் புண்ணியம் என்று மக்கள் தமது  கொடைகளை வழங்குகின்ற போது இவைகளை வைத்தே வாழ்வை செழிப்பாக வாழும் மதங்களைச் சேர்ந்தவர்களே உள்ளார்கள்.  இவ்வாறு ஏழைகளுக்கு இரங்குவது, கோவில்களுக்கு தானம் வளங்குவது என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. இங்கு உழைப்பை வழங்காது உண்ணும் போக்கு அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகும். உண்ண உணவு உற்பத்தி செய்வதற்கு வேறொருவர்களின் (மதவாதிகள் மற்றவர்களின் உழைப்பினால் பெறப்படும் பயன்பாட்டு பெறுமானத்தை அனுபவிக்கின்றனர்) உழைப்பு என்பது அவசியமாக இருப்பதும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும்.
துறவறம் என்பது கூட நிலப்பிரபுத்துவத்திற்கு பின்னரான ஆன்மாவைப் பற்றிய வழிமுறைத் தேடலாகும்.  334வரையில்  அரசமாதமாக மாறும் வரையில் தலைமறைவு சமயமாகவே இருந்தள்ளது.   4ம் நூற்றாண்டில் கொண்ரன்ரையின் தாயாரின் வேண்டு கோளின் பின்னாரக அரசமதமாக மாற்றப்பட்டு இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து வத்திக்கானை தலைமையாக கொண்டு இன்றும் இயங்குகின்றது.
இறைவருகையின் காலம் என்பது வெகுவிரைவில் வரும் என்று போதிக்கப்பட்டு வந்த காலமாகும். மெலேனியினிசம், மெசியாவந்துவிட்டார் (யேசுநாதர்) வந்து விட்டார், இதன் பிறகு உலகின் முடிவிற்காலம்.  இன்றும் கூட திருப்பலில் உலகின் முடிவிற்காலம் என்று செபிக்கப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே சொத்துக்களை விற்று விட்டு பொதுவான கம்யூன் வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது காலப்பொருத்தத்திற்குரிய வரையறையாக இருக்க முடியாது. ஆன்மாவை முன்றுத்துவதும் ஆன்மாவை மறுப்பதும் ஒன்றல்ல. கத்தோலிக்கம் என்பது கொலனித்துவ ஆட்சியின் போது மக்களை கொண்று குவித்து இராச்சியங்களையும், வளங்களையும் சுரண்டியும், இனக்குழுமங்களின், தேசிய இனங்களின் அடையாளத்தினை (மொழி, கலாச்சாரம், பண்பாடு, சுயபொருளாதாரம்) அழித்தது மாத்திரம் இல்லை. இன்றைய பொருளாதார அமைப்பைப் பாதுகாப்பதும், சதிகளை ஏகாதிபத்தியங்களின் கைத்தடியாக செயற்படுவதும் சமய நிறுவனமாக இருக்கின்றது.
விவியத்தில் உள்ளவற்றை வைத்துக் கொண்டு கலாநிதி ஆய்விற்காக ஐயன் வள்ளுவனனின் குறலை ஒப்பிட்டு விவிலியத்தில் இருந்தான் பெற்றார் என்று எழுதியுள்ளார். இவ்வாறான ஆய்வுமுறை கலாசாலைக்கு வேண்டுமென்றால் பொருத்தமாக இருக்கும் ஆனால் சமூகத்தளத்தில் அவ்வாறு இல்லை. அது எதிர்மறையான விளைவுகளைத் தான் கொடுக்கின்றது.  சாதி, மத. இன உணர்வுகளுக்கு உட்பட்டிருக்கின்ற வேளையிலில் தத்தம் இன, மத, சாதி உணர்விற்கே பயன்படுகின்றது.

ஒரு கால கட்டத்தை இவ்வாறு வியாக்கியானம் செய்ய முடியுமா? ஆம் ஒரு கலாசாலையில் ஒரு கோட்பாட்டை முன்னிறுத்தி thesis- ஆய்வறிக்கை கொடுக்க முடியும். அதனை இட்டு பட்டங்கள் பெறுவது இயல்பாக நடப்பது உண்டு.  இவ்வாறு பல்கலைக்கழத்தில் thesis- ஆய்வறிக்கை முன்வைக்கப்படுவதும் அதனை பொதுவெளியில் விட்டு அதுதான் சமூகப் பொது உண்மையாக நிலைநிறுத்தப்படுகின்றது. இது மானிடவியல் - மொழியியல்- வரலாறு என்று இந்த நிலை இருக்கின்றது.
மார்க்சியத்தினை பாதுகாத்துக் கொள்ளவோ விலிலியத்தின், குரானின் உதவி தேவையில்லை. (100 வருடத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனை வளர்ச்சியும் இன்று உள்ள வளர்ச்சியம் ஒன்றல்ல) மார்க்சியம் தன்னை தானே நிலைநிறுத்தக் கூடிய தத்துவம் மூலவர்கள் என்ன கூறுகின்றார்கள். 
மார்க்சியத்தினை பாதுகாக்க மார்க்சியம் வழிகாட்டும் கோட்பாடுகள் என்ன காலாவதியாகி விட்டதா? மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் விளக்க போதுமானது இல்லையா? மார்க்ஸ் இற்கு முன்னைய கற்பனாவாத சோசலித்திற்கும் விஞ்ஞான சோசலிசம் என்பது கருத்துமுதல்வாதத்தினை எதிர்த்து மாத்திரம் அல்ல.
மார்க்சியம் அறிவார்ந்த சமூகத்தைப் படைப்பது மாத்திரம் அல்ல அது உயர்ந்த ஜனநாயகத்தை பெரும்பான்மையான மக்களுக்கு வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு புதிய சமூகத்தை படைப்பதாகும். எந்த மதங்களும் பழைய உற்பத்தி உறவையும் அதுசார்ந்த சமூக உறவையும் பாதுகாத்துக் கொள்வதில் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்த மதங்கள் முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக உறவை விட்டுக் கொடுப்பதற்கு தயாரா இல்லை என்பதை அன்றாடல் பூசை நெறிகளில் கண்டு கொள்ள முடியும்.
 மார்க்சியத்திற்கு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் சிபாரிசுகளோ அல்லது கிறிஸ்தவம் எந்தக் காலத்தில் விளம்பர (brand ambassador) பிரதிநிதியாக மார்க்சியத்திற்கு இருக்க முடியாது. வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும் ஒன்றல்ல. நிலமானிய சமூக அமைப்பில் ஒரு மதக்குழுவின் உலகக் கண்ணோட்டத்தையும் பொருள் உற்பத்தி முறையையும் ஒன்றிணைப்பது வரலாற்றுத் திரிபாகும்.

23 சாதியமும் சமயமும்
சாதியம் சைவ, வைணவம், இஸ்லாம், சீக்கிய மதங்களில் இருப்பதைப் போன்றே கிறிஸ்தவ மதத்திலும் சாதியம் தொடர்கின்றது. கொலனித்துவ காலத்திலும் அதன் பின்னரும் வந்த குரவர்கள் ஒரு வர்க்க சமுதாயத்தின் பொருளாதார சிந்தாந்தத்தின் விதைக்கின்றனர். கொலனித்துவ கால நடவடிக்கைகள் முதலாளித்துவ புரட்சிக்கும், முதலாளித்துவ ஜனநாயகத்தை வளங்குவதற்கு துணையாக இருந்ததையும், முதலாளித்துவம் வகித்த பல முற்போக்குப் பாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படினும், தற்காலத்தில் முதலாளித்துவம் பிற்போக்கின் உறைவிடமாக எமது சமுதாயத்தில் தோற்றம் பெற்றிருக்கின்ற நிலையில் இருந்து மாற்றங்களை பார்க்கப்படுகின்றது. (தற்காலத்தில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து உலகின் பாகங்கள் அனைத்தையும் தன்வலையில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.) மதம் மாற்றத்தின் ஊடாக நிலப்பிரபுத்துவம் (பார்ப்பனியம் -சைவவேளாளம்) வழங்க மறுத்த ஜனநாயக உரிமையை கிறிஸ்தவ மதத்தின் மூலமாக பெற்றுக் கொண்டனர். ஆனாலும் மதமாற்றம் சமுதாயத்தை புரட்சிகர மாற்றத்திற்கு உட்படுத்த முடிவதில்லை. உள்ளூர் சாதி வெறியர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கும், நிர்ப்பந்தத்தால் மதம் மாற்றப்பட்ட மக்கள் தொடர்ந்தும் சாதிய கொடுமைக்குள் அகப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
தமிழ் சமூகத்தில் வர்ணாசிரமக் கோட்பாட்டில் அமைந்து கொண்ட சாதியச் சிந்தனை என்பது சமூகத்தின் அனைத்து அடித்தளங்களிலும் ஆழப்பதிந்துள்ளது. சாதியமும் சமூக நிறுவனமாக உருவாக்கம் பெற்று, அணிதிரட்டும் ஊடகமாகவும், அணிதிரட்டும் ஒழுங்கு முறையாகவும் ஆகிவிட்டது. இலங்கை, இந்திய சமூகம் சாதியத்தினுள் சமூக மயப்படுத்தப்பட்டு இருப்பதனால், மக்கள் சமய மாற்றம் செய்யப்பட்டாலும் சாதியம் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது. மனிதர் இறைவனை அடைவதற்கு சாதிய தாழ்வுபாடு அவசியம் இல்லை என இமானுஜர் சமரசக் (வழமைகளை மாற்ற குறிப்பிட்ட ஒரு கோவிலில் மாத்திரம் தான் சாத்தியமாயிற்று) கருத்து தெரிவித்திருந்தார். இவரின் கருத்துக் கூட சமூகத்தில் இருந்து செல்லாக் காசாகிவிட்டிருந்தது. ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாக ஆழமாக ஊன்றிய காரணத்தினால் எந்தச் சிந்தனையும் தற்காலம் வரை சாதியத்தை வேறு எந்தச் சிந்தனையும் வெற்றி கொள்ள முடியவில்லை. கிறிஸ்தவத்தில் சாதியம் தொடர்ந்து நிலைப்பதற்கு வர்க்கச் சிந்தனையே காரணமாகின்றது. கிறிஸ்தவத்திற்கும் வர்ணாசிரமக் கோட்பாட்டிற்கும் முரண்பாடு இருப்பினும், வர்ணாசிரமக் கோட்பாட்டின் மீது கணக்குத் தீர்த்துக் கொள்ளாமல், தொடர்ந்தும் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகளே சாதியத்தை பாதுகாப்பவர்களாக மாறிவிடுகின்றனர்.  
பாவிகளை இரட்சிப்பதே கிறிஸ்தவத்தின் உயிர்கோட்பாடு என பறைசாற்றிக் கொள்ளும் கிறிஸ்தவம் கூட சாதியத்தை ஒழிப்பை தவிர்க்கின்றது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் பல்வேறு காரணங்களால் மதமாற்றம் செய்யப்பட்டவர்களே. கொலனித்துவ காலத்தில் மதம் மாறினாலும் எந்தச் சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்டார்களோ. அதே சமூகத்தின் சிந்தனையையே தொடர்ச்சியாக மறுவுற்பத்தி செய்து வருவதினால் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரும் சாதியக் கோட்பாட்டை கைவிடவில்லை.
கிறிஸ்தவத்தின் ஊழியர்கள் சாதிப் பாகுபாட்டை வெளிப்படையாக காட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். சாதியப் பாகுபாட்டினை அன்றாட வாழ்க்கையில் பல மட்டங்களில் ஊழியர்களால் பாகுபடுத்துவது சமூக நியதியாகிவிட்டது. சாதியம் எவ்வகையாக எமது சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது என்பதை புறநிலை கொண்டு பார்க்கப்படுகின்றது. எமக்கு சாதியத்தின் தாக்கம் ஏற்பட்டிருப்பினும் ஆய்வினை மேற்கொள்ளும் போது நிதானமாக, புறநிலை கொண்டு எழுதுவது ஆரோக்கியமாக இருக்கும்.  முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக உறவுகள் என்பது சிதைத்து கொண்டு வருவதைக் கவனத்தில் கொள்கின்ற போது பொருளாதார அடித்தளம் சிதைந்து கொண்டுள்ளதை இலங்கையில் தமிழர் பகுதிகளில் அவதானிக்க முடியும்.
தமிழக் சூழல் என்பது இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் மாறுபட்டுள்ளது. தமிழகத்தின் நிலை கொண்டு அணுகிக் கொள்ள முடியாது. 1966 பின்னரான போராட்டங்கள், தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்டம் என்பது சாதியக் கட்டமைப்பை பாதுகாக்கும் பொருளாதார அமைப்பு  அதிகளவாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
தீண்டாமை, சாதிய முரண்பாடுகள் தன்னார்வக் குழுக்களின் உதவித் திட்டத்திலும் தீண்டாமை. சாதியத்தின் வெளிப்பாடு இன்றையக் காலத்தில் மாற்றமடைந்திருக்கின்றதெனினும் சாதியம் முற்றாக அழியப்படவில்லை. சாதியம் சிந்தனையளவில்  தொடர்வது என்பது சாத்தியமானதே.  மனிதர்களிடையே இருக்கின்ற சிந்தனையை வைத்துக் கொண்டு அரசியல் பொருளாதாரத்தினை தீர்மானிக்க முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரை சாதியம் குறிப்பிட்டளவு நெகிழ்ச்சித்  தன்மை கொண்டதாக இருந்துள்ளது. சாதிக்கொரு கோவில் என்பதுதான் இலங்கைத் தமிழ் சூழலில் காணப்படுகின்றன. சாதியம் பொதுநிலையினரிடம் மட்டும் அல்ல, குருக்கள், கன்னியர்கள், துறவிகள் என்று அனைத்து மட்டத்திலும் இருக்கிறது. சாதிப்பாகுபாடு என்ற அடித்தளத்தில் நிற்கும் குருக்களும், கன்னியர்களும், துறவிகளும் எப்படித்தான் இறையரசைப் பற்றிப் போதிப்பார்களோ என ஆதங்கக் குரல் எழுகின்றது.
இவ்வாறான தீண்டாமைக் கொடுமைகள் 1960களின் பகுதியில் இலங்கையின் பகுதிகளின் இருந்திருக்கின்றன. இக்கொடுமையை எதிர்த்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோ) தலைமையின் கீழ் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. போராட்டம் என்பது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் வர்க்கப் போராட்டப் பாதையில் வழிநடத்தப்பட்டன. கட்சியின் வழிநடத்தலின் கீழ் முற்போக்கு புரட்சிகர சக்திகள் சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்தனர்.
இந்தப் போராட்டத்தின் விழைவானது பலகூறுகளாக பிளவுண்டு கிடந்த தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என்ற பொது நிலைக்கு உயர்ந்தியது என்றால் மிகையாகாது. இந்தப் போராட்டத்தின் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முதலாளித்துவ உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. ஆனாலும் சாதியம் தனிக் கோவில்கள் என்ற வடிவில் தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றது. சாதியத்திற்கான உற்பத்தித் தளத்தை அழிக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு கிறிஸ்தவத்தில் இருக்கும் சாதியக் கொடுமை பொறுக்க முடியாமல் ஆங்காங்கே தனி தலித் கிறிஸ்தவ விடுதலை அமைப்புக்கள் ஏற்படுத்தி போராட்டங்களை மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. கிறிஸ்தவத்தால் ஒடுக்கப்படும் மக்களுக்கு, விடுதலை அமைப்பு ஏற்படுத்தியே, விடுதலை பெற வேண்டிப் போராட வேண்டிய நிலை காணமுடிகின்றது. தன்னகத்தே விடுலையைப் போதிக்கும் கிறிஸ்தவம் ஏன் இந்த மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்கான பதிலை கிறிஸ்தவ சிந்தனை பதில் அளிக்காது. இதனை அறிந்து கொள்வதற்கு அரசியல், பொருளாதார, சமூக அமைப்பை ஆராய்வதன் மூலமே விடையைப் பெறமுடியும். இந்நிலையில் விடுதலை இறையியல் கோட்பாடு எவ்வாறு தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கப் போகின்றது.
சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அடிப்படையில் இயங்கும் சிங்கள கிறிஸ்தவ சபையும் அதன் மற்றைய மக்களை சிங்கள மயமாக்கல் என்பது சுதந்திரமான அந்த மதத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியாது.  மேற்கத்தைய கிறிஸ்தவத்தில் சாதியம் இல்லை ஆனால் இலங்கை, இந்தியாவில் கிருஸ்தவத்தில் சாதியம் இருப்பதற்கு காரணம் அதன் சமூகக் கட்டமைப்பு ஆகும். இவ்வாறு தான் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் மீது கட்டப்பட்ட கிருத்தவ ஊழியம் என்பது இலங்கையில் இயங்குகின்றது. இந்தச் சமூகப் போக்கை, சமூகக் கட்டமைப்பை தவிர்த்துக் கொண்டு சமூகத்தினை பற்றி முடிவிற்கு வரமுடியாது.
சாதிய ஒடுக்குடுறையில் இருந்து மீளவதற்கு மதம்மாறுவது தான் ஒரு வழியென அறிஞர் அம்பேத்கார் முன்வைத்தார்.   இதன் படி அறிஞர் அம்பேத்கார் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தமதத்திற்கு மாறியுள்ளனர். இன்றும் அதேநிலைப்பாட்டில் இயங்கும் அமைப்புக்களும் உண்டு. இதேபோல கன்பொலக் கிராமத்தவர்கள் பெளத்தர்களாக மாறிய வரலாறும் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் உண்டு.  இங்கு மதத்தில் இருந்து மாறுவதால் சாதியம்  அற்றுவிடுமா? அந்தச் சமூகத்தின் இருப்பும் பொருளாதார உறவும் மாற்றம் கொண்டுவிடுமான என்றால் அது முற்றுமுழுதாக சாத்தியம் இல்லை. சமூகப் பொருளாதார அமைப்பு மாற்றுவதுதான் ஒரு வழி என்பதை மறுத்துக் கொண்டு இவ்வாறு முன்வைப்பது சீர்திருத்தமாக தோன்றினாலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியாது. இதேபோல பெளத்தத்தில் சாதியம்,  பெளத்த சிங்கள பேரினவாதக் கட்டமைப்பு என்பது இறுகக் கட்டமைக்கப்பட்ட நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மதங்கள் போதிக்கும் கருத்துமுதல்வாதத்தினை மறுத்துவிட்டுப் போய்விட முடியாது.


24 பாவம் - புண்ணியம்
கிறிஸ்தவ மதத்தவர்களிடையே பாவம் என்ற சொல் பல வடிவங்களில் நாளாந்த வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகின்றது. பாவம் என்ற குறியீட்டுச் சொல்லானது மிகவும் தெய்வீக வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. பாவம் என்ற சொல்லை பல அர்த்தங்களை கொடுக்கின்றது. இவற்றில் சில
பாவம் செய்தவர்கள், கெட்டவார்த்தை பேசுதல், பெரியோரை மதிக்காமை போன்றவை
அத்துமீறி நடத்தல் (உதாரணம் 10 கட்டளையை மீறுவது)
கடவுளை நம்பாமை
பரலோக இராட்சியத்திற்காக உழைக்காமை (இலட்சியத்தில் குறிதவறல்)
கொடுமை செய்தல், அக்கிரமம் விழைவித்தில்
தமக்கு கீழ் (நாளாந்த வாழ்க்கையில்) நிலையில் இருப்பவர்கள் (ஏழை, எளியவர்கள்). இரக்கம் கொண்டு உரையாடும் போது (உதாரணமாக பாவம் அப்படி அவர்களுக்கு நடந்து விட்டதே) பாவிக்கப்படும் வார்த்தைகள்.

தவிர்த்தல் (taboo) சமூக நலன் கருதி எதிர்காலத்தில் மீளவும் அதேமாதிரியான தீங்கு நடக்காதிருக்க பார்த்துக் கொள்வதாகும். இருளர் இனக்குழுமத்தினர் பகைவர்களிடம் இருந்து தம்மை காப்பாற்றியது கறுப்பு நிற ஆடு. இருளர்கள் கறுப்பு நிற ஆட்டினை சாப்பிடுதை தவிர்க்கின்றனர்.
பாவம் என்ற சொற்பிரயோகம் இன்னும் பல்வேறு வடிவங்களில், சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்ற போதிலும், குறிப்பாக மேற்குறிப்பிட்ட தெய்வீக வடிவம் கொடுக்கப்பட்ட குறியீட்டுச் சொல்லாகவும் மற்றையது பேச்சில் உபயோகிக்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம் காண்பது சிரமமானது தான். இங்கு பாவம் (தவிர்த்தல்) என்ற சொல்லிற்கு கொடுக்கும் தெய்வீகத் தன்மையே எமது சமூகத்தின் ஆழுமையில் உள்ளது. போலியுணர்விற்கு ஆட்பட்ட சமூகத்தின் மொழியாடல்கள் பிற்போக்குச் சிந்தனையை தொடர்ந்தும் மறுவுற்பத்தி செய்வதாக இருக்கும். ஒரு செயற்பாட்டின் எதிர்விழைவு குறிந்த நபருக்கு அல்லது சமூகத்தின் பாவத்தின் விழைவாக கருதப்படுகின்றுது.
ஒரு சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அடையாளப்படுத்துவதற்கு பாவிக்கப்படும் குறியீட்டுச் சொல்லானது, சமூக அமைப்பின் அரசியல் பொருளாதார அமைப்பின் காரணமாக ஏற்படும் மாற்றங்களை குறித்து நிற்பதில்லை. மனிதரின் ஏற்றத் தாழ்வுகளை பாவம் என்ற சொல்லின் ஊடாக குறித்து நிற்கின்ற போது கடவுளின் செயல் என்ற கற்பனையை வளர்க்க முடிகின்றது. பாவம் என்ற சொல்லானது இந்தச் சமூக அமைப்பின் பொருளாதார அமைப்பின் நலன்பால் அமைந்து கொண்ட அறநெறி அல்லது பொருளாதார விளக்கக் காரணியாக அச்சொல் செயற்படுகின்றது. கேடுவிழைவிப்பது, தாழ்ந்த நிலைக்குச் செல்வது அரசியல் பொருளாதார மாற்றத்தினால் சங்கிலி வட்டமாக தொடரும் செயற்பாட்டை வர்க்கக் கண்ணோட்டங் கொண்டே பார்க்க முடியும். வர்க்கக் கண்ணோட்டம் என்றும் போது ஆண்-பெண் இருபாலாருக்கும் இடையான பூசல், சாதிகளுக்குள்ளேயான பூசல், வெவ்வேறு சாதிகளுக்கு இடையேயான பூசல், இனங்களுக்கு இடையேயான பூசல் இவைகள் வர்க்க ஆய்விற்கு உட்பட்டதாகத் தான் இருக்க முடியும். உதாரணமாக ஒரு தாய்பெற்ற பிள்ளைகளுக்கிடையேயும் வர்க்க பேதம் உள்ள நிலையில் எல்லா நிலைகளிலும் வர்க்கத்தின் பாதிப்புக்கள் இருக்க முடியும்.
மனிதர்கள் சிறுவயதில் இருந்து விண்ணுலக வாழ்வுக்காக தம்மை தயார்படுத்தும் படி வலியுறுத்தப்படுகின்றது. மரணநேரத்திலும் சாவான பாவத்தில் இருந்து காப்பாற்றும் படி வேண்டுகின்ற போது சொர்க்கம் (பரலோகத்தில்) ஒரு இடத்தையும் கேட்கின்றார்கள். மனிதர்கள் சிறுபராயத்தில் இருந்தே மரணத்தையும் அதன் பின்னான வாழ்க்கையையும் சிந்திக்கின்ற மனிதர். இன்றைய உலகில் ஆன முரண்பாடுகளையும், அதன் விழைவுகளையும் அறிந்து விடாது கச்சிதமாக சிறுவயதில் இருந்தே தடுக்கப்படுகின்றார்கள். மனிதர்களின் ஆழ்மனத்தில் பசுமரத்தில் ஆணியடித்தது போல ஆழப்பதிந்து விடுகின்றது.

சமயம் போதிக்கின்ற சிந்தனை உணர்வு மனிதர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் கட்டுக் குலையாமல் பாதுகாக்கின்றது. மதம் தன் சிந்தனை ஒழுங்கின் மூலமாக ஒவ்வொன்றிற்கும் காரணம் கற்பிற்கின்றது. கருத்தியல் சிந்தனை உணர்வுகள் மக்கள் மீது மிகுந்த சக்தியை கொண்டிருக்கின்றது. மக்கள் மீது போலிச் சிந்தனை ஆதிக்கம் செலுத்துவதினால் ஆதிக்கச் சக்திகள் இலகுவாக தமது தேவைக்காக மக்களை பயன்படுத்த முடிகின்றது. சிந்தனை உணர்வுகள் ஒவ்வொரு பொருளாதாரத்திற்கும் உரித்தானதாகவே இருக்கும். மனிதர்கள் நம்பிக் கொள்ளும் கட்டுக் கதைகளும், வாய்மொழி உரைகளும், சின்னங்களும் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தையும் பெறுகின்றது. முன்னர் பார்த்தது போல இவைகள் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. சின்னங்களைக் (totem -symbol) கொண்டு மக்களிடத்திலே உணர்ச்சிவசமிக்க பற்றுணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. பற்றுணர்வை ஏற்படுத்தக் கூடிய வல்லமை படைத்த சின்னங்கள், காவியங்கள் எல்லாம் போலியுணர்வில் விழைந்தனவே. பாவம், புண்ணியம் என்ற கருத்திலும், அறியாமையில் ஊன்றியிக்கின்ற சமூகத்தில் இருக்கின்ற தன்மைகளைப் இங்கு கவனிப்போம்.
மதத்தின் மையநிலையில் இருந்து அறிவிலிகளாக பார்க்கின்ற பார்வை ஒரு சமூக அமைப்பின் ஒழுங்கிணைக்கும் முறைமையாகவும் மாறிவிடுகின்றது. முறைமையை ஒரு அமைப்பின் வடிவத்தின் மூலம் நிலைநிறுத்தும் போக்கு ஏற்படுகின்றது. ஒரு அமைப்பாக கிறிஸ்தவ ஆலயமும், மதகுருவும் முக்கிய பாத்திரம் வகிக்க முடியும். தமது சித்தாந்தாந்தத்திற்கு மாறாக குழுக்களை ஒதுக்கும் போது மதம் என்ற கட்டுக் கோப்பைக் கொண்டு செயற்படுவர். கிறிஸ்தவ மதத்தின் எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும் அவர்களிடையே ஒரே மாதிரியான மனேநிலையைப் பார்க்கமுடியும். அதாவது தாம் சிந்திக்கின்றது போல் மற்றைய மனிதர் சிந்திக்காவிடின் அவர்களை (patronism- Petrinism -the body of theological doctrine taught by, or attributed to, the apostle Peter. என்பது தம்மை அறிவார்ந்தவராகவும் மற்றவர்களைஒன்றும் தெரியாதவராகவும் நடத்துவதாகும்.) அறிவிலிகளாக கணிப்பதாகும். ஒவ்வொரு மனிதரும் தாம் வாழுகின்ற பொருளாதார அமைப்பிற்கு ஏற்றவாறான சிந்தனையைக் கொண்டு செயற்படுகின்றனர். மற்றைய மக்களை அறிவிலிகளாக நடத்துவது கொலனித்துவ காலத்தில் கிறிஸ்தவத்தின் சிந்தனையால் ஏற்பட்டதாகும். அவர்கள் கொலனித்துவ தேசங்களுக்கு வந்தபோது முரண்பட்ட உலகக் கண்ணோட்டத்தை கொண்டிருந்தனர். தமது சிந்தனைக்கு ஏற்றவாறான சிந்தனையை வளர்க்க வேண்டியது கட்டாய தேவையாக இருந்தது. இதன் மூலம் அவிசுவாசமானவை என கணிக்கப்பட்டவைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தனர். அதேவேளை மக்களிடத்தில் தமக்கு இசைவான பார்வையை பழக்கத்தில் ஏற்படுத்தினர்.
குருவானர் தனது பங்கு மக்களை தன்னைவிட மற்றைய மக்களை அறிவிலிகளாக நடத்தும் போது மக்கள் தம்மிடையே உள்ள மற்றைய உறுப்பினர்களை வயது, சாதி, அந்தஸ்து (வர்க்கத்திற்கு உள்பட்டு) ஆகியவற்றைக் கொண்டு தரப்படுத்திக் கொள்கின்றது,
குடும்பத்தில் கணவன், மனைவி பிள்ளைகள் வட்டத்தில் ஏற்படுகின்ற உறவு.
தனிமனிதர்களுக்கும் மற்றைய குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான உறவு.
ஒரு குடும்பத்திற்கும் மற்றைய அயல் குடும்பங்களுக்குமிடையேயான உறவு.
மேற்குறிப்பிட்ட அலகில் மாத்திரம் அல்ல, சமூகத் அனைத்துத் தளத்திலும் மற்றவர்களை அறிவிலிகளாக மதத்தின் நிலையில் இருந்து பார்க்கின்ற பார்வை ஒரு சமூகப் போக்காகவே அமைந்திருக்கின்றது. இதனை மதச் சிந்தனையாக மட்டுமென குறுக்கிவிடக் கூடாது.
தனிமனிதர்களை எடுத்துக் கொண்டால் சிலவேளைகளில் மதக் கலப்புச் செய்த குடும்பங்களில், தம்மிடையே ஏற்பட்ட இணக்கப்பாடு காரணமாக அவர் அவர் மதத்தை பின்பற்றும் நிலை இருக்கின்ற போது, மதத்தின் பிரதிநிதிகள் இந்த நிலையை தெரிந்து கொண்டால், அவர்களை ஏன் இன்னும் மதத்தில் மாறவில்லை என கேட்டு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவர். இதற்கு அடிப்படையாக மற்றைய மதங்களின் மீதான சகிப்புத் தன்மையின்மையே காரணமாகும். குறிப்பாக யூதத்தில் இருந்து பின்னர் உருவாகிய கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் மதமாற்றுவதில் உறுதியாக இருப்பதும், சகிப்புத் தன்மை இன்மையும் ஒரு காரணமாகும்.
சக மனிதர்களை முட்டாள்களாக நடத்தும் தன்மையானது, எவரை வேண்டும் என்றாலும் ஆத்திரப்படுத்தி விடும். முட்டாள்களாக நடத்துகின்ற போது அவர்களிடத்திலே பகுத்தறிவிற்கு இடமிருக்கா வண்ணமும். முன்னர் நடைபெற்றதினால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வைக் கொண்டு மற்றவர்களை பயம்கொள்ள வைப்பதன் மூலம் இடத்திற்கு மற்றவர்களை ஒன்றிணைத்துச் செல்லும் போக்கினையும் காணமுடியும். உதாரணம் ஒரு பிள்ளைக்கு திருமுழுக்கு கொடுக்காவிடின் பாவம் - கெடுதல் ஏற்படும் எனக் கூறப்படும். தற்செயலாக பிள்ளைக்கு ஒரு கடும் சுகவீனம் வந்துவிட்டது என வைத்துக் கொள்வோம். அந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு எச்சரிக்கும் நிலை ஏற்படுகின்றது. இங்கு மூடப்பழக்கத்தின் விழைவாக ஏற்படும் எச்சரிக்கை சமிக்கையானது பகுத்தறிவிற்கு முரணாக இருக்கின்றது.
சடங்குகள் மூலமாக இளம் வயதில் இருந்தே சிறுவர்களை கிறிஸ்தவ மதத்தில் தீவிர உறுப்பினர்களாக மாற்றுவது அமைந்து விடுகின்றது. சிறுவர்களாக இருக்கின்ற போதே சமயத்தின் நிறுவன அமைப்பின்கீழ் சமூகமயப்படுத்தப்படுகின்றனர். இச்சிறுவர்களை பாவமுள்ளவர்கள், ஆதாம், ஏவாள் செய்த பாவத்தினை போக்கிக் கொள்ளவே ஞானஸ்ஞானத்தின் மூலம் பாவங்களை கழுவுவதற்காக நடத்தப்படும் சடங்கின் மூலம் சிறுவர்களின் ஜனநாயக பூர்வமான சமவுரிமை என்பது மறுக்கப்படுகின்றது. குழந்தைப் பருவத்தில் உள்ள நிலையில் ஒரு மனிதர் சாத்தானின் பிள்ளையாக நிலைநிறுத்திப் பார்ப்பது, மனித குலம் அனைத்துக்கும் எதிராக தொடுக்கும் மனிதஉரிமை மீறலாகும்.
இன்றைய உலகில் தனிமனித சுதந்திரம் பற்றி ஆதிக்கத்தில் இருக்கின்ற பெரும் நாடுகளும், தொடர்பு சாதனங்களும் உரைக்கின்றன. ஜனநாயகம் என்னும் போது தனிமனித சுதந்திரத்தைப் பற்றியே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஜனநாயகம் என்ற சொற்சிலம்பத்தில் சிறுவர்கள் பற்றிய மனித உரிமைபற்றி இவர்கள் உரைப்பதும் இல்லை. ஞானஸ்ஞானம் என்ற சடங்கின் மூலமாக சிறுபாலர்களின் ஜனநாயகம் மறுக்கப்படுவது பற்றி இச்சக்திகள் கவனம் எடுப்பது இல்லை. இச்சடங்கினை செய்ய உருவான மதநிறுவனமானது மக்களை தூண்டுகின்றது. இந்தச் சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் இச்சமூக அமைப்பை பாதுகாப்பதில் தனிநபர் மட்டத்தில் இருந்து செயற்படுத்தும் ஒழுங்குமுறையாக இச்சடங்கு அமைகின்றது.
கத்தோலிக்க சபை மதம்மாறியவர்களை விலத்தி வைப்பதற்கு கூட்டு முடிவெடுக்கின்றனர். அந்தச் சபையினரை சமூகத்தில் இருக்கின்ற எவரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனமுடிவெடுக்கின்றனர். அந்தச் சபையினரை ஊரின் பொதுக் காரியங்களில் இருந்து ஒதுக்கி விடுகின்றனர்.
கிறிஸ்தவத்தில் இருக்கின்ற சிலபிரிவுகள் நோய்வாய்ப்பட்டால் வைத்தியரிடம் சென்று நோயைக் காட்டத் தேவையில்லை கத்தரிடம் செபிக்கும்படியும் கோருகின்றது. போதிப்பவர்கள் வைத்தியரிடம் சென்று வைத்தியம் செய்வது மறைமுகமாக நடக்கின்ற போதும், போதகர்களின் போதனையை நம்பிக்கை கொண்டு நோயை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுக்காமல் தமது சொந்தங்கள் மடிந்ததும், மடிந்து கொண்டு இருப்பதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இந்த விதிகளுக்கு மக்கள் பனிந்து செல்லவேண்டிய நிலையிலும் மக்கள் இருக்கின்றனர்.
இறந்த மனிதனை உயிர்ப்பிப்பதாகக் கூறி பல மாதங்கள் தனது சகோதரனை வீட்டில் வைத்து செபித்த அண்ணன் உட்பட குடும்பத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை வெறும் சம்பவம் அல்ல ஒரு உளவியல் தாக்குதலின் அழுத்தத்தின் அதி உச்ச எல்லையை அடைவதாகும்.
இன்றைய உலகின் பொருளாதார மாற்றத்தினால் ஏற்படும் சமூக உறவுகளின் சிதைவை மதமானது தனக்கேயுரித்தான முறைகளிலும் விளக்கவும் முற்படுகின்றன. மாற்றங்களை எல்லாம் மதத்தின் விளக்கத்தில் இருந்து விளக்கம் கொடுக்கின்ற போது சிந்தனையில் கடுமைப் போக்கையும் நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர்.
சமயங்கள் ஒவ்வொன்றும் தத்தம் முறைகளை கொண்டு, மனதில் அமைதியை ஏற்படுத்த முனைகின்றது. பாட்டு, யாத்திரைகள், செபம், பிராத்தனை, விரதங்கள், போன்றவற்றின் மூலம் தமது மனதில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பீக்கை கொள்கின்றன. நாம் அன்றாடம் பார்க்கும் பிச்சை (உதிரிப் பாட்டாளிகள்) க்காரர்கள் எவ்வாறு கூனிக்குறுகி பனிந்து பிச்சை எடுக்கின்றனர். இதே போல பயபக்தி, அகங்காரத்தை (எந்த நேரமும்; சாவு நடந்தது போல இருப்பது, விசுவாசம் உள்ளவர்களாக, அகங்கார முடையவர்களாக இல்லாமல் இரங்கிப் பனிந்து கேட்பவர்களாக, இறைவனுக்கு பனிந்து நடப்பவர்களாக இருக்க வேண்டும்.) இழந்து இறைவனுக்கு பயமுள்ளவர்களாக இரங்கி அழும் தன்மையை வலியுறுத்துகின்றது. ஒரு சுற்றுவட்டத்தினுள் சமய வழிபாட்டு முறை அமைந்து கொள்கின்றது. எதற்கு எடுத்தாலும் நீ விசுவாசம் அற்ற காரணத்தால் தான் இது உனக்கு நடைபெறுகின்றது என்ற கருத்தியல் மூலம் மனிதரின் மனவுறுதியை சிதறடிக்கின்றது. இவ்வாறு மனவுறுதியைக் சிதைப்பதன் மூலம் தொடர்ந்து கருத்தியல் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. இவ்வாறு பனிந்து நடப்பவர்கள் தீவிரப் போக்குக்கும் உள்ளாகின்றதுடன், அடிப்படைவாதமும் வளர்கின்றது. இது ஒரு உளவியல் நோய் நிலைக்கி உள்ளாக்கி விடுகின்றனர்.

சமூகத் தன்மைகள் சிலவற்றை மேலே பார்க்கப்பட்டதன் ஊடாக போலியுணர்வின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும். கருத்தியல் (உணர்வு போலியாக) ஆழ்மனதில் பதியப்பட்ட பொதுசன உளவியல் (mass psychology) சமூக அமைப்பின் கூட்டுச் சிந்தனை வெளிப்பாடாகப் பார்க்கப்பட வேண்டும். இது தனிமனிதர்களின் உளவியல் பிரச்சனையில் இருந்து மாறுபட்டதாகும்.  இதன் இருப்பதன் காரணமாக கடவுள் பயம் அதிகமாக இருக்கின்றது. பிரச்சனைகளை விஞ்ஞான ரீதியாக சிந்திக்க தயக்கம் கொள்கின்றனர். (விஞ்ஞானத்தை படிந்து பட்டம் பெற்றும், வேலையும் செய்வர்).

புயல் (சூறாவளி), வெள்ளம், வரட்சி, எரிமலை, நிலநடுக்கம், பூச்சிகளின் தாக்குதல், கொள்ளை நோய் பரவுதல் போன்ற இயற்கையின் அழிவுகள் கால வரலாற்றில் ஏற்பட்டுத் தான் இருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் தத்துவெட்டிகளின் ஆக்கிரமிப்பை சீனாவில் சின்ஜாங் மாநிலத்திலும், ரஸ்யாவில் டகஸ்தானிலும், அமெரிக்காவில் தென்மேற்கு மாநிலங்களிலும் தாங்கியிருந்தது. சீனாவில் இதனை அழிப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்ட வாத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. 1347 இல் எகிப்தில் கொள்ளை நோய் பரவியிருந்தது அதே போல் அய்ரோப்பாவில் 14ம் நூற்றாண்டில் கொள்ளை நோய் பரவியிருந்தது அத்துடன் 1315 களில் பஞ்சமும் ஏற்பட்டிருந்தது. கொள்ளை நோய்யானது எலியினால் பரப்பப்பட முடியும் என அறிந்திராத நிலையில் வேறு சக்திகள் மீது பழியைப் போட்டுக் கொண்டனர். (சிறுமதக்குழுக்களும், இனமதங்களும் பில்லி சூனியம் செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர்.) இயற்கையின் சீற்றங்களை தேசியத்திற்கு பாவிக்கப்பட்டதை இங்கு பார்ப்போம்.
இனவுரிமைப் போரின் கடும் விளைவுகளாக ”நீரை நாற்றமடையச் செய்தது, குடிநீர் இல்லாமல் செய்தது, ஈக்களை எகிப்து எங்கும் தோற்றுவித்தது, விலங்குகளுக்கு மட்டும் கொள்ளை நோயால் மடியச் செய்தது, நெருப்பு ஆலங்கட்டியும் கலந்த மழை”(பக்.13 குணா) இவ்வாறு பல திருவிளையாடல்களை நடத்தி மோயிசன் விடுதலை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அண்டை நாடான எகிப்தின் மீது பல கொடுமைகளை இழைத்ததன் விளைவாகவே இசுராயேலர் தங்களின் தேசிய விடுதலையைப் பெற முடிந்தது எனவும், யூத தேசியம் வெற்றி எனவும் பறைசாற்றப்படுகின்றார். வெட்டுக்கிளி, ஈக்கள், கொள்ளை நோய், நண்டுகள் போன்ற இயற்கையின் தாக்குதல்கள் நடைபெறலாம். ஈரப்பதன் நிறைந்த காலநிலை, மழை என்பவற்றின் காரணமாக வெட்டுக்கிளிகள் உற்பத்தியாகின்றன. எலியினால் கொள்ளை நோய் பரவுகின்றது. இவைகளுக்கு எல்லாம் இன்றைய நவீன காலத்தில் மருந்துகளும், காரணங்களும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறான ஒரு நாட்டில் நடக்கும் தீமைகளை எவ்வாறு கடவுளின் செயல் எனக்  கருத்திக் கொள்ளும் இடத்தில், திருவிளையாடல்களை உண்மை என ஏற்றுக் கொள்ள வேண்டிவரும். அப்போது சைவ-வைணவம் கூறும் பல கட்டுக்கதைகளும் உண்மை எனக் கூற முடியும் தானே? இங்கு தேசியம் வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காட்டிக் கொள்ள பகுத்தறிவைக் கூட மறுக்க வேண்டியிருக்கின்றது.
செயற்பாடுகளை பகுத்தறிந்து பார்க்கும் கலாச்சாரத்தை தமிழகத்தில் மார்க்சீயர்களாலும், தந்தை பெரியார் அவர்களின் பெரும் வீச்சுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வரலாற்றில் மக்களுக்கு அறிவுவொழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. மூடக் கருத்துக்களை வேரறுப்பது தான் அவசியமாகின்றது. பிற்போக்குமுகாமானது பகுத்தறிவை இல்லாது ஒழிப்பதற்கு செய்யப்படும் தீங்கு முயற்சிகளை நவீன இந்துத்துவம், மற்றும் மதச் சக்திகள் செய்து கொண்டு தான் இருக்கின்றது. மூடநம்பிக்கையை விதைப்பதற்கு புதிதாக விடுதலை இறையியல் அவசியமில்லை.

'எங்கள் கைகளில் விவிலியத்தை தத்துவிட்டு,
எங்கள் தாய் மண்ணைப் பறித்துக் கொண்டனரே”

25 விண்ணுலத்தை பார்த்தல்

உலகில் யுத்தங்களும் அழிவுகளும் ஏற்படுகின்ற போது அவர்களுக்கு உதவும் முகமாக தன்னார்வ (NGO) தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசு சாரா நிறுவனங்கள் எனக் கொள்ளப்படுகின்ற போது மேற்கு தேசங்களின் நிதியுதவியின் தயவில் வாழும் உதவிநிறுவனங்கள் உள்ளடங்கும். வெளிப்படையில் அரசுசாரா நிறுவனங்கள் எனக் கொள்கின்ற போதிலும் மேற்குநாடுகளின் உதவி எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
-தொழிற்சங்கங்களின் வாயிலாக பெறப்படும் நிதியும், - அவைசார்ந்த உதவி நிறுவனம்.
-சமய நிறுவனங்களின் திட்டத்தின் கீழ் செயற்படும் உதவி நிறுவனங்கள்.
நேரிடையாகவே அரசுகளின் கீழ் இயங்கும் உதவி நிறுவனங்கள் பெரும் பிரிவுகளாகவும். உள்ளூர் அமைப்புக்களின் ஒத்தாசையுடன் செயற்படும் உதவி அமைப்புக்களும் அடங்கும். உள்ளூர் அமைப்புக்களை எடுத்துக் கொண்டாலும் பல்வேறு வகையாக பிரித்துக் கொள்ள முடியும்.
இதில் குறிப்பாக மதநிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவும் முகமாக நிதியையும் சேர்க்கின்றது. மதத்தின் சிந்தனையைக் கொண்டு இயங்கும் உதவி நிறுவனங்கள் மக்களுக்கு உதவி புரிவதற்கான திட்டங்களை ஏற்படுத்திச் செயற்படுகின்றன.

இவ்வாறான நிறுவனங்கள் பற்றிப் பார்வையை பெற மதத்தினதும், ஏகாதிபத்தியப் பொருளாதார நலன் சார்ந்த நகர்வுகளில் இருந்து செயற்பாடுகளை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பக்கத்தில் அன்புமுகத்தை தன்சொந்த மக்களுக்கு காட்டுவது, பாதிக்கப்படும் மக்களுக்கு  உதவி நிறுவனங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது, சுயமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை சிதைப்பது என்று அதன் வேலை விரிந்து செல்கின்றது. 
மக்களின் ஒரு பகுதிக்கு உதவி புரிவதும் மற்றைய மக்கள் பகுதியினரை தங்கி நிற்கவும் தூண்டுகின்ற சிந்தனை வடிவத்திற்கு உறுதுணையாக இருப்பது நிதியாகும்.
பயன்பாட்டுப் பெறுமானத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்ட முதலாளித்துவம் மறைமுகமாக மக்கள் மீது மதக் கருத்தியலை பயன்படுத்திக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்வதில்லை. வளர்ந்த நாடுகளில் தொண்டர் நிறுவனங்கள் ஊடாக நிதிசேர்ப்பதற்கு என்று சிரமதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிரமதானத்தினை சமூகத்தின் மீதான குடிகளின் அக்கறையை காண்பிப்பதாகவும், சமூகத்தின் மத்தியில் கருத்தியல் அழுத்தத்தை கொடுகின்றது. பாடசாலைப் பருவத்தில் இருந்து இதனை சமூகமயமாக்கின்றது. வளர்ந்த நாடுகளில் புற்நோய், சிறுவர் துஸ்பிரயோகம், இதய நோய், நீரளிவு, வான்னூர்தி சேவை போன்றவற்றிற்கு தொண்டு நிறுவனங்களை உருவாக்கின்றது. இத்தொண்டு நிறுவனங்கள் ஊடாக நிதி சேகரிக்கப்படுகின்றது. இவ்வாறு சேர்க்கப்படும் நிதியைக் கொண்டு உள்ளூர் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்கின்றது.
மேற்கு தேசங்கள் அல்லது வளர்ந்து வரும் தேசங்கள் பொதுநலத்திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதை தவிர்த்து விட்டு இராணுவத் தளபாடங்களுக்கும், அன்னிய தேசங்களை ஆக்கிரமிக்க இராணுவத்திற்கு நிதியினை ஒதுக்குகின்றது. ஆனால் மக்கள் நலன் கொண்ட திட்டங்களுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இது முதலாளித்துவத்தின் நெருக்கடியால் இவ்வாறான தொண்டு நிறுவனங்கள் உருவாகியதாக் கொள்ள முடியாது. இந்தத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக பயன்பாட்டுப் பெறுமாத்தில் உருவாக்கிக் கொள்கின்றது. பயன்பாட்டுப் பெறுமானம் நாட்டின் தேவையை பரிவர்த்தனை ஊடாக மூலவளத்திற்கு கடமையாற்றுகின்றது. பயன்பாட்டுப் பெறுமானத்தை மக்களை ஏமாற்றியே இத்தொண்டு நிறுவனங்கள் ஊடாக பெறுகின்றது. அரசானது தனது கடமையில் இருந்து தப்பித்துக் கொள்கின்றது.

“ஒவ்வொரு சரக்கின் பயன்-மதிப்பிலும். பயனுள்ள உழைப்பு, அதாவது ஒரு திட்டமான வகையைச் சேர்ந்ததும் திட்டமான ஒரு நோக்கத்துடன் பிரயோகிக்கப்படுவதுமான உற்பத்தி நடவடிக்கை அடங்கியுள்ளது. பயன்-மதிப்புகள். அவற்றில் உருக்கொண்டுள்ள பயனுள்ள உழைப்பு அவை ஒவ்வொன்றிலும் பண்பு வழியில் வேறுபட்டதாக இல்லையேல். சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்ள முடியாது.
உபயோகம் அல்லது நுகர்வின் மூலமே பயன்-மதிப்புகள் மெய்மையாகின்றன. அவை செல்வம் அனைத்தின் சாரமாகவும் அமைகின்றன. அந்தச் செல்வத்தின் சமுதாய வடிவம் எதுவானாலும் சரி. நாம் பரிசீலிக்கப் போகும் சமுதாய வடிவத்தில் அவை பரிவர்த்தனை-மதிப்பின் (exchange-value) பொருளாயத சேமிப்பங்களாகவும் உள்ளன” - கார்ல் மார்க்ஸ்
இவ்வாறே அன்றாடம் உண்டியலில் போடும் காணிக்கைப் பணமும், படையலாகக் கொடுக்கப்படும் காணிக்கைப் பொருட்களும் பயன்பாட்டுப் பெறுமானத்தினை உருவாக்கிக் கொடுக்கின்றது. கோவில்களுக்கு விசுவாச நிதியாகவும், குத்தகை முறை மூலமாகவும் நிதிகள் கோவில்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் வீட்டிலோ சிறுவர்கள் பசியால் வாடுகின்ற போதும், குருக்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள்.  மோட்சத்தில் இடம் கிடைக்கும், புண்ணியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறான உதவிகள் கொலனித்துவ காலத்திலும் இப்பொழுதும் மிசனரிகள் வறிய நாடுகளுக்குச் சென்று வளர்ச்சிச் செயற்பாடுகளை செய்கின்றார்கள். “வௌ்ளைக் காரர்கள் எல்லோருமே பொதுவாக காலனி ஆட்சியாளர்கவோ அல்லது வளர்ச்சி நிலை தொண்டர்களாகவோ மட்டுமே மக்கள் எண்ணுவதுடன் அவர்கள் கிராமங்களுக்கு வரும் நோக்கமே தானதர்மங்களைச் செய்வதற்குத்தான் என்றும் கருதுகின்றனர். வௌ;ளைக்காரரை ஒரு மாயாஜாலக் காராக நிலை மாற்றும் எண்ணமும் இந்த அனுபவத்தில் இருந்து அறியலாம். வறுமையிலிருந்து பெற வேண்டிய விடுதலையைச் சுயசிந்தனையின் மூலம் தீர்த்துக் கொள்ள இயலாமல், இந்த கிராமவாசிகள் அம்மாய மனிதனின் செல்வம், அதிகாரம் ஆகியவற்றை நம்புகின்றனர். காலனி ஆட்சிக்குப் பிறகு தோன்றிய காலகட்டம் இம்மாயத் தோற்றத்திற்கு வலுவூட்டுகிறது. வெள்ளைக் காரர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்டதால் தான், எல்லாமே பாழாகி விட்டதாகக் குறிப்பாக கிராமத்தின் தொழிலாளர் வர்க்கம் எண்ணுகிறது. அப்படி பார்க்கும் போது, அதன் விளைவு, கடை நிலைவர்க்கம், பொதுவாக காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அல்லர்.” (பக்கம் 375 வறுமையின் பின்னணி)
இதனை (carco cult) வானத்தில் இருந்து விழும் என்று எதிர்பார்ப்பது போல அன்னியரின் உதவியை இன்றையக் காலத்தில் யுத்தத்தின் பின்னரான மக்கள் இலங்கையில் எதிர்பார்க்கின்றார்கள்.
சிறு சிறு உதவித் திட்டங்களை அமைத்து செயற்படுத்துவதன் மூலம் சாதனை படைப்பதாக மாயை உருவாக்கப்படுகின்றது. உருவாக்கப்படுகின்ற திட்டங்கள் பெரும் தொழில் முனைப்புக்களினால் விழுங்கப்படுவதை ஏற்க மறுக்கின்றது. கட்டமைப்பினை மாற்றங் கொண்டு வருவதன் மூலமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதை திசைதிருப்புகின்றன.

உதவி நிறுவனங்கள் மூலம் சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏற்ப அமைப்பை அறிமுகப்படுத்துவது போன்ற செயற்பாட்டை செய்கின்றனர். பெரும் நிர்வாகச் செலவைக் கொண்டிருக்கின்றது. அரசுசார நிறுவனங்கள் மக்களின் நலனுக்காக இயங்குவதாக காண்பிக்கப்படுகின்றது. வர்க்கச் சமூகத்தில் உள்ள முரண்பாடு மறைக்கப்படுகின்றது. இந்நிதி நிறுவனங்கள் செய்யும் நிதி மூலமாக மற்றவர்களை தங்கியிருக்கும் நிலையை தோற்றுவிக்கின்றது. தன்னார்வ நிறுவனங்கள் எந்தக் காலத்திலும் தன்னிறைவுப் பொருளாதாரத்தினைக் கொண்ட முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. தன்னார்வ நிறுவனம் எந்தக் காலத்திலும் மற்றவர்களில் தங்கிநிற்கும் மனோநிலையை வளர்க்கின்றது, ஊட்டுகின்றது. இங்கு சுய முயற்சியையும், சுயமாக இயங்கும் செயற்பாடு முற்றிலுமாக தடைஏற்படுத்துகின்றது.

மதநிறுவனங்கள் மக்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை வேண்டி நிற்பதில்லை. மாறாக பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு வழிகாட்ட முடியாத காரணத்தினால் குறுகிய நோக்கில் செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் நிரந்தரமான பொருளாதாரதை தீர்வை அடைவதற்கு பதில் குறுகிய நோக்கில் அமைந்த சலுகைக்காக மக்கள் தொண்டு நிறுவனங்களை நோக்கி திரும்பும் நிலையை ஏற்படுத்துகின்றது. இந்நிறுவனங்களும் தம்மையே தங்கிநிற்கும் நிலையை ஏற்படுத்துகின்றனர். எமது வறுமையை போக்கவும், உரிமையை வென்று எடுப்பதற்கு, சொந்த மக்களையும் வெல்லக்கரிய தத்துவத்தையும் இணைத்துக் கொண்டு போராடுவதன் மூலமே நிரந்தரமான வறுமையை போக்கி, உரிமையை அடையமுடியும். இதனை கவனத்தில் கொள்ளாது வெளியில் இருந்து வரும் உதவியின் மூலம் தமது தேவைகளை பூர்த்தி செய்துவிடாலாம் என நம்பி விடுகின்றனர். இதனால் வெளி உதவிகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர். இவ்வேளையில் மதச் சக்திகள் இவ்வுலகில் பெறமுடியாதவற்றை விண்ணுலகில் பெற ஆலோசனை கூறுகின்றனர்.

தன்னார்வக் குழுக்கள் மூலம் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு துணைபுரியவும், உலகை மாற்றங் கொள்ள வைப்பதற்கு ஐ.நாவின் அனுசரணை கொண்டு பேரம் (lobby) பேசும் நடவடிக்கைளில் ஈடுபடுதல். தன்னார்வக் குழுக்கள் இனவாத மாநாடு தென்னாபீரிக்காவில் நடைபெற்றதைப் போன்று மாநாடு நடத்துவதன் மூலம் பொது அபிப்பிராயத்தை திரட்ட முடியும் என நம்புகின்றனர். மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுவதை எதிர்க்கின்றனர். பெண்கள், சிறுவர் பாதுகாப்பு, சூழல்மாசுபடுதல், இனவாதம் (சாதியெதிர்ப்பு) எதிராக உலகமெங்கும் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை வலியுறுத்துவதற்கென உலகளாவிய நியாபக- அடையாளத் தினங்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக கருத்துக்கு வலுச் சேர்ப்பதுடன், முதலாளித்துவ பெர்ருளாதாரத்திற்கு எற்ப கட்டமைப்பில் (structural adjustment) மாற்றம் கொள்ள வலியுறுத்துகின்றது.

உதவி நிறுவனங்கள் மக்களின் நிலையை அறிந்து கொண்டு தம்மீது தங்கி நிற்க தொடர்ந்தும் ஜனநாயக சுதந்திரத்தை மக்களுக்கு உதவு பாவிப்பதாக கூறிக் கொண்டு நாடுகளுக்குள் நுழைகின்றனர். கொலனித்துவ மாற்றத்தால் சுதேசிய சிந்தனையை தவற விட்டுவிட்டு வானத்தைப் பார்க்கின்ற நிலமையை கீழே பார்ப்போம்.
இதன் மூலம் மதத்தின் அரசியல், பொருளாதார செயற்பாடுகள் எவ்வாறு சுரண்டும் வர்க்கத்தின் சிந்தனையை பிரதிபலிக்கின்றது என்பது பற்றி கவனத்தில் கொள்ளதும் அவசியமாகும். பொருளாதார கண்ணோட்டத்தையும் ஆராயாது விடின் ஒரு விமர்சனக் கட்டுரை முழுமைபெறாது.
உழைப்பில் ஈடுபடாமலே உண்பவர்கள்
தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் வேலையில்லாமலும், பிச்சைக் காரர்களாகவும் (லும்பன் அல்லது உதிரிப் பாட்டாளிவர்க்கம்) தொழிற்துறை மாற்றமானது ஏற்படுத்தி விடுகின்றது. மற்றும் ஒரு பகுதியினர் பெறும் லாபத்தில் இருந்து எடுத்து, பகிர்ந்து கொள்வதன் மூலம் சலுகை (உழைப்பாளிகளின் உழைப்பை இனாமாகப் பெற்றே உபரியானது உருவாக்கம் பெறுகின்றது.) பெற்ற வர்க்கமாக மாறுகின்றனர். மற்றைய பகுதியினர் குறைந்த ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களாகவும் உருவாகின்றனர்.
மக்களிடையே இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை சமரசம் செய்து வைக்க கிறிஸ்தவ மதம் தனக்கேயுரித்தான தான, தருமக் கோட்பாட்டை கொண்டு செயற்படுகின்றது. தானம் தருமம் செய்து வறுமையில் வாடுபவர்களின் பசியை தீர்ப்பதன் மூலம் புண்ணியத்தை தேடலாம் என நம்புகின்றனர். ஒரு மனிதர் தனக்கு வேலையும், அதன் மூலம் கிடைக்கும் நிரந்தர வருவாயின் மூலம் அதற்குள் வாழ முயற்சிக்கலாம். நிரந்தர வருவாயும், வேலையும் இல்லாவிடின் எப்போழுதும் மற்றவர்களை தங்கி நிற்க வேண்டியிருக்கும், அல்லது தெருவில் படுத்துறங்க நேரிடும். முன்னர் வேலை செய்தவர்கள் கூட ஆட்குறைப்பு, மறுசீரமைப்பு, தொழிற்முறை மாற்றங்களால் மற்றும் நவீனமயப்படுத்தல் போன்ற காரணங்களால் வேலையில்லாதவர்களாக மாறுகின்றனர்.
இங்கு ஒருபகுதியின் உழைப்பை வழங்கவும் அதில் இருந்து ஒரு பகுதியை தான தருமத்திற்கு கொடுக்கும் முறையானது மக்களின் வறுமையைப் போக்குவதில்லை. குறிப்பாக மேலை நாட்டு உதவி நிறுவனங்களை எடுத்துக் கொள்ளுமிடத்தில் இன்னொரு பகுதியினர் உழைப்பை வழங்கவும், மறுபகுதியினர் உழைப்பை அதிகமாக வழங்காமலும் இருக்கின்ற மாறுபாட்டால் எற்படுகின்ற மனச்சாட்சியை சாந்தப்படுத்த செயற்படுத்தப்படும் தருமத்தினால் சேரும் பணமாகும். இந்தப் பணமானது எமது நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. தாராள மனம்படைத்த மேலை நாட்டவர்களால் வழங்கப்படும் ஒரு காணிக்கையாக காட்சி கொடுக்கப்படுகின்றது.
இந்தியா, இலங்கை போன்ற வறிய நாடுகளில் உடல், மூளை உழைப்பிற்கும் இடையில் ஊதியத்தில் மிகவும் இடைவெளி இருக்கின்றது. இதேபோல வளர்ச்சியடைந்த நாடுகளில் வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகள் காரணமாக மாற்றமும் பெறுகின்றது. ஊதியமானது சமத்துவமாக இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கின்றது. ஒவ்வொரு வர்க்கத்தவர்களும் ஒப்பிட்ட ரீதியில் ஒருவரை விட மற்றவர் வசதியாக வாழ முடிகின்றது. இங்கு ஏற்படுவது இரக்கம், இது வர்க்க உணர்விற்கு ஒப்பானது அல்ல. இரக்கம் வர்க்க உணர்வாக மாற்றம் பெறவேண்டும். வர்க்கப் பற்றின் மூலமாகவே வர்க்கத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும். வர்க்க உணர்வைப் பெறாமல் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு ஆன்மீகம் போதிக்கும் தான தருமம் என்பது விண்ணுலகத்திற்கு கடவுச் சீட்டும், நுழைவுக்கான விண்ணப்பப் படிவமேயாகும்.
வர்க்க உணர்வு பெற்ற உதவிக்கும், ஆன்மீகம் போதிக்கும் தான, தரும உதவிக்கும் மாறுபாடு இருக்கின்றது. ஆன்மீகம் போதிக்கும் உதவியானது போராட்டத்தை மறுக்கின்றது. தான, தருமம் செய்து விட்டால் எல்லாப் பிரச்சனைகளையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நிலையை ஏற்படுத்தி வர்க்க உணர்வு ஏற்படால் தடுத்து விடுகின்றது. வர்க்க உணர்விற்கு தடையாக இருக்கும் மதத்தில், விடுதலையை இறையியில் கோட்பாட்டில் தேடுவது, வறிய மக்களின் வர்க்கச் சிந்தனையை முழுமையாக வளர விடாது என்பதையும் மறுத்து நிற்கின்றது.
கோவிலுக்கு கொடுக்கப்படும் பணத்தின் மூலம் உழைக்காமல் குரவர்கள் ஊதியத்தை பெறுகின்றனர். இந்த ஊதியத்தைக் கொண்டே உழைக்காமலே தாம் வாழக்கூடிய சுரண்டும் வர்க்கத்தின் சிந்தனையை தொடர்ச்சியாக வளர்க்கின்றனர். கோவில்களில் படைக்கப்படும் பொருட்களை சமயக் குரவர்களின் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது. பயன்படுத்தப்படும் பொருள் இலவசமாக கிடைக்கின்ற போது, குருக்களுக்கு தேவையான மொத்த செலவினத்தில் ஒரு பகுதியை இலவசமாக கிடைக்கின்ற பொருட்கள் ஈடு செய்கின்ற போது, குரவர்களுக்கு அந்தத் தொகை உபரியாகின்றது. இந்தத் தொகையான உபரியாக கிடைக்கின்ற வாழ்க்கையை காலையில் இருந்து மாலை வரை உழைக்கும் மக்களுக்கு கிடைப்பதில்லை. குரவர்கள் இவ்வாறாக பெறும் வருவாயில் இருந்து தமது சொத்தின் பங்கை பெருக்கிக் கொள்ள முடியும். குரவர்கள் உழைக்காமலே சொகுசாக வாழமுடியும்.
சமயப் பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதற்கு காரணம் சபைகளுக்கு குவிந்த சொத்துக்களே காரமாகியது. “இயேசு சபையினர் வந்த சில வருடங்களிலேயே பிரான்சிஸ்கு சபையினரும் வந்து விட்டனர்.  கோவா மறைமாநிலத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்த பனிமய மாதா ஆலயத்தை கொச்சி மறைமாநிலத்தோடு இணைப்பதை இயேசு சபையினர; விரும்பவில்லை. பெரும் செல்வம் கொழிக்கும் தேவாலயத்திற்காக கொட்டிக் கொடுக்கும் இந்த சன சமுத்திரத்தை இயேசு சபையினர; இன்னொரு சபைக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. மேற்கண்ட கடிதத்திலும் இந்த தொனி தெரிகிறது. …..
முயல் தீவில் மக்கள் குடியேறியதால் முத்துக்குளிக்கும் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டதாலும் கிறிஸ்தவ மறைப்பரப்பலில் பெரும் பாதங்கங்ளை இந்த இடப்பெயர்ச்சி தோற்று விக்கும் என்றும் கருதிய பிரான்சிஸ்கு சபையின் கொச்சி ஆயரான ஆந்திரேயாஸ் மக்களை தூத்துக்குடிக்கு திரும்ப வருமாறு அழைத்தார். அவர் மனுவேல் தி எல்விஸ் என்ற தலைமைக் குருவை முயல் தீவுக்கு அனுப்பினார். அனால் இயேசு சபையினரும் மக்களும் தூத்துக்குடி திரும்ப மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் கயத்தாறு மன்னனோடும், மதுரை நாயக்கரோடும் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு கோவா, கொச்சியிலிருந்து நான்கு பெரிய கப்பல்களில் ஆயுதம் தாங்கிய தோணிகளோடு வந்து முயல் தீவை முற்றுகையிட்டார். இந்தப் போர் சுமார் 22 நாட்கள் நீடித்ததாக கோவாவுக்கு எழுதப்பட்ட இயேசு சபை கடிதங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சிஸ்கு சபை திரட்டிய படைக்கு ஸ்கோ தி மெனசஸ் என்கிற தளபதி தலைமை தாங்க, பரவர்களின் படைக்கு இயேசு சபைத் துறவியான ஜான் போர்கஸ் தலமை தாங்கி இந்தப் போர் நடந்தது” (அருள் எழிலன் -முத்துக்களின் வரலாறு)
இங்கு மக்களின் உழைப்பால் பெறப்படும் சொத்துக்களை யார் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வது என்பதான பிரச்சனையில் மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே ஒற்றுமை இருந்தும் எவ்வித பலனும் இல்லை. மக்கள் கடலில் இருந்தும் எடுக்கும் முத்துக்களை மற்றவர்களுக்கு இனாமாக கொடுக்கின்ற போது சொத்துக் குவிதலுக்கு காரணமாகின்றது. மக்கள் மீது தொடுக்கப்படும் மேலான்மை கருத்துக்களான இறைஊழியம், இறையன்பு, அயலானை நேசி ஆகியவை மிகவும் ஆழமாக விதைக்கின்ற மதமாக கிறிஸ்தவம் இருக்கின்றது.
ஒரு நிறுவனத்தை கொண்டு நடத்துவதற்கு பலரின் உழைப்பு அவசியமாகின்றது. இதில் குருவானவர் ஆன்மீகத்தை பற்றி போதித்து மக்களை மயக்கத்தில் கொண்டு வர, மயக்கத்தில் இருக்கின்ற மக்களோ தாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக தமது உழைப்பை இனாமாக வளங்குகின்றனர். இவர்கள் கோவில்களில், மடங்களில் புண்ணியம் (அனைத்து மதங்களிலும்) என்ற பெயரின் வழங்கப்படும் உழைப்பிற்கு பெறுமானம் உண்டு. உழைப்பிற்கு பெறுமானம் இல்லை என கூறிக் கொண்டு மக்களின் பலர் பலவிதமாக தமது உழைப்பை வழங்குகின்றனர். போதகர் ஒரு குறிப்பிட்ட தொழிலாளி வறுமையில் வாடுகின்ற போது உதவி செய்தார் என வைத்துக் கொள்வோம். உதவி பெற்றவரின் நிலை எப்படியாவது நன்றிக் கடன் செலுத்துவதாகும். குரு உதவும் பட்சத்தின் அவ்வுதவியானது உதவிக்கும், அதன் பயனுக்கும் போதகரே காரணமென உரிமை கொண்டாடப்படுவதையும் அவதானிக்க முடியும். இவ்வாறான நிலையில் போதகரின் முகத்தை (முறிக்கக் கூடாது,) புண்படுத்தக் கூடாது என்ற நோக்கில் வறுமையில் வாடுபவர் நன்றிக் கடன் தீர்க்க முற்படுவார். போதகரின் தேவைகளை முன்னின்று கவனிப்பவராகவும் அதாவது எடுபிடி வேலை செய்பவராகவும் மாறிவிடுகின்றார். இங்கு உழைப்பும் புனிதத் தன்மை கொண்டதாக மாற்றம் பெறுகின்றது. பயன்பாட்டுப் பெறுமானத்தை உணர வைக்காமல், உழைப்பை இனாமாக பெற்று தமது சொத்தை பெருக்கிக் கொள்ளவும், சுகபோகத்தில் வாழவும் இடம் கொடுக்கின்றது.
மதம் என்பது மாய உணர்வில் சஞ்சரிக்க வைக்கின்றது. மனிதரிடம் தோன்றும் பிரச்சனைகளினால் ஏற்படும் அகநிலை உளைச்சல்களை தீர்த்துக் கொள்வதற்காக சமயம் என்ற ஒரு நிறுவனத்திடம் சென்று விடையைத் தேட முற்படுகின்றார்கள். தனது வேண்டுதலுக்கு பரிகாரமாக பொருட்களை காணிக்கை என்ற பெயரில் கடவுளுக்கு படைக்கப்படுகின்றது. பொருள்கள் மாத்திரம் அல்ல பணமும் தபக்கால ஒறுத்தல் என்ற பெயரில் காணிக்கை செலுத்தப்படுகின்றது. மனிதர்கள் தமது அனுபவவாயிலாக தமது வாழ்க்கைக்கான தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். செய்யப்படும் (உற்பத்தி) பொருளுக்கு உரிமையாளர்களாக பெருமையுடைய மனித உழைப்பைபே காரணமாகும். இதனை மறுத்து தாம் உற்பத்தி செய்த பொருக்கு காரணம் கடவுள் என்றும், அதற்கு தாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்பதுடன் அதனை புனிதப் பொருளாகவும் உருவாக்கின்றார்கள். இவ்வாறான மனித உலகத்தின் சிந்தனையை பயன்படுத்தியே சுரண்டும் வர்க்கம் சுரண்டுகின்றது. இவ்வாறான அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மக்களை கருத்தியலிருந்து விடுதலை பெற்று எடுக்க வேண்டும். வெளியுதவிகளை மாத்திரம் தங்கிநிற்பதை விட்டு தமது சொந்தநாட்டின் பொருளாதாரத்தை தாமே கட்டியமைப்பதும், பொருட்களை இறங்குமதியை கட்டுப்படுத்தி தன்நிறைவு கொண்ட பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதே அவசியமானதாகும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்பது எப்பவும் அன்னிய நாடுகளின் நலனிற்காக வேலை செய்பவையாகவும், மக்கள் திரள் அமைப்புக்ளையும், சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கின்ற அரசியலை சிதைப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கின்றது. இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலை செய்பவர்கள் மிக முக்கிய கருத்துருவாக்கிகளாவும் இருக்கின்றார்கள்.  இவ்வாறு தொண்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் நலனில் அமெரிக்கா போன்ற நாடுகள் நேரடியான தலையீடு கொண்டு பாதுகாக்கும் நிலையில் தான் வைத்துள்ளார்கள். ஆங்காங்கே எப்பொழுதாவது நடைபெறும் விதிவிலக்கான சம்பவங்களைத் தவிர தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழிகள் இருப்பும், ஊதியம் என்பன உயர்நிலையில் வைக்கப்படுகின்றது. இது ஊழியர்களின் பதவியில் இருந்து மாறுபடும்.

தத்துவஞானிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வெறுமனே வியாக்கியானப்படுத்தித் தான் வந்திருக்கின்றார்கள். ஆனால் அதை மாற்றுவதுதான் இப்போதுள்ள விஷயமாகும்.

26 மதச்சின்னங்களினால் தோண்றும் சர்ச்சைகள்
மதச்சின்னங்களை அரசியல் நோக்கில் சிதைக்கும் நிகழ்வுகள் வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கின்றது. தமிழகத்தில் சமணக் கோவில்களாக இருந்து சைவக் கோவில்களாக பல பிரபல்யமான கோவிகள் உள்ளன. ஒரு  அடையாளத்தை அழித்து தன்னுடைய அடையாளத்தை புகுத்துவது இன்னொருவர் மீதான மேலான்மையைக் காட்டுவதாகும். இன்றைய பாபர் மசுதி இடிக்கப்பட்ட நிகழ்வு அல்லது ஆப்கானில் இருந்து பழைமையான புத்தரின் சிலையை தாக்கி உருக்குலைத்த நிகழ்வானது சகிப்புத் தன்மை அற்ற நிலையும் காரணமாகும். பபிலோனிய கட்டங்கள், சின்னங்கள் இப்பொழுது (அமெரிக்க, இஸ்ரேலிய கூலிகளால்) இஸ்லாமிய வெறியர்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
சமூக அமைப்பின் ஏற்படுகின்ற பிரச்சனைகளை, விழைவுகளை தெய்வீகம் கொண்டு விளக்கம் கொடுக்கப்பட்டதும், தொடர்ச்சியாக அந்தச் சிந்தனையில் மக்களை தொடர்ச்சியாக வாழ்க்கை வட்டத்தை தொடர்கின்றனர். சமூகத்தை ஈடாட்டம் கொள்ளாத வரையில் நிறுவனங்கள் ஒன்றையொன்று பாதுகாத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு மாற்றாக சில சீர்திருத்தங்களை தமது இருப்பின் தேவையை கருதி தன்மை மாற்றிக் கொள்கின்றதேயன்றி அதனை நிறுவனங்களை சிதைய விடுவதில்லை. “மதம் மக்களுக்கு அபினியைப் போன்றது. மதம் ஒரு வகையான ஆன்மீக பெரும் போதை கொண்டது. அதில் மூலதனத்தின் அடிமைகள் மூழ்கி அவர்களுடைய மனித உருவத்தையும், மனிதப் பிறப்புக்குகந்த முறையிலான வாழ்க்கை நடத்துவதற்கான உணர்வையும் கோரிக்கைகளையும் மழுங்கடித்து மூழ்கடித்து வருகிறார்கள் (லெனின் “சோஷலிசமும் மதமும்)  போதையில் உள்ளவனை சீண்டிவிட்டால் எதனையும் செய்து முடிக்கலாம். அவ்வாறே மதப்பற்றுள்ளவர்கள் வைத்து எதனையும் செய்து முடிக்கலாம்.
மனித வரலாற்றில் ஒவ்வொரு இனக்குழுக்களும் ஒவ்வொரு சின்னங்களை தமது அடையாளங்களாக கொண்டிருக்கின்றது. இவைகள் இனக்குழும அமைப்பில் இருந்து நவீன காலத்திற்கு உள்வாங்கிக் கொள்கின்றன. இவைகள் புனிதமானவையாக காட்டப்படுகின்றது. சின்னங்கள் ஒரு காலத்தில் காண்டுமிராண்டித் தனமாக இருக்கும், அதே சின்னம் புனிதமானவையாக உருவாக்கப்படுகின்றுது.  இன்றையச் சின்னம் என்பது பண்டைய காலம் தொட்டு பல்வேறு இனக்குழுக்களின் குலச்சின்னங்கள் ஒன்றிணைவுடன் சிதைவுக்குள்ளாக்கப்பட்டு இன்றும் சமூகத்தில் புனிதமானவையாக இருக்கின்றது.  இயக்கர்களின் சின்னமாகிய அரசமரம் இன்று பௌத்தத்தின் புனிதச் சின்னமாக இருக்கின்றது. இதே போல நாகர்களின் சின்னம் நாகம் இருக்கின்றது. வரலாற்றில் பக்தி இலக்கிய காலத்தின் தொடர்ச்சியாகவும், மனுதர்- வைணவ வழிபாட்டு ஆக்கிரமிப்புக்கு ஊடாகவும் பழைய பௌத்த, சமண சின்னங்கள் அழிக்கப்பட்டது.  தமிழ்  பௌத்தர்கள், சமணர்கள் தண்டிக்கப்பட்டார்கள், ஒழிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை தேசியஇனமுரண்பாடுகளின் தோற்றத்தில் மதத்தின் பங்கும் ஒரு அங்கமாகின்றது. 1956, 1983களிலும் மதச் சின்னங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதேபோல  புத்தர் சிலையை தமிழர் பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலையானது புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிகரித்துள்ளது. புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் திருமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. இன்று தமிழ் பகுதியெங்கும் புத்தரின் சிலைகளும், பன்சாலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்று அதிவேகமாக தமிழர் தேசமெங்கும் புத்தமத அடையாளங்கள் எங்கும் நிறுவப்படுகின்றது. இவைகள் தமிழ் தேசததின் அடையாளத்தினை அழிப்பதன்  ஊடாக சிங்கள பேரினவாதச் சிந்தனையான முழு இலங்கையுமே சிங்கள பௌத்தர்களின் தாயமாக கருதுகின்றது.  பண்டைய காலத்தில் தமிழர்களின் மதமும் பௌத்தமாக இருந்திருக்கின்றது என்பதை ஏற்க மறுக்கின்றது.
பொதுவாகவே அனைத்து மதப்பிரிவினர்களும் சந்திக்குச் சந்தி புதிய புதிய கடவுள் சிலைகளை சனநெருக்கடி உள்ள இடம், ஏதாவது வெளி, அல்லது முக்கிய இடங்கள், அவர்களின் கனவில் தோன்றும் இடங்கள் என்று சிலைகளை வைக்கின்றனர;. (பிரமுகர்களின் சிலைகளும் இவ்வாறுதான் முளைக்கின்றது.) இது முழு நாட்டிற்குமான ஒரு பிரச்சனை, ஏனெனில் ஒரு நகரில் எவ்வாறு குடியிருப்பு அமைவது, எங்கு கழிவுநீர் திட்டம் கொண்டு வருவது, வீதித்திட்டமிடல் இவ்வாறு நிர்வாகம் செய்வதற்கு இலகுவாக நகராட்சி, அல்லது மாநகராட்சியில் செயற்திட்டங்களுக்கு இடையூறாக இவ்வாறான புதிய சிலைகள் இடையூறாக அமைந்து விடுகின்றனர். இந்த நிலை மாற்றம் கொள்வதற்கு முழுமக்களுக்குமான ஒரு விழிப்புணர்பு ஏற்படுத்துவது அவசியமாகும்.

மதங்களைக் கொண்டு மனிதர்களிடையே பிரிவினையையும், மதம் ஒடுக்குதலுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது தனிமனிதர்களிடையே எற்படுகின்ற ஆணவம், அகம்பாவம், வக்கிர, குரூர சிந்தனை (Sadism) உணர்வை மற்றவர்கள் மீது செலுத்தும் முகமாக வேண்டுமென்றே செய்யும் செயலாக அமைய இடமிருக்கின்றது.
பெரும்பான்மை இனத்தின் பின்புலமாக படைகள் இருக்கின்ற காரணத்தினால் அடாவடித்தனமாக நடக்க வழிநடத்தப்படுகின்றனர். பௌத்தர்களை பொறுத்தவரை தான் ஒரு சிங்கள மொழிபேசும் இனத்தைச் சேர்ந்தவர். தனக்கு உதவிக்கு தம்மினத்தைச் சேர்ந்த படையினர் இருக்கின்றனர் என்ற துணிவு இருந்திருக்கலாம். இவ்வாறு வளர்க்கப்படுபவர்களிடம் எவ்வகையான சிந்தனையை எதிர்பார்க்க முடியும். இவர்கள் செய்யும் அடாவடித்தனத்திற்கு முழுச்சிங்கள மக்களையும் அவ்வாறு தான் என கூறமுடியாது.
மக்களிடம் இனத்துவ பெருமை, மதப் பெருமைகள் கொண்ட மக்கள் கூட்டம் தான் தற்பொழுது அனைத்துப் பகுதியிலும் இருக்கின்றனர். இவ்வாறான நிலை என்பது ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்ற தமிழர் தேசத்தில் பொதுப்போக்காக இருக்கின்றது.  இவ்வாறானவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது இயல்பானதொன்றே. இதில் உள்ள நிலை என்னவெனில் பெரும்பான்மையான மதங்கள் தமது சிலைகளை வைப்பதில் எவ்வித சுயகட்டுப்பாடும் இன்றிச் செயற்படுகின்றனர். இங்கு கடவுள் என்ற ஒரு பயத்தைக் காட்டி நிர்வாக, அல்லது நியாயப்பாடுகளுக்கு எதிராக இவைகள் அமைந்து விடுகின்றன. இது ஒரு இனத்துக்குமான பிரச்சனையல்ல, முழுச்சமூகத்திலும் உள்ள பிரச்சனையாகும்.
இங்கு காலம் காலமாக இருக்கும் முரண்பாடுகள் தான் ஒரு பிரச்சனையை பூதாகாரப்படுத்துகின்றது. இது கூட ஒரு முழுச்சமூகத்தின் மனநிலையின் வெளிப்பாடாகவும் அமைந்து விடுகின்றது. இதனால் இதற்கு மத அரசியல் முலாம் பூசப்படுகின்றது. இவ்வாறான நிகழ்வுகளை தத்தம் அரசியல் சக்திகளின் பின்புலங்கள் தூண்டுதலையை கொடுப்பதனால் மோதல்கள் பெரிதாக வடிவம் எடுக்கின்றது.
பேரினவாதம் என்பது நிறுவனமயப்பட்ட நிலையில் திட்டமிட்ட சிங்களமொழி, மத சின்னங்களை திட்டமிட்டுத் திணிக்கும் நிலைகள் இருக்கின்றன இவைகளும் இனம் காணப்பட வேண்டும். திட்டமிட்ட செயற்பாடுகளுக்கும், தனிமனிதர்களிடையே ஏற்படுகின்ற வக்கிர உணர்வுகளுக்கும் நிச்சயமான தொடர்பு இருக்கின்றது. ஏனெனில் இவைகள் இந்தச் சமூகத்தின் விழைவுகளே. இவைகளை போக்குவதற்கு சமூக அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
ஒரு மதத்தவர்கள் மற்றைய மதத்தவர்கள் மீது சகிப்புத் தன்மையை இல்லாது போக்க சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் புதிய சூழலுக்கான கருத்தியலை படைக்க வேண்டும். போராட்ட காலத்தில் இவ்வகையான செயற்பாடுகள் நடைபெறவில்லை. இவைமாத்திரம் அல்ல, பெரும் சத்தமாக போட்டிக்கு ஒலிபெருக்கி பாவிப்பது, சந்திக்குச் சந்தி மதத்தைப் பரப்புவதற்கான கூடி மதப்பிரசங்கம் செய்வது, மற்றைய மதங்களை இழிவாக கருதுவது, இவற்றைப் போக்க சமூக நலன் கருதிய செயற்பாடுகள் அவசியமாகும்.
திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட வேளை அதனை  தவறென ஏற்கிறார் ஒரு தேரர் அது மது விற்பனை நிலையங்கள் உள்ள இடத்திலிருந்து 200மீற்றர் தூரத்துக்குள் விகாரையோ, புத்தர்சிலையோ அமைக்கக் கூடாதென்பது பௌத்தசமய ஒழுங்குவிதியில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விதியைமீறி திருமலை நகர மத்தியில் இரண்டு மதுவிற்பனை நிலையங்களுக்கிடையில் புத்தர்சிலை அமைக்கப்பட்டிருப்பதானது தவறென்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் திருமலை மொறவெவ பௌத்த விகாராதிபதியும், திருமலை பௌத்த துறவிகளின் சங்கசபாவின் செயலாளருமான இந்திரரோயதேரர் தெரிவித்துள்ளார். சிலைவைப்பின் பின்னரான அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் மாறுடுகின்றது.
அதேவேளை திருமலை நீதிபதியின் தீர்ப்பானது குறிப்பிடத்தக்கதாகும். இதில் திருமலை நீதிபதி சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட அனைத்துக் கட்டிடங்களையும் அகற்றும் படி கட்டளையிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பானது எல்லோராலும் வரவேற்கப்படக் கூடியதாக இல்லை என்பதில் எவ்வித அதிர்ச்சியும் இல்லை. எங்கோ ஒரு மாற்றத்திற்கான முயற்சியை ஏற்படுத்த வேண்டும்.  இந்த வகையான நீதிமன்ற நடவடிக்கைகள், முள்ளிவாய்க்காலின் பின்னரான 2009 காலங்களில் இல்லை எனலாம்.  அதற்கான சாத்தியமும் இல்லை.
ஆனால் முழுமையாக சட்டவரையறையினை ஏற்படுத்துதன் ஊடாக பிரச்சனைகளை தீர்த்து விட முடியாது. முரண்பட்ட மதங்களிடையே- வர்க்கங்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சட்டம் உருவானதாகவும், நடுநிலையானதாகவும் நீதித்துறை ஊடாக அரச இயந்திரம் அறிவுறுத்துகின்றது.  ஆனால் மதத்திற்கு அப்பால் இருந்து மதச் சார்பற்றதாக சிந்திக்கும் மனிதர்களை அரசஅமைப்பு உருவாக்கவில்லை.
ஆனால் இடைக்காலத்தில் சட்டரீதியான மாற்றங்களைக் கொண்டுவர முடியும், ஆனால் சட்டவாக்க மூலம் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு காண்பது முடியாதுடன் இவற்றில் நம்பிக்கை வைக்கவும் முடியாது. ஏனெனில் சட்டநிறுவனம் கூட ஒரு அடக்குமுறை நிறுவனமாகும்.
இவ்வாறான நிலையில் சட்டத்தின் தீர்ப்பைக் கூட செயற்படுத்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. அரச இயந்திரத்தில் இருக்கின்ற அதிகார வர்க்கம் என்பது கட்டமைப்பில் மாற்றம் வராது பாதுகாக்கின்றன. இதன் காரணமாக பல பிரச்சனைகள் உருவாகிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாகவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக கட்டமைப்பிலே உள்ள பொருளாதார அமைப்பும் அதன் சிந்தனை வெளிப்பாடுகளும் காரணமாகும். இதனால் பிரத்தியோகமாக புதிய பிரச்சனைகள் என்பது பொருளாதார அமைப்பின் எதிர்விழைவு என்பதற்கு உட்பட்டவையாக இருக்கின்றது. இதன் காரணமாக பொருளாதார கட்டமைப்பில் மாற்றங் கொண்டுவரும் போது தான் பிரச்சனைக்கான முடிந்த முடிவைக் கொண்டுவர முடியும். இது குறிப்பாக பெருந்தேசிய இனத்திடம் இருந்து அதற்கான ஆக்கபூர்வமான வேலைகளை தென்னிலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்றால் அது தீர்க்கமான வேலைகளைச் செய்ய வேண்டும்.
மக்களிடம் புரையோடிப் போயிருக்கும் பிரச்சனையின் பிரதிபலிப்பினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனையானது தீர்வு காணப்படாமல் இழுபட்டுக் கொண்டு செல்கின்றது. இவற்றிற்கு சட்டரீதியான அணுகுமுறைக்கு தீர்வு காணப்படாமல் தொடர்ச்சியாக இழுப்பட்டுச் செல்கின்றது. சட்டரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் சிக்கலுக்கு உள்ளாகி அரசியல் மட்டத்திலும் எந்த முடிவும் எடுக்க முடியாது இழுபட்டுச் செல்கின்றது. அரசியல் மட்டம் என்பது மத உயர்பீடங்களின் ஆழுமைக்குள் உட்பட்டு அவர;களின் அழுத்தங்கள் அரசியல் பீடத்திற்கு இருப்பதால் எந்த முடிவுகளையும் சுதந்திரமாக எடுக்க முடியாது இருக்கின்றது. இவற்றில் சமூக மட்டத்தின் ஒரு ஒப்புறவைக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யும் நிலையானது வெற்றிடமாகவே இருக்கின்றது.
மனிதரை அடக்கியாளும் நிலமானிய (யாழ் சைவ வேளாள, பார்ப்பனியச் சிந்தனை) என எல்லோராலும் உபயோகத்தில் இருந்திருக்கின்றன. இவைகள் இந்தச் சமுதாயத்தை எவ்வாறு அடக்கியாள்வது என்பது பற்றிப் புடம் போட்ட சிந்தனை வடிவங்களாகும். ஆணவம், அகம்பாவம், ஆதிக்கத்திமிர் ஆண்டான் அடிமைச் சிந்தனையானது இவர்கள் கீழானவர்கள் என்ற மனப் போக்கு இவைகளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றது. இவைகள் மூலமாக ஒரு சமூகத்தை மாத்திரம் அல்ல, உற்பத்திச் சாதனங்களை தமதாக்கிக் கொள்ளும் தந்திரங்களை கொண்டதாக இருந்திருக்கின்றன. (மூளை உழைப்பை கொண்டு சுரண்டும் வர்க்கமும் இதில் அடங்கும்)
தமிழ் பிரதேசம் எங்கும் புத்தர் சிலையை எதிர்க்கும் தமிழ் மக்கள் தம்மிடையே மதப் பிற்போக்குத் தனங்களைக் கொண்டு இருக்கின்றனர்.  இவ்வகையான பிற்போக்குத் தன்மை இருப்பது என்பது தமிழ் தேசத்தின்  ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் நிலையில் கொள்ள முடியாது.
நாம் வாழ்கின்ற சமூகம் மற்றவர்களை ஏற்றத்தாழ்வாக கருதும் பொருட்டான கருதுகோள்களைக் கொண்டுள்ளது. இந்தக் கருதுகோள்கள் என்பது எப்பவும் ஒரு பிரிவினருக்கு பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதல்ல. இவைகள் ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்புச் சார்ந்து இருக்கின்றது. இவைகள் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்பதல்ல.
இந்த நூற்றாண்டில் புத்தரின் எச்சம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதினால் அன்றையக் காலத்தில் சைவக் கோவில்களில் பலியிட வேண்டாம் என இலங்கை அரச தலைவர் கட்டளையிட்டார். இங்கு ஓரு மதத்திற்கு சிறப்பம்சம் கொடுக்கப்படுகின்றது வேளையில் பௌத்தச் சின்னம் முதன்மைப்படுத்தப்படுகின்றது.
இங்கு மிருகத்தினை பலியிடும் பழக்கம் சிறுதெய்தவழிபாட்டிற்கு உரியதாகும். இந்தப் பழக்கத்தினை வளர்ந்து வரும் இந்துத்துவ கோட்பாட்டாளர்களும் எதிர்க்கின்றார்கள். இங்கு சிறுதெய்வ நம்பிக்கையை அழிக்க வேண்டுமென்பதில் பௌத்தமும், இந்துத்துவவாதிகளும் அக்கறையாக இருக்கின்றார்கள். மற்றைய மதக்குழுக்களின் மீதான கருத்தியல் மேலாதிக்கத்திற்கு உதாரணமாக இதனைக் கொள்ள முடியும்.


27 இறுதியாக

மதம் பற்றிய பிரச்சனை மிகச் சிக்கலான விடயமாகும். கடவுளையும், எழுதப்பட்ட நியமனங்களையும் எதிர்ப்பதும் கேள்வி கேட்பதும் தனிமனித உளவியல் பலத்தில் தங்கியிருப்பது இல்லை. தனிமனித உளவியல் இந்த சமூக பொருளாதார உற்பத்தியாகும்.  இதனால் மதங்களினால் ஏற்படும் பிரச்சனைகளை வெறும் சட்டம் கொண்டும் தீர்த்து விட முடியாது. மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதன் மூலமே விடிவு பெறமுடியும் என்பதை மக்கள் அறியாத நிலையைப் பயன்படுத்தி நிறுவனங்கள் சுரண்டுவதுடன், மக்கள் அறியாமையால் வெளிச் சக்திகளை தங்கி நிற்கின்றனர்.
டலை லாமா (Dalai Lama) கூட தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைத்துக் கொள்கின்றார். இவர் மார்க்சியம் வேண்டி நிற்கின்ற பொருளாதார சமத்துவமாக பிரிக்கப்படுவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தானும் ஆதரிப்பதாக கூறுவதுடன், ஆன்மீகச் சுதந்திரத்தை மறுதலிப்பதைத் தான் எதிர்ப்பதாக கூறுகின்றார். யேசு, புத்தர், முகமதுநபி ஆகியோர் மக்களின் சமத்துவத்தைக் கோரி போராடியவர்கள், கருத்துக்களை முன்வைத்தவர்கள் என்ற கருதுகோள் மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பண்டையக் காலத்தில் நிலபிரபுத்துவத்தின் முன்னரான உற்பத்தி முறையில் பயன்பாட்டுப் பெறுமானத்தைக் கொண்ட உற்பத்தி செறிவைக் கொண்ட சமூகத்தில் பரிவர்த்தனைக்கு உட்பட்டு உபரி சொத்துக்கும், மூலதனத்திற்கும், உட்படாத காலத்தில் இருந்த சமூக பொருளாதார உறவை தவறான கிறிஸ்தவத்தில் இருந்து பொதுவுடைமைக் கருத்தும், கிறிஸ்தவ கம்யூன்கள் இருந்தாக கருத்துக்களை மக்கள் மத்தியில் உலவுகின்றது. நிலப்பிரபுத்துவத்தின் பின்னரான சன்னியாச வாழ்க்கையில் இருந்து கூட்டுறவையும் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றதினால் உருவாகின்ற கருத்துமயக்கமாகும்.
ஆன்மீக சுதந்திரம் என்னும் போது ஒரு பொருளாதார நலன் சார்ந்து கொண்டதை முன்னர் அவதானித்தோம். மாறாக கோருகின்ற ஆன்மீக சுதந்திரமும், பொருளாதார சமத்துவம் என்ற கோரிக்கை கூட இதனால் ஒன்றுக்கொன்று நேர்மையானதாக இல்லை. இதனால் பொருளாதார சமத்துவத்திற்கு எதிராக கூட்டணியில் தான் ஆன்மீகவாதம் சேர்ந்து கொண்டதை வரலாறு காட்டி நிற்கின்றன. கிறிஸ்தவம் எவ்வாறு ஏழை எழியவர்களின் விடுதலை பற்றி உரைக்கின்றதோ அதே போலதான் புத்தரும் பொருள் பண்டம் எல்லாம் நிலையற்றது என்று எல்லாவற்றையும் துறந்து சங்கத்தில் இணைந்து கொள்ளும் படி கோரினார். பின்னாளில் அதிகார வர்க்கத்துடன் கூட்டுச்   சேர்ந்து கொண்டது.
ஆன்மீகத்தை போதிக்கின்ற கிறிஸ்தவம் விடுதலை இறையியல் பற்றி உரைக்கின்ற போதும் மேலே கூறிய கருத்துக்கமையவே இடம்பெறுகின்றது என்பதை அவதானிக்க வேண்டும். பொருளாதார உரிமைக்காக போராடுகின்ற போது, ஆன்மீகம் கூட ஒன்றிணைந்து செல்லுமா என்பது பற்றியதாகும். கிறிஸ்து ஏழைகளுக்காக போராடினார் என்று கொண்டாலும், அவர் போராடிய காலம் வேறானதாகும். அவர் கூறும் பகைவனை நேசி, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்று போதிக்கின்றார். இதனை தற்கால அரசின் வளர்ச்சிப் போக்கில் இவற்றை பிரதியிட முடியுமா என்பது கேள்வியே.

அரசானது தோற்றத்தில் எந்த வர்க்கத்தைச் சேராமல் நடுநிலை கொண்டதாக காட்சி கொடுக்கப்படுகின்றது. அரசு என்னும் போதே ஒரு வர்க்கம் சார்ந்து தான் இருக்கின்றது. இது முதலாளித்துவ அல்லது சமதர்ம அரசுகளாக இருக்கட்டும் வர்க்கம் சார்ந்ததேயாகும். சமதர்ம அரசானது பொதுவுடமை வெற்றி பெறுகின்ற வரையில் உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாவலனாக இருக்கும். தற்காலத்தில் காணப்படும் அரசுகள் எல்லாம் சொத்துடமையை பாதுகாக்கின்றன. தற்கால அரசுகள் தனது எதிர் வர்க்கத்தை ஒடுக்குவதற்காக விசேட சட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றது. பொய்வழக்கு போடுதல், பழிவாங்குவது, அலைக்கழிப்பது, சிறையில் இடுவது, வேலையில் இருந்து அகற்றுவது, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் காலம் கடத்துவது போன்றவையும், போராட்டங்களை ஆயுதங்கள் கொண்டு அடக்குவது, அகதிகளாக்குவது, ஆபத்தானவர்களை கடத்திச் சென்று கொல்வது.
ஏகாதிபத்திய அரசுகள் எதிரிகளை தமது முகவர் (தரகு முதலாளித்துவ வர்க்க) ஆட்சியர்கள் மூலம் போராடும் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குகின்றது. பொருளாதார தடைகளை ஏற்படுத்துகின்றது, படைகளை அனுப்பி ஆக்கிரமிக்கின்றது, கடவுள் அமெரிக்காவை (God bless America) ஆசீர்வதி என நித்தம் கூறிக் கொண்டு உலகை பொலிசாக வலம் வருகின்றது. ஒடுக்குமுறை புரியும் வர்க்கம் பயங்கர ஆயுதங்களையும், பல சதிதிட்டங்களையும் தீட்டுவதில் வல்லமை கொண்ட எதிரிகளாகவே இருக்கின்றனர். ஆயுதங்களுடன் போராட்டங்களை எதிர்க்கும் எதிரியிடம் எவ்வாறு (உவமானம்) கன்னத்தைக் காட்ட முடியும். போராடுவது பசாசின் செயல் என கருதுகின்றனர். உனக்கு ஒருவன் ஒரு கன்னத்தில் அறைவான் என்றால் மறுகன்னத்தையும் காட்டு என்கின்றது. அநீதி நடைபெற்றால் அதனை  கடவுளிடம் அந்தக் கடமையைப் போட்டு விடு எனக் போதிக்கின்றது.

வாக்களிக்கப்பட்ட தேசம் தேனும் பாலும் பொழியும் பூமியாக சித்தரிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ பிரச்சார அட்டைகளில் பல நிறந்தில் அமைந்த படத்தை பிரசுரம் செய்திருப்பார்கள் அதில் தற்காலத்தில் உழைப்பை வழங்காத மேட்டுக் குடிகளை பிரதிநிதித்துவப்படுத்துவது போல் காட்சி கொடுக்கும். இவ்வாறு ஒரு விண்ணுலகக்  இருப்பதான தோற்றம் கொடுக்கப்படுகின்றது.
அனைத்து சமயத்தவர்களும் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விடு அவர் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பார் எனக் கூறுகின்றது. இவ்வாறு இருக்கையில் வாக்களிக்கப்பட்ட தேசம் ஒரு இனத்தவருக்கு மாத்திரமும், தேனும் பாலும் பொழியும் பூமியானது உடலுழைப்பை கொடுக்காமல் உருவாக மாட்டாது. தேனும் பாலும் சுரக்கும் ஒரு தேசம் கற்பனையில் உருவாக்க மதம் இடம் கொடுக்கின்றது. இதன் மூலம் மனித குலத்தின் தேவைகளை போராடித்தான் பெற முடியும் என்ற நிலையை மறைத்துக் கொண்டு, அகத்தின் தேவையை மாத்திரம் பூர்த்தி செய்யும் படி மதமானது கோருகின்றது.
லெனின் கூறுகின்றார் “நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர். எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.” (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)
விடுதலை இறையியல் மூலம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என கருதுகின்ற போது போராட்டத்தின் இலக்கு என்பது மட்டுப்படுத்தப்படுகின்றது. விடுதலை இறையியல் கூட ஒரு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அப்படி இருக்கையில் விடுதலை இறையியல் தலைமை தாங்கி நடத்துகின்ற போது மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருவார்கள் எனக் கொள்ள முடியாது.
பாவம், புண்ணியம் என்ற சிந்தனையை கொண்ட பாதிவழிக் கூட்டாளிகள் தலைமை தாங்கி முழு மக்களின் விடுதலைக்காக போராடுவர் எனக் கூறப்படுமானால் அங்கு உண்மையானது உரைக்கப்படவில்லை. “மனித குலம் முழுவதையும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படாமல் பாட்டாளி வர்க்கம் தன்னை தானே விடுதலை செய்து கொள்ள முடியாது“ மனித குலத்தை விடுவிப்பதற்கு வகுப்புவாத, மதவாதிகளின் தலைமையில் போராடி வெற்றி கொள்ள முடியுமா? சிலவருடங்களுக்கு முன்னர் (Mc Donalds) மக்டொனால்ட்டிற்கு (மாட்டுக் கொழுப்பு உணவு தயாரிக்கும் போது பயன்படுத்துவதற்கு எதிராக) எதிராக இந்துத்துவ வாதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இங்கு இந்துவவாதிகளின் கோரிக்கை வெளிப்படையாக முற்போக்குத் தனம் கொண்டதே. அதனால் நிதிநிறுவனத்தை எதிர்ப்பது என்பது புரட்சிகரமானதே. இங்கு இந்துத்துவம் கோருவது ஒரு வகை விடுதலையே மதச்சிந்தனையில் இருந்து வருவதாகும். ஆனால் இது நிச்சயம் உழைக்கும் மக்களுக்கான விடுதலை அல்ல. ஆனால் தொடர்ச்சியான இந்துத்துவத்தை விதைப்பதற்கான போலிக் கூப்பாட்டின் ஒரு அங்கமாகவே இதனைப் பார்க்க முடியும். 

மனித குலத்தை விடுவிப்பதற்கு முன்நிபந்தனை உழைக்கும் மக்கள் தலைமை தாங்குவதாகும். பத்துப் புத்தகங்கள் வாசித்து ஒரு விமர்சனக் கட்டுரை எழுதுவதற்கு அறிவிருக்கின்ற, (குட்டி முதலாளித்துவ) வசதி இருக்கின்ற எம்மைப் போன்ற வர்க்கத்தவர்களின் தேவை ஏனைய உழைக்கும் வர்க்கத்தவர்களின் தேவையில் இருந்து மாறுபடுகின்றது. இந்த வர்க்கத்தவர்கள் இந்தச் சமூகத்தின் வளர்ச்சியோட்டத்துடன் இணைந்து செல்லக்கூடிய வல்லமையைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். (ஆனால் அறிவுபடைத்த பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தவர் சுரண்டப்படவில்லை எனக் கூறிவில்லை.) இந்த வர்க்கமானது இருக்கின்ற நிலையை விட அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என முயற்சிப்பர். தமது கோரிக்கைகள் தீர்வு பெற்ற பின்னராக திருப்தி அடைந்து விடுவர். இவர்களின் போராட்டத்தின் மீதான பங்களிப்பானது பாதி நிலையில் தடைப்பட்டு விடும். இதனால் போராட்டத்தின் கோரிக்கைகள் கூட வர்க்கத்துக்கு வர்க்கம் மாற்றம் பெறுகின்றது. இவ்வாறே குட்டி முதலாளிய வர்க்கத்தவர்களின் கோரிக்கைகளின் கீழ் உழைக்கும் மக்களின் போராட்டத்தினை தரம் தாழ்த்தி விட முடியாது.

போராட்டத்தை கொண்டு நடத்துவதற்கு உழைக்கும் மக்களுக்கான சித்தாந்தம் அவசியமானதாகும். உழைக்கும் மக்களின் சித்தாந்தம் உற்பத்திச் சாதனத்தை உடமையாக்கிக் கொள்ளக் கூடிய வகையில் யுத்த, அரசியல் தந்திரோபாயத்தை அமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போதே ஏழை எளிய மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் இந்த பொருளாதார அமைப்பில் மறுவுற்பத்தி செய்யப்பட்டவர்களே. இதனால் அவர்கள் இன்றைய சமுதாய சிந்தனையை பிரதிபலிக்கின்றனர். அரசியல்வாதிகள் மதத்தில் நம்பிக்கை உடையவர்களாக இருப்பர். முக்கிய விழாக்களில் பிரதம விருந்தினராக பிரசன்னமாகி வேதாந்தம் பேசுவர். இவர்கள் மக்களிடையே இருக்கின்ற கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை ஆகியவற்றை பயன்படுத்தியே மக்களை மதநிறுவன அமைப்புக்களில் இணைத்துவிட முடிகின்றது. மதப் பிரச்சாரத்தை தொடரவும் முடிகின்றது. இன்றைய சமூக அமைப்பு பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கின்ற ஒழுக்க நெறி பழக்க வழக்கங்களைக் கொண்டு மனிதர்களை அப்படியே வாழும்படி கோருகின்றது.
சமயங்களுக்குள் இருக்கின்ற நல்ல கருத்துக்களை கண்டெடுத்து போராட்டத்திற்கு உதவி புரியும் படி அறைகூவல் விடுவதும், முழுமனித இனத்தின் முழுமையான விடுதலைக்கு விசுவாசமாக ஒரு போராட்டம் அமைந்து கொள்ள முடியாது. சமயத்தில் இருக்கின்ற நல்ல கோட்பாடுகளை கண்டறிவதை மதவாதிகள் செய்யட்டும். மாறாக அனைத்து விடயங்களிலும் மதத்தின் ஆழுமையை இல்லாது போக்க வேண்டியதே பகுத்தறிவாளர்களின் குறைந்த பட்ச நிலைப்பாடாகும். முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் அதுவகித்த முற்போக்கு பாத்திரம் சிதைந்து எதிர் நிலைக்கு சென்றிருக்கின்றது. இவ்வாறே மதத்தில் இருந்து நல்ல விடயங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுவதாகும்.

உழைக்காது சுரண்டும் வர்க்கம் எந்த மதமானாலும் எதிர்த்துப் போராடுவதே ஒரே வழி. மதபீடத்தில் இருப்பவர்கள் உடல் உழைப்பில் இருந்த மனித மூளையில் உழைப்புப் பிரிவினை ஏற்பட்டபின்னர் சமயக் குரவர்கள் உடல் உழைப்பில் ஈடுபடாமலே ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டது. இவ்வாறாக ஒரு பொருளாதார அமைப்பை தாங்கி நிற்பவர்களிடம், சிந்தனையிடம் சரணடைவது மக்களின் விடுதலையை முழுமையாக வென்றெடுக்க பயன்படாது. மார்க்சின் போதனையானது உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், தொடர்ந்தும் போராட்டங்களின் மூலம் பெற்ற வெற்றியை தங்க வைத்துக் கொள்வதாகும். இவ்வாறான போதனையை கிறிஸ்தவத்திடம் கண்டு கொள்ள முடியாது. கிறிஸ்தவம் உரைப்பது விண்ணுல விடுதலை என்பது பற்றியதே என்பதை முன்னர் பார்த்தோம். கிறிஸ்தவத்திற்கும், மார்க்சின் கொள்கைக்கும் நிறைவே மாறுபாடுகள் உண்டு. இரண்டும் வெவ்வேறு துருவங்களாகும்.
உலகக் கண்ணோட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையாது அதிலும் நிறுவனமயப்பட்ட சமயச் சடங்குகள் சில ஆயிரம் வரும் பழைமைதான். நாம் உருவாக்கியதற்கே அடிமையான மனிதன் அதிலிருந்து வெளியேறுவதும் பெரும் சிரமமான விடயம் தான். சாதி, சமய விடயங்களின் மீது ஒரு அடி முன்வைக்கின்ற போது பல அடி பின்னோக்கியே நகர்கின்றோம்.
„சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்தமட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர;க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒருசேர இணைக்கும் கழகமாகும். இப்படிப்பட்ட ஒரு கழகம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர;க்க உணர;வின்மை, அறியாமை அல்லது மூடத்தனம் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ....
மதத்தின் மூலமான எல்லாவித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமூக - ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகிய நமது கழகத்தை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய விவகாரமாகும். லெனின்-சோஷலிசமும் மதமும்
இங்கு கட்சி வேலை, முன்னணி வேலைமுறைகளில் உள்ள பிரச்சனைகள் முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கட்சியானது சாதி, சமயத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி விமர்சிக்க வேண்டும். ஒரு முன்னணி என்கின்ற போது வேலைமுறையில் ஏற்படுகின்ற தந்திரோபாய அடிப்படையில் சமயத்தின் மீதான அழுத்தம் இருக்க வேண்டியதில்லை. இங்கு ஒரு நெகிழ்ச்சிப் போக்கினை கடைப்பிடிக்கலாம் இல்லாவிடின் தீவிர மதவாதிகள் எம்மை வீழ்த்துவது இலகுவாக இருக்கும்.
ஆகவே நடைமுறை வாழ்வில் கட்சி வேலை, முன்னணி வேலை என்ற நிலைகளில் நிதானமாக செயற்பட வேண்டும். ஏனெனில் மதப்பாகுபாடுகளை இலகுவாக முதலாளித்துவ அரசியல் விளையாட்டுக்களுக்கு பலியாக வேண்டி இருக்கும். முன்னர் குறிப்பிட்டது போன்று அரசாங்கத்திடம் இருந்து மதநிறுவனத்தை பிரித்து மதம் என்பது தனிமனிதன் சார்ந்தது என்று சட்ட ரீதீயாக நிலைநாட்டிய மதச்சார்பற்ற பிரான்ஸ் நாடு. இன்று இஸ்லாமிய பெண் முகமறைப்புக் கொண்ட உடை அணிவதற்கு எதிராக கொண்டு வந்த சட்டம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இங்கு கட்சிக்கான நிலைப்பாடு முன்னணி வேலைமுறைக்கான நிலைப்பாடுகளில் இருந்துதான் நிலைப்பாடு எடுக்க முடியும். நாம் பிரான்ஸ் அரசின் நிலைப்பாட்டிற்கு உடன்படுமிடத்தில் முழுமையாக அன்னியப்பட்டவர்கள் ஆவோம்.
ஒரு கட்சியில் இருக்கும் ஊழியரின் அரசியல் முதிர்ச்சிக்கும் அல்லது அரசியல் மயப்பட்ட நிலைக்கும் முன்னணி ஊழியரின் அரசியல் மயப்பட்ட தரத்திற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதற்கு ஏற்றுபோல தந்திரோபாயத்தை வகுத்தல் வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் ஆவதோ கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பிராகவோ ஒரு மதச் சிந்தனையாளர் இருக்க முடியாது. கருத்து முதல்வாதமும் பொருள் முதல்வாதமும் ஒரு இடத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது.
ஆனால் ஒரு கட்சி ஆதரவாளர் அல்லது ஒரு முன்னணி அமைப்பில் வேலை செய்பவர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பது தவிர்க்க இயலாது. இங்கு மக்களிடம் கருத்தைச் கொண்டு செல்வது என்ற பிரச்சனை முன்நிலைப் படுத்தப்படுகின்றுது. அரசியல்மயப்படாத கட்டத்தில் முழுமையாக கடவுள், மதமறுப்புக் கொள்கையை முன்னிறுத்த முடியாது. ஒரு அமைப்பானது சமயத்தினை வெகுநுட்டபமாக சூழலுக்கு ஏற்ப அணுகி பிரச்சார யுத்திகளை பயன்படுத்துவது அவசியமானதாகும்.
அதிகபட்ச வேலைத் திட்டமானது புறநிலையை கவனத்தில் கொண்டு அகநிலைவாதத்தை தகர்ப்பதற்கும், அதற்கு பொருளாதார கட்டுமானத்தினை தகர்த்து அதன் மேல் கட்டப்பட்ட நிறுவனங்களை (சமயம், குடும்பம், அரசு, இராணுவம், சட்டம் இதரபல) ஆகியவற்றை உழைக்கும் மக்கள் நலன் பேனும் வகையான அரச அமைப்பை ஏற்படுத்த வேண்டும். முதல்கட்டம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், அதாவது சோசலிசத்தில் பழைய சிந்தனைகள் இடம்பெறும் காரணத்தினால் சோசலிச காலகட்டத்தில் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி அனைத்தும் உழைக்கும் வர்க்கத்தின் கையில் நிரந்தரமாக கிடைக்கும் வரையில் போராடுவதேயாகும். சோசலிச சமுதாயத்திலும் வர்க்கங்கள் இருப்பதினால் வர்க்கங்களுக்கு இடையே இடையறாது போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் தான் கலாச்சார புரட்சி மூலம் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வர அவசியமாகின்றது. இங்கே இரண்டு வேலைத் திட்டத்தில் முக்கியமான அம்சங்களை கவனித்தல் வேண்டும். அதாவது பொருளாதார அரசியல் சுதந்திரம், மற்றையது சிந்தனையில் மாற்றத்திற்கான போராட்டமாகும். இவை இரண்டையும் தவிர்த்து வர்க்கப் போராட்டம் நடத்த முடியாது.
மேற்குநாடுகள் பலவற்றில் உலகக் கண்ணோட்டம் என்று பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு அனைத்து மதங்களைப் பற்றி பயிற்றுவிக்கப்படுகின்றது. உலகக் கண்ணோட்டங்கள் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ள முடியும். இதனை அனைத்து பாடசாலைகளிலும், சிறுவயதில் இருந்தும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு பாடசாலைகளிலும் தனிமதத்திற்கான விசேட சலுகைகளை கிடைப்பதை தடுப்பதுடன், மதத்தை தனிப்பட்ட நிலைக்கு கொண்டுவருதல் வேண்டும். மதம் என்பது தனிப்பட்ட மனித விடயம் இவற்றை பொது இடங்களில் பிரத்தியோக அந்தஸ்தைக் கொடுப்பது தவிர்க்க முடியும்.

(Zionist theocracy)  சியோனிச மதவாட்சி
'எந்த நாட்டில் நீ புகுவாயோ, அந்த நாட்டுக் குடிகளை எல்லாம் கலங்கடித்து, நீ வரக் கண்டவுடன் உன் பகைவர் எல்லோரும் புறமுதுகுகாட்டியோடச் செய்வோம். நீ அவர்களுடைய நாட்டில் புகுவதற்கு முன்னர், நாம் பெரிய குளவிகளை அனுப்பி ஏனையரையும் கானானையரையும் ஏத்தையரையும் துரத்தி விடுவோம். அந்த நாடுகள் பாழாய்ப் போகாதபடியும், காட்டு விலங்குகள் பல்கி உன்னைத் துன்புறுத்தாதபடிக்கும், நாம் ஒராண்டிற்குள்ளே உன் முன்னின்று அவர்களைத் துரத்திவிடமாட்டோம். நீ பெருகி அந் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் வரை, அவர்களைச் சிறிது சிறிதாய் உன் முன்னிலையினின்று துரத்தி விடுவோம். (மேலும்) செங்கடல் தொடங்கிப் பிலித்தியரின் கடல் வரையிலும், பாலைநிலம் தொடங்கி ஆறு வரையிலும், உன் எல்லைகளை உங்கள் கைகளில் ஒப்படைப்போம். அவர்களோடும் அவர்களின் தெய்வங்களோடும் நீ உடன்பட வேண்டாம். அவர்கள் உன்னை எமக்கு எதிராகப் பழிசெய்யும்படி தூண்டாவண்ணமே, அவர்கள் உன் நாட்டிலேயே குடியிருக்க வேண்டாம்” (யாத்தியர் ஆகமம் 23:27-33)




-குணா- தமிழர் வரலாறு
-திருக்குறள் ஆராய்ச்சி-மறைமலைஅடிகள்
-லுத்விக்ஃபாயர்பாகும்.- ஏங்கெல்ஸ்
விவிலியம்
திருக்குறள் ஆராய்ச்சி-மறைமலைஅடிகள்
இந்துமா கடல் மர்மங்கள்- லெமூரியாக் கண்டம்- அலெக்சாந்தர் கோந்த்ரதோவ்
கிறித்துவத்தின் உள்ளீடு தேசிய இறையியலே
https://www.youtube.com/watch?v=tr5Kq56heIs
உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை
அருள் எழிலன் -முத்துக்களின் வரலாறு- பத்திரிகையாளர் தமிழ்நாடு
புதிய கலாச்சாரம் யூன் 2001)
ஆ. வேலுப்பிள்ளை தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், தமிழ்புத்தகாலயம்
மார்க்ஸ்-  மூலதனம்
வறுமையின் பின்னணி-
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்- லெனின்
முரண்பாடுபற்றி - மாவோ
Von Stietencron- Hinduism Reconsidered
யாழ்ப்பாணச் சரித்திரம் மு. இராசநாயகம்
புதிய கலாச்சாரம் யூன் 2001
பி. ஏங்கெல்ஸ் - குடும்பம். அரசு. தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்
லெனின் சோஷலிசமும் மதமும் 
கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய விடயங்கள் விரிவுரைகளில் இருந்தும், பொது நிகழ்வுகளும் அன்றாடக்குறிப்புக்களில் இருந்தும் எழுதப்பட்டதாகும்.