Popular Posts

Sunday, 21 July 2024

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்!

 

 

 Court  Icon 

இந்த ஆக்கம் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது. இது தொடர்ச்சியாக கிடப்பில் இருப்பதை விட பொதுவழியில் இருப்பது சிறப்பாக இருக்கும். இது இன்னும் திருத்தம் செய்யப்படவில்லை.  அரசியல் ரீதியான கோட்பாட்டுத் தவறுகளும் இதில் இருக்கும். இன்று அரசியல் ரீதியாக முதிர்ச்சி ஏற்படுகின்ற போது கருத்துக்களும் மாறுதல் அடையும். அரசியல் முதிர்ச்சி அற்ற காலத்தில் இருந்த கருத்துக்களையும் விமர்சியுங்கள். இன்று வந்தடைந்த அரசியல் நிலைப்பாடுகள் அண்மைக்கால ஆக்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இதில் ஏதாவது வரலாற்றுத் தரவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். நன்றி

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்!

 

சர்வதேச விசாரணை கோருவோர் கவனத்திற்கு!!!

 

இலங்கை குறை வளரச்சி கொண்ட முதலாளித்துவ வரலாற்றைக் கொண்ட தேசங்களில் முதலாளித்துவ நிறுவன அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சோல்பரி, டொணமூர் ஆணைக்குழு போன்றவற்றை அமைத்து அரசியல் சட்டங்களை சிபாரி செய்தும் உருவாக்கியும் கொண்டது. முதலாளித்துவ அரச நிறுவனத்தில் ஆணைக்குழு ஒரு முறைமை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்கள் என்பது தேசங்கள் தொடங்கி சர்வதேச மட்டத்தில் வெவ்வேறு அலகுகளில் உருவாக்கப்பட்டும் நீதியை நிலை நாட்டப்படுவதாகவும், நடுநிலையாக செயற்படுவதாகவும் காட்டப்படுகின்றது.

இன்று முள்ளிவாக்காலின் பின்னரான காலத்தில் கற்றுக் கொண்ட பாடமும் நல்லிணக்க ஆணைக்குழுவென அமைத்தும், பின்னர் அதற்குள் இராணுவம் தன்னைத்தானே ஆணைக்குழுவை நியமித்துக் கொண்டு தன்னை குற்றமற்ற இராணுவ அமைப்பாக பிரகடனப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் ஆணைக்குழுக்கள், சர்வதேச நீதிமன்றம், மேற்கு தேசங்களின் நீதிமன்றங்கள் என்பன என்ன தொழிற்பாட்டை செய்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியங்கள் காலனியாக்கத்தை மேற்கொள்வதற்காக சுதந்திர நாடுகளை நிர்ப்பந்திக்கின்றன. நிர்ப்பந்தங்கள் புலனுக்கு புலப்படக் கூடியதாகவும், புலனுக்கு புலப்படக் முடியாததாகவும் இருக்கின்றன. புலனுக்கு புலப்பட முடியாதவற்றை பொதுவுடமைக் கண்ணாடி கொண்டு பார்க்கின்ற போது தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கண்ணாடி சுரண்டும் சித்தாந்தத்தையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்த இலகுவாக இருக்கும். இன்றைய உலகத்தில் நல்லது கெட்டது என இரண்டு சித்தாந்தப் போக்கு இருப்பதாக கூறிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. உலகம் அப்படியல்ல சுரண்டும் வர்க்க நலன் மறைக்கப்பட்டு சந்தையை விஸ்தரித்துக் கொண்டு செல்கின்றன. இதற்கு பலவித ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு உலக வர்த்தக ஒன்றியம், சர்வதேச நிதி நிறுவனத்தின் நிபந்தனைகள், உலக வங்கியின் நிபந்தனை போன்றவற்றிற்கு நாடுகள் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். இத்துடன் தேவையான போது கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து ஐ.நாவின் பெயரில் பொருளாதார தடைகளை மேற்கொள்கின்றனர். இவைகள் வெற்றி பெறாத பட்சத்தில் இராணுவ நடவடிக்கைகள் இறுதியாக இருக்கின்றன. இதன் மூலம் வறிய நாடுகளுக்கும் எதிராக தமது இராணுவ வலிமையைக் காட்டி விடுகின்றன.

உலகின் பல பாகங்களில் நீதியை நிலைநாட்டவும், நடந்தவற்றை ஆராய்ந்து காரண கர்த்தாக்களுக்கு தண்டணை வழங்கவும் பல்வேறு வகையான நீதி விசாரணை மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை உள்நாடு, பிராந்திய வேறுபாடுகளுடன் கூடியதாக இருக்கின்றது. உள்நாட்டு அரசாங்கங்கள் தாமே நீதி விசாரணை குழுக்களை உருவாக்கிக் கொள்கின்றன. இன்று குறிப்பாக தென் ஆபீரிக்கா, குவாத்தமாலா, ரொவன்டா, இலங்கை, பழைய யூக்கோஸ்லாவியா, கிழக்கு தீமோர் ஆகியநாடுகளில் நீதி விசாரணை நடத்தப்பட்டன. நீதியை நிலைநாட்டும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் எந்த மனிதர்களுக்கும் துணையாகச் செயற்படாமல் எல்லோரையும் சமமாக நடத்துவதாக காட்டி நிற்கின்றன.

உள்நாட்டில் நீதியை நிலைநாட்ட எடுக்கப்படும் முறைகளில் பல வகைகள் உண்டு. அவைகள் நாட்டுக்கு நாடும், தேவைகளுக்கு ஏற்றவாறாகவும் மாற்றம் கொள்ளப்படுகின்றது. இவைகள் எல்லாம் இந்தச் சமூகத்தில் நீதியை வழங்க தயாராக இருப்பது போல் காட்டி நிற்கின்றன. நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பாவிக்கப்படும் சட்டங்கள் காலனித்துவ காலத்தில் வௌ்ளையர்களிடம் இருந்து அப்படியே பெற்றுக் கொண்டதாகும்.

நீதி மன்றம் என்கின்ற போது பல படி அமைப்புக்களைக் கொண்டதாகும். இவற்றை எடுத்துக் கொண்டால் ஒரு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காவிடின் மற்றைய மேல் நிலையில் இருக்கின்ற நீதி மன்றத்திற்கு வழக்கை மேல்முறையீடு செய்யப்படும். உச்ச நீதிமன்றத்திலும் நீதி கிடைக்காவிடின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகள் விசாரிக்கப்படுகின்றனர். குற்றங்கள் பல வகையாக இருக்கின்றன.

ஆட்சியாளர்கள் தாம் நியாகமாக நடப்பதாக நிலைநிறுத்தும் பொருட்டு ஆணைக்குழுக்களை நிறுவுகின்றனர். இந்த ஆணைக்குழுக்கள் விசாரணை செய்கின்றன. இவர்கள் விசாரணையின் முடிவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கின்றனர். சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தவுடன் பிரேமதாசா காலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் புதைகுழிகள் தோண்டப்பட்டன. சந்திரிக்கா உற்சாகமான செய்த விசாரணைகளை பலர் வரவேற்றிருந்ததுடன் அவர் மீது நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

ஆணைக்குழுக்கள் பல வகை இருக்கின்றன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களினால் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் இலங்கையில் இருக்கும் இனங்களுக்கு தேவையானவை எவை எது என்பதை அறிந்து கொள்ள ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. டொனமூர், சோல்பாி ஆணைக்குழு ஆகியவை இலங்கை மக்களுக்கு தேவையான உரிமைகள், கடமைகளை வரையறுத்துக் கொண்டது. இந்த ஆணைக்குழுக்கள் தேசிய இனங்களிடையே இருந்த வேற்றுமையைப் பயன்படுத்தி அவர்களை தொடர்ந்தும் நீண்ட காலத்திற்கு பிரித்து வைப்பதற்கு அடிகோலினர்.

இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் தன்னார்வ மனித உரிமை அமைப்புக்களையும் உருவாக்கிக் கொள்கின்றது. இது வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய மனிதவுரிமை அளவுகோளை பயன்படுத்திக் கொள்கின்ற போதிலும் இவர்களினால் ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலினால் பாதிக்கப்படும் மக்கள் சார்பான ஒரு சரியான நிலைப்பாடு எடுக்க முடியாது. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்களின ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் சுயபொருளாதார அமைப்பையும், வாழ்வாதாரத்தையும் பறித்தெடுக்கின்றது. பறித்தெடுக்கும் நிறுவனங்கள் மீதான எதிர்ப்பு நிலைப்பாட்டை தன்னார்வ மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொள்வதில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

இங்கு சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்திக் கொள்ளும் இறைமையைவிட மனித உரிமை முக்கியமானது என்ற என்ற கருத்து ஆதிக்கமும் இருக்கின்றது. இது பற்றிய பார்வையும் அவசியாகின்றது. இறைமை முக்கியமல்ல எனக்கூறிக் கொண்டு மனிதவுரிமையை வலியுறுத்துவது சுதந்திர தேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு. ஆனால் இந்த ஆக்கிரமிப்பை உள்நாட்டு அரசாங்கங்கள் தன் நலனுக்காக மற்றவர்களிடம் தமது இறைமையை விட்டுவிடுவதையும் நாம் கண்டு கொள்ள முடியாது.

மனித உரிமையைப் பாதுகாக்க புறப்பட்ட நவீன மனித உரிமைப் பாதுகாவலர்கள் மேற்கொள்ளும், மேற்கொண்ட நடவடிக்கைகள் எவ்வித பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை மூடி மறைப்பதற்கு இலகுவாக இருக்கின்ற சமூக அமைப்பும், தொடர்புச் சாதனங்களும், ஆதிக்கச் சக்திகளின் நடவடிக்கைகள் இலகுவாக அமைந்து விடுகின்றன. இவற்றில் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம், ஆசிய மனிதவுரிமைச் சங்கம் அல்லது மனிதவுரிமை கண்காணிப்பகம் அல்லது யாழ்மனிதவுரிமைக் காண ஆசிரியர் சங்கம் என்பனவும் இவற்றினுள் அடக்கும். கடந்த கால உதாரணங்களைக் காட்டி பாதகச் செயல்களுக்கு ஆதரவாக கருத்தினை உருவாக்கிக் கொள்ளும் நிலை நீடிக்கின்றது. இவை பற்றியும் ஆதிக்க விஸ்தரிப்பினை ஆதாரித்துக் கொள்ளும் எந்தச் சக்திகளையும் அடையாளம் கண்டு கொள்தல் அவசியமாகும்.

ஜனநாயகத்தை நிலைநாட்டத் துடித்துக் கொண்டிருக்கும் மேற்கு நாடுகள் தமது பாணியிலான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஜனநாயகம் எனக் கருதும் போது மேற்கு (Western archetype) மாதிரியான தேர்தல், பொருளாதார அமைப்பு, மற்றும் சமூக உறவுகள் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றே வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்கள் ஜனநாயகம் எனக் கொள்ளும் போது முதலாளித்துவத்தை தான் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவர், ஆனால் தொலைத் தொடர்புச் சாதனங்களை அழித்ததின் மூலம் தமது செய்தியை மாத்திரம் தான் கேட்க வேண்டும், உண்மையானது என்பது போல் யூக்கோ மீதான ஆக்கிரமிப்பில் காட்டிக் கொண்டார்கள். அமெரிக்காவில் பாடசாலை மாணவன் சக மாணவர்களை, ஆசிரியர்களை சுட்டுக் கொண்ட போது பிள்ளைகளுக்கு பேசித் தீர்த்துக் கொள்ள பெற்றோர்கள் பழக்கிக் கொள்ள வேண்டும் என கிளின்ரன் கேட்டுக் கொண்டார். அத்துடன் ரஸ்யாவின் செச்செனியா மீதான தாக்குதலின் போது அரசியல் ரீதியாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என மேற்குலம் கேட்டுக் கொள்கின்றது. இவர்கள் நீதியை பாதுகாக்க நினைப்பது வறிய மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்ல என்பதை வரலாற்று ஓட்டத்தின் அவதானித்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் சர்வதேச விசாரணைக்கு எதிராக பிரத்தியோகமான வேலைமுறையை மேற்கொள்ளாது. ‘‘சர்வதேசியம் சர்வதேசியம் என அயராது உரைக்கும் ‘‘சிவப்பு” சர்வதேச விசாரணை” என்றவுடன் ”காவியுடன்” கைகோர்த்து விடுகிறது.”

மனித உரிமைககள் பற்றி

நீதியை நிலைநாட்டுவது பற்றி உலகின் பாகங்களிலும் உள்ளவர்கள் எல்லோராலும் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் முழுச் சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து நோக்காது, தனிமனிதனில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில் அமைந்திருக்கின்றது. மனித உரிமைகள் பற்றி 1975 இல் கெல்சிங்கியில் (பின்லாந்து) சுற்றில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இது குறிப்பாக சோசலிச சமூக அமைப்பிற்கு நேர்மாறான கருத்தை வலியுறுதிக் கொண்ட இந்த நிலைப்பாடானது அன்றையக் காலத்தில் பிரஸ்சிநேவ் தலைமையில் இருந்த சோவியத் ஒன்றியம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பின் இடையே தொடர்ச்சியாக அமெரிக்க மனித உரிமை பற்றி இன்று வரைக்கும் வலியுறுத்தி வருகின்றது. மேற்கு தேசங்களின் மனிதவுரிமைக் கோரிக்கையானது கட்டுப்பாடற்ற உழைப்பாளிகளை கோரியதான நிலைப்பாடுகளில் இருந்து அமைந்திருக்கின்றது.

அமெரிக்கா வலியுறுத்திக் கொள்கின்ற மனித உரிமையை இங்கே பார்ப்போம். “மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாதவாறு தடுத்தல்- தனக்கு விருப்பமான தலைவரை அல்லது அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியாதவாறு மக்களின் அபிலாசைகளை அடக்கி விடுதல் இதை விட மேலாக சிறைச்சாலைகளில் சித்திரைவதைகள், அரசியல் எதிரிகளை கைது செய்தல் அவர்களை சித்திரைவதை செய்தல்-

போர் அல்லது உள்நாட்டு யுத்தம் இடம்பெறும் நாடுகளில் இராணுவத்தின் கொடுபிடி, சட்டவிரோதக் கொலைகள் இவைகள் தான் மனித உரிமைப் பிரச்சினைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சாவேஸ் இறந்த பின்னர் அமெரிக்க செனற்சபை உறுப்பினரிடம் பேட்டி கண்ட மேற்கண்டவாறான கருத்தை வெளிக்கொணர்ந்தார். வெனிசுவேலா என்ற நாட்டில் குறைந்த பட்சமாக முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும், சமூக ஜனநாயகச் சீர்திருத்தங்களை அனுமதிப்பதற்கு அண்டைய ஏகாதிபத்தியமான அமெரிக்கா தயாராக இல்லை.

ஆனால் மனித உரிமைப் பிரச்சனை, அரசியல் உரிமைகள், கருத்து வெளியிடும் சுதந்திரம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பனவற்றுக்கு அனுமதி இவைகள் ஓரளவுக்கு தாராளமாக வழங்கப்பட்டுவிட்டால் அங்கு மனித உரிமைகள் மதிக்கப்படுவதாக அர்த்தம் ஆகிவிடாது. அரசாங்கம் தனது மக்களுக்குத் தேவையான கல்வி வசதிகள், வீட்டு வசதிகள், வாழ்க்கைத் தரவ வசதிகள், பொருளாதார வசதிகள் இப்படி அனைத்து வசதிகளையும் ஓரளவுக்காவது திருப்திகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு இவை மிகவும் அத்தியாசியமான தேவையாகும். இறையாண்மையுள்ள தன்மானங்கொண்ட தேசிய அரசுகளையும் நவதாராளவாதம் அனுமதிப்பதில்லை. நவதாராளவாதக் கொள்கையானது கபடங்கொண்டு தனது வர்த்தக நலனை கவனத்தில் கொள்கின்றது.

மேற்குறிப்பிட்ட நிலையில் இருந்த பார்க்கின்ற போது அடிப்படை வசதியில்லாமல் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியத்தில் பல மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இன்றைய மறுபாகங்களில் உள்ள மக்கள் அமெரிக்காவில், மேற்குலகில் தேனும் பாலும் ஓடுவதாக கனவு காண்கின்ற மக்களைப் பொறுத்த வரையில் அமெரிக்காவைப் பற்றி எழுதுவது நம்பத் தகாதாகத் தான் இருக்கும். எனினும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் அமெரிக்கா வரையறுத்துக் கொள்கின்ற மனித உரிமை வரையறைக்கு உட்பட்டு செயற்படுகின்றனவா என்பதை ஊடக, தொலைத்தொடர்புச் சாதனங்கள் இவைபற்றி அக்கறை கொள்வதில்லை.

1988 ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். ஸ்ரிபன் (Little Stevan) என்ற பாடகர் தனது பேட்டியில் பேச்சு சுதந்திரம் அமெரிக்காவில் இருக்கின்றதா? எனக் கேட்டபோது இல்லை என்றே கூறினார். அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்வு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் அமெரிக்க மத்திய அரசு தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாக 53 வீதமான மக்கள் கருதுவதாத தெரியவந்துள்ளது. அமெரிக்க அரசு தமது சொந்தத தனிப்பட்ட உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக 53 வீதமான அமெரிக்கர்கள் கருதுவதாக அறிவிக்கும் இக் கருத்துக்கணிப்பு அமெரிக்கா உள்நாட்டிலும் தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அதிகரித்து வருவதை காட்டுகின்றது.

உரிமைகள் எனப்படுவதும், உரிமைகள் மீறப்படுதல் என்பது ஒரு வர்க்கம் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அழித்துக் கொண்டிருக்கின்ற போது அங்கு மனித உரிமைகளைப் பேசுவது வேடிக்கையானதாகத் தான் இருக்க முடியும். உலகில் இருக்கின்ற கொடிய அரசுகளுக்கு ஆயுதமும் ஆலோசனைகளும் வழங்கி வரும் நாடு அமெரிக்காவும், அவர்களின் கூட்டாளி நாடுகளுமே முதன்மை வகிக்கின்றன. இவர்களுடன் உலகை பங்கிட்டுக் கொள்ள சீனமும், ரஸ்யாவும் ஓரணியில் இருந்து மூலவளத்தை தமதாக்குவதில் போட்டி போட்டு இரத்தக் களரியை ஏற்படுத்துகின்றார்கள்.

 

ஐ.நா நீதி மன்றம்

1919 இல் கூடப்பட்ட வர்சாய் (பிரான்ஸ்) மாநாட்டில் அரசியல் விடயங்கள் தனியாக ’’மக்கள் சபையிலும்” முன்னர் ஐ.நா சபை உருவாக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த உலக ஒன்றியம்) சட்ட ரீதியானவைகள் தனியான அமைப்பிலும் கையாளப்பட வேண்டும் என முடிவுவெடுக்கப்பட்டது. எனினும் அரசியல் எது சட்ட ரீதியான பிரச்சனை எது பிரித்துப் பார்ப்பதில் சிக்கல் இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் பல சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக முன்கொண்டு வரப்பட்டன. முன்வைக்கப்பட்ட விடயங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. இதில் குறிப்பாக கடல்பரப்பு எல்லை, மீன்பிடிப்பு எல்லை உட்பட் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் குறிப்பாக 1970 களில் ஐ.நா நீதிமன்றம் முக்கியத்துவம் பெற்றது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் காக் (Hauge) என்ற நகரில் அமைந்திருக்கின்றது. இந்த நீதிமன்றத்தில் குறிப்பாக 1970 களில் தென் ஆபீரிக்கா, நமீபியா மீது கொண்டுள்ள கட்டுப்பாடு பற்றி உரிமை பற்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பானது தென் ஆபீரிக்கா கொண்டுள்ள கட்டுப்பாடு செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1984 இல் நிக்கரகுவா என்ற லத்தீன் அமெரிக்க நாடானது காக் நீதி மன்றத்தில் அமெரிக்காவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது. அமெரிக்காவானது நிக்கரகுவா நாட்டின் உள்நாட்டு விடயத்தில் தலையிடுவதும், குழப்ப சக்திகளுக்கும் உதவுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஏற்று காக் நீதிமன்றம் விசாரணையின் பின்னர் நிக்கரகுவாவிற்கு நட்ட ஈடு வழங்கும் படியும், குழப்பச் சக்திகளுக்கு உதவுவதை நிறுத்தும்படியும் காக் விதித்திருந்தது. ஆனால் வழமைபோல அமெரிக்கா தட்டிக் கழித்தது.

குவைத்- ஈராக் எல்லைப் பிரச்சினை சர்தேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியதாகும். ஐ.நாவின் 36 சரத்தின் படி காக் (The Hague) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறாமல் பாதுகாப்புச் சபையில் பிரச்சனை கையாளப்பட்டது. இதற்கு மாறாக பணம் படைத்த நாடுகள் பாதுகாப்புச் சபையில் பிரச்சனையை கையாண்டு ஈராக்கின் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்தது.

இதேபோல் 1988 இல் என்ற Lockerbie விமானம் 270 பயணிகளுடன் ஆகாயத்தில் வைத்து விமானம் குண்டு வெடிப்புக்கு உள்ளாகியது. இதில் லிபியா நாட்டவர் இருவர் குற்றவாளிகளாகவும், லிபியா இதற்கு துணை நின்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த இரண்டு சந்தேக நபர்களை ஒப்படைக்கும் படி கோரியது அமெரிக்காவும், பிரித்தானியாவும். இரண்டு பணம் படைத்த நாடுகளும் லிபியா மீது வர்த்தகத் தடையை விதித்திருந்தது. இரண்டு பெரிய நாடுகள் இரண்டும் காக் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக 1987 (Montreal) மொன்றியல் சாசனத்தின் படி லிபியாவே நீதி விசாரணை நடத்த முடியும் என்று எதிர் மனு சமர்ப்பித்தனர். இதனை 11 க்கு 5 என்ற பெரும்பான்மையில் லிபியாவின் மனு நிகராகரிக்கப்பட்டது. இன்று இரண்டு சந்தேக நபர்களும் காக்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னரே பலவருடங்களுக்கு முன்னர் பொருளாதாரத் தடை விலக்கப்பட்டுள்ளது.

Human Rights Watch என்ற அமைப்பு சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனக் கோருகின்ற உகண்டா சர்வாதிகாரி இடி அமீன் (சவுதி அரேபியாவில் தஞ்சம்)

எத்தியோப்பிய அதிபர் (Mengistu Haile Mirian) மென்கிஸ்து (சிம்பாவேயில் தஞ்சம்)

கெயிற்ரி - (Jean-Clude Duvalier) ஜான் கிளவ்ட் (பிரான்ஸில் தஞ்சம்)

பொலீஸ் அதிபர் (Raul Cedras) ரவுள் (பனமாவில் தஞ்சம்)

சாட் - (Hissein Hebre) கிஸ்சான் ( செனகலில் தஞ்சம்)

பரகுவாய்- (Alfredo Stroessner) அல்பிரடோ (பிரசீலில் தஞ்சம்) ஆகியவர்களை

இன்றைக்கு ஜனநாயகத்தை உலகிற்கு கற்றுத் தருகின்ற மேற்குல, அமெரிக்க பணக்கார நாடுகள் இந்தோநேசியா சுகர்னோ, சிலி பினோச்சே, பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ், ஸ்பெயின் பிராங்கோ, கொங்கோ, தென் ஆபீரிக்கா, ஈராக், பாக்கிஸ்தான், பங்களாதேஸ், மற்றும் பல தென் அமெரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகளை ஆதரித்து வந்துள்ளது. இவை மாத்திரம் அல்ல இனவெடுக்கல் நடைபெறுகின்ற நாடுகளில் உதவி புரிந்து வந்துள்ளன. குறிப்பாக இலங்கை, இஸ்ரேல் பல நாடுகள் மீது நல்லுறவைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் உதவிகளை கொடுத்துக் கொண்டு வருகின்றன. வரலாற்றில் அமெரிக்க நேரடியாக ஆக்கிரமிப்புச் செய்த நாடுகள் பல இருக்கின்றன. கொலனித்துவ முடிவின் பின்னால் நாடுகளைப் பிடிக்கும் ஏகாதிபத்தியக் கொள்கைகளை விஸ்தரித்துக் கொண்டது. இதன் பின்னர் அமெரிக்கா பல நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. வியட்னாம், வாவோஸ், கம்பூச்சியா, கிரனடா, பனமா, ஆகிய நாடுகளை பிரான்ஸ், அமெரிக்க நாடுகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

இதைவிட கடந்த பத்து ஆண்டுகளில் லிபியாவில் குண்டு போட்டது இதில் கடாபியின் மகள் 3வயது கொல்லப்பட்டதுடன் கடாபியின் வாசல்ஸ்தலம் விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியயது. குறிப்பாக அன்னிய நாட்டின் வாசல்ஸ்தலங்களுக்கு குண்டு போட்டது ஒரு தலைவரை கொலைசெய்யப்படும் முயற்சிக்கு ஒப்பாகும். வௌ்ளை மாளிகைக்கு ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதனை ஒரு தனிநபர் மேற்கொண்டாதாக கூறப்பட்டது. ஆனால் இந்தத் தனிநபர் தனது வெறுப்பைக் காட்ட மேற்கொள்ளப்பட்ட அடையாளத் தாக்குதல் எனக் கொள்ளப் போவதில்லை. ஆனால் ஒரு தனிநபர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடையாளத் தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் ஒரு நாட்டு அரசு, ஒரு இராணுவக் கூட்டணி ஒரு நாட்டின் தலைவரின் இருப்பிடத்தின் மீது குண்டு போடுவது ஒரு நாட்டின் தலைவரை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியாகவே கருத வேண்டியிருக்கின்றது. யூக்கோஸ்லாவியா மீது தொடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதலில் மிலோசவின் இருப்பிடத்தின் மீதும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கில் சதாம் குசைனின் மகள் வீட்டிற்கும் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்பொழுது யூக்கோவின் அரசாங்கத்தில் இடம்பெறும் Mirco Marjanovic சேர்பிய பிரதமர்

Mmomir Bulatovic - யூக்கோஸ்லாவிய பிரதமர்

Dragyan Tomic -நாடாளுமன்ற சபாநாயகர்

Milan Militinovic - சேர்பிய பிரதமர் ஆகியோர் மீதும் மிலோசவிச் மீதும் ஐ.நா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, இவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

மேற்கின் தாக்குதலால் மிலோசவிச்சினை பலவீனப்படுத்த வேண்டுமென்றால் அவரைச் சுற்றியுள்ள நபர்களின் வருவாக்கு உறுதுணையாக இருக்கும் நிலைகளை அழித்தனர். மிலேசவிச்சை பணிய வைக்க முடியும் என நேட்டோவினால் நம்பப்பட்டது. இதனால் பல முக்கிய நிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகியது. இதே போல கருத்தை முன்வைத்து ஈராக் மீதும் தாக்குதல் நடத்தினர். ஈராக்கின் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு காரணமாக அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தல் எனவும், ஈராக்கிடம் இருக்கின்ற இரசாயன, பௌதீக ஆயுதங்கள் மனிதகுலத்திற் ஆபத்தானது எனவும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர், ஐ. நாவின் தீர்மானத்திற்கு பணிந்து நடக்கவில்லை, பரிசோதகர்களுடன் ஒத்துழைக்க வில்லை என குற்றம் சுமத்துகின்றனர். இந்தத் தாக்குதலில் மூலம் ஈராக்கின் இராணுவ நிலைகளையும், ஆயுத உற்பத்தியையும் தாம் நீண்ட பின்னடைவிற்கு உள்ளாக்கியதாகவும் பென்ரகன் தெரிவித்தது.

யூக்கோஸ்லாவியா, ஈராக் தாக்குதல் சர்வாதிகாரிகளை அடக்குவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என பிரச்சாரப்படுத்தப்பட்டாலும் பொருளாதார நலன்பால் கொண்ட ஏகாதிபத்திய விஸ்தரிப்பு எண்ணம் இருந்ததை திட்டமிட்டு மறைக்கின்றனர். இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வெளிவரப்படும் தரவுகளை மிகச் சிறப்பாக, கச்சிதமாக பாவிக்கின்றனர். இவற்றை இங்கு கவனிப்போம் மிலோசவிச் ஒரு கொடுமையான மனிதர், பார்ப்பதற்கு சாதுவாக தென்பட்டாலும், உள்ளத்தில் கொடூரம் நிறைந்த மனிதர், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பல தந்திரோபாயங்களைப் மேற்கொள்கின்றார். தன்னை ஊழல் பேர்வழி எனக் காட்டிக் கொள்வதில்லை, இதில் கவனமாக உள்ளார். இவர் சிலாவிய (slav) பெருமையை உயர்த்திப் பிடித்து தேசிய வெறியைப் பரப்புகின்றார் என நேட்டோவினால் (NATO) பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நாசிச சக்திகளின் ஆதரவு, அத்துடன் ஐ. நா நீதிமன்றத்தில் குற்றம் பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட (Arkan) அர்க்கான் என்ற ஆயுதக் கும்பலின் தலைவர் ஆகியோரின் கொசவோ மக்கள் மீதான வெறிநடவடிக்கைகள் பிரச்சாரத்திற்காக பாவிக்கப்பட்டது. இத்துடன் அகதிகளின் வெளியேற்றம் நேட்டோ நாடுகளுக்கு அரிய வாய்ப்பாகவும் இருந்தது. ஏற்கனவே பாதகமான செயலைச் செய்தவர்கள் என்ற கருத்தோட்டம் நிலவியதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நேட்டோவின் பொருளாதார சந்தையின் விஸ்தரிப்பை மறைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்தம் மிலோசவிச்சின் உதவியுடன் பிரச்சனைகள் இன்றி மறைக்கப்பட்டதுடன். நீண்ட காலத்தில் சந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையை அடைந்து விட்டது.

 

ஐ.நா ஊழியர்களை தண்டிப்பது யார்?

ஐ.நாவின் ஊழியர்கள் பொதுவாக அரசியல் நாடு பேதமில்லாது நடக்குமாறு கோருகின்றது. இவர்கள் பொதுவாக வேலை செய்ய முற்பாட்டாலும் புற நிலை இவர்களை அனுமதிப்பதில்லை. இதற்கு இவர்கள் கொண்டுள்ள சிந்தனை முக்கியமாகின்றது. இவ்வாறான தனிநபர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை கொள்கின்றனர் என்பது உண்மை. ஆனால் இதில சிறிய வித்தியாசம் இருக்கின்றது. பொதுவுடமையாளர் சிந்தனையில் பார்க்கின்ற போது இவர்கள் சுரண்டல் அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொள்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளாவிடினும் இதுவே இன்றைய சமூக நியதியாக இருக்கின்றது. ஈராக் மீது இவ்வூழியர்கள் நடந்து கொண்டார்கள் எனப்பார்ப்போம்.

ஈராக் வெளிநாட்டமைச்சரான Mohammed Said al-Sahof பத்திரிகையாளர் மாநாட்டில் பரிசோதகர்கள் அரசியல் தலைமையகத்தையும், முன்னைய பாதுகாப்பு அலுவலகத்தையும், வௌ்ளிக் கிழமை அன்று குறிப்பிட்ட இடத்தை பார்வையிட வேண்டும் என கோரியபோது, வௌ்ளிக்கிழமை ஆகையால் தமது அதிகாரிகள் இல்லாது தனியே செல்ல முடியாது என ஈராக் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பார்வையிடச் சென்ற இடத்தில் 45 நிமிடம் பிந்திவிட்டதாக ஐ. நா அதிகாரிகள் முறைப்பாடு செய்தனர். ஆனால் 20 நிமிடமே தாமதமாகியதாக கூறுகின்றனர். இத்துடன் மாத்திரம் நிற்காது. பக்தாத் சர்வகலாசாலை முதுநிலை மாணவர்களை பேட்டிகான வேண்டும் என Diana Simon கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை ஈராக் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மேலும் 427 சந்தர்ப்பங்களில் ஒத்துழைத்துள்ளனர் ஆனால் ஐ. நா அதிகாரிகள் ஈராக் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என கூறினர். 14.12 98 இல் ஐ.நா விற்கு ஈராக் அனுப்பிய கடிதத்தில் தாம் ஒத்துழைப்புக் கொடுக்க சம்மதிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்தக் கடிதத்தைப் பற்றி சர்வதேசம் கேள்வி எழுப்பவில்லை என கூறினார்.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் பின்னராக ஈராக்கும், ஏகாதிபத்தியங்களும் மாறி மாறி குற்றம் சாட்டினர். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிடின் தம்பி தண்டப் பிரசங்கம் என்பது போல் வலுத்தவர்களின் குரல் தான் மேல்லாண்மை கொண்டது. New York Times, Wall Street Journal, Boston Globe, Washington post போன்ற பிரபல பத்திரிகைகள் அமெரிக்கா ஐ. நா அதிகாரிகளின் தகவல்களை பாவித்ததாக அம்பலப்படுத்துகின்றன.

ஐ.நாவின் பெயரை துற்பிரயோகம் செய்யதாக அமெரிக்கா மீது ஈராக் குற்றம் சாட்டியது மட்டும் அல்லாமல் ஐ. நா அதிகாரிகள் இறுதிக் காலகட்டதில் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்த முன்னேற்பாடுகள் நடைபெற்றதாகவும், ஐ. நா அதிகாரிகள் 5 மேற்கு நாடுகளுக்கு உளவு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இவற்றை தலைமை பரிசோதகர் Richard Butler மறுத்துள்ளார். ஆனால் தற்பொழுது அமெரிக்க உபகரணங்களை தாம் பாவித்தகதாகவும் ஏற்றுக் கொண்டுள்ள இவர் Rolf Ekeus என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் செய்திகளை சேகரிக்கும் பொருட்டு அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததாக மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார். இப்படி குற்றம் சுமத்துவதும் ஏகாதிபத்தியங்களுடன் ஓத்துழைப்பது என்பது ஒன்றும் புதுவிடயம் அல்ல.

ஆனால் முன்னால் தலைமை பரிசோதகரான Scott Retter என்பவர் தாக்குதல் நடைபெறுவதற்கு முதலாக ஈராக்கினை ஆத்திரப்படுத்தும் முயற்சியிலும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரான கிழமைகளில் நடைபெற்றதாகவும் இதன் மூலம் அதிகார பலப் பிரயோகத்தை பயன்படுத்துவதை நியாயம் கற்பிக்க முடியும் என கருதி செயற்பட்டதாக முன்னால் பரிசோதகர் தெரிவித்தார்.

ஈராக் பரிசோதகர்கள் திரும்பவும் தம் நாட்டுக்குள் வரஅனுமதிக்கு மாட்டாது எனவும் புனர்வாழ்வு ஊழியர்களை மாற்றும் படியும் கோரிக்கை விட்டனர். உதவி நிறுவனங்கள் சட்டத்திற்கு முரணாக வட ஈராக்கில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதில் British mine adversory group என்ற கண்ணிவெடி அகற்றும் அமைப்பும் இவற்றில் ஒன்றாகும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ஈராக்கில் இருந்ததாகக் கூறப்பட்ட மனித இனத்தை (weapons of mass destruction) அழிக்கும் சக்தி கொண்ட ஆயுதங்கள் இருப்பதான ஈராக் மீது சோதனை நடத்தப்பட்டது, இறுதியில் ஈராக் மீது ஆக்கிரமிக்கப்பட்டது எல்லாவற்றிற்கும் பின்னால் ஐ.நா ஊழியர்களின் பங்கும் இருப்பதை மறுத்துவிட முடியாது.

இவ்வாறான சர்வதேசிய அரங்கில் தனிநபர்களின் வேகமான செயற்பாட்டுத் திறனும் முக்கிய பாத்திரத்தினை வகிக்கின்றது. அதில் அங்கம் வகிக்கும் நபர் (வர்க்கத் சார்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்) வேகமாக செயற்படுவர். ஒவ்வொரு தனிநபர்களும் தாம் பெரும் சாதனையை நிலைநாட்டுவதாக எண்ணிக் கொள்கின்றனர். இதனால் வேகமாக செயற்பட்டுக் கொள்கின்றனர். ஏகாதிபத்திய நலனுக்காய் இருக்கின்ற ஊடகவியலாளர்களும், தொலைத் தொடர்புச்சாதனங்கள் பிரச்சனையை முக்கியத்துவப்படுத்திக் காண்டுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு அவர்களை குறிப்பிட்ட பிரச்சனையில் ஈடுபடும் படி ஆவலையும் ஊட்டுகின்றனர். ஆனால் நடைமுறை வாழ்வில் ஐ. நா அதிகாரிகள் பணம் படைத்த நாடுகளின் நலனைப் பாதுகாக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறானவர்களையே முள்ளிவாய்க்கால் இறுதிக் காலத்தில் தம்முடன் மக்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் மக்களுடன் நிற்காது முழு ஐ.நா ஊழியர்களும் வெளியேறினார்கள். இன்று ஐ.நாவும் தம்மீது ஒரு குழுவை அமைத்துக்கொண்டு இறுதி யுத்தகாலத்தில் தாம் தவறு விட்டதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் ஒரு நாட்டின் நீதிமன்றம், அரசாங்கம் என்பது எவ்வாறு பாரபட்சமாக இயங்குகின்றதோ அதேபோலதான் பூகோள ரீதியில் இயங்கும் பெரும் அமைப்புக்களும் ஒரு குறிப்பிட்ட சக்திகளின் நலனின் பின்னால் இயங்குவதுமாகும்.

முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய, அமெரிக்க, சீன அரசுகளின் செயல்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்வதேச் சமூகமாய் விரிந்து நிற்கிற ஐ. நாவின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையில் மௌனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டும்.

நீதியை பெரும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் இந்த சர்வதேச அரங்கம் இலங்கை அரசுடன் கூட்டிணைந்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஐ. நா நேர்மையற்று நடந்து கொண்டதை சர்வதேச மக்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமும், வரலாற்று கடமையும் நமக்கு இருக்கிறது. இதன் மூலமே நமக்கு நிகழ்ந்த அநீதியின் முழு பரிமாணத்தினை உணர்த்த இயலும். இதுவே நமக்கு இதுகாரும் மறுக்கப்பட்டு வந்துள்ள சர்வதேச அங்கீகரம் மீளப்பெருவதற்கான வாதத்தினை தமிழ்ச் சமூகம் முன்வைக்க இயலும்.

இன்றையப் போராட்டங்கள் ஐ. நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமாய் , அந்த அதிகாரிகளை விசாரிக்கவும், அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையும் திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் இனப்படுகொலையில் ஐ. நாவின் பங்கேற்பினை அறிந்து கொள்வதும், ஐ. நா திட்டமிட்டு போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்கிற பழியை தமிழர்கள் மீது சுமத்தியதை அம்பலப்படுத்த முடியும்.

வன்னிப் படுகொலைகள் காலத்தின் போது ஐ.நா இன் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஒருவரை ஐ.நா நியமித்தது.

ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை கூட ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார்.

கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

எனினும், அவர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டு அறிக்கை வெளிவந்தது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்ட யுத்தத்திற்கு முன்னர் ஐ.நா தனது ஊழியர்களை விலக்குவதாக கூறிக் கொண்டது. இரண்டு பக்கம் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தனது ஊழியர்களை பாதுகாக்கவென உலகிற்கும் தமிழ் மக்களுக்கும் கூறிக் கொண்டது. ஆனால் வல்லமையும், ஆழுமையும் கொண்ட ஒரு அமைப்பு சண்டை பிடிப்பவர்களை நிறுத்த முயற்சிக்காது தனது ஊழியர்களை நொண்டிச் சாட்டுச் சொல்லி விலக்கிக் கொண்டது. இப்போ நான் அடிக்கிறமாதரி அடிப்பேன் நீ அழுவது போல் அழு என்பது போல தன்மீது ஒரு ஆணைக்குழுவை நியமித்து இனிவரும் காலத்தில் இவ்வாறான தவறுகளை எவ்வாறு களைவது என பாடம் கற்றுக் கொள்வதாக உலகிற்கு படம்காட்டினார்கள் ஐ.நாவும், அதன் செயலாளரும், மற்றைய ஊழியர்களும் போர்க்குற்றவாளிகளே.

 ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு

இரண்டாம் யுத்த காலத்தில் குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் முகமாக (Nurnberg) நூரன்பேக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த நீதிமன்றம் இன்னும் எத்தனையோ வழக்குகளை விசாரித்து முடிப்பதில் போதிய வளம் இன்றி கிடப்பில் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ச்சியாக நாடுகள் நாசிச படையைச் சேர்ந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பணி நூற்றுக்குநூறு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது எனக் கூறிக் கொள்ள முடியாது. தற்பொழுது ஐ.நாவின் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டும் வருகின்றனர்.

யுத்தங்கள் பல நடந்துள்ளன. ஆனாலும் நாசிமானது மற்றையை நாடுகளை ஆக்கிரமித்து நாடோடி இனத்தவர்களான சிந்து, ரோமா மற்றும் யூத இனத்தையும் கம்யூனிஸ்டுக்களையும், தேச பக்தர்களையும் அழித்து ஒழித்தனர். இவர்களை யேர்மன் தமது நாட்டு நீதி மன்றமே தண்டித்திருந்தது. அதேவேளை வெவ்வேறுநாடுகள் இரண்டாம் யுத்தத்தில் நாசிசப் படைகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்ட்டு அந்த நாட்டு நீதி மன்றங்கள் தண்டனை கொடுத்தன. இந்த ஆண்டு பிரான்ஸ் ஒரு நாசிக் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தது. (இவர் தப்பிச் சென்று பின்னர் சுவிஸ் இல் கைது செய்யப்பட்டார். எத்தனையே குற்றவாளிகள் ஆர்யெந்தீனாவிலும் தஞ்சம் அடைந்தனர்.)

ஐ.நாவின் தலைமையில் மனித உரிமைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்ற நாடுகளில் மனித உரிமைகளின் மீறல்களை விசாரித்து வருகின்றனர். இவ்வாறான ஆணைக்குழு கௌத்தமாலா, கொசவோ, பழைய யூக்கோஸ்லாவியா போன்ற நாடுகளில் இருக்கின்றன. தற்பொழுது கிழக்கு தீமோருக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நியமிப்பதில் சீனா உட்பட பல ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்தும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவில் விதிகளின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் பிரித்தானியா முன்மொழிந்திருந்தது. 8900 துருப்புக்கள், 200 இராணுவக் கண்காணிப்பாளர்கள், 1640 பொலிசார் இடம்பெறவேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டது.

இவ்வாறே பணம் படைத்த நாடுகளின் நீதிமன்றத்தில் பனாமா நாட்டின் அதிபராக இருந்த மனுவல் நொரேகா என்பவர் அமொpக்காவின் நண்பானாக இருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்காத காரணத்தினால், அல்லது அமெரிக்காவிற்கு வரவேண்டிய போதைப் பொருளினால் வரவேண்டிய வருமானத்தை தடைசெய்ததால் என்னவோ பனாமாமீது ஆக்கிரமித்து அமொpக்கா கைதுசெய்தது.

இதற்கு இன்றுமொரு உதாரணமாக சிலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த பினோச்சே பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே நேரத்தில் ஸ்பானிய நீதிமன்றத்தில் காணாமல் அல்லது கொல்லப்பட்ட ஸ்பானிய தேசத்தவர்களின் மறைவிற்கு பினோச்சே பொறுப்பாளி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. வழக்கைத் தொடரும் பொருட்டு பினோச்சேயை ஒப்படைக்கும் படி ஸ்பானியா கோரிக்கை விட்டது. இதனைப் பரிசீலனை செய்த பிரித்தானிய நீதிமன்றம் இறுதியாக ஸ்பானியாவிடம் ஒப்படைக்கும் படி தீர்ப்புக் கூறியுள்ளதுடன், ஒப்படைக்கக் கூடிய நிலையில் பினோச்சேயின் உடன் நிலை இருக்கின்றதா என மருத்துவ பரிசோதனை செய்யும் படி உத்தரவும் இட்டுள்ளது.

1977 இல் மேற்கு ஜேர்மன் விமானத்தை கடத்தியதாகவும், பயணிகள் சிலரை கொலை செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டு அந்திராவஸ் சுகைலா என்ற பலஸ்தீன விடுதலைப் போராளி நோர்வே நாட்டில் கைது செய்யப்பட்டு ஜேர்மன் நாட்டில் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விசேட படையினரால் விமானக் கடத்தல் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அவர் சோமாலியா நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்தவர். ஜேர்மன் நாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர் மொனிக்கா காஸ் என்ற ஜேர்மன் செம்படையைச் சேர்ந்தவர் தொடர்பான செய்தியை சேகரிக்கும் முகமாகவும், சுகைலாவை மொனிக்கா காஸிற்கு எதிராக சாட்சி கூறக் கூடிய நிலையில் ஒரு சாட்சியை தேவையை நோக்கமாகவும் கொண்டு ஜேர்மன் அரச சட்டத்தரணி முயற்சித்தார். எனினும் சுகைலா செம்படைப் உறுப்பினருக்கு எதிராக சாட்சி கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான தொடர்ச்சியாக கிழக்கு ஜேர்மன் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் மீது கிழக்கு ஜேர்மன் ஒன்றினைவிற்கு முதல் அகதிகளை கொல்வதற்கு ஆணையிட்டதாகக் கூறி கிழக்கு ஜேர்மன் ஜனாதிபதி நீதி மன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் கட்சியின் செயலாளராக இருந்த Dgon Krenz என்பவரை 6 அரை வருடங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் செய்த குற்றம் கிழக்கு ஜேர்மனியில் குற்றம் அற்ரது என வாதிடும் அவர் வெற்றி பெற்றவர்கள் இட்ட சட்டமே செல்லுபடியாகியுள்ள நிலையில் தனது நியாயமான நிலைப்பாடு செல்லுபடியாகாது எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த காலத்தைப் பற்றி குறிப்பிடும் போது கிழக்கு ஜேர்மன் செயல் இழக்கப்பட்டதை "Anschluss" ” என அழைக்கின்றார். இந்தச் சொல்லானது ஒஸ்ரியா 1938 ஆக்கிரமிக்கப்பட்டு நாசிச கிட்லரின் கையில் விளப்பட்டதை குறித்து நிற்கின்றது.

இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஒரு சோசலிச சமூகத்தில் நடைபெற்றதாகும். மார்க்சீயப் புரிதலில் ஏற்பட்ட தவறுகள் ஒரு பக்கம் இருப்பினும் இவர் மேற்கொண்டு நடவடிக்கை என்பது அந்தச் சமூகத்திற்கானதேயாகும். இதனால் தனது தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றத்தில் மீள்பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இவற்றின் பரிணாம வளர்ச்சியாக அபிகிரேப், குவாந்தமானா தீவுச்சிறையில் இஸ்லாமிய பயங்கரவாதி எனக் கூறி உலகமெங்கும் கைது செய்து அடைத்து வைத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமெரிக்க நாட்டு சட்டத்திற்கு அமையவே விசாரித்து தண்டணை வழங்கப்போவதாக அறிவித்துக் கொண்டது. எத்தனையே நூற்றுக்கணக்கான அப்பாவிகள் அமெரிக்காவின் வேட்டையினால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஆளாகினர். அமெரிக்காவின் காட்டுமிராண்டித் தனமான சித்திரவதைக்கும், மனிதவுரிமை மீறல்களை தடுத்துக் கொள்ள முடியாத கையறுநிலையில் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றைய தேசங்களை நடத்தியது. ஐ.நா சபையில் கூட அமெரிக்காவின் எதேர்ச்சாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

நேபாள இராணுவத்தைச் சேர்ந்த கேணல். குமார் லாமா என்பவரை பிரித்தானியாவில் தனது குடும்பத்தவரை சந்திக்கச் சென்ற வேளையில் போர்க்குற்றம் சுமத்தி கைது செய்தது. கடந்தவாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அறிக்கை வெளியிட்டுள்ளது. சூடானில் அமைதி காக்கும் படையில் பணியாற்றும் கேணல். லாமா விடுமுறையில் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். கேணல். லாமாவின் கைதை தமது நாட்டின் இறைமையில் பிரித்தானிய அரசு தலையிட்டதாகக் கருதுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் சவேந்திர சில்வா வன்னி இனப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகளில் பிரதானமானவர். இனப்படுகொலையோடு நேரடியான தொடர்புடையவர். இவருக்கு எதிராக USA நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாகக் கூறப்பட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றில் இருந்து வழக்குத் தொடர்வது, மனிதவிரோத செயல்புரிந்தவர்கள் மீதான வழக்குத் தொடுத்தல் என்பது தெரிவிற்கு உட்பட்டதாகவே இருக்கின்றது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு

உண்மையைக் கண்டிறியும் ஆணைக்குழு தென்னாபிக்காவில் உருவாக்கப்பட்டன. இதில் அனைத்து விதமான சக்திகள் இந்தச் ஆணைக்குழுவில் முன்னிலையில் சமூகம் அளித்து தமது வாக்கு மூலத்தை கொடுக்க வேண்டும் என விதிக்கப்ட்டது. இதற்கு முன்னர் சமாதான நோபல் பரிசு பெற்றவரும், கிறிஸ்தவ ஆயருமான (Desmond Tutu) டெஸ்மன் தலைமைதாங்கினார். இந்த ஆணைக்குழு எவரையும் தண்டிக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் கடந்த காலத்தில் குற்றவாளிகள் எனப்படுபவர்கள் எல்லோருக்கும் அழைப்பாணை அனுப்பப்படும் அப்பொழுது அவர்கள் வந்து சாட்சியம் அளிக்க வேண்டும். இதற்கு சமூகமளிக்காதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதில் போராளிகளும், வௌ்ளை இனவெறியர்களும் சாட்சியம் அளித்தனர். இதில் முன்னைய மந்திரியான இனவெறியாளரான போத்தா (Botha) சமூகம் அளிக்கவில்லை. இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக இவ்வாறான ஆணைக்குழுவின் மூலம் அரசியல் எதிரிகளை அகற்றுவதில் எவ்வாறு பங்காங்றுகின்றது என்பதையும் கலனித்தல் வேண்டும். தென்னாபிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவர் (Winnie Madikizela- Mandela) வின்னி மண்டேலா. இவர் போராட்ட காலத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச் செயற்பாடுகளை விபரித்து பல (Documentary films) ஆவணப்படங்கள் உலக நாடுகள் பலவற்றில் காண்பிக்கப்பட்டன. இதில் குறிப்பாக பிரித்தானிய நாட்டு பழமைவாதக் கட்சியின் உறுப்பினரான Emma Nicholson என்பவர் அதிக கவனம் செலுத்தினார். பிரித்தானிய அரசியல்வாதி வின்னி மண்டேலா செய்த குற்றத்திற்கு சாட்சியென கருதப்படும் Katiza Cebekhulu என்பவரை பாதுகாப்பதிலும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வாங்கிக் கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார். 1989 ஆண்டு கத்திசா என்பவர் (14 வயது Stompie Seipei) ரொம்பி என்ற சிறுவனை கொலை செய்யும் போது கண்கண்ட சாட்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டவர்.

இவர் Mandela united என்ற அமைப்பை கொண்டு நடத்திய வின்னி அன்றைய காலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் 18 மனித உரிமைகள் மீறல்கள் பற்றி உண்மை அறியும் ஆணைக்குழு வின்னியின் வாக்குமூலத்தை கேட்டறிந்தது. இதில் எந்த விதமான குற்றச்சாட்டும் தன்மீது போடப்பட்ட அபாண்டமான பழி என வின்னி தெரிவித்துள்ளதுடன், குற்றப்பத்திரிகை நீதீமன்றத்தில் தாக்குதல் செய்யும் படி கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆணைக்குழுத் தலைவர் இது வழக்குகாடு மன்றம் அல்லவெனவும், கடந்த காலத்தை அறிந்து கொள்ளவும் தவறுகளை மறந்து மன்னிப்பதே முக்கிய இலக்கு எனக் குறிப்பிட்டார்.

இதே ஆணைக்குழுவில் சாட்சிமளித்த (Paul Eramus) போல் என்பவர், பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த (Andrew Hunter) அன்ரூ என்பர் தெரிவித்தவை பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என்றும் சொம்பியின் கொலையில் வின்னி மண்டேலாவிற்கும் தொடர்பு இல்லை என்றும், இது தென்னாபிரிக்க பாதுகாப்பு படையினரின் உளவாளி முகவரினால் கொல்லப்பட்டதாக தென்னாபிரிக்க பாதுகாப்பு உயர்அதிகாரி தெரிவித்தாக மேலும் கூறினார். சொம்பி என்பவரை (Jerry Richardson) ஜெறி என்ற வின்னி மண்டேலாவின் அமைப்பில் இருந்த பாதுகாப்பு படையில் உளவாளியினால் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

வின்னி மண்டேலா ஒரு குடிகாரி, போதை வஸ்துப் பாவிப்பவர், கொலையாளி எனப் பிரச்சாரம் செய்யப்பட்டார். வின்னி மண்டேலா தென்னாபிக்க இனவெறி அரசிற்கு எதிராக போராடிய காலத்தில் பல வதந்திகள் பரப்பட்டது. இதன் மூலம் எதிர்ப்புச் சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு பயன்படுத்தினர். இதில் ஒரு அங்கமாகவே வின்னி மண்டேலா மீது சுமத்தப்பட்டகுற்றச் சாட்டாகும். குறிப்பாக போராடும் காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு கறையை ஏற்படுத்தும் முகமாக பிரித்தானிய, அமெரிக்க உளவுப்படையினரால் எதிர்ப்பிரச்சாரம் செய்யபடுகின்றது. இது எல்லாப் போராட்ட காலத்திலும் நடைபெறுகின்றது. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ முற்போக்குச் சக்திகளும் இதில் கலந்து கொள்கின்றனர். முதலில் ஆணைக்குழு தோற்றத்திற்கு எவ்வகை சிந்தனை பின்புலமாக இருக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டு பின்னர் பிரச்சாரம் பற்றிப் பார்ப்போம்.

கிறிஸ்தவ மதத்தில் பாவங்கள் செய்தால் அதற்குப் பிராயச்சித்தமாக கடவுளின் பிரதிநிதியாக இருக்கின்ற மதகுருவிடம் சென்று பாவமன்னிப்புப் பெறுதல் வேண்டும். இதன் பின்னர் செய்த பாவங்களுக்காக இரங்கி மனம் வருந்துதல் வேண்டும். இது கிறிஸ்தவ மத வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. பாவம் என்பது ஒரு மதத்தின் சிந்தனைப் போக்கில் இருந்து மாறுபடுகின்றது. பாவம் பற்றிய சிந்தனைப் போக்கு ஆபீரிக்க வரலாற்றில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் காலனித்துவ காலத்தில் இருந்து பெறப்பட்ட சிந்தனையானது முழு ஆபீரிக்காவையும் ஆக்கிரமித்திருப்பதனால் ஆபீரிக்கர்கள் தமக்கு உரித்தான கலாச்சாரத்தை முன்னுக்கு கொண்டுவர முடியாமல் இருப்பது. அடையாளங் கொள்ளத்தக்க சூழல் ஏற்படுத்தக் கூடிய சக்திகள் பலவீனமாக இருப்பதனால் அடையாளத்தை மீண்டும் நிறுத்த ஆபீரிக்க மக்கள் போராட வேண்யுள்ளது.

எந்த மதத்தின் அடிப்படை கொள்கையை முன்வைத்து உண்மை (Truth Commision) ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. வௌ்ளை இனவெறியர்கள் கறுப்பர்களை ஆட்டு மந்தைகளாக நடத்துவதற்கு விவிலிய நூலில் இருந்தே ஆதாரங் காட்டினர். இவர்கள் கடவுளினால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் இவர்களே பூமியை ஆழத் தகுதியானவர்கள் என வௌ்ளை இனவெறியர்கள் கருதிக் கொண்டு தென்னாபிரிக்காவை ஆட்சிசெய்தனர். இந்த உண்மை ஆணைக்குழுவின் மூலம் உண்மையில் பொதுவுடமை சிந்தனை கொண்டவர்கள் யார்? யார்? என்னென்ன போராட்ட செயற்பாட்டை நடத்திக் கொண்டவர்கள், இவர்களில் ஆபத்தானவர்கள் யார்? போன்ற விடயங்களை சேகரித்துக் கொள்ள துணைவகுக்கின்றது. ஒரு பொதுவுடமை அமைப்பின் இரகசியங்களை அறிந்து கொள்ள முன்னர் சட்டத்திற்கு முரணாக ஈடுபட்டு நபர்களைக் கொண்டு, விபரங்ளை சேகரித்துக் கொள்ள முடியும்.

இவை மாத்திரம் அல்ல இடதுசாரிகளின் அதாவது ஆபீரிக்க காங்கிரஸில் இடதுசாரி அணிகளின் நம்பிக்கையானவரும், எதிர்கால ஜனாதிபதிக்கு போட்டியிடக் கூடியவருமான வின்னி மண்டேலாவை அரசியல் அரங்கில் இருந்து அகற்றிக் கொள்ள பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட இந்த உண்மை ஆணைக்குழு உதவியளித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் மூலமாக பழைய சமூக அமைப்பை அப்படியே நிலை நிறுத்திக் கொள்ள சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆட்சியாளர்களையும், சமூக அமைப்பை அம்பலப்படுத்தி கடந்த காலத்துடன் கடன் தீர்த்துக் கொள்ள சந்தர்ப்பம் இல்லாமல் கடந்த காலத்துடன் சரணாகதியடைந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கின்றது. இனவாத ஆட்சியாளர்களுக்கு மாற்றாக மாற்று நிறத்தைச் சேர்ந்த அதே கொள்கையுடையவர்கள் தான் தற்பொழுது ஆட்சி செய்கின்றனர். முன்னர் சுரண்டும் பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்ள வௌ்ளை ஆட்சியாளர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று கறுப்பு நிற ஆட்சியாளர்கள் அதே சுரண்டல் பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றனர். சர்வாதிகாரிகள் ஆட்சி செய்த நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிலி போன்ற நாடுகளில் ஜனநாயக முறையில் அமைந்து கொண்டதாக கூறப்படும் தேர்தலின் மூலம் பழைய ஆட்சியாளர்கள் செல்ல புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தனர். இவர்கள் தமது பதவிக்காலத்தில் செய்த ஊழல்களை கண்டு பிடித்து தண்டனை செய்யமுடியாதவாறு பணக்கார நாடுகளினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். தென்னாபிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள சுரண்டும் வர்க்க ஆட்சியாளர்கள் முழு சுரண்டும் பொருளாதார அமைப்பும் அம்பலப்பட்டுப் போகாமல் பாதுகாத்து வருகின்றனர்.

யார் நலனைப் பாதுகாக்கின்றது?

செக் நாட்டின் ஜனாதிபதி ஹாவல் (Vaclav Havel) கனடாவிற்கு விஜயம் செய்த போது இறைமையை விட மக்களின் மனித உரிமையே முக்கியமானது என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இதே போல ஏகாதிபத்தியத்தின் தயவில் வாழும் சலமன் ரூஸ்டியும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர்.

கொசவோவிற்கு ஒரு நீதி- தமிழீழத்துக்கு ஒரு நீதியா? கோசவோ அல்பேனியர்கள் தான் மனிதர்களா? ஈழத் தமிழர்கள் மனிதர்கள் இல்லையா? என்று சர்வதேச சமூகத்துக்கு மறுமலர்ச்சி திமுக செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய உரையில் சில பகுதிகளை இங்கு பார்ப்போம். “ஒரு நாடு, தன்நாட்டின் இறையாண்மையைக் காக்கின்றோம் என்ற பெயரில் அங்கு வாழும் மக்களை அழித்தொழிப்பதை உலக சமூகம் பார்த்துக் கொண்டிருக்காது, --

மனித உரிமைகள் நசுக்கப்படும் போது அதைக் காக்க எந்த நாடும் பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடலாம் என்று கூறிய இந்திரா காந்தி அவர்கள் முஜிபுக் ரஹ்மானுக்கு ஆதரவு அழித்து வங்க தேசம் உதயமாகிவிட உதவினார். இதே போவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ. நா சபை பொதுச் செயலர் கோபி அன்னன் மனித உரிமைக்குக் குரல் கொடுத்துள்ளார்.

கொசவோ யூக்கோஸ்லாவியாவின் ஒரு பகுதி எனவே எமது இறைமையைக் காத்துக் கொள்ள அங்கு நடக்கும் கலவரத்தை அடக்குகின்றோம் என்று யூக்கோஸ்லாவியா கூறியதை இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நேட்டோ நாடுகள் ஏற்றுக் கொள்வில்லை. --

முன்னைய ஐ.நா பொதுச் செயலர் கோபி அன்னன் இறைமை என்ற பெயரில் மக்களை கொண்று குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

இங்கு இறைமையா? மனித உரிமையா? என்ற வாதத்தில் இருந்து பிரச்சனையை பார்க்கின்ற போது தப்பிப் போகின்ற நிலைதான் காணப்படுகின்றது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் நலனில் அக்கறை கொள்ளும் என்றால் நலன் இல்லாமல் செயற்பட மாட்டாது. இங்கு வெளிச் சக்திகள் எவ்வகையான பொருளாதார நலன் கொண்டுள்ளது என்பதை அவதானிக்க வேண்டியிருக்கின்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது ஆட்சிமாற்றத்தால் மாத்திரம் மாறிக் கொள்வதில்லை.

வை. கோபால்சாமி போன்ற சக்திகளே கடந்த காலத்தில் சர்வதேச அனுபவத்தைப் பார்த்து அரசாங்கம் இராணுவத் தலையீட்டைக் கோரினர். ஆனால் எந்த வித தலையீட்டையும் ஆதரிக்க முடியாது என்ற நிலையில் இருந்து தான் நாம் பிரச்சனையைக் கையாள முடியும்.

வரலாற்றில் காணக் கூடிய பொது அம்சங்களை கவனிக்க வேண்டும். அதாவது பொருளாதார நலனை கொண்டதான சந்தை அதை விஸ்தரிக்கும் கொள்கை, சந்தர்ப்பம் பார்த்து தலையீடு செய்வது. இதற்கு முன்னோடியாக தேவையான பிரச்சாரங்கள், அகதிகளின் அழுகையை முதன்மைப்படுத்துவது. தருணம் பார்த்து படைகளை அன்னிய நாட்டினுள் அனுப்புவது.

கடந்த காலத்தில் இந்தியாவில் இருக்கின்ற பாரம்பரிய பொதுவுடமைக் கட்சிகள் இந்தியாவின் தலையீட்டை ஆதரித்திருந்தன. பொதுவுடமைக் கட்சிகள் இலங்கை, வங்காளத்தின் தலையீட்டை கவனமாக அவதானித்துக் கொண்டு இலங்கையில் விடுதலை அமைப்புக்கள் அக்கறை கொண்டு பார்த்தது இல்லை. ஆனாலும் வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தையும் சிலர் இந்தியாவின் இலங்கை மீதான தலையீடு கொண்டுவரும் பாதிப்புப் பற்றி கருத்துக்களும் இருந்தது உண்மையே. ஆனாலும் இவைகள் வலுவானதாக இருந்ததில்லை. பிற்காலத்தில் இந்திய தலையீட்டை விமர்சிக்கும் எந்த இயக்கங்களாலும் சரி, இந்திய அரசியல்வாதிகளானாலும் சரி இந்திய தலையீட்டை ஆதரித்ததே வரலாறாகிவிட்டது. பிற்காலத்தில் நலன்கள் மாறுபட மக்களின் தேவைகளும் ஒன்றுபடவே எதிர்ப்பு யுத்தம் தொடங்கியது. இதுவே வரலாற்றின் சரியான பாதைக்கான திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த காலத்தில் இந்தியாவின் நலனில் அடிப்படையில் அமைந்த வங்காளத்தின் மீதான ஈடுபாடுகள் ஆகும்.

இதேபோல யூக்கோ, ஈராக் மீது நடை பெற்ற தாக்குதல்கள் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. ஈராக், யூக்கோ மீதான தாக்குதல்களை எடுத்து நோக்குவோமானால் பொருளாதார நலனைப் பாதுகாத்துக் கொள்வதை அவதானிக்க முடியும். இந்த நாடுகளை ஆக்கிரமிப்பிற்கு முன்னர் பொருளாதார நிலைகளை தாக்கியழித்துக் கொண்டனர். இந்தத் தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களை ஒட்டாண்டியாக்கியது. இந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ள மற்றைய நாடுகளை கையேந்த வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து நிரந்தர கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள். அரசியல் ரீதியான நகர்வுகளை ஆயுதம் என்பது துரிதப்படுத்துகின்றது.

இதிலிருந்து பாதிப்புக்கள் மக்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்டதாக கொள்ள இடமில்லை. இவைகளை மறைத்து நாடு பிடிக்கும் கொள்கைகளை ஆதரித்து நிற்கும் நிலைப்பாடு கொள்ளும் எந்த அரசியல்வாதிகளின் கருத்தையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். மேற்கு நாடுகளின் நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் தலைமைகளும் அமெரிக்காவை முன்மாதிரியாக நிறுத்தும் அரசியல்வாதிகளும் உண்மையை மறைத்துக் கொள்கின்றனர்.

பயங்கரவாதிகளை அடக்குவது என்ற பெயரில் சூடான் (இன்று தமது தேவையின் நிமித்தம் நாட்டை துண்டாக்கியுள்ளனர்), ஆப்கானிஸ்தான் போன்ற சுதந்திர நாடுகள் மீது அமெரிக்கா குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தனியே உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கவென உருவாக்கப்பட்ட நேட்டே இராணுவக் கூட்டமைப்பு ஐ.நாவின் ஒப்புதல் இன்றி இனஅழிப்பை தடுத்து நிறுத்துகின்ற பெயரில் யூக்கோ மீது குண்டுமழை பொழிந்தனர். இதுவே மிகப்பெரிய ஐ. நாவின் சாசனத்திற்கு எதிரான பெரிய மீறலாகும்.

அமெரிக்க நாடுகளின் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு யூக்கோ மக்களும் தான் காரணம் கூறியதுடன், இவ்வாறான அழிவிற்கு காரணம் மக்களுடைய மடைமைக்கும் என்றனர். மேலும் இவ்வாறான ஆட்சியாளர்களை அந்நாட்டு மக்கள் தெரிவுசெய்ததே காரணம் எனவும் கூறுனர். அமெரிக்கா, பிரித்தானிய எதேர்ச்சாதிகாரப் போக்கிற்கு உறுப்பு நாட்டு அரசியல்வாதிகள் எந்த வித இடைஞ்சலையும் ஏற்படுத்திக் கொள்ளாததுடன், செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமைக் சங்கம் ஆகியவை தாம் மனித உரிமை பாதுகாப்பதில் மாத்திரம் தான் அக்கறை காட்டுதாகவும் விமானத்தாக்குதல் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாது விட்டனர். அதாவது, புண்ணுக்குத் தான் தாம் மருந்து போடுபவர்கள் புண் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்ற காரணியை தடுப்பது தமது கொள்கை அல்ல எனவும் கருதிக் கொள்வது போல் இருந்து விட்டனர்.

ஐ.நாவின் உறுப்புக்களில் அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கின்றனர். அதேபோல் சிவில் ஊழியர்களும் அங்கம் வகிக்கின்றனர். சிவில் ஊழியர்களே இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அங்கம் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை பிரச்சனைக்குரிய பகுதிகளில் சென்று மேற்கொள்வதில்லை. அரசியல்வாதிகள் எப்பவும் தமது நாட்டின் நலனின் மீதே அக்கறை கொள்வர் என்ற கருத்து எதிர்ப்பிரிவினரிடம் உண்டு. உதாரணத்திற்கு லெபனானில் பணக்கைதிகள் விடயத்தில் சிவில் ஊழியர்களே கடத்தல்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இவ்வாறான நடைமுறையைப் பயன்படுத்தி சுதந்திரமான ஐ.நா நீதிமன்றம் முறையாக செயற்படுகின்றது என நிரூபிப்பதும். தற்பொழுது சோவியத் ஒன்றியம் இல்லாத நிலையில் அமெரிக்காவின் எதேர்ச்சாதிகாரம், உலகப் பொலிசாக அமெரிக்க செயற்பட செயற்படவில்லை என தனது பிரஜைகளுக்கு நிரூபிப்பதும் அவசியமாகின்றது. குறிப்பாக மேற்குல மக்களை ஏமாற்ற குறிப்பாக பாவிக்கும் தந்திரோபாயமாகும். போதுவாகவே நீதி முறை நிலைநாட்டப்படுகின்றது எனக் கருதிக் கொள்ளும் மக்களிடையே பிரச்சாரப்படுத்துவது அவசியம். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் உள்நாட்டு அரசியல் தலைமை பூகோள ரீதியாக நடைபெறும் சம்பவங்களைக் காட்டி தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது.

ஐ.நா நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அரசியல் பின்புலம் அவசியமானதாகும். 1985க்கு முற்பட்ட காலத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் இருந்தது. இரண்டு சக்திகளின் பலம் சமன்படுத்தப் பட்டிருந்தது. இதன் பின்னர் உருவாக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவும், சக கூட்டாளி நாடுகளும் பாதுகாப்புச் சபையை அல்லது (Hague) காக் நீதி மன்றத்தை தமக்கு இசைவாக நடத்த முடிந்ததை அவதானிக்க முடிகின்றது.

270 பயணிகளின் உயிர்களும், போர்க்குற்றவாளிகளின் நலனும் ஏகாதிபத்தியங்களுக்கு பெரிய விடயம் அல்ல. ஆனால் தமது அதிகாரத்தினையும், பொருளாதார நலனை நிலைநிறுத்திக் கொள்வது அவசியமானதாகும். இவர்கள் உண்மையில் மனித உயிர்களின் மீது மதிப்பு கொடுப்பவர்களாயின் மனித குல அழிவிற்கு துணையாக இருக்கின்ற ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்துவர், அணுக்குண்டு, கண்ணி வெடி, சூழலை மாடுபடுத்துகின்ற காரணிகளை தடுப்பர், மற்றைய நாடுகளை ஆக்கிரமிப்பதை தவிர்ப்பர், குண்டு போடப் பாவிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களை சேமித்து வறிய நாடுகளின் வளர்ச்சிக்கு கொடுப்பர், கடன் சுமையால் வாடுகின்ற நாடுகளின் கடன் சுமையைப் போக்குவர். மற்றைய நாடுகளின் உள்நாட்டு விடயத்தின் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும். உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை, நிதி, ஆயுதம் ஆகிவற்றை கொடுப்பது. இவைகளே இன்றைய உலகத்தின் பிரச்சனை, இவற்றைப் போக்கத் தயாராக இருப்பார்களாயின் மற்றவற்றை உள்நாட்டு குடிகளே தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வர்.

வறிய நாடுகளில் இருக்கின்ற போராளிகள் தத்தமது பிரச்சனைகளை தாமே தீர்த்துக் கொள்வர். பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் வல்லமையும் அவர்களிடம் இருக்கின்றன. இன்றைய உலக நிலை என்னவெனில் அடிப்படையில் பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக விழைவுகளை மாத்திரம் முன்னிறுத்தி பிரச்சனைகளின் ஆழத்தை குறுக்கி திசைதிருப்புவதுடன், குழுப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் தமக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். ஏகாதிபத்தியங்கள் கருதுவது போல் இறைமை, மனித உரிமை என்று பிரித்துப் பார்ப்பதில் எவ்வித நலனும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. மாறாக உரிமை, இறைமை இரண்டும் ஒன்றையொன்று பிரித்துப் காரணத்தினால் இனங்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்படுகின்றது. இதற்கு பதவிமோகம் கொண்ட அரசியல்வாதிகள் மக்களுக்கான பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியாத நிலையை மறைத்துக் கொள்வதற்காக மற்றைய இனத்தின் மீது பழியைப் போட்டு விட்டு தப்பித்துக் கொள்கின்றனர். அதே போல் துன்பநிலையைப் பயன்படுத்தி வறிய நிலையில் உள்ள மக்களை இனவெறியூட்டி தமது நலனுக்கான பயன்படுத்தும் பணம் படைத்த பிரிவினரும் இருக்கின்றனர்.

 

இடதுசாரிகளின் தாக்குதலா?

இடதுசாரிகளின் பலம் ஐரோப்பாவில் ஒங்கியுள்ளதாக கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மாகிரட் தட்சர் சிலி நாட்டின் சர்வாதிகாரியான பினோச்சே மீதான கைதைத் தொடர்ந்து தட்சர் அவர்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்தார். இவர் இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்தார். அத்துடன் பினோச்சேவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை தெரிவித்துக் கொண்டார். யூக்கோ மீதான தாக்குதலை இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்திருந்தனர். இந்தக் கட்சியில் 1989 பின்னால் இருந்த பிரதமர், நிதி மந்திரிகள் இடம் பெறுகின்றனர்.

சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஆட்சிகளை உண்மையான தொழிலாளர் வர்க்கத்தின் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ள முடியாது. இவர்கள் தொழிலாளர் வர்க்கத்திற்கு சலுகைகளை மாத்திரம் கொடுப்பதில் நின்றுவிடுகின்றதுடன், தேர்தலே பிரதான வேலைப்பாடாகக் கொண்டுள்ளனர். இவர்கள் சுரண்டும் வர்க்கச் சமுதாயத்தை இல்லாது போக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னரே பாதை தவறிவிட்டனர். ஆனால் கடந்த காலத்தில் இவர்கள் இருந்த சமூக முரண்பாடுகளை பயன்படுத்தி இன்று முன்னுக்கு வந்திருக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்லாம். ஆனால் இவர்கள் இடதுபாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கின்றனர் எனக் கொள்ள முடியாது.

சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஏகாதிபத்திய தேசங்களாகையால் மற்றைய தேசங்களை கைப்பற்றி சந்தையையும், மூலவளங்களையும் சுரண்டிக் கொள்வதை நிறுத்துவதில்லை. மனிதகுலத்திற்கு விரோதம் விழைவித்த குற்றவாளிகளை பணம்படைத்த தேசங்களில் தண்டணை வழங்கவேண்டும் என்று முயற்சிப்பது கூட ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ஆதரித்து நிற்கும் நிலைப்பாடாகும். சமூக ஜனநாயகக் கட்சிகளின் வெளியுறவுக் கொள்கை மாற்றம் கொள்வதில்லை. எனவே இடதுசாரிகளின் அலை என்றோ இடதுசாரிய சதி என்று ஏகாதிபத்திய காலகட்டத்திலும், ஏகாதிபத்திய தேசங்களின் சமூக ஜனநாயகக் கட்சிகளின் கொள்கையை வரையறுத்துக் கொள்ள முடியாது.

நேட்டோ நாடுளை ஐ.நா நீதிமன்றத்தில் நிறுத்துவது!

சர்வதேச நீதிமன்றத்தில் நேட்டோ நாடுகளை நிறுத்த வேண்டும் என கனடாவில் இருக்கின்ற சட்ட அறிஞ்ர் பலர் கோரிக்கை விட்டனர். இவர்கள் சுதந்திர நாட்டின் உள்நாட்டு விடயத்தில், எல்லைக்குள் தாம் நினைத்தபடி ஐ.நாவின் ஒப்புதல் இன்றி செயற்பட்டு மக்கள் துன்புறுத்தினர் என குற்றம் சாட்டினர். இதே வேளை யூக்கோஸ்லாவிய அரசும் காக்கில் வழக்குத் தொடுத்திருந்தது. எனினும் வழக்கை எடுத்துக் கொள்ள நெதர்லாந்தில் இருக்கின்ற நீதிமன்றம் யூக்கோஸ்லாவியா சமர்ப்பித்திருந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இங்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க முடியும். குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பது என்றால் அரசியல் செல்லாக்குப் பெறவேண்டும். குற்றச் சாட்டினை ஏற்றுக் கொள்ளக் கூடிய பின்புலம் உள்ள நாடுகளின் ஆதரவு இருக்க வேண்டும். இன்றைய உலகின் அதிகார மையத்துவம் என்பது பலம் பொருந்திய நாடுகளில் தான் மையமாகக் கொண்டு இருக்கின்றது. இந்த அதிகார மையத்துவத்தை நோக்கித் தான் எம்மவர்களும் கடைக்கண் காட்டும் படி இரங்கிக் கேட்கின்றனர். இங்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பதற்கு குறிப்பிட்ட அரசியல் பலம் இருக்க வேண்டும். அப்படியான நிலையில் வறிய நாட்டவர் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. ஏனெனில் வறியவர்களின் பலம் என்பது குன்றித்தான் இருக்கின்றது. அவர்கள் பணபலத்தில் பின்தங்கியிருப்பதால் பணம் படைத்த நாடுகளின் வங்கிகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் கடன் வாங்குவதற்கு கைநீட்டிக் கொண்டிருப்பதால் கடந்த காலத்தைப் போல உறுதியான நிலைப்பாடு எடுத்து நடந்து கொள்ள முடியாது.

நேட்டோ நாடுகளும் இன்று செர்ச்செனியா மீதான தாக்குதலையும் ஐரோப்பிய ஒன்றியம் அதிக ஈடுபாடு கொண்டு எதிர்க்கவில்லை. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முதலிட்டுள்ளது. விமர்சனம் கொள்ளவதில் நிலையானது ஒரு நாடு கொண்டுள்ள நிதிமூலதனத்தின் அளவும், சந்தையின் பரப்பின் வீதமும் நிர்ணயிக்கின்றன. அத்துடன் தொடர்ந்தும் நிதி மூலதனத்தினை விஸ்தரிக்கும் முகமாக மோதலுக்குச் செல்லாமல் கொள்கின்ற தந்திரோபாயத்தை மேற்கொள்ளும். இன்றைய செர்ச்சேனியா மீதான ரஸ்யத் தாக்குதல்களின்பால் மேற்கொள்ளும் எதிர்ப்புக்களும் வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றது. இதில் இருந்து இவர்களின் மனித உரிமை மீதான அக்கறையை மீண்டும் ஒரு முறை முகக்திரையை கிழித்துக் காட்டுகின்றது.

முன்னர் கூறப்பட்ட சர்வாதிகாரிகள், ஆக்கிரமிப்பில் பங்குபற்றியவர்கள், இறைமை உள்ள நாட்டின் மீது வரலாற்றில் சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை. மாறாக இவைகள் எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சர்வாதிகாரிகளுக்கு பாதுகாப்புக் கொடுத்துள்ளனர். ஸ்பானியாவில் பிராங்கோவின் ஆட்சியில் மந்திரியாக இருந்து சமராங் என்பவர் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக பல வருடங்களாக இருக்கின்றார். இப்படியானவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தது பணம் படைத்த நாடுகளே. இன்று யூக்கோவின் ஆட்சியாளர்கள் ஐவர் ஐ.நா நீதி மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

மேற்கு நாடுகளின் கூட்டமைப்பை ஐ.நா நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பல பொதுவுடமைக் கட்சிகளின் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன (The signatories include 39 parties and organisations from Argentina, Austria, Bangladesh, Belgium, Brazil, Bulgaria, Dominican Republic, France, Georgia, Germany, Greece, India, Iraq, Italy, Korea, Latvia, Laos, Mali, Nepal, Netherlands, Palestine, Philippines, Poland, Russia, Senegal, Slovakia, Spain, Sweden, Turkey, Ukraine, Yugoslavia, Zimbabwe, etc.) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உட்கட்டுமானங்களை சிதைப்பது

யூகோ, ஈராக் போன்ற இறைமைள்ள தேசத்தின் மீது குண்டு வீசி இயற்கையை அழித்தவர்கள், மக்கள், தனியார், அரச தொழிற்சாலைகள், சொத்தை அழித்தவர்கள் உட்கட்டுமானங்கள் உட்பட பாலங்ளை அழித்தவர்கள் தூதரகங்கள் (சீன, இத்தாலி, பாக்கிஸ்தான், சுவீடன்) மீது குண்டு போட்டவர்கள், பொதுமக்கள் அகதிகள் சென்ற வாகனங்கள் மீது குண்டு போட்டுக் கொண்றவர்கள் இவர்கள் அல்லவா ஐ.நாவின் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவர். எந்தக் காரியத்தையும் ஐ.நாவின் மூலம் காரியத்தைச் செயற்படுத்தும் அமெரிக்கா ஐ.நாவிற்கு பல மில்லியன் டொலர்கள் கடன் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னர் ஐநாவில் தீர்மானம் இயற்றி மற்றைய நாடுகளை தலையிட்டவர்கள் பின்னர் ஐநாவின் ஒப்புதல் இல்லாமலே தலையிட்டுக் கொண்டனர். லிபியா, சிரியா, மாலி என்று தலையிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற தேசங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதான உட்கட்டுமானங்களை தகர்த்தெறிந்துள்ள ஏகாதிபத்தியங்கள். அந்த நாடுகளை பல பத்தாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கியதாக அழித்துள்ளது.

ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டதாக தலையீடுகள் இருந்திருக்கின்றது. ஆனால் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உணர்ச்சி பொங்கும் பேச்சின் மூலம் கடந்த கால அனுபவத்தை காட்டி பிரச்சனைகளுக்கு குறுக்கு வழியில் பிரச்சனைக்கு தீர்வு காணும் படியும் கோரிக்கை விடுகின்றனர். இந்த வகையான கோரிக்கை புத்தியீவிகளிடமும் இருந்த வருகின்றது. அதாவது அமெரிக்க கடைக் கண் காட்டவேண்டும் எனவும் கோரிக்கை விடப்படுகின்றது. இந்த நிலை ஆபத்தானது என்பதை அறியாத நிலையில் தோன்றுகின்ற கருத்துக்கள் மக்களிடையே தம்மை மீட்க மீட்பர்களான அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் வரும் என்ற கருத்தை விதைக்கவும் காரணமாகின்றது.

வல்லரசுகள் தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தும் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இருக்கும் நரித்தனங்களை விளங்கிக் கொள்ளாமல் இலங்கை உட்பட வறிய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடவேண்டும் எனக் கோருகின்ற அறியாமையை எதிர்க்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் அரசியல் வாதிகள் தமது பேச்சில் கவர்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் காட்டி அவ்வாறு இலங்கை போன்ற நாடுகளில் பின்பற்றக் கோருவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவர்கள் தேசிய, வர்க்க விடுதலைக்கான போராளிகள் மீது ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தத்தை அறியாதவர்களாகவும், தமிழ் மக்களின் மட்டுமல்ல வறிய நாடுகளில் போராடும் மக்களின் போராட்டத்தை சிதைப்பதை நோக்கமாகக் கொண்டே பணம் படைத்த நாடுகள் செயற்படுகின்றனர் என்பதை மறைத்த நிலையில் இருந்து கொண்டு தமது அரசியல் நலனைப் பாதுகாப்பதற்காக உணர்ச்சிகர பேச்சுக்களை உரையாற்றுகின்றனர். இவர்களுக்கு சர்வதேசிய அரசியல் நிலை தெரியாததைத் தான் காட்டுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் தமது நாடுகளில் மிகச் சிறந்த அறிவாளிகள், பேச்சாளர்கள், தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இவர்களின் அரசியல் வறுமையானது வல்லரசுகளின் நலனை எவ்விதத்திலும் பாதித்துக் கொள்ளாத வகையில் அரசியல் நடவடிக்கைகளை மக்கள் மீது திணிக்கின்றனர். நாம் தொடர வேண்டிய போராட்டங்கள் மேற்கொள்ளும் போது வறிய நாடுகளின் நலத்தின் மீது அடங்குவது அவசிய காரியமாகும்.

இறுதியாக இன்றைய நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை எந்த நிறுவன அமைப்புக் கொண்டு தண்டிப்பது பற்றிய மாற்றுக் கருத்துக்கள் இருந்து வருகின்றது.

1. நூரண்பேர்க் மாதிரி

2. ஐ.நாவின் நீதிமன்றம்

இந்த இரண்டும் எவ்வகையில் தேசங்களின் இறைமையை நிலைநிறுத்துகின்றது என்பது மாத்திரம் இல்லை. இலங்கை உழைக்கும் மக்களின் ஐக்கியமும், ஒருங்கிணைந்த போராட்டத் தந்திரோபாயத்தில் இருந்து அணுகவேண்டியிருக்கின்றது.

ஆனால் தமிழகத்தில் போராடும் மாணவர்களின் அரசியல் புரிதல் என்பது முழுமையான தமிழ் தேசிய உணர்வு கொண்டிருப்பதும், கோரிக்கைகள்; யதார்த்தத்தினை மீறிய ஒன்றாக இருக்கின்றது. ஆனாலும் மாணவர்களின் போராட்டத்தை தவறென்பதோ அல்லது கொச்சைப்படுத்துவது என்பதோ இல்லை. மாறான மாணவர்களின் போராட்டம் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். மக்கள் மத்தில் இருந்து எழுகின்ற கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும். மாணவர்களின் போராட்டம் சிறப்புமுகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை விடுதலை கோரியும், கடல்தொழிலாளர்களின் மீதான கொலைகள், சமூகப் பிரச்சனைகைள், நவதாராளவாதத்தினால் கல்விக்கு ஏற்படும் தடைகளை இணைத்துக் கொள்ளல் வேண்டும். சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை கண்டறியும் படியான வேலைமுறைகளை புரட்சிகர சக்திகள் மாணவர்களுக்கு அறிவுறுத்தவேண்டிய கடமை இருக்கின்றது.

நாம் மாணவர்களின் போராட்டத்தினை பார்க்கின்ற போது இந்தியாவில் தமிழ்நாட்டு மாநிலத்தில் அரசியல் பொருளாதார அமைப்பின் இருந்து வெளிப்படும் அரசியல் கருத்துக்களின் முதிர்ச்சியற்ற நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும். தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களிடையே புரட்சிகரக் கருத்தை ம.க.இ.க முன்வைத்துள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரைநிலபிரபுத்துவ, குறைமுதலாளித்துவ உற்பத்தி உறவில் அமைந்து சிந்தனையும், அதனால் வெளிப்படும் பாசீச ஒடுக்குமுறைகளை மாணவர்கள் இன்று அனுபவ ரீதியாதிக உணரத் தொடங்கியுள்ளார்கள். அரசியல் கருத்தை தெரிவித்துக் கொள்வதற்கும், கருத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வயது, அந்தஸ்து தேவை என்ற பிற்போக்குச் சூழலில் இருந்;து மாணவர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சமூக அமைப்பில் இருந்து உருவாகும் கருத்துக்கள் கூட பிற்போக்கு சமூக அம்சங்கள் நிறைந்திருப்பதும் இயல்பானதே.

இதேவேளை அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விஸ்தரிப்புவாத அரசியலை அம்பலப்படுத்தியிருப்பதும் ஒரு சாதகமான அம்சம். ஏகாதிபத்திய, பிராந்திய வல்லரசுகள் எவ்வாறு தேசியங்களின் ஜனநாயக உரிமைமையை மறுதலிக்கின்றது என்பதை புரட்சிகர சக்திகளின் மாணவர்களுக்கு வெளிப்படுத்தி முதற்கட்டமாக மாணவர்களை முதலாளித்துவ ஜனநாயக் கோரிய போராட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் மொத்தத்தில் தமிழக மாணவர்களின் போராட்டம் அந்த நாட்டுக்குரிய பிரத்தியோகமான அரசியல் பாங்கின் ஒரு அம்சமாகவும் பார்க்கப்பட வேண்டும்.

 

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! (14092001 - திருத்தப்பட்டது 2013) 

 

 

யூகோஸ்லாவியா (1993) , ருவாண்டா (2000) ஆகியவற்றுக்கு பின், அதுவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உருவான 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறான சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயங்கள் அமைப்பது தொடர்பான தயக்க நிலை .நா. வட்டாரங்களில் காணப்பட்டது

 

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) 2002 ஆம் ஆண்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் மூலச் சட்டம் (Rome Statute) 2002 ஜூலை மாதத்திற்குப் பின்னரான குற்றங்களை மட்டும் கையாளும் அதிகாரத்தைக் குறித்த நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளது. ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான பெரும் உத்தி (Grand Strategy) 1950 களின் இறுதியிலிருந்து ஆரம்பிக்கிறது.

அதேவேளை, 1950 இல் இன அழிப்புக்கு எதிரான சாசனத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

 

.நா. சாசனத்தின் உறுப்புரை 22 (UN Charter Article 22) .நா. பொறிமுறைக்கு அப்பால் சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice - ICJ) கட்டமைப்பட்ட  இன அழிப்புக்கான பொறுப்பு விசாரிக்கப்பட வேண்டும்.

 ----------------------------------------- - - 

கொசோவோ விடுதலைப் படை (UCK) தலைவர் ஹாஷிம் தாசி, போர் குற்றங்கள் தொடர்பாக ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டுள்ளார்.

---- -

2016 ம் ஆண்டு ஹாசிம் தாசி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இருப்பினும் கொசோவோ போர் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாக 2020 ஆம் ஆண்டு பதவி விலகிய பின்னர் கைது செய்யப்பட்டார். கொசோவோ போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அப்போதே நிறுத்தப் பட்டாலும், தற்போது தான் விசாரணைகள் நடக்கின்றன.

 

------------------ - - - - - 

ஹாசிம் தாசியுடன் மேலும் 2 UCK இயக்க தலைவர்கள் மீது போர் கு‌ற்ற‌ விசாரணை நடக்கவுள்ளது.  

 

 

 

 

 

 

 

  • Published

The UN's top court has said Israel's occupation of Palestinian territories is against international law, in a landmark opinion.

The International Court of Justice (ICJ) said Israel should stop settlement activity in the occupied West Bank and East Jerusalem and end its "illegal" occupation of those areas and the Gaza Strip as soon as possible.

In response, Israeli Prime Minister Benjamin Netanyahu said the court had made a "decision of lies".

The court's advisory opinion is not legally binding but still carries significant political weight. It marks the first time the ICJ has delivered a position on the legality of the 57-year occupation.

The ICJ, based at The Hague in the Netherlands, has been examining the issue since the beginning of last year, at the request of the UN General Assembly, external.

The court was specifically asked to give its view on Israel's policies and practices towards the Palestinians, and on the legal status of the occupation.

Delivering the court's findings, external, ICJ President Nawaf Salam said it had found that "Israel's... continued presence in the Occupied Palestinian Territory is illegal."

"The State of Israel is under the obligation to bring an end to its unlawful presence in the Occupied Palestinian Territory as rapidly as possible," he said.

https://www.bbc.co.uk/news/articles/cjerjzxlpvdo