Popular Posts

Thursday, 3 October 2024

வாய்ப்பாட்டுவாதம் சமூக மாற்றத்திற்கு உதவாது!!

 


வாய்ப்பாட்டுவாதம் சமூக மாற்றத்திற்கு உதவாது!!
 
1
தேசியஇனப் பிரச்சனை பற்றிய பொதுப்புத்தி, வாய்பாட்டு மார்க்சியவாதிகள் என வெவ்வேறு பிரிவினர் தமக்குத் தெரிந்தவகையில பொதுவெளியில் கருத்துக் கூறுகின்றார்கள். சமூக அமைப்பும் அதன் தேவையின் பொருட்டே கோரிக்கைகள், எழுச்சிகள் இடம் பெறுகின்றது. இதில்மார்க்சியத்தின் பெயரில் தனிநபர்களின், சில அமைப்புகளின் கருத்தியல் மார்க்சிய லெனினியத்திற்கு முரணாகவே உள்ளது. இதற்கான சிறு குறிப்பே இது.
ஒரு நாட்டில் அந்த நிலையைக் ஆய்வுசெய்யும் வழிகாட்டியாக இருப்பது மார்க்சியமாகும்.
-விஞ்ஞானம்
-பொருளாதார அமைப்பு (உட்கட்டுமானம்- அடிக்கட்டுமானம்)
- வர்க்கப் போராட்டம்- முரண்பாடு
இது
அ) இதன் அடிப்படையில் வழிகாட்டும் விஞ்ஞான அணுகுமுறைக் கொண்ட ஆய்வுமுறை வழிமுறையாகும்.
ஆ) ஆய்வு செய்தால் மட்டும் போதாது, சமூபத்தை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதையும் அது வழிகாட்டுகின்றது.
மார்க்சியம் அன்னியத் தத்துவம் என்று ஒதுக்குவோர் உள்ளார்கள். ஆனால் விஞ்ஞான அறிவு என்பது வெவ்வேறு சமூகங்களில் உள்ள வளர்ச்சியடைந்த அறிவை பயன்படுத்திக் கொள்வதில் இருந்துதான் சமூகம் முன்னேறுகின்றது. பொருள்முதல்வாதம் என்பதே தமிழர் வரலாற்றில் அன்னியப்பட்ட சிந்தனைக் கட்டமைப்பு அல்ல. மாறாக அது தொல்குடிச் சமூகத்தின் வளர்ச்சியில் விஞ்ஞானமாக வளர்ந்திருந்தது. தமிழர் சிந்தனை மரபு பிராமணிய- வர்ண ஆதிக்கத்தில் ஊடாக சிதைக்கப்பட்டது. பழைய மரபை மீட்கும் வல்லமை கூட மார்க்சியத்திற்கு உண்டு.
சமூகத்தை ஆராய்ந்து மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் 1848 இல் பொதுவுடமைக்கட்சி அறிக்கையை முன்வைக்கின்றார்கள். அப்போ முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடுதான் அடிப்படையானது என்றார்கள். உழைப்பாளிகள் முதலாளித்துவத்தை வீழ்த்தி அனைத்தையும் அரசுடமையாக்கப் போராட வேண்டுமென்றார்கள்.
 
 
2
இவர்கள் காலத்திலேயே தேசியஇனப்பிரச்சனை குறிந்து வழிகாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். சர்வம் தழுவிய புரட்சியை முன்னிறுத்தியவர்கள் தேசிய இனப்பிரச்சனையை வர்க்கப்பிரச்சனையாக அடையாளம் காண்கின்றார்கள். அயர்லாந்து விடுதலை அடையவேண்டும் என்கின்றார்கள். ஒடுக்கும் தேச மக்கள் விடுதலை (சிங்கள தேசத்திற்கு பொருந்தும்) அடைய வேண்டும் ஒடுக்கப்படும் தேசத்தின் விடுதலை அவசியம் என்கின்றார்கள். சிங்கள தேச மக்கள் விடுதலை அடைய வேண்டுமென்றால் தமிழ் தேசத்தின் விடுதலை முன்னிபந்தனையாகும்.
சர்வம் தழுவிய அடிப்படை முரண்பாட்டிற்கு முதன்மை கொடுத்தவர்களின் அறிவியல் மாற்றம் ஏற்படுகின்றது. மார்க்சின் காலத்தில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து வந்ததையும் அது தோற்றுவிக்கும் பிரதான முரண்பாட்டிற்கான வழிகாட்டலை லெனின் முன்வைத்துள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்பையும் வர்க்கப் போராட்டத்தின் முக்கிய வேலைத்திட்டமாக முன்னிறுத்துகின்றார். ஏகபோக நிதிநிறுவனங்கள் கட்டற்ற சந்தையைக் கோருவது, நிதிமூலதனத்தின் நகர்வு, மிகைஉற்பத்தியை கொண்டதால் சந்தைக்காக யுத்தங்களை, ஆக்கிரமிப்பையும் லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற புத்தகத்தின் ஊடாக வழிகாட்டியுள்ளார்.
 
3.
முதலாளித்துவம் (தொழிற்துறை) வளர்ச்சியடைந்த நாடுகளில் தான் புரட்சி ஏற்படும் என்று மார்க்ஸ் கருதினார். இதற்கு மாற்றாக தொழிற்துறை முழுமையடையாத நாட்டில் புரட்சியை வென்றெடுக்க தலைமை தாக்கினார் லெனின். ரொட்கியம் முன்வைக்கும் சர்வம் தழுவிய புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் நிரூபித்தார். ருசியப் புரட்சியின்போது தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டது. சுதந்திர தேசங்களின் கூட்டரசு உருவாகியது. சோவியத் கூட்டரசில் இணை விருப்பமற்ற பின்லாந்து பிரிந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டது. பின்லாந்து சார் மன்னராட்சியின் கீழ் ருசிய ஆக்கிரமிப்பில் இருந்து குறிப்பிடத்தக்கது.
இதேவேலை கொலனித்துவ ஆட்சியின் கீழ் இருக்கும் தேசிய இனங்களுக்கும், தேசங்களுக்கும் வழிகாட்டினார் லெனின்.
அ) முதலாளித்துவம் வளர்ச்சியின் தேசிய இனங்கள் தேசமாகவும்
ஆ) அவை சுதந்திர அரசுகளாக அமையும் இரட்டைப் போக்கு என்பது சர்வம் தழுவிய போக்கும் என்கின்றார்.
இங்குதான் பேரினவாத ஜேவிபி தொடக்கம், வாய்ப்பாட்டு மார்க்சியர்கள், பொதுவுடமைப்புக்கள் என்பன ஏற்க மறுகின்றனர். இவர்கள் 1848 பொதுவுடமைக்கட்சியில் பிரகடனப்படுத்திய சர்வம் தழுவிய புரட்சியில் தொங்கிக் கொண்டு நிற்கின்றார்கள்.
தமிழ் இனவாத தேசியவாதிகள், பிரிவினைவாதம், யாழ்சைவவேளாளம், பயங்கரவாதம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு இனமத குலபேதமற்றுப் போராடுவோம். சிங்கள முற்போக்கு - தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைவோம் என்கின்றார்கள். இவர்கள் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் இல்லாது வாய்ப்பாட்டுவாதிகளாக உள்ளார்கள். தேசிய இனங்களின் முதலாளித்துவக் கட்டத்தை மறுப்பவர்கள் மார்க்சிய லெனினியவாதிகளாக இருக்க முடியாது.
 
 
4
லெனின் வெற்றியடைந்த பாதையில் இருந்து சீனமானது நிலப்பிரபுத்துவம் இறுகிய நிலையில் இருந்து புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
அ) ஆக்கிரமிப்பில் இருந்து சீன தேசத்தை விடுவித்தார்
ஆ) புதிய (முதலாளித்துவ) சனநாயகப் புரட்சியை வெற்றிரமாக நடத்திக்காட்டினார். பண்பாட்டுப் புரட்சியின் ஊடாக பழைய சிந்தனைக் கட்டமைப்பை மாற்றியமைக்க வழிகாட்டினார்.
இங்கு கவனிக்க வேண்டியது சாதியம் என்பது உற்பத்தி மாற்றத்தின் ஊடாகவே சிந்தனையில் மாற்றம் சாத்தியம். அதற்கு முதலில் தேவையான ஆட்சியதிகாரம் அவசியமானது. இதற்கு மாறாக அடையாள அரசியலை முன்னிறுத்தி தலித்திய, சாதியக்கட்சிகளின் பின்னால் மக்கள் அணிதிரளப்பட்டுள்ளார்கள்.
 
5.
மார்க்சியம் என்பது உலகை ஆராய வழிகாட்டும் தந்துவம் மாத்திரம் அல்ல. மாறாக இந்த சமூக அமைப்பை மாற்றியடைப்பதற்கு வழிகாட்டும் தத்துவமும் கூட. எண்ணடிப்படையிலும், பெருந்தேசிய அகங்கார உணர்வின் அடிப்படையில் தமிழர் தேசத்தை மறுத்து கருத்து வைக்கும் நிலையே இடதுசாரிகளிடம் உள்ளது.
தேசத்தினை மறுத்து
நிகுநெகும
கிராமப் பஞ்சாயத்து
சமவுரிமை
ஜேவிபியின் மக்கள் மன்றம் என்று அதிகாரப் பரவலைக் கூட மறுதலித்து தீர்வை முன்வைக்கின்றார்கள்.
இலங்கை என்ற நாட்டரசினுள் இரண்டு தேசங்களும், மலையக, முஸ்லீம் மதச் சிறுபான்மையிரும் உள்ளார்கள்.
தேசிய இனத்தின் முதலாளித்துவக் கட்டத்தினை சிங்கள, தமிழ் தேசங்கள் முழுமையடைவதன் ஊடாகவே உழைப்பாளிகளின் ஆட்சியை அடையமுடியும். சிங்கள தேசத்தின் உழைப்பாளிகள் விடுதலை அடைய (பேரினவாதக்கட்டமைப்பு உடையவேண்டும், இன்று தமிழர்களை பிரதான எதிரியாக்கின்றார்கள், சிங்கள தேசம் முதலாளித்துவப் புரட்சியை வென்றடைய நிபந்தனை) தமிழ் தேசம் விடுதலை அடையவேண்டும். இதனை வி.பு. தலைவர் தனது மாவீரர் உரையில் வலியுறுத்திக் கூறுவார். அதாவது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு உடையாத வரையில் தீர்வை வைக்கப் போவதில்லை. விபு யுத்த - செயற்பாட்டு - நடைமுறைக் கோட்பாடுகளின் உடன்பட வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் தேசத்தின் ஆட்சியதிகாரத்திற்காக இறுவரை போராடி மடிந்த தேசபக்தர்கள். வி.பு தேசபக்தியை மறுதலித்துக் கொண்டு சமூகம் முன்னோக்கிச் சென்றுவிடமுடியாது. தேசிய இனங்களின் முதலாளித்துவக்கட்டத்தை மறுத்துக் கொள்பவர்கள் மா.லெ உள்வாக்கிவிடவில்லை என்பதற்கு அப்பால் மார்க்சிய மொழியில் திரிபுவாதிகளாவார்.
 
6
இறுதியாக இந்தக் கட்டுரையில்சுருக்கமாக எழுதப்பட்டவற்றை எனது இரண்டு புத்தகங்களிலும் வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்களின் பார்வையில் இருந்து மார்க்சிய அணுமுறையில் தத்துவார்த்த ரீதியாக ஆராயப்பட்டுள்ளன.
முதலாளித்துவக்கட்டத்தில் இருக்கின்ற தேசிய இனம்
அ)தேசத்தின் சுயநிர்ணயம்
ஆ)சாதிய - ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தில் அடங்கும். இவற்றை உள்ளடக்கிய செயற்தந்திரமே ஈழ விடுதலையைச் சாத்தியப்படுத்தும். இந்த வரலாற்றுப் போக்கினை தனிமனிதர்கள் சிந்தனை தீர்மானித்துவிட முடியாது.
புரட்சிகர சக்திகள் தலைமை தாங்காது இருந்துவிட்டு முற்போக்கு தேசியம் தலைமை தாங்கினால் போராடுவது என்று கடமையை செய்யாது விடின். அந்தச் சமூகத்தில் உருவாகும் தலைமை என்பது பூர்சுவா சிந்தனை கொண்டதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. (சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. ) பொதுவுடமைக் கட்சி கொள்கையை மறைக்கத் தேவையில்லை. கொள்கை வெளிப்படையாகபிரகடனப்படுத்த வேண்டும்.
உள்நாட்டில் தேசிய - முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தை அடைவதற்கான போராட்டம் என்பது முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த நாட்டில் உள்ள பெருந்தேசிய இனம் தனது சொந்த தேசிய இனத்திடம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமை பற்றி வெளிப்படுத்த வேண்டும். ஒடுக்கும் தேசத்தின் பொதுவுடமைவாதிகள் ஒடுக்கும் தேசத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்று போராட அணிதிரட்ட வேண்டும். பெருந்தேசியவாதம் உருவாகும் இதனால் மக்களிடம் வெளியே வைக்க முடியாது என்று காரணம் காட்ட முடியாது. காரணம் கொள்கைகள் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.
தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்படும் மலையக, முஸ்லீம் மதச் சிறுபான்யினங்களின் ஐக்கியத்தின் ஊடாக பொது எதிரிக்கு எதிரான போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும்.
சர்வதேசத்தில் சூழ்ந்திருக்கும் யுத்த மேகத்தையும் சந்தைக்காய் எம்மை மறுகாலனியாதிக்க முற்படும் நிலையில் பிற நாடுகளையும், தேசங்களையும் ஆக்கிரமிக்கும் யுத்தத்திற்கு எதிராக உலகில் உள்ள முற்போக்காளர்கள், உழைப்பாளிகள், யுத்த எதிர்ப்பாளர்கள் இவர்களுடன் இணைந்தே ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்க்க முடியும்.
வாய்ப்பாட்டுவாதிகளே மார்க்சியத்தை சமூகத்தில் இருந்து அன்னியப்படுதாதீர்கள்.
 
படியுங்கள்- விவாதியுங்கள்- ஆயிரம் பூக்கள் மலரட்டும்.