சோசலிசப் பொருளாதாரம்- ஜே.வி. ஸ்ராலின்
-மொழியாக்கம் சுந்தரசோழன்
சோசலிசப் பொருளாதாரம் பற்றி தோழர் எழுதிய புத்தகம் 22.05.1952 களில் எழுதப் பட்டது. அதாவது (18 December 1878 – 5 March 1953) அவரின் 74ம் வயதில் எழுதப்பட்டதாகும். இந்தப் புத்தகம் மிக முக்கியமான புத்தகம்.
இது தோழர் லெனின் எழுதிய சோவியத் என்றால் என்ன?
கனடியரான வில்லியம் ஹிண்டன் – சீனா: ஒரு முடிவுறாத போர்
சோவியத் பொருளாதார விமரிசனம் – தோழர் மாவோ என்பவற்றை வாசித்தே ஒரு முறையான விமர்சனம் எழுதப் பட முடியும். ஆனால் இது விமர்சனம் அல்ல. மாறாக இந்தப் புத்தகத்தைப் பற்றி மார்க்சிய வரலாற்று மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான அறிமுகமே.
மார்க்சிய வரலாற்று மாணவர்கள் கடுமையான சொற்களைக் கண்டு வாசிப்பதில் பின்னடிக்கிக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை. இந்தப் புத்தகம் நேர்த்தியாக இலகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிமாற்றம், இலகுபடுத்துகின்றேன் என்ற பேர்வழிகள் முக்கிய படைப்பின் உள்ளடக்கத்தைச் சிதைப்பார்கள். ஆனால் இந்த மொழிபெயர்ப்பு சிறந்ததாக உணர்கின்றேன்.
உற்பத்தி சாதனம் (நிலம், கோடாலி, அம்பு, வேல், இயந்திரங்கள் இதர பல) உற்பத்தி உறவு என்கின்ற போது உற்பத்திச் சாதனம் வைத்திருப்பவருக்கும் உற்பத்தி- உழைப்புச் சக்தி (மனிதவலு) விற்பவருக்கும் இடையோன உறவு. இதுவே பொருளாதாரத்தின் அடிக்கட்டுமானம். அதாவது உற்பத்தி உறவு -உற்பத்திச் சக்தி இவற்றில் மேல் உருவாகியதே பொருளாதாரக் கட்டமைப்பாகும். இதனை பொருளாதாரவாதம், நிர்ணயவாதம் என்பார்கள்.
ஆனால் பணம் உருவாகுதற்கு முன்னரே பொருளாதாரக் கட்டமைப்பு இருந்து கொண்டிருக்கின்றது. அந்த வேளையில் கூலி உழைப்பு, பணப்பரிமாற்றம் இல்லாத காலத்திலேயே சமூக வாழ்வியலில் மனித உழைப்பு இருந்து கொண்டே வந்துள்ளது. இது மனித வளர்ச்சியில் உழைப்பின் பாத்திரம் என்ற உண்மையை முன்கொண்டு வந்தது மார்க்சியமே. இதனை மறுப்போர் கருத்துமுதல்வாதிகள். மனித உழைப்பு இல்லாது எதுவும் சாத்தியமில்லை.
இந்தப் புத்தகத்தை அதாவது 52 இல் எழுதியதை 2020 இல் வாசிக்கும் போது எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்பதை தோழர் ஸ்ராலின் தொகுப்பில் 1வது பகுதியில் உள்ளதை அப்படியே தருவது பொருத்தமாகும். ‘‘இப்படைப்புக்கள் இன்னும் ஒரு முழுமையான மார்க்சிய- லெனினியவாதியாக வார்த்தெடுக்கப்படாத ஓர் இளம் மார்க்சியவாதியின் படைப்புக்களாகக் கருத வேண்டும். அப்போதுதான் இவற்றைப் புரிந்து கொள்ளவும், உரிய முறையில் மதிப்பிடவும் முடியும். எனவே இப்படைப்புகளில் பழைய மார்க்சியவாதிகளின் சில முன்மொழிவுகளின் எச்சங்கள் இருப்பதையும் அவை பின்பு நடைமுறைக்குகொவ்வாதவை என்று நமது கட்சியால் பின்பு கைவிடப்பட்டதும் இயற்கையானதே. ‘‘(ப18 தொ1.) மார்க்சிய புரிதல் பற்றிய பிரச்சனையை தோழர் எவ்வாறு எதிர்க் கொள்கின்றார் என்பதை இந்தப் நூலின் இறுதிப் பகுதியில் படித்தறியமுடியும். இதனால் இறுதிப் பக்கத்தின் பகுதிகளுக்கு வரிக்கு வரி எழுதவில்லை.
இதேபோல புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து சோசலிசக் குழந்தை என்பதைக் கொண்டே முதல் 5 ஆண்டுத் திட்டத்தை மதிப்பிட முடியும். ‘‘‘ஒரு வேளை தேசியமயமாக்கலுக்கு எதிரான விவசாயிகளின் ஒப்புதலின்மையை நம்மால் சமாளிக்க முடிந்தாலும் மார்க்சியவாதிகளாகிய நாம் தேசிய மயமாக்கலை முன்மொழியக் கூடாது ஏனெனில் முதலாளித்துவ- ஜனநாயப் புரட்சிக்குப் பின்பு ருசியாவில் ஏற்படப் போகும் அரசானது சோசலிச அரசாக இல்லாமல் ஒரு முதலாளித்துவ அரசாக இருக்கப் போவதால், தேசியமயமாக்கப்பட்ட பரந்த நிலப்பகுதி முதலாளித்துவ அரசின் கைகளைக் கட்டுப்பாடற்ற வகையில் பாட்டாளிகளின் நலன்களுக்குப் பாதமாக வலுப்படுத்த செய்யும் (1946) ‘‘ (19.தொ1) .மு 1901-1907 இடைப்பட்ட காலத்தில் மக்களின் சிந்தனைப் போக்குப் பற்றி பேசுகின்றார்கள். இந்தக் காலத்தில் புரட்சி நடைபெற்று முடியவில்லை.
ஆனால் இன்று புரட்சி நடைபெறாத நிலையில் புனிதர்களையும், புனிதமான கொள்கையைக் கொண்டவர்களைக் கொண்டே புரட்சி நடைபெறமுடியும் என்று சோதிடம் பார்க்கும் நிலைதான் இன்றுள்ளது. ஈழ அனுபவத்தில் யாரோ எதையே வாசித்து விட்டு ஒப்பிப்பார்கள். அவர்கள் நமக்கு ஒப்பிப்பதை மீளவும் ஒப்பிக்கப்பட்டே வருகின்றது.
இதில் குறிப்பாக ‘‘கூட்டுப் பண்ணையில் உள்ள ஒவ்வொரு உறுப்புக் குடும்பமும் அந்த நிலத்தில் ஒரு துணைநிலை விவசாயம் , வசிப்பிடம், கால்நடைகள், கோழிகள் மற்றும் சிறுவிவசாயக் கருவிக் கருவிகள் ஆகியவற்றைத் தனது தனிச் சொத்தாகக் கொண்டுள்ளன‘ (94) இந்தப் பகுதியை வாசித்த பின்னர் வியட்னாம் பயணத்தில் கண்டது கண்முன்னால் வியட்னாமிய உழைப்பாளிகள் எவ்வாறு எறும்போல உற்பத்தியில், முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என்பதை கண்டு உணர முடிந்தது. சாதாரண பொதுப்புத்தி என்பது அனைத்தையும் அரசுடமையாக்குவது என்பதை எவ்வாறு தட்டையாக விளக்கப்பட்டு வருகின்றது என்ற அவலத்தை இந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற போது விளங்கிக் கொள்ள முடிந்தது. குறிப்பாக கிராமப்புற விவசாயிகளின் சிந்தனை வடிவம் வர்க்க நிலை என்பது மாறுபட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டத்தில் தான் சோவியத் ஒன்றியம் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்திக் கொண்டார்கள். இந்த வகையில் சோவியத் பொருளாதாரம் பற்றிய அறிதல் முக்கியமாகின்றது. ஆபீரிக்க, தென்னமெரிக்க, ஆசிய நாடுகள் என்பன முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. அரசியல் அதிகாரம் அற்ற தேசங்கள் இருக்கின்ற காலத்தில் பொருளாதாரவாதமே பேசப்படுகின்றது. ஆனால் உண்மையான அரசியல் (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, உற்பத்தி சாதனத்தை கைப்பற்றுதல்) அதிகாரத்தினாலே பொருளாதாரத்தில் மாற்றத்தினை கொண்டு வரமுடியும்.
முதலாளித்துவ பொருளாதாரம் உற்பத்திச் சாதனங்களின் தனியுடமை என்பது போட்டி, உற்பத்தி அராஜகம், மிகை உற்பத்தி, சந்தை மதிப்பு என்பது ஊகவணிகம், பதுக்கல்கள், உற்பத்தியில் வீழ்ச்சி என்பதை எவ்வாறு சோசலிச சமூகத்தில் மாற்றினார் என்பதை இந்தப் புத்தகத்தில் பாடத்திட்டமாகவே எழுதப்படுகின்றது. 10 தலைப்பின் கீழும் 5 கடிதங்களும் இந்தப் புத்தகத்தில் அடக்கப்பட்டுள்ளன.
இதில் இன்னொன்று பேசப்பட வேண்டியுள்ளது. ரொட்ஸ்கியர்களின் தோழர் ஸ்ராலின் மீதான விமர்சனம். சோவியத்தின் பொருளாதாரத் திட்டத்தில் தொழிற்துறை, விவசாயம் ஆகிய இரண்டு துறைகளில் ஒன்றை மாத்திரம் முதன்படுத்துவது சரியா அல்லது இரண்டையும் ஒரே அளவில் பகுந்து செய்வது சரியா? இதில் Trotsky தோழர் லெனின் வகுத்த பாதையில் இருந்து மாறியிருந்தார். ரொட்ஸ்கி தொழிற்துறையை மாத்திரம் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றார். இந்தப் பிரச்சனை பற்றிப் கோட்பாடு ரீதியாக பேசுவதில்லை. ரொட்ஸ்கிகள் அவதூறு செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
ரொட்ஸ்கியை கொலை செய்வதுதான் திட்டமென்றிருந்தால் என்றால் சோவியத்தில் வைத்தே செய்திருக்க முடியும். அவரை கொலை செய்ய மெக்சிக்கோவிற்கு சென்றிருக்கத் தேவையில்லை. ரொட்ஸ்கி தளமில்லாது பல்பிடுங்கிய பாம்பு என்பதால் நாடு கடத்தப்பட்டார். இறுதியில் காதலியின் காதலனால் கொல்லப்பட்டார். இந்தப் புத்தகத்திலே சோவியத் தேவையில்லாது முதலாளித்துவ நாடுகளைத் தாக்காது என்று முதலாளித்துவ நாடுகள் நம்புவதாக எழுதுகின்றார். இதே போல சோவியத் என்றால் என்ன? என்ற புத்தகத்தில் முதல் ஐந்தாண்டு திட்டம் பற்றி வகுக்கின்ற போது பூர்சுவாக வர்க்கத்தை இணைத்தே நிர்வாகத்தை நடத்திட வழி வகுத்தார். எனவே ரொட்ஸ்கியை வெளியே விட்டு எதிரிகளுடன் சேரவிடாது பதவி கொடுத்து உள்ளே வைத்துக் கொண்டார். இந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற போது குறிப்பிட்ட காலத்திற்கான அரசியல் பொருளாதாரப் போக்கை புரிந்து கொள்ள முடியும்.
இதில் குறிப்பாக தோழர் ஏங்கெல்ஸ் மாற்றிய சொல்லை இங்கு குறிப்பிடுவது பொருந்தும். ‘‘தமது உழைப்பைக் கூலிக்காக முதலாளியிடம் விற்கிறார், ஆனால் இங்குள்ள வாசகத்தின் படி அவர் தமது உழைப்பு சக்தியை விற்கிறார். (ப 7 கூலியுழைப்பும் மூலதனமும்) உழைப்புச் சக்தி என்பதை கவனத்தில் கொண்டு இந்தப் புத்தகத்தை வாசிப்பது நல்லது.
1. சோசலிசத்தின் கீழ் பொருளாதார விதிகளின் தன்மை
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பெரும்பான்மையினராக உழைக்கும் வர்க்கம் உரிமை கொண்ட ஆட்சிமுறையை குறிக்கின்றது. இதுதான் சமவுரிமை ஆட்சியைக் கொடுத்தது. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தையே சனநாயகம் என்கின்றது. அதாவது முதலாளித்துவமே சனநாயகம். முதலாளித்துவத்தைத் தான் சனநாயகம் என்று முதலாளித்துவ நிறுவனங்கள் சமூகமயமாக்கிக் கொண்டும், சமூக உண்மையாகவும் திணிக்கப்படுகின்றது.
இதிலிருந்து ‘சோவியத் அரசானது நிலவுகிற பொருளாதார விதிகளை ஒழித்துக் கட்டிவிட்டுப் புதிய விதிகளைப் ‘படைப்பதன்‘ மூலம் இதனை சாதிக்கவில்லை. மாறாக, உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளினன் தன்மைக்கு நிச்சயம் இசைவாதாக இருக்க வேண்டும் must necessarily conform) என்னும் பொருளாதார விதியைச் சார்ந்திருந்த காரணத்தினால் மட்டுமே இதனை சாதிக்க முடிந்தது. தமது நாட்டின் உற்பத்திச் சக்திகள் குறிப்பாக தொழில்துறையிலான உற்பத்திச் சக்திகள் சமூகத் தன்மை உடையவையாக இருந்தன. ‘‘ (ப34-(6ஆங்கில) தோழர் ஸ்ராலின்)
இதில் கவனிக்க வேண்டியது குறிப்பாக சமூகத்திற்கு தேவையான உற்பத்திச் சக்தியின் சமூகத் தன்மை பற்றியதே. இதே மீளவும் ஆசானிடம் செல்ல வேண்டியுள்ளது.
சமூகப் புரட்சிப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-
“...உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
...
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” (முன்னுரை - அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)
உற்பத்தி உறவுகள் நிச்சயம் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு இசைவாக இருக்க வேண்டும் என்கின்றார்.
இதில் தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் ஒன்றிணைத்து எவ்வாறு 5 ஆண்டுத் திட்டங்களை வளர்த்தெடுத்து வெற்றி முதன்மையாக விவசாயத்தையும், தொழிற்துறையையும் பொதுவாக்கியதேயாகும்.
2.சோசலிசத்தின் கீழ் பண்ட உற்பத்தி
இந்தப் பகுதியில் கூட்டுறவுத் திட்டத்தை முன்வைத்த தோழர் லெனினின் 5 வழிகாட்டலை தோழர் ஸ்ராலின் முன்னிறுத்துகின்றார்.
சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்ட பின்னர் உற்பத்தி (மனித) சக்தி பண்டமாக இருக்காது. ஏனெனில் உற்பத்திச் சாதனம் அரசு பண்ணையின் கீழ் உரிமை இருப்பதும், பண்ணையில் உற்பத்தி செய்பவை அங்கு உழைப்பவர்களுக்கே ஆகின்றது. பண்ணையின் உற்பத்திப் பொருட்களுக்கு மாற்றாக பரிமாற்றம் செய்யப்படுகின்றது. உற்பத்திச் சக்தியை கொடுத்துவிட்டு வெற்றாக தனிமனிதர்கள் ஊதியம் பெற்றுக் கொள்வது என்பது உபரியை உற்பத்திச் சாதனத்தைக் உரிமையாக கொண்டவர்களுக்கே செல்கின்றது.
இதனால் உற்பத்திச் சக்தியை கொடுத்துவிட்டு விட்டு வாழ்விற்காக போராட வேண்டியிருக்கும் நிலை ஏற்படுகின்றது.
இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்த மனிதர் அவர்கள் சொத்துடமை வளர்ச்சியால் சுயசார்பை இழந்து கூலிகளாக நகர்ப்புறம் தேடி பிழைப்பிற்காக வருகின்றார்கள். இங்கே மிகையாக உழைப்பாளிகளை கொண்ட கொண்ட சமூகக் கட்டம் உருவாக்கப்படுகின்றது. இதனால் உற்பத்தி சக்திக்கான மலிந்த சந்தை என்பது திறந்துள்ளது. இந்தச் சந்தையைப் பயன்படுத்தி மலிந்த கூலியில் உற்பத்தி (மனிதவலு) சக்தியின் உழைப்பை பெற்றிட முடியும் என்ற நிலை ஏற்படுகின்றது.
இந்த முக்கிய மாற்றம் என்பதை சாதித்ததே 1917 புரட்சி. ‘அனைத்து உற்பத்திச் சாதனங்களையும் சமூக உடமையாக்குவதன் கூடவே, பண்ட உற்பத்திக்கும் முடிவு கட்டவுண்டும் என்று ஏங்கெல்ஸ் கருதுகின்றார்‘‘ (41)
3.சோசலிசத்தின் கீழ் மதிப்பு விதி
மதிப்பு விதி என்பது முதலாளித்துவத்தில் ஊகவணிகம் (பதுக்கல்), உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படும். இதற்கு மாற்றாக தேசியப் பொருளாதாரத்தை கட்டமைக்கும் திசைவழியில் மதிப்பு விதி இருக்கும்.
உற்பத்திச் சாதனம் அரசுடமையாக இருக்கின்ற பொதும் பண்டத்தின் மதிப்பு விதி உள்ளது. இது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையில் இருக்கும் மதிப்பு என்பது போட்டி (சந்தைக்கு தேவையானதை என்பதாக நான் புரிந்து கொள்கின்றேன். எத்தியோப்பியா பணப்பயிர் என்பதை முதன்மைப்படுத்தி பணப்பயிரை உற்பத்தி செய்தார்கள். அதன் காரணமாக வரட்சியின் போது (உபரியின் ஊடாக மூலதனம் உருவாகும்) பல லட்சம் மக்கள் இறந்தார்கள். ஆனால 1924களில் ரொட்க்சி தொழிற்துறைக்கு முன்நினை படுத்த வேண்டும் என்கிறார்.
ஆனால் தோழர் இல்லை விவசாயத்துறைக்கும், தொழிற்துறைக்கு இணையாக சம வகுபாகம் கொடுக்க வேண்டும் என்கின்றார். இதனை மறுத் த ஒடுகாலி பாட்டாளி வர்க்கப் புரட்சியின் எதிரி என்பதை கோட்பாட்டு ரீதியாகவே நிரூபிக்கின்றார்.
ஒடுகாலி ரொட்கிய பாதை ஏற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை தனது 72-74 வயது முதிர்ந்த போது எழுதியுள்ளார்.
4. நகரங்கள் மற்றும் கிராமங்கள், மூளை உழைப்பு மற்றும் உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான முரண்நிலையை ஒழிப்பதும் அவற்றுக்கு இடையிலான மாறுபாடுகளை நீங்குவதும்-
நலன்களின் மோதலை தவிர்ப்பதும் பற்றிப் பேசப்படுகின்றது. முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, முதலாளித்துவம் வளராத நாடுகளிலும் சரி கிராமத்திற்கும் நகரத்திற்கும் வித்தியாசம் இருந்து கொண்டே இருக்கின்றது. ஆசியக் கொடுங்கோண்மை (மார்க்ஸ், லெனின் இருவரின் வரையறை) என்ற நிலமானியக் கட்டமைப்புக்குள் வாழும் சமூகத்தின் நிலையை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியமாகின்றது. அடையாள அரசியல் பேசியும், சாதிக் கட்சிகளைக் கொண்டும் சமூகம் பிளக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் இதன் தாக்கம் பெரிதாகத் தெரியாவிட்டாலும் (இல்லை என்ற பொருளில் அல்ல) கிராமங்களில் சாதிபிளவுகள் வெளிப்படையாகவே தெரியும்.
பண்பாட்டுப் புரட்சி நடத்தப்பட வேண்டுமென்றால் உற்பத்தி முறை மாற்றம் ஏற்பட வேண்டும்.
உற்பத்தி முறை மாற்றம் என்பது அதிகார வர்க்க உணர்வு அற்று சேவை, தொழிற்குதுறை வர்க்க மூளை உழைப்பாளிகளுக்கும், உடலுழைப்பாளர்களுக்கும் இடையே மாற்றத்தைத்தை ஏற்படுத்தி தோழமை உணர்வை கட்டியெழுப்பியது பற்றி பேசுகின்றது. மூளை உழைப்பும், உடலுழைப்பும் இரண்டு வர்க்கங்கள் என்பது சுட்டிக் காட்டப்படுகின்றது.
மூளை உழைப்பாளிகளின் உழைப்பு புதிய கண்டுபிடிப்புக்கள் சமூகத்திற்கு வழங்குகின்றது. சிந்தனைக்கும் உழைப்புக்கும் உள்ள முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. உழைப்பின் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகின்றது.
புதிய உற்பத்திச் சாதங்களை வழங்குவதன் ஊடாக விவசாயிகள்- பண்ணைகளின் அன்றாட வாழ்வியல் இலகுவாக்கப்படுகின்றது. இன்றையக் காலத்தில் முதலாளித்துவ நாடுகளில் தொழிற்துறை படிப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொழிற்துறைப் படிப்பு மிருகவளர்ப்பு, விவசாயம், கடல்தொழில் என்று விரிவாக்கப்பட்டுள்ளது. (முதலாளித்துவ நாடுகளில் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சிக்கு ஏற்ப சமூகம் உருவாகின்றது என்பது பற்றி இதே புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். இது இருக்க தேசிய ஒடுக்குமுறை உள்ளான நாடுகளில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியை புறக்கணிக்கின்றது) உற்பத்திச் சாதனத்தின் வளர்ச்சி என்பது உழைப்பாளிகள், விவசாயிகளிடையே தோழமை உணர்வையும், சமூக அந்தஸ்தையும் சமப்படுத்துகின்றது.
5. ஒற்றை உலகச் சந்தையின் தகர்வும் உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி தீவிரம் அடைவது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்திய முகம் சந்தையை இழக்கின்றது. மார்ச்சல் திட்டத்தின் அடிப்படையில் பல நாடுகளின் அமெரிக்காவின் பின்னால் செல்ல தனது நம்பிக்கையான நாயாக பிரித்தானியவை இணைத்துக் கொண்டது. யுத்தம் கொடுத்த பொருளாதார அழுத்தத்தில் இருந்து வெளியே வர செலவீனங்களை குறைக்க வேண்டிய தேவை கொலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.
அடிமைப்பட்ட நாடுகள் பலவற்றில் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. யுத்தத்தின் பின்னராக அடிமை நாடுகளை தனது பிரதிநிதிகளை (தரகு) வைத்தே ஆட்சி செய்வதன் ஊடாக சந்தையை தக்கவைத்துக் கொண்டது. அடிமைநாடுகளின் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் நட்பு நாய்களாக உருவாகினார்கள்.
தோழர் லெனின் வரையறை இங்கு பார்ப்போம்
‘‘ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவிற்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறவேண்டும். இத்தகைய இலக்கணம் யாவற்றிலும் முக்கியமானதை தன்னுள் கொண்டதாக இருக்கும். ஏனெனில் ஒருபுறத்தில் நிதி மூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்து விட்ட ஒருசில மிகப் பெரிய ஏகபோக வங்கிகளின் வங்கி மூலதனமாகும். மறுபுறத்தில் உலகின் பங்கீடானது எந்த முதலாளித்துவ அரசாலும் கைப்படாத பிரதேசங்களுக்கு தடையின்றிப் பரவிச் செல்லும். கொலனியாதிக்கக் கொள்கையிலிருந்து முற்றும் பங்கிடப்பட்டுக் கொண்டு விட்ட உலக நிலப்பரப்பை ஏகபோக உடனடியாக கொண்டிருப்பதற்குரிய கொலனியாதிக்கக் கொள்கைக்கு மாற்றிச் செல்வதாகும். ஆனால் மிகவும் சுருக்கமான இலக்கணங்கள் முக்கிய அம்சங்களைத் தொகுத்துத் தருவது வசதியாக இருந்தாலுங் கூட அவை பற்றாக் குறையானவையே. ஏனெனில் வரையறை செய்யப்படவேண்டிய நிகழ்வின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை அவற்றிலிருந்து வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே எல்லா இலக்கணங்களும் நிபந்தனைக்கு உட்பட்ட சார்பு நிலையிலான மதிப்பே கொண்டவை. நிகழ்வினது முழு வளர்ச்சியிலும் அதன் தொடர்புடமைகள் யாவும் அடங்கியனவாய் ஒரு போதும் இருக்க முடியாது என்பதை மறக்காமல் மனதில் கொண்டு ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்.
1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.
2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ‘நிதி மூலதனத்தின்‘ அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.
3) பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.
4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்
5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியதத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பொpய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக் கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.‘‘ (ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் . ப.141, 142 லெனின்)
தோழர் மாவோ இந்தக் கட்டத்தை மறுகொலனியாக்கம் என்று வரையறுத்தார். இன்றைய பின்னவீனத்துவம் உலகமயமாக்கல் என்று திறந்த சந்தையை வரையறுக்கின்றார்கள்.
6. முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான போர்களின் தவிர்க்கவியலாத் தன்மை
ஏகாதிபத்தியங்கள், முதலாளித்துவ நாடுகளிடையே எப்பவும் மோதல் ஏற்படும் என்பதை விளக்குகின்றார். பிரித்தானியா, அமெரிக்க நாடுகள் 1933களில் ஜேர்மனுக்கு வழங்கிய உதவி வழங்கியது. ஏகாதிபத்தியங்கள் சோவியத்திற்கு எதிராக திரும்பும் என்ற காரணத்தால் உதவியைச் செய்தார்கள். ஆனாலும் ஜேர்மனியின் நாசிச அரசு முதலாளித்துவ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.
இதே வேளை சோவியத் அரசு காரணமில்லாமல் முதலாளித்துவ நாடுகளை தாக்காது என்பதை முதலாளித்துவ நாடுகள் புரிந்து வைத்துள்ளதை குறிப்பிடுகின்றார்.
நாடுகளின் சமத்துவமின்மை தமது சந்தையை பாதுகாப்பதை அடிப்படையாக கொண்டுள்ளது.
இன்றைய முரண்பாடுகளை ஒப்பந்தக் கூடாக தீர்க்க முயற்சி செய்கின்றார்கள். WTO/GATT இன் ஊடாக ஒப்பந்தங்களை ஏற்படுத்துகின்றது. இந்த ஒப்பந்தம் மானியங்களை விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது என்று மறுக்கின்றது. NATO ஆயுதக் கூட்டை ஏற்படுத்தி தன்வசம் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு இன்றைய Covid 19 காலத்தில் சுதந்திர உற்பத்தி சக்தி நகர்வு, பொருள் அசைவு, திறந்த சந்தை என்பதை இன்று மாற்றியிருக்கின்றது. இது தற்செயலாக நடந்தது எனினும் ஒவ்வொரு தேசிய இனங்களும் தங்கள் சந்தையை பாதுகாப்பதன் ஊடாகவே சுதந்திரமான கூட்டாட்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
7.நவீன முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் ஆகியவற்றின் அடிப்படை பொருளாதார விதிகள்
இந்தப் படிப்பினை அல்லது வழிகாட்டல் என்பது சிக்கலாக இருக்கின்றது. ஆசியக் கொடுங்கோண்மையின் வழித்தடம் எங்கும் உள்ளது. தம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொண்டவர்கள். பழைய சிந்தனை மரபில் சாதியத் தொடர்வை ஆராய்பவர்கள் தான் நிறைய முற்போக்கு முகமூடிகள் உள்ளார்கள். ஆசியக் கொடுங்கோன்மையை முதலாளித்துவ கட்டத்திலும் தொடர்கின்றது.
நவீன முதலாளித்துவம் கணணி, விண்வெளி ஆய்வு போன்றவை வளர்ந்து வருகின்ற காலம். மூளை உழைப்பின் வளர்ச்சி தொழிலாளை திறன் மிகு உற்பத்திச் சக்திக கொண்டவர்களைப் போலவே, மிகையான தொழிலாளர்களை வேலை அற்றவர்களையும் உருவாக்கியது.
நவீன முதலாளித்துவம் சர்வதேச வேலைப்பிரிவினையை உருவாக்கிக் கொண்டது. உற்பத்திச் சாதனங்களுக்கு தேவையான உதிரிப் பாகங்களை எந்த நாட்டில் உற்பத்திச் சக்தி மலிந்த விலையில் கிடைக்குமோ அந்த நாடுகளில் தொழில் சாலைகளை உருவாக்கி உற்பத்தி செய்தது.
‘ஒரு குறிப்பிட்ட நாட்டில் பெரும்பான்மையான மக்களைச் சுரண்டி, நாசம் செய்து, வறுமைக்குள்ளாக்கி அதன் மூலம் அதிகபட்ச லாபம் ஈட்டல்; இதர நாட்டு மக்களை- குறிப்பாகப் பின்தங்கிய நாட்டு மக்களை – அடிமைப்படுத்தித் திட்டமிட்ட முறையில் கொள்ளையடித்தல் மற்றும் கடைசியாக , போர்கள் மற்றுமு் தேசியப் பொருளாதாரத்தை இராணுவமயமாக்குதல் ஆகியவற்றை மிக அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றையே நவீன முதலாளித்துவத்தின் அடிப்படைப் பொருளுாதார விதியின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தேவைகள் என்று குறிப்பிடலாம். (87)
இரண்டாம் உலகத்தின் பின்னர் உலகில் நடந்த யுத்தங்கள் சந்தையை கையகப்படுத்திக் கொள்வதாகும். யுத்த வெறி அரசுகள் பலபொய்களை முதலில் அவிழ்த்து விட்டு அம்பலமாகியதை கடந்த 30 வருடங்களில் அதிகமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. இவைகள் எல்லாம் ‘மிக அதிகபட்ச லாபத்தைப் பிழிந்தெடுப்பதற்கு‘‘ ஆகும். மூளை உழைப்பும் விரைவான உபரியை நவீன முதலாளித்துவம் உருவாக்கிக் கொடுக்கின்றது.
கணணி, உட்பட்ட நவீன முதலாளித்துவம் தனிமனிதர்கள் உற்பத்திச் சாதனத்தை வைத்திருப்பதால் அது தனிமனிதர்களிடம் ஆனால் சோசலிசப் பொருளாதாரத்தில் ‘‘தேவைகளை அது சரியானபடிப் பிரதிபலிக்க வேண்டும். --- சோசலிசத்தின் அடிப்படைப் பொருளாதார விதியின் தேவைகளுக்கு அது முற்றிலுமாகப் பொருந்திப் போக வேண்டும்‘‘ முதலாளித்துவத்தினை போல லாபம் கொடுக்கும் உற்பத்தி, உற்பத்திச் சாதனத்தை மாத்திரம் உற்பத்தி செய்வதல்ல. சந்தை (பண்டம்) – பணம் – சந்தை (பண்டம்) என்பதில்லாது சமூக நலன் கொண்டதாக இருக்கும்.
8. இதர பிரச்சனைகள்
1. நிலப்பிரபுத்துவம் – நிலவுரிமை
2. ‘‘கூட்டுப் பண்ணையில் உள்ள ஒவ்வொரு உறுப்புக் குடும்பமும் அந்த நிலத்தில் ஒரு துணைநிலை விவசாயம் , வசிப்பிடம், கால்நடைகள், கோழிகள் மற்றும் சிறுவிவசாயக் கருவிக் கருவிகள் ஆகியவற்றைத் தனது தனிச் சொத்தாகக் கொண்டுள்ளன‘ (94) இவ்விடயம் பொதுப்புத்தியில் மாற்றாக விளக்கப்படுத்தப் பட்டுள்ளது.
3. நிலஉடைமையாளர்களுக்கு விவசாயிகள் அளிக்கும் மொத்த நிலவரி மற்றும் நலம் வாங்குதற்கான மொத்தச் செலவு- நிலம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் இவை அவசியமில்லை. முன்னைய சமூகத்தைப் பற்றி ஆராய்யும் போது அவசியமாகும்.
4. ஏகபோகங்கள் அரசு இயந்திரத்துடன் ஒன்றிணைதல்
5. சோவியத் யூனியனில் இயந்திரங்களின் பயன்பாடு- சமூக உழைப்பை குறைப்பதும், வேலைச் சுமையைக் குறைப்பது மாகும். இன்றையக் காலத்தில் 6 மணித்தியால வேலை பற்றிப் பேசப்படுகின்றது. தனியார் மயமாதலில் இருந்த சுரண்டல் என்பது உபரி உழைப்பின் ஊடாக முதலாளித்துவத்தின் மாற்றாக சமூகப் பொது உழைப்புச் சார்ந்தது இங்கு தொழிலாளர்கள் தனியுடமையாளர்களுக்காக உழைக்கவில்லை.
6. மு.நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம்
இந்தப் பகுதியில் வேலையில்லாதவர்களின் நிலையை வெளிப்படுதம்திக் கொள்வதன் அவசியத்தைப் பேசுகின்றார். இதே வேளை சோவியத் புரட்சிக்குப் பின்னரும், இரண்டாம் யுத்தத்தின் பின்னர் welfare state- மக்கள் நல அரசுகள் உருவாகியத் ஊடாக சமூக முரண்பாடுகள் தணிக்கப்பட்டது. இன்றைய மக்கள் நல அரசுகளுக்கும் இரண்டாம் அகிலத்தை சிதைத்த ஓடுகாலிகளின் அரசியல் பொருளாதார அரசியல் முக்கிய வகிபாகம் வகிக்கின்றது.
7. தேசிய வருமானம் – இது சோசலிச அரசின்
8. தோழர்கள் லெனின், ஸ்ராலின் போன்றவர்களுக்கு சிறப்பு அத்தியாயம் தேவையில்லை என்கிறார். தளபதி ஸ்ராலின்
9. அரசியல் பொருளாதாரம் குறித்த மார்க்சியப் பாடநூலின் சர்வதேச முக்கியத்துவம்
இந்தப் பகுதியில் இன்றைய காலத்தில் எவ்வாறு நிறையப் பக்கங்களைக் கொண்ட கட்டுரை, புத்தகங்கள் வாசிக்கமாட்டார்கள் என்ற நிலை உள்ளதே. அன்றையக் காலத்தில் தோழர் ஸ்ராலின் பாடத்திட்டம் அதிகபக்கமில்லாமல் இருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். பாடத்திட்டம் உள்நாட்டுத் தோழர்களுக்கு மாத்திரமல்ல. மற்றைய நாட்டின் தோழர்களுக்கும் அவசியம் என்று கருதுகின்றார்.
10.அரசியல் ஆகிய குறித்த வரைவுப் பாடநூலை மேம்படுத்துவதற்கான வழி முறைகள்
இந்தப் பகுதி ஒரு கலாசாலை ஆய்வு முறைமையை வலியுறுத்துகின்றார். பாடத்திட்டத்திற்கான ஆதரவாளர்கள் மாத்திரம் அல்ல. மாறாக‘‘ முழுமையான எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆகியவர்களையும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். புள்ளி விவரங்களைச் சரிபார்க்கவும், பாடநூலுக்குத் தேவையான கூடுதல் புள்ளிவிபர தகவல்களைத் தருவதற்கும் ஒரு தகுதிவாய்ந்த புள்ளியியல் அறிஞரையும், அதேபோல ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துகளின் (formulations) துல்லியத் தன்மையைச் சரிபார்க்க ஒரு தகுதிவாயந்த சட்ட நிபுணரையும் சட்ட நிபுணரையும் கூட அந்தக் கமிட்டியில் சேர்த்துக்கொள்வது நல்லது‘‘ (104)
இந்த வகை பன்முக பாடநெறிப் பின்புலம் கொண்டவர்கள் ஒரு சமூகத்தின் வரலாற்றை எழுத இப்போ பயிற்றப்படுகின்றார்கள்.
உதாரணத்திற்கு தமிழ் சமூகத்தின் வளர்ச்சியை எழுத வேண்டுமென்றால் தொல்லியல், கல்வெட்டு எழுத்து வாசித்தல், சங்க கால பாடல்களை வாசித்து அறிதல், ஒலைச் சுவடி வாசித்தல், மானிடவியல், நாட்டாரியல் இவ்வாறு பல துறைசார் சேர்ந்தே காலக் கிரமாக குறுக்கு நெடுக்காக சரிபார்க்கப்பட வேண்டும். இது குறிப்பாக தமிழகச் சூழலில் தனிமனிதர்கள் சார்ந்த ஆய்வு உள்ளதாக தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
இந்த வகையில் தோழர் ஸ்ராலின் திறாய்வு முறையிலும் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் வழிகாட்டியுள்ளார்.
11. தோழர் அலெக்சாண்டர் இலியிச் நோட்கினுக்கு பதில்
1.விதிகள் இல்லை என்பதற்கு மறுத்து--
‘‘பிரான்சில் முதலாளித்துவப் புரட்சி நடைபெற்ற சமயத்தில், உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு நிச்சயம் இசைவானதாக இருக்க வேண்டும் என்ற விதியை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் பூர்சுவாக்கள் பயன்படுத்திக் கொண்டனர். ‘‘ (107)
இந்தப் பகுதிக்கான பதிலை மேல் குறிப்புக்கள் விரிவாக எழுதியுள்ளார்,
‘பூர்சுவா புரட்சியின் துவக்கம் காலத்தில் ஒரு முன்னேறிய சக்தியாக இருந்த பூர்சுவாக்கள், தற்போது எதிர்ப்புரட்சி சக்தியாக மாறிவிட்டிருந்தனர்.‘‘ (107) இங்கு இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார உறவில் தாராளவாதம் மேலேங்கி எழுந்துள்ளது. இது தலித்தியம், அடையாள அரசியல், தேர்தல் கட்சிகளின் கூடாக பூர்சுவாக்கள் அணிதிரட்டப் பட்டுள்ளார்கள்.
2. சோசலிச சமூதாயத்திலும் உற்பத்தி உறவுக்கும் உற்பத்தி உறவுக்கும் பொருளாதார தன்மை முதலாளித்துவத்தில் உள்ளது போல இருக்கும்.
3. உற்பத்திச் சாதனங்கள் சோசலிச சமூகத்தில் பண்டமாக இருப்பதில்லை. ஏனெனில் உற்பத்திச் சாதனத்தை யாரும் பணம் கொடுத்து வாங்குவதில்லை. கூட்டுப் பண்ணைகளுக்கு கூட விற்பது இல்லை. மாறாக அரசு வழங்குகின்றது. பண்ணைகளுக்கு வழங்குகின்ற போதும் அவர்கள் உரிமையாளர் ஆகுவதில்லை. அது மீளவும் அரசிற்கு உரியதாக இருக்கின்றது.
உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு, அவற்றின் உற்பத்திச் செலவு, விலை பேசப்படுகின்றது எதற்காக என்றால் கணக்கு வழக்கு முறைப்படுத்தல், தொழில் நிறுவனங்கள் லாபம்- நட்டம் பற்றி அறிந்து கொள்வதற்கும், சோதனை செய்வதற்கும், வெளிநாட்டு வர்த்தகத்திற்காக என்கின்றார்.
4. விவசாயம் உற்பத்தி சாதனங்களை உருவாக்குவதில்லை எனவும் விவசாயம் மூலப் பொருட்களை உருவாக்குவதாக பதில் கொடுக்கின்றார். உற்பத்திச் சாதனத்தின் ஒரு பகுதியை மூலப்பொருள்- கச்சாய் என்கின்றார். இது உற்பத்திச் சாதனமாகாது என்கின்றார்.
5. சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திச் சாதனம் தனியே லாப நட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், உற்பத்தியை மாத்திரம் உருவாக்கிக் கொள்வதில்லை. ஆனால் தொழிலாளர்களை உச்சாகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ‘‘ தனிப்பட்ட ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் லாபகரத் தன்மை என்பது நமது தொழிற்துறையின் வளர்ச்சிக்கு மிகுந்த மதிப்புஉடையது ஆகும். அவற்றின் கட்டுமானத்தைத் திட்டமிடுதல் மற்றும் உற்பத்தியைத் திட்டமிடுதல் ஆகிய இரண்டு சமயங்களிலும் அதைக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். (116)
6. ‘‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தி என்பது இயற்கையில் நடைபெறுவதில்லை என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் ‘‘ என்கின்றார். (நான் இதனை முதலாளித்துவத்தின் நெருக்கடி குறித்து பேசுவதாக கருதுகின்றேன்.)
7. முதலாம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான மாற்றத்தை குறிப்பிடுகின்றார். சோசலிச நாடுகளின் வளர்ச்சி, கொலனித்துவ நாடுகளின் விடுதலை என்பது அரசியல், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்கின்றார்.
12. அ. தோழர் யரோசென்கோவின் தவறுகள் குறித்து
- உற்பத்தி உறவின் பாத்திரத்தை அளவிற்கதிகமாக குறைத்து மதிப்பிடுகின்றார்.
- உற்பத்தி சக்தியின் பாத்திரத்த அளவிற்கதிகமாக மிகை மதிப்பீடு செய்கின்றார்.
- சோசலிசப் பொருளாதாரத்தில் பல்வேறு சொத்துடமை முறைகள் இப்பதும் பற்றியும், பண்டச் சுற்றோட்டம், மதிப்பு விதி போன்றவை குறித்து அக்கறை கொள்ளவில்லை. (சோசலிசத்தின் கீழ் மதிப்பு விதி என்பதின் கீழ் இதனை மென்மெலும் அறிந்து கொள்ள முடியும்)
- உற்ப்திச் சக்திகளை அறிவு பூர்வமாக ஒழுங்கமைப்புச் செய்தால் போதும் என்கின்றதன் ஊடாக தொடர்ச்சியாக சோசலிசக் கட்டத்திலும் வர்க்கப் போராட்டம் தேவையில்லை என்கின்றார்,
- இயற்கைக்கும் சமூகத்தின் (மனிதர்களுக்கும்) இரண்டு உறவுகளும் சோசலிசப் பொருளாதாரத்தில் மார்க்சின் கூற்றை மறுக்கின்றார். யரோசென்கோவுடன் புகாரின் எவ்வாறு மார்க்சின் கூற்றை மறுக்கின்றார் என்பதை இங்கு விளக்குகின்றார்.(128)
- உற்பத்தி உறவு- உற்பத்திச் சக்தியின் மேல் அமைந்தது பொருளாதாரம் என்பதை மறுக்கின்றார்.
யரோசென்கோவின் கருத்துக்கு மாற்றாக தேவையான உற்பத்திச் சாதனங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதேவேளை உற்பத்திச் சக்திகளின் திறமையை (அறிவுபூர்வமாக ஒழுங்கமைவு) மேம்படுத்துவது (இன்றைய காலத்தில் கணணி தொழிற்நுட்ப அறிவு தொழிற்துறைக்கான பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கிக் கொள்ள முடியும். சிறப்புச் தேர்ச்சியுள்ள தொழிலாளிகளை உருவாக்குதல் )
-உழைப்பாளிகளின் உளவளத்தில், பண்பாட்டில் முன்னேற்றம், வேலை நேரத்தைக் குறைப்பது, சம்பளத்தை உயர்த்துவது, நுகர்வுப் பொருளின் விலையைக் குறைப்பது, தொந்தரவு என்ற நிலையில் இருந்து ‘‘ வாழ்வின் அடிப்படைத் தேவை‘‘ (மார்க்ஸ்) ‘‘வாழ்வின் அடிப்படைத் தேவை‘‘ (ஏங்கெலஸ்) உழைப்பை சுமையற்றதாக மாற்றல். மூலம் சமூகச் சொத்து சமூக என்று (கலைவாணர் சோவியத் சென்ற போது விலை கூட்டிச் பயணச் சீட்டு விற்றால் என்ன செய்வீர்கள் எனக் கேட்ட போது காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்படும் என்று. (உண்மை பொய் தெரியாது) ஆனால் சமூகச் சொத்து பொதுவானது என்ற சிந்தனை ஏற்படுத்த முடியும். இதன் ஊடாகவே ‘‘சக்திக்கேற்ற உழைப்பு உழைப்பிற்கேற்ற ஊதியம்‘‘ என்னும் சோசலிச சூத்திரத்தில் இருந்து ‘‘சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்குகேற்ற ஊதியம்‘‘ என்ற சூத்திரத்தை சூத்திரத்தை நோக்கி நகர்வது சாத்தியமாகும். ‘‘ (137)
ஆ. தோழர் யரோசென்கோவின் தவறுகள் குறித்து
‘‘பல்வேறு மனித சமுதாயங்கள் எதன் கீழ் தமது விளைபொருட்களை உற்பத்தி செய்வதும், பரிவர்த்தனை செய்தும் வந்துள்ளனவோ, அந்த நிலைமைகள் மற்றும் வடிவங்களைப் பற்றிய விஞ்ஞானமே‘ அரசியல் பொருளாதாரம் ஆகும்‘‘ (137 ஏங்கெல்ஸ்) முற்றாக புகாரின் உட்பட மறுக்கின்றனர். அரசியல் பொருளாதாரத்தின் பண்ட உற்பத்தி முறையை முதலாளித்துவ உற்பத்தி முறையுடன் கட்டுப்படுத்துவது தவறு என்கின்றார்.
இறுதியாக
பின்னிணைப்பில் மார்க்சிய விரோதக் கருத்துக்களை முன்வைத்த கட்சி உறுப்பினர்களுக்கு பதில் கொடுக்கின்றார்.
மார்க்ஸ், ஏங்கெல்சின் முதலாளித்துவம் பற்றிய ஆய்வுப் பற்றிய பின்பகுதியில் நிறையவே பேசுகின்றார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் கருத்துக்களை எவ்வாறு திரித்துக் கொள்கின்றார்கள், முதலாளித்துவ பொருளாதார சூத்திரத்தை முன்னிறுத்துகின்றார்கள் என்பதை நிறையவே விளக்கிக் கொள்கின்றார். ‘‘ எந்த ஒரு பிற்போக்கு ‘‘மார்க்சியவாதியும்‘‘ இதுவரையில் இப்படிப் பிதற்றியது கிடையாது ‘‘ என்கின்றார் தோழர் ஸ்ராலின்.
மார்க்சியம் வேடதாரிகளை களையெடுத்தார்கள் என்று தோழர் ஸ்ராலின் மீது பழிசொல்லப்படுகின்றது. ஆனால் கோட்பாடு ரீதியாக எவ்வாறு வழிநடத்தியிருக்கின்றார் என்பதை இந்த நூலின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். ஒரு தலைவன், கோட்பாட்டாளர், மார்கஸ்ட் லெனினிட்டுக்கு முன்னுதாரணம். சோவியத்தை, நாசிச கொடுமையில் இருந்து உலகினை காப்பாற்றிய தளபதியாக கண்முன்னால் திரைப்படமாக உணர முடிகின்றது.

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉங்களை பதிவை போடுங்கள்.
Delete