Popular Posts

Thursday, 30 June 2022

மூல உத்தி மற்றும் செயலுத்திப் பிரச்சனை

  முற்போக்கு சிந்தனையை ஏற்க மறுக்கும் சமூகம் | தினகரன் வாரமஞ்சரி

 

மூல உத்தி மற்றும் செயலுத்திப் பிரச்சனை

 

 

பின்நவீனத்துவக் கோட்பாடுகள் வாழ்வியலில் ஆட்கொண்டுள்ளது, சிந்தனையிலும், அரசியல் போக்கிலும் மார்க்சியத்தை தவிர்த்து விட்டு  ஏகாதிபத்திய சிந்தனைப் போக்கை சமூக வழிகாட்டியாக கொள்ளப்படுகின்றது. இது மேட்டுக்குடி, கல்விப்புலன் அதிகார ஊழியர்நிலை,  கருத்துருவாக்கத் தளம் என்ற அளவில் விரிந்துள்ளது. இன்றைய சமூகப் போக்கின் கருத்துருவாக்கிகளாக உருவாகியுள்ளார்கள். இவர்களின் மேட்டுக்குடி, தாராளவாத சிந்தனையும், அவர்களின் வெளிப்பாடுகளும் சமூகத்தின் தீர்மானிக்கும் நிலையில் தம்மை நிலைநிறுத்தவதன் அடிப்படையில் உக்கிரமாக களமாடும் நிலையை அடைந்துள்ளார்கள்.

 
தன்னாட்டின் குடிமக்கள் மீது அன்னிய நாடுமீது குண்டு போடுவது போன்றே சிங்கள தேசத்தின் நடத்தை இருந்தது. இதனை விளங்கிக் கொள்ளாமல் இனவாதம் என்று குறுக்குவதே அர்ப்பத்தனம். திரிபுவாதத்தின் உச்சம்.  கனரக குண்டுகளை வீசக் கூடாது என்ற சர்வதேச அழுத்ததை எதிர்த்து #JVPsinghalenationalchauvinist இராசபக்சகளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
எதிரிநாட்டிற்கு இணையாக குண்டுவீசி  பொதுமக்கள் 14600 அதிகமான மக்களைக் கொண்றே ஈழ தேசம் ஆக்கிரமிப்பு உள்ளாகியது. போலி இடதுசாரிகள் புகாரி, ரொட்ஸ்கியர்களும் கட்சிகளில் மார்க்சிய லெனினியம் என்று ஒப்பித்துக் கொள்கின்றீர்கள்.
தேசத்தின் ஆட்சியதிகாரத்திற்கும் குறுந்தேசியவெறி, சியோனிசம், சோவனித்தையும் போட்டு மக்களை குழப்பும் திரிபுவாதிகள். தேர்தல் அரசியல்வாதிகள் தரத்திற்கு தரம் இறங்கி விட்டீர்கள். போலி இடதுசாரியம் தேசத்தின் அரசு என்பது பற்றி புரிதல் இல்லாவிடின் யாரும் மார்க்சிய லெனினியவாதிகளா முடியாது. சம அந்தஸ்துள்ள அரசு இது பற்றிய பிரச்சனையை விளங்காமல் தேசிய இனப்பிரச்சனை பற்றி பேசிட முடியாது.

சமூகக் கட்டத்தை கடப்பதற்கான போராட்டத்தில் வெவ்வேறு முரண்பாடுகளை  தீர்த்துக் கொண்டே முன்செல்ல முடியும். இலங்கையைப் பொறுத்த வரையில் சமூக பொருளாதாரக் கட்டமைப்பில் உள்ள முரண்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகக் கட்டம்  என்பது உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படுவதினால் ஏற்படும் பொருளாதாரக் கட்டமைப்பும், அதன் சார்ந்த வாழ்வியல் அமைப்பும், சமூக ஒழுங்கமைவு பற்றியதாகும். சமூக ஒழுங்கமைவு என்பது அரசு என்பதை நோக்கிச் செல்கின்றது. அரசு என்பது சமூக ஒழுங்கமைவு அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கிச் செல்ல அவசியமாகின்றது.  ஐரோப்பாவை 1871 பின்னர் முதலாளித்துவ வளர்ச்சியே தூண்டியது.  ”நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் ஐரோப்பிய முழுவதிலும், குறிப்பாக  பிரான்சில், ஏற்பட்ட புயல் வேகப் புரட்சிகள்,  வர்க்கங்களின் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.

தேசங்கள் தங்களின் பொருளாதார உற்பத்திக்கு தேவையான அரசியல் முழக்கங்களை முன்வைக்கும். அந்த முழக்கங்கள் பொதுப்புத்தியில் முதலாளிகளின் முழக்கங்களாக வெளிப்படும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை. அந்த முழக்கம், அதன் செயற்பாடுகளின் காலம், அது வெளிப்படும் சமூகப் போக்கு, அதன் பின்னால் வரும் சமூக பொருளாதார வடிவம் என்பதை அடையவே பல பத்து ஆண்டுகள் எடுக்கும்.
அந்த பலபத்து ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக பொருளியல் மாற்றம் பற்றி அறிதல் வேண்டும். அந்த அறிவை இன்றைய இடதுசாரிகள் என்பவர்கள் பெற்றுக் கொண்டார்களா என்பது கேள்விக்குரியது.

நிலப்பிரபுத்து வர்க்கத்துக்குகெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக்  கிடைத்த எந்த ஒரு வெள்ளியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்துவிடவில்லை.  முதலாளித்துவ சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை.” (ப27மா.வ.வ.சி. சிறப்பியல்புகள்)

 

வரலாற்றுப் போக்கை கற்றல் என்பது சமூகக் கட்டத்தில் நாம் எங்கிருக்கின்றோம் என்பதே. தேசிய ஜனநாயகப் புரட்சிக் கட்டம் என்பது சோசலிசத்திற்கான கட்டத்தில் தவிர்க்க முடியாது.   வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் வெவ்வேறு கட்டங்களை கடந்து செல்லப்பட வேண்டும்.  உற்பத்தி முறை மாற்றத்தை நோக்கிய வரலாற்றுக் கட்டத்தில் அதற்கான கோட்பாட்டு உருவாக்கம் அவசியமானதாகும் என்பதையே மூலவர்கள் வழிகாட்டுகின்றார்கள். போலி இடதுசாரிகள் மார்க்ஸ் லெனின், ஸ்ராலின், மாவோவிடம் கற்கவேண்டியவை நிறையவே உள்ளது.

தோழர் லெனின் பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடந்து விட்டது என்று கலைப்புவாதிகள் மட்டும் தான் கருதுகிறார்கள். உலகம் முழுவதிலும் அத்தகையதொரு புரட்சியின் உடனடுத்த நிகழ்ச்சியாக இருந்தவையும் இருப்பவையும் தேசிய இன இயக்கங்களே.” (தே.இபி. பா.வ.சர்.16). இங்கு பலருக்கு சமூகக் கட்டம் என்ற பார்வையே இல்லை.  ஈழத்தில் சிலர் இன்று சமூகக் கட்டத்தைப் பேசாது. சமூக நீதி, அம்பேத்கர், பெரியார் எனப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 2009 வெற்றிடத்தை கொண்டு புதிய அரசியல் போக்கை படைத்திட முடியும் என்று சிலர் நம்புகின்றார்கள் மல்லுக் கட்டுகின்றார்கள்.  அடையாள அரசியல் பேசுவது, வர்க்க மறுப்பு அரசியல் பேசுவது உலகெங்கும் உள்ள நாடுகளில் ஒரு பொது போக்காக உள்ளது. சமூக ஒழுங்கமைவை அடையாளம் என்பதே தவறான போக்காகும். ஏனெனில் சமூகக் கட்டம், அதற்கான அதிகாரம்  இல்லாது தீர்வினை பெறவும் முடியாது.  நல்ல உறவுகளின் வளர்ச்சியிலிருந்து தேசிய ஒற்றுமையும், தேசிய உறவுகளும் எழும்” என்பது சாத்தியமில்லை. (349-தொ11)

மார்க்சியம் இயங்கியல், பொருளாதாரக் கட்டமைப்பு, உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் என்பதை தெளிவாக மார்க்சியம்  வியாக்கியானம் செய்கின்றது. ஆனால் சமூகத்தை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது என்பதே என்முன் உள்ள கடமையாகும்.  முதலாளித்துவ கட்டத்தை கடந்து சோசலிசக் கட்டத்தை அடைவது என்றால் அதற்கான புரட்சிகரக் கட்சி வேண்டும். புரட்சிகர கொள்கையைக் கொண்டு  போராட்டம் வழிநடத்தப்பட வேண்டும்.

 

ரசிய கம்யூனிஸ்டுகளின் மூல உத்தி மற்றும் செயலுத்திப் பிரச்சனை தொடர்பாக

ரசிய கம்யூனிஸ்டுகளின் மூல உத்திமற்றும் செயலுத்திப் பிரச்சனை தொடர்பாக  தோழர் ஸ்ராலினுடைய விரிவுரையின் உள்ளடக்கத்தை இன்றைய சமூகப் போக்கிற்கு ஏற்ப அவற்றை விளக்கினால் இளையசமூகம் தம்மை வளர்த்துக் கொள்ளவும், செயலாற்றவும், உத்வேகமான சமூகத்தை படைக்கவும் வழிகாட்டும்.

குறிப்பான  நாட்டில் எவ்வகையாக கோட்பாட்டை உருவாக்கிட முடியும் என்பதற்கு வழிகாட்ட இந்த விரிவுரை வழிகாட்டும்.  சமூகத்தில் உள்ள சக்திகளை  மற்றவர்களுக்கு மார்க்சிய இலக்கியங்களை படிக்க ஊக்கப்படுத்துவது போலவே, சமூகத்தை ஆய்வு செய்து முன்னேற்றப்பாதைக்கு பயணிக்கும் ஊழியர்களை உருவாக்கவும் வேண்டும்.

லெனின் படைத்த வழிகாட்டலை ருசிய நிலைக்கு மாத்திரம் எழுதியாக திரிபுவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருவதை கேட்டுள்ளேன். அதற்கு எதிர்வினையாற்றினால் அவர்கள் காதுக்கு சென்றடையாது. திரிபுவாதத்தையே முதன்மை வேலையாக கொள்பவர்கள் அவ்வாறுதான்.

லெனினியம் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் ஏற்படுகின்ற பிரச்சனை அதாவது முதலாளித்துவ புரட்சி முழுமையாத நிலை, ஏகாதிபத்தியத்தினை எதிர்க்கொள்ளும் வழிகாட்டல் என அனைத்தும் தளுவிய திறனாய்வுமுறையை கொண்டதாக தோழர் லெனினின் படைப்புக்கள் உள்ளன. அவரின் மேதாவித் தனத்தை திரிபுவாதிகள் திரிக்கின்றனர். இவர்களுக்கு தோழர் ஸ்ராலின் கொடுக்கும் பதில்..........

லெனினியம் என்றால் என்ன?

ரஷ்யாவில் நிலவும் தனித்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மார்க்சியத்தைப் பயன்படுத்துவதே லெனினியம் என்று சிலர் சொல்கின்றனர். இந்த விளக்கத்தில் உண்மையில் ஒரு துளிதான் அடங்கியுள்ளது; எந்த விதத்திலும் முழு உண்மை இதில் அடங்கியிருக்கவில்லை. உண்மையில், ரஷ்ய சூழ்நிலைக்கு மார்க்சியத்தை லெனின் பொருத்திப் பயன்படுத்தினார்; அதனை திறமையுடன் பயன்படுதினார். ஆனால் ரஷ்யாவின் தனித்துவமான சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான மார்க்சியத்தைப் பயன்படுத்திய மட்டுமே லெனினியம் என்றால், அது முற்றிலும் தேசியமானதாக, தேசியமானதாக மட்டுமே இருக்கும்; முற்றிலும் ரஷ்யாவுக்கான விளைபொருளாக மாத்திரமே இருக்கும். லெனினியம் என்பது ரஷ்ய அம்சம் மட்டுமானது அல்ல என்பதும், ஓட்டுமொத்த சர்வதேச வளர்ச்சியின் வேர்விட்ட சர்வதேச விளைபொருள் என்பதும் நமக்குத் தெரிந்ததே. எனவேதான் இந்த விளக்கம் ஒரு பக்கமாக மட்டும் வெளிப்படுத்தும் விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். (86- தொ6)

 

மார்க்சியத்தின் வழிகாட்டலில் அமைந்த திறனாய்வு முறை என்பது சமூகத்தை  ஆய்வு செய்யவும், சொந்தக் கோட்பாட்டை அமைத்துக் கொள்வதற்கும் வழிகாட்டுகின்றது.  இவ்வாறு மார்க்சிய வழியில் போராட்டத்தை கட்டியமைக்க, கட்சியை இறுக்கமாக வழிகடந்த வழிகாட்டுகின்றது.  அரசியல் கொள்கையும் இயங்கியல் வழிகாட்டலில் Strategy – மூல உத்தி, tactics  செயலுத்தி, போராட்ட வடிவம், அமைப்பு வடிவம்,  முழக்கம். உத்தரவு  பற்றி வழிகாட்டலை கவனத்தில் கொள்ளப்ப வேண்டும்.

”அரசியலில் மூல  உத்தி மற்றும் செயலுத்தியின் வரம்புகளும் அவர்களுடைய பயன்பாட்டுக் களமும். பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு, புறநிலை, அகநிலை என்று இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பது உண்மையானால், பிறகு மூல உத்தி மற்றும் செயலுத்தியின் செயற்களம் சந்தேகத்துக்கிடமின்றி, இயக்கத்தின் அகநிலைப் பக்கத்துடன் கட்டுப்படுத்தப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் விருப்பத்தையும், அதன் விருப்பத்தையும் சாராமல், அதற்கு வெளியேயும் அதனைச் சுற்றியும் சுதந்திரமாக நிகழக் கூடிய வளர்ச்சியின் நிகழ்ச்சிப் போக்குள், இறுதிப் பகுப்பாய்வில் ஓட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சித் தீர்மானிக்கக் கூடிய நிகழ்ச்சிப் போக்குள், அதன் புறநிலைப் பக்கத்தில் அடங்கியிருக்கின்றன. புறநிலை நிகழ்ச்சிப் போக்குள் குறித்து பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு நிலையின் பிரதிபலிப்பாகப் பாட்டாளி வர்க்கத்திற்குள் நடக்கும் நிழ்ச்சிப் போக்குகளை உந்தித் தள்ளக்  கூடிய அல்லது குன்றச் செய்கிற, ஆனால் அவற்றைத் தீர்மானிக்காத்த நிகழ்ச்சிப் போக்குள், அகநிலைப் பக்கத்தில் அடங்கியிருக்கின்றன.  (ப76 தொ5)

 

1.        

தொடக்க நிலை கருத்தாக்கங்கள்

1.தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் இரண்டு அம்சங்கள்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியில் புறநிலை அம்சம் அல்லது தன்னெழுச்சியான அம்சம், மற்றது, அகநிலை அம்சம் அல்லது உணர்வு பூர்வமான அம்சம். இங்கு வாழ்நிலைதான் மனிதர்களின் சிந்தனையை தீர்மானிப்பது புறநிலை வளர்ச்சிப் போக்கு உள்ளுணர்வை தூண்டு கின்றது, செயலாற்றும் படி கோருகின்றது.  இது உணர்வு சார்ந்ததாக இருக்கும். ஆனால்  உணர்விற்கு அப்பால் பிரச்சனைக்கான காரணிகளை புறநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1)”புறநிலை, தன்னெழுச்சியான அம்சம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு பூர்வமான, ஒழுங்குபடுத்திய விருப்பதற்திற்கு அப்பாற்பட்டு நடக்குமு நிகழ்வுப் போக்குகளின் தொகுப்பு ஆகும்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முதலாளித்துவத்தின் வளர்ச்சி, பழைய ஆட்சியைக் கலைப்பது, பாட்டாளி வர்க்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வர்க்கங்களின் தன்னெழுச்சியான இயக்கங்கள் -மற்றும் வர்க்கங்களின் மோதல்கள் இவையனைத்தும் பாட்டாளிவர்க்கத்தின் விருப்பத்தைச் சாராமலேயே வளர்ச்சி பெறும் நிகழ்ச்சிப் போக்காகும். அதுவே இயக்கத்தின் புறநிலைப் பக்கமாகும்.  இந்த நிகழ்ச்சிப் நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் மூல உத்திக்கும் தொடர்பு ஒன்றுமில்லை, ஏனென்றால் அதனால் அவற்றை நிறுத்தவோ மாற்றவோ முடியாது ; அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றிலிருந்து தொடர்ந்து செல்வதை மட்டுமே செய்ய முடியும். அது மார்க்சியக் கோட்பாடு மற்றும் மார்க்சியத் திட்டம் ஆகியவற்றால் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு களமாகும். (169-5)

ஒரு சமூகக் கட்டத்தில் தன்னெழுச்சியாகவும் உணர்வு பூர்வமான பக்கமும் இருக்கும். சமூக அவசியம் என்பது செயற்பாட்டை தூண்டுகின்றது.  மூல உக்தியை பயன்படுத்தும் களம் இல்லாமல் இருக்கின்ற போது  அகவுணர்வு செல்வாக்குச் செலுத்தும் போது தன்னியல்புவாதம் ஆதிக்கம் செலுத்தும்.

”இயக்கத்தை உந்தித்தள்ளுவது அல்லது பின்னுக்கு இழுப்பது, அதற்கு வழிவகை செய்வது அல்லது இடையூறு செய்வது – அரசியல் மூல உத்தி மற்றும் செயலுத்தியைப் பயன்படுத்தக் கூடிய களமும் எல்லைகளும் இவைதாம். (169-  5)

 

2

மார்க்சியக் கோட்பாடும் திட்டமும்

மார்க்சியத்தின் வழிகாட்டால் என்பது உழைக்கும் மக்களுக்காக அரசை நோக்கிப் பயணிப்பது என்று வாய்ப்பாட்டுவாதம் முன்வைக்கப்படுகின்றது. அதற்கால மூலகாரணங்களை அறிவதும் அவசியமாகும். மார்க்சியம் சமூக வளர்ச்சிக் கட்டத்தைப் பற்றி தெளிவாகவே வரை யறுக்கின்றது.

ஒரு குறிப்பிட்ட காலம் பற்றிய புரிதல் என்பதை கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். மார்க்சியம் அறிமுகம் என்பது   நிலமானியச் சிந்தனையை முழுமையாக முறிந்துக் கொள்ளாதவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. சிந்தனைக் காலத்தில் உள்ள மாற்றத்தை கண்டறிந்து கணக்குத் தீர்ப்பதன் ஊடாகவே அடுத்த கட்டத்தைப் கடந்திட  முடியும். வர்க்கப் போராட்டம் என்பது உற்பத்தி முறை மாற்றத்தை நோக்கி பயணிப்பதாக வழிகாட்டுகின்றது. இது பொருளாதாரம் எனப்படும் கூலி, உழைப்பு, காப்பீடு, சேமலாப நிதி, விடுமுறை போன்றவற்றை உறுதிப் படுத்துவ மாத்திரம் அல்ல. அரசியல் அதிகாரத்தை நோக்கிப் போராடுவதாகும்.

”முதலாளித்துவத்தின் புறநிலை நிகழ்ச்சிப் போக்குகளை அவற்றின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் ஆய்வு செய்வதிலிருந்து, முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தவிர்க்க முடியாதவை என்றும், முதலாளித்துவம் தவிர்க்க முடியாத வகையில் சோசலித்திற்கு வழிவிட்டாக வேண்டும் என்றும் மார்க்சியக் கோட்பாட்டின் இந்த அடிப்படை முடிவின் படி, பாட்டாளி வர்க்க மூலஉத்தியின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும் போது தான், அது உண்மையான மார்க்சிய மூல உக்தி என்று அழைக்கப்பட முடியும். (ப.170 தொ-5)

இதையே தோழர் ஸ்ராலினின் இன்னொரு வரியில் பார்ப்போம். 2”மார்க்சியக் கோட்பாடு, புறநிலை நிகழ்ச்சிப் போக்குகளை அவற்றின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் முதன்மையான ஆய்வு செய்கின்றது, அது வளர்ச்சியின் போக்கை வரையறுக்கிறது, மேலும் தவிர்க்க முடியதா வகையில்  அதிகாரத்திற்கு உயதுந்து கொண்டிருக்கிற, வர்க்க அல்லது வர்க்கங்களுக்கு அதைச் சுட்டிக் காட்டுகிறது.

2. மார்க்சியத் திட்டம், கோட்பாட்டிலிருந்து வந்தடையப் பெற்றவற்றின் அடிப்படையில் , முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஓரு குறிப்பிட்ட கால கட்டத்தின் போதும், அல்லது முதலாளித்துவத்தின்  கால கட்டம் முழுவதன் போதும், உயர்ந்து கொண்டிருக்குமு வர்க்கத்தின், தற்போதை நிகழ்வில் பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோளை (குறைந்த பட்சத்திட்டத்தையும், அதிக பட்சத் திட்டத்தையும்) வரையறுக்கிறது. (77-5)

 வரலாற்றுப் போக்கில் புதிய நிலைப்பாட்டை  இங்கே கவனிக்க வேண்டும். முதலாளித்துவ காலம் ஏகாதிபத்திய காலகட்டத்தில் எவ்வாறு நிலைப்பாடு எடுக்க முடியும் என்ற வழிகாட்டலை  கவனத்தில் கொள்ள வேண்டும்.

--மார்க்சியமும் தேசியப் பிரச்சனையும்‘ Marxism and the National Question) என்ற பிரசுரத்தின் ஒரு பகுதியை செமிச் மேற்கோள் காட்டுகின்றார்கள். ”முதலாளித்துவம் பலம்பெற்று வரும் சூழ்நிலையில் நடக்கின்ற தேசியப் போராட்டமானது, முதலாளி வர்க்கதங்களுக்கு இடையே நடக்கின்ற போராட்டமே” என ஸ்ராலின் கூறுகின்றார். ஸ்டாலினின் இக் கூற்றைச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கும் செமித், தேசிய இனங்களின் போராட்ட இயக்கத்தின் சமூக முக்கியத்துவதைதை வரையறுக்கின்ற தனது வாய்ப்பாடு, இன்றைய வரலாற்றுச் சூழலின் அடிப்படையில் சரியானதே என நிறுவு முயல்கின்றார். ஆனால் ஸ்ராலின் அப்பிரசுரம் ஏகாதிபத்தியப் போருக்கு முன்னதாக எழுதப்பட்டதாகும்; அன்றைய சூழலில், தேசிய இனங்களின் பிரச்சனையை உலக முக்கியத்தும் வாய்ந்த ஒரு பிரச்சனையாக மார்க்சியர்கள் மதிப்பிட்டிருக்கவில்லை; மார்க்சியர்களின் அடிப்படைக் கோரிக்கையான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை., மாறாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே மதிப்பிடப்பட்டிருந்தது ஏகாதிபத்தியப் போருக்குப் பின்னர் சர்வதேச் சூழலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும், ஏகாதிபத்தியப் போர் ஒருபுறம்- ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி மறுபுறம் இரண்டும் சேர்ந்து, தேசியப் பிரச்சனையை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலையிலிருந்து மாற்றி, இது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலைக்கு கொண்டு சென்றதையும் காணமறுப்பது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று. 1916 அக்டோபரிலேயே, லெனின் தனது ‘சுயநிர்ணய உரிமை மீதான விவாதங்களை தொகுப்பு‘ (The Discussion on Self- Determination) என்ற கட்டுரையில், சுயநிர்ணய உரிமை என்பது பொதுவான ஜனநாயக இயக்கத்தின் பகுதிதான் என்ற நிலை இன்மேலும் இல்லை, அது பொதுவான பாட்டாளி வர்க்க, சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியான மாறிவிட்டது என்று கூறுகின்றார். தோழர் ஸ்ராலின் 247-8-தொ7) 

முதலாளித்துவம் வளர்ச்சிடையாத நாடுகளில் எழும் தேசிய இனச் சிக்கலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அது ” தேசியப் பிரச்சனையை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலையலிருந்து மாற்றி, இது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதிஎன்று அணுகப்படுகின்றது. இங்கு  முதலாளித்துவ கட்டத்தில் தேச அரசுகள் பற்றிப் பேசப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த வழிகாட்டலை தோழர் மாவோ கவனத்தில் கொள்கின்றார், மாவோ தொ. 2 பக்கம்- 455-6) ஆகிய பகுதியில் சென்று மேலும் அறிந்து கொள்ள முடியும்.)

 

நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முழுமையாக முழுமையடையாத காலம் கட்டத்தில் இருந்த போது ” சீனப்புரட்சி அதன் முதல் கட்டத்தில் (அதன் பல துணை கட்டங்களோடு) ஒரு புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப் புரட்சியாக இருப்பினும் அதனுடைய சமூகத்தன்மையில் அது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியாக இன்னும் மாறாமல் இருப்பினும், அது நீண்ட காலமாக  பாட்டாளி வர்க்க  உலக சோசலிச புரட்சியின் பகுதியாய் மாறியுள்ளது. (மாவோ 2. பக் 457)  இதில் இருந்து நாம் அறிவது என்னவெனில் நிலப்பிரபுத்துவ, முதலாளிய புரட்சி முழுமையடையாத நிலையில் சீனப் புரட்சியை புதிய ஜனநாயகக் கட்டம், சோசலிசக் கட்டம் என்று புரட்சிக் கட்டத்திற்கு வரலாற்றை நகர்த்தினார்.

ஏகாதிபத்தியக் கட்டத்தில் சோசலிசக் கட்டத்தில் என்பது மார்க்சிய வழிகாட்டல். மூலயுத்தியானது மார்க்சிய திட்டத்தில் அமைந்ததாக இயக்கத்தின் குறிக்கோளாள்களால் நடத்தப்படுவதாகும். எனவே மூலயுத்தி மார்க்சிய வழியில் அமைதல் வேண்டும்.

 

3.

மூல உத்தி

சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் திசைவழிப் போக்கை உருவாக்குவதற்கு நமது சமூக அமைப்பைப் பற்றிய புரிதல், வரலாறு, பொருளாதாரக் கட்டமைப்பு ஆய்விற்கு உள்ளாக்கப்பட வேண்டும். அப்போது தான் ஒரு குறிப்பான சூழலில் தமக்கான சொந்தக் கோட்பாட்டை வந்தடைய வேண்டும்.  மார்க்சிய  மூலஉத்தி எவ்வாறு அமைய வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. அதன் அடிப்படையில் தான் மூலஉத்தியு அமையப்பெற முடியும்.

‘‘ தொழிலாளர் வர்க்க இயக்கம் செல்ல வேண்டி முதன்மையான திசைவழியைத் தீர்மானிப்பது தான் மூலஉத்தியின் மிக முக்கியமான செயல்பாடாகும். மேலும் அந்தத் திசைவழியில் தான் பாட்டாளி வர்க்கம், திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள குறிக்கோள்களை அடைவதற்கு, தன்க் மிகவும் பயனளிக்குமு வகையில் அதன் எதிரிக்கு முதன்மையான அடியைக் கொடுக்க முடியும். ஒரு மூல உத்தித் திட்டம் என்பது, அதிகபட்ச விளைவுகளை அடைவதற்கு மிகவும் வாய்ப்பான திசையில் தீர்மானகரமான அடியை ஒருங்கிணைக்கும் திட்டமாகும். (171- தொ5)

 

முரண்பாடுகளின் குறிப்பிட்ட தன்மையும் சமூக பொருளாதாரக் கட்டமும்

சமூகத்தை ஆராய்ந்து மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் 1848 இல் பொதுவுடமைக்கட்சி அறிக்கையை முன்வைக்கின்றார்கள். அப்போ முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடுதான் அடிப்படையானது என்றார்கள். உழைப்பாளிகள் முதலாளித்துவத்தை வீழ்த்தி அனைத்தையும் அரசுடமையாக்கப் போராட வேண்டும் என்ற இலக்கு நோக்கிய பயணம்.

தோழர் ஸ்ராலின்  முரண்பாடுகள் பற்றிய விடயங்களை பகுத்துள்ளார். ”உழைப்புக்கும், மூலதனத்துக்கும் இடையிலான  முரண்பாடு முதலாவது முரண்பாடாகும். ----”கச்சாப் பொருள்களுக்கான ஆதாரங்களுக்காவும், அந்திய பரப்பெல்லைகளைப்  பெறுவதற்காகவுமான தங்களது மோதலில், பல்வேறு நிதிக்குழுக்களுக்கும், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு  இரண்டாவது முரண்பாடாகும் ஆகும்.  கச்சாப் பொருள்களின் ஆதாரங்களுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வது; இந்த ஆதாரங்களை ஏகபோமாக சொந்தமாக்குவதற்கான வெறிபிடித்த மோதல்; ஏற்னெவே பங்கீடு செய்யப்பட்ட உலகத்தை  மறுபங்கீடு செய்வதற்கான மோதல்;----விரல்விட்டுக் எண்ணக் கூடிய அளவிலான ”நாகரீக” நாடுகளுக்கும், கொலனிய மற்றும் சார்பு நிலை நாடுகளில் வாழும் உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு மூன்றாவது முரண்பாடாகும்.(88-89 தொ.6)  உலகப் பரப்பின் போக்கை வியாபாகமான ரீதியில் லெனினியப் பாதையை செப்பனிடுகின்றார். முரண்பாடுகளை கவனத்தில் கொள்வதும், அவற்றின் ஊடாக சமூகக் கட்டத்தை எவ்வாறு முன்னோக்கிச் செல்வதற்கான வழிகாட்டலே.

 பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கோட்பாடு பற்றி தோழர் லெனினின் மூன்று அடிப்படை  கோட்பாடு பற்றி

”முதல் கருத்துரை: வளர்ச்சியுற்ற  முதலாளித்துவ நாடுகளின் நிதி மூலதனத்தின் ஆதிக்கம்; நிதிமூலதனத்தின் னமுதன்மையான நடவடிக்கைகளாகப் பங்கு இருப்புகளும், கடன் பத்திரங்களும் வெளியிடப்படுவது; ஏகாதிபத்தியத்தியத்தின் அடித்தளங்களில் ஒன்றாக  இருக்கும் கச்சாப் பொருள் உற்பத்தி இடத்திற்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வது; நிதி மூலதன மேலாதிக்கத்தின் விளைவான நிதியாக்கம் கும்பலின் சர்வசக்தி; ஆகியவை ஏகபோக முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணி தன்மையை மொத்தமாக வெளிப்படுத்துகின்றன. முதலாளித்துவத்தின்  டிரஸ்டுகளின் மற்றும் சிண்டிகேட்டுகளின் நுகத்தடியை மேலும்  நூறு மடங்கு சுமையானதாக இவை மாற்றும்; முதலாளித்துவத்தின் அடித்தளங்களின் மீது உழைக்கும் வர்க்க  போபத்தை தீவிரமாக்கும்;  பாட்டாளி வர்க்கப் புரட்சி தமது மீட்புக்கான ஒரே வழி என்றும அதை நோக்கி மக்கள் திரளைக் கொண்டு வரும் (லெனின்)-----

எனவே, முதலாவது முடிவு: முதலாளித்துவ நாடுகளுக்குள் புரட்சிகர நெருக்கடியையும் ‘முக்கிய நகரங்களில்‘ உள்நாட்டு, பாட்டாளி வர்க்க  முன்னணியில் வெப்பு சக்திகளின் வளர்ச்சியையும் தீவிரப்படுத்துதல்.

இரண்டாது கருத்துரை: காலனிகளிலும், சார்புநிலை நாடுகளின் மூலதன ஏற்றுமதி அதிகரிப்பு;

இரண்டாவது கருத்துரை; கொலனிகளிலும், சார்புநிலை நாடுகளிலும் மூலதன ஏற்றுமதி அதிகரிப்பு; ஓட்டுமொத்த உலகையும் கைப்ப்றும் வரை ”செல்வாக்கு மண்டலங்கள்‘‘ மற்றும் கொலனிய நிலப்பரப்புகள் ஆகியவற்றின் வரிவாக்கம்; விரல்விட்டு எண்ணக் கூடிய ”முன்னேறிய” நாடுகளில் உலகின் மிகப் பெரும்பான்மையான மக்கள மீது கொலனிய ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவத்தை நிதி அடிமைத்தனம் என்ற உலக கட்டமைப்பான உருமாற்றம் செய்தல் ஆகிய இவை அனைத்தும் ஒரு புறம் தனித்தனியான தேசியப் பொருளாதாரங்கள் மற்றும் தேசியப் பரப்பெல்லைகளை உலகப் பொருளாதாரம் என்றழைக்கப்படும் ஓர் ஒற்றைச் சங்கிலியின் தொடர்பிணைப்பாக மாற்றியுள்ளது; மறுபுறத்தில், உலக மக்களை இரண்டு முகாம்களாகப் பளிவு படுத்தியுள்ளது: பெரும் கொலனியமற்றும் சார்புநிலை நாடுகுளைச் சுரண்டி, ஒடுக்குமு விரல்விட்டு எண்ணக் கூடிய ”முன்னேறிய” முதலாளித்துவ நாடுகுள் மற்றும் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலைபெற பேராட்டங்களைத்  தொடுக்க நிர்ப்பந்திக்கபடும் மிகப் பெரும்பான்மையான கொலனிய மற்றும் சார்புநிலை நாடுகள் ன்று இவ்விரு முகாம்கள் உள்ளன. (லெனின்- ஏகாதிபத்தியம்)—

எனவே, இரண்டாவது முடிவு:   கொலனிய நாடுகளில் புரட்சிகர நெருக்கடியையும், வெளிப்புற முன்னணியிலும் கொலனிய முன்னணியிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கலக சக்திகளின் வளர்ச்சியையும் தீவிரப்படுத்துதல்.

மூன்றாவது கருத்துரை :”செல்வாக்கு மண்டலங்கள்” மற்றும் கொலனிகளின் ஏகபோக அனுபவ உரிமை; ஏற்கனவே பரப்பெல்லைகளைக்  கைப்பற்றிய நாடுகள் மற்றும் அதில் தங்கள் ”பங்கை” கோரும் நாடுகள் என்று உலகை மறுபிரிவினை செய்வதற்கான வெறிபிடித்த போருக்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவ நாடுகளின்  சமனற்ற வளர்ச்சி; கலைக்கப்பட்ட ”நடுநிலை அமைதியை” மீட்பதற்கான ஒரே வழியாக ஏகாதிபத்திய யுத்தங்கள் ஆகிய அவை அனைத்தும் மூன்றாவது முன்னணியான – முதலாளித்துவங்களிடையேயான  முன்னணியில் போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது.  இதுதான் ஏகாதிபத்தியத்தியத்தைப் பலவீனப்படுத்தி, ஏகாதிபத்தியத்திற்கு எதரான முதலாவது மற்றும் இரண்டாம் முன்னணிகளான புரட்சிகரப் பாட்டாளி வர்க்க முன்னணி மற்றும் கொலனிய விடுதலைக்கான முன்னணி  ஆகியவை ஒன்றுபடுவதை வசதியாக்குகிறது.

எனவே மூன்றாவது முடிவு:  ஏகாதிபத்தியத்தின் கீழ் யுத்தங்களை தடுக்க முடியாது;  ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் கிழக்கில் கொலனிய புரட்சி ஆகியவற்றின் கூட்டணியில் ஏகாதிபத்திய முன்னணிக்கு எதிரான புரட்சிக்கான  ஒன்றுபட்ட உலக முன்னணி தவிர்க்க முடியாதது.

இந்த முடிவுகள் அனைத்தையும் இணைத்து, ”சோசலிப் புரட்சி என்ற பெரும் நிகழ்வுக்கு முன்பு வருவது தான் ஏகாதிபத்தியம்” என்ற பொது முடிவை லெனின் கண்டுள்ளார்,  (தொ.6 ப.109-110)

ஏகாதிபத்தியம் தொடர்பான வழிகாட்டலை தோழர்  ஸ்ராலின் ஏகாதிபத்தியக் கட்டத்தில் உள்ள முரண்பாடுகள் பற்றிய போதனை  விளக்குகின்றார்.  கோட்பாட்டுப் பிரச்சனையில் வந்தடைய வேண்டிய நிலை இந்திய, இலங்கை மார்க்சியர்கள் வந்தடையவில்லை எனலாம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நாட்டின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் தீவிரமாகப் பங்கேற்கவில்லை. மேலும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பொறுப்பை சாத்தியமாக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விடாமுற்சியுடன் பாடுபடவில்லை. புரட்சியில் வெற்றி பெறுவதற்கு முதிர்ச்சி பெற்ற கட்சி இருப்பது மிகவும் முக்கியமான நிபந்தனை என்பதை சீனா மற்றும் ரஷ்யாவின் வரலாற்று பூர்வமான அனுபவம் நிரூபிக்கிறது. (ப.502-தொ.8 மாவோ) இந்த  மதிப்பீடு மிக முக்கியமானதாகும்.

தோழர் லெனின் முதலாளித்துவ ஜனநாயகப்  புரட்சியின் ஒரு பகுதியாகவே மதிப்பிட்டிருந்த நிலைக்கு மாற்றாக  பாட்டாளி வர்க்க, சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறுகின்றார்.

‘‘ இன்றைய உலகிலுள்ள பல்வேறு  முரண்பாடுகளும்  ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள பரந்த பகுதிகளில்  ஒருமுகப்பட்டுள்ளன. இப்பகுதிகள் ஏகாதிபத்திய ஆட்சியின்  கீழுள்ள பலவீனமான  பகுதிகளாகும்.  இப்பகுதிகள்  ஏகாதிபத்தியத்தியத்திற்கு  நேரடியாக உதை கொடுக்கும் புயல் மையங்களாகும்.  இப்பகுதியியுள்ள தேசிய சனநாயகப் புரட்சி இயக்கமும், சர்வதேசிய சோசலிசப் புரட்சி இயக்கமும் நமது காலத்திய உலகப் புரட்சியின் இருபெரும் வரலாற்றுப் போக்குகளாகும். இப்பகுதிகளிலுள்ள  தேசிய சனநாயகப் புரட்சி  இன்றைய சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின்  முக்கிய பகுதியாகும்”

சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்தின் பொது வழி பற்றிய சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய கமிட்டியின் பரிந்துரை அறிக்கை (14.08.1963) ப.44 – தமிழ் தேச அரசியல் போராட்டம் – பொழிலன்)

உங்களுடைய தவறுகளில் ஒன்றாக இருப்பது, சமுதாயத்தின், சமூக அரசியல் வளர்ச்சி என்கின்ற பொதுப் பிரச்சனையின் ஒரு பகுதியாக தேசியப் பிரச்சனை இல்லை, இந்தப் பொதுப்பிரச்சனையைவிட நிலையானதாக இதன் திசைவழியும், தனிப்பண்பும் வரலாற்று நிகழ்வு முழுவதிலும் அடிப்படையில் மாற்றம் இல்லாததாக உள்ளது என்று நீங்கள் கருதுவதுதான். எனவே ஒவ்வொரு மார்க்சியவாதியும் எதைக் காண்கிறாரோ, அததை நீங்கள் காணத் தவறுகின்றீர்கள். தேசியப் பிரச்சனை எப்போதும் ஒரே தனிப்பண்பைக் கொண்டிருக்கவில்லை. தேசிய இயக்கத்தின் தனிப்பண்பும், கடமைப் பொறுப்பும் புரட்சியின் வெவ்வேறு காலகட்டங்களின் வளர்ச்சியில் வேறுபடுகின்றன.” (361---V 11)

 

முரண்பாடுகள் பற்றிய பகுப்பாய்வுகள்

 1.சோலிச- ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடு

2. ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவ நாடுகளுக்குமான முரண்பாடு

3. முதலாளித்துவ நாட்டில் உள்ள முதலாளிகளுக்கு இடையேயான முரண்பாடு

4. உழைப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு

இவைகள் தான் இந்தியாவில் கட்சியில் ஒன்று முன்வைத்துள்ளதாக கூறுகின்றார்கள்.

இங்கு அறிய வேண்டியது என்னவெனில் இந்த முரண்பாடு எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றது?

அது இன்றும் பொருத்தமானதா?

நாட்டரசில் உள்ள நிலைக்கும், தேச அரசுகளுக்கும் இடையே எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றது? இந்திய கட்சிகளின் பகுப்பாய்வாக இருக்கின்றது. (முழுமையான வரையறை பெற்று உரையாடப்பட வேண்டும்)

 

 தமிழகம்

”நிலப்பிரபுத்துவ முரண்பாட்டையே பிரதான முரண்பாய் எம். எல் இயக்கம் கணித்ததும், அதுவே இறுதிவரை பிரதான முரண்பாடாய் இருக்கும் என்பது போன்ற பார்வை கொண்டிருந்த்ததும் தவறாய் அமைந்து விட்டது. (ப156- தோழர் தமிழரசன் அறிக்கை- பொழிலன்)

--”தமிழ் நாட்டைப் பொறுத்த வரை அடிப்படை முரண்பாடுகள் இரண்டு. ஒன்று, ஏகாதிபதம்தியங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான  முரண்பாடு மற்றொன்று நிலப்பிரபுத்துவத்திற்கும் மக்களுக்குமான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு. இப்பிரதான முரண்பாட்டின் பிரதாரனக் கூறு, டெல்லி அரசுக்கும் தமிழ் மக்களுக்கிடையலான முரண்பாடே. (ப.157- தோழர் தமிழரசன் ) -  பொழிலன்)

 

ஈழத்தைப் பொறுத்த  வரையில் சர்வதேச முரண்பாடு ஒடுக்கப்படும் தேசங்கள், நாடுகளுக்குள் இருக்கின்ற முரண்பாடு  உள்ளது. அதே போல இலங்கையில் முதலாளி- தொழிலாளி முரண்பாடு அடிப்படை முரண்பாடாக உள்ளது.

தேசிய ஒடுக்குமுறை என்பது பிரதான முரண்பாடாக இருக்கின்றுது. பிரதான முரண்பாடு தீராத வரையில் சிங்கள தொழிலாளர் வர்க்கத்திற்கு விடுதலை என்பது சாத்தியமில்லை.

 மூல உத்தி பற்றிய உரையாடல் என்பது அவசியமாக இருக்கின்றது. இதன் ஊடாக ஒரு ஐக்கிய முன்னணியை கட்ட முடியும்.

 ”மூல உத்தியானது, திட்டத்தின்  வழிகாட்டுதலிலும், உள்நாட்டிலும் (தேசிய) சர்வதேசத்திலும் கேமாதிக் கொண்டிருக்கும் சக்திகளின் கணக்கீட்டின் அடிப்படையிலும், பொதுவழியை, பொது திசையை, வரையறுக்கிறது, அதில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கம், வளரத் தொடக்கும் அல்லது வளர்ந்து கொண்டிருக்கும் சக்திகளின் உறவின் கீழ் மாபெரும் விளைவுகளை அடையும் கண்ணோட்டத்துடன், வழிகாட்டப்பட வேண்டும்.  இதற்கு ஒத்திசைவாக, அது பாட்டாளி வர்க்கம் மற்றும் சமூக முன்னணியில் அதன் கூட்டாளிகளின் சக்திகளின் அணிவகுப்புக்கான ஒரு திட்டத்தை (பொது ணிவகுப்பு) சுருக்கமாக வரையறுக்கிறது. ”சக்திகளின்  அணிவகுப்புத் திட்டத்தைச்  சுருக்கமாக வரையறுப்பதை” செயலுத்தி மற்றும் மூல உத்தியால் கூட்டாக  மேற்கொள்ளப்படுகிற, சக்தகளின் அணிவகுப்பும் ஒதுக்கீடும்  பற்றிய , உண்மையான )பருண்மையான, நடைமுறை ரீதியான)  நடவடிக்கையுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. மூல உத்தி என்பது திசை வழியை வரையறுப்பதுடனும், பாட்டாளி வர்க்க முகாமில் போரிடும் சக்திகளின் அணிவகுப்புத் திட்டத்தைச் சுருக்கமாக வரையறுப்பதுடனும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.  என்று இதற்குப் பொருளல்ல; அதற்கு மாறாக, அது போராட்டத்தை நெறிப்படுத்தி,  மாற்றத்தின் ஓட்டுமொத்தக் கால கட்டத்தின் போதும், கிடைக்கக் கூடிய இருப்புகளை திறமையாகப் பயன்படுத்தியும், செயலுத்தியை ஆதரிக்கும் நோக்கத்துடன்  செயலாற்றியும் நடப்புச் செயலுத்தியில் திருத்தங்களைக் கொண்டு வருகிறது. (77-5)

பொதுச் திசை வழி, போராடும்ம சக்திகளை, வர்க்களை இணைப்பதும் வழிநடத்து, வரலாற்றுக் காலத்தை மதிப்பீடு செய்வது, போராட்டங்களை நெறிப்படுத்துவது, செயலுத்தியை வழிகாட்டுவதாகும்.

 

4

            செயலுத்தி

”செயலுத்தி என்பது மூல உத்தியின் ஒரு பகுதியாகும், அதற்குக் கீழ்ப்பட்டதும், அதற்குச் சேவை செய்வதும் ஆகும்.  செயலுத்தி என்பது ஒட்டு மொத்த  யுத்தத்திற்கும் தொடர்புடையதல்ல, மாறாக அதன் தனித்தனி நிகழ்வுகளுடன், போர்களுடனும் மோதல்களுடனும்,  தொடர்புடையதாகும். மூல உத்தி என்பது ஒரு யுத்தத்தை வெல்வதற்குப்  போராடுகிறது, …” (173)

”செயலுத்தியின் மிகவும் முக்கியமான ஓரு செயற்பாடு, குறிப்பிட்ட தருணத்தில், பருண்மையான

 இலக்கை அடைவதற்கான அமைப்பை உருவாக்குவது, நடைமுறையில் எவ்வாறு செயற்படுவது, அதற்கான சூழல் எவ்வாறு இருக்கின்றது,  அந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அமைப்பை  கட்டமைப்பது, செயற்படுத்துவது, இலக்கை அடைவதற்காக எவ்வகையான சூழலை உருவாக்குவது,  பலம் இல்லாத பகுதிகளில் எவ்வாறு செயற்படுவது, அதில் இருந்து எவ்வகையான பாடங்களை கற்றுக் கொள்வது,  வீழ்வது என்பது வழமையானது. ஆனால் வீழ்வது என்பது முடிவு அல்ல.

செயலுத்தி வர்க்கங்களை வீழ்த்த அணிதிரட்டும், கட்சியின் அரசியல் போக்கை  செயல்வடிவம் கொடுப்பது. ”செயலுத்தியானது, மூல உத்தியாலும், உள்ளநாட்டிலும் அண்டை நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் அனுபவத்தாலும், வழிகாட்டப்பட்டு, பாட்டாளி வர்க்கத்திற்குள்ளும் அதன் கூட்டாளிகளுக்குள்ளும் (கலாச்சாரத்தின் உயர்ந்த  அல்லது தாழ்ந்த மட்டத்தில், அமைப்பு மற்றும் அரசியல் உணர்வு நிலையின் உயர்ந்த அல்லது தாழ்ந்த அளவில், இயக்கத்தில் நிலவும் பாராம்பரியங்கள் , வடிவங்கள், முதன்மையான மற்றும் துணை அமைப்பு வடிவங்கள் ஆகிய) சக்திகளின் நிலையைக் குறிப்பிட்ட ஒவ்வொரு கணத்திலும் கருத்தில் எடுத்துக் கொண்டும், மேலும் எதிரியின் முகாமில்  உள்ள சக்திகளைக் (ஒத்திசைவின்மை அல்லது குழப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதைக்) கணக்கில் எடுத்துக் கொண்டும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் பரந்து பட்ட மக்களை வென்றெடுக்கும் திட்டவட்டமான வழிகளைச்  சுட்டிக் காட்டுகிறது, மேலும் சமூக முன்னணியில் (மூல உத்தித் திட்டத்தில் சுருக்கமாக வரையறுத்துக் கொடுக்கப்பட்ட சக்திகளின்  அணிவருப்புக்கான திட்டத்தை நிறைவேற்றுவதில்)அவர்களுடைய போரிடும் மூல உத்தியின் வெற்றிக்கு மிகவும் உறுதியாகத் தயாரிப்புச் செய்யக் கூடிய நிலைகளில் நிறுத்தி வைக்கவும் கூடிய வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு ஒத்திசைவாக, அது கட்சியின் ழுக்கங்களை அல்லது வழிகாட்டு நெறிகளை  வெளியிடுகிறது, அல்லது மாற்றுகிறது. (78-5)

 

5

போராட்ட வடிவங்கள்

போராட்ட வடிவங்கள் எல்லாக் காலத்திலும் ஒரே வடிவத்தில் அமைந்திருக்க முடியாது.  ஆனால் மக்கள் எந்த வகையிலும் போராட்டத்திற்கு தயாராக இருப்பார்கள். 2009 பின்னர் பல்வேறு வகைப் போராட்டங்கள் தமிழர் தேசத்தில் நடைபெற்றது. முன்னர்  யுத்தம் நடைபெற்ற காலத்தில் செயற்பட்ட வடிவம் போல அடக்குமுறைக்குள், அரசியல் தலைமை இல்லாத நிலையில் ஒரே வடிவத்தில் வடிவமைக்க முடியாது.  முழக்கங்களும் செயலுக்களும் மக்களை அணிதிரட்டும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

‘‘அரசியல் அரங்கிலும் போராட்டத்தின் வடிவங்கள் பற்றி இதையே தான் கூற வேண்டும். அரசியல் அரங்கில் போராட்ட வடிவங்கள் யுத்த அரங்கின் வடிவங்களை விட இன்னும் மிகுதியாக வேறுபட்டவையாக இருக்கின்றன. பொருளாதா வாழ்க்கை, சமூக வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ப, வர்க்க நிலைமைகள், மோதிக் கொள்ளும் சக்திகளின் உறவு, அரசாங்கத்தின் வகை, மேலும் இறுதியாக சர்வதுச உறவுகள் இன்ன பிறவற்றுக்கு ஏற்ப அவை மாறுபடுகின்றன. (176-5)

இரத்தம் சிந்தும் அரசியல், இரத்தம் சிந்தா அரசியல் என்ற வகையில் ஆயுதப்  போராட்டம், அரசியல் போராட்டம் என்று உள்ளது. 2009 வீழ்ச்சி என்பது தேசியப் இராணுவத்தின் வீழ்ச்சி அதன் பொருள் ஈழ தேசத்தின் அரசியல் நியாயம் என்பது தொடர்கின்ற போது இரத்தம் சிந்தா அரசியல் பாதை தொடரப்பட வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோல்விமனப்பான்மைக்கு தமிழ் தரகு வர்க்கத்தினால் மக்களை இட்டுச் சென்றார்கள்.  அரசியல் எழுச்சியை கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளது. முதலாளித்துவ புரட்சி நடைபெற்று முடிந்துவிடாத சமூகக் கட்டத்தில் இருக்கின்ற போது தேச விடுதலையின்  ஊடாக ”புதிய ஜனநாயக சமூகம் நிறுவுப்படுதில் முடியும்.  பிறகு இரண்டாவது கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லப்படும்.  அதில் ஒரு சோசலிச சமூகம் சீனாவில் நிறுவப்படும்” (457-2 மாவோ) போராட்ட வடிவங்களை சமூகப் போக்கின் அவசியம் தீர்மானிக்கும்.

 போராட்ட வடிவங்களை ஒன்றிணைப்பது, அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்திலும் நடைபெறும் வகையாக போராட்ட வடிவங்கள் அமையப் பெற வேண்டும். வெகுமக்களின் திரட்சி என்பது அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் அமையப்பட வேண்டும். அவ்வாறான போராட்ட வடிவத்தின் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கின்றது.

 

6.

அமைப்பு வடிவங்கள்

வாழ்கின்ற சமூகத்தில் எவ்விதமாக  சமூக அமைப்பு இருக்கின்றது என்பதை வலதுசாரிகள்  சமூகத்திடம் முன்வைக்கமாட்டார்கள்.   ஆனால் சமூகப் பொருளாதார உற்பத்தி முறையை  முதலாளித்துவ சிந்தனையை மையமாகக் கொண்டே ”பந்தி” எழுத்தாளர்களாக வலம் வரும் சூழல் இருக்கின்றது. அவர்களை சுற்றிய ஒரு விசிறி வட்டமும் உள்ளது.

இந்த விசிறி வட்டம் என்பது வர்க்கம் அற்ற படைப்பாளிகளின் உலகம் என்ற வகையில் அதற்கு 30 வருடங்களுக்கு மேலான  வரலாறும், உறவுகள், தொடர்புகள், ஒப்புறவுச் செயற்பாடுகளும், எதிர்வினைத் திறனும் கொண்டதாக உள்ளது.

முன்னேறிய  சமூகப் பிரிவான மார்க்சிய உரையாடல், சமூகச் செயற்பாடு, முன்னோக்கிச் செல்லும் வழியைக் கொண்டதாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்ற போக்கே இன்று மேல் எழுந்து உள்ளது. இடதுசாரிகள் என்போர் பழைய ஆய்வுகளைக் கொண்டே அரசியல் செய்கின்றார்கள். இவர்களின் அரசியல் என்பது 100 வருடங்களுக்கு முன்னைய சமூக ஜனநாயகக் கட்சிகளின் திட்டத்திற்கு அமையவே இன்று உள்ளது. இந்த அமைப்புக்களுக்கு சமூகக் கட்டத்தை கடப்பது பற்றிய புரிதல் அற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

 இந்தப் போக்குகளை முறித்துக் கொண்ட அமைப்பு வடிவத்தை கோருவதே மார்க்சிய லெனினிய வழிகாட்டலாகும்.   

 இராணுவம், அரசியல் அமைப்பு வடிவங்களை உருவாக்கிக் கொள்வது என்பது  சூழலில் மாற்றம் ஏற்பட  முடியும்.  யுத்தமும் அது சார்ந்த போராட்ட வடிவம் மாறுபடும். அரசியல் போராட்டம் என்பது வெகுசன அமைப்புகளால் கட்சியின் வழிநடத்தலின் கீழ் நடைபெறும்.

”சேவையில் உள்ள அனைத்துப் படைக்கல அணிகளின் பிரிவுகளையும் கொண்டிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு, அவற்றை முழுநிறைவான நிலைக்குத் கொண்டு வந்து, திறன்வாய்ந்த வகையில் அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது யுத்தக் கலையின் பணியாகும்.

அரசியல் அரங்கிலும் அமைப்பு வடிவங்கள் குறித்து அதையே கூற முடியும். இங்கு, இராணுவ அரங்கில் போல, அமைப்பு வடிவங்கள் போராட்ட வடிவங்களுக்குப் பொருத்தப்படுகின்றன. ……. பெருந்திரள்  நடவடிக்கை மற்றும் எழுச்சிக் கால கட்டத்தில், தொழிற்சாலை மற்றும் பணிமனைக் குழுக்கள், தொழிலாளர்கள், படைவீர்கள் பிரதிநிதிகளின்  சோவியத்துக்கள், புரட்சிகர இராணுவக் குழுக்கள், மற்றும் அமைப்பு வடிவங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கிற ஒரு பரந்த பாட்டாளி வர்க்கக் கட்சி ; …

இந்த  அமைப்பு வடிவங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெறுவதும் அவற்றை முழுநிறைவான நிலைமைக்குக்  கொண்டு வருவதும், ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும், அவற்றின் நடவடிக்கைகளைத்  ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும், அவற்றின் நடவடிக்கைகளைத் திறன்வாய்ந்த வகையில் ஒருங்கிணைப்பதும் கட்சியின் பணியாகும்.” (176-7தொ5)

இன்றையச் சூழலில்  இரத்தம் சிந்தும் அரசியல்  வீழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் இரத்தம் சிந்தா அரசியல் முன்னெடுக்க முடியும்.  இரண்டு வகையான அரசியலும் சமூக இயக்கப் போக்கை முன்னொக்கிச் கொண்டு செல்பவையே. ஆனால் இரத்தம் சிந்தும் அரசியலின் வீழ்ச்சி என்பது அரசியல் இலக்கின் வீழ்ச்சியாக கற்பிற்கப்படுகின்றது.  இந்தப் போக்கு சமூகத்தை தோல்வி மனப்பாங்கிற்குள் கொண்டு செல்கின்றது. 

அரசியல் முன்னெடுப்பிற்கு சிந்தாந்தம், கட்சி அவசியமாகும்.  அதன் கீழ் வெவ்வேறு வர்க்கப் பிரிவுகளை அணிதிரட்ட முண்ணனி அவசியமாகும். இதனையே அமைப்பு வடிவம் என்பது நமக்கு கற்றுத் தருகின்றது.

 

7.

முழக்கம். உத்தரவு

குறிப்பான சமூகக் கட்டத்திற்காக செயற்பாட்டில் எவ்வகையான முழக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குறிப்பான முழக்கங்கள் சமூக இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாகும்.

”மூல உத்தியை வகுப்பவர் அல்லது செயலுத்தியை வகுப்பவரின் கலைத்திறன் ஒரு கிளர்ச்சி முழக்கத்தை, திறமையான முறையிலும் சரியான நேரத்திலும், ஒரு செயல் முழக்கமாக நிலைமாற்றம் செய்வதிலும், சரியான நேரத்திலும் திறமையான முறையிலும் ஒரு செயல் முழக்கத்தை ஒரு திட்டவட்டமான, பருண்மையான, உத்தரவுகளாக  வார்த்தெடுப்பதிலும் அடங்கியிருக்கிறது.(80- தொ5)

” ஒரு முழக்கம் என்பது போராட்டத்தின், ஒரு  குறிப்பிட்ட முன்னணிக் குழுவால், பாட்டாளி வர்க்கத்தின்  கட்சியால் என்று வைத்துக் கொள்ளலாம், முன்வைக்கப்படும் உடனடி அல்லது தொலைதூர, குறிக்கோள்களின் சுருக்கமான, தெளிவான சூத்திரமாகும்.  போராட்டத்தின் பல்வேறு குறிக்காள்களுக்கேற்ப முழக்கங்கள் மாறுபடுகின்றன, அந்தக் குறிக்கோள்கள் ஒரு முழுமையான வரலாற்றுக் கட்டத்தையோ குறிப்பிட்ட   வரலாற்றுக்  கட்டத்தையோ குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் தனித்தனிக் கட்டங்களையும் நிகழ்வுகளையுயுமோ தழுவியவையாக இருக்கின்றன. (178-5)

எடுத்துக் காட்டாக கூற வேண்டுமென்றால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையில் நெடும் பயணத்தில் வைக்கப்பட்ட முழக்கங்களை எடுத்துக் கொண்டால் அது ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை வலியுறுத்தும் உள்ளடக்கத்தை கொண்டிருந்ததை அவதானிக்க முடியும்.  அவைகள் தொடர்ச்சியான அரசியல் போராட்டங்களின் ஊடாக சமூகத்தை செயற்பாட்டு இயக்கத்திற்கு கொண்டு வர துணையாக்கப்பட வேண்டும்.  சமூகத்தை அரசியல் மயமாக்கல், அமைப்பாக்கல் போராட்டத்தினை வீரியமாக்கும்.

‘‘முழக்கங்களை உத்தரவுகளுடன் குழப்பிக் கொள்வது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை நடவடிக்கை முழக்கத்துடன் குழுப்பிக் கொள்வது, காலம் கனிவதற்கு முன்னதாக அல்லது காலம் தாழ்த்திய நடவடிக்கையைப் போன்றே அபாயகரமானதாகும், அது சில நேரங்களில் அழிவு ஏற்படுத்தக் கூடியதாகவும் ஆகிவிடும்.” (179- 5)

 

இறுதியாக

இரத்தம் சிந்தும், சிந்தா அரசியலின் முக்கியத்துவம் பற்றி இன்று உரையாடப் பட வேண்டும். இரந்தம் சிந்தா அரசியலை  எவ்வித தடையும் இல்லாது முன்னெடுக்க முடியும்.  ஆனால்  சீர்திருத்தவாத, பிற்போக்கு முகாம், விதேசிய பிரிவு, மேட்டுக்குடி தாராளவாதிகளும்   ஏகாதிபத்திய, பிராந்திய, உள்நாட்டு ஆளும் வர்க்கச் சக்திகளுக்கு துணையாக இருக்கின்றார்கள்.

2009 பின்னரான காலத்தில் தோல்வி மனப்பாங்கை வளர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.  இரத்தா அரசியல் என்பதன் முக்கியத்தை தவிர்த்து வருவதில்  அதிக கவனத்தை செலுத்தினார்கள்.

பிராந்திய, சிறிலங்கா அரசுகளின் நலன்களின் பின்னால் செல்ல முடியாது. தமிழ் தேசத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை கட்டமைக்கப்படவேண்டும். அதற்கான அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அமைப்பாக்கம், அமைப்புருவாக்கம், செயற்பாடு என்று நோக்கி நகர வேண்டும். இதற்கான உரையாடல் என்பது அவசியமாகும்.  

இரத்தம் சிந்தா அரசியலின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு ஊட்டப்பட வேண்டும் என்ற நிலையில் இந்த குறிப்பு எழுதப்படுகின்றது.

இது தோழர்  ஸ்ராலின் தொகுப்பில் இருந்து எடுத்தாளப்படுகின்றது. தோழர் ஸ்ராலின் சோவியத் புரட்சிக்குப் பின்னர் வழிகாட்டியுள்ளார். அதனை கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்  கருதியே அறிமுகச் சுருக்கமாக இங்கு தரப்படுகின்றது.