Popular Posts

Thursday, 21 May 2026

அமெரிக்க- சீனா- ருசியா- ஈரான்

 

                                 

அமெரிக்க- சீனா- ருசியா- ஈரான்

அமெரிக்கப் பிரதிநிதிகளை வெளியுறவு அதிகாரியும், சிறுவர்களும் வரவேற்றார்கள். பொதுவாக உயர் மட்ட அமைச்சர் தரத்தில் தான் வரவேற்கும் மரபு உள்ளது. ஆனால் இந்த விடயத்தில் அவ்வாறு நடைபெறவில்லை. இதுவும் இராசதந்திர மொழியில் சீனத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதுவரையில் எந்த வகையிலும் தனக்குப் பின்னால் அணியைச் சேர்த்தே ஆக்கிரமிப்பு அரசியலை செய்து வந்தது. இந்தப் பயணத்தில் பலவிடயங்களை சீனத்திடம் எதிர்பார்த்துச் சென்றிருந்தனர். பொருளாதாரம், சர்வதேச உறவு, பாதுகாப்பு, பாரசீக வளைகுடா திறப்பு போன்ற அடிப்படையில் இந்தப் பயணம் அமைந்திருந்தது என சொல்லப்பட்டது. சீனா பொருளாதார, இராணுவப் பலம் போன்றவற்றைக் கொண்டு ஈராக்கிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

பயணம் தொடங்கும் முன்னர் நல்லது நடக்கும், இருநாடு நல்ல விழைவுகளை ஏற்படுத்தும் என்றும், பொருளாதார ஒப்பந்தம், மூலப்பொருள், தாய்வான் விடயம், ஈரானுக்கு அழுத்தம், ருசியாவிற்கு அழுத்தம் எனக் கூறிக் கொண்டே பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக இவ்வாறான உயர் மட்டச் சந்திப்பு என்பது அரசாங்கத்தின் தரப்பு, அதிகார வர்க்கம், வணிகத்தை முன்னெடுப்பவர்கள் இணைந்து கொள்வார்கள். அவ்வாறே அமெரிக்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் தலைமை அதிகாரிகள் இந்த பயணத்தில் இணைந்துள்ளார்கள். இந்தச் சந்திப்பின் பின்னால் உள்ள அரசியல் நலன் என்பது வெவ்வேறு வகையாக அமைகின்றது. ஒரு பகுதிக்கு இந்தச் சந்திப்பு என்பது அமைதியாக கொண்டு செல்ல முடியும், மற்றையப் பகுதிக்கு முழுமையான வெளிப்பட்ட தீர்வு என்பது அவசியமாகின்றது.

இன்று சீனம் அரியவகை கனிமவளத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. இது அவசியமான கனிம வளம் என்ற காரணத்தினால் அதனுடன் சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் இந்த சீன அரச பயணத்தில் பங்கு பற்றியுள்ளார்கள். அந்த முதலாளிகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்குத் தேவையானது கனிமவளமும், சந்தையும் ஆகும் இவை இரண்டையும் ஏதோ ஒரு வகையில் உறுதி செய்வார்கள்.

Chips/ semiconductors -கடத்தி AL தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அவசியமாகும். இதனை அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்படும்.

இந்த யுத்தம் யாருக்கு நன்மை கொடுக்கப் போகின்றதோ இல்லையோ. அமெரிக்க டொலர்- யுவான், தடையற்ற வணிகம், பொருளாதாரப் பாதை, (உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான வணிக வழி), எரிசக்தியை தங்குதடையின்றி அனுமதிப்பது, இதன் ஊடாக உற்பத்தியில் எவ்வித இடையூறும் நடக்க முடியாது போன்றவை சீனாவின் நிலையாகும். மிகையான உற்பத்தியை செய்துவிட்டு சந்தையில் ஏற்படுகின்ற சிக்கலால் எந்த நாடும் சகித்துக் கொள்ளாது. அவ்வாறு செய்தால் வேலைவாய்ப்பு இன்மை, தொழிற்சாலை மூடப்படும், மக்களிடம் உள்ள சேமிப்புச் சக்தி இழக்கப்படும். 

சந்தைக்கு தேவையான நிலைத் தன்மை (stability), நுகர்வோர், வணிகப்பாதை அவசியமாகும். இது எந்த வகை பொருளாதார முறைக்கும் இது பொருந்தும்.

எண்ணையின் விலையேற்றம், பற்றாக்குறை பாதிக்கப்படப் போவது ஐரோப்பியத் நாடுகளும் அடங்கும். ஏற்கனவே ருசிய எண்ணையை தடைசெய்து விட்டு பற்றாக்குறையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே விலைவாசி அதிகரித்துள்ளது. சீனாவைப் போல மாற்று எரிசக்தியை ஐரோப்பாவில் இல்லை. ஆனால் சீனா எண்ணைக்குப் பதிலாக மின்சார வாகனங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது, காற்றாடியில் மின்சாரம், நீர்வீழ்ச்சினால் பெறப்படும் மின்சாரம் என்று மாற்றுப் வழியை கொண்ட முன்னேறிய நாடாக சீனா உள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஈரான் விடயத்தில் இருந்து வெளியேற வேண்டிய தேவை உள்ளது. ஆனால் சீனாவைப் பொறுத்தவைரையில் எவ்வித அவசரமும் இல்லை. சீன ஆதிக்கம் என்பது இலக்கு இராஜதந்திர மூலோபாயத்தின் மூலம் வெல்ல முடியும் என்று சீன நம்புகின்றது. மேற்கு ஏகாதிபத்தியம் போல மூர்க்கத்தனமாக யுத்தங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. இதுவரையில் சீன அவ்வாறான எந்த செயலிலும் இறங்கியதில்லை.

சீனாவைப் பொறுத்தவரையில் எரிசக்தியை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேவேளை இன்று எண்ணை விலை அதிகரிப்பு, இராச தந்திர நடவடிக்கைகள் தோல்வி, இராணுவ முயற்சியும் தோல்வி இதனை சீனா பயன்படுத்துகின்றது.

இங்கு வெனிசுவேலேவை பலி கொடுத்தது போல ஈரானையும் பலிகொடுக்குமா என்பது தான் இன்றுள்ள கேள்வியாகும். 2050 இலக்கு என்ற அடிப்படையில் எதனையும் தன் நலனுக்காக விட்டுக் கொடுக்கக் கூடியது சீனம். தன்னுடைய வல்லரசுக் கனவு என்பதற்கு அப்பால் பாட்டாளி வர்க்க நலன் ஒன்று ஒன்றில்லை. லெனின் பேசுகின்ற அரச முதலாளித்துவம் வேறு. சீனம் பேசுகின்ற அரச முதலாளித்துவம் வேறானதாகும்.

ஜி பேசுகின்ற போது Thucydides trap ஆட்பட்டிருப்பதாக கூறினார். Thucydides trap என்பர் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய தளபதி களத்தில் கொல்லப்படுகின்றார் என்பது பற்றியே. விரிவாதிக்க எண்ணம் கொண்ட படைத்தளபதில் பலரின் உதவியுடன் படையக் கட்டினார், இடைவிடாது பலயுத்தங்களை மூலம் சிற்றரசுகளை ஆக்கிரமித்தார். அந்த தளபதி இறுதியில் கொல்லப்பட்டார். இங்கு இந்த சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றதை கவனிக்க வேண்டும். அதாவது அமெரிக்கா இக்கட்டான நிலையில் உள்ளதை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது. Thucydides தோண்டிய குழியில் அவரே மடிந்தார். ஏகாதிபத்தியம் என்பது காகிதப் புலி என மாவோ கூறியதையும் பொருத்திப் பார்க்கலாம். ஏகாதிபத்தியங்கள் ஆயுதங்கள் தான் அவர்களின் பலம்.

Trump பேசுகின்ற போது இனிமேலும் மோதிக் கொள்வதில் இனிமேலும் தயாராக இல்லை எனவும், நீண்டகாலமாக மோதிக் கொண்டது போதும் என்றார். இருவரும் எதிரிகளாக இருக்கின்றமைக்கு இயலாது என்றார். Marco Rubio தனது செவ்வியில் யுத்தத்தை நிறுத்த எவ்வித உதவியும் சீனாவிடம் கேட்கவில்லை என்றார். Trump நிர்வாகத்தில் உள்ள குழப்ப நிலையைத் தான் முரண்பட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றது.

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சர்வதேச அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என வெளிவருகின்றது. பொதுவாக இன்னொரு நாட்டின் ஆட்சியாளர்களை அகற்றுவதன் ஊடாக தீர்வினை மேற்கொண்டுள்ளது. ஆனால் இலகுவாக ஈரான் ஆட்சியை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதே போல இராணுவ வல்லமையையும் முழுமையாக அழிக்க முடியவில்லை. ஈரானை எவ்வகையிலாவது தனிமைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

இந்த நிலையில் ஈரான் ஆட்சியை ஈடாட்டம் கொள்ள வைக்க சீனாவால் முடியும் என்று அமெரிக்கா நம்புகின்றது. பொருளாதாரத்தில் ஈடாட்டம் ஏற்பட வேண்டும். இதன் ஊடாக உள்நாட்டுக் கிளர்ச்சி, குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றது. சீனாவின் அழுத்தத்தின் ஊடாக யுத்தத்தை நிறுத்துவது, வளைகுடாவை திறப்பது, அதன் ஊடாக அமெரிக்கா வெளியேறுவது நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றது.

இஸ்ரேலுக்காக தொடங்கப்பட்ட யுத்தத்தின் இராணுவச் செலவின் சுமை, இராசதந்திர பொறுப்பு இவற்றை அமெரிக்கா சுமந்து வருகின்றது. Trump நிர்வாகத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பினைச் சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த எதிர்ப்பினைச் சமாளிக்க சீனப் பயணம் உதவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

யுத்தவிமானங்கள் வாங்குவது, சீனா முதலீடு செய்ய அழைத்தது, பாரசீக வளைகுடா திறப்பதற்கு ஒத்துழைப்பதாக சீன கூறியதாக கூறப்பட்டது எல்லாம் உண்மையில்லை என்றே சீன வெளியுறவுத் திணைக்களம் செய்தி வெளியிடுகின்றார்கள். 

ஈரான் மீது மீளவும் தாக்குதல் மேற்கொள்ளும் திட்டம் தவிர்க்கப்பட்டுள்ளதாக Trump அறிவித்துள்ளார். குவைத், கட்டார் போன்ற நாடுகளும், பாக்கிஸ்தானும் சமாதானப் பேச்சில் ஈடுபட்டிருக்கின்றது. சமாதான ஒப்பந்தம் இடம்பெற சாத்தியம் உள்ளதாக கருதியே தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வழமை போல Trump பேச்சு அமைந்திருக்கின்றது என்றே கொள்ள முடிகின்றது. Iran அணுவாயுதம் (nuclear warhead) வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதுவே அரசியல் போக்கை மாற்றியுள்ளதாக கருதப்படுகின்றது. இது சாத்தியமான ஒன்றே. இவ்வாயுதம் வடகொரியாவில் இருந்து பெறப்பட்டிருக்கின்றது. இதனால் அமெரிக்காவிற்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. இஸ்ரேலுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.

 

ருசிய சீன உறவு

விளாடிமீன் பூட்டின் சினாவிற்கு பயணம் செய்துள்ளார். விமானநிலையத்தில் சீன வெளிநாட்டமைச்சர் மற்றும் பாடசாலை சிறுவர்கள் அவரை வரவேற்று உளார்கள். சீன அதிபர் வரவேற்புத் தொடர்ந்து பீரங்கி வெடி மரியாதையுடன் ருசிய தேசிய கீதமும் இசைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளும் உலகிற்கு செய்தியைக் கொடுக்கின்றது. மூலோபாய பலம் (Strategic power) யாரிடம் உள்ளது என்பது தான் இன்றைய அரசியல் போக்காகும். அமெரிக்காவின் நிலை எங்கு உள்ளது என்பது இந்த நடவடிக்கையால் நிறுவப்படுகின்றது.

இரு நாடுகளும் விரிவான கூட்டாண்மை (comprehensive partnership) என்பது இதுவரையில் இல்லாத மூலோபாயக் கூட்டுறவாகும். நவீன நாடுகளுக்கு இடையில் உருவான இந்த கூட்டு புதியவகை உதாரணமாகின்றது. இது கொள்கை அடிப்படையில் பொருளாதாரம், இருபக்க ஒத்துழைப்பு, சமத்துவம், கொள்கை அடிப்படையில் கருத்தில் கொள்வது என்று பூட்டின் தெரிவித்திருந்தார்.

ஜி பேசும் போது, இந்த உலகம் அமைதி நிலைக்கு அப்பால் உள்ளது. ஒரு தலைப் பட்டசமான அரசியல் முனைப்பு, மேலாதிக்கப் போக்கு ஆபத்தானதாகவும், கற்கால (law of jungle) நிலைக்கு கொண்டு செல்லுகின்றது. மனிதர்கள் எல்லோருக்குமான எதிர்க்காலத்திற்குரிய முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ருசியா உட்பட பலதரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார்.

இன்றைய பதட்டமான உலகத்தில் மேலும் யுத்தம் விரிவாக்கம் பெறாமல் இருக்கும் படியான நடவடிக்கையை சீனா திரைமறையில் செய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக சீனா, ருசியா, வடகொரியா போன்ற நாடுகளிடையே ஏற்பட்டுள்ள இராதந்திர உறவானது மேலும் இறுக்கம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பெலேருசியா தனது தூதரகத்தை வடகொரியாவில் திறக்கின்றது. அதேவேளை பெலேருசிய அதிபரும் வடகொரியாவிற்கு சென்றுள்ளார்.

Xinhua exhibition இல் பூட்டின், ஜி ஆகியோரின் பெரிய அளவிலான ஒளிப்படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக எதிர்வினையாக பார்க்க முடிகின்றது.

Bricks நாடுகளின் வெளிவிவகார அமைச்சர் மாநாடு டில்லியில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் இறுதி மாநாட்டின் அறிக்கை உள்ளக்கத்தின் சில அம்சங்கள் தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்க, இஸ்ரேல் சம்பந்தப் பட்ட விடயங்களே தடுக்கப்பட்டது. ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேசும் இராணுவ விடயங்கள், தற்போதை நிலைகளை குறிப்பிட்டு ஆதரவு நிலை கொண்ட அம்சங்கள் தடுக்கப்பட்டது. இதில் யார் இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுக்கு இணக்கப்பாடான போக்கை கொண்டவர்கள் என்பது ஊகிக்க முடியும்.

 

 

 


No comments:

Post a Comment