Popular Posts

Thursday, 6 August 2026

ஆய்வு மொழி

 

 

 


 

ஆய்வு மொழி

படைப்புகள் மக்களின் விடுதலை, மேம்பாடு, ஜனநாயக நெறி போன்றவற்றை பற்றி உருவாக்குகின்றது. அங்கு பயன்படுத்தப்படும் மொழி ஆயுதம் முக்கியமானதாக விடுதலைக்கான மொழி என்று இருக்க முடியுமா? அல்லது இருக்கிற சட்டகத்திலிருந்து மொழியாடலை அமைத்துக் கொள்வதா? மொழிக்கு அரசியல் விளைவுகள் இருக்கும். குறிப்பான  சூழலில் மக்கள் தம்மை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றார்கள் என்பதை கள ஆய்வில் மானிடவியலாளர்கள் அவதானிப்பார்கள். நுண் அளவில் ஆய்வு செய்யும் முறைமை மானிடவியல் அணுகுமுறையாகும்.

மக்கள் தமது அரசியலை அனுபவத்தை ஆய்வாளர்களுடன் பரிமாறிக் கொள்ளும் போது எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். ஒரு மக்களிடம் அனுபவம் சார்ந்த விடயங்களை அதிகமாக ஆட்கொண்டிருக்கும். ஆனால் அரசியல் பார்வை, சமூகவியல் பார்வை அவர்களிடம் இருப்பதில்லை. இதுதான் பெரும்பான்மையான எளிய மக்களின் நிலையாகும். மனிதர்களின் அகநிலை போக்கு, அகவுணர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் மானிடவியல் அதிகம் கவனம் செலுத்துகிறது.

மொழி வன்முறை என்று ஒன்று இருப்பதாக மானிடவியலாளர் கருதுகிறார்கள். மொழி என்பது அன்றைய சமூக உற்பத்தி உறவுடன் தொடர்புடையதாகும். மொழியாடலைத் தீர்மானிப்பதும் அந்த வாழ்வியல் தான். மொழி வன்முறை என்பது அன்றாட செயல்பாடுகள், உறவுகள், பேச்சுகள், உரையாடும் போது இடைநிறுத்தங்கள், பதிலீடுகள், முழுமையடையாத கதைகள், பகிரப்பட்ட அனுமானங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த சமூகத்தை அளவிடப்படுகிறது. இவ்வாறான அளவீடு என்பது ஒரு வகையில் மென்மை போக்கை கொண்டு சமூக அமைப்பை வேறு திசைக்கு நகர்த்தும் போக்கை கொண்டதாக அமையும்.

 

 **************

மானிடவியல் (Anthropology), மொழி அரசியல், வெகுமக்கள் வாழ்வியல் மற்றும் சமூக உளவியல் ஆகிய தளங்களை மிக ஆழமாகத் தொட்டுச் செல்கின்றன. இந்த எழுத்து வெளிப்படுத்தும் கருப்பொருள்களைச் சுருக்கமாகப் பின்வருமாறு தொகுத்துப் புரிந்து கொள்ளலாம்:

1. மொழியும் அரசியலும் (Language and Politics)

 * விடுதலைக்கான மொழி: இலக்கியங்கள் அல்லது படைப்புகள் மக்களின் விடுதலை, ஜனநாயகம், மேம்பாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் போது, அங்கே பயன்படுத்தப்படும் மொழி வெறும் கருவியல்ல; அது ஒரு கூர்மையான ஆயுதம்.

 * சட்டகமும் மீறலும்: அதிகாரத்தின் அல்லது ஆதிக்கச் சமூகத்தின் வரையறுக்கப்பட்ட சட்டகங்களுக்குள் (Frameworks) நின்று மொழியாடலை அமைத்துக் கொள்வதா, அல்லது அந்தச் சட்டகங்களை உடைத்து புதிய விடுதலையின் மொழியை உருவாக்குவதா என்ற கேள்வி எழுகிறது.

 * அரசியல் விளைவுகள்: மொழி எப்போதுமே அரசியல் நடுநிலையானது அல்ல; மொழிக்கு நேரடியான அரசியல் விளைவுகளும் தாக்கங்களும் உண்டு.

2. மானிடவியல் கள ஆய்வும் மக்களின் வெளிப்பாடுகளும் (Anthropological Fieldwork)

 * நுண் அழகியல் ஆய்வுமுறை: மானிடவியலாளர்களின் அணுகுமுறை என்பது சமூகத்தின் மேலோட்டமான தன்மைகளைப் பார்ப்பது அல்ல; மாறாக, வாழ்வியலின் நுண் அலகுகளை (Micro-levels) மிக ஆழமாக ஆய்வு செய்வதாகும்.

 * முன்னிலையும் பின்னிலையும் (Front Stage & Back Stage):

   * ஆய்வாளர்களிடம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

   * எளிய மக்களின் வாழ்க்கை இரண்டு நிலைகளைக் கொண்டது: சமூகம் காணும் "முன்னிலை" (Front Stage) மற்றும் அவர்களின் உண்மையான அகநிலையை வெளிப்படுத்தும் "பின்னிலை" (Back Stage).

 * அகநிலை மற்றும் அரசியல் பார்வை: வெகுமக்களிடம் முறையான சமூகவியல் அல்லது அரசியல் கோட்பாட்டுப் பார்வைகள் இருப்பதில்லை. மாறாக, அவர்களின் அன்றாட அனுபவங்கள், அகவுணர்வுகள் மற்றும் அகநிலைப் போக்குகளில்தான் அவர்களின் அரசியல் புதைந்துள்ளது. இதனை மானிடவியல் அதிகம் கவனத்தில் கொள்கிறது.

3. மொழி வன்முறையும் அன்றாட வாழ்வியலும் (Language and Violence)

 * உற்பத்தி உறவுகளும் மொழியும்: மொழி என்பது தனித்து இயங்குவதில்லை; அது அன்றைய சமூக உற்பத்தி உறவுகளுடனும் வாழ்வியலுடனும் நேரடித் தொடர்புடையது. மக்களின் வாழ்வியல்தான் அவர்களின் மொழியாடலைத் தீர்மானிக்கிறது.

 * உடல் மொழி மற்றும் நுண் வெளிப்பாடுகள்:

   * வன்முறை மொழி என்பது ஏதோ தனியாக இயங்குவதல்ல; அது அன்றாடச் செயற்பாடுகள், உறவுகள் மற்றும் பேச்சுகளில் கலந்திருக்கிறது.

   * ஒரு கருத்தைச் சொல்லும்போது செய்யப்படும் இடைநிறுத்தங்கள் (Pauses), பதிலிடும் முறைகள், முழுமையடையாத சொற்கள், உடல் பாங்கு (Body language) மற்றும் பகிரப்பட்ட அனுமானங்கள் (Shared assumptions) ஆகியவற்றை ஒரு மானிடவியல் ஆய்வாளர் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பகிர்வு மானிடவியல் கள ஆய்வின் சவால்களையும், எளிய மக்களின் அன்றாட மொழிசார் அரசியலையும் மிகச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மொழி அடையாளமா? மொழி அரசியல் நிலைப்பாட்டின் வடிவம் என்று எதனை கொள்வது? சமூகத்தில் உற்பத்தியாகும் சமூக முரண்பாடு, தேசிய பெருமை, மத பெருமையினால் கட்டப்பட்ட சமூகம்; அதன் வெளிப்பாடு எவ்வாறு இருக்கும்?

ஒன்று, ஒடுக்குமுறையை எதிர்க்கும். மற்றையது, ஒடுக்குமுறையை இன்னொரு சமூகத்தை வன்முறையைக் கொண்டு அடக்கும். ஆகவே, ஆய்வு மொழியும் அடக்குமுறையை வெளிப்படுத்த முடியும் என்பது ஒரு ஆய்வின் அடிப்படையானதாகும்.

ஆகவே, ஒரு மனிதனின் மௌனம் என்பது பேச்சின் எதிர்ச் சொல் அல்லது எதிர் வடிவம் அல்ல. அது இன்னொரு செய்தியைச் சொல்வது எப்படி? அதற்குப் பின்னால் இருக்கிற அடக்குமுறை வடிவம் என்ன? எனவே, ஒரு மனிதனுடைய மொழியையும் மௌனத்தையும் தீர்மானிப்பதும் அடக்குமுறையின் ஒரு வடிவம் ஆகும்

மொழி, அரசியல் நிலைப்பாடு, அடக்குமுறை மற்றும் மௌனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான சமூகவியல் மற்றும் மானிடவியல் தொடர்புகளை மிகத் துல்லியமாக விளக்குகின்றன. அந்தக் கருத்துகளின் சாராம்சத்தை விவரிக்கும் தொகுப்பு:

 ********** * * * *

. மொழியும் அரசியல் நிலைப்பாடும்

 * மொழி வெறும் அடையாளமா அல்லது அரசியலா? மொழி என்பது வெறும் கருவி மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் அரசியல் நிலைப்பாட்டின் வடிவம் (Form of political stance). அது ஒடுக்குதலை எதிர்க்கும் ஆயுதமாகவும் மாறலாம், அல்லது அடக்குமுறையை நியாயப்படுத்தும் கருவியாகவும் செயல்படலாம்.

 * சமூக முரண்பாடுகளின் தாக்கம்: தேசியப் பெருமை மற்றும் மதப் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகங்களில், அந்தச் சமூக முரண்பாடுகளின் வெளிப்பாடு இரண்டு எதிர் திசைகளில் அமையும்:

   * ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைச் சிந்தனை.

   * பழிவாங்கும் சிந்தனையுடன் இன்னொரு சமூகத்தை வன்முறையால் அடக்கும் போக்கு.

 

*********

* ஆய்வு மொழியும் அடக்குமுறையும்

 * ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் மொழியும் கூட சில வேளைகளில் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகவே அமையும் என்பது சமூக ஆய்வுகளின் அடிப்படையான உண்மைகளில் ஒன்றாகும்.

 * அதாவது, ஆதிக்கச் சிந்தனைகளின் தாக்கம் மொழிவழியாகவும், ஆய்வு அணுகுமுறைகள் வழியாகவும் கடத்தப்பட வாய்ப்புள்ளது.

3. மௌனமும் அடக்குமுறையும்

 * மௌனம் என்பது எதிர்ச் சொல்லல்ல: ஒரு மனிதனின் மௌனம் என்பது பேச்சின் வெறும் எதிர் வடிவம் அல்ல; அதுவும் ஒரு வகையான வெளிப்பாடுதான்.

 * மௌனத்திற்குப் பின்னான அரசியல்: அந்த மௌனம் என்ன செய்தியைச் சொல்கிறது? அதற்குப் பின்னால் இயங்கும் அடக்குமுறையின் வடிவம் என்ன? என்பவை மிக முக்கியமான கேள்விகள்.

 * முடிவுரை: ஒரு மனிதனின் பேச்சு மொழியையும், அவன் எதைச் சொல்லாமல் தவிர்க்கும் மௌனத்தையும் ஒருசேரத் தீர்மானிப்பதும் வடிவமைப்பதும் அந்தச் சமூகத்தில் நிலவும் அடக்குமுறையின் வடிவமே ஆகும்.

Tuesday, 4 August 2026

தமிழர் தேசத்தின் மீதான கருத்தியல் தாக்குதல்!!!

 

 


 

 2.

தமிழர் தேசத்தின் மீதான கருத்தியல் தாக்குதல்!!!

 

இந்த உலகம் என்பது நல்லது கெட்டது என்ற அடிப்படையில் இயங்குவதில்லை. அதன் பின்னால் உள்ள அரசியல் பொருளதார நலன்கள் தான் முதன்மையானது. எதுவும் கடவுளின் சிந்தத்தினால் இயங்குதில்லை. ஆனால் தமிழ் தேசிய அரசியல் நீக்க கொள்கை கோட்பாட்டு விளக்கம் புறக்கதவினால் நுழைக்கப்படுகின்றது. ஒரு கருத்தாளர் வெளிப்படையாகவே வெளிச் சக்திக்கு வேலை செய்கின்ற நபரின் எதிர்ப்பும், தமிழ் சமூகத்திற்கு தொடுக்கும் கருத்தியல் தாக்குதல் எதிர்க் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் கோட்பாடு இல்லாது போராட வில்லை. அவர்களின் பின்னால் ஒரு கோட்பாடு இன்றும் இருக்கின்றது. தமிழ் இளையோர் மௌமாக இருக்கின்றார்களா? ஏன் தெற்காசியாவில் இளைய தலைமுறையினர் (Gen-Z) போன்று தமிழ் இளைஞர்கள் ஏன் செயற்பட வில்லை என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது உண்மையா என்றால் இல்லை. இந்த இளையோர் வெவ்வேறு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசிய அரசியலுக்குள் வெவ்வேறு அளவில் பங்கெடுக்கின்றார்கள். அதேவேளை தமிழ் சமூகத்தின் மீது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அரசியல் போக்குத் தான் 17 வருடங்களாக செய்து வருகின்றார்கள். இதில் குறிப்பாக சுமந்திரன் செய்து கொண்டிருக்கின்றார். சுமந்திரன் தேசம் பற்றிய புரிதல் அற்ற அரசியல் மேற்கொள்கின்றார் என்றால் அதனை நேர்மையாக சொல்வதற்குரிய இடம் தேவை. சுமந்திரனின் தொழில் முறை பாண்டித்தியம் என்பது அவரின் தனிப்பட்ட விடயம்.

 

என்பிபி என்ற போலி இடதுசாரியத்தின் பின்னால் சென்று தமது சக்தியை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பிரிவும் உள்ளது. இந்தப் பிரிவினருக்கு இடதுசாரி அரசியல் அல்லது மார்க்சியம் பற்றிய புரிதல் கொண்டவர்கள் அல்ல. குட்டிமுதலாளித்துவப் பிரிவு அதாவது சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த படிநிலைக்கு நகரவேண்டும் என்று விரும்பும் பகுதியினராவர்.

 

மாறிவரும் உலகம்

இன்று நடைபெறும் ஈரான் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் எதிர்விளைவுகள் அனைவரையும் பாதிக்கும். அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை கவனிக்காது உள்நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதை மாத்திரம் கவனத்தில் கொள்ள வேண்டும். அனாவசிய விடயங்களை கவனத்தில் கொள்ளக் கூடாது என்கின்ற சிந்தனை போக்கும் விதைக்கப்படுகின்றது.

 உலகில் இன்று மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. உலகில் நடைபெறுகின்றவை மீளவும் திரும்பத்திரும்ப வெவ்வேறு வடிவத்தில் உருவாகும். இலங்கையைப் பொதுத்த வரையிலும் சரி, உலகின் பல பாகங்களிலும் சரி முதலாளித்துவ வளர்ச்சி என்பது ஏற்படவில்லை. அங்கு சமூகம் என்பது பிரச்சனைகளை எதிர்நோக்கித் தான் இருக்கின்றது.

இன்றையப் போக்கின் சுருக்கமான இலக்கணம்

1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.

2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ‘நிதி மூலதனத்தின்அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.

3) பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.

4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்

5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியதத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுகின்றது.

1990 பின்னர் முதலாளித்துவ சித்தாந்தம் என்பதே ஒரே வழி அதற்குப் போட்டியாக எதுவும் இல்லை என்று முதலாளித்துவ அறிஞர்கள், முதலாளித்துவ வாதிகளால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனாலும் முதலாளித்துவத்தினால் முழுமையாக தீர்வினைக் கொடுக்க முடியவில்லை. முதலாளித்துவம் தன்னை வடிவமைத்து கொண்டு வந்தது உண்மையே. தன்னுடைய மூலதனத்திரட்சிக்காக நாடுகளையும், ஆட்சியாளர்களை தனது பிடியில் வைத்துக் கொண்டே வந்தது. பலவேளைகளில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை செய்து வந்துள்ளது.

இன்று உலகம் என்பது புதிய நண்பர்கள், புதிய வணிக அணி என முகாம்கள் பிரிந்துள்ளன. ஐ. நா என்பது முனையை மாதிரி இயங்குமா என்பதும் கூட கேள்விக் குறியாகும். சீன- ருசிய- இரான் என்றும், ஐரோப்பிய ஒன்றியம்- பிரித்தானியா- கனடா, அமெரிக்கா என்று அணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகம் என்பது யூவான், டொலருக்கான போரில் புதிய போக்கு நிகழத்தான் போகின்றது. இதனை விளங்கிடமால் புதிய சக்தி எழுமா?

 

புதிய ஒழுங்கை விளங்கிக் கொள்வது என்பது என்ன? (https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2026/03/) "முதலாளித்துவக் கொள்ளைவெறியர்களின் இரு உலகக் கோஷ்டிகள்" ஏற்பாடு செய்த கொலைத் தாண்டவம் என்கின்றார் லெனின். உலகின் வளங்களையும் சந்தைகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர capitalist நாடுகள் நடத்திய போட்டியே இந்தப் போர் ஆகும்.

உலகப் போருக்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் தங்கம் ஒரு முக்கிய நாணயப் பாதுகாப்புச் சீர்தரமாக(தங்கச் சீர்தரமும் Gold Standard) விளங்கியது. போரின் தொடக்கத்துடன் பல நாடுகளும் தங்கச் சீர்தரத்தைக் கைவிட்டன; போருக்கான செலவுகளைச் சமாளிக்கவும், தங்கக் குவியல்களைத் தக்கவைக்கவும் நாடுகள் கடுமையாகப் போராடின.

உலக நாடுகளின் பிரதான நோக்கம் தங்கத்தையும் மூலதன வளங்களையும் தங்கள் நாடுகளுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதும், பிற நாடுகளின் மீது பொருளாதார ஆதிக்கம் செலுத்துவதுமே ஆகும். இந்த ஏகாதிபத்தியப் போட்டி மற்றும் ஆதிக்க வெறியே இறுதியில் மில்லியன் கணக்கான மக்களைப் பலிவாங்கிய முதலாம் உலகப் போராக வெடித்தது.

 

 

தலைவர்களின் மீது காழ்ப்புணர்வு

அரசியல் முரண்பாடுகளை எதிர்க் கொள்வது என்பது வேறு. ஆனால் அரசியல்முரண்பாட்டை காழ்ப்புணர்வு என்று கூறுவது சமூகவியல், அரசியல் பார்வையில் கோளாறாகும். சுமந்திரனை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டாம் என்று, இளைஞர்கள் சிலர் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அது அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களால் மாத்திரமே முடியும். ஏனெனில் ஈழப் போராட்டம் என்பது அரசு சம்பந்தப்பட்ட விடயத்திற்கு எதிராக செயற்படும் ஏக்கராட்சியப் பிரிவின் மீதான எதிர்வினையாகும்.

இறைமையை தாரைவார்ப்பது

``சிங்கள மக்களுக்கு #சமஸ்டி என்னும் சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனைப் போல தமிழ் மக்களுக்கு #ஒற்றையாட்சி என்று சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது.

Undivided- indivisible

``பிளவு படாத பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை ஆங்கிலத்தில் undivided and Indivisible country அதனை சிங்களத்தில் Nobethunu, Bethanna Noheki ஒரு நாடு ஒரு நாடாகவே இருக்கும் என்பதை மட்டும் சொல்வதாக தீர்மானித்து ஆட்சி முறையை குறிக்கிற சொல்லை நீக்கி நாடு ஒரு நாடு என்பதை விவரிப்பதான கூற்றாக அது மாற்றப்பட்டது.

Undivided- indivisible இந்த இரண்டு சொல்லாடல் என்பது பெரும் அர்த்தம் பொருந்தியது. இறைமையை முழுமையாக ஒப்படைத்துவிடுவது ஆகும். இதனை ஏன் ஏற்றுக் கொள் என்று தமிழர் தரப்பு விளக்கம் கொடுக்கின்றார்கள்? சுயநிர்ணயத்தை எவ்வாறு விட்டுக் கொடு என்று தமிழ் தரப்பால் சொல்ல முடிகின்றது. இன்னொரு படி சென்று ஒற்றையாட்சிக்கு வியாக்கியானம் கொடுக்கின்றார்கள்.

 

நீலன் வகையறா, துரையப்பா, அமிர்தலிங்கம் வகையறா என்பது தமிழ் தேசத்தின் நலனுக்கு எதிரான நேரடியாக வேலை செய்தவர்கள். இவர்களின் மீதான தாக்குதல் என்பது ஒரு போராட்டத்தின் காலத்தில் தவிர்க்க முடியாது.

 

அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

 

அரகலை- இளைய தலைமுறையினர் (Gen-Z)

இளைய தலைமுறை அரசியல் தேர்ந்தெடுக்குமா? சமூகத் தேவை இருக்கும் வரையில் சமூகம் உயிர்ப்புடன் இருக்கும். ஆனால் அந்த சமூகத்திற்கு அரசியல் இலக்குப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். வடக்கு-கிழக்கு தமிழ் இளைஞர்கள் மட்டும் ஏன் அரசியல் ரீதியாக மௌனமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது.  அவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டார்கள் பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். தொழில் முறை அரசியல்வாதிகள், தேர்தல் அரசியல் என்பதற்கு அப்பால் சிந்திக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இன்னொரு அன்னிய சக்தியின் கருத்திற்கு இசைவாக வேலை செய்கின்ற சக்திகளின் கருத்துகளை தமிழ் மக்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். இந்த ஏகாதிபத்திய, ஒடுக்குமுறை, இனவழிப்பு, ஆக்கிரமிப்பு அரசியலை மேற்கொள்ளும் சக்திகளின் எடுபிடிகளையும் தமிழ் சமூகம் கவனம் கொள்ள வேண்டும். இவர்களின் கருத்து என்பது தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்தாக அமைய முடியாது.

 

"வரலாற்றில் உள்ள மாபெரும் உலகளாவிய நிகழ்வுகளும் ஆளுமைகளும் ஏதோ ஒரு வகையில் இரண்டு முறை தோன்றும் என்று ஹெகல் எப்போதோ குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டார்: முதல் முறை ஒரு சோகமாகவும் (Tragedy), இரண்டாம் முறை ஒரு நகைச்சுவையாகவும் (Farce) மாறும்.

வரலாற்று நிகழ்வுகளும் தலைவர்களும் காலப்போக்கில் மீண்டும் திரும்பும் போது, இரண்டாவது முறை வரும்போது அதற்குரிய உண்மையான வீச்சோ, தீவிரமோ அல்லது மாண்போ இருப்பதில்லை. மாறாக, அது ஒரு கேலிக்குரிய நகலாகவோ அல்லது முட்டாள்தனமான நாடகமாகவோ (Farce) மாறிவிடும் என்பதை அவர் அவதானித்தார்.

 

இது மார்க்சியம் வளர்ந்து வரும் போக்கில் வரலாற்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது பற்றி மார்க்ஸ் எழுதும் இதை எழுதியிருப்பார். ஆனால் இன்று மார்க்சியம் என்பது சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடும் வழிகாட்டியாக இருக்கின்றது.

மார்க்ஸ் காலத்தில் தொழிலாளர் இயக்கம், மார்க்சியம் என்பது வளர் நிலையில் இருந்த போது புரட்சிகர நிலைப்பாடு எடுக்க தொழிலாளி வர்க்கம் தவறியது. அவ்வாற வேளையில் பிற்போக்கு சக்திகள் அதிகாரத்திற்கு வருகின்றார்கள். இன்று மார்க்சியம், லெனினியம், மாவோ சிந்தனை என்று வளர்ந்து முழுமையான நிலையில் மக்கள் புரட்சிகரப் பக்கமே திரும்ப வேண்டும். ஆனால் இடதுசாரிய அரசியல் மரபார்ந்த சீர்திருத்தக் கட்சிகளின் பின்னால் சென்றுவிட்ட படியாது. புதிதாக தோன்றும் அமைப்புகளின் பின்னால் சென்று தமது தேவையை நிறைவேற்ற முயல்கின்றார்கள். அந்த முயற்சி நகைச்சுவையாகவும் (Farce) மாறும். ஏனெனில் இளைய தலைமுறையினர் (Gen-Z) முதலாளித்துவத்திற்கு மாற்றான திட்டமில்லை.

 

இந்திய - Gen-Z மாதிரிப்படிவம்

``அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற கரப்பான் பூச்சி இளைஞர்களின் நடவடிக்கைகள் உலகின் கவனத்தைப் பெற்றிருந்தது. அவர்களின் நடவடிக்கையால் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஒரு படி கீழே இறங்கிவந்தது.

இதை எடுத்துக்காட்டாக கொள்ள முடியும் என்பது அவசர முன்முடிவாகும். இந்தியா என்பது தேசங்களின் ஒன்றியம். அங்கு தேசங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சமச்சீர் அற்ற அளவில் வளர்ந்துள்ளது. அவ்வாறு முரண்பாடுகளைக் கொண்ட சமூகத்தில் கரப்பான் பூச்சி என்பது எவ்வளவு காலம் நின்றுபிடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வடஆபிரிக்க, உக்கிரேன் மஞ்சல் புரட்சி, நேப்பாளப் புரட்சி போன்றவை ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குப் பின்னால் இருந்து நடைபெற்ற கிளர்ச்சிகள். அவற்றிற்க ஒவ்வொரு பெயர் இட்டார்கள். அதேவேளை பழைய சிலநாடுகளில் பழைய ஆட்சியாளர்களை மாற்றிக் கொண்டார்கள். மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அரகல என்பது முகமாற்றம், சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை பாதுகாக்கக்கூடிய ஆட்சியாளர்களைத் தான் தெரிவு செய்துள்ளார்கள். இனிவருங்காலத்திலும் தெரிவு செய்வார்கள்.

எந்தப் புரட்சியும் தொழிலாளர் உரிமையை பாதுகாக்கின்ற, தேசிய இனங்களின் உரிமை அங்கீகரிக்கின்ற, சுயபொருளாதாரத்தை கட்டமைக்கின்ற, விலைவாசியை கட்டுப்படுத்துகின்ற ஆட்சியை கொண்டுவர முடியாது.

சித்தாந்த தெளிவற்ற உதிரிகளை உருவாக்கிக் கொள்வது தான் இன்றைய போக்காக இருக்கின்றது. இதனால் மக்கள் புதிய ஆட்சியாளர்களுடன் சில ஆண்டுகள் மல்லுக் கட்டுவார்கள், ஆளும் வர்க்கங்களிடையே இருக்கின்ற மோதல்கள் மக்களை திசை திருப்பிக் கொண்டே இருக்கும். இது சிங்கள தேசத்தின் போக்காக இருக்கப் போகின்றது. அங்கு பழைய கட்சிகள் மறையக் கூடிய சமிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே

தமிழ் தேசிய அரசியல் அற்ற புதிய இளையோர் வரவேண்டும் என்கின்றார்கள். பாரம்பரிய கட்சிக் கதைகளை உடைத்தெறியும் புதிய தலைமுறையொன்று வெளியில் வர வேண்டும். அவை அனைத்தின் மீதும் கேள்விகளை முன்வைக்க வேண்டும். புதிய அரசியல் தலைமுறை ஒன்றிற்கான தேவை பெரிதாக இருக்கின்றது என்பது உண்மை தான். ஆனால் அதற்கான கோட்பாட்டுத் தெளிவும் அவசியமானதாகும்.

 

மாறிவருகின்ற உலகில் தமிழர்களின் வகிபாகம் பற்றிப் பேசப்பட வேண்டும். ஆனால் புதிய உலக ஒழுங்கில் தமிழர்களுக்கு தமது இடத்தை கண்டடைய வேண்டும்.