தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் - தோழர் லெனின்
மார்க்சிய வரலாற்று மாணவர்கள் இதனை கற்ற பின்னர் விவாதிக்க வாருங்கள். - வேலன்
`` தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (ரு.ச.ஜதொ.கட்சியினது செயல் திட்டத்தில் 9 வது பிரிவு),
தோழர் லெனினின் தேசிய இனப்பிரச்சனை பற்றிய கோட்பாடுகள் (Thesis)
தோழர் லெனின் வழிகாட்டல் முன்னெப்பொழுதும் போலவே இன்றும் பொருத்திப் பார்க்க முடியும். தோழர் லெனின் வழிகாட்டலில் கவனிக்கப்பட வேண்டியவை நிறையவே உண்டு. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முதலாளித்துவ புரட்சிகள் நடந்து முடியவில்லை, ஒவ்வொரு சமூகக் கட்டத்தை நேர் கோட்டுப்பாதையில் செல்வதில்லை. இதனை மீள மீள சொல்ல வேண்டியுள்ளது. சமூக ஆய்வுகள் செய்யும் முறைமை கலாசாலைகளுடன் முடிந்து விடுகின்றன. ஆனால் உழைக்கும் வர்க்கம் சமூகவியலை கற்கும் வகையில் கட்சிகள் ஆய்வுகளை அடிக்கடி முன்வைக்க வேண்டும். அப்போதுதான் சமூகப் போக்கை விஞ்ஞான ரீதியாக சமூகம் உள்வாங்க முடியும். கட்சியின ஊழியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் மயப்படுத்தல் என்பது கட்சி ஊழியர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் அரசியல் மயப்படுத்தல் அவசியமாகும்.
“தொழிலாளிகளுக்கான இலக்கியம்” என்ற செயற்கையாகக் குறுக்கப்பட்ட வரம்புக்குள் தொழிலாளிகள் நின்றுவிடாமல் பொதுவான இலக்கியத்தைப் பயின்று புலமை பெற மென்மேலும் கற்க வேண்டியது அவசியம். ” தொழிலாளிகள் நின்றுவிடமால்” என்று சொல்வதை விட ”தொழிலாளிகளை நிறுத்தவிடாமல்” என்று சொல்வது மேலும் உண்மையாயிருக்கும்.” (லெனின். எ.செ.வே61) லெனினியம் மக்களுக்கு அரசியல் ஊட்ட வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. மக்களை அரசியல் அறிவற்ற வெறும் மந்தைகளாக இல்லாது அரசியல் பொருளாதாரம், நிர்வாகத்தைக் கற்று சோவியத்துக்களை மக்களே நிர்வகிக்க கற்ற வேண்டும் என்கின்றார். ஆனால் அடையாள அரசியலில் இருப்போர் கட்சியில் இடவொதுக்கீடு கேட்கின்றார்கள். அவர்கள் முதலாளித்துவ கட்சியின் செயல்முறையை பொதுவுடமைக் கட்சிகளில் திணிக்கின்றார்கள்.
”அரசியல் வறுமையை ஒட்டியே
சமூக சிந்தனையைக் கட்டமைக்க வேண்டுமா?
துருப்பிடித்த மூளைசாலிகளே.
ஒதுங்குங்கள்,
உங்களால் எதுவும் செய்ய முடியாது.
உங்கள் இருப்பை உறுதிப்படுத்த கவர்ச்சிவாத
கருத்துக்களை வைத்தே
காலத்தை ஓட்டுகின்றீர்கள்.” ஆய்வு, படிப்பு, தேடலில் உள்ள சோம்பேறித் தனத்தை கொண்டே அரசியல் மட்டுப்படுத்தப்படுகின்றது.
மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் (தோழர் ஸ்ராலின்),தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் என்ற நூலிலைப் படித்தறியும் போது தான் தேசிய இனப்பிரச்சனை பற்றிய பார்வையை பெற முடியும்.
கலாச்சார தேசியம் பேசுவது என்பது ”தேசியவாதக் குட்டி பூர்ஷ்வாக்களின் இலட்சியங்களுடன் மட்டும் இணைந்ததாக இருக்கின்றது” (11) என்று தோழர் லெனின் கூறுகின்றார்கள். ஆனால் இதன் உள்ளார்ந்த வியார்க்கியானத்தை இன்று ஊன்றி படிப்பவர்களாக தெரியவில்லை.
இந்த நூலில் பண்பாட்டுத் தேசியவாதம் பற்றிப் பேசுவது யூத அமைப்புகளின் குறுங்குவாதத்தை பிற்போக்கு தேசியக் கோரிக்கை என்கின்றார். தேசிய இனம் என்பது நிலப்பிரபுத்துவத்தின் தோற்றத்துடன் ஏற்படுவதாகும். நிலப்பிரப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகளை விமர்சிக்கின்றது. நிலப்பிரபுத்துவக் கூறுகளில் உள்ளவற்றை ஏற்றுக் கொள்ள கோருவது தான் பண்பாட்டுத் தேசியவாதம். பண்பாட்டுத் தேசியவாதம் நிலப்பிரபுத்துவக் கூறுகளை ஏற்கும் படி கூறுகின்றது. மொழி அற்ற தேசிய இனமாக அடையாளம் கொண்ட யூதர்களின் குறுங்குழுவாதம் எதிர்க் கொள்ள வேண்டியிருந்தது.
Otto Bauer and Sprinkler போன்றவர்களின் பண்பாட்டு தன்னாட்சி கருத்தைப் பற்றிய விடயத்தில் தோழர் ஸ்ராலினால் விளக்கப்பட்ட இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க முடியும்.
1. சுயநிர்ணயம் (செயலூக்கம் கொண்டது தேசங்களுக்கே)
2. தேசத்தின் வரையறையாகும்.
Otto Bauer and Sprinkler போன்றவர்களின் கருத்து என்பது தேசத்தின் சுயநிர்ணயத்தினைப் பற்றி பேசவில்லை. இவர்களைப் பற்றிய குறிப்பான விமர்சனத்தை மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் என்ற நூல் முழுவதும் ஆராய்ந்திருப்பார் தோழர் ஸ்ராலின்.
கோட்பாட்டுப் பிரச்சனைகளில் லெனின் படைத்த வழிகாட்டலை ருசிய நிலைக்கு மாத்திரம் எழுதியதாக திரிபுவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருவதை கேட்டுள்ளேன். அதற்கு எதிர்வினையாற்றினால் அவர்கள் காதுக்கு சென்றடையாது. திரிபுவாதத்தையே முதன்மை வேலையாக கொள்பவர்கள் அவ்வாறுதான்.
கருத்துமுதல்வாதம்- இயக்கவியல் / இயங்கியல்
கருத்துமுதல்வாதம் என்பதை முதலில் பார்த்துவிட்டு பின்னர் தமிழர் உலகக் கண்ணோட்டம் பற்றி பார்ப்பது நன்று. ‘‘இயக்க இயல் என்பது‘‘புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டினதுமான இயக்கத்தின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம்” ஆகும். (43லெ.மூன்று) அகநிலை என்பது தனிமனிதனின் ஆன்மா, தனிமனிதனின் முடிவும் உணர்வும்.- இதனை அகநிலைவாதம் எனலாம்.
புறநிலை என்பது பொருள் முதன்மை, தன்னுணர்வு சாராது புறநிலையில் இருந்து அணுகும் போக்கு- புறநிலைவாதம் எனலாம். மார்க்சிய சொல்லாடலில் புறநிலை என்பது பொருள்- இயற்கை -விஞ்ஞானம். ஒரு குறிப்பான பிரச்சனையை அறிகின்ற போது மொத்தத்துவமாகவே அணுகிட வேண்டும்.
1.விஞ்ஞானம் (இயக்கவியல்) மூன்று தத்துவக் கூறுகளில் ஒன்று. ‘புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டினதுமான.‘‘இது இயக்கவியல் இயங்கியல் பொருள்முதல்வாதம். அகம் நிலை என்பது கடவுளை, ஆன்மாவை, தனிமனிதப் புரிதலை முன்னிறுத்தி பொருளை மறுப்பது. புறநிலை என்பது பொருள் ஏற்றுக் கொள்வது. சுருக்கமாகச் சொன்னால் பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பது போல புறநிலை சிந்தனையை தூண்டுகின்றது. இங்கு புறப்பொருளை ஏற்றுக் கொள்கின்றது. மனிதர் அறிவியலைக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2. வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- பொருளாதாரக் கட்டமைப்பு, உபரி, பண்டம், மூலதனத்தின் உருவாக்கம் பற்றியது. இந்தச் சமூகத்தின் இயங்குப் போக்கை கற்றறிவதாகும். இங்கும் உற்பத்தி உறவு, உற்பத்தி சக்திகளுக்கு என்ற அடிக்கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்ட மேற்கட்டுமானம் பற்றியது. மேற்கட்டுமானம் என்பது குறிப்பிட்ட பொருளாதார உறவுகளில் அரசு அதன் நிறுவனங்களான அரசாங்கம், நீதி, சிறை, படைகள், மற்றைய நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டதாகும்.
3.சமூகக் கட்டத்தை கடப்பதற்கான போராட்டம் (முரண்பாடுகள்) ஒவ்வொரு சமூக உறவுகளுக்கும் அங்கே ஏற்படும் முரண்பாடுகள் வர்க்கப் போராட்டமாக வளர்ந்து வருகின்றது. சமூக ஒழுங்கமைப்பின் மாற்றத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வர்க்கச் சமூகத்திற்கு அதற்கு ஏற்ற சமூக ஒழுங்கமைவு மாற்றமடைந்து வந்துள்ளது. அவை குறிப்பிட்ட உற்பத்தி முறைக்கானதாகும். இரத்த உறவுடைய இனக்குழுமங்கள் சிதைத்து தேசிய இனங்களாக சமூக ஒழுங்கமைவு கொள்கின்றது. இராணுவத் தலைமை கொண்ட அரசனின் ஆட்சியாக உருவாகிய காலம் உருவாகியது. இதனைக் கடந்தே வரவேண்டியது.
ஏகாதிபத்திய சமூகக் கட்டத்தில் வாழ்ந்தாலும் நிலமானிய மரபுவழியும் கடத்தப்பட்டே வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் சமூகப் போக்கை கண்டு கொள்ள முடிகின்றது.புலம்பெயர்ந்தவர்கள் பழைய சமூகக் கூறுகளை கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காய் அவர்கள் தமிழ் தேசியம் பேசுவதை நகைப்பிடமாக பார்க்கப்படுகின்றது.
எம்மவர்கள் புலம்பெயர்ந்தும், தமது அடையாளத்தை சுமந்து வந்ததை நையாண்டி செய்பவர்கள் முதலாளித்துவ புரட்சி நடைபெற்று முடிந்த நாடுகளின் சமூகச் சிந்தனைப் போக்கை அறியமுடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். முதலாளித்துவப் புரட்சி முழுமையடையாத நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் உலகக் கண்ணோட்டம் உடனடியாக மாறிவிடுவதில்லை. புலம்பெயர்ந்த உடன் மற்றைய சமூக மட்டத்தில் சமூக உறவு என்பது வேகமான இருந்துவிட முடியாது. அவர்கள் இங்கு வந்த பின்னரும் பல் வேறு இடையுறுகளைக் கடந்தே முன்னேற வேண்டி இருக்கின்றனர்.
சிங்கள தேசம் ஆட்சியதிகாரம் கொண்டது. ஆட்சியதிகாரம் இருப்பதனால் அது மற்றைய தேசத்தையும், மத- தேசிய சிறுபான்மையையும் ஒடுக்குகின்றது. தன்னிடம் உள்ள பெரும்பான்மை என்ற எண்ணிக்கையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் கீழ் பேரம் பேசி இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. சிங்கள தேசத்திற்கு சுயநிர்யணம் இல்லை என்று வாதிடுபவர்கள் உள்ளார்கள். சிங்கள தேச ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கிடையே மோதிக் கொள்கின்றன. சிங்கள தேசம் சுயநிர்ணயத்தை இழந்து நிற்பதாக மார்க்சியத்தில் இல்லாததை மார்க்சியமாக மாற்றி வைத்துள்ளார்கள். ‘‘ஆட்சியில் உள்ள ஒவ்வொரு வர்க்கமும் எல்லா வர்க்கங்களின் ஆட்சி நடப்பதாகக் காட்டவே விரும்பும். அதற்காகப் பொது நன்மை என்ற லட்சியத்தைப்பற்றி ஆளும் வர்க்கம் பேசும். அது தான் உலகத்தின் ஒரே உன்னதம் என்று பேசும். அதுதான் பகுத்தறிவுள்ளவர்களின் ஒரே குறிக்கோள் என்று பேசும்.'' Marx, Engels (The German Ideology. P. 64-65) மேல் உள்ள கருத்தானது மார்க்சியவாதிகள், பொதுவுடமைக் கட்சிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் சிறப்பாக பொருந்துகின்றது.
மார்க்சியம் முன்மொழியும் பாதையை கற்று செயற்படுத்த தயாரில்லாது எப்போவோ யாரோ கற்றுக் கொடுத்ததை ஒப்பித்துக் கொண்டே இருக்கின்றார்கள். “பொருளாதாரப் போராட்டத்திற்காக அரசியல் போராட்டத்தை மறுப்பதானது சர்வதேச சமூக சனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விலகுவதாகும். (56-லெனின் v1) இந்த உள்ளடக்கத்தை விளங்க வேண்டுமென்றால் தோழர் லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும் என்ற நூலை வாசிக்க வேண்டும். சமூகக் கட்டத்திற்கான போராட்டத்தை கைவிட்டு இன்றும் தொழிலாளிகளின் கூலி உயர்வு போன்ற போராட்டங்களே வர்க்கப் போராட்டம் என்று சுருக்கிவிட்டுள்ளார்கள். பொருளாதாரவாதத்தில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொருளாதாரவாதம் தொழிலாளியின் உரிமையை மட்டும் கோருகின்றது. ஆனால் விடுதலை (அரசியல் அதிகாரம், உற்பத்தி மாற்றம்) கோருவதில்லை. முதலாளித்துவ வளர்ச்சியினால் மேற்கட்டுமானத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்ப்பதேயாகும். இதில் தேசிய இனப்பிரச்சனை பிரதான முரண்பாடாகும். ஆனால் மற்றைய முரண்பாடுகள் பிரதான பகை கொண்டதாக இருக்க வேண்டியதில்லை. ஒரு முரண்பாடு முதன்மையாக இருக்கின்ற போது மற்றைய முரண்பாடுகள் பிரதான மற்றவகையாக மாறிவிடுகின்றன. 1966 பின்னரான தீண்டாமை எதிர்ப்பியக்கத்தின் விளைவாக பண்பு, அளவுமாற்றத்திற்கு சாதியம் உருவாகியுள்ளது. ஆனால் ஈழத்தலித்தியம் சாதியத்தை பிரதான முரண்பாடாக வைக்கின்றது. இது தவறான அரசியல் பார்வையாகும். சாதியம் சிந்தனையில் மாற்றம் கொள்ள வைப்பதும் உற்பத்தி முறையின் ஊடாகவே சாத்தியமானதாகும். 1848-1871 காலப் பகுதியில் ஜேர்மனியில் முதலாளித்துவ புரட்சி முடிவிற்கு வந்த காலம். சாதியத் சமூகத்தின் இறுக்கம் போராட்டத்தின் ஊடாக நெகிழ்வுத் நிலைக்குச் சென்றது. அடுத்த கட்டமாக தேசிய எழுச்சி ஆரம்பமாகியது. தமிழக பகுத்தறிவுவாதம் வரலாற்றில் கற்கால சிந்தனை மரபை உடைத்து எறிய முற்பட்டதே. கற்கால சிந்தனை வடிவம், முதிர்ச்சியற்ற, முதிர்ந்த சனநாயக வடிவம் போற்றவற்றை தோழர் லெனினிடம் கற்க வேண்டியுள்ளது.
தோழர் லெனினின் நூல் வழங்கும் வழிகாட்டல் என்பது ஆழ்ந்து படிக்க வேண்டிய நூலாகும். இதனை கற்றுணர்கின்ற போது சொந்தக் கோட்பாட்டை உருவாக்க முடியும். நமது இலக்கை அடைவதற்கான திட்டம், செயல் திட்டம், போராட்டங்களை விரிவுபடுத்திச் செல்ல முடியும்.
”நமது அரசியல் கிளர்ச்சியின் தன்மையும் முதன்மையான உள்ளடக்கமும்,
நமது அமைப்புத்துறைப் பணிகள்,
ஒரே நேரத்தில் பல்வேறு புறங்களிலிருந்து ஒரு போராட்ட ஊக்கமுள்ள அனைத்து ருசிய அமைப்பைக் கட்டுவதற்கான திட்டம்- என்று இருந்திருக்க வேண்டும். (8. எ.செ.வே-லெ)
செயலூக்கம் பற்றி லெனின் கருத்துக்களை இவற்றுடன் ஒப்பு நோக்கி விளங்கிட முற்பட வேண்டும். சுருக்கமாக சொல்வதானால் அரசியல் பொருளாதாரம் பற்றிய தெளிவு
எவ்வாறாக மக்களை அணிதிரட்டுவது
போராட்டங்களை வழிப்படுத்துவது
அரசியல் ரீதியான முக்கியத்துவத்தை கவனத்தில் எடுக்கவில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் அரசியல் தேவையை மடைமாற்ற பலர் இறக்கப்படுவார்கள். பின்னவீனத்துவத்தின் கருத்துருவாக்கப் போக்கு கட்டுமீறி உள்ளது. இது பொதுப்புத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. பொருளாதாரச் சுரண்டல், தேசிய இன ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை என விரிந்துள்ளது. இந்த நிலையில் முரண்பாடுகளை களைவது என்பது அந்தக் கட்டத்திற்கு தேவையான ‘உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு நிச்சயம் இசைவானதாக இருக்க வேண்டும் must necessarily conform) என்னும் பொருளாதார விதியைச் சார்ந்திருந்த காரணத்தினால் மட்டுமே இதனை சாதிக்க முடிந்தது. தமது நாட்டின் உற்பத்திச் சக்திகள் குறிப்பாக தொழில்துறையிலான உற்பத்திச் சக்திகள் சமூகத் தன்மை உடையவையாக இருந்தன. ‘‘ (ப34- தோழர் ஸ்ராலின்)
ஈழப் போராட்டம் என்பது முன்னோக்கிச் செல்லும் நிலையைக் கொண்டதால் தன்னை 1990- 2009 வரையில் தற்காத்துக் கொள்ளும் நிலை இருந்தது. இந்த வரலாற்றுக் காலம் ஒற்றைத் துருவ சர்வதேசப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதில் ஏகாதிபத்தியங்கள் இணைந்து தேசிய எழுச்சியை ஒடுக்க வேண்டிய ஒற்றை முடிவை எடுத்தும் ஈழத்தின் வீழ்ச்சியின் பின்னர் இன்று சந்தையை தமதாக்கியுள்ளனர்.
இந்திய, இலங்கைச் சூழல் என்பது ஏகாதிபத்திய அணிகளுக்கும், சீன சமூக ஏகாதிபத்தியத்திற்குமான நலன் சார்ந்த அரசியல் என்பது அந்தப் பிராந்தியத்தில் எப்பொழுதும் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கப் போகின்றது.
இந்துத்துவாவும், சிங்கள பௌத்த பேரினவாதமும் ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றது. தேசிய இனங்களின் முதலாளித்துவ கட்ட வளர்ச்சியை சிதைத்துக் கொள்ளும் போக்கு இருந்து கொண்டே இருக்கப் போகின்றது.
ஈழத்தைப் பொறுத்த வரையில் தேசமாக நிலைப்பதை சிதைக்கும் அரசியலை 2009 இல் இருந்து செய்து கொண்டு வருகின்றார்கள். இந்தப் போக்கிற்குத் துணையாக பூர்சுவா, தரகு வர்க்க அரசியல்வாதிகளும் துணைபோகின்றார்கள்.
இந்திய வெள்ளை நிறவாதமும், சனாதன இந்துத்துவ, இந்தியம் என்ற வெறிக்கு இந்தியப் பகுதி பாதிப்புக்கு உள்ளாகின்றது. திராவிட வழி தேசங்களின் வளர்ச்சி என்பது முன்னோக்கிச் சென்றிட முடியாத வகையில் ஆளும் வர்க்கங்களும் இந்தியத்திற்கு துணை நிற்கின்றன. சீனத்தின் பொருளாதாரத்தை முறியடிக்க எவராலும் முடியாது. மாறாக தேசங்கள் தமக்கான ஆட்சியதிகாரத்தை நோக்குப் பயணிப்பதன் ஊடாகவே இந்தியத்தையும் ஏகாதிபத்தியங்களையும் முறியடிக்க முடியும்.
ஏகாதிபத்திய கட்டத்தில் குறிப்பான நாடுகளில் இருக்கின்ற நிலையை ஆய்விற்கு உட்படுத்தவேணடும். அதன் ஊடாக வே ஏகாதிபத்திய கட்டத்தில் சோசலிச புரட்சியை நடத்திட முடியும். முதலாளித்துவப் புரட்சி முழுமையடையாத நாடுகளின் அகச் சூழல் புரட்சிக்கு சாதகமாகவே இருகின்றது.
னினியம் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் ஏற்படுகின்ற பிரச்சனை அதாவது முதலாளித்துவ புரட்சி முழுமையாத நிலை, ஏகாதிபத்தியத்தினை எதிர்க்கொள்ளும் வழிகாட்டல் என அனைத்தும் தளுவிய திறனாய்வுமுறையை கொண்டதாக தோழர் லெனினின் படைப்புக்கள் உள்ளன. அவரின் மேதாவித் தனத்தை திரிபுவாதிகள் திரிக்கின்றனர். இவர்களுக்கு தோழர் ஸ்ராலின் கொடுக்கும் பதில்..........
லெனினியம் என்றால் என்ன?
ரஷ்யாவில் நிலவும் தனித்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மார்க்சியத்தைப் பயன்படுத்துவதே லெனினியம் என்று சிலர் சொல்கின்றனர். இந்த விளக்கத்தில் உண்மையில் ஒரு துளிதான் அடங்கியுள்ளது; எந்த விதத்திலும் முழு உண்மை இதில் அடங்கியிருக்கவில்லை. உண்மையில், ரஷ்ய சூழ்நிலைக்கு மார்க்சியத்தை லெனின் பொருத்திப் பயன்படுத்தினார்; அதனை திறமையுடன் பயன்படுதினார். ஆனால் ரஷ்யாவின் தனித்துவமான சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான மார்க்சியத்தைப் பயன்படுத்திய மட்டுமே லெனினியம் என்றால், அது முற்றிலும் தேசியமானதாக, தேசியமானதாக மட்டுமே இருக்கும்; முற்றிலும் ரஷ்யாவுக்கான விளைபொருளாக மாத்திரமே இருக்கும். லெனினயம் என்பது ரஷ்ய அம்சம் மட்டுமானது அல்ல என்பதும், ஓட்்டுமொத்த சர்வதேச வளர்ச்சியின் வேர்விட்ட சர்வதேச விளைபொருள் என்பதும் நமக்குத் தெரிந்ததே. எனவேதான் இந்த விளக்கம் ஒரு பக்கமாக மட்டும் வெளிப்படுத்தும் விளக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். (ப86- ஸ்ராலின் தொ.) லெனினியத்தின் சிறப்பு அவரின் இலக்கியத்தை உள்வாங்கிக் கொண்டால் சமூக ஆய்வை இலகுவாக செய்துவிட முடியும்.
தேசம் என்ற வளர்ச்சிக்கட்டத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது, சிக்கலைத் தீர்ப்பது சமூக பொருள் உற்பத்தி முறையை வியாபகமாக ஆராய்ந்து கோட்பாட்டை வகுக்க வேண்டும்.
முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளில் மா்ர்க்சியம் திரிபுடுத்தப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையர் என்ற தேசம்- தேசியம் ஒன்றைப் பற்றி ஜேவிபியினர் பேசுகின்றார்கள். வர்க்கங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது தேசங்களின் அரசு என்ற விடயங்களை மறுத்து விடுகின்றார்கள். இது ஒரு கோட்பாட்டுப் பிரச்சனை என்பதுடன் கருத்துமுதல்வாதமாகும்.
லெனின் கூறுகின்ற தேசங்களின் ஒன்றிணைவை, தேசிய இனங்கள் ஒன்று கலத்தல் கோட்பாட்டை என்பதை தவறாக புரிந்துள்ளார்கள் என்பதை சோவியத் புரட்சியின் பின்னர் தோழர் ஸ்ராலின் சுட்டிக் காட்டுகின்றார். தேசிய ஒடுக்குமுறை, முதலாளித்துவப் புரட்சி, சமவுடமைப் புரட்சி நடைபெறாத காலகட்டத்தில் சாத்தியமில்லை. ஒன்று கலத்தல் என்பது பொதுவுடமைச் சமூகத்தின் கட்டத்திற்கானது என்பதாக புரிந்து கொள்ளக் கூடியதை தமக்கு தேவைக்கு ஏற்ப திரிக்கப்படுகின்றது. கற்பனையின் உச்சம், இயங்கியல் மறுப்பே (One country one nation) ஒரு நாடு ஒரு தேசமாகும்.
வடக்கு கிழக்கில் சுயாட்சி (பு.ஜ.மா.லெ.க) என்கின்றவர்கள்- பிரசைகளுக்கான உரிமை (மு.சோ.க) - சமவுரிமை பேசுபவர்களை இட்டு, மக்கள் மன்றம் (ஜேவிபி) , நிகுநெகும (மகிந்த தரப்பு) இவைகள் எல்லாம் சுயநிர்ணயம் அல்ல. இது கலாச்சார தேசியவாதம் என்ற வகையில் அடங்குகின்றது. இவை தோழர் லெனின் வரையறுக்கும் சுயநிர்ணயத்திற்கு மாற்றாகும். மேலும் இவர்கள் உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம் என்கின்றார்கள்.
‘‘நிலப்பரப்பின் அடிப்படையில் தேசிய இனத் தன்னாட்சி அங்கீகரிக்கப்பட்டது. எல்லாத் தேசிய இனப் பிரதேசங்களும் கட்டாயமாக ஒன்று சேர்த்து ஐக்கியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற சமூக ஜனநாயகவாதிகள் பிரசாரமானது ‘‘கலாச்சார- தேசிய இனத் தன்னாட்சி‘‘ என்ற கருத்துக்கு இடம் தந்து நிற்கும் ஒரு சமரச முறை தானேயொழிய வேறில்லை. ” (ப10)
ஒஸ்ரிய புரூன் கொங்கிரசின் (Otto Bauer, Sprinkler எதிராக தோழர் ஸ்ராலின் தனது மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் என்ற நூலில் விமர்சிக்கின்றார்) திட்டம் பற்றிய நிலைப்பாட்டிற்கு தோழர் லெனினின் கருத்து.
இங்கு சுயநிர்ணயத்திற்கு மாற்றாக திட்டத்தை வைத்துள்ள FLSP, JVPகளினுடையதும் சமரச முறைதான். FLSP, JVP இந்த அமைப்பினர் சுயநிர்ணயத்திற்கு மாற்றாக இனமதகுலமற்று உழைப்பாளியாக ஒன்றிணைவோம் என்பதும் கண்கட்டி வித்தையேயாகும். NDMLP, CPM போன்ற திரிபுவாதக் கட்சிகளின் நிலைப்பாடு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி என்பதும் சுயநிர்ணயமும் ஒன்றல்ல. இதுவும் கலாச்சார தன்னாட்சி” என்ற அடிப்படைக்குள் தான் வந்து விடுகின்றது. இதுவும் ஒரு மோசடியானதும் அதுவும் அரசியல் அமைப்பு விடயமாக சுருக்கிவிடுகின்ற போக்கில் அமைந்ததாகும்.
கட்சியின் திட்டத்தில் மரபாக கட்சிகள் சுயநிர்ணயத்தை வலியுறுத்துகின்றார். அவர்கள் போராடினார்களாக என்றால் இல்லை என்பதே இலங்கையைப் பொறுத்த வரையில் வரலாறு. இதே வேளை ஜேவிபி, மு.சோ.க போன்றவைகள் திட்டத்தில் சுயநிர்ணயம் என்ற பேச்சிற்கே இடமில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் சுயநிர்ணயம் என்பதே பிரிவினைவாதம். அவர்கள் கட்சித் திட்டத்தில் வைக்க மாட்டார்கள், சிங்கள மக்கள் கோபம் கொள்வார்கள்.
தேசிய இனவரையறை
1990க்குப் பின்னர் தேசிய ஒரு கற்பிதம், தேசியம் அடையாளம் என்ற கருத்தாக்கம் எழுந்தது. அவர் சொல்கின்றார், இவர் சொல்கின்றார் என்ற கருத்து என்பது ஆய்வு நிலை கலாசாலைக்குரியது. ஆனால் இயங்கியல் கருத்து நிலை என்பது சமூக பொருளாதார உற்பத்தி முறையை வெளிப்படுத்துவதாகும். அது தான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வெளிப்படையானது. சமூக இயக்கத்தை வெளிப்படுத்துவ என்பதே கடமை. அதற்கு அப்பால் வெவ்வேறு போக்குகளையும் மறுத்திருக்கின்றார்கள். அடையாள அரசியல் என்பதற்கு வெவ்வேறு வியாக்கியானம் கொடுகின்றார்கள்.
தேசிய இனவரையறையும், தேசத்தினையும் வரையறுப்பது எவ்வாறு என்ற பிரச்சனைன இருந்து கொண்டே உள்ளது. உணர்வுகள் தேசிய இனத்தையும், தேசத்தையும் தீர்மானிக்க முடியும் என்ற கருத்துப் போக்கு இருக்கின்றது. புலக்காட்சி, நம்பிக்கை போன்றவற்றின் அறியும் அடையாளங்களை முன்னிறுத்தும் போக்கு உள்ளது.
தனிநபர்களின் அடையாளங்களான சமயம், மொழி, பண்பாடு, பிராந்தியம், மரபினம் ஒன்றை முதன்மைப்படுத்தலாம், அல்லதுஇரட்டை அடையாளம் கொண்டும் இருக்கலாம் என்கின்றது.
தேசியவாதம் என்பதை தனிநபர்களின் எல்லை நம்பிக்கைகளிலும் முதன்மையானது தேசியவாத நம்பிக்கை என்று சுருக்கிவிடுகின்றது.
அகநிலைவாதம் என்பது தனிநபர் ”நான்யார்” என்ற கேள்விக்கு அளிக்கும் பதில் அரடையாளம் சார்ந்ததாக குடும்பம், பாலினம், பிராந்தியம், சாதி, தொழில் குழு, இனக்குழுமம், மனித குலம் என்று பன்மை அடையாளங்களாக கொள்கின்றது. குடும்பத்துடன் உள்ள அடையாள உணர்வு நெருக்கமானதுஅடிப்படையில் உள்ளதொடர்பாக கொள்கின்றது.
பின்னவீனத்துவம்- அகநிலைவாதம் "உள்ளக வரையறையின் செயல்முறைகள் உள்ளன: நடிகர்கள் குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் இயல்பு அல்லது அடையாளத்தின் சுய-வரையறையை சமிக்ஞை செய்கிறார்கள். இது ஒரு ஈகோ-சென்டராக இருக்கலாம்….() வெளிப்புற வரையறை: இவை பிற இயக்கப்பட்ட செயல்முறைகள் ஆகும், இதன் போது ஒரு நபர் அல்லது நபர்களின் தொகுப்பு மற்றவரை (களை) `X',`Y' அல்லது வேறு எதுவாகவும் வரையறுக்கிறது. ”There are process of internal definition: actors signal to in-or out group members a self-definition of their nature or identity. This can be an ego-centrel….() External definition: These are other directed processes during which one person or set of persons defines the other(s) as `X’,`Y’ or whatever.(s 375 Richard Jenkins).
இங்கு எந்த தனிமனிதர்களின் உணர்வுளை கொண்டு அடையாளப்படுத்திவிட முடியும் என்கின்றது. தனிமனித மையவாத திறனாய்வு முறை என்பது சமூக கூட்டுணர்வின் வெளிப்பாடுகளையும் சமூக உறவையும் உள்வாங்கி உள்ளதா என்பது கேள்விக் உரியதாகும். தனிமனிதர்களின் சிந்தனை வடிவமும், சமூக உறவும் ஏதோ ஒரு சமூக பொருளாதார உற்பத்தி முறைக்கு உட்பட்டதாகவே இருக்க முடியும். அதற்கு அப்பால் இருக்கமுடியும் என்ற போக்கும் அதற்கு எதிரான போக்கும் உள்ளது.
இங்குகவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் புறநிலைவாதம் என்பது ஒரு தேசிய இனம் ஒன்ற சமூகஒழுங்கமைவின் உள்ள போக்குகளாக அணுகின்றது. இது தனிமனிதர் என்ற மைய நிலையில் இருந்து அணுகும் போக்கிற்கு தலைகீழாக அணுகுகின்றது. இது நவீன கல்வியில் உள்ள அணுகுமுறைப் போக்கு என்பது தனிமனிதர்களின் தன்னுணர்வின் ஒன்றிணைவு என்பதை குறிப்பிட்ட நகரம், பாடசாலை, கிராமம், மத உணர்வுகளை கொண்டு அடையாளப்படுத்த முடியும் என தாராளவாதக் கோட்பாடு முன்வைக்கின்றது. இவ்வாறு நுண் ஆய்வு என்பதும் பருமமான ஆய்வு என்பதும் ஒன்றல்ல. சமூகத்தை நுண்நிலையில் இருந்து ஆய்வு செய்வது கலாசாலை முறைக்கு உட்பட்டதாகும். சமூகம் என்பது வரலாற்று வகைப்பட்ட கூட்டு உணர்வாகும்.
புறநிலை என்பது தனிமனிதர்கள் தாம் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்ற அடிப்படையில் விடயங்களை அணுகுவது இல்லை. சமூக ஒழுங்கமைவு என்பது குடும்பம், குடிகள், இனக்குழுமம், தேசிய இனம் என்று ஒழுங்கமைக்கப்படுகின்றன. சிந்தனா முறை என்பது கருத்துமுதல்வாதமாகும். தலித்துக்களினால் தான் தலித்து இலக்கியம் படைக்க முடியும், உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடையாள அரசியல் போக்கு இந்தக் காலத்தில் சமூகத்தின் முன்னால் வந்தன.
மொழி அடிப்படையில் அமைந்து கொள்கின்ற சமூக அமைவுகள் ஒவ்வொன்றின் சமூக அவசியங்கள் மாறுபட்டே இருக்கும். அவ்வாறு மாறுபட்டிருக்கின்ற போது அவற்றை முன்னோக்கி நகர்த்திச் செல்லதற்கு தத்துவம், கட்சி, செயல்முறை அவசியமாகின்றது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லாது போலிக் செயற்பாடுகளின் ஊடாகவும், வெற்றுப் பேச்சுக்களாலும் திசைதிருப்பது அராஜவாதத்தின் போக்காகும். அராஜவாதமா மார்க்சியமா என்ற கேள்வி எழுகின்றது. ”ஒன்று மற்றொன்றின் நிலையை மறுக்கிறது. எனவே இவற்றுக்கிடையே செயலுக்திகளில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளன என்று சொல்வதற்கில்லை. (313- 1ஸ்) இயங்கியல், பொருளாதாரம், வர்க்க முரண்பாட்டின் குறிப்பான விடயங்கள் தொடர்பாக எதிர்நிலையில் இருந்து செயற்படுகின்றார்கள்.
‘‘அடையாளம் அரசியல் என்பது, எவ்வாறு ஒரு சமுதாயத்தின் விருத்திப் போக்கில் அதனுள் அமைகின்ற பல்வேறு அடையாளங்களை முதன்மைப்படுத்துவது என்பதுடன் காலத்துக் காலம் பொது அடையாளங்களைத் தேடுவது என்பதையும் பற்றியதாகும்.
பௌத்த அடையாளத்தை வலியுறுத்துவதில் வேறுபாடுகளுடன் சிங்களத் தேசிய இன அடையாளம் வலுப்பட்ட காலச் சூழலில், தமிழ் இன அடையாளம் அதன் தலைமையில் இருந்த ஆதிக்கச் சக்திகளான யாழ்ப்பாணச் சைவ வேளாளர் சாதியின் ஒரு மேட்டுக்குடிச் சிறுபான்மையின் நலன்களையொட்டி உருவானது." (149 அசை- சிவசேகரம்)
‘‘The CPIM Draft says, "when political mobilisation is based on Caste, Religion and Ethinicity, it negates the concept of a Working class, which is considered to be only one fragment of identity. In general, it depoliticises the people".
தேசியஇனத்தை அடையாளமாக ஒரு கட்சி கொள்கின்றது எனின் அங்கு கோட்பாட்டுப் பிரச்சனை எழுகின்றது. அடையாள அரசியலை விமர்சிக்கின்ற போதும் மார்க்சியர்களை பொருளாதாரவாதிகள் (பொருளாதாரவாதம்) என்ற கருத்தாடலும் உள்ளது. அடையாள அரசியலை விமர்சிக்கின்ற போது நாம் உற்பத்தி முறையில் மட்டும் அதை சுருக்கிவிடுவதாகவும் கருதப்படுகின்றது.
இதே போல தேசியம் ஒரு கற்பிதம் என்ற கருத்தாக்கம் 1990 களில் எழுந்தது. ஈழப் போராட்டத்தை எதிர்நிலையில் வைத்து எழுந்த கருத்தாக்கம். தேச விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு காலாவதியாகிவிட்டது, மார்க்சின் சமூகக் கட்டம் என்பது சாத்தியமற்றது என்ற போக்கை பின்புலமாகக் கொண்ட கருத்தாக்கம்.
‘‘தேசியம் என்பது, எவ்வாறு ஒரு சிறு உயர்நிலைக் குழுவின் அனுபவத்திலிருந்து குறுகிய அரசியல் தேவைகளுக்கு மேல் பரந்த உலகப் பார்வையாக மாறி வந்துள்ளது” (128 அசை- Anderson)
அன்டர்சனின் கூற்றுப்படி ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசத்தின் மீதான ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு எவற்றையும் கட்டமைக்கக் கூடாது அல்லது தேவையற்றதாகும்.
"அடையாளம் என்று சொல்லுக்கு ஆங்கிலத்தில் Identity என்று பெயர். Identity எனில் தர்க்கவியலில் ஒன்று மற்றொன்றுச் சமம் (A=A) என்று பொருள். நானும் நீங்களும் தமிழர் என்ற வகையில் சமப்படுத்தப்படும் போது, ஒருவகைப்படுத்தப்படும்போது அடையாளம் தோன்றுகிறது. சமன்பாட்டுத் தர்க்கவியல் (the logic of equivalence) என்று இதனை லத்தீன் அமெரிக்க மார்க்சியரான எர்னெஸ்டோ லக்லெள குறிப்பிடுவார். A=A என்று சொல்லும் போது A#B, A#C என்ற உடன் விளைவும் கிடைக்கிறது. அதாவது நான் ஒரு தமிழன் எனில் நான் ஆங்கிலேயன் அல்ல, இந்திக்காரன் அல்ல என்ற உடன் விளைவு கிடைக்கிறது. நான் தமிழன் மட்டும்தான், வேறு எதுவும் அல்ல என்ற விளைவு கிடைக்கிறது. அதாவது அடையாளம் அடையாளப்படுத்தலோடு முற்ற முழுதாக வேறுபடுத்தல் என்ற கருத்தாக்கம் தோன்றும் போதே வேறுபாடு என்ற கருத்தாக்கமும் தோன்றி விடுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். இவ்வகை வேறுபடுத்தலில் வேறுபட்டவை அடையாளத்திற்கு வெளியே நிற்கின்றன. அதாவது தன்னைப் பிறிதொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலே முனைப்படைகிறது. அடையாள அரசியல் தீவிரப்படுத்தும்போது ஒருவரது சொந்த அடையாளம் தவிர்த்த பிறவற்றில் குறிப்பிட்ட ஒன்று பகை அடையாளமாக உருவாக்கப்படுகிறது (16ந. முத்துமோகன்)
இந்தக் கூற்று மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை தீர்மானிக்க முடியும் என்று நம்புகின்றார்கள். அகநிலைவாதம் என்பது தனிநபர் ”நான் யார்” என்ற கேள்விக்கு அளிக்கும் பதில் அடையாளம் சார்ந்ததாக குடும்பம், பாலினம், பிராந்தியம், சாதி, தொழில் குழு, இனக்குழுமம் என்று பன்மை அடையாளங்களாக கொள்கின்றது. ஆனால் மனிதர் பிறப்பிலிருந்து எதுவும் அறிந்து கொள்வதில்லை. சமூகமயப்படுத்தப்படல் பின்னைய காலத்தில் ஏற்படுவதாகும். குடும்பத்துடன் உள்ள அடையாள உணர்வு நெருக்கமானது. அது அடிப்படையில் உள்ள தொடர்பாக கொள்கின்றது. இது மானிவிடல் திறனாய்வு முறையில் உள்ள சிக்கலாகும். மானிடவியல் சமூகத்தினை நுண் (micro scale) அலகில் ஆய்வுக் உட்படுத்துவதாகும். இந்த அடிப்படையில் மானிடவியலார்களான பெனடிக்ற் அன்டர்சன், ஏர்னஸ் ஹெல்லர் போன்றவர்களின் துறைசார்ந்த பார்வை அரசியல் அரங்கில் நுழைக்கப்படுகின்றது. இந்த வரையறையானது தனிமனித மையப் (interactional perspective) போக்கில் இருந்து சமூகத்தைப் அணுகுவதாகும். இந்த அடிப்படையில் தான் மேல் உள்ள அணுகுமுறை அகநிலையாக அணுகப்படுகின்றது. சமூகத்தின் உள்கூறுகளை பிரச்சனையில் மையப் புள்ளியாக்கி விடுகின்றது. தனிமனிதர்களின் உணர்வு நிலை என்பது மனோவியல் சார்ந்ததாகும். உளவியலையும் புறநிலையில் அணுகும் போக்கையும் பின்நவீனத்துவம் குழப்பிவிடுகின்றது.
‘‘தேசிய வரலாற்றுப் -பொருளாதார ரீதியான தத்துவம் மற்றும் உளவியல் ரீதியான தத்துவம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டைக் கூடப் பகுத்துக் காணவில்லை.” (79 Lenin)
தேசிய அடையாளத்திற்கு தனிநபர்களின் எல்லையும், நம்பிக்கையும் முதன்மையானது என்கின்றது. இதுவே தேசியவாத நம்பிக்கை என்று சுருக்கி விடுகின்றது. வரலாற்று வழிவந்த ஒழுங்கமைவு என்பதை ஏற்பதில்லை.
சமூக ஒழுங்கமைவு வரலாற்று ரீதியாக அமைந்து வருவதை கவனத்தில் கொள்ளவில்லை.
அரசியல் ரீதியாக வரையறை என்பது வரலாற்று வகைப்பட்டது.
இது வர்க்கச் சமூகமாக ஆண்டான் அடிமைச் சமூகத்தின் பின்னரான அரச கட்டமைப்பின் வளர்ச்சியில் இருந்து வளர்ந்து வரும் சமூக ஒழுங்கமைவே புறநிலையான வளர்ச்சிப் போக்காகும்.
உற்பத்திச் சக்தி உற்பத்தி உறவினால் தீர்மானிக்கப்படும் இனக்குழுமம்,
தேசிய இனம், தேசமும் அதில் உள்ள வர்க்கமுமாகும்.
ஆனால் பொதுவெளியில் மதம், சாதி, பிரதேசங்கள் என்பது கருத்துமுதல்வாதத்தால் உருவாக்கப்படுவதாகும். அகநிலை என்பதற்கும் புறநிலைக்குமான அடையாளத் தோற்றத்திற்கும் முரண்பாடு உண்டு.
‘‘ஒவ்வொரு தேசியத்தின் வரலாற்றினுள்ளும் அதன் முதலாளிகள் தோன்றுகிறார்கள் என்ற வரலாறு அடங்கியுள்ளது. படிப்படியாகத் திராவிட கட்சிகளின் கொள்கை மற்றும் நடைமுறையின் ஊடாக முதலாளி வர்க்கத் தமிழ் தேசியம் உருவாக்கம் நிகழ்ந்தேறியது. அதாவது அடையாள அரசியலைக் கீழ்நோக்கி நகர்த்தத் தவறினால் அது மேட்டிமைச் சக்திகளால் கைப்பற்றப்பட்டுவிடும் என்ற பாடம் கிடைக்கிறது" (ந.மு)
‘‘இந்த வரிகளிலும் நான் கீழ்நோக்கி/ மேட்டிமைச் சக்திகள் என்ற சொற்களின் மூலம் அடையாள அரசியலை வர்க்க நோக்கில் அணுக வேண்டும் என்பதையே முதன்மைப்படுத்திப் பேசியுள்ளேன். போதாக்குறைக்கு, திராவிட இயக்கத்தின் தமிழ் அடையாள அரசியலை முதலாளி வர்க்கம் முன் கையெடுத்துள்ளது என்பதை வெளிப்படையாகவே எழுதியுள்ளேன்.” (40 ந. முத்துமோகன்)
தேசிய இனப்பிரச்சனை முதலாளிகளுக்கு இடையிலானது என்ற நிலைப்பாடு கொண்டிருந்தார்கள். தேசிய இனச் சிக்கல் வரலாற்றில் கருவியாக பார்க்கப்பட்டது. சுயநிர்ணயம் என்பது முதலாளித்துவக் கட்டத்திற்கானது என்பதில் இருந்து, சுயநிர்ணயம் என்பது சோசலிச கட்டத்திற்கானது என்று வழிகாட்டப்பட்டதாகும். அந்த நிலைமாறி சோசலிசத்தில் தேச அரசுகளின் முக்கியத்துவத்தை பற்றிய வழிகாட்டலும் முக்கியமானதாகும். மார்க்சியர்கள் வந்தடைந்த பாதையை உள்வாங்காமல் இது தான் மார்க்சியம் என்று கற்பிதம் செய்கின்றனர்.
தேசிய இனவரையறையும், தேசத்தினையும் வரையறுப்பது எவ்வாறு என்ற பிரச்சனை இருந்து கொண்டே உள்ளது. மதம், உணர்வுகள் தேசத்தை தீர்மானிக்க முடியும் என்ற கருத்துப் போக்கு இருக்கின்றது. புலக்காட்சி, நம்பிக்கை போன்றவற்றின் அறியும் அடையாளங்களை முன்னிறுத்தும் போக்கு உள்ளது. தனிநபர்களின் அடையாளங்களான சமயம், பண்பாடு, பிராந்தியம், மரபினம் ஒன்றை முதன்மைப்படுத்தலாம், அல்லது இரட்டை அடையாளம் கொண்டும் இருக்கலாம் என்கின்றது. சர்வதேசியக் கலாச்சாரத்தை உருவாக்குவது என்ற அர்த்ததில் தேசியக் கலாச்சாரத்துக்கு விளக்கம் தருவது அகநிலைவாதமே.(28)
தேசிய அடையாளத்திற்கு தனிநபர்களின் எல்லையும், நம்பிக்கையும் முதன்மையானது என்கின்றது. யூதர்களின் மதஅடையாளம் என்பதை பாதுகாக்கும் நோக்கமாக கொண்டே கொண்ட மார்க்சியத்தினை பயன்படுத்திக் கொண்டார்கள். புத்துக்காரர்களால் (ஒஸ்ரிய மார்க்சியார்கள்) அடிக்கடி திரித்துப் புரட்டப்பட்டே வந்துள்ளது. இதனையே தூய வேலைத்திட்டம் என முன்வைக்கப்பட்டது. (52) வரலாற்று வழிவந்த ஒழுங்கமைவு என்பதை ஏற்பதில்லை.
அகநிலைவாதம் என்பது தனிநபர் ”நான் யார்” என்ற கேள்விக்கு அளிக்கும் பதில் அடையாளம் சார்ந்ததாக குடும்பம், பாலினம், பிராந்தியம், சாதி, தொழில் குழு, இனக்குழுமம் என்று பன்மை அடையாளங்களாக கொள்கின்றது. குடும்பத்துடன் உள்ள அடையாள உணர்வு நெருக்கமானது அடிப்படையில் உள்ளதொடர்பாக கொள்கின்றது. இது மானிவிடல் திறனாய்வு முறையில் உள்ள சிக்கலாகும். மானிடவியல் சமூகத்தினை நுண் (micro scale) அலகில் ஆய்வுக் உட்படுத்துவதாகும். இந்த அடிப்படையில் மானிடவியலார்களான பெனடிக்ற் அன்டர்சன், ஏர்னஸ் ஹெல்லர் போன்றவர்களின் துறைசார்ந்த பார்வை அரசியல் அரங்கில் நுழைக்கப்படுகின்றது.
‘‘தேசிய வரலாற்றுப் -பொருளாதார ரீதியான தத்துவம் மற்றும் உளவியல் ரீதியான தத்துவம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டைக் கூடப் பகுத்துக் காணவில்லை.” (79)
இங்குகவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் புறநிலைவாதம் என்பது ஒரு தேசிய இனம் ஒன்ற சமூகஒழுங்கமைவின் போக்குகளாக அணுகின்றது. சமூக பொருளாதார வளர்ச்சிப் போக்கில் இருந்து அணுகுவதாகும். இது தனிமனிதர் என்ற மைய நிலையில் இருந்து அணுகும் போக்கிற்கு தலைகீழானதாகும். நவீன கல்வியில் உள்ள அணுகுமுறைப் போக்கு என்பது தனிமனிதர்களின் தன்னுணர்வின் ஒன்றிணைவு என்பதை குறிப்பிட்ட நகரம், பாடசாலை, கிராமம், மத உணர்வுகளை கொண்டு அடையாளப்படுத்த முடியும் என தாராளவாதக் கோட்பாடு முன்வைக்கின்றது. இவ்வாறு நுண் ஆய்வு என்பதும் பருமமான ஆய்வு என்பதும் ஒன்றல்ல. சமூகத்தை நுண்நிலையில் இருந்து ஆய்வு செய்வது கலாசாலை முறைக்கு உட்பட்டதாகும். சமூகம் என்பது வரலாற்று வகைப்பட்ட கூட்டு உணர்வாகும்.
புறநிலை என்பது தனிமனிதர்கள் தாம் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்ற அடிப்படையில் விடயங்களை அணுகுவது இல்லை. சமூக ஒழுங்கமைவு என்பது குடும்பம், குடிகள், இனக்குழுமம், தேசிய இனம் என்று ஒழுங்கமைக்கப்படுகின்றன. சிந்தனா முறைானது கருத்துமுதல்வாதமாக சமூகத்தில் அமைகின்றது. தலித்துகளினால் தான் தலித்து இலக்கியம் படைக்க முடியும், உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடையாள அரசியல் போக்கு இந்தக் காலத்தில் சமூகத்தின் முன்னால் வந்தன.
தேச வரையறையை தாம் விரும்பியது போல புனைந்து விட முடிகின்றது. தேசம் என்பதும் தேசிய இனம் என்பதும் வேறானது. தேசிய இனம் என்பது முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக ஒழுங்கமைவாகும். மதவழி அடையாளப்படுத்தலை பண்பாட்டுத் தேசியவாதம் என்று வரையறுக்கப்படுகின்றது. இன்றைய வரையறை என்பது அடையாள அரசியலுக்கு உட்பட்டதாகும். ஆனால் தேசத்தின் விடயத்தில் அடையாள அரசியலாக கொள்ள முடியாது.
ஐரோப்பிய நாகரீகத்திற்கும் பல்வேறு தேசங்களுக்கு முன்னோடிகளாக Etruscan, Teutons, Gauls, saxon, Briton போன்ற இனக்குழுக்கள்இருந்திருக்கின்றன. அவர்களின் நாகரீக வளர்ச்சி என்பது பல்வேறு மக்கள் கூட்டத்தினை உருவாக்கிக் கொண்டது. தமிழர்கள் மொழி ரீதியாக இணைகின்ற போதிலும் பலஇனக் குழுமம் சங்ககாலம் வர தொடர்ந்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு முன்னர் இனக்குமங்களான கைம்பர், வில்லவர், எயினர், ஒழியர், தோடர், மறவர், மாறர், தகாசர், குறும்பர், கங்கர், வானரர், நாகர், கரூநாடார், துளுவர், ஆய், விறலியர், இசைவாணர், பாணர், பறையன், துடியன், கைம்பன் என்றும் வேளீர் என்று வாழ்ந்துள்ளார்கள். இந்த இனக்குழுமங்கள் ( (tribals) தொல்குடி வாழ்வியலுக்கு உட்பட்டவர்கள். இந்தக் காலத்தில் தேசிய இனப் பிரிவினை வளர்ந்திருக்கவில்லை.
தேசிய இனம் என்பது இனக்குழும வாழ்வியலின் பின்னர் ஏற்படுகின்ற இணைவு. இது நிலப்பிரபுத்துவத்துடன் தோற்றம் பெறுகின்றது. ‘‘அரச குலம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் அதிகாரப்பிடிப்பை உடைத்து மகத்தான முடியரசுகளை ஸ்தாபித்து; சாரம்சத்தில் இவை தேசிய இன அடிப்படையில் அமைந்தன; இவற்றிற்குள்ளிருந்து தான் நவீன ஐரோப்பிய தேசிய இனங்களும் நவீன முதலாளித்துவ சமூகமும் வளர்ந்து வெளிப்பட்டன.” (9 M&E 65) முதலாளித்துவத்திற்கு முன்னை சமூக ஒழுங்கமைவு நிலமானிய பிற்போக்கு அம்சங்களை கொண்டதாக இருக்கின்றது. இந்த மக்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்திருக்கின்றார்கள். தமிழர்கள் இன்றைய சிங்களப் பகுதிகளில் ஆண்டாண்டு வாழ்வது போலவாகும். அவர்கள் அங்கு வாழ்ந்தாலும் மொழி, வழிபாடு, பண்பாடு போன்றவற்றை காப்பாற்றி வந்திருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடே இன்று அங்கு தமிழர்கள் வசிக்காவிட்டாலும் தமிழர் அடையாளங்கள் அங்கு இருக்கின்றன.
‘‘தேசம் என்பது சரித்திர வகைப்பட்டதாகும். ஆனால் அதை இனவகைப்பட்டதான (Race) பழங்குடியோடு இணைத்து எண்ணிப் பார்த்து” விட முடியாது. மத்திய காலச் சிந்தனை முறையை முன்னிறுத்தும் போக்கு கருத்துமுதல்வாதத்தை முன்னிறுத்துவதாகும். இந்த அடிப்படையில் யூதர்கள் ஒரு தேசமாக இல்லை என்பதையும், அவர்களுக்கு ஒரு பொது மொழி இல்லை என்பதையும், அவர்களுக்கு இருப்பது வாக்களிக்கப்பட்ட பூமி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற மத அடிப்படையாகும். இன்று அவர்கள் தமக்கான மொழியை புத்தாக்கம் செய்துள்ளார்கள். அதுவும் 1948 பின்னராக காலத்திலேயே நடைபெற்றுள்ளது. ஓ. பேர் ``யூதர்களுக்கென்று ஒரு பொது மொழி இல்லாவிட்டாலும் அவர்கள் ஒரு தேசமாக ஆகிறார்கள்‘ என திட்டவட்டமாக கூறுகின்றார்.--- ஆனால் அவரே அதே நூலின் ‘‘சந்தேகத்திற்கிடமற்ற வகையில் பொதுமொழி இல்லாமல் ஒரு தேசமாக இருக்க முடியாது”--- என திட்டவட்டமாக தெரிவிப்பதன் மூலம் தன் கருத்தை தானே மாற்றிக் கொள்கிறார் எனலாம். மனிதர்கள் கலந்துறவாடுவதற்கு மொழி என்பது மிக முக்கியமான கருவி என்று அவர் நிரூபிக்க விரும்பினார். அதே நேரத்தில் அவர் நிரூபிக்க வேண்டுமென்று கருதாத ஒன்றையும் மறைமுகமாக நிரூபித்திருக்கிறார். அவரது கூற்றுப்படி பொதுமொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இதன் மூலம் அரைவது கூற்றையே அவர் பொய்யாக்கி இருக்கிறார். கருத்துமுதல்வாத நூலால் தைக்கப்பட்ட இந்தக் கூற்றானது இவ்வாறு தன்னைத் தானே பொய்யாக்கிக் கொள்கின்றது.” (334-V2 JVS) இந்துத்துவா பேசுகின்ற கற்பனாவாத தேசம்- தேசியம் என்பது கூட மத்திய கால சிந்தனையை புதுப்பிப்பதாகும். மதகுருமார், வணிகர்கள், மேட்டுக்குடி, அதிகார வர்க்கத்தினரின் நலனைக் கொண்டதாகவும் இருக்கின்றது.
‘‘யாவற்றிலும் அதிகமாய் ஒடுக்கப்பட்டும் வேட்டையாடப்பட்டும் வருகிற தேசிய இனத்தவரான யூதர்களுக்கும் இதுவேதான தக்க செயல்முறை. யூதத் தேசிய இனக்கலாச்சரம்- அது யூதக் குருமார்கள், முதலாளிகளது கோஷம், நமது பகைவர்களது கோஷம். ஆனால் யூதக்கலாச்சரத்திலும் ஓட்டுமொத்தமாய் யூத வரலாற்றிலும் பிற கூறுகளும் இருக்கின்றன. உலகிலுள்ள ஒரு கோடி ஐந்து லட்சம் யூதர்களில் ஏறத்தாழ பாதிப் பேர் கலீஷியாவிலும் ருஷ்யாவிலும் வசிக்கிறார்கள். இரண்டும் பிற்பட்ட, அரை நாகரீக நாடுகள்- யூதர்கள் இங்கே பலவந்தமாய் ஒரு தனிச் சாதியாகப் பிரித்துத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை.(30தேபி.பா.வ.ச) (தனிச் சாதி- ghetto - கூட்டு வாழ்க்கை என வாசிக்கவும் – கட்டுரையாளர்)
மதச் சிறுபான்மைச் சிறுபான்மையும் தம்மை தேசிய இனம் எனக் கொள்கின்றார்கள். இவர்களும் சொந்த மொழி அற்றவர்களாக இருக்கின்றார்கள். இவர்களும் தமது அடையாளமாக நிலப்பிரபுத்துவக் கூறிகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு தேசத்தின் ஐக்கியமாவது முதலாளித்துவப் புரட்சியின் ஊடாகவே சாத்தியமாகும். அப்போது தான் ஒட்டுறவு வளர்ந்து பகைமை உணர்வு தீர்க்கப்படும். அது வரையில் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படையில் உரிமை அங்கீகரித்தல் அவசியமாகும்.
இங்கு புத்திஜீவிகள் என்ற பிரிவினர் புதிய புதிய கோட்பாடுகளை முன்னிறுத்துகின்றார்கள். இவர்கள் முதலாளித்துவச் சித்தாந்தத்தின் கீழ்படுத்துவதில் கொண்டு போய் விடுகின்றார்கள். தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், பின்நவீனத்துவம் என்று மார்க்சியத்திற்கு இணையாகவும் நிறுத்துகின்றார்கள்.
கலாசாலையில் கற்பிற்கப்படும் சமூகவியல் கோட்பாடுகள் முதலாளித்துவ பொருள் உற்பத்தியை, சமூகப் போக்கை, வாழ்வியல், அரசியல் நிர்வாக கட்டமைப்பை நியாயப்படுத்தியே படைக்கப்படுகின்றது. கலாசாலை ஆய்வுகளையும் முடிவுகளையும் மார்க்சியத்திற்கு நிகராக முன்னிறுத்தப்படுகின்றது. முதலாளித்துவ கோட்பாடுகளுக்கு மாற்றானதே மார்க்சியம். மார்ச்சியம் இந்த சமூக பொருள் உற்பத்தி, சமூக அமைப்பிற்கு மாற்றாக புதிய சமூகத்தைப் படைப்பதாகும். ஆகவே மார்க்சிய சிந்தாந்தத்திற்கு புறம்பான கோட்பாடுகளை மார்க்சியத்துடன் ஒப்பிடாதீர்கள். கட்சியின் கண்ணோட்டத்தில் இருந்து தான் தோழர்கள் லெனின், ஸ்ராலின் போன்றவர்கள் கோட்பாடுகள் படைத்துள்ளார்கள். கட்சி நிலைப்பாடும் கலாசாலை கண்ணோட்டமும் ஒன்றாக முடியாது.
ஏனெனில் ‘‘உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்தரமான சித்தாந்த்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கிடமில்லை. ஆதலால் ஒன்று தான் தேர்ந்தெடுக்க உண்டு- முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோசலிச சித்தாந்தம், என்று. நடு வழி ஏதும் கிடையாது (ஏனெனில் மனித குலம் ஒரு ”மூன்றாம்” சித்தாந்தத்தைப் படைக்கவில்லை; மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மை அற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது.) சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், இதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துச் சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருள். (62 எ.செ.வே)
கலாசாலை திறனாய்வு முறைக்கு மாற்றாக மார்க்சியம் முன்னிறுத்தும் அடிப்படை இயங்கியல் பொருள் முதல்வாதமாகும். கலாசாலை ஆய்வாளர்களே தோழர் ஸ்ராலினுடைய வரையறையை புறநிலைவாதம் என ஏற்கின்றனர். புறநிலைவாதம் என்றால் விஞ்ஞானம், பொருளாதாரம், வர்க்கப் போராட்டத்தை உள்ளடக்கிய அணுகுமுறைப் போக்காகும்.
1. கட்சித் திட்டம்
”தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (ரு.ச.ஜதொ.கட்சியினது செயல்திட்டத்தில் 9 வது பிரிவு), அதாவது, அரசியல் ரீதியில் பிரிந்து போகும் உரிமை, மகாநாட்டின் தீர்மானம் இக்கோரிக்கையைதம் தவறாகப் புரிந்து கொள்ள இடமே இல்லாதபடி மிகவும் விபரமாக விளக்கிக் கூறி காரணம் காட்டுகின்றது. (ப11) இலங்கையில் கட்சிகள் (ஜேவிபி, முசோக தவிர) பெயரளவில் சுயநிர்ணயத்தை திட்டத்தில் வைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் எவரும் அரசியல் ரீதியில் பிரிந்து போவது பற்றிய கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.
கட்சியில் திட்டம் இருப்பது மாத்திரம் போதாது அதற்குப் போராட வேண்டும். சுயநிர்ணயத்திற்காக போராட அமைப்புக்களிடம் செயற்திட்டம் எதுவும் இருக்கவில்லை.
திரிபுவாதிகள் கட்சியில் இடம் பிடிக்கும் போது கட்சி கீழ் நிலைக்குச் செல்வது தவிர்க்க முடியாதது. 1964களில் நடைபெற்ற பன்னாட்டு அளவில் நடைபெற்ற ‘மாபெரும் விவாதம்‘‘ இதில் ஈடுபடக் கூடிய முன்னேறிய அரசியலைக் கொண்டவர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பதை நடைமுறையின் ஊடாகவே அறியமுடியும். அந்தக் காலத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பற்றி எழுதியிருப்பது தமிழ் பரப்பில் தோழர் சண்முகதாசன் மட்டுமேயாகும். மற்றையவர்கள் மூன்றுலகக் கோட்பாட்டை ஆதரிப்பவர்களாக இருந்துள்ளார்கள். இலங்கைப் பரப்பில் திரிபுவாதிகள் அன்றே வெளிப்பட்டார்கள்.
சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாக, வெள்ளாளியமாக திரிக்கப்படுகின்றது. முதலாளித்துவ கட்டத்தில் பிரிந்து செல்ல முடியும் என்பதை கீழே உள்ள வழிமுறை காட்டுகின்றது. ‘‘ சுயநிர்ணய உரிமை என்றால், எனது அன்புமிக்க கலைப்புவாதத் திருவாளரே, ஒரு மத்திய பாராளுமன்றத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அர்த்தம் இல்லை,. பிரிந்து போகும் சிறுபான்மையினருடைய பாராளுமன்றத்தில் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கிடையில் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பது தான் அர்த்தம். ஸ்வீடனிலிருந்து நோர்வே பிரிந்த பொழுது (1905) நோர்வே மட்டும் தான் அதை முடிவு செய்தது. ( ஸ்வீடனின் பரப்பளவில் பாதிதான் நோர்வே).
திரு. செம்கோவ்ஸ்கி மிக மோசமாகக் குழப்பிப் போயிருக்கிறார் என்பதை ஒரு குழுந்தை கூட அறிய முடியும்.
எந்த அமைப்பில் பொதுவான ஜனநாயகம் நிலவுவது மட்டும் இன்றி, சிறப்பாக பிரிந்து போவது பற்றிய பிரச்சினைக்கு ஜனநாயகம் அற்ற தீர்வு இருக்கவே முடியாதோ அத்தகைய ஜனநாயக அமைப்பையே ‘‘ சுயநிர்ணய உரிமை‘‘ குறிக்கிறது. ஜனநாயகம் என்பது, பொதுவாகச் சொல்லப் போனால், சண்டை போடும் குணமுள்ள, ஒடுக்கும் தன்மையுள்ள தேசியவாதத்துக்கும் இயைந்ததாகும். அரசின் எல்லைகளுக்குள் எந்த ஒரு தேசிய இனத்தையும் பலவந்தமாகப் பிடித்து வைத்திப்பதை அறவே ஒதுக்கிவிடும் ஒரு ஜனநாயகம் வேண்டுமென்று பாட்டாளி வர்க்கம் கோருகிறது. எனவே,‘‘ சுயநிர்ணய உரிமையை மீறாமல் இருக்கும் பொருட்டு‘‘, தந்திரக்கார திரு செம்கோவ்ஸ்கி நினைப்பது போல‘‘ அல்ல, பிரிந்து போகும் பிரதேசமானது தானே அப்பிரச்சினையை முடிவு செய்து கொள்ளும் என்ற உரிமைக்குச் சாதகமாக வாக்களிப்பதே நம்முடைய கடமை.
‘விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை‘‘ என்றால் அதற்கு விவாகரத்தை ஆதரித்து ஒருவன் வாக்களிக்க வேண்டியதில்லை என்ற விஷயத்தைப் புரிந்து கொள்வது திரு செம்கோவ்ஸ்கியின் புத்திசாலித்தனத்தால் கூடக் கடினமானதல்ல் என்று தோன்றுகிறது! ஆனால் பிரிவு 9 ஐத் தாக்கிப் பேசும் மனிதர்களின் கதி இதுதான்- அவர்கள் தர்க்க சாத்திரத்தின் அரிச்சுவடியைக் கூட மறந்து விடுகிறார்கள். ‘‘ (13-4)
விவாரத்துக்கு இணையாக சுயநிர்ணயத்தை பேசுவதை கட்சிகள் கடந்து செல்கின்றார்கள். இதற்கு தமக்கு தேவையான வியாக்கியானம் செய்கின்றார்கள். சுயநிர்ணயம் பற்றிய நிலைப்பாட்டில் மாற்றத்தை முன்வைக்கின்றார்கள்.
சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் சுயநிர்ணயம் முக்கியமானது என்கின்றார். தோழர் ஸ்ராலின் அகிலத்தில் வழிகாட்டுகின்றார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே மதிப்பிட்டிருந்த நிலைக்கு மாற்றாக பாட்டாளி வர்க்க, சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறுகின்றார். இது அகிலத்திற்கான வழிகாட்டலாகும்.
‘‘மார்க்சியமும் தேசியப் பிரச்சனையும்‘ Marxism and the National Question) என்ற பிரசுரத்தின் ஒரு பகுதியை செமிச் மேற்கோள் காட்டுகின்றார்கள். ”முதலாளித்துவம் பலம்பெற்று வரும் சூழ்நிலையில் நடக்கின்ற தேசியப் போராட்டமானது, முதலாளி வர்க்கங்களுக்கு இடையே நடக்கின்ற போராட்டமே” என ஸ்ராலின் கூறுகின்றார். ஸ்டாலினின் இக் கூற்றைச் சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கும் செமிச், தேசிய இனங்களின் போராட்ட இயக்கத்தின் சமூக முக்கியத்துவதைதை வரையறுக்கின்ற தனது வாய்ப்பாடு, இன்றைய வரலாற்றுச் சூழலின் அடிப்படையில் சரியானதே என நிறுவு முயல்கின்றார். ஆனால் ஸ்ராலின் அப்பிரசுரம் ஏகாதிபத்தியப் போருக்கு முன்னதாக எழுதப்பட்டதாகும்; அன்றைய சூழலில், தேசிய இனங்களின் பிரச்சனையை உலக முக்கியத்தும் வாய்ந்த ஒரு பிரச்சனையாக மார்க்சியர்கள் மதிப்பிட்டிருக்கவில்லை; மார்க்சியர்களின் அடிப்படைக் கோரிக்கையான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை., மாறாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே மதிப்பிடப்பட்டிருந்தது ஏகாதிபத்தியப் போருக்குப் பின்னர் சர்வதேசச் சூழலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும், ஏகாதிபத்தியப் போர் ஒருபுறம்- ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி மறுபுறம் இரண்டும் சேர்ந்து, தேசியப் பிரச்சனையை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலையிலிருந்து மாற்றி, இது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலைக்கு கொண்டு சென்றதையும் காணமறுப்பது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று. 1916 அக்டோபரிலேயே, லெனின் தனது ‘சுயநிர்ணய உரிமை மீதான விவாதங்களை தொகுப்பு‘ (The Discussion on Self- Determination) என்ற கட்டுரையில், சுயநிர்ணய உரிமை என்பது பொதுவான ஜனநாயக இயக்கத்தின் பகுதிதான் என்ற நிலை இன்மேலும் இல்லை, அது பொபதுவான பாட்டாளி வர்க்க, சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியான மாறிவிட்டது என்று கூறுகின்றார். தோழர் ஸ்ராலின் 247-8-தொ7) முன்னர் வந்தடைந்த நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் பெறுகின்றார்கள். இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டவாதத்தினுள் விடைதேடும் கனவான்களே சுயநிர்ணயம், தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு அரசியமைப்புக்குள் இல்லை என்பதை அறியுங்கள். அது தேச அரசுகள் அமைவதன் ஊடாக தீர்க்கப்படுகின்றது.
”தேசியக் கேள்விக்கான (பிரச்சனை) தீர்வை அரசியலமைப்புச் சார்ந்த ஒரு விசயம்- அதாவது அது புரட்சி சார்ந்த ஒரு கேள்வி அல்ல, சீீர்திருத்தம் சார்ந்த ஒரு கேள்வியே என்று தான் லெனின் மதிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் தவறு. அரசியலமைப்புச் சட்டம் சார்ந்து லெனினுக்கு எப்போதும் எந்தவித மயக்கமும் இருந்ததில்லை, இருந்திருக்கவும் முடியாது. அவரது படைப்புகளை பயின்றால் இதுபற்றித் தெளிவாகத் தெரியும். அரசியலமைப்புச் சட்டம் குறுித்து லெனின் பேசியிருப்பார் எனில், தேசியக் கேள்வி குறித்த பிரச்சனைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக அல்ல, புரட்சிகர வழியிலேயே தீர்வு காணமுடியும் என்பதே அவரது முடிவாக இருந்திருக்க முடியும். அதாவது அரசியலமைப்புச் சட்டம் என்பது புரட்சியின் வெற்றியின் விளைவாக உருவாகக் கூடிய ஒன்று என்பதுதான் அவரது மதிப்பீடு.”(86- தொ7-ஸ்)
சுயநிர்ணயத்தை ஆதரிப்பது என்பது ஒருபுறுமிருக்க போராடும் தலைமை அல்லது முன்னணி வகிக்கும் சக்திகளை அடிப்படையாக சுயநிர்ணயம் பற்றிப் பேசிட முடியாது. ‘‘ஜனநாயக முறையிலான வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றால் கீழ்கண்ட இரண்டில் ஒன்று நடக்க் கூடும். ஒன்று, பிற்போக்குவாதிகளின் முடிவு அமுலாக்கப்பட்டு, அதன் தீய விளைவுகளால் மக்கள், ஜனநாயகத்தை நோக்கியும் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் அநேகமாககச் சென்று விடுவார்கள்; அல்லது ஜனநாயகத்திற்கும் பிற்போக்குக்கும் இடையிலான போராட்டம் ஒரு உள்நாட்டு போர் அல்லது வேறு ஒரு போரினால் முடிவுமுடிவு கட்டப்படும். (15 ) பூர்சுவாக்களுக்கு துணை போவது என்பதால் எதிர்ப்பது. இதனால் சுயநிர்ணயத்தை மறுத்துவிட முடியாது.
பொதுசன வாக்கெடுப்புக் கோரல்
நோர்வே நாட்டில் இருந்து 1885- 1914 காலப்பகுதியில் அமெரிக்காவிற்கு பொருளாதார அகதிகளாக மக்கள் சென்றுள்ளார்கள். அந்தக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது இல்லை. அங்கு வேலையற்றவர்கள் அதிகமாக இருந்தார்கள். இந்தப் காலப்பகுதியில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப் பட்டு சுவீடனுடன் நோர்வே இணைந்திருப்பதா இல்லை என்ற நோர்வே மக்களிடம் முடிவு கேட்கப்பட்டது.
இன்றையக் காலத்தில் கியூபெக், ஸ்கொட்லாந்து தன்னிச்சையாக பார்ஸ்க் மக்கள் பொதுசனவாக்கெடுப்பு நடத்தினார்கள். சுயநிர்ணயம் என்பதே பிரிந்துபோய் தனியரசு அமைப்பது இதுதான் லெனின் கூறுவது. பின்னர் கூட்டாட்சி உருவாகலாம் ஆனால் முதலில் தனியே போய் வாழ விருப்பினால் வாழ விடு என்பதேயாகும். மணவுறவிற்கு உதாரணமாக காட்டுவார் லெனின். அவர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை. மாறாக இனவாதம் பேசுவதாக 76களில் இருந்து பேசிவருகின்றார்கள். 2009 இனவழிப்புடன் ஈழம் மீளவும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. இந்த நிலையில் சேர்ந்திருப்பதா இல்லையா என்பதை தேர்தலின் ஊடாக தீர்மானிக்கும் படி ஏன் கோர முடியாது??
கட்சியின் வரலாறு, செயற்திட்டத்தில் பிளெக்னேவ் சுயநிர்ணய உரிமையை விசேடமான விடயமாக்கினார். ‘‘இந்தக் கோரிக்கையானது தத்துவ ரீதியில் கூட பூர்சுவா ஜனநாயகவாதிகளுக்குக் கட்டாயமானதல்ல,. ஆனால் சமூக – ஜனநாயகவாதிகளாகிய நமக்கு இது கட்டாயமானது. நாம் இதைப் பற்றி மறந்து விடுவோமேயானல், அல்லது மாருஷ்ய இனத்தைச் சேர்ந்த நமது சகதேசத்தவர்களது தேசிய இனக் காழ்புக்களை எங்கே தாக்கித் தூண்டிவிடுவோமோ என்ற பயத்தினால் இக்கோரிக்கையை முன்வைக்க நாம் அஞ்சினால், ‘உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்‘ என்ற உலக சமூக- ஜனநாயகவாதிகளின் போர்க் கோஷம் வெட்கக் கேடான ஒரு பொய்யாக நமது வாயிலிருந்து ஒலிக்கும்.‘‘ (16 ) 43 சதவிகிதமான மாருசியர்கள் வாழும் நாட்டில் மிகுதி தேசங்கள் ஒடுக்கப்பட வேண்டுமான கேள்வியை லெனின் முன்கின்றார்.
இலங்கையில் இன்னும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடந்து முடியவில்லை. ஆனால் பொ. கட்சிகள் என்பன கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு வாதம் முதலாளிகளுக்கு உதவுகின்றார்கள் என்பார்கள்.
‘‘ பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடந்து விட்டது என்று கலைப்புவாதிகள் மட்டும் தான் கருதுகிறார்கள். உலகம் முழுவதிலும் அத்தகையதொரு புரட்சியின் உடனடுத்த நிகழ்ச்சியாக இருந்தவையும் இருப்பவையும் தேசிய இன இயக்கங்களே.” (16)
‘‘ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது ‘‘ மிகக் கடைக்கோடி பூர்சுவா தேசியவாதத்திற்கே‘‘ உதவுகிறது‘‘ என்று நமக்கு திரு செம்கோவ்ஸ்கி உறுதியாகக் கூறுகிறார். இது சிறுபிள்ளைத் தனமான மடமை. ஏனென்றால், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரச்சாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது பூர்ஷ்வா தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையோ சற்றும் விலக்கிவிடாது. மாறாக பிரிந்து போகும் உரிமையை மறுப்பது தான் மிகக் கடைக்கோடி மாருஷ்யக் கறுப்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு ‘உதவுவதாகும்‘ என்பது சிறிதும் மறுக்க முடியாத உண்மை!‘‘ (15) (ரோசாலுக்சம் பர்க் இவ்வாற கருத்தை கொண்டிருந்தால் ஏளனம் செய்யப்பட்டார்.
தேர்தலின் ஊடாக போலந்து பிரிந்து போக முடிவெடுத்தால் நாம் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியையும் கேட்கின்றார் தோழர் லெனின் (12)
‘‘ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்சுவா தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தினால் சில ஆட்கள் ஒடுக்கும் பூர்சுவா இனத்தின் தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுபு்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு உதவி விடுகிறார்கள்‘‘ (15)
இதேவேளை பிரிந்து போன பின்னர் பிற்போக்கு முகாமிற்கு சென்றால் (14-15) மீளவும் உள்நாட்டுப் போரினால் முடிவுகட்டப்படும். ஜனநாயகத்திற்கும் பிற்போக்குக்கும் இடையே போராட்டம் நடைபெறும் என்கின்றார். ஆனால் இந்திய- இலங்கை வாய்ப்பாட்டார்கள் முன்முடிவு எடுக்கின்றார்கள்.
தமிழினவாதம், யாழ் சைவ வேளாளம் என்றே தேசிய ஒடுக்குமுறையில் எழுந்த எழுச்சியை இன்றுவரைக்கும் திரிபுவாதிகள் வரையறுத்துக் கொள்கின்றார்கள். சிங்கள சோவனிசத்திற்கு உதவிடுபவர்கள். இனமதகுலமற்று வர்க்கமாக போராடுவோம் என்பது இருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை புரிந்து கொள்ளாத போக்கேயாகும்.
வர்க்கப் போராட்டம் என்பது இவர்களின் மொழியில் பொருளாதாரப் போராட்டம். மாறாக ஆனால் வர்க்கப் போராட்டத்தில் அரசியல் விடுதலை பற்றிப் பேசத் தயாராக இல்லை.
பொருளாதாரவாதத்திற்கு பலியாகிப் போன மரபாந்த இடதுசாரிகள் தேசியப் போராட்டத்தை துடக்காகவே பார்க்கின்றார்கள். தோழர் மாவோ பொதுவுடமைவாதிகளாக இருக்கின்ற வேளையில் தேசபக்தர்களாகவும் இருக்க வேண்டும் என்கின்றார்.
”Earlier, the bourgeoisie, as the heads of nations, were for the rights and independence of nations and put that "above all." Now there is no trace left of this "national principle." Now the bourgeoisie sell the rights and independence of their nations for dollars. The banner of national independence and national sovereignty has been thrown overboard. Without doubt, you, the representatives of the communist and democratic parties must raise this banner and carry it forward if you want to be patriots of your countries, if you want to be the leading powers of the nations. There is nobody else to raise it.
- J.V. Stalin, Speech of the 19th Party Congress of the Communist Party of the Soviet Union, 14 October, 1952
முன்னதாக, முதலாளித்துவம், நாடுகளின் தலைவர்களாக, நாடுகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக இருந்தது, அதை "எல்லாவற்றிற்கும் மேலாக" வைத்தது. இப்போது இந்த "தேசிய கொள்கையில்" எந்த தடயமும் இல்லை. இப்போது முதலாளித்துவம் தங்கள் நாடுகளின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் டாலர்களுக்கு விற்கிறது. தேசிய சுதந்திரம் மற்றும் தேசிய இறையாண்மையின் பதாகை கப்பலில் வீசப்பட்டுள்ளது. நீங்கள், கம்யூனிஸ்ட் மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த பதாகையை உயர்த்தி, உங்கள் நாடுகளின் தேசபக்தர்களாக இருக்க விரும்பினால், நீங்கள் நாடுகளின் முன்னணி சக்திகளாக இருக்க விரும்பினால் அதை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதை உயர்த்த வேறு யாரும் இல்லை. (google translate)
- ஜே.வி.ஸ்டாலின், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 வது கட்சி காங்கிரசின் உரை, 14 அக்டோபர், 1952
தேசிய இனப்பிரச்சனை, ஏகாதிபத்திய எதிர்ப்பில் அமைந்த தேசியவாதம் என்பவற்றை நாசீசம், நிறவெறி, சியோனிசம், சிங்கள பௌத்த பேரகங்காரம் என்பவற்றுடன் போட்டுக் குழப்புபவர்கள் பொதுவெளியில் உண்டு.
2. விமர்சனக் குறிப்பு
மார்க்சிய லெனினியவாதிகள் கட்சித் திட்டத்தில் சுயநிர்ணயம் உள்ளடக்கப்பட வேண்டும். சுயநிர்ணயத்திற்கு எதிராக லெனின் காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
- மொழிப் பிரச்சனை
மொழிப்பிரச்சனை குறித்து சிங்கள பேரினவாத போலி இடதுகள் ஒரு பக்கம். தமிழ் பேசும் இடதுகள் எனப்படுவோர் மொழிப் பயன்பாட்டில் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல், அரசியல் உரிமை சார்ந்த பிரச்சனைகளில்
சுவீஸ் நாட்டினை உதாரணம் காட்டி மொழிச் சுதந்திரம் ஒன்றும் எதிர்மறையாக எதனையும் சமூகத்தில் ஏற்படுத்த முடியாது என்கின்றார். தேசிய இனங்களிடையே பிற்போக்கான சிந்தனையை உருவாக்கி விட முடியாது. இதே போல பெருந்தேசிய மொழியை பூர்சுவா, சாத்தியவாதிகள், மிதவாதிகள் பிற்போக்கு ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து ஆளும் வர்க்கத்துடன் சமரசமாகுவதிலேயே இலக்காக இருப்பார்கள்.
முரணற்ற ஜனநாயகம் என்று பேசுவதற்கான அர்தத்தை தெரியாமலே ஒப்பிப்வர்கள் இருக்கின்றார்கள். இலங்கை என்ற நாட்டில் வர்க்கங்களின் ஓடுக்குமுறைக்கான பொதுவான இலக்கில் இருந்து வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்கின்றார்கள்.
சிங்கள வகுப்புக்களை உருவாக்கி தாம் இனமதகுலமற்ற ஜீவகாரூண்யாவாதிகளாக தம்மை நிலைப்படுத்துவதை நியாயமான போக்காக் காட்டப்படுகின்றது.
‘‘மிதவாதிகள் எல்லா அரசியல் பிரச்சனைகளையும் எப்படி அணுகுகிறார்களோ அதே விதத்தில் தான் மொழிப்பிரச்சனையையும் அணுகுகிறார்கள்- அதாவது, சாமர்த்தியமாகப் பேசிச் சரக்கை விற்கும் கபட வேடதாரிகளைப் போல் ஒரு கையை (பகிரங்கமாய்) ஜனநாயகத்திடம் தருகிறார்கள், இன்னொன்றை (முதுகுக்குப் பின்னால் ) பிரபுத்துவவாதிகளிடமும் பொலீசிடமும் தருகின்றார்கள்.” (22)
மொழிப் பிரச்சனையில் பொருளாதார விதி என்பது பரிவர்த்தனையின் பொருட்டு வர்த்தக மொழியை வளர்த்துக் கொள்ளும். ஆனால் பலவந்தமான திணிப்பு ஜனநாயக வளர்ச்சியை தடைசெய்யும் என்பதை லெனின் வலியுறுத்துகின்றார். இங்கு முரணற்ற ஜனநாயகம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேசிய இனத்தின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியமான விதி பற்றியதை தவிர்த்துவிட்டு பேரினவாதத்துக்கு மகுடியாக மொழிக் கொள்கை உடைய கொள்கை முன்னிறுத்துவது பிற்போக்குத் தனமாகும். இது தனிமனிதர்கள் தமது தேவைக்காக பலமொழி கற்றுக் கொள்வார்கள். ‘‘இந்நாடு- எதற்காக ஒரு மொழி மட்டும் எந்த விதமான தனியுரிமையும் பெற்றிருக்கும் நிலைமையப் பாதுகாத்துத் தனது வளர்ச்சிக்குத் தடையமைத்துக் கொள்ள வேண்டும்? மிதவாதக் கனவான்களே , நேர் மாறான முறையில் முறையில் அல்லவா அது செயற்பட வேண்டும்‘‘ (21) சிங்கள பௌத்த பேரினவாதம் பேசுபவர்கள், நாட்டுப் பற்றாளர்கள் என்கின்றார்கள். ஒரு மொழிக்கு மட்டும் சலுகை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியை தடைசெய்கின்றார்கள்.
இதில் ஒரு பகுதி சிங்களம், இன்னொரு பகுதி இந்தி கற்கவில்லை என்று தனிமனித ஆதங்கத்தை அரசியலாக முன்னெடுக்கின்றார்கள்.
தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
‘‘ தேசிய இனப்பிரச்சினை குறித்துச் சொற்பனும் அறிந்தவர் எவரும் சர்வதேசிய கலாச்சாரம் என்பது தேசிய இனமல்லாத கலாச்சாரம் (தேசிய இன வடிவம் இல்லாத கலாச்சாரம்) அல்ல என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள். தேசிய இனமல்லாத கலாச்சாரம் என்பது ருசிய, யூத அல்லது போலிஷ் கலாச்சாரமாக இருக்க முடியாது. தூய கலாச்சாரமாக மட்டுமே இருப்பது, ஆகவே அபர்த்தமாக இருப்பது, சர்வதேசியக் கருத்துகள், தொழிலாளி பேசுகிற மொழிக்கும் தொழிலாளி வாழ்கிற ஸ்தூலமான தேசிய இன நிலைமைகளுக்கும் ஏற்றவையாக இருக்கும் போது மட்டுமே, தொழிலாளி வர்க்கத்தை ஈர்ப்பனாக இருக்க முடியும், தொழிலாளி அவரது தேசிய இனக் கலாச்சாரத்தின் நிலைமை குறித்தும் வளர்ச்சி குறித்து கருத்தில்லாதவராக இருக்க் கூடாது, ஏனென்றால் தேசிய இனக் கலாச்சாரத்தின் மூலம் தான், அதன் மூலம் மட்டும் தான் அவர் ‘ஜனநாயகத்தின், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரத்தில்‘ பங்கெடுத்துக் கொள்ள முடிகிறது. இது எல்லோரும் அறிந்ததே‘‘‘ (25-6) லெ)
இவ்வாறு திரிபுவாதிகள் மென்மையாக கூறி தேசிய இனப் போராட்டங்களை மடைமாற்றுகின்றார்கள். லெனின் தூய தேசிய இனக் கலாச்சாரம் பேசுவாத மடைமாற்றுகின்றனரோ மேற்கண்டவாறே நயமாக பேசுகின்றார்கள். இவர்கள் தேசிய இனமற்ற, வர்க்கங்கள் அற்ற ஒரு பண்பாடு இருப்பதாக கருதிக் கொள்கின்றார்கள். இதில் தொழர் லெனினை தேசியவாதி என்றோ, தேசிய வெறியர்கள் என்றோ அழைப்பார்களானாலும் ஆச்சரியமில்லை.
சமூகக் கட்டத்தை கடப்பதற்கான போராட்டம் என்பது பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல வேண்டியது. இதில் குறுக்குவழியில் எதுவும் அடைந்து விட முடியாது என்பதை ஈழத்து தமிழ் இடதுசாரி என்று சுயதம்பட்டம் அடிப்பவர்கள்.
இனமதகுலமற்று ஒன்றிணைவோம் என்பது தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கின்ற போது சாத்தியமற்றது. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை முறையும் ‘‘முதலாளி வர்க்கத்தின் தேசிய இனக் கலாச்சாரம் கண்கூடான உண்மை ஆகும் (தவிரவும் முதலாளி வர்க்கம் எங்கும் நிலப்பிரபுக்களோடும் சமயக் குருமார்களோடுமம் உடன்பாடுகள் செய்து கொள்வதைத் திரும்பவும் குறிப்பிடுகிறேன்.) ஆக்கிரமிப்பு வாய்ந்த பூர்சுவா தேசியவாதமானது, தொழிலார்களை முதலாளி வர்க்கத்தாருக்கு அடிபணிந்து நடக்க வைப்பதற்காக அவர்களை மதிமயங்கச் செய்கிறது, அசட்டு ஏமாளிகளாக்குகிறது, ஒன்று சேராதவாறு பிளவு படுத்துகிறது- இதுதான் இக்காலத்தின் அடிப்படை உண்மை. (28) இந்தப் பகுதியில் சில விடயத்தை கவனிக்க வேண்டும்.
பூர்சுவாப் பண்பாடு என்பது இருக்கின்றது. உழைக்கும் வர்க்கத்திற்கான பண்பாட்டை விட மாறுபட்டதாகும். இதற்கு மாற்றாக புதிய பண்பாட்டைட உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதப் பண்பாடும் பூர்சுவா சமூகக் கட்டமைப்பை பாதுகாப்பது தான். சமூக உறவு என்பது உற்பத்தி முறை மாற்றத்தின் ஊடாகவே உழைக்கும் வர்க்கத்திற்கான பண்பாட்டை வளர்த்தெடுக்க முடியும். யூதர்கள் மொழியற்ற மக்கள் இதனால் மற்றைய தொழிலாளி வர்க்கத்துடன் இணைவது முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் இயல்பாக நடைபெற முடியும்.
(தமிழ் சூழலில் சனாதவ செலுத்தும் பிற்போக்கு தனத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கின்றது. சாதியும், மதமும் பிணைந்திருக்கும் பிற்போக்குப் பண்பாட்டு எதிர்த்து விழிப்புணர்வுக் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். சமூகத்தில் உள்ள அகமுரண்பாடுகளை சுட்டிக் காட்டியே தேசியப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது சமூக வளர்ச்சிப் போக்கிற்கான அவசியத்தை புரிந்து கொள்ளாமையாகும்.
-----
சிந்தனைக் கட்டமைப்புப் பற்றி
‘‘பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்கத் தேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோஷங்களாகும். இவை முதலாளித்துவ உலகம் முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து, தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைளின்(இல்லை இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாய் விளங்குகிறவை. ‘‘ (31-2)
ஒரு தேசிய இனத்தில் இரண்டு வகை கலாச்சாரம் இருக்கின்றன. ஒன்று அரைநிலமானிய- பூர்சுவா வர்க்கத்திற்கானது, உழைக்கும் மக்களுக்கானது. இதை ‘‘ இதே கலாச்சாரங்கள்‘‘ (40) இருக்கின்றன. முதலாளித்துவப் புரட்சி அடையாத நாடுகளில் இயல்பானவையே. ‘‘ தமிழினவாதத்தில் இருந்து சிந்திக்கின்ற தேசியவாதமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே எப்பொழும்- எங்கும் சிந்திக்கின்றது, செயற்படுகின்றது. ‘‘
இவ்வாறான தத்துவ முத்துக்களை மார்க்சியவாதிகளிடம் இருந்து பெற்றிட முடியாது. ஆனால் மார்க்சியவாதிகளாக பிரகடனப்படுத்துபவர்களிடத்தில் இருந்து தான் மேல் உள்ள வந்துள்ளது.
ஒன்று கலத்தல்
தமிழர் தேசங்களில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவது ஒரு பக்கமும், மேற்கு கரையோரங்களில் வாழும் மக்களின் கல்வியை தம் சொந்த மொழியில் கற்ற முடியாது.
சோசலிசப் புரட்சிக்கான கட்டங்கள் நீண்ட வர்க்கப் போராட்டத்தின் மூலம் நடைபெறுவதாகும்.
இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தேசிய இனப்பிரச்சனை என்பது பிரதான முரண்பாடாக இருக்கின்றது. தோழர் லெனின் பேசுகின்ற ஒன்று கலத்தல் என்பது பாட்டாளி வர்க்க உணர்வின் ஊடாக பாட்டாளி வர்க்க உணர்வைப் பெறுவதாகும். தேசிய இனங்கள் முதலாளித்துவ வளர்ச்சியில் தேசத்தின் அதிகாரம் பற்றிய நிலைப்பாட்டிற்கு வருவார்கள். இதனை எவ்வாறு மார்க்சியர்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்று லெனின் வழிகாட்டுகின்றார். ‘’வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப்பிரச்சனையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று- தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா விதமான தேசிய இன ஒடுக்குறைக்கும் எதிராய் போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும், இரண்டாவது - எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப்பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின் பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல் விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும் இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகம் தழுவிய விதியாகும். முன்னது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது முதிர்ச்சிடையடைந்து சோசலிச சமுதாயமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும். (ப.32 -)
மேல் உள்ள மேற்கோளை நிதிமூலதனத்தின் விரிவாக்கம், திறந்த சந்தை, கட்டற்ற சேவை, பண்ட பரிமாற்றத்தை முன்னெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. இந்தப் பகுதி தேச அரசுகள், பண்பாட்டுத் தேசியவாதத்தின் தன்மை பற்றிப் பேசப்படுகின்றது. சொந்த மொழி அற்ற தேசிய இனங்களின் இணைவுபற்றிப் பேசப்படுகின்றது. தேசத்திற்கான பண்பைக் கொண்ட தேசிய இனங்கள் அரசை நிறுவுகின்றார்கள் என்றே நூல் முழுக்கப் பேசப்படுகின்றது. அரசு பற்றிய பிரச்சனையில் மூலவர்கள் என்ன நிலைப்பாடு எடுக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ‘‘கூட்டாச்சி என்பது பல்வேறு தேசங்களின் உழைக்கும் மக்களின் பூரண ஒற்றுமைக்கான ஒரு இடைக்கால வடிவமாகும்” (லெ9 தே.நூ 13) இந்தக் கூற்றானது புரட்சிக்குப் பின்னைய அகிலத்தில் வழிகாட்டலுக்கான உரையாகும். தேச அரசுகள் பொதுவுடமைச் சமுதாயத்தில் தான் அரசும் உதிர்ந்து போகின்றது என்கின்றார்கள்.
பாட்டாளிகளை இனகுலமாக பிரிக்கின்றார்கள் என்பவர்களுக்கு ‘‘மாருஷ்யத் தொழிலாளர்களும் உக்ரேனியத் தொழிலாளர்களும் இப்படி ‘‘ஒன்று கலத்தல்‘‘ வரலாற்று வழியில் முற்போக்கானதாகும் என்பது, அமெரிக்காவில் தேசிய இனங்கள் அரைத்துச் சேர்க்கப்படுதல் முற்போக்கானதாகும் என்பது எப்படியே அது போலவே சந்தேசத்துக்கு இடமில்லாதது. உக்ரேனியாவும் மாருஷ்யாவும் எந்த அளவுக்குச் சுதந்திரமடைகின்றனவோ, அந்த அளவுக்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சி அதிக விரிவும் வேகமும் அடைந்து மேலும் அதிக வலிமையுடன் அரசின் எல்லாப் பிராந்தியங்களிலிருந்தும் எல்லா அண்டை அரசுகளிலிருந்தும் (ருஷ்யாவானது உக்ரேனியாவைப் பொறுத்த வரை அண்டை அரசாகிவிடுமாயின்) எல்லாத் தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் உழைப்பாளி மக்கள் திரளினரையும் நகரங்களுக்கும் சுரங்கங்களுக்கும் ஆலைகளுக்கும் கவர்ந்திழுக்கும். (39)
மு.சோ.க, ஜே.வி.பி போன்ற கட்சிகள் செயற்கையாக சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பின் வழியிலேயே இனமத குலம் அற்று போராடுவோம் என்கின்றார்கள். ஒவ்வொரு தேசிய இனங்களின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றார்கள். முதலாளித்துவத்திற்கு உதவுவது என்பது அபர்த்தமான வாதம். மொழியில்லாத தேசியஇனம் கலத்தல் நடைபெறுவதற்கும். தேசமாக வளரக்கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனத்திற்கும் மாறுபாடு உண்டு.
இங்கு எவரும் தமிழ் முதலாளித்துவத்திற்கு மாத்திரமே போராடவில்லை. ஒரு தேசத்தினுள் உள்ளடங்கியது தான் பொருளாதாரம். பொருளாதாரம் தனித்துப் பார்த்துவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் உள்ளன. சிங்கள மார்க்சியர்கள் ‘‘முழுநிறை சமத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையோ, சுதந்திர அரசை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் உரிமையையே கணமும் மறப்பாரியினும், அவர் புர்ஷ்வா தேசியவாதச் சகதிக்குள் மட்டுமின்றி கறுப்பு நூற்றுவரது தேசியவாதச் சகதிக்குள்ளும் வழுக்கிச் சென்று விடுவார். (41) தென்னிலங்கை போலி இடதுசாரிகள் தமிழர்களுக்கு ஒரு முகமும் சிங்கள மக்களுக்கு ஒரு முகமும் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தமிழர் தரப்பில் இருந்து எழும் போராட்டங்களை இலகுவாகவே சமூகத்தைப் பிளப்பதாகவும், உணர்ச்சி ஊட்டுவதாகவே எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இதே நிலையைத் தான் பு.ஜ.மா.லெ. கட்சியினரும் ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கறுப்பு நூற்றுவர் என்பது ருசிய பேரினவாதிகளாகும்
பணபாட்டு தேசிய வாதம் சியோனிசத்தை குறித்து நிற்கின்றது.
தேசம் பற்றிய பிரச்சனை இவைகள் மூன்று விடயங்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
ஈழ இடதுசாரிகளின் சதிக்கோட்பாடு
”கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வட்டம் வடக்கில் உயரும் என்பதால் தான் தமிழ் தேசியம் எனும் புதிய கோசம் முன் வைக்கப்பட்டதாகக் கூறும் அரசியல் ஆய்வாளர்களும் உள்ளனர்.”
நாட்டரசிற்கும் தேச அரசிற்கும் வித்தியாசம் தெரியாத இடதுசாரியம் கடந்த 50 வருடங்களாக ஒரே வாதத்தை தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்கள்.
சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக
1.நிலப்பிரச்சனையில் ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கமுடியும்.
2. தமிழ் தேசிய இனத்தின் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை நோக்கிய போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியிருக்கலாம்.
முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் தோழர் லெனினின் வழிகாட்டலை இன்றுவரையில் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தான் தம்மை மார்க்சியர்கள் என்று கூறிக் கொள்கின்றார்கள்.
எனினும் இதில் தோழர் சண்முகதாசன் தான் தொழிற்சங்க வாதத்திற்கு பலியாகிவிட்டதாக சுயவிமர்சனம் செய்துவிட்டுச் சென்றார்.
தோழர் சண்பாதையே சரியெனக் கூறிக் கொள்ளும் செந்தில்வேல் தலைமை தம்மை சுயவிமர்சனம் செய்யவில்லை. இப்போ (தேர்தல் பிரச்சாரப் பேச்சுக்களை ஆழ்ந்து கேளுங்கள்) தலித்திய – அடையாள அரசியலை தூக்கிப்பிடிக்கின்றார்கள். நிலப்பிரபுத்துவ கட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேறும் நிலையில் தமக்கான அரசுரிமைக்காக போராடுவார்கள்.
இவற்றைப்புரிந்து கொள்ளவில்லை. இங்கு எழும் குழப்பம் என்னவெனில் முதலாளித்துவ தேசியவாதத்தை மேல் உள்ள கூற்று மறுக்கின்றார்கள். இதேவேளை சிங்கள பௌத்த விகாரைகளை மையம் கொண்ட சமூக வாழ்வு இருக்கின்றது. இடதுசாரிகள் என்பவர்கள் பிக்குகளுக்கு முன்னிருக்கையில் முதலிடம், வெசாக் போன்ற தினங்களில் உழைப்பாளர் தினம் போன்றவற்றை கொண்டாமாட்டார்கள்.
‘‘பூர்சுவா தேசியவாதம் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கின்றது,. எனவேதான் தேசிய இனப் பூசல்கள் ஓயாமல் நடைபறுகின்றன. ஆனால் பாட்டாளி வர்க்கம் ஒவ்வொரு தேசிய இனத்தின் தேசிய இன வளர்ச்சிக்கும் ஆதரவாக நிற்கத் தயாரய் இல்லை என்பது மட்டுமல்ல,. இதற்கு மாற்றாய் இம்மாதிரியான பிரமைகளுக்கு எதிராய் மக்கள் பெருந்திரளினரை எச்சரிக்கிறது,. முதலாளித்துவ ஒட்டுறவுக்கு முழு அளவு சுதந்திரம் வேண்டுமென்பதை ஆதரிக்கிறது,. வன்முறை அல்லது தனியுரிமைகளில் அடிப்படையில் அமைந்ததைத் தவிர்த்து தேசிய இனங்களது ஏனைய எல்லா விதமான ஒன்று கலத்தலையும் வரவேற்கிறது.‘‘ (46) இங்கு பெருந்தேசியவாதம் தனக்கான ஆட்சியதிகாரம் கொண்டுள்ளது. அரசு முழுமையாக சிங்கள தேசத்தின் நிர்வாக அமைப்பாக இருக்கின்றது. இது சிங்கள பேரினவாதக் கட்டமைப்பும் சிந்தனை வடிவம், இதுவும் எதிர்நிலையில் எழுகின்ற ஒடுக்கப்பட்டவர்களின் தேசியவாதமும் ஒன்றாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. பு.ஜ.மா.லெ கட்சியினர் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பதை விட்டு இனவாதம் என்று சுருக்கிவிடுகின்றார்கள்.
இவர்களை ‘‘ நியாயமான முறையில்‘ வரம்பிடப்பட்ட குறிப்பிட்ட அரங்குக்குள் தேசியவாததை உறுதி பெறச் செய்தல், தேசியவாதத்தை ‘அரசியல் வழிபட்டதாய்‘‘ ஆக்குதல், எல்லாத் தேசிய இனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப் பிரிந்திருத்தலை விசேஷ அரச நிறுவத்தின் மூலம் உறுதியாக்கி கெட்டி பெறச் செய்தல் ஆகிய இவைதான் கலாச்சார- தேசிய இனத் தன்னாட்சியின் சித்தாந்த அடிப்படையும் உள்ளடக்கமும் ஆகும். இந்த கருத்து முழுக்க முழுக்க பூர்சுவா தன்மை வாய்ந்தது, முழுக்க முழுக்கத் தவறானது.‘‘ (46)
முதலாளித்துவ கட்டத்தில் தேசங்களின் வளர்ச்சியை தடுத்துவிடும் போக்கில் அமைந்த மு.சோ.க சமவுரிமை முழக்கம், மக்கள் சபை என்ற ஜேவிபியின் முழக்கங்கள் அமைந்திருக்கின்றது.
தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய இனச் சிறுபான்மையினரின் உரிமைகளும்
தொழிற்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ ஜனநாயகமும், முதலாளித்துவம் புரட்சி முழுமையடையாத நாடுகளின் நிலமைகளில் இருந்து தேசிய இனப்பிரச்சனை பற்றி அணுக வேண்டும் என்று வழிகாட்டுகின்றார். இங்கு 1789-1871 காலப்பகுதியில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று விட்டது. குறிப்பாக நிலப்பிரபுத்துவம் முழுமையாக சிதையாத நாடுகள் பற்றிய பிரச்சனையை பாட்டாளி வர்க்கத்தின் நலனைக் கொண்ட போராட்ட வடிவம் பற்றிச் சிந்திக்க வழிகாட்டுகின்றார். ‘‘சுவிட்சர்லாந்து ஒன்றைத் தேசிய இன அரசல்ல என்பதால் அது விதிவிலக்கு தான்‘‘ (54)
இங்கு தமிழ், சிங்கள இடதுசாரித் தரப்பு ‘‘அரசு” பற்றிய புரிதல் இல்லை என்பதை மேற்கண்ட உதாரணத்தின் ஊடாக லெனின் போதிப்பதை இனியாவது கற்பார்களா என்று தெரியவில்லை. ‘‘எந்த ஒரு நிறுவனத்தையும் முரணற்ற ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைத்துக் கொண்டுள்ள நாடுகள் விதிவிலக்கானவையே.” (55) முரணற்ற ஜனநாயகத்தை வழங்கத் சிங்கள தேசமும், சிங்கள உழைக்கும் வர்க்கமும், சிங்கள தேசத்தின் இடதுசாரிகளும் தயாராக இருக்கின்றார்களா?? முரணற்ற ஜனநாயகம் நிலவும் நாடுகளைப் போல இலங்கை இல்லை என்பதே வரலாறு.
நாடாளுமன்றத்தின் மூலம் சுயநிர்ணயப் பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று இருக்கின்றார்கள் என கொள்ள முடிகின்றது. கட்சிகள் செயலூக்கமின்றி கட்சியின் திட்டத்தில் வைத்து விட்டு செயற்பாடு இன்றி இருப்பதை அவ்வாறு தான் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
பாடசாலைகளில் மொழி பாடத்திட்டம்
புலம்பெயர் நாடுகளில் தமிழை ஒரு பாடமாக கற்ற பல நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. இந்த வகை வழிகாட்டலை தோழர் லெனின் 1913 களில் வழிகாட்டி விட்டார். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அல்லது வேற்று சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தனியாக பாடசாலை அமைத்திட முடியாது. ஆனால் அவர்களின் தாய்மொழியை கற்றுக் கொடுக்க முடியும். இவ்வாறான சிந்தனைப் போக்கு என்பது முரணற்ற ஜனநாயகம் அவசியம் என்பதையே இந்த நாடுகளில் மொழிப் பிரச்சனை எடுத்துக் காட்டாக காட்டுகின்றது. மாணவர்களின் எண்ணிக்கை என்பதற்கு அப்பால் மொிழியுரிமையை உறுதி செய்வது பற்றியே தோழர் லெனின் வழிகாட்டுகின்றார்.
ஆனால் மேற்கு இலங்கையில் தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் கூட ஆசிரியர் பற்றாக்குறை, தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மொழிப் பாடசாலைகள் இல்லாமல் இருக்கின்றது. இங்கு கட்டாய சிங்கள மயமாக்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
மையப்படுத்தலும் தன்னாட்சியும்
திணை என்ற பகுப்பாய்வு முறை என்பது தேசம் என்ற அடிப்படையை மறுத்து சமூகத்தில் அகக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்தக் கோட்பாடு வெகு சமூகத்திற்கு செல்லப்படவில்லையாயினும் பிரமுகர்கள் மட்டத்தில் இது அறிமுகமாகியிருக்கின்றது. இந்த கோட்பாடு பற்றிய அதிகம் உரையாடப்படவில்லை இந்த வகையில் அது ஆபத்தில்லை. அகநிலைவாதத்திற்கு எதிரான தோழர் லெனின் பார்வையை கீழே அறிய முடியும்.
இதில் லெனின் கூறவரும் விடயம் மிகவும் நுணுக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டும். தேசிய இனப் பிரச்சனையில் தீர்வு கொடுக்கின்ற முறையில் இலங்கையில் தமிழ் இடதுசாரிகள் பிராந்திய சுயாட்சி பற்றி பு.மா.லெ.கட்சி முன்மொழிகின்றது. ஆனால் சுவீஸ் முறையில் பெரும்பான்மை சிறுபான்மைக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையில் தோழர் லெனின் எதிர்க்கின்றார்கள். ‘‘‘ தேசிய இனச் சிறுபான்மையைத் தேசிய இனப் பெரும்பான்மைக்குக் கீழ்பட செய்தல் ஜனநாயகத் தன்மை வாய்ந்தது தான். ஆனால் இத்தகைய கூட்டாட்சி அரசு அமைப்பையும் சுவீஸ் கூட்டாட்சி அரசில் இருக்கக் கூடிய அதிக பட்ச அதிகாரப் பரவலையும் வி. இ எதிர்ப்பவர் என்பது நமக்குத் தெரியும். (63) வி.இ என்பது லெனின் இது கலாச்சார சுயநிர்ணயம் பற்றிப் பேசுபவர்களின் மீதான விமர்சனம்.
‘‘தேசங்களின் சுயநிர்ணய உரிமை நமக்கு எதற்கு?” என்கிறார் புகாரின். ‘‘உழைக்கும் வர்க்கங்களின் சுயநிர்ணய உரிமையை மட்டுமே ஒப்புக் கொள்ளவிரும்புகின்றேன்.”(203லெ9) ‘‘தேசங்களின் சுயநிர்ணயத்தினை நிராகரித்து உழைக்கும் மக்களின் சுயநிர்ணயத்தைப் புகுத்துவது என்பது அறவே தவறானது” (207தே.நூ9)
இதற்கு லெனின் ‘‘ தேசிய இனச் சிறுபான்மையோரது உரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சினைக்கு, சமத்துவமெனும் கோட்பாட்டிலிருந்து விலகாத முரணற்ற ஜனநாயகத்தை அரசில் நாடு தழுவிய அளவிலான சட்டத்தை இயற்றிச் செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை விளக்கினேன். (62)
நிதிமூலதனச் சந்தையின் கூட்டே ஐரோப்பிய ஒன்றியமாகும். இது நிதிமூலதனத்தின் சந்தைக்கானது. மிகை உற்பத்தியையும், நுகர்வை அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தும் நோக்கம் கொண்டதே. எனவே இந்தக் கூட்டு என்பது உழைக்கும் மக்களுக்கானது அல்ல. மாறாக கட்டுப்பாடு அற்ற பொருட்கள், தொழிலாளர், சேவையின் நகர்வு, மூலதனம் என்பது உழைக்கும் மக்களை ஒன்றாக்கிவிடுவதில்லை.
‘‘முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிய மையத்துவக் கோட்பாடானது இந்த மாதிரியான ( வட்டார, பிராந்திய) தன்னாட்சியால் மீறப்பட்டு விடவில்லை என்பதோடு, இதற்கு மாறாக இதனால் அந்தக் கோட்பாடு ஜனநாயக வழியில் – அதிகார வர்க்க வழியில் அல்ல- செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய தன்னாட்சி இருக்காவிடின் முதலாளித்துவம் விரிவாகவும் தங்கு தடையின்றியும் விரைவாகவும் வளர்ச்சி பெறுவது சாத்தியமல்ல, அல்லது குறைந்தது இந்த வளர்ச்சி வெகுவாகத் தடுக்கப்பட நேரும். மூலதனம் ஒன்று குவிதலுக்கும் உற்பத்தி சக்திகள் வளர்வதற்கும் நாடுதழுவிய அளவில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் இந்த தன்னாட்சி அனுசரணையாய் இருக்கும். ஏனெனில் முற்றிலும் வட்டாரப் பிரச்சனைகளில் (பிராந்திய, தேசிய, இன இன்ன பிற பிரச்சனைகளில் ) அதிகார வர்க்க முறையிலான தலையீடு பொதுவாகப் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்குப் மிகப்பெரிய தொரு முட்டுக்கட்டையாகவும், குறிப்பான முனைப்பு வாய்ந்த முக்கியமான அடிப்படை விவகாரங்களில் மையத்துவத்துக்குத் தடங்கலாகவும் இருக்கிறது.
ஆகவே சிறப்புக்குரிய நமது ரோஸா லுக்கம்பர்க் எழுதுவதைப் படிக்கையில் நகைக்காமல் இருப்பதற்கில்லை. (67) இதில் சுயநிர்ணயத்திற்கு அப்பால் கூறப்படும் கருத்துக்களைத் தான் இங்கு லெனின் குறிப்பிடுகின்றார். சுயநிர்ணயத்தை மறுத்து வார்த்தையின் வித்தை காட்டுவதை தோழர் விமர்சிக்கின்றார். இதை ஈழத்தின் வரலாற்றுடன் ஒப்பிட்டுவது பொருந்து மு.சோ.க, ஜேவிபியின் சுத்துமாத்து அரசியல் போல் உள்ளதை கவனத்தில் கொள்ள முடியும். மையக் கோட்பாடு என்பது அரச அதிகாரத்தைக் குறிக்கின்றது. இந்த அடிப்படையில் தான் லெனின் மார்க்சினை மையவாதி என்கின்றார். இதற்கு மாற்றாக அராஜகவாதிகள் மையஅதிகாரத்தை மறுப்பவர்கள் ஆகின்றார்கள்.
முதலாளித்துவம் கோருகின்ற சந்தைக்கும் பாட்டாளி வர்க்கம் கோருகின்ற ஐக்கியத்திற்கும் உள்ள மாறுபாட்டை தோழர் லெனின் ‘‘கூட்டரசையும் அதிகாரப் பரவலையும் மார்க்சியவாதிகள் நிச்சயமாய் எதிர்ப்பவர்கள் தான்,. இதற்கு காரணம் எளிமையானது, முதலாளித்துவம் அதன் வளர்ச்சிக்கு சாத்தியமான அளவுக்கு மிகப் பெரிதாகவும் மிகுந்த மையத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்த அரசுகள் வேண்டுமெனக் கோருகின்றது என்பதே இந்தக் காரணம். ஏனைய நிலைமைகள் ஒரே மாதிரியாய் இருக்கையில், அரசானது அதிகாரம் பெரிதாய் இருக்க வேண்டுமென்பதே உணர்வு படைத்த பாட்டாளி நிலையாகும். (63) மைய நிலையை ஏற்றுக் கொண்டு சுயநிர்ணயத்திற்கு மாற்றாக பேசுவதை குறிக்கின்றார்.
லெனின் பல இடங்களில் சுட்டிக் காட்டியது போல உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிப் என்பது முதலாளித்துவத்தில் சாத்தியமாக இருக்கும். முதலாளித்துவ (சோசலிசப் புரட்சிக்கான அரசியல் அதிகாரம் வெற்றி பெறாத நிலை) பிரச்சனையில் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு வளர்த்துச் செல்வது என்பதே லெனின் சிந்தனைப் போக்காகும். (74-----171 )
வடமாகாண சபையானது ‘‘முதலமைச்சர் நிதியம்” உருவாக்கும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இதற்கு மைய அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை. சந்தைப் பொருளாதாரத்தையும், அன்னிய மூலதனத்திற்கு சந்தையை திறந்து வைத்துள்ள போதும் ஈழ முதலாளித்துவ வளர்ச்சியை உருவாக்கிக் கொள்ள அது தயாராக இல்லை.
ஈழத் தேசிய இனத்திற்கு தீர்வாக மாவட்ட சபை, மாகாண சபை சிங்கள தேசம் முன்வைத்தது. தமிழ் இடதுசாரியம் பிராந்திய சுயாட்சி என்கின்றார்கள், சிங்கள இடதுகள் பிரசைகளுக்கான உரிமை என்று சட்டவரையறை செய்கின்றார்கள்.
தேசியவாதம், சமூக தேசிய வெறி
இங்கு தேசியவாதம், சமூக தேசிய வெறி போன்றவற்றை கோட்பாட்டுத் தளத்தில் போதிய புரிதல் இல்லை. இவைகள் பிற்போக்கு கூறுகளைக் கொண்டதாகும். இந்தப் போக்கு சமூக வளர்ச்சிக் கட்டத்தை மறுத்து நின்று ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதாகும். இரண்டாம் அகிலத்தவர்களின் சமூகத் தேசியவெறியும், புந்த் கட்சியினரின் பண்பாட்டுத் தேசியவாதமும் ஒரே போக்கைக் கொண்டதாகும். முதலாளித்துவ தேசிய வெறியை எதிர்த்துக் போராட (16/4லெ) வேண்டும். இவை நிலமானியச் சிந்தனையையும், வாழ்வியலையும், நாடுகளைப் பிடிக்கும் கொள்கை, இனச் தூய்மைவாதம் போன்றவற்றை பாதுகாத்து நிற்பதாகும்.
``ஒரு குடியரசின் உருவாக்கமே ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளின் உடனடியான அரசியல் கோசமாக இருக்க வேண்டும்.” (16/4லெ) தேசிய வெறியின் பிரதார நீரோட்டத்துக்குள் பாட்டாளி வர்க்கத்தை இழுப்பது தவறான போக்காகும். இது அன்றைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத காலத்தின் நிலையாகும். அந்தக் காலத்தில் முடியாட்சியை பாதுகாக்கும் அரசியல்போக்கு இருந்த காலத்தில் எழுத்த தேசியவாதமாகும். முதலாளித்துவப் புரட்சி முழுமையடையவில்லை, நிலம் பறிமுதல் செய்யப்படவில்லை, 8 மணி நேரம் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்னொரு தேசத்தை ஒடுக்கிக் கொண்டு ``தாய்நாட்டைக் காப்பாற்றுவோம்” என்கின்றவர்கள் வெட்கங்கெட்ட இழிபிறவியே ஆவான்; (23/4லெ) நியாயமாகவே இவன் மீது ஆத்திரமும் அருவருப்பும் வெறுப்புமே உண்டாகின்றது.
சமூகத் தேசிய வெறி- தாய்நாட்டை காப்பது என்ற அரசியல் நிலைப்பாடு என்பதை பிற்போக்குத் தனமானது. இன்று எழும் தேசியப் போராட்டத்தையும் அன்று எழுந்த தேசிய வெறியையும் ஒன்றித்து பார்க்க முடியாது. Georgiaவில் மன்னரும், நிலப்பிரபுக்களும் இழந்த பெருமையை மீட்ட தேசியத்தை கையில் எடுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் முடியாட்சியைப் பாதுகாப்பது, நிலப்பிரபுக்கள், மதகுருமாரின் நலனைப் பாதுகாப்பதாக அமைந்திருந்தது. பாட்டாளிவர்க்கத்தைப் பொறுத்தவரையிலோ அல்லது ஜோர்ஜிய தேசத்தைப் பொறுத்தவரையில் மன்னராட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை.
உழைப்பாளிகளுக்கு நாடு இல்லை என்பது நீண்ட கால அரசியல் இலக்காகும். அந்த இலக்கை அடைய முன்னர் அதாவது முரண்பாடுகளை வெவ்வேறு தளத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும். அந்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளாமல் சமூகம் அடுத்த பாச்சலை மேற்கொள்ள முடியும். இதேபோல உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம் என்கின்ற போக்கும் உள்ளது. இது புகாரின் முன்வைத்த கருத்தாடலாகும். இவர்களைப் பொறுத்த வரையில் சமூகக் கட்டத்தினை அடையும் முன்னரே நிலைப்பாட்டை வந்தடைகின்றார்கள்.
இனவாதம் – தேசியப் பெருமைபற்றி
தேசிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசிய இனப் பெருமிதம் போன்றவற்றை பிரித்தறிவதில் குழப்பத்தை ஏற்படுத்தியே வருகின்றார்கள். இது குறிப்பாக ரொட்ஸ்கிய பாதிப்பு, ஜேவிபி, மு.சோக போன்ற சக்திகளின் பின்புலத்தைக் கொண்டுள்ளனர். மேலதிகமாக https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2015/12/blog-post.html இங்கு வாசித்து அறிய முடியும்.
தோழர் மாவோ ஒரு மார்க்சியர் தேசபக்தராக இருக்க முடியும் என்கின்றார். இங்கு தேசியவாதம் வெறியாக இருப்பதை மார்க்சியர்கள் அங்கீகரிப்பதில்லை. பெருந்தேசிய, குறுந்தேசியம் என்பதை மார்க்சியம் அனுமதில்லை.
‘‘எல்லாத விதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் அகற்றும் பொருட்டு, எவ்வளவு தான் சிறியவையாக இருப்பினும், முழு அளவுக்கு ஒருமை வாய்ந்த தேசிய இனத்தோராலான தன்னாட்சிப் பரப்புகளை நிறுவுவதும் மிக மிக முக்கியம் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. இந்தத் தேசிய இனப் பரப்புகளை நாடெங்கும் அல்லது உலகெங்கும்கூட சிதறி வாழும் அந்தந்த தேசிய இனத்தோரும் தமது ‘‘கவர்ச்சி மையமாகக் ‘‘ கொள்ள முடியும். அவற்றுடன் எல்லா வகையான உறவுகளையும் சுதந்திரமான பிணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இவை எல்லாம் மறுக்க முடியாதவை, முரட்டுப் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கக் கண்ணோட்டத்தினர் மட்டுதே இவற்றை எதிர்த்து வாதாட முடியும்.‘‘ (71) இங்கு சுயநிர்யணம் அற்ற பிராந்திய சுயாட்சியை எதிர்மறையாக விமர்சிக்கின்றார். மேல் உள்ளது கலாச்சாரத் தன்னாட்சி, பிராந்திய சுயாட்சி பற்றிய விமர்சனமாகும்.
தேசிய அரசுகள் உருவாகிக் கொள்வது பற்றி
"உலகம் பூராகவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப்பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பண்ட உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும். ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும். அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும் குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும். - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித இடைத் தொடர்புக்கு மிக முக்கிய சாதனம் மொழியாகும். நவீன முதலாளித்துவத்திற்கு சரியான விதத்தில் மெய்யாவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான, விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக சந்தையுடன் ஒவ்வொரு பெரிய, சிறிய உரிமையாரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பர நெருக்கமான தொடர் ஏற்படுத்திக் கொள்ளவும் மிக முக்கியமான நிபந்தனைகளில் மொழி ஒற்றுமையும் தங்கு தடையற்ற வளர்ச்சியும் அடங்கும்.
எனவே ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசு களின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரீக உலகம் முழுவதற்குமே முதலாளித்துவ காலப்பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப்படிவமானது சகஜமானது" (ப76 (தே.இ.பா.வ.சர்1)
தொடர்ந்து "இதன் விளைவாக, சட்ட வரையறைகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தை செய்வதன் மூலமோ அன்றி, சூக்குமமான இலக்கணக்களைப் புனைவது மூலமே அன்றி தேசிய இன இயக்கங் களின் வரலாற்று, பொருளாதார நிலைமைகளை ஆராய்வதன் வாயிலாக தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருளை நாம் புரிந்து கொள்ள விரும்பும் பட்சத்தில், இந்த தேசிய இனங்கள் அன்னிய தேசிய இன அமைப்புகளிலிருந்து அரசியல் வழியில் பிரிந்து, சுதந்திரமான தேசிய இன அரசாக உருப்பெறுவதே தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக்குத் தவிர்க்க முடியாத வகையில் வந்து சேருவோம்". (77) (தே.இ.பா.வ.சர்1)
சிங்கள தேசம் பௌத்த பேரினவாதம் விகாரைகளை சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறத்தே அரசியல் அதிகாரம் அற்ற தேசத்தின் ‘‘சுயநிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற‘‘ (77) பொருளில் விளங்கிட தயாராக இல்லை. மாறாக ஒவ்வொருவரும் வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கின்றனர். ‘‘பொருளாதாரக் கூறுகளை‘‘ (77) தவிர்த்துவிட்டு தேசம் பற்றிப் பேசிவிட முடியாது. அரசு என்பது பண்டையக் காலத்தில் இருந்ததைப் போன்று இருக்கப் போவதில்லை. இவ்வாறே ஈழம் சாத்தியமில்லை என்பவர்கள் ‘‘ஒரு தேசிய இன அரசைப் படைப்பதற்கான அவாவின் வலிமையை அவர் குறைத்து மதிப்பிடுவதற்குமிடையேயுள்ள தொடர் என்ன? ரோஸா லுக்சம்பர்க் இந்தக்கேள்வியை எழுப்பக் கூட இல்லை.‘‘ (79)
இவ்வாறு ஒப்பித்துக் கொள்பவர்களுக்கு லெனின் வார்த்தையில் சொல்வதானால் ‘‘காவுத்ஸ்கிக்குப் பாடம் சொல்வதானது, சூழ்ச்சி நயத்தைத் தோற்றுவிப்பதற்கான நகைக்கத் தக்க சிறுபிள்ளைத் தனமான முயற்சியாகும்.‘‘ (80) இவ்வாற விமர்சனத்தை ஈழத் தமிழ் பரப்பில் எழுதிவிட முடியாது. ஆனால் ரோசாலுக்சம்பர்க்கை விமர்சிக்க லெனினால் பயன்படுத்து வார்த்தையை இன்று எவரும் தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. அதிகாரத்திற்கு ஒத்தோடுகின்றார்கள் என்ற வார்த்தையையே தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள். மார்க்சிய வழியில் முன்னர் கற்றுக் கொண்டவை தவறு என்று ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. கல்லில் நார் உரிப்பதைப் போன்றே இவர்களுடன் விவாதம் செய்யும் தன்மையாக இருக்கும்.
மக்களிடம் சிந்தனை வீழ்ச்சியை ஏற்படுத்துவது பூர்சுவாக் கட்டமைப்பும் நிறுவனப்பட்டு செயற்படுகின்றது. இதே வேளை கட்சிகளும் சிந்தனை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது. திரிபுவாதத்தை மார்க்சியமாக திரிக்கப்படுகின்றது. இதற்கு எதிரான தத்துவப் போராட்டம் இன்றைய நிலையில் அவசியமாக இருக்கின்றது.
``தேசிய இன அரசுகளை உருவாக்குவதற்கான அவாவினைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்த பொருளதாரக் காரணிகளை மார்க்சியவாதிகள் காணத் தவறிவிடக் கூடாது என்பதே இதன் பொருளாகும். மார்க்சிய வேலைத் திட்டத்திலுள்ள` ``தேசிய இனங்களின் சுயநிர்ணயம்” என்பதை வரலாற்று-பொருளாதாரக் கருத்துப்படிப் பார்த்தால் அது அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது. (82)
நல்லெண்ணம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் (86) குறிப்பான நாட்டின் சூழலை கவனத்தில் எடுத்தே ஆய்வுகளை செய்ய வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சியும், வரலாறும் வேறு வகையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவ சமூக உற்பத்திப் போக்கில் தேச அரசுகளின் வளர்ச்சியையும், அவசியத்தையும் ஏற்றுக் கொள்கின்றது. இது முதலாளித்துவத்தில் அரசு மாதிரிப்படிவமானது, சகஜமானது.
மார்க்சிய பொருளாதாரம் பற்றிய பிரச்சனையில் புரிதல்கள் இருந்து கொண்டே இருக்கின்றது. வர்க்கப் பிரிவினை முதலாளி- தொழிலாளி என்று மட்டும் அணுகுவிட முடியாது. மார்க்சிய அறியவியல் இவ்வாறு அணுகுவதில்லை. சமூகத்தில் பற்பல உள்பிரிவுகளாக வர்க்கங்கள் உள்ளன. இலங்கையில் இருப்பது வர்க்க முரண்பாடு என்பதை முன்னிறுத்துகின்றார்கள். இங்கு வர்க்கம் என்பதை பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பதை மட்டுமே குறிக்கிப் பார்க்கின்றார்கள். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் காடாக இருக்கின்றது என்கின்றார்கள்.
‘‘ பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுங் கூட பொருளாதார ரீதியாக ஐரோப்பாவின் கொலனியாகவே இருந்து என்பதை மார்க்ஸ் மூலதனம் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். எந்தவொரு மார்க்சியவாதியையும் போலவே காவுத்ஸ்கிக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் இதற்கும் தேசிய இன இயக்கங்கள் மற்றும் தேசிய இன அரசு பற்றிய பிரச்சினைகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
பூர்சுவா சமுதாயத்தில் தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணயம், அரசுகள் எற்ற முறையில் அவற்றின் சுயாதீனம் ஆகிய பிரச்சினைக்குப் பதிலாக அவற்றின் பொருளாதார சுயேச்சை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினையை ரோஸா லுக்சம்பர்க் முன்வைக்கிறார். ஒரு பூர்சுவா அரசியல் நாடாளுமன்றத்தின், அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றத்தின் மேலாண்மைக்குரிய வேலைத் திட்டக் கோரிக்கையை விவாதிக்கும் போது, ஒரு முதலாளித்துவ நாட்டில் ஆட்சி முறை எதுவாக இருப்பினும் அங்கு பெரும் மூலதனமே ஆதிக்கம் செலுத்துகிறது என்ற முற்றிலும் சரியான துணிபுரையினை ஒருவர் விளக்க முற்படுவரானால் அது எத்துணை விகேகமுள்ளதோ அத்துணை விவேகமுள்ளதே இதுவும்.‘‘ 80-1) ஏகாதிபத்தியத்தையும், மூலதனத்தையும் காரணம் காட்டுவதையும், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வில் லெனின் வழிகாட்டலை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்.
அன்றையக் காலத்தில் ஆசியாவில் தேசிய இன அரசின் பொருளாதார வளர்ச்சி பற்றி எடுத்துக்காட்டுகின்றார். இதனை சோசலிச அரசுகள் உருவாகுதற்கு முன்னரான தேசிய இன அரசுகள் உருவாக்கிய வளர்ச்சி பற்றிய தோழர் லெனின் அறியத் தருகின்றார். தேசிய இயக்கங்கள் உருவாகுவதற்கான பொருளாதாரக் காரணங்களை காணத் தவறக் கூடாது. மேலும் தேசிய அரசுகள் உருவாகுவது இயல்பான வடிவம் என்பதேயாகும்.
இனப்பிரச்சனையை வரலாற்று ரீதியில் திட்டவட்டமாக முன்வைத்தல்
ஏங்கெல்ஸ் இன்ஆய்வு தொழிற்துறைப் புரட்சி நடைபெறாக 1315 காலத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. அரச தோற்றம் பற்றிய இயங்கியல் பார்வையைக் கொண்டதை லெனின் விளக்குகின்றார். முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத காலத்தில் ஏற்பட்ட அரசுகளும் முதலாளித்துவ காலத்தின் தேசிய அரசுகளுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை விளக்குகின்றார். முன்னையது இரத்த உறவு சிதைந்த பின்னர் ஏற்படுகின்ற மன்னராட்சி பற்றியது. இரத்த உறவின் சிதைவின் தோற்றம் பெற்ற அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறிதல் அவசியமானதாகும். பின்னையது முதலாளித்துவ வளர்ச்சியில் ஏற்படுகின்ற தேசங்களின் அரசு பற்றியதே. வரலாற்றுப் போக்கை இயங்கியல் ரீதியாக கற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றார்களா என்பது என்பது கேள்வியே.
மார்க்சியர்கள் தேசிய இயக்கங்களை என்ன அடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என்று போதிக்கின்றார். இது நிச்சயம் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து ஆதரிக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் வேகமாக வளர்கின்றது. ஆனால் இலங்கையில் சோசலிசப் புரட்சி வரும் வரையில் சக்திகள் வளருவதை தடுக்க வேண்டும் என்கின்ற நிலை இலங்கையில் உள்ளது.
தேசிய எழுச்சி பெறுவதற்கு முன்னர் அரசியல் அதிகாரம் பற்றிய பார்வை இருக்கவில்லை. ஆனால் 1922 தமிழர் மகாசபையின் அரசியல் கோரிக்கை முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமேயாகும். சமூக அவசியம் என்பது அதற்கான வளர்ச்சியை அடைந்திருக்கவில்லை. இதன் பின்னர் உருவாகிய இலங்கை தமிழ் கொங்கிரஸ் போன்ற அமைப்பின் உருவாக்கமாகும்.
(வரலாற்றுப் போக்கு கொலனித்துவாதிகளால் ஈழ- லங்கா 1833 இணைக்கப்படுகின்றது)
இலங்கைச் சூழலில் தேசிய இனப்பிரச்சனை
1871 இல் ஜேர்மன் தனியாக சென்ற பின்னர் தனியரசாக உருவாகியது. இதன் பின்னர் கங்கேரியர்,ஸ்லாவ் தனியரசாக முடியவில்லை. ஜேர்மன் தேசிய இனத்துடன் சேர்ந்து நாட்டிடை உருவாக்கிக் கொண்டனர். இவ்வாறு கொலனித்து நாடுகளில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியேறிய போது குர்து தேசிய இனத்தை பல்வேறு நாடுகளில் சிறுபான்மையாக்கப்பட்டனர். இன்று வரையில் தனியான அரசை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.
சில பொதுவுடமைக்கட்சிகள் திட்டத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு வரைவை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் எவ்வாறு போராட்டத்தை கட்டமைக்க வேண்டும் என்ற புரிதல் இல்லை. இன்னும் சொல்லப் போரானால் பொதுவுடமை இயக்க வரலாற்றில் இலங்கையைப் பொறுத்த வரையில் செயல்பூர்வம் அற்றதாகவே உள்ளது.
தோழர் லெனின் மற்றும் ரூசா லுக்கசம் பர்க் இடையிலான விவாதம் என்பது இயங்கியல் ரீதியானதும், கோட்பாடு சார்ந்ததாகவே இருக்கின்றது. இது குறிப்பாக கட்சியின் 9 வரைவை விமர்சிக்கின்றதற்கு எதிராக தோழர் லெனின் எதிர்வினையாற்றுகின்றார்.
தேசிய இனப் பிரச்சனையில் செயல்பூர்வ தன்மை
‘‘ 9 வது பிரிவு பாட்டாளி வர்க்கத்தின் அன்றாடக் கொள்கைக்குச் செயல் பூர்வம் வழி காட்டவில்லை, தேசிய இனப்பிரச்சனைகளுக்குச் செயல் தீர்வு காணவில்லை‘‘ (96) தோழர் ரோசா லுக்சம்பர்க்கு நேரடியாக தோழர் லெனினுக்கு பதில் கொடுக்கும் நேர்மை உள்ளது. இந்த வகையில் தோழர் லுக்சம்பர்க்கின் நிலைப்பாடு நேர்மை கொண்டது. ஆனால் இலங்கை இடதுசாரிகள் என்பவர்கள் மக்கள் முன்னால் திட்டத்தை வைத்துச் செயற்பட தயாராக இல்லை.
செயல்பூர்வத் தன்மை என்பது இடதுசாரிப் பரப்பில் எவ்வாறு புரிந்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ள கொண்டியுள்ளது. முதலாளிகளுக்காக ஈழம் கேட்கின்றார்கள். (1976- பட்டிமன்றம்----97-99-
ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் துவக்கத்திலும் இயல்பாகவே தலைமையை மேற்கொள்ளும் முதலாளி வர்க்கம் எல்லா தேசிய இன அபிலாசைகளையும் ஆதரிப்பது செய்பூர்வமானது என்று கூறுகின்றது. (முதலாளித்துவம் தனது சுரண்டல் நலனை கைவிடவில்லை. எனது விளக்கம்) ஆனால் தேசியப் பிரச்சினையில் (ஆனால் தேசிய இனப்பிரச்சனையில் (இதர எல்லாப் பிரச்சினைகளிலும் போலவே) பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை முதலாளி வர்க்கத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே ஆதரிக்கின்றது, ஆனால் அது முதலாளி வர்க்கத்தின் கொள்கையோடு ஒரு போதும் பொருந்துவதில்லை.
தேசிய இன சமாதானத்தை அடைவதன் பொருட்டும் (இதை முதலாளி வர்க்கத்தால் முழுமையாகக் கொண்டு வரமுடியாது, பூரண ஜனநாயகத்தோடு கூடத்தான் இது சாதனையாகும்) சம உரிமை பெறவும், வர்க்கப் போராட்டத்துக்கான மிகச் சிறந்த நிலைமைகளை உருவாக்கவும் வேண்டி மட்டுமே தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை ஆதரிக்கினறது. எனவே முதலாளி வர்க்கத்தாரின் செயல்பூர்வத் தன்மைக்கு எதிராகத் தான் தேசிய இனப் பிரச்சினையில் பாட்டாளிகள் தமது கோட்பாடுகளை முன்வைக்கின்றார்கள், அவர்கள் எப்போதுமே முதலாளி வர்க்கத்தாருக்கு நிபந்தனையோ கூடிய ஆதரவை மட்டுமே அளிக்கிறார்கள். தேசிய இனப் பிரச்சனையிலிருந்து தனது சொந்த தேசிய இனத்துக்குத் தனி உரிமைகள் அல்லது விசேட அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளவே முயல்கிறது. இதுதான் ‘‘செயல்பூர்வமாயிருந்தல் ‘‘ என்பது. (97-8) இங்கு தேசியப் போராட்டத்தில் மார்க்சியவாதிகள் தலைமை தாங்க வேண்டும். தேசியவிடுதலையின் ஊடாக தேசிய இனத்தின் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை அடைவதாகும். இதன் ஊடாக உற்பத்தி மாற்றம், சிந்தனை மாற்றம் என வர்க்கமற்ற சமூகத்தை அடைவதாகும். இதனைத் தான் தோழர் செயல்பூர்வம் என்கின்றார்.
பின்தங்கிய உற்பத்திச் சக்திகள் உள்ள சூழலில் பாட்டாளி வர்க்கம் தலைமை தாக்க வேண்டும் என்ற போக்கு உள்ளது. இது குறிப்பான சூழலில் உள்ள நிலையை ஆய்விற்கு உள்ளாக்கிடாத நிலை உள்ளது.
எங்கட குறி சொல்பவர்களுக்கு லெனின் ‘‘பிரிந்து போவது என்ற பிரச்சினைக்கு ‘‘சரி‘‘ அல்லது ‘‘கூடாது‘‘ (98) பதிலளிக்க கோர முடியாது என்கின்றார்.
பாட்டாளி வர்க்க நலனில் இருந்து தான் போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அது சோசலிசக் கட்டத்தை அடையும் இலச்சியத்தை அடக்கியதாகும். முதலாளித்துவ கட்டத்தை கடக்க முடியவில்லை. தேசியப் போராட்டமும் உற்பத்தி சக்தியை முன்னேற்றுவதும் அடங்கும். ‘‘முதலாளி வர்க்கம் தனது தேசிய இனக்கோரிக்கைகளை எப்போதும் முன்னணியில் வைக்கிறது, மிகவும் ஆணித்தரமான முறையில் வைக்கிறது. பாட்டாளி வர்க்கத்தைப் பொருத்தவரை இந்தக் கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்குக் கீழ்பட்டவை. பர்சுவா ஜனநாயகப் புரட்சி, சம்பந்தப்பட்ட ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து செல்வதில் போய் முடியுமா அல்லது அதனுடன் சம அந்தஸ்து பெறுவதில் போய் முடியுமா என்பதைத் தத்துவ ரீதியாக முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது. (98)
இவ்வாறே தமிழ் முதலாளிகளுக்குகாக போராடுகின்றார்கள், அவர்களை நம்ப முடியாது, தமிழர்களை சுரண்டுவார்கள் என்றெல்லாம் வாதங்கள் வைக்கப்படுகின்றது. இவர்களை நோக்கி ” ஒவ்வொரு தேசிய இனத்தின் தேசியவாத முதலாளி வர்க்கத்தின் நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் போது தேசிய இனப் பிரச்சினையிலான பாட்டாளிகளின் பணி முழுவதுமே ‘‘செயல்பூர்வமானதல்ல‘‘ ஏனெனில் பாட்டாளிகளின் எல்லாம் வகைப்பட்ட தேசியவாதத்தையும் எதிர்க்கிறார்கள், ‘சூக்குமமான‘‘ சமத்துவத்தைக் கோருகிறார்கள், சிறிதளவும் கூட யாருக்கும் தனியுரிமைகள் இருக்கக் கூடாது என்று கோட்பாடு பூர்வமாகக் கோருகிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், செயல்பூர்வம் என்பதற்குத் தவறான வழியில் புகழ்பாடும் ரோஸா லுக்சம்பர்க் சந்தர்ப்பவாதிகளுக்கு- விசேஷமாயும் மகாருஷ்ய தேசியவாதத்துக்கு சந்தர்ப்பவாதச் சலுகைகள் கொடுப்படுவதற்கு- வழி செய்து விட்டார்‘‘ (99) மகாருஷ்யத்துக்கு புகழ்பாடுவது போலவே பௌத்த பெருந்தேசியவாத சிந்தனையைக் கொண்ட அரசின் கீழ் இரு என கூறுவதற்கு ஒப்பாகும்.
அனைத்தையும் தமிழ் இனவாதம் என்பவர்கள் அறியவேண்டியது. ‘‘ தேசிய இனப்பிரச்சினையில் சந்தர்ப்பவாதம் என்பது உண்மையில், ஒடுக்கும் தேசிய இனங்களினிடையேயும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயும் வெவ்வேறானது. தனது கோரிக்கைகள் ‘செயல்பர்வமானவை‘‘ என்ற முகாந்திரத்தால், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் முதலாளி வர்க்கமானது, அதன் அபிலாசைகளை நிபந்தனையின்றி ஆதரிக்குமாறு பாட்டாளி வர்க்கத்தைக் கேட்டுக் கொள்ளும். எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்பதை ஆதரிப்பதை விட, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்கு ஆதரவாக ‘‘சரி‘‘ என்று தெளிவாகக் கூறுவது தான் மிக அதிகமான நடைமுறை ரீதியானதாகும்! (100) இங்கு தேசியக் கட்டம் என்பதும் பின்னர் சர்வதேச கடமையை நோக்கி பயணிப்பது தான் பாட்டாளி வர்க்க செயல்பூர்வம்.
‘‘ பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பது மூலம் நீங்கள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பூர்சுவா தேசியவாதத்தை ஆதரிக்கின்றீர்கள் என்று நம்மைப் பார்த்து கூறப்படுகின்றது. ரோசா லுக்சம்பர்க் இதைத்தான் சொல்கிறார். ‘‘ (101)
‘‘இப்பிரச்சனைக்கு ‘‘ செயல்பூர்வமான‘‘ தீர்வு காண வேண்டும் என்பது முதலாளி வர்க்கத்திற்கு முக்கியமானது. தொழிலாளர்களுக்கோ இரு போக்குகளின் கோட்பாடுகளையும் வேறுபடுத்தி அறிவது தான் முக்கியதான். ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம் ஒடுக்குவோரை எதிர்த்து எந்த அளவுக்குப் போராடுகின்றதோ அந்த அளவுக்கு நாம் அப்போராட்டத்தின் எல்லா நிகழ்வுகளையும் எப்போதும், வேறு எவரைக் காட்டிலும் அதிக உறுதியாகவும் ஆதரிக்கிறோம். ஏனென்றால் நாம் ஒடுக்குமுறின் சிறிதும் விட்டுக் கொடுக்காத நிலையுள்ள எதிரிகளாவோம். (101) இங்கு தொழிலாளிகள், தேசிய இனம் என்ற அடிப்படையில் இரண்டை ஒடுக்குமுறை உள்ளது.
‘‘ பிரிந்து போகும் உரிமைஎன்ற கோசத்தை நமது கிளர்ச்சியில் முன்நிறுத்தி ஆதரித்துப் பேசத் தவறுவோமேயானால் நாம் முதலாளி வர்க்கத்தின் பிடியில் தானே சென்று சிக்கிக் கொள்வோம் என்பது மட்டுமல்ல, ஒடுக்கும் தேசிய இனத்தின் நிலப்பிரபுக்கள் மற்றும் அதன் வரம்பிலா ஆட்சியின் பிடியிலும் கூடத் தானே சென்று சிக்கிக் கொள்வோம்.‘‘ (101) ( சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை) ரோசாலுக்சம் பர்க் எவ்வாறு மகாருசியர்களின் பெருந்தேசியவாதத்தை மறப்பது போல இலங்கை இடதுசாரியம் பேசுபவர்கள்.
தொடந்தும் ‘‘‘ போலந்தின் தேசிவாத முதலாளி வர்க்கத்தினருக்கு ‘‘உதவக்‘‘ கூடாதே என்ற கவலையில் ரோஸா லுக்சம்ர்க் ருசியாவின் மார்க்சியவாதிகளின் வேலைத் திட்டத்திலுள்ள பிரிந்து போகும் உரிமையை நிராகரிக்கிறார். அவ்வாறு செய்வது மூலம் அவர் உரிமையில் மகாருசிய கறுப்பு நூற்றுவருக்கு உதவுகின்றார்.‘‘ (102) இந்திச் சூழலில் குறிப்பான ஒடுக்கும் தேசம் இல்லை என்று கருதப்படுகின்றது. ஆனால் 53 விழுக்காடு ஒடுக்கப்படும் தேசங்களும், தேசிய இனங்கள் இருந்ததையும் சுயநிர்ணயத்தை நிலை நிறுத்தி போராடியதையும், வெற்றி பெற்றதையும், வரலாற்றில் நிறைவேற்றினர். ஆனால் இன்று எந்தச் வர்க்கம் தலைமை தாங்கியுள்ளனர்? போராடும் பொதுவுடமைத் தலைமை உள்ளதா?
தேசிய இனப்பிரச்சனை குறித்து மிதவாத முதலாளி வர்க்கமும் இடதுசாரி சந்தர்ப்பவாதிகளும்
இந்தப் பகுதி தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளையும், இடதுசாரி அமைப்புக்களின் போக்கை கவனிக்க வேண்டும்.
1. தமிழ் தேசியத்தின் பிற்போக்குகளை முன்னிறுத்துவது. தமிழ் முதலாளிகளுக்காக துணைபுரிவதாகும் என்பவர்கள்.
2. சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் தமிழ் தேசியவாததைத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பொருத்திப் பார்க்கின்றார்கள்.
3. சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்க்க தயாராக இல்லை. தமிழ் தேசம் தனது ஒடுக்குமுறைக்கும், முதலாளித்துவ கட்டத்தை நோக்கித் போக தயாராக இருக்கின்றது. முன்னுக்குச் செல்லத் தயாராக இருக்கின்ற தேசத்திற்கு அறிவுரை சொல்வது.
4. பண்பாட்டு சுயநிர்ணயம் இலங்கையைப் பொறுத்தவரை சில விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பவர்கள்.
முஸ்லீம் மக்கள் மதச் சிறுபான்மையாக இருக்கின்றார்கள். அவர்களில் தமிழர் தாயகத்தில் உள்ளவர்கள் பாரம்பரியமாக தமிழக- ஈழ தொல்குடியின் தொடர்ச்சியாகும். அவர்கள் மதமாறியவர்களின் சந்ததியாகும். இரண்டு தேசங்களின் தாயகத்தில் வாழ்பவர்களின் நிலைப்பாடு என்பது வெவ்வேறானதாகும். ‘‘பண்பாட்டு சுயநிர்ணயம்‘ என்பது தேசத்தின் இருப்பை ஏற்றுக் கொள்வதில்லை. மதத்தை பின்பற்றுபவர்களை தேசமாக வரையறுக்கும் போக்கு இருக்கின்றது. இவ்வாறாக தாராளவாத சந்தர்ப்பவாதம் நல்லெண்ணத்தின் பால் செயலில் உள்ளது.
‘‘அரசியல் சுயநிர்ணய” உரிமை பற்றிய சூத்திரத்தை ‘நெகிழ்வான‘‘ ஒன்று என்று அழைத்ததன் மூலமும்‘‘‘ (115) (சிவசேகரம் போன்ற திரிபுவாதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.) தேசிய இனங்களின் சுயநிர்ணயம் பற்றிய விடயத்தில் கிலிகொள்வது பூர்சுவாக்கள் மாத்திரம் அல்ல. மாறாக தம்மை தத்துவக்குரு என பிரகடனப்படுத்தும் பேர்வழிகளும் பயம் கொள்கின்றார்கள்.
5. பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றதாக கொள்ளப்படுகின்ற அச்சம். (116) மனவிலக்குப் பெற்ற பெண் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் போலவே ‘‘பிரிந்து போகும் சுதந்திரம், ஒரு சுயேட்சையான தேசிய இன அரசை நிறுவும் சுதந்திரம் ஆகியவற்றை விட மேலானதான ஒரு சுதந்திரம் ஒரு தேசிய இனத்திற்கு இருக்க முடியுமா? (117)
தமிழ் திரிபுவாத, சந்தர்ப்பவாத இடதுசாரிகள் சிங்கள பௌத்த பேரினவாதிகளை விட அன்றும் இன்றும் பதட்டமடைந்திருக்கின்றார்கள். பிற்போக்குவாதிகள் சுயநிர்ணயம் பற்றிய விடயத்தில், மணவிலக்கு பற்றிய பிரச்சனையில் ஒற்றுமையை கலைப்பதாக எண்ணுவது இயல்பு.
உக்கிரேன்
#லெனினால் தேசிய இனப்பிரச்சனை குறித்து மிதவாத முதலாளி வர்க்கமும் சோஷலிஸ்டு சந்தர்ப்பவாதிகளும் # (106-122)
``முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவும் அனைத்து உறவுகளினின்றும் எழும் அரசியல் மோசடி சில சமயங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஏதேனும் ஒரு தேசிய இனம் பிரிந்து போவதைப் பற்றிய அற்பத்தனமான, மடத்தனமான பிதற்றலில் இறங்கும்படி செய்கின்றது என்பதில் ஐயமில்லை. ”
பொருளாதார உறவும்
‘‘ தேசிய இன ஒடுக்குமுறையும்தேசிய இனச் சச்சரவுகளும் கூட்டு வாழ்வை அறவே சகிக முடியாததாக்கின்றவோ, எந்தவிதமான பொருளாதாரத் தொடர்புகளையும் தடைசெய்கின்றனவோ, அப்பொழுது மட்டுமே மக்கள் பிரிவினையைக் கையாள்வார்கள். அந்த நிலையில், முதலாளித்துவ வளர்ச்சியின் நலன்களும், வர்க்கப் போராட்டத்தின் சுதந்திரத்தின் நலன்களுகம் பிரிவினையால் சிறந்த பயனடைகின்றன. ‘‘(119)
வடக்கு மாகாண முதலமைச்சர் கொண்டு வந்த முதலமைச்சர் நிதியம் என்ற முன்மொழிவு சிங்கள ஆட்சியாளர்களால் கபட அரசியலால் ஆய்விற்கும், விவாதத்திற்கும் அப்பால் சிதைக்கப்பட்டது.
‘‘சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது மணவிலக்குச் சுதந்திரத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள்தனமானது, வஞ்சனையானது. பூர்சுவா சமுதாயத்தில் பூர்சுவா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு மணவிலக்குச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசியல் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளுக்குக் கேடுவிளைக்கும் வகையில் போலிஸ் நிர்வாக முறைகளையும் தாங்கி ஆதரப்பதே தவிர வேறெதுவுமல்ல. (118-9)
``முதலதா
சுவீடனில் இருந்து நோர்வே பிரிதல்
‘‘நவீனப் பொருளாதார, அரசியல் உறவுகளின் கீழ் எந்த அடிப்படையில் தேசிய இனங்கள் பிரிந்து போகும் நிகழ்ச்சிகள் செயல்பூர்வமானது என்பதையும், அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்ற நிலைமைகளின் கீழ் இந்த பிரிவினை சில சமயங்களில் என்ன வடிவத்தை மேள்கொள்கிறது என்பதையும், இந்த உதாரணம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
தேசிய இனங்கள் பிரிந்து போவதை ஒட்டி எழக் கூடிய மோதல்களை ‘‘ருசிய வழியில்‘‘ தீர்க்காமல் 1905ல் நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையில் அவை தீர்க்கப்பட்ட வழியில் மட்டுமே தீர்க்க வேண்டும்,. இதற்காக முறையாகப் பிரச்சாரம் செய்வதும், அடிப்படைகளைத் தயார் செய்வதும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களின் கடப்பான கடமை,. இதை இந்த உதாரணம் நடைமுறையில் நிரூபிக்கிறது.” (126)
‘‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் பற்றிய பிரச்சினையிலும் நாம் சம்பந்தப்பட்ட தேசிய இனத்திற்குள் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயநிர்யணம் பற்றியே முதலாவதாயும் முக்கியமாயும் அக்கறை கொண்டிருக்கிறோம். ரோஸாலுக்சம்பர்க் இந்தப் பிரச்சினையையும் தன்னடக்கத்துடன் தட்டிக் கழித்து விட்டார். ஏனெனில் அவர் தானே எடுத்துக் கொண்ட நோர்வேயின் உதாரணத்தின் அடிப்படையில் இதைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு தனது ‘‘தத்துவத்துக்கே‘‘ பேராபத்தானது என்பதை உணர்ந்து கொண்டார்.” (127) இவ்வாது தான் இடதுசாரி முகமூடி போட்டவர்கள் இருக்கின்றார்கள். சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களுக்குப் பின்னால் உள்ள சிந்தனைக் கட்டமைப்பு, பூர்சுவா வர்க்கத்தின் பலம் என்பதை குறைத்து மதிப்பிடுகின்றார்கள்.
1896 லண்டனில் சர்வதேச சோசலிஸ்டுக்கள் கொங்கிரஸ்
சிவசேகரம் ஐரோப்பாவில் எழுத்த தேசிய என்று அடித்து விடுகின்றார்.
சுயநிர்ணயம் பற்றிய விடயங்கள் ஆசான் மார்க்ஸ் இருந்தபோது ஸ்லாவிய பெருந்தேசியச் சிந்தனையை மார்க்ஸ் கண்டித்துள்ளார். இதே போல ஒடுக்கப்படும் தேசமாகிய அயர்லாந்து விடுதலை பெற வேண்டும் என்கின்றார். அரசியல் சுயநிர்ணயம், சுதந்திரமான தேசிய இன அரசினை நிறுவும் உரிமை பற்றி பேசப்பட்டது. இதன் பின்னர் 1896 இல் கொங்கிரசும், 1902 இல் தோழர் பிளெக்னேவ் சுயநிர்ணயம் பற்றி எழுதியுள்ளார்கள்.
சுயநிர்ணயம் – Selbstbestimmungsrecht இதனை தன்னார்ச்சி என்ற தவறாக மொழிபெயர்த்துள்ளார்கள் என லெனின் ஆசிரியர் குறிப்பில் எழுதுகின்றார்,
‘‘ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கும் எல்லாத் தேசிய இனங்களையும் நேர்ந்த பாட்டாளிகள், அவ்வரசின் வரலாற்றில் ஏற்படும் அனைத்து மாறுதல்களின் ஊடேயும், தங்களது வர்க்கப் போராட்டதில் மிக நெருக்கமான, தகர்க்க முடியாத ஒன்றுமையை நிலைநாட்டிக் கொள்வது.
பாட்டாளி வர்க்கத்தின் இந்த இருவகைக் கடமையைத் தான் அகிலத்தின் 1896 ஆம் ஆண்டின் தீர்மானம் வரைறுத்து முன்வைக்கிறது. (137) ஒடுக்குமுறை அரச வன்முறை என்பது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தடைசெய்து கொண்டே இருக்கின்றது.
கற்பனாவாதி மார்க்ஸ் காரியவாதி ருசாலுக்சம்பர்க்
‘‘அயர்லாந்துக்கு நீதி வழங்குதல்‘ பற்றிய ‘சர்வதேசிய‘ மன்றும் ‘மனிதாபிமான‘ சொற்றொடர்கள் முற்றும் வேறாக ஒரு புறமிருக்க- அகிலத்தின் கவுன்சிலில் அது நட்புண்மையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.—அயர்லாந்துடனான தனது ‘ இன்றையத் தொடர்புகளை அகற்றிவிடுவது தான் ஆங்கிலத் தொழிலாளி வர்க்கத்தின் நேரடியான முற்று முழுதான நலனுக்கு உகந்தது. இது எனது ஆக முழுமையான, உறுதியான நம்பிக்கை, இதற்கான காரணங்கள் சிலவற்றை நான் ஆங்கிலேயத் தொழிலாளர்களுக்கே கூடச் சொல்ல முடியாது. ஆங்கிலத் தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சி மூலம் ஐரிஷ் ஆட்சியை வீழத்திவிடலாம் என்று நீண்ட காலமாக நாம் நம்பி வந்தேன். இந்தக் கருத்தை நான் எப்போதும் நியூயோர்க் டிரிப்யூனில்‘‘ (மார்க்ஸ் நீண்ட காலமாக எழுதி வந்த அமெரிக்கப் பத்திரிகை) ‘வெளியிட்டு வந்தேன். இதற்கு நேர் எதிரான கருத்தே சரியானது என்று ஆழ்ந்த ஆராய்ச்சி எனக்கு மெய்பித்துக் காட்டிள்ளது. அயர்லாந்தை விட்டொழிக்கும் வரை ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது. .. இங்கிலாந்தில் ஆங்கிலேயப் பிற்போக்குத் தனத்துக்கு வேராக இருப்பது அயர்லாந்தை அடிமைப்படுத்தியது தான்‘‘ (அழுத்தம் மார்க்சினுடையது) 146)
சிங்கள பௌத்த பேரினவாதத்தை துடைத்தெறியாத வரையில் ஐக்கிய இலங்கை புரட்சி என்பதே கற்பனையானது. போலி இடதுசாரிகள் போராடாது இருப்பதற்காக கற்பனைவாதக் கருத்துக்களையே மார்க்சியத்தின் போர்வையில் முன்வைக்கப்பட்டு தமது இருப்பை பாதுகாத்து வருகின்றார்கள். தேசிய இனத்தின் ஜனநாயக்க (முதலாளித்துவ) கட்டம் பற்றிய புரிதல் இன்றியே ஒப்பித்து வருகின்றார்கள்.
இலங்கை போலி இடதுசாரிகள் இனமதகுல பேதமற்று புரட்சியை, தேசிய இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது. இதனை மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே வந்தடைந்து விட்டார். பொருளாதார உறவுகளால் ஏற்படும் மாற்றங்கள் என்பது மிதவாத, பிரபுகுல சிந்தனைகளை உருவாக்கிவிடுகின்றது. புரட்சிகரப் போக்கு சமூகமெங்கும் சிதைக்கப்படுவதை இலங்கை வரலாற்றில் இருந்து நிறையவே உள்ளது.
‘‘இன்னொரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது என்பது ஒரு தேசிய இனத்துக்கு எத்துணை துர்ப்பாக்கியம்.‘‘ அயர்லாந்து ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவம் வரையில் ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் விடுதலையடைய முடியாது. அயர்லாந்தை அடிமைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப்பெற்று ஊட்டம் பெற்று விட்டது.‘‘ (147)
அகிலத்தில் வர்க்கப் போராட்டத்தை மார்க்ஸ் கைவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். ‘‘ மார்க்ஸ் இங்கிலாந்திடமிருந்து அயர்லாந்து பிரிவதை ஆதரித்து ‘‘பிரிவினைக்குப் பிறகு ஒரு கூட்டாட்சி விரலாம் என்றாலும்‘‘ வாதிட்டார். (147)
1. இங்கிலாந்தே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை முதலில் தீர்த்துக் கொண்ட நாடு. அயர்லாந்தில் முதலாளித்துவப் புரட்சியை நடத்தி முடிக்கவில்லை.
3. செயல்பூர்வ (148) இல்லை என்ற முடிவில் இருந்த மார்க்ஸ் பிரிவினையின் ஊடாக அயர்லாந்து தொழிலாளி வர்க்கம் செயல்பூர்வம் பெறும் என்கின்றார்.
4. ஆங்கில-அயர்லாந்து பாட்டாளி வர்க்கம் பலவீனமாக இருந்தது
5. ‘‘இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் தேவையான சீர்திருத்தங்கள் புகுத்தப்படுவதில் ஏற்பட்ட அரை நூற்றாண்டுக் கால தாமதத்தைத் தவிர்த்திருக்க முடியும், பிற்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சீர்திருத்தங்கள் மிதவாதிகளால் உருக்குலைக்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.”(149) இது அங்கு நடைபெறவில்லை. இதை இலங்கை பொருத்திப் பார்க்க முடியும். 1966 தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் பின்னராகத் தோன்றி தமிழ் தேசிய எழுச்சியை வழிநடத்தியிருக்க முடியும். பொருளாதாரத்திற்கு பலியாகி அதனைத் தவறிட விட்டார்கள்.
6. இரண்டு நாடுகள் பற்றிய உதாரணத்தை பாட்டாளி மேற்கொள்ள வேண்டிய நடைமுறை உதாரணமாக லெனின் கொள்கின்றார்.”)
1903 வேலைத்திட்டமும் அதன் கலைப்பாளர்களும்
கலைப்பாளர்கள் பற்றி இந்தப் புத்தகத்தின் முன்னைய தலையங்கத்தில் தோழர் லெனின் எழுதியுள்ளார். இங்கு தோழர் பிளெக்ஹாவ் முன்வைத்த கருத்தை மீளவும் வலியுறுத்துகின்றார். மகாருஷ்ய தேசிய இனத்தைச் சார்ந்த நமது சக நாட்டவர்களின் தேசிய இனத் தப்பெண்ணங்களைத் புண்படுத்தி விடுவோமானால்… ‘உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!‘ என்ற முழக்கம்.. நமது வாயிலிருந்து எழும் வெட்கக்கேடான பொய்யுரையாகவே இருக்கும்‘‘ என்று பிளெஹானவ் எழுதினார். (151 மேலும் சுயநிர்ணயத்தை கட்சித் திட்டத்தில் மறுப்பது ‘‘உள்ளபடி மகாருஷ்ய தேசியவாதத்திற்கு வழங்கும் ஒரு ‘வெட்கக் கேடான‘‘ சலுகையாகும்.” (152)
1903 இல் தோழர் ரோஸா லுக்சம்பர்க்கும் கொங்கிரசில் இருந்து வெளியேறுகின்றார்கள். அவர்கள் ‘‘.. நகல் வேலைத்திட்டத்ன் 7லது பிரிவின் (இப்போது 9 வது பிரிவு) வாசகம் பின்வருமாறு இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரேபிக்கிறோம், §7. அரசில் இணைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் கலாசார வளர்ச்சிக்கான முழுச் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்யும் நிறுவனங்கள்” என சுயநிர்ணயத்திற்கு மாற்றாக முன்வைக்கின்றார்கள்.
இலங்கையிலும் மு.சோ.க, ஜேவிபியும் இவ்வாறான வழியில் தான் பிரசைகளுக்கான உரிமைகள் என்று கதையாடல் செய்கின்றார்கள். இந்திய கிராமப் பஞ்சாயத்து, நிகுநெரும, மக்கள் மன்றம், சமவுரமை என்பது எல்லாம் பிரசைகளுக்கான இருப்பை மட்டும் ஏற்கின்றன. அதாவது தொழிலாளிகளுக்கு சுயநிர்ணயம் என்கின்றது. ஆனால் தேசங்களுக்கு சுயநிர்ணயம் என்பதை ஏற்பதில்லை.
இதில் இரண்டு விடயங்கள் தோழர் லெனின் வரலாற்று முக்கிய வரைவையும், செயல் திட்டத்தையும் மாறுபாடுகளையும் விளக்குகின்றார். இது இன்றையக் காலத்திலும் பொருத்தமாகவே இருக்கின்றது. 1. ‘‘சுயநிர்ணயம்” என்ற சொல்லுக்கு மிகவும் விரிவான விளக்கம் தரப்படக் கூடாது,. ஒரு தேசிய இனம் தன்மை ஒரு தனி அரசியல் அமைப்பாக நிலைநாட்டிக் கொள்வதற்கான உரிமை என்பது மட்டுமே இதன் பொருளாகும். பிராந்திய சுயாட்சி என்பதல்ல.” (155) என்ற தீர்மானமும்,
‘‘ ‘சுயநிர்ணய உரிமைக்கு” ஆட்சேபங்கள் எதுவும் எழுப்ப முடியாது. ஒரு தேசிய இனம் சுதந்திரதிற்காகப் போராடும் போது அதை எதிர்க்க கூடாது. பிளெஹானவ் கூறியபடி, போலந்து ருஷ்யாவுடன் சட்டபூர்வமான மணம் மேற்கொள்ள மறுத்தால் நாம் அதில் போய்க் குறுக்கிடக் கூடாது. இந்த எல்லைகளுக்குள் நான் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கின்றேன்” (156)
இங்கு தனிநபர்கள் தம் மணவாழ்க்கையில் மிக தந்திரமாக தமது வாழ்க்கை நடத்திட முடிகின்றது. ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தினைப் பற்றிய முடிவில் கபடவாதிகளாக இருக்கின்றார்கள்.
சுயாட்சியும் சுயநிர்ணயமும் ஒன்றல்ல என்பதை போல்சுவிக் கட்சி வழிகாட்டுகின்றது. ஆனால் NDMLP பிராந்திய சுயாட்சியை சுயநிர்ணயம் என்கிறார்கள். செயலூக்கம் பற்றிய லெனினின் கொடுக்கும் விளக்கம் என்பதே அதன் சாரம்.
ரொட்க்ஸ்கி
தோழர் லெனின் பார்வையில் ரொட்ஸ்கி எவ்வாறு குறிப்பான காலத்தில் பார்க்கப்பட்டார் என்பதும், தேசிய இன நிலைப்பாட்டில் என்ன நிலைப்பாடு கொண்டார் என்பதும் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக ரொட்ஸ்கிய வாதிகள் இன்று தேசிய இனப்பிரச்சனையில் எவ்வாறு லெனினியத்தில் இருந்து மாறியுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.
9 பிரிவை அகற்ற வேண்டும் என்பதற்கு ‘‘உதவவரும் திரொத்ஸ்கி ஒர் எதிராளிளை விட அதிக ஆபத்தானவர்! ரோஸா லுக்கசம்பர்க்கின் ஒவ்வொரு கட்டுரையையும் ஆதரிப்பவர்கள் என்பதாக ‘‘போலிஷ் மார்க்சியவாதிகளைப்‘‘ பொதுவாக வகைப்படுத்த திரொத்ஸ்கி ‘‘ தனிப்பட்ட உரையாடல்கள்‘‘ (அதாவது திரொத்ஸ்கி எப்போதும் நம்பிப் பிழைப்பு நடத்தும் வெறும் வம்புப் பேச்சு) தவிர வேறு சான்றுகள் எதுவும் இல்லை. ‘‘போலிஷ் மார்க்சியவாதிகளை‘‘ கௌரவமும் மனச் சாட்சியும் அற்றவர்களாகவும் தமது சொந்த நம்பிக்கைகளையும் தமது கட்சியின் வேலைத் திட்டத்தையும் கூட மதிக்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் திரொத்ஸ்கி சித்தரித்துக் காட்டினார். எவ்வளவு உபகாரம் செய்கிறார் திரொத்ஸ்கி!
சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையின் பேரில் 1903ல் போலிஷ் மார்க்சியவாதிகள் இரண்டாவது கொங்கிரசில் இருந்து வெளிநடப்புச் செய்த பொழுது, அவர்கள் இந்த உரிமை உள்ளடக்கமற்றாக இருப்பதாயும் வேலைத் திட்டத்திலிருந்து அகற்றத்தக்கது எனவும் கருதினார்கள் என்று அந்த சமயத்தில் திரோத்ஸ்கி கூறியிருக்கலாம்.
ஆனால் அதற்குப் பிறகு இத்திட்டத்தைக் கொண்ருந்ததான கட்சியில் போலிஷ் மார்க்சியவாதிகள் சேர்ந்தார்கள், அதைத் திருத்துவதற்காக எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டுவரவில்லை. * (* 1913ல் நடைபெற்ற ருஷ்ய மார்க்சியவாதிகளின் கோடை மாநாட்டில் போலிஷ் மார்க்சியவாதிகள் ஆலோசக உரிமையுடன் மட்டுமே கலந்து கொண்டார்கள் எனவும், சுயநிர்ணய உரிமை (பிரிந்து போதல்) மீது தமது பொதுவான எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் எமக்குத் அறிவிக்கப்படுகின்றது. அவர்கள் செய்தது போன்று நடக்கவும் இதுகாறும் போலவே போலந்தில் பிரிந்து போதலை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவும் முழு உரிமை உண்டு. ஆனால் திரொத்ஸ்கி கூறியது அதுவல்ல, ஏனெனில் ‘‘வேலைத் திட்டத்திலிருந்து ‘‘9 பிரிவை ‘‘ அகற்றுமாறு‘‘ போலிஷ் மார்க்சியவாதிகள் கோரவில்லை. )
தமது பத்திரிகையின் வாசகர்களிடம் திரொத்ஸ்கி இந்த மெய் விவரங்களைக் கூறாமல் மறைத்ததேன்? கலைப்புவாதத்தை எதிர்க்கும் போலிஷ்காரர்களுக்கும் ருசியர்களுக்கும் இடையே வேற்றுமைகளுக்குத் தூபமிடக் கற்பனை தீட்டவும், வேலைத்திட்டம் பற்றிய பிரச்சினையில் ருஷ்யத் தொழிலாளர்களை ஏமாற்றவும் இது அவருக்கு உதவிகரமாக இருந்தது என்பது மட்டுமே இதற்கு காரணம்.
மார்க்சியம் பற்றிய எந்த ஓரு முக்கியமான பிரச்சனை மீதும் திரொத்ஸ்கி ஓர் உறுதியான கருத்தை இதுகாறும் ஒரு போதும் கொண்டிருந்ததில்லை. குறிப்பிட்ட கருத்து வேற்றுமையின் ‘‘விரிசல்களுக்குள் தந்திரமாகப் புகுந்து கொள்வார்‘‘, ஒரு தரப்பைக் கைவிட்டு இன்னொரு தரப்பில் எப்போதும் சூழ்ச்சி செய்வார். தற்போது அவர் புந்துக்காரர்கள் மற்றும் கலைப்புவாதிகள் பக்கம் இருக்கிறார். இந்தக் கனவான்களே கட்சி சம்பந்தப்பட்ட வரை எதையும் பிறழாது கடைப்பிடிப்பவர்கள் அல்ல. (158-159)
மேலும் இவர்கள் வரைவு 9 விளக்கமற்றது என்று எண்ணும் குறுங்குழுவாதிகளின் பின்னால் திரொத்ஸ்கி இருப்பதையே இங்கு குறிப்பிடுகின்றார்.
தோழர் பிளெஹானவ் ” மகாருஷ்ய தேசிய இனத்தைச் சார்ந்த நமது சகநாட்டவர்களின் தேசிய இனத் தப்பெண்ணங்களைப் புண்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தினால் இந்த உரிமையை நாம் மறந்து விடுவோமானால் அல்லது முன்வைப்பதற்குத் தயங்குவோமானால்…” உலகத் தொழ்லாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கம்.. நமது வாயிலிருந்து எழும் வெட்கக்கேடான பொய்யுரையாகவே இருக்கும்” (151) இந்த மேற்கோளை தோழர் லெனின் எவ்வாறு சந்தர்ப்பவாதிகளை எதிர்த்தார் என்று கூறுகின்றார்.
10 முடிவுரை
இந்த ஆய்வுரையின் மார்க்சின் அயர்லாந்து பற்றிய ஆய்வின் முடிவும் செயல்பூர்வமான என்ற அடிப்படையில் இருந்தது என்பது பற்றி விரிவாக அனைத்து இடங்களிலும் பொருத்திக் ஆராய்கின்றார். 1896ல் லண்டனில் நடைபெற்ற அகிலத்தின் முடிவு, 1902இல் பிளெஹானவ்வின் வரைவை ஏற்று ருசிய சமூக ஜனநாயகக் கட்சியின் திட்டத்தில் 9 வரைபு பற்றி ஒரு முழுமையான பார்வையை முன்வைக்கின்றார். மகாருஷ்ய பெருந்தேசியவாத தொடுக்கும் அடக்குமுறை பற்றிப் பேசியுள்ளார். தேசிய இனங்களிடையே உள்ள தப்பெண்ணத்தை தீர்ப்பதற்காக வழிகளை காட்டிள்ளார்.
1.‘‘ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைப் பொருத்த வரை, பாட்டாளிள் ஒரு சுயேட்சையான கட்சி என்ற முறையில் தனி நிறுவ னமாக அமைவதால், சில சமயங்களில் ஸ்தல தேசியவாதத்தை எதிர்த்துக் கடுமையான போராட்டம் நடத்த வேடியுள்ளது. இதனால் எதிர்காலத் திசைவழி புரட்டப்படுகிறது. ஒடுக்கும் தேசிய இனத்தின் தேசியவாதம் கண்ணுக்குப் புலப்படால் போகின்றது.” (165) இந்த ஆய்வின் தொடக்கத்தில் ஒடுக்கும் தேசிய இனத்தின் தேசியவாதமும் வெவ்வேறானவை என்பதை விளங்கியுள்ளார்.
இலங்கையை எடுத்துக் கொண்டால் யாழ் சைவ வேளாளம், சைவ வேளாளம் சுரண்டுவதற்கு ஈழம் கேட்கின்றார்கள், தமிழினவாதம் என தம்சுய அரிப்பை தீர்க்க எவ்வித வார்த்தைகளை கொட்டித் தீர்ப்பதை அறிய முடியும்.
சுயநிர்ணயத்தை மறுக்கின்றதையும், சுயநிர்ணயம் என்பது பிராந்திய சுயாட்சி இல்லை என்பதையும், கலாச்சார சுயநிர்ணயத்தையும் எதிர்த்து நிற்கின்றார். இந்த வகையில் ரோஸா லுக்சம்பர்க்கின், திரொத்ட்ஸ்கியின் உட்பட்ட இதர வரைவு 9 எதிர்ப்பாளர்களையும் அம்பலப்படுத்துகின்றார். சுயநிர்ணயத்தை மறுக்கின்ற சந்தர்ப்பவாதிகளை அடையாளப்படுத்துகின்றார். சுயநிர்ணயத்தை ஏற்க மறுப்பதால் ஏற்படும் தீமை பற்றிய அறிவுறுத்தல் முக்கியமாகும். சுயநிர்ணயம் என்பது மணவிலக்குக்கு இணையானதும் என்றும் சுதந்திரமான இணைப்பே பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தை உருவாக்கும் என்கின்றார்.
2.பூர்சுவா ஜனநாயகப் புரட்சி நடந்து முடிந்துவிட்டது என்ற கருதுகின்ற போக்கிற்கு எதிராக கறாரான பார்வையை முன்வைக்கின்றார்.
3.1905 பின்னர் ருசியாவில் தேசியவாத மிதவாதிகள் தோன்றினார்கள் என்கின்றார்.
4.போலந்தில் உருவாகிய உயர்குடியினர் தேசியவாதம், பூர்சுவா தேசியவாதம் விவசாயிகளின் தேசியவாதமாக மாற்றடைவது பற்றிக் குறிப்பிடுகின்றார். இவைகள் எல்லாம் வெவ்வேறு வர்க்கங்களை பிரதிநிதித்துவப் படுத்தி வளர்வதாகும். (168 குறிப்பை படிக்கலாம்.) இந்தப் போக்க 2009 பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதம் எல்லாவற்றையும் சிங்கள, பௌத்த அடையாளமாக மாற்றுகின்றது. இதனால் தமிழ் பகுதியில் இருந்து உருவாகும் வெவ்வேறு வர்க்க பின்புலம் கொண்டவர்களின் அரசியல் போக்கோடு இணைத்துப் பார்த்திட முடியும். இதன் பொருள் போலந்தின் தேசியவாத சட்டகத்தினுள் அடக்கிவிடுவதல்ல. வர்க்கங்களின் போக்கை அறிவதற்காகும். சிந்தனையும், வர்க்கங்களிப் போக்கினை ஆய்வு செய்வதற்கு உதவிட முடியும்.
மகாருஷ்ய பெருந்தேசியவாத வளர்ச்சி ‘‘ இந்த நிலைமையில், ருஷ்யாவின் பாட்டாளி வர்க்கத்தின் முன்னே இரு மடங்களான, ஓரளவுக்கு இரு தன்மையான பணி உள்ளது, பொதுவாக எல்லாத் தேசிய இனங்களின் முழுமையான சம உரிமைகளை ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி, ஆட்சி அமைப்பு சம்பந்தப்பட்ட சமஉரிமைகளை, அதாவது தேசிய இனங்களின் சுயநிர்ணயம், பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக் கொள்வது,. – அதேசமயம் எல்லா தேசிய இனங்களின் மத்தியிலுள்ள எல்லா வகைப்பட்ட தேசியவாதத்தையும் எதிர்த்து வெற்றிகரமாகவே, பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்க அமைப்புகளின் ஒற்றுமையைப் பேணிக்காப்பதும், தேசிய இனத் தனித்துவத்திற்கான பூர்சுவா முயற்சிகளை எதிர்த்து இந்த அமைப்புக்களை நெருங்கி இணைந்த சர்சதேசக் கூட்டு நிறுவனமாக இணைப்பதும் அவர்களது பணியாகும்.
அனைத்து தேசிய இனங்களுக்கும் முழுமையான சமஉரிமை,. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை,. அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளிகளின் ஐக்கியம்- இது தான் மார்க்சியமும் உலக முழுவதன் அனுபவமும் ருஷ்யாவின் அனுபவமும் தொழிலாளர்களுக்குக் கற்பிற்கும் தேசிய இன வேலைத்திட்டம். (169)
மகாருஷ்யர்களின் தேசிய இனப்பெருமிதம் பற்றி
‘‘ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்களின் நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் நலன்களுடன் உறுதியாக இணைந்திருக்கும் மிக பரவலானதும் மிக ஆழப்பதிந்ததுமான ஒரு சித்தாந்தப் போக்கை நாம் காண்கின்றோம். இவ்வர்க்கங்களுக்குச் சாதகமான கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதற்குக் கோடி, பத்துக்கோடிக் கணக்கிலும் பணம் ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்படுகிறது.” (172)
தேசிய உணர்விற்கும் தேசிய வெறிக்கும் இடையிலே உள்ள மாறுபாட்டை இன்று குழப்பிக் கொண்டே இருக்கின்றார்கள். சமூகத்தின் வாழ்வியலில் ஏற்படுகின்ற சமூக உறவுகள் என்பது பழைய உற்பத்தி முறையில் அமைந்ததாகவே இருக்கும். பிளெஹானவ் போன்றவர்கள் பெருந்தேசிய வெறியர்கள் ஆனார்கள். இதற்கும் தோழர் லெனின் கூறுவதற்கும் பெரும் மாறுபாடு உள்ளது. ” வர்க்க உணர் கொண்ட மகாருஷ்யப் பாட்டாளிகளாகிய நமக்குத் தேசிய இனப் பெருமிதம் அப்பாற்பட்டதா? இல்லை, நிச்சயமாக இல்லை! நாம் நமது மொழியையும் தாய்நாட்டையும் நேசிக்கிறாம்., அதன் உழைக்கும் வர்க்கும் மக்களை (அதன் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் பத்தில் ஒன்பது பங்கு) ஜனநாயகவாதிகள், சோஷலிஸ்டுகளின் உணர்வு பூர்வமான வாழ்க்கைத் தரத்துக்கு உயர்த்தும்வதற்கு நம்மால் இயன்றதனைத்தையும் செய்கிறோம். (173)
தோழர் லெனின் ஜனநாயக தேசியவாதியின் குரலை இங்கு எடுத்தாழ்கின்றார், ‘‘துரயரம் நிறைந்த ஒரு தேசிய இனம், அடிமைகள் வாழும் ஒரு தேசிய இனம், உச்சியிலிருந்து அடிவரை எல்லோரும் அடிமைகள்” என்றார் அவர்.” (174) இது ஜாரிஸ முடியாட்சியின் கீழ் அடிமையாக இருந்தார்கள் என்கின்றார்.
இங்கு 2000 ஆண்டுகளாக கடல்வாணிபம் செய்த, பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்த ஒரு தேசிய இனம் இன்று அடிமைப்பட்டுள்ளது. இங்கு வரலாறு பற்றித் தாம் பேசப்படுகின்றது. இந்த வரலாற்றைப் பேசாது மறைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. ‘‘பொது ஜனங்களிடையில் புரட்சி உணர்வு இல்லை என்ற துயரம் தோய்ந்த அன்பு அது. இந்தப் புரட்சி உணர்வு அன்று காணப்படவில்லை. இன்று அது குறைவாகக் காணப்படுகிறது, ஆனால் கட்டாயமாக நிலவுகிறது. நம்து மகாருஷ்ய தேசிய இனம் கூட ஒரு புரட்சிகரமான வர்க்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதால், கொலைகாரக் கலகங்களையும், வரிசை வரிசையாகத் தூக்கு மரங்களையும், கொடுஞ்சிறைகளையும், பெரும் பஞ்சங்களையும் மதகுருக்களுக்கு ஜார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் அடிமை ஊழியம் செய்வதை மட்டுமின்றி, சுதந்திரத்துக்கும் சோஷலிசத்துக்குமான போராட்டத்தையும் பேருதாரணங்களாக மனித இனத்துக்கு நமது தேசிய இனம் கூடத் தரமுடியும் என நிரூபித்திருப்பதால் நம்முள்ளத்தில் ஒரு தேசிய இனப் பெருமித உணர்வு ஊற்றெடுகிறது.” (174-5)
சிந்து வெளி நாகரீகம் என்பது மனித குலத்துக்கு பங்காற்றிய பாத்திரத்தை பதியப்பட வேண்டும். நாமும் தமிழர்கள் என்பதால் அந்த வரலாற்றை எழுதக் கூடாது என்பது இல்லை. மனித குலத்துக்கு வழங்கிய கொடைகளில் தமிழர்களும் உள்ளார்கள். அந்த வரலாற்றை எழுதுகின்ற போது இனவெறியர், தமிழ் தேசிய வெறியர் இத்தியாதி என எழுதித் தள்ளும் பிற்போக்கு கூட்டமும் உள்ளது. (174) ஒரு வரலாற்றுக் காலத்தில் முன்னோக்கி செல்லத் தடையாக இருக்கும் எழுச்சி அற்ற தன்மையை குறிப்பதாகின்றது.
இந்திய, இலங்கை நிலையில் சனாதனத்தின் கீழ் அடிமையாக உள்ளார்கள். சனாதன வடிவம் அனைத்து வரலாற்றையும் தன்வசப்படுத்தியுள்ளது. தமிழர் வரலாற்றை மறைத்து மேலான்மை கொண்டிருக்கின்றது. இன்று ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு அனைத்தையும் சனாதன அடையாளம் கொடுக்கின்றது. தோழர் லெனினின் தேசிய வெறி என்றும் எழுதினாலும் ஆச்சரியமில்லை. அவ்வாறு தான் மார்க்சியப் படிப்பு கீழ் நிலைக்குச் சென்றுள்ளது. ஏனெனில் மார்க்சியத்தை வைத்தே பிழைப்புவாதிகளாக மாறியுள்ளார்கள். இவ்வாறான மார்க்சிய விரோத மதிப்பீடுகளை கவர்க்சிகரமாக முன்வைத்துக் கொண்டே செல்கின்ற பிழைப்புவாதிகள் உள்ளார்கள். இந்த பிழைப்புவாதிள் தொடுக்கும் திரிபுவாதத்தை எதிர்ப்பது பெரும்பாடே. பிழைப்புவாதிகள் எல்லோரும் ஒரே அணியில் இருந்து கொண்டு தாம் வெளிப்படுத்துவதே மார்க்சியமாக முன்னிறுத்துகின்றார்கள்.
இது மு.சோ.க, ஜேவிபி, பு.ஜ.மா.லெ. கட்சியும் அடங்கும். இவ்வாறான பேரினவாத, போலி இடதுசாரிகளை எதிர்க் கொள்ள வேண்டியுள்ளது. இவர்களைக் கடந்தே செல்ல வேண்டியிருக்கின்றது. ஒவ்வொரு மார்க்சியவாதிகளும் சமூகத்தினை ஆய்வு செய்யக் கூடிய சமூகவியலாளர்களே. சமூக ஆய்வுக்கான பயிற்சி என்பது அடிப்படையில் கொடுக்கப்பட்டே வளர்க்கப்படுகின்றார்கள். இது தான் திரிபு வாதப் போக்கிற்கு முன்னரான வரலாறாக இருந்துள்ளது.
இங்கு தேசிய உணர்வு என்பது இயல்பானது. இதில் என்ன கீழான நிலை உள்ளது? மனித குலவரலாற்றில் இடம் பெற்ற வரலாற்று நிகழ்வுகளை வரலாறாக ஏற்று நடக்க வேண்டியது தான். மாறாக மகாருஷ்ய த்தின் பின்னால் சென்று தாய்நாட்டைக் காப்போம் என்பது 10 இல் 9 மக்கள் தொகுதியை மறுப்பதாகும் அவர்கள் யார் எனில் ஏமாற்றுப் பேர்வழிகள்.
இவ்வாறான சிங்கள பெருந்தேசியவாதத்தை மூடிமறைக்கும் மு. சோ.க மற்று ஜே.வி.பியாகும். இதனைப் புரியாத வயோதிப தமிழர் தரப்பில் செந்தில்வேல் கும்பல்..
கறுப்பு நூற்றுவர், மகாருஷ்யர்களின் சிந்தனை கட்டமைப்பு என்பது பழைய நிலமானியச் சிந்தனையானது மதகுருக்கள், நிலப்பிரபுக்களின் சிந்தனையே. இங்கு முற்போக்கு பேசும் போது மதங்கள் போதிக்கும் பிற்போக்குச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவர்களே முற்போக்குவாதிகள், வரலாற்றுப் போக்கில் தாய்- தந்தை நாடை பாதுகாக்க வேண்டும் என்பது பிற்போக்கு அரச இயந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்ற பேபியன் கழகத்தினர், மற்றும் இரண்டாம் அகிலத்தினரும் அடங்கும்.
‘‘பிற தேசிய இனங்களை ஒடுக்குகின்ற எந்த ஒரு தேசிய இனமும் சுதந்திரமாயிருக்க முடியாது” பத்தொன்பதாம் நூற்றாண்டின் முரண்பாடுகளற்ற ஜனநாயகத்தின் மாபெரும் பிரதிநிதிகளாக விளங்கியவர்களும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்களுமான மார்க்ஸ், ஏங்கெல்சின் வாக்கு இது. தேசிய இனப் பெருமித உணர்வு நிறைந்த மகாருஷ்யத் தொழிலாளிகளாகிய நாம், என்ன நேரினும் சரியே, ஓரு கட்டற்ற, சுதந்ரமான, சுயேச்சையான, ஜனநாயக ரீதியான, குடியரசான, பெருமிதம் மிக்க மகாருஷ்யாவை விரும்புகிறோம்,. சமத்துவம் என்ற மனிதக் தன்மை மிக்க கோட்பாட்டின் அடிப்படையில்- ஒரு பெரும் தேசிய இனத்திற்கு இழுக்குத் தரும் விசேஷ உரிமைகள் என்ற நிலப்பிரபுத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லாமல்- அண்டை நாடுகளுடன் தனது உறவுகைள அமைத்துக் கொள்ளும் மகாருஷ்யாவை நாம் விரும்புகிறோம். இதை நாம் விருப்புகிற காரணத்தினால் நாம் கூறுகின்றோம்,. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (ஐரோப்பாவின் கீழ் கோடியிலும் கூடத்தான் ) ‘‘தாய்நாட்டைக் காப்பது” என்பது முடியாட்சியை, நமது தாய்நாட்டின் நிலப்பிரபுக்களை, முதலாளிகளை – நமது நாட்டின் இப்படுமோசமான எதிரிகளை உபயோகித்துப் போராடுவதன்றி வேறுவிதத்தில் சாத்தியமில்லை; - எந்தப் போரிலும் ஜாரிஸத்தின் தோல்வியை, மகாருஷ்யாவின் பத்தில் ஒன்பது குடிமக்களுக்கு ஆகக் குறைந்த தீமை என்ற வகையில், விரும்பாமல் மகாருஷ்யர்கள் ‘‘தாய்நாட்டைக் காப்பது” சாத்தியம் அல்ல என்று நாம் கூறுகிறோம். ஏனென்றால் ஜாரிஸம் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இந்தப் பத்தில் ஒன்பது பேரை ஒடுக்கிறது என்பது மட்டுமல்ல ; மேலும் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும்படியும், இந்த அவமானத்தை நயவஞ்சகமான, நாட்டுப் பற்று மிக்கவை போல் தோன்றுகின்ற போலி நாட்டுப்பற்றுச் சொற்களைக் கொண்டு மூடி மறைக்கும்படியும் அவர்களுக்கு ஜாரிஸம் கற்றுக் கொடுத்து அவர்களை ஒழுக்க நெறிபிறழச் செய்கிறது, இழிவுபடுத்துகிறது, மானங்கெடுக்கிறது, வேசிகளாக்குறது.
ஜாரிஸம் மட்டுமின்றி, அதனுடைய பாதுகாவலின் கீழ் மற்றொரு வரலாற்று பூர்வமான சக்தியும் தோன்றி வலுப்பெற்றுள்ளது என் சிலர் ஆட்சேபிக்கக் கூடும்; அதுதான் மாருஷ்ய முதலாளித்துவம்; அது பரந்த பிரதேசங்களைப் பொருளாதார ரீதியில் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து ஒன்றுபடுத்தி ஒரு முற்போக்குச் செயலைத் செய்து வருகின்றது. ஆனால் இந்த ஆட்சேபத்தை முன்வைத்து நமது சோஷலிஸ்டு தேசிய வெறியர்களின் போக்கிற்கு நியாயம் கற்பித்து விட முடியாது, அதற்கு மாறாக மேலும் பலமான அவர்களுடைய போக்கு கண்டனத்துக்கே உள்ளாகிறது. இந்து சோஷலிஸ்டு தேசிய வெறியர்களை நாம் ஜாரிஸ புரிஷ்கேவிச் சோஷலிஸ்டுகள் என்று அழைக்க வேண்டும். (176-77)
இங்கு தமிழர் தேசத்தை மாத்திரமல்ல சிங்கள் உழைப்பாளிகளையும் ஒடுக்குகின்றது. ஆனால் தாய்நாட்டைப் பாதுகாப்போம் என்று ஒடுக்குமுறை அரச இயந்திரத்துடன் இணைந்து செயற்பட்டது சிங்கள இடதுசாரி கட்சி ஈழ ஆக்கிரமிப்பின் போது பதுங்குழிகளை அமைத்துக் கொடுத்தார்கள். சிங்கள பெருந்தேசியவாதத்தின் தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை பற்றி மார்க்சிய நிலையில் நின்று செயற்படவில்லை. ”முதலாளித்துவம் தோற்றுவிக்கும் கம்யூனிஸ்ட் புரட்சியின் தலையான இயக்கு சக்தி என்ற வகையில் மாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் பணி இன்னும் பெரியதாக இருக்கும் என்பது அதன் அடுத் விளைவாகும். பூரண தேசிய இனச் சமத்துவம் என்ற உணர்வில் தொழிலாளிகளைத் தொடர்ந்து நீண்ட நாள் பயிற்றுவித்து வளர்ப்பதும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவையானது. எனவே, மாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் எல்லாத் தேசிய இனங்களுக்கும் பூரைண சமத்துவமும் சுயநிர்ணய உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் எனறு மிகவும் உறுதியாகவும், சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், தைரியமாகவும் புரட்சிகர முறையில் போராட வேண்டும் என்று பொதுமக்களுக்கு முறையாகப் போதிக்க வேண்டும்; மாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கே இது மிகவும் தேவையானது.” (178)
‘‘ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார். (178)
சுருக்கமாக சொல்வது என்னவெனில் ஒடுக்கும் தேசிய இனத்திற்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உணர்வுகளும் ஒன்றல்ல. இங்கு http://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2015/12/blog-post.html மேலதிகமாக அறிந்து கொள்ள முடியும்.)
https://www.marxists.org/archive/lenin/works/1916/jan/x01.htm பிகு. இதில் ” செய்கிறது, இழிவுபடுத்துகிறது, மானங்கெடுக்கிறது, வேசிகளாக்குறது.” தோழர் லெனின் பயன்படுத்தும் வார்த்தைகள் இந்த இணைப்பில் சரிபார்க்கப்பட்டது.
சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும். ஆய்வுரைகள் (179)
ஆய்வுரை
தோழர் லெனின் இந்தப் பகுதியில் செயலூக்கமுள்ள என்று சோசலிசத்திற்காக பாதையில் வழிகாட்டுகின்றார். இந்த அடிப்படையில் இருந்து விடயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய உலகக் கட்டமைப்பானது “வர்க்க முரண்பாடுகளைப் பிரமாண்டமான அளவில் தீவிரப்படுத்துதல், பொருளாதார துறையில் – (“நம்பிக்கை நிதியங்கள் trusts“) டிரஸ்டுகள் , அதிக வாழ்க்கைச் செலவு மூலமும், அரசியல் துறையில் - இராணுவ வெறி வளருதல், முன்னைய விட அடிக்கடி நிகழும் போர்கள், முன்னிலும் அதிக பலம் வாய்ந்த பிற்போக்குச் சக்திகள், தேசிய இன ஒடுக்கு முறையும் - அதிகப்படுத்தப்பட்ட காலத்தில் வாழ்கின்றோம்.
யுத்த மேகங்கள் சூழ் உலகம் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டங்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக கட்டமைக்கப்பட வேண்டும். முரண்பாடுகளின் போக்கை கவனத்தில் கொண்டு கோட்பாடுகள் வகுக்கப்பட வேண்டும்.
கேள்வி :::
ஏகாதிபத்தியக் காலத்தில் தேசிய எழுச்சியை கட்டமைக்க வேண்டும் என்பது தவறா? இல்லை சாத்தியம் இல்லை என்று மூடிக் கொண்டு இருக்க வேண்டுமா?
இலங்கை போன்ற நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்பது முழுமையடையவில்லை. இந்த நாடுகளில் தேசிய இயக்கங்களும் முழுமையடையவில்லை. ஏகாதிபத்திய காலத்தில் எவ்வாறு புரட்சிகர இயக்கங்களை கட்டுவது என்று பாராம்பரிய இடதுசாரிகள் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றார்கள்.
1. உழைப்போருக்கும் ஒடுக்கப்படுவோருக்குமான ஆட்சியரை மக்களே தேர்ந்தெடுத்தல். அதில் முதலாளித்துவ வர்க்கத்தை தவிர்த்தல்
2. பழைய அதிகார வர்க்க முறைமையை ஒழித்தல் மக்கள் தாமே தேர்தல் நடத்தி சோவியத்திற்கு தெரிவு செய்தல். தாமே நடத்திய தேர்தலில் தெரிவு செய்தவர்களை திருப்பி அழைப்பது.
3. உழைப்பாளி மக்களின் முன்னணிப்படையானது தலைமை தாங்குவது, மக்களை அமைப்பாக்கல், அரசியல் நிர்வாகம் கற்பிற்பது, நடைமுறை – சொந்த அனுபவத்தின் ஊடாக கற்பது மக்கள் அனைவரும் நிர்வாக கலையை கற்பது, நிர்வகிப்பது என்பது பழைய ஆட்சிமுறையை கொண்டதாக இல்லாத பாட்டாளி வர்க்கம் அதிகாரம் கொண்ட ஆட்சிமுறையாகும். பரீசு கம்யூனி புரட்சியின் பின்னர் பழைய ஆட்சி நிறுவனமுறை தொடர்ந்தால் ஏற்பட்ட பின்னடைவின் பின்னர் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் அந்த முடிவிற்கு வருகின்றார்கள்.
முதலாளித்துவ- தேசிய ஜனநாயக சகாப்பதம் என்பதன் ஊடாகவே சோசலிசத்திற்கு சென்றிட முடியும். ‘‘ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் உச்சக் கட்டம். மிக முன்னேறிய நாடுகளில் மூலதனமானது தேசிய இன அரசுகளின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து போட்டிக்குப் பதிலாக ஏகபோகத்தை நிலைநாட்டி, சோஷலிசத்தை அடைவதற்கான புறநிலை முதனிலைகள் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது. ” (180)
முன்னைய கோட்பாட்டில் செயல்பூர்வமானது என்ன என்று விளக்கியிருப்பார் தோழர் லெனின். இது அடுத்த இன்னும் ஆழமாகச் சென்று செயல்பூர்வமானது பற்றி விளக்கியுள்ளார்.
1.ஏகாதிபத்தியமும் சோஷலிசமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலையும்
“உழைப்புப் பணம் அல்லது நெருக்கடிகளை ஒழித்தல் முதலியன முதலாளித்துவத்தின் கீழ் செயல்பூர்வமானது அல்ல. தேசிய இனங்களின் சுயநிர்ணயமும் அதேமாதிரி செயல்பூர்வமானது அல்ல என்பது முழுக்க முழுக்கத் தவறு.” (182)
‘‘அடிமைப்பட்ட தேசிய இனங்களை விடுதலை செய்வோம் என்றும் அவைகளுடன் சுதந்திரமான ஐக்கியத்தின் அடிப்படையில்- சுதந்திரமான ஐக்கியம் என்ற சொல் பிரிவும் உரிமையில்லாவிடின் பொய்யானது- உறவுகளை அமைத்துக் கொள்வோம் என்றும் தற்போது மட்டுமற்றி, புரட்சியின் போதும் புரட்சி வெற்றி பெற்ற பின்னரும் தம் செயல்களனைத்திலும் நிரூபிக்காத சோஷலிஸ்டுக் கட்சிகள் சோஷலிசத்துக்கு துரோகம் செய்பவை ஆகும் (181)
2.சோஷலிசப் புரட்சியும் ஜனநாயகத்துக்கான போராட்டமும்
இந்தப் பகுதியில் 1896 அகிலம், பிளெக்ஹெவ் முடிவு, 9 வரைவு இவைகளை எதிர்த்து விமர்சனம் செய்யப்படும் போது அவர்களின் வாதங்களை உள்வாங்கி அதற்கான எதிர்கோள்களை முன்வைக்கின்றார். தோழர் லெனின் எதிராளிகளின் கருத்தை உள்வாங்கு ஏதிர் கோள் வைக்கின்ற போது அதனை விளங்கிக் கொள்வது சிமரம். (மொழிபெயர்ப்பில் உள்ள குறையாகவும் இருக்கலாம்) கீழ் உள்ள வரிகளை கவனமாக வாசிக்க வேண்டும்.
‘‘சோஷலிசப் புரட்சி என்பது ஒரே தனிச் செயல் அல்ல, ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல; கூர்மையான வர்க்கச் சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது, எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராடங்கள் நடக்கும் சகாப்தம் அது;” (181) இங்கு ஜனநாயகப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தை திசை திருப்பாது என்கின்றார். ஜனநாயகத்துக்காக எல்லா முனைகளிலும் முரண்பாடுகளின்றி புரட்சிகர போராட்டம் நடத்தாது பாட்டாளி வர்க்கம் பூர்சுவா வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியாது என்கின்றார்.
‘‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது ஏகாதிபத்தியத்தின் கீழ் ‘‘செயல்பூர்வமானதல்ல” என்றோ ‘‘ஏமாற்றத் தன்மை வாய்ந்தது” என்றோ கூறி அதை ஜனநாயகச் செயல்திட்டத்தின் ஒரு பிரிவிலிருந்து நீக்கி விடுவது பெரிய தவறுதான். முதலாளித்துவத்தின் கட்டமைப்புகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை செயல்பூர்வமானதல்ல என்ற வாதத்தை எவ்வித எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல என்ற பொருளாதார அர்தத்திலோ அல்லது நிபந்தனைக் குட்பட்டது என்ற அரசியல் அர்தத்திலோ புரிந்து கொள்ள முடியும்”(182)
அர்த்தம் 1. கோட்பாட்டுத் தவறு பற்றி
சுயநிர்ணயம் தவறு என்போர்.
‘‘உண்மையில், ஆண்டுக்கு ஆண்டு மூலதனக் குவிப்பு இல்லாமல், நவீன சமுதாயம் முன்னேற முடியாது, மேலும் ஆண்டுக்கு ஆண்டு விரிவாக்கப்பட்ட மறுஉற்பத்தி இல்லாவிட்டால் மூலதனக் குவிப்பு சாத்தியம் இல்லை என்று மார்க்சியத்தின் மறுஉற்பத்திக் கோட்பாடு போதிக்கிறது. இது தெளிவானதும் புரிந்துகொள்ளக் கூடியதும் ஆகும். நமது பெரிய அளவிலான, மையப்படுத்தப்பட்ட, சோசலிசத் தொழில் துறை அளவில் விரிவாக்கப்பட்ட மார்க்சிய மறுஉற்பத்திக் கோட்பாட்டுக்கு ஏற்ற வளர்ந்து கொண்டிருக்கிறது; அது ஆண்டுக்கு ஆண்டு கொள்ளளவில் வளர்ந்து கொண்டிருப்பதால் அதன் குவிப்பை கொண்டதாக இருக்கிறது, மேலும் அது இராட்சத அடி எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.’’ (SJV 162-12)
தேசத்திற்கான மூலதனம் என்பது அவசியமானது, தவிர்க்க முடியாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். “உழைப்புப் பணம் அல்லது நெருக்கடிகளை ஒழித்தல் முதலியன முதலாளித்துவத்தின் கீழ் செயல்பூர்வமானவை அல்ல. தேசிய இனங்களின் சுயநிர்ணயமும் அதேமாதிரி செயல்பூர்வமானது அல்ல என்பது முழுக்க முழுக்கத் தவறு.”( 182)
இந்தப் பகுதியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலாளித்துவ வளர்ச்சி எவ்வாறு முன்னேறிய முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கு வளர்த்தெடுக்கின்றது என்பது பற்றி திரும்பத் திரும்ப வெவ்வேறு தளத்தில் கூறுகின்றார். அதாவது செயல்பூர்வம் – வளர்ச்சியை தூண்டுகின்றது, முன்னோக்கி நகர்கின்றது என்ற பொருளிலேயே அதனை விளங்கிட முடியும்.
அர்த்தம் 2
நோர்வே பிரிந்ததின் ஊடாக ”செயல்பூர்வமானது” என்கின்றார்.
அர்த்தம் 3.
முதலாளித்துவ தேசிய ஜனநாயக இயக்கங்கள் வளரும் என்பதை மறுப்பது தவறு என்கின்றார்.
அர்த்தம் 4.
ஏகாதிபத்தியங்கள் தரகு வர்க்கத்தை வைத்து எவ்வாறு ஆட்சி செய்வார்கள் என்பது பற்றி தோழர் லெனின் அறிவுறுத்துகின்றார்.
இதனை தோழர் மாவோ பின்கொலனித்துவம், அரை கொலனித்துவம் என்கின்றார். இந்த இடத்தில் தான் ஒவ்வொரு தேசங்களின் சந்தையையும், எல்லை, அரசுரிமை சாத்தியமில்லை என்கின்றார்கள்.
ஏகாதிபத்திய காலத்திலும் உள்நாட்டு சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும். அதே நேரத்தில் எகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராட வேண்டும். இன்றைய ஏகாதிபத்தியத்தில் பண்பு மாற்றம் அடைந்துள்ளாதாக கூறுகின்றார்கள். ஆனால் ‘‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் மீதான ஒரு மேற்கட்டுமானம். அது தகர்ந்து விழும்போது நாம் உச்சியை அழிப்பதிலும் அடித்தளத்தை அம்பலப்படுத்துவதும் ஈடுபடுவதைக் காண்கிறோம். இதனால் தான் வேலை திட்டம் அது பிழையற்றதாக இருக்குமானால் உள்ளபடியே என்ன நிலவுகிறது என்பதைச் சாற்ற வேண்டும். பழைய முதலாளித்துவம் இருக்கிறது, அது பல கிளைகளில் ஏகாதிபத்தியமாக வாழ்ந்திருக்கிறது. அதன் போக்கியல்புகள் தனி முழுமையாயும் ஏகாதிபத்தியத் தன்மையுடையவை. ஏகாதிபத்தியத்தின் கருத்து நிலையில் இருந்து மட்டுமே அடிப்படையான விடயங்களைப் பரிசீக்க முடியும். இந்தப் போக்கியல்பின் கருத்தை நிலையில் இருந்தல்லாமல் வேறு எந்த வழிகளிலும் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கை சம்பந்தப்பட்ட எந்தத் தனி ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. வேலைத்திட்டம் இப்போது விளக்குவது இதைப்பற்றி அல்ல, எதார்த்தத்தில் பழைய முதலாளித்துவத்தின் மிக பரவலான அடித்தளம் இருக்கிறது. போருக்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்தியத்தின் மேற்கட்டுமானம் இருக்கிறது. இந்தப் போரில் இருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தொடக்கம் பின் நிகழ்ந்தது. இந்த கட்டத்தை நீங்கள் தவிர்க்க முடியாது. இந்த மெயநடப்பு உலகம் முழுவதுமான பாட்டாளி வர்க்க புரட்சியின் மெய் வீதத்தின் சிறப்பம்சமாகும், வரப் போகும் பல ஆண்டுகளுக்கு மெய்யாகவே நீடிக்கும். (200-லெ9) ஏகாதிபத்திய காலத்தின் ஆரம்ப பண்ட உற்பத்தி வடிவத்தினால் இட்டுச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதைக் கணித்துக் கொள்ள வேண்டும். இந்த எதார்த்தத்தை கணிப்பீடு செய்தால் மாத்திரமே நடுத்தரவிவசாயிகளின் பாலான உறவு நிலைக்கு தீர்வு காணமுடியும். பின்தங்கிய முதலாளித்துவ நிலையில் உள்ள சமூகத்தை முன்னோக்கி நகர்த்திட முடியும். ‘‘சிறு உற்பத்தியாளன், இதுவு முதலாளித்துவத்தின் அடிச்சுவடி, இதை விஞ்சி இன்னும் நாம் வளர்ந்துவிடவில்லை,‘‘ எனவே இதைப் பற்றி பேசவேண்டும். தேசம் என்பது பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கமாகும். பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து முதலாளிய வர்க்கத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றே வாய்ப்பாட்டு மார்க்சியர்கள் கேட்கின்றார்கள். இது புகாரின் சிந்தனைப் போக்கே இங்கு மார்க்சியமாக ஒலிக்கின்றது.
தோழர் லெனின் இந்த ஆய்வு முடிவு விளங்கிக் கொள்வதற்கு சிரமானது எனவே அவரின் எழுத்தையே முழுவதுமாக எழுதப்படுகின்றது. இன்று தோழர் லெனினின் ஏகாதிபத்திய வரையறை போதாது, ஏகாபத்திய முறை வேறாக உள்ளது. ஏகாதிபத்தியம் பண்பு முறையில் வளர்ச்சியடைந்துள்ளது. அது மென்மேலும் முதலாளித்துவ ஜனநாயக நிர்வாக அலகில் தனக்குத் தேவையான வகையில் சிறப்புத் தேர்ச்சியை முன்னிறுத்தியிருக்கின்றது. தோழர் மாவோ சமச் சீரற்ற ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியங்கள் திணிக்கின்றது என்கின்றார். அதையும சேர்ந்துப் படிக்க வேண்டும்.
‘‘நான்காவதாக, விரிந்து பரவத் துடித்துக் கொண்டிருக்கும் நிதி மூலதனமானது எந்த ஒரு நாட்டினுடையவும், “சுயேட்சையான” நாட்டினதுங் கூட மிகச் சுதந்திரமான ஜனநாயக, குடியரசு அரசாங்கத்தையும் அதன் தேர்ந்தெடுக்கபட்ட அதிகாரிகளையும் ‘‘சுதந்திரமான” விலைகொடுத்து வாங்கவோ அல்லது கைக்கூலி கொடுத்து வசப்படுத்தவோ முடியும். அரசியல் ஜனநாயகத் துறையில் எந்த விதமான சீர்திருத்தங்களையும் செய்வதன் மூலம் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை, பொதுவாக மூலதனத்தின் ஆதிக்கத்தை அகற்றிவிட முடியாது; சுயநிர்ணயம் என்பது முழுமையாகவும் பிரத்தியேகமாகவும் இத்துறையைச் சேர்ந்தது. ஆனால் அரசியல் ஜனநாயகம் ஒடுக்குமுறை, வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் அதிக சுதந்திரமான, பரவலான, தெளிவான ஒரு வடிவம் என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மையை நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கம் சிறிதும் சிதைப்பதில்லை. எனவே முதலாளித்துவத்தின் கீழ் அரசியல் ஜனநாயகத்துக்கான ஒரு கோரிக்கை பொருளாதார ரீதியில் ”செயல்பூர்வமற்றது” என்று கூறும் வாதங்கள் அனைத்தையும் சுருக்கினால் அவை முதலாளித்துவத்தின் பொதுவான, அடிப்படை உறவுகளையும் மொத்தத்தில் அரசியல் ஜனநாயகத்தையும் தத்துவாத்த ரீதியில் தவறாக வரையறை செய்வதாகின்றன.” (182-3)
குறிப்பான நாட்டில் உள்ள ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும். இந்த நாடுகள் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்து ஒடுக்கும் தேசத்தின் சந்தையை தாரைவார்க்கின்றார்கள். இங்கு சிங்கள தேசம் 2009 பின்னர் முழுச் சந்தையையும் திறந்து விட்டுள்ளது.
1905 நோர்வே பிரிந்ததை ஏகாதிபத்தியத்தின் கீழு ஓரளவுக்குத் தான் ”செயல்பூர்வமானவை” தேசியத்தின் பெயரால் பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றார் என்று தோழர் லெனின் கருதவில்லை. ஏனெனில் சுதந்திரமான மனிதர்கள் அல்லது தேசங்கள் முரணற்ற வகையில் ஜனநாயகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதேயாகும். தேர்தல் அரசியல் வாதிகளின் பின்னால் சென்று சீரளித்து போயும் சீழ் பிடித்த அரைநிலமானியக் அரச கட்டமைப்புகள் வாழ்வதற்கு இனமதகுலமற்று என்று ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு விடயம் கொலனித்துவ விடுதலை என்பதும் முதலாளித்துவத்தின் கீழ்
‘‘செயல்பூர்வமற்றது” என்பதற்காக போராடக் கூடாதா கேள்வியையும் எழுப்புகின்றார் (184)
‘‘பூர்சுவாக்களின் சட்டமுறை வரம்புகள் நாம் கட்டுண்டு விடக் கூடாது, அவற்றை உழைத்தெறிய வேண்டும்; பாராளுமன்ற வாய்ச்சொல் கண்டனத்தோடு, உரைகள் நிகழ்த்துவதோடு திருப்பதி அடைந்து விடக் நுடாது, பொதுமக்களைச் செயலூக்கம் உள்ள போராட்டங்களில் ஈடுபடும்படி ஈர்க்க வேண்டும், ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக் கோரிக்கைக்குமான போராட்டத்தை ஊட்டி வளர்த்து விரிவாக்கி வரவேண்டும், பூர்சுவாக்களின் மீது நேரடியான பாட்டாளி வர்க்கத் தாக்குதல் வரை, அதாவது பூர்ஷ்வாக்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்யும் சோஷலிஸ்டுப் புரட்சி வரை இது நடைபெற வேண்டும். ஒரு பெரிய வேலை நிறுத்தம் அல்லது தெரு ஆர்ப்பாட்டம், அல்லது பட்டினிக் கலகம், அல்லது ராணுவ எழுச்சி, அல்லது கொலனிப் புரட்சி ஆகிய எந்த ஓரு காரணத்தாலும் சோஷலிஸ்டுப் புரட்சி வெடித்தெழலாம் என்பது மட்டுமல்ல;-- ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போவது பற்றிய பொதுவாக்கெடுப்பு போன்ற அரசியல் நெருக்கடிகளாலும் கூட அது வெடித்தெழலாம்.
ஏகாதிபத்தியத்தின் கீழ் தேசிய இனஒடுக்குமுறை அதிகமாக இருக்கிறது என்பதற்காக, தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை – இதைக் ‘கற்பனை ரீதியானது” என்கின்றார்கள் பூர்சுவாக்கள்- சமூக ஜனநாயகவாதிகள் நிராகரித்துவிடக் கூடாது; அதற்கு மாறாக, இத்துறையில் எழும் பூசல்களையும் கூடக்; கொழுகொம்பாகப் பற்றிக்கொண்டு, பொதுஜன நடவடிக்கைகளுக்கும் பூர்ஷ்வாக்களுக்கெரிரான புரட்சிகரத் தாக்குதல்களுக்கும் தயாராக வேண்டும். (184)
3. சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவமும் கூட்டாட்சியுடன் அதன் உறவும்
இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய நிலையில் சமூக ஏகாதிபத்திய சீனத்தின் பிடியிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் பிராந்திய வல்லரசின் பிடியில் உள்ளது. இந்த சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற வாதம் வைக்கப்படுகின்றது. இங்கு பிரதான முரண்பாட்டையும், அடிப்படை முரண்பாட்டையும் போட்டுக் குழப்புகின்றார்கள். இதே போல சிங்கள மக்களும் சுயநிர்ணயம் அற்றவர்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகின்றார்கள். சுயநிர்ணய உரிமைக்கு மாற்றாக செயற்கையான ஐக்கியத்தைக் கோரும் நிலைதான் தான் புரட்சிகர கட்சிகள் என அழைத்துக் கொள்பவர்கள் தரம் மிறங்கியிருக்கின்றார்கள். ஒடுக்குபவர்கள் முறையிலேயே சாத்தியப்பாடு இல்லை என்று வகுப்பெடுக்கப்படுகின்றது.
1. பிரத்தியேகமாக அரசியல் ரீதியில் சுயேச்சை பெறுதல்
2. அரசியல் ரீதியில் சுதந்திரம்
3. பிரிந்து போவதற்கு கிளர்ச்சி செய்யும் உரிமை
4. பொதுவாக்கெடுப்பு எடுக்க முடியும்.
இங்கு ஐக்கியத்தின் பெயரில் ஒடுக்குமுறையை ஏற்றுக் கொள் என்று ஆலோசனை வழங்குவது அல்ல. சுதந்திரத்தின் பின்னர் கூட்டாட்சிக்கு உடன் படலாம். அதன் ஊடாக மேலும் தேசிய இனங்களிடையே நம்பிக்கையும் இறுக்கமும் ஏற்படும். இனமதகுலமற்றுப் போராடுவோம் என்று அகநிலையை முன்னிறுத்தி செயற்கை ஒன்றுமையை உண்டாக்க முயற்சிக்கின்றார்கள். மக்களிடம் மாற்றம் என்பது உற்பத்தி உறவினால் மாற்றம் பெற வேண்டியது.
ஒன்றுகலத்தல் என்பது பற்றிய லெனின் பேசுவது மொழியற்ற யூதர்களின் குறுங்குழுவாதம் பற்றியதே. இவைகள் இரண்டறக் கலப்பது என்பது முற்போக்கானது. எனவே ஒட்டோ பௌவர் போன்றவர்களின் பிற்போக்குத் கருத்தை மக்களுக்கு விளக்க வேண்டும் என்கின்றார். இதனை விளங்கிக் கொள்ளாது சுயநிர்ணயம், பிரிந்து போதல் போன்றவற்றிற்கு லெனின் பேசுவதாக வாய்ப்பாட்டு மார்க்சியர்கள் விளங்கிக் கொள்கின்றார்கள். ஒன்றுகலத்தல் என்பதை தவறாக விளங்கி உள்ளதாக தோழர் ஸ்ராலின் புரட்சிக்குப் பின்னைய காலத்தில் சுட்டிக் காட்டுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4.தேசிய இனங்களின் சுயநிர்ணயப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கண்ணோட்டத்தில் எடுத்துரைத்தல்
தொழிற்துறை வளர்ச்சியடைந்து வந்த காலங்களில் வர்க்கப்போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கோட்பாடுகள் கற்பனை ரீதியாகத் தான் எழுப்பி வந்ததாக மதிப்பீடு செய்கின்றார். வளர்ந்து வருகின்ற பொருளாதார அமைப்பில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மார்க்சிய லெனினியம் காட்டும் வழி விஞ்ஞான வழிப்பட்டது அல்ல. நமக்குத் தான் மார்க்சிய லெனினியப் பாதை நம்முன்னே உள்ளது.
‘‘ஏகாதிபத்தியத்தின் கீழ்சம அந்தஸ்துடைய தேசிய இனங்கள் அமைதியான முறையில் ஐக்கியமுறுதல் என்ற கற்பனாவாதம் இதுதான். இந்தக் கற்பனாவாதம் மக்களை ஏமாற்றுகிறது;-- ஏகாதிபத்தியத்தின் கீழ் உலகானது ஒடுக்கும் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்று பிரிக்கப்படுவது அடிப்படையானது, கவனிக்கத்தக்க முக்கியம் வாய்ந்தது, தவிர்க்க முடியாத் என்ற கூற்றை சமூக -ஜனநாயகச் செயல்திட்டம் எடுத்துரைக்க வேண்டும்.” (187) இங்கு தான் லெனின் ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் தேசிய இனத்தின் ஒடுக்குமுறைக்காக போராட வேண்டும் என்கின்றார்கள்.
இலங்கையில் தமிழ் கட்சி முற்போக்கு தேசியவாதிகள் தலைமை வகித்தால் தாம் இணைந்து செல்வதாக கூறி தமது பொறுப்பை கைவிட்டுள்ளார்கள்.
சுதந்திரமான தேசங்களின் உரிமையை ஏற்றுச் செயற்படுவதே உண்மையான சர்வதேசியவாதம் என்கின்றார்.
இன்னொரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது கொலனித்துவம் என்பது நேரடியாக இல்லாது, தனது முகவர்கள் ஊடாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகும். இங்கு உள்நாட்டு ஆட்சியாளர்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது தேசிய ஜனநாயகக் கட்டத்தின் ஊடாக நடைபெற வேண்டியதாகும்.
ஆனால் தேசிய இன ஐக்கியத்தை செயற்கையாக கட்டமைக்க முடியாது. ஒடுக்குமுறை இருக்கின்ற போது தொழிலாளி வர்க்கத்தினரிடையே நம்பிக்கை, ஒருமைப்பாடு ஏற்படாது என்கின்றார்கள்.
முதலாளிகள் நுழைந்து விடுவார்கள், தமிழ் முதலாளிகளுக்காக ஈழம் கேட்கின்றார்கள், ஆண்டபரம்பரை ஈழம் கேட்கின்றார்கள், வெள்ளாளியம் தனது சுரண்டலை தொடர ஈழம் கேட்கின்றார்கள். இவை எல்லாம் அரை நிலமானிய சமூகக் கட்டமைப்பை கட்டிக்காக்கின்ற கூப்பாடு தான்.
“ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கெதிரான தொரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு “பெரிய” வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக்க குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். இதனால் சமூக- ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள். இதே போல அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்சுவாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். (உதாரணம்: லத்தீன் நாடுகளில்). ஆனால் இதற்காக சமூக -ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடுவதில்லை.(189)
முதலாம் உலக யுத்தத்தில் சொந்த நாட்டு பூர்சுவா அரசுகளுக்கு எதிராகப் போராடாது தாய் நாட்டைக் காப்போம் இரண்டாம் அகிலத்தினர் நிலைப்பாடு எடுத்தார்கள். சமூகத் தேசிய வெறியர்களாக இருந்தார்கள். இலங்கையில் தாய்நாட்டைக் காப்போம் என்று ஜேவிபியினர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பதுங்குழி அமைத்துக் கொடுத்தார்கள். சமூக தேசிய வெறியர்கள். அதாவது இன்னொரு தேசத்தின் மீதான இனவழிப்பு அரச நிறுவனத்தில் பங்கு கொண்டவர்கள். பதுங்குழி அமைத்துக் கொடுத்தார்கள், கிராமங்களுக்குச் சென்று படைகளுக்கு ஆட்களை சேர்த்துக் கொடுத்தார்கள், மகிந்த சிந்தனை என்ற வரைவை உருவாக்கினார்கள். தாமே யுத்தத்தை தீவிரப்படுத்த அழுத்தம் கொடுத்ததாக கூறி இனவழிப்பை பெருமை சேர்த்தார்கள். இன்று தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு காட்டிக் கொடுக்கின்றார்கள் என்கின்றார்கள்.
ஈழம் தனது அரசுரிமைக்காக போராடுகின்றது, தனது பொருளாதார எல்லையைக் கோருகின்றது, முரணற்ற வளர்ச்சியைக் கோருகின்றது. ஈழ தேசபக்தர்களும் அதற்காகத் தான் மாண்டார்கள்.
5. தேசிய இனப்பிரச்சினை பற்றி மார்க்சியமும் புரூத்தோனிய வாதமும். (190)
ஈழப் போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவ வளர்ச்சியில் இருந்து முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிப் பயணிக்கின்றது. தேசிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்காகும். தேசிய ஒடுக்குமுறை உள்ள போது. பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றுவது சாத்தியம் என்கின்றார்கள்.
ஏகாதிபத்திய காலத்தில் சிங்கள மக்களும் சுயநிர்ணயம் அற்று இருப்பதாக ரொட்ஸ்கியர்கள், போலி மா.லெ வாதிகள் கூறிக் கொண்டே இருக்கின்றார்கள். ‘‘பிற தேசிய இனங்களை ஒடுக்குகின்ற எந்த ஒரு தேசிய இனமும் சுதந்திரமாயிருக்க முடியாது என்ற அடிப்படையான சர்வதேசியவாத, சோஷலிசக் கோட்பாடுகளுக்கு முதலிடம் தந்தார்.” (190)
இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளது. ஏகாதிபத்தியம் முழுமையடையாத கட்டம். ஏகாதிபத்தியங்கள் முழுமை அடைந்த கட்டத்திற்கான கோட்பாடுகளை தோழர்கள் மார்க்ஸ், லெனின் முன்வைக்கின்றார்கள்.
இங்கு நிலப்பிரபுத்துவம் உடைந்து முதலாளித்துவத்திற்கு நகர்வதும், அரைநிலமானியத்திற்குள் இருந்து (சிங்கள பௌத்த பேரினவாத பெரும்பான்மைவாதம்) தமக்கான அரசாங்கங்களை தேர்ந்தெடுப்பது என்பதும், இதற்கு அப்பால் தமிழர்கள் தமக்கான குடியரசை அமைத்துக் கொள்வது என்ற பிரச்சனை இங்கு உள்ளது.
ஏகாதிபத்தியம் இருக்கின்ற வேளையில் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை வலியுறுத்துகின்றார்கள். ஆனால் சுயநிர்ணயம் என்று வருகின்ற போது சிங்கள மக்களிடத்தில் சென்று பிரச்சாரம் செய்யத் தயாராக இல்லை. ஆனால் தமிழர்களிடம் ஒன்றும் சிங்கள மொழியில் இன்னொன்றுமாக பேசிக் கொள்வதே வழக்கமாக இருக்கின்றனர்.
இங்கு செக்கின் பெருந்தேசிய உணர்வையும், ஐரிஸ் விடுதலை எதிர்த்ததை கவனத்தில் கொள்கின்ற போது பெருந்தேசியமும், ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான நிலைப்பாடுகளை வரலாற்றுப் போக்கில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
‘‘அரசியல் ஜனநாயகத்தின் கோரிக்கைகளில் ஒன்றை- குறிப்பாக, தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை -தனிப்பட்டதாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றுக்கு எதிரானதாக அதை வைப்பது தத்துவ ரீதியிலே அடிப்படையான தவறாகும். நடைமுறையில், பாட்டாளி வர்க்கமானது எல்லா ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான – குடியரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையையும் விலக்காதபடியாக – தனது போராட்டத்தை, பூர்சுவாக்களைக் கவிழ்ப்பதற்கான தனது புரட்சிப் போராட்டத்துக்குக் கீழ்பட்டதாக வைத்துக் கொண்டால் தான் அது தனது சுயேட்சையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மறுபுறத்தில், ‘சமுதாயப் புரட்சி என்ற பெயரில் ‘தேசிய இனப்பிரச்சனை” மறுத்தார்கள்‘ புரூதோனியவாதிகள். ஆனால் அதற்கு மாறாக மார்ஸ், முன்னேறிய நாடுகளில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்களை முதலில் கருத்துக் கொண்டு, பிற தேசிய இனங்களை ஒடுக்குகின்ற எந்த தேசிய இனமும் சுதந்திரமாயிருக்க முடியாது என்ற அடிப்படையான சர்வதேசியவாத, சோஷலிசக் கோட்பாட்டுக்கு முதலிடம் தந்தார். ஜேர்மனியில் வெற்றி வாகை சூடிய ஜனநாயகம் ஜேர்மானியர்களால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு விடுதலை அளிக்கும் பிரகடனம் செய்து அவ்விடுதலையை அளிக்க வேண்டும் என்று 1848இல் மார்க்ஸ் கோரினார்,. ஜேர்மன் தொழிலாளர்களின் புரட்சி இயக்கத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு கோரினார். அதே போல ஆங்கிலேயத் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, இங்கிலாங்திலிருந்து அயர்லாந்து பிரிய வேண்டும் என்று 1869 மார்க்ஸ் கோரினார்,. ஆனாலும் ‘‘ பிரிவுக்குப் பிறகு ஒரு வேளை கூட்டாட்சி ஏற்படலாம்‘ என்று அத்துடன் கூறினார். இந்தக் கோரிக்கையை முன்வைத்துத் தான் மார்க்ஸ் ஆங்கிலேயத் தொழிலாளர்களுக்கு சர்வதேசியவாதம் உணர்வை உண்மையில் ஊட்டி வந்தார். இம் முறையில் தான் அவர் சந்தர்ப்பவாதிகளையும் பூர்சுவா சீர்திருத்தவாதத்தையும் ஒன்றைக் காட்ட முடிந்தது.” (190-1)
6. தேசிய இனங்களின் சுயநிர்ணயம் சம்பந்தமாக மூன்று விதமான நாடுகள்!
‘‘முதலாவதாக,
மேற்கு ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் மற்றும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
இந்த நாடுகளில் முற்போக்கான முதலாளித்துவத் தேசிய இயக்கங்கள் நெடுங்காலத்துக்கு முன்பே முடிந்து விட்டன. இந்த ‘மாபெரும்‘ தேசங்களில் ஒவ்வொன்றும் தங்களுடைய நாட்டுக்குள்ளேயும் காலனிகளிலும் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆட்சி செய்கின்ற தேசங்களில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்,
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயர்லாந்தைப் பொறுத்தவரையிலும் இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்கத்துக்கு விதிக்கப்பட்ட அதே கடமைதான்.
இரண்டாவது, கிழக்கு ஐரோப்பா, ஆஸ்திரியா, பால்கன்கள் மற்றும் குறிப்பாக ருஷ்யா. இங்கே முதலாளித்துவ- ஜனநாயகத் தேசிய இயக்கங்களைக் குறிப்பிடத்தக்க விதத்தில் வளர்ச்சியுறச் செய்து தேசியப் போராட்டத்தைத் தீவிரமாக்கியது இருபதாம் நூற்றாண்டே. இந்த நாட்டிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை- முதலாளித்துவ- ஜனநாயகச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுதல், மற்ற நாடுகளில் சோஷலிஸ்டுப் புரட்சிக்கு உதவி செய்தல் ஆகிய இரண்டையுமே- தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காமல் நிறைவேற்ற முடியாது. ஒடுக்கும் தேசிய இனங்களின் தொழிலாளர்களினன் வர்க்ப் போராட்டத்தை ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களில் உள்ள தொழிலாளர்களின் வர்க்கப் போரட்டத்தோடு ஒன்று சேர்ப்பது தான் இதில் மிகக் கடினமான கடமை- மிக முக்கியமான கடமையாகும்.
மூன்றாவதாக,
சீனா,
பாரசீகம் மற்றும் துருக்கியைப் போன்ற அரைக் காலனி நாடுகள் மற்றும் எல்லாம் காலனிநாடுகளும். இவை மொத்தம் ஆயிரம் மில்லியன் ஜனத்தொகையைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது. எல்லாக் காலனிகளுக்கும் நஷ்ட ஈடு இல்லாமல்,
நிபந்தனையற்ற வகையில் உடனடியாக சுதந்திரம் அளிக்க வேண்டும்- இந்தக் கோரிக்கையின் அரசியல் அர்த்தம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை- என்பதைக் கோருவதோடு சோஷலிஸ்டுகள் நின்றுவிடக் கூடாது. இந்த நாடுகளின் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும். தங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு எதிராக அவைகளின் ஆயுதந் தாங்கிய எழுச்சிக்கு அல்லது புரட்சிகரமான யுத்தத்துக்கு - அது ஏற்படுமானால்- உதவி செய்ய வேண்டும்.
‘இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது. எல்லாக் காலனிகளுக்கும் நஷ்ட ஈடு இல்லாமல், நிபந்தனையற்ற வகையில் உடனடியாக சுதந்திரம் அளிக்க வேண்டும்- இந்தக் கோரிக்கையின் அரசியல் அர்த்தம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை- என்பதைக் கோருவதோடு சோஷலிஸ்டுகள் நின்றுவிடக் கூடாது. இந்த நாடுகளின் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும். தங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு எதிராக அவைகளின் ஆயுதந் தாங்கிய எழுச்சிக்கு அல்லது- புரட்சிகரமான யுத்தத்துக்கு - அது ஏற்படுமானால்- உதவி செய்ய வேண்டும். (ப. 193 .இ.பா.வ.சர்)
இலங்கை, இந்தியாக முதலிய நாடுகள் முதலாளித்துவம் புரட்சி முழுமையடையவில்லை. முதலாளித்துவம் தேசிய இனங்களின் வளர்ச்சிப் போக்கு இருக்கின்றது என்பதை மார்க்சியர்கள் கவனத்தில் கொள்ளத் தவறுகின்றார்கள். முதலாளித்துவம் என்பது சந்தை சார்ந்தது மட்டுமல்ல. பழைய உற்பத்தி முறையில் உருவாகிய சிந்தனை முறையும் சமூக உறவும் மாறுதலுக்கு உள்ளாகின்றது. சமூக உறவில் மாற்றம் தீடீரென மாற்றமடைவதில்லை. அது தனக்குத் தேவையாக காலத்தை எடுத்துக் கொள்ளும், உற்பத்தி உறவுகளின் மாற்றமும் அதற்கு துணையாக இருக்கும்.
சிறிலங்கா அரசு முன்னேறிய ஜனநாயகமாக இல்லை எனவே தமிழ் அரசியல்வாதிகள் நிதானமாக கதைக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்படுகின்றது. ஏன் தமிழர்கள் மாத்திரம் அடங்கிப் போகவேண்டும்?
7. சமூக – தேசிய வெறியும் தேசிய இனங்களின் சுயநிர்ணயமும்
“ஏகாதிபத்தியமும் அரசியல் குவிவும் முற்போக்கானவை என்று சாக்குப் போக்குச் சொல்லி, பிற நாடுகளைக் கைப்பற்றி இணைத்துக் கொள்வதை இவர்கள் ஆதரித்துப் பேசுகின்றார்கள்” (194)
ஐரோப்பிய ஒன்றியம் என்ற நிதிமூலதனக் கூட்டை உருவாக்கிக் கொண்டார்கள். சுதந்திரமான பொருள்கள், சேவை, மூலதனம், உற்பத்திச் சக்தியின் சுதந்திரம் என்ற அடிப்படையில் உருவாக்கிக் கொண்டார்கள். இந்தக கூட்டு சந்தையையும், மிகையான உற்பத்திச் (தொழிலாளர்களை) மிகையாக கையிருப்பில் வைத்துக் கொண்டிருக்கின்றன. 1994 ஆண்டு நோர்வே ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதா இல்லையா என்று பொதுவாக்கெடுப்பு எடுத்தார்கள். அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை இணைய முடியாது என்றார்கள். இதேபோல 2020 இல் ஐ. ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது. இது ஏகாதிபத்தியத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடு என்றாலும் கூட ஐ.ஒ உடைவது தொழிலாளர் வர்க்கத்திற்கு நல்லதே. ஐ. ஒ. மூலதனங்களின், சந்தைக்கான அமைதிவழி கூட்டேயற்றி தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரக் கூட்டமைப்பு அல்ல.
இதில் கவனம் கொள்ள வேண்டியது என்னவெனில் நிதிமூலதனத்தின் நலன் சார் அரசியல் பொருளாதாரப் போக்கை கணிப்பதற்கு விஞ்ஞான அறிவு தேவை. மார்க்ஸ்- லெனின்- தளபதி ஸ்ராலினுக்குத் தான் உண்டு.
‘‘சுயநிர்ணய உரிமை என்பது கற்பனை ரீதியானது, மாறையானது, குட்டி குட்டிப் பூர்சுவா தன்மை கொண்டது என்றெல்லாம் கூறி, அத அங்கீரிக்க மறுக்கின்றார்கள்” (194) இந்த பகுதியில் அன்றைய சமூக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர்கள்- இரண்டாம் அகிலத்தவர்களின் நிலைப்பாடை இங்கு கண்டிக்கின்றார். இவர்களை சமூக- தேசிய வெறியர்கள் என்கின்றார்.
~தேசிய இனங்களைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் அரசுகளின் எல்லைக்கோடுகள் பற்றிய பிரச்சினையையே விவாதிக்க மறுக்கிறார்கள், இத்தியாதி. ” 195) ---மார்க்சியன் விளக்கிய செயற்தந்திரத்தின் தத்துவார்த்த முக்கியத்தையும் நடைமுறை அவசரத்தையும் புரிந்து கொள்ளும் திறனை அவர்கள் அறவே இழந்து விட்டார்கள்.” 195)
புரட்சிகளின் நிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. வரலாற்றைக்குக் கட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
8.அடுத்து வரும் காலத்தில் பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான கடமைகள்
பாட்டாளி வர்க்கப் புரட்சியை வேகப்படுத்தும் செயற்தந்திரங்கள் பற்றி கோட்பாட்டு ரீதியாக முடிவெடுக்கப்பட வேணடும். சித்தாந்த வழியில் செல்லூக்கம் பற்றியே லெனின் பேசுகின்றார். முதலாளித்துவ (1848) ஜேர்மனி மொழி வழித் தேசிய அரசை அமைத்துக் கொள்கின்றது. 1905 முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொண்டது.
1. அயர்லாந்து விடுதலை கோராத பிரித்தானிய
2. கொலனி நாடுகளின் விடுதலையைக் கோராத
இவ்வாறான நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளை தேசிய வெறியர்கள். ஏகாதிபத்திய முடியாட்சிகள், பூர்சுவாக்களின் ஏவலாளிகள்.
இதையே இன்றைய நிலையில் இலங்கை, இந்தியாவிற்கு பொருத்திப் பார்த்திட முடியும். ஒடுக்கும் தேசிய இனத்தில் முதலாளிகளின் ஆட்சி என்பது ஒரு இனத்தின் இருப்பை மாற்றியமைக்க வல்லது. ஆனால் ஏகாதிபத்தியம் நேரடி ஆக்கிரமிப்பு செய்யும் வேலையில் அல்லது நேரடியாக தேசிய இனத்தின் இருப்பை மாற்றியமைப்பதில்லை. இதனை குறிப்பான நிலமைகளில் இருந்து ஆராயப்பட வேண்டும்.
“தேசிய ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதற்காகத் தமது புரட்சிப் பிரசாரத்தையும் புரட்சிகர வெகுஜன இயக்கத்தையும் நேரடியாகப் பயன்படுத்தான ஜேர்மன் ( தமிழ்- சிங்கள தேச என்று வாசிக்கலாம் ) சோஷலிஸ்டுகள், ஸாபெர்ன் சம்பவம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளிகளிடையே இரகரியப் பிரச்சாரத்தைப் பரவலாக நடத்தவும், ஆர்ப்பாட்டம் வீதி ஊர்வலங்களையும் புரட்சிகவெகுஜன நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தவறுகிற ஜேர்மன் சோஷலிஸ்டுகள், பின்லாந்து, போலந்து, உக்ரேனியா முதலியவற்றுக்குப் பிரியும் உரிமை தரப்பட வேண்டுமென்று கோராத ருஷ்ய சோஷலிஸ்டுகள் போன்றார் தேசிய வெறியார்களாலும் இரத்தக் கறை படிந்து அழுக்கடைந்த ஏகாதிபத்திய முடியாட்சிகள், ஏகாதிபத்திய பூர்சுவாக்கள் ஆகியோரின் ஏவலர்களாகவும் நடந்து கொள்கின்றார்கள் என்று சோஷலிஸ்டுகள் பொது மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.” (197)
9. சுயநிர்ணயத்தின் பால் ருஷ்யாவின் மற்றும் போலந்து சமூக – சனநாயகமும் இரண்டாவது அகிலமும் கடைப்பிடிக்கும் போக்கு (ப197)
இந்தப் பகுதி பற்றி முழுமையாக விளங்கிட வேண்டும் என்றால் பல்வேறு சிந்தனைப் போக்கின் ஊடாகவே விளங்கிட முடியும். பின்தங்கிய சமூகப் பொருளாதார நிலைகளை கவனத்தில் எடுத்துக் கொள்கின்றார் தோழர் லெனின். 57 சதவிகித ருசிய தேசிய இனங்கள் அடிமைப்பட்டு இருக்கின்றது என்கின்றார். “ருசியாவின் அரசியல் முறையில் அதன் அநாகரிக, மத்திய காலக் குணாம்சங்கள் விசேஷமாகக் காணப்படுகின்றன; அந்நாட்டில் பூர்சுவா ஜனநாயகப் புரட்சி இன்னும் நிறைவு பெறவில்லை- அத்தகை ருஷ்யாவில் ஜாரிசத்தினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தங்கு தடையின்றி சுதந்திரமாகப் பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக் கொள்வது சமூக – சனநாயகவாதிகளுக்கு நிபந்தனையின்றிக் கட்டாயமானது; அவர்களுடைய ஜனநாயக, சோஷலிச நோக்கங்கள் நிறைவேறுவதற்கு அது தனிப்பட்ட கடமையாகின்றது. 1912 ஜனவரியில் மீண்டும் நிறுவப்பட்ட நமது கட்சி 1913 இல் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின் மூலம் சுயநிர்ணய உரிமையை மீண்டும் வலியுறுத்தி, மேலே கூறப்பட்ட அதே ஸ்தூலமான பொருளில் விளக்கியது.” (198)
1. அதன் அநாகரிக, மத்திய காலக் குணாம்சங்கள்
2. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடையவில்லை
3. தேசிய இனங்களின் ஒடுக்குமுறை
4. சுயநிர்ணயம் கடமையாகின்றது
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறான நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சமூகங்களும் அரைநிலமானியச் சிந்தனைக் கட்டமைப்பே நீடிக்கின்றன.
இதே199 பக்கத்தில் போலந்து சமூக ஜனநாயகவாதிகளின் குழுப்பமான சுயநிர்ணயம் பற்றிய கருத்தை 200 பக்கத்தில் விளக்குகின்றார். இதனை வாசகர்கள் மீளவும் வாசிக்க வேண்டுகின்றேன்.
1896 லண்டன் கொங்கிரசின் வழிகாட்டலின் படி
1. ஏகாதிபத்தியத்தின் கீழ் இக் கோரிக்கையின் விசேஷ அவசரத் தன்மை;
2. அரசியல் ஜனநாயகத்தின் எல்லாக் கோரிக்கைகளின், விவாதிக்கப்படும் பிரச்சினை உள்ளிட்டு, அரசியல் சம்பிரதாயத்தின் தன்மையும் வர்க்க உள்ளடக்கமும்;
3. ஒடுக்கும் தேசிய இனங்களின் சமூக – ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சமூக – ஜனநாயகவாதிகளின் ஸ்தூலமான கடமைகளையும் வெவ்வேறானவை என்று வேறுபடுத்தி அறிய வேண்டியதன் அவசியம்.
4. சந்தர்ப்பவாதிகளும் காவுத்ஸ்கியவாதிகளும் சுயநிர்ணயத்தை முரண்பாடுள்ள முறையில், வெறும் வார்த்தைகளில் ஏற்றுக் கொள்வது, எனவே அரசியல் முக்கியத்துவத்தின் அது வெறும் கபடம்.
5. ‘‘தங்களது சொந்த” தேசிய இனங்களால் ஒடுக்கப்படும் கொலனி நாடுகளுக்கும் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை வேண்டும் என்று கோராத சமூக – ஜனநாயகவாதிகள், குறிப்பாக ஆதிக்கம் வகிக்கும் தேசிய இனங்களைச் சேர்ந்த( --கொலனியத்தை வைத்திருந்த நாடுகள்---) சமூக ஜனநாயக வாதிகள் உண்மையில் தேசிய வெறியர்களை ஒத்தவர்களே;
6. பூர்சுவா அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கும் சோஷலிசத்தை அடைவதற்கும் புரட்சிகர வெகுஜனப் போராட்டத்திற்கு இந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தையும்- அரசியல் ஜனநாயகத்தின் எல்லா அடிப்படைக் கோரிக்கைகளுக்குமான போராட்டத்தைப் போல – நேரடியாகக் கீழ்ப்பட்டதாக்க வேண்டியதன் அவசியம்.
சில சிறு தேசிய இனங்களின் கண்ணோட்டத்தை குறிப்பாக, தேசியவாதக் கோஷங்களால் மக்களை ஏமாற்றும் போலிஷ் பூர்ஷவாக்களை எதிர்த்துப் போராடுகின்ற காரணத்தினால் சுயநிர்ணயத்தையே தவறான முறையில் மறுக்கும் போலிஷ் சமூக- ஜனநாயகவாதிகளின் கண்ணோட்டத்தை அகிலத்தில் புகுத்துவது த்துவார்த்த ரீதியான தவறாகும்; இது மார்க்சியத்தை விட்டுவிட்டு புரூதோனியவாதத்தை ஏற்றுக் கொள்வதாகும்; நடைமுறையில், ஆதிக்கம் வகிக்கும் தேசிய இனங்களின் மிகவும் ஆபத்தான தேசிய வெறியையும் சந்தர்ப்பவாத்தையும் நம்மையுமறியாமல் ஆதரிப்பதாகும். (201) ‘‘இனமதகுலமற்ற உழைப்பாளி வர்க்கமான இணைவோம் என்று வாய்சடவால் அடிப்பவர்களுக்கு மேல் உள்ளது பொருந்தும்.
ஒரு தேசிய இனத்தின் போக்கு வேறொர் திசையில் ஓட முற்படுகின்றது. ஆனால் எவ்வித செயல் திட்டம், நடைமுறைச் செயற்பாடு எவையும் அற்று கோட்பாடுகளைப் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் தோழர் லெனின் இவ்வாறான போலிகளின் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று வழிகாட்டுகின்றார்.
தோழர் ஸ்ராலின்
ஒரு சமூகத்தில் எழுகின்ற பிரச்சனைகளுக்கு வழிகாட்டுவது தான் கட்சியின் வேலை.
‘‘ஐயத்திற்கிடமின்றி ‘‘அந்நிய” தேசிய இனங்கள் இப்பிரச்சனையைத் தாமே தீர்த்துக் கொள்ளும் வகையில் நாம் அவர்களிடம் விட்டுவிட வேண்டியது தான்; இவ்வாறு அவர்கள் செயற்படும் உரிமையைப் பெற்றுத் தருவதும் நமது கடமையே. எனவே இத்தேசிய இனங்கள் ‘‘தேசிய சுதந்திரமானது” தமக்குத் பயனுள்ளவையாக அல்லது தீங்கானவையா என்பதையும், ஒருவேளை அது பயனுள்ளதான இருப்பின் - எந்த வடிவவில் அதைச் செயல்படுத்துவது என்பதையும், இப்பிரச்சனை அவர்களிடம் எழும் போது அவர்களே முடிவு செய்து கொள்ள விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் மட்டுமே இப்பிரச்சனையில் தெளிவான முடிவெடுக்க முடிவும்!
‘‘இவ்வாறு பிரிவு ‘‘9” ஆனது ”அன்னிய” தேசிய இனங்கள் தமது சொந்த விருப்புகளுக்கேற்ப தேசிய விவகாரங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது. உண்மையில் சமூக - சனநாயக ரீதியில் இத்தேசிய இனங்களின் விருப்புகள் உள்ளனவா என்றும் பாட்டாளி வர்க்கத்தினரின் நலனில் இருந்து இவ்விருப்புகள் தோன்றுகின்றனவா என்றும் இதே 9ஆம் பிரிவு கடமையைச் சுமத்துகின்றது. மேலும் இதற்காக இத்தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்தினருக்கு சமூக -ஜனநாயக உணர்வழலட கல்வியளிக்க வேண்டியுள்ளது. இத்தேசிய இனங்கள் கொண்டுள்ள சில பிற்போக்கான ‘‘தேசிய” மரபுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் நிறுவனங்களை சமூக - ஜனநாயக ரீதியில் இரக்கமற்ற விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும். ஆயினும் பொலீசுபடை தேசிய இனங்களின் மரபுகள் பழக்கவழக்கங்கள் மற்றும் நிறுவனங்களின் மீது நடத்தும் வன்முறையை எதிர்த்து அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் செயற்படுவதை இது தடுகச் செய்யாது.
இதுவே பிரிவு 9 இன் உள்ளார்ந்த கருத்தாகும். (71.JVS. V1)
சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு
(ப203)
கீழ் உள்ளது தோழர் லெனின் எழுதிய கோட்பாட்டுப் பிரச்சனை பற்றிய பிரச்சனையின் தொடர்ச்சியான ஆய்வுப் பதிப்பாகும். ஸிம்மெர்வால்ட் என்பவர்கள் ஜேவிபி, மு.சோ. க, கட்சித் திட்டத்தில் சுயநிர்ணயத்தை எதிர்ப்பவர்களையும், ஒப்புக்காக கட்சியில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளும் பு.ஜ.மா.லெ.கட்சியினருக்கும் பொருந்தும்.
இதே போல இந்திய நாட்டு அரசிற்கு உட்பட்ட சிந்தனை வடிவத்தின் விழைவாக எழுந்த நாட்டுப் பற்றும் மார்க்சிய வழியில் தேசிய இன சுயநிர்ணயம் பற்றிய நிலைப்பாட்டினை எடுக்கவும் தடையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகையில் இலங்கை, இந்திய செயற்கை தேசிய உணர்வு என்பது ஆழ வேர் ஊன்றியுள்ளது.
“சுயநிர்ணயத்தையே தவறான முறையில் மறுக்கும் போலிஷ் சமூக- ஜனநாயகவாதிகளின் கண்ணோட்டத்தை அகிலத்தில் புகுத்துவது தத்துவார்த்த ரீதியான தவறாகும்; இது மார்க்சியத்தை விட்டுவிட்டு புரூதோனியவாதத்தை ஏற்றுக் கொள்வதாகும்; நடைமுறையில், ஆதிக்கம் வகிக்கும் தேசிய இனங்களின் மிகவும் ஆபத்தான தேசிய வெறியையும் சந்தர்ப்பவாத்தையும் நம்மையுமறியாமல் ஆதரிப்பதாகும். (201) ” --- 204
புரூதோனியம் என்பது அராஜவாதம் (அனார்க்கியம்) அரசு, அதிகாரம் என்பதை எதிர்த்து நிற்கும். மைய அதிகாரக் கட்டமைப்பை எதிர்க்கின்றது. இங்கு ஏன் தோழர் லெனின் புரூதோனியம் என்று வரையறுக்கின்றார் என்பதை கவனிக்க வேண்டும்.
பின்னவீனத்துவத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மார்க்சிய தோழர்கள் எமக்கு நடந்த இழப்பை நினைவு கூர்வது இழிநிலை- காண்டுமிராண்டிச் சமூக எச்சமாக கொள்கின்றார்கள்.
ஸிம்மெர்வால்ட் பற்றியே இந்தப் பகுதியில் தோழர் லெனின் வழிகாட்டுகின்றார்.
இதுநாள் வரையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டமே. தேசிய இனப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே. தேசிய இனத்திற்குள்ளும் வர்க்கங்கள் உள்ளன. ஒவ்வொரு வர்க்கமும் தமது நலனுக்காக போராடும்.
205)
1. சோஷலிசமும் தேசிய இனங்களின் சுயநிர்ணயமும்
தேசிய இனத்தின் ஒடுக்குமுறைறை ஒழிப்பதற்குரிய பொருளாதார முன்தேவை, அரசியல் ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் ஒன்று , பலந்தமாக பிடித்து வைத்திருப்பது, அரசியல் பிரச்சனைகளைத் தட்டிக் கழிப்பதை எதிர்க்கின்றார்.
இது இலங்கை, இந்திய கட்சிகளுக்கு பொருந்தும்.
‘‘தனித்தனி தேசிய இனங்களால் தனித்தனியாகத் தீர்க்கப்படாது, அதில் அக்கறையுள்ள குடிமக்கள் எல்லோராலும் தான் கூட்டாக நிர்ணயிக்கப்படும்..”
இது போலிஸ்சுக்குளின் நிலைப்பாது. - அரசு- எல்லை
“சுயநிர்ணயத்துக்குப் பதிலாகக் கூட்டு நிர்ணயம் பற்றிய இக்கடைசி வாதம் நமது போலிஷ் தோழர்களுக்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டுகிறது; எனவே தங்களது ஆய்வுகளில் அவர்கள் அதை மும்முறை திருப்பித் திருப்பிக் கூறுகின்றார்கள்! திரும்பித் திருப்பிச் சொல்வதினால் இந்த அக்டோபர்வாத, பிற்போக்கு வாதமானது சமூக- ஜனநாயகவாதமாகிவிடாது”. (206)
மேலும் பொது நாடாளுமன்றத்தின் ஊடாக நாடாளுமன்றத்தில் கூட்டாக நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை பூர்சுவாக்கள் பேசுவது பற்றி லெனின் விளக்கம் தருகின்றார். பிரிந்து போகும் உரிமையை தட்டிக் கழிப்பது தவறென்கின்றார்.
அரசு- எல்லை
அரசு எல்லை பற்றிய பிரச்சனையையும், அவசியத்தையும் விளக்குகின்றார். தனித்தனி தேசிய இனங்களால் முடியாது, இது அனைத்து குடிமக்களால் சேர்ந்து தீர்க்கப்பட வேண்டும் என்கின்ற போக்கானது “சுயநிர்ணயத்துக்குப் பதிலாகக் கூட்டு நிர்ணயம் பற்றிய இக்கடைசிவாதம் நமது போலிஷ் தோழர்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஊட்டுகின்றது; எனவே தங்களது ஆய்வுரைகளில் அவர்கள் அதை மும்முறை திருப்பித் திருப்பிக் கூறுகிறார்கள்! (206)
இரண்டு நடவடிக்கைகள்
1.எல்லாத் தேசிய இனங்களுக்கும் சமத்துவம். இதை யாரும் மறுக்க முடியாது. இது அரசின் எல்லைக்குள் நடக்கும் சம்பவங்களை மட்டும் தான் பாதிக்கின்றது;
2. அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம். இது அரசின் எல்லைக் கோடுகளை வரைவதைக் குறிக்கிறது. இது மட்டும் தான் ஆட்சேபத்துக்குரியது. இதைப் பற்றித் தான் நமது எதிராளிகள் மௌனம் சாதிக்கிறார்ள். அவர்கள் அரசின் எல்லை எல்லைகளைப் பற்றியோ அல்லது அரசைப் பற்றியோ கூடச் சிந்தித்துப் பார்க்க விரும்பவில்லை. முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது, எனவே அரசியல் பிரச்சனைகளை எடுத்துக் கொள்வது நேரத்தை வீணாக்குவாகும் என்று வாதித்த 1894-1902ன் பழைய ”பொருளாதாரவாதத்தை” ஒத்த ஒருவகை ”ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம்” இது. ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றுவிட்டது; எனவே அரசியல் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது நேரத்தை வீணாக்குவதாகும்! அரசியல் அற்ற இத்தகைய சித்தாந்தம் அடிப்படையில் மார்க்சியத்துக்குத் தீமை பயக்கும். (207)
‘‘தனது கோதா செயல்திட்டத்தின் விமர்சனம் என்ற நூலில் மார்க்ஸ் எழுதினார் : ‘‘முதலாளித்துவ சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகரமான முறையில் மாற்றப்படும் காலகட்டம் இருக்கிறது. இதற்கு இணையான ஒரு அரசியல் இடைநிலைக் காலகட்டமும் இருக்கிறது, இக்கால கட்டத்தில் அரசு என்பது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் தவிர வேறாக இருக்க முடியாது.” இன்று வரை இது சோஷலிஸ்டுகளுக்கு மறுக்க முடியாத உண்மையாக இருந்து வந்துள்ளது. வெற்றிகர சோஷலிசமானது பூரண கம்யூசமாக வளரும் வரை அரசு நிலைத்திருக்கும் என்ற உண்மையை ஏற்பதும் இதிலடங்கியிருக்கிறது. அரசு வாடி உதிர்ந்து போதல் என்ற ஏங்கெல்சின் சொற்றொடர் நன்று தெரிந்ததே. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம் என்றும் அரசு வாடி உதிர்ந்து போகும் போது அதுவும் வாடி உதிர்ந்து விடும் என்றும் வேண்டுமென்றே தான் நாம் முதல் ஆய்வுரைகளில் வலியுறத்தினோம். எமது எதிராளிகள் மார்க்சியத்துக்குப் பதிலாக ”அரசு அல்லாத” ஒரு வகைக் கண்ணோட்டத்தை மேற்கொண்டாலொழிய அவர்களது வாதங்கள் பெருந்தவறாகவே விளங்கும். ( இந்தப் புத்தகத்தில் 180- 181 மற்றும் 191 -192 அடிக்குறிப்பையும் சேர்த்து வாசிக்கவும்) (207)
சுயநிர்ணயத்திற்கும் தனியான அரசிற்கும் உறவு பற்றியே தோழர் லெனின் பேசுகின்றார். சுயநிர்ணயம் என்பது பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமை மறுத்தே இந்திய, இலங்கை இடதுசாரிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மார்க்சிய வழிகாட்டலுக்கு அப்பால் பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.
‘‘சுயநிர்ணயமென்றால் பிரிந்தே செல்வது தான் என்ற விடாக்கண்டன் நிலையிலிருந்து உங்களால் எப்படி மாற இயலாமல் உள்ளதோ ஒன்றுபட்ட இலங்கைத் தேசத்தில் அனைத்துத் தேசிய இன மக்களும் விடுதலை பெற்றுச் சமத்துவமாக வாழ இயலும் என்ற எனது கருத்தை உங்களது எந்தத் தர்க்கங்களாலும் மாற்றிவிட முடியாது.” இவ்வாறு கருதுபவர்களின் கருத்திற்கு லெனின் நிறைவான பதில் கொடுத்துள்ளார். கலாநிதிகள் கூட தேசம் என்பது பற்றிய புரிதல் அற்று எழுதுகின்றார்கள்.
லெனின் சொல்லில் எழுதுவது என்றால் அரசைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக ‘‘சோஷலிசக் கலாச்சாரப் பிராந்தியத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள்” (208)
அரசு எல்லையைப் பற்றிப் பேசுவதற்குத் தயங்குகின்றார்கள் மார்க்சிய விரோதிகள். ஏனெனில் முதலாளித்துவம் என்பதே ஜனநாயகம். ஜனநாயகம் என்பதன் ஒரு வடிவம் அரசு. அரசு இல்லை என்றால் எல்லைப் பிரச்சனையே இருக்காது அல்லவா? தேசிய இனங்கள் தமது எல்லையை வேண்டி நிற்கின்றது.
வரலாற்று ரீதியான வளர்ச்சியில் பல சிறிய, தனித்து இயங்க முடியாத தேசிய இனங்களை விழுங்கிய ”பெரிய, தனித்தியங்கும் சக்தி பெற்ற ஐரோப்பியத் தேசிய இனங்களின்‘ எல்லைக் கோடுகள் மக்களின் ”மொழி, உணர்வுகள் ஆகியவற்றால் மேலும்மேலும் உறுதியாக நிர்ணயிக்கப்பட்டன.”
ஆனால் இன்று பிற்போக்குத் தனமான ஏகாதிபத்திய முதலாளித்துவமானது முன்னிலும் அடிக்கடி தகர்த்துக் கொண்டிருக்கிறது.
மார்க்சியம் பேசுகின்ற தேசிய இனங்கள், தேசங்கள் ஒன்று கலத்தல் என்பதைப் பற்றிப் பேசாது கலாச்சார தேசிய தன்னாட்சி என்று பேசுகின்றார்கள். “தேசிய இனச் சச்சரவுகளும் தேசிய இன அவநம்பிகைகளும் மிகச் சிறிய அளவிலாக இருப்பினும் அவை நடைமுறைச் செயல்பாட்டில் அழிக்கப்படுவது என்ற போக்கு வளர்கிறது, அத்துடன் அரசு வாடி உதிர்ந்து போகுங்காலம் முடிவழையும் ஒரு போக்கு, தேசிய இனங்கள் தீவிரமாக நெருங்கி கொண்டு முழுமையாகக் காலத்தல் என்பது நடைபெறுகின்றது. இது தான் மார்க்சியத் தத்துவம்; (211) தேசிய இனங்கள் இணைவது என்பது அரசு உதிரும் போதே நடைபெறுகின்றது.
பொருளாதாரவாதம்
‘‘மார்க்சியத்தைக் கேலிச் சித்திரமாக்கிய பழைய ‘‘பொருளாதாரவாதிகள்” மார்க்சியவாதிகளுக்குப் ‘‘பொருளாதாரம்” மட்டுமே ‘‘முக்கியமானது என்று தொழிலாளர்களுக்குப் போதித்தார்கள்.—உற்பத்தித் தேவைகளுக்கேற்ற வகையில் ”மட்டுமே” எல்லைகள் வரையப்படுமென்றோ நவீனப் ”பொருளாதாரவாதிகள்” எண்ணுகிறார்கள் போலிருக்கிறது. உண்மையில் பார்க்கப் போனால், ஜனநாயக முறைப்படி, அதாவது மக்களின் சித்தத்துக்கும் ”உணர்வுக்கும்” ஏற்றபடி எல்லைகள் வரையப்படும். முதலாளித்துவம் இவ்வுணர்வுகளை ஒடுக்குகினறது; தேசிய இனங்கள் நெருக்கி வருவதற்கு மேலும் அதிகத் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வர்க்க ஒடுக்குமுறை இல்லாமல் உற்பத்தி முறையை அமைத்து, அரசின் எல்லா அங்கத்தினர்களுக்கும் நல்வாழ்வுக்கு வழிசெய்து சோஷலிசமானது மக்களின் ”உணர்வுகளுக்கு” முழுச் சுதந்திரம் அளிக்கிறது; அதன் மூலம் தேசிய இனங்கள் நெருங்கி ஒன்று கலப்பதற்கு உதவுகிறது, அதைப் பெரிதும் துரிதப்படுத்துகிறது.
இந்த அலுப்புத் தட்டும் அருவருப்பான ”பொருளாதாரவாதத்திலிருந்து ” (209) பொருளாதாரவாதம் என்பது வர்க்கப் போராட்டத்தை பொருளாதாரம் அதாவது தொழிற்சங்கம் (கூலி, தொழில் பாதுகாப்பு, நிரந்தர வேலை) வழி வகை என்றே போதிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்புலமே இனமதகுலமற்றுப் போராடுவோம் என்பதாகும்.
இலங்கையை எடுத்துக் கொண்டால் பொதுவுடமைக்கட்சிகளில் சில சுயநிர்ணயம் என்பதை ஏற்றுக் கொண்டது. பாராம்பரிய – இ.பொ.க (சோவிய அணி) இபொக சண் தலைமை 1987 இற்குப் பின்னரே சுயநிர்ணயம் என்பதை ஏற்றுக் கொண்டார். சண்கட்சியில் இருந்து பிரிந்து உருவான தற்போதைய புஜமாலெக சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள்.
ஐக்கிய இலங்கை ரீதியாக வர்க்கப் புரட்சி என்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஜேவிபி, முசோக, புஜமாலெகட்சியினருக்கு பொருத்தமான பதில் மேலே உள்ளது.
லெனின் சொல்லில் எழுதுவது என்றால் அரசைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக ‘‘சோஷலிசக் கலாச்சாரப் பிராந்தியத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள்” (208)
அரசு எல்லையைப் பற்றிப் பேசுவதற்குத் தயங்குகின்றார்கள் மார்க்சிய விரோதிகள். ஏனெனில் முதலாளித்துவம் என்பதே ஜனநாயகம். ஜனநாயகம் என்பதன் ஒரு வடிவம் அரசு. அரசு இல்லை என்றால் எல்லைப் பிரச்சனையே இருக்காது அல்லவா? தேசிய இனங்கள் தமது எல்லையை வேண்டி நிற்கின்றது.
வரலாற்று ரீதியான வளர்ச்சியில் பல சிறிய, தனித்து இயங்க முடியாத தேசிய இனங்களை விழுங்கிய ‘‘பெரிய, தனித்தியங்கும் சக்தி பெற்ற ஐரோப்பியத் தேசிய இனங்களின்‘ எல்லைக் கோடுகள் மக்களின் ‘‘மொழி, உணர்வுகள் ஆகியவற்றால் மேலும் மேலும் உறுதியாக நிர்ணயிக்கப்பட்டன.”
ஆனால் இன்று பிற்போக்குத் தனமான ஏகாதிபத்திய முதலாளித்துவமானது முன்னிலும் அடிக்கடி தகர்த்துக் கொண்டிருக்கிறது.
‘‘தேசிய இனச் சச்சரவுகளும் தேசிய இன அவநம்பிகைகளும் மிகச் சிறிய இருப்பினும் அவை நடைமுறைச் செயல்பாட்டில் அழிக்கப்படுவது அளவிலாக என்ற போக்கு வளர்கிறது, அத்துடன் அரசு வாடி உதிர்ந்து போகுங்காலம் முடிவடையும் ஒரு போக்கு, தேசிய இனங்கள் தீவிரமாக நெருங்கி கொண்டு முழுமையாகக் காலத்தல் என்பது நடைபெறுகின்றது. இது தான் மார்க்சியத் தத்துவம்; (211)
. ஏகாதிபத்தியத்தின் கீழ் ஜனநாயகம்”செயல்முறையானதா?”
செயல்பூர்வம் என்பதைப் பற்றி பலமுறை வலியுறுதிக் கூறுகின்றார், கட்சியின் திட்டத்தில் போலீஸ் சமூக ஜனநாயகவாதிகள் கோரினார்கள். மேலும் ஏகாதிபத்திய கட்டத்தில் சுயநிர்ணயம் சாத்தியம் இல்லை என்றார்கள். ஏகாதிபத்தியக் கட்டத்தில் ஏற்புடையது அல்ல என்று ”பொருளாதாரவாதிகள்‘ போதித்தார்கள். இங்கு பொருளாதாரவாதிகள் தொழிற்சங்க வகைப்பட்ட செயற்பாட்டாளர்கள் என்று சுருக்கிவிட முடியாது.
‘‘முதலாளித்துவத்தின் மேல் எழுப்பப்படும் மேலமைப்புக்களில் ஒரு வடிவமே அரசியல் ஜனநாயகம்” (--) எல்லா அரசியல் வடிவங்களின் கட்டமைப்புக்குள்ளும் முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் வளர்ச்சியுறுகின்றன, அவற்றை எல்லாம் தமக்குக் கீழ் பட்டனவாகச் செய்கின்றன என்பதை சம்பவங்கள் நிரூபிக்கின்றன. எனவே, ஜனநாயகத்தின் ஒரு வடிவமும் ஒரு கோரிக்கையும்” செயல்முறையானவையல்ல‘ என்று பேசுவது தத்துவ நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் மிகமிகத் தவறானது. ” (212)
‘‘இந்தப் போரின் போர்த் தந்திர அம்சங்களையும் மற்றவற்றையும் பொறுத்து போலந்தானது இன்று மீண்டும் அமைக்கப்படுவது “செயல்முறையானதே” என்பதை மறுப்பது மடத்தனமாகும்” என்று ஒரு வகையில் நன்கு புலப்படும் பொருட்டு நாம் மிகவும் வலியுறுத்திக் கூறினோம்.” 213) இந்தப் போர்த் தந்திர என்ற அடிப்படையிலும் செயல்வடிவத்திற்கு அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றார். போர்த்தந்திரம் என்ற அடிப்படையிலும் சூழலை வியாபகமாக ஆராயப்பட வேண்டும். போர்தந்திரம் என்பது புரட்சியை முன்னோக்கி நகர்த்திட வழிகாட்டுவதாகும். புரட்சிக்கான வழிகாட்டல் என்ற அடிப்படையில் போர்த் தந்திரம் அவசியமானதாகும்.
‘‘தங்களது அரசின் எல்லைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி மக்களை மூலதனம் அனுமதியாது..” என்று உண்மையற்ற ஒரு கூற்றை போலிஷ் தோழர்கள் மீண்டும் கூறுகின்றார்கள்” (213)
சின்னஞ்சிறிய அல்சாவை பகுதியை பலவந்தமாக பிரான்சுக்கு கொடுக்கும் ஜேர்மன் முடிவையும், இணைக்க முற்படும் பிரெஞ்சுப் பூர்சுவாக வர்க்கத்திற்கு எதிரான விமர்சித்து எதிர்த்து அல்சாவை என்ற பகுதியின் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்கின்றார். இன்றையச் சூழலில் சோசலிச முகாம்கள் அற்ற நிலையில் எந்த ஏகாதிபத்தியமும் எந்த நாட்டையும் பயன்படுத்திக் கொள்ளும் ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொள்ளாமல் தப்பிக்கவும் முடியாது. இதன் பொருட்டு தேசங்கள் சுயநிர்ணயத்திற்காக போராடக் கூடாது என்பது எவ்வகையான கோட்பாடு? ‘‘சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் சோஷலிஸ்முகள் அல்சாஸ்கரார்களின் விருப்பத்துக்கு எதிராகச் செல்லாமல் எவ்வாறு இப்பிரச்சினையைச் சில வாரங்களில் தீர்ப்பார்கள் என்பதைக் காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு, பிரெஞ்சு அல்சாஸ்கார்கள் பிரான்சின் தம்மைத் ‘‘திணித்துக் கொள்வார்கள்” என்று பேசுவது ஓரு நல்ல தமாஷ்தான்” (215) இந்த எதிர்வினை இந்திய, இலங்கை மார்க்சியர்களுக்குப் பொருந்தும். ஈழம் பிரிந்து சென்றால் போகட்டுமே. ஏன் முன்முடிவைக் கொண்ட நீதிமான்களாக உள்ளீர்கள்?
பொருளாதாரவாதிகளாக போலீஸ் சமூக ஜனநாயகவாதிகளைக் கருதுகின்றார். இவர்கள் வர்க்கப் போராட்டம் என்பதை பொருளாதாரத்தினுள் சுருக்கிவிட்டார்கள். இதனையே இங்கு கவனமாக கவனிக்கப்பட வேண்டியது. இதேபோல நோர்வே பொதுவாக்கெடுப்பு நடத்திப் பிரிந்து போனதையும் முன்னிறுத்துகின்றார்.
பொருளாதாரவாதிகளான போலீஸ் ச.ஜ.வாதிகள் அகநிலையை முன்னிறுத்துவதாகவும் அவர்கள் ” புறநிலை ரீதியில் செயல்முறையல்லாத் என்பது பற்றிய அவர்களது சொற்றொடர்கள் சந்தர்ப்பவாதமானவை.”213
‘‘ஒடுக்கும் அரசிலிருந்து பிரியும் உரிமையை உள்ளிட்டது தான் சுயநிர்ணயம்” (214)
3. கட்டாயப் பிரதேச இணைப்பு என்றால் என்ன?
(7 .சமூக – தேசிய வெறியும் தேசிய இனங்களின் சுயநிர்ணயமும் என்ற தலைப்பில் 194ம் பக்கத்தில் உள்ள விடயம் பற்றி எழுதப்படுகின்றது. அதனையும் இதனுடன் பொருத்திப் வாசிக்கவும்.)
கட்டாய இணைப்புப் பற்றி ”
1. பலாத்காரக் கருதுகோள் (--)
2. இன்னொரு தேசிய இனத்தினால் ஒடுக்கப்படுத்தல் என்ற கருதுகோள் (--)
3. நடப்பு நிலையை மீறுவது என்ற கருதுகோள் .
‘‘கட்டாய பிரதேச இணைப்பு என்பது ஓரு தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை மீறுவதாகும் ; மக்களின் விருப்பத்துக்கு மாறான முறையில் அரசின் எல்லைகளை வரைவதாகும்.”
‘‘ கட்டாய பிரதேச இணைப்புக்களை எதிர்த்து நிற்பது சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது என்று பொருள்படும்.”
‘‘ஒரு அரசின் எல்லைகளுக்குள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பலவந்தமாகப் பிடித்து வைக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என அவர்கள் கூறினார்கள்) தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை ஆதரிப்பதே தான். ( 187 பக்கத்தையும் இணைத்து வாசிக்கவும்) (216)
‘‘ருசியாவை அரைகுறையாக வென்று, இந்த அரைகுறை வெற்றியானது ஒரு போலிஷ் அரசு தோன்றுவதிலும் வெளியாகின்றது என்று வைத்துக் கொள்வோம் (ஜாரிஸசத்தை ஓரளவுக்கு பலவீனப்படுத் வேண்டும் என்று பிரிட்டனும், பிரான்சும் விரும்புகின்றன அல்லவா?). முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பொருளாதார விதிகளின் படி இது ” செயல்முறையானதே” (218)
‘‘அரசியல் ரீதியான ” கண்டனம் ” எனது அரசியல் ரீதியான செய்ல திட்டத்துக்கு முற்றிலும் சரிசமம் ; ” 219
‘‘ஒன்றை மற்றொன்றுக்கு எதிரிடையாக வைத்துப் பேசுகின்ற நபர்களுக்கு மூன்றாவது அகிலத்தில் இடம் இருக்காது என்று நாம் சொன்னால்…. ” 219
ய பிரதேசங இணைப்பை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா?
கட்டாயப் பிரதேச இணைப்பை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா? (221)
தாய்நாட்டைக் காப்பது என்பது உள்நாட்டுப் போரையே உருவாக்க வேண்டும். ‘‘ சமுதாயப் புரட்சியின் என்ற பெயரில்‘” தேசிய இனப்பிரச்சினையை ‘‘மறுத்தார்கள்” இது தவறு என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிய வேண்டும் என்ற (190) என்ற நிலைப்பாட்டிற்கு வருகின்றார். சிறிய தேசிய இனங்கள் பிரிந்து செல்வது சாத்தியமற்றது, கற்பனையாது என்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள். 190
” எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளிகள் தாங்களே விரும்பி ஒன்றிணைவதன் மூலம் தான் தேசிய இனங்கள் நெருங்கி வரச் செய்ய வேண்டுமேயன்றி பாலாத்காரனத்தினால் அல்ல என்றும் இம்முறையில் தான் மார்க்சால் வாதிக்க முடிந்தது. 191
சுதந்திரமான அரசுகள் தோன்றுவதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறான சுதந்திரமான ஜனநாயக அரசுகள் என்பது சோசலிச சமூகத்தை நோக்கி வளர்த்தெடுத்து செல்லும். எனவே அடிமைகள் கொண்டிருப்பதை எதிர்ப்பது முன்னேறிய ஜனநாயகமே.
223-224 பக்கத்தில் கட்டாய இணைவு பற்றிப் ஏகாதிபத்தியங்களால் இணைக்கப்பட்ட புதிய எல்லைகள், நோர்வேயின் சுதந்திரப் பிரகடனம் போன்றவற்றை போலீஸ் சமூக ஜனநாயகவாதிகள் எதிர்க்கின்றார்கள். பெரிய எல்லைகளைக் கொண்ட அரசுகள் இருப்பதை விரும்புகின்றார்கள். இவைகள் எல்லாம் மார்க்சிய விரோதம் என்கின்றார்.
இந்தப் பிரச்சனை 2009 காலத்தில் ஈழத்தின் வீழ்ச்சியின் போது ஜேவிபி போன்ற கட்சி என்ன நிலைப்பாடு எடுத்துக் கொண்டார்கள் என்பதை வரலாறு அறியும். இவ்வாறே புஜமாலெகட்சியும் ஈழம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அதற்கு எதிராக போராட வேண்டும் என்ற செயலூக்கமின்றி மார்க்சிய எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு எடுத்துள்ளார்கள்.
ஈழத்தினை முழுமையாக ஆக்கிரமிக்கும் பொருட்டு இடம்பெற்ற யுத்தத்தை சிங்கள இடதுசாரி கட்சிகளில் பலவை எதிர்த்துப் போராடவில்லை. இவர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திட உதவி செய்தார்கள். பெயரில் பொதுவுடமைக் கட்சி எனக் கொண்டவர்களும், ஜேவிபி போன்றவைகளும் எதிர்த்துப் போராட வில்லை. தேர்தல் பாதைக் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்து ஆக்கிரமிப்பாளர்களின் அங்கமாகினர். இதேபோல புஜமாலெக இவ்வாறான மதிப்பீட்டிற்கு வந்தார்களா என்பது கேள்விக் குறியேயாகும்.
218) கெட்டதிலும் நன்மை நடக்கும். இந்த விதி என்பது புறநிலைத் தாக்கத்தால் நிலவுவதாகும். புறநிலைகளின் அவசியத்தின் ஏற்படும் மாற்றங்கள் இன்னொரு மாற்றத்திற்கான வழியைத் திறந்து விடும். இவ்வாறே ஏகாதிபத்தியத்தின் கீழ் சாத்தியமில்லை என்பதாகும். ஏகாதிபத்தியத்தின் தயவுடன் ஏற்பட்ட மாற்றங்களும் இன்னொரு மாற்றத்திற்கு வழி வகுக்கும்.
இந்தியாவிலும் பல தேசிய இன எல்லைகள் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ளது. இது 1947 போலிச் சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்றது. இன்று இந்திய தேசபக்தி, நாட்டுப் பக்தி என்ற கருதுருவாக்கத்தின் பின்னால் தேசிய எழுச்சி உணர்வு மழுங்கடிக்கப்பட்டே வருகின்றது.
‘‘ 1905இல், ‘‘ஏகாதிபத்திய சகாப்பத்தில் ,“ சுயாட்சி உரிமை பெற்றிருந்த நோர்வேயின் சட்ட சபை ஸ்லீடனிலிருந்து தனது நாடு பிரிந்து விட்டதை அறிவித்தது; நோர்வே மீது போர் கொடுக்க வேண்டுமென்று ஸ்வீடிஷ் பிற்போக்குவாதிகள் கோரினார்கள், ஆனால் அது நடைவெறவில்லை ; அதற்குக் காரணம் ஸ்வீடிஷ் தொழிலாளர்களின் எதிர்ப்பும் சர்வதேச ஏகாதிபத்திய நிலைமையும் தான் – அப்போது சமூக -ஜனநாயகம் நோர்வேயின் பிரிவை எதிர்த்திருக்க வேண்டும், ஏனெனில் அதன் பொருள் ‘‘ஐரோப்பாவில் புதிய எல்லைகளை நிறுவியது” என்பதாகும்!!! (224)
மேல் உள்ளது அப்பட்டமான வலுக்கட்டாயமாக எல்லைகளை இணைத்துக் கொள்ளும் போக்கேயாகும். இவ்வாறுதான் இந்திய, இலங்கையில் மார்க்சியவாதிகள் என்பவர்கள் தேசிய இனப்பிரச்சனையில் மார்க்சிய விரோத நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கின்றார்கள்.
‘‘கட்டாயப் பிரதேச இணைப்புக்களை இவ்வாறு நியாயப்படுத்துவது மார்க்சியமல்ல, ஸ்துரூவேவாதம்.” 225
5 சமூக -ஜனநாயகவாதிகள் கட்டாயப் பிரதேச இணைப்பை ஏன் எதிர்க்கிறார்கள்?
‘‘நமது நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் இதற்கு விடை தெளிவானது: அது தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தைக் கெடுக்கின்றது அல்லது, வேறுவகையில் சொன்னால், தேசிய ஒடுக்குமுறையின் ஒரு வடிவம் அது‘” 226
1.பொருளாதார ரீதியாக முற்போக்கானவை” (227) என்ற வாதத்தை உண்மை என்ற வாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகின்ற காரணத்திற்காக கூறி முற்போக்கு என்றார்கள். இதை இங்குபொருத்திப் பார்ப்பது நல்லது. இவ்வாறு நிதிமூலதனத்தின் கூட்டே ஐரோப்பிய ஒன்றியமாகும். பல நாடுகளின் பூர்சுவாக்களினால் கயமையான பரப்புரையால் ஏமாற்றப் பட்டார்கள். அவ்வாறான நிலையில் இன்று பிரித்தானிய வெளியேறியது சாதகமானதே.
2.கட்டாய இணைப்பு என்பது பாட்டாளி வர்க்கங்களிடையே பகைமையை தோற்றுகின்றது. 228
3. கட்டாய இணைப்புக்கு மாற்றாக ”இந்த நெருங்கிய ஐக்கியமானது சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தினால், அதாவது கட்டாயப் பிரதேச இணைப்புக்களுக்கு எதிரான போராட்டத்தினால் வளர்க்கப்படுகிறது.” (229) முதலாளிகளுக்காக ஈழம் கேட்கின்றார்கள், குறுந்தேசியவாதிகள் என்றும், பிரிவினைக்கான போராட்டம் முடிவுக்கு வந்த என்ற ஜேவிபியின் அரசியல் கூப்பாடுகளும் எவ்விதத்திலும் மார்க்சிய சிந்தனை கொண்டது அல்ல.
6 இந்தப் பிரச்சினையில் கொலனி நாடுகளையும் ‘‘ஐரோப்பாவையும்” வேறுபடுத்திக் காட்ட முடியுமா?
கொலனித்துவ காலத்தில் அதிலிருந்து சுதந்திரம் வேண்டுமென்று கோரிக்கை கொண்டு போராடிய தேசிய அணிகள், இடதுசாரி அணிகள் இருந்திருக்கின்றன. முதலாளித்துவ சகாப்பத்தில் தேசிய இயக்கங்களின் வளர்ச்சி, எழுச்சிப் போக்கு தொடர்கின்றன, முற்றுப் பெறவில்லை. இவற்றைக் கவனத்தில் கொள்ள முடியாதவர்களாக நாட்டுப் பற்று வளர்க்கப்பட்டுள்ளது. இந்த நாட்டுப் பற்று என்ற திரிபுவாதப் பாதையே சரியானது என்று முரண்டு பிடிக்கின்றார்கள். இவர்கள் மீளப் லெனினிடம் சென்று கற்கத் தயாராக இல்லை.
இந்த அவலம் போக்கப்பட வேண்டும். ஈழம் என்பது கூட சிங்கள தேசத்தின் கொலனியாகவே 1948 பின்னர் நீடிக்கின்றது. ஈழம் என்ற தேசம் கட்டாயமாக சிங்கள தேசத்துடன் இணைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பின்கொலனித்துவமாகவே மாற்றப்பட்டது. முன்னைய எசமானர்களுக்கு இசைவான ஆட்சிமுறையையும், சந்தைகளை திறந்துவிடக் கூடிய ஆட்சியாளர்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
‘‘கொலனிய நாடுகள் பண்டப் பரிவர்த்தனைக்குள் – ஆனால் முதலாளித்துவ உற்பத்திக்குள் அல்ல – ஈர்க்கப்பட்டிருந்தன. ஏகாதிபத்தியம் இதை மாற்றிவிட்டது. ஏகாதிபத்தியம் என்றால் மற்ற அம்சங்களுடன் மூலதன ஏற்றுமதியுங் கூடத்தான். பெருகிவிரும் அளவில் முதலாளித்துவ உற்பத்தி முறையானது கொலனிகளிலும் புகுத்தப்படுகிறது.” (231)
7 மார்க்சியமா அல்லது புரூத்தோனியவாதமா?
இது பற்றி முன்னரே பல இடங்களில் பார்த்து விட்டோம். வர்க்கப் புரட்சி, சமூகப்புரட்சி என கூறிக் கொண்டாலும் இவைகள் பொருளாதாரவாத்திற்கு உட்பட்டதே. இதே போல அயர்லாந்து பிரிவினை எவ்வாறு இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியவாத உணர்வை வலியுறுத்தும் என்ற கருத்தையும் மார்க்ஸ். லெனின் கற்பிக்கின்றார்கள். மார்க்ஸ் தனது கருத்தை 1848 -1871 இருந்து மாற்றத்திற்கு உள்ளாக்கின்றார்.
மார்க்சிய இயங்கியலை உள்ளவாங்காது பொதுவாக மார்க்ஸ் செக், தென் ஸ்லாவிய தேசிய கருத்தியலை எதிர்த்தார் என்பதையும், அயர்லாந்து விடுதலை ஆதரித்தார். ‘‘ஒரே சமயத்தில்” முரணான விஷயங்களைச் சொல்லுகின்ற ஒரு குழப்படைந்த நபர்! (மார்க்ஸ் குறிக்கின்றார்கள்.) இது உண்மையே அல்ல; இது நிச்சயம் மார்க்சியம் அல்ல” 235
‘‘சீர்திருத்தவாதத் தேசிய இனத் திட்டம் ஆளும் தேசிய இனத்தின் விசேஷ உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதில்லை; அது பூரண சமத்துவத்தை ஏற்படுத்துவதில்லை; தேசிய இன ஒடுக்குமுறையை அது எல்லா வடிவங்களிலும் அது ஒழிப்பதில்லை. ” 241-2
ஜேவிபி, முசோக போன்றவை வைத்துள்ள மக்கள் மன்றம், சம உரிமை இயக்கம் என்ற போலி முழக்கங்களை இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். இவர்கள் தீமைமைய ஒழிப்பதிலும் பார்க்க தணிக்க முயற்சிக்கின்றார்கள் 242. நோர்வே விடுதலை அடைந்தது ஊடாக தீமை அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது.
1848-1871 ம் 1898-1914 இடைப்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றார்.
மேற்கின் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வளர்ச்சியும், அது ஏற்படுத்திய தாக்கமும் என்றும் கிழக்கில் ஏற்பட்ட மாற்றம் பற்றி கவனிக்குமாறு லெனின் வலியுறுத்துகின்றார்கள்.
உழைப்பாளிகளுக்கு பயிற்றுவிப்பது பற்றி லெனின்
‘‘ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்கமுடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக -ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும். சோஷலிசத்தை அடையுமுன்னர் பிரிந்து போகும் வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும் கூட இது தனிமுழுமையான கோரிக்கை.” 245
இலங்கை, இந்திய நிலையில் நிலமானியத்தின் எச்சத்தில் எழுந்த இந்துத்துவா- சிங்கள பௌத்த பேரகங்கார சிந்தனை உள்ளது. இவைகளை எல்லாம் கடந்து தான் குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை கடந்து விடமுடியாது. இந்தச் சிக்கலை மார்க்சியர்களை விட முதலாளித்துவ சிந்தனையாளர்களும், முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கிவிட முடியாது.
உற்பத்தி முறை முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வில்லை. வெகுவாக பின்தங்கிய உற்பத்திச் சக்தி தொடர்கின்றது. உற்பத்திச் சக்தியின் திறன் மாற்றமடைமுடியவில்லை. இதற்குள் அடையாள அரசியல், சீர்திருத்த, கலக்கச் (அனார்க்கிய- அராஜகவாத) சிந்தனை என்பதை சிந்தாந்தத்திற்கு மாற்றாக நிறுத்தப்படுகின்றது. இந்தச் சிக்கலை உள்ளடக்கியதே இன்றைய போக்கு. இதில் அவலம் என்னவெனில் 1966 தீண்டாமை வெகுசன பாதை என்று இடதுசாரிய வரலாற்று அனுபவங்கள் உள்ளன. ஆனால் சீரளிந்த பொதுவுடமைக் கட்சிகள் பெரியார் ஏன் இன்று அவசியம் என்று வகுப்பெடுக்கின்றார்கள். சித்தாந்தத்திற்கு மாற்றாக கோட்பாடுகளையும், அனார்க்கிய பாதையையும் தெரிவு செய்கின்றார்கள்.
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் மேற்கு ஐரோப்பிய முன்னேறிய முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றான பிற்போக்கு முகாமாக ஜார் மன்னரின் ஆட்சியும், செக், தென் ஸ்லாவியப் தேசிய வெறியும் இருந்தது. இதனால் எதிர்நிலை எடுத்தார்கள். 1848- 1871 இடைப்பட்ட காலத்தில் தொழிற்துறை வளர்ச்சி முழுமை அடையவில்லை, நிலப்பிரபுத்துவ பிற்போக்குச் சிந்தனை கோலோச்சி இருந்தது. இந்த நிலையில் தான் செக் பிரிவினையை அவர்கள் ஏற்க வில்லை. ஆனால் அதன் பின்னாரா காலத்தில் தேசிய நிலைப்பாட்டில் சரியான வழியில் வழிகாட்டுவதாக தோழர் லெனின் மதிப்பீடு செய்கின்றார்.
இனமதகுலமற்றுப் போராடுவோம் என்று பரப்புரை செய்கின்றார்கள். தென்னிலங்கை போலி இடதுசாரிகள் தமிழ் மக்களுக்குத் தான் செய்கின்றார்கள். ஆனால்
‘‘ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக- ஜனநாயகவாதிகள் ”பிரிந்து போகும் உரிமையை” வலியுறுத்துவதும், அதே சமயம் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக -ஜனநாயகவாதிகள் “ஐக்கியமுறும் உரிமையை” வலியுறுத்துவதும் ‘‘முரணானவை” என்று பிரச்சினையை நன்கு நினைக்கிறார்கள். எனினும் சற்று சிந்தித்துப் பார்த்தால், இப்போதுள்ள நிலையிலிருந்து சர்வதேசியவாதத்துக்கும் தேசிய இனங்களின் ஐக்கிய கலப்புக்கும் இட்டுச் செல்லும் பாதை இதைத் தவிர வேறு எதுவுமில்லை, வேறு எதுவும் இருக்க முடியாது என்பது விளங்கும்.”
இந்தப் பகுதியை வைத்தே சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவதில்லை என்று வியாக்கியானம் செய்கின்றார்களோ தெரியாது. ஆனால் இவை இரண்டு பக்கத்தில் உள்ள மார்க்சியவாதிகளின் கடமை பற்றியே பேசப்படுகின்றது. தேசிய இனங்கள் ஒன்று கலப்பது என்பது முரணற்ற வகையில் ஜனநாயக உரிமையைக் கொண்ட பின்னரே சாத்தியம் என்பதை லெனின் வழிகாட்டுகின்றார்.
8 டச்சு, போலீஷ் சர்வதேசியவாத சமூக – ஜனநாயகவாதிகளின் நிலையில் தனி அம்சமும் பொது அம்சமும்
சுயநிர்ணயத்தை மறுத்து நிற்கும் போலீஸ், டச்சு மார்க்சியர்களின் சிந்தனை முறையில் உள்ள போக்கை தோழர் பகுப்பாய்வு செய்கின்றார்.
டச்சு முன்னேறிய ஜனநாயகத்தையும், பண்பாட்டையும் கொண்ட நாடாக கொலனிய ஆதிக்க வரலாற்று காலத்தில் திகழ்ந்தது. இதே போல போலந்தும் கிழக்கு ஐரோப்பாவில் உயர்ந்த கட்டத்தில் இருந்தது. எந்த சமூக உற்பத்தி முறை உள்ளதே அதற்கேற்றதான சிந்தனை முறையே வெளிப்படும்.
1.இன்றைய வல்லரசு ”அமைப்பில்” சிறியவையாகவும் வகைற்றும் இருக்கின்றன;
2)பூகோள அமைப்பில் ஏகாதிபத்தியக் கொள்ளைக்கார்களில் இரு கடும் தீவிரப் போட்டி நாடுகளுக்கிடையில், ராட்ச்ச பலம் வாய்ந்த நாடுகளுக்கிடையில் (--) இவைகள் இவைகள் இரண்டுமே சிக்கியுள்ளன;
3. முன்பு தாங்களே ”பேரசுகளாக” விளங்கிய நாட்களைப் பற்றிய நினைவுகளும் மரபுகளும் இவ்விரு நாடுகளிலும் ஆழப்பதிந்திருக்கின்றன;:”
4. மற்ற தேசிய இனங்களை ஒடுக்கும் விசேஷ உரிமைகளை இவ்வரு நாடுகளும் இன்று வரை நீடித்து வைத்துக் கொண்டிருக்கின்றன: டச்சுப் பூர்ஷ்வாக்களின் கையில் வளமிக்க டச்சு இந்தியா இருக்கிறது; போலீஷ் நிலப்பிரபுக்கள் உக்ரேனிய, பைலோருஷ்யக் குடியானவர்களையும், போலிஷ் பூர்ஷ்வாக்கள் யூதர்களையும் ஒடுக்குகிறார்கள்,” (248)
கொலனித்து ஆட்சிகள் வரலாற்று இடைவெளியில் ஏற்பட்ட முலதனத்திரட்சி, முன்னேறிய பண்பாட்டு கொண்டதும், அண்டைய நாடுகளை ஆக்கிரமித்து முன்னேறிய நாடுகளில் பண்பாட்டில் ஏற்பட்ட மாறுபாடான போக்கை கொண்டது. இந்த விடே தன்மைகளைக் கொண்டே டச்சு, போலீஷ் மார்க்சியர்கள் கொள்கையை வகுக்கின்றனர்.
இதில் தான் ரொட்ஸ்கியின் இரண்டை முகத்தினை அம்பலப்படுத்துகின்றார்.
‘‘ஜெர்மனியில் காவுத்ஸ்கியைப் போலவும், ருஷ்யாவில் திரோத்ஸ்கியையும் மார்த்தவையும் போவும் வெறும் வார்த்தைகளில், கபடத்துடன் அப்படியே சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்கிறவர்களைக் காட்டிலும் கோர்ட்டர் ஒரு உண்மையான சர்வதேசியவாதி – ”தன்னுடைய சொந்த ” தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் சுதந்திரத்தை வேண்டுமென்று போராட வேண்டிய கடமையை மார்க்சியத்தின் பொதுவான அடிப்படைக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. ” –‘‘உலகம் முழுவதும் எரிந்து சாம்பலாகட்டும், நாம் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்கிறோம்; (249)
இங்கு சுயநிர்ணயத்தை மறுக்கும் ரொட்ஸ்கியின் கபடத்தை கோட்பாட்டு ரீதியாக அம்பலப்படுத்துகின்றார். இதில் கவனிக்க வேண்டியது காவுத்ஸ்கியை இணைத்து விடுகின்றார்.
இந்த இரட்டைத் தன்மை என்பது சொந்த நாடுகளில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலையை மௌனமாக இருப்பதும், பிறநாடுகள் விடத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளல்.
இது இலங்கையில் மு.சோ.க, ஜேவிபி போன்றவையும், இந்தியாவில் சிபிஎம் என்ற கட்சியும் மார்க்சிய இயக்கம் என்று கூறிக் கொள்கின்றன. இவர்கள் பலஸ்தீனம், குர்டிஸ்தான், கியூபா போன்ற விடயங்களில் கவனத்தை எடுப்பார்கள். இவை இரட்டைப் போக்கேயாகும். ஆனால் மார்க்சியம் இரட்டை வேடம் போடுவதில்லை, அதற்கு அவசியமும் இல்லை.
டச்சு, போலீஷ் முகாம்களில் உள்ள சிந்தனை வடிவம் என்பது மாற்றமடைந்திருக்கின்றது என்பதைப் பார்த்தோம். 1990 களின் பின்னர் உருவாகிய ஒற்றைத் துருவ- ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் என்பது இன்று சீன, ருசிய, மேற்கு ஏகாதிபத்தியம் என்று முகாம்கள் தோன்றியுள்ளது. இவர்களின் பண்புகளும் மாற்றத்திற்கு உள்ளாளவையே.
சில வருடங்களுக்கு முன்னர் ருசிய அதிபர் பூட்டினிடம் செவ்வி கட்ட போது சிந்தனை முறை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ருசிய சிந்தனை முறை என்பது கூட்டுச் (collective approach) அணுகுமுறை என்றார். இதற்கு மாற்றாக மேற்கின் தனிமனிதப் போக்கு என்று கூறினார். இவ்வாறான சிந்தனைப் போக்கு என்பது இருப்பதற்கான சாத்தியம் உண்டு. இதே போல சீனத்தின் அணுகுறைப் போக்கிலும் மாற்றத்திற்கு உள்ளாக இருக்கும். தோழர் லெனின் மேற்கின் தொழில் வளர்ச்சியினால் ஏற்பட்ட ஜனநாயக முதிர்ச்சியும் கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகமும் மாறுபட்டதாகவே உள்ளது.
இதிலும் இந்திய, இலங்கை முதிர்ந்த ஜனநாயகக் கட்டத்தை இன்னும் கடக்கலில்லை. ஆனால் செயலூக்கமற்ற கட்சிகளைக் கொண்டிருப்பதும், செயல்வடிவம் இல்லாமையும் வலதுசாரியக் கருத்தியல் மேலோங்கியுள்ளது. இவ்வாறே முதலாளித்துவ ஜனநாயகக் கட்டம் எவ்வாறு இருக்கும் என்ற புரிதல் இல்லாத மார்க்சியர்களும் இருக்க முடியும். இதே போல நிலமானியச் சிந்தனை முறையால் பாதிக்கப்பட்ட மார்க்சியர்கள் இருக்க முடியும். இவ்வாறு பின்னவீனத்தின் தாக்கம் கொண்ட மார்க்சியம் பேசுகின்றவர்களும் உண்டு. மார்க்சியம் என்பது ஒரு சித்தாந்தமும், தன்னகத்தே திறனாய்வு முறையைக் கொண்ட தத்துவத்தை அடையாள அரசியலுக்கு கீழ் நிலைக்கு செல்லும் மார்க்சியம் பேசுபவர்களும் உள்ளார்கள். இது ஒரு அவலநிலையேயாகும்.
பொதுவான தத்துவம் என்ற போக்குப் பற்றி
1.‘‘தனியான அம்சம் பொதுவான அம்சத்திற்கு கீழ்ப்பட்டதாயிருந்தாலொழிய துர்விநியோகத்துக்கு இடங்கொடுக்காத எந்தத் தனியான ஒரு ஜனநாயகக் கோரிக்கையும் எங்கும் கிடையாது, இருக்கவும் முடியாது; ”எந்தக்” குடியரசுக்கான அல்லது மதகுருமாருக்கு எதிரான இயக்கத்தையும் ஆதரிக்க வேண்டுமென்ற கட்டாயம் நமக்கு இல்லை.
2.மேற்கூறிய ‘‘குறைபாட்டைக் ” கொண்டிராத, தேச இன ஒடுக்குமுறைக்கெதிரானதொரு போராட்டதுக்கான எந்த ஒரு சூத்திர விதியும் கிடையாது, இருக்கவும் முடியாது.” 251
தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய ஒருபக்கச் சார்பான நிலை பற்றியே பேசுகின்றார். இது டச்சு, போலீஷ் மார்க்சியர்களின் நிலைப்பாட்டை இங்கு விபரிக்கின்றார். தாய்நாட்டை பாதுகாப்போம் என்று சமூக ஜனநாயகக் கட்சிகளின் போக்கையும் விமர்சிக்கின்றார்.
3.
‘‘பங்கு பெறுபவர் அனைவரும் சர்வதேசியவாதிகளாக நீடித்து இருக்கக் கூடிய மீள் வழி ஒன்று இருக்கிறது: போலந்துக்கு நிபந்தனைகளற்ற ”பிரிந்து போகும் சுதந்திம்” வேண்டுமென்று ருஷ்ய, ஜெர்மன் சமூக – ஜனநாயகவாதிகள் கோர வேண்டும்; போலிஷ் சமூக – ஜனநாயகவாதிகள் குறிப்பிட்ட சகாப்தத்திற்கு அல்லது கால கட்டத்திற்குப் போலந்தின் சுயேச்சை கோஷத்தை எழுப்பாமல், சிறிய நாட்டிலும் பெரிய நாடுகளிலும் உள்ள பாட்டாளி மக்களிடையே ஒற்றுமை ஏற்பட போராட வேண்டும்.” (253) இதனை சுயநிர்ணயத்தை மறுக்கும் இனமதகுலம் என்று வாய்பாட்டை பொருத்திப் பார்ப்பது பொருந்தும்.
9. காவுத்ஸ்க்கு ஏங்கெல்சின் கடிதம்
கொலனித்துவத்தின் விடுதலைக்கு பொருளாதாரவாதத்தினை முன்னிறுத்தினை முன்வைக்கவில்லை. ஆனால் வளர்ந்து வருகின்ற பொருளாதார வளர்ச்சி என்பது கொலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் உருவாகும் என்கின்றார்.
‘‘அரைநாகரீக முற்ற நாடுகள் தாமாகவே அவற்றைப் பிற்பற்றும்; பொருளாதாரத் தேவைகள் அதைக் கவனித்துக் கொள்ளும். தாங்களும் சோஷலிச அமைப்பைப் பெறுமுன் எத்தகைய சமூதாய, அரசியல் கட்டங்களை இந்த நாடுகள் கடக்க வேண்டும் என்பது பற்றி நாம் இன்றும் சில வெற்று ஊகங்களைத் தான் சொல்ல முடியம் என்று நினைக்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம்: வெற்றிபெற்ற பாட்டாளி வர்க்கம் எந்த அந்நிய தேசிய இனத்தின் மீதும் எந்த விதமான நல்லவற்றையும் திணித்து விட முடியாது; அவ்வாறு அது செய்தால் அதன் வெற்றியின் ஆணிவேரை பறிக்கப்பட்டுவிடும். ஆனால் பல்வேறு வகையான தற்காப்புப் போர்களுக்கு இது பொருந்தாது என்பதைக் கூறத் தேவையில்லை….” ஏங்கெல்ஸ் (255)
சமூகம் பல்வேறு கட்டத்தை கடக்கும், இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டிய கட்டங்கள் இருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி மாற்றங்களை ஏற்படும்தும் எனவும் ஏங்கெல்ஸ் பொருளாதாரவாதம் பற்றிப் பேசவில்லை என்பதை லெனின் சுட்டிக் காட்டுகின்றார்.
‘‘தேசிய வெறுப்புகள் அவ்வளவு சீக்கிரம் மறைய மாட்டா. ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனத்தின் மீது கொண்ட வெறுப்பு – நியாயமான வெறுப்பு- சிறிதுகாலம் நீடிக்கும்; சோஷலிசம் வெற்றி பெற்ற பிறகுதான், தேசிய இனங்களுக்கிடையில் பூரண ஜனநாயக உறவுகள் இறுதியாக ஏற்பட்ட பிறகுதான், அது மறையும்.” (256)
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அளிக்காவிடின் சர்வதேசிய வாத உணர்வை வளர்க்க முடியாது என்கின்றார். இவ்வாறான சமூகக் கட்டங்களை கடக்க வேண்டும் என்றால் செயலூக்கமுள்ள கட்சி அவசியமாகும். ஒரு செயலுக்கமுள்ள கட்சி இன்றைக்கு அவசியமாகின்றது.
10. 1916ல் நடந்த ஐரிஷ் எழுச்சி
வர்க்கப் புரட்சி பற்றி கனவு கண்டு கொண்டு தரமான வாழ்விடம், நேரத்திற்கு நேரம் சாப்பாடு, தூங்கி எழுவது, வெள்ளை வேட்டி கசங்காது (மடிப்புக் குழையாது) கட்டிக் கொள்வது, பிரமுகர்த் தனமாக உரையாடுவது, என்பது புரட்சிகர வடிவமாக மாறிவிடாது
புலம்பெயர் சமூகம்
பல்வேறு காரணங்களால் புலம்பெயரும் மக்கள் மீளவும் தமது பிறந்த சமூகத்தை பற்றிச் சிந்திப்பத இயல்பானதே. இதில் குறிப்பாக தேசிய இன உணர்வு ஒடுக்குமுறைக்கு எதிராக எழுகின்ற போதும், விளையாட்டுக்களில் போது ஆதரவு நிலை ஏற்படும் என்பது இயல்பானதாக இருக்கின்றது. இங்கு விளையாட்டில் ஒரு நாட்டின் ஆதரவாளராக இலகுவாக இருந்து விட்டுப் போகலாம். ஆனால் அரசியல் ரீதியான விடயங்களில் ஈடுபடும் போது தவறாக விமர்சிக்கப்படும் போக்கும் உள்ளது.
புலம்பெயர்ந்து சென்று விட்டால் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தமது தாய்நாடு, தேசிய இனத்தைப் பற்றி பேசக் கூடாது என்ற வாதம் வைக்கப்படுகின்றது.
ஆனால் மார்க்ஸ், தோழர்லெனின், புலம்பெயர்ந்து வாழ்ந்தே புரட்சிகர கருத்துக்களையும், புரட்சிக்கு தலைமை தாங்கியிருக்கின்றார்கள். இவ்வாறே ஐரீஸ் ” இக்காங்கிரஸ் அயர்லாந்துக்குச் சுதந்திரம் கோருகிறது. நீண்ட காலப் பொது ஜனக் கிளர்ச்சி, ஆர்ப்பாட்டங்கள், பத்திரிகை அடக்கு முறைகள் முதலியவற்றுக்குப் பிறகு நகர்ப்புறக் குட்டிப் பூர்சுவாக்களின் ஓரு பகுதியினரும் தொழிலாளிகளின் ஒரு பகுதினரும் தெருச் சண்டையில் இறங்குவதிலும் இவ்வியக்கம் வெளியாகியுள்ளது.” (259)
இவ்வாறே ஈழ விடுதலைக்கான அரசியலைப் கதைக்கின்றவர்கள், செயற்படுகின்றவர்கள் உள்ளார்கள். தாய் நாட்டுக்கு வந்து கதை என்றும் கூறப்படுகின்றது.
புலிக்காய்ச்சல் கொண்டவர்கள் அரச ஒத்தோடிகளாக இருந்து கொண்டு செயற்பாடுகளை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கின்றார்கள். இதேவேளை அரசியல் முதிர்ச்சியற்றவர்களும் விமர்க்சிக்கின்றார்கள். இன்றைய நிலையில் புலம் சமூகம் பொதுவாக்கெடுப்பு நடத்த இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். இவ்வறான இயக்கம் என்பது வளராதது பெரும் இடைவெளியாகும்.
தேசிய விடுதலையை எதிர்ப்பவர்கள் இந்தச் சமூகம் ஏதோ சமூகம் இயல்பாக இருந்து விட்டால் எவையும் நடந்து விடும் என்று நம்புகின்றார்கள். இது ஒடுக்குமுறைச் சமூக அமைப்பையும், ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதையே செய்து கொண்டிருக்கின்றார்கள்.
‘‘தூய” சமுதாயப் புரட்சி ஒன்றை யார் எதிர்பார்த்தாலும் அதை ஒருபோதும் அவர் காணமாட்டார். அத்தகைய தொரு ஆசாமி உண்மையான புரட்சி என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதற்கு வாயளவில் மட்டும் தொண்டு புரிபவராவார்” (260) எந்த வகைச் சமூகக் கட்டத்தில் வாழ்கின்றோம், குறிப்பான சூழலில் எவ்வாறு செயலூக்கமுள்ளதாக மாற்றுவது என்பதைப் பற்றி இந்தப் பகுதி பேசின்றது. இடதுசாரிகள் தலைமை தாங்காத விடினும் மக்களின் தன்னியல்பான போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் தான் போராடுவார்கள், ஆனால் இடதுசாரிகள் நெறிப்படுத்துவார்கள். இடதுசாரிகள் வெற்றுக் கோட்பாட்டுவாதப் புத்தக பண்டிதர்களைப் பற்றி லெனின் பேசுவதே. இது இலங்கையில் இருக்கின்ற இடதுசாரிகள் அனைவருக்கும் பொருந்தும்.அரசியல் அதிகாரம், அரசியல் வடிவம் என மொத்தத்துவ அடிப்படையில் சமூகத்தை அணுகிட வேண்டும். பெண்விடுதலை, தேசிய விடுதலை, சாதிப்பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்ட கட்சியே வழிநடத்த வேண்டும்.
கொலனித்துவத்திற்கு எதிரான எழுச்சிகளை மிருகத்தனமாக ஆளும் வர்க்கங்கள் அடக்கியே வந்துள்ளது. இஇந்த அடக்குமுறைகளை மீறியும் தேசிய இன எழுச்சிகள் வளர்ந்து வந்துள்ளன. இது இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும் ஏனெனில் முதலாளித்துவ தேசிய எழுச்சிகள் முற்றுப்படாத பல தேசிய இனங்கள் இன்றும் இருக்கின்றன.
இரண்டு உலக யுத்தத்தின் பின்னர் மக்கள் நல அரசுகள் உருவாகியிருக்கின்றன. முன்னர் சட்டரீதியான விடயங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஊடாக வழக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகையான உரிமைகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னோக்கி நகர்த்திடாத வகையில் எழுச்சிகளை அடக்கி வைத்திருக்கின்றது. ஆனால் முதலாளித்துவ தேசிய எழுச்சிகள் முழுமையடையாத நிலையில் எழுச்சிகள் தொடரவே செய்யும்.
‘‘அயர்லாந்துக் கிளர்ச்சிக் கலகத்தினால் ஆங்கிலே ஏகாதிபத்திய பூர்சுவாக்களுக்கு விடம் அடி, ஆசியாவிலோ அல்லது ஆப்பிரிக்காவிலே விடும் அதே வலிமையுள்ள அடியை விட நூறு மடங்கு அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த்ததாக இருக்கும். (261) முதலாம் உலக யுத்தத்தின் போது உள் நாட்டு யுத்தத்தை மேற்கொள்ளுங்கள் என்ற அறைகூவலை இதனுடன் பொருத்திப் பார்ப்பது தகும்.
சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்ளாத எந்த அரசியல் மதிப்பீடுகளும் முன்னோக்கிச் சென்றுவிட முடியாது. முன்னேறிச் செல்கின்ற முயற்சி செய்கின்ற தேசிய இனத்தின் போர்க்குணத்தை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். 1949 நிலஆக்கிரமிப்பு, 56 தனி மொழி, 58, -- 77, 81, 83 அடித்து துரத்துவது என்ற பொருளாதார அழிவு, பண்பாடு 1981 என்றும் தொடர்ந்த நிலையின் உச்சம் 2009 வைகாசி 18. ஆக தேசிய இனங்களின் முதலாளித்துவ கட்டத்திற்கான வளர்ச்சியை ஒப்பிட்டு அணுகுவது அவசியமானதாகும்.
ஆனால் இந்த நிலையில் சிங்கள மையச் சிந்தனையில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளை மறுதலித்து விட்டு சென்றுவிடவும் முடியாது. 72 நாட்டின் பெயர் மாற்றம், தேசாதிபதியை அகற்றி சிங்கள தேசத்தின் சுயநிர்ணயம், சோல்பரி 21 சரத்து நீக்கம் என்ற போக்கில் மற்றையவர்களுக்கு பிச்சை போடுவது, பிரித்தாள்வது என்ற போக்கை ஆராயாது, மதிப்பீடு செய்யாது வரலாற்றுப் போக்கை ஒப்பிப்பது அபர்த்தம்.
ஏகாதிபத்தியங்கள் பயன்படுதும்
ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்தும் என்ற வாதம் வைக்கப்படும், இத்துடன் சேர்ந்து சிங்கள மக்களும் சுயநிர்ணயம் அற்றுத் தான் இருக்கின்றார்கள் என்ற குண்டையும் போட்டிருக்கின்றார்கள். சிங்கள தேசம் அது ஆட்சியதிகாரத்தை 1948 பெற்றிருந்தாலும் `1972 இல் தேசாதிபதியை அகற்றி குடியரசாக்கினார்கள். அன்றையப் பொழுதே முழுமையான சுயநிர்ணய அரசு கொண்டவர்களாக மாறிவிடுகின்றார்கள். சிங்கள தேசத்தவர்கள் தமது ஆட்சியாளர்களை தாமே தெரிவுசெய்கின்றார்கள். தமது சந்தையை திறந்து விடவும், சந்தையை மூடுவதற்கும் உரிமை கொண்டவர்களாக உள்ளார்கள். அதேவேளை ஆட்சியதிகாரத்தைக் கொண்டதால் மற்றைய தேசங்களையும், தேசிய இனத்தையும், மதச் சிறுபான்மையினரையும் ஒடுக்கி ஆக்கிரமிக்கின்றது.
‘‘ஒடுக்கப்படுகின்ற நாகரீகமான தேசிய இனம் புரட்சிகரக் கண்டனப் பத்திரிகை ஒன்றை நிறுவி, மிருகத்தனத்தில் ஈடு இணையற்ற இராணுவ ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுகின்றது! தனியான சக்தி என்ற வகையில் சிறிய தேசிய இனங்களுக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வலுவில்லை; ஆனால் சோஷலிஸ்டுப் பாட்டாளி வர்க்கம் என்ற அந்த உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தி தோன்றுவதற்கு வேண்டிய கிரியா ஊக்கிகளில் ஒன்றாக, நுண்கிருமிகளில் ஒன்றாக அச்சிறிய தேசிய இனங்கள் முக்கியமானதொரு பாத்திரத்தை வகிக்கின்றன என்பதை வரலாற்றின் இயக்க இயல் நமக்குக் காண்பிக்கனிறது.
எதிரி முகாமில் நடைபெறும் எல்லா வகையான தேசிய இன புரட்சி இயக்கங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்குத் தங்களால் இயன்றதனைத்தையும் இராண்வுத் தலைமை அலுவலகங்கள் இன்றைய யுத்தத்தில் செய்து வருகின்றன. உதாரணமாக ஜேர்மானியர் ஐரீஷ் எழுச்சியும், பிரெஞ்சுக்கார்கள் செக் மக்களின் இயக்கத்தையும் இத்தியாதி பயன்படுத்திக் கொள்கிறார்கள். தத்தம் நோக்கு நிலையிலிருந்து அவர்கள் மிகவும் சரியாகவே நடந்து கொள்கின்றனர். எதிரியின் சின்னஞ்சிறு பலவீனத்தையுங் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பதையும் சட்டெனப் பிடித்துப் பயன்படுத்திக் கொள்ளாமல், காரிய நோக்குள்ள போரின் பால் காரிய நோக்கைக் கடைப்பிடிக்க முடியாது. ஏனென்றால், எங்கு, எப்பொழுது, எவ்வளவு பலமாக வெடிமருந்துக் கிடங்குகள் ” வெடிகெகும்” என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாதல்லவா? ஏகாதிபத்தியத்தால் விளைக்கபடும் ஒவ்வொரு தனித்தனி இன்னலுக்கும் எதிராக நடக்கும் எல்லாவிதப் பொதுசன இயக்கத்தையும் நெருக்கடியைத் தீவிரமாக்கிப் பரப்பும் பொருட்டு மாபெரும் பாட்டாளி வர்க்க சோஷலிசப் போராட்டத்தில் பயன்படுத்த நமக்குத் தெரியாமல் போனால் நாம் மிக மோசமான புரட்சியாளர்கள் “ஆவோம். ஒரு புறம் தேசிய இன ஒடுக்குமுறை அனைத்தையும் நாம் ” எதிர்க்கிறோம்” என்று ஆயிரம் குரலில் முழங்கிவிட்டு, மறுபுதம் ஒடுக்கும் தேசிய இனத்துக்கெதிராக ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த சில வர்க்கங்களின் இயக்கமிக்க, கல்வியறிவுள்ள ஒரு பகுதி நடத்தும் வீர எழுச்சியை ”ஆட்சிக்கவிழ்ப்பு” என்று வருணிப் போமானால், காவுத்த்ஸ்கிவாதிகளைப் போலவே நாமும் அறிவீனர்களின் மட்டத்துக்கு இறங்கிவிடுவாம். (262-3)
சிங்கள பௌத்த பேரினவாத உலகக் கண்ணோட்டத்தில் வாழ்கின்ற சிங்கள தேசம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு முன்னேற முடியாது உள்ளது. இந்த நிலையில் ஈடும் முன்னோக்குப் பயனிக்கின்றது. இந்த நிலையில் தேசிய சுயநிர்ணயத்திற்கு போராடுவது தவறென்றோ, கற்பனை என்றோ கொள்ள முடியாது.
11. முடிவுரை
சுயநிர்ணயத்தை நேரடியாக எதிர்ப்பதும், ஒப்புக்கு ஏற்றுக் கொள்வதும் பற்றி நிறையவே ஆதாரங்களுடன் தோழர் லெனின் நிறுவுகின்றார். இதில் குறிப்பான மார்க்சிய முகாமில் உள்ள மாறுபாடான போக்கை திறனாய்விற்கு உட்படுத்துகின்றார். ”இங்கு ருஷ்யாவில் திரோஸ்கியும் மார்த்தவும் அதேபாதையில் பின்பற்றுகின்றார்கள். இவர்கள் இருவருமே, காவுதஸ்கியைப் போலவே, சுயநிர்ணயத்தைச் சொல்லளவில் ஆதரிக்கிறார்கள். ஆனால் செயலில்? நாஷேஸ்லோவில் தேசமும் பொருளாதாரமும் என்ற திரோத்ஸ்கியின் கட்டுரைகளை எடுத்துக் கொள்ளுங்கள. அதில் அவரது வழக்கமான கலப்படவாதத்தைக் காண்கிறோம்: ஒரு பக்கத்தில் பொருளாதாரம் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்துகிறது; மறுபக்கத்தில் தேசிய இன ஒடுக்குமுறை அவற்றைப் பிளவு படுத்துகினறது முடிவு என்ன? இன்று நிலவும் கபடம் இன்னும் அம்பலப்படுத்தப்படாமல் இருக்கினறது; பிரச்சாரத்தில் உயிரில்லை; எது மிக முக்கியமானதோ, அடிப்படையானதோ, நடைமுறையுடன் நெருக்கமாகச் சம்பந்தப்பட்டதோ அதை- ”தன்னுடைய சொந்த” தேசிய இனத்தினால் ஒடுக்கப்படும் இன்னொரு தேசிய இனத்தைப் பற்றிய ஒருவனது கொள்கையை – பிரச்சாரம் தொடுவதே இல்லை. (265)
நல்லெண்ணம் நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பார்கள். ”திரோத்ஸ்கி, மார்த்தவ் ஆகியோரின் அகநிலை ”நல்” லெண்ணங்கள் என்னவாக இருப்பினும், தங்களது தட்டிக் கழிக்கும் போக்கினால் அவர்கள் ருஷ்ய சமூக – ஏகாதிபத்தியத்தைப் புறநிலை ரீதியில் ஆதரிக்கிறார்கள். ஏகாதிபத்திய சகாப்தமானது எல்லா ”பெரும்” வல்வரசுகளையும் பல தேசிய இனங்களை ஒடுக்குபவைகளாக மாற்றிவிட்டது. ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியானது, சர்வதேச சமூக – ஜனநாயகத்திலும் இப்பிரச்சினையின் போக்கில் மேலும் திட்ட வட்டமான முறையில் பாடுபாடுகளைக் கட்டாயம் ஏற்படுத்தும். (266)
இந்த ஆய்வில் தோழர் லெனின் சுயநிர்ணயத்தை ஆதரிப்பதும், அதன் அவசியத்தையும் பற்றி தனது முழுமையான ஆய்வை முன்வைத்துள்ளார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைதான நாடுகளுக்கான வழிகாட்டியாக இந்த ஆய்வு முன்வைக்கின்றார். இந்த வகையில் தான் இந்த
--( http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000030.pdf ) நூல் முக்கியமானதாகும்.
இந்தப் புத்தகத்தை மார்க்சிய கட்சிகள், இயக்கங்கள் இந்த புத்தகத்தை வாசித்துள்ளார்களா என்ற ஐயம் எனக் உண்டு.
இந்தப் நூலின அடிப்படையில் விவாதத்தினை உருவாக்கவும், மார்க்சிய வழியில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். வர்க்க விடுதலை என்பது தேசிய இன, பால் ஒடுக்குமுறை, பிரதேச, சாதி, பொருளாதார அடக்குமுறை இவைகள் அனைத்தும் சேர்ந்தே. இந்த அடிப்படைக்கு அப்பால் செயற்படுவது பொருளாதாரவாதமே. இன்று பொருளாதாரவாதம்- தொழிற்சங்க (ஊதியம், வேலைநேரம், ஒய்வூதியம், இதர) என்பதாகவே கட்சிகள் பொருள் கொண்டுள்ளன. ஆனால் தோழர் லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் கட்சி எவ்வாறு தன்னியல்பை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகின்றார். தேசிய இனப்பிரச்சனையிலும் தன்னியல்பே தென்படுகின்றன. இது செயலூக்கம் அற்ற நிலையே காரணமாகும்.
http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000030.pdf
https://www.padippakam.com/padippakam/index.php/2010-08-18-08-51-48/423-lan/1680-m-0030


No comments:
Post a Comment