சமூகச் சிந்தனை பற்றி
சமூகத்தின் சிந்தனை முறையை வரையறுப்பதில் மாறுபட்ட கருத்து இருக்கின்றது. சமூகத்தின் சிந்தனை முறை ஒவ்வொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. ஒரு சிந்தனையை கடத்திச் செல்லும் சமூகம் திடீர்ரென விட்டொழிவதில்லை. உலகக்கண்ணேட்டம் என்பதைப் பற்றிய சித்தாந்த ஆய்வு சிக்கலான பிரச்சனைதான்.
சமூகத்தின் போலியுணர்வு (false consciousness) கருத்து முதல்வாதம் சார்ந்தது. மலையகம், இசுலாமிய மதச் சிறுபான்மை, ஆட்சியதிகாரம் கொண்ட சிங்கள பௌத்த பேரினவாதம் உட்பட அனைவரினதும் சிந்தனைக் கட்டமைப்பு முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூக உறவும், அதன் சிந்தனைக்கு முற்பட்டதே. மதநம்பிக்கை, ஆணாதிக்கச் சிந்தனை, சாதிய உணர்வு, பிரதேசவாத , குடும்பக் கட்டமைப்பும் அதுசார்ந்த சமூக உறவுகளும், கிராமத்திற்கும் (ஈழத்தைப் போல் அல்லாது குறிப்பாக தமிழகக் கிராமங்கள் சாதியால் பிரிந்துள்ளது முரண்பாடுகளை கொண்டது) நகரத்திற்குமான சிந்தனைப் போக்கில் மாற்றம் கொண்டதாக இருக்கும்.
கருத்துமுதல்வாதச் சிந்தனை என்பது அரச அதிகாரத்தின் ஊடாகவும் சமூகத்தில் பாதுகாக்கப்படுகின்றது. மதமாகவும், வாழ்வியலில் சமூக உறவை தீர்மானிக்கின்றது. சமூகத்தின் சிந்தனைக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்வது அவசியமாகும். இது முதலாளித்துவம் முழுமையடையான சிந்தனைக் கட்டமைப்பில் எங்கும் இருக்கின்றது. தனிமனிதப் புரிதல், தனிமனித மையச் சிந்தனைப் போக்கு என்பது சிந்தனையை தீர்மானிப்பதில்லை. மாறாக சமூக பொருளுற்பத்தி முறையே தீர்மானிக்கின்றது. சமூகத்தின் உலகக் கண்ணோட்டத்தை வரையறுத்துக் கொள்வதில் சிக்கல் இருந்து கொண்டே வருகின்றது. எதற்கு எடுத்தாலும் யாழ் சைவவேளாளம், யாழ் மையவாதம் என்று பேசப்படுகின்றது. (இதே போல தரகு வர்க்கத்தினையும் முழுச் சமூகத்தின் அங்கமாகக் காட்டப்படுவதும் உண்டு.) சமூகத்தின் விளைவுகளை வெள்ளாளம், யாழ்பாணிகளின் புத்தி என்று கூறிக் கடந்துவிட முடிகின்றது. இவைகளும் கூட தாம் எதனை எதிர்க்கின்றார்கள் என்று பிரகடனப்படுத்துகின்றார்களோ. அவற்றிற்கே இவ்வாறான நபர்கள் துணைபோகின்றார்கள். எவ்விதமும் முன்னேறிய சமூகச் சிந்தனையை கொடுப்பதாக இருப்பது பெரும் துயர்தான். இது திட்டிவிட்டு, வசைபாடிவிட்டுச் செல்லும் போக்கிற்கு அப்பாலவளரவில்லை.
ஈழப் போராட்டத்தை குறிப்பிட்ட பிரதேசத்தின் நலனாக கட்டமைக்கப்படுகின்றது. இது பேரினவாத பேராசிரியர் சில்வா தொடக்கம் (யாழ் மேட்டுக்குடிகளின் கோரிக்கையாம்) போலி பொதுவுடமை இயக்கங்கள் வரையில் மார்க்சியத்தின் போர்வையில் திரிக்கின்றார்கள். இதில் வெள்ளாள தேசியம் என்று ஒன்று உள்ளதா என்பது பற்றி பேசியாக வேண்டும். வெள்ளாள தேசியம் என்ற உச்சாடத்திற்குப் பின்னால் தேசிய இனங்களின் சனநாயக (முதலாளித்துவ) தேசியக் கட்டத்தை எதிர்த்து கருத்தாடல் செய்யப்படுகின்றது. அடையாள அரசியல் சக்திகள், தமிழகச் (தலித்தியம் எவ்வாறு மக்களை கூறுபோட்டுள்ளது என்பது வேறு விவாதம்) தன்னியல்புவாதிகள் தேசத்தின் ஆட்சியதிகாரத்தின் போராட்டத்தை வெள்ளாளக் கோரிக்கை என ஒப்பிக்கின்ற வேலையை செய்வதற்கு என்றே குழுக்கள் இருக்கின்றனர்.
சனாதன வகைப்பட்ட உலகக்கண்ணோட்டத்தை ஈழத் தமிழர்களாகிய நாம் இந்தியச் சட்டதின் படியே இந்து என்று அழைக்க திணிக்கப்பட்டுள்ளோம். இந்து- சமசுக்கிருதம் - இந்தியம் அடையாளம் என்றே தென்கிழக்காசியாவெங்கும் தமிழர் அடையாளம் வெளிப்படுத்தப்படுகின்றது. இதுவும் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட திணிப்புப் போக்கேயாகும். ( (இது தனியாக ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்)) பிராமணியச் சக்திகள் நேரடியாக அதிகார வர்க்கமாக சமூகத்தில் நிலைபெற்ற ஒரு பிரிவினராக உள்ளார்கள். அவர்களின் ஆதிக்கம் என்பது எம்மை நீ இந்துதான் என இந்தியச் சட்டத்தைக் கொண்டே வரையறுத்து வைத்துள்ளது.) சனாதனம் திணிக்கின்ற போக்கும் அதன் ஒடுக்குறையும் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டு ஒடுக்குகின்றது. இதன் கடும் போக்கை உணர்த்த பிராமணியம் என்று அழைக்கப்படுகின்றதை ஏற்றுக் கொள்ள முடியும் என்றே வைத்துக் (பிராமணியம், வெள்ளாளம் என்பதில் நம்பிக்கை இல்லை என்நிலையை பொதுமைபடுத்த வேண்டியதில்லை) கொள்வோம். ஆனால் ஆறுமுகநாவலரின் பின்னரான கருத்துருவாக்கத்தை சமூகச் சிந்தனையாக வரலாறு எங்கும் இருந்த்தாக கட்டமைப்பது எங்கனம் சாத்தியம். மேட்டுக்குடியாக்கத்தின், சமசுக்கிருதமயமாக்கலை சமூகத் தளத்தில் வைத்து அளவிடுவது சாத்தியமா?
வாழ்நிலையே அடுத்த கட்டத்தின் வளர்ச்சியை இட்டுச் செல்கின்றது. "Necessity is blind until it becomes conscious. Freedom is the consciousness of necessity.” நமது தேவைகளை நாம் நனவுநிலையில் உணராமல் உள்ளவரை அது குருட்டுத்தனமாகவே இருக்கும். விடுதலை என்பது நமது தேவைகள் பற்றிய பிரக்ஞைகொள்வதே. -கார்ல்மார்க்ஸ். வாழ்நிலை தவிர்த்து சிந்தனை உருவாகுவதில்லை. இங்கு முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கிற்கான தேவையில் தேசிய இயக்கத்தின் வளர்ச்சி, பழைய உற்பத்தி முறைக்கான மாற்றத்தையும் உள்ளடக்கியே உருவாகின்றது. தமிழர்மகாசபை (1920) காலத்தில் அரசியல் அதிகாரம் பற்றி உணரப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சிப் போக்கில் உருவாக போராட்ட அமைப்புக்களும், அரசியல் போக்கும் வளர்ந்து வந்துள்ளது.
சாதியந்தன் புத்தி என்ற அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதியை சுரண்டுவதற்காக தேசியக் கோரிக்கை உருவாக்கப்படுவதாக கூறுவதே இயங்கியலுக்கு உட்பட்டதாக இருக்க முடியாது. இதனையும் சாதியாக குறுக்கவேண்டியதில்லை. தேசத்தின் உள்ளடக்கமும் முதலாளிகளைக் கொண்டதாக இருக்கின்றது. ஒவ்வொரு சமூகத்திலும் தேசிய போக்கு, தரகுமுதலாளித்துவப் போக்கு கொண்டவர்களும் இருக்க முடியும். முதலாளிகள் சுரண்டுவதற்காகத் தான் ஈழம் கேட்கின்றார்கள் என்ற வாதமும் இதற்குள் உள்ளடக்கியதே. முதலாளிகளின் நலனுக்காகவே ஈழம் கேட்கின்றார்கள் என்ற வாய்ப்பாட்டுவாதமும் 40 வருடங்களாக நடைபெற்றுவருகின்றது. முதலாளிகளுக்கான சந்தையை நோக்கிப் போராடுகின்றார்கள் என்றால் உலகில் நடந்த எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றிருக்க முடியாது. அங்கு தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை (முற்போக்கு- நடுநிலை- பிற்போக்குவாதிகள் என்ற பெரும் மக்கள் கூட்டத்தில்) உள் வர்க்கப் பிரிவுகள் இருக்கின்றன. இந்த வர்க்கங்களின் நலனை கொண்டதாக இருக்கும் என்பதை தோழர் மாவோ ஐக்கிய முன்னணி பற்றிய பிரச்சனையில் வழிகாட்டுகின்றார். இன்னொரு வகையில் பேசுவது என்றால் ஏகாதிபத்தியக் கட்டத்தில் தேசிய இனங்களின் பிரச்சனை பற்றிப் பேசுகின்ற போது ஏகாதிபத்தியவாதம் பேசப்படுகின்றது.
அரைநிலைமானியம் எதிர்த்த எழுச்சிக் கட்டம்
தேசிய இனத்தின் சனநாயக்க (முதலாளித்துவ) கட்டம், புதிய சனநாயப்புரட்சி
இவ்வாறு பல கட்டங்களை நகர வேண்டியுள்ளது.
வெள்ளாளம் என்று பெயர் சூட்டுவது பிராமணியம் என்பதற்கு ஈடாகமாட்டாது. தென்னீழத்தில் வாழ்கின்ற ஆதிக்கச் சக்திகள் என்பவர்கள் வெள்ளாளர்கள் அல்லர். அவர்களிடமும் பழைய நிலமானியச் சிந்தனை உள்ளது. யார் யாழ்- சைவ- வேளாளம் - மையவாதம் என்கின்றார்களோ தென்னீழத்தை தவிர்த்துவிட்டு தம்மை மட்டும் குறிக்கும் சொல்லாடலை பெருமையாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்று சொல்லமுடியுமா? நிலமானியச் சிந்தனைக் கட்டமைப்பை வரையறுப்பதில் பெயர் முக்கியம் இல்லை என்று முடிவிற்கு வருபவர்களும் இருக்க முடியும். தன்சாதியச் சிந்தனையில் நான் வாழவில்லை என்று தன்னிலையை உயர்த்துவதற்காக பயன்படுத்தவும் முடியும். (வேளாளம் என்பதே கள்ளர், மறவர், அகம்படியர் என்ற சாதிகளின் கூட்டாகவும் ஈழத்தில் இருக்கின்றது. ) சமூக வளமையைக் கொண்ட அடையாள அரசியலின் வெளிப்பாடு. 1980 பின்னரான அடையாள அரசியல் தொடர்ச்சி வெகு நுண்ணியமாக வழிநடத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வினை செய்ய முடியவில்லை.(தகவல்கள், களஆய்வு, தொகுப்புக்கள் அவசியம். எந்தக் காலத்தில் வெள்ளாளம் என்று வரையறுக்கத் தொடங்கினார்கள் என்பதேயாகும்.) வெள்ளாளம் என்று கூறுவது ஊடாக சமூகத்தின் சிந்தனையில் ஏதாவது மாறுதலை கொடுத்துள்ளார்களா என்றால் ஐயமே.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டு ஆற்றல்வளம் கொண்ட தேசங்களின் இணைப்பு 1833 இல் இடம் பெற்றது. தேசிய இனங்களின் வளர்ச்சி பற்றிய புரிதலை மார்க்சியம் வழிகாட்டுகின்றது.
உற்பத்தி முறை மாற்றத்திற்கு ஏற்ப சமூகமயப்படுத்தப்படும் சிந்தனைக் கட்டமைப்பைப் பற்றிய புரிதலைப் பெறுவதாகும். தேசிய எழுச்சிக் கட்டமென்பது சமூக அவசியத்தின் ஊடாக புறநிலைத் தாக்குதலாம். அது அகத்தை மீது நோக்கிய தாக்குதலாகும். இதன் போக்கில் எழுகின்ற விளைவுகளை மதிப்பீடு செய்ய மார்க்சிய அணுகுமுறை, சித்தாந்தத்தின் ஊடாக சரியான பார்வையை வந்தடைய முடியும். 1966 தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சியாக தேசிய எழுச்சியை நோக்கிப் பயணித்திருக்க வேண்டியதில் இருந்து இடதுசாரிகள் தவறியுள்ளார்கள். தேசிய இனங்கள் சனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்காத வரையில் பழைய சிந்தனை முறை என்பது அகன்றுவிடுவதில்லை. பழைய சிந்தனை முறையை அகற்றி விட்டு புரட்சியையும் நடத்திவிட முடியாது.
எந்தச் சமூக அமைப்பு உள்ளதோ அந்தச் சமூகத்திற்குரிய சிந்தனைக் கட்டமைப்பைக் கொண்டே மனித கூட்டம் சமூக உறவைக் கட்டமைக்கின்றது. சமூக உறவு என்பது வளர்ந்து வரும் பொருளாதார உறவிற்கேற்ப மாற்றத்தையும் கோரும். சமூக உறவு என்பது பழையதிற்கும் புதியவற்றிற்கும் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கும். இங்கு சனநாயக மயப்படுத்தல் என்பது சித்தாந்த கோட்பாட்டு ரீதியாக மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளும். இதுதான் மார்க்சிய வழியை தேர்ந்தெடுப்பவர்கள் உயர்ந்த சனநாயக சிந்தனை கொண்டவர்களாக மாற்றப்படுகின்றார்கள். ஆனாலும் பழைய சிந்தனை முறைமை முழுமையாக மாற்றமடைவதில்லை.
இன்றைய நிலையில் தமிழ் தேசிய நலனில் செயற்படும் சக்திகள் பூர்சுவாச் சிந்தனைக்குட்பட்டே அமைப்புக்களை வைத்துள்ளார்கள். இவர்களிடம் சமூகமாற்றத்தை இணைத்த தேசியவிடுதலை பற்றிய புரிதலை எதிர்பார்க்க முடியாது.
தேசிய நலனில் செயற்படும் சக்திகள் மதநம்பிக்கை அற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய எழுச்சி என்பது முதலாளித்துவ சனநாயகப் புரட்சியை நோக்கியதாக இருக்கும். 2009 பின்னர் தேசிய விடுதலை அமைப்பு சிதைவிற்கு உள்ளாகிய போதிலும் தேசிய சனநாயகப் புரட்சிக்கான தலைமை வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கின்றது. தேசிய சனநாயகப் புரட்சி என்பது தன்னின மக்களை சுரண்ட அனுமதி கோருவது என்பதே லெனினின் வழிகாட்டலுக்கு மாற்றான ரொட்ஸ்கிய வாதமாகும்.
முதலாளித்துவ சனநாயகப் புரட்சி நடத்தி முடிக்கப்படவில்லை. தலித்திய அடையாள அரசியலை முன்னிறுத்துபவர்களும் ஈழ- மலையக சாதிய அமைப்பு தமிழகத்தை விட மாறுபட்டது என்பதையும், முதலாளித்துவ சனநாயகப் புரட்சிக்கு தயாராக யுத்தத்தை நடத்தி வீழ்த்தப்பட்ட வரலாற்றை உடையவர்கள் என்பதையும், ஈழம் மீள ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்திற்கு கொள்ள மறுக்கின்றார்கள்.
இந்தப் போராட்டத்தினை 30 வருடங்களின் பின் அதன் சாரத்தினை விளங்கிக் கொள்கின்ற போது முக்கியமானதாக இருக்கின்றது. தேசத்திற்கான போராட்டம் என்பதே அடிப்படையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்பது தான் அடிப்படையான சாரமாகும். "இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்" என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது முறையாக இருக்கும். நிலமானிய உற்பத்தியின் சிதைவுடன் தேசங்களின் பண்பைக் கொண்ட தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர்ச்சி பெறுகின்றது. இந்த வகையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்ற வகையில் அவை புரட்சிகரமானதே.
சிங்கள தேசத்தின் முற்போக்குத் தரப்பு என்று சொல்லப்படுபவர்கள் லெனினை மறுத்தே இதுவரையில் அரசியலை முன்வைக்கின்றார்கள். சிங்கள தேசத்திற்கு (FLSP/JVP) கட்சிகள் ஆரிய, விஜயன் மனேநிலையில் இருந்து வெளியே வரவில்லை.
ஏனெனில்
” தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன
இயக்கங்கள் துயிலெழுதலும், எல்லா விதமான தேசிய இன
ஒடுக்குமுறைக்கும் எதிராய் போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும், இரண்டாவது - எல்லா வடிவங்களிலும் தேசிய
இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப்பிரிவினைச் சுவர்கள்
தகர்க்கப்படுதலும், மூலதனத்தின் பொதுவாகப் பொருளாதார
வாழ்வின், அரசியல் விஞ்ஞானம் முதலானவற்றின்
சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும் இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக் குரிய
உலகம் தழுவிய விதியாகும்.”” லெனின்
மேலும் லெனின் மூன்றுவகை தேசிய இயக்கங்கள் என்கின்ற போது ஆபீரிக்க, ஆசியாவில் இன்னும் வளரவில்லை அல்லது இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்கின்றார். (--In these countries the bourgeois-democratic movements Have either Hardly begun> or are far from Having been completed. Https://www.marxists.org/arcHive/lenin/works/1916/jan/x01.Htm>) தேசிய இயக்கங்களின் வளர்ச்சிய நிலமானிய சிந்தனையா கொண்டவர்களின் நலன் என்பது மார்க்சியப் புரிதல் அல்ல.
முதலாளித்துவத்தை வளர்க்க மாட்டோம் ஆனால் நாங்கள் சோசலிசத்தால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுவோம். மக்கள் சுரண்டப்படுகின்றார்கள், தேசிய, மத, மொழி, குல ரீதியாக பிரிந்திருப்பது பாட்டாளி வர்க்க நலனைப் பாதிக்கும். அதுவும் தேசிய ஒடுக்குமுறையே இந்தக் உழைக்கும் வர்க்கங்களின் ஒன்றிணைவை தொடர்ந்தும் உடைந்து வந்துள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைக் கட்டமைப்பை பற்றிய புரிதல் அற்று. தேசிய இன, மத, மொழி கடந்து அனைவரும் போராட வேண்டும். இது வெளிப்படையான சரியானதாகத் தோன்றினாலும் ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தேசிய இன, மொழி, மதம் ஒன்றிணைவைத் தடுப்பது இலங்கை சமூக பொருளாதார அமைப்பாகும். இந்த நிலையில் போராடும் தேசத்தின் ஆட்சியதிகாரம் பற்றிய பிரச்சனையில் எவ்வாறு கோட்பாட்டை உருவாக்கிக் கொள்வதென்பதாகும்.
