இலங்கையில் நடைபெற்ற போராட்டம்
நூல்வடிவில் வந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போராட்டத்தின் தன்மையையும், அதன் பண்பையும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறான எவ்வித ஆய்வு மதிப்பீடும் இன்றி போராட்டத்தை குருட்டுத்தனமாக எதிர்ப்பதும், அதில் பங்கு கொள்ளாதவர்களை திட்டித் தீர்ப்பதும், குற்றவாளிகளாக ஆக்குவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குட்டிமுதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவினர் புரட்சி வாசலில் நிற்பது போன்ற காட்சிப்படுத்தல் கொடுத்தார்கள். தமிழகத்தில் ஏறுதழுவல் போராட்ட வடிவத்தைக் கொடுத்தார்கள். மக்கள் அங்கேயே தங்கினார்கள், சமைத்தார்கள், உணவைப் பகிர்ந்தார்கள், கழுவுப் பொருட்களை தாமே அகற்றினார்கள். ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் முதலாளித்துவப் புரட்சி நடைபெற்று முடியவில்லை. பழைய ஜனநாயக மரபை முன்னிறுத்தும் போக்கை இந்தச் சமூகக் கட்டத்தில் பழைய அரசுமுறையை (Liberté, égalité, fraternité) முன்னிறுத்திட முடியாது. நாடாளுமன்ற அரசியல் பாதை என்பதும், சமூகக் கட்டமும் இன்றைய சிக்கலை தீர்த்துவிட முடியாது. பழைய அரசு முறைகளுக்கு மாற்றாக புதிய அரசு முறைகள் உருவாகிவிட்டிருக்கின்றது. சோவியத் புரட்சி என்பது அடிமை நாடுகள், தேசங்கள் விடுதலையும் சுயநிர்ணயம் பற்றிய பிரஞ்ஞை உருவாகியது. இதில் தேச அரசுகள் பற்றிய உரையாடல் மார்க்சிய வழி வந்தவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேரடி கொலனித்துவம் முடிவிற்கு வந்து முதலாளித்துவ அரசுகள், மக்கள் நல அரசுகள், சோசலிச அரசுகள் என்பன உருவாகிவிட்டிருக்கின்றது. முதலாளித்துவப் புரட்சியின் தொடர்ச்சியாக சோசலிசப் புரட்சியை நோக்கி நகர்கின்ற போக்கைக் கொண்ட வரலாற்றுக் காலத்தில் வாழ்கின்ற நிலையில் கோட்பாட்டு உருவாக்கம் என்பது முன்னோக்கிய வளர்ச்சிப் போக்கை கொண்டதாகவே இருக்கப்பட வேண்டும். கோட்பாட்டுப் பிரச்சனைகள் இன்னும் தீர்ந்ததாக இல்லை.
இந்நிலையில் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. ஆனால் போராட்டங்களின் தன்மையை அறிய முற்படாமல் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தையும், பொருளாதாரவாத (தன்னியல்புவாத) ஒப்பிடப்படுகின்றது.
தன்னியல்பை வழிபட்டுக் கொண்டிருக்கும் போக்கு இருக்கின்றது. போராட்டங்கள் அளவு, பண்பு ரீதியாகவும் மாற்றம் கொண்டே இருக்கும். இந்தப் போராட்டங்களை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். போராடங்களை மதிப்பீடு செய்யாது எந்தப் போராட்டங்களை முன்னோக்கி நகர்த்திட முடியாது.
இலங்கையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடந்து முடிந்துவிடவில்லை. புரட்சியில் வெவ்வேறு கட்டங்களை கடக்க வேண்டும். சமூகத்தில் பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் பிரச்சனையை உள்ளடக்கியதான அரசியல் போக்கில் உள்ள சிக்கல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். புரட்சியின் பல கட்டங்கள் இருக்கின்றது என்ற புரிதல் உள்ளதா என்ற கோட்பாட்டுப் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. குறிப்பாக NDMLP, FLSP, JVP போன்ற கட்சிகளின் அரசியல் போக்கு, முடிவு, அரசியல் உள்ளடக்கம் ஆகிய விடயங்களை ஆராயப்பட வேண்டும். இவர்களின் அரசியலை உள்வாங்குவதன் ஊடாகவே கோட்பாட்டு பிரச்சனைக்கான ஆய்வுக்கோளை முன்வைக்க முடியும்.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு தலைமைதாங்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவறவிட்ட NDMLP, FLSP, JVP போன்ற கட்சிகளின் அரசியல் தவறுகளை ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் கட்சிகள் புரட்சி பற்றிப் கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் அரசியல் கோட்பாட்டில் உள்ள குறைபாடுகள், திரிபுவாதப் போக்கு, சமரசவாத, மார்க்சிய எதிர்ப்பு நிலைகளை வெளிப்படுத்துவதன் ஊடாகவே எதிர்காலத்திற்கான போராட்டத்தை கட்டமைக்க முடியும்.
சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைக் கட்டமைப்பு சிதையாமல் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்ப வைக்கப்படுகின்றது. இவர்கள் கூறும் அரசியல் என்பது சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றிவிடுமான என ஆராயப்பட வேண்டும். அன்பால் புரட்சியை நடத்திவிட முடியும், ஜீவகாரூண்ய ஒற்றுமை வளர்த்து விடுவதாக கூறுவதும் கற்பனை, கருத்துமுதல்வாதமே. புரட்சிகரமான சொல்லாடல் ஊடாக சமூகத்தை மாற்றிவிட முடியாது. இரண்டு தேசங்களின் நலனில் இருந்து அரசியல் முன்னெடுக்கப்படும். இது தவிர்க்க முடியாத அரசியல் போக்கு. இவற்றை எமது அகவுணர்வு எதனையும் தீர்மானித்துவிட முடியாது.
ஐக்கிய இலங்கைப் புரட்சி என்ற கற்பனைக் குதிரையை மீளவும் நம்பிக்கை ஊட்டுகின்றார்கள். அதனைச் சுற்றிய கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. சமூகத்தின் போக்கை விளங்கிடாது அரசியல் பாதையை விதைக்கின்றார்கள். தமிழ் மக்கள் மீது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது. ஒரு மக்கள் கூட்டத்தை, வழிநடத்திவிட முடிந்ததா? உங்களால் அவர்களை அணிதிரட்ட முடிந்ததா?
ஏன் செய்ய முடியவில்லை? இதில் எங்கு சிக்கல் உள்ளது? ஏன் ஒடுக்கும் தேசத்தின் உணர்வும், உலகக் கண்ணோட்டமும், ஒடுக்கப்படும் தேசத்தின் கண்ணோட்டமும் ஒன்றா?
எதற்கு எடுத்தாலும் ஈழதேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட நடைமுறைத் தவறுகளை வைத்து உரையாடுவதும், அரசியல் நீக்கம் செய்வதும் நடைபெற்று வருகின்றனர். தென்னிலங்கை மக்கள் கொதி நிலையில் இருப்பதால் மீளவும் பேரினவாதம் (இனவாதம்) உயிர்ப்பு பெறும் என்கின்றார்கள். தலைமையற்ற போராட்டம் மீளவும் கற்பனைக்கு எட்டாத வகையில் வளரும், நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கேள்வி கேட்க மக்கள் சபை உருவாக்கப்படும் என்கின்ற கருதுகோளை உறுதியாக நம்புகின்றார்கள் . இந்தப் போராட்டம் 14.07.22 அன்று ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய கட்டடங்களை கையளித்துவிட்டு அகன்றனர். குறிப்பாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் அறிக்கை விட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தோழர் லெனின் ''ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்ஷ்வா தேசிய வாதத்துக்கு உதவிவிடுவோமோ என்ற அச்சத்தால் சில ஆட்கள், ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு உதவிவிடுகிறார்கள்''
அ. 2009 வீழ்ச்சியின் பின்னர்
ஆணைக்குழுக்கள் என்பது வரலாறு எங்கும் சமூகத்தை திருப்பவே பயன்பட்டு வந்துள்ளது. பலநாடுகளில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைத்துள்ளார்கள். அந்த ஆணைக்குழுக்கள் சமூகத்தை ஏமாற்றுவதையே தொழிற்பாடாக கொண்டதாக இருந்துள்ளது. இவ்வாறு தான் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரசியல் போக்கு இருந்திருக்கின்றது. இரத்தம் சிந்தும் அரசியலின் வீழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.சர்வதேச ரீதியில் பரப்புரைக் குழுக்களை உருவாக்கிக் கொண்டது.
உள்நாட்டில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்தது.
அரசிற்கு இணையாக இடதுசாரிக் கட்சிகள் தமது பங்கிற்கு தமிழ்த் தேசக் கட்டுமானத்திற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்தார்கள். இது பற்றி விரிவாக பின்னைய பகுதிகளில் கவனிக்க முடியும்.
தமிழ் விதேசிய வர்க்கப் பிரிவு இரத்தம் சிந்தும் போராட்டத்தின் வீழ்ச்சியை இலக்கின் வீழ்ச்சியாக ஒப்பித்துக் கொண்டார்கள். தரகு முதலாளித்துவத்தின் வர்க்க சேவகம் அம்பலமாகுவதற்கு பல வருடங்கள் சென்றதாகினும் இன்று அம்பலப்பட்டுள்ளார்கள். ஆனால் முற்போக்கு தேசியப் பிரிவு அமைப்பு வடிவம் எடுக்க முடியவில்லை.
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சந்திரிகா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக பணியாற்றும் சந்திரிகா குமாரதுங்க நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
“போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற மீறல்களுக்கு யாரோ சிலர் பொறுப்பேற்க வேண்டும். மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நல்லிணக்க விவகாரங்களுடன் தொடர்புபடவில்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள், தமது எதிர்காலம் குறித்தே அதிகம் கரிசனை கொள்கின்றனர்.
தேசிய நல்லிணக்கத்துக்கான கொள்கையும், புதிய அரசியலமைப்புமே தற்போது அவசியமானவை. இதற்கே முன்னுரிமை கொடு க்கப்பட வேண்டும். இதனை அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
நல்லிணக்க செயல்முறைகளின் ஒரு அங்கம் தான் பொறுப்புக்கூறல்.
எமது நீதித்துறையால் சரியாக செய்ய முடியுமானால், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு தேவையிருக்காது. வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு புதிய அரசியலமைப்பு முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த அரசியல் போக்கில் தான் ”ஏக்க ராட்சிய” லங்கா என்ற கட்டமைப்பினுள் சமவுரிமை, மக்கள் சபை, நிகுநெகும போன்ற கருத்தாக்கங்கள் கட்டமைக்கப்பட்டன. இந்த இடதுசாரிகள் வீழ்த்தப்பட்ட ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை ஏற்க மறுத்து பிரிவினைவாத யுத்தம் முடிவிற்கு வந்ததாக அரசியல் மதிப்பீடு செய்தார்கள். இந்த அரசியல் மதிப்பீடு என்பது பெருந்தேசியவாதத்தில் கட்டுப்பாடு என்பதற்கு அப்பால் புரட்சிகர கட்டத்தை கடந்திட வழிகாட்டும் கோட்பாடை கொண்டதாக இல்லை.
தமிழ் தரகு வர்க்கம் போராட்ட வழிமுறையின் தோல்வியை இலக்கின் தோல்வியாக கட்டமைத்தது, தோல்வி மனப்பாங்கை கட்டமைத்தது, பேரினவாதத் தலைமையுடன் சேர்ந்து தமிழர் தேசத்தின் அரசியல் நியாயத்தை மழுங்கடித்தார்கள்.
தமிழ் கட்சிகள் திம்புக்கு மாற்றாக நாட்டின் பன்மைத்துவம் (Pluralisic character) மற்றையது பல்லினத்தன்மை (ethnic) உறுதிப்படுத்தவேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்தில் pluralisic character (மேற்கில் வேலைவாய்புத் தொடர்பான வழிகாட்டுமுறை அவதானிக்கலாம்) - என ஆங்கிலத்திலும் உள்ளது. Pluralisic character- ethnic இவை இரண்டும் வெவ்வேறானவை பன்முக தன்மை கொண்டதை தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் என்று இரண்டை நிலைப்பாட்டை இரண்டும் ஒன்று என்று வாதிடும் அபர்த்தம் இடம்பெற்றது. ஏக்கராட்சிய- unitary state பிரிக்கப்படாத நாடு என்பதும் லங்கா என்ற ஒற்றைக் கட்டமைப்பிற்கு உட்பட்டதாகும். ஆக தமிழ் கட்சியைத் சார்ந்தவர்களும் தம் பங்கிற்கு காரியம் ஆற்றினர்.
பௌத்த பேரினவாதம், திரிபுவாதம், தமிழ் தரகு முதலாளியம் எல்லாம் சந்திக்கும் புள்ளி ஏறக்குறைய ஒன்றே. ஆனால் புரட்சிகர தத்துவம் வழிகாட்டல் என்பது இவற்றை விட மாறுபட்டது. புரட்சிகரத் தத்துவம் என்றால் என்ன? அதன் அணுகுமுறை என்றால் என்ன?
ஆ. அகநிலைவாதம்- சமூக மாற்றம் அகநிலைவாதத்தை களைவார்களா?
அரசியல், சிந்தனைக் கட்டமைப்பு, பொருளாதார வடிவம், முரண்பாடு இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது? அதற்கு அடிப்படையான ஆய்வுமுறை, உலகக் கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்ற அடிப்படையை விளங்கிக் கொள்ளாது கோட்பாட்டை வகுத்திட முடியாது. கொலனியாதிக்க, தேச அடிமைத்தன கோட்பாட்டு மறுப்பு (162-2மா) என்ற நிலைப்பாட்டில் வழிநடத்தப்பட வேண்டும். ஊழியர் கொள்கை, கட்சிக் கட்டுப்பாடு, கட்சி ஜனநாயகம், பயிலுதல் என்ற விடயங்கள் கட்சிக்குள் அவசியமான வழிகாட்டும் கோட்பாடுகள் உண்டு.
கொள்கையை வெளிப்படையாக அறிவிக்காத போராட்ட முன்னெடுப்பதில் உள்ள குறைபாடுகளை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதுவும் குறிப்பான சமூகத்திற்கு ஏற்ற ஆய்வு கோள் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு வைக்காது மக்களை முட்டாள் என்ற நம்பிக்கை கொண்டும், முன்னணிப்படை ஒன்றில்லாது போராட்டத்தை வெற்றி கொள்ள முடியும் என்று நம்ப வைக்கப்படுகின்றது. இந்த கிளர்ச்சியை எழுச்சியாக கட்டமைக்க முடியாத கையறு நிலையை மறைக்க புரட்சிகர வாய்ச்சடவால் நடைபெறுகின்றது.
1. கட்சியின் அமைப்பு வடிவத்தில் உள்ள குறைபாடு?
மக்களிடம் கொண்டு செல்ல மொழி பேசுபவர்கள் இல்லை என்பது யாரின் குறைபாடு? இந்தச் சிக்கலை வேறு திசைக்குச் சென்று வியாக்கியானம் செய்யப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லை. அதன் குறைபாடாக சுட்டிக் காட்டப்படுகின்றது.
பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சூழல் இருக்கிறது, என்று கருதிக் கொண்டார்கள், மதிப்பீடும் செய்தார்கள். ஐக்கிய இலங்கை என்ற மாயைக்குள் இருந்து கோட்பாட்டை வகுத்துக் கொண்டார்கள். இதைத் தான் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றார்கள்.
இரண்டு தேசத்தின் நிலப்பரப்புக்களில் உள்ள மக்கள் கூட்டத்தின் தேவை மாறுபட்டு உள்ளது என்ற கோட்பாட்டுப் புரிதலை திரிபுவாதத்தினுள் தேடிக் கொண்டீர்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தவர்களின் அரசியல் போக்கும், சிதைந்த தேசத்தின் நிலைக்கும் மாறுபாடு உள்ளது. ஒன்றை ஒன்று பாதிக்குமா நிச்சயம் பாதிக்கும். ஆனால் தொழிற்துறை வளர்ச்சி அற்ற நிலை, ஒடுக்கப்பட்ட நிலை என்பது கிளர்ச்சியை ஏற்படுத்தி விடாது.
தேச எல்லைக்குள் உள்ள மொழியை அறிந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கு இனவழிப்பு, ஒடுக்குமுறை, தமிழர்களின் மீதான வன்முறை (58, 61, 77, 81, 83 மற்றும் 2009 இனவழிப்பு யுத்தம்) தெரியாது என்பது இளம் வயதினருக்குத் தெரியாது. இந்த நினைவு கூரல் என்பது இனவழிப்பை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதனைச் செய்யாது வெறும் சம்பிரதாய முழக்கத்திற்கு மாற்றான செயலுக்தியில் காலத்திற்கு ஏற்ற வகுக்கப்படவில்லை. போராட்டத்தில் கோட்பாட்டுப் பிரச்சனையும் திரிபுவாதம், பின்னவீனத்துவம் ஏற்படுத்திய சிதைவை கவனிக்கலாம்.
தென்னிலங்கையில் 1915 இல் மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவும் 1933 இல் மலையாளிகளுக்கு எதிராகவும், 1949 தேசமாக வளரக்கூடிய மலையக மக்களை பிரசாவுரிமை பறித்தது, நாடுகடத்திய விடயங்களை தவிர்த்துப் பேசிவிட முடியாது. தேசிய ஒடுக்குமுறை வரலாற்றை குறிக்கிவிட்டு அரசியல் செய்து விடமுடியும் என்று நம்புகின்றார்களா?
மேல் உள்ள சில குறிப்புக்கள் என்பது தென்னிலங்கை இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்தியல் சார்ந்த கேள்வியாகவும்,கோட்பாட்டு போதாமை குறித்து எழுப்பப்பட்ட எதிர்வினைக் கூறு. இவ்வாறான போராட்டங்களின் ஊடாக ஒன்று கலந்து கொள்வதன் ஊடாகவே பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள முடியும் என்கின்றார்கள்.
2. கட்சியும் உறுப்பினர் விதிகளும்
இடதுசாரிக் கட்சிகளுக்கு தெரியாதா? தனது ஊழியர்களுக்கு வரலாற்றை கற்பிக்காமலா உள்ளார்கள். வரலாற்றை இன்றுதான் அறிகின்றார்கள் என்ற தோற்றப்பாடு கொடுக்கப்பட்டது. இது பெரும் அவலம். ஒரு இடதுசாரி- மார்க்சிய அமைப்பு என்றால் வரலாறு, சமூகம், பொருளாதாரம், இயங்கியல் பொருள்முதல்வாதம் கற்பிக்கப்பட வேண்டும். இவ்வாறான அரசியல் மயப்படுத்தலை விட்டு விட்டு இந்தச் சூழலை வைத்து நாடகமாடும் அரசியல் என்பது சமூகத்திற்கு பலனில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில தமிழ் பேசும் செயற்பாட்டாளர்கள் சில இளையோரை வென்றெடுப்பதே சாதனையாகவும், இந்தச் செயற்பாடு தேசிய ஒடுக்குமுறையை தெளிவு படுத்தி உள்ளதாகவும் திரிபுவாதிகளும் கூறுகின்றார்கள். கண்ணைக்கட்டி குதிரைக்கு தண்ணி காட்டுவது போல மக்கள் புரட்சியை நடத்திவிடலாம் என்று நம்புகின்றார்கள்.
சிங்கள தேசத்தின் ஒடுக்குமுறை வரலாற்றை மறைத்துக் கொண்டும், அவற்றை கவனம் எடுக்காது ஊழியர்களை உருவாக்கிவிட முடியும் என்று நம்ப வைக்கப்படுகின்றது. இதுதான் தனது ஊழியர்களை இனமதகுலமற்று என்ற திரிபுவாத (அகநிலைவாத) அரசியலை முன்னெடுப்பது ஒன்றும் புதிய போக்கு அல்ல. கட்சிவிதிகள், அமைப்பு விதிகள் என்பவற்றை கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அமைப்பு விதியை கடந்து தாராளாவாத- அராஜகப் போக்கை இங்கு ஊக்குவிக்கப்படுகின்றது. கட்சி உறுப்பினர்களிடையே இவ்வாறான போக்கை அனுமதிக்க ஒரு கட்சியால் முடியுமா?
போராட்டத்தில் தலமை வகித்தவர்கள் தனியே இடதுசாரி கட்சி சார்ந்தவர்கள் மட்டும் அங்கில்லை எனினும், அவர்களின் அறிக்கையில் அனார்க்கியச் சிந்தனை பரவியிருந்ததை அறிக்கையின் ஊடாக அறியலாம். (பின் இணைப்பை காண்க).
3. ஆன்மா- மனமாற்றம்- அரசியல் மயப்படுத்தல்.
சமூகத்தில் பல்வேறு வர்க்கங்களை கொண்டதாக உட்பிரிவுகள் உள்ளன. இவர்களை அணிதிரட்ட வேண்டும். தேசிய இனப்பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை, சமூசிகப் பிரச்சனை உள்ளது. இலக்கை அடையவதற்கு சித்தாந்தம் வழிகாட்டும். சிந்தாந்தத்தை அடிப்படையாக கொண்டே அணிதிரட்டல், பயிற்றல் அவசியமாகும்.
இங்கு சிலரை வெண்றெடுப்பது என்பது வேறு. அரசியல் மயப்படுத்தல் என்பது வேறாகும். அரசியல் மயப்படுத்தல் என்பது சிந்தாந்தம், புரட்சிகர கட்சி, வர்க்கப் போராட்டம் என்பதை கட்சியின் உயர் நிலையில் இருந்து அடிமட்டம் வரையில் செய்யப்பட வேண்டியது. ஊழியர்கள் அனைத்து இலக்கியங்களைப் படித்து தம்மை உயர் அரசியல் தளத்திற்கு வளர்த்தெடுப்பது.
மக்களை அரசியல் மயப்படுத்தல் என்பது போராட்டக் களத்தைப் பயன்படுத்தல், நாடாளுமன்றம், மக்களிடையே நேரடியாகச் சென்று செய்ய முடியும். இங்கு உள்ள சிக்கல் என்னவெனில் அரசியல் மயப்படுத்தலை தவிர்த்து மனமாற்றம் என்பது மதவாதிகளின் பிரசங்கம் போல நம்பிக்கையை ஏற்படுத்தி விட முடியும் என்று நம்ப வைக்கப்படுகின்றது. மனமாற்றம் என்பது சுனாமி காலத்திலும் அவலத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் 2009 இனவழிப்பும் நடைபெற்றது.
கோத்தாவிற்கு எதிரான போராட்டம், பொருளாதாரத்தில் ( #gohomegota ) ஏற்பட்ட அவலத்தினால் மக்களிடையே இணைப்பு ஏற்பட்டதாக ஆகர்சம் அடைகின்றார்கள்.
ஆகர்சம் அடைபவர்கள் சுனாமி காலத்திலும் ஒன்றுமை ஏற்பட்டது அன்று ஒரு அம்மா பாதித் தேங்காயை கொடுத்து உதவியதாகவும், அதனை இட்டு ஆகர்சம் அடைந்து எழுதப்பட்டதையும் அறிவோம். அந்தப்பெரிய இயற்கை அனர்த்தத்தை சந்தித்த சமூகம். மனிதர்களிடம் உள்ள ஜீவகாரூண்ய உணர்வு இல்லது இயல்பே. சமூகச் சிந்தனை வடிவம் என்பது முன்னேறிய ஜனநாயக வடிவம் கொண்டதாக முதிர்ச்சியடையவில்லை. நிலமானியச் சிந்தனைக் கட்டமைப்பில் எழுந்த சிந்தனை என்பது சமூகப் பரப்பில் இருக்கின்றது. இந்த நிலையில் முன்னேறிய ஜனநாயக வழி முறை என்பது முன்னேறிய அரசியல் உரிமையை வெளிப்படையாக ஏற்று பயணிக்கக் கூடிய சமூகச் சக்திகளை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலையில் மாற்றம் அடைந்திருப்பதாக கூறுவது ஏமாற்று வித்தைகளே.
மக்கள சமரவீராவின் நினைவும் உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது. இதனை எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும். அங்கு பெரும்பான்மையான பூர்சுவா அரசியல்வாதிகள் தேசிய இனம் கடந்து ஒன்று கூடியிருந்தார்கள். இவர்கள் நிர்ணயிக்கும் அரசியல் போக்கு என்ன என்பதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஈழ தேசத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் முகமாக அரசியல் மயப்படுத்தும் வேலை உள்ளது. அந்த வேலையை மறுத்து விட்டு இன்னொரு மொழியைக் கற்றுக் கொண்டு அந்த மக்களை அரசியல் மயப்படுத்தக் கோருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (இனவழிப்பு என கூறாது) தமிழில் தேசிய கீதம் பாடியதும் பெரும் வெற்றியாம். சிறுபான்மை உரிமை என்பதும் தேசத்தின் சுயநிர்ணயமும் ஒன்றல்ல. தமிழ் மொழியில் அடக்குமுறை அரச கீதம் பாடுவது புரட்சி இல்லை. மும்மொழி என்பதும் இலங்கைக்கு பொருத்தமற்றது. ஒவ்வொரு தேசங்களின் இறைமையுள்ள வளர்ச்சி என்பது வேறானது.
ஒடுக்கப்படும் தேசிய இனம் இன்னொரு (சிங்கள) மொழியை கற்றுக் கொண்டு உறவாடி பிரச்சனையை வெளிப்படுத்த வேண்டும் என்கின்றார்கள். அவ்வாறாயின் ஏன் இடதுசாரிக் கட்சி இருக்க வேண்டும்? தோழர் ஸ்ராலின் வெவ்வேறு சோவியத் குடியரசினர் தமது மொழியை பயிற்றுவித்து சொந்த மொழியால் கட்சியை வளர்க்கவும், ஆட்சி செய்ய ஊழியர்களை வளர்க்க வேண்டும் என்கின்றார். ஆனால் இலங்கை இடதுசாரிகளுக்கு என்ன மொழிக் கொள்கை உள்ளது?
4. முழக்கங்கள் பற்றி
முழக்கங்கள் எவையும் நலிந்தவையாக இருக்க
முடியாது. அந்த முழங்கள்
இறுதி வழிக்கான முழக்கமாகவும் மாறக் கூடியவை. அந்த முழக்கங்களின் பின்னால் மக்களை
போராட்ட களத்திற்கு அழைப்பதாகும்.
போராட்டக்களத்தில் பயன்படுத்திய சில முழக்கங்களை
கவனிப்போம்.
1. முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் நினைவாக
2. ஆடி கலவரம் அல்லது இனவழிப்பா
3.let's not forget slaughter for #tamils
4. மக்களே கட்சி, நிற (கவனிக்கவும் அதாவது நிற) பேதமின்றி அடக்குமுறைக்கு எதிராக
அணிதிரள்வோம்.
சிங்கள பௌத்த பேரினவாதம் கொலனித்துவ ஆட்சியாளர்கள் இருந்த போதும், அதன் பின்னரும் தொடர்ச்சியான இனவழிப்பு அரசியலை மேற்கொண்டு வருகின்றது.
தேசிய இயக்கங்களின் வளர்ச்சி என்பது மெதுவாகவே
நடைபெற்று வந்தது. தேசிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கை மதிப்பீடு செய்யாத நிலையே
இன்னும் தொடர்கின்றது.
இரண்டு காலகட்டம் பற்றிய புரிதலை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
1. முதலாளித்துவ கட்டத்திற்கான காலத்தில் தேசிய இனப்பிரச்சனை
பற்றிய பார்வையும். இதனையே இன்றும் ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது 1916 முன்னைய
வழிகாட்டலும், கோட்பாடும் வலிமை
இழப்பதும் புதிய கோட்பாடு வழிகாட்டலை லெனின் முன்வைத்தார். அந்த கோட்பாட்டு நிலைமாறியதை கவனத்தில் கொள்ள வில்லை. அதே வேளை குறிப்பான நாட்டில்
ஏற்படுகின்ற மாற்றத்தையும் வரலாற்றையும் கவனிக்கவில்லை. தேச அரசுகள் என்பது முதலாளித்துவத்திலும் சரி,
சோசலிசத்திலும் சரி அது தவிர்க்க முடியாது
என்கின்றார்கள்.
2. சோசலிச காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சனையும்,
சுயநிர்ணயமும் என்ற லெனின் வழிகாட்டல்
இந்த வரலாற்றுத் திருப்பத்திலும், குறிப்பான நாட்டுச் சூழலும் எவ்வாறானது என்பதை ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஆற்றல்வளங்கொண்ட இரண்டு தேசிய இனங்கள் கொலனித்துவ ஆக்கிரமிப்பினுள் இருந்து வந்துள்ளது. கொலனித்துவ ஆட்சி மாற்றம் இன்னொரு தேசத்தின் கீழ் மற்றதை அளித்துவிட்டு சென்றார்கள். இங்கிருந்தே பிரச்சனையை அணுக வேண்டும். எண்கணக்கு அடிப்படையில் தேசங்கள் அமைவதில்லை. இது வரலாற்று ரீதியான தொடர்ச்சியைக் கொண்டதாகவும், அதுவும் தொல்வாழ்வியல் மரபில் வந்ததாகவும் உள்ளது.
பழைய சிந்தனை மரபின் மேல் கட்டப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைக் கட்டமைப்பை புரிந்து கொள்ளாது அரசியல் வியூகத்தை அமைக்க முடியாது. #gohomegota2022 போராட்டக் களத்திலும் சிங்கள பௌத்த பேரினவாதம் அலுங்காமலும் குழுங்காமலும் முழுக்கங்கள் வைக்கப்பட்டது. போலி இடதுசாரியம் அதற்கு புரட்சிகர முலாம் வீசிவந்துள்ளார்கள்.
காட்டித் தருகின்றேன் கூட்டிச் செல்கின்றேன் என்பது போல அதாவது குதிரைக்கு தண்ணி காட்டுவது போல முழக்கங்கள், அமைப்பு செயல்வடிவம், அரசியல்மயமாக்கல் இருக்க முடியாது.
ஆங்காங்கே வரும் செய்திகள், பதாதைகள், வரையறுக்கப்பட்ட முழக்கங்கள் என்பன மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. தன்னியல்பு, பொருளாதாரப் வகைப் போராட்டத்தில் எதிர் பார்க்க முடியாது. எனினும் சமூகத்தின் தன்மையை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இனவழிப்பு, சர்வதேச விசாரணை என முழக்கம் வைத்தால் இராணுவத்தினரின் பெற்றோர்களை களத்தில் இறக்கிவிடுவார்கள் என்ற போக்கு உள்ளது. இதுதான் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்புக்குள் தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. வேலைத் திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த முடியாத கட்சிகள் உள்ளன.
ஒடுக்கப்படுபவர்களிடம் நம்பிக்கையை பெறுவது ஒடுக்கும் தேசத்தின் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் தான் உள்ளது. இனவழிப்பிற்கான நீதியை தமிழர் தேசத்தவர்கள் சிங்கள உழைக்கும் வர்க்கத்திடம் அணுகுமாறு கூறுகின்றார்கள். இது எவ்வகையான இயங்கியல் போக்கு? சிங்கள தேசத்தின் முற்போக்குச் சக்திகள் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தவர்களிடம் செல்ல மாட்டார்களாம். ஆனால் தமிழ் தேசத்தவர்கள் தமது சக்தியை அங்கு செலவு செய்யக் கோருகின்றார்கள்.
குறிப்பான சமூகக் கட்டத்திற்காக செயற்பாட்டில் எவ்வகையான முழக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குறிப்பான முழக்கங்கள் சமூக இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதாகும்.
”மூல உத்தியை வகுப்பவர் அல்லது செயலுத்தியை வகுப்பவரின் கலைத்திறன் ஒரு கிளர்ச்சி முழக்கத்தை, திறமையான முறையிலும் சரியான நேரத்திலும், ஒரு செயல் முழக்கமாக நிலைமாற்றம் செய்வதிலும், சரியான நேரத்திலும் திறமையான முறையிலும் ஒரு செயல் முழக்கத்தை ஒரு திட்டவட்டமான, பருண்மையான, உத்தரவுகளாக வார்த்தெடுப்பதிலும் அடங்கியிருக்கிறது.(80- தொ5)
” ஒரு முழக்கம் என்பது போராட்டத்தின், ஒரு குறிப்பிட்ட முன்னணிக் குழுவால், பாட்டாளி வர்க்கத்தின் கட்சியால் என்று வைத்துக் கொள்ளலாம், முன்வைக்கப்படும் உடனடி அல்லது தொலைதூர, குறிக்கோள்களின் சுருக்கமான, தெளிவான சூத்திரமாகும். போராட்டத்தின் பல்வேறு குறிக்காள்களுக்கேற்ப முழக்கங்கள் மாறுபடுகின்றன, அந்தக் குறிக்கோள்கள் ஒரு முழுமையான வரலாற்றுக் கட்டத்தையோ குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தையோ குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் தனித்தனிக் கட்டங்களையும் நிகழ்வுகளையுயுமோ தழுவியவையாக இருக்கின்றன. (178-5)
உலகப் புரட்சியின் ஒரு அங்கத்தின் ஒரு பகுதி என விளக்கமற்று வரையறுத்து விட்டு போக முடியாது.
5. மன்றம்- மக்கள் மன்றம்
#gohomegota காரர்கள் அரச நிறுவனத்திடம் நீதியைப் பெறமுடியும் என்று கோரிக்கை வைத்தார்கள். அரசின் அங்கத்தைப் பற்றிய விடயத்தில் அதிலும் குறிப்பாக நீதித்துறை, இராணுவம் போன்ற நிறுவனங்களின் தொழிற்பாட்டை திட்டமிட்டே மறைக்கப்படுகின்றது. இன்றைய கிளர்ச்சி என்பது குறிப்பிட்ட மட்டத்தில் தான் அனுமதிக்கப்படுகின்றது. ஆட்சியதிகாரம் என்பது அரசின் முழு நிறுவனங்களை கட்டுப்பாட்டினுள் வந்த பின்னரே செய்யப்பட வேண்டியதை பூர்சுவாக் கட்டமைப்புக்குள் செய்ய முடியும் என்று கற்பனை செய்யப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்காத நிலையில் கற்பனை ரீதியாக முழக்கம் வைக்கப்படுகின்றது. தூய சமூகப் புரட்சியை யாரும் நடத்திவிட முடியாது.
ஆனால் கொள்கையை மறைத்துக் கொண்டு அரசியல் செய்யவும் முடியாது. சிறிய சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இன்றையப் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அலகில் அனுமதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாது, அரசியல் முழக்கத்தை வைப்பதையும் விமர்சிப்பதையும் பழமைவாதிகள் என்கின்று முத்திரை குத்துபவர்களும் உள்ளார்கள்.
இனமதகுலமற்று என்ற திரிபுவாதக் முழக்கம் மார்க்சிய வழியில் அமைந்தது அல்ல. முதலாளித்துவ, சோசலிசக் கட்டத்தில் தேச அரசுகளை ஏற்கின்ற கொள்கை வழிப் போக்கிற்கு எதிரானதாகும். தோழர்கள் லெனின், ஸ்ராலின் வழிகாட்டாலை, ஆய்வுகோளை பின்பற்றத் தயாராக இல்லை. ஆனால் பின்னவீனத்துவமும், சிங்கள பௌத்த மையவாத போலி இடதுசாரிகளும் ஏக்கராட்சிய மனப் பாங்கில் தமது முழக்கங்களை முன்னிறுத்துகின்றார்கள். ஏக்கராட்சிய என்பதே லங்கா என்ற கட்டமைப்பினுள் பிரசைகளுக்கான உரிமை என்பதுடன் நின்று விடுகின்றது.
இதே வேளை ஏகாதிபத்திய முதலாளித்துவம் என்பது நாடாளுமன்றத்திற்கு அப்பால் ஒரு கட்டமைப்பு உருவாக்க முடியும் என்ற முழக்கம் என்பது வைக்கப்பட்டது..
இதில் வேடிக்கை என்னவெனில் தேசத்தின் சுயநிர்ணயம் போராட்டத்தின் ஊடாக சாத்தியம் இல்லை என்பவர்கள் கூட இந்த முழக்கத்தின் பின்னால் அணிதிரண்டனர்.
1. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
2. இராசபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழக்கக் கூடாது
3. அத்தியாவசிய தேவை கள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை) மறுசீரமைப்பதற்காக 19 திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 6 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.
4. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் , ஊழல் மற்றும் அதிகாரிகள் உட்பட இராசபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயற்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் 6 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுத்தல்
6. மக்கள் சபை அமைக்க வேண்டும்.
நாடாளுமன்ற அதிகாரத்துக்கு நிகராக நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்கள் சபை அமைக்கப்பட்டு, தற்காலிக அரசில் மக்கள் அமைக்கப்பட்டு, தற்காலிக அரசில் மக்கள் சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், கலைஞர்கள், மாணர்வர்கள், தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள் உள்ளடங்கிய சபை ஒன்றிற்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இது தான் போராட்டக் காரர்களின் கோரிக்கை. (a stat -- military. Parliament. Government, Jurist system, jail) இதில் யார் யாரைத் தண்டிப்பது?
இராணுவம் யாரின் கீழ் உள்ளது?
சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் அரசியல் அதிகாரம் உள்ளது. அதனை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்கள் (அரசாங்கம், நீதி, இராணுவம், சிறை) உள்ளன. இன்று சிக்கித் தவிப்பது பொ ருளாதாரத்தில் என்பதை விளங்கிக் கொள்ளாத அரசியல் முடிவுகள் தமிழ் மக்களை மீளவும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதை விளங்கிட வேண்டும்.
பொருளாதாரப் பிரச்சனை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியலை ஜீவகாரூண்ய வழியில் நடத்துவது தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல. சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்கு பலன் கொடுக்காது. அவர்கள் தமது வர்க்க எதிரியை அறியவிடாது தடுப்பதில் தான் கொண்டு வந்து விடுகின்றது.
தம்மை இடதுசாரிய பேச்சாளர் என்பவர் தான் பொருளாதாரப் பிரச்சனை தமிழர்களுக்கு இருக்கின்றது என்று அறிக்கை விட்டார். இங்கு அவர்கள் பொருளாதாரவாதிகளாக சீரளிந்து விட்டனர்.
பொருளாதார நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையை தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. ஒரு வகை அழுத்தம், நெருக்குவாரம் தோழமை, ஒத்துழைப்பு (Solidarity) என்பதை எவ்வாறு அரசியல் ரீதியாக விளக்கி வைத்துள்ளார்? இந்தச் சிக்கல் gohomegota போராட்ட ஆதரவாளர்கள் புரிந்து வைத்துள்ளார்களாக என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக சமூகத்தில் உள்ள முரண்பாட்டின் தன்மையை உள்வாங்கிக் கொள்வது ஒரு கட்சிக்கு அவசியமாகும். இராணுவத்தின் கோர முகத்தைக் கண்டவர்களின் வாழ்வியல் சிந்தனை போராட்டத்திற்கு உடனடியாக இறக்கிவிட முடிவதில்லை. தமிழ் மக்களை இந்த எழுச்சியுடன் வைத்து விளையாட தெற்கு போலி இடதுசாரிச் சக்திகள் முனைந்தார்கள். இதனை அவர்களின் அரசியல் அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றின் ஊடாக அறிய முடியும்.
ஈழ தேசம் என்பது எழுதா இராணுவ ஆட்சி, ஆக்கிரமிப்புக்குள் தான் இருக்கின்றது. இந்த ஆக்கிரமிப்புப் பற்றிப் பேசாத எந்தப் போராட்டமும் முன்னோக்கி நகர்ந்து விடுவதில்லை. இராணுவம் விலகியிருப்பதற்கு காரணம் இராணுவத்திற்கு எரிபொருள் கிடைக்காதாம், சர்வதேசம் இராணுவத்திற்கு உதவாதாம், அவப் பெயரை ஏற்படுத்திவிட தயாராக இல்லை என்பதால் இராணுவம் ஒதுங்கியுள்ளதாம். இவ்வாறு துருப்பிடித்தா போயியுள்ளது அரசியல் விஞ்ஞானப் பார்வை. அன்னியக் கடனை எதிர்பார்த்திருந்த ஆட்சியாளர்கள் மிக மோசமாக இராணுவ நடவடிக்கையை செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதே. அதே வேளை தென்னிலங்கையில் இருந்த படையானது தமிழ் தேசத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புப் படையினர் பகுதி போல இருந்திருப்பதில் சந்தர்ப்பம் இல்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
தென்னிலங்கையில் உள்ள படைகளை மூர்க்கமாக நடத்திட முடியும். ஆனால் தமிழர் பகுதியில் இருந்த படையினரை பயன்படுத்தி தென்னிலங்கையில் மூர்க்கமாக நடத்திட முடியாது. ஆனாலும் தொழிலாளர்கள் எரிபொருளுக்காக போராடிய போது துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலிமுகத்திடலில் துப்பாக்கி வேட்டுக்கள் மக்களை நோக்கி நகர்த்திட வில்லை. இதில் அந்நிய எசமானர்களின் பரிந்துரைகள், குறிப்பான சூழல் இவைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6.சமூகத்தை வழிநடத்துவது அன்பா?
முதலாளி வர்க்கம் இரக்கம் கொண்டு (ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நிறுவனக் கட்டமைப்புகள்) நடக்கும் என்று கற்பிக்கப்படுகின்றது. இதனால் இந்தச் சமூக அமைப்பே முற்றுமான எடுத்துக்காட்டாக கொள்ளவைக்கப்படுகின்றது. கடந்த கால சமூகவாழ்வியல் அனுபவங்களை முன்வைத்து ஒரு சமூக இயக்கத்தை திசைதிருப்பும் வல்லமை முதலாளித்துவ வர்க்க நிறுவனக் கட்டமைப்புக்கு உண்டு. தொலைத்தொடபும் கருத்துருவாக்கமும், அதிகார வர்க்கம், கல்வியமைப்பு, நுகர்வுப் பண்பாடு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற விடயங்களில் ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் கவனம் கொண்டு செயற்படும். முதலாளித்துவ பொருளாதார கருத்துருவாக்கம் சனநாயகம், மனிதவுரிமை, பக்கச் சார்பற்ற ஆட்சி என்று கூறுகின்றது. இதேபோல இடதுசாரியமும் அன்பு பற்றிய போதனையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
இதனை காலிமுகத்திடலில் நடத்திய 1983 தமிழின அழிப்புப் பற்றிய நினைவில் அவர்கள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சியானது ஒரு மனிதர் தன்னை வதைப்பதாக காட்சிப்படுத்தப்பட்டது. அதில் தெருவோரம் எங்கும் தனது கைகளை பின்பக்கமாக கட்டிக் கொண்டு, உருண்டு நகர்வதாக காட்சியமைப்புச் செய்யப்பட்டது. ஒருவர் தன்னை வதைப்பதாக காட்டிக் கொள்வது மற்றைய மனிதர்களின் உணர்வை விளங்குவதாக காட்டிக் கொள்ளப்பட்டாலும் அது மதம் சார்ந்த அன்பு மார்க்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.
மனிதர்களிடையே அன்பு பற்றிப் போதிக்கும் மனிதத்தினால் சமூகத்தை மாற்றிவிட முடியாது. அரசியல் பொருளாதார சிந்தனை அற்ற அன்பு பற்றிய போதனையை தென்னிலங்கை இடதுசாரிகள் அரசியலாக கொள்கின்றார்கள். சிலவருடங்களுக்கு முன்னர் இவர்களின் உறுப்பினர்களுடன் உரையாட முடிந்தது. அந்த உரையாடல் என்பது சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக கூடி வாழ்ந்தனர் என்பதை வரலாற்று ரீதியாக உரைப்பதிலும், பழைய நினைவுகளை மீள மீட்டுவாதாக இருந்தது. தேசிய இன முரண்பாடுகள் தேசங்களின் அரசியல் உரிமை பற்றிய முரணில் இருந்து உருவாக்கின்றது என்ற புரிதலை கொடுக்க முடியவில்லை.
இன்றையச் சமூக உற்பத்தி முறையின் அவசியம், சமூகப் போக்கு இவை அடங்கிய வாழ் என்ற சிந்தனைக்கு மாற்றான சிந்தனை, சமூகப் போக்கு உள்ளது. அதற்கு மாற்றான உலகக்கண்ணோட்டமே மார்க்சியம்.
சமூகம் அன்பினால் தன்னை முன்னோக்கி நகர்த்துவிட முடியும் என்று நம்ப வைக்கப்படுகின்றது. சமூகம் அன்பினால் இன, மத, குல பேதமாக பிரிந்திருப்பது இனி நடந்து விடக் கூடாது என்றும் விரும்பம் இருக்க முடியும் நம்ப வைக்கப்படுகின்றது. ”நல்ல உறவுகளின் வளர்ச்சியிலிருந்து தேசிய ஒற்றுமையும், தேசிய உறவுகளும் எழும்” என்பது சாத்தியமில்லை. (349-11ஸ்) அன்பு புரட்சியை விதைப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள சமூகப் பொருளாதார அவசியம் என்பதும் முரண்பாடுகளின் தன்மையே சமூகத்தை முன்னோக்கி நகர்த்துகின்றது.
7.அகநிலை- புறநிலை
அகநிலை சிந்தனை வடிவத்திற்கு மாற்றாக சமூக வளர்ச்சியை விளங்கிக் கொள்வது என்றால் இயங்கில் ரீதியாக சமூகப் பொருள் உற்பத்தி முறையில் இருந்தும், இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம், சமூக முரண்பாடுகளில் இரு ந்தும் ஆராய்வதாகும். சிந்தனைகளை வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை. சிந்தனை என்பது அகம் சார்ந்ததாக இருக்கின்றது.
அகமனித (subjectivism) விருப்பிற்கு அப்பால் தெளிவான அரசியல் பாதையைக் காட்டிவிட முடியாது. அதற்கு மாற்றாக புறநிலை (objectivism) யாக பொருள் உற்பத்தி வடிவம், அதன் சிந்தனை வடிவம் என்பதில் இருந்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
அதாவது புறநிலையில் இருந்து நுண் ஆய்வையும் மேற்கொள்வதாகும்.‘‘புறவயமான அம்சம் (Objective aspect); அதாவது தன்னிகழ்வான அம்சம் (Spontaneous aspect) மற்றது, அகவயமான அம்சம் (Subjective aspect) அதாவது உணர்வுபூர்வமான அம்சம் (Conscious aspect). புறவயமானதும் தன்னிகழ்வானதுமான அம்சம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுபூர்வமான நெறிமுறைப்படுத்தும் சித்தத்தைச் சார்ந்திராது சுயேச்சையாக நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகளின் தொகுதி ஆகும்.‘‘ (ஸ்ராலின்)
இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார்.
இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையை மனித அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
"பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவு தான் அநாகரீகமானது ஆகவும், அழுகிப் போனது ஆகவும் தோன்றிய போதிலும், ஏதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.
சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழி மட்டும் தான் உண்டு. அது என்ன?
பழைமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையும் ஆகிய சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்கு உள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளி ஊட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றே தான் வழி" லெனின்
புரட்சிகரகட்டம், வர்க்கப் போராட்டம் என்பது வெவ்வேறு உற்பத்தி முறை மாற்றம் என்ற அடைப்படையைக் கொண்டதாகும். அடையாள அரசியல், சாத்தியவாதம், கவற்சிவாதம், தேர்தல் வழி அமைப்புகள் என்பன உற்பத்தி முறையில் மாற்றம் கோரிப் போராடுவதில்லை. இந்தப் போக்கில் அகநிலைவாதம் என்பதை முறியடிக்க வேண்டி தேவையுள்ளது.
8.Clubhouse- மன்றமனை உரையாடல் செய்யும் பிரிவுகள்
இந்தப் புரட்சியாளர்கள் அன்றாடம் உரையாடி புரட்சியின் நகர்வு பற்றி உரையாடி தம்மிடையே புழங்காகிதம் அடைவார்கள். இந்தப் புரட்சியாளர்களின் சிந்தாந்தப் புரிதலை இட்டு புழங்காகிதம் அடையும் வகையில் இருக்கும். இவர்களின் உடையாடல் ஏதோ புரட்சியின் வெற்றி விளிம்பில் உள்ளதாக உரையாடுவார்கள். அவர்களின் போக்குப் பற்றிய சிறிய குறிப்புக்களை பார்ப்போம். அதே வேளை பல்வேறு வர்க்கப் பிரிவுகள் பல குழுக்களாக உரையாடுகின்றார்கள். இதில் அரச ஒத்தோடிகள், போலி இடதுசாரிகள் என்போம் ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை மறுதலிப்பது தெரிந்தே. அதேவேளை இளைய சமூகம் ஈழத்தின் அரசியல் நியாயத்தை கற்று அறிந்து கொள்கின்றார்கள் என்பதை இட்டும் அதிகமாக பதறுகின்றார்கள். பலகுழுக்களாக இருந்தாலும் இந்தப் புள்ளியில் இணைந்து சிங்கள தேசத்திற்கு இணையாக வேலை செய்கின்றார்கள்.
1. தமிழ் தேசியத்தின் இடதுபிரிவு (மதம் கடந்து சிந்திக்கும்.) கொண்டதாகவும் மார்க்சிய கொள்கை வழியில் அடையாளம் கொண்டு பயணிக்கவில்லை. மாறாக அவர்கள் முற்போக்கு சிந்தனைப் போக்கை கொண்டவர்களாக உள்ளார்கள். அந்த வர்க்கத்திற்கான ஊசலாட்டம் கொண்டதாக இருப்பதும் இயல்பே.
2. தமிழ் தேசிய மிதவாத- பழமைவாதப் போக்கு, இணக்க அரசியல். இந்தப் போக்கு என்பது விதேசிய- தரகு வர்க்கத்தின் பிரிவினராக உள்ளார்கள். இந்த வர்க்கத்தினரை அரசியல் ரீதியாக இணைந்து செல்ல முடியாத வர்க்கம்.
3.இடதுசாரியம் என்று இரண்டாம் அகில காலத்தைய கோட்பாடுகளை முன்னிறுத்துவபவர்கள். இது பொதுவான இலங்கையின் இடதுசாரி கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஒரு மக்கள் கூட்டம் கடும் கற்காலச் சிந்தனையில் மூழ்கியிருக்கின்ற வேளையிலும் கூட அவர்களின் உரிமையப் பற்றிப் பேசும் கூட்டம். அதே கூட்டம் தேசத்தின் உரிமையைப் பற்றிப் பேசும் போது யாழ் சைவ வேளாளம் என்பார்கள். இந்தச் சமூகம் முதலாளித்துவ கட்டத்தை கடக்கத் தயாராக உள்ள ஒரு சமூக ஒழுங்கமைவு. ஆனால் மற்றையது முதலாளித்துவ போக்கிற்கு தயாராக இல்லாது இணக்க அரசியல், பழைமைவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அடையாளத்தை பாதுகாக்க முனைகின்றது.
தேசம் என்பது மதம் அடையாளம் இல்லை. மாறாக மொழி, பொருளாதாரம், நிலப்பரப்பு, பண்பாடு. இது போதாது என்பவர்கள் அகநிலைவாதிகளாக, கருத்துமுதல்வாதிகளாக இருக்கின்றார்கள்.
முதலாளித்துவ தாராளவாதச் சிந்தனைப் போக்கு சமூகத்தின் போக்கை முன்னோக்கி நகர்த்திச் செல்ல தயாராக இல்லாமல் உள்ளது. அகவொடுக்குமுறைக்கான தீர்வு கொடுப்பததாக கூறிக் கொள்ளும் பேர்வழிகள். சிந்தனை மாற்றத்தை முன்வைக்கின்றார்கள். அந்த சிந்தனை மாற்றம் நடைபெறாவிட்டால் முன்னேற முடியாது என்கின்றார்கள். நிலமானியத் சிந்தனை முறையின் மேல் கட்டப்பட்ட நிலையில் தான் போராட்டம் வீழ்ந்தது என்கின்றார்கள்.
இங்கு அவர்கள் சுயமுரண்பாடான விடயத்தை முன்வைக்கின்றார்கள். அதாவது இன்றைய உலகத்தின் சிந்தனைப் போக்கை இளையோர் விளங்கவோ, உள்வாங்கவோ இல்லையாம். இளையோர் பழைய சிந்தனை (தமிழ் தேசிய) யை காவிக் கொண்டு திரிக்கின்றார்கள் என்கின்றனர். அது மாத்திரம் அல்லாது உண்மையான மக்களின் நண்பர்களாக இடதுசாரிகள் (நவீன இடதுகள், ரொட்ஸ்கிய, இரண்டாம் அகில பாணிப் போக்கு) இருக்கின்றார்களாம்.
தம்மை இடதுசாரி என்பவர்கள் அகநிலைவாதிகளாகவும், அனுபவாதத்தை முன்வைப்பவர்களாக இருக்கின்றார்கள். அகநிலைவாதமே பிரதான போக்காக இடதுசாரிகள் என்பவர்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் ஈழப் போராட்டத்தின் விளைவாக தொடர்கின்ற சிந்தனைப் போக்கு என்பது முதலாளித்துவ தேசியக் கட்டத்தை கடக்கத் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் தமக்கு தெரிந்த வகையில் சிந்திக்கின்றார்கள், செயற்படுகின்றார்கள். அதனை இடதுசாரிகள் என்பவர்கள் மறுக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் புதிய ஜனநாயகப் புரட்சி என்கின்றார்கள். ஆனால் முரண்பாடாக முதலாளித்துவ சனநாயகத்திற்காக போராடும் மக்கள் கூட்டத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
மாறாக இவர்கள் மக்கள் மன்றம் என்ற பழைய - அகநிலைவாத, கருத்துமுதல்வாத கோட்பாட்டை தீர்வாக முன்வைக்கின்றார்கள்.
இவர்கள் முன்வைத்த 6 அம்சத் திட்டம் என்பது ஏக்க ராட்சியத்திற்கு உட்பட்ட தீர்வு வடிவம் மட்டுமே. இது சுயநிர்ணயம் பற்றிய எவ்வித கவனமும் கொள்ளவில்லை. இன்னொரு வகையில் பார்த்தால் அது சிங்கள தேசத்தில் உள்ள உள்ளக பிரச்சனைக்கான தீர்வாக முன்வைத்தார்கள் என்று வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இலங்கைக்கான தீர்வாக எதுவும் இல்லை.
இதனை ஆதரிப்பவர்கள் தான் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டுமென்கின்றார்கள். இதில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான எவ்வித திட்டமும் இல்லை. சுருக்கமாக கூறினால் தோழர் மாவோவின் சிந்தனை எதனையும் இந்த 6 அம்சத்தில் காணமுடியவில்லை.
போராட்டக் காரர்கள் தான் உண்மையான சுயநிர்ணயப் போராட்டத்தை உண்மையாக பேசுகின்றார்கள் என்று புழங்காகிதப் பேச்சை கேட்க முடிகின்றது. ஈழப் போராட்டம் காட்டித் தருகின்றேன் என கூட்டிச் சென்றதாம். அதாவது குதிதைக்கு தண்ணீர் காட்டுவது போல
ஆனால் உண்மையில் இனமதகுலமற்று என்று என்ற கருத்துமுதல்வாதப் போக்கிற்குப் பின்னால் திரளுங்கள் என்று பரப்புரை செய்யப்படுகின்றது.
வர்க்கப் புரட்சியைக் கைவிட்ட ஒத்தோடிகள் மன்றமனை உரையாடலில் புரட்சியை நடத்திக் கொண்டார்கள்.
-ஈழ தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை ஆதரிப்பது
-ஈழத்தின் சுயநிர்ணயத்தை எதிர்ப்பது
-சிங்கள பௌத்த பேரினவாதத்தையும், இனவொடுக்குமுறை, அழிப்பை கண்டும் காணாதிருப்பது,
-ஈழ தேசவிடுதலைக்காக போராடிய தேசபக்தர்களையும், அமைப்பையும் இழிவுபடுத்துவது
-வர்க்கப் போராட்டம் என்பது உற்பத்தி, அரசியல் அதிகாரம் என்பதை மறுப்பது
-தேசவிடுதலையை மறுத்து ஒத்தோடியாக இருந்து சமாதான தேவதைகளை வாழ்த்துவது, ஒடுக்கப்படும் தேசத்தவர்களின் துயரை கவனத்தில் எடுக்காமை
-இன்று வீழ்ந்துள்ள ஈழ தேசத்தின் மீதான அரசியல் உள்ளடக்கத்தை மறுத்து நித்தம் சேறுவாரி இறைப்பது
-தேசிய இனக் கோரிக்கையே என்பதே கொலனித்துவத்தினால் உருவாக்கப்பட்டது, அதை வைத்து யாழ் சைவ வேளாளியம் தனது நலனுக்காக பயன்படுத்துகின்றது. (NLFT, PLFT இதையை கொள்கையாக கொண்டது? நளின் டி சில்வாவும் இதை தான் சொல்கின்றார்,) மொழிவழியில் வளர்ந்து வரும் சமூகஒழுங்கமைவு பற்றி இவர்களுக்கு எவ்வித புரிதல், அறிவு, தேடல் இல்லை. இதனால் தமிழர் தாயகம் ஒன்றிருக்கவே இல்லை.
சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமிழர்கள் தான் கற்றுக் கொடுத்தார்களா?
புரட்சிகரக் கருத்தை பேசுவது வரதர் ஒருவர் மட்டும் தானாம். (என்ன கண்டுபிடிப்பு வாவ்)
13 இந்திய ஒப்பந்தம் நாபாவின் கனவு என்றால் அவர்கள் குப்பைத் தொட்டியில் போக வேண்டியவர்களே.
ராசிக் என்பவன் தேசவிரோதி, சிங்கள தேசத்தின் அடியாள். நீங்கள் புனிதர்களாக கட்டமைப்பது எதுவும் இந்தச் சமூகம் உங்களை ஏற்காது.
13இல் காணி, காவல்துறை அதிகாரம் இருக்கின்றதாம்- இது பிள்ளையானின் ஆலோசகர்.
தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள்கூட எம்முடன் சேர மறுக்கிறார்கள். முழு சிங்களமக்களும் நாடு தம்முடையதாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். ஜனநாயக நாடாம் பெரும்பான்மை தீர்மானம் அவர்கள் கையில் உள்ளது.
இது அவர்கள் தெரிவு. ஆனால் மதச் சிறுபான்மை ஒரு தேசத்தின் மீது முடிவு எடுக்க முடியாது. மதச் சிறுபான்மை முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி, சிந்தனை முறைக்கு தயாராக இல்லை. அதனை குறுகிய காலத்தில் மாற்றிவிட முடியாது. அவர்கள் தேசத்தின் சுயநிர்ணயத்திற்கு இடையூறாக நிற்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு கிடையாது. தேசத்தினை வரையறை செய்ய அகநிலைவாதம், கருத்துமுதல்வாதத்துடன் சமரசம் செய்யும் போக்கும் உள்ளது. மதம் தேசத்தினை வரையறுத்திடுவதில்லை. மார்க்சியத்திற்கு முரணான பின்னவீனத்துவ, அடையாளக் கோட்பாட்டை முன்றிறுத்தப்படுகின்றது. மதஅடையாளத்துடன் சமரசம் செய்பவர்கள் தேசத்தின் ஜனநாயக உரிமையை மறுப்பதை கவனத்தில் கொள்ளவில்லை அல்லது ஏற்கவில்லை.
இந்திய மாதிரி (1). Union List – மத்திய (2 ) State List மாநில அரசு (3). Concurrent List – பொதுப் பட்டியல் இவ்வாறுதான் இந்தியாவின் யாப்பு வகுக்கப்பட்டடுள்ளது. இவ்வாறு இருந்தாலும் இந்தியாவில் இருப்பது போன்று உறுதியான வரைவாக 13 இந்திய- லங்கா ஒப்பந்தம் இல்லை. ஒரு மாதிரிப்படிவத்தை சிங்கள தேசம் தனக்குச் சார்பாக பயன்படுத்தும் பலவீனம் கொண்டதாக இருக்கின்றது. இதனால் ஆளுனரிடம் எதற்கும் தங்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு தமிழர் தேசத்திற்கு தீர்ப்புக் கூறுகின்றார்கள்.
மாட்டுக்காய் நல்லூர் முன்றலில் முட்டு கொடுத்தவர்கள் மனிதருக்கான போராட்டத்தை கொச்சை படுத்துவதன் பின்ணனி என்ன?
இன்று காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்தை விட பல மடங்கு உள்ளடங்கம் கொண்டது ஏறுதழுவல் – தை எழுச்சியாகும். அடையாளத்திற்கு ஏறுதழுவல் முன்னிறுத்தப்பட்டாலும் பல்வேறு சக்திகள் பல்வேறு பிரச்சனை முன்வைத்து கருத்துருவாக்கம் செய்தார்கள். அங்கு அவர்கள் ஆட்சியாளர்களை மாற்றக் கோரவில்லை. அது ஒரு தேசிய எழுச்சியின் ஒரு ஆரம்பநிலையில் இருந்த போராட்டமாகும்.
போராட்டம் என்றால் துப்பாக்கியை எடுத்து மண்டையில் போடுவது!!
இன்றைய நிலையில் ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட செயல், யுத்த, அமைப்பு வடிவப் பிரச்சனை இன்றைய நிலையில் விமர்சிக்கவும், அதற்கு பதில் தரவும், விமர்சனம் செய்யவும் முடியும்.
ஆனால் ஈழப் போராட்டத்தின் அரசியல் நியாயம் 1505, 1833, 1948 இல் இருந்து தொடர்ந்து வருவதாகும். இன்றைய நிலையில் ஈழ தேசத்தின் அரசியல் நியாயம் பேசப்பட்டே ஆக வேண்டும். போராட்ட வடிவத்தில் ஒன்று தோல்வி உற்றது என்பதற்காய் போராட்டம் முற்றுப் பெறுவதில்லை. இலக்கும், சமூகத் தேவையும் உள்ள வரையில் போராட்டம் என்பது தொடரவே செய்யும்.
”தமிழ்சனம் இன்னும் நாம் கொத்துக் கொத்தாக... என்ற தூசு படிந்த டயலோக்குடன் பின்தங்கி நிற்கிறது”.
இவ்வாறு எழுதுவதற்கு மனச் சாட்சி தேவையில்லை. ஆனால் வெட்கம் கூடவா இல்லை? 149600ற்கு அதிகமான மக்கள் 2009 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகள் இறக்குவரையும் பேசியே வந்தார். எவ்வாறு ஒரு இனப்படுகொலையை சாதாரணமாக கடந்து செல்ல முடிகின்றது? ஜேவிபினர் கருத்துப் போல பிரிவினைவாதப் போராட்டம் முடிவிற்கு வந்து விட்டது என்று நம்புகின்றார்கள். பின்னவீனத்துவ சிந்தனைப் போக்கின் தாக்கம். வரலாற்றை தவிர்த்து விட்டு சமூகப் போக்கை அணுகுவது மார்க்சியத்தில் இருந்து பிறழ்வுக்கு உள்ளாகிய நிலையே. வரலாற்றுத் தொடர்ச்சியை மறந்துவிட்டு சமூகம் முன்னோக்கி நகர்ந்து விடவில்லை. வரலாற்றை கைவிடு என்பது பின்னைய காலத்தைய போக்காகும். வரலாறு பேசினால் அலட்சியமாக பார்க்கும் பார்வை வளர்க்கப்படுகின்றது. மேற்கின் தாராளவாதச் சிந்தனைப் போக்கு சமூகத்தில் பலமாக வேர் ஊன்றிள்ளது. இதற்கு இடதுசாரியமும் பலியாகித் தான் உள்ளது.
தமிழில் சிங்கள தேசத்தின் கீதத்தை பாடுவதே ஒருசாதனையாக முன்னிறுத்தப்பட்டது. இவ்வாறு ஒரு விடயத்தை அடையாளப்படுத்துவதால் குறிப்பிட்ட சிக்கலை தீர்த்துவிட்டதாக கருத்தமைவு கொடுக்கப்பட்டது. இதே போல தமிழ் இனவாதம் வலிமை பெறும் போது சிங்கள (பேர் அங்காரம்) இனவாதமும் வலிமை பெறும் (ஜே.விபி) இந்தக் கூற்றும் கூட ஒரு வரலாற்றுத் திரிபு. ஒரு சமூகத்தின் சிந்தனை அடிப்படையான சமூகக் கட்டமைப்பே தீர்மானிக்கின்றது. அந்தக் கட்டமைப்புப் பற்றிய புரிதல் இல்லாது மேம்போக்காக கருத்துக் கூறப்படுகின்றது.
JVP தகவலை வெளியில் விடுகின்றது என்றால் அதன் பின்னால் உள்ள கட்டமைப்பு தொடர்புகள் தான் காரணம். 2005களில் இராணுவத்தினை சேர்த்துக் கொடுத்ததில் JVPக்கு பங்குள்ளது. இதே வேளை குமார் குணரெத்தினத்தினை நாடுகடத்தவும் தமது ஆளுமையைச் செலுத்தினார்கள். இது வெளியுறவுத் திணைக்களத்தில் இருந்த கட்சி அனுதாபிகளைக் கொண்டே செய்வித்தார்கள் என்ற கருத்து வெளிவந்தது. இந்தச் செய்தி பொய் என்று கூறும் அளவில் இல்லை. முன்னால் தூதுவராக செயற்பட்ட தமரா குணரட்ணம் அவரின் பேச்சை கவனித்தால் JVPகள் குறிப்பிட்ட வகையில் ஆளுகை செலுத்துகின்றார்கள் என விளங்கிக் கொள்ள முடியும். அவர் பிரிவினைவாதம் யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. இனி வர்க்கப் புரட்சியையும் லங்காவை சிறந்த முறையில் கட்டமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். JVP பல திணைக்களங்களில் உள்நுழைந்துள்ளார்கள்.
JVP வெளியிட்ட தகவலை வைத்து அரசியல் மாற்றத்தை கொண்டுவருமா என்றால் அது சாத்தியமில்லை. போராட்டக்காரர்களின் கோரிக்கை என்பதே ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை தண்டனைக்கு உள்ளாக்கு என்பதே. மக்கள் திரள் அமைப்பு, கட்சி, வலுவான இராணுவம் எவையும் இல்லாத நிலையில் பொருளாதார, தன்னியல்புப் போராட்டம் சிறிய சமரத்துடன் முடியும். சனாதிபதி முறை இன்றைய நிலையில் மாற்றத்திற்கு உள்ளாகாது. ஏதோ புரட்சி கனிந்துள்ளதாக ஆகர்சம் அடைபவர்கள் இறுதியில் தோல்வியடைவர் என்று போராட்டத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு சமூகக் கூட்டத்தை உடனடியாக வீதிக்கு இறக்கு என கூவிட முடியாது. அதற்கு தேவையான சமூக அவசியம் இருக்க வேண்டும். அந்த சமூக அவசியம் என்பது புறநிலையினால் உந்தப்படுகின்றது. ஆனால் பொருளாதாரவாதக் கோரிக்கை ஒரு சமூகத்திற்கு அவசியமானதாக இருக்கின்றது. இது குறிப்பாக உயர் மற்றும் மத்திய தரவர்க்கத்தின் கோரிக்கையாக இருக்கும்.
நீண்ட கால யுத்தம் பற்றி 120 புள்ளிகளாக வரைந்து வழிகாட்டி மாவோ நம்மிடம் இல்லை. மாறாக இன்று திரிபுவாதம், சாத்தியவாதம், பொருளாதாரவாதம், சட்டவாதம் என்பவற்றில் புரட்சிகர கட்சிகள் சீரளிந்து உள்ளன.
உலகப் புரட்சியை இரண்டு வகைகளாக பார்த்திட இயலும். முதலாளித்துவ வகைக்கு சார்ந்ததாகவும், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அங்கமாக அமைந்து கொள்வதுமாக இருக்கின்றது. கட்சியில் எவ்வித புதிய ஆய்வுகோள் எதுவும் இன்றித் தான் 1990களின் பின்னரான கட்சிகளின் நிலை உள்ளது. வழமையான புரட்சிகர சொல்லாடல்களை முழக்கமிட்டுக் கொண்டு புரட்சி வேடம் போடப்படுகின்றது.
இதிலும் குறிப்பாக ஜேவிபியானது ஈழ தேசத்தை அங்கீகரித்து, அரசியல் நியாயத்தை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையை தவறவிட்டு இனமதகுலமற்று ஒன்றிணைவோம் என்று பழைய பல்லவியை மீளவும் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களைப் போல பெருந்தேசியவாதச் கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது.
கட்சிகளுக்கு அப்பால் சில தனிமனிதர்களின் முழக்கங்கள், செயற்பாடுகளை புரட்சியின் பொதுத்தன்மையாக கட்டமைக்கப்படுகின்றது. இவை எதுவும் உண்மையான சமூக மாற்றத்திற்கு உதவிட முடியாது. கட்சித் திட்டத்தில் சுயநிர்ணயத்தை மறைத்து லங்கா தேசம் என்ற கற்பனைக்குப் பின்னால் அணிதிரளும் படி கோருகின்றார்கள்.
சீர்திருத்தத்துடன் இணைப்பதன் ஊடாக தேசிய இனச் சிக்கலை தீர்க்க முடியும் என்கின்ற போக்கு இருக்கி்ன்றது. ”தேசிய இனங்களின் விடுதலையை அடிப்படையான மாற்றங்களுடன், விடுதலைக்கான ஜனநாயகத்துடன் இணைப்பற்கு எதிர்நிலைப் போக்கில் அமைவதாகும். அரசியல் அமைப்பின் ஊடாக மாற்றம் கிடைக்கும் போக்கிற்கு எதிர்நிலையான புரட்சிகர முறையாகும். அரசியல் அமைப்பின் ஊடான பிரச்சனையாகவும், அதன் ஊடாக தீர்க்க முடியும் என்ற கடைந்தெடுத்த பூர்சுவாக்கள் ஏற்றுக் கொள்ளவார்கள். ஆனால் மாலெ வழிகாட்டல் அவ்வாறு இல்லை.
போர்த்தந்திரம், செயல்வடிவம் இல்லாத எந்த முழக்கங்களும் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியாது. தனிமனித ஆகர்சம் என்பது உடலுக்கு ஆகாது. தனிமனிதர் ஆகர்சம் கொண்டு துள்ளிக் குதிப்பதால் எவ்வித பலனும் இல்லை.
தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன் என்பது வேறுபட்டே இருக்கும். இதில் ஈழத் தமிழ் பொதுவுடமைக் கட்சி இல்லாத நிலையில் தலைமை தாங்க முடியவில்லை. எனினும் ” சீனாவின் தேசிய முதலாளி வர்க்கத்துக்கு இரட்டை குணாம்சம் உண்டு. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் போது இந்த தேசிய முதலாளி வர்க்கம் இரட்டை நிலை எடுத்து- புரட்சிகர குணாம்சம் இருந்தது,
கூடவே கீழ்படிந்து செல்லும் இணக்கமா குணமும் இருந்தது, கூடவே கீழ்படிந்து செல்லும் இணக்கமான குணமும் இருந்தது. இதே வர்க்கம் சோசலிசப் புரட்சியின் போது ஒரு புறம் லாப வேட்டையாடும் பொருட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டியது, மறுபுறம் சீன அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும் சோசலிச மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. ஏகாதிபத்திய சக்திகள், நிலப்பிரபுக்கள், அரசு அதிகார முதலாளித்துவவாதிகள் ஆகியோருக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் வேறுபாடு உள்ளது. பாட்டாளி வர்க்கத்துக்கும் தேசிய முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடு சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபனுக்கும் இடையேயான முரண்பாடு என்பதால் இரண்டு தரப்புமே ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் சீனாவின் தனிப்பட்ட சூழ்நிலைமையில் பகைமையுணர்வுடன் கூடிய இந்த முரண்பாட்டை முறையாகக் கையாண்டால் பகைமையுணர்வு அற்ற முரண்பாடாக மாற்ற முடியும், அமைதியான வழியில் தீர்க்கவும் முடியும். சரியான திட்டமிடல் இல்லாமல் கையாண்டாலோ, தேசிய முதலாளித்துடன் நாம் ஒற்றுமையைக் காட்டாலம் இருந்தாலோ, அவர்களை விமர்சிக்காமல் இருந்தாலோ, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலைக் காண்பிக்காமல் இருந்தாலோ, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வர்க்கம் நமது கொள்கைகளை ஏற்க மறுத்தாலோ, பாட்டாளி வர்க்கத்துக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாடு நமக்கும் நமது எதிரிகளுக்குமான முரண்பாடாகத் திரிந்து விடக்கூடிய அபாயமும் உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். ” ( 564 தொ5மா)
இ.
இடதுசாரியக் கட்சிகள் பற்றி
கடந்த 35 வருடங்களில் பல மாற்றங்கள் அடைந்து வந்துள்ளது. 1991களில் சோவியத் வீழ்ச்சி என்பது துருவ அரசியலுக்கு முடிவிற்கு வந்தது. சோவியத் வீழ்ச்சி என்பது சித்தாந்த துறையில் கூட சிதைவை ஏற்படுத்தியிருந்தது.
இன்று பலதுருவ காலத்தில் இருந்தாலும் சித்தாந்த கோட்பாட்டுப் பிரச்சனையில் வளர்நிலையில் தான் இருக்கின்றது அல்லது பக்குவமடையவில்லை. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்குப் பின்னால் தமிழ் வலதுசாரிக் கட்சிகள் தமிழர் தேசத்தின் மீதான அரசியல் நியாயத்தை வளர்த்து வருவதில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்கள். அவர்களை பல பிரிவுகளாக பிரிப்பதில் சிங்கள ஆளும் வர்க்கமும் தமிழ் தரகு வர்க்கமும் இணைந்து செயற்பட்டு வந்தார்கள்.
மறுபுறத்தை இடதுசாரிக் கட்சிகள் எனப்படும் NDMLP, FLSP, JVP தமது பங்கிற்கு தமிழ் தேசத்தின் அரசியல் போக்கை மடைமாற்ற தீயாக வேலைசெய்தார்கள். இதிலும் இரண்டு போக்கு இருந்து வழமையான சிங்கள தேசத்தின் இடதுசாரிகளுக்கு சுயநிர்ணயம், தேசத்தின் அரசியல் அதிகாரம் என்பதே ஒவ்வாமையாக இருந்து லங்கா தேசியத்தை கட்டமைக்க முயற்சி எடுக்கின்றேன் பேர்வழிகள் என்றும் தீயாக உழைத்தார்கள். இவர்களால் தமிழர் தேசத்தவர்களிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற முடியவில்லை. இவர்கள் ஆங்காங்கே சில உதிரிகளை உள்வாங்க முடித்தது எனினும் ஒரு மக்கள் திரளை இவர்களால் அணிதிரட்ட முடியவில்லை. தமிழ் மக்களை குதிரைக்கு லாடம் கட்டியது போல நகர்த்திச் சென்றுவிட முடியும் என்று குறுக்குவழியைத் தேடினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெறவும் இல்லை.
NDMLP பிரிவினர் ஈழ தேசப் போராட்டமே தவறு, போராடியதே தவறென்று எழுதி தமது இயலாமையை தீர்த்துக் கொண்டார்கள். இவர்களின் கட்சி உருவாக்கிய காலத்தில் தான் உருவாகிய பல ஈழவிடுதலை அமைப்புகள் மக்கள் திரள் அமைப்புக்களை கட்டிய அளவிற்கு ( 1976-1986 வரையில்கூட) முன்னேற முடியவில்லை. அதிலும் ஈழப் விடுதலைப் போராட்டம் இந்திய இராணுவத்துடன் போராடியது, சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக போராடி வீழ்ந்து விட்ட பிறகும் பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
2009 பின்னராக தமிழ் தேசிய கிளர்ச்சிகள் ஒப்பிட்ட அளவில் சிறிய அளவில் நடைபெற்றது. அந்த அளவிற்கு கூட NDMLP, FLSP, JVP இந்தப் பிரிவினர் தமிழ் மக்களின் அரசியல் கருத்துடன் ஒன்றித்து பயணிக்க வில்லை. மாறாக வெளியே இருந்து விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், காணி, நில ஆக்கிரமிப்பு, சிங்கள பௌத்த மத அடையாளத் திணிப்பு எவற்றிற்கும் ஆக்க பூர்வமாகவும், செயலூக்கமாகவும் போராடவில்லை. அதற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களுடன் மற்றவர்கள் இணைந்து கொள்ளுங்கள் என்ற கருத்துருவாக்கம் செய்யப்பட வில்லை. அடையாளத்திற்கு சில போராட்டங்களை நடத்தினர், கலந்து கொண்டனர்.
ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பால் தான் நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்ற கருத்தில் தெளிவில்லாத போக்கு இருந்து கொண்டே இருக்கின்றது.
சிங்கள பௌத்த பேரினவாதம் கடந்த 70 வருடங்களாக ஏகாதிபத்திய எசமானர்களின் வழிகாட்டலின் தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். இதன் அடிப்படையில் உதவி என்ற போர்வையில் கடன்களை அள்ளிக் கொடுத்தார்கள். அந்தக் கடன் எதற்கு கொடுக்கப்படுகின்றது என்பதை அறியாமல் இருக்கவைக்கப்பட்டார்கள். JVP/FLSP ஒன்றாக இருந்த போது பிரிவினைக்கான யுத்தம் என்று முள்ளிவாய்க்கால் வரையில் கடுமையாக உழைத்தார்கள். பிறகு வந்து எமக்கு உடன்பாடில்லை என்று இன்று JVP/FLSP சொல்லிட முடியாது.
யுத்தம் நடத்தியதே பின்கொலனித்துவ அரசியல் போக்கில் அமைந்தது என்பதை அறியாதவர்களாக இருந்தார்கள் என்பதை இன்றும் நம்பவேண்டும் என்ற அடிப்படையில் கதையாடல் நடைபெறுகின்றது.
இவர்கள் கற்காலச் சிந்தனையை (பௌத்த பேரினவாத) அரசியலாக முன்னெடுக்கின்றார்கள். ஆனால் ஈழ தேசம் போராட்டத்தை யாழ் சைவ வேளாளம் (கற்காலச் சிந்தனை வடிவத்தின் வெளிப்பாடு, பாதுகாப்பது) என்று முழங்கினார்கள்.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது உற்பத்தி முறைமாற்றம் அரசியல் அதிகாரத்துடன் மாற்றம் பெறுகின்றது. தேசங்களுக்கு அரசு எவ்வளவு முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று தன்னியல்பான போராட்டத்தை புரட்சியின் உச்சமாக கதையாடல் செய்கின்றார்கள்.
இன்று இவர்கள் செய்கின்ற புரட்சி 51 பில்லியனை இரத்துசெய்து, ஆட்சியாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரச உடமையாக்குவதும், ஆட்சியாளர்களை தண்டை கொடுப்பார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் போராட்டம் வழிநடத்தப்படுகின்றதா? 69 இலட்சம் பேர் போட்ட வாக்குகளால் சில வருடங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி அல்ல. நிதிமூலதனத்தின் அடியாட்களாக ஆட்சி செய்தவர்களின் விழைவு. ஆக கடன் என்பது பல ஆண்டுகளில் ஏற்பட்ட கடன் திரட்சியாகும். இந்தத் திரட்சியை அதாவது பொருளாதாரப் பிரச்சனை இன்று ஏற்பட்டதல்ல. அது பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
16.07.22 திரு மனோ கணேசன் தனது முகநூலில் ”குமார் குணரத்தினம் கூறும் இந்த உத்தேச புதிய அரசியல் கலாச்சாரம், தமிழர் அபிலாஷைகளையும் வெறும் கோஷங்களுக்கு அப்பால் சென்று, கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இப்போது போராட்டக்காரர்கள் மத்தியில், தமிழர்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில், கோட்பாடுகளை நாம் இன்னமும் காணவில்லை.
போராட்டக்கார அமைப்புகள் எமக்கு தந்துள்ள ஆவணங்களில் சில மென்மையான கோஷங்களைத்தான் இதுவரையில் நாம் காண்கிறோம்.
எனக்கு, கோஷம் எது? கோட்பாடு எது? என நன்கு தெரியும். ஆதலால்தான் சொல்கிறேன்.
இதை போராட்டக்காரர்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு குமார் குணரத்தினத்தின் #முன்னிலை_சோஷலிச_கட்சியும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.””
இலங்கை சோசலிசத்தை கட்டியெழுப்புவதே முன்னிலை சோசலிச கட்சியின் நீண்ட கால இலக்கு. நாட்டு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சோசலிச சமூக அமைப்பிலேயே தீர்வு காணப் பட முடியும் . இந்த நெருக்கடிகளுக்கு சோசலிசம்தான் நிரந்தர தீர்வு.இதற்கு, மக்களை ஒருங்கிணைக்கும் தலைமைத்துவ சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.- குமார் குணரத்தினம் . பொது. செயலாளர் .
”தமிழீழத்திற்காக நின்றவர்கள் நிறைய பேர் இன்று அந்த சித்தாந்தத்தை கைவிட்டுள்ளனர். நாடு முழுவதுக்கும் பொதுவான பொருளாதாரப் பிரச்சனைக்காக வெவ்வேறு இன மத மற்றும் கலாசாரக் குழுக்கள் எவ்வாறு இலங்கையர்களாக தமது சொந்த அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு இணைந்து போராட முடியும் என்பதைப் பார்க்கிறோம். ஒரு சோசலிச கட்டமைப்பில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை நாங்கள் நினைக்கிறோம் . ..... இனக்குழுக்கள் தங்கள் சொந்த அடையாளங்களின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டால் சுயராஜ்யத்தின் அலகுகள் பற்றி நாம் சிந்திக்கலாம்.... -குமார் குணரட்ணம் " (தமிழ்) தேசிய பிரச்சனையை தீர்க்க , புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு , மக்களிடம் வாக்கெடுப்பு விட வேண்டும்..."
-"காலிமுகத்திடல் போராட்டத்தில் நாம் பின்னணியில் இருந்து செயற்படவில்லை. எமது கட்சியினரும் பொதுவான இலக்கை அடைவதற்காக அங்கு முன்னணியில் நின்று செயற்படுகிறார்கள்". - குமார் குணரட்ணம். முன்னிலை சோசலிச கட்சி . பொது செயலாளர்.
-நன்றி. வீரகேசரி 29.05 சமகாலம்)
தேசிய இனங்கள் (இனக்குழும எச்சம் கொண்ட சமூகம் மொழிவழியில் இணைவது) தம்மிடையே பிரிவுகள் அற்று இணைவதும் தேச அரசை உருவாக்குவது உலகம் தழுவிய போக்கு (லெனின்). இனிவரும் சகாப்தத்தில் தேசிய இயங்கங்கள் வளர்ந்து வரும் என்பதை தவிர்க்க முடியாது என்ற லெனினியம்.
ஒரு கட்சி என்பது சுயநிர்ணயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ளாத கட்சிகளின் இந்தப் போக்கு என்பது அப்பட்டமான திரிபுவாதமே. மார்க்சிய வழிகாட்டல் என்பது சுயநிர்ணயத்தை கட்சியின் திட்டத்தில் முன்வைக்க வேண்டும். அதற்கு தயங்குபவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியாது. இவர்கள் கலாச்சாரத் தேசியவாதம் பேசுகின்றவர்கள் இருக்க வேண்டிய முகாம் பிற்போக்கு முகாமே.
தோழர் லெனின் வழியில் தான் இவர்கள் சிந்திக்கின்றார்களா? தோழர் லெனினின் ஆய்வு கோள் என்பது உலகப் பொதுவுண்மை. இதனை மறுதலிக்க முடியும் என நம்புகின்றார்கள். இதற்கு லெனியம் என்பது ருசியப் புரட்சிக்கானது என்று கட்டமைக்கின்றார்கள். இந்தக் கருத்தமைவு என்பது எள்ளளவும் பொது உண்மையாக இருக்க முடியாது. லெனினியம் என்பது சர்வதேச அளவில் நிர்ணயமான ஒரு ஆய்வுகோளாகும். அது தான் மார்க்சின் தலைசிறந்த மாணவனான தோழர் லெனின் வழிகாட்டல்.
ஈ. பொருளாதார நெருக்கடியும், தேசிய இனச்சிக்கலும்
1. அந்நிய ஆட்சியின் கீழ் உள்ள மூலதனம் பற்றி
- தமிழ் தேசத்தின் மூலதன முடக்கம் இது கடல்தொழில், கமத்தொழில் போன்றவைகள் பின்னடைவைச் சந்தித்தே வந்துள்ளது. ஈழ யுத்தத்தின் காரணமாக பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. உட்கட்டுமானம் குறிப்பாக கிளிநொச்சி போன்ற இடங்களை வெள்ளத்தில் வீழ்த்தியது. கிளிநொச்சியில் இயல்பாகவே நீரோட்டங்கள் கட்டுடைத்துச் சென்று தேவையான இடங்களை அடைந்துள்ளது.
- தமிழக ஈழ வணிக வர்த்தகம், கடல்போக்குவரத்து முடக்கம். காங்கேசன்துறை, தலைமன்னார் கடல்வழியை ஆரம்பிக்கும் படி கோருகின்றார்கள். கடல்வழிப் பாதை என்பது அதிக சுற்றிலாப் பயணிகளை ஊக்குவிக்கும். சுற்றிலாப் பயணிகள் குறைந்த செலவில் வந்து செல்ல முடியும். குறைந்த செலவில் அதிக பயணிகளை அதிகரிப்பதால் அன்னியச் செலாவணியைப் பெற முடியும்.
- அச்சுவேலியில் அமைக்க இருந்த வணிக முயற்சி முடக்கம். (220 மில்லியன்)
தெல்லிப்பளை அலுமீனியம் தொழிற்சாலை முயற்சி முடக்கம் . ஒட்டி சுட்டான் ஓட்டுச் தொழிற்சாலை
- BOI -board of investment வரி விதம் அதிகாமாக இருக்கின்றது. 30 வருடத்திற்கு மேலான காலமாக யுத்ததில் இருந்து எழும் சமூகம் இவ்வாறான அதிக வட்டியைக் கொண்டு வளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியாது. (முன்னைய இந்திய உதவித் தூதர் கூட சிங்கள தேசத்தின் இசைவின்மையை உறுதிப்படுத்துகின்றார்)
- சர்வதேச விமான சேவை என்பது தொடக்கப்பட்டாலும் விலைகூடிய பயணத் தொகை என்பது அதிக பயணிகளை அதிகரிக்க முடியாது. குறிப்பாக புலம்பெயர்ந்தவர் ஈழத்தவர்கள் வருவதாயின் குறைந்த செலவில் வரவே விரும்புவார்கள். இதன் ஊடாகவே வணிகம் ஊக்குவிக்கப்படும். வாகன வாடிக்கையாளர்கள், உணவு நிறுவனங்கள், உதவிப் பணியாளர்கள் என தொழில்வாய்ப்பு ஏற்படும். புலம்பெயர்ந்தாலும் தொடர்ந்து உறவைப் பேணிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பலம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கும், அன்னியச் செலாவணியை பெறவும் உதவும்.
- 3இல் இரண்டு கடற்பகுதியைக் கொண்ட தமிழ் தேசிய இனத்தின் கடற்பகுதி என்பது ஆழ்கடல் மீன்பிடித்தல் வளராமல் இருக்கின்றது. கடல்தொழிலாளர்கள் தமது பொருளிற்கான விலை தீர்மானிப்பது, கொள்வனவு முறைமை, சந்தைப்படுத்தல், கடல் உபகரணங்களின் சேதாரம் அதிகமாக இருக்கின்ற போது அதனை பதிலாக ஈடு செய்வதில் உள்ள சிக்கல் என தொடர்கின்றது. ஒரு சமூகம் பெரும் தொழிற்துறை முயற்சியில் ஈடுபடுவதில் மூலதனம் அவசியமாகின்றது.
- இராணுவமயமாக்கப்பட்ட ஈழப் பகுதியான அவர்கள் சார்ந்த பொருளாதார முனைப்புகளும் ஈடுப்படுத்தப்படுகின்றது. இது அந்தப் பகுதி மக்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமித்துள்ளது. காணியை இழந்தவர்கள் குறைந்த பட்சம் வீட்டுப் பயிர் செய்கை செய்யமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்நிய ஆட்சியின் கீழ் உள்ள மூலதனம் பற்றி மாத்திரம் அல்ல உற்பத்திச் சக்தியின் திறனை வளர்க்க முடியாத சூழலை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்ற சிக்கலை தீர்க்கின்றார் ஆசான் மார்க்ஸ்.
உற்பத்திச் சக்திகளின் திறனை வளர்ப்பது என்பது குடும்ப வாழ்வியலில் இருந்து தொடர்கின்றது எனினும் அதற்கு அடிப்படையாளது அந்த குடும்ப உறுப்பினர் தனது உற்பத்தி சக்தியை விற்பதினால் பெறப்படும் ஊதியமாகும்.
உற்பத்திச்சக்தியை விற்கின்றதினால் பெறப்படும் ஊதியம் என்பதே குடும்பத்தை பராமரிக்க உதவியாக இருக்கின்ற வருவாய் ஆகும். அந்த வருவாய் முழுக்குடும்பத்தை பராமரிக்க கூடியதாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகும்.
மூலதனத்தின் வீச்சை தனியே சுரண்டல் என்பதுடன் மட்டுப்படுத்துவது பொருளாதாரவாதிகளின் வழமையான இருக்கின்றது. ஏனெனில் உற்பத்தி உறவு, உற்பத்திச் சக்தியை என்ற அடிக்கட்டுமானத்தை மறந்து கேள்வி ஞானத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அரசியலைக் முற்றுண்மையாக கொள்ளப்பட்டு ஒப்புவிற்கப்படுகின்றது.
முதலாளித்துவ புரட்சி முழுமையடையாத நாடுகளில் ஏற்படுகின்ற சிக்கல் என்பது நிலப்பிரபுத்துவக் கூறுகளின் தொடர்ச்சியும் அதன் விளைவுகள் ஏற்படுத்தும் துயரமும் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதாகும். இங்கு புதிய வகை சமூக உறவும், சமூகச் சேர்க்கையை ஏற்படுத்துகின்றது.
புரட்சிக்குப் பின்னர் மாத்திரம் அல்ல. ”அரசு உதிர்ந்து போகுங்காலம் முடிவடையும் ஒரு போக்கு, தேசிய இனங்கள் தீவிரமாக நெருங்கி கொண்டு முழுமையாகக் கலதம்தல் என்பது நடைபெறுகின்றது. இதுதான் மார்க்சியத் தத்துவம்; (211 சோ.பு.தே.இ.பி) இங்கு பேசப்படுவது தேசங்களின் அரசு பற்றியதேயாகும்.
உற்பத்திச் சக்தியை வளர்ப்பதும், வாங்கும் சக்தியை வளர்ப்பது, மூலதனத்தின் வளர்ச்சியின் ஊடாகவே நடைபெறும். இது முதலாளித்துவத்தில் வேறாகவும், சமவுடமை உற்பத்தி முறையில் வேறாகவும் அமையும்.
”அந்த உற்பத்தி முறை, மூலதனத்தின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. மூலதனம் மூலதனம் ஒரு சுதந்திரமான சக்தியாகத் திகழ வேண்டுமானால், மூலதனத்தை மையப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாகும். ஒவ்வொரு நாகரீகத்திலும் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதாரத்தின் இயற்கையான விதிகளையே, மூலதனத்தை மையப்படுத்தியிருக்கும் போக்கால் உலகச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் நாசகாரமான விளைவுகள் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்துகின்றன. சரித்திரத்தில் முதலாளித்துவ கட்டம் புதிய உலகத்தின் பௌதிக அடிப்படையை அமைக்க வேண்டும்; அதாவது ஒருபுறத்தில், மனித குலம் ஒருவரையொருவர் பரஸ்பரம் சார்ந்திருப்பதையும் அந்த உறவுக்குத் தேவையான வழிவகைகளையும் அடிப்படையாகக் கொண்ட சர்வ வியாபகமான உறவை வளர்க்க வேண்டும்; மறுபுறத்தில், மனிதனின் உற்பத்தி சக்திகளை வளர்க்க வேண்டும்; இயற்கையான வழிவகைகைள் மூலமான பொருள் உற்பத்தி செய்வதை, விஞ்ஞான வழிவமைகள் மூலமாக பொருள் உற்பத்தி செய்வது என்ற நிலைக்கு மாற்ற வேண்டும். பூமியின் மேல்பரப்பை புவிஇயல் புரட்சிகள் படைத்திருப்பது மாதிரி, முதலாளித்துவ தொழிலும், வியாபாரமும் ஒரு புதிய உலகத்திற்குத் தேவையான இந்தப் பௌதீக நிலைமைகளைச் சிருஷ்எக்கின்றன.‘‘ 138- மார்க்ஸ்)
இங்கு மார்க்ஸ் பேசும் மூலதனத்தின் இருப்புப் பற்றியது தேசிய முதலாளிகள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து அல்ல. தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னராக முன்வந்த கோட்பாடாகும். இங்கு மார்க்ஸ் பேசுவது கொலனித்துவத்தின் கீழ் உள்ள மூலதனத்தின் போக்குப் பற்றியதே.
இது ஒடுக்கப்படும் தேசங்களின் மூலதனத்தின் போக்கிற்கும் இணைத்துப் பார்த்துவிட முடியும். ஏகாதிபத்திய காலத்தில் தேசிய இனப்பிரச்சனையிலும் தோழர் லெனின் தொழிலாளி முதலாளி என்ற பொருளாதாரவாதத்திற்கு விடை தருகின்றார்.
2.சமூக வளர்ச்சிப் போக்கை மார்க்சியம் விளக்கிட முடியுமா?
சமூக வளர்ச்சியை விளங்கப்படுத்தவும், சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவும் வழிகாட்டக் கூடியது தத்துவம் எது உள்ளது.?
இலங்கையில் நிழல்
அரசு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலும், லங்கா அரசு தோல்வியுற்ற நிலையில் உள்ளது. இரண்டு வெவ்வேறு நிலமையில்
இருக்கின்றது.
இதில் தமிழ் தரப்பில்
கஜன் தரப்பு தேச அரசு என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற வேளையில் சுரேஸ், விக்கி போன்றவர்கள் ஊசலாட்டப் பிரிவினராக
உள்ளார்கள்.
இங்கு விதேசியப் பிரிவும், மரபார்ந்த பிற்போக்கு முகாமில் உள்ள சிக்கலும், அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கும்
நகர்த்துவதும் முன்னேற முடியாது இருக்கின்றது.
இங்கு வர்க்கங்களும்
அதன் நலன்களும் சமூகக் கட்டத்தில் எவ்வித பாத்திரம் நடத்தும் என்பதை
அறியவைப்பதற்கு ஒரு உலகக் கண்ணோட்டம் அவசியமானதாகும்.
உலகக் கண்ணோட்டம்
இல்லை என்றால் சமூகத்தை விளங்கிட முடியாது.
உலகக் கண்ணோட்டம்
சமூகத்தை விளங்கிட வைக்க முடியும். அந்த உலகக் கணணோட்டம் மார்க்சியம். மார்க்சியம்
சமூகத்தை ஆராய்வதற்கு உயிர்ப்புடன் இருக்கின்ற தத்துவம்.
சமூகம் மாற்றம் அடைந்து கொண்டு செல்கின்றது. அதற்கு பொருளாதார உற்பத்தி முறை, உபரி, மூலதனத் திரட்சி, அதன் அடிப்படையில் ஏற்படும் சமூக முரண்பாடுகளை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாது நிலையில் தான் ஈழத் தமிழ் சமூகம் உள்ளது.
ஒரு இனம் தனிநாடு கோரியதாலேயே நாட்டின் பொருளாதாரம் அழிந்தது என பேசும் அளவிற்கு குறுங்குழுவாதச் சிந்தனைப் போக்கு உள்ளது. கடனை அள்ளிக் கொடுக்க காரணம் என்ன? ஆயுதங்கள், ஆலோசனை, நிதிநிறுவனங்களின் கட்டளைகள் ஏன் ஏற்றுக் கொண்டார்கள், அந்த ஆட்சியாளர்கள் யாரின் பிரதிநிதியாக இருந்தார்கள்? சீன- ருசியத்தின் மேலாதிக்க வளர்ச்சியில் துருவமயமான நிலையில் தமது பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு நெருக்கடியை உருவாக்கிக் கொள்கின்றன. பெருந்தொற்று, ஏற்றுமதி வீழ்ச்சி, வரிச் சலுகை இன்மை, உல்லாசப் பயணத்துறையால் வரும் அன்னிய வருவாய் வீழ்ச்சி, உள்நாட்டு உற்பத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி அதனைத் தொடர்ந்த பணவீக்கம். இந்தப் போக்கை கவனிக்காது ஒரு தேசத்தின் உரிமையுடன் தொடர்புபடுத்திப் பேசுவதால் எவ்விதமான முன்னேற்றமும் வந்துவிடாது.
2..
கடந்த 12 வருடச் சாதனை என்னவெனில் ஈழ தேசிய இராணுவத்தின் வீழ்ச்சி என்பது இலக்கின் வீழ்ச்சியாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வேலையை கருத்துக்களத்தில் செய்தவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பவர்களே.
”பழைய சமூகத்தின் சக்திகளுக்கும், மரபுகளுக்கும் எதிரான, விடாப்பிடியான, போராட்டமானது இரத்தம் சிந்தியும் சிந்தாமலும், ஆயுதந்தரித்தும் அமைதியானதாகவும், இராணுவப் போராட்டமாகவும், பொருளாதாரப் போராட்டமாகவும், கல்வி மற்றும் நிர்வாகப் போராட்டமாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகரம் உருவாகும். பல இலட்சம் மற்றுமம் பல கோடி மக்களின் பழக்கம் வழக்கங்களின சக்தி ஆகப் பயங்கரமான சக்தியாகும். போராட்டத்தால் பக்குவப்படுத்தப்பட்ட இரும்புறுதி கட்சி இல்லாமல், ஓரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அனைத்து நியாயமானவர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சி இல்லாமல், மக்களின் திரளின் மனநிலையைக் கண்காணித்து, செல்வாக்கு செலுத்தவல்ல ஒரு கட்சி இல்லாமல், அத்தகைய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமற்றது ஆகும்.” (S 196-6v)
சமூகப் போக்கில் செயற்பட வேண்டிய வேலைமுறையை ஏற்றுக் செயற்பட வேண்டிய சக்திகளை மடைமாற்றியும், தோல்வி மனப்பாங்கை ஊட்டி வளர்த்தனர். அதனைச் செய்த தேர்தல் அரசியல்வாதிகள், விதேசிய (தரகு), மரபுவாதிகள், முதலாளித்துவ சிந்தனைப் போக்காளர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது.
தேச அரசு சாத்தியம் இல்லை என்ற போக்கே பிரதான அரசியல் போக்காக இருந்து வந்துள்ளது. அந்தப் போக்கில் அமைந்ததே தமிழ் அமைப்புக்களில் ஏற்பட்ட பிளவாகும். அரசு கட்டமைப்பை மறுத்த பகுதியின் போக்கு சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களின் நலனை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
இந்த தரப்பு சாத்தியவாதம் பற்றிப் பேசிக் கொண்டார்கள். சாத்தியமானவற்றை கதைக்க முடியும், கேட்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது.
தேசிய இராணுவத்தின் வீழ்ச்சி என்பது இலக்கின் வீழ்ச்சி அல்ல. ஒற்றையாட்சிக்குள் தீர்வு எடுக்க முடியாது என்பது தெரியும். வரலாறு எங்கும் எண் கணக்கில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியல் போக்கு என்பது சட்ட ரீதியாக தீர்வைப் பெற முடியாது.
சுயநிர்ணயத்தை சட்ட ரீதியாக தீர்க்க முடியும் என்று மிதவாத, வலது, திரித்தல்வாதிகளால் நம்ப வைக்கப்படுகின்றது. சுயநிர்ணயப் பிரச்சனையை தேர்தல், சட்ட ரீதியாக தீர்க்கப்பட முடியாது. ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொள்கையை நினைவுறுத்துவார்கள்.
அரசியல்வாதிகளின் இரசிகர்கள் அத்தம் அரசியல்வாதிகளை இட்டு பிரச்சாரம் செய்வார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலனை மீறிய விடயங்கள் மறக்க வைக்கப்படும். தாம் மக்களுக்கு பணி செய்ததாக வாக்கிற்காக நிறுவிக் கொள்வார்கள்.
ஈழ தேச அரசிற்கான போராட்டம் என்பதே தேர்தல் என்றாகி சுருங்கிவிட்டது. அரசியல்வியாதிகளின் கைகளில் சென்று குற்றுயிராக கிடக்கின்றது.
இயல்பாக வளரவேண்டிய முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை தமிழர் தேசம் சந்திக்கவில்லை. அது வலிந்து வெளியேற்றப்பட்டது. அவ்வாறு வெளியேற்றப்பட்டாலும் தனக்கு கிடைக்காத சூழலை மாற்றியமைத்து புலம்பெயர்ந்து அந்த நிலையை அடைந்துள்ளது. ஆனால் இந்த பொருளாதார வளர்ச்சி நியதியை விளங்கிடாத அரசியல்வாதிகள் தான் நிறையப் பேர் உள்ளார்கள். தமிழர் தேசத்தின் மூலதனம் இயங்கு மூலதனமாக மாற முடியவில்லை. இதற்கு நிறுவன அமைப்பினை உருவாக்கிக் கொள்ளவில்லை. எனவே இயங்கு மூலதனம் என்பது முதலாளித்துவ வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியது. மூலதனமே தொழிற்துறையை உருவாக்கி வேலைவாய்ப்பையும் சமூக வளர்ச்சியையும் கொடுக்கும் வலைப்பின்னல் கொண்டதாகும்.
3.பண்பாட்டு- சமவுரிமை- மக்கள் சபை
தேசங்களின் சுயநிர்ணயம் பற்றியே தோழர்கள் லெனின், ஸ்ராலின் அதிகமாக பேசுகின்றார்கள். அதற்கு மாற்றாக ”நாகரீகமான” ”நாகரீகமற்ற” ”கறுப்பு” ” வெள்ளை” மக்களை ஒரே தளத்தில் வைப்பதற்கு அவர்கள் தயங்கினர்” (154 ஸ்ரா6) என்பதைப் போன்று தேசிய இனங்களின் சுதந்திரத்தை ஏற்க மறுக்கின்ற போக்கு உள்ளது. இதே போல கற்கால – மதச் சிந்தனையை முன்னிறுத்தும் போக்கையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த வகையில் பண்பாட்டு தேசியவாதம் அல்லது பிரசைகளுக்கான உரிம என்ற விடயங்களை அனுகிட முடியும்.
ஒஸ்ரிய புரூன் கொங்கிரசின் (Otto Bauer, Sprinkler எதிராக தோழர் ஸ்ராலின் தனது மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் என்ற நூலில் விமர்சிக்கின்றார்) திட்டம் பற்றிய நிலைப்பாட்டிற்கு தோழர் லெனினின் கருத்து.
இங்கு சுயநிர்ணயத்திற்கு மாற்றாக திட்டத்தை வைத்துள்ள FLSP, JVP களினுடையதும் சமரச முறைதான். FLSP, JVP இந்த அமைப்பினர் சுயநிர்ணயத்திற்கு மாற்றாக இனமதகுலமற்று உழைப்பாளியாக ஒன்றிணைவோம் என்பதும் கண்கட்டி வித்தையேயாகும். சமவுரிமை, மக்கள் மன்றம் (லங்கா என்ற தேசம்) என்பது என்ன என்பதை மார்க்சிய ரீதியாக பார்ப்போம். ஏனெனில் சுயநிர்ணயம் என்பது பிரிந்து சென்று தனியரசு அமைப்பது தான். அதை விட வேறு எந்த வகையிலும் வியாக்கியானம் செய்ய முடியாது என்கின்றது லெனினியம் முடிவு.
NDMLP, CPM போன்ற திரிபுவாதக் கட்சிகளின் நிலைப்பாடு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி என்பதும் சுயநிர்ணயமும் ஒன்றல்ல. இதுவும் ”கலாச்சார தன்னாட்சி” என்ற அடிப்படைக்குள் தான் வந்து விடுகின்றது. இதுவும் ஒரு மோசடியானதும் அதுவும் அரசியல் அமைப்பு விடயமாக சுருக்கிவிடுகின்ற போக்கில் அமைந்ததாகும்.
‘‘நிலப்பரப்பின் அடிப்படையில் தேசிய இனத் தன்னாட்சி அங்கீகரிக்கப்பட்டது. எல்லாத் தேசிய இனப் பிரதேசங்களும் கட்டாயமாக ஒன்று சேர்ந்து ஐக்கியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற சமூக ஜனநாயகவாதிகளின் பிரச்சாரமானது ” கலாச்சார- தேசிய இனத் தன்னாட்சி” என்ற அமைக்க வேண்டும் என்ற கருத்துக்கு இடம் தந்து நிற்கும் சமரச முறைதானேயொழிய வேறில்லை. துரதிருஷ்டவசமான இந்தக் கருதம்தினை பிரதான தத்துவாசிரியர்களே இக்கருத்தானது யூதர்கள் விஷயத்தில் பொருந்தாததாகும் என்னப்தை விசேஷமாக வலியுறுத்தினார்கள்.” (10)
இது ஒஸ்ரிய புரூன் கொங்கிரசின் (Otto Bauer, Sprinkler எதிராக தோழர் ஸ்ராலின் தனது மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் என்ற நூலில் விமர்சிக்கின்றார்) திட்டம் பற்றிய நிலைப்பாட்டிற்கு தோழர் லெனினின் கருத்து.
இன்றைய நெருக்கடியில் இரண்டு தேசங்கள் முரண்பட்ட நிலையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது வெளிப்படையான ஒன்று. இதில் கொழும்பை மையம் கொண்ட தமிழ் தாராளவாதிகளின் நிலைப்பாடும், தமிழ் தேசத்தில் உள்ளவர்களின் நிலைப்பாடும் ஒன்றாக இல்லை என்பதும் வெளிப்படையாகும்.
இரண்டு தேசங்களின் உள்ளவர்களின் அரசியல் நிலைப்பாடு எடுப்பதில் குறிப்பாக தென்னிலங்கையை மையம் கொண்ட அரசியல்வாதிகளிடம் பெரும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. சிங்கள தேசத்தில் சிறுபான்மை தேசிய இனமாக இருக்கின்ற போது அவர்களின் தேவையும், உரிமை விடயங்களும் மாறுபட்டே இருக்கும். அவர்கள் நிலைப்பாடு எடுக்கின்ற போது ஏற்படும் சிக்கலை வைத்துக் கொண்டு அரசியல் போக்கை முன்னெடுத்துவிட முடியாது.
தமிழர் தேசத்தின் நலன் சார்ந்த விடயங்களையும் தென்னிலங்கையின் விடயமும் மாறுபாடு உள்ளதை கவனிக்கத் தவறுகின்றார்கள். தென்னிலங்கையில் வாழும் தாராளவாத தமிழ் தரப்பின் செயற்பாடுகளை தமிழர் தேசத்திற்கான ஆனது என பொதுமைப்படுத்தி விடுவதில் தன்முனைப்புக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
முரண்பாட்டின் வியாபகத் தன்மையை அறிந்திராது முடிவெடுப்பவர்களாகவும், ஆய்வு செய்யாது தான்தோன்றித் தனமாக கருத்துக்களை முன்வைப்பவர்களாக உள்ளார்கள்.
சட்டவாதத்தினுள் விடைதேடும் கனவான்களே சுயநிர்ணயம், தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு அரசியமைப்புக்குள் இல்லை என்பதை அறியுங்கள். அது தேச அரசுகள் அமைவதன் ஊடாக தீர்க்கப்படுகின்றது.
‘‘தேசியக் கேள்விக்கான (பிரச்சனை) தீர்வை அரசியலமைப்புச் சார்ந்த ஒரு விசயம்- அதாவது அது புரட்சி சார்ந்த ஒரு கேள்வி அல்ல, சீர்திருத்தம் சார்ந்த ஒரு கேள்வியே என்று தான் லெனின் மதிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் தவறு. அரசியலமைப்புச் சட்டம் சார்ந்து லெனினுக்கு எப்போதும் எந்தவித மயக்கமும் இருந்ததில்லை, இருந்திருக்கவும் முடியாது. அவரது படைப்புகளை பயின்றால் இதுபற்றித் தெளிவாகத் தெரியும். அரசியலமைப்புச் சட்டம் குறித்து லெனின் பேசியிருப்பார் எனில், தேசியக் கேள்வி குறித்த பிரச்சனைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக அல்ல, புரட்சிகர வழியிலேயே தீர்வு காணமுடியும் என்பதே அவரது முடிவாக இருந்திருக்க முடியும். அதாவது அரசியலமைப்புச் சட்டம் என்பது புரட்சியின் வெற்றியின் விளைவாக உருவாகக் கூடிய ஒன்று என்பதுதான் அவரது மதிப்பீடு.”(86- தொ7-ஸ்)
தேசத்திற்கான அரசியல் அதிகாரம் இருக்கின்ற போது அவைகள் சுயமான கண்டுபிடிப்புச் சாத்தியம். ஈழ விடுதலைப் போராட்டத்தில் சுய உற்பத்தி, சுய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. இந்திய கட்டமைப்பினுள் இருக்கின்ற வரையில் அவை சாத்தியம் இல்லை. தனக்கான மூலதனத் திரட்சியை பாதுகாக்கும் தேச அதிகாரம் இல்லாது சாத்தியமில்லை.
தோழமை, ஒத்துழைப்பு (Solidarity) என்பதை எவ்வாறு அரசியல் ரீதியாக விளக்கி வைத்துள்ளார்? போராட்டத்தலைமை தமிழர் தேசத்தின் சுயநிர்ணயத்தை முழக்கத்தில் வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அவர்களின் நேர்மை அற்ற நிலையைத் தான் வெளிப்படுத்தும். இதனை வலியுத்தப் பட வேண்டும்.
குட்டி முதலாளித்துவ வலது - இடது பிரிவுகள் எப்பவும் ஊசலாட்டத்தில் இருப்பார்கள். இந்தப் பிரிவு ஊடாட்டத்தில் முன்னிலை வகிப்பார்கள்.
‘‘போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தா போர்" சீனத்தில் ஆயுத போராட்டத்திற்கு எதிரான - புரட்சி போருக்கு எதிரான –கருத்தை, போரை நடத்துவது அரசியல் அல்ல எனும் கருத்தை முன்வைத்தனர். போருக்கும் அரசியலுக்கும் உள்ள உறவை விளக்கும் விதமாகவே மேற்கண்ட விளக்கத்தை மாவோ முன் வைத்தார். 1971, 1989, 2009 பின்னராக ஆயுதப் போராட்டம் என்பது சமூகத்திடம் அமைதி வழியை போதிப்பதிலும், சமூகத்தின் போக்காக திணிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
‘‘பழைய சமூகத்தின் சக்திகளுக்கும், மரபுகளுக்கும் எதிரான, விடாப்பிடியான, போராட்டமானது இரத்தம் சிந்தியும் சிந்தாமலும், ஆயுதந்தரித்தும் அமைதியானதாகவும், இராணுவப் போராட்டமாகவும், பொருளாதாரப் போராட்டமாகவுமம், கல்வி மற்றும் நிர்வாகப் போராட்டமாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகரம் உருவாகும். பல இலட்சம் மற்றுமம் பல கோடி மக்களின் பழக்கம் வழக்கங்களின சக்தி ஆகப் பயங்கரமான சக்தியாகும். போராட்டத்தால் பக்குவப்படுத்தப்பட்ட இரும்புறுதி கட்சி இல்லாமல், ஓரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அனைத்து நியாயமானவர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சி இல்லாமல், மக்களின் திரளின் மனோ நிலையைக் கண்காணித்து, செல்வாக்கு செலுத்தவல்ல ஒரு கட்சி இல்லாமல், அதத்தகைய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமற்றது ஆகும். (196- ஸ்6)
“ஒர் சீர்திருத்தவாதிக்கு, சீர்திருத்தமே எல்லாம், புரட்சிகரப் பணி அவருக்குத் தற்செயலாய் நிகழ்வது, பேசுவதற்கானது மட்டுமே, வெறும் கண்துடைப்பு மட்டுமே, எனவேதான், முதலாளித்துவ வர்க்க ஆட்சி சூழ்நிலைகளில், சீர்திருத்தவாத செயலுத்திகளைப் பொறுத்த வரை, அந்த ஆட்சியை வலுப்படுத்த உதவும் கருவியாக சீர்திருத்தம் உருமாற்றப்படுகிறது; புரட்சியை சீர்குலைக்க உதவும் ஒரு கருவியாக சீர்திருத்தம் உருமாற்றப்படுகிறது.
இதற்கு மாற்றாக, ஒரு புரட்சியாருக்கு, முக்கியப் பணி புரட்சிகரப் பணியே, சீர்திருத்தம் அல்ல. அவரைப் பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது புரட்சியின் கிளை விளைவுகள்தான். எனவே தான், முதலாளித்துவ ஆட்சியின் சூழ்நிலைகளில், புரட்சிகர செயலுத்திகளைப் பொறுத்தவரை, முதலாளித்துவ வர்க்க ஆட்சியை சீர்குலைப்பதற்கான கருவியாக சீர்திருத்தங்கள் மாற்றப்படுகின்றன; புரட்சியை வலுப்படுத்துவற்கான கருவியாகவும், புருட்சிகர இயக்கத்தின் மேலதிக வளர்ச்சிக்கான வலிமையான அம்சமாகவும் சீர்திருத்தங்கள் மாற்றப்படுகின்றன. (181 ஸ் 6)
‘‘எழுச்சியோடு விளையாடாதீர்கள், ஆனால் அதனைத் தொடங்கிய பிறகு, இறுவதிவரைச் செல்ல வேண்டும் என்றும் உறதியாக உணர்ந்து கொள்ளுங்கள்.”
4.Failed Singhale state - தோல்வியடைந்த சிங்கள தேசம்
இந்தப்
போராட்டம் ஆதரிக்க வேண்டுமா என்றால் ஆம், வன்முறை
வடிவம் எடுத்தால் ஆதரிக்க வேண்டுமா ஆம், இந்தப்
போராட்டம் ஒரு ஒத்திகை
என்று கூற முடியும். இந்தக் கிளர்ச்சிக்கு எல்லை உண்டு. இதனால் ஏற்படும் மாற்றங்களுக்கும் ஒரு
எல்லை உண்டு. தன்னியல்புவகைப் பட்ட போராட்டம், தன்னியல்பு கொண்ட தலைமைத்துவம் கொண்ட போராட்டம்.
1972இல் 1989இல்
நடைபெற்ற போராட்டங்களில் இருந்து கற்றுக் கொண்டவை ஒரு புறமிருக்க. 2009 தேசிய எழுச்சிப் படையின் வீழ்ச்சியின் பின்னர்
உருவாக்கப்பட்ட கருத்தியலை நோக்கும் போது இன்று பேசப்படும் புரட்சி பற்றிய ஆகர்ச
எழுத்துக்கள் முரண்பாடு கொண்டதாக இருக்கின்றது. புரட்சி என்பது அரசை கைப்பற்றுவது. அரசு என்கின்ற
போது நீதி, படை- காவல்துறை- அரசாங்கம் போன்ற நிறுவனங்களை
கைப்பற்றுவதும், அது பழைய முறையில்
இல்லாது காப்பதில் இருந்து முன்னேறுகின்றது.
2009 வீழ்ச்சி என்பதும் அரசை உருவாக்க வேண்டிய
போராட்டம். இரத்தம் சிந்தும் அரசியலின் வீழ்ச்சி என்பது ஈழ தேச அரசிற்கான
போராட்டத்தின் வீழ்ச்சியாக கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கருத்துருவாக்கம்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இது கடந்த கால
வரலாறுகளும், போக்கும், அரசியல் முடிவுகள் இருக்க.
இன்றையக் கட்டத்தில் அரசு யாருக்கானது என்ற அடிப்படை
புரிதலைப் பெற்றாத வரையில் தவறான முடிவுகளைத் தான் வந்தடைய முடியும்.
"போராட்டக்காரர்கள் தங்களுக்கு தேவையான
ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முயற்சிக்கின்றனர். அதனால் தான் இப்படி ஒரு வன்முறையில்
ஈடுபட்டு வருகின்றனர்." - ரணில்
‘போராட்டக்காரர்கள் அரசியலமைப்பை மீறிகின்றனர்'
‘ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை
நிறுத்த வேண்டும்'
இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
#GoHomeGota மௌனமாக அங்கீரித்த ரணில் இனி தனது அரசியலை
மேற்கொள்ளப் போகின்றார்.
கோத்தா நாட்டில் absence - இல்லாத நிலையில் இரணில் பொறுப்பெடுக்கின்றார். இங்கு கோத்தா பதவி விலகவில்லை. இதனைக் கவனிக்க வேண்டும். ஆளும்
வர்க்கங்களிடையே உள்ள முரண்பாடுகளை தணிப்பதற்காக யாரும் வரலாம்.
அங்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் சிங்கள பௌத்த
பேரினவாத அரசுக் கட்டமைப்பை
பிரதிநிதித்துவம் செய்யும் இன்னொரு முகம் தான்.
முதல் வெளியிடப்பட்ட 6 அம்சம் அல்லது பின்னர் வெளியிட்ட 25 கோரிக்கைளில் தமிழ் தேச மக்களின்
அரசியல் நலன் பற்றிய விடயங்களை கவனத்தில் கொண்டதாக இல்லை. ஆனால் சிங்கள
தேசத்திற்காக சீர்திருத்தக் கோரிக்கைகள் இருக்கின்றன. அந்த சீர்திருத்தம் பதிலாகமுதலாளித்துவ சமூக
கொள்கையை பின்பற்றுவதைக் குறிக்கிறது. இதனை விட வேறு அங்கு இல்லை. ஏற்கனவே சிங்கள் தேசம் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள், சான்றிதல் எடுக்க அறிவுறுத்துகின்றது, இழப்பீடு பெறும்படி வலியுறுத்துகின்றது.
காலித்திடலில்
எவ்வகையான முழக்கங்களை வைப்பது என்பது பற்றிய உரையாடலில் கூட தமிழ் மக்களின் தீவிர
முழக்கங்கள், முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை போன்ற பதங்கள் தவிர்க்கப்பட்டதும் இப்போ
25 அம்சத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், விசாரணை
என ஒப்பிற்கு முழக்கம் வைத்துள்ளார்கள்.
ஆனால் தமிழ் தேசியம் பேசும் அரசியல் வியாபாரிகள்
தென்னிலங்கையில் நடைபெற்ற போராட்டத்திற்கு இணையாக தமிழர் தேசத்தில் போராட்டம் உருவாக்கப்பட்டிருக்க
வேண்டும்.
இராணுவ முகாங்கள் புனரமைப்பும் -
குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்
நில ஆக்கிரமிப்பு
பௌத்த மயமாக்கல்
இராணுவம் சார் பொருளாதாரம்
கடல்வளம் பறிபோதல்
காட்டு இலாகா என்ற பெயரில் பெருந்தேசிய
ஆக்கிரமிப்பு
கைதிகள்- சரணடைந்தவர்கள்
நிலத்திற்கான போராட்டம்
வேலையில்லாதவர்களின் போராட்டம்
சிங்கள ஊர்ப்பெயர்கள் மாற்றம்
பௌத்த அகழ்வுத் தடயங்கள் என்றால் அது சிங்களவர்களுக்குத்
தான் சொந்த என்ன மனப்பாங்கும், அதனைச் சுற்றி பௌத்த
அடையாளத்தை அமைத்துக் கொள்வது.
தீவுகள் கடற்படைவசமாக்குதல்.
இனவழிப்பிற்கான நீதியும், விசாரணையும்,
6 வது திருத்தச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
உபகோரிக்கைகளுடன் சுதந்திர பொதுவாக்கெடுப்புக்கான
போராட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.
அடிப்படையில் இரண்டு தேசங்களின் அரசியல் அதிகாரம்
பற்றிய நிலையில் இருந்து அணுகப்பட வேண்டிய போராட்டம் இனமதகுலமற்று என்று ஜீவகாரூண்ய அரசியல் கலந்து விடு என்றே முழக்கம் வைக்கப்பட்டது.
அதன் பின்னால் செல்ல தமிழர் தேசம் பின்னடித்தது
என்பது உண்மையே. அனைத்துக்கும் பின்னால் உள்ள சமூக அவசியமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான மதிப்பீடு அங்கு
கவனிக்கப்பட வில்லை.
சிங்கள தேசத்தில் உள்ள முற்போக்குச்சக்திகள் தமிழ்தேசத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள் என சிங்கள மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தில் இருந்து படையை அகற்றைக் கோருங்கள்
ஐக்கியம் பற்றி பிறகு பேசுவோம்.
தமிழ் தேசம் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பில் இருந்து விடுதலையடைவது என்ற முதன்மைப் போக்கை மறுத்து முழு இலங்கை மக்களின் விடுதலையில் ஒரு பகுதியாக முன்னெடுக்கப் போவதும் திரிபுவாதக் கருத்தேயாகும். ஏனெனில் சுயநிர்ணயம் என்பது ஒடுக்கும் தேசத்தில் இருந்து அரசியல் வழியில் சுதந்திரமாக பிரிந்து போகும் உரிமை ஒன்றைக் குறிக்கிறது.
தோல்வி அடைந்த சிங்கள தேசத்திற்காக விடிவு என்பது இலகுவாக அமையப் போவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய இனப் பிரச்சனையே பிரதான பிரச்சனை. பொருளாதார நெருக்கடி அதனை மாற்றிவிடுவதில்லை. மாறான தமிழ் தேசத்தின் நெருக்கடிக்கான தீர்வே. சிங்கள மக்களையும் விடிவிற்கு கொண்டு வரும்.
1. கடன் கொடுத்த அன்னியர்களின் கடனை இல்லாமல் ஆக்குதல்
2. அரச நிறுவனத்தை கையகப்படுத்தலே மாற்றத்தைக் கொடுக்கும்.
ஜீவகாரூண்யமும் தேசிய இன ஒற்றுமையும் ஒன்றல்ல. உழைக்கும் மக்கள் ஒன்று இணைவது என்றால் அகவுணர்வுடன் சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கடந்த சிலவாரமாக இன்று நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என்பது உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்துவதாக எழுதித் தள்ளுகின்றார்கள். போர்த்தந்திரம் இருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஒன்றுபட்ட கட்சி, புரட்சிகர அரசியல் இல்லாது எவையும் முன்னோக்கிச் கொண்டு விடப் போவதில்லை. ஒடுக்கப்படும் தேசத்தின் சுயநிர்ணயம் என்பதை ஏற்றுக் கொள்ளாது, இனவழிப்பை ஏற்றுக் கொண்டு சிங்கள மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். இதைத் தான் தோழர் லெனின் 42 விழுக்காடு ருசியாவில் புரட்சியின் போது கட்சித் திட்டத்தில் முன்வைத்தார். இதை கட்சியின் 9 வது பிரவு என்று வலியுறுத்தியது மாத்திரம் அல்ல. புரட்சியின் பின்னர் தனியாக போகவிரும்பிய பின்லாந்தை தனியே செல்ல அனுமதித்தார். புரட்சியின் பின்னரும் தோழர் ஸ்ராலின் சுயநிர்ணயம் சோசலிகட்டத்தில் அவசியம் என்று வலியுறுத்தினார். அகிலத்திலும் வழிகாட்டினார்.
25 அம்சத்தை #gohomegota2022 காரர்கள் புரட்சிகரத் திட்டமென பறைசாற்றினார்கள்.
வரைவை ஏற்றுக் கொண்டார்கள் அது தான் வழிகாட்டி. சுயநிர்ணயத்தை மறுத்துக் கொண்டு ஜீவகாரூண்யத்தை அரசியல் கருத்தாக முன்வைப்பதும் மார்க்சியம் அல்ல. இனமத குலமற்ற ஒரு வடிவம் இருப்பதாக கூறுவது ஒன்றும் புதிது அல்ல. அது தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட கலாச்சாரத் தேசியவாதம்.
சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் சுயநிர்ணயம் ஏன் முக்கியமானது என்கின்றார். (லெனினின் paradigm shift- ) தோழர் லெனின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே மதிப்பிட்டிருந்த நிலைக்கு மாற்றாக பாட்டாளி வர்க்க, சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்று கூறுகின்றார்.
இங்கு இரண்டு காலகட்டம் பற்றிய புரிதலை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- முதலாளித்துவ கட்டத்திற்கான காலத்தில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய பார்வையும்
- சோசலிச காலகட்டத்தில் தேசிய இனப்பிரச்சனையும், சுயநிர்ணயமும் என்ற லெனின் வழிகாட்டல்
இந்த அடிப்படையை விளங்கிடாது (ஸ்ராலின் தொகுதி7 பக்கம் 88மேலதிகமாக வாசிக்கவும்) தேசிய இனப்பிரச்சனையும் சுயநிர்ணயத்தின் அவசியத்தையும் விளங்கிட முடியாது. இங்கு பெரும்பான்மையானவர்கள் முதலாளித்துவ கட்டத்தில் பேசிய பேச்சுக்களை (லெனின், ஸ்ராலின்) எடுத்துக்காட்டாக காட்டி சுயநிர்ணயம் பற்றிப் பேசிக் கொண்டும், மற்றவர்களை முத்திரை குத்துப் போக்கும் உள்ளது.
இலங்கை தேசியம் ஒன்று இந்தப் போராட்டத்தின் ஊடாக கட்டமைக்கப்படுகின்றதாக ஒப்பிக்கப்படுகின்றது. இது போலித்தனம் என்று கூறுகின்ற போது உழைக்கும் மக்கள் ஒன்றிணைவதை விரும்பாதவர்கள் என்று அர்த்தப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுகின்றது. அவை எவையும் சிங்கள பௌத்த பேரினவாத நலன் முதன்மை கொண்டே இருக்கின்றது என்பதும் தேசிய ஒடுக்குமுறையை மறைக்கின்ற அரசியல் போக்கு இருக்கின்றது என்பதை விளங்கிடாது தூற்றும் போக்கே உள்ளது.
மேட்டுக்குடிகள், குட்டிமுதலாளித்துவ முழுக்கங்களிடம் சரணடையும் படி திணிக்கப்படுகின்றது.
செயல்தந்திர முழக்கத்தை வடிவமைத்து மக்களிடம் கொண்டுசென்று புரட்சியை நடத்திவிட முடியும் அல்லது பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று சிலர் கருதுகிறார்கள்
இறுதியாக
இலங்கை பொருளாதர நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.ஆட்சியாளர்களும் தமது நலனைப் பாதுகாக்க சமரசங்கள் செய்தே ஆக வேண்டியிருக்கின்றது. 100 நாட்களுக்கு மேற்பட்ட நடந்த போராட்டம் என்பது ஆள்மாற்றத்துடன் நிறைவிற்கு வந்தது. கிளர்ச்சியை புரட்சியாக மாற்றிட முடியவில்லை. கிளர்ச்சியை வைத்துக் கொண்டே வாய்வீச்சு வீரசாகசம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு விடயங்களுக்கு தீர்வு காண்பதன் ஊடாக போராட்டத்தை வழிநடத்திட முடியும்.
- தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு, இனவழிப்பு, பொதுவாக்கெடுப்பு, தேச அரசு பற்றிய நிலைப்பாடு.
- விவசாயி, தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை
- பௌத்த பேரினவாத மதக் கட்டுப்பாட்டின் தாக்கமும் அரசியல் அதிகாரம் ஏக்கராட்சிய நிலைப்பாட்டில் மட்டுப்படுத்தி முன் வைக்கப்பட்ட முழக்கங்கள்,
- கட்சிக் கட்டமைப்பின் பலவீனம், போராட்டத்தின் வடிவங்கள் அரசை நாடு முழுவதிலும் முடக்கிட முடியவில்லை. பின்னவீனத்துவத்தின் தாக்கம் நிறையவே இருந்துள்ளது.
கட்சியும், முன்னணிப்படையும் புரட்சியை வழிநடத்திக் கொண்டு போவதற்கு உண்டு. ஆனால் அரசியல் போக்கை மதிப்பீடு செய்யாமல் உணர்விற்கு முதன்மை கொடுத்து புழங்காகிதம் அடையும் போக்கும், அதுவே (தன்னியல்பு என்பதை உள்வாங்காது) நிர்ணயமான இருக்கின்றது என நம்ப வைக்கப்படுகின்றது. இதற்கு காரணம் 1991 பின்னரான தத்துவ விவாதம், மார்க்சியத்தை படிப்பது என்பது இல்லாத காரணத்தினால் யாரோ எப்போ ஒப்பித்ததை ஒப்பித்துக் கொள்ளப்படுகின்றது. இவர்களிடம் மார்க்சிய சமூகவியல் பார்வை உள்ளதா என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.
‘‘நமது அரசியல் கிளர்ச்சியின் தன்மையும் முதன்மையான உள்ளடக்கமும், நமது அமைப்புத்துறைப் பணிகள், ஒரே நேரத்தில் பல்வேறு புறங்களிலிருந்து ஒரு போராட்ட ஊக்கமுள்ள அனைத்து ருசிய அமைப்பைக் கட்டுவதற்கான திட்டம்- என்று இருந்திருக்க வேண்டும். (8. எ.செ.வே-லெ) கட்சியைக் கட்ட வேண்டிய தேவை இருப்பதை இந்தப் போராட்டமும் நிறுவுகின்றது. கட்சிகளை வெளிப்படையாக இயங்க விடுவதும், அலுவலகம் வைத்திருக்க அனுமதிப்பது என்பது முதலாளித்துவ ஜனநாயகம் என்ற போர்வையில் அனுமதிப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மையில் இவர்கள் இந்த ஆட்சி முறைக்கு ஆபத்தானவர்கள் இல்லை என்பதே பொருளாகும்.
பிரதான முரண்பாடு அதேநிலையில் தான் உள்ளது. அவ்முரண்பாடு தீராத வரையில் மாற்றத்திற்கு இடம் இடமில்லை. இவ்வாறு எழுதுகின்ற போது `1970களின் மனநிலையில் இருப்பதாக கருத்து முன்வைக்கப்படும். ஆனால் சமூகப் பொருளாதார போக்கின் வளர்ச்சியை வைத்தே மதிப்பீடு செய்யப்படுகின்றது. இன்றைய முரண்பாடுகள் என்பது அடிப்படையான முரண்பாடு என்பது உள்ளது. அதே வேளை பிரதான முரண்பாடு என்பது தேசிய ஒடுக்குமுறையேயாகும். பொருளாதார நிலமைகள் ஒன்றாக பாதிப்பதாக இருப்பினும் ஆட்சி அமைப்பு முறை எந்தச் சமூகத்தையும் முன்னோக்கி நகர்த்திவிடும் வல்லமை இருக்காது.
ஏகாதிபத்தியத்திற்கும் இலங்கை முழு மக்களுக்குமான முரண்பாடு, நிலப்பிரபுத்துவ- கற்கால எச்சங்களைக் கொண்ட சமூகத்திற்கும் வளர்ந்து வரும் முதலாளித்துவ சமூகத்திற்குமானது அடிப்படை முரண்பாடாகும். சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு பிரதான முரண்பாடாகும். பிரதான முரண்பாட்டை முன்னகர்த்திச் செல்ல வேண்டும். ஆனால் அகமுரண்பாட்டை முன்னிறுத்தி சமூக நீதி பேசும் சீர்திருத்தவாதமும் பேசி சமூகத்தினை முன்னர்த்திவிடியாத எதிர்ப்புப் புரட்சி சிந்தனையாகும்.
மொழிவழியில் ஒன்றாக இருக்கின்ற வெவ்வேறு அடையாளம் கொண்ட மக்கள் பிரிவு இணைந்து கொள்ளும், அவர்களை முதலாளித்துவ கட்டம் முன்னோக்கி நகர்த்திவிடும். ஆனால் தம்மை மொழி வழித் தேசத்தில் இணைத்துவிடாது தடுப்பதில் உள்ள சமூகக் காரணிகளை ஆராயத் தயாராக இல்லாத நிலைதான் தொடர்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் பகுதியில் வாழும் தொல்தமிழ் பிரிவைச் சேர்ந்த இசுலாமிய மதப்பிரிவினரை ஆளும் வர்க்கங்களும், திரிபுவாதிகளும் எதிராக இருக்கின்றார்கள். இங்கு யூதர்கள் மொழியை கடந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த போது முன்வைத்த ஆய்வு கோளை மறுப்பவர்களாக உள்ளார்கள்.
‘‘வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப்பிரச்சனையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று- தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா விதமான தேசிய இன ஒடுக்குறைக்கும் எதிராய் போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும், இரண்டாவது - எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப்பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின் பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல் விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதலும் இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்துக்குரிய உலகம் தழுவிய விதியாகும். முன்னது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது முதிர்ச்சிடையடைந்து சோசலிச சமுதாயமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும்”. (ப.32 -) மொழி வழியில் தேசங்களாக இணைவதும், தேச அரசு உருவாகுவது உலகம் தழுவிய விதியை ஏற்க மறுக்கின்ற போக்கு உள்ளது.
தேசங்களின் அரசை மறுப்பவர்களுக்கு தோழர் லெனின். ”தனது கோதா செயல்திட்டத்தின் விமர்சனம் என்ற நூலில் மார்க்ஸ் எழுதினார் : ‘‘முதலாளித்துவ சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகரமான முறையில் மாற்றப்படும் காலகட்டம் இருக்கிறது. இதற்கு இணையான ஒரு அரசியல் இடைநிலைக் காலகட்டமும் இருக்கிறது, இக்கால கட்டத்தில் அரசு என்பது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் தவிர வேறாக இருக்க முடியாது.” இன்று வரை இது சோஷலிஸ்டுகளுக்கு மறுக்க முடியாத உண்மையாக இருந்து வந்துள்ளது. வெற்றிகர சோஷலிசமானது பூரண கம்யூசமாக வளரும் வரை அரசு நிலைத்திருக்கும் என்ற உண்மையை ஏற்பதும் இதிலடங்கியிருக்கிறது. அரசு வாடி உதிர்ந்து போதல் என்ற ஏங்கெல்சின் சொற்றொடர் நன்று தெரிந்ததே. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம் என்றும் அரசு வாடி உதிர்ந்து போகும் போது அதுவும் வாடி உதிர்ந்து விடும் என்றும் வேண்டுமென்றே தான் நாம் முதல் ஆய்வுரைகளில் வலியுறத்தினோம். எமது எதிராளிகள் மார்க்சியத்துக்குப் பதிலாக ‘‘அரசு அல்லாத” ஒரு வகைக் கண்ணோட்டத்தை மேற்கொண்டாலொழிய அவர்களது வாதங்கள் பெருந்தவறாகவே விளங்கும். ( 180- 181 பா வ. சோ. பு)
தேச அரசுகள் முதலாளித்துவத்தில் மாத்திரம் அல்ல. சோசலிச பொருளாதார சமூகத்திற்கும் தேச அரசு அவசியம் என்பதை 1917 பின்னரான புரட்சியில் வலியுறுத்தப்படுகின்றது.
போராட்டத்தில் ஒரு கட்சியானது அகிலத்தின் வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர், முதலாளித்துவ வர்க்கப் புரட்சியை நடத்திவிடமுடியாத நிலையில் தொடர்கின்ற இடதுசாரியமும், முதலாளித்துவப் புரட்சியை நோக்கி நகர்த்திட தயாராக இருக்கும் தமிழ் தேசியப் போராட்டம் என இரு துருவப் போக்கும் உள்ளது. தமிழ் தேசிய அணியின் தேசிய முதலாளிப் பிரிவு பல்வேறு போக்கை கொண்டதாக இருப்பது அந்த வர்க்கத்தின் போக்காகும். இதனை வைத்துக் கொண்டு தலைமை தாக்கிட முடியாத இடதுசாரியம் விமர்சித்துப் பலனில்லை. இவர்கள் தலைமை கொடுக்காது விமர்த்சித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் சமூகத்தில் இருந்து தொடர்ந்து அன்னியப்பட்டே வருவார்கள். ‘‘தேசிய முதலாளி வர்க்கம் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவிற்கு ஏகாதிபத்தியம் மற்றும் அதிகாரவர்க்கத்தினர், போர்க்கிழார்களின் அரசாங்கங்களுக்கு எதிராக புரட்சியில் பங்கு எடுத்து புரட்சிகர சக்தியாக மாறக்கூடும்; ஆனால், பிற நேரங்களில், தரகுப் பெருமுதலாளி வர்க்கத்தைப் பின்பற்றி எதிர்ப்புரட்சியில் அதன் உடந்தையாளனாக செயலாற்றும் அபாயம் உள்ளது என்பது அதன் இரட்டைத் தன்மையிலிருந்து விளைகிறது. (421 மா2) இங்கு தமிழ் தலைமைகளின் பிரச்சனை என்பது வர்க்க நிலையில் பலவீனம் என்பதே தமிழ் தேசத்தின் இலக்கின் மீதான தாக்குதல் தொடுப்பதற்கு போதுமானது இல்லை.
மக்கள் மன்றம், நிகுநெகும, சமவுரிமை என்று பேசப்படும் பேச்சுகள் தனிமனிதர் உரிமைசார்ந்தது பேசப்படுகின்றது. GoHomeGota போராட்டத்தில் வெளியிடப்பட்ட கோரிக்கைகளிலும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தேசம் என்ற சமூகஒழுங்கைவு என்ற உயர்ந்த ஜனநாயக வடிவத்தில் அமைந்த உரிமைக்கு மாற்றாக தனிமனிதர்களை முன்னிலைப்படுத்துகின்றது. இது முதலாளித்துவ ஏகாதிபத்திய தாராளவாதத்தின் போக்கையும் இதனுடன் ஒப்பிட முடியும். ஏகாதிபத்திய தாராளவாதம் தனிமனிதர்களை முன்னிறுத்தி கூட்டு ஒழுங்கமைவின் உரிமையை தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் எப்பவும் தனிமனித உரிமையைப் பற்றிப் பேசுவதிலும் அதனை வளர்ந்து வரும் நாடுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊடாக நுபழைத்துவிடுகின்றது. இங்கு சோசலிசப் புரட்சியின் பகுதியாகிவிட்ட தேசியஇனப் போராட்டத்தை ஏற்க மறுப்பதும், தரம் தாழ்த்துவதும் மார்க்சிய வழி ஆகாது. ஒடுக்கும் தேசத்தின் பேர் அகங்காரமும், ஒடுக்கப்படுபவர்களின் எதிர்வினையும் ஒன்றாக போட்டுக் குழப்பிடும் போக்கே வரலாறாக இருக்கின்றது. ‘‘தேசங்கள் இறைமைத் தன்மை கொண்டவை, தேசங்கள் அனைத்தும் சமமானவை ஆகும்.” (ப.32 மா.தே. இ.பி. ஸ்ராலின்) தேசங்களின் இறைமையை மறுத்துக் கொண்டு சமூகப் புரட்சியை நடத்திவிட முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது.
மறுபுறத்தே ஒடுக்கும் தேசத்தின் தேசிய முதலாளித்துவ சக்திகள் தலைமைதாக்கியிருக்கின்ற நிலையில் ஐக்கிய இலங்கை என்ற புரட்சியை நடத்திடவும் முடியாது. தேசிய விடுதலைப் போராட்டத்தை பொதுவுடமைக் கட்சியே தலைமை தாக்கிட முடியும். அவர்களால் தான் சமரசம் அற்று போராட்டத்தை கொண்டு செல்ல முடியும். ஆனால் தற்கான களம் என்பது இன்றில்லை. இந்த நிலையில் தேசிய முதலாளித்துவ சக்திகள் ஊசலாட்டம் கொண்ட தாக இருப்பினும் அவர்களால் பின்னோக்கிச் செல்லவும் முடியாது. சுயநிர்ணயத்தை மறுத்து இடதுசாரிக் கட்சிகளால் ஒன்றிணைக்கவும் முடியாது.
பின் இணைப்பு அறிக்கை
இலங்கையின் மக்களாகிய நாம், நாடு முழுவதிலுமாகவுள்ள வீதிகளிலும் கோட்டாகோகவிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் சமூகங்களோடு ஒன்றுபட்டும் நின்று, #GotaGoHome2022 இயக்கத்தின் வெற்றியை இத்தால் பிரகடனம் செய்கிறோம்.
எங்களைப் பிரித்து வேறாக்கும் சாதி, இனம், மதம், பாலினம் மற்றும் மொழி எனும் எல்லைகளை ஏற்று மதிக்கும் அதேவேளை, எங்களை மனிதர்களாக மற்றும் இலங்கையர்களாக்கும் பொதுவான தன்மைகளைக் கொண்டாடியபடி, ஒரு காலத்தின் அழைப்பு மற்றும் மாற்றம் பற்றிய ஒரு நம்பிக்கையின் கீழ் நாங்கள் ஓரணியாகத் திரண்டோம். இன்று அந்த மக்கள் போராட்டத்தின் முக்கியமான மைல்கல்லாக அமைந்த வெற்றியை நாங்கள் அறிவிக்கின்றோம்.
இணையம் மற்றும் புதிய ஊடகம் என்பவற்றுடன் வளர்ந்த புதிய தலைமுறையினராகிய நாங்கள் வன்முறைகளற்ற நடவடிக்கைகளின் பலத்தை அறிவோம். ஏமாற்றம் அடைந்த இளைஞர்களின் இரத்தத்தில் நனைந்து, மக்கள் எழுச்சி களின் தோல்விகளை மட்டுமே கண்ட வரலாறு கொண்ட நாட்டில், நாங்கள் மீண்டெழுந்தோம்; வன்முறையற்ற மக்கள் வெற்றியை நோக்கி இலங்கையை நாங்கள் வழி நடத்திச் சென்றோம், படைப்பாற்றலை முன்னிறுத்தினோம். இப்பொழுது, இலங்கை மக்களின் போராட்டத்தை ஒரு புதிய ஒளியில் மீளெழுதுகிறோம்.
அனைவருக்குமான ஒரு மத்திய கட்டளைத் தலைமையை அல்லது அடுத்து என்ன செய்யவேண்டுமென எமக்குச் சொல்வதற்கான தலைவர்களை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இருந்தும் குறித்த எழுச்சி மிகுந்த தருணங்களின் கோரிக்கைகள் எம்மை ஒன்றிணைந்து செயலாற்ற வைத்தன.
எங்களைப் பிளவுபடுத்திய பல தசாப்தகால விரோதங்கள், இன, மத வேறுபாடுகள் மற்றும் ஏனைய தடைகளை சில சமயங்களில் வெற்றியோடு தாண்டியும், சில சமயங்களில் அவை உருவாகமல் முன்னெச்சரிக்கையோடு செயற்படவும் முயற்சித்தோம். அவர்கள் எங்களுக்கிடையில் ஒற்றர்களை அனுப்பினார்கள், குண்டர்களை ஏவினார்கள். எங்களை அழிக்க முகவர்களை அனுப்பினார்கள். அதுமட்டுமின்றி எங்களது சொந்த மக்களையே எங்களிற்கு எதிராகத் திருப்பினார்கள்; அவர்களில் சிலர் சாதாரண உடையிலும், சிலர் சீருடையிலும் ஊடுருவினர். இருந்தும் இதை மீறி நாங்கள் நிலைத்து நின்றோம்.
அடக்குமுறைகளின் கண்ணீர்க் குண்டுகள் எங்கள் கண்களில் கண்ணீரைக் கொண்டு வருகையில் நாங்கள் ஒன்றாய் எதிர்த்து நின்றோம். நாங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டும் , ஒருவரையொருவர் பாதுகாத்தும் கொண்டோம். அதேசமயம் நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துரீதியாகச் சண்டையிட்டுக் கொண்டோம், தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறோம்.
சமூக - அரசியல் நிலை மாற்றத்தினை மக்களை ஒழுங்கமைத்தல் மற்றும் அதற்காகச் செயற்படுதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்கிக் கொண்ட முறை மூலமாக நாம் சக இலங்கையர்களின் இதயம், மனம் மற்றும் உடலில் நாங்கள் இணைந்தோம். அது எங்கள் அனைவருக்குமான இடமாக காலிமுகத்திடலை மையமாகக் கொண்டு ‘கோட்டாகோகம’ என அறியப்படலாகியது. எங்களது கூட்டுக் கனவுகளிலிருந்து ஒரு கிராமத்தை அங்கே நாங்கள் கட்டி எழுப்பினோம். அங்கே ஊழல் அரசியலின் அதிகார எல்லைகளை நாங்கள் தாண்டினோம். எங்களை அடக்கியொடுக்கும் தலைவர்கள் தொடர்ச்சியாக இதைப் புரிந்து கொள்ளத் தவறினர்.
கோட்டாகோகம என்ற ஒரு எண்ணக்கரு நிகழ்ந்திராதவிடத்து ஒரு மாற்று எதிர்காலத்தைப் பற்றி ஒரு சில கணங்களுக்கேனும் நாங்கள் கற்பனை செய்து பார்த்திருப்போமா? இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிற் கூட மத்திய வங்கி இன்னமும் மோசமான மோசடிகளை நிகழ்திக்கொண்டே இருந்தத்து; இலங்கையைக் கட்டுப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த குடும்பமும் இன்னமும் தொடரந்துகொண்டே இருந்திருக்கும், மக்கள் அதிகாரத்திற்கான நம்பிக்கை ஒரு அந்நிய எண்ணக்கருவாகவே இருந்திருக்கும்.
ஆனாலும், இலங்கைப் பிரஜைகளான நாங்கள் இந்த அசாத்தியமற்றவைகளைச் சாத்தியமானதாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.தெற்காசியாவிலேயே மிகவும் அதிகார பலமும், ஊழல் மிக்கதுமான அரசியல் வம்சத்தை ஆட்சியிலிருந்து துரத்தியுள்ளோம். நாட்டின் அடையாளமாக ஒரு புதிய தலைமுறையை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம். அமைதி, அன்பு மற்றும் மீண்டெழுதலுடன் உலகிற்கான ஒரு உதாரணத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இது தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தவர்கள் ஈட்டிய வெற்றியாவாகும். இது, கடும் மழை, காற்று மற்றும் வெய்யிலில் நூறு நாட்களையும் தாண்டிப் போராடியவர்கள், தங்கள் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வந்து எங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்திப் போராடிய அனைத்துத் தாய்மார்களுக்கான என அனைவரதும் வெற்றி., ஒன்றாக நின்று முன்னேறிச் சென்று, ஒரு தண்ணீர்ப் போத்தலைப் பகிர்ந்து கொண்டு அல்லது கரிசனையுடன் அழைப்பை எடுத்து நலம் விசாரித்த அனைவருக்குமான வெற்றி. இந்தப் போராட்டத்துக்கு வருகை தந்த அனைவருக்குமான வெற்றி. நாங்கள் எதனை வெற்றி கொண்டு சாதித்தோம் என்பதை நாங்கள் மறந்து விடாதிருப்போம்.
வரலாறு மீண்டும் மீண்டும் எழுதப்படக் கூடியதென்பதை இப்போது மீண்டும் நாங்கள் அறிந்தள்ளோம். மக்கள் இல்லாது வரலாறு படைக்கப்பட முடியாது. கோட்டாகோகம என்பது தனியே ஒரு இடம் மட்டுமல்ல, அது வரலாற்றில் ஒரு தருணமும் எங்களின் ஒரு கூட்டுச் சிந்தனைக்கான ஒரு நகர்வுமாகும்.
போராட்டம் தொடர்கிறது, ஒரு அடக்கு முறையாளரிடமிருந்தது மற்றொருவருக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கானது அல்ல அது; மக்களை மதிக்கும் ஒரு தேசத்தைப் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட அப் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்.
நாங்கள் புதிய இலங்கையர்கள் மற்றும் நாங்கள் இங்கே இருக்கிறோம்.
போராட்டத்திற்கு வெற்றி!
අරගලයට ජය!
Victory to the people!
ஜூலை 2022
at Gotagogama ගෝඨාගෝගම கோட்டாகோகம, Sri Lanka.
ஆகஸ்ட் 9, 2022 அன்று வெளியிடப்பட்டது,
இலங்கையின் குடிமக்களால்.