Popular Posts

Wednesday, 3 December 2025

இன்றைய அரசியல் போக்கு 10

 

            இயற்கை இடரால் கொல்லப்பட்ட அனைவருக்கும் அஞ்சலிகள்

 


 

இன்றைய அரசியல் போக்கு 10

 இயற்கை பேரிடரை அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்க் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் இக்கட்டான நிலையில் உதவி செய்ய வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இடர் ஏற்படுகின்ற போது அண்டை நாடுகள் உதவி வழங்குவதும் இயல்பான போக்காகும்.

இயற்கை இடர் பற்றிய எழுகின்ற போது சிக்கல் இருந்தது. இந்த இழப்புக்கிடையே எவ்வித கருத்தை எழுதுவது? அரசியல் இருக்கலாமா அல்லது தவிர்க்கப்பட வேண்டுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. இனவாதம் என்ற சொல்லாடல் அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை கருத்துரைக்கின்ற போது கவனத்தில் கொள்வதில்லை. அனைத்துமே இனவாதம் என்றால் ஒரு கருத்தியல் இருக்க முடியாது. எது இனவாதம் என்ற புரிதல் இல்லாமல் வரையறையை புகுத்திவிடுவது. இங்கு இயங்கை அழிவு ஒரு புறம், அரசியல் அறிவு பற்றிய பிரச்சனை, இயற்கை பற்றிய பிரச்சனை, நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, பாதுகாப்பு முன்னேற்பாடு (Health and safety measuresments) என்ற பிரச்சனை என பலவிடயங்கள் உள்ளன. Health and safety என்ற விடயத்தில் மொழி முக்கியமானது என்ற புரிதல் இல்லாமலே மேற்குநாடுகளில் வாழ்ந்து கொண்டு கருத்தெழுதும் பேர்வழிகளை என்னவென்பது? மக்களை ஆபத்தில் கைவிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் என்றால் இவை பற்றியும் பேசப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் உலகம் என்பது இழப்பு வீட்டினுள் அரசியல் பேசாதே என்று கற்பிக்கப்பட்டு வருகின்றது. சோகத்தை சோகமாக எடுத்துக் கொள் என்கின்றனர். தம்மை ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்கின்றார்கள் அவர்களுக்கு அகநிலைவாதம், புறநிலைவாதம் என்பது அவசியமற்றதாகின்றது. இவைகள் தெரியாமலே இடதுசாரி கருத்தாளர்களாக வலம்வருகிறார்கள்.

எந்த ஆட்சியிருந்தாலும் இயற்கை இடரை சமாளிப்பது பெரும் சவாலே. ஏனெனில் இயற்கை இடரை யாராலும் தவிர்க்க முடியாது. இயற்கைக்கு எதிராக மனிதர்கள் குறிப்பிட்ட அளவில் தான் எதிர்த்துப் போராட முடியும். ஆனால் அரசியல் கருத்துகள் பல்வேறு நிலைப்பாடு கொண்டு முன்வைக்கப்படும். இயற்கையால் உருவாகும் அழிவு என்பது வேறாகும். இதனை யாரும் தடுத்திட முடியாது. ஆனால் கடந்த கால அரசியல், பொருளாதார முடிவுகளினால் எற்பட்ட தாக்கமும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் விமர்சிக்கப்பட வேண்டியதுதான்.

 இராணுவம்- ஆயுதப்படைகள்

இராணுவம் மற்றும் இதர படைகள்  என்பன அரசினைப் பாதுகாப்பதாகும். அரசு என்கின்ற போதே அதன் அரசாங்கம், திணைக்களங்கள், நீதிமன்றம், இராணுவம், சிறைச்சாலை அடங்கியதாகும். அரசினை இந்த நிறுவனக் கட்டமைப்புகள் பாதுகாப்பதே அதன் கடமையாகும். ஆட்சித் தலைவரே முப்படைகளின் Commander in Chief.  இந்த ஆயுதப்படைகள் தான் மக்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அரகலையின் போது இதே இராணுவம் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியாது. அதன் போது எவரும் கொல்லப்படவில்லை என்பதற்காக மனிதாபிமானம் கொண்டதாக இராணுவத்தை கூற முடியாது. ஆனால் வலதுசாரிகள் கூறுவார்கள். இராணுவத்தினர் நினைவாக பொப்பி மலர் சூடுவார்கள்.

இதிலும் குறிப்பாக சிறிலங்காவின் ஆயுதப் படைகள் தமிழர் பகுதிகளில் தான் முகாமிட்டிருக்கின்றார்கள். தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு படையாக இருப்பது தான் அவர்களுக்கு கொடுத்த வேலையை அவர்கள் செய்கின்றார்கள். ஈழத்தில் முகாமிட்டிருக்கும் ஆக்கிரமிப்பு படை எவ்வாறு புனிதமாகின்றது என்பதை கருத்தாளர்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்.

ஆயுதப் படைகள் எவையும் நடுநிலையானவை அல்ல. அது பக்கச் சார்பு கொண்டதாக இருக்கின்றது. அவ்வாறு இல்லையென அரைகுறை இடதுசாரிகள் வாதிக்கின்றார்கள். ஏதோ ஒரு இயக்கம் சிங்கள நண்பருக்கு என்று 1985 என நினைக்கின்றேன் பிரசுரம் எழுதினார்கள். அதில் உன் வர்க்கத்தை எண்ணிப் பார், நீ ஒரு கூலிப்படை அவ்வளவே. நீங்கள் அதிகார வர்க்கத்திற்காக பலியாகின்றீர்கள் என பிரசுரத்தில் எழுதியிருந்தார்கள்.  இவ்வாறு வி.பு பிரசுரம் எழுதியும் உள்ளார்கள்.

தமிழ் பகுதியில்  உள்ள படைகள் எல்லாம் ஆக்கிரமிப்புப் படைகள் தான். அவர்களுக்கு புனித வேடம் கொடுக்க வேண்டியதில்லை.

சுனாமி- பேரலையின் கோலம்

பேரலையினால் கொல்லப்பட்டவர்கள் (31299) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என மொத்தமாக 35392 மக்கள் இழக்கப்பட்டிருந்தார்கள். அந்த இழப்பை எவ்வாறு மனித குலம் எதிர்க் கொண்டது என்பது எழுதி விளங்கிவிடத் தேவையில்லை. இந்த இழப்பு என்பது கிழக்கு கடல்பகுதியையே அதிகம் பாதித்து இருந்தது. அந்தப் பகுதி என்பது பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களாகும். அந்தக் காலத்தில் அன்றைக்கிருந்த நிழல் அரசு தன்னந்தனியே மீட்புப் பணிகளில் ஈடுபட்டு திறம்பட ஈடுபட்டிருந்தார்கள்.

இது வரலாறு விட்டுவிடலாம். ஆனால் இன்றைக்கு அரசியல் எழுதுபவர்களின் அரசியல் புரிதலும், எழுத்துக்குமான மாறுபாடுகளை எழுதவேண்டியுள்ளது.  இன்றைய லங்கா அரச கட்டமைப்பு என்பது முன்னையப் போலவே அனைத்து நிறுவனங்களை கொண்டதாகும். அந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக இங்கிக் கொண்டு தான் உள்ளன.

ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பேரிடல் அழிவு பெரிதோ சிறிதோ என்று வாதிட முடியாது. ஆனால் அரசியல் சந்தர்ப்பவாதம் வரலாற்றை மறந்து ஒப்பிக்கின்றது. அன்றும் அனைத்து மக்களும் இழப்பில் கலந்து கொண்டார்கள். எல்லாப் பகுதியிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்தார்கள். மக்கள் தமது இரக்கு குணத்தை வெளிப்படுத்தினார்கள். 

விடுதலைப்புலிகளுக்கு எதிராக JVP களம் ஆடினர் எனக் சுருக்கிக் கொள்ள முடியாது. அது அன்றைய காலத்தில் அழிவில் இருந்து காப்பாற்ற தேவையானது நிதி மறுக்கப்படுகின்றது. நிதி மறுப்பது ஜனநாயக விரோதம் இல்லையா? இதனையும் விக்கினேஸ்வரன் முன்மொழிந்து நிதியமைச்சர் நிதியத்தையும் ஒப்பிட்டு நோக்குவது தகும். தேசத்தின் வளர்ச்சியில் மூலதனத்தின் அவசியத்தை ஏற்காதவர்கள் எதிர்ப்பார்கள்.

ஜனநாயக மறுப்பு

வி.புலிகளைப் புலிகளைத் தவிர்ந்த எவரும் அரசு (அரசும் புரட்சி, 1919லெனின் விரிவுரை, தே.இ.பி.பா.வ.ச, ஸ்ராலின் தொகுதியின் உள்ள கட்டுரைகள் படித்து கருத்துச் சொல்லுங்கள்) பற்றிய பிரச்சனையில் தீர்க்கமான கோட்பாட்டுப் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை. இந்தப் பிரச்சனையை புறநிலைரீதியாக சுய ஆய்வு அல்லது ஆய்வு செய்ய எவரும் தயாராக இல்லை. இடதுசாரி சந்தர்ப்பவாத அரசியலே இன்றைக்கும் நேர்மை கொண்டதாக ஒப்பிக்கப்படுகின்றது. இதில் ஏன் உமாமகேஸ்வரன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று யாரும் உரையாடிய தரவுகளும் இல்லை. 13 என்பதே அரசு என்ற பிரச்சனையை மறுத்துள்ளது. இதுபற்றி பலமுறை எழுதினாலும், அரசியல் பேசுகின்றனவர்கள் தொடர்ச்சியாக தொடக்கப்புள்ளாக கருத வேண்டுமென்கின்றார்கள்.

போர் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிகமான படைகள் தமிழர் பகுதியில் உள்ளார்கள். நீங்கள் வரிந்து கொண்ட அரசியலுக்காக ஏன் உங்களால் போராட முடியவில்லை. திரிபுவாதக் கும்பல் தமது அரசியல் புரிதல் தான் மார்க்சியம் என்றும், தேசியப் போராட்டம் என்பதே முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை எனவும் ஒப்பித்தார்கள்.

eprlf,plot,eros,nlft,plft, endlf போன்ற அமைப்புகளில் இருந்து மார்ச்சியம் மாதிரியாக எதையோ கற்றுக் கொண்டார்கள். கோட்பாட்டுத் தளத்தில் தமிழீழக் கட்சி அரசியல் நிலைப்பாட்டை சிலர் ஏற்றுப் பயணித்தவர்களும் இன்று சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை மென்மையாக போகவேண்டும் என்கின்றார்கள்.

எந்த diplomatic உம் இல்லாத தமிழ் அரசியல் என்பதே அபர்த்தமானது. உண்மையான இடதுசாரிகள் என்றால் சுயநிர்ணயம் என்பதை பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட தேசம் தான் முன்வைக்க வேண்டும்.

குறிப்பாக வயோதிப காலத்தில் வாழ்கின்ற முன்னைய ஆயுத இயக்க அரைகுறை அறிவாளிகளின் இம்சை என்பது மிகவும் மோசமாக உள்ளது. வி. பு உங்களை தடைசெய்த காரணத்தால் வரலாற்றுக் கடமையை செய்ய முடிவில்லை என்று இன்றும் அழுது கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் 2009 இருந்து இன்றுவரையில் வி.பு அமைப்பாக இல்லை. உங்களின் அரசியலை செய்யும் கால வெற்றிடம் உள்ளது. இதனை எவ்வாறு எதிர்க் கொண்டீர்கள்?

``தத்துவமே மனித குலத்தின் உரிமைகளை அர்த்தப்படுத்துகின்றது; அரசாங்கம் என்பது மனித இயற்கையின் அரசாங்கமாக இருக்க வேண்டுமெனக் கோருகின்றது” (33) இன்றைய கருத்தாளர்கள் தலைகீழாக மார்க்சியத்தை முன்வைக்கின்றார்கள். இங்கு தனிநபர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அது எனது எழுத்து முறையும் அல்ல. இந்த வித மோசடி கருத்தாளர்களை ஒரு சமூகம் அரசியல் மயப்படுத்தும் போதே விளங்கிக் கொள்ளவோ அம்பலப்படுத்தவோ முடியும். மாறாக நபர்களை குறிப்பதால் எவ்வித மாற்றமும் நடந்துவிடப் போவதில்லை.

 

 முதலாளித்துவ பொருளாதார

2012இல் திருமலையில் இருந்து மூதூர் செல்லும் பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அந்த பாதை போட்டு ஒரு வருடம் கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. ஒப்பந்தக்காரரின் குறைபாடுகள் பலவுள்ளன. அந்த இடம் பற்றிய அறிவு, திட்டம் பற்றிய அறிவு, செலவைக் குறைக்க வேண்டும் என்ற முனைப்பு இவைகள் எல்லாம் பிரச்சனைதான். இயல்பாகவே  அந்தப் பகுதி அருவியிலிருந்து நீர் வந்தடையும் இடம். அவ்வாறு இருக்கின்ற போது நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் வழி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அங்கு வீதி நிர்மாணிக்கப்படவில்லை. அவ்வாறு சிறிய நீரோடைக்கான பாலம் அமைத்திருந்தால் அந்தச் சேதம் நடைபெற்றிருக்காது.

இவ்வாறு இன்று நடைபெற்ற அழிவில் இரயில்பாதை மண் அரிப்பு ஏற்பட்டு தண்டாவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் நீர் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டிருந்ததா தெரியவில்லை. அவ்வாறான இடங்களில் திட்டமிடும் போது அந்த சூழல் பற்றிய அறிவு முக்கியமானதாகும்.

முதலாளித்துவத்தின் வளம் சார்ந்த இயற்கை அழிப்பு

அரசாங்கங்களின் திட்டமிடல்

போதிய முன் எச்சரிக்கை இன்மை

செம்பரம்பாக்கம் மக்களுக்கு அறிவித்தல் கொடுக்காமலே அணைக்கதவை திறந்து விட்ட வரலாறு உண்டு. பிலிப்பீன் நாட்டில் தொழில்புரியும் வானிலை ஆராய்ச்சி நிபுணர் இவ்வாறு பெரும் புயல் வரும் என எச்சரித்ததாகவும், அதனை அரசு கவனிக்கவில்லை என்றும் விமர்சனம் உள்ளது. வெள்ள எச்சரிக்கை வரும் போது முன்னரே நீர் நிலைகளின் மதவை திறந்து விடுவார்கள். அவ்வாறு திறந்து விடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

குடியிருப்புகளை மேற்கொள்ளும் முன்னர் அந்த இடத்தினை பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவ்வாறான முறை உள்ளதா என்பது தெரியவில்லை. இயங்கை ஒரு புறம் அழிவை ஏற்படுத்துவது இயற்கையில் வெளிப்பாடு. ஆனால் மனிதர்களின் விவேகமின்மை, மிகை நுகர்வு, வளத்தை அழிப்பது சுரண்டல் பொருளாதார அரசியலாகும்.

 

இயற்கை அழிவைக்  காட்டி அரசியல் உரிமைகளை மறந்து விடு என்று கூறிட முடியாது. சுனாமி நடந்து முடிந்த பின்னர் தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் நடந்தேறியது. ஆகவே கழிவிரக்கம் என்பது நிரந்தரமற்றது. அதற்கு அரசியல் உள்ளடக்கம் இருக்கப் போவதில்லை. விஞ்ஞான அறிவே மனிதகுலத்திற்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது.

மொழிப்பிரச்சனை பற்றிப் பேசுகின்ற சிங்கள தேசத்தவர்கள் பேரகங்காரத்தினை வெளியிட்டார்கள். பேரகங்காரம் என்பது இலகுவாக அழிந்து விடுவதில்லை. 

தொடரும்.... .....

 

 

சர்வ-கட்சி குழுவாக நாம் நிவாரணங்கள் வழங்கி, சேதங்களை கண்டறிய வந்தோம். அரசுடன் சண்டை இட எமக்கு நேரமில்லை. ஆனால், உங்களுக்கு புதிய மண்சரிவு அபாயம் இல்லாத சாலை ஓரமாக காணிகள் வழங்க அரசை நாம் வலியுறுத்துவோம். அங்கே இந்திய அரசின் உதவியுடன் வீடு கட்டுவோம். இந்த அனர்த்த துன்பத்தை, "மண்சரிவு அபாய மலைகளில், வாழாமல், சாலை ஓரம் வீடு கட்டி வாழும் புதிய வாழ்வுக்காக", பயன் படுத்துவேன்.

Friday, 28 November 2025

இன்றைய அரசியல் போக்கு 9

 


   இன்றைய அரசியல் போக்கு 9

JVP ஒரு மார்க்சியக் கட்சியா? இந்த தலைப்பில் கடந்தவாரம் எனது நூல் வெளிவந்துள்ளது. இதில் பல தலைப்புகளில் உரையாடப்பட்டுள்ளது. ஆனால் பொதுவெளி கருத்தியல் உலகம் என்பது வேறாகவே உள்ளது. இலங்கையின் அரசியல் பொருளாதார நிலையில், வரலாறு எங்கும் எவ்வாறு அரசியல் போக்கு இருந்தது என்ற அடிப்படையில் கருத்துகளை முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு என்பது இன்னொரு தேசிய இனத்தின் வெளிப்பாடாக முன்வைக்கப்படுகின்றது.

மதமும் அரசியலும் இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் பிரிக்கப்படவில்லை. இரண்டும் இரட்டைக்குழாய் துப்பாக்கி போல தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மகிந்த இனவழிப்புச் செய்த வேளையில் அழுத்தம் கொடுத்த ஜேவியினர். இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னேறிய சிந்தனை நோக்கிய பயணத்திற்கு தயாரா இருக்கிறார்களா? முன்னேறிய, முரணற்ற ஜனநாயக அடிப்படை நோக்கி முன் நகர்வார்களா? இது பற்றிய பிரச்சனை உள்ளது என்பதை கருத்துருவாக்கிகள் உள்வாங்கி விடவில்லை. தம்மை அடக்கும் ஒரு சிந்தனை வடிவம், அரசியல் வடிவத்திற்கும் புதிய முகவரி கொடுக்கின்றார்கள். தமது இருப்புக்குரிய உரிமையை மறுக்கும் அரசியல் போக்குப் பற்றி இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தமது ஏலாத் தனத்தை மறைத்துக் கொண்டு கட்டுரை வரைகின்றார்கள். இவர்கள் சில துணுக்குகளை வழங்குவதன் கருத்தை நிறுத்துகின்றார்கள். துணுக்குகளைக் கொண்டே அரசியல் பொருளாதார உறவை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகின்றார்கள்.

இன்றைய காலத்தில் மாவீரர் நினைவை எவ்வளவு எழுச்சியாக நினைவு கூர்ந்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். ஆம் என்ன இருந்தாலும் நீ எனக்கு அன்னியரே. தமது வாழ்வும், சிந்தனையும், அடையாளமும் இருப்பும் மாறுபட்டது தான். இந்த எல்லை வரைவை ஏற்றுக் கொள்ளாது தமக்குத் தெரிந்த விடயத்தை வைத்தே எழுதிக் குவிக்கின்றார்கள்.

இரண்டு பிளவு பட்ட தேசங்களின் அரசியல் நிலைப்பாடு என்பது மாறுபட்டது. ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்காக தன்னை அழித்துக் கொள்ள முடியாது. கீதையில் சொல்வது போல ஒரு மக்கள் கூட்டத்திற்கான இன்னொரு மக்கள் பிரிவு அழிந்து போவதில் தவறில்லை என்கின்ற நவீன சனாதனவாதிகள் போன்றே முற்போக்கு, இடதுசாரியம் என்ற போர்வைக்குள் இருந்து கருத்தெழுதுகின்றார்கள். இவர்கள் பொதுசனங்களின் பார்வையில் முற்போக்கு அரசியல் பேசுவதாக தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றார்கள். இந்த தோற்றப்பாட்டிற்குப் பின்னால் இருக்கும் அரசியலை மறைக்க முடியும் என்று நம்புகின்றார்கள்.

 


 ரின்வின் சில்வா

ரின்வின் சில்வா லண்டன் வந்திருந்த வேளையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டது. இதனை முன்னேறிய ஜனநாயகவாதிகள் அதற்கு எதிராக எவ்வித அரசியல் இராசதந்திரம் இல்லாத நடவடிக்கை என்றார்கள். இராசதந்திர நடவடிக்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஜனநாயகவாதிகள் ரில்வின் சில்வாவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்க இவர்களால் முடியவில்லை. அவர் கட்சியின் அரசியல் உயர் குழுவின் உறுப்பினர். கட்சிப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பில் உள்ளவர். ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தை முன்வைக்காது தமது சமரசவாத அரசியலுக்குப்பினர். கட்சிப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பில்  துணை போகின்றனர்.  சந்தடிப் போக்கில் தமிழர் தேசத்தின் உரிமையை மறுக்கின்றார்கள்.

பயனற்ற எதிர்ப்புக்களால் நிர்மூலமாகப் போவது நிலத்தில் வாழும் தமிழ் மக்களே! (விசுவலிங்கம் எனும் ஆய்வாளர் எழுதுகின்றார்.

``டில்வின் சில்வா எந்தவொரு அரச பொறுப்புக்களிலும் இருந்தவர் அல்ல- ஜே.வி.பி அதிகாரத்திற்கு வந்திருக்கும் நிலையில் கூட, அரச பதவிகளை புறம்தள்ளி, ஜே.வி.பியின் செயலாளராக மட்டுமே இருப்பவர்.

``எல்லை நிர்ணயம் குறித்து உடன்பாடு எட்ட முடியாத நிலையில் தேர்தலை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

``கடந்த கால அரசியலில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அது போல தற்போதும் எழுவது நியாயமே. ஆனால் அப்படியல்ல என்பதை எமது செயல்கள் சாட்சியம் தருகின்றன என்றார்.

 சுயநிர்ணயம் பற்றிப் பேசாத போது புதிதாக இவரிடம் என்ன புதிய வெளிவரும்??

``தேசிய இனப் பிரச்சினை குறித்து மிகவும் நம்பிக்கையை வெளியிட்ட அவர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் தேசிய மக்கள் சக்திமேல் மிகுந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அம் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நம் எவ்வாறு செயற்பட முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அரசுக்கு வந்து ஒரு வருடம் என்பதும், இலங்கை அரசியலில் ஒரு புதிய அனுபவம், மாற்றத்தை நோக்கிய பார்வை இருப்பதால் , அவரது கருத்துப்படி மற்றவர்களின் கருத்தை விட செயலில் என்ன நடக்கிறது? என்பதை அவதானியுங்கள் என அவர் அடிக்கடி தெரிவித்தார்.

அவரிடம் எதிர்கால அரசியல் வழிமுறை குறித்த வரைபடம், இடதுசாரி அரசியல் சக்திகளை அணி திரட்டுவது குறித்த கருத்துக்கள், புதிய அரசியல் யாப்பின் பிரதான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எமது சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது எனக் குறிப்பிடுவேன் என விசுவலிங்கம் கூறுகின்றார். (சிவப்பு நிறத்தில் உள்ளவை விசுவலிங்கம்)

தாய்நாட்டைக்காப்போம் என்று சிங்கள பௌத்த அடிப்படை அரசியல் கொண்டவர்கள் என்பதை இந்த கருத்தாளர் மறைக்கின்றார். சமூக தேசிய வெறியர்களிள் அரசியல் வரலாற்றை மறைக்க வேண்டிய தேவை என்ன?அரசின் அங்கமே அரசாங்கம். அரசாங்கத்தில் அங்கவகித்தவர்கள் இனவழிப்பில் பங்கில்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள். அரசின் தலை என்பது அரசாங்கம். இதுதான் ஜனநாயக வடிவமாகும். ஆட்சிக்கு புதியவர்கள் என்பது ஒரு வெளிப்படையான விடயமே. ஆனால் அரச இயந்திரம் அனைத்தும் பழைய கட்டமைப்பே. இந்த விடயத்திலும் இந்த கருத்தாளர் மக்களைத் தான் முட்டாள் ஆக்குகின்றார்.

 42 % விழுக்காடு கொண்டதே ருசிய சாம்ராட்சியம். அந்தச் சூழலானது வளர்ந்த தேசங்களையும், தேசிய இனங்களையும், பழங்குடிகள், நாடோடிகள் கொண்ட நாட்டில் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தினார். இங்கு பெரும்பான்மை கொண்ட சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் சுயநிர்ணயத்தை ஏற்கவில்லை.

சுயநிர்ணயம் என்பதே அரசு பற்றிய விடயம் என்பதை விளங்காதவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது. ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள் என்பதை சந்தர்ப்பவாதமாக மழைக்கின்றார்கள்.

ரொட்ஸ்கியர்கள், புகாரியவாதிகள் சுயநிர்ணயத்தை ஏற்பதில்லை. அந்த முரண்பாடு தான் இங்கும் உள்ளது. சுயநிர்ணயத்தை மறைத்துக் கொண்டு அரசியல் செய்வது பௌத்த பெருந்தேசியக் கட்டமைப்புக்கு ஆதரித்து செல்கின்றார்கள்.

  


சட்டவாதம்

இது பற்றி முன்னைய பகுதியில் சட்டவாதம் என்ற தலைப்பில் உள்ளது. சிங்கள பௌத்த அரச கட்டமைப்புக்குள் உட்பட்டது தான் சட்டங்கள். சட்டம் பௌத்த என்பதே முதன்மை (9 பிரிவு) பாதுகாத்து நிற்கின்றது. இதில் சட்டங்கள் எவ்வாறு ஒடுக்கும் தேசத்திற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இந்த சட்டவாளர்கள் தமது புலமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க ஆளும் தரப்பிற்கு ஏற்படும் நெருக்கடியை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றார்கள். வெட்டகம் கெட்ட நிலையில் சுதந்திரமாக சட்டம் செயற்படுகின்றது என்று விம்பத்தைக் கட்டமைக்கின்றார்கள்.

சட்டம் பொதுவானது என சிங்கள பௌத்த பேரினவாதிகளும் கூறுகின்றார்கள். ஆனால் தொல்பொருள் திணைக்களம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்குத் துணை போகின்றது. அடிப்படையில் மகாஜன பௌத்தம் என்பது தமிழர்களின் முன்னைய வழிபாட்டு முறைதான். அதனை அரசியல் காரணங்களுக்காக சிங்களபௌத்த பேரினவாதம் உரிமை கோருகின்றது. ர

``ஒருசிலர் தமக்கு பிராந்தியம் மற்றும் இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். தொல்பொருள்  சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். தொல்பொருள்  திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆனந்த விஜேபால” சட்டம் பொதுவானது எனவும் இவர் கூறுகின்றார்.

 

``இன்னொரு முறை இனவாதத்தை உக்கிரப்படுத்த இவர்கள் வாய்ப்புகளைத் தேடுவதால் அவ்வாறான நிலையை நோக்கிச் செல்லாமல் ஒரு சமனிலையைப் பேணுவது அவசியமாகிறது எனவும், அரசின் தலையீடு இல்லாமல் நீதியின் கையில் ஒப்படைத்து வருகிறோம். இதனால் இனவாத சக்திகள் அரசியலாக்க முடியாத நிலை உருவாகும் என்றார்.”- ரில்வின் சில்வா (விசுலிங்கம்) அரசு பற்றிய மோசடியான கருத்தை ஆதரிக்கின்றார்கள்.

 


காணி உரிமை

காணி உரிமை என்பது தேசம் என்ற அடிப்படையில் அவசியமானதொன்றாகும். நிலம் என்பது உற்பத்திச் சாதனம். உணவு உற்பத்திக்கு அவசியமான ஒரு சாதனம் நிலம்.  குறிப்பாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 1949 இருந்து நில அபகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1900களில் திருகோணமலையில் 4விகிதம் இருந்தவர்கள். இன்று எத்தனை விகிதம் என்று பார்த்தால் வரலாற்றுப் போக்கில் தமிழர்கள் இழந்த நிலத்தை அறிய முடியும்.

புத்த விகாரை வைத்த நிலம் என்பது இரண்டு சிங்கள சக்திக்கு இடையில் நடைபெற்ற முரண்பாடு என்று மலினப்படுத்திக் கொண்டு போகலாம். அதனைத் தான் சில சக்திகள் செய்கின்றன. தற்போதைய நிலையை வைத்துக் கொண்டு காணியுரிமை பற்றியும்,  பௌத்தஆக்கிரமிப்புப் பற்றியும் பேசிவிட முடியாது.

லெனின் இருந்திருந்தால் அவர் இரண்டு அரசு பற்றியும், இரண்டு குடியரசுபற்றியும் பேசியிருப்பார். 

 

 

எனது நூல் ஜேவிபி ஒரு மார்க்சியக் கட்சியா?

 

 

இனவழிப்பும் அடையாளமாற்றமும் (மாசி 2021)