Popular Posts

Friday, 28 November 2025

இன்றைய அரசியல் போக்கு 9

 


   இன்றைய அரசியல் போக்கு 9

JVP ஒரு மார்க்சியக் கட்சியா? இந்த தலைப்பில் கடந்தவாரம் எனது நூல் வெளிவந்துள்ளது. இதில் பல தலைப்புகளில் உரையாடப்பட்டுள்ளது. ஆனால் பொதுவெளி கருத்தியல் உலகம் என்பது வேறாகவே உள்ளது. இலங்கையின் அரசியல் பொருளாதார நிலையில், வரலாறு எங்கும் எவ்வாறு அரசியல் போக்கு இருந்தது என்ற அடிப்படையில் கருத்துகளை முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்படுவதில்லை. சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு என்பது இன்னொரு தேசிய இனத்தின் வெளிப்பாடாக முன்வைக்கப்படுகின்றது.

மதமும் அரசியலும் இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் பிரிக்கப்படவில்லை. இரண்டும் இரட்டைக்குழாய் துப்பாக்கி போல தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மகிந்த இனவழிப்புச் செய்த வேளையில் அழுத்தம் கொடுத்த ஜேவியினர். இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னேறிய சிந்தனை நோக்கிய பயணத்திற்கு தயாரா இருக்கிறார்களா? முன்னேறிய, முரணற்ற ஜனநாயக அடிப்படை நோக்கி முன் நகர்வார்களா? இது பற்றிய பிரச்சனை உள்ளது என்பதை கருத்துருவாக்கிகள் உள்வாங்கி விடவில்லை. தம்மை அடக்கும் ஒரு சிந்தனை வடிவம், அரசியல் வடிவத்திற்கும் புதிய முகவரி கொடுக்கின்றார்கள். தமது இருப்புக்குரிய உரிமையை மறுக்கும் அரசியல் போக்குப் பற்றி இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தமது ஏலாத் தனத்தை மறைத்துக் கொண்டு கட்டுரை வரைகின்றார்கள். இவர்கள் சில துணுக்குகளை வழங்குவதன் கருத்தை நிறுத்துகின்றார்கள். துணுக்குகளைக் கொண்டே அரசியல் பொருளாதார உறவை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகின்றார்கள்.

இன்றைய காலத்தில் மாவீரர் நினைவை எவ்வளவு எழுச்சியாக நினைவு கூர்ந்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். ஆம் என்ன இருந்தாலும் நீ எனக்கு அன்னியரே. தமது வாழ்வும், சிந்தனையும், அடையாளமும் இருப்பும் மாறுபட்டது தான். இந்த எல்லை வரைவை ஏற்றுக் கொள்ளாது தமக்குத் தெரிந்த விடயத்தை வைத்தே எழுதிக் குவிக்கின்றார்கள்.

இரண்டு பிளவு பட்ட தேசங்களின் அரசியல் நிலைப்பாடு என்பது மாறுபட்டது. ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்காக தன்னை அழித்துக் கொள்ள முடியாது. கீதையில் சொல்வது போல ஒரு மக்கள் கூட்டத்திற்கான இன்னொரு மக்கள் பிரிவு அழிந்து போவதில் தவறில்லை என்கின்ற நவீன சனாதனவாதிகள் போன்றே முற்போக்கு, இடதுசாரியம் என்ற போர்வைக்குள் இருந்து கருத்தெழுதுகின்றார்கள். இவர்கள் பொதுசனங்களின் பார்வையில் முற்போக்கு அரசியல் பேசுவதாக தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றார்கள். இந்த தோற்றப்பாட்டிற்குப் பின்னால் இருக்கும் அரசியலை மறைக்க முடியும் என்று நம்புகின்றார்கள்.

 


 ரின்வின் சில்வா

ரின்வின் சில்வா லண்டன் வந்திருந்த வேளையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டது. இதனை முன்னேறிய ஜனநாயகவாதிகள் அதற்கு எதிராக எவ்வித அரசியல் இராசதந்திரம் இல்லாத நடவடிக்கை என்றார்கள். இராசதந்திர நடவடிக்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஜனநாயகவாதிகள் ரில்வின் சில்வாவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்க இவர்களால் முடியவில்லை. அவர் கட்சியின் அரசியல் உயர் குழுவின் உறுப்பினர். கட்சிப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பில் உள்ளவர். ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தை முன்வைக்காது தமது சமரசவாத அரசியலுக்குப்பினர். கட்சிப் பேராயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்தும் பொறுப்பில்  துணை போகின்றனர்.  சந்தடிப் போக்கில் தமிழர் தேசத்தின் உரிமையை மறுக்கின்றார்கள்.

பயனற்ற எதிர்ப்புக்களால் நிர்மூலமாகப் போவது நிலத்தில் வாழும் தமிழ் மக்களே! (விசுவலிங்கம் எனும் ஆய்வாளர் எழுதுகின்றார்.

``டில்வின் சில்வா எந்தவொரு அரச பொறுப்புக்களிலும் இருந்தவர் அல்ல- ஜே.வி.பி அதிகாரத்திற்கு வந்திருக்கும் நிலையில் கூட, அரச பதவிகளை புறம்தள்ளி, ஜே.வி.பியின் செயலாளராக மட்டுமே இருப்பவர்.

``எல்லை நிர்ணயம் குறித்து உடன்பாடு எட்ட முடியாத நிலையில் தேர்தலை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

``கடந்த கால அரசியலில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அது போல தற்போதும் எழுவது நியாயமே. ஆனால் அப்படியல்ல என்பதை எமது செயல்கள் சாட்சியம் தருகின்றன என்றார்.

 சுயநிர்ணயம் பற்றிப் பேசாத போது புதிதாக இவரிடம் என்ன புதிய வெளிவரும்??

``தேசிய இனப் பிரச்சினை குறித்து மிகவும் நம்பிக்கையை வெளியிட்ட அவர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் தேசிய மக்கள் சக்திமேல் மிகுந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அம் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நம் எவ்வாறு செயற்பட முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அரசுக்கு வந்து ஒரு வருடம் என்பதும், இலங்கை அரசியலில் ஒரு புதிய அனுபவம், மாற்றத்தை நோக்கிய பார்வை இருப்பதால் , அவரது கருத்துப்படி மற்றவர்களின் கருத்தை விட செயலில் என்ன நடக்கிறது? என்பதை அவதானியுங்கள் என அவர் அடிக்கடி தெரிவித்தார்.

அவரிடம் எதிர்கால அரசியல் வழிமுறை குறித்த வரைபடம், இடதுசாரி அரசியல் சக்திகளை அணி திரட்டுவது குறித்த கருத்துக்கள், புதிய அரசியல் யாப்பின் பிரதான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எமது சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது எனக் குறிப்பிடுவேன் என விசுவலிங்கம் கூறுகின்றார். (சிவப்பு நிறத்தில் உள்ளவை விசுவலிங்கம்)

தாய்நாட்டைக்காப்போம் என்று சிங்கள பௌத்த அடிப்படை அரசியல் கொண்டவர்கள் என்பதை இந்த கருத்தாளர் மறைக்கின்றார். சமூக தேசிய வெறியர்களிள் அரசியல் வரலாற்றை மறைக்க வேண்டிய தேவை என்ன?அரசின் அங்கமே அரசாங்கம். அரசாங்கத்தில் அங்கவகித்தவர்கள் இனவழிப்பில் பங்கில்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள். அரசின் தலை என்பது அரசாங்கம். இதுதான் ஜனநாயக வடிவமாகும். ஆட்சிக்கு புதியவர்கள் என்பது ஒரு வெளிப்படையான விடயமே. ஆனால் அரச இயந்திரம் அனைத்தும் பழைய கட்டமைப்பே. இந்த விடயத்திலும் இந்த கருத்தாளர் மக்களைத் தான் முட்டாள் ஆக்குகின்றார்.

 42 % விழுக்காடு கொண்டதே ருசிய சாம்ராட்சியம். அந்தச் சூழலானது வளர்ந்த தேசங்களையும், தேசிய இனங்களையும், பழங்குடிகள், நாடோடிகள் கொண்ட நாட்டில் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தினார். இங்கு பெரும்பான்மை கொண்ட சிங்கள தேசம் தமிழர் தேசத்தின் சுயநிர்ணயத்தை ஏற்கவில்லை.

சுயநிர்ணயம் என்பதே அரசு பற்றிய விடயம் என்பதை விளங்காதவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியும் என்று நம்பவைக்கப்படுகின்றது. ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள் என்பதை சந்தர்ப்பவாதமாக மழைக்கின்றார்கள்.

ரொட்ஸ்கியர்கள், புகாரியவாதிகள் சுயநிர்ணயத்தை ஏற்பதில்லை. அந்த முரண்பாடு தான் இங்கும் உள்ளது. சுயநிர்ணயத்தை மறைத்துக் கொண்டு அரசியல் செய்வது பௌத்த பெருந்தேசியக் கட்டமைப்புக்கு ஆதரித்து செல்கின்றார்கள்.

  


சட்டவாதம்

இது பற்றி முன்னைய பகுதியில் சட்டவாதம் என்ற தலைப்பில் உள்ளது. சிங்கள பௌத்த அரச கட்டமைப்புக்குள் உட்பட்டது தான் சட்டங்கள். சட்டம் பௌத்த என்பதே முதன்மை (9 பிரிவு) பாதுகாத்து நிற்கின்றது. இதில் சட்டங்கள் எவ்வாறு ஒடுக்கும் தேசத்திற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். இந்த சட்டவாளர்கள் தமது புலமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க ஆளும் தரப்பிற்கு ஏற்படும் நெருக்கடியை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றார்கள். வெட்டகம் கெட்ட நிலையில் சுதந்திரமாக சட்டம் செயற்படுகின்றது என்று விம்பத்தைக் கட்டமைக்கின்றார்கள்.

சட்டம் பொதுவானது என சிங்கள பௌத்த பேரினவாதிகளும் கூறுகின்றார்கள். ஆனால் தொல்பொருள் திணைக்களம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்குத் துணை போகின்றது. அடிப்படையில் மகாஜன பௌத்தம் என்பது தமிழர்களின் முன்னைய வழிபாட்டு முறைதான். அதனை அரசியல் காரணங்களுக்காக சிங்களபௌத்த பேரினவாதம் உரிமை கோருகின்றது. ர

``ஒருசிலர் தமக்கு பிராந்தியம் மற்றும் இராச்சியம் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். தொல்பொருள்  சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். தொல்பொருள்  திணைக்களம் நாட்டில் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆனந்த விஜேபால” சட்டம் பொதுவானது எனவும் இவர் கூறுகின்றார்.

 

``இன்னொரு முறை இனவாதத்தை உக்கிரப்படுத்த இவர்கள் வாய்ப்புகளைத் தேடுவதால் அவ்வாறான நிலையை நோக்கிச் செல்லாமல் ஒரு சமனிலையைப் பேணுவது அவசியமாகிறது எனவும், அரசின் தலையீடு இல்லாமல் நீதியின் கையில் ஒப்படைத்து வருகிறோம். இதனால் இனவாத சக்திகள் அரசியலாக்க முடியாத நிலை உருவாகும் என்றார்.”- ரில்வின் சில்வா (விசுலிங்கம்) அரசு பற்றிய மோசடியான கருத்தை ஆதரிக்கின்றார்கள்.

 


காணி உரிமை

காணி உரிமை என்பது தேசம் என்ற அடிப்படையில் அவசியமானதொன்றாகும். நிலம் என்பது உற்பத்திச் சாதனம். உணவு உற்பத்திக்கு அவசியமான ஒரு சாதனம் நிலம்.  குறிப்பாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 1949 இருந்து நில அபகரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1900களில் திருகோணமலையில் 4விகிதம் இருந்தவர்கள். இன்று எத்தனை விகிதம் என்று பார்த்தால் வரலாற்றுப் போக்கில் தமிழர்கள் இழந்த நிலத்தை அறிய முடியும்.

புத்த விகாரை வைத்த நிலம் என்பது இரண்டு சிங்கள சக்திக்கு இடையில் நடைபெற்ற முரண்பாடு என்று மலினப்படுத்திக் கொண்டு போகலாம். அதனைத் தான் சில சக்திகள் செய்கின்றன. தற்போதைய நிலையை வைத்துக் கொண்டு காணியுரிமை பற்றியும்,  பௌத்தஆக்கிரமிப்புப் பற்றியும் பேசிவிட முடியாது.

லெனின் இருந்திருந்தால் அவர் இரண்டு அரசு பற்றியும், இரண்டு குடியரசுபற்றியும் பேசியிருப்பார். 

 

 

எனது நூல் ஜேவிபி ஒரு மார்க்சியக் கட்சியா?

 

 

இனவழிப்பும் அடையாளமாற்றமும் (மாசி 2021) 

Monday, 24 November 2025

இன்றைய அரசியல் போக்கு 8

 

 

 

இன்றைய அரசியல் போக்கு 8

அரசியல் தீர்வு பற்றி தன்முனைப்புடன் தமிழரசுக் கட்சி அனுரவை சந்தித்துள்ளார்கள். இந்தச் சந்திப்பு யாரும் எதிர்பாராவிதமாக நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் கவனத்தில் கொள்ளப் படவேண்டும். ஏக்கராட்சிய வரைவைத் தான் தமிழ் தரப்பு முன்வைத்துள்ளது. அவர்களே பழைய வரைவை மறுக்கின்றார்கள். ஆனால் நாமாகவே சென்று `` அடிமையிலும் சிறந்த அடிமை நான் தான்” என சரணடைந்துள்ளார்கள்.

``அரசு என்ற விடயத்திற்குப் அப்பால் முன்வைக்கப்படுபவை

ஏமாற்றுவித்தை என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.”

தேசிய இனப்பிரச்சனை சம்பந்தமான நிலைப்பாட்டை ரில்வின் சில்வா பேட்டி ஒன்றில் தெளிவாக முன்வைத்துள்ளார். அந்த நிலைப்பாட்டை மீறி எதுவும் நடந்துவிடாது என்பதே யதார்த்தம். ரில்வின் சில்வாவை சந்திக்கும் சக்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களை சந்திக்கின்ற போது அரசாங்க பிரதிநிதிகளை மாத்திரம் சந்தித்து விட்டுப்போவது தான் மரபாகும். இங்கு அரசாங்கத்தை நடத்துவம் அதன் பின்னால் ஒரு கட்சி உள்ளதும் காரணமாகும். கட்சியின் கொள்கை வழி என்பது அந்தக் கட்சியின் போராயத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே தான் ஆட்சியும் நடைபெற முடியும். கடந்த பேராயத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அப்பால் அவசர முடிவு எடுக்க முடியும். அவ்வாறு எடுத்தாலும் அடுத்த பேராயத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இது அரசியல் கட்சியின் அமைப்பு வடிவம் அவ்வாறு தான் அமைந்திருக்கின்றது.

*     திடீர் ஆதரவாளர்கள் இதனை விளங்கிக் கொள்வதில்லை. ஏதோ தமது கருத்துகளை உள்வாங்கிவிடுவார்கள். அவ்வாறு உள்வாங்கி மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகின்றார்கள்.

*     அடுத்த இடதுசாரியம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன என்று வெளிப்படையாக கருத்தாளர்கள் முன்வைக்க வேண்டும். ஏனெனில் மார்க்சியப் பார்வையில் முன்வைக்கின்ற போது இவர்கள் முன்வைக்கும் அரசியலுக்கு எதிராகவே முன்வைக்கப்படுகின்றது.

மேதின உரையில் அனுர

1:எல்லா மனிதர்களும் சம உரிமைகளும், சமமான கண்ணியமும், சமமான உரிமைகளும் கொண்டவர்களாக பிறக்கிறார்கள்.

2:அனைவருக்கும் இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், சுதந்திரங்களும் எவ்வித பாகுபாடுமின்றி கிடைக்கப்பெற வேண்டும்.

3:ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கான உரிமை உண்டு.

இதனை கவனித்தால் சுயநிர்ணய உரிமையாவது கத்தரிக்கா ஆவது தான் என்றே பேசியுள்ளார்.

 

சீன நிலைப்பாடு

சீன நிலைப்பாடு என்பது அரசு அற்ற தேசங்களுடன் உறவு கொள்வதில்லை என்பதேயாகும். இதனால் தமிழர் தேசத்துடன் அரசியல் உறவை வைத்துக் கொள்ள மாட்டார்கள். இது மார்க்சிய விரோத நிலைப்பாடாகும். வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட நிலைப்பாடாகும். சீனா என்பது அரச முதலாளித்துவமே நடைமுறையில் உள்ளது. எனினும் தனிமனிதர்களின் மூலதனத்திற்கு சுதந்திரம் உள்ளது. இது லெனின் முன்வைக்கின்ற அரச முதலாளித்துவம் என்ற கோட்பாட்டிற்கு எதிர்நிலையானதாகும். இவர்கள் தமக்கு ஏற்றால் போல கொள்கையையும் மாற்றிக் கொள்கின்றார்கள். 2050 சோசலிசத்தை அடைவதாக கூறிக் கொள்கின்றார்கள். தனியார் மூலதனத்தை அனுமதிப்பது என்பது சோசலிசத்தை முன்னெடுக்க முடியும் என்று நம்புவது ஒன்று. ஆனால் மார்க்சியம் பேசுகின்ற சமூகக் கட்டம் என்பதில் இருந்து சீனம் மாறிவிட்டது.

இவ்வாறான நிலைப்பாடு என்பது அரசு அற்ற தேசங்களுக்கு பெரும் பாதிப்பேயாகும். மாவோ காலத்தில் நிலைப்பாடு என்பது சர்வதேசியம் தழுவியதாகும். அந்த போக்கு மாற்றம் அடைந்துவிட்டது. அமைதிவழி, சமத்துவம் சமாதானம் என்ற முதலாளித்துவக் கருத்துக் மாற்றான நிலைப்பாடு மாவோ எடுத்திருந்தார்.

``ஆசிய, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலை இயக்கம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை ஏற்கனவே சாதித்திருக்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஏகாதிபத்தியம், காலனியம் மற்றும் அவர்களின் அடிவருடிகளை எதிர்த்துப் போராடும் கடமையை ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் முழுமையாக நிறைவேற்றி விட்டார்கள் என்று யாரேனும் கூறமுடியுமா? இல்லை என்பதே எமது பதில் ஆகும். இந்தப் போராட்டக் கடமை முழுமையாக நிறைவேற இன்னும் நீண்டகாலம் பிடிக்கும்.

ஆனால் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தற்கால உலகில் இருந்து காலனியம் மறைந்துவிட்டது அல்லது மறைந்து கொண்டிருக்கிறது என்ற கருத்தை அடிக்கடி பரப்பி வருகின்றனர். போர்ச்சுகல், அங்கோலா, மொசம்பிக் ஆகிய ஆபிரிக்கப் பகுதிகளில் மட்டுமே காலனியத்தின் மிச்சச் சொச்சங்கள் இருப்பதாகவும காலனிய ஆட்சி ஒழிப்பு அதன் இறுதிக் கட்டத்தை ஏற்கனவே அடைந்து விட்டிருப்பதாகவும் அவர்கள் வலியறுத்தி வருகின்றனர். உண்மை என்ன? ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் நிலையை மையைப் பாருங்கள். அங்கே பெருவார்யான நாடுகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துள்ளன. ஆனால், அவற்றில் பலநாடுகள், ஏகாதிபத்திய மற்றும் காலனியக் கட்டுப்பாட்டையோ, அடிமைத்தனத்தையோ முழுமையாகத் தூக்கி எறியவில்லை. அந்நாடுகள், ஏகாதிபத்தியக் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்பின் இலக்காகவும், பழைய காலனியவாதிகளுக்கும் புதிய காலனியவாதிகளுக்கும் நடக்கும் போட்டியின் நிலைக்களமாகவும் நீடிக்கின்றன. சில நாடுகளில் பழைய காலனியவாதிகளே புதிய காலனியவாதிகளாக மாறி, தங்களது பயிற்சி பெற்ற ஏஜெண்டுகள் மூலம் தங்கள் காலன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளனர். வேறு சில நாடுகளில் ஓநாய் முன்வாசல் வழியாக வெள்யேற. வஞ்சகப்புலி கொல்லைப்புற வழியாக நுழைந்திருக்கிறது. ஆம், பழைய கானியத்துக்குப் பதிலாகப் புதிய அதிக வலுவுள்ள, அதிக அபாயகரமான அமெரிக்கக் காலனியம் நுழைந்திருக்கிறது. ஆ. ஆசிய, ஆபிரிக்க மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் புதிய காலனியத்தின் கோரப்பிடியில் சிக்கித் துன்புறுகின்றனர். (மாபெரும் விவாதம் ப464)

சோவியத் புரட்சியின் பின்னரும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும் கொலனித்துவ நாடுகள் பல விடுதலை அடைந்தது. ஆனாலும் அந்த விடுதலை பெற்ற நாடுகள் பழைய ஆதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டினுள் தான் இருந்து வந்துள்ளது.

சீன அரச முதலாளித்துவம் ஆயுத அச்சுறுத்தல் அன்றி பொருளாதார ரீதியாக மற்றைய நாடுகளை தன்வசப்படுத்தி வருகின்றது. இந்தப் போக்கு நம்மைகளைக் கொடுக்கின்ற போது போதிலும் நாடுகளின், தேசங்களின் இறைமைமீது தாக்குத் தொடுக்கின்றது.

தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்னெரு சிக்கல் உள்ளது. அது இந்திய மார்க்சியக் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

JVPயின் மேதின விழாவில் CPM மத்திய குழு உறுப்பினர் பங்குகொண்டுள்ளார். இதே போல CPM இன் பேராயத்தில் விருந்தினராக JVPயினர் பங்குபற்றியுள்ளார்கள். இந்த உளவு என்பது ஒடுக்கப்படும் ஈழ தேசத்திற்கு பாதகமான போக்காகும்.

 இடதுசாரிகளும் சுயநிர்ணயமும்

இந்தப் பகுதி திரும்பத்திரும்ப ஒரே மாதிரித் தான் எழுத வேண்டும்.  இந்தப் பிரிவினரை திட்டித் தீர்க்க வேண்டும் அல்லது மேற்கோள்களை முன்வைத்தி எழுதிவிட வேண்டும். ஏன் இந்த நிலை என்றால் இவர்கள் இடதுசாரியம் என்று எதனையோ முன்னர் கற்றுவிட்டார்கள். அதுவே இடதுசாரியம் என ஒப்பித்துக் கொள்கின்றார்கள். குறிப்பாக தமிழகத்தில் சுயநிர்ணயம் பற்றிய உரையாடல் முழுமை அற்ற தன்மையில் தான் இருக்கின்றது. தோழர் ஜீவாவின் குறிப்புகளை இப்பொதுதான் தேடி ஆதாரமாக வைக்கின்றார்கள். தேச அரசு பற்றி லெனின், ஸ்ராலின் நிறையவே எழுதியுள்ளார்கள். சுயநிர்ணயம் பற்றி தெளிந்த பார்வையை முன்வைத்தது மார்க்சியம் மட்டுமே. இது பற்றி ``தேசிய இனப்பிரச்சனையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் என்ற லெனின் நூலைப் பற்றிய விளக்கவுரை உள்ளது.

 சீனத்தின் நிலைப்பாடு, CPM இன் நிலைப்பாடு, முன்னைய தமிழ் இடதுசாரித் தரப்பின் சந்தர்ப்பவாத அரசியல் இவை அனைத்தும் ஒடுக்கப்படும் தேசத்திற்கு பின்னடைவே. இதனை போக்குவது என்பது உரையாடல் நடத்தப்பட வேண்டும். அந்த உரையாடல் நடத்தும் வகையில் எவரும் இன்றில்லை என்பதே துயராகும்.

நாட்டரசு எல்லையை காப்பாற்றிவிட முடியும் என்று நம்புகின்ற போக்கும் உள்ளது. இதனால் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் உரிமை என்பது தேவை அற்றது என்ற போக்கு உள்ளது. இன்றைய நிலையானது அனைத்து அரச நிறுவனங்களும் JVPயினர் மோதல் நிலைக்கு போகாத வரையில் கட்டுப்பாட்டினுள் தான் இருக்கின்றது. அரச நிறுவனக் கட்டமைப்பை முழுமையாக தமக்கு ஏற்ப நடத்திவிட முடியாது என்பது யதார்த்தம். தமிழர் தேசம் என்ற நிலைப்பாட்டில் அனைத்து கட்டமைப்பு ஒத்துழைப்புக் கொடுக்கும்.

சிங்கள தேசம் முன்வைக்கும் இனமதகுலமற்ற சமூகத்தைப் படைப்போம் என்பதே சிங்கள் பௌத்த பேரினவாதத்திற்கு உட்பட்ட பிரசைகளுக்கான உரிமை மட்டுமே.

இந்த நிலையில் சீனத்தின் நிலைப்பாடு, CPM போன்றவர்களுக்கு தமிழர்கள் பிரச்சனையை முன் வைத்து செயற்பட வேண்டும். CPMஇனர் ஈழத்தின் தலைவிதியான சுயநிர்ணயத்தை தீர்மானிக்க முடியாது. இன்னொரு நாட்டில் உள்ள தேசத்தின் சுயநிர்ணயம் பற்றி முடிவெடுக்கும் உரிமை இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை மட்டுமே கொடுக்க முடியும். மாறாக தீர்வை முன்வைக்கும் உரிமை இல்லை. அவர்கள் இந்திய நாட்டரசின் நலனின் இருந்து தமிழர் தேசத்தின் உரிமையை பலியிட முடியாது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியுள்ளது. இதே நிலைதான் சீனத்திற்கும் அறிவுறுத்த வேண்டியுள்ளது. அவர்களின் கொள்கை தமது நாட்டிற்கு மட்டுமானது. சீனத்தின் வெளியுறவுக் கொள்கையால் பாதிக்கப்படுவதை அறிவுறுத்துவம் எமது கடமை. அதை தமிழ் தரப்பு செய்தார்களா எனத் தெரியவில்லை. அவர்களின் கொள்கையை மாற்ற முடியாது என்று நாம் கடந்து சென்றிட முடியாது.

சீன நாட்டிற்கும் எமது நிலையை அறிவுறுத்த வேண்டும். அது எவ்வளவு பலன் தரும் என்பதற்குப் பதிலாக சீனவின் நிலையில் தமிழர் பகுதி திருப்தி கொள்ளவில்லை என்பதை அறியப்படுத்த வேண்டும். அமைதியாக இருப்பது என்பது தமிழ்-சிங்கள போலி இடதுசாரிகளின் கருத்தே சீனத் தரப்பிற்கு தெரியப்படுத்தப்படும். சீனா தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்ளும். சீனாவும் புதிய உலக ஆதிக்க சக்தி தான்.

சீனா தமிழர் பகுதியைப் பற்றிய பார்வை தொடர்ச்சியாக உள்வாங்கியிருக்கின்றது. சாட்டியில் வணிகத் தடயங்கள் பற்றிய ஆய்வு செய்ய சீன தூதரகம் முன்முயற்சி எடுத்தார்கள். 1956 மார்கழி மாதம் சீனப் பிரதமராக இருந்து சூ என்லாய் மாமல்லபுரம்- சென்னைக்கு வந்திருந்தார். இதேபோல October 11, 2019 President Xi Jinping வந்திருந்தார். இந்த இரண்டு தலைவர்களும் குறிப்பிட்ட இடத்தினை தெரிவு செய்தற்கு நிச்சயமாக அரசியல் காரணங்கள் இருக்க வேண்டும். இன்று அனைத்தையும் இந்தியம் என்ற சட்டகத்தினுள் அடக்கப்படுகின்றது. இந்தியச் சட்டகத்திற்கு அப்பால் தமிழிர்களுக்கு (இனப்பெருமை என்று அலம்பாதீர்கள்) உண்டு. உலகப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களும் தமது பங்கைச் செலுத்தித் தான் உள்ளார்கள். வரலாற்று ரீதியாக பொருளாதார, பண்பாட்டுத் தலைநகராக மாமல்லபுரம் இருந்து வந்துள்ளது.

இந்த சமூக அமைப்பு முன்னர் மன்னர் கூப்பிடுகின்ற போது வெட்டரிவாளையும் வேல்கம்பையும் தூக்கிச் சென்ற சமூகம் இன்று சமூகத்திற்குள்ளேயே வெட்டரிவாளையும், வேல்கம்பையும் ஒருவருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள். இந்த கீழ் நிலை என்பது தற்செயலானது அல்ல. அதன் பின்னால் நீண்ட நெடிய வரலாறு உள்ளது.

பயன்படுத்திக் கொள்ளும்

உலகில் எந்த ஆதிக்க சக்தியும் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்ளும். ஏன் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பயன்படுத்தும். இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுச் சக்திகள் தலைமைப் பாத்திரத்தில் இல்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்து போராட்ட வடிவத்தை கட்டமைப்பதற்கு பொதுவுடமைக் கட்சி தலைமை தாங்கவில்லை. ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொள்ளும் என்றால் யார் துணை கொண்டு என்பதும் இன்னொரு கேள்வியாகும். உள்ளூர் முகவர்கள் அமைவழியில் செயற்பட உதவுவார்கள். இந்தப் பிரிவு தூதரகத்துடனும், வோசிங்டனுக்கும் உடன் தொடர்பு கொள்வார்கள். அவர்களின் ஆலோசனை பெறுவார்கள். இந்தப் முகவர்கள் தனது சொந்த மக்களின் நலனுக்காக செயற்படமாட்டார்கள். இந்த விதேசிய வர்க்கம் மற்றவர்கள் பயன்படுத்த துணைபோவார்கள். அடிமையிலும் சிறந்த அடிமை என நிறுவதில் முதன்மையாக நிற்பார்கள்.

அரசியல் உரையாடல் என்பது ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்படுவதாகும். கதையாடல் எவ்வாறு நகர்த்தப்பட வேண்டும் என்று வழிகாட்டல் இருக்கின்றன.  ஏகாதிபத்திய அரசியல் நலன் கொண்ட கதையாடல் நகர்த்தும் போக்கை நாம் அறிந்திருப்போம்.  ஈராக்கினை தாக்குதல் நடத்தும் போது சித்தரிக்கப்பட்ட விதத்தை வரலாற்றில் அறிய முடியும். சதாமை மேற்கின் நலனில் இருந்து செயற்பட்ட போது அவர் புனிதராக இருந்தார். பின்னர் எதிர் நிலை எடுத்த போது சர்வாதிகாரி, அணுவாயுதம் (weapon of mass destruction) மனிதகுலத்திற்கு எதிரான ஆயுதங்களை வைத்திருந்தார் என கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அதனை அனைத்து ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றார்கள். இன்று வெனிசுவேலா மீதான தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவே போதைப் பொருள் கடத்தும் பிரதான நாடாக சித்தரிக்கப்படுகின்றது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

((கரீபியன் தீவுகள் அதை அண்டிய பிரதேசத்தில் விமானம் தாங்கி கப்பல்கள் அங்கு நகர்த்தப்பட்டுள்ளது. இதுவரையில் 60 கடல்தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் போதைப் பொருள் கடத்தல் காரர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளார்கள்.))

ஏகாதிபத்தியத்தின் நலனை கருத்துரையாக கொண்டு செல்வதற்கு உழைப்பவர்கள் உள்ளார்கள். ஈராக், இரான், லிபியா, ஈழம் போல சந்தைக்காக ஆயுதத்தை பயன்படுத்தும்.

ஏகாதிபத்தியங்கள் ஆயுதரீதியாகவும், அமைதி வழியிலும் தமக்குத் தேவையான சந்தையை உருவாக்கிக் கொள்ளும். இந்த வகையில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் உள்ள முரண்பாட்டை ஒவ்வொரும் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

இன்றைய உலக ஓட்டம் அமெரிக்க தவிர்த்து அரசியல் செய்ய முடியும் என்று எண்ணும் போக்கு வளர்ந்து வருகின்றது. இது சோவியத் காலத்தினைப் போல அல்ல.  சோவியத் முகாம் இருக்கின்ற போது ஒவ்வொரு நாட்டிலும் பொதுவுடமைக் கட்சிகள் இருந்தன. அந்தக் கட்சிகள் நேரடி அகிலம் இல்லாத வேளையிலும் ஒருமித்த அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க முடிந்தது. இன்று அவ்வாறு இல்லை.

நோர்வேயில் முன்னர் தொழிலாளி கட்சி (மாலெ) அதிலிருந்தவர்கள் வெனிசுவேலா விடயத்தில் சுயநிர்ணய உரிமையை விட மனிதவுரிமையே முதன்மையானது என்று படுபிற்போக்கான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். சுயநிர்ணயம் என்ற விடயத்தில் லெனினிய வழிகாட்டலை எவரும் பின்பற்றுவதில்லை.  இந்த நிலையில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இன்றைய நிலையில் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?

சிங்கள பௌத்த சமூக தேசிய வெறியர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்பதே அயோக்கியத் தனமாக வாதமாகும்.  இன்றைய ஆட்சியாளர்களும் இனவழிப்பின் பங்களாளிகள் தான். (அரசு பற்றி மார்க்சியப் புரிதலின்படி)

எம்மை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுப்பது என்றால் மக்கள் திரள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அது தாயகம், புலம்பெயர் நாடுகள் என்ற அளவில் கட்டமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரளவு நேசசக்திகளைக் கொண்ட கட்டமைப்பு இருக்கின்றது.

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஓடுவதை விடுத்து ஒடுக்கப்படும் தேசங்கள், அரசு அற்ற தேசங்கள், பழங்குடிமக்கள் அவர்களை நோக்கி எமது செயற்பாட்டை நகர்த்த வேண்டும். உலகில் இருக்கின்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளை நோக்கி ஐக்கியப்பட வேண்டும்.