தோழர் நா. சண்முகதாசன் 03.07.1921
தோழர் சண்முகதாசனும் பொதுவுடமைக்கட்சியில் பங்கு பற்றிய எழுத குறிப்பெடுத்து சிலமாதங்கள் ஆகிவிட்டன. தனிப்பட்ட காரணத்தால் இதனை விரைவாக எழுதி முடித்திட முடியவில்லை. ஆனால் எடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்து பல விடயங்களை வாசகர்கள் உள்வாங்கிட முடியும். எனவே திருத்தால் அரைகுறையாக கிடப்பில் கிடப்பதை விட வாசிப்பதன் ஊடாகவும், விமர்சனம், சுயவிமர்சனத்தின் ஊடாக இதனை திருத்தி முழுமையான ஆக்கமாக கொண்டுவர முடியும். எனவே குறையாகவே பதிவிடுகிறேன்.
03.07.1921- 03.07.2021
அறிமுகவுரை
தோழர் சண்முகதாசன் இலங்கை வரலாற்றில் தவிர்க்க முடியாத நபர். அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரம், அவரின் அரசியல் தவறுகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால் வைக்கப்படும் விமர்சனம் அவ்வாறு அமைந்திருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.
தோழர் சண்முகதாசன் பற்றிய விமர்சனங்கள் சொந்தக் கட்சியில் இருந்தவர்களிடையே இருந்த வந்தது. அவர்கள் இன்று தனிக்கட்சியாகவே இருந்து வருகின்றார்கள். கட்சியில் இருந்து பிரிந்த போது கொடுத்த காரணங்களும், அவர்களின் நடைமுறையும் மாறுபாடாக இருந்துள்ளதை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும்.
1. 1. சுயநிர்ணயம் 2. மூன்று உலகக் கோட்பாடு 3 தன்முனைப்பு- இடது தீவிரவாதம் 4. புத்தகவாதம் இன்னும் இதர பல-
தோழர் சண்னின் செயற்பாடுகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பது மார்க்சிய வரலாற்றுப் போக்கில் இருந்து மதிப்பிட வேண்டும். தோழர் சண்னின் கோட்பாட்டுத் தவறுகள் என்ன என்பதும் மார்க்சியத்தை மறுத்து திரித்தால் (திரிபுவாதம்) அதனை மறுத்து நிறுவமுடியும். எனவே முதலாளித்துவப் புரட்சி முழுமையடையாத காலகட்டத்தில் தொடர்ந்த விமர்சனங்கள், மதிப்பீடு வைக்கப்படுகின்றன. எந்த விமர்சனமும் முன்முடிவுடனோ, அகநிலையாகவோ, அனுபவவாதமாகவோ அமைய முடியாது.
ஒரு கட்சியின் அரசியல் மூன்று விடயங்கள் அவசியமானது. ”நமது அரசியல் கிளர்ச்சியின் தன்மையும் முதன்மையான உள்ளடக்கமும், நமது அமைப்புத்துறைப் பணிகள் ஒரே நேரத்தில் பல்வேறு புறங்களிலிருந்து ஒரு போராட்ட ஊக்கமுள்ள அனைத்து ருசிய அமைப்பைக் கட்டுவதற்கான திட்டம் இருக்க வேண்டியது. (ப8எ.செ.வே) இந்த அடிப்படையில் அரசியல் கிளர்ச்சியின் தன்மையை அடிப்படையாகக் கொண்டே விமர்சனங்கள் அமையவேண்டும். இவ்வாறான எந்த செயல்வடிவமும் தோழர் சண்முகதாசனிற்குப் பின்னால் இருந்ததில்லை.
இது பின்கொலனித்துவத்தின் (1948) போக்கில் எழுகின்ற முரண்பாட்டிற்கு முன்னரும் முரண்பாட்டிற்கான வேர்கள் உண்டு. இதே போல பின்கொலனித்துவ ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் எவ்வகையான முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. இன்றைய காலத்திற்காக கோட்பாடு என்பது கடந்த காலத் போக்குகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். பின்கொலனித்துவ காலத்தில் ஆட்சியதிகாரம் பிரித்தானியரிடம் இருந்தது. இந்தக் காலத்தில் சிங்கள, இந்திய, முஸ்லீம், தமிழ் பூர்சுவா வர்க்கங்கள் வர்த்தக நலனுக்காக மோதிக் கொண்டிருந்த வரலாற்றுப் பின்னணியில் ஆட்சியதிகாரம் சிங்கள தேசிய (சிங்கள பௌத்த பேரினவாத) பண்பு வளர்ச்சி என்பது வேகமாக வளர்ந்து அரசு மட்டத்தில் இறுக்கமாக நிறுவனமயப்படத் தொடங்கியிருந்து. ஆட்சியதிகாரம், மலையமக்களுக்கான வாக்குரிமையைப் பறித்தது. 1949 இல் கல்லோயாத் திட்டத்தின் ஊடாக சிங்களக் குடியேற்றம், 1956 தனிச் சிங்களச் சட்டம், 1961 மலையக மக்களை நாடுகடத்தியது.
இதற்கு முன்னர் 1915 வர்த்தக நலனுக்கான மோதலில் தமிழ் தரகு வர்க்கம் சந்தையை பங்குபோட சிங்கள தரகு வர்க்கத்திற்கு துணை நின்றனர். மலையாளின் மீதான எதிர்ப்புணர்வு (1930-1940) இதனால் சிறுபான்மை தேசிய இனம் என்ற நிலையில் இல்லாது அழிக்கப்பட்டனர். மலையத் தமிழர்களின் மீதான தாக்குதல் என்பது தேசமாக வளரக் கூடிய மலைய தேசிய இனத்தை சிறுபான்மை தேசிய இனமாக்கினர். இது பின்கொலனித்துவ காலத்தில் அரசியல் அதிகாரத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டது.
1958, 1961, 1972, 1977, 1983 என்று அரசியல் அதிகாரத்தினை மற்றைய தேசிய இனத்தின் மீது தொடுக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் மார்க்சிய இயக்கங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதன் ஊடாகவே இன்றையக் காலத்திற்கான போட்பாட்டை வந்தடைய முடியும்.
இந்தக் காலத்தில் இடதுசாரிகள் எனப்படுபவர்களின் செயற்திட்டம், நடைமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை ஆராய வேண்டும். இங்கு தான் இலங்கைப் பொதுவுடமைக் கட்சிக்காய் 46 வருடங்கள் உழைத்த தோழர் சண்முகதாசன் பற்றிய மதிப்பீடு செய்வதும் அவரின் அரசியல் தவறுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதும் அவசியமாகும்.
இவர் தோழர் மாவோவின் காலத்தில் தோழர் அன்வர் கொனேக்கர் (அல்பானியா) போன்று முக்கிய பொதுவுடமை இயக்கத் தலைவராக இருந்துள்ளார். இவரை விமர்சிப்பவர்கள் இவரின் பிடிவாத குணத்தை வைத்தே விமர்சனம் செய்வார்கள். எனவே விமர்சனத்தில் எதனை தவிர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் எடுப்போம்.
“நாம் நம்மை 'மானசீகமாகச் செலுத்திக் கொண்டால்'' நம்முடைய இருப்பு கற்பனையானதாகவே இருக்கும்; ஆனால் மனிதனுக்கு முன்னால் பூமி இருந்தது மெய்யானதே. உதாரணமாக, பூமி பளபளப்பாக எரிந்து கொண்டிருந்த நிலையில் மனிதன் நடைமுறையில் ஒரு பார்வையாளனாக இருக்க முடியாது; அந்தக் காலத்தில் அவன் இருந்ததாகக் ''கற்பனை செய்வது'' இருட்டுவாதமாகும்; நான் நரகத்துக்குள் ஒரு பார்வையாளனாக என்னை ' 'மானசீகமாகச் செலுத்தினால்'', நரகத்தைப் பார்க்க முடியும் என்ற வாதத்தைக் கொண்டு நரகம் இருக்கிறது என்று நிரூபிக்க முயற்சி செய்வதைப் போல இதுவும் துல்லியமாக அதே மாதிரியானதே.
அனுபவவாத விமர்சனத்தையும் இயற்கை விஞ்ஞானத்தையும் 'சமரசப்படுத்துவது'' என்றால் இயற்கை விஞ்ஞானம் எதைச் சாத்தியமில்லை என்று ஒதுக்குகிறதோ, அதை ''மானசீகமாகச் செலுத்துவதற்கு அவெனாரியுஸ் பெருந்தன்மையோடு ஒத்துக் கொள்கிறார் என்பதாகவே இருக்கிறது. எவ்விதமான உயிரினமும் எவ்விதமான புலனுணர்ச்சியும் அல்லது எவ்விதமான ''மத்திய உறுப்பும்'' உயிரோடு வசிக்க முடியாத காலத்தில் பூமி இருந்தது என்பதைக் கல்வியறிவுடைய அல்லது சிந்தனைத் தெளிவுடைய எவருமே சந்தேகிப்பதில்லை. ஆகவே பூமி புலனுணர்ச்சிகளின் தொகுதி ('' பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள்'') அல்லது ''மனோதத்துவ மற்றும் இயற்கைக்குரிய முற்றொருமை கொண்ட மூலக்கூறுகளின் தொகுதி அல்லது "ஒரு எதிர் நிலை உறுப்பு - அதன் மத்திய உறுப்பு ஒருபோதும் பூஜ்யத் துக்குச் சமமாக இருக்காது''- என்ற மாஹ் மற்றும் அவெனாரியுசின் மொத்தத் தத்துவமுமே தத்துவஞான இருட்டுவாதமாகும்; அது அகநிலையான கருத்து முதல்வாதத்தை அறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு நீட்டிச் செல்வதாகும். ”
(பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)
அரசியல் நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரப் போக்கை வைத்தே வரலாற்று ஆய்விற்கு உட்பட வேண்டும். ஆனால் சமூக அவசியங்களை மறுத்து விட்டு வரலாற்றுப் போக்கை அணுகிட முடியாது.
ஒரு
கதையில் உள்ள கதைமாந்தர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்த நபரின் குடும்பம்,
சமூகம், வர்க்கப்புலம் என்பது பொருத்தப்படாக அமைதல் வேண்டும். அது எமக்கு அச்சமூட்டுபவையாகவும், பண்பாட்டு பிறழ்வாக இருக்கும். ஒரு கதைமாந்தனின் பாத்திரப் படைப்பு அவ்வாறு
தான் இருக்க முடியும்.கதைமாந்தர்களை வைத்து சமூகத்தை பொதுமைப்படுத்திட முடியுமா?
தோழர் ‘‘கே. டானியலின் பஞ்சமர் 1974 மட்டில் வெளிவந்த போது பேராதனையில் நடந்த விமர்சனக் கூட்டமொன்றில் டானியல் இந்த நாவல் மார்க்கிச லெனினிசக் கண்ணோட்டத்தில் அமைந்தது கூறிய போது, டானியலின் அணுகுமுறையில் சாதி முரண்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ள விதம் மார்சியத்துக்கு உடன்பாடற்றது என்று அவர் முன்னிலையிலேயே சொன்னேன். (ப12 விமர்சனங்கள், சி. சிவசேகரம்) சி. சிவசேகரம் வெள்ளாளிய பெண்களை தோழர் டானியல் இழிவு படுத்தியதாக விமர்சனம் வைத்துள்ளார். இதேபோல மாதொருபாகன் எழுதிய பெருமாள் முருகன் மீதும் இவ்வாறான விமர்சனம் முன்வைக்கப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதே போல வசுமித்திர அண்மையில் விவசாயிகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை எனக் கூறிய போது எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. குறிப்பாக ஒரு சமூகச் சூழலினை வைத்து எதனையும் பொதுமைப்படுத்தி விட முடியாது. தோழர் மார்க்சிம் கோர்க்கியின் நாவலில் வரும் பாவலின் தாய் போல உலகில் உள்ள தாய்கள் எல்லாம் அவ்வாறுதான் உள்ளார்களா? அவ்வாறு இருக்கவும் முடியாது.
இந்தப் பிரச்சனையை தேவர் மகன் திரைப்படத்திலும் எதிர்க் கொள்ளப்பட்டது. இனக்குழும- அரைநிலபிரபுத்துவ சமூக எச்சத்தை கொண்ட சமூகத்தை உள்ளதை உள்ளபடி முன்னிறுத்துவது இனவரைவியலுக்கானது. சமூக முரண்பாடுகளை வெட்டரிவாள், வேல்கம்பி, குலப்பெருமை கொண்டு மற்றவர்களை தாக்குவது தான் அந்த சமூக வாழ்வியல். ஒரு சமூக வாழ்வியலைப் பற்றிய பல ஆய்வுகளில் பதியப்பட்டுள்ளது. சமூக ஆய்வுகள் கலாசாலையில் இருப்பதால் சாதாரண மக்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. திரைப்படம் என்ற பெரும் ஊடகத்தின் ஊடாக சமூகத்திற்கு இலகுவாக செல்கின்றது. சமூகத்தின் பொதுப்புத்தியைக் கொண்டு சமூகத்தை ஆராய முடியாது. இங்கு ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்‘‘ என்பது விஞ்ஞான மாக முடியாது. இது கணக்கியலுக்கு சரியாக வரும் மாறாக சமூகத்தை கணக்குச் சூத்திரத்தை வைத்து ஆய்வு செய்ய முடியாது. கதைமாந்தரை வைத்து முழுச் சமூகத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு தான் என்று பொதுமைப்படுத்திவிட முடியாது. இது இனவரைவியலுக்கும் பொதுப்புத்திக்குமான இடைவெளியாகும்.
இங்கு புறநிலையை முன்னிறுத்தி மொத்தத்துவமாக அணுகிடும் முறையே மார்க்சியம் முன்னிறுத்துகின்றது. இயற்கை, பொருளாதார, வர்க்க முரண்பாடுகளை ஒன்றுடன் பிணைத்து ஆராய வழிகாட்டுகின்றது. ”எந்த” வகையான முரண்பாடானாலும் அதன் குறித்த தன்மையைப் (தனிஇயல்பு - particurlarity) பற்றி ஆராயும் பொழுது அது பருப்பொருளின் இயக்க வடிவம் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு, அதன் வளர்ச்சிப் போக்குகள் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு, ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கிலுமுள்ள முரண்பாட்டின் இரு கூறுகள், வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலுள்ள முரண்பாடு, ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முரண்பாட்டின் இரு கூறுகள் - எனப் பல்வேறு வகையானதாக இருக்கலாம். எந்த வகையான முரண்பாட்டினுடைய தனி இயல்ப்பைப் பற்றி ஆராயும் போதும் இம்முரண்பாடுகள் அனைத்தின் சிறப்பு இயல்புகளைப் பற்றி ஆராயும் போதும். நாம் மனதிற் தோன்றுகிறபடி நடக்கும் அகநிலைப் போக்குடையவர்களாவும் தன்னிச்சைப் போக்குடையவர்களாகவும் இருக்கக் கூடாது. அவற்றை நாம் பருண்மையாக ஆராய்ந்தறிய வேண்டும் பருண்மையான பகுப்பாய்வு இன்றி, எந்தவொரு முரண்பாட்டின் குறிப்பிட்ட தனிஇயல்பு பற்றியும் நாம் அறிந்து கொள்ளமுடியாது. லெனினின் சொற்களை எப்போதும் நாம்நினைவில் கொள்ளுதல் வேண்டும். அவை பருண்மையான நிலைமைகளைப் பருண்மையான முறையில் பகுந்தாய்வு செய்ய வேண்டும் என்பனவாகும். (மாவோ மேற்கோள்கள்)
முற்கருதுகோள் – (Thesis முற்கோள் (அடிப்படைக் கருத்து- எதிர்க் கருதுகோள் – anti thesis எதிர் கோள் ஒன்றிணைவு – புதிய கருதுகோள் -synthesis- (இரண்டுக்கும் இடையேயான கருத்துக்கள். இவை இரண்டும் முட்டி மோதுகின்றது. ) இவ்வகை ஆய்வு முறை கலாசாலைக்கு பொருத்தமாக இருக்கும். ஆய்வுகள் வாழ்வியலில் நடந்த சம்பவங்களை செய்திகளாக எழுதிவிடுவது இல்லை. மாறாக அதற்கான காரண காரியங்களை முன்னிறுத்தி எழுதுவதேயாகும். “மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவை அறிந்து கொள்வது அவசியமானதாகும். பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது.
இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்தில் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது.‘‘ மேல் திறனாய்வில் உள்ள சிக்கலை கவனித்தோம். இனிவிடயத்திற்கு வருவோம்.
1. முன்னைய விமர்சன முறையும், விமர்சனங்களும்
http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000462.pdf சண்ணின் இந்த வரலாற்றுப் புத்தகத்தில் நிறையவே முரண்பாடு உண்டு.
இலங்கை வரலாற்று ஆய்வில் குழந்தைப் பருவத்தில் இருந்து ஆய்வு முடிவுகளைக் கொண்டு எழுதியுள்ளார் என்றே மதிப்பிட முடியும்.
http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000526.pdf இந்தப் புத்தகத்தில் 117 பக்கத்தில் மல்லிகை ஜீவாவின் மீதான விமர்சனத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இவ்வாறான விமர்சனத்தில் உடன்பாடு உண்டு. ஆனால் இன்று எவ்வாறு விமர்சனம் செய்வார்கள் என்பதே என்கேள்வி.
http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000526.pdf இந்தப்
புத்தகத்தில் 119 பக்கத்தில் வி.ஏ. கந்தசாமி ஈழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்ததால்
முன்னைய மார்க்சிய லெனினியவாதியாகின்றார். தமிழ் தேசியவாதத்தை செங்கொடியுடன்
சேர்ந்து நின்று பேசுவதை புரட்சிகரமானது
என நம்பினார்---- இதே புத்தகத்தில் 129 பக்கத்தில் இடதுசாரிகளை விரோதிகளாகப்
பார்த்தார்கள். கந்தசாமியின் விமர்சனம் எந்த அடிப்படையில் இருந்தது என்று இன்றாவது பேசுகின்றார்களா?
இந்திய ஆக்கிரமிப்புப் படை வந்த பின்னர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுகின்றார்கள். ஆனால் இவர்கள் சிறிமாவுடன் உள்ள உறவையும் சேர்த்து ஏன் எழுதவில்லை. சிறிமா பண்டார நாயக்க என்பவர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் உயிர் பற்றி கவலை கொண்டதாக அன்னாரின் துணைவியார் நினைவுக் குறிப்பில் எழுதுகின்றார். ( தயவு செய்து துணைவியாரை விவாதத்தினுள் நுழைக்க வேண்டாம். வயது முதிர்ந்த நிலையில் அமைதியாக இருக்க விடுவோம்) ஐக்கிய முன்னணி பற்றிய விடயத்தின் கீழ் வாதங்களை கவனிக்க முடியும்.
http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000241.pdf பக்கம் 19-அல்லது 34 இல் “சுட்ட தேசியமா சுடாத தேசியமா?”
சமூக வளர்ச்சிப் போக்கை உள்வாங்கியாத உரையை நிகழ்த்த முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு. இவர் தான் ஆசான் ஸ்ரானினின் தேசம் பற்றிய வரையறையை கேள்வி கேட்கின்றார்கள்.. மதம் ஒரு அடையாளமாக தேசத்திற்கு இருக்கும் என்றால் இன்றைய இந்துத்துவாவும் தேசியம், தேசம் என்று வாதிடுவார்களா?? தேசம் என்ற அடையாளம் அண்மைக் காலத்தினது. சரியாது. முதலாளித்துவ வளர்ச்சி என்பதை மறைத்து ஐரோப்பிய தேசிய அரசு என்ற கோட்பாடு உருவாகிற்று.‘‘ 35
தோழர் ஸ்ராலின் கூற்றை மறைக்கின்றார் பேராசிரியர் சிவசேகரம்.
தேசியவாதமும் தமிழர் விடுதலையும் என்ற புத்தகத்தில் பக்கம் 34 ‘‘வர்க்கப் போராட்டம் என்ற கோட்பாட்டிற்கு இனி இடமில்லை‘‘ தேசியப் போராட்டம் வர்க்கப் போராட்டத்திற்கு உட்பட்டதே (மாவோ). ஆனால் மேற்கட்ட பார்வை தேசிய விடுதலைத் தலைமையை முன்னெடுப்பவர்கள் கருதுவதாக எதிர்முகாம் என்ற போக்கில் எழுதப்படுகின்றது. உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றமே தேசியப்போராட்டம். ‘‘ தேசியவாதத்தை அழகுபடுத்தி தன்னளவிலேயே முற்போக்கான ஒன்று காட்ட முனைவோர் உள்ளனர்‘‘ 35)---( http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000241.pdf )
‘‘தேசம் என்ற அடையாளம் வரலாற்றில் மிகவும் அண்மைக் காலத்தினது, முதலாளியத்தின் வரவை‘‘ (35- 000241) என்பது சரியே எனினும் ---- தோழர் ஸ்ராலின் அதையே கூறுகின்றார். ஆனால் தொழிற்புரட்சியின் பின்னர் உருவான தேச, நாட்டு எல்லைகளைப் பற்றிய இயங்கியல் புரிதல் அற்றே அண்மைக் காலத்தையது என்று ஒரு கருத்தாக்கம் செய்யப்படுகின்றது.
‘‘ஈழத் தேசியம் பற்றிப் பேசுகிற போது, சங்கிலியன் காலத்துடன் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைக் காணும் பழக்கம் இன்னமும் இருக்கிறது. ----ஆயினும் தமிழர் என்ற அடையாளம், அண்மை வரை, ஒரு தேசிய அடையாளமாக இருக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய பல்வேறு சுய அடையாளங்கள் நெடுங்காலமாக இருந்து வந்தவை தான்‘‘ (35) மேலும் சென்று யாழ் வேளாள மேட்டுக்குடிகளின் நலன் சார்ந்த தால் தேசியத் தன்மை பெறவில்லை என்கின்றார்.
இரத்த வகையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு இனக்குழுமங்கள் இணைப்பிற்கு உள்ளாக்கப்பட்டே தேசிய இனம் உருவாகின்றது. சங்க இலக்கியம் பட்டினப்பாலையில் (191) ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்‘‘ வணிகத்தை குறிக்கின்றது. திருப்பரங்குன்ற கல்வெட்டில் ‘‘எருகாட்டூர் ஈழக்குடும்பிகன் பொலையன்‘‘ பொது ஆண்டு 1-1 முன்பின் வணிக வர்க்கத்தினை குறிப்பதாக ஏன் இருக்க முடியாது.
மொழிவழி ஆட்சிகள் இருந்து வந்துள்ளது. மொழிவழித் தேசிய அடையாளத்தை உணர்ந்த நிலையில் இருக்க முடியும். ஆனால் முன்னைய (சங்கிலியன், சோழன், மாகோன், பண்டாரவன்னியன்) மொழி வழியில் தன்னைக் கட்டமைப்புச் செய்வது தேசிய கட்டத்தில் இயல்பான போக்காகும். ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டதே தமிழர் வரலாறு. இது உலக வரலாற்றில் விதிவிலக்கான ஒன்றாகும்.
‘‘ அடையாளப் பிரச்சனையும் தேசியவாதமும்‘‘ (42) என்ற தலைப்பின் கீழ் அடையாளப் பிரச்சனையாக காணப்படுகின்றது. மதம், பிரதேசம், சாதி, அந்தஸ்து இவைகள் அடையாளங்கள். கருத்துமுதல்வாதக் கூறுகளைக் கொண்டது. இவை சமூக ஒழுங்கமைவில் சனநாயகக் கட்டத்தை நகர்த்திட முடியாதது.
இங்கு எழும் கேள்வி தேசிய இனம் என்பது எவ்வாறு ஈழத்தில் இருக்கவில்லை என்பதே ஒரு மோசடியான கருத்தாக்கமாகும். அடையாள அரசியல் என்பது பிரதேசம், மதம், சாதியம் இவற்றை தனித்துவ அடையாளமாக பேண வேண்டும் என்பதும் சமூக வளர்ச்சிப் போக்கில் தேசிய இனம் என்பது சமூக ஒழுங்கமைவு என்பதை ஏற்க மறுப்பது மார்க்சியமாக இருக்க முடியாது.
"தேசியப் பிரச்சனைக்குத் தீர்வாக தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவோர் எல்லாக் காலத்திலும் இலங்கை ஒரே தேசமாக இருக்கவில்லை எனவும் பிரித்தானிய ஏகாதிபத்தியமே அதை ஒன்றுபடுத்தியது எனவும் கூறுவதில் உள்ள உண்மை, அந்த வாதத்தின் தொடர்ச்சியாக இலங்கை தமிழ் - சிங்கள இராச்சியங்களாக இருந்து வந்தது என்று காட்ட முனையும் போது இல்லாமல் போய் விடுகிறது. தேசிய அடிப்படையிலான அரசு, நிலமான்ய சமுதாயத்திற்குப் பிற்பட்டது என்பதோடு இந்தியத் துணைக்கண்டத்திற் கூட, நாடுகள் மொழி, இன அடிப்படையிலேயே அமைந்திருக்கவில்லை என்பதையும் நினைவில் நிறுத்துவது பயனுள்ளது. சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளும் பிற சிற்றரைசுகளும் பிற்காலத்தில் பல்லவ அரசும் இனவாரியான தேசிய ஐக்கியத்தை வலியுறுத்துவன அல்ல." (ப32 இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் சிவசேகரம்)
ஆற்றல் வளங்கொண்ட தேசிய இனங்களின் இருப்பையும், இனக்குழும வாழ்வியல் எச்சத்தையும் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் பரந்து வாழ்ந்த மக்கள் திட்டமிட்ட தாக்குதல் காரணமாக சுத்திரீகரிப்புச் செய்யப்படுவதையும் இயங்கியல் ரீதியாக விளங்கிக் கொள்ள முற்படாததை மேற்கண்ட மேற்கோள் உணர்த்துகின்றது. சமூக ஒழுங்கமைவு என்பதை மறுத்த வாதம் என்பதும் மேலோங்கியிருக்கின்றது. 1833 ஜனநாயக தேசிய இயக்கம் வளர்ந்திருக்கவில்லை. அன்று கருநிலையில் தேசமான பரிணமிக்கக் கூடிய தேசிய இனங்கள் இருந்திருக்கின்றன. இதனை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தமிழர்கள் ஒரு தேசம் அவர்கள் மொழியை தன்னாட்சி கொள்வது, நிலத்தை தன்னாட்சி கொள்வது, கலைபண்பாட்டுத் தன்னாட்சி கொள்வது, பொருளாதாரத்தை தன்னாட்சி கொள்வது இவை அனைத்தும் கொண்டதுதான் ஒரு தேசம். இந்தப் புரிதல் இல்லாத அரசியல் போக்கில் இருந்து பிரச்சனையை அணுகுவது அல்ல.
இலங்கையிலும் 1833 கொலனித்துவ காலத்தின் முன்னரே தேசமாக வளரக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் இருந்து வருகின்றது. அவ்வாறு இருந்த போதிலும் எண்கணக்கில் அமைந்த நிலையில் சிங்கள தேசத்திடம் முழு நாட்டின் ஆட்சியதிகாரம் கொடுத்து விட்டுச் செல்லப்பட்டது. நாட்டு அரசிற்கும் தேசிய அரசிற்குமான வித்தியாசம் விளங்கிக் கொள்ளாத நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. (தாய்நாடு என்ற வாய்பாட்டுவாதம் போலிச் பெயருக்கு) சுதந்திரத்திற்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. ஒரு நாட்டுக்குள் பல தேசங்கள், தேசிய இனங்கள் இருக்க முடியும். இது நாட்டிற்கான அரசு. தேசங்கள் இருக்கின்ற போது தேசங்களில் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் கூட்டரசாகின்றது.
2. சண்மீதான விமர்சனமும் கட்சி உடைவும்
இலங்கை இடதுசாரி வரலாற்றை மதிப்பீடு செய்யக் கூடிய மையப்புள்ளியாக இருப்பது தோழர் நா. சண்முகதாசன் என்பதை எவரும் மறுக்க முடியாது. தோழர் சண் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. மத்திய குழுவிற்கு அப்பால் சண் விமர்சிக்கப்படுகின்றார். அப்போ மத்திய குழுவிற்கு என்ன பங்கு உள்ளது என்பதை ஆராயப்பட வேண்டும்.
‘‘பாராளுமன்ற வழியை மட்டும் முன்னெடுத்த வலதுசாரிகளுக்கு எதிராகச் சரியான கோட்பாட்டு முன்னெடுப்பை வழங்கிய சண், காலப்போக்கில் தானும் இடதுசாரித் திரிபுவாதத்துக்கு ஆட்பட்ட நிலையில் இரு தரப்பாரும் மக்களது புரட்சிகரக் கோரிக்கைகளுக்குத் தலைமை தாங்க இயலாதவர்களாயினர். மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அணியினர் ஸ்தாபன முறையைக் கவனங் கொள்ளாமை, கோட்பாட்டுத் தெளிவின்மை என்பவற்றால் பின்னர் இயங்கா நிலைக்கு ஆளாயினர் என்றால், சண் இடது திரிபுவாதம் காரணமாக 1978ன் பின்னர் இயங்க இயலாதவரானார். உட்கட்சி ஜனநாயக முறைப்படி வெகுஜன மார்க்கம், ஐக்கிய முன்னணித் தந்திரோபாயம் என்பவற்றை சண் ஏற்கும் நிலையை ஏற்படுத்த இயலும் என்ற எதிர்பார்ப்புச் சாத்தியப்படாத சூழலில்,தோழர் மணியம் 1978ல் சண்ணை விட்டு விலகி இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற புதிய அமைப்பை உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். பின்னர் புதிய ஜனநாயக கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) என்ற பெயர் மாற்றத்தைப் பெற்ற அந்த அமைப்புஇன்றுவரை இயங்க முடிவது என்பது சண் முன்னிறுத்திய கோட்பாட்டைப் பாதுகாத்து முன்னெடுத்துப் பிரயோகித்தல், கூடவே மணியம் வலியுறுத்தும் ஸ்தாபனக் கட்டுக்கோப்பு, வெகுஜன மார்க்கம், ஐக்கிய முன்னணித் தந்திரோபாயம் என்ற அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குவது என்பவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தவகைப்பட்ட முழுமைக் கூறுகளில் ஏதாவ-தொன்றைக் கவனத்தில் எடுக்கத் தவறினாலும் மக்களுக்குத் தலைமையேற்கும் மார்க்சிய அமைப்புப் பங்குப் பாத்திரத்தைவகிக்க இயலா நெருக்கடியை ஏற்படுத்துவதாகிவிடும்!‘‘ 1 (ரவீந்தர்-தாய்வீடு1)
இதே போல சி.கா. செந்தில்வேல், வெகுஜனன், இமயவரம்பன் போன்றோர் எழுதியதை வைத்து இடதுசாரி இயக்க வரலாற்றை மதிப்பீடு செய்ய உதவுகின்றது.
‘‘இடதுசாரித் திரிபுவாதத்துக்கு‘‘ கூற்று எவ்வாறு சண்ணுக்கு பொருந்துமா என்ற பகுப்பாய்வு அவசியமாகும். இதுவரையில் தோழர் சண் பற்றிய விமர்சனத்தினுள் அறிந்து கொண்ட புதிய எதிர்வினை.
1. சிங்கள தேசத்தில் உள்ள தேசிய – மதச் சிறுபான்மை
2. ஈழத்தில் உள்ள தேசிய- மதச் சிறுபான்மை என்ற அடிப்படைய உள்ளவாங்காத ஆய்வு என்பது மார்க்சிய லெனினியப் பார்வையாகுமா?
முதலாளித்துவம் முழுமையடையாத நாடுகளில் தேசிய இனப்பிரச்சனை, நாட்டரசுக்கும், தேசங்களின் ஒன்றிய அரசுக்கும் உள்ள மாறுபாடு. பெருந்தேசியவாதமும், அதனை எதிர்த்து எழுகின்ற சிந்தனை வடிவமும் ஒன்றாக முடியுமா? ஏன் கோட்பாட்டு குறுக்கல்வாதம், ஆய்வுச் சோம்பேறித்தனம் என்று கொள்ள முடியுமா??
இங்கு அனுபவாதத்தை முன்னிறுத்திய எழுத்துக்களைத் தான் எம்மால் படிக்க முடிகின்றது. அனுபவவாதம் என்பதே அகவுணர்வு சார்ந்ததாகும். வரலாறு எழுகின்ற போது தாம் கண்ட காட்சிகளை பதிவிட்டுச் செல்ல முடியும். பதிவிட்டுச் செல்லவது எல்லாம் வரலாற்று உண்மையாகிவிட முடியாது.
தோழர் சண் சார்ந்த கட்சியானது 1972 உடைவு இரண்டு விடயங்ளைச் சுட்டிக் காட்டுகின்றது. இது 1978 உடைவிற்கான முன்னோட்டமாக கொள்ள முடியுகின்றது. கீழ் உள்ள விமர்சனத்தை அவதானிக்க முடிகின்றது.
”ஆயினும் தமது கட்சியில் அதுதொடர்பான செயற்பாட்டை தாம் எடுக்க வேண்டுமா என்பது தொடர்பாக கவனம் செலுத்த முடியாதளவுக்கு தனது கட்சியில் மீண்டுமொரு உட்கட்சிப் போராட்ட நிலமைகளை எதிர்கொண்டார். உட்கட்சிப்போராட்ட நிலமைகள் தத்துவார்த்த அரசியல் நிலைப்பாடு சார்ந்த விடயங்களை மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட குணநலன்சார்ந்த விடயங்களாகவும் பேசப்படத் தொடங்கின. ஒருவகையில்,கட்சியின் பிரதான எதிரி இப்போது அவர்தான் என்ற அளவுக்கு அவருக்கெதிரான கருத்துக்கள் கட்சிக்குள்ளே வளரத் தொடங்கின. எவ்வாறாயினும் கட்சியின் பிளவுக்கான பிரதான காரணங்கள் என்று வெளித்தெரியச் சொல்லப்படுகின்ற விடயங்கள் இரண்டில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில், (விக்கி – தாய்வீடு)
தனிநபர்களின் குணநலன் என்பதை முன்னிறுத்திய வகையில் வரலாறு குறிக்கப்படுகின்றது. தனிநபர்களின் சிந்தனையை தீர்மானிப்பது அந்த சமூகப் போக்கு. ஆனால அந்தச் சமூகப் போக்கையும் அதன் உற்பத்தியில் உருவாகிய நபர்களை எவ்வாறு மதிப்பிடப் போகின்றார்கள்?
முற்போக்கு -தேர்தல் பாதை
சண்முகதாசனின் கட்சியில் இருந்து வந்தவர்கள் சிறிமாவிடமும், சு.க முற்போக்கு தேசிய முதலாளி என்ற கருத்தாக்கம் இருந்து வந்துள்ளது. இன்று இடதுசாரி என்ற வரையறை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மார்க்சிய வழியில் சமூகத்தைப் பார்ப்பவர்களுக்கும் மரபு ரீதியாக இடதுசாரி என்பவர்களுக்கும் இடையே அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக மாறுபாடுகள் இருக்கின்றன. ஒடுக்கும் தேசத்தின் அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு இனவழிப்பு பங்காளி இல்லை என்று கூறிவிட முடியாது. அரசின் அங்கமான நாடாளுமன்றம், அரசாங்கம், சட்டமியற்றல் போன்றவை அடிப்படையாக ஏற்றுத் தான் ஆட்சியில் பங்கெடுப்பது.
இலங்கையில் ஆட்சி செய்தவர்களின் அரசியல் என்பது தெளிவாக இலக்கைக் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள்.
"1970-1977 வரையில் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்த கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்து முற்போக்கான பல சாதனைகளை நிலைப்படுத்தினர். பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட பலவற்றைத் தேசியமயப்படுத்தியதோடு முடிக்குரிய குடியேற்ற நாட்டுக்கான டொமினிக்கன் அந்தஸ்த்திலிருந்து வெளி-யேறி இலங்கைக் குடியரசுக்கான முதலாவது குடியரசு யாப்பை1972 ல்‘‘ (ரவீந்தர்-தாய்வீடு1) மேல் உள்ளவை முற்போக்கு தன்மை கொண்டவை தான். ஆனால் அவை மட்டும் புரட்சிகரமானதாக கொள்ள முடியாது. சுயநிர்ணயம் அற்ற நிலையில் இருந்த சிங்கள தேசம் பிரித்தானியாவில் இருந்து விலகியதன் மூலம் அரசியல் ரீதியான சுதந்திரம், சுயநிர்ணயம், இறையாண்மையை அடைந்தார்கள். இவைகள் சிங்கள தேசத்திற்குத் தான் நலன் கொண்டது என்பதை மறுக்கத் தேவையில்லை. அதனை சிங்கள தேசத்தின் மட்டில் முற்போக்கானதே.
தேசிய இன ஒடுக்குமுறையை சட்டரீதியாக தமது ஆட்சியதிகாரத்தைக் கொண்டே சிங்கள தேச ஆட்சியாளர்கள் நிறைவேற்றினார்கள். தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையும் முற்போக்கானதா? இவர்கள் குறிப்பிடும் பொருளாதாரத் திட்டமே ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது.
சிலியில் தேர்தல் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றிய அதிபர் அலன்டே திரிபுவாதத்திற்கு உட்பட்டவர் என்றால் லங்கா தேர்தல் பாதையில் எவ்வாறு சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும்?
சமாதானம் சகவாழ்வு என்பது தேர்தல் பாதை மாத்திரம் இல்லை. தோழர் ஸ்ராலின் மீதான அவதூறு, வர்க்கப் போராட்டத்தை மறுப்பதற்கு எதிரான நிலைப்பாட்டை 1964 மாபெரும் விவாதம் தொடங்கி வைத்தது. வர்க்கப் போராட்டத்திற்கு தேர்தல் பாதை வழிகாட்டியது குருசேவ். தேர்தல் மூலம் சோசலிசம் அடைய முடியாது என்பதையும் பழைய அரச நிறுவனக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு மாற்றங்கள் செய்ய முடியாது.
1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும்‘‘ ஏங்கெல்ஸ் க.க. அறிக்கையில் பின்னைய பதிப்பிற்கு எழுதிய முகவுரையில் இந்த மாற்றத்தை சேர்த்துள்ளார். பொதுவுடமை கட்சி அறிக்கையில் 2 செய்யப்பட்ட ஒரே சேர்க்கை எனலாம்.
தேர்தல் பாதையை மறுப்பதற்கு முன்னர் தோழர் சண் தேர்தலில் போட்டியிட்டது பற்றி குறிப்பிடுகின்றார்கள். சண்பற்றிய விமர்சனத்தில் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது போல சண் தேர்தல் நிலைப்பாட்டிற்கு வந்தார் என்பது போல எழுதப்படுகின்றது. கட்சியின் தீர்மானம் இன்றி தேர்தலில் போட்டியிட்டாரா? அப்படியாயின் ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்தார்களா? எடுக்கவில்லையா? இதற்கான எதிர்கூறுகளை ஆதாரத்துடன் வைக்க வேண்டும்.
வர்க்கப் போராட்டம் என்பது திடீரென ‘‘வர்க்கங்களை ஒழிப்பதற்கு முதலாவதாக நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளை வீழ்த்த வேண்டும். எமது கடமையின் இந்தப் பகுதி நிறைவேற்றுப்பட்டு விட்டது. ஆனால் இது ஒரு பகுதி மட்டுமே மேலும் இது ஆகக் கடினமான பகுதி அன்று. வர்க்கங்களை ஒழிப்பதற்கு, இரண்டாவதாக, ஆலைத் தொழிலாளிக்கும் விவசாயிக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுவதும் அவசியம். இதைத் திடுமெனச் செய்து விட முடியாது.‘‘ (324லெ.தொ3) மேல் உள்ள வாசகம் புரட்சிக்குப் பின்னர் தோழர் லெனினின் வழிகாட்டல். மேல் உள்ள வழிகாட்டலை முதலாளித்துவம் முழுமையடையாத, புரட்சி நடைபெறாத நாடுகளில் பின்பற்ற முடியுமா என்பதை உள்வாங்காது ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வர்க்கப் போராட்டம் வெவ்வேறு கட்டத்தை கடந்தே செல்ல வேண்டும். புரட்சிக்கு முன்னரான விடயங்களையும் புரட்சியில் ஆட்சியதிகாரம் கொண்டு செய்யப்பட வேண்டியவையும் வெவ்வேறு நிலைமைகளில் மாறியிருக்கின்றன.
நமது வேலைதிட்டம் என்பது பற்றி ‘‘ பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்துக்கு நிறுவன ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோசலிச சமுதாயம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதுமே இந்த வேலைத் திட்டத்தின் சாரப் பொருள் என்று நாம் கூறுயிருக்கிறோம். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமானது, பொருளாதாரப் போராட்டமும் (தொழிலாளர்களுடைய நிலைமை மேம்பாடு அடைவதற்காகத் தனிப்பட்ட முதலாளிகளையோ, முதலாளிகளது தனிப்பட்ட குழுக்களையோ எதிர்த்து நடைபெறும் போராட்டம்) அரசியல் போராட்டமும் (மக்களுடைய உரிமைகள் விரிவடைவதற்காகவும், அரசாங்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம்) உள்ளடங்கியதாகும். (55 லெ.தொ1) மேலும் ‘‘ பொருளாதாரப் போராட்டத்துக்காக அரசியல் போராட்டத்தை மறப்பதானது சர்வதேச சமூக – ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விட்டு விலகுவதாகிவிடும், தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு அனை்தும் நமக்குப் போதிப்பதை மறப்பதாகிவிடும். (56 லெ.தொ1.)
பிரச்சனைக்கான தீர்வு என்பது பற்றி பேசுகின்ற போது முன்னரே ஆரூடம் கூறப்படுகின்றது. ஆனால் வரலாற்றுப் போக்கில் நிகழ்வுகள் நடந்தும் விடுகின்றன. ‘‘ நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லுகையில் எழும் பிரச்சனைகளுக்கு மிகவும் ஜனநாயககரமான தீர்வு காண்பதற்கு வழிவகுத்திட்ட மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் சகாப்தமானது தேசிய இனப்பிரச்சனைக்குப் போகிற போக்கில், தற்செயலாய்த் ‘‘தீர்வு காண்பதில் ‘வெற்றியடைந்தது என்பது தான் இதற்கு அர்த்தம்.‘‘ (57-0000030)
வரலாறுகள் ஆரூடத்தினால் படைக்கப்படுவதில்லை. குறிப்பான சமூகத்தின் மாற்றத்தின் தேவைக்கான சமூக அவசியம் இருந்து கொண்டிருக்கின்றது. அதனை மதிப்பீடு செய்யவும் மார்க்சியம் வழிகாட்டுகின்றது. குட்டிமுதலாளிய வர்க்கமானது மார்க்சிய வழியை ஏற்றுக் கொள்வதாக பாவனை காட்டும். அதேவேளை தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு மார்க்சியத்திற்கு முரணான கருத்துக்களையும், தாம் கற்றவற்றையே மார்க்சியமாக்கின்றனர்.
இதே கட்டுரையில் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்கின்ற போது என்பதை அடிக்கடி தோழர் லெனின் எழுதிக் கொள்கின்றார். இலங்கைச் தமிழ் சூழலில் ஒரு அவமானகரமான போக்கு போய்க் கொண்டிருக்கின்றது.
தேர்தலில் பங்கு பற்றுவது பற்றி முரண்பாடு கொண்ட தற்போதைய பு.ஜமா.லெ.கட்சியினர் 2020 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பற்றினார்கள். அவர்களின் பரப்புரை மேடைகளில் தலித்திய- அடையாள கட்சியின் நிலைக்கே கீழ் இறங்கி அப்பட்டமாக பிரச்சாரம் செய்தார்கள். அந்தக உரைகளை தனி ஆய்வாகச் செய்ய வேண்டும்.
முதலாளித்துவ சமூகத்தில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவது தவறில்லை. குறிப்பான சூழலை ஆராய்ந்து முடிவெடுக்கலாம். ஆனால் கட்சியின் முடிவில் தேர்தலில் நின்ற தோழர் சண்ணை விமர்சிக்கும் முறை தெரிவுக்கு உட்பட்ட விமர்சனப் போக்காகவே இருக்கின்றது.
சண் இடது திரிபுவாதம் என்பதே மிகையான கூற்றாகும். 1964 இற்கு பின்னர் எழுந்த தத்துவார்த்த முரண்பாடும், அதில் இருந்து ஆயுதப் போராட்டம், அழித்தொழிப்பு என்று இந்தியாவில் நிகழ்கின்றது. ஆனால் ஆயுதம் பற்றிய எவ்வித முனைப்பு அற்றதை விமர்சிக்கப்பட வேண்டியதே. இங்கு ஆயுதம் ஏந்தாது பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட தில்லை.
1. சு.க சிறிமாவுடன் ஐக்கிய முன்னணி
2. தேர்தலில் பங்கெடுப்பது
3. சீனத்துடன் உறவைப் பேணல்
இவைகளே இவர்களுக்கு முக்கிய தேவையாக இருந்தது
இந்தியாவில் எழுந்த நக்சல்பாரிகளின் ஆயதப் போராட்டத்தை இடதுதீவரவாதம் என தோழர் சண் விமர்சித்துள்ளார்.
3. தேர்தல் பாதை பற்றி
‘‘சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ நிலைப்பாடு சார்ந்த தவறுகளும் ஊழல்களும் மலிந்திருந்த காரணத்தால் 1977 தேர்தலில் படுதோல்வியைத் தழுவினர். ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று இவர்களது அரசியல் அமைப்பை நீக்கி இரண்டாவது குடியரசு யாப்பை 1978ல் முன்வைக்க இயலுமாயிற்று.
‘‘அந்த அரசியல் அமைப்பின் தவறுகள் நாட்டை மோசமாகப் பாதிப்பதைத் தடுக்க இயலாவகையிலே அதே கூட்டுக் கட்சி-களைக் கொண்டதான இடது அணி பின்னர் அதிகாரத்துக்கு1994ல் வந்த பொழுதிலும் தவறுகளைத் தொடர்பவர்களாகவே இருந்தனர். (ரவீந்தர்)
”இந்தத் தவறுகளுக்கான காரணங்கள் அனைத்தும் முதலாளித்துவக் கட்சியான சுதந்திரக் கட்சிக்கு உரியதெனச் சொல்லிவிட இயலாது. இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி இவ்வகையில் பாராளுமன்றத்தை சமூக மாற்றக் களமாக நம்பிச் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அதற்குள்ளே திரிபுவாதச் சறுக்கல்கள் வளர்ந்து மார்க்சியத்திலிருந்து அவர்கள் தொலை தூரத்துக்குச் சென்றமையும் பிரதான காரணமாகும். அதே எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சிலி கொம்யூனிஸ்ட் கட்சி அலண்டே (ரவீந்தர்)
(1. கம்யூன் புரட்சி - சமாதானம் சகவாழ்வு- தேர்தல் பாதை-) தேசிய முதலாளிகள் என்ற கருத்தோட்டம்- திரிபுவாதிகள் இடதுசாரிகள் என எவ்வாறு - இனவழிப்பாளர்கள் - சிங்கள தேசத்தின் அங்கம்-
சோவியத் பொருளாதாரத்தில் தோழர் ஸ்ராலின் நடத்திய சாதனை (தொழிலாளிகளுக்குச் சேர வேண்டும்) மாறாக கட்டுப்பாடு விதித்தது தவறான போக்காகும். கமத்தொழில் ஈடுபட்ட வர்க்கத்தின் வருவாய் என்பது மட்டுப்படுத்தப்பட்ட தாகவே இருக்கும். மனித உழைப்பின் சேமிப்புச் சக்தியைக் கொண்ட வருவாயை அடிப்படையாக கொண்டதாகவே முதலாளித்துவ nதாழில் நுட்பத்தைக் கொண்ட உற்பத்தி முறைக்கு முன்னரைக் கொண்டதாக இருந்திருக்கின்றது. எனவே சிறுசிறு சேமிப்பைக் கொண்ட சமூக உழைப்பினை எவ்வாறு கைகயாள்வது என்ற பங்கும் 72-77 கால அரசாங்கத்திற்கு இருக்குமா என்பது ஐயமே.
‘‘இத்தகைய சூழலில் சண் தலைமையேற்ற புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தை ஒரு தளமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும் வாய்ப்பையும் முற்றாக நிராகரித்து வெகுஜனத் தளத்திலான போராட்டங்களை முன்னெடுப்பதே போதுமானது என்ற நடைமுறையைப் பின்பற்றலாயிற்று. (ரவீந்தர்) இந்தக் கூற்றுச் சரியே. மேலும் 1971 -2 களில் ஏற்பட்ட கட்சிப் பிளவு பற்றி பேசப்படுகின்றது. இந்தக் காலப் பகுதியை கவனமாக ஆராயப்படவேண்டும்.
ஏகாதிபத்திய பொருளாதாரவாதம்
சர்வதேச அடிப்படையில் அடிப்படை முரண்பாடு என்பது அபரிமிதமான பொருள் உற்பத்தி முறையாகும். அதேவேளை பிரதான முரண்பாடு என்பது அபரிமிதான உற்பத்தியினால் உலக மறுபங்கீடு செய்வதற்காய் ஒப்பந்தங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு என்று தனது (கோப்ரேட்) நிதிநிறுவனங்கள் நேரடியாக முதலாளிகளின் சார்பாக நாடுகளில் ஆக்கிரமிக்கின்றது. இதற்குப் பயன்படுத்தும் பொருட்டு உலக வங்கி, ஆசியான் வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக மையம் என்று இப்பொழுது பிரிக்ஸ் (ஆபீரிக்க, இந்திய, பிரேசில், சீன) கூட்டுக்களாக உலகை பெரும்முதலாளிகள் சார்பாக ஆட்சியதிகாரங்களை, கொள்கைகளை திணிக்கின்றார்கள். இதன் ஊடாக நாடுகளின் சுயாதிபத்தியத்தில் இடையறாது தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ”ஏகாதிபத்திய வல்லரசுகள் எண்ணற்ற அசமத்துவமான ஒப்பந்தங்களிற் கைச்சாத்திடும்படி சீனவை வற்புறுத்தின. இதனால், அவை தமது கடல், தரைப்படைகளை சீனாவிற் தங்கச் செய்வதற்கு உரிமை பெற்று, ஸ்தல ஆட்சிக்கு அப்பாற்பட்ட ஸ்தானிகராலய நீதி நிர்வாக உரிமைளைப் பெற்றதோடு, முழு நாட்டையும் ஏகாதிபத்திய செல்வாக்குப் பிராந்தியங்களாகக் கூறு போட்டன". (ப.20 தோழர் மாசேதுங் சீ. பு. சீ. க. கட்சியும்) நாடு கடந்த மூலனதனத்தின் நுழைவின் வேகம் அதிகரித்திருக்கின்றது..
”சுயநிர்ணயத்தை ஏகாதிபத்தியத்தின் கீழ் நிறைவேற்ற முடியாது என்றோ பொய் தோற்றம் என்றோ கூறிக் கொள்வது, நீக்குவது தவறானதாகும். அதேவேளை அரசியல் வர்க்க ஒடுக்குமுறைக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் உரிய முன்னைவிடச் சுதந்திரமானதும், தெளிவான வடிவமாக இருக்கிறதின் முக்கியத்துவத்தை நிதிமூலதனத்தின் ஆதிக்கம் சிதைப்பதில்லை. எனவே முதலாளித்துவத்தின் கீழ் அரசியல் ஜனநாயகத்துக்கான கோரிக்கைகளில் ஒன்று பொருளாதார வழியில் நிறைவேற்றப்பட முடியாதது என்று கூறும் வாதங்கள் அனைத்தும் முதலாளித்துவம், அரசியல் ஜனநாயகம் ஆகியவற்றின் பொதுவான, அடிப்படை உறவுமுறைகள மொத்தத்தில் தத்துவார்த்த வழியில் தவறான வரையறை செய்வாதாகின்றன. ஏகாதிபத்தியத்தின் கீழ் சமவுரிமையுடைய தேசங்களின் ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. ” (லெனின்)
ஏகாதிபத்தியம் தனது கூட்டை சமமாக இருக்கவிடாதோ அவ்வாறே ஒடுக்கும் பெருந்தேசியம் ஈழதேசத்தின் சமவுரிமையை சாத்தியமில்லாதாக்கி அழிக்கின்றது.
தேசங்களின் சுயநிர்ணய உரிமை மட்டுமின்றி, அரசியல் ஜனநாயகத்துக்கான எல்லா அடிப்படைக் கோரிக்கைகளுமே ஏகாதிபத்தியத்தின் கீழ் ஓரளவுக்குத் தான் ‘நிறைவேற்றப்படக் கூடியது‘‘, அதுவும் ஒரு முழுமையற்ற திரிந்த முறையில், விதிவிலக்கு என்ற வகையில் (உதாரணம். 1905இல் ஸ்வீடனிலிருந்து நோர்வே பிரிந்தது) மட்டுமே அவை ‘நிறைவேற்றப்படக் கூடியாது‘‘ (305லெ.தொ1)----
தமிழ் தரப்பு 2021 இல் சீனத்திற்கு எதிராகத் தான் களமாடுகின்றார்கள். ஆனால் அமெரிக்க இந்திய நலனிற்கு துணை போவதாக ஆதங்கப்படுகின்றார்கள். அவர்களின் வாய்ப்பாட்டு வாதம் ‘மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக, தமிழ் மக்கள் தேசிய ரீதியில் ஐக்கியப்பட வேண்டும்’ (விக்கினேஸ்வரன் தாய்வீடு). இவர்கள் ஐக்கியம் என்று பேசும் பெரும்பான்மை சிங்கள தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தமக்கான ஆட்சியாளர்களை தெரிவு செய்வதிலும், தம்மை எவ்வாறு சிறப்பாக அடிமைப்படுத்தி ஆட்சி செய்பவர்களை தெரிவு செய்து கொண்டே இருக்கின்றார்கள். இது தொடர்ச்சியான நிலையாகவும், தேசிய ஒடுக்குமுறை, சிங்கள இளைஞர்களை தொடர்ச்சியாக வேட்டையாடிய பின்னரும் தொடர்கின்றது. ஆனால் இவர்கள் மக்கள் புரட்சிக்கு தேசிய ரீதியாக என்ற நாட்டுப் பற்றைத் தான் வெளிப்படுத்துகின்றார்கள்.
இது இந்திய தேசிய கொங்கிரசின் தாக்கமெனலாம். இந்தியம் என்பது நேரடியாக பின்கொலனித்துவத்திற்காக அமைப்பாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தொன்றாகும். அன்றைய கொலனிய எதிர்ப்புப் போராட்டம் இந்தியப் போக்கிற்கு கட்டுப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் அன்னிய கொலனித்துவத்திற்கு மாற்றாக தரகு முதலாளிகளின் கைகளில் ஆட்சியதிகாரத்தை கொடுத்து விட்டுச் சென்றார்கள். இதனால் பல தேசங்கள் இன்னொரு தேசிய இனங்களின் கீழ் கொலனியாக்கப்பட்டது.
ஐக்கியம் பற்றிப் பேசிக் கொண்டு தமிழ் மக்களை தேசிய விடுதலைக்காக அணிதிரட்டலைச் செய்யாது ஒப்புக்கு அடையாளப் போராட்டங்களைச் செய்கின்றார்கள். தமிழ் சமூகத்தின் பிரதான முரண்பாட்டை அடிப்படையாக செயற்பட் வேண்டும். அதற்கான சமூகத் தேவையும் உள்ளது, அமைப்பும் உள்ளது என்றால் முன்னேறிச் செல்ல வேண்டும்.
”மக்களின் தன்னியல்பான எழுச்சி பெருகப் பெருக, இயக்கம் பரவப் பரவ, சமூக ஜனநாயகவாதத்தின் தத்துவார்த்த, அரசியல், அமைப்புத்துறைகளின் வேலையிலே மென்மேலும் அதிகமான உணர்வுக்கான தேவையும் வேகமாக வளர்கிறது, இந்தத் தேவையின் வேகத்துக்கு நிகராக எதுமில்லை. (81எ.செ.வே.லெ)
சமூகத் தேவைக்கு இணையாக கட்சிகள் வேலை செய்யாது விட்டு விட்ட நிலை பிற்போக்குச் சமூகத்தை அமைதியாக வளர்த்து விடுகின்றது. இவர்களுக்கு மாற்றாக செயலூக்க முள்ள அமைப்புகள் கட்டமைக்கப்பட வேண்டும்.
பாட்டாளி வர்க்கத் தலைமை என்ற ஒரு நிலை உருவாகாத காலகட்டத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் தமது நலனில் இருந்து வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும்.
”1648ல் முதலாளித்துவ வர்க்கம் முடியாட்சிக்கு எதிராக, நிலவுடமைப் பிரபுக்குலத்துக்கும் நிலைநாட்டப்பட்டிருந்து சமய நிறுவனத்துக்கும் எதிராக நவீனப் பிரபுக்குலத்துடன் அணிசேர்ந்திருந்தது.
1789 இல் முதலாளித்துவ வர்க்கம் முடியரசு, பிரபுக்குலம் மற்றும் நிலைநாட்டப்பட்ட சமய நிறுவனத்துக்கு எதிராக மக்களுட ன் அணிசேர்ந்திருந்தது.” (தொ.1-மாஏ 252) சமூக அவசியத்தை அந்தந்த வர்க்கம் முன்னெடுக்கும். இதையே ஆசான்கள் மேல் உள்ள வரலாற்றுப் போக்கை மதிப்பீடு செய்கின்றார்கள். இது எது சமூகத்தை வரலாற்று ஓட்டத்தை மதிப்பீடு செய்ய வழிகாட்டுகின்றது.
ஈழப் போராட்டம் பற்றிய லெனினியத்துக்கு மாறான கருத்துக்கள்
மாவோவும் தேசியவாத சக்திகளும்
சுவர் இருந்தால் தான் சிந்திரம் வரைய முடியும். அது போல தான் சமூக ஒழுங்கமைவின் இருப்பை அதன் எல்லைதான் காப்பாற்றிக் கொள்கின்றது. இந்த நிலையில் நாடு, தேசம் இவற்றிற்கான அதிகாரம் முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் தான் அன்னிய ஆக்கிரமிப்பு எதிரானதும் அன்னியருக்கு எதிரான போராட்டத்தில் விலகி நிற்காது ஐக்கிய முன்னணிக்கு வருகின்றார், இதனால் மாவோ தேசியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தார் என்பது பொருள் அல்ல. தேசியவாதம் என்பது அங்கு தாய்நாட்டைக் காப்பது என்றே பொருள்படும்.
திரிபுவாதிகள் தாய்நாட்டை பாதுகாக்க எடுத்த முடிவை வர்க்கப் போராட்டத்திற்கு அப்பால் நின்று மதிப்பீடு செய்கின்றார்கள். ”பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் சமூக விடுதலை மற்றும் சோசலிசம் என்ற சொற்கதை திரும்பத் திரும்ப முழங்குவாதல் என்ன பயன்?.. குடியேறிகளை வெளியேற்றுவதும், தேசியவிடுதலைப் போரில் வெற்றியடைவதே நமது இலக்கு. (தோழர் கோ.சிமின்) இந்த முழக்கம் என்பது அரசியல் அதிகாரம் செலுத்தக் கூடிய எல்லைப் பகுதி இருக்க வேண்டும். ஒரு அரசுக் கட்டமைப்பு தேவையாகும். இதன் ஊடாகவே அரசியல் அதிகாரத்தை கொண்டு மாற்றங்களை செய்ய முடியும். அரசியல் அதிகாரத்தைக் கொண்டு
1. உழைப்போருக்கும் ஒடுக்கப்படுவோருக்குமான ஆட்சியரை மக்களே தேர்ந்தெடுத்தல். அதில் முதலாளித்துவ வர்க்கத்தை தவிர்த்தல்
2. பழைய அதிகார வர்க்க முறைமையை ஒழித்தல் மக்கள் தாமே தேர்தல் நடத்தி சோவியத்திற்கு தெரிவு செய்தல். தாமே நடத்திய தேர்தலில் தெரிவு செய்தவர்களை திருப்பி அழைப்பது.
3. உழைப்பாளி மக்களின் முன்னணிப்படையானது தலைமை தாங்குவது, மக்களை அமைப்பாக்கல், அரசியல் நிர்வாகம் கற்பிற்பது, நடைமுறை – சொந்த அனுபவத்தின் ஊடாக கற்பது மக்கள் அனைவரும் நிர்வாக கலையை கற்பது, நிர்வகிப்பது.
4. உற்பத்தி மாற்றத்தின் ஊடாகவே சமூக உறவில் சிந்தனை மாற்றத்தையும், புதிய சமூக உறவையும் கட்டமைக்க முடியும்.
அரசியல் அதிகாரம் பற்றிய முழுமையான பார்வையற்ற திரிபுவாதிகள் தமக்கு ஏற்ப மார்க்சியம் பற்றிய வியாக்கியானம் செய்கின்றார்கள்.
"சீனப்புரட்சி இயக்கம் இரண்டு கட்டங்களை, அதாவது ஜனநாயக, சோசலிசப் புரட்சிகளை உள்ளடக்கியது, அவை சாராம்சத்தில் வேறுபட்ட இரண்டு புரட்சிப் போக்குகள் என்றும் முதலாவது போக்குக் கொண்டு நடத்தப்பட முடியும் என்றும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அறிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகப் புரட்சி சோசலிசப் புரட்சிக்கான இன்றியமையாத தயாரிப்பாகும், சோசலிசப் புரட்சி ஜனநாயகப் புரட்சி ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்கப்பட முடியாத தொடர்ச்சியாகும். கம்யூனிஸ்டுகள் அனைவரும் நிறைவேற்றப்பாடுபட்டுக் கொண்டிருக்கும் இறுதி குறிக்கோள் சோசலிச, கம்யூனிச சமுதாயமொன்றை அமைப்பது தான். ஜனநாயக, சோசலிசப் புரட்சிகளுக்கிடையிலுள்ள வேறுபாடுகளையும் தொடர்களையும் தெளிவாகப் புரிந்து கொள்வது சீனப்புரட்சிக்குச் சரியான தலைமை அளிப்பதற்கு இன்றியமையாதது. (ப57 மாசேதுங் சீனப்புரட்சியும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும்)
தேசிய முதலாளித்துவ வர்க்கம் பற்றிய
தேசிய கட்சிகளுடன் கூட்டுச் சேரல்
சோவியத், சீன தரப்புகள் (மாவோவின் தீவிர அரசியல் 70 பின்னர் தளர்கின்றது. தோழர் மாவோ தோழர் சண்முகதாசன் சந்திப்பதை தடுக்கின்றார்கள். ) தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேரும் படி வழிகாட்டல் விடுகின்றார்கள்.
”ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் கவனிப்பதில்லை என்பதை அவர் விமர்சித்தார். தமிழ்க் கட்சியினர் அரசியலில் சிங்கள முற்போக்கு சக்திகளின் ஆதரவை வென்றெடுப்பதிலும் அவர்களுடனான கூட்டு முயற்சிகளுக்கு முயல்வதற்கும் தமது நேரத்தை செலவு செய்யாமல், அரசாங்கத்துடன் பேரம்பேசும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுவதை விமர்சித்தார்.” (தாய்வீடு) தமிழ் தரகு வர்க்கத்திற்கு வழிகாட்டுகின்றார்கள். சு.க, ஐதேக போன்றவைகளுக்கிடையே இருக்கின்ற மாறுபாடு என்ன? தமிழ் தரப்பிற்கு அறிவுறுத்துகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளப் படவேண்டும். (இது பற்றி பிறகு பார்ப்போம்)
தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கின்றார்கள் என்ற குழம்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. இது பற்றிய கோட்பாட்டுக் குழுப்பங்கள் இருந்து கொண்டே வருகின்றது. இந்தப் பிரச்சனையானது சிறிமா அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கவில்லை என்ற சண்மீதான விமர்சனம் உள்ளுறைந்துள்ளது. இதனை நேரடியாக கட்சியை விட்டு விலகிய பின்னரே வெளிப்படுத்துகின்றார்கள். தேசிய கட்சிகளுடன் கூடல் தோழர் சண்--
”1947 ல் பொதுவுடமைக் கட்சி ஐ.தே. கட்சிடன் இணைத்து தேர்தலில் பங்கு கொண்டது.
‘மார்க்சிய நூல்களில் காலனி நாடுகளில் உள்ள பூர்சுவாக்கள் ஒன்று ஏகாதிபத்திய சார்புப் பகுதி மற்றொரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் பகுதி (ஆனால் ஊசலாட்டம் உடையது) ஆகிய இரண்டு பகுதிகள் பிரிவார்கள் என்று படித்திருக்கிறார்கள். வெளிநாட்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய பூர்சுவா வர்க்கத்தின் முற்போக்கான பகுதிகள் உட்பட ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சகல சக்திகளையும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் ஐக்கியப்படுத்துவது தொழிலாளி வர்க்கத்தின் சரியான தந்திரோபாயம் எனவும் அவர்கள் படித்திருக்கிறார்கள். இந்தப் பகுதி எங்கே என்று இவர்கள் தேடிப் பார்த்திருக்கிறார்குள். இலங்கையில் அதைக் காணவில்லை. நாற்பதாம் ஆண்டுகளில் இலங்கைப் பூர்சுவாக்கள் மத்தியில் இந்தப் பிளவு இன்னும் ஏற்படாததே இதற்குக் காரணம். அது பின்னர் 1951ல் ஏற்பட்டது. (ப.70) ‘‘ முன்னர் இந்திய தேசிய காங்கிரசையே உதாரணமாக எடுத்தார்கள். தேசிய வர்க்கத்திற்கான பிரச்சனை நாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியை தவறாக புரிந்து கொள்கின்றார்கள். ‘‘ இந்த நாடுகளில் தொழிலாளி வர்க்கமும் இதே நோக்கத்துக்காக முதலாளிகளுடன் ஐக்கியப்பட வேண்டும் என்று கூறினார். (ப.72) இது US பொதுவுடமைக்கட்சி பிரவுடரின் திரிபுவாதக் கருத்தாகும். ( தோழர் சண் ) தோழர் சண் முன்னரே தேசிய முதலாளிகளுடன் கூட்டுப் பற்றி எழுதுகின்றார். இது தேர்தல் பாதையில் முதலாளித்துவக் கட்சிக்குள் சீரளிந்த இடதுசாரி இயக்கங்களுக்கான ஆரம்பப்புள்ளாக இருக்கின்றது. இன்று மக்கள் திரள் அமைப்பு என்ற நிலையில் இருந்து வெள்ளை வேட்டி அரசியல்வாதிகளை வளர்த்து விட்டுள்ளது.
இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் ஐக்கிய முன்னணி விடயத்தில் தவறு விடுபவர்கள் மேல் உள்ள கூற்றை தோழர் சண்ணுடன் விளங்கி விவாதித்தார்களாக தெரியவில்லை. மேல் உள்ள விடயம் பற்றிய சண்ணை விமர்சிப்பவர்கள் ஆராய்ந்தார்களா என்பதை அறிய முடியவில்லை. அவ்வாறு இருப்பின் கவனத்திற்கு கொண்டு வந்தால் மறுஆய்வு செய்யப்படும்.
இந்த பூகோலப் பரப்பில் ஒரு நாட்டின் குறிப்பான வரலாறும், அதன் சமூகப் போக்கும் உள்வாங்கிட வேண்டும். சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சியை எவ்வாறு மார்க்சிய ரீதியாக விளங்கிக் கொள்வது என்பது வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் இருந்து அணுகப்பட வேண்டும். ஆனால் மார்க்சிய திறனாய்வு முறையையும், சித்தாந்த வழி சமூகத்தின் பிரத்தியேகமான வழியை கற்றுக் கொடுக்கின்றது. அதாவது உற்பத்தி உறவு, உற்பத்திச் சக்தி என்பது அடிக்கட்டுமானம். இது தீர்மானிக்கும் மேற்கட்டுமானத்தின் வளர்ச்சிப் போக்கை துல்லியமாக வழிகாட்டுகின்றது. ஆனால் மார்க்சிய வழியை அறியமாட்டோம், கற்க மாட்டோம், மாற்றிக் கொள்ள மாட்டோம் என்ற சமூகப் போக்கு உள்ளது.
1970-77 முற்போக்கு அரசாங்கம்- சிங்கள தேச அரசாங்கம்
1. தேசாதி ஆட்சி இல்லாது முழுமையான அரசியல் சுதந்திரம் கொண்ட சிங்கள தேசம் என்பதை சிறிலங்கா என்று பெயர் மாற்றினார்கள்.
1972 சோல்பரி என்பது தமிழ் தேசத்தின், மலையத் தேசிய இன, மதச் சிறுபான்மையினரின் உரிமை நீக்கப்பட்டது. இரண்டு தேசத்தினை மறுத்து நாட்டிற்று சிறிலங்கா என பெயர் மாற்றினார்கள். அரச உடமையாக்கியதை இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ரூஸ்வெல்ட் கூட வங்கிகளை அரச உடமையாக்கினார். இது முதலாளித்துவத்தின் நெருக்கடியை சமாளிப்பதற்கேயாகும். அரசுடமையாக்கம் என்பது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு தேவையானது என்பதை லெனினிய கருத்தில் இருந்து விளங்கிக் கொள்ளாது. பூர்சுவா அரசாங்கங்களின் செயலில் இருந்து தேசிய முதலாளித்துவம் என்று கற்பனை செய்தார்கள்.
2. சோவியத் என்பது முழுமையாக பண்ணை சார்ந்தும், கமத்தொழில், கால்நடை செய்பவர்கள் உற்பத்தியை தமதாக்கும் செயல் முறை இருந்ததா? அவ்வாறு செய்யப்பட்டதான என ஆய்வாளர்களும் தேடிச் செல்வதில்லை.
நிலம் சார் உற்பத்தி என்பது அந்த மக்களுக்கே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான் சோவியத் பொருளாதாரம் காட்டுகின்ற வழிமுறை. (சோவியத் பொருளாதாரம் தோழர் ஸ்ரானின்) உற்பத்தி செய்த கமத் தொழிலாளர்களே தாம் உற்பத்தி செய்தவற்றில் இருந்து அன்னியப்படுத்தப்பட்டார்கள். கமத் தொழில் தனிமனிதர்களின் உழைப்பை நம்பியே இலாபம் பெற்றுவிட முடியாத ஒரு தொழிற்துறையாகும். கமத்தொழிலுக்கான உழைப்பு என்பது மற்றையத் துறையைப் போல இருக்க முடியாது. (தனியே ஆராயப்பட வேண்டிய விடயம்)
தேசிய முதலாளித்துவம் என்ற கருத்தாக்கம் மாவோவின் ஐக்கிய முன்னணித் தந்திரத்தில் இருந்து தவறாக புரிந்து கொள்கின்றார்கள். "முதலாளித்துவ இயல்புகள் சிலவற்றை கொண்டவராக நிலப்பிரபுக்கள் பல யப்பானிய எதிர்ப்பு யுத்தத்திற்கான தமது ஆவலைச் சிறிது வெளிப்படுத்தினர். ஆகவே யப்பானுக்கு எதிரான பொதுப் போராட்டதில் நாங்கள் அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும் என்றார். மேலும் பிரதான எதிரிகளாக என்று வரையறுக்கும் போது ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும் அதாவது ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பூர்சுவா வர்க்கமும் நமது நாட்டிலுள்ள நிலப்பிரபுத்துவ வர்க்கமேயன்றி வேறு எதுவுமல்ல. ஏனென்றால், தற்போதைய கட்டத்தில் இவையிரண்டுமே பிரதான அடக்குமுறையாளராகவும் சீன சமுதாயத்தின் முன்னேற்றத்தின் பிரதான முட்டுக்கட்டைகளாகவும் இருக்கின்றன. சீன மக்களை அடக்க இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று கூட்டுச் சேர்ந்து கொள்கின்றன. அவற்றில் ஏகாதிபத்தியத்தின் தேசிய அடக்குமுறை மிக்க இன்னால் விளைவிப்பதாயிருப்பதால் ஏகாதிபத்தியமே சீன மக்களின் முதன்மையான எதிரியாகவும் மிகக் கொடிய எதிரியாகவும் விளங்குகின்றது". (ப28 சீ.பு.சீ.க.கட்சியும்)
இதை வைத்து தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான தேசிய முதலாளிகள் எங்குள்ளார்கள் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு தோழர் மாவோ எதிர்ப்பு யுத்தத்தில்ஆவல் கொண்டவர்களையும் (நடுநிலைவாதிகளை இணைப்பது) பற்றியதே செயல்வடிவமாக இருந்தது.
இதையே தான் தேசியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தார், ஐக்கிய முன்னணி கட்டினார் என்று ஏதோ மாவோ தேசியவாதிகளை தனியாக அடையாளம் கட்டதாக எழுதுகின்றார்கள். ஒரு பொதுவுடமைவாதி தேசபக்தனாக இருக்க வேண்டும் என்கின்றார்.
“ஸ்டாலின் படைப்புகள், முன்பு போலவே தீவிரமாகப் படிக்கப்பட வேண்டும். என்பதும் ஒரு முக்கியமான வரலாற்றுப் பாரம்பரியச் சொத்தாக, சிறப்பாக லெனினியத்தை ஆதரித்து சோவியத் ஒன்றியத்தைக் கட்டி யமைக்கும் அனுபவத்தை சரியாகத் தொகுத்துள்ள, பல படைப்புகளில் உள்ள மதிப்புமிக்கவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப் பட வேண்டும். ஆனால் அவற்றை கற்பதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று மார்க்சிய வழி மற்றது வறட்டுச் சூத்திரவாத வழி, சிலர் ஸ்டாலினின் படைப்புகளை ஒரு வறட்டுச் சூத்திரவாத வழியில் பார்க்கிறார்கள். அதனால், அவர்களால் எது சரி எது சரியல்ல என்று பகுத்துப்பார்க்க முடியவில்லை. அவற்றில் ஒவ்வொன்றும் சரி என்றும் கருதுகிறார்கள்; அவற்றைப் பாகுபாடின்றி ஒரு சர்வரோக நிவாரணியாகக் கருதிப் பிரயோகிக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் தவிர்க்க முடியாத வகையில் தவறிழைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, வேறுபட்ட புரட்சிகர காலகட்டங்களில், முதன்மையான அடி, அக்கால கட்டத்தின் சமூக, அரசியல் நடுநிலைச் சக்திகளைத் தனிமைப் படுத்துகிற வகையில் இருக்க வேண்டும் என்ற சூத்திரத்தை ஸ்டாலின் முன்வைத்தார். ஸ்டாலினின் இந்த சூத்திரம் விமர்சனபூர்வ மார்க்சிய கண்ணோட்டத்தில் சூழ்நிலைகளுக்கு எற்ப எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சில சூழ்நிலைகளில், நடுநிலை சக்திகளை தனிமைப்படுத்துவது சரியாக இருக்கலாம். ஆனால் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவர்களைத் தனிமைப்படுத்துவது சரியாக இருக்காது. நமது அனுபவம் நமக்குக் கற்பிப்பது என்னவென்றால் புரட்சியின் முதன்மையான அடி முதன்மையான எதிரியை நோக்கியதாக, அவனைத் தனிமைப் படுத்துவதாக இருக்க வேண்டும், அதே சமயம் நடுநிலை சக்திகளைப் பொறுத்தவரை, அவர்களோடு ஒன்றுபடுவது மற்றும் அவர்களுக்கு எதிராகப் போராடுவது என்ற ஒரு கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் குறைந்தபட்சம் எந்தப்பக்கமும் சாராதவர் களாக்கப்படுவர்; சூழ் நிலைகள் அனுமதிக்கிறபோது, புரட்சியின் வளர்ச்சிக்காக அவர்களை ஒரு நிலையிலிருந்து நம்முடைய கூட்டணிப்பக்கம் மாறும்படி செய்வதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும். 1927 இலிருந்து 1936 வரை நடந்த உள்நாட்டுப் போரில் நமது தோழர்களில் சிலர் ஸ்டாலினின் இந்த சூத்திரத்தை அப்படியே பிரயோகித்தனர்; விளைவு, உண்மையான எதிரியை தனிமைப்படுத்து வதற்குப் பதிலாக நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு உண்மையான எதிரிக்குச் சாதகமான வகையில் நாம் இழப்புகளைச் சந்தித்தோம். இந்த வறட்டுச் சூத்திரவாத தவறினைக் கண்டறிந்த பின்னர் ஜப்பானிய எதிர்ப்பு யுத்தக் காலகட்டத்தில் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை முறியடிப்பதற்காக, சீனக்கம்யூனிஸ்டு கட்சி மத்தியக் குழு முற்போக்கு சக்திகளை வளர்ப்பது, நடுநிலை வகிப்போரை வென்றெடுப்பது, கடும் பிற்போக்காளர்களைத் தனிமைப்படுத்துவது என்னும் கொள்கையை வகுத்தத்து....”
[மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்,
தொகுப்பு-7, பக்கம்:478-479)
இவர்கள் அணிநேரா நாடுகள் என்ற அமைப்பினையும் பஞ்ச சீலக் கொள்கையையும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான கூட்டு என்கின்றார்களா? அல்லது இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கம் தமது நெருக்கடியை சமாளிக்க பயன்படுத்திக் கொண்டதா என்பது பற்றிய ஏதாவது அரசியல் ஆய்வுகள் உள்ளனவா? இலங்கை வரலாற்றில் எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சு.க அல்லது ஐதேக போராடியுள்ளது?? நடுநிலைவாதிகளை கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர முயன்றார்கள்??
சு.க அல்லது பிற்காலத்தைய சிறிலங்கா மக்கள் கட்சி, ஐக்கிய சோசலிச முன்னணி என்ன வீரம் செறிந்த போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள் ஐக்கிய முன்னணியில் இணைந்து கொள்வதற்கு இது தோழர் சண்மீதான விமர்சனத்தைக் குறித்தான கேள்விக்ளாகும்.
ஆனால் தமிழ் தலைமையை விட இந்திய விரிவாக்கத்திற்கு எதிராக சிறிலங்கா தேசிய சக்திகளுடன் சேர்ந்து தான் போராட முயற்சித்தார்கள். அவர்களின் வாதங்களை கீழே பார்ப்போம்.
LSSP, CCP சந்திரிக்கா வரையில்
இந்தக் கட்சிகள் 1989 பின்னர் வெவ்வேறு பக்கமாக சிதறியிருந்தவர்கள். இக்கட்சிகள் இணைந்து செய்றபடுகின்றார்கள். NSSP, LSSP, CCP, சிறிலங்கா மக்கள் கட்சி (மகிந்த, குமாரத்துங்க) போன்றவர்கள் சேர்ந்து ஐக்கிய சோசலிச முன்னணி என்ற ஐக்கிய முன்னணி உருவாகின.
1.இந்திய இராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி விடுதலைப் புலிகள் பற்றி நிறையவே விமர்சனம் வைக்கப்படுகின்றது. ஆனால் புஜமாலெக (CCP இடது என்று முன்னர் அழைத்துக் கொண்டார்கள்.) 1988 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. ‘‘இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரியும், தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்த கோரிக்கை உள்ளடக்கிய ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்த திருமதி சிறிமா பாண்டாரா நாயக்காவிற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தனது பூரண ஆதரைவ வழங்கியது. அத்தேர்தலில் பாராளுமன்ற இடதுசாரிகள் திருமதி பண்டாரநாயக்காவை ஆதரிக்க மறுத்துவிட்டார்கள். (235 இ.இ.இ 50 ஆண்டுகள். சிகாசி) காரணம் LSSP, CCP இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்து இருந்தது.
வி.புலிகள் ஒப்பந்தத்தை ஏற்காதத்திற்கு காரணம் இருக்கின்றது. ஆனால் SLFP ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கு என்ன காரணம் இருந்திருக்கும்?
2. ‘‘பெரும்முதலாளித்துவ யூஎன்பிக்கும் தேசிய முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வர்க்க வளர்ச்சி அடிப்படையில் வித்தியாசம் காண மறுப்பதும், ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்தில்‘‘ (239(235 இ.இ.இ 50 ஆண்டுகள். சிகாசி) ) தவறு விட்டதாக விமர்சிக்கின்றார்கள்.
இந்த அணியினரின் அரசியல் வரலாறு தேசிய ஒடுக்குமுறையை ஆதரித்த அரசாங்கத்தின் வரலாற்றுடன் அணுகிட வேண்டும்.
LSSP, CCP என்பன சீர்திருத்தப் பாதைக்குள் சென்றுவிட்டார்கள். லெனின் பார்வையில் நரோத்திக்கள். அவர்கள் கொள்கையை விட்டு மாறிவிட்டார்கள். 72 இல் ஏற்பட்ட மயக்கம் 94 சமாதான தேவதைக்கு வாங்கு வேட்டையில் இறங்கினார்கள். இவர்கள் இடது அணி எனச் சொல்லப்படுவது ?
ஈழப் போராட்டத்தை அழிக்க தீர்மானம் எடுக்கும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு ‘திரிபுவாதம்‘ என்று விமர்சிப்பதும், ல.ச.ச.க, இ.க.க போன்றவர்கள் பேசுவதும் ஒரே நிலைப்பாடேயாகும்.
சுயநிர்ணயம் என்றால் என்ன?
‘‘முன்னான காலகட்டங்களில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைமீது செயற்படும் ஒரு வேலைத்திட்டம் எதுவும் இருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த விமர்சனங்கள்1972ல் கட்சியின் உடைவின் போதும் அதன் பின்னருமே முன்வைக்கப்பட்டன. (விக்கி - தாய்வீடு)
தீண்டாமை ஒழிப்புப்போராட்டம், செங்கொடிச்சங்கம் என்ற அவர்களது தொழிற்சங்கத்தை வளர்த்தெடுத்தல் போன்ற விடயங்களே பெரிதும் கட்சியின் பிரதான வேலைகளாக இருந்தன. (விக்கி- தாய்வீடு) இந்த விமர்சனம் என்பது தோழர் சண்முகதாசன் தொழிற்சங்கவாதத்திற்கு பலியாகிவிட்டேன் என்ற விமர்சனத்துடன் இணைத்து பார்த்தல் பொருத்தமாகும். இதே போல தரகு- பூர்சுவாக வர்க்கப் பின்புலம் கொண்ட தமிழ் கட்சிகளின் போக்கு இன்று வரையில் மாறாவில்லை. இன்றும் சண்ணின் கட்சியில் இருந்தவர்கள் அதேபாதையில் தான் தொடர்கின்றார்கள்.
"சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக் கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் குடும்ப பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முடடாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல." (தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119)
தோழர் லெனினுக்கும் தோழர் ரூசா லக்செம்பேர்கிற்கும் போலந்தின் சுயநிர்ணயம் பற்றிய கோட்பாட்டு பிரச்சனையில் எந்த நிலைப்பாட்டுப் படிப்பினையை மார்க்சியர்கள் விளங்கிக் கொண்டதாக இல்லை. ‘’பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பது நீங்கள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் பூர்சுவா தேசியவாதத்தை ஆதரிக்கின்றார்கள் என்று நம்மைப் பார்த்து கூறப்படுகின்றது. ரோசா லுக்சம்பர்க் இதைத் தான் சொல்கிறார். இதற்கான நமது பதில் பின்வருமாறு- இல்லை, இப்பிரச்சனைக்கு செயல்பூர்வமாக தீர்வு காண வேண்டும் என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தான் முக்கியமானது. தொழிலாளர்க ளுக்கோ இரு போக்குகளின் கோட்பாடுகளையும் வேறுபடுத்தி அறிவதுதான் முக்கியதானது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம் ஒடுக்குவோரை எதிர்த்து எந்த அளவுக்குப் போராடுகிறதோ அந்த அளவுக்கு நாம் அப் போராட்டத்தின் எல்லா நிகழ்வுகளையும் எப்போதும் வேறு எவரைக் காட்டிலும் அதிக உறுதியாகவும் ஆதரிக்கிறோம். ஏனென்றால் நாம் ஒடுக்குமுறையின் சிறிதும் விட்டுக் கொடுக்காத நிலையுறுதியுள்ள எதிரிகளாவோம். ஆனால் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம் எந்த அளவுக்குத் தனது சொந்த பூர்சுவா தேசியவாதத்திற்குச் சார்பாக நிற்கிறதோ அந்த அளவுக்கு நாம் அதை எதிர்க்கிறோம். ஒடுக்கும் தேசிய இனத்தின் தனியுரிமைக ளையும் வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறோம், ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தன் பங்குக்குத் தனியுரிமை கோரி நடத்தும் முயற்சிகளை எவ்விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்.
பிரிந்து போகும் உரிமை என்ற கோசத்தை நமது கிளர்ச்சியில் முன்னிறுத்தி ஆதரித்து பேசத் தவறுவோமேயானால் நாம் முதலாளி வர்க்கத்தின் பிடியில் தானே சென்று சிக்கிக் கொள்வோம் என்பது மட்டுமல்ல, ஒடுக்கும் தேசிய இனத்தின் நிலப்பிரபுக்கள் மற்றும் அதன் வரம்பிலாக ஆட்சியின் பிடியிலும் கூட தானே சென்று சிக்கிக் கொள்வோம். ரோசா லுக்சம்பர்க்குக்கு எதிரான இந்த வாதத்தை காவுத்ஸ்கியால் நெடுநாட்டிளுக்கு முன்னே பயன்படுத்தினார். இந்த வாதம் மறுக்க முடியாதது. போலந்தின் தேசியவாத முதலாளி வர்க்கத்தினருக்கு உதவக் கூடாதே என்ற கவலையில் ரோசா லுக்சம்பர்க் ருஸ்யாவின் மார்க்சியவாதிகளின் வேலைத் திட்டத்திலுள்ள பிரிந்து போகும் உரிமையை நிராகரிக்கிறார். அவ்வாறு செய்வது மூலம் அவர் உண்மையில் மகா ருஸ்ய கறுப்பு நூற்றவருக்கு உதவுகிறார். அவர் உண்மையில் மகாருஸ்யர்களின் தனியுரிமைகளை (தனியுரிமை களை விட மோசமானவற்றை) சந்தர்ப்பவாத நோக்கில் சகித்துக் கொள்வதற்கு உதவுகிறார். (101-102) (தே.இ.பா.வ.சர்)
இலக்கியப் பேரவை, இலக்கியக் கூட்டங்கள், அதே வாய்ப்பாட்டுவாதம் தொடர்கின்றது.
இனமத குலமற்று இணைய வேண்டும் - ஒன்று கலத்தல் பற்றிய லெனினிய வழிகாட்டலும் போலி இடதுசாரியமும்.
‘தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது என்பது இன்றைய சிறிலங்காவின் ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்பதன் ஒரு அங்கமாகும். இந்தப் புரட்சியில், மொழி, சாதி, இன பேதமின்றி சிங்களவர் தமிழர் இரு சாரார் மத்தியிலுமுள்ள புரட்சிகர சக்திகள் குறிப்பாக தொழிலாளர்கள், விவசாயிகள்,தீவிர மனோபாவமுடைய புத்திஜீவிகள் ஆகியோர் ஒன்றிணைய வேண்டும்!.’ (விக்கி). இது ஒரு மார்க்சிய லெனினிய இயக்கியல், வரலாற்றுப் பொருள்முதல்லாதப் பிரச்சனையாகும். மேல் உள்ள வாதம் என்பது இன்றைய மு.சோ.க, ஜேவிபி, பு.ஜ.மா.லெ.க என்பனவும் உதிரியாக இடதுசாரி என்பவர்களும் பேசிக் கொண்டிருப்பதாகும்.
இந்த விடயத்த விவாதிப்பதற்கு சிங்கள பேரினவாத சிவப்புக்களை இந்த விவாதத்தினுள் நுழைப்பது அவ்வளவு இலகுவல்ல. ஏனெனில் இனமதகுலமற்றுப் போராடுவோம் என்று தமிழ் மக்களிடையே நுழைந்த மு. சோ.க எவ்வாறு நம்பிக்கையற்ற விதத்தில் அரசியல் செய்தார்கள் என்பது தெரிந்தது. ஏனெனில் exotic phenomenon – கவர்ச்சியான நிகழ்வியமாக அல்லது ஆச்சரியமாக அவர்களுக்கு இருக்கின்றது. அந்த அமைப்பு உறுப்பினர்கள் முதலாளித்துவ வளர்ச்சியடையாத நாட்டில் தேசிய சனநாயகப் புரட்சி பற்றி பேசுகின்ற போது இனவாதி என்றே அழைத்தனர்.
ஆனால் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறும் தமிழ் தரப்பில் இருந்தும் கூட சிங்கள இனவாத போலி சிவப்புக்களுக்கு நிகராக இருக்கின்றது.
”ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம் என்பது
இனவாதம், குறுங்குழுவாதம், தமிழ் முதலாளிகளுக்காக போராட்டம்.
தீவிரப்படுத்தப்படுவது ஆட்சியாளர்களின் கைகளில் தான் தங்கியிருக்கின்றது. வர்க்கப் போராட்டம் என்றால் தனியே இருப்பவர் இல்லாதவர் என்று பொதுப்புத்தியில் பசுமரத்து ஆணிபோலி அறையப்பட்டுள்ளது.
இதற்கு மீறி சிந்திக்க முடியாதவர்கள் அதற்குள் இருந்து கருத்தோட்டங்களை கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள். நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருந்தோர் நாளையில்லை. மாற்றம் ஒன்றே மாறாது.
இன்றையக் காலமென்பது வேகமான நுகர்வு பழக்கமும், நுகர்வின் தேவையை நிறைவு செய்வதும், அந்த நுகர்விற்கு பழக்கப்படுதல் என்ற சுழற்சி வலையில் மாட்டப் பட்டுள்ளோம். ”
-------------------
பாரம்பரிய இடதுசாரியமானது "சுயநிர்ணயம் என்றால் என்ன என்பதை அதன் முழுமையான பொருளில் சிங்கள வெகுசனங்கட்கு விளக்கி அவர்கள் பேரினவாதிகளால் திசைதிருப்பப்படாலம் தடுப்பது சிங்கள முற்போக்காளர்களின் கடமையாகும். சுயநிர்ணயம் என்றால் பிரிவினைக்கான உரிமை என்பதை விடவும் விரிவான பொருளை உடையது என அறிய மக்களுக்கு உரிமை உண்டு. முக்கியமாக, ஐக்கிய இலங்கை என்ற வரம்பிற்குள், சம்பந்தப்பட்ட தேசிய இனங்கள் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வுகளை ஆராய்வதற்கான உரிமையும் அது குறிக்கிறது என்பதும் விளக்கப்பட வேண்டும். சிறந்த தீர்வு சமஸ்டி அரசு முறையாக பிரதேச சுயாட்சியா வேறுவகையான தன்னாட்சி முறையா என்பது கலந்தாலோசித்துத் தீர்மானிக்க வேண்டிய விடயம். எவ்வாறாயினும், ஒரு தீர்வின் உறுதிப்பாடு, சனநாயகம் வலுப்படுத்தும் நோக்கில் அதிகாரத்தின் அதிகபட்சப் பரவலாக்கத்தால் மேலும் வலுப்பெறும் என்பது இங்கு வற்புறுத்தப்பட வேண்டும்". (ப. 19 சுயநிர்ணயம் பற்றி- இமயவரம்பன்)
-------------
வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையில் வர்க்க முரண்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.
‘’வர்க்கங்கள் போரிடுகின்றன, சில வர்க்கங்கள் வெற்றியடைகின்றன, சில வர்க்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. இத்தகையது தான் வரலாறு. இத்தகையது தான் ஆயிரமாயிரம் ஆண்டுகால நாகரீகத்தின் வரலாறு. இந்தக் கண்ணோட்டத் திலிருந்து வரலாற்றை விளக்குவது சரித்திரவியல்- பொருள்முதல்வாதம், இந்தக் கண்ணோட்டத்துக்கு எதிராக நிற்பது சரித்திரவியல் - கருத்துமுதல்வாதம். (11.மா.மேற்கோள்கள்)
"இதுதாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறாகும். (ப.41.க.க.அறிக்கை)
பு.ஜ.மா.லெ. கட்சியும் ஈழப் போராட்டமும்
அரசியல் விமர்சனம் ஆய்வு செய்ய வேண்டுமானால் நிறையப் புத்தகங்கள் வாசிக்க வேண்டும். எனெனில் ஈழத் தமிழ் சமூகத்தின் மா.லெ புரிதல் என்பது குறிப்பிட்ட நபர்களை மையாக வைத்தே சீரளிவுக்குச் சென்றுள்ளது. ஆனால் மார்க்சியம் என்பதை மறக்க வேண்டுமாக இருந்தால் வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை என்ற புத்தகத்தை வாசித்தால் போதுமானது. அதில் வரும் எழுத்துக்கள், அறிக்கைகள் அனைத்தும் தம்மை இடதுசாரியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற உள்விருப்பத்தில் இருந்து அமைந்ததாகவே இருக்கின்றது. இந்த எழுத்திற்கு சிங்கள தேசம் நிச்சயம் விருது வழங்கும். அது காலம் தாழ்த்தியாவது நடைபெறும் அவ்வாறு ஒரு திரிபுவாத (மார்க்சிய மொழியில்) த்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எழுத்து. ‘‘ தமிழ் மக்கள் மத்தியில் நாம் எவற்றைச் சாத்தியமற்றவையென்றும் தவறானவையென்றும் மக்களுக்கு விரோதமானவையென்றும் கூறிவந்தோமோ அவை தீங்கானவை என இன்று மக்களின் பேரழிவுகட்கு மத்தியில் நடைமுறையில் நிரூபணமாகி உள்ளது. (ப.3 வ- மு வரை சிகாசி.)
இவ்வாறு செயலூக்கமற்ற கட்சியைக் கொண்டு இவ்வாறு தான் சாத்திரம் கூறமுடியும். சாத்தியம் கூறுவதற்கு ஒரு கட்சி அவசியமில்லை. இவர்கள் தோழர் லெனின் கூறுகின்ற ”சோஷலிசப் புரட்சி என்பது ஒரே தனிச் செயல் அல்ல, ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல; கூர்மையான வர்க்கச் சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது, எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராடங்கள் நடக்கும் சகாப்தம் அது ” என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது துயரே.
மார்க்சிய லெனினிய ஆய்வு முறையை என்பது எல்லாம் மிகைப்படுத்தல். ஆனால் அவரின் எழுத்து திறமையை மட்டும் பாராட்டுக்குரியது. ஏனெனில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஒன்றையே ஒப்பித்துக் கொண்டு வந்திருக்கின்றார்கள். எனவே 290 பக்கத்தில் எழுவது ஒன்றும் பெரிய காரியமில்லை. இவர்கள் எல்லாம் சிறுவர்களுக்கான கதை எழுத முயற்சி செய்திருக்கலாம்.
(19.07.21 அன்று
இரண்டு நாட்கள் முன்பு சில தமிழ்த் தேசியத் தரப்புக் கட்சிகள் தம்முள் கூடிப் பேசியதாகச் செய்திகள் வெளிவந்தன.இது பழைமைவாதப் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தை உள்ளீடாகக் கொண்ட பழுதடைந்த பழைய ரொட்டியைப் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கருக்கிக் கொள்வது போன்ற செயலே அன்றி வேறெதுவும் இல்லை.தங்களுக்குள் அடிபிடிப் பட்டாலும் பிற்போக்குத் தமிழ்த் தேசிய ஆண்ட பரம்பரை ஆதிக்க அரசியலை கையிழக்கத் தயாரில்லை என்பதே அவர்களது நீண்டகால அரசியல் நிலைப்பாடாகும்.அதனைக் கட்டிக் காக்கவே தமக்குள் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்.இவ் ஏமாற்றைத் தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டால் போதுமானதாகும்.”
திரு செந்தில்வேல் யாருக்கு என்ன செய்தி சொல்ல வருகின்றார்?? இவர்களால் தேசிய இயக்க வளர்ச்சி பற்றிய லெனினியத்தை கற்க முடியவில்லை? தரகு வர்க்கத்தை அம்பலப்படுத்தும் கடமை இவர்களுக்கு இல்லையா? தேசிய இயக்கத்தை வளர்த்தெடுக்கும் கடமை இவர்களுக்கு இல்லையா? ஏன் இவ்வாறு ஒப்பித்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்??
இதை எழுதும் போது பல சீடர்கள் கோபம் கொள்வார்கள். https://www.youtube.com/watch?app=desktop&v=UXcaOvLZSoo இரசிகர்களின் அரசியலை மறந்து பொதுப்புத்தியை காணமுடிந்தது. மேலும் சீடர்களின் அரசியல் தேடலும் குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இருக்கின்றது. முகநூலில் கருத்தாடும் இவர்கள் கட்சியைத் சேர்ந்தவர்கள் எவ்வாறு அரசியல் குறுக்குவாதிகளாக இருக்கின்றனர் என்பதை அறிந்துள்ளேன்.
1. பூர்சுவாக்களுடன் சேர்ந்து கொசிப்பில் ஈடுபடுவது
2. அரைகுறையாக புரிந்து கொண்டு இனவாதி என்பது
3. தமிழகத்தைப் போல திரிபுவாதக் கருத்தைக் கொண்டவர் என்பது
4. ஏன் இதிலும் சிகாசி செந்தில்வேல் கூட நம்மை தடைசெய்து அகன்று விட்டார். இது ஒன்றும் நமக்கு துயர் அல்லர். இங்கு தலைவர் எனப்படுபவர் மார்க்சிய லெனினியத்தை விவாதிக்கத் தயாராக இல்லாது கிணற்றுத் தவளையாக கலை இலக்கிய மன்றத்தில் தூங்குவதும், வெட்டிப் பேச்சு நடத்துவது, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக போராடுவது, இப்போ கையில் எடுத்திருப்பது தலித்தியம். கடந்த தேர்தலில் செந்தில்வேலின் பேச்சு மிக அபாரம். அவரின் பேச்சை முகநூலில் பகிர்ந்து இது மார்க்சியமா என்றேன்.
5. புஜமாலெக உறுப்பினர்கள் பெரியார் தேவை என்று தன்னிச்சையாக எழுதிக் கொள்கின்றார்கள். இது புருத்தோன் போன்றவர்கள் (கலகக்கார், அனார்க்கியர்கள்) தேவை என்பது போலவேயாகும். மார்க்சியம் என்ற சித்தாந்தம், திறனாய்வு முறையை முன்னிறுத்திய அடையாள- கலகக்கார அரசியலும் ஒன்றா அல்லது அவற்றுக்கான வேறுபாடு என்பதை தெரியாதவர்கள் கட்சியில் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தம்மை ஒரே ஒரு பொதுவுடமைக் கட்சி என்று மார்தட்டுபவர்கள். அவர்களின் உறுப்பினர்களுக்கு சித்தாந்தம் எது சீர்திருத்தவாத, அடையாள அரசியல் சம்பந்தமாக பயிற்சி கொடுக்கவில்லை என்பதே வெளிப்படுகின்றது.
நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் மாக்சிய லெனினிய புரிதல் இல்லாது களமாடுகின்றார்கள்.) உங்கள் அங்கீகாரம் நமக்கு அவசியமற்றது. எவரின் அங்கீகாரத்துக்காய் நாம் எழுதுவது இல்லை.) சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சியில் தேசிய இனம், தேசம் என்பதை ஏன் மறுக்கின்றீர்கள்?? நீங்கள் மறுக்கின்ற போது உங்களைப் போல ஒப்பிப்புவாதிகளை எதிர்க் கொள்வது என்பது உங்கள் இரசிகர்களையும் கடந்தே உங்களுக்கான விமர்சனத்தை வைக்க வேண்டியிருக்கின்றது. நீங்கள் தோழர் சண்ணை புத்தகத்தினுள் மூழ்கியதாக விமர்சித்தீர்கள்.
ஆனால் இது எழுதிக் கொண்டிருக்கும் போது தலைவர் சண்முகதாசன் அரசியல் ஞானத்தில் எம்மை விட உயர்திருக்கின்றார். இந்தக் காலத்தில் தலைவர் சண்பற்றி எழுத வேண்டும் என்ற நிலையில் பலதை மீளவும் வாசிக்க வேண்டி ஏற்பட்டது. அது வரையிலும் தோழர் சண் என் மரியாதை போதுமாக இருந்தது. ஆனால் ஒரு கால எல்லையில் (படிப்பு, அனுபவம், வயது) ஒரு மனிதர் சர்வதேச அளவில் சிந்திக்க முடியும் என்றால் அதற்கு மேலதிகமான திறமை இருக்க வேண்டும். ஒரு வரலாற்று மாணவனாக அவரையும் அவர் வரலாற்றையும் கற்கின்ற போது தலைவர் சண் ஒரு உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்.
தோழர் சண்முகதாசன் மார்க்சிய மூன்று தத்துவக் கூறுகளில் இருந்து பிறழவில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட நாட்டில் சமூக அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் தவறு செய்துள்ளார். ஆனால் தோழர் சண் மீது விமர்சனம் வைப்பவர்கள் தான் திரிபுவாதிகள். விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ளலாம், உற்பத்திமுறை, வர்க்க முரண்பாடு பற்றிய புரிதல்கள் இல்லாமையை அவர்களின் எழுத்துக்களில் காணமுடிகின்றது.
1991 இல் சோவியத் ஒன்றியம் முடிவிற்கு வருகின்றது. இந்தக் காலத்தில் என்றுமில்லாதவாறு மார்க்சியத்திற்கு முடிவு வந்துவிட்டது, சாத்தியப்படாத சித்தாந்தம் என்று பரப்புரையை ஊடகமெங்கும் காணவும், அறியவும் முடிந்தது. அந்த பரப்புரைக்கு அப்பாலும் மார்க்சிய மாணவர்களாக எம்போன்ற இளையவர்கள் நிலைத்திருக்க முடிந்தது (தமிழக தோழர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்) தோழர் சண்முகதாசனை ” சண் மார்க்சிய வழிமுறையைத் துறந்த இடது சந்தர்ப்பவாதியாகித் துரோகமிழைத்ததாலே” இதிலும் வேடிக்கை தோழர் சண்னை புத்தக வாதி என்று விமர்சிப்பவர்கள். மார்க்சியத்தின் மீது தொடுக்கப்பட்ட எதிர் பரப்புரையை அறியாததே.
”மார்க்சிசம் வீழ்ந்து விட்டது , ஏன், மறைந்தே போய் விட்டது என்று வெற்றிமுழக்கமிட்டு மாதந்தோறும் உலகுக்குப் பிரகடனப்படுத்தும் மிதவாதப் பிரச்சாரகர்கள். (147எ.செ.வே.லெ) இது 1902 இல் தோழர் லெனின் எழுதியது. ஆம் அன்று உலகில் மார்க்சிய நம்பிக்கை கொண்ட நாடுகள் எதுவும் இல்லாத காலம். அந்தக் காலத்திலேயே மார்க்சியத்தின் மீதான எதிர்ப்பிரச்சாரங்களை எதிர்க் கொண்ட காலம். தோழர் லெனின் எழுதிய காலங்களை விட 90 வருடங்கள் பல வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த சமூகம் எவ்வகையாக சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் 1991 இல் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் வெட்கித் தலைகுனிந்து தமது கட்சியின் பெயரை மாற்றினார்கள். இவர்கள் எல்லாம் மார்க்சிய சிந்தனையில் ஊறியவர்களா?
மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும், வலதுசாரி சிந்தனை கொண்டவர்களுக்குமான மாறுபாடாகும். உருக்குக் கொண்ட நம்பிக்கையுள்ள தோழர் லெனின் எங்கே? இவர்கள் எங்கே? 1991 இல் இளம் வயது கொண்ட மார்க்சிய மாணவர்கள் நாம் கூட மனம் தளரவில்லை. நாம் தொடர்ந்து படித்தோம். ஏன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொதுவுடமைக் கட்சி என்ற பெயரை மாற்றாத நிலமையை நாம் அறிவோம். கிழக்கைரோப்பிய நாடுகளில் திரிபுவாதிகள் மாற்றிக் கொண்டார்கள் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
புதிய சனநாயகம் இது என்ன? முதலாளித்துவம் புரட்சி முழுமை அடையாத நாடுகளின் நிலையில் இருந்து புரட்சியை அணுகும் போக்காகும். நிலப்பிரபுத்துவ பொருளாதார கட்டமைப்பு, சமூக உறவும், சிந்தனையும் நிலமானியத்திற்கு உட்பட்டதாகும்.
ருசியாவில் 1905 இல் முதலாளித்துவ புரட்சி எனக் கொள்ளப்படுகின்றது. ஆனால் தோழர் முதலாவது 5ம் திட்டத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற வரைவின் அடிப்படையில் குட்டிமுதலாளித்துவ- பூர்சுவா அதிகார வர்க்கத்தையும் சேர்த்து நிர்வாகம் செய்வது பற்றி வழிகாட்டுகின்றார், தோழர் மாவோ ஆட்சியதிகாரம் பெற்ற பின்னரான சீர்திருத்தம், பண்பாட்டுப் புரட்சி என்று வழிநடத்திச் செல்கின்றார்.
இவ்வாறு இருக்கையில் புதியசனநாயம் என்பதையும் மார்க்சிய லெனினியக் கட்சி என்பதையும இணைத்து எழுவது எந்த வகைச் கோட்பாடு?? இவர்கள் மார்க்சிசத்தை விளங்கித் தான் செயற்படுகின்றார்களா என்ற ஐயம் இருக்கவே செய்கின்றது. நாம் ஏதாவது எழுதினால் ஊகம் என்பார்கள். அவர்களாகவே கோட்பாட்டு விளக்கம் தர அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுகின்றது.
பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீது எந்தக் காலத்திலும் புரட்சியாளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படக் கூடாது. இது தனிநபர்களிடம் இருந்து கட்சிக்கு மாறுபடும். ஒரு கட்சிக்கு அவநம்பிக்கை வரமுடியாது. கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். அது சிந்தாந்தம், உக்தி, செயல்வடிவம் கொண்டு உருக்குவடிவம் கொண்டதாகும்.
2009 பின்னரும் மாற்றமில்லை
இது இனமதகுலபேதமற்று என்ற நிலைப்பாட்டிற்கு மாறானது அல்ல. போராடியதே தவறு, போராட்டமே தவறு சி.கா.சி இதில் சிகாசி குறிசொல்பவர் ஆகின்றார்,
தோழர் லெனின் ‘‘இந்த நிலைமை அதிக காலத்துக்கு நீடிக்குமா? இது புரட்சிக்கு இட்டுச் செல்லுமா? இவற்றை யாம் அறியோம், யாராலும் அறியவும் முடியாது.
புரட்சிகர உணர்வினுடைய வளர்ச்சியின் போதும், முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர செயலுக்குரிய கட்டத்துக்கு அவ்வர்க்கம் செல்லும் போதும் கிடைக்கிற அனுபவத்தால் மட்டுமே இதற்கு பதில் கூறமுடியும், இது சம்பந்தமாக பிரமைகள் குறித்தோ, அவற்றை நிராகரிப்பது குறித்தோ பேசுவதற்கு இடமில்லை,
ஏனெனில் எந்த சோசலிஸ்டும் இந்த யுத்தம் இன்றைய புரட்சிகர சூழ்நிலை புரட்சியை உண்டாக்கிவிடும் என்று அறுதியிட்டுக் கூறியதேயில்லை. எல்லா சோசலிஸ்டுகளுக்குமுள்ள மறுக்க முடியாத அடிப்படையான கடமையைப் பற்றித்தான் - புரட்சிகர சூழ்நிலை இருப்பதை வெகுஜனங்களுக்குப் புலப்படச் செய்வது,
அதன் வீச்சையும் ஆழத்தையும் விளக்கிக் கூறுவது,
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வினையும், புரட்சிகர வைராக்கியத்தையும் தட்டியெழுப்புவது,
புரட்சிகர செயலுக்குச் செல்ல அதற்கு உதவுவது,
அதன் பொருட்டு புரட்சிகர சூழ்நிலைக்கு ஏற்ற நிறுவனங்களை அமைத்திடுவது ஆகிய - இந்தக் கடமையைத்தான் நாம் முன்வைக்கிறோம் " லெனின் " போர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள் " தோழர் லெனின் தேர்வு நூல்கள் தொகுதி-10, பக்கம் 242 )
ஈழத் தமிழ் இடதுசாரிகள் எழுச்சிக் கட்டத்தில் இருக்கின்ற ஈழதேசப் போராட்டத்தை முன்னெடுக்காது. 2009 வீழ்ச்சியின் பின்னர் எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போன்ற போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. இப் போராட்டத்தை தமிழ் போலி இடதுசாரிகளான ‘‘தமிழ் இனவாதம் –ந. ரவீந்திரன்) குறுங்குழுவாதம் என்றும் ‘‘புலிகளின் தாயகம் தமிழீழத் தாயகம்‘‘என்ற குறுந்தேசிய தாரகமந்திரத்தால் நியாயப்படுத்தப்பட்டன‘‘ (149 வ இ மு வரை சிகாசி.)
இங்கு எழுச்சிக் கட்டத்தில் இருந்து தேசம் ஒரு புறம் முதலாளித்துவ சனநாயகப் புரட்சியை மறுத்த ஜேவிபியின் இனவாதம் சார்ந்த (ஏகாதிபத்தியவாத பொருளாதார) இருந்த நிலையில் தமிழ் இடதுசாரிகள் தவறிழைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
‘‘பூர்சுவா சமுதாயத்தில் தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணயம், அவைகள் சுயேச்சையான அரசுகளாக வாழ்தல் ஆகிய பிரச்சனைக்குப் பதிலாக அவைகளின் பொருளதார சுயேச்சையும் கட்டின்மையும் பற்றிய பிரச்சனையை ரோஸா லுக்ஸசம் பர்க் எடுத்துக் கொள்கிறார். (13 லெனின்)
இதனை ஏகாதிபத்திய பொருளாதாரவாதம், பொருளாதாரவாதத்தினை பேசுபவர்கள் இந்த பகுதியை பொருந்தி வாசிக்கவும்.
‘‘முதலாளித்துவம் குலைந்து வீழ்வதற்கு முன்னால் சுயேச்சையான தேசிய அரசுகள் என்ற ஒரு அமைப்பு முறையை ஐரோப்பாவைப் போல உருவாக்குவதற்கு ஆசியாவுக்கு காலமிருக்குமா என்பதை நாம் சொல்வதற்கில்லை, ஆனால் முதலாளித்துவமானது ஆசியாவைத் தட்டி எழுப்பிவிட்டடதன் விளைவாக அக்கண்டத்திலும் கூட எல்லா விடங்களிலும் தேசிய இயக்கங்களைத் தோற்றுவித்திருக்கின்றது என்பதும் உருவாதற்கு வழி செய்யும் பாதையை நோக்கிச் செல்லும் போக்கு என்றும், இத்தகைய அரசுகள் தான் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கேற்ற மிகச் சிறந்த நிலைமைகளை உண்டாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மைகள். ஆசியாவின் உதாரணம் காவுத்ஸ்கிக்குச் சாதகமாகவும் ரோஸா லுக்ஸம்பர்க்குக்கு எதிராகவும் இருக்கின்றது. (14லெ- தே.இ.சு.உ)
முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விழைவை லெனின் சரியாக முன்வைக்கின்றார். மெலும் ஏகாதிபத்திய காலம் கட்டம் பற்றிய தோழர் லெனினின் விரிந்த பார்வையை இங்கே பெற முடியும்.
”சோஷலிசப் புரட்சி என்பது ஒரே தனிச் செயல் அல்ல, ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல; கூர்மையான வர்க்கச் சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது, எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராடங்கள் நடக்கும் சகாப்தம் அது;” (181) இங்கு ஜனநாயகப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தை திசை திருப்பாது என்கின்றார். ஜனநாயகத்துக்காக எல்லா முனைகளிலும் முரண்பாடுகளின்றி புரட்சிகர போராட்டம் நடத்தாது பாட்டாளி தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பது ஏகாதிபத்தியத்தின் கீழ் ”செயல்பூர்வமானதல்ல” என்றோ ”ஏமாற்றத் தன்மை வாய்ந்தது ” என்றோ கூறி அதை ஜனநாயகச் செயல்திட்டத்தின் ஒரு பிரிவிலிருந்து நீக்கி விடுவது பெரிய தவறுதான். முதலாளித்துவத்தின் கட்டமைப்புகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை செயல்பூர்வமானதல்ல என்ற வாதத்தை எவ்வித எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல என்ற பொருளாதார அர்தத்திலோ அல்லது நிபந்தனைக் குட்பட்டது என்ற அரசியல் அர்தத்திலோ புரிந்து கொள்ள முடியும்”” (182)வர்க்கம் பூர்சுவா வர்க்கத்தை வெற்றி கொள்ள முடியாது என்கின்றார்.
”
அர்த்தம் 1. கோட்பாட்டுத் தவறு பற்றி
சுயநிர்ணயம் தவறு என்போர் ”உழைப்புப் பணம் அல்லது நெருக்கடிகளை ஒழித்தல் முதலியன முதலாளித்துவத்தின் கீழ் செயல்பூர்வமானவை அல்ல. தேசிய இனங்களின் சுயநிர்ணயமும் அதேமாதிரி செயல்பூர்வமானது அல்ல என்பது முழுக்க முழுக்கத் தவறு.”( 182)
இந்தப் பகுதியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலாளித்துவ வளர்ச்சி எவ்வாறு முன்னேறிய முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கு வளர்த்தெடுக்கின்றது என்பது பற்றி திரும்பத் திரும்ப வெவ்வேறு தளத்தில் கூறுகின்றார். அதாவது செயல்பூர்வம் – வளர்ச்சியை தூண்டுகின்றது, முன்னோக்கி நகர்கின்றது என்ற பொருளிலேயே அதனை விளங்கிட முடியும்.
அர்த்தம் 2
நோர்வே பிரிந்ததின் ஊடாக ”செயல்பூர்வமானது” என்கின்றார்.
அர்த்தம் 3.
முதலாளித்துவ தேசிய ஜனநாயக இயக்கங்கள் வளரும் என்பதை மறுப்பது தவறு என்கின்றார்.
அர்த்தம் 4.
ஏகாதிபத்தியங்கள் தரகு வர்க்கத்தை வைத்து எவ்வாறு ஆட்சி செய்வார்கள் என்பது பற்றி தோழர் லெனின் அறிவுறுத்துகின்றார்.
இதனை தோழர் மாவோ பின்கொலனித்துவம், அரை கொலனித்துவம் என்கின்றார். இந்த இடத்தில் தான் ஒவ்வொரு தேசங்களின் சந்தையையும், எல்லை, அரசுரிமை சாத்தியமில்லை என்கின்றார்கள்.
தோழர் லெனின் இந்த ஆய்வு முடிவு விளங்கிக் கொள்வதற்கு சிரமானது எனவே அவரின் எழுத்தையே முழுவதுமாக எழுதப்படுகின்றது. இன்று தோழர் லெனினின் ஏகாதிபத்திய வரையறை போதாது, ஏகாபத்திய முறை வேறாக உள்ளது. ஏகாதிபத்தியம் பண்பு முறையில் வளர்ச்சியடைந்துள்ளது. அது மென்மேலும் முதலாளித்துவ ஜனநாயக நிர்வாக அலகில் தனக்குத் தேவையான வகையில் சிறப்புத் தேர்ச்சியை முன்னிறுத்தியிருக்கின்றது. தோழர் மாவோ சமச் சீரற்ற ஒப்பந்தங்களை ஏகாதிபத்தியங்கள் திணிக்கின்றது என்கின்றார். அதையும சேர்ந்துப் படிக்க வேண்டும்.
”நான்காவதாக, விரிந்து பரவத் துடித்துக் கொண்டிருக்கும் நிதி மூலதனமானது எந்த ஒரு நாட்டினுடையவும், ”சுயேட்சையான” நாட்டினதுங் கூட மிகச் சுதந்திரமான ஜனநாயக, குடியரசு அரசாங்கத்தையும் அதன் தேர்ந்தெடுக்கபட்ட அதிகாரிகளையும் ”சுதந்திரமான” விலைகொடுத்து வாங்கவோ அல்லது கைக்கூலி கொடுத்து வசப்படுத்தவோ முடியும். அரசியல் ஜனநாயகத் துறையில் எந்த விதமான சீர்திருத்தங்களையும் செய்வதன் மூலம் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை, பொதுவாக மூலதனத்தின் ஆதிக்கத்தை அகற்றிவிட முடியாது; சுயநிர்ணயம் என்பது முழுமையாகவும் பிரத்தியேகமாகவும் இத்துறையைச் சேர்ந்தது . ஆனால் அரசியல் ஜனநாயகம் ஒடுக்குமுறை, வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் அதிக சுதந்திரமான, பரவலான, தெளிவான ஒரு வடிவம் என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மையை நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கம் சிறிதும் சிதைப்பதில்லை. எனவே முதலாளித்துவத்தின் கீழ் அரசியல் ஜனநாயகத்துக்கான ஒரு கோரிக்கை பொருளாதார ரீதியில் ”செயல்பூர்வமற்றது” என்று கூறும் வாதங்கள் அனைத்தையும் சுருக்கினால் அவை முதலாளித்துவத்தின் பொதுவான, அடிப்படை உறவுகளையும் மொத்தத்தில் அரசியல் ஜனநாயகத்தையும் தத்துவாத்த ரீதியில் தவறாக வரையறை செய்வதாகின்றன.” (182-3)
குறிப்பான நாட்டில் உள்ள ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும். இந்த நாடுகள் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்து ஒடுக்கும் தேசத்தின் சந்தையை தாரைவார்க்கின்றார்கள். இங்கு சிங்கள தேசம் 2009 பின்னர் முழுச் சந்தையையும் திறந்து விட்டுள்ளது.
1905 நோர்வே பிரிந்ததை ஏகாதிபத்தியத்தின் கீழு ஓரளவுக்குத் தான் ”செயல்பூர்வமானவை” தேசியத்தின் பெயரால் பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றார் என்று தோழர் லெனின் கருதவில்லை. ஏனெனில் சுதந்திரமான மனிதர்கள் அல்லது தேசங்கள் முரணற்ற வகையில் ஜனநாயகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதேயாகும். தேர்தல் அரசியல் வாதிகளின் பின்னால் சென்று சீரளித்து போயும் சீழ் பிடித்த அரைநிலமானியக் அரச கட்டமைப்புகள் வாழ்வதற்கு இனமதகுலமற்று என்று ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு விடயம் கொலனித்துவ விடுதலை என்பதும் முதலாளித்துவத்தின் கீழ்
”செயல்பூர்வமற்றது” என்பதற்காக போராடக் கூடாதா கேள்வியையும் எழுப்புகின்றார் (184)
”பூர்சுவாக்களின் சட்டமுறை வரம்புகள் நாம் கட்டுண்டு விடக் கூடாது, அவற்றை உழைத்தெறிய வேண்டும்; பாராளுமன்ற வாய்ச்சொல் கண்டனத்தோடு, உரைகள் நிகழ்த்துவதோடு திருப்பதி அடைந்து விடக் நுடாது, பொதுமக்களைச் செயலூக்கம் உள்ள போராட்டங்களில் ஈடுபடும்படி ஈர்க்க வேண்டும், ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக் கோரிக்கைக்குமான போராட்டத்தை ஊட்டி வளர்த்து விரிவாக்கி வரவேண்டும், பூர்சுவாக்களின் மீது நேரடியான பாட்டாளி வர்க்கத் தாக்குதல் வரை, அதாவது பூர்ஷ்வாக்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்யும் சோஷலிஸ்டுப் புரட்சி வரை இது நடைபெற வேண்டும். ஒரு பெரிய வேலை நிறுத்தம் அல்லது தெரு ஆர்ப்பாட்டம், அல்லது பட்டினிக் கலகம், அல்லது ராணுவ எழுச்சி, அல்லது கொலனிப் புரட்சி ஆகிய எந்த ஓரு காரணத்தாலும் சோஷலிஸ்டுப் புரட்சி வெடித்தெழலாம் என்பது மட்டுமல்ல;-- ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிந்து போவது பற்றிய பொதுவாக்கெடுப்பு போன்ற அரசியல் நெருக்கடிகளாலும் கூட அது வெடித்தெழலாம்.
ஏகாதிபத்தியத்தின் கீழ் தேசிய இனஒடுக்குமுறை அதிகமாக இருக்கிறது என்பதற்காக, தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை – இதைக் ‘கற்பனை ரீதியானது” என்கின்றார்கள் பூர்சுவாக்கள்- சமூக ஜனநாயகவாதிகள் நிராகரித்துவிடக் கூடாது; அதற்கு மாறாக, இத்துறையில் எழும் பூசல்களையும் கூடக்; கொழுகொம்பாக ப் பற்றிக் கொண்டு, பொதுஜன நடவடிக்கைகளுக்கும் பூர்ஷ்வாக்களுக்கெரிரான புரட்சிகரத் தாக்குதல்களுக்கும் தயாராக வேண்டும். (184)
.
3. சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவமும் கூட்டாட்சியுடன் அதன் உறவும்
இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய நிலையில் சமூக ஏகாதிபத்திய சீனத்தின் பிடியிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் பிராந்திய வல்லரசின் பிடியில் உள்ளது. இந்த சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற வாதம் வைக்கப்படுகின்றது. இங்கு பிரதான முரண்பாட்டையும், அடிப்படை முரண்பாட்டையும் போட்டுக் குழப்புகின்றார்கள். இதே போல சிங்கள மக்களும் சுயநிர்ணயம் அற்றவர்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகின்றார்கள். சுயநிர்ணய உரிமைக்கு மாற்றாக செயற்கையான ஐக்கியத்தைக் கோரும் நிலைதான் தான் புரட்சிகர கட்சிகள் என அழைத்துக் கொள்பவர்கள் தரம் மிறங்கியிருக்கின்றார்கள். ஒடுக்குபவர்கள் முறையிலேயே சாத்தியப்பாடு இல்லை என்று வகுப்பெடுக்கப்படுகின்றது.
1. பிரத்தியேகமாக அரசியல் ரீதியில் சுயேச்சை பெறுதல்
2. அரசியல் ரீதியில் சுதந்திரம்
3. பிரிந்து போவதற்கு கிளர்ச்சி செய்யும் உரிமை
4. பொதுவாக்கெடுப்பு எடுக்க முடியும்.
இங்கு ஐக்கியத்தின் பெயரில் ஒடுக்குமுறையை ஏற்றுக் கொள் என்று ஆலோசனை வழங்குவது அல்ல. சுதந்திரத்தின் பின்னர் கூட்டாட்சிக்கு உடன் படலாம். அதன் ஊடாக மேலும் தேசிய இனங்களிடையே நம்பிக்கையும் இறுக்கமும் ஏற்படும். இனமதகுலமற்றுப் போராடுவோம் என்று அகநிலையை முன்னிறுத்தி செயற்கை ஒன்றுமையை உண்டாக்க முயற்சிக்கின்றார்கள். மக்களிடம் மாற்றம் என்பது உற்பத்தி உறவினால் மாற்றம் பெற வேண்டியது.
4.தேசிய இனங்களின் சுயநிர்ணயப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கண்ணோட்டத்தில் எடுத்துரைத்தல்
தொழிற்துறை வளர்ச்சியடைந்து வந்த காலங்களில் வர்க்கப்போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கோட்பாடுகள் கற்பனை ரீதியாகத் தான் எழுப்பி வந்ததாக மதிப்பீடு செய்கின்றார். வளர்ந்து வருகின்ற பொருளாதார அமைப்பில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மார்க்சிய லெனினியம் காட்டும் வழி விஞ்ஞான வழிப்பட்டது அல்ல. நமக்குத் தான் மார்க்சிய லெனினியப் பாதை நம்முன்னே உள்ளது.
”ஏகாதிபத்தியத்தின் கீழ்சம அந்தஸ்துடைய தேசிய இனங்கள் அமைதியான முறையில் ஐக்கியமுறுதல் என்ற கற்பனாவாதம் இதுதான். இந்தக் கற்பனாவாதம் மக்களை ஏமாற்றுகிறது;-- ஏகாதிபத்தியத்தின் கீழ் உலகானது ஒடுக்கும் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்று பிரிக்கப்படுவது அடிப்படையானது, கவனிக்கத்தக்க முக்கியம் வாய்ந்தது, தவிர்க்க முடியாத் என்ற கூற்றை சமூக -ஜனநாயகச் செயல்திட்டம் எடுத்துரைக்க வேண்டும்.“ (187) இங்கு தான் லெனின் ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள பாட்டாளி வர்க்கம் தேசிய இனத்தின் ஒடுக்குமுறைக்காக போராட வேண்டும் என்கின்றார்கள்.
இலங்கையில் தமிழ் கட்சி முற்போக்கு தேசியவாதிகள் தலைமை வகித்தால் தாம் இணைந்து செல்வதாக கூறி தமது பொறுப்பை கைவிட்டுள்ளார்கள்.
சுதந்திரமான தேசங்களின் உரிமையை ஏற்றுச் செயற்படுவதே உண்மையான சர்வதேசியவாதம் என்கின்றார்.
இன்னொருவிடயம் கவனிக்கப்பட வேண்டியது கொலனித்துவம் என்பது நேரடியாக இல்லாது, தனது முகவர்கள் ஊடாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகும். இங்கு உள்நாட்டு ஆட்சியாளர்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது தேசிய ஜனநாயகக் கட்டத்தின் ஊடாக நடைபெற வேண்டியதாகும்.
ஆனால் தேசிய இன ஐக்கியத்தை செயற்கையாக கட்டமைக்க முடியாது. ஒடுக்குமுறை இருக்கின்ற போது தொழிலாளி வர்க்கத்தினரிடையே நம்பிக்கை, ஒருமைப்பாடு ஏற்படாது என்கின்றார்கள்.
முதலாளிகள் நுழைந்துவிடுவார்கள், தமிழ் முதலாளிகளுக்காக ஈழம் கேட்கின்றார்கள், ஆண்டபரம்பரை ஈழம் கேட்கின்றார்கள், வெள்ளாளியம் தனது சுரண்டலை தொடர ஈழம் கேட்கின்றார்கள். இவை எல்லாம் அரை நிலமானிய சமூகக் கட்டமைப்பை கட்டிக்காக்கின்ற கூப்பாடு தான்.
”ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கெதிரான தொரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு “பெரிய” வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக்க குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். இதனால் சமூக- ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள். இதே போல அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்சுவாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். (உதாரணம்: லத்தீன் நாடுகளில்). ஆனால் இதற்காக சமூக -ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடுவதில்லை. (189)
முதலாம் உலக யுத்தத்தில் சொந்த நாட்டு பூர்சுவா அரசுகளுக்கு எதிராகப் போராடாது தாய் நாட்டைக் காப்போம் இரண்டாம் அகிலத்தினர் நிலைப்பாடு எடுத்தார்கள். சமூகத் தேசிய வெறியர்களாக இருந்தார்கள். இலங்கையில் தாய்நாட்டைக் காப்போம் என்று முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பதுங்குழி அமைத்துக் கொடுத்தார்கள். இன்று தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு காட்டிக் கொடுக்கின்றார்கள் என்கின்றார்கள்.
ஈழம் தனது அரசுரிமைக்காக போராடுகின்றது, தனது பொருளாதார எல்லையைக் கோருகின்றது, முரணற்ற வளர்ச்சியைக் கோருகின்றது. ஈழ தேசபக்தர்களும் அதற்காகத் தான் மாண்டார்கள்.
செயலூக்கமற்றதாக கட்சியை வைத்துக் கொண்டு விமர்சிப்பது என்பது மார்க்சியக் கட்சிக்கானது அல்ல. பொருளாதாரவாதத்தில் வீழ்ந்துள்ள கட்சியின் நிலையும் அதுவேயாகும். அது குறிப்பிட்ட வட்டத்தினுள் தன்னைக் குறிக்கியுள்ளது. கட்சியை எவ்வாறு முன்னோக்கிச் செல்வது பற்றி தோழர் லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற புத்தகத்தில் தெளிவாகவே வழிகாட்டுகின்றார்.
Kasi Senthivel
‘‘‘இன்று இலங்கையில் சிங்கள பௌத்த ஆளும் வர்க்க சக்திகள் கோத்தா -மகிந்த தலைமையில் அதிகார மமதையுடன் பெரு -தரகு முதலாளிய ஆட்சி புரிந்து வருகிறார்கள்.அவர்களின் பக்கத்தில் சீன றஷ்சிய பாகிஸ்தான் நாடுகள் இருந்து வருகின்றன.மறு புறத்தில் தமிழர் தரப்பு ஆதிக்க தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் குறுந் தேசிய தேசிய நிலைப்பாட்டில் பாராளுமன்ற அரசியலில் வழமையான இனவாத உசுப்பேத்தி தமிழ் இன உணர்ச்சி அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.இவர்களுக்கு இந்தியா பக்கத் துணையாக நின்று மறைமுக வழிகாட்டி வருகிறது.அத்துடன் அமெரிக்க மேற்குலக சக்திகள் இவர்களின் எசமானர்களாக இருந்தும் வருகிறார்கள்.இவர்களின் எத்தரப்பும் இலங்கையின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பக்கமோ அல்லது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பக்கமோ இல்லை என்பதே உண்மை நிலையாகும்.இவ் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டாலே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும்.அல்லாது விடின் ஆளும் வர்க்கத்திற்கும், ஆதிக்க அரசியல் சக்திகளுக்கும், அந்நிய வல்லரசுகளுக்குமே அடிவருடிகளாக இருந்து சேவை செய்ய முடியும்.‘‘
-குறுந் தேசிய தேசிய நிலைப்பாடு
-பாராளுமன்ற அரசியலுக்காக உசுப்பேத்துவது
- தரகு வர்க்கத்திற்கு தேசியவாதத்திற்கும் இடையே மாறுபாடு காணான எழுத்து
- தமிழ் இன உணர்ச்சி ஊட்டுவது என்று கடந்த 1976 இல் இருந்து எழுதியும் பேசியும் வருகின்றீர்கள். (விரிவாக வெவ்வேறு தலைப்புகளில் இவை ஆராயப்படும்) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான போராட்டத்தை நீங்கள் தலைமை ஏற்று அல்லவா முற்போக்குத் தேசியமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
நீங்கள் ஒப்பித்ததை ஒப்பித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த முரண்பாட்டின் சிக்கல் பற்றி என்றாவது மீளாய்வு செய்தது உண்டா?? ( முதலாளித்துவ வளர்ச்சியில் தேசிய இனச் சிக்கல் என்பதை மனதில் கொள்க) தோழர் சண் தொழிற்சங்கவாதத்திற்கு பலியாகிவிட்டேன் என சுயவிமர்சனம் செய்தார். அவர் காலத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள் விட்டுக் கொடுப்பில்லாது நடைபெற்றது. ஆனால் இன்று அதே பலத்தில் தொழிற்சங்கத்தை வைத்துள்ளீர்களா??
பரிதாபம் சில பிரமுகர்கள் பேசுவது தான் மார்க்சியமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நான் என்ன எழுதுகின்றேன் என்பதை சந்தேகி மூலவர்களிடம் சென்று மார்க்சிய சமூகவியலை கற்றுக் கொள்ளுங்கள். இதற்காகவே மூலவர்களின் சொல்லாடலை துணையாக கொண்டு எழுதப்படுகின்றது. அப்போது தான் நீங்களும் சுயமாக கற்று நாம் பேசுவது தவறென்றால் தவறு என்று உங்களை வளர்ப்பதே நம் இலக்கு.
(http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000241.pdf) இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் ‘‘ மனிதர்கள் இனம், மொழி, மதம், நிறம் காரணமா ஒருவரை மற்றவரிடம் இருந்து பிரிப்பதும், ஒருவருக்கு எதிராக மற்றவர் பகையாளி ஆக்கப்படுவதும் தேசியத்தில் பெயரால் முன்னெடுக்கப்படுகின்றது‘‘ (ப.6.சிகாசி) அனாகரிக தர்மபாலா எல்லோருக்கும் முதலே அரசியல் செய்து விட்டார்கள். அவரின் அரசியல் என்பது ஆறுமுகநாவலரின் அரசியல் போன்றதல்லை. ஆரிய, பௌத்த பேரினவாத பெருமிதம் பொதிந்த சிங்கள எழுச்சிக்கான ஆரம்ப விதையாகும். அதன் தொடர்ச்சி தானே கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல். அன்று முதலாளி்த்துவ பொருள் உற்பத்தி முறை முழுமையடையவில்லை என்பதால் சிங்கள பௌத்த பேரினவாத வளர்ச்சி என்பது அரும்பு நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைக் கட்டிக் காக்கும் சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனை கட்டமைப்புப் பற்றிய புரிதல் இவர்களுக்கு உண்டா என்பது ஐயமே.
மேலும் ‘‘ மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதத்தை முன்தள்ளி அந்நாடுகளின் மக்களிடையே மோசமான பிளவுகளையும் ஒருவரை ஒருவர் எதிர்த்த பகையுணர்வுகளையும் வளர்த்ததில் உள்நாட்டு ஆளும் அதிகார சக்திகளுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பெரும் பங் உண்டு. மூன்றாம் உலக நாட்டு மக்கள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு எழுவதைத் தடுக்கவும் உலகில் சோசலிசத்தின் மீதான மக்களது நம்பிக்கையீனத்தை வளர்க்கவும் தேசியவாதத்தை பல்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் முன்தள்ளி வந்துளனர். பின் நவீனத்துவக் கருத்தியல் தேசியத்தை உயர்த்தி நிற்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு தனது சேவையை வழங்குகின்றது. இவை அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் மூலமான சமூக மாற்றத்தை தடுக்கும் தடை அரண்களாகவே முன்நிறுத்தப்பட்டன.(5-6) இங்கு லெனின் பேசுகின்ற தேசிய இயக்கம் பற்றிய போதனை ஏதாவது உள்வாங்கப்பட்டுள்ளதா?? இது அகநிலைவாதம் அடிப்படையில் இருந்து எழுதுவதாகும். அனுபவாதத்தைத் தவிர மாக்சிய திறனாய்வு முறையை காணமுடியவில்லை.
தேசியப் போராட்டம் என்பதை பின்னவீனத்தும் ஏற்பதில்லை. தேசிய என்பதே கற்பிதம் என்கின்றது.
போலியுணர்- சிந்தனைக் கட்டமைப்பு
இனவாதம் – தேசியப் பெருமைபற்றி
தேசிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசிய இனப் பெருமிதம்
இங்கு லெனின் ‘‘கவர்ச்சி மையமாகக் ‘‘ என்ற சொல்லாடல் தேசிய உணர்வைப் பற்றி பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம். தோழர் மவோ ஒரு மார்க்சியர் தேசபக்தராக இருக்க முடியும் என்கின்றார். இங்கு தேசியவாதம் வெறியாக இருப்பதை மார்க்சியர்கள் அங்கீகரிப்பதில்லை. பெருந்தேசி, குறுந்தேசியம் என்பதை மார்க்சியர்கள் அனுமதில்லை.
‘‘எல்லாத விதமான தேசிய இன ஒடுக்குமுறையையும் அகற்றும் பொருட்டு, எவ்வளவு தான் சிறியவையாக இருப்பினும், முழு அளவுக்கு ஒருமை வாய்ந்த தேசிய இனத்தோராலான தன்னாட்சிப் பரப்புகளை நிறுவுவதும் மிக மிக முக்கியம் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாதது. இந்தத் தேசிய இனப் பரப்புகளை நாடெங்கும் அல்லது உலகெங்கும்கூட சிதறி வாழும் அந்தந்த தேசிய இனத்தோரும் தமது ‘‘கவர்ச்சி மையமாகக் ‘‘ கொள்ள முடியும். அவற்றுடன் எல்லா வகையான உறவுகளையும் சுதந்திரமான பிணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இவை எல்லாம் மறுக்க முடியாதவை, முரட்டுப் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கக் கண்ணோட்டத்தினர் மட்டுதே இவற்றை எதிர்த்து வாதாட முடியும்.‘‘ (71)
தேசிய அரசுகள் உருவாகிக் கொள்வது பற்றி
"உலகம் பூராகவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப்பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. பண்ட உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும். ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும். அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும் குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும். - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது. மனித இடைத் தொடர்புக்கு மிக முக்கிய சாதனம் மொழியாகும். நவீன முதலாளித்துவத்திற்கு சரியான விதத்தில் மெய்யாவே தடையற்ற விரிவான வாணிகத்துக்கும், பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் சுதந்திரமான, விரிவான பிரிவுகளாக அமைவதற்கும், இறுதியாக சந்தையுடன் ஒவ்வொரு பெரிய, சிறிய உரிமையாரும், விற்போரும் வாங்குவோரும் பரஸ்பர நெருக்கமான தொடர் ஏற்படுத்திக் கொள்ளவும் மிக முக்கியமான நிபந்தனைகளில் மொழி ஒற்றுமையும் தங்கு தடையற்ற வளர்ச்சியும் அடங்கும்.
எனவே ஒவ்வொரு தேசிய இன இயக்கத்தின் போக்கும் தேசிய இன அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசு களின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாக பூர்த்தி செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரீக உலகம் முழுவதற்குமே முதலாளித்துவ காலப்பகுதியில் தேசிய இன அரசு மாதிரிப்படிவமானது சகஜமானது" (ப76 (தே.இ.பா.வ.சர்1)
தொடர்ந்து "இதன் விளைவாக, சட்ட வரையறைகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தை செய்வதன் மூலமோ அன்றி, சூக்குமமான இலக்கணக்களைப் புனைவது மூலமே அன்றி தேசிய இன இயக்கங் களின் வரலாற்று, பொருளாதார நிலைமைகளை ஆராய்வதன் வாயிலாக தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருளை நாம் புரிந்து கொள்ள விரும்பும் பட்சத்தில், இந்த தேசிய இனங்கள் அன்னிய தேசிய இன அமைப்புகளிலிருந்து அரசியல் வழியில் பிரிந்து, சுதந்திரமான தேசிய இன அரசாக உருப்பெறுவதே தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக்குத் தவிர்க்க முடியாத வகையில் வந்து சேருவோம்". (77) (தே.இ.பா.வ.சர்1)
சிங்கள தேசம் பௌத்த பேரினவாதம் விகாரைகளை சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறத்தே அரசியல் அதிகாரம் அற்ற தேசத்தின் ‘‘சுயநிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற‘‘ (77) பொருளில் விளங்கிட தயாராக இல்லை. மாறாக ஒவ்வொருவரும் வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கின்றனர். ‘‘பொருளாதாரக் கூறுகளை‘‘ (77) தவிர்த்துவிட்டு தேசம் பற்றிப் பேசிவிட முடியாது. அரசு என்பது பண்டையக் காலத்தில் இருந்ததைப் போன்று இருக்கப் போவதில்லை. இவ்வாறே ஈழம் சாத்தியமில்லை என்பவர்கள் ‘‘ஒரு தேசிய இன அரசைப் படைப்பதற்கான அவாவின் வலிமையை அவர் குறைத்து மதிப்பிடுவதற்குமிடையேயுள்ள தொடர் என்ன? ரோஸா லுக்சம்பர்க் இந்தக்கேள்வியை எழுப்பக் கூட இல்லை.‘‘ (79)
இவ்வாறு ஒப்பித்துக் கொள்பவர்களுக்கு லெனின் வார்த்தையில் சொல்வதானால் ‘‘காவுத்ஸ்கிக்குப் பாடம் சொல்வதானது, சூழ்ச்சி நயத்தைத் தோற்றுவிப்பதற்கான நகைக்கத் தக்க சிறுபிள்ளைத் தனமான முயற்சியாகும்.‘‘ (80) இவ்வாற விமர்சனத்தை ஈழத் தமிழ் பரப்பில் எழுதிவிட முடியாது. ஆனால் ரோசாலுக்சம்பர்க்கை விமர்சிக்க லெனினால் பயன்படுத்து வார்த்தையை இன்று எவரும் தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. அதிகாரத்திற்கு ஒத்தோடுகின்றார்கள் என்ற வார்த்தையையே தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக குறுகிய மனப்பாங்கு கொண்டவர்கள். மார்க்சிய வழியில் முன்னர் கற்றுக் கொண்டவை தவறு என்று ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. கல்லில் நார் உரிப்பதைப் போன்றே இவர்களுடன் விவாதம் செய்யும் தன்மையாக இருக்கும்.
மக்களிடம் சிந்தனை வீழ்ச்சியை ஏற்படுத்துவது பூர்சுவாக் கட்டமைப்பும் நிறுவனப்பட்டு செயற்படுகின்றது. இதே வேளை கட்சிகளும் சிந்தனை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது. திரிபுவாதத்தை மார்க்சியமாக திரிக்கப்படுகின்றது. இதற்கு எதிரான தத்துவப் போராட்டம் இன்றைய நிலையில் அவசியமாக இருக்கின்றது.
மார்க்சிய பொருளாதாரம் பற்றிய பிரச்சனையில் புரிதல்கள் இருந்து கொண்டே இருக்கின்றது. வர்க்கப் பிரிவினை முதலாளி- தொழிலாளி என்று மட்டும் அணுகுவிட முடியாது. மார்க்சிய அறியவியல் இவ்வாறு அணுகுவதில்லை. சமூகத்தில் பற்பல உள்பிரிவுகளாக வர்க்கங்கள் உள்ளன. இலங்கையில் இருப்பது வர்க்க முரண்பாடு என்பதை முன்னிறுத்துகின்றார்கள். இங்கு வர்க்கம் என்பதை பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பதை மட்டுமே குறிக்கிப் பார்க்கின்றார்கள். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் காடாக இருக்கின்றது என்கின்றார்கள்.
‘‘ பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவுங் கூட பொருளாதார ரீதியாக ஐரோப்பாவின் கொலனியாகவே இருந்து என்பதை மார்க்ஸ் மூலதனம் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். எந்தவொரு மார்க்சியவாதியையும் போலவே காவுத்ஸ்கிக்கும் இது நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் இதற்கும் தேசிய இன இயக்கங்கள் மற்றும் தேசிய இன அரசு பற்றிய பிரச்சினைகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
பூர்சுவா சமுதாயத்தில் தேசிய இனங்களின் அரசியல் சுயநிர்ணயம், அரசுகள் எற்ற முறையில் அவற்றின் சுயாதீனம் ஆகிய பிரச்சினைக்குப் பதிலாக அவற்றின் பொருளாதார சுயேச்சை மற்றும் சுதந்திரம் பற்றிய பிரச்சினையை ரோஸா லுக்சம்பர்க் முன்வைக்கிறார். ஒரு பூர்சுவா அரசியல் நாடாளுமன்றத்தின், அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சட்டமன்றத்தின் மேலாண்மைக்குரிய வேலைத் திட்டக் கோரிக்கையை விவாதிக்கும் போது, ஒரு முதலாளித்துவ நாட்டில் ஆட்சி முறை எதுவாக இருப்பினும் அங்கு பெரும் மூலதனமே ஆதிக்கம் செலுத்துகிறது என்ற முற்றிலும் சரியான துணிபுரையினை ஒருவர் விளக்க முற்படுவரானால் அது எத்துணை விகேகமுள்ளதோ அத்துணை விவேகமுள்ளதே இதுவும்.‘‘ 80-1)
ஏகாதிபத்தியத்தையும், மூலதனத்தையும் காரணம் காட்டுவதையும், முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வில் லெனின் வழிகாட்டலை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்.
அன்றையக் காலத்தில் ஆசியாவில் தேசிய இன அரசின் பொருளாதார வளர்ச்சி பற்றி எடுத்துக்காட்டுகின்றார். இதனை சோசலிச அரசுகள் உருவாகுதற்கு முன்னரான தேசிய இன அரசுகள் உருவாக்கிய வளர்ச்சி பற்றிய தோழர் லெனின் அறியத் தருகின்றார். தேசிய இயக்கங்கள் உருவாகுவதற்கான பொருளாதாரக் காரணங்களை காணத் தவறக் கூடாது. மேலும் தேசிய அரசுகள் உருவாகுவது இயல்பான வடிவம் என்பதேயாகும்.
இனப்பிரச்சனையை வரலாற்று ரீதியில் திட்டவட்டமாக முன்வைத்தல்
ஏங்கெல்ஸ் இன்ஆய்வு தொழிற்துறைப் புரட்சி நடைபெறாக 1315 காலத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. அரச தோற்றம் பற்றிய இயங்கியல் பார்வையைக் கொண்டதை லெனின் விளக்குகின்றார். முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத காலத்தில் ஏற்பட்ட அரசுகளும் முதலாளித்துவ காலத்தின் தேசிய அரசுகளுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை விளக்குகின்றார். முன்னையது இரத்த உறவு சிதைந்த பின்னர் ஏற்படுகின்ற மன்னராட்சி பற்றியது. இரத்த உறவின் சிதைவின் தோற்றம் பெற்ற அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறிதல் அவசியமானதாகும். பின்னையது முதலாளித்துவ வளர்ச்சியில் ஏற்படுகின்ற தேசங்களின் அரசு பற்றியதே. வரலாற்றுப் போக்கை இயங்கியல் ரீதியாக கற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றார்களா என்பது என்பது கேள்வியே.
மார்க்சியர்கள் தேசிய இயக்கங்களை என்ன அடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என்று போதிக்கின்றார். இது நிச்சயம் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து ஆதரரிக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் வேகமாக வளர்கின்றது. ஆனால் இலங்கையில் சோசலிசப் புரட்சி வரும் வரையில் சக்திகள் வளருவதை தடுக்க வேண்டும் என்கின்ற நிலை இலங்கையில் உள்ளது.
1922 தமிழர் மகாசபையின் அரசியல் கோரிக்கை முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமேயாகும். இதன் பின்னர் உருவாகிய இலங்கை தமிழ் கொங்கிரஸ் போன்ற அமைப்பின் உருவாக்கமாகும்.
அரசியல் பிரஞ்ஞை என்பது நவீன சிந்தனைக்கு ஏற்ப முன்னைய காலத்தில் வளர்ந்துள்ளதா என்பது ஐயமே. தமிழ் தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தியது படித்த வர்க்கமேயாகும். அந்த படித்த வர்க்கத்திற்கு தேசிய இயக்க வளர்ச்சி, முதலாளித்துவ பொருளாதார போக்கு, அரசியல் உரிமை போன்றவை அவர்களுக்கு விளக்கம் இருந்திருக்கின்றதா என்பது ஐயமே. மார்க்சியம் பேசுபவர்களுக்கே இன்று வரையில் விளக்கம் இல்லை. இந்த நிலையில் பழமைவாதிகளுக்கு ( போலி இடதுசாரிகள் பார்வையில் ஆண்ட பரம்பரை) விளக்கம் இருந்திருக்குமா என்பது ஐயமே.
தோழர் சண்முகதாசனை புத்தகவாதி என்கின்றார்கள். ஆனால் ஒரு சமூகப் போக்கை விளக்கிட முற்படும் போது மிகக் கோபமாக எதிர்வினையாற்றுகின்ற போக்கு உள்ளது. இவர்களை இட்டு பரிதாபம் கொள்ள முடிகின்றது.
சமூகத்தில் எழுகின்ற உணர்ச்சி, உணர்வு போன்றவை பற்றிய பொதுப்புத்தி வெகுமக்களிடம் இருப்பது வேறாகும். ஆனால் அரசியல் தளத்தில் சிந்தனைக் கட்டமைப்புப் பற்றிய புரிதல் என்பது அவசியமானதாகும். சமூகத்தினை இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையில் பகுப்பாய்வு செய்கின்ற போது தவிர்க்க முடியாது.
சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைக் கட்டமைப்பை எவ்வாறு புரிந்து கொள்கின்றார்கள்??
தமிழ்ர் தேசிய, சிங்கள தேசிய அரசியல் சுதந்திரம் 1833 இல் பறிக்கப்பட்டது. கொலனித்துவம் தனது நிர்வாக நலனுக்காக இணைத்துக் கொண்டது. இதுவே கொலனித்துவ காலத்தினால் தோற்றம் பெற்ற பிரச்சனையே. ‘‘ ஒரு குறிப்பிடட அரசின் எல்லைக்குள் ஒடுக்கப்பட்ட தேசங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்துகொள்ளப்பட்டிருக்கிறதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தால் போராடாமல் இருக்க முடியாது, அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடாமல் இருக்க முடியாது. ‘தங்களது‘ தேசத்தினால் ஒடுக்கப்படும் கொலனிகளுக்கும் தேசங்களுக்கும் அரசியல் வழியியல் பிரிந்து போகும் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கம் கோர வேண்டும். இல்லாவிட்டால் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியம் என்பது வெற்று வாத்தையாக இருக்கும்., ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்கட்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர்கட்டுகும் இடையில் நம்பிக்கையே அல்லது வர்க்க ஒருமைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை, சீர்திருத்தவாதிகளும் காவுட்ஸ்கிவாதிகளும் சுயநிர்ணயத்தை ஆதரித்து, அதே சமயத்தில் ‘‘சொந்த ‘‘ தேசத்தினால் ஒடுக்கப்பட்டு ‘ததம்முடைய சொந்த‘ அரசுக்குள் பலவந்தமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தேசங்களைப் பற்றி மௌமாக இருக்கிறார்களே, இவர்களின் பாசாங்குத்தனமும் அப்பொழுது அம்பலப்படுத்தப்படாமல் இருந்து விடும். (309-10)லெ.தொ1)
வர்க்கப் போராட்டத்தை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை என்பதே வர்க்கப் போராட்டமாக குறுக்கிப் பார்க்கின்ற பார்வை உள்ளது. இவ்வாறு பொருளாதாரவாதமாக போராட்டத்தைக் சுருக்கியுள்ளனர். இலங்கை என்ற நாட்டில் உள்ள தேசிய இனப்பிரச்சனை என்பதை இனவாதமாக, குறுந்தேசியமாக பார்க்கும் பார்வைஉள்ளது. தேசங்களின் அரசுகள், நாட்டரசு போன்றவற்றிற்கிடையே உள்ள மாறுபாடுகளை அறிந்து மதிப்பீடு செய்வது அவசியமாகும்.
தேசிய உணர்வுபற்றிய தோழர் லெனினின் வழிகாட்டலை இடதுசாரிகள் மீளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உழைப்பாளர் தினம் பற்றி
‘‘1969 வருட போயா தினத்தை முன்னிறுத்தி தொழிலாளர் தினத்தைக் கொண்டாட தடைவிதிப்பதாக அன்றைய அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தி உழைக்கும் வர்க்கத்தினர் என்ற வகையில் சிங்கள பௌத்த தொழிலாளர்கள் இதற்கான எதிர்ப்பியக்கத்தினை செய்யவில்லை. ஆனால் தோழர் சண்முகதாசன் நடத்தினார். இது கட்சி என்ற வகையிலும் ஒரு பௌத்த மக்கள் விரோதக் கட்சி என்ற கருத்தை இதன் மூலம் மக்கள் மத்தியில் எதிரிகள் பரப்ப வசதியாயிற்று ( (24.கம்யூனிஸ்ட் இய . தோழர் சண்முகதாசன்- வெகுஜனன், இமயவரம்பன் )
”பிற்காலத்தில் இத்தீர்மானம் தவறானதொன்று என்ற கருத்து கட்சிக்குள் ஏற்படலாயிற்று. அதாவது சிங்கள் வெகுஜனங்கள் மத்தியில் இருந்து கட்சியைத் தனிமைப்படுத்திய சில குறிப்பான முடிவுகளில் இதுவும் ஒன்றெனச் சுட்டிக் காட்டப்பட்டது” (179 இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள். சிகாசெந்தில்வேல்) இதை எழுதிவிட்டு உழைப்பாளர் தினத்தினை எதிர்ப்புக்கு மத்தியில் நடத்தி முடித்தார்கள்.
ஏதோ முழு சிங்கள மக்களும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட இருந்தார்கள்? அவ்வாறு இருக்க சாத்தியமா? உழைப்பாளர் தினம் என்பது தோழர் சண்முகதாசன் உருவாக்கி விடவில்லை. அது உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழிகாட்டல். இது சர்வதேசிய வளர்ச்சிப் பாதையில் ஒரு அங்கம்.
மார்க்சிய வழி வந்த கட்சிகளாக கொள்கின்ற ஜேவிபி, முசோக போன்றவைகள் தமது கூட்டங்களில் புத்த பிக்குவிற்கு முன்னிடம் கொடுப்பார்கள். அவர்களின் இருக்கை என்பது சாதானமக்களின் இருக்கைவிட மாறுபட்டே உள்ளது. இது நிலமானியப் சிந்தனை புத்தபிக்குகளும் கொண்டிருப்பார்கள். இதே போல பிக்குகளுக்கு பணிந்ததாகவே இந்தக் கட்சிகளின் செயற்பாடுகளும் இருக்கும். மதம் என்பது பிரதான முரண்பாடு இல்லை. மக்களின் நம்பிக்கையில் தலையிலட வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் ஒரு கட்சி என்பது மதத்திற்கு அப்பாட்டது என்பதை பிரகடனப்படுத்தவேண்டும், அரசியலுக்கும் மதத்திற்கு இடையே தொடர்பு இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு மதச் சார்பின்மையை ஒரு கட்சி பிரகடனப்படுத்த தயக்கம் ஏன் வரவேண்டும்.
அன்று சன்ணை விமர்சித்தவர்கள் 2009 பின்னர் உழைப்பாளிகளின் விழாவை போயா தினத்தில் கொண்டாட தடைபோடுகின்றது. மார்க்சியம்- லெனினியம் மதம் பற்றி வழிகாட்டலை கொண்டு இவர்களால் செயற்பட முடியவில்லை. மாறாக மதத்திற்கு முதன்மை கொடுத்தால் மற்றைய பூர்சுவாக் கட்சிகளுக்கு என்ன மாறுபாடு??
இங்கு மதத்திற்கு பணிந்து போவது, அரசின் சட்டத்திற்கு பணிந்து சட்டவிரோதமா செய்ய மாட்டோம் என்று இவர்களே பணிந்து போகின்றார்கள்.
தன்னியல்பாக மக்களிடையே போராட்ட எழுச்சி இருக்கும், போராட்டங்களும் நடைபெறும். தன்னியல்பான போராட்டங்களை அரசியல் போராட்டங்களாக வளர்த்தெடுப்பதுவே கட்சியின் கடமையாகும். (இது பற்றி எதிர்விமர்சனம் வைக்க முயல்பவர்கள். ”என்ன செய்ய வேண்டும்” என்ற தோழர் லெனின் புத்தகத்தை வாசியுங்கள், மேலதிகமாக கற்க முடியும்)
இங்கு கட்சியே தன்னியல்புக்கு செல் என்ற நிலைப்பாட்டை செய்யும் படித் தான் சண்மீதான விமர்சனம் உள்ளது. இனமதகுலமற்ற (சிறப்பு தகுதி இல்லாத) என்று பேசிக் கொண்டே பௌத்தத்திற்கு சலுகை கொடுகின்றார்கள்.
சி.கா.சி, சிவசேகரம் போன்றவர்கள் மார்க்சியத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றார்களா? அல்லது நிலமானிய சமூகச் சிந்தனையை சிதையாது பாதுகாப்பதா வர்க்கக் கடமை என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
சண்ணின் சிறைவாழ்வு
”நான் தடைக்காவலில் இருந்த போது வெளியே இருந்த கட்சித் தலைவர்ககள் சிறை வைக்கப்பட்ட தலைவர்களின் விடுதலைக்காக இயக்கம் எதையும் நடத்த வில்லை. எங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி ஒரு கடிதத்தை தானும் அவர்கள் அரசாங்கத்திற்கு எழுதவில்லை. இது நம்ப முடியாதது. ஆனால் நடந்தது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தாமும் தடைக்காவலில் வைக்கப்படுவர்கள் என்று அஞ்சியே அவர்கள் இதைச் செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் எந்தக் கம்யூனிஸ்டும் செய்யக் கூடாத முறையில் நடந்து கொண்டார்கள். நான் விடுதலையானதும் எமது கட்சி மத்தியக் கமிட்டியின் கூட்ம் ஒன்றைக் கூட்டி நான் தடைக்காவலில் இருந்த போது எழுதிய 1971 ஏப்பிரல் நிகழ்ச்சிகள் பற்றிய எனது ஆய்வை முன்வைத்தேன். இந்தக் கிளர்ச்சி தவறாக வழிகாட்டப்பட்டது. எதிர்ப்புரட்சிமானது. ஆனால் அரசாங்கம் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட பெரும் அடக்குமுறையை நியாயப்படுத்த முடியாது என்று நான் கூறினேன். சாதாரண உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையாக, ஆனால் தவறாக வழிநடத்தப்பட்ட புரட்சிவாதிகள் இருந்தார்கள். அவர்களை இயக்கத்திற்கு வழி திரும்ப வேண்டும். ஆகவே அரசியல் கைதிகள் அனைவரையும் விசாரணை செய்வதற்கு அல்லது விடுதலை செய்வதற்கு நாம் ஒரு இயக்கத்தை நடத்த வேண்டும் என்று நான் பிரேரித்தேன். அரசியல் கைதிகள் அப்போது பத்தாயிரத்துக்கு மேலானோராக இருந்தார்கள்.
எமது மத்திய கமிட்டிக்குள்ளேயே எனக்குக் கணிசமான எதிர்ப்பு இருந்தது. என்னை எதிர்த்தவர்கள் இயற்கையாகவே அரசாங்கத்திற்குப் பின்னால் ஜேவிபிக்கு எதிராக கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதற்கு சீன அரசாங்கம் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் கொண்டிருந்த மனோபாவமும் சூ என் லாய் திருமதி பண்டாரநாயக்காவுக்கு அனுப்பிய கடிதமும் பெரும் காரணங்களாக இருந்தன. ஆனால் கோட்பாட்டுகளில் சமரசம் செய்ய மறுத்தேன். இறுதியில் எனக்கு ஆதரவாகப் பெரும்பான்மை கிடைத்தது.
ஆளால் சிறிய பெரும்பான்மை அத்துடன் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்படி கோரி கொழும்பு நகர மண்டபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யவும் நான் மத்தியக் கமிட்டியை இசைய வைத்தேன். இது கிளர்ச்சிக்குப் பின் நடைபெற்ற முதலாவது அரசியல் கூட்டமாக அமைந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். (250-251சண்)
‘‘சீனர்கள் என்னுடன் நேர்மையாக நடந்திருக்க வேண்டும். எமது கட்சிக்கும் சீனக்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட முதலாவது இருள்மேகம் இதுவாகும்.‘‘ (252) தொடர் இலாகாக தலைவர்களின் அரசியல் பின்னணியை 1976 பின்னர் சீன வெளிநாட்டு அமைச்சரானார். (254) தேசியமயமாக்கல் பற்றி தவறான தகவல்களை சீனர்களுக்கு கொடுத்தார்கள் (255) மேலும் அல்பேனியக் கட்சி, தோழர் சண்ணின் 1972 கிளர்ச்சி பற்றி அரசியல் மதிப்பீட்டை சீனர்களுக்கு உவப்பாக இருக்கவில்லை. (255)
சீனத்தில் இருந்த போது சண் வெளியேற்றப்பட்டது (255) சண்ணை வெளியேற்றினால் தமக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை ஏற்படுத்தினர். ‘‘ சீனத் தூதரகத்தின் ஒரு பகுதியினரும் கலந்து கொண்டார்கள் என்று நம்ப இடம் இருக்கின்றது என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. வெளிநாட்டமைச்சில் உள்ள மாவோ எதிர்ப்புக் கோஷ்டியினருக்கு ஆதரவான பகுதியினர் இவர்கள். (255)
சண் இடது திரிபுவாதம் என்று விமர்சிப்பவர்களின் போக்கை தோழர் சண்ணின் எழுத்தின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.
‘‘அவர் விடுதலையாகி வரும்போது கட்சி ஏற்கனவே உடையும் நிலையில் இருந்தது. ஆயினும், அந்த நிலைமையை அவர் பெரிதாக எடுக்கவில்லை. கட்சிக்குள்ளேயே விவாதித்துத் தீர்க்கக் கூடிய விடயங்களே என்ற கணிப்புடன் அவர் அல்பேனிய தொழிற்சங்க நிகழ்வுக்குச் சென்றார்.‘‘ ( விக்கி- தாய்வீடு)
தோழர் சண்ணின் 1972 கிளர்ச்சி பற்றி அரசியல் மதிப்பீட்டை சீனர்களுக்கு உவப்பாக இருக்கவில்லை. (255) என்பது எவ்வளவு உண்மையே. இன்றைய புஜமாலெகட்சியினருக்கும் உவப்பாக இருக்கவில்லை. இதையே மறைமுகமாக தமது பிளவின் போது வெளிப்படுத்துகின்றார்கள். பின்னர் சு.கட்சியுடன் ஐக்கிய முன்னணிக்கு முயன்றதும், சிறிமாவுடன் இருந்த உறவுகளும் நிரூபிக்கின்றன. அதாவது கட்சி முடிவை மத்திய குழுவின் அனுமதி இன்றி ஊடகங்களுக்கு வழங்கி விட்டதாக குறை கூறுகின்றார்கள். தோழர் சண்முகதாசன் ஒருங்கிணைந்த கட்சியில் எடுத்த முடிவிற்கு முன்னரும், உடைவிற்குப் பின்னரும் எழுந்த விமர்சனங்களை பகுத்தாய்கின்ற போது இவைகள் வெளிப்படும்.
தனிமனித நடத்தை
தோழர் சண்ணை விமர்சிப்பவர்களின் போக்குக்களில் சில
‘‘பிளவைத் தவிர்த்து மக்களது எழுச்சி உணர்வை ஆரோக்கியமான வகையில் முன்னெடுக்க ஏற்றதாக கட்சிக்கு உள்ளேயே கருத்துப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கக் கூடாதா என்ற நியாயமான சந்தேகத்தை நிவர்த்திப்பதற்கு அவசியம் உள்ளது. சென்ற வருடம் தை மாதமளவில் எவருமறியா வகையில் எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற தோழர் சோமர் (சோமசுந்தரம்) அவர்களுடன் இடம்பெற்ற விவாதமொன்றை இங்கு கவனங்கொள்ளலாம். அவர் பற்றிய நினைவுக் குறிப்பில் இதனைப்பதிவு செய்திருந்தேன். (ரவீந்திரன்) (சீனாவையும், மூன்றுலக் கோட்பாடு, சீனத்தின் சிறிமாவை ஏற்பது என்பதா? தேசிய முதலாளி வர்க்கம் என்பதா?? தாராளமாக விளக்கம் தாருங்கள்)
சண்ணின் தனிப்பட்ட குண இயல்பு பற்றிப் பேசப்படுகின்றது. - தொழற்சங்கவாதத்திற்கு பலியாகிவிட்டார் என்று சுயவிமர்சனம் செய்கின்றார். இந்த அர்த்தத்தில் இருந்து கடந்தகால கட்சி செயற்பாட்டை மதிப்பீடு செய்ய வேண்டும். (இன்று சோவியத் பாதையாளர்களும்- சீன சார்பானவர்களும்) தேச விடுதலையை ஏற்றுக் கொள்ளவில்லை.
திரிபுவாதம் என்று அடிக்கடி பேசப்படுகின்றது…….” மார்க்சியத்தின் தனிப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிராக திருத்தல்வாதம் தனது தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. மாறாக, தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் ஆகிய மார்க்சியத்தின் எல்லா அம்சங்களையும் திருத்த அது முயலுகிறது‘‘ (ப4 மார்க்சியமும் திருத்தல்வாதமும்) ‘‘ பூர்சுவா ஜனநாயகச் சூழ்நிலைகளில் வர்க்க முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டமும் மங்கிவிடும் என்பதைப் பற்றிய திருத்தல் வாத ‘தத்துவங்களை ‘ அவர் கண்டித்தார். பூர்சுவா நாடாளுமன்ற முறை ‘நெருக்கடிகளையும், அரசியல் புரட்சிகளையும்‘‘ அகற்றுவதில்லை என்று அவர் வரலாற்று ரீதியாக உண்மைகளைக் கொண்டு நிரூபித்தார். திருத்தல்வாதத்தின் சாரம், தொழிலாளி வர்க்கத்தின் இறுதி லட்சியத்தை, சோசலிசத்தின் வெற்றிக்கான போராட்டத்தைக் கைவிடுவதாகும். (4-5 லெனின் அதே )
1. 1964 பிளவும் பின்னரான பிளவுகள் - இது கோட்பாட்டு ரீதியானது சர்வதேச தத்துவப் போராட்டம்
2. ஜேவிபி போன்ற பேரினவாதச் சிந்தனை கொண்டவர்கள் ( யாழ்
3. சைவவேளாளம், யாழ் மையவாதம் என்று பேசுவர்கள் ஜேவிபி போன்றவர்களின் சிந்தனைக் கட்டமைப்பை இதுவரையில் விமர்சிக்கவில்லை. )
சாதியப் போராட்டத்தினைப் பற்றி தமது வெகுஜனன், இராவணன் தமது பெருமையைத் தான் எழுதிக் கொள்கின்றார்கள். இவ்வாறு ” சண்ணுக்குரிய வகிபாகம் எத்தகைய கனதிமிக்கது என்ற உண்மையை ஏற்காமல் இருக்க இயலாது. மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அணியில் வி.ஏ. கந்தசாமி மட்டுமே ஒக்ரோபர் 21 (1966)எழுச்சியில் முன்னணிப் பாத்திரம் வகித்திருந்தார். அப்போது அவர் கட்சியின் வட பிரதேசத் தலைவர். அந்த அணிக்குரிய ஏனையவர்கள் சாதியத்துக்கு எதிரான கட்சியின் முன்னெடுப்புகளை ஆதரித்தனரே அல்லாமல் முன்னணிப் பங்கேற்பாளர்களாக இயங்கவில்லை. ஆயுதப் போராட்டமாக அதனை முன்னெடுத்திருக்க வேண்டியதில்லை என்ற கருத்துக்கூட அந்த அணியைச் சேர்ந்தசில தோழர்களிடம் இருந்தது. ஒக்ரோபர் 21 எழுச்சி ஊர்வலம் சுன்னாகம் சந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வீறுடன்முன்னோக்கிச் சென்ற பொழுது அதற்கான தலைவராக கட்சியின்வட பிரதேச வாலிபர் சங்கத் தலைவரான கே.ஏ. சுப்பிரமணியம் இருந்தார். அவரைத் தமது அணியில் வென்றெடுக்க தோழர்வி.ஏ. கந்தசாமி பெருமுயற்சி செய்தபோதிலும் அதற்கு அவர் உடன்பட மறுத்து சண்ணுடன் தொடர்ந்து இயங்கியமையாலேயே சாதியத்துக்கு எதிராகப் போராடிய சக்தி முழுமையும் சண் தலைமையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வாய்ப்பை வழங்கி இருந்தது.கொம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு முறைக்கு உட்பட்டு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அணியினர் செயற்படவில்லை என்ற காரணத்தாலேயே கே.ஏ. சுப்பிரமணியம் (மணியம்) அந்த அணியினருடன் செல்லாதிருந்ததற்கான பிரதான அம்சமாக இருந்தது.” இரவீந்திரன்
இவ்வாறு பெருமை பேசினாலும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தை துணிந்து நடத்த முடியாதவர்களாகவே வடபிரதேச வாலிபர் சங்கத்தினர் இருந்துள்ளனர்.
கௌரிகாந்தன் 1966 தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்திற்கு முக்கிய கருத்து வழங்கியவராக இருக்கின்றார். வடமாகாண இஞைஞர் அணியில் அங்கத்துவம் வகித்த கௌரிகாந்தவன் அவர்கள் காரைநகரில் இரட்டைக் குவளைக்கு எதிரான போராட வேண்டும் என்று முன்பிரேரனை கொண்டு வந்த போது யாழ்மாவட்ட இளைஞர் அணியினர் ஒப்புதல் கொள்ள வில்லை. பின்னர் அனுராதபுரத்தில் நடைபெற்ற கமத்தொழிலாளர்கள் மாநாடடிற்கு சந்திரிக்கா, கௌரிகாந்த ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அவ்வேளையில் தோழர் சண்ணிடம் இரட்டைக் குவளை பற்றி அறியப்படுத்தினார். இதைக் கேட்ட பின்னர் அவர் ”நான் யாழ்ப்பாணம் வருகின்றேன் அப்போ இது பற்றி செயற்குழுவில் கதைப் போம் என்றாராம்” மாநாடு முடிவுற்ற பின்னர் யாழ் வந்த தோழர் சண் செயற்குழுக் கூட்டத்தில் பங்கு பற்றிய பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு காரணமானது. இதன் பின்னரே தீண்டாமை எதிர்ப்பியக்கம் செயற்பாட்டிற்கு வந்தது. இந்த வரலாற்றுப் போக்கை தீண்டமைப் போராட்டம் எழுதிய வரலாற்றில் இருப்பதாக அறிய முடியவில்லை. அவ்வாறு இருந்தால் அறியத் தாருங்கள். ஒரு வேளை இவர்களுக்கு சமூகத்தை மதிப்பிட முடியாத நிலையில் சண் முன்வைத்த கருத்துகள் தான் இவர்களை ”சண்முகதாசனின் அகநிலைப்பட்ட ஒரு முனைவாதத் தவறுகள் நிச்சயம் களையப்பட வேண்டும்” (ப207- சிகாசி. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50ஆண்டு) மேலும்
”தனது அகநிலைப்பட்ட ஒரு முனைவாதத் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு பிடிவாதமாக மறுத்து வந்தார். இதனால் அவ்வப்போது உட்கட்சி போராட்டம் இடம்பெற்று வந்தது ஐக்கிய முன்னணி பற்றிய சர்ச்சையில் சண்முகதாசன் தனது புத்தகவாத நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாரே தவிர இலங்கையின் யதார்த்த நிலையை கவனத்தில் கொள்ளத் தவறினார். இதே போன்று தேசிய இனப்பிரச்சினையிலும் குறிப்பாக சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத்தில் அவரது நிலைப்பாடு தெளிவற்றதாகவும் புதிய வளர்ச்சிப் போக்குகளை கணிப்பில் கொள்ளாத நிலையிலும் காணப்பட்டது. இத்தகைய உட்கட்சி ரீதியிலான கொள்கை விவாதங்கள் இடம்பெற்று வந்த எழுபதுகளின் நடுக்சூறுக்குப் பின்னான காலப்பகுதியில் தோழர் மாவேசேதுங்கினால் முன்வைக்கப்பட்ட மூன்றுலக் கோட்பாடு பற்றிய விவாதம் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. ””(208 இஇஇ50ஆ)
இவர்களின் மார்க்சிய அறிவை இவர்களின் விமர்சனத்தில் இருந்தும், கட்சியின் வரலாற்றில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். தோழர் சண்ணின் அகநிலைவாதம் என்பது மிகைப்படுத்தப்பட்ட விமர்சனமாகவே கொள்ள முடிகின்றது
மூன்றுலகக் கோட்பாடு
மூன்றுலகக் கோட்பாடு தோழர் மாவோ ஏகபோக முதலாளித்துவ நாடுகளையும் குருவேசின் பின்னரான சோவியத்தையும் ஒன்றாக்க வேண்டிய அவசியம் தோழர் மாவோவிற்கு இல்லை. இதில் இன்னொரு விடயம் சொந்த நாட்டு பாட்டாளி வர்க்கத்தின் நலனை முதன்மை கொள்ளாது சர்வதேச விடயத்தில் ஈடுபட்டதாக தோழர் சண்முகதாசனை குற்றம் சாட்டுகின்றார்கள். தோழர் சண்ணை இலங்கை என்ற நாட்டுக்குள் மாத்திரம் அடக்கிவிட முடியாது. எனெனில் 1940களில் இருந்து சர்வதேச உழைப்பாளர் அமைப்புகளிடையே தொடர்களை கொண்டு வந்துள்ளார். இதே போல மாபெரும் விவாதம் நடந்த வேளையில் மாவோவின் பக்கம் நின்று குருசேவின் திரிபுவாதத்திற்கு எதிராக நின்றார்.
கட்சியின் முடிவை மீறி மூன்றுலகக் கோட்பாட்டை மீறுவதாக பத்திரிகையில் வெளியிட்ட நிலையில் தான் முரண்பாடு ஏற்பட்டது என்கின்றனர். இங்கு கொள்கையை முன்னிறுத்துவதும், சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்ட வேண்டிய கடமையை தோழர் சண் செய்தார்.
இது பாட்டாளி வர்க்கம் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சனையாகும். இந்தக் கோட்பாட்டுப் பிரச்சனையை எவ்வாறு இவர்களால் மலினப்படுத்த முடிந்த் என்பது இன்றுவரைக்கும் விடைகிடைக்காத, விவாதிக்கப்படாத விடயமாக இருக்கின்றது.
தோழர் லெனின் வகுக்கும் மூன்று உலகம் என்பது டென்சியாபிங் திரிபுவாதிகளால் முன்வைக்கப்பட்டதற்கு மாற்றாகும். தொழிற்துறை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள், தொழிற்துறை வளர்ச்சிக் கட்டத்தில் இருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கொலனித்துவ ஆட்சிக்கும் தேசிய இயக்கங்கள் முற்றுப் பெறாத நாடுகளாகும்.
1.சோவியத் ஒன்றியம் – அமெரிக்க ஏகாதிபத்தியம்
2. மேற்குநாடுகளும்- யப்பான்
3. வளரும் நாடுகள் என்று மூன்றுலகமாக பிரிக்கின்றார்கள்.
இங்கு உலகப் போக்கில் IMF (1944) NATO ஐரோப்பிய பொருளாதார ஒன்றியம், போன்றவைகள் ஊடாக ஏகாதிபத்திய, முதலாளித்துவக் கூட்டு என்பது உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நாடுகள் ஏகாதிபத்திய முகாமுடன் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் தங்கியிருக்கும் நாடுகளாகும். இதில் ஜேர்மனி, பிரான்ஸ், யப்பான், இங்கிலாந்து என்பன உலக வல்லரசு நிலையில் வளர்ந்திருந்த காலமாகும். எனவே இவைகளை கீழ் நிலை எதிரியாக கொள்வது எதார்த்தமாக இல்லை.
இங்கு தோழர் லெனினின் ஏகாதிபத்தியம் என்ற வரையறையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றார்கள். மணியம், செந்தில்வேல் அணியினர் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலைக் கொண்டுள்ளார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அவர்களின் எழுத்துக்களில் இருந்து இதற்கான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியவில்லை.
மூன்றுலக் கோட்பாட்டை ஏற்று புகழ்கின்றார்கள். ஆனால் அரசியல் பொருளாதார விடயத்தில் உழைக்கும் மக்களுக்கு எவ்வாறு நலனைக் கொடுக்கும் என்பது பற்றிய எவ்வித செய்தியையும் அறிய முடியவில்லை
இதில் சீனாவின் நலனில் இருந்து பார்க்கின்ற போது தனக்கான அணிதிரட்டல் என்று தான் கொள்ள முடியுகின்றது. தோழர் சண்முகதாசன் சீனாவை அம்பலப்படுத்தியதால் நேரடியாக பாதிக்கப்பட்டது கட்சிக்குள் எதிர்நிலை எடுத்தவர்களுக்காகும்.
சீனாவின் பொருளாதார உதவி என்பது இவர்களுக்குத் தேவைப்பட்டது. இதுவும் ஐக்கிய முன்னணி பற்றிய பிரச்சனை என்கின்றார்கள். இது சிறிலங்கா சுதந்திரக்கட்சி, போலி இடதுசாரிகள் மீதான மென்மைப் பார்வையாகும்.
சிறிமாவுடனான இ.க.க (இடது -1978) கொண்டிருந்த உறவும், தேசிய முதலாளித்துவ சக்தி என்ற பார்வை, சமாதான தேவதை சந்திரிக்காவின் பின்னால் நின்ற நிலைகளும் எடுத்துக் காட்டுகின்றது. ”தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்த கோரிக்கையை உள்ளடக்கிய ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்த திருமதி சிறிமா பண்டாரநாயக்காவிற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) தனது பூரண ஆதரவை வழங்கியது” (233இஇஇ50ஆ)
புத்தகவாதி என்று தோழர் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். ஆனால் தோழர் சண் எழுதியது போல இலங்கையில் கோட்பாட்டுத் தளத்தில் எழுதியவர்கள் எவரும் இல்லை. இதில் குறிப்பாக சி.கா.செந்தில்வேல், பேரா. சிவசேகரம் போன்றவர்களிடையே கோட்பாடு சார்ந்த எழுத்துக்களை இல்லை எனலாம்.
மாபெரும் விவாதத்தில் கலந்து கொண்டது போலவே இறுதிக் காலத்தில் லண்டனில் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்வை வைத்திருந்தார்.
”மத்திய குழு முடிவை மீறி அறிவித்தது ஒரு தவறாக இருந்த போதும்,ஒரு கட்சி உடைவதற்கு காரணமாக அது அமைவது என்பது பொருத்தப்பாடானதல்ல. மாறாக, அவசியமாகப்பட்ட ஒரு உடைவுக்கான நிமித்த காரணமாக அது இருந்திருப்பதாகவே தோன்றுகிறது. (விக்கி - தாய்வீடு) (சண் தரப்பிற்கும்- சுப்பிரமணியம் தரப்பிற்கும் இடையேயான முரண்பாடு பற்றியதாக புரிந்து கொள்ள முடிகின்றது. )
தோழர் சண் தேர்தலில் போட்டியிட்டு சீசீ இந்தப் பழம் புழிக்கும் என்று தன்முனைப்புடன் தேர்தலில் போட்டியிட்டார். சரி இப்போதும் அதே சண்தான் பொதுவில் தீர்மானத்தை வெளியில் கொண்டு வந்தார். இதில் உள் ளதர்க்க ரீதியாக முரண்பாட்டை பொது வெளியில் சந்திக்க வேண்டியது தான்.
இந்த விமர்சனங்கள் என்பது மூன்றுலகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உதவியை பெற்றுக் கொள்வதன் இலக்காக கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தோழர் சண் அன்றைய காலத்தில் சீனத்துடன் முரண்பட்டுக் கொண்டார். தோழர் சண் தலையசைக்கும் நபராகவோ, தன்னிருப்பை நிலைநிறுத்த வேண்டும் என்றவர் அல்லர்.
திணைக் கோட்பாடு?
திணைபற்றி எழுத வேண்டிய நிர்பந்தத்திற்கு காரணம் தோழர் சண்முகதாசனின் 100 ஆண்டு நினைவுக் கட்டுரையில் வலிந்து திணைக்கோட்பாட்டைப் பற்றி புகுத்தப்பட்டதேயாகும்.
திணை அரசியல் கோட்பாடு என்பது சமூகத்தினை உள் அலகுகளாக பிரித்துப் பார்ப்பதா அல்லது தொல்காப்பியம் வரையறுக்கும் திணைக் கோட்பாடா என்பதற்கு அப்பால் திணைக் கோட்பாடு என்பது 1966 களில் எழவில்லை. இரத்த உறவுமுறை உடைகின்றது. நவீன தேசிய- தேசங்களாக உருவாகுவது தான் சமூகக் கட்டம். பழைய முறை உற்பத்தி முறை, சமூக உறவு முறை என்பது நீடிக்க முடியாது. உற்பத்தி முறை மாற்றம் ஏற்படவில்லை என்பதும் சாதிய ரீதியாக விடுதலையை உற்பத்தி முறைக்குக்கு முன்னரே மாற்ற முடியும் என்று நம்புகின்றார்கள். வர்க்க (பொருளாதார- தேசிய ஜனநாயப் புரட்சி, அதிகாரம்) போராட்டம் என்ற மார்க்சிய போதனை மறுக்கின்றதே திணை, இரட்டைத் தேசியமாகும். ஆனால் இன்று மார்க்சியம் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு என்று எழுதுவது அப்பட்டமான திரிபுவாதமேயாகும். திணைக் கோட்பாடு என்பது தலித்திய- பின்னவீனத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டதே திணைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை முன்னிறுத்தி எழுதி வருபவர் திரு இரவீந்திரன் நடேசன்.
” மார்க்சியர்களது பங்கேற்பும் வழிகாட்டலும் தலைமையேற்பும் அந்தக் களத்தில் இருந்து வந்துள்ளது .இந்தியாவில் தேசிய விடுதலை இயக்கம் மட்டுமன்றி மார்க்சியஅணியும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை விடுதலைப்போராட்டத்தின் முக்கிய கூறாக இணைத்து முன்னெடுக்கவில்லை. இதன் பேறாக அங்கு திணை அரசியல் செயல் தளமாக தேசியவிடுதலை இயக்கக் களம் இயங்கவில்லை. இலங்கையில் தேசியஎழுச்சியில் மேலாதிக்கத் திணை அரசியல், விடுதலைத் திணைஅரசியல் என்பவற்றை அடையாளம் காணும் வகையில் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைப் பிரதான நடைமுறைப் பணியாக மார்க்சியர்கள் கையேற்றுச் செயற்பட்டமை அமைந்திருந்தது.” (இரவீந்தர்)
‘‘அந்த வரலாற்று அனுபவத் தொகுப்பு இன்று மார்க்சியம் எதிர் நோக்கும் நெருக்கடிக்குத் தீர்வு வழங்கும் மார்க்கமாக ‘திணை அரசியல்’ கோட்பாட்டை முன்னிறுத்தி உள்ளது. (ரவீந்தர்- தாய்வீடு)
தொல்காப்பியத்தில் இயற்கைக் கூறுகளாக
‘நிலம் தீ நீர் வளி வவிசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருந்திணை ஐம்பால் இயனெறி வழைமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் (தொல் 91)
இதனை ஐம்பூதங்களாக தமிழ் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதுதான் உலகத்தில் படைப்பிற்கானது என பண்டைய தமிழ் அறிவியல் கூறுகின்றது.
ஐம்பூதங்களே இவ்வுலகு என்கின்றது தமிழ் மெய்யியல். சமூக வளர்ச்சிப் போக்கில் தொல்பழங்குடி வாழ்வியல் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி (சேயோன்) காடும், காடு சார்ந்த நிலமும் (மாயோன்) முல்லைத் திணை மிருகவளர்ப்பும், இதன் ஊடாக வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் - வேந்தன் விவசாய வாழ்வியலுக்குள் நுழைகின்றார்கள். உற்பத்தி பொருளின் மிகை உற்பத்தி கடல் வணிகத்திற்கு காரணமாகின்றது. கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் (வருணன்). பாழ் நிலம் பாலை (கொற்றவை) எனவும் இருந்திருக்கின்றது. பாலை என்பது குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையில் உள்ள வரண்ட நிலத்தை பாலை என்கின்றார்கள். பாலைவனம் தமிழர் பகுதியில் இல்லாமையே காரணம் என்கின்றனர்.
இந்த பிரிவுகளை முன்னிறுத்தி மார்க்சின் உற்பத்தி முறை பற்றிய வரையறை உடன் ஒப்புநோக்குவார்கள். வேட்டைச் சமூகம், மிருக்கங்களை வளர்ப்பது, நிரந்தரக் குடியிருப்பை நோக்கிய வேளான் சமூகம் என்ற பொருளாதார முறைமை மாற்றத்தை அறியமுடியும். இந்த திணைப் பிரிப்பு பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தை குறித்து நிற்பதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றார்கள். இதன் அடிப்படையில் அமைந்ததே திணைக்கடவுள்களுமாகும். புவியியல் தன்மையே வாழ்வியலுக்காக உழைப்பை தீர்மானிக்கின்றது. இந்த திணைப் பிரிவினை என்பது இரத்த உறவைக் கொண்ட சமூகஒழுங்கமைவு கொண்டதாகும். இரத்தவழி உறவு முறை கொண்ட சமூகத்தின் சிதைவிற்கு உள்ளாகின்றது. இதன் பின்னர் அரசு வடிவம் உருவாகின்ற போது திணையைக் கொண்ட சமூக வாழ்வு சிதைவை வேகப்படுத்துகின்றது. அரசுகள் என்று வருகின்ற போது நிலப்பிரபுத்துவம் தோற்றத்திற்கு உள்ளாகின்றது.
”இணைத்துக்கொண்ட வெகுஜன இயக்க நடைமுறையைச் சாதியமைப்புக்கு எதிரான போராட்டக் களம் வரித்துக் கொண்ட பொழுது சமூக அமைப்பில் அர்த்தமுள்ள அதிர்வை ஏற்படுத்திக் கொள்ளமுடிந்தது. மார்க்சியம் என்பது வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதில் தலைமையை வழங்க ஏற்றது மட்டுமல்ல, முழுச்சமூக சக்தியாக (ஒட்டுமொத்தத் திணையாக) இயங்கும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான விடுதலைத் திணை அரசியல்செயலொழுங்கினைத் தலைமையேற்று வழிப்படுத்த வல்லமை பெற்றது” இரவீந்தர்.
மார்க்சிய வழிகாட்டலுக்கு அப்பால் திணை அரசியல் செயல்லொழுங்கினத் என்பது குழப்பமாகவே வரலாற்றை படிப்பவர்களுக்கு இருக்கும்.
சாதியத்தின் உடைவு என்பது நிலம் அரசுடமையாக்கப்படும் போது தான் சாத்தியம். சாதியம் தொழில், உற்பத்தியை தீர்மானிக்கும் இடத்தில் இருந்து அகற்றுவது முதலாவது கட்டம். இதுவே ஈழத்தில் நடைபெற்றது. தொழிலில், உற்பத்தியில் சாதியம் அகற்றப்பட்டது. ஆனால் அருந்ததியர் நிலை அவ்வாறில்லை என்பது ஏற்றுக் கொள்ளப்படத் தான் வேண்டும்.
சாதியம் உணர்வில் இருப்பது என்பது போலியுணர்விற்கு உட்பட்ட கருத்துமுதல்வாதம் சார்ந்தது. உலகக் கண்ணோட்டத்தில் கருத்துமுதல்வாதத்திற்கான போராட்டம் சரியான திசைக்குச் செல்வது புரட்சியின் பின்னரேயன்றி புரட்சிக்கு முதல் அல்ல. அவ்வாறு எண்ணுவது அராஜகவாதமாகும். மதம்பற்றி லெனின் வழிகாட்டல் சரியாகவே இருக்கின்றது. சோசலிசப் புரட்சிக்கு முதலும் தொழிலில், உற்பத்தியில் சாதியை பெருமளவு உடைக்க முடியும்.
புரட்சிக்கு முன்னையதையும் பின்னதையும் போட்டுக் குழுப்பிக் கொண்டிருக்க முடியாது. திணை அரசியல் என்பது சமூகமாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தேசிய சனநாயகப் போராட்டத்தை திசைதிருப்பம் அடையாள அரசியலே. (தலித்தியம் என்றால் என்ற தலைப்பில் இரண்டைத் தேசியம் பற்றி நிறையவே கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. http://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2016/03/6.html)
சாதியப் போராட்டத்தின் விளைவு ஈழப் போராட்ட எழுச்சியை தோற்றுவித்தது. ‘‘ சுதந்திரமான, ஐக்கியத்தின் அடிப்படையில்- சுதந்திரமான ஐக்கியம் என்ற சொல் பிரியும் உரிமையில்லாவிடில் பொய்யானது- உறவுகளை அமைத்துக் கொள்வோம் என்றும் தற்பேர்து மட்டுமின்றி, புரட்சியின் போதும் புரட்சி வெற்றி பெற்ற பெின்ரும் தம் செயல்களனைத்திலும் நிரூபிக்காத சோசிலிஸ்டுகள் கட்சி சோசலிஸசத்துக்கு துரோகம் செய்பவை ஆகும். (303லெ.தொ1)
” குறிப்பாக, அறுபதாம் ஆண்டுகளின் உலகளாவிய மாபெரும்விவாத முன்னெடுப்பில் தோழர் சண் தலைமையேற்று முன்னெடுத்த ‘அடித்தால் திருப்பி அடிக்கும்’ வன்முறைப் போராட்டத்தை” இரவீந்தர்
சாதியம் நிலமானியச் சமூகத்துக்கு மட்டும் உரியதல்ல. திணை மேலாதிக்கம் ஏற்பட்டு உருவான சாதி முறை அப்போதே சாதியத்தை வரித்து இருந்தது.
------------------
குறிப்பான சமூக உற்பத்தி முறையின் முதிர்ச்சி என்பது அவசியமானதாகும். கடைச்சங்கங்க காலத்தில் தான் சனாதன சிந்தனையின் தொடர்ச்சியை காணமுடிகின்றது. திணை என்பது இனக்குழுவாழ்க்கை முறை.
சமூகத் தட்டில் மன்னர் முறைபற்றி எழுதியுள்ளார்கள். 1.பேரசன், 2. அரசன் 3. சிற்றரசன் 4. இனக்குழுமத்தலைவன். (“இனக்குழுத் தலைவன்” சீறூர் மன்னன், “சிறுகுடிக்கிழான், சீறூர்வண்மையோன்.” எனப் பாராட்டப் பெற்றான்.)
இனக்குழுமத்தலைவர் பற்றியது திணைவடிவம் பற்றியதே. அந்தக் காலத்தில் சனாதனம் (மூளை உழைப்பை விற்கும் அளவிற்கு அந்தச் சமூகம் வளரவில்லை. இதனை பப்புவா நியூகினியாவில் (big man முறையில் .குலத்தலைவன், அவருக்கு மிகுதியாக பன்றியைக் கொடுப்பார்கள்.) இனக்குழும வாழ்க்கை என்பது சனாதனத்தை உடன் உள்வாங்கிட முடியாது.
திணை சமூக வாழ்வில் சாதியமுறை உருவாகுவது என்பது வேலைப்பிரிவினையை வைத்து இதுதான் சாதி என்று சொல்லும் பொதுப்புத்தியில் அமைந்த சிந்தனை இருக்கின்றது என்பதும் உண்மைதான்.
திணையாக- சாதிய என்பதை இரண்டைத்தேசியம் என்கின்றீர்கள். (http://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2016/03/1_23.html தலித்தியம், இரட்டைத் தேசியம் பற்றி நிறைவாக உள்ளது.
வேளாளர்களின் நலனுக்கானது என்பது வாய்ப்பாட்டு வாதமே. இது தோழர் லெனின் முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளுக்கான வழிகாட்டலை (http://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/.../blog-post.html) மறுக்கின்ற போக்காகும்.
2. ஐரோப்பாவில் போலவன்றி எமது தேசியம் ஏகாதிபத்தியத்தால் வடிவப்படுத்தப்பட்டது. அதற்கெதிரான போராட்டத்தால் எழுச்சி பெற்றது.
----------------------------------------------------------------------
தோழர் லெனின் எழுதி மூன்று தேசங்கள், தேசியப் போராட்டம் என்பதை தெரியாது எழுதுகின்றீர்கள்.
1. தொழிற்துறை முதலாளித்துவ சனநாயகப் புரட்சி (1789-1871) முற்றுப்பெற்ற நாடுகள்
2. தொழிற்துறை வளர்ச்சி யடைந்து வரும் நாடுகளாக போலந்து, ருசியா---
3. தேசிய இயக்கங்கள் வளரவில்லை, அல்லது அந்த வளர்ச்சி முழுமையடையவில்லை.
காரணம் இவ்வாறான சதிக்கோட்பாட்டை உள்வாங்கியே பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
அதாவது இடதுசாரிகள் வளர்ந்து விடுவார்கள் என்ற காரணத்தினால் ஈழத் தேசியப் போராட்டம் வளர்க்கப்பட்டதாக எழுதிவருகின்றர்கள்.
கொலனித்துவம் வலுக்கட்டாயமாக இணைத்த ஆட்சிப் நிர்வாகத்தின் விழைவுகள் பற்றியதே. 1833 இல் நிர்வாகத்திற்காக இணைக்கப்பட்டது. கொலனித்துவம் இணைத்த அரசு முதலாளித்துவ வளர்ச்சியை அடையாது தடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இது சிங்கள தேசத்தின் கொலனியாக மேற்கு கொலனித்துவத்தால் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இருக்க தேசிய எழுச்சியை எவ்வாறு ஏகாதிபத்தியம் தான் காணம்??
3. குடிகளாக திணை வாழ்வில் இருந்த நிலை மருத திணை மேலாதிக்கத்தால் சிதைந்தாலும் அந்த மேலாதிக்கத்திணை (ஆதிக்க சாதி) அரசியலை எதிர்த்து சமத்துவத்தை வெல்ல அவசியமுள்ளது. ஆதிக்கச் சாதி - ஒடுக்கப்பட்ட சாதி தேசிய நலன்கள் பிளவுபட்டுள்ளமையால் இரட்டை தேசிய நியதி எமக்கான இயல்பு நிலை.
----------------
மருத நிலத்தவர்கள் மட்டும் தான் ஆதிக்க நிலையில் இருப்பார்கள் என்ற கற்பிதத்தை தரவுகளுடன் நிறுவ வேண்டும். நிலமானியச் சமூகச் சிந்தனை என்பது அனைத்துச் சமூகத்திடம் உள்ளதே. (http://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/.../blog-post...)
இந்தப் பகுதி திணை, ஐரோப்பிய, ஏகாதிபத்தியவாதம் எல்லாமே கூட்டாஞ்சோறு மாதிரி இயங்கியலுக்கு முரணாக உள்ளது.
தமிழ் தேசிய இனம் என்ற ஒழுங்கமைவில் இருந்து விடயத்தை அணுகாமல் சாதிய அடிப்படையில் சமூகத்தை அணுக வேண்டும் என்பது பின்னவீனத்தின் தாக்கமாகும். ஒடுக்கப்பட்ட சாதிகளின் நிலை 1966 -70 முன்னைய நிலைபோல தான் உள்ளதா? சிந்தனையில் உள்ளதும், உற்பத்தி – தொழிலில் உள்ளதும் ஒன்றா?? இந்தக் காலத்தைப் பற்றிய மதிப்பீட்டை மீள ஆராய முடியவில்லை.
4. தேசியத்தின் முதலாளித்துக் கட்டத்தைக் கடந்தாக வேண்டும். ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாகத் தகர்ப்பதாக இருந்தால் சோசலிசத்தை வரித்தாக வேண்டும்.
--------------------------------
சோசலிசக் கட்டத்தை அடைவதற்கு எங்கிருந்து தொடங்கப் போகின்றீர்கள்.
ஐக்கிய இலங்கைப் புரட்சி சாத்தியமா? அது ஏன் கடந்த காலத்தில் சாத்தியமாகவில்லை? சிங்கள் பெரும்பான்மை யாரின் பக்கம் நின்றார்கள்??
இதற்கு மாற்றாக -
தேசிய இயக்கம் துயிலெழுவதும், தேசிய அரசுகள் அமைவதும் உலகின் பொதுவான போக்கு என்கின்றார் தோழர் லெனின். இதில் உங்கள் நிலை என்ன?
5. சிங்கள பௌத்த பேரினவாத முனைப்பைத் தகர்க்கும் வேலைத் திட்டங்கள் சிங்கள மக்களிடம் உண்டு (அதே நல்லிணக்க அமர்வில் அவையும் பேசுபொருளாக அமைந்தன).
-----------------------------------
சிங்கள தேசம் ஆட்சியதிகாரம் (சுயநிர்ணயம் கொண்டது. ஆனால் சுயநிர்ணயம் இல்லை என்பவர்கள் உள்ளார்கள்.
6. ”இன்று ஈழத்தேசிய ‘அடுத்த கட்டம்’ இன்னமும் ஏகாதிபத்திய அனுசரணையை அவாவி நிற்பதனால் இந்தக் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள இயலவில்லை.”
அகிலம், பொதுவுடமை நாடுகள் எவையும் இல்லாத சூழலில் என்ன செய்ய வேண்டும் என்றால் லெனினிடம் செல்ல வேண்டும். ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஆனால் முதலாளிவர்க்கம் அடுத்த கட்டத்தை நோக்கியே நகரும். முதலாளித்துவ வளர்ச்சி அடைவது கூட இன்னொரு சமூகக் கட்டத்தை நகர்த்திக் கொண்டு செல்லும் சமூகத்தை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்திச் கொண்டு செல்லும் ”அவசியமான வர்க்கம் அதனை முன்னெடுத்துக் கொண்டு தான் செல்லும்.
தலைமைதாங்க வேண்டிய பொதுவுடமைக் கட்சி பொருளாதார வாதத்தினுள் சிதைந்துள்ளது. முற்போக்குத் தேசியம் தலைமை தாங்க வேண்டுமென்கின்றார்கள். இப்படியே செயலூக்கம் இன்றி ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏகாதிபத்தியங்கள் தமது நலனுக்காக செயற்படுவார்கள். இது இயல்பானது. அதற்காக தேசிய இயக்கத்தை ஆதரிக்க மாட்டோம் என்றால் நீங்கள் தன் அளவில் புனிதர் அவ்வளவே.
பிகு. ஈழத் தமிழ் சமூகத்தில் மார்க்சிய ரீதியாக சமூக ஆய்வு என்பது மட்டமான நிலையிலே உள்ளது. இந்த அவலம் போக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினாலே மாற்ற முடியாத கொள்கை கொண்டவர்கள் என்ற போதிலும் கருத்துக்கள், விமர்சனங்கள் எழுத வேண்டியுள்ளது.
ஈழத் தமிழ் மார்க்சியம் திரிபுவாதத்தில் இருந்து வெளியேறிட விவாதிப்பதை விட வேறு வழி இல்லை.
லெனின் கூற்றுகள்—
‘‘ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்களின் பூர்சுவா தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தினால் சில ஆட்கள் ஒடுக்கும் பூர்சுவா இனத்தின் தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுபு்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு உதவி விடுகிறார்கள்‘‘ (15)
‘‘ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது ‘‘ மிகக் கடைக்கோடி பூர்சுவா தேசியவாதத்திற்கே‘‘ உதவுகிறது‘‘ என்று நமக்கு திரு செம்கோவ்ஸ்கி உறுதியாகக் கூறுகிறார். இது சிறுபிள்ளைத் தனமான மடமை. ஏனென்றால், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரச்சாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது பூர்ஷ்வா தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையோ சற்றும் விலக்கிவிடாது. மாறாக பிரிந்து போகும் உரிமையை மறுப்பது தான் மிகக் கடைக்கோடி மாருஷ்யக் கறுப்பு நூற்றுவர் வகை தேசியவாதத்திற்கு ‘உதவுவதாகும்‘ என்பது சிறிதும் மறுக்க முடியாத உண்மை!‘‘ (15) (ரோசாலுக்சம் பர்க் இவ்வாற கருத்தை கொண்டிருந்தால் ஏளனம் செய்யப்பட்டார்.
‘‘பூர்சுவா தேசியவாதம் தனித்தன்மை வாய்ந்ததாய் இருக்கின்றது,. எனவேதான் தேசிய இனப் பூசல்கள் ஓயாமல் நடைபறுகின்றன. ஆனால் பாட்டாளி வர்க்கம் ஒவ்வொரு தேசிய இனத்தின் தேசிய இன வளர்ச்சிக்கும் ஆதரவாக நிற்கத் தயாராய் இல்லை என்பது மட்டுமல்ல,. இதற்கு மாற்றாய் இம்மாதிரியான பிரமைகளுக்கு எதிராய் மக்கள் பெருந்திரளினரை எச்சரிக்கிறது,. முதலாளித்துவ ஒட்டுறவுக்கு முழு அளவு சுதந்திரம் வேண்டுமென்பதை ஆதரிக்கிறது; வன்முறை அல்லது தனியுரிமைகளில் அடிப்படையில் அமைந்ததைத் தவிர்த்து தேசிய இனங்களது ஏனைய எல்லா விதமான ஒன்று கலத்தலையும் வரவேற்கிறது.‘‘ (46)
” சுயநிர்ணயமென்றால் பிரிந்தே செல்வது தான் என்ற விடாக்கண்டன் நிலையிலிருந்து உங்களால் எப்படி மாற இயலாமல் உள்ளதோ ஒன்றுபட்ட இலங்கைத் தேசத்தில் அனைத்துத் தேசிய இன மக்களும் விடுதலை பெற்றுச் சமத்துவமாக வாழ இயலும் என்ற எனது கருத்தை உங்களது எந்தத் தர்க்கங்களாலும் மாற்றிவிட முடியாது.” இவ்வாறு கருதுபவர்களின் கருத்திற்கு லெனின் நிறைவான பதில் கொடுத்துள்ளார். மணமுறிவு பற்றி லெனின் பேசுவதை இந்த அறிவாளிகள் கவனத்தில் கொள்ளவில்லை. கலாநிதிகள் கூட தேசம் என்பது பற்றிய புரிதல் அற்று எழுதுகின்றார்கள்.
தரகு வர்க்கமும் சிந்தனையும்
1921களின் அரசியல் அதிகாரம் பற்றிய பிரஞ்ஞை ஏற்பட்டது. சேர் பொன் அருணாசலம் தமிழர் மாசபையைத் தோற்றுவித்தார். இது ஒரு பெரிய அரசியல் கட்சி என்ற அளவில் இருக்கில்லை. தமிழருக்கான அதிகாரத்தைக் கோரும் ஒரு குழுவாக இருந்தது. ஆனால் 1944 ஆவணியில் தான் இலங்கைத் தமிழ் கொங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால் கொலனித்துவ காலத்தில் சுதேசிய சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யத் தெரிவு செய்யப்பட்டார்கள். இதில் சொத்துடமை வர்க்கம், மேட்டுக்குடி, அதிகார வர்க்கம் என்ற அளவில் தான் பிரித்தானியர்கள் தெரிவு செய்தார்கள். இதனால் எவரையும் நேரடியாக வெகுமக்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் என்று கொள்ள முடியாது. நாடாளுமன்ற தேர்தல் முறை வரும் வரையில் வெகுமக்களின் பிரதிநிதிகளாக கொள்ள முடியாது.தேர்தல் முறை ஒன்று வந்த பின்னரே வெகுமக்களின் பங்கின் ஊடாக ஆட்சியாளர்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் தான் 1915 இல் பொன் இராமநாதன் முஸ்லீம்கள் மீது நடைபெற்ற தாக்குதல் பற்றிய வழக்கிற்காக பிரித்தானியா சென்று சிங்கள மேட்டுக்குடிகள் சார்பில் வாதிட்டார். இந்தச் செய்கையை தமிழர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்ட எடுத்துக்காட்டாக அரசியல் பரப்பில் பேசப்பட்டு வருகின்றது.
ஒரு வரலாற்றுக் கால கட்டத்தை ஆராய்கின்ற போது அவதானமாக இருக்க வேண்டியுள்ளது. இங்கு சிங்கள வணிக வர்க்கத்தின் நலனே முஸ்லீம் வணிக நிலைகள் மீதான தாக்குதலாகும். இது 1933 இல் மலையாளிகளின் மீதான தாக்குதலாக மாறியது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் அனாகரிக தர்மபாலாவின் தேசிய எழுச்சியின் கருத்தாக்கம் படிப்படையாக வளர்ந்து வந்துள்ளதேயாகும்.
தமிழரசுக்கட்சி, த. கொங்கிரஸ் போன்றவற்றின் வர்க்கப் பின்புலத்தை முழுமையாக வரையறை செய்ய முடியாத நிலைதான் தமிழ் இடதுசாரிப் பரப்பில் உள்ளது. தமிழ் இனவாதிகள், மேட்டுக்குடி, யாழ் வெள்ளாளியம் குறுங்குழுவாதிகள், பழைமைவாதப் பிற்போக்குத் தமிழ்த் தேசியம், பிற்போக்குத் தமிழ்த் தேசிய ஆண்ட பரம்பரை ஆதிக்க அரசியல் இவ்வாறு ஒப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றை விட்டா ல் ஒரு வர்க்கத்தை மதிப்பீடு செய்ய வேறு வழி இல்லையா?
‘‘ தேசிய இனப்பிரச்சினை குறித்துச் சொற்பனும் அறிந்தவர் எவரும் சர்வதேசிய கலாச்சாரம் என்பது தேசிய இனமல்லாத கலாச்சாரம் (தேசிய இன வடிவம் இல்லாத கலாச்சாரம்) அல்ல என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள். தேசிய இனமல்லாத கலாச்சாரம் என்பது ருசிய, யூத அல்லது போலிஷ் கலாச்சாரமாக இருக்க முடியாது. தூய கலாச்சாரமாக மட்டுமே இருப்பது, ஆகவே அபர்த்தமாக இருப்பது, சர்வதேசியக் கருத்துகள், தொழிலாளி பேசுகிற மொழிக்கும் தொழிலாளி வாழ்கிற ஸ்தூலமான தேசிய இன நிலைமைகளுக்கும் ஏற்றவையாக இருக்கும் போது மட்டுமே, தொழிலாளி வர்க்கத்தை ஈர்ப்பனாக இருக்க முடியும், தொழிலாளி அவரது தேசிய இனக் கலாச்சாரத்தின் நிலைமை குறித்தும் வளர்ச்சி குறித்து கருத்தில்லாதவராக இருக்க் கூடாது, ஏனென்றால் தேசிய இனக் கலாச்சாரத்தின் மூலம் தான், அதன் மூலம் மட்டும் தான் அவர் ‘ஜனநாயகத்தின், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரத்தில்‘ பங்கெடுத்துக் கொள்ள முடிகிறது. இது எல்லோரும் அறிந்ததே‘‘‘ (25-6) லெ)
மேல் உள்ளதை தமிழ் பேசும் மார்க்சியத்தை நம்பிக் கொள்பவர்கள் மீள வாசிக்க வேண்டும்.
வலதுசாரிகளின் மீதான விமர்சனங்கள் குவிந்தது.
இலங்கை வரலாற்றில் கொலனித்துவத்தின் ஆட்சியில் பங்களாளிகளாக இருந்தவர்கள் நிலவுடமைச் சமூகத்தில் இருந்து வந்தவர்களே. சமூக வளர்ச்சிப் போக்கில் அரசியல் அதிகாரத்தை கொலனித்துவ காலத்தில் சுவைக்க முற்பட்டவர்களும் அதே பின்புலம் கொண்டவர்களே. இவர்களின் பண்பு தரகுமுதலாளித்துவ கூறாக இருந்தது. ஏனெனில் தமது நலன் பின்னர் ஆண்டைகளுக்கு அடிமையாக இருப்பது என்ற சிந்தனை வடிவம். கொலனித்துவ காலத்தில் அடிமைப்படுத்தியவர்களுக்கு துணையாக இருந்தார்களே பின்கொலனித்துவ காலத்தில் அவர்களுக்கு துணையாக இருக்கின்றனர்.
‘‘தமிழரசு, மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்படுகள் மீதுசந்தர்ப்பமும் முக்கியத்துவமும் கருதிய நிலைப்பாடுகளை எடுத்தும், கருத்துக்களையும் வெளியிட்டதையும் தவிர கட்சியிடம் இதுதொடர்பாக வேறு வேலைத்திட்டமும் இருக்கவில்லை.‘‘ (விக்கி) தமிழ் முதலாளிகளுக்காக ஈழம் கேட்கின்றார்கள், சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கத்தை ஆண்ட பரம்பரை அலட்சியம் செய்கின்றனர், யாழ் சைவ வேளாளர்கள் சுரண்டுவதற்கு உரிமை கோருகின்றார்கள்.
தரகு வர்க்கத்தின் நலனுக்கு மாற்றான அரசியல் என்பது ஆட்சியதிகாரத்திற்கு எதிரான போராட்டமே அமைந்திருக்க வேண்டும்.
தரகு வர்க்கத்தை மதிப்பீடு செய்ய வலிந்திழுக்கப்படும் திணை பற்றிப் பார்ப்போம்.
”மருத திணை மேலாதிக்கம் தம்முள் ஒப்பீட்டளவில் சமத்துவத்துடன் இருந்த திணை வாழ்முறையைத் தகர்த்துச் சாதிய வாழ்துறையை ஏற்படுத்திவிட்டது. வர்க்க அரசியலுக்கான இயங்குமுறையை ஐரோப்பா தெளிவுறுத்துவதைப்போல முழுச் சமூக சக்திக்கான அமைப்பு மாற்றங்களைத் தமிழக வரலாற்றின் வாயிலாக மட்டுமே கற்றறிய இயலும்.~” (முகநூல் ரவீந்தர்)
இங்கு சொல்ல வரும் விடயத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ் தேசிய அரசியல் தலைமை தரகு- மேட்டுக்குடி வர்க்கத்தினால் தலைமை தாங்கப்பட்டே வந்தது.
இங்கு சொல்ல வரும் விடயத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ் தேசிய அரசியல் தலைமை தரகு- மேட்டுக்குடி வர்க்கத்தினால் தலைமை தாங்கப்பட்டே வந்தது. தலைமை தாங்கப்பட்டே வந்துள்ளது.
ஜிஜி, செல்வநாயகம் போன்றவர்கள் பெரும் பணக்கார்களாகவும், சட்டம் படித்தவர்கள் பலர் நிலமானியச் சிந்தனை கொண்ட பழமைவாதிகளாக இருந்துள்ளார்கள். அவர்களின் சிலர் நிலமானியப் பின்புலம் கொண்டிருந்தாலும் சிலர் தேசியச் சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் முழுமையான தேசிய அடையாளத்தை உடையவர்களால் முன்னேற முடியவில்லை. இதனால் இவர்களிடம் ஊறிய சமரசவாதம் பலவேளைகளில் வளர்ந்து வந்த ஈழ ஆயுதப் போராட்டத்துடன் முரண்பட்டுக் கொண்டது. இந்த முரண்பாடுகள் உயிரை பறிக்கும் நிலையும் ஏற்பட்டது. தேசிய சக்திக்கும் சமரசவாதத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படும். இந்த முரண்பாடுகளை கவனத்தில் கொண்ட குறிப்பான காலத்தைய முரண்களை அறிந்திட முடியும்.
2009 பின்னரான காலத்திலும் தரகு வர்க்கம் மீளவும் தலைமைக்குள் வந்துள்ளது. வலதுசாதி தேசியவாதம் தலைமை தாங்கியுள்ளதே அன்றி. தமிழ் தேசத்தின் அரசியல் நலன் சார்ந்து அது செயற்படவில்லை. அத்தலைமை சிங்கள தரகுவர்க்கத்திற்கு துணையாகச் செயற்பட்ட போது அவர்களை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யத் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். ஆனால் பொதுவான வாய்ப்பாட்டையே ஒப்பித்து வந்துள்ளார்கள்.
ஏன் சிங்கள ஆட்சியாளர்களுக்கு முட்டுக் கொடுத்ததை அம்பலப்படுத்தி களத்தில் வேலை செய்திருக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை தவறிவிட்ட பின்னர் ஒப்பாரி வைக்கின்றார்கள்.
‘‘1970 உருவாக பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சனை, தரப்படுத்தல், 1974 தமிழராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம், தமிழ் இளைஞர்களின் கிளர்ச்சி, பொலிஸ் அடக்குமுறை, புதிய குடியரசு யாப்பில் சிறுபான்மையினரது உரிமைகளின் பாதுகாப்புக்கான பகுதிகளது நீக்கம் போன்ற பல நிகழ்வுகள் தமிழ் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டத் தொடங்கின. இக் காலகட்டத்தில் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் பல தோட்டங்கள் தேசிய மயமானதையறுத்துத், தம் இருப்பிடங்களின்று விரட்டப்பட்டும் வேலைநாட்கள் போதாமையால் வெறியேறியும், வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்தனர். இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காணிச் சொந்தக்காரர்களாற் கொடுமையாகச் சுரண்டப்படும் போது, இவர்களுக்காகத் தமிழரசுக் கட்சியோ தமிழ் கொங்கிரஸோ குரல் கொடுக்கவில்லை.‘‘
(சிவசேகரம் http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000241.pdfப23)
இங்கு மலையத் தமிழர்கள் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்டதும், வடக்கு கிழக்குத் தமிழர்கள் மீது சிங்கள தேச அணுகுமுறை அத்தனையும் தேசிய இன ஒடுக்குமுறை என்பதைப் பற்றிப் பேசாது தமிழ் தரகு முதலாளிகளை தேசியவாதிகளாக -முதலாளிகளாக மதிப்பீடு செய்யப்படுகின்றது. தமிழ் தரகு வர்க்கம் தமிழ் மக்களின் நலனுக்காக கீழ் இறங்கி வருமா என்ற வர்க்க மதிப்பீடு செய்யத் தவறுகின்றார்கள். 1915 முஸ்லீம் வர்த்தக வர்க்கத் தின் மீது தொடுத்த தாக்குதலுக்கு தமிழ் தரகு வர்க்கமே துணைபோயினர். இது அடையாள அரசியலுக்கு போட்ட முதற்சுழியாகும். தென்னிலங்கை முஸ்லீம் தரகு வர்க்கம் (மதச் பிடிப்பு அதிகம் இருக்கும்), படித்த மேட்டுக்குடி மதம் என்ற அடையாளத்தை தேடி அலையத் தொடங்கினார்கள். இதேபோல மொழியை அடிப்படையாகக் கொண்டு தன் திசைவழியைத் தேடியது. இது1 921 தமிழர் மாசபையின் தோற்றம் தமிழ் தேசியப் போக்கின் திசைக்கு மாற்றம் பெறுகின்றது. இந்த வரலாற்றுப் போக்கையும் வர்க்கங்களின் அணிதிரட்டலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் தோழர் சண்தலைமையானது பட்டிமன்றம் நடத்தினார்கள். (1989 சுயவிமர்சனம் செய்யும் வரையில்) இன்றும் அவ்வாறே வாய்பாடு ஒப்பிக்கப்பட்டு முற்போக்கு தேசியம் தலைமை தாங்கட்டும் என்கின்றார். மார்க்சிய தலைமை கொடுக்காத வரையில் அவர்களை எவரும் ஒன்றும் செய்ய முடியாது. தலைமை தாங்காது தவிர்ப்பதற்காக யாழ்சைவவேளாளம்- மருத திணை மேலாதிக்கம் என்று கூறிக் கொண்டே செல்ல முடியும்.
கிழக்கின் சிந்தனை எந்தக் கட்டமைப்புச் சார்ந்ததாக இருக்கின்றது??
1978 இல் உடைவும் டென்சியா பிங் ஆதவாளர்களும்
‘‘பாராளுமன்ற வழியை மட்டும் முன்னெடுத்த வலதுசாரிகளுக்கு எதிராகச் சரியான கோட்பாட்டு முன்னெடுப்பை வழங்கிய சண், காலப்போக்கில் தானும் இடதுசாரித் திரிபுவாதத்துக்கு ஆட்பட்ட நிலையில் இரு தரப்பாரும் மக்களது புரட்சிகரக்கோரிக்கைகளுக்குத் தலைமை தாங்க இயலாதவர்களாயினர்.மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அணியினர் ஸ்தாபன முறையைக் கவனங்கொள்ளாமை, கோட்பாட்டுத் தெளிவின்மை என்பவற்றால் பின்னர் இயங்கா நிலைக்கு ஆளாயினர் என்றால், சண் இடது திரிபுவாதம் காரணமாக 1978ன் பின்னர் இயங்க இயலாதவரானார்.உட்கட்சி ஜனநாயக முறைப்படி வெகுஜனமார்க்கம், ஐக்கியமுன்னணித் தந்திரோபாயம் என்பவற்றை சண் ஏற்கும் நிலையை ஏற்படுத்த இயலும் என்ற எதிர்பார்ப்புச் சாத்தியப்படாத சூழலில்,தோழர் மணியம் 1978ல் சண்ணை விட்டு விலகி இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற புதிய அமைப்பை உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். பின்னர் புதிய ஜனநாயக கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) என்ற பெயர் மாற்றத்தைப் பெற்ற அந்த அமைப்புஇன்றுவரை இயங்க முடிவது என்பது சண் முன்னிறுத்திய கோட்பாட்டைப் பாதுகாத்து முன்னெடுத்துப் பிரயோகித்தல், கூடவே மணியம் வலியுறுத்தும் ஸ்தாபனக் கட்டுக்கோப்பு, வெகுஜன மார்க்கம், ஐக்கிய முன்னணித் தந்திரோபாயம் என்ற அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குவது என்பவற்றுடன் தொடர்புடையதாகும். இந்தவகைப்பட்ட முழுமைக் கூறுகளில் ஏதாவ-தொன்றைக் கவனத்தில் எடுக்கத் தவறினாலும் மக்களுக்குத் தலைமையேற்கும் மார்க்சிய அமைப்புப் பங்குப் பாத்திரத்தை வகிக்க இயலா நெருக்கடியை ஏற்படுத்துவதாகிவிடும்! (ரவீந்தர்)
தோழர் சண்தரப்பின் விமர்சனத்திற்கு ரவீந்தர் ” ஏனைய தோழர்களது துரோகத்தின் காரணத்தால் என்ற குற்றச்சாட்டை அவரை விசுவாசிக்கும் சில தோழர்கள் முன்வைக்கின்றனர்.இந்த விசுவாசத்துக்கு உரியவர்கள் தாமே சரியான ஒரேயொரு மார்க்சியத்தைக் கொண்டிருக்கும் ‘செயற்பட முடியாமல் போன ’சண் வழியினர் என உரிமை கோருகின்றனர். மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அணியைச் சேர்ந்தவர்களோ சண் மார்க்சிய வழிமுறையைத் துறந்த இடது சந்தர்ப்பவாதியாகித் துரோகமிழைத்ததாலே இன்று தாம் செயற்பட முடியாத சூழல் உருவாகிவிட்டது என்கின்றனர். சண்ணுக்கு மணியம் துரோகம் இழைத்தார் என அவர்களும், முன்னரே (1972ல்) சண்ணைத் தூக்கி எறியாது விசுவாச செயற்பாட்டில் மணியம் மூழ்கி மார்க்சியத்துக்குத் துரோகம் இழைத்தார் என இவர்களும் சொல்லுகிற நிலை இன்றுள்ளது.” (ரவீந்தர்)
இந்த வரலாற்றுக் கட்டத்தில்
1. சீனம் பற்றிய நிலைப்பாடு பற்றி இன்றுவரையில் வாய் திறக்காது இருப்பதன் காரணம் என்ன?
2. சிறிமாவிற்குமான உறவு என்ன? எவ்வகையான தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக சி.சு. கட்சி போராடியது? 56 இல் பண்டா யாருக்கெதிராகப் போராடினார்??
3. சீனத்தில் இருந்து வந்த புத்தகங்கள் போன்றவற்றின் வருவாகை அடைந்தவர்கள் யார்?
4. மூன்று உலகக் கோட்பாடு டென் சியா பிங் கும்பலின் வழிகாட்டல்
5. தேசிய முதலாளித்துவம் என்ற கற்பனைவாதச் சிந்தனை
6. தோழர் சண்முகதாசன் சிறையில் இருந்த போது எந்தக் கனவான்களும் அவரைச் சிறையில் சென்று பார்க்கவில்லை.
மேல் உள்ளவற்றிற்கான எந்த விளக்கம், சுயவிமர்சனத்தை சுப்பிரமணியம் குழுவினரால் முன்வைக்கப்படவில்லை.
சீனத்துடனான சண்முகதாசனின் உறவு 1972களில் முடிவிற்கு வருகின்றது. சீனப் பாதையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜேவிபியின் போராட்டம் பற்றிய அரசியல் மதிப்பீட்டை சீனக் கட்சி ஏற்கவில்லை.
அந்தக் காலத்தில் சுப்பிரமணியம் தரப்பு ஏற்றுக் கொண்டதா இல்லையா?? தோழர் சண் எதேர்ச்சையாக முடிவெடுத்தாரா?
” சண்
மார்க்சிய வழிமுறையைத் துறந்த இடது சந்தர்ப்பவாதியாகித் துரோகமிழைத்ததாலே”
இது ஒரு மோசமான அவதூறான விமர்சனமாகும். ஒரளவிற்கு
1984களில் இருந்து தோழர் சண்முகதாசனின்
கட்சியை ஓரளவு அறிந்துள்ளதும், தோழரின் எழுத்துக்களையும் வாசித்துள்ளேன். தோழர் சண்ணின் எழுத்துகள் பல ஆங்கிலத்தில் உள்ளது. குர்து மொழியில் அவரின் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. இலங்கை வரலாறுபற்றிய புத்தகம் என்பது மிகுந்த வரலாற்றுக் தவறுகளைக் கொண்டது. அவை சிங்கள வரலாற்றாளர்களின் புனைவுகளை ஒத்ததாகவே இருக்கின்றது. அது ஒன்று தான் மீள்பதிப்பதிற்கு தகுயற்றது.
என்னுடைய விமர்சனம் 1988 முன்னை ஈழப் போராட்டம் பற்றிய நிலைப்பாடு பற்றியதே. அதுவும் 1989 இல் அவர் எழுதிய சுயசரிதையில் தான் தொழிற்சங்கவாதத்திற்கு பலியாகிப் போனேன் என்கின்றார். ஆம் மார்க்சிய சொல்லாடலில் பொருளாதாரவாதியாக இருந்துள்ளார். அந்த சுயவிமர்சனம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். அந்த விமர்சனம் என்பது அரசியல் நேர்மை கொண்டதே.
தோழர் ஈழவிடுதலைப் போராட்டத்தை தலைமைத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அந்த வரலாற்றுத் தவறை விட்டுவிட்டார். அவரின் அரசியல் தலைமைத்துவ இருந்திருக்கமானால் குட்டிமுதலாளிய சாகசவாதத்தை ஈழப் போராட்ட ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்க முடியும்.
பொபி- தாஸ் பிரச்சனையில் தாசின் பக்கம் சண்முகதாசன் கட்சியினர் இருந்தனர் என்ற காரணத்தினால் அவரின் கட்சியின் தோழர்கள் யாழை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. தோழர் சண் லண்டன் பயணமும் இறப்பும் நடைபெற்றது. இதன் பின்னர் அந்தக் கட்சியின் செயலாளராக Ajith Surendra Valentine Rupasinghe இருந்து 3.4. 2017 இறந்தார்.
தோழர் சண்ணை விமர்சிப்பவர்கள் உள்நாட்டு எல்லைக்குள் தான் சுற்றிக் கொண்டுள்ளார்கள். ஆனால15 நாடுகளைக் கொண்ட the Revolutionary Internationalist Movement (RIM) in 1984 என்ற அமைப்பை உருவாக்க தோழர் சண்முகதாசன் உழைத்துள்ளார். A World to Win லண்டனை மையமாகக் கொண்ட விவாதக் குழுவை சோவியத்தின் உடைவின் பின்னர் உருவாக்க துணைபுரிதார். இதனால் Open Polemic என்ற ஆய்வு சஞ்சிகை வெளிவந்தது. அதே காலத்தில் பேரு ஒளிரும் பாதை தலைவர் பேரா. கொன்சாலன் குஸ்மானின் விடுதலைக்காக சர்வதேச ரீதியாக குரல் கொடுத்தார். இதில் உலகின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் இணைந்து கையெழுத்திட்டார்கள்.
ஆனால் அவரை விமர்சித்து வெளியேறியவர்கள் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் ஒதுங்கிய சிறிய கட்சியாகத் தான் உள்ளார்கள்.
http://thaiveedu.com/pdf/Feb2021.pdf

No comments:
Post a Comment