Popular Posts

Monday, 26 October 2015

அறிமுகம்

வணக்கம்

இந்தப் பக்கத்தில்  எனது கட்டுரைகள் பதியப்படும் தங்களின் விமர்சனங்களை நாகரீகமான முறையில் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் பண்புக்கமைய முன்வையுங்கள்.  நீங்கள் விமர்சனம் வைக்கும் இடத்தில் என் சிற்றறிவிற்கு ஏற்ப பதில்கள் தரமுயற்சிக்கின்றேன்.

எனது எழுத்துக்களில் தவறு இருக்கும் பட்சத்தில் சுட்டிக் காட்டுங்கள் தவறுகளை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ளலாம். அனைத்துமே கற்றல் கற்பித்தல் என்ற அம்சத்திற்கு அப்பால் எதுவும் இல்லை.
தன்னியல்புக்குட்ட மனிதர்களால் படைக்கப்படும் படைப்புக்களும், படைப்பை எழுதுகின்ற தனிமனிதனின் பாத்திரம் என்பது  அமைப்பு வடிவம் பெறுகின்ற போதுதான் எழுதுகின்ற படைப்பிற்கும் பெறுமானம் உண்டு.  எனவே தனிமனிதர்கள் கருத்துக்கள் படைக்க முடியாது என்பதல்ல.

வேலன் என்பது  என்னுடைய எழுத்திற்கான புனைப்பெயரே. இங்கு பலர் ஊர் என்ன பெயர் என்ன? என்ற கேள்விகளை எழுப்புவார்கள். இவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்றே புனைப்பெயரில் எழுதுவது என்பது தனிமனித சுதந்திரமாகும். உன் ஊர் என்ன? உன்அப்பன் யார்? உன்சாதி என்ன? உன் ஊர் என்ன எனக்கேட்டுப் பழகிய அம்சத்தில் எழுகின்ற சிந்தனை வடிவமே புனைப் பெயரை வைத்திருப்பதை இட்டுக் கேள்வி கேட்பதாகும். மேலும் இந்த சமூகத்தில் ஜனநாயகம் இருப்பதைப் போன்று பிரமை உள்ளவர்கள், கருத்துக் கொண்டவர்களின் சிந்தனையாகவும் உள்ளது.

 தனிமனிதனைச் சுற்றிய கருத்துருவாக்கம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. கடந்த 25 வருடங்களாக பலபுனைப் பெயர்களில் வெவ்வேறு தளங்களில் எழுதி வருகின்றேன். நான் என்ன பெயரில் எழுதினேன் என்பது கூட இப்போ நியாபகம் இல்லை.   தனிமனிதனைச் சுற்றிய ஆலவட்டத்தில் என்றைக்கும் நம்பிக்கை இருந்தது இல்லை. இவ்வாறு எழுதுகின்ற போது ஏதோ ஒரு அமைப்பு அல்லது பத்திரிகை சார்ந்து இருந்துள்ளது.  தனிமனிதர்களின் பாத்திரம் எப்பவும்  மட்டுப்படுத்தப்பட்டதே.  ஆனால் இன்றையக் காலத்தில் கறாராக அரசியல் கருத்துக்களை முன்வைப்பது  கடமை என்று எண்ணுகின்றேன்.

இந்தப் படைப்புக்களை எழுதுவதன் நோக்கம் என்றும் போல தனிமனித ஆலவட்டத்தை உருவாக்குவதற்கு அல்ல.

கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்.


நன்றி
வேலன்

3 comments:

  1. Hay tholar Vanakkam this is the first time.. ungaludan pesuvathu...

    ReplyDelete
  2. enakku oru uthavith thevai....
    seiveergala?

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்லுங்கள்

      Delete