Popular Posts

Tuesday, 23 February 2016

சிறுபான்மை தேசிய இனம் அல்ல அது ஒருதேசமே!!!




சிறுபான்மை தேசிய இனம் அல்ல  அது ஒருதேசமே!!!
========================= 





சிறுபான்மை தேசிய இனம் அல்ல  அது ஒருதேசமே!!!
========================= 

இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பது சமூக அமைப்பும் எவ்வாறு இருக்கின்றது. அதனை சமூக விஞ்ஞான ரீதியாக ஆராய்வதன் அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும்.  தனிமனிதர்களின் விளக்கம், நம்பிக்கை  அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுவது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய  பெருமைக்கு உட்பட்டதாகும்.  இங்கு சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஒவ்வொருவரின் அரசியல் உலகக் கண்ணோட்டம் என்பதே வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றது. 
சில விடயங்களுக்கு ஒரு கேள்விபதில் என்று எதுவும் கொடுக்க முடியாது. சமூகத்தினை ஆராய்வது என்பது சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்த ஆராய வேண்டும். சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று ஆராயாது மேலோட்டமாக பார்ப்பது பொதுப்புத்திக்கு உட்பட்டவையாகும். சமூகத்தின்  சிந்தனைப் போக்கு, அரசியல் ஓட்டம் என்பதை பொதுப்புத்தியில் இருந்து அறிவதுதான் வழமையாக உள்ளது.
ஒரு பொருளைப் பற்றிய வியாக்கியானம் அறிவு மட்டத்தில் அமைந்துள்ளது. ஒரு (கருதுகோளை thesis) இவை  என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை (synthesis) வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும். சமூகம் முரண்பாடுகள் சமூக மட்டத்தில் சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் தன்னை எந்த நிலையில் இருந்து எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை வெளிப்படுத்தும் (தொகுப்பு antithesis என்பது எதிர்க்கருதுகோள் அல்லது எதிர்கோள்) ஆய்வுமுறைக்கு உட்பட்டதாகும்.  வரலாற்றுத் தரவுகள், பழைய கோட்பாடு, ஆய்வு மேற்கோள்கள், மேற்கோள் பயன்படுத்தப்படுகின்றது. பழைய ஆய்வுகளில் இருந்து நாட்டுக்கான கோட்பாட்டு உருவாக்குவதாகும். 
இந்த வகையில் பெருந்தேசிய வெறியும் குறுந்தேசியமும் ஒன்றல்ல.  ஒரு தேசிய இன முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக் காலத்தில் எவ்வகையான போக்கு இருக்கின்ற என்பதை வைத்து ஆராயப்பட்டதே ஆய்வின் முடிவிற்கு வரமுடியும். பழைய உற்பத்தி முறைக்கான சமூகத்தின் தேவை மாறி பொருளாதார எல்லைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது.  இவ்வாறான வளர்ச்சிப் போக்கில் தேசிய இனங்கள் தேசமாக வளரும் என்பது இயங்கியல் ரீதியான வர்க்க ஆய்வின் வெளிப்பாடாகும்.
தமிழ் தேசத்தின் உரிமை ஏன் விட்டுக் கொடுக்க முடியாது காரணம் தேசிய இனம் என்பது தேசமாக வளரும், தேசியத்தின் முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுத்துவிட முடியாது.  அது ஏன் பிரிவினைவாதம் இல்லை, ஏன் தேசிய வெறிக்கு உட்பட்டது இல்லை என்பதை அறிய வேண்டுமானால் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பற்றிய அறிதல் என்பது அவசியமானதாகும். 


 நிலமானிய சமூக உறவு முழுமையாக சிதைவடைந்தா? 

ஒரு விடயத்தை நிறுவ வேண்டுமானால் என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும். இதனை நிறுவ வேண்டும் என்றால்   அதனை தரவு ரீதியாக நிறுவ வேண்டும்.
தென்கிழக்காசியாவில் உள்ள பெரும்பான்மை நாடுகள் அரைநிலமானிய சமூகச் சிந்தனையும்,  உற்பத்தி முறை முற்றாக சிதையவில்லை.  அரைநிலமானியச் சிந்தனைக்கட்டமை்பு தமிழ் தேசத்தில் ஆசியக் கொடுங்கோன்மை (வர்ணாச்சிரம)  சமூகக் கட்டமைப்பாகவும்,  சிங்கள தேசம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டதாகவும், சிங்கள- ஆரிய- பௌத்த பேரினவாத கட்டமைப்பாகும்.  இவற்றை தவிர்த்து மேம்போக்காக அல்லாமல் சமூகம் முரண்பாடுகளை ஆராய்வு செய்திட முடியாது.  பௌத்த சிங்கள மோலாதிக்கத்தில் மேல் கட்டப்பட்ட சமூக அரச இயந்திரத்தின்  சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை  அறியமுடியும். பௌத்த சிங்கள பேரினவாத கட்டமைப்பு என்பது மாற்றமடையாத வரையில் எவ்வித விடுதலையும் சாத்தியமில்லை.
1977களில் சிறியவர்களாக இருந்த போது எம்மிடம் இருந்தது  தேசிய இனவுணர்வு தான். ஆனால் சூழலே புரட்சிகர சிந்தனையை அறிமுகம் செய்தது. இதையே  அன்று முத்திரை குத்தி கலைத்திருந்தால்  நாம் இந்த இடத்தில் வந்தடைந்திருக்க முடியாது. பெரியாரியம், பொதுவுடைமை பற்றிப் பேசும் இடதுசாரிகள் என்போர் தமது நிலையில் இருந்து மற்றவர்களின் சிந்தனை இருக்க வேண்டும் என்று வரையறுக்க முற்படுகின்றார்கள். அதன் பின்புதான் அரசியல் வேலைகள், குறிப்பான வேலைகள் செய்ய முடியும் என்று நம்புகின்றனர். ஒரு தவறாக கருத்தைக் கொண்டால் அது ஏன் எவ்வாறு என்று விளங்கம் கூறிவிடத் தயாராக இல்லாத நிலையில் காரிய அவதியில் முத்திரை குத்தப்படுகின்றது.   ஆனால் சமூகத்தை மாற்றமைக்க பல வர்க்கங்களின் கூட்டு தேவை என்பதை நடைமுறையில்  மறுக்கப்படுகின்றது. சமூக அமைப்பைப்பின் வெளிப்பாடுகளை தாம் படித்த வரிகளில் தேடுகின்றார்கள்.
உழைக்கும் வர்க்கத்திற்கு அப்பால் உள்ள வர்க்கங்களை இணைப்பதும் போராட்டங்களை வழிநடத்த வேண்டியதே மா.லெ கடமையாகும். ஆனால் படித்தவரிகளிலும், தமது நிலைப்பாடுகளில் இருந்து தம்மிடையே இனங்குபவர்களாக சுருகிவிடுகின்றனர். இது ஒரு வகை (cult ) வழிபாட்டுக் குழுவாக மாறிவிடுகின்றனர், இதனை அரசியல் பதத்தில் குழுங்குழுவாதமே மேலோக்கியிருக்கின்றது. இது அகநிலைவாதமாகவும் இயங்கியல் மறுப்பாகவும் உள்ளது.
உயர்ந்த சிந்தனை - ஜனநாயக வடிவம் கொண்ட சமூகத்தை உருவாக வேண்டும் என்று விருப்புவதும், இவ்வாறான வடிவமாகத் தான் இருக்கும் வேண்டும் என்பதும் எல்லோருடைய அகவிருப்பாக இருக்க முடியும். ஆனால் அந்தச் சமூகத்தை அடைவதற்கு நீண்டபாதையைக் கடந்து செல்ல வேண்டும், நீண்ட நெடிய போராட்டம் தேவையானது, இதனை குறுக்குவழியில், குறுகிய காலத்தில் அடைந்து விடலாம் என்பது சமூகப் போக்கை விளங்கிக் கொள்ள முடியாத கற்பனாவாதிகளாகத் தான் முடியும்.  வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் பயன்படுத்தப்படும் வரைவிலக்கணங்கள் என்பது அந்தந்த பொருளாதார அமைப்பிற்கு ஏற்பவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும்.
இவ்வாறே மூலவர்கள் வளர்ச்சிப் போக்கில் குறிப்பான  ஜனநாயக தேசிய இயக்கங்களின் வளர்ச்சியினை குறிப்பிட தேசிய வெறி, தேசியப் பெருமிதம் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.


தேசியவாதம்
தேசியவாதம் என்ற சொல்லாடல்கள் பொருளாதார அமைப்பு சிந்தனை, அரசியல் போக்கை நிர்ணயிக்கின்றதாக இருக்கின்றது. ஏகாதிபத்திய காலகட்டத்தில் எழுவது அன்னிய ஆக்கிரமிப்புக்கும்,  மூலதனத்திற்கு எதிரான போராட்டங்களாகும். இவை தேசிய- சுதேசிய பண்பைக் கொண்டு எழுவதும்  நடைபெறுகின்றது. அவை ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து நிற்பதை  தடுப்பதாகவும் இருக்கின்றது.  இங்கு தேசியவாதம் பேசுகின்ற போது பிற்போக்கானதாக கட்டமைக்கப்பட்டு தேசியக் கோசங்களை திட்டமிட்டு சிதைக்கின்றது. இங்கு முரண்பாடு கொண்ட சமூகத்தில் முரண்பாடுகளை மறுத்து கறுப்பு - வெள்ளை என்ற இரண்டைப் போக்கு மாத்திரம் உள்ளதாக திசைதிருப்பப்படுகிகின்றது. இது குறிப்பாக சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னரான உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட கருத்துருவாக்கத்தின் தாக்கம் புரையோடிப் போய் உள்ளது. இதிலும் குறிப்பாக 9/11 பின்னராக ஒன்று சாத்தானின் பக்கம் அல்லது நல்லவர்கள் பக்கம் என்ற போக்கினை ஒத்திசைவிற்கு ஏற்பவே கருத்துருவாக்கிகளின் செயற்பாடு இருந்து வந்துள்ளது.

தீவிரவாதம், ஆயுதப் போராட்டங்களை எதிர்ப்பதே உயர்ந்த மனிதத்துவமாக காட்டிக் கொள்வதை பெருமையாகக் கொள்கின்றார்கள்.   மேட்டுக்குடி மனப்பாங்கு திட்டமிட்டு ஊடகம், கருத்ருவாக்கிகள் இலக்கியத்தின் ஊடாக புனையப்படுகின்றது. ஏகாதிபத்திய சதிக்கு துணைபோகும் பின்னவீனத்துவ சிந்தனைப் போக்கே இருக்கின்றது. தேசியக் கோரிக்கை என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவக் கோரிக்கையாக முன்வைப்பது  காலங்கடந்த கோட்பாடாகும்.  தேசிய- சுதேசியத்தை எதிர்த்துக் கொண்டு பெருந்தேசியவாதத்தினையும் நிதிமூலதனத்திற்கு எதிரான போக்கை திட்டமிட்டு திசை திருப்புகின்றது.
அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை மையச் சிந்தனையின் அடிப்படையில் இருந்து அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடத்தி முடிக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இன்று குறிப்பாக இந்துத்துவா தேசியவெறி, வலது (நாசி) தேசிய வெறியும், பெருந்தேசியவாதத்தினையும் ஒடுக்குமுறைக்கு எதிரானதையும் ஒன்றோடொன்று இணைத்துவிடப்படுகின்றது. இனவாதத்தை பொது அரசியல் உணர்வாக கொண்ட சமூக அமைப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெழுப்பதாக போல சீர்திருத்த இடதுசாரியம் தெற்கில் வருகின்றது.  புரட்சிகர சித்தாந்தத்தின் வழிகாட்டலும் அமைப்புக்களின், தனிமனிதர்களின், குறிப்பிட்ட வர்க்கத்தின் அகவுணர்வுப் போக்கும் ஒன்றல்ல. பொருளாதாரத்தின்  வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் உருவாகும் முரண்பாடுகளால்  உருவாகின்றது.

தோழர் லெனினின் இயங்கியல் முடிவு

ஈழக் கோரிக்கை கிளர்ச்சியாக வளர்ந்த போது வேலைவாய்ப்பு, இடவொதுக்கீடு, தரப்படுத்தல், முதலாளிகளுக்காக, தமிழர்களுக்கு ஒரு நாடு இல்லை  என்ற காரணத்தால், என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறல்ல.  நிலப்பிரபுத்துவக் கட்டம் முற்றுப்பெற்று தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்ட தேசிய  இனங்களின் எழுச்சியையும், பின்னர் தொழிற்துறை வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த  பிரதேசங்களில் ஏற்பட்ட தேசிய இன எழுச்சியையும், பின்னர் ஏகாதிபத்திய காலகட்டத்தில் உருவாகின்ற தேசிய இனங்களின் ஜனநாயக இயக்கம் பற்றி தோழர் லெனின் விரிவாக வரையறுக்கின்றார்.
பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய இயக்கங்கள் உருவாகும் என்பது தனியே கொலனித்துவத்தின் மீதான  எழுச்சி மாத்திரம் அல்ல என்பதை தோழர் லெனின் சரியாகவே வரையறுக்கின்றார், -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - https://www.marxists.org/archive/lenin/works/1916/jan/x01.htm இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.--- இங்கு லெனின் தேசிய இனங்கள் தேசத்திற்கான பண்பைக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது அல்லது வளரும் என்று வரையறுக்கின்றார். இதுதான் சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சியாகும். 

இலங்கையில் வரலாற்று ரீதியாகவே இரண்டு தேசங்களாக வளரக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் இருந்துள்ளது. அவைகள் முதலாளித்துவ வளர்ச்சியினால் தேசங்களைக் கொண்ட பொதுப்பண்புடன் வளர்கின்றது. கொலனித்துவ ஆட்சிகளால் அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் என்பார் புதிய தேசியஇனமாக ஆகின்றார்கள். இவ்வாறே பாரம்பரியமாக வாழ்ந்து வந்த (இதில் வர்த்தக ரீதியான இடம்பெயர்ந்தவர்கள் ஒன்றிணைந்தும் உள்ளது) தமிழ் பேசும் முஸ்லீம்களின் அடையாளம் என்பது பாதுகாக்கப்பட்டு தன்மை தனிஅடையாளம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தனியடையாளத்தினை முன்னிறுத்துவதற்கு தமிழ் மக்களின், முஸ்லீம் மக்களிடையே உள்ள அரைநிலமானியச் சிந்தனையும், அவர்களின் வளங்கள் பற்றிய மோதல் என்பது தமிழ் ஒன்றிணைந்த தேசத்தவர்களாக உருவாக முடியவில்லை.  சிங்கள தேசத்தின் பிரித்தாளும் தந்திரமும்,  தென்னிலங்கை முஸ்லீம் தரகு வர்க்கத்தின் அரசியல் சரியும் காரணமாகின்றது. வடக்கு கிழக்கு முஸ்லீம் தலைமையை  அஸ்ரப் வரையில்  தலைமை தாங்கி வந்துள்ளனர்,
தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழர்களிடையேயுள்ள அரைநிலமானிய சிந்தனை உடைக்கப்படும் போது தமிழ் தேசத்தவர்களாக அடையாளம் காண நீண்ட போராட்டம் நிபந்தனையாக உள்ளது. இந்த நிலையைக் கடப்பதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது. இது புதிய சனநாயகப் புரட்சியும் கடந்து சோசலிச அரசின் ஊடாகவே சாத்தியமாகும்.
கொலனித்துவ காலத்திற்கு முன்னரே தமிழ் - சிங்கள என ஆற்றல்வளம் கொண்ட  தேசிய இனங்கள் தேசமாக வளரும் கட்டத்தில் இருந்தது. சிங்கள தேசம் பெரும்பான்மை என்ற எண்கணக்கில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த வகையில் தான் இலங்கை என்பது ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்று வரையறுக்கப்படுகின்றது. லங்கா என்ற பெருந்தேசியம் இன்னொரு தேசத்தினை (ethnic - national  minority) சிறுபான்மை தேசியயினம் என்று கொள்கின்றது.  தமிழர் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் என்று இடது சந்தர்ப்பவாதிகள் உட்பட பெருந்தேசிய வெறியர்களும் ஒப்புவிக்கின்றார்கள்.

தமிழ் தேசத்தின் போராட்ட வரலாற்றை அறிகின்ற போது
1. 1984களில் சமரன் அமைப்பு தமிழர்கள் தேசம் என்று வரையறுத்துள்ளார்கள். <http://samaran1917.blogspot.no/2009/03/blog-post_17.html> தமிழக அமைப்பின் கட்டுரை உள்ளது.
2.<http://padippakam.com/document/NLFT/nlft0007.pdf>(pdf- page 3) NLFT தெளிவாக தமிழர்களை தேசமாக வரையறுக்கின்றது.
3.<http://padippakam.com/document/EPRLF/Publications/eprlfPub1.pdf>(pdf- page 10) போன்ற ஈழ அமைப்புக்களிடமும்
4. திம்புக் கோட்பாட்டில் தேசியம், தன்னாட்சி, தாயகம் என்று வரையறுக்கின்றது. இது தேசத்தின் வரைவைக் கொண்ட பண்பாகும்.

ஈழ விடுதலை அமைப்புக்களிடம் தேசிய இனங்களின் ஜனநாயகக் கட்டம் பற்றிய புரிதல் இருந்தா என்பது சந்தேகமே.
திம்புக் கோரிக்கையில் உள்ள 3 அம்சங்களும் தேசத்தின் பண்பை முன்னிறுத்துகின்றது. இந்த வகையில் 1985களில் தமிழர் ஒரு தேசத்தவர்கள் என்று வரையறுத்துள்ள அமைப்புக்களும்  உண்டு. முள்ளிவாய்க்கால் வரையில் (de facto Government) ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கொண்டு தாம் தேசத்தின் உரிமைக்காக போராடியவர்கள் என்ற வரலாற்றுத் தரவும் உண்டு.

தமிழர் தேசம் என்று கூறுவது என்பது ஏதோ இன்று கண்டுபிடித்த ஒரு சொல் அல்ல. ஆனால் தமிழ் தேசம் அடக்குமுறைக்குள் பெரும்பான்மையினரால் ஒடுக்குதலுக்கு ஆழாகிவந்துள்ளார்கள்.  தமிழ் தேசத்தின் இருப்பும் வாழ்வும் என்பது ஆக்கிரமிப்பு உள்ளாகியிருக்கின்றது. இது மிகைப்படுத்திய அரசியல் பார்வை என்று குறுக்குவது அபர்த்தமாகும்.
ஒரு விடயத்தை நிறுவுவது என்பது வேறு பரீட்சையில் கணக்கை சோதனையை திருத்தும் முறையில் அல்ல. கணக்கில் ஏற்கனவே பதில் இருக்கும் ஏற்கனவே இருக்கின்ற முடிவிற்கு ஏற்ப செய்து முடிக்கப்பட வேண்டும்.
ஒரு விடயத்தை வாசித்துவிட்டு ஏற்கனவே இருக்கின்ற விடைக்கு திருத்துவது போல இது வலது தேசியவாதம், தேசிய வெறி, தேசியவாதம் என்று குறுக்கி முத்திரை குத்துவதாகும்.
சமூக வளர்ச்சிப்போக்கை விஞ்ஞான ரீதியாக விளங்கிக் கொள்வது என்பது வேறு முன்னையை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றுவது என்பது வேறு. இவை இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. லெனின் ஈழத்தைப் பற்றி பேசவில்லை என்பதற்காய் தேசிய இயக்கம் பற்றி புரிதலை மார்க்சியத்தில் இருந்து பெறமுடியும்.  நோய் எனனவென கண்டு பிடிக்க வேண்டும்.  அதற்கான மருந்தைக் கொடுக்க முடியும்.  மாறாக புரட்சியையும், சமூக மாற்றத்தின் தூண்டுதலையும் படித்த வரிகளில் இருந்து அணுகிட முடியாது.  இங்கு மூன்று வகை தேசங்கள் பற்றி லெனின் வரையறுக்கின்றார். அந்தப் பந்தியை வியாக்கியானம் (interpret) செய்தலும் அதனை அப்படியே பின்பற்றுவதும் வேறு.
லெனின் என்ன சொல்கின்றார் அவர் வரலாற்றுப் போக்கை வகைப்படுத்துகின்றார்.
அவர் எழுதுவது செயற்தந்திரமே, யுத்த தந்திரமோ அல்ல. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்வதா, சேர்ந்திருப்பதா யுத்த - செயற்தந்திரத்திற்கு உட்பட்டது. (அடுத்தது சுயநிர்ணயம் என்பது என்ன என்று விளங்கியும் இருக்கவேண்டும். சிலர் அதிகாரப் பகிர்வைத் தான் சுயநிர்ணயம் என்று வரையறுக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க)
தேசிய இனங்களின் ஜனநாயக வளர்ச்சியை விளங்கிக் கொள்ளாவிடின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை விளங்கிக் கொள்ள முடியாது.
ஒன்றை வியாக்கியானம் செய்வதற்கும் பேராசன்கள் கூறியதை அப்படியே பொருத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. தோழர் லெனின்  கூற்றை (interpret) செய்ய மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் விளக்க போதுமானது  இது கற்றுத் தரும் அணுகுமுறையைக்  கொண்டு  சமூகத்தினை ஆராயந்து கொள்ள முடியும்.
மார்க்ஸ்- லெனின்  கோட்பாட்டு அணுகுமுறை மாறானது அது வழிகாட்டும், ஆனால் கோட்பாடுகள் வளர்ந்துவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இதனால் மார்க்ஸ் - லெனின் போன்றவர்கள் வந்தடைந்த கோட்பாடு மாற்றமடைகின்றது. 
இதன் காரணமாகவே லெனின் ஒவ்வொரு நாட்டவர்களும் சொந்தக் கோட்பாட்டை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

தோழர் லெனின் கூறியதை வியாக்கியானம் செய்வதன் ஊடாகவே புதிய இலங்கைக்கான யுத்த - செயற்தந்திரத்தை வகுக்க முடியும். இன்றைய சிந்தனைப் போக்கு என்பதை தனிமனிதர்கள் தீர்மானிப்பது இல்லை. இன்றைய உலகப் போக்கு என்பது பின்னவீனத்துவ ஆய்வுமுறைக்குள் சிக்குண்ட போக்கும், அது சமூக அமைப்பினை முற்றுமுழுதான (holistic approach) பார்வையில் ஆய்வதற்குப் பதிலாக ஆய்வுக்குறுக்கல்வாதத்தினை முன்றுத்துகின்றது.
சுயநிர்ணயம் பற்றி குறிப்பாக 1905 பின்னரான தெளிவு என்பது தோழர்கள் லெனின், ஸ்ராலின் போன்றோர்கள் மார்க்சினை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்ற பணியைச் செய்தார்கள். இது வலதுசாரி பிற்போக்கு தேசியவாதத்தினை இணைத்து முடிச்சுப் போடுவது வரலாற்றுக் குருட்டுவாதமாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அமைகின்ற சமூக அமைப்பு வடிவங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தக் காலப்பகுதியில் தேசம் பற்றிய வரையறையை முதன்முதலில் தோழர் ஸ்ராலின் அதன் பின்னர் 1916களில் உலக வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கை தேசங்கள் எல்லைகள் கொண்ட நாடுகளாக பரிணமிப்பதையும், தேசங்கள் தமக்குள் இணங்கி ஒரு நாட்டுக்குள் அடங்குவதையும் வரலாற்று ஓட்டத்தில் சரியாகவே விளங்குகின்றார். இந்த ஆய்வு என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் தேசிய இனங்களின்  ஜனநாயக எழுச்சி ஏற்படும் என்ற கூற்று என்பதை மறுத்து நிறுவிட முடியாது. இங்குதான் லெனின் தொழிற்துறை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுயநிர்ணயம் பற்றி வெவ்வேறான முடிகள் எடுத்திருந்தார்கள்.
இங்கு லெனின் கூறுகின்ற தேசிய இயக்கங்கள் உருவாகும் என்பது ஏகாதிபத்திய காலத்திற்கானது. அவர் சரியாகவே வரையறுக்கின்றார், --In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.
தேசிய இனங்களின் முரண்பாடுகள் என்பது தனியே கொலனித்துவத்தின் காரணமாகத் தான் உருவாகியது என்பது பகுதி வெளிப்பாடு மாத்திரம் தான். தேசங்களாக பரிணமிக்கக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் அவர்கள் விருப்பில்லாமல் இணைக்கப்பட்டது. பின்னர் போலிச் சுதந்திரத்தினை (தரகு வர்க்கம் உள்நாட்டில் முன்னைய கொலனி நாடுகளின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது) அறிவித்துவிட்டுச் சென்றது போது தேசிய இனங்களின் விருப்பை பெறாமலே இணைத்து விட்டுச் சென்றது. இங்கு பெருந்தேசியத்தில் இருந்து ஆளும் வர்க்கத்தின், உயர்வர்க்கத்தின் முரண்பாடுகள் என்பது வளங்களை பிரித்துக் கொள்வதில் ஏற்படுகின்றது என்பது வர்க்க நலனில் அமைந்ததாக மாத்திரம் இருப்பதில்லை. மாறான கையகப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இல்லாதாக்கல் முனைப்புகள் முரண்பாடுகளை அதிகரிக்கின்றது. ஆக வர்க்க முரண்பாடுகள், கொலனித்துவத்தின் அரசியல் போக்கு, தேசிய இனம் தேசமாக வளரும் என்ற அனைத்தையும் சேர்ந்தே ஆராயப்படவேண்டும்.
இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாவிடின் ஒரு அடி முன்னேற முடியாது.  1916களில் லெனின் எழுதினாலும் இங்கு தேசிய இனங்கள் தேசங்களாக வளரும் என்பதைத் வெளிப்படுத்துகின்றார்.  அதாவது முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது என்கின்றார்.

சிங்கள  தேசத்தின் மீதான நம்பிக்கையீனத்தை தொடர்ந்து 1920களில் முதலில் தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகள் பற்றி பொன் அருணாசலத்தினால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் தரகு வர்க்கத்தின் அரசியல் வறுமை என்பது சரணடைவிற்கும், காட்டிக் கொடுப்பிற்கும் உள்ளாகியது.  தேசிய இயக்கத்தின் வளர்ச்சி என்பது பூர்சுவா -குட்டிமுதலாளிய அமைப்பாகிய புலிகளின் தலைமையைப் பெற்றுக் கொண்டது. இது தான் வர்க்கப் போராட்டத்தின் இயங்கியல் வளர்ச்சியாகும்.


தமிழ் தேசத்தின் போராட்டம்
தமிழ் தேசத்தின் போராட்டமானது ஆயுதப் போராட்டமாக பரிணமித்த பின்னர்  கிளர்ச்சியா உருப்பெற்றது. தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது தென்கிழக்காசியாவில் புரட்சிக்கான முன்னுதாரனமாகவும், தமிழ் தேசத்தின் வெற்றி என்பது தென்கிழக்காசியாவில் உள்ள அடிமைத்தனத்தை உடைத்தெறியும் என்று கட்டியம் கூறப்பட்டது. ஆனால் பூர்சுவா  குட்டி முதலாளியமானது ஊசலாட்ட இடதுசாரியப் போக்கு வீழ்த்தி போராட்டத்தலைமையை விடுதலைப்புகளி் அமைப்பு கைப்பற்றிக் கொண்டாது.  குட்டிமுதலாளிய வர்க்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது முள்ளிவாய்க்கால் வரையில் கொண்டு வந்து விட்டது. இன்று தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தரகு வர்க்கம்  தலைமை ஏற்றுள்ள இன்றைய நிலையில்  உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கும், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் நலனுக்கான சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் போராட்டத்தினை 30 வருடங்களின் பின் போராட்டத்தின் சாரத்தினை விளங்கிக் கொள்வதே முக்கியமானதாக இருக்கின்றது. தேசத்திற்கான போராட்டம் என்பதே அடிப்படையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்பது தான் அடிப்படையான சாரமாகும். 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்” என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது முறையாக இருக்கும். முதலாளித்துவ உற்பத்தியின் விளைவாக தேசங்களின் பண்பைக் கொண்ட தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர்ச்சி பெறுகின்றது. இந்த வகையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்ற வகையில் அவை புரட்சிகரமானதே. இது மூலவர்களின் வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
பல ஆயிரம் போராளிகளையும் பல லட்சம் மக்களை இழந்த ஒரு தேசத்தின் போராட்டத்தின் சிதைவு என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.   தமிழ் தேசம் என்பது முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியுடன் லங்கா என்ற தேசத்தின் கீழ் ஆக்கிரமிப்புக்குள் வந்தது. தமிழ்தேசம் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் தேசத்தின் உரிமைக்கான மீளெழுச்சி ஏற்படாதவாது பல்வேறு சக்திகள்  சிங்கள பௌத்த அரசின் மேற்பார்வையின் கீழ் செயற்பாடுகின்றார்கள்.  தேசிய இனங்களின் உரிமையை இனவாதமாக (racism - not national question) முன்னிறுத்தப்படுகின்றது. தேசிய இனங்களின் உரிமையை கொச்சைப்படுத்தி துவேசமாக பார்க்கப்படுகின்றது.
இது தளத்தில் எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகள் என கலைகலைக்காக சேவை செய்பவர்கள் எனவும் - அரசியல் தளத்தில் தரகு தலைமை என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கத்துடன் (ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணையாக கட்டமைப்புச் சீர்திருத்தவாதிகள்  மேற்கொள்கின்றார்கள்) இணைந்து பயணிக்கின்றார்கள். ஆனால் மற்றவர்களை வாயை மூடிக்கொண்டிரு என்ற அகம்பாவத்தில் செயற்படுகின்றார்கள். ” வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் எனவும், தமிழ் தேசம் தன்னுரிமையை கோருவது அடிப்படைவாதம் என்றார் சம்பந்தர்.

- புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தாம் தான் புலிகளின் ஏகபிரதிநிதிகள் என்ற போர்வையில் ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோகின்றார்கள்.
- இடதுசந்தர்ப்பவாதமானது தேசங்களின் ஜனநாயகப் போராட்டம் என்பதை வர்க்கப் போராட்டத்தின் அம்சமாக பார்க்காது வெறும் பொருளாதாரப் போராட்டமாகவும் உயர்குடியின் கோரிக்கை எனவும் தன்னை சுருக்கிக் கொண்டிருக்கின்றது.

தேசிய இனங்களை  அழிப்பது
கொலனித்துவத்தின் வெளியேற்றத்தின் போது எண்கணக்கில் பெரும்பான்மையான இருந்த நிலையில் ஆட்சிகட்டிலுக்கு வருவதற்கு முன்னரே சிங்கள தேசம் மற்றவர்களை அடக்கும் போக்கைக் கொண்டிருந்திருக்கின்றது. இந்த தேசிய இனமுரண்பாடு 1915 அடக்குமுறை வடிவம் தொடங்குகின்றது. முதலில் முஸ்லீம்களின் மூலதனமும் இருப்பின் மீதான தாக்குதல். பின்னர் மலையாளிகளின் மூலதனத்தின் மீதும்- தொழிலாளர்கள் மீதான தாக்குதலா போலி பொதுவுடைமைவாதியான பிலிப் குணவர்த்தனா தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் மலையாளிகளின் மீதான தாக்குதல் என்பது பலமாற்றத்தை அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலால் கேரளத்திற்கு திரும்பிச் சென்றவர்கள்
சிங்களவர்களாக மாறிய மலையாளிகள்,
தமிழர்களாக மாறிய மலையாளிகள் என்றும்
சிறிய பகுதியினர் வீட்டில் மலையாளமும் வெளியில் தேவைகருதி சிங்கள- தமிழ் பயன்படுத்திக் கொள்பவர்கள் உள்ளார்கள்.
மலையாளிகளைப் பொறுத்தவரை ஒரு மொழிச் சிறுபான்மையினராகக் கூட இலங்கையில் நிலைத்து நிற்க முடியவில்லை. மற்றைவர்களை ஒன்றிணைக்கும் - சிங்களமயமாக்கும் (assimilation) புறநிலை அழுத்தங்களாகும்.
இந்த நிலை இலங்கை மேற்கு கடற்கரை தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும் ஏனெனில் அவர்களும் அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்ற சமூகமாகும்.  கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமானோர் கத்தோலிக்க மதத்தவர்களே. இவர்கள் இன்று சிங்களமயமாக்கலுக்கு தொடர்ச்சியாக ஆட்பட்டு வருகின்றார்கள். இவர்ளை இட்டு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இங்கு கரையோரத் தமிழர்களை சிங்களமயமாக்கியது கத்தோலிக்க மதத்தின் மீது பழிசுமத்திவிட முடியாது. காரணம் கத்தோலிக்க மதக்குருமார்களின் சிந்தனை வடிவம் என்பதே பெருந்தேசியத்தின் மீது கட்டப்பட்டவைதான். குறிப்பாக 1983களின் பின்னரான காலத்தில் ஒடுக்குமுறையை கொழும்பை மையமாகக் கொண்ட அதிமேற்றாணியார் கண்டும் காணாமல் இருந்தார் என்பது வெளிப்படையான உண்மையாகும். கத்தோலிக்கத்தின் அழுத்தத்தினையும் மறுத்துவிட முடியாது.  இந்த நிலையில் சிங்கள பெருந்தேசியத்தில் கலத்துவிடுவது என்ற தொடர்ச்சியான வேலைத் திட்டத்தில் அடிப்படையில் செயற்படுகின்றது.

1949 பின்னர் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு. பின்னர் குடியேற்றம் (1.நிலப்பறிப்பு) மொழி உரிமை (2.சிங்கள தனிச்சட்டம்) 3பொருளாதார அழிப்பு (1958. 1961. 1977. 1981. 1983 கலவரம் என்ற போர்வையில்) 4. கலாச்சாரம் அழிப்பும் திணிப்பும் (வடக்கு கிழக்கை சிங்களமயமாக்கல்) இவை நான்கு அம்சங்களின் மீதான அழிப்புக்கள் நடைபெறுகின்றது.  இனவழிப்பானது வெவ்வேறு கட்டங்களாக நடைபெறுகின்றது.  இவை நான்கு அம்சங்களை அழிக்கத் தொடங்குவது தான் இனவழிப்பு என்பது. இங்கு ஒரு தேசத்தின் (நேசன்) தேசிய இனத்தின் இருப்பை அழிப்பது தான் இனப்படுகொலை இன்று நேற்றுடன் சம்பந்தப்படுத்தி குறுக்குவது வரலாறு அல்ல. வரலாற்று நிகழ்வுகளை ஒன்று சேர அணுகப்பட வேண்டும். சிங்கள தேசம் இலங்கை முழுவதும் தனது என்றும் மற்றையவர்கள் சிங்கள தேசத்தின் நிழலில் வாழ வைத்தல் என்ற அடிப்படையில் இருந்து எழுந்து வருகின்றது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் ஐக்கியப் பட்டுப் போராடினாலும் அதனையும் மீறி தேசிய இனவெழுச்சி ஏன் உருவாகிய என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததாக கருதிவிட முடியாது. ஒரு புறம் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் நல்லெண்ணத்தை காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் 1972களில் இருந்த முதலாளியம் அலட்சியம் செய்து வந்துள்ளது. மொத்தத்தில் இடதுசாரியம் தேசிய இனமுரண்பாடுகளை சரியாக கணித்து அதனை வழிநடத்தத் தவறிவிட்டது. ஆனால் அவர்கள் சுதாகரித்த போது தமிழ் தரகு, குட்டிமுதலாளியம் தலைமைப் பாத்திரமாக  கைப்பற்றிக் கொண்டது. 1977 இல் தரகு வர்க்கம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டது.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது வேலையில்லாப் பிரச்சனை, தரப்படுத்தல் என்பது குட்டிமுதலாளிகளை பாதிப்பை ஏற்படுத்தியது. தரப்படுத்தல் (interpret ) பலமாதிரி வியாக்கியானம் செய்யலாம். அது michigan பல்கலைக் கழகத்தில் அல்லது தமிழகத்தில் இருப்பது போன்ற இடவொதுக்கீட்டுக்கு ஒப்ப அரசியல் கொண்டதாக இல்லை  ஆனால் அது அவ்வாறு அமையவில்லை. அது தமிழ் தேசத்தின் உருவாக்கத்தினை பின்னடிப்பது அல்லது வளர விடாது தடுப்பதில் இருந்து அமைந்து கொண்டதாகும். நிலம் - கல்லோயாவுடனும், மொழி 1956 என்றும் பின்னர் பொருளாதாரம்- கலாச்சார அடையாளங்கள் என்று இல்லாதாக்கின்ற நிகழ்ச்சி நிரலில் அமைந்ததாகும். தரப்படுத்தலை சுருக்கிவிடுவது அடையாள அரசியலுக்கு உட்பட்டதே. தேசிய ஒடுக்குமுறை என்பதே அனைத்து தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கின்றது. தேசிய உரிமைக்கான போராட்டம் என்பது ஒடுக்கும் தேசத்தில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கவில்லை. தேசிய இனங்களின் உரிமை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை (ரொட்கிஸ்டுக்கள்) ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தேசத்தின் போராட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்தை பிரிப்பதாகவும், தேசிய (லங்கா) ஒன்றுமையை சிதைக்கின்றதாம். தமிழ் தேசத்தின் இருப்பை  மறுத்துக் கொண்டு செயற்படுத்தப்படும் கொள்கை திட்டங்கள் என்பது நிறுவனமயமாகியிருக்கின்ற போது வேலையில்லாத் திண்டாட்டம், தரப்படுத்தல் என்பது அது ஒரு பகுதிப் பிரச்சனையேயன்றி முதன்மையான பிரச்சனையாக இருப்பதில்லை.  அவ்வாறு மேட்டுக்குடியின் நலனில் அமைந்ததாக காட்டுவது குட்டிமுதலாளி, சந்தர்ப்பவாத இடதுசாரிய அகநிலை ஆய்வுப் போக்கிற்கு உட்பட்டதாகும்.
இனக்குழுமங்களுக்கிடையேயும், தேசிய இனங்களுக்கிடையே நடைபெறும் மோதல் என்பது அடையாளம், இருப்பு, வளம் சார்ந்தாக இருக்கின்றது. இது வெவ்வேறு பருமனில் மாறுபட முடியும். குறிப்பாக மார்க்சியவாதிகளின் மீது உள்ள பெரும் விமர்சனம் என்பது தேசிய இனப்பிரச்சனையை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதேயாகும். சமூக ஓழுங்கமைவின் வளர்ச்சி பற்றிய போதிய புரிதல் என்பது பாராம்பரிய இடதுசாரிகளிடம் இல்லை.  தேசிய இனங்களுக்கிடையே நடைபெறுவது கூட வர்க்கப் பிரச்சனையேயாகும். தனியே பொருளாதாரப் போராட்டத்தினை மாத்திரமே முன்னிறுத்தி பொருளாதாரப் போராட்டதை மாத்திரமே வர்க்கப் போராட்டமாகச் சுருக்கிக் கொண்ட புரிதல் இலங்கை இடதுசாரிய வரலாறு இன்றுரை தொடர்கின்றது.

சமூக வளர்ச்சிப் போக்கில் முழுமையான அணுகுமுறைஊடாக அணுகியாராய வேண்டும். இங்குதான் தான் கோளாறு உள்ளது. நாம் பகுதியான விடயங்களை அணுகுதன் ஊடாக தவறான முடிவிற்கு வரப்படுகின்றது. குறிப்பிட்ட விடயத்தை அடையவதற்கான குறிப்பான் பொதுவாக இருக்கின்றது. இதனை இனவாதம் என்று எமது தேவைக்காக சுருக்கிப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும். ஆனால் பொதுவாக அவ்வாறு இல்லை.  தன்னை நிலைநிறுத் கொள்ள வீர புருசர்களை முன்நிறுத்துவம் தேசியப் போராட்டங்களில் இயல்பான நிலை தான்.   
தேசிய இனங்களை நிலப்பிரபுத்துவம் உருவாக்குகின்றது, தேசங்களை முதலாளித்துவம் உருவாக்குகின்றது (லெனின்- ஸ்ராலின்) ஆனால் தேசிய இரண்டு தேசங்களின் அடையாளம் சார்ந்த முரண்பாடுகளில் இருந்து பிரச்சனையை அணுக வேண்டும். பெருந்தேசியவாதத்தினை புறந்தள்ளிக் கொண்டு இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை இனவாதம் என்று சுருக்குவது தவறானதாகும். இலங்கை என்ற நாட்டின் பிரத்தியேக நிலையை ஆராயாது விட்டு நகர்கின்றார்கள். 

தேசங்களிடையேயான முரண்பாடுகள் தான் தேசிய உணர்வை தூண்டுகின்றது. அவை இரண்டும் தன்னிருப்பை, அடையாளத்தை, வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மரபுரீதியாக கடத்தப்படும் ஐதீகங்களை உருவாக்கிக் கொள்கின்றது, இவ்வாறு ஐதீகங்களில் இருந்து உருவாக்கப்படும் தேசிய வீரர்கள், தேசிய சின்னங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ‘‘தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.‘‘ அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை வடிவத்தைக் கொண்டு அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும்.
மொழி அடிப்படையில் தம்மை ஒரு தேசிய இனமாக தகவமைத்துக் கொள்வது என்பது தாம் பேசுகின்ற மொழியில் ஊடாக ஒன்றிணைக்கப்படுகின்ற சமூகப் போக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் வெளிப்படும்  எதிர்வினை என்பதை கணித்திட வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட இயக்கப் போக்கை யார் கைகளில் வசம் உள்ளது என்பதை கணிப்பிட்டே  சமூகத்தின் தேவைக்கான போராட்டங்களின் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும். தேச (formation of national identity and  unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கம். இதனை அறியாது ஆண்டபரம்பரையை நியாயப்படுத்துவதாக திரிப்பது இட்டுக் கட்டிய  அறிவியல் குறைபாடாகும். இனவாதம் (Racism)  இரத்தவகை சார்ந்த பிரச்சனையாக பொருத்துவது அபர்த்தமாகும். 
இந்த வகையில் விடுதலையை ஆதரிப்பது முற்போக்கு தேசியம் சாந்ததாகும். இங்கு முன்னர் குறிப்பிடுவது போது வலதுதேசிய வெறியையும் சுதேசிய- ஜனநாயகக் தேசியப் போராட்டத்தையும் ஒரு வகையில் அடக்கி திரிக்கும் போக்குத் தான் இருக்கின்றது.
இங்கு தேசிய நலன் என்று ஏகாதிபத்தியங்களை எதிர்க்கின்ற போது அதனை தேசிய வெறி அல்லது தேசியவாதம் என்று ஒதுக்கிவிட முடியுமா? ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி முறை என்பது தனது சந்தையை எதிர்த்து நிற்பதை பயங்கரவாதமாகக் காட்டுகின்றது. சுதேசிய அடையாளங்களை இல்லாக்கி தமது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பண்ட உற்பத்தி, நுகர்வு, சந்தையை ஏற்படுத்துவதன் ஊடாக சர்வதேச வேலைப்பிரிவினையினால்  தன்னை தங்கி நிற்கும் நிலையை ஏற்படுத்துகின்றது. இந்தப் போக்கை எதிர்ப்பவர்களை தேசியவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளாக  அல்லது மத அடிப்படைவாதிகளாக ஏகாதிபத்தியம் முத்திரைகுத்துகின்றது. 
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கூட வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள்.  இது முற்போக்குத்  தேசியவாதமாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பின் (formation of national identity and unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது.
பின்னவீனத்துவத்தின் எதிரொலியாக நல்லது கெட்டது என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எல்லாவற்றையும் இணைத்து கருத்துருவாக்கிக் கொள்கின்றது. இங்கு இனவாதம் என்ற வரையறை தன்னார்வம் சார்ந்த வரையறையாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பெருந்தேசியத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சனையை இனவாதமாகப் பார்ப்பது மார்க்சிய அணுகுமுறை அல்ல.




தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தைப் பற்றி மூன்று வகை நாடுகள்!!!!
-----------------------------------------------------
‘‘முதலாவதாக, மேற்கு ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் மற்றும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்த நாடுகளில் முற்போக்கான முதலாளித்துவத் தேசிய இயக்கங்கள் நெடுங்காலத்துக்கு முன்பே முடிந்து விட்டன. இந்த ‘மாபெரும்‘ தேசங்களில் ஒவ்வொன்றும் தங்களுடைய நாட்டுக்குள்ளேயும் காலனிகளிலும் மற்ற தேசிய இனங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆட்சி செய்கின்ற தேசங்களில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயர்லாந்தைப் பொறுத்தவரையிலும் இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்கத்துக்கு விதிக்கப்பட்ட அதே கடமைதான்.
இரண்டாவது, கிழக்கு ஐரோப்பா, ஆஸ்திரியா, பால்கன்கள் மற்றும் குறிப்பாக ருஷ்யா. இங்கே முதலாளித்துவ- ஜனநாயகத் தேசிய இயக்கங்களைக் குறிப்பிடத்தக்க விதத்தில் வளர்ச்சியுறச் செய்து தேசியப் போராட்டத்தைத் தீவிரமாக்கியது இருபதாம் நூற்றாண்டே. இந்த நாட்டிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளை- முதலாளித்துவ- ஜனநாயகச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுதல், மற்ற நாடுகளில் சோஷலிஸ்டுப் புரட்சிக்கு உதவி செய்தல் ஆகிய இரண்டையுமே- தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்காமல் நிறைவேற்ற முடியாது. ஒடுக்கும் தேசிய இனங்களின் தொழிலாளர்களினன் வர்க்ப் போராட்டத்தை ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களில் உள்ள தொழிலாளர்களின் வர்க்கப் போரட்டத்தோடு ஒன்று சேர்ப்பது தான் இதில் மிகக் கடினமான கடமை- மிக முக்கியமான கடமையாகும்.
மூன்றாவதாக, சீனா, பாரசீகம் மற்றும் துருக்கியைப் போன்ற அரைக் காலனி நாடுகள் மற்றும் எல்லாம் காலனிநாடுகளும். இவை மொத்தம் ஆயிரம் மில்லியன் ஜனத்தொகையைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது. எல்லாக் காலனிகளுக்கும் நஷ்ட ஈடு இல்லாமல், நிபந்தனையற்ற வகையில் உடனடியாக சுதந்திரம் அளிக்க வேண்டும்- இந்தக் கோரிக்கையின் அரசியல் அர்த்தம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை- என்பதைக் கோருவதோடு சோஷலிஸ்டுகள் நின்றுவிடக் கூடாது. இந்த நாடுகளின் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும். தங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு எதிராக அவைகளின் ஆயுதந் தாங்கிய எழுச்சிக்கு அல்லது புரட்சிகரமான யுத்தத்துக்கு - அது ஏற்படுமானால்- உதவி செய்ய வேண்டும். (லெனின் 1916 மாசி பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம்)
சமூகப் புரட்சிப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-
“...உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
...
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” (முன்னுரை - அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)
https://www.facebook.com/Velan.illaikai
வேலன்

14 comments:

  1. http://www.yarl.com/forum3/topic/170920-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87/#comment-1165226

    ReplyDelete
  2. http://www.tamilkingdom.com/2016/02/95.html

    ReplyDelete
  3. http://www.vinavu.com/2009/08/20/tmaks/

    ReplyDelete
  4. https://www.youtube.com/watch?v=EjOIGxcKd7I&sns=fb

    ReplyDelete
  5. https://www.marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm
    https://www.marxists.org/arc.../lenin/works/1916/jan/x01.htm)

    ReplyDelete
  6. http://indianexpress.com/article/india/india-news-india/freedom-fighter-bhagat-singh-inquilab-zindabad-supreme-court-nafis-siddiqui-george-stinney-hasrat-mohani-in-defence-of-a-revolutionary/

    ReplyDelete
  7. https://gopalanchennai.wordpress.com/2014/08/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/comment-page-1/#comment-20 மார்க்சிய விரோத எழுத்து வடிவங்களை விளக்கிக் கொள்ள இவற்றையும் வாசித்து சிந்தனை வளர்த்துக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  8. இந்தக் கட்டுரை என்பது பிற்போக்குவாதத்தின் வெளிப்பாடு - கிழக்குமாகாணத்தைப் பிரிந்து, தமிழ் தேசத்தின் போராட்டத்தை தொடர்ந்தும் சிதைத்துவரும் கருத்தியலே கிழக்கின் சுயநிர்ணயம். http://www.thuuu.net/?p=1343

    ReplyDelete
  9. http://groundviews.org/2016/04/04/the-april-5-the-day-that-shook-the-south-and-its-legacy/?fb_action_ids=233197673701061&fb_action_types=og.shares&fb_source=other_multiline&action_object_map=[928600540592411]&action_type_map=[%22og.shares%22]&action_ref_map=[] நந்தசிறி எனும் இயற்பெயரை றோகண எனும் பெயருக்கு விஜயவீர மாற்றியது ஒன்றும் தற்செயலானதல்ல. துட்டகைமுனுவின் ராச்சியமான ரோகணவை தனது பெயராக மாற்றியது இனவாத அரசியலின் அம்சம் என்கிறார் தயபால--- தயாபாலா ஜேவிபியின் இனவாத அரசியலை கட்டுரையில் தந்திருக்கிறார். 70 இல் ஜேவிபி இல் இருந்து சிறை சென்று பின்னர் ஜேவிபி இன் இனவாத அரசியலை விமர்சித்து வெளியேறினார். 80 இன் இறுதிகளில் ஜேவிபியினரால் தேடப்பட்டவர் -----------

    ReplyDelete
  10. https://www.marxists.org/archive/lenin/works/cw/volume22.htm

    ReplyDelete
  11. https://www.marxists.org/archive/lenin/works/1916/jan/x01.htm

    ReplyDelete
  12. https://www.facebook.com/notes/vettivelu-thanam/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA/1615251452136305

    ReplyDelete