Popular Posts

Saturday, 23 January 2016

பண்டைய வழிபாட்டுமுறை



இன்றைய மதச்சாயம்
இன்றைய சடங்குகள் சம்பிரதாயங்களில் சமயம் சார்ந்த சிந்தனைவடிவம் என்பது புரையோடிப் போயுள்ளது.   தொல்குடி பழக்க வழக்கங்களும், வழிபாட்டு சடங்குகளும் சிதைந்தும் உள்ளது. அந்த இடத்தில் பக்தி இலக்கியத்தின் பின்னராக காலத்தில் நிறுவனமயப்பட்ட சடங்குள் என்பது நுழைந்துவிட்டதும், வர்ணாசிரமச் சிந்தனை உள்நுழைந்து விட்டது.  இது சோழர் காலத்தின்  பின்னரான காலத்தில் சாதிய அழுக்குப்படிந்த சமூகமாக முற்றுமுழுதாக மாறிவிட்டது. சோழன் ஆக்கிரமிப்பு அரசியல் வழியில் சிந்தித்த காரணத்தினால் அவனுக்குத்தேவையானது மூலதனம் என்பது கிடைக்க வேண்டியிருந்தது. மூலதனத்தின் குவியல் என்பது சாதியத்தினை இறுக்கியிருக்க முடியாது. மக்களின் பண்பாடுகளை சனாதன தர்மத்தில்  அமைந்ததாக இட்டுக்கட்டப்படும் கருத்தியல் என்பது வெகு வேகமாக சமூகத்தில் பரப்பப்படுகின்றது, ஆழமான சமூக விதியாக மறுபடி மறுபடி கற்பிக்கப்படுகின்றது.
ஆனால் இன்றைய சமூகக் கட்டமைப்பை இன்றைய நிலையில் இருந்து  சமூகத்தை அணுகும் போக்கும் இன்று  மதவாத, சாதியத்தினுள் இருந்து சமூகத்தின் நீதிநெறி சிந்தனைகளை, சடங்குகளை நியாயப்படுத்தும் போக்கே பழமைவாதிகளால் முன்வைக்கப்படுகின்றது.
ஒரு சமூகத்தின் பண்பாடு பற்றிய ஜனநாயகப்படுத்துவது என்றால் முன்னைய உற்பத்தி உறவில் அமைந்த சிந்தனையும், அதன் வாழ்வியலையும், இயல்பான சமூக நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்வதன் ஊடாகவே சுதேசிய அடையாளத்தைப்  ஜனநாயகப்படுத்த முடியும்.
ஆனால் இது சம்பந்தமான ஆய்வுகள், முயற்சிகள் புரட்சிகர அரசியல் போக்கில் புதிய பண்பாட்டுத் வேலைகளை திட்டங்களில் அல்லது ஆய்வுக் கண்ணோட்டங்களில் தவறான போக்கு இருப்பதையே தற்போதைய காலத்தில் விவாதங்கள் எழுகின்ற போது அறிய முடிகின்றது.

பண்டைய வழிபாட்டுமுறை
பண்டைய வழிபாட்டு முறை என்பது இன்றைய சிறுதெய்வ வழிபாட்டிற்கு முன்னோடியாக இருந்துள்ளது. குலக்குறிகளை வணங்குதல், நடுகல் வைத்தல், பலியிடுதல் என்று குலத்தியிடுதல் என்று குலத்தலைவனால் இறந்த முன்னோர்களின் ஆவியுடன் கதைத்துக் கொள்ளும் சிந்தனையும் இருந்துள்ளது. இதனை மானிடவியில் தொல்வழிபாட்டு முறையை சாமானிசம் (Shamnism) என்று அழைப்பார்கள்.
Rites de passage என்று மானிடவியலில் அழைக்கப்படும் நிலைமாற்றுக் கால சடங்கு, நன்றிச் சடங்காகும். இது நிறுவனமயப்பட்ட மதங்கள் உருவாகுவதற்கு முன்னே இருந்துள்ளது. சூரியனை கும்பிடுவது எவ்வாறு தமிழ் வழக்கம் இல்லையோ அவ்வாறே திருனூத்து வைப்பதாகும். திருனூத்துக் கூட குலக்குறியின் எச்சமாக இருக்கலாம்.  குலக்குறிகள் என்பது இனக்குழும வாழ்வியலில் இயல்பாக இருந்திருக்கின்றது.  முன்னோர்களின் நினைவிற்காகவும், தமது வாழ்வியலுக்கு நம்மையை செய்ய வேண்டியும்  முன்னோர்களின்  தொடர்ந்தும் போற்றியிருக்கின்றனர்.

Rites de passage (விளைச்சலைக் குறிக்கும் பூப்புனித நீராட்டுவிழா என்ற சடங்கு கூட அவ்வகையான Rites de passage தான்- பிற்பால சொத்துடமைச் சமூகத்தில் சொத்துடமையை நிலைப்படுத்தும் சடங்காகியது.) நன்றிநவில்- இடைமாறும் கால சடங்கு வகை என்பது முற்பட்டது. இந்த வகைச் சடங்குள் பல நம்சமூகத்தில் உண்டு.

மித்திரன்- சூரிய வழிபாடு என்பது தமிழர் வழிபாடு அல்ல. மத்திய கிழக்கிலும், இந்தோ ஐரோப்பியர்கள் தான் சூரியவழிபட்டார்கள். சூரிய விழாவே இன்றைய நத்தார் பண்டிகையாக கிருஸ்தவத்தில் உள்வாங்கப்பட்டு கிறிஸ்துவின் பிறப்பு நாளாக மாற்றப்பட்டுள்ளது.
நிறுவனமயப்பட்ட சமயங்களுக்கு முற்பட்டதே பொங்கலாகும். இது தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இதனை ஏற்பது ஏற்காமல் விடுவது தங்களின் உரிமை. ஆனால் மனித வளர்ச்சிப் போக்கில் வரலாற்றின் படி பொங்கல் தொன்மையானது. மதத்திற்கும் பொங்கலுக்கும் சம்பந்தமில்லை. தமிழ் தேசிய இனத்திற்கான விழா என்பது தான் சரியானது. ( மேலும் 2000 தமிழக சட்ட மன்றத்தில் தமிழர்களுக்கான புதுவருடமாகவும், தமிழர் திருவிழா என்றும் தீர்மானமாக நிறைவேற்றபட்டது) தமிழ் தேசிய இனத்தினுள் கத்தோலிக்கர்களும் அடங்குவார்ககள். அதேவேளை தமிழகத்தைப் போல இலங்கை முஸ்லீம்களும் தமிழ் தேசிய இனத்தவர் என்று உரிமை கோரினால் அதற்கு யார் தடைசெய்ய முடியும்.

விளையாட்டுப் பற்றிய
சாதியத்திற்கு முன்னையது ஏறு தழுவல் விளையாட்டாகும். மனித குலவளர்ச்சியில் முதலாவது வேலைப்பிரிவினை என்பது பெண் என்பவள் பிள்ளையை பெறுவது என்பது தான்முதலாவது வேலைப்பிரிவினையாக  இருந்துள்ளது. அடுத்ததாக வேட்டையாடி வாழ்ந்த மனிதர் மிருகங்களை வளர்த்துக் கொள்வதில் தான் இரண்டாது பெரும்வேலைப் பிரிவினை உருவாகிக் கொண்டது. (ஏங்கெல்ஸ்) இவ்வாறான இரண்டாது வேலைப்பிரிவினையினால் ஏற்பட்ட மோதல் அல்லது முரண்பாட்டை விவிலியத்தில் காயின்,  ஆபேல் என்ற சகோதர முரண்பாட்டில் கண்டு கொள்ள முடியும்.  தனியாக கால்நடைகளை பழக்கி மேய்பதில் தொடங்கிய வாழ்வியலின் தொடர்ச்சி என்பது மிருகங்களுடன் போட்டிபோடும் விளையாட்டாக உருவாகிக் கொண்டது.
சாதியம் என்பது பின்னால் வந்தது. சாதியமையவாதத்தில் இருந்து அல்ல. பண்பாட்டு விழுமியங்கள் எங்கும் கருத்துமுதல்வாதம் உள்ளது. அதனை எவ்வாறு பொருள்முதல்வாத சிந்தனை கொண்டதாக புதிய கலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்வது என்ற அணுகுமுறை முக்கியமானது. பக்தி இலக்கியத்தில் கருத்துமுதல்வாதம் உள்ளது என்பதற்காக அதன் இலக்கிய வளத்தை மறுப்பது எவ்வாறு சாத்தியம்? அல்லது அந்த முழு இலக்கியத்தினையும் (பேரா.வானமாமலை ஆராய்ந்துள்ளார்) எதிர்க்க வேண்டுமா??பக்தி இலக்கியத்தில் உள்ள கருத்துமுதல்வாதத்தினை அம்பலப்படுத்தப்பட வேண்டுமா?  
இந்த ஏறுதழுவல்-மஞ்சுவிரட்டல் என்பதில் சாதியம் தோய்ந்திருக்கவில்லை என்று நான் கூறவரவில்லை.  எம் சமூக அமைப்பு எங்கும் சாதிய, மத ஒடுக்குமுறை எங்கும் உள்ளது. ஒடுக்குமுறை இருக்கின்றது என்பதற்காக ஒதுக்குவது என்றால் எத்தனை விடயங்களை ஒடுக்குவது? இங்கு ஒதுக்குவதான சமூகமாற்றமா என்ற கேள்வியாக நம்முன் வருகின்றது.

தமிழ் சமூகத்தின் பிற்போக்குத் தனங்களில் உள்ள கருத்துமுதல்வாத, ஜனநாயக விரோத நிலைகளை அகற்றப் போராடுவதன் ஊடாகவே புதிய பண்பாட்டைப் படைக்க முடியும். அதேபோல தமிழர் பண்பாட்டில் தூய்மையான தொல்குடிப் பண்புகளோ அல்லது தூய்மையான நிலமானிய பண்பாடு என்பது கிடையாது. தொல்குடி- நிலமானிய உற்பத்தியில் முறையில் உருவாகி சிதைப்புக்குள்ளாகிய பண்பாடுகளே உள்ளன. ஒரு தேசிய இனத்தின் பண்பாடு என்பது மேற்கின் மையவாத சிந்தனையில் இருந்து உருவாக்கிக் கொள்ள முடியாது. அது தாராளவாத சிந்தனைப் போக்கேயன்றி ஒடுக்குமுறையை களைந்த புதிய பண்பாட்டு- கலாச்சாரப் புரட்சியாகிவிட முடியாது.

இறுதியாக
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான pacifism - - மென்மைப் போக்கு என்பது போராட்டங்களை ஊக்கப்படுத்தாது அகிம்சை என்ற  போக்கை ஊக்கப்படுத்தினர். தனிமனித மையப்பட்ட சிந்தனை வடிவமும் போராட்டங்களை என்பது காலாவதியாகிப் போனதாக கற்பிதம் செய்தது. குறிப்பாக சொல்லப் போனால் முதலாளித்துவ தாராளவாத சிந்தனைப் போக்கே புரையோடிப் போய்யுள்ளது.
தன்னார் நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டது
இது மனித உரிமை அமைப்புக்கள், தன்னார்வ உதவிநிறுவனங்கள், சூழலியல் அமைப்புகள், மிருக பாதுகாப்பு அமைப்புக்கள் எனவும் சிவில் சமூக அமைப்பு என்ற போர்வையில் உருவாக்கிக் கொண்டது.
தனிமனிதர்களை உதாரண புருசர்களாகக் கொண்டு லொபி வடிவத்தை உருவாக்கிக் கொண்டது.

நிர்வனமயப்ட்ட முதலாளித்துவ உற்பத்திமுறை, சமூக உறவு என்பதற்கு அப்பால் பழைய (தொழில் நுட்பமான இயந்திர) இயந்திரமற்ற செய்பாடுகளை முடிவிற்கு கொண்டு வருவது தேவையாகின்றது.
மிகை உற்பத்தி, கூடிய லாபம்,  குறைந்த செலவு,....
பழையதை நிறுத்தி விட்டு புதியதை புகுத்துவதன் ஊடாக தங்கி நிற்கும் நிலையை ஏற்படுத்துவது.
ஒரு சிந்தனை வடிவம் இன்று தோன்றுவது போல் அல்ல அந்த சிந்தனை வடிவம் 1000  ஆண்டுகள் கொண்டிந்தாலும்  அவைகள் புதிய உற்பத்தி உறவிற்கு  பின்னரே மாற்றத்திற்கு உள்ளாகின்றது.
Macro  - விரிந்த கண்ணோட்டத்தில் ஆயிரக்கணக்காண ஆண்டுகளின் பின்னரா மாற்றம் என்பது நிர்ணயிக்கப்பட்டதே. பழைய உறவிற்கு மாற்றாக உள்னுழைக்கப்படுகின்ற மேற்கு சார்ந்த சிந்தனை வடிவம் என்பது ஜீவகாரூண்யமாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவ்வகையான போக்கு என்பது மேட்டுக்குடிக்கான பொழுதுபோக்கு செயற்பாடாக அமைகின்றது.

மதத்தினுள் திணிக்கப்பட்ட பண்பாடு என்பது அவலத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் அடையாளத்தினுள் அடக்கிவிட்டு குறுகிய வட்டத்தினுள் கொண்டுவந்து சமூகத்தை பிரிப்பது சமூக அவலம் தான்.
அரசியல் பொருளாதாரம் என்பது சுயசார்பை அழிப்பது
சிறுவிவசாயம் சார்ந்த உற்பத்தி முறைகளை சிதைப்பது
இதன் ஊடாக சுதேசியத்தினை சிதைத்து நுகர்வு, அன்றாடவாழ்வியல் தேவைகளை தன்னை தங்கிநிற்கும் நிலையை தோற்றுவித்து தனது அங்கியை நமக்குத் ஏகாபத்தியம் தருக்கின்றது. அதனைச் சுமந்து கொண்டு தான் இருக்கின்றோம்.
இந்த வகையில் தான் பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிற்கு அடிப்படையாக மேற்கின் சிந்தனைவடிவம், பொருளாதார வடிவம் என்பது திணிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் இருந்து தான் கலாச்சாரம், பண்பாடு பற்றிய புரிதல் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.
தைப்பொங்கல் பற்றியும், ஏறுதழுவல் பற்றிய பிரச்சனை வருகின்ற போது எம்மவரின் சிந்தனை வடிவம் என்பது  போதிய சமய, சிந்தனை வடிவம் பற்றிய அறிவுத் தேடல் அற்றே உள்ளது.
புதிய பண்பாடு, புதிய கலாச்சாரங்களை மதச் சிந்தனை, பிற்போக்குக் கூறுகளை அகற்றிய கலாச்சாரம் பண்பாடு என்பவற்றை  தொன்மை நிலையை கண்டறிகின்ற போது நமக்கான சொந்தக் கலாச்சாரத்தை கண்டடையமுடியும்.  புதிய கலாச்சாரம் பண்பாடு என்பது மரபுகளில் இருந்து நிச்சயமாக கண்டடையமுடியும். ஆனால் தேசிய வெறியர்களாகவும், மரபுவாதிகளாகவும் முத்திரை குத்திக் கொண்டு ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி, சிந்தனையை தூக்கிப் பிடிக்கப்படுகின்றது. இவற்றிற்கு மாற்றானது சுதேசிய சிந்தனையை வடிவத்தை உருவாக்கிக் கொள்வது அவசிமானதாகும்.

No comments:

Post a Comment