நூல்வடிவில் வந்துள்ளது.
மார்க்சிய அணுகுமுறைபற்றி:
1818 -2018
இதனை எழுதி முடித்து 3 வருடங்களாகின்றது. பல புலவர்களிடம் இதனை வாசித்து கருத்துக் கூறும் படி கேட்டுள்ளேன். ஆனால் உலகிற்கு கருத்துச் சொல்லும் புலவர்கள் இதற்கு கருத்துச் சொல்லாது கடந்து சென்று விட்டார்கள். இதனை இட்டு எவ்வித கவலையும் இல்லை. ஆனால் அவர்கள் முன்னால் நாம் அறிவிலி என்பதுதான் அவர்கள் கருத்துப் போலும்.
இது இருக்க ஐரோப்பிய கலாசாலைகளுக்குள் நுழையும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பதிய சிந்தனை. அணுகுமுறை வடிவம் என்பது புதுமையானது.
ஐயத்திற்கு அப்பாற்பட்டது. சரியான பாதையில் செல்லும் போக்கை; கொண்டது. இவ்வாறுதான்
புதிய கோட்பாட்டை முன்வைப்பதாக பாசாங்கு செய்தார்
பிராங்பேட்லில் உருவாகிய நவமார்க்சியத்தை தமக்கு தேவையான மொழியில் முன்றிறுத்துகின்றார்கள்.
முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச விழைவாக மிகவிரைவாகவே கலாசாலை
(பல்கலைக்கழகங்கள்) களில் கல்வித் திட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு
நாடு;களில் உள்ள மானிடவியல், தொல்பொருளியல், சமூகவியல் எனும் துறைகளைப் போன்று உலகின்
பல பாகங்களிலும் வெவ்வேறு பாடநெறிப்பிரிவுகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்பட்டது.
”கல்விசார் உலகில் மானிடவியல், சமூகவியல், உளவியல் வரலாறு என்ற பாடநெறிகளுக்குள் அந்த
பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போது அணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது.
இந்த அணுமுறையூடாக பாடநெறியை கற்றுக் கொடுக்கப்படுகின்றது. (இந்த அணுகுமுறைகள் வர்க்கம்
சார்ந்து இருக்கின்றது ஒரு புறமிருக்க) அணுகுமுறையாக Sturcturalism (Levi Struss, ), functionalism
(Emil Durkheim), sturctural functionlism (Malinowski) contradictions perspective, Marxism, ---
(interactional perspective of social anthropology on
the level of the persons involved instead of on a socio-structural level.
Ethnic identity becomes and is maintained through relational processes of
inclusion and exclusion. -Fredrik Barth) Barth தனிமனிதர்களில் நிலையில் இருந்துதான்
சமூகத்தினை விளங்கிடும் அணுமுறை முதன்மைப்படுத்தியுள்ளார். (நோர்வேயின் பிரபல்ய சித்தாந்தக்
குருவாகும்)
அகநிலைவாத அணுகுமுறைக் கண்ணோட்டம் தென்கிழக்காசியாவிற்கு
புதினமானதாக இருக்க முடியும்.
ஆனால் 1980களில் மார்க்சியத்தின் திரிபுவாதம் என்று விவாதித்த
வரலாற்றுப் போக்கு உண்டு.
1. அடிக்கட்டுமானம்
2. சிந்தனைக் கட்டுமானம்
3.முரண்பாடுகள் (மாவோ சிந்தனையாக வளர்க்கப்படுகின்றது)
இங்கு தங்கப் பல் கட்டி கீரை விற்பனை செய்யும் வியாபாரி
போல புதுக்கண்டுபிடிப்பாக முன்வைக்கின்றார்கள்.
மார்க்சியத்திற்கு மாற்றாக அல்லது அவர்களை விட மேம்பட்ட
விதத்தில் என்ற போக்கு
சவாலுக்குரிய வாதமாகும்.
மார்க்சியலெனினிய அணுகுமுறைக் முறைமை
சித்தாந்தம்
ஒழுங்கமைவு பற்றிய விஞ்ஞானப் பார்வையை விளங்கிட உற்பத்தி
முறை பற்றிய புரிதல் அவசியமானதாகும். உற்பத்தி முறையே சமூக ஒழுங்கமைவையுமம் மாற்றிவிடுகின்றது.
என்பது எனக்குக் தெரியாது.
தேசிய இனப்பிரச்சனை- முதலாளித்துவ கட்டம் பற்றி பிரச்சனையில் என்பது உற்பத்தி முறைமாற்றத்தின் விளைவாக ஏற்படும்
முரண்பாடு. இந்த முரண்பாட்டில் பாதிக்கப்படுவது
அந்த சமூகக் கூட்டம். இது மொழிவழித் தேசிய இனமாகவும், தேசமாகவும் இருக்கின்றது . இதுவே
மார்க்சிய சமூகஒழுங்கமைவு பற்றிய புரிதல. இதற்கு மாற்றாக முதலாளித்துவ தாராளவாதச் சிந்தனையில்
முன்னிறுத்தி நாமும் தான் சனநாயக வாதிகளாக பிரகடனப்படுத்த முடியும். இது 1990 பின்னரான
சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னரான சிந்தனைக்
கட்டமைப்பும், அரசியல் போக்காகவும் உள்ளது.
லெனின் எழுதிய மார்க்சியம் கற்பிக்கும் மூன்று தத்துவக்
கூறுகளானது இந்த உலகத்தை விளங்கிக் கொள்ள, வியாக்கியானம் செய்ய, மாற்றம் செய்ய துணை நிற்கக் கூடிய அணுகுமுறைக் கோட்பாட்டை
உருவாக்கிக் கொள்ள வழிகாட்டுகின்றது.
மார்க்சிய அணுகுமுறைபற்றி:
அறிமுகம்
மார்க்சியத்தை கற்றரறியும் தேவை உணர்ந்தவர்கள், அதன் மீதான நம்பிக்கையுள்ளவர்கள்
கூட்டுப்படிப்பின் ஊடாகவே படிப்பது நல்லது. இந்த சமூக
அமைப்பில் தோழர்களும் ஆசான்களுமாகிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ போன்ற அதீத சிந்தனை வளம் கொண்டவர்கள்
நம்மிடையேயில்லை. இதனால் சமச்சீரற்ற சிந்தனை வளர்ச்சி
கொண்ட தனிமனித புரிதலுக்குள் சிக்கித்
தவிக்கின்றது.
இங்கு தனிமனிதப் புரிதல்களை முன்னிறுத்துவதும், குழுநிலையை உருவாக்கிக் கொள்வதும் என்ற
குட்டி முதலாளிய சிந்தனை ஆட்கொண்டிருக்கின்றதை அவதானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட விடயத்தை எவ்வகையிலும் செய்து முடிக்க வேண்டுமென்ற
சிந்தனையோட்டம் மார்க்கிய லெனினிய அணுகுமுறைக்கு எதிர்மறை விளைவை கொடுக்கின்றது.
மார்க்சியம் என்பது விஞ்ஞானம், இந்த விஞ்ஞான அறிவைக் கொண்டு சமூக பொருளாதார அமைப்பினை எவ்வாறு புரிந்து
கொள்வது என்பதாகும். ஒரு பொருளாதார அமைப்பின் சமூக
உறவினையும், சமூக நடத்தைகளையும், சமூக
பண்பாட்டையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்பதாகும்.
ஆதிக்க கருத்தியல் - எதிர்க்கருத்தியல் என்பது இரண்டு இருக்கின்றது. இவை
இரண்டுமே வர்க்கம் என்பதே தீர்மானிக்கின்றது. இதில்
உழைக்கும் மக்களுக்கான குரலாகவே மார்க்சியம் இருக்கின்றது.
இந்தப் பகுதியின் பல அணுமுறைக் கோட்பாடுகளை முடிந்தவரை
இணைத்திருக்கின்றேன். பன்முக
அணுகுமுறை என்பது முதலாளித்துவவாத சிந்தனைக்கு அப்பால் மார்க்சியமும் பன்முகப்
பார்வையை கொடுக்கின்றது. இயங்கியலுக்கு மாற்றாக பற்பல
சிந்தனைப் போக்குகளை அறிமுகப்படுத்துகின்றனர். மார்க்சியமாக பின்னவீனத்துவ
சிந்தனைப் போக்கில் அமைந்த செயற்பாடுகளைக் கொண்ட அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.
பின்னவீனத்துவ அணுகுமுறைப்
போக்கை மார்க்சியத்தின் அங்கமாகவும்
நமக்கு முன்னிறுத்தப்படுகின்றது. இந்தப் போக்கிற்கு எதிரான அரசியல் விவாதத்திற்கான வெற்றிடம் கொண்டே உள்ளது.
கடந்த 30 வருட கால வரலாற்றுக் காலத்தில்
மார்க்சிய அணுகுமுறைபற்றிய தேடல்கள் என்பது (ஒருவர் கக்கி
துப்புவதை மற்றவர்கள் எடுத்து துப்புவது
போலவே இருந்துள்ளது) கிளிப்பிள்ளைகள் போல
ஒப்பிக்கப்பட்டதாகவே இருந்துள்ளது. மார்க்சிய லெனினிய
அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளும் வகையாக சமூக ஆய்வுகள் நலமடிக்கப்பட்டுக் கொண்டே
வந்துள்ளது.
வெவ்வேறு மனிதர்கள் தமது வல்லமைக்குள்ளாக ஆய்வுமுறைகளை முன்வைத்து கொள்கின்ற வேளையில் இயங்கியல் ரீதியாக அணுகப்படாமல் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறைக்கு அப்பால் தன்னார்வ அணுகுமுறை, சிந்தனை முறை முன்னிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தே கலாசாலை மார்க்சிய அணுகுமுறை வடிவமும் முன்னிறுத்தப்பட்டு அதுவே புரட்சிகர மார்க்சியமாக முன்னிறுத்தப்பட்டும் வருகின்றது.
மார்க்சிய அணுகுமுறையை நிராகரித்துக் கொள்வதினால் தனிமனித புரிதல்களே மார்க்சியமாக முன்னிறுத்தப்படுகின்றது. இந்த சமூக அமைப்பு தனிமனிதர்களை தனித்தீவுகளாகக் கொண்ட சிந்தனை மையங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இங்கு தனிமனித புரிதல்களை முன்னிறுத்துகின்றது. தனிமனித புரிதல்களை முன்னிறுத்தும் போக்கும் தனிமனித மையப்போக்கும் ஆழுமை செலுத்துகின்ற சமூக அமைப்பில் தொடர்ச்சியாக ஒப்புறவு கொண்ட சமூக மனிதர்களின் கூட்டை உடைக்கின்றது. இந்தவகையில் தனித்துவாதம் என்பது சிந்தனைத் தளத்திலும் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை அறிய இந்த முயற்சி பயன்படும்.
வெவ்வேறு மனிதர்கள் தமது வல்லமைக்குள்ளாக ஆய்வுமுறைகளை முன்வைத்து கொள்கின்ற வேளையில் இயங்கியல் ரீதியாக அணுகப்படாமல் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறைக்கு அப்பால் தன்னார்வ அணுகுமுறை, சிந்தனை முறை முன்னிறுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தே கலாசாலை மார்க்சிய அணுகுமுறை வடிவமும் முன்னிறுத்தப்பட்டு அதுவே புரட்சிகர மார்க்சியமாக முன்னிறுத்தப்பட்டும் வருகின்றது.
மார்க்சிய அணுகுமுறையை நிராகரித்துக் கொள்வதினால் தனிமனித புரிதல்களே மார்க்சியமாக முன்னிறுத்தப்படுகின்றது. இந்த சமூக அமைப்பு தனிமனிதர்களை தனித்தீவுகளாகக் கொண்ட சிந்தனை மையங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இங்கு தனிமனித புரிதல்களை முன்னிறுத்துகின்றது. தனிமனித புரிதல்களை முன்னிறுத்தும் போக்கும் தனிமனித மையப்போக்கும் ஆழுமை செலுத்துகின்ற சமூக அமைப்பில் தொடர்ச்சியாக ஒப்புறவு கொண்ட சமூக மனிதர்களின் கூட்டை உடைக்கின்றது. இந்தவகையில் தனித்துவாதம் என்பது சிந்தனைத் தளத்திலும் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை அறிய இந்த முயற்சி பயன்படும்.
மார்க்சியத்தின் எவ்வாறு பன்முகப் பார்வையை
முன்னிறுத்துகின்றது என்பதை மார்க்சியத்தின் அணுகுமுறை பற்றிய கோட்பாட்டை மாவோ
இன்னும் இலகுவாக நமக்கு படைத்து தந்துள்ளார். மார்க்சியத்தினை முகாம்களாக பிளவுண்டு மாவோ எதிர்ப்பு ஸ்ராலின் எதிர்ப்பு
என்ற நிலையில் மார்க்சியத்தினை கற்றுக் கொள்ள முடியாது.
மார்க்சின் “மூலதனம்” பொருளாதார அமைப்பையும், சமூக கட்டுமாணத்தை பற்றி வெளிப்படுத்துகின்றது. அதேபோல
சிந்தனையின் தோற்றுவாய் பற்றிப் பின்னரும் புத்தகங்கள் அவசியமாக படிக்க
வேண்டியவையாகும். கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - எங்கெல்ஸ், கம்யூனிஸ்ட், கட்சி
அறிக்கை, அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு-
முன்னுரை - மார்க்ஸ், லுத்விக்
ஃபாயர்பாகும் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் - எங்கெல்ஸ்,
(ஜேர்மன் சித்தாந்தம்) மனிதக் குரங்கிலிருந்து
மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம் - எங்கெல்ஸ்,
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக்
கூறுகளும், மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில
சிறப்பியல்புகள் (லெனின்) போன்றவையும், இவற்றுடன் மாவோவின் முரண்பாடுபற்றி, நடைமுறைபற்றி
ஆகியவையும் முக்கியமானதாகும். இதேவேளை மானிடவியல், பெண்ணியம் சிந்தனையை பெற்று கொள்ள ஏங்கல்ஸின் குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.
இவற்றை வாசித்து அறிவதன் ஊடாக மார்க்சிய பன்முகப் பார்வையை
பெற்றுக் கொள்ள முடியும். ஆனால்
இவற்றில் சில நூல்களை மட்டும் வாசித்துவிட்டு அதில் இருந்து மார்க்சியத்தை
படித்தறிந்து கொள்ள முனைகின்றனர். இதே வேளை சிலவேளைகளில்
தத்துவத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு நடைமுறையை வலியுறுத்துவதற்கு
மாவோவின் நடைமுறைபற்றி மட்டும் முன்னிறுத்த மார்க்சியத்தை எழிமைப்படுத்தும்
நிகழ்வுகளும் இடம்பெறுகின்றது. தத்துவத்தின்
முக்கியத்துவத்தை மறுத்து நடைமுறையை முன்னிறுத்துவ நீண்டகாலத்தில் எதிர்மறை நிலையை
ஏற்படுத்துகின்றது.
அரசியல் கல்வியூட்டல் என்பது மிகவும் முக்கியமான விடயம். இங்கு
அனைத்துப் பிரிவினர்களையும் கல்வியூட்டம் செய்கின்ற போது பழைய சிந்தனை
வடித்திற்கு மாற்றான சிந்தனையை கொடுக்க முடியும். அவ்வாறு
சிந்தனை கொடுக்கின்ற போது பொருளாதார அமைப்பின் மாற்றத்தூடே புதிய சிந்தனை வடிவத்தை
உருவாக்கிக் கொள்ள ஏதுவாகவும் அமையும்.
எனவே சிந்தனைகள் என்பது இருக்கின்ற பொருளாதார அமைப்பிற்கு
ஏற்ப தகவமைத்துக் கொள்வதாக இருக்கும். இங்கு அரசியல் மயப்படுத்தலையும், சிந்தனை
மாற்றத்தையும் புரிந்து கொள்வதில் அவதானம் அவசியமாகும்.
கருப்பொருள்
உலகில் உள்ள மனிதர்களின் சிந்தனைப் போக்கு ஏதோ ஒரு உலகக்
கண்ணோட்டதை கொண்டவர்களாக இருக்கின்றனர். உலகக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் மனிதர்களின் தன்னைச் சுற்றிய
உலகத்தினை புரிந்து கொள்கின்றார்கள். உதாரணத்திற்கு
முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த தேசங்களில்
நீர்பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது திணைக்களம் சார்ந்ததாக இருக்கின்றது.
ஆனால் இது அரைநிலப்பிரபுத்துவ சிந்தனை கொண்ட தேசங்களில் தண்ணீர்
திறந்து விடுவதை தமது வேலை என்று அரசியல்வாதிகள் கொள்கின்றார்கள். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு ஒரு களிப்பாட்டத்துக்குரியதாக இருக்கின்றது.
இங்கு முதலாளித்துவ பொருளாதாரத்திற்குரிய அரச நெறி என்பது
பின்பற்றப்படுவதில்லை. இந்த உலகத்தின் உருவாக்கம், நீதிமுறை, பண்பாடு, வாழ்வியல் போன்றவற்றை வெவ்வேறு முறைமைகளின்
ஊடாக விளங்கிக் கொள்ளுகின்றனர். மனிதர்களின் உலகப் பார்வை என்பதை மதங்கள் வெளிப்படுத்தும் கருத்தியலில்
இருந்தே இந்த உலகத்தை விளங்கிக் கொள்கின்றார்கள். அதேவேளை
இனக்குழுமங்களின் உலகப் பார்வை பெரும் சமூகத்தில் இருந்து மாறுபட்டுள்ளதையும்
கவனிக்க வேண்டும்.
இவ்வாறு கலாசாலைகளில் பன்முகத்தன்மையை வளர்க்கும் பொருட்டு
பன்முகச் சிந்தனைக் கூறுகளை வளர்த்து விடுகின்றது. முன்னர் இருந்த பாடநெறிகளில் இருந்து ஒரு பாடநெறியையே பற்பல
கூறுகளாகப் பிரித்து அதில் சிறப்புத் தேர்ச்சி (வரலாற்றுவியல்,
மானிடவியல், சமயஅறிவியல், சமூகவியல், மொழியியல், புவியியல்,
என்று பிரிந்துள்ளதைப் போல) கொண்ட நிலையை
உருவாக்கிக் கொள்கின்றது.
அறிவியல் வளர்ச்சிற்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் தம்மை
தகவமைத்துக் கொள்கின்றது. பன்முகப்படுத்தப்பட்ட சிந்தனை
வளர்ச்சியின் ஊடாக நீதி, நிர்வாகத்தில் ஏற்படும்
முரண்பாடுகளை தீர்த்து வைப்பதும், தொழிற்துறை, அரச திணைக்களங்கள், நிர்வாகக் கட்டமைப்புக்கள்,
அரச நிறுவனங்கள் எவ்வாறு இந்தச் சமூக அமைப்பில் தொடர்ந்து இயங்க
வைப்பது பற்றிய குறிக்கோளை கொண்டிருப்பதாக அமைந்திருக்கின்றது. சிந்தனையில் பன்முக வடிவம்
இந்தச் சமூக அமைப்பை கட்டிக்காப்பதற்காகவே
உருவாக்கப்படுகின்றது. கல்வி அமைப்பே பொருளாதார
அமைப்பிற்கு தேவையான ஊழியர்களை உற்பத்தி செய்வதேயாகும். பொருளாதார
அமைப்பில் ஏற்படுகின்ற மாறுதலுக்கு ஏற்ப சிக்கல் நிறைந்த சமூக அமைப்பிற்கு ஏற்ப
அத்துறைகள் சார்ந்த ஊழியர்களை உருவாக்கின்ற போது அறிவுத்துறையில் ஏற்படுகின்ற
மாற்றத்தை உள்வாங்கிக் கொள்கக் கூடிய வகையில் கலாசாலைகளிலும் பாடத்திட்டங்கள்
உருவாக்கப்படுகின்றது. அறிவுத்துறையை மேற்குதேசங்கள்
உருவாக்குவது போல வளரும் நாடுகளான இலங்கை, இந்தியா போன்ற
நாடுகளில் கலாசாலைக்கு வெளியே அறிவுஜீவுகள் உருவாகின்றனர். இவ்வாறான
அறிவுஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக உருவாக்கப்படுகின்றார்கள்.
கலாசாலைக்கு வெளியேதான் புத்திஜீவிகள் காரியமாற்றுகின்றார்கள்.
ஒரு கருத்து உருவாக்கத்திற்கு துணையாக நிற்கின்றனர். இவ்வாறானவர்கள் ஒரு பகுதியினர்
சர்வதேச நிதிறுவனங்களின் ஊழியர்களாகவும்
மாற்றம் பெறுகின்றார்கள்.
பன்முக அணுகுமுறை, முறைமை என்பது கலாசாலையில் ஒரு முக்கிய பாடநெறியாக இருக்கின்றது. பன்முக அணுகுமுறை, முறைமையைக் கற்றுக் கொண்டவர்கள்
சமூகத்தளத்திற்கு கொண்டு வருகின்றார்கள். கலாசாலையில் கற்று
வெளியேறும் புத்திஜீவிகள் புதிய சரக்காக சமூகத் தளத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அணுகுமுறை, முறைமைகள் கலாசாலையில் கற்கும்
நிலையை வெளித்தளத்தில் உருவாக்கப்படும் நிலை இந்தியாவைப் பொறுத்தவரை இருந்துள்ளது. இவ்வாறான போக்கு தலித்தியம்,
விளிம்புநிலை, பின்னவீனத்துவம், கட்டமைப்புவாதம் என்ற கோட்பாடுகளை தமிழகச் அறிமுகப்படுத்த துணையாக
இருந்துள்ளது.
இவர்களின் சிந்தனையில் இருந்து உருவாகியதாக
முன்வைக்கப்படும் சிந்தனைகள் பன்முக அணுமுறையில் வெவ்வேறு வடிவங்களேயாகும். இவ்வாறே மார்க்சியத்தையும் ஒரு அணுகுமுறைச்
சிந்தனையாக கலாசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. பன்முகப்பட்ட
சிந்தனைப் அணுகுமுறையை- முறைமையைக் கற்றுக் கொண்ட புத்திஜீவிகள் சமூகத்தை மாற்ற முயற்சிக்கும்
சமூகப் போராளிகளின் செயற்பாட்டிற்கு பெரும் தடையாக ஒரு மதிலை உருவாக்குவதில் பெரும் வெற்றி கொண்டவர்களாக உள்ளார்கள்.
இவர்கள் பன்முகப் பார்வை என்ற போர்வையில் பொருள்முதல்வாதத்திற்கு
பதில் கருத்துமுதல்வாத சிந்தனையை கூறுகளை முன்நிறுத்துகின்றார்கள். மார்க்சியம் என்பது முழுமையான சித்தாந்தம், தனக்கான அணுகுமுறையை வளர்த்துள்ள
ஒரு சித்தாந்தம்;, இந்த சமூகத்தை முழுமையாக விளக்க முடிந்த
சிந்தாந்தம் இதற்கு எதிராக கொச்சைப்
பொருள்முதல்வாதத்தையும், கருத்துமுதல்வாதத்தையும் பன்முக
அணுகுமுறைச் சிந்தனை என்று
புகுத்தப்படுகின்றது.
சமூகமாற்றம், சமூக எழுச்சிகளை திட்டமிட்டு சிதைக்கும் கருத்துமுதல்வாதத்தினை
முன்னிறுத்துகின்ற போது முதலாளித்துவமே பாதுகாக்கப்படுகின்றது. குறுக்குவழியில் புரட்சியை
வென்றுவிடலாம் என்ற சிந்திக்கும் குட்டிமுதலாளித்துவ சாகசவாதமும் சமூகக்
கட்டுமானத்தில் புரையோடிப்போயியுள்ள நிலைகளை வரலாற்று ரீதியாக அணுகாமல் இயங்கியல்,
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மறுத்து நிற்பதை அவதானத்தில் கொள்வது
அவசியம்.
சிந்தனையில் ஒரு அங்கமான பின்னவீனத்துவ அணுகுமுறை
வளர்ச்சியடையாத தேசங்களில் புகுத்தப்பட்டுள்ளது. தனிமனிதமையவாதம், பின்னவீனத்துவ
அணுகுமுறை Structuralism. Structural functionalism, functionalism, Contradiction
perspective என மார்க்சீய சிந்தனையில் இருந்து கலாசாலை அணுகுமுறை மார்க்சீயமாக
பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றது.
முதலாளித்துவத்தினை பாதுகாத்துக் கொள்ளும் கோட்பாட்டு
உருவாக்கம் பன்முகத் தன்மை என்ற போர்வையில் சமூகத் தளங்மெங்கும் உள்ளது. இன்றைய குறிப்பான சூழல் என்னவெனில்
எழுத்துலகம் வர்க்க முகாம்களாக பிரிந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாது அல்லது
பிரிந்திராது எல்லோரும் எழுத்தாளர் என்ற முகாம் எற்ற ஒரு சமூகப் போக்கு இன்றுள்ளது.
ஆக எழுத்தாளர் என்ற ஒரு அந்தஸ்து ஒன்றே போதுமானதாகின்றது. குறிப்பாக 2009 பின்னான காலத்தில் தீவிர இடதுசாரிகள்
என்று அறியப்பட்டவர்களின் மேடைகளில்
கருத்துமுதல்வாதிகள் பிரசன்னமாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. இன்று தீவிர இலக்கியம் பேசும் கருத்துமுதல்வாதிகள் இந்த சமூக அமைப்பிற்கு எவ்வித பாதிப்பையும்
ஏற்படுத்துவதில்லை. இது
வர்க்கமற்ற முகாம் என்ற கற்பிதம் உருவாக்கப்படுவதும், பொதுவெளியில்
மார்க்சியத்திற்கு எதிரான கருத்தியல் தளம் வெகுவாக திட்டமிட்டு
உருவாக்கப்படுகின்றது.
மார்க்சிய தத்துவத்திலும், கோட்பாட்டிலுள்ள சொல்நெறிகளை அடையாளம்
கண்டு அவற்றுடன் ஒப்பிட்டுத் திரிப்பதில் முனைகின்றனர். இங்கு
ஏங்கெல்ஸ் மூலதனத்துக்கு எழுதிய முன்னுரையில் வரலாற்றில் இருந்து முறித்துக்
கொண்டு புதிய சொல்லாடல்களை மார்க்ஸ் உருவாக்கி அரசியல் பொருளாதாரத்தை
ஆராய்ந்ததாகச் சொல்லுகின்றார். புதிய கோட்பாட்டிற்று வருவது
என்பது ஒரு நாட்டின் யதார்த்த சூழலினை கொண்டுதான் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதார உற்பத்தி முறைக்கும் உற்பத்திச் சக்திகளின் தரத்தில்
இருந்துதான் சமூகத்தினை பகுப்பாராய முடியும். மனிதர்களின்
உணர்வு நிலையில் இருந்தல்ல. மார்க்சியத்தினை படித்தறிய விரும்பும்
வரலாற்று மாணவர்கள் மார்க்சிய உலகப்பார்வை என்பது வரலாற்று இயங்கியல்
பொருள்முதல்வாதம் என்றால் என்பதை தகுந்த முறையில் கற்றுக் கொள்ள முயற்சிக்க
வேண்டும். “குறிப்பிட்ட சில சொற்களை, அன்றாட
வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சாதாரண அரசியல் பொருளாதாரத்திலும் அவற்றுக்குள்ள
அர்த்தத்திலிருந்து வேறான அர்த்தத்தில் பிரயோகித்திருப்பதைச் சொல்கின்றோம்.
இதனைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு
விஞ்ஞானத்தின் ஒவ்வொரு புதிய கட்டமும்
அந்த விஞ்ஞானத்தின் கலைச் சொற்களில் ஒரு புரட்சியை அவசியமாக்கிறது. இது வேதியியலில் (chemistry) சிறப்பாக நிரூபணமாகிறது. அதில், சுமார்
இருபதாண்டுகளுக்கு ஒரு முறை, சொல்லாட்சி முழுவதும் தீவிரமாக
மாற்றப்படுகிறது, வெவ்வேறு பெயர்களின் முழுத் தொடரைக் கடந்து
வந்திராத ஓரே ஒரு கரிமச் சேர்மத்தையும் (Organic Compound) காண்பது அரிது. தொழில்,
வர்த்தக வாழ்க்கையின் பதங்களை உள்ளவாறே எடுத்துக் கொள்வதிலும்,
அவற்றை வைத்துக் கொண்டு இயங்குவதிலும் அரசியல் பொருளாதரம் பொதுவாகத்
திருப்தி கண்டது, இவ்வாறு செய்வதன் மூலம், அது அந்தப் பதங்களால் வெளியிடப்படும் கருத்துகளின் குறுகிய வட்டத்துக்குள்
தன்னைக் குறுக்கி கொள்வதை அறவே காணத் தவறியது. (பக்கம் 19 மூலதனம் பாகம் 1 NCBH) மார்க்சீயத்தினை வரையறுத்துக் கொள்ள வெவ்வேறு சிந்தனைப்
போக்கிற்கு நிகராக உள்ளாதாக பல்வேறு சிந்தனை முன்றுத்துவதை அவதானிக்க முடிகின்றது. மார்க்சியத்தை இருமைவாதம், ஒருமைவாதம் என்று பல்வேறு சிந்தனைகளை ஒப்பிடுகின்றனர். ஆனால் மார்க்சியம் என்பது வரலாற்று, இயங்கியல்
பொருள்முதல்வாதமாகும். இவற்றிற்கு மாற்றான எந்த வேறு
பெயர்களிலும் அழைக்க வேண்டிய தேவையில்லை.
இயங்கியல் என்பது பொருட்களின் முக்கிய சாரத்தில் உள்ள
முரண்பாட்டைப் பற்றி ஆராய்ந்து கற்பதே ஆகும். என்றார் லெனின். பொருட்களின் சாரம் என்பது
மனிதர்களின் சமூக உறவின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்கின்ற போதும், வேதியல், பௌதீகம் போன்றவற்றை ஆராய்கின்ற போது
வெவ்வேறு கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மார்க்சியம் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட சொல்லாடல், உலகைப் புரிந்து கொள்ளும் சிந்தனை என்பது
வேறு வகையில் தனது வரலாற்றுப் பார்வையை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த சொல்லாடல்கள், வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் என்பன மார்க்சியம் போதனைக்குரிய
சொற்களுக்கு அப்பால் இருப்பதை திணித்துக் கொள்வது நடைபெறுகின்றது. இவ்வாறான திரிவுபடுத்திக் ஆராயும் போக்கு என்பது பெரும் சலாலுக்குரியதாக
இருக்கின்றது. இவைகள் மார்க்சீயத்தினை வளர்க்கின்றோம்,
மண்ணுக்கு ஏற்ப மாற்றம் தேவை என்றும், பன்முகப்பார்வை
என்றும் அழைக்கின்றார்கள். மார்க்சியமே ஒரு பன்முகப்பார்வையை
வழங்கும் ஒரு முழுமையான சித்தாந்தம். மார்க்சிய அணுகுமுறை
ஊடாக முழுயான கோட்பாட்டை வகுக்கக் கூடிய வல்லமை மார்க்சியத்திற்கு உண்டு. ஆனால் மார்க்சியத்தினை கற்றுக் கொள்ளும் நாம் முழுமையாக மார்க்சியத்தினை
புரிந்து கொண்டு பன்முக ஆழுமையை நாம் வளர்த்துக் கொள்கின்றோமா என்பதுதான் இன்றுள்ள
பிரச்சினையும், கேள்வியுமாகும்.
குறிப்பாக கலாசாலையை மையப்படுத்திய அணுகுமுறை விவாதங்களின்
தளமாக மேற்கத்தைய தேசங்களே இருக்கின்றன. அவர்களின் வாழ்நிலையும், அவர்களின் சமூக உறவிற்கான
சிந்தனை என்ன என்பதை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இந்த
மாறுபட்ட சிந்தனைப் போக்கு அன்றாடச் சமூக உறவில் இடம்பெறுவதே மறுபடியும்
பிரதியிடப்படுகின்றது.
வாழ்நிலைச் சிந்தனை
ஒரு சமூகத்தில் தனிமனிதர்களின் பாத்திரம் எவ்வகைளானது என
அறிதல் முக்கியமாகின்றது. இந்த
அறிதல் பல பிரச்சினைகளை தீர்க்கவும், தனிமனிதர்கள் தமது
சமூகப் பாத்திரம் என்னவென அறிந்து அந்தச் சமூத்தின் அவலத்திற்கு எதிராக போராடவும்,
அமைப்புக்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும்.
முதலாளித்துவ வளர்ச்சியானது சமூகத்தில் இருக்கின்ற ஒரு
மனிதர் இன்னொரு மனிதர் மீது கொள்ளும் தார்மீகக் கடமையை இல்லாது போக்குகின்றது. பழைய சமூக உறவுகள் என்பன உடைகின்றது.
அதற்குப் பதிலாக புதிய பொருளாதார உற்பத்தி முறைக்கு ஏற்ப புதிய சமூக
உறவுகளை அறிமுகப்படுத்துகின்றது. புதிய சமூக உறவின்
அறிமுகப்படுத்தல் என்பது பொருளாதார கொள்கையை செயற்படுத்த ஊடகமாக இருக்கின்ற
அனைத்துத் துறைகள் மூலமாக ஒவ்வொரு தனிநபர்களும் அந்த பொருளாதார அமைப்பிற்கு இசைவாக
நடந்து கொள்ளும் படி திணிக்கின்றது. இந்த வகையில்
மேற்குலகில் இருக்கின்ற சமூக உறவு என்பது தனித்துவவாதச் சித்தாந்தத்தின்
அடிப்படையில் அமைந்ததே. இந்தச் சிந்தனையை அனைத்து சமூகப்
பிரிவினரிடையே புகுத்துவது அவசியமாகின்றது.
இந்த நிலை பொருளாதார முனைப்புடன் சம்பந்தப்பட்டதாகும். ஏகாதிபத்தியத்திற்கு முன்னைய தனிமனிதர்கள்
பொருளாதார முனைப்பில் ஈடுபட்ட போது இருந்த உறவானது கூட்டுச் சிந்தனையைக் கொண்டதாக
இருந்தது. ஆனால் இது உழைப்பாளிகள் சந்தையில் உழைப்பை
விற்கின்ற நிலமை தோன்றுகின்ற போது மற்றைய சமூக உறுப்பினரை கவனிக்கத் தேவையில்லை.
உழைப்பாளிகளை விடுதலை செய்ய வேண்டிய நிலை முதலாளித்துவத்திற்கு தேவை
இருந்தது.
தனித்துவவாதம் என்பது ஒரு சித்தாந்தப் போக்கு, தனித்துவம் என்பது தானே மையமெனக் கொண்டு
இயங்க வேண்டும் என்கிறது. மேற்கு தேசங்களில் உள்ள பொருளாதார,
சமூக அலகுகள் தனித்துவவாதத்திற்கான உத்தரவாதத்தினை வழக்குகின்றது.
இதனால் தனித்துவவாத உறவுகளிடையே (முதலாளித்துவ)
ஜனநாயகம் என்பது இருக்கின்றது. ஆனால் எமது
தேசங்களில் அல்லது புலம்பெயர் நம்மவரிடையே பயன்பாட்டு பெறுதிமதியை பெறும் வகையிலான
சமூக உறவுகளைக் கொண்டுள்ளது. இதனால் தனிமனிதர் தனது தேவையை
பூர்த்தி செய்ய முற்படுகின்ற போது எப்படி அவர்களால் மற்றைய சகமனிதருக்கு, மனிதத்துவத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு செயற்படமுடியாது. ஏகாதிபத்திய சமூக உறவு (தனித்துவவாதச் சிந்தனை)
சமூகமெங்கும் இருக்கின்றது. இது குறிப்பாக
இலங்கை போன்ற நாடுகளின் தனித்துவவாதச் சிந்தனை, சமூக உறவுப்
போக்கும் வளர்ச்சியடையவில்லை. தனித்துவவாத சிந்தனை முறையில்
அமைந்த அன்றாட வாழ்வியலுக்கும் அமைப்பின் கூட்டுச் செயற்பாடுகளுக்கும் இடையேயான
உறவை தவிர்த்துப் பார்க்க முடியாது.
தனித்துவவாதம்
உள்நாட்டுச் சரக்கா? அல்லது
மேலை சரக்கா என்பதில் கருத்து மோதல்களும் இடம் பெறலாம் ஆனால் இந்தச் சிந்தாந்தம்
குறிப்பிட்ட பொருளாதார நலனைக் கொண்ட போக்காகும். இங்கு ஆண்,
பெண் இருபாலரும் தனித்துவவாதத்தைக் கோருகின்ற நிலைதான் இங்கு இடம்
பெறுகின்றது. இங்கு நடைபெறுவது வடிவத்தில் மாறுபாடு
இருந்தாலும், தனிநபர்கள் தனித்துவவாதம் கோருவது
நடைபெறுகின்றது. எந்த வித தார்மீகக் கடமையில் இருந்தும்,
எந்தச் சச்சரவில் இருந்தும் தனிநபர்கள் விடுதலை கோருவதாகும்.
ஏகாதிபத்திய சமூக உறவினைப் சரியாக புரிந்து கொள்ளாது
வெவ்வேறு கோசங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த தனிநபர்கள் மீதான உரிமை நிலை இந்தச் சமுதாயத்தில் முழுமையாக
கிடைக்கக் கூடியதொன்றா என்பதில் முதலாளித்துவ, பாட்டாளி
வர்க்கச் சிந்தனையின் இடையே பெரிய வேறுபாடு இருக்கின்றன.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுப்பது
என்பது இன்றைய உலகில் சாத்தியமானதாக இருக்க முடியாது. எமது விருப்பங்களின் அடிப்படையில் அமைந்த
தேவைகள் என்பன பூர்த்தி செய்ய இந்தச் சமூக அமைப்பு இடம் தருவதில்லை. மனிதரின் உணர்வுகள் எதனையும் தீர்மானிப்பதில்லை மாறாக பொருளாதார அமைப்பின்
அமைந்த சித்தாந்தப் போக்கே தீர்மானிக்கின்றது. மனிதர்கள்
அவற்றின் விழைபொருள் மாத்திரம் அல்ல. “இப்பொழுது மனிதன் கூட
ஒரு பண்டம் தான், மனிதனை அடிமையாக்குவதன் மூலம் மனிதச்
சக்தியையும் பரிவர்த்தனை செய்யலாம், உபயோகப்படுத்திக்
கொள்ளலாம் என்ற “பேருண்மை”சீக்கிரத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டது. மனிதர்களே பரிவர்தனையில் இறங்கினார்களோ இல்லையோ மனிதர்களே பரிவர்த்தனை
செய்யப்பட்டார்கள். இயக்கியவனே இப்பொழுது
இயக்குவிக்கப்பட்டான். மனிதன் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் அது நடைபெற்றது.” (286 ஏங்கல்ஸ்-கு.த.அ.தோ.)
பாட்டாளி வர்க்கப் போராட்ட வரலாற்றில் தனிமனிதர்களின் பங்கு
அவர்களின் சாதனைகளும் முன்னிக்கின்றது. எனினும்
இச்சாதனைகளும் மக்களுடையை உணர்வு பூர்வமான பங்களிப்புடன் அவர்களின் சித்தாந்த
தெளிவுடன் அமைந்த வழிகாட்டல் என்பது புரட்சியின் வெற்றி கண்ட வரலாறுகள் பலவுள்ளது.
.
மனிதர் தனித்தே செயல்படுத்த வேண்டும் என்ற கட்டுக் கதைக்கு
முற்றுப்புள்ளி வைக்கமுடியும். தனித்துவவாதத்திற்கு எதிரான வாதத்திற்கு மார்க்ஸ் ரொபின்சன் குருசோ என்ற
கற்பனைக் கதையை உதாரணங்காட்டி தனிமனிதர்கள் தனித்து வாழமுடியாது என்றும், தனிமனிதனின் செயற்பாட்டினால் மொழி உருவாக முடியாது எனவும் கூறுகின்றார்.
“வரலாற்றுப் போக்கை நாம் எவ்வளவு
பின்னே சென்று ஆராய்ந்தாலும் தனிநபர், அதிலும் உற்பத்தியாளரான தனிநபர் அந்த அளவுக்கு அதிகமான பெருங்குழு ஒன்றைச்
சேர்ந்தவராகவும் அதை நம்பியிருப்பவராகவும் இருப்பதைப் பார்க்கிறோம். முதலில் தனிநபர் இன்னும் இயற்கையான வகையில் குடும்பத்தின் ஒரு
பகுதியாகவும் அந்தக் குடும்பத்திலிருந்து பரிணமித்த இனக்குழுவின் ஒரு பகுதியாகவும்
இருக்கிறார். பிறகு அவர் சமூகத்தின் ஒரு பகுதியாகிறார்-
இனக்குழுக்களின் மோதல்களிலும் இணைப்பிலும் உருவாகிய சமூகத்தின்
பல்வேறு வடிவங்களில் ஒன்றில் ஒரு பகுதியாகின்றார். சிவில்
சமூகத்தில் சமூக இழையமைப்பின் பல்வேறு வடிவங்களும் ஒரு தனிநபருக்கு முன்பு அவருடைய
தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றக் கொள்ளும் சாதனங்களாக, அந்நியத்
தேவையாக எதிர்ப்படுவதென்பது பதினெட்டாம் நூற்றாண்டில்லேயே ஏற்படுகின்றது. ஆனால் இந்த கருத்து நிலையை, அதாவது தன்னந் தனியான
நபர் என்ற கருத்து நிலையை ஏற்படுத்தும் சகாப்தம் உண்மையில் மிக அதிகமான (அதுவரை) வளர்ச்சி அடைந்து சமூக (இந்த கருத்து நிலைப்படி பொது) பொது உறவுகளின்
சகாப்தமாகும். மனிதன் சமூகப் பிராணி (zoon politikon அரிஸ்ரோட்டில்) என்பது அதிகமான அளவிற்கு செல்லிற்குச் சொல்
சரியானதாகும்.
அவன் சமூகப் பிராணி என்பது மட்டும் அல்ல, சமூகத்துக்குள்ளாக மட்டுமே
தனிநபராக்கப்படக் கூடிய பிராணியாகும். சமூகத்திற்கு வெளியே
தன்னந் தனியான தனிநபர் உற்பத்தி செய்வது - சுறுசுறுப்பான
சமூகச் சக்திகளைப் புரிந்து கொண்ட ஒரு நாகரிகமடைந்த மனிதன் தற்செயலாக ஒரு
பாலைவனத்திலே விழுந்து விடகின்ற பொழுது இந்த அபூர்வமான சம்பவம் நடைபெறலாம்-
சேர்ந்து வாழ்ந்து கூடிப்பேசும் தனிநபர்கள் இல்லாமல் பேச்சு
வளர்ச்சி அடையும் என்பதைப் போலவே அபத்தமானதாகும். இந்தக்
கருத்தை மேலும் விரித்துரைப்பது அவசியமற்றதாகும்.” (மார்க்ஸ்
288 அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை)
இந்தப் பகுதியில் தனிமனிதர்கள் சமூகத்தின் ஒரு பகுதியாகவும்,
பொருளாதார முனைப்புக்கள் பற்றியும் இங்கே காணமுடிகின்றது.
தனித்துவவாதத்தைக் கோருவது, தனிமனித விருப்பத்தை முன்நிறுத்துவது போராட்ட அமைப்பிடையே
காணப்படுகின்றது. உறுப்பினர் கட்சியில் பணிந்து நடப்பதையும்
சனநாயக- மத்தியத்துவத்தை மறுப்பவர்களாகின்றனர். இந்தப் போக்கானது அமைப்பிடையே அராஜகத்தை வளர்த்து விடுகிறது. அராஜகவாதமானது (Anarchism) மத்தியப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பை கொண்ட தலைமையை, அரச அதிகாரத்தை எதிர்க்கின்றது. அதற்கு மாறாக ஒழுக்கமைக்கப்படாத தன்னிச்சைப் போக்கை பாதையை
முன்வைக்கின்றது. அதேவேளை அமைப்பிடையே தாராளவாதம் என்பது
எவ்வகையான பாதிப்பை கொண்டுவருகிறது எனப்பார்ப்போம். “ஒரு
புரட்சிகரக் கூட்டுறவில் தாராளவாதம் என்பது தீங்கு விளைவிக்கும் ஒன்று அது
ஐக்கியத்தை அரித்துத் தின்னுகின்ற ஒன்றினைப்பினைச் சீர்குலைக்கின்ற, வேலையில் பாராமுகத்தை உண்டாக்கின்ற, வேற்றமையை
விதைக்கின்ற ஒரு நச்சுத்திரவம். அது புரட்சிகர அணிகளில் உள்ள
கட்டுக் கோப்பான ஸ்தாபன அமைப்பையும், கண்டிப்பான
கட்டுப்பாட்டையும் அழித்து விடுகின்றது. கொள்கைகள் பூரணமாய்
அமுல் நடத்தப்படுவதை அது தடுக்கிறது. கட்சியின் தலைமையில்
உள்ள மக்களிடைம் இருந்து கட்சி ஸ்தாபனங்களைப் பிரித்து விடுகிறது. இது மிகத்தீய்மையான ஒரு போக்காகும்.
தாராளவாதிகள் மார்க்சிசக் கோட்பாடுகளை வெறும் வரட்டுத்
தத்துவமாகக் கருதுகின்றனர். அவர்கள்
மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர், ஆனால் அதை அனுஷ்டிக்க
அல்லது பூரணமாக அனுஷ்டிக்கத் தயாராக இல்லை. தமது
தாராளவாதத்துக்குப் பதிலாக, அதன் இடத்தில் மார்க்சியத்தை
வைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. இந்த நபர்களிடம்
மார்க்சிசம் இருக்கும் அதேவேளையில், தாராளவாதமும் இருக்கிறது.
அவர்கள் மார்க்சிசம் பேசுகின்றனர். ஆனால்
தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு
மார்க்சிசத்தையும் தமக்குத் தாராளவாத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்து, இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித் தான்
சில நபர்களின் மூளை வேலை செய்கின்றன.” (மாவோ- ப354-5 மாவோ மேற்கோள்கள்) தாராளவாதச்
சிந்தனையை தாம் கொண்டுள்ளதாக தனித்துவவாதத்தை கோருபவர்கள் சில வேளைகளில்
உணர்வதில்லை. மாறாக புறச்சூழலின் தாக்குதலானது
இவர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தனித்துவவாதம் முதலில் கேள்வி ஞானத்தின் அடிப்படையில்
இலங்கை, இந்திய தேசங்களில் நுழைக்கின்றது. பின்னரே இது பொருளாதார வளர்ச்சியை எட்டியவுடன் கருத்துருவமும், அமைப்புருவமும் பெறுகின்றது. எமது தேசங்களில் தனித்துவவாதச் சிந்தனை முற்று முழுதாக
சென்றடையவில்லை. ஆனால் எமது தேசங்களில் தாராளவாதச் சிந்தனையின் பாதிப்பு இருக்கத்தான்
செய்கின்றது. அது முதலாளித்துவ சித்தாந்த நீரோட்டத்தின் தாக்குதல் என்ற நிலையில்
அனைத்துச் சமூகப் பிரிவுகளிடையே ஏற்படும் தாக்குதல் என்ற நிலையில் உள்ளது. ஆனால் இது முற்று முழுதாக பொருளாதார வளர்ச்சி அடைந்து, அந்த பொருளாதார நலனுக்கு ஏற்றவாறான வீச்சு இதனிடம் இருக்கவில்லை. ஆனால் கலாசாலையை பின்புலமாக கொண்டவர்கள் மத்தியில் இச் சிந்தனை உள்ளது.
இவர்களிடத்தில் இருந்து தாராளவாதச் சிந்தனை வெளிப்படுவதைக்
காணமுடியும். எமது தேசங்களிலே படித்தவரிடையே தனித்துவவாதச்
சிந்தனை தோன்ற இடமிருக்கின்றது. ஆனால் இவர்கள் கடமையுணர்ச்சி முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்டவர்கள்
என்ற காரணத்தால் மேற்கு தேசங்களில் இருக்கின்ற நிலை போன்று தனித்துவவாதிகளாக
இவர்களால் இருக்க முடியாது.
தனித்துவவாதிகள் தமது அறிவை சக்தியாக மாறுகின்றனர். இவர்கள் சாதாரணமாக அமைப்புக்களில் இருந்து
செயற்பட தயங்குபவர்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது
அவற்றை பயன்படுத்திக் கொள்ள முனைவர். இவர்களின் வர்க்கம்
வெளிப்படுத்தும் அறிவை வரையறுத்துக் கொள்ளவும் வேண்டியிருக்கின்றது. அறிவினை எல்லா மக்களும் கொண்டுள்ளனர், ஒவ்வொரு வரும்
அவரவர் வட்டத்தினுள் திறமையுடையவர்கள் அறிவு பற்றிய அளவுகோளில் பட்டப்படிப்பினால்
பெறும் அறிவினைக் கொண்டு அளவிடக் கூடாது. ஆனால் இங்கு
குறிப்பிடுவது படித்தவர்கள் தாம் கொண்ட அறிவைக் கொண்டு மற்றைய மனிதர்களை தமது
தேவைகளுக்காக பயன்படுத்துவதும், அதன் பின்னர் தூக்கி எறியும்
நிலையைப் பற்றியே குறிப்பிடப்படுகிறது. இந்தப் பிரிவினர்
தமது மேதாவிலாசத்தைக் கொண்டு மக்களை, சக உறுப்பினர்களை தமது
விருப்பத்திற்கு அமைய கொண்டு வரமுயற்சிக்கின்றனர். குட்டி
முதலாளிய அறிவுஜீவிகள் அங்கம் வகிக்கும் அமைப்புக்களில் தன்னாதிக்கத்தை
மேற்கொள்கின்றனர். அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள்
புத்தகங்களை எழுதி விடுவதன் மூலம் தமது கடமை முடிந்து விட்டதாக நிலைத்துக்
கொள்வதும், படித்துப் பெற்ற அறிவைக் கொண்ட விமர்சன முறைகள்
கொண்டு இயங்கின்ற நபர்கள் அமைப்பு வடிவம் எடுப்பதில் பின்வாங்குகின்றனர். இவர்களே அமைப்பில் சனநாயகம் மறுக்கப்படுவதாகவும், தனிமனிதனின்
வளர்ச்சியை மார்க்சியம் அக்கறை கொள்ளவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.
தனித்துவவாதத்தினை அமைப்பினுள் அனுமதிக்கும் படி கோருகின்ற
மார்க்சிய அறிவு என்பது கூட தனித்துவவாத சிந்தனை வட்டத்தினுள் இருந்தே
கற்கப்படுகின்றது. அதாவது
அரைநிலப்பிரபுத்துவச் சிந்தனையில் சமூகமயப்பட்டுத் தான் நாம் மார்க்சியத்தினை
கற்றுக் கொள்கின்றோம். புதிய சிந்தனையை கற்றுக் கொள்கின்ற
போது நமக்கு அன்னியான ஒரு புதிய வாழ்க்கை முறையை கற்றுக் கொள்கின்ற போது பழைய
எச்சங்களையும் கொண்டிருப்பதை வரலாறு எங்கும்
கண்டுகொள்ள முடியும். இது தனிமனித உணர்வை
முதன்மைப்படுத்திய கலைஇலக்கிய படைப்புக்களும் இவற்றிற்கு விதிவிலக்கல்ல.
தனிமனித சிந்தனைப் போக்கினை இலக்கிய, ஆய்வுகளின் முன்வைக்கப்படுகின்றது. “வரலாற்றாசிரியனின்
சிந்தனை என்பது வேறு எதனையும் சாந்திராமல் தன்னைத்தானே சார்ந்த சுயமாக இயங்கும்
மனித அறிவின் ஒரு செயற்பாடாகும்.” என்றும் “வரலாற்றாசிரியன்
படைப்பாற்றல் மிக்க கற்பனையில் திளைக்கிறான். எனவே தான்
வரலாறு தொடர்பாக நூல்களின் தரத்தை நிர்ணயிப்பதில் வரலாற்றாசிரியனின் மனநிலை பெரும்
பங்கு வகிக்கிறது. (நீலகண்ட சாஸ்திரி, பக்
120 ஆய்வுவட்டக் கட்டுரைகள் வெளியீடு 5) வரலாறு என்பது தனிமனிதரின்
செயற்பாட்டின் விளைபொருள் அல்ல. அது ஒரு மக்கள் குழுமத்தின்
கூட்டுச் செயற்பாடு. தனிமனிதர்கள் விம்பமாக தோற்றம்
பெற்றாலும் பெரும் மக்கள் கூட்டத்தின் அசைவியக்கம் என்பது முக்கியமானதாகும்.
பொருளாதார அமைப்பின் அழுத்தம் (தேவை) காரணமாக சமூக
உறவை சிதைய வைக்கின்றது. ஏனெனில் உதிர்ந்த நிலையில்
இருக்கின்ற (உறவுகளின் மீது அதிகம் பிடிப்பு இல்லாத) தொழிலாளர்களை சந்தைக்கு வரநிர்ப்பந்திக்கின்றது. சமூக
அமைப்புக் காரணமாக மனித சமுதாயத்தின் மீது திணிக்கப்படும் சமூக உறவானது. பின்னர் அந்த போக்கிற்கு அமையவே சமூக உறவுகளிவும் ஈடுபடுகின்றனர். இந்தப் பொருளாதார அமைப்பினால் உருவாக்கப்படும் சமூக உறுப்பினர்கள்
ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ அந்தச் சிந்தாந்தத்தின் போக்கின் படியே
நடக்கின்றனர். இந்த போக்கானது தனிநபரிடையே அதியுயர்
நுகர்வின் தாகத்தை வளர்க்கின்றது.
மேலைத் தேசங்களில் உருவாக்கப்படும் தனிநபர்கள் அதியுயர்
நுகர்வு சித்தாந்தப் போக்கினுள் வளர்வதால் இவர்களுடைய மார்க்சிய புரிதல் என்பது
அந்தச் தாராளவாதச் சித்தாந்தத்திற்குள் உட்பட்டதாவே இருக்கின்றது. இந்த சமூகத்தின் உறுப்பினரிடையே முழுமையான
மார்க்சீயப் புரிதலை உடனடியாக எதிர்பார்ப்பது முடியாது. இதே
போலவே எம்மவர்களின் மார்க்சீயப் புரிதலும் எமது உழுத்துப் போன சமூக எச்சத்தின்
சிந்தனையில் இருந்து கொண்ட புரிதலே.
இவர்கள் தமது விருப்பு வெறுப்புக்கு முதலில் முதன்மை
கொடுப்பவர்களாகவும், புற
உலகத்தின் நிலையை அறிய விருப்பம் கொள்பவர்களாவும், தமது
அலுவல்கள் முடிந்த பின்னரே பொது விடயங்கள் என்ற நிலையை உருவாக்குவர். இந்தப் பிரிவினர் அமைப்புக்களிடையே அதீத சனநாயகத்தைக் கோருவர். இச்சிந்தனையின் விழைவாக இவர்களிடத்தில் கூட்டுச் சிந்தனையை எதிர்பார்பதும்,
இந்தச் தனித்துவவாத சிந்தனையின் கீழ் செயற்படுபவர்கள் மனிதரைப் பாவிப்பதும்
விடுவதுமாக உள்ள நிலையினால் இவர்கள் மத்தியில் இருந்து தோழமை உறவை எதிர்பார்ப்பது
சிரமாகின்றது.
மார்க்சியம் கட்டமைப்பில் கவனம் செலுத்துவதில் மாத்திரம்
தன்னைக் குறுக்கிக் கொண்டதன் காரணமாக தனிநபர் சுதந்திரம் மறுக்கப்படுவதால்
பாட்டாளி வர்க்கக் கட்சியானது தனது உறுப்பினருக்கு சனநாயகத்தை வழங்குவதில்
பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இவை மாத்திரமல்ல கட்டமைப்பிற்குப் பலியாகி விட்டார்கள் அல்லது
மார்க்சியம் தன்னைக் குறுக்கி விட்டது எனப்பரவலாக கருத்து இருக்கின்றது. ஏனெனில் மார்க்சியமானது ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்
என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை என்பதை மீண்டும்
வலியுறுத்தி தனது உறுப்பினர்களை அதன் படி நடக்க கோருவதும் முக்கிய காரணமாகும்.
மனிதர் தன்னால் படைக்கப்பட்டதற்கே அவர்களே அடிமையாகிப்
போனார்கள் அவர்கள் மீது சமூக் கட்டுமானம் எவ்வாறு அழுத்தத்தைக் கொடுக்கின்றது
என்பதை இங்கே பல இடங்களில் பார்க்கமுடியும். இன்றைய காலகட்டத்தில் இடம்பெறுவது என்னவெனில் மேற்குலகத்தில் நடைமுறைப்
படுத்தப்படும் பாணியிலான கலாச்சாரங்கள், சனநாயக உரிமையை
வேண்டி நிற்பதோடு நிறுத்துவது மாத்திரம் அல்ல. அதனை அப்படியே
பிரதியிடும் போக்கைக் காணக் கூடியதாக உள்ளது. இப்போக்கானது உலகத்தின் அனைத்தும் பகுதிகளையும் ஒரே குடையின்
கொண்டு வரும் போக்கிலான ஏகாதிபத்தியங்களின் செயற்பாடுகளுக்கும், சுரண்டலை விஸ்தரிப்பதற்கான செயற்பாடுகளுக்கு சுரண்டப்படும் தேசங்கள் தம்மை
இசைவுபடுத்தும் போக்கே நிகழ்வதைத் தவிர எவ்விதமாறுதலும் இதன் காரணமாக ஏற்படலில்லை.
ஆனால் முதலாளித்துவ போக்கிலான மாற்றத் தீர்வானது பாட்டாளி வர்க்கத்
தலைமையிலான புரட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும் மாற்றுக் கலாச்சாரம், சனநாயகமாகத் தான் இருக்க வேண்டும். தனித்துவத்தின்
சிந்தனையின் அடிப்படையில் தனித்துவத்தைக் கோருகின்ற போக்கு அடிப்படையில் இரண்டு
வித சமுதாயத்திலும் மாறுபாடு இருக்கின்றது.
மேற்கினை விட மற்றைய தேசங்களின் பொருளாதார வளர்ச்சியில்
இருந்து மாறுபட்ட சிந்தனைப் போக்கினை வெளிப்படுகின்றது. மேற்குநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடையே எவ்வகையாக மாற்றம்
இடம்பெறுகின்றது எனப்பார்த்தோம். தனித்துவவாதத்தினை
முன்னிலைப்படுத்தக் கூடிய சமூக உறவு வளர்ச்சியடைந்த தேசத்திலேயே சாத்தியம்.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் தனித்துவவாதம் என்பது சுயநலம் சார்ந்த
உறவுகளைத் தாண்டி மேற்கு தேசங்களில் இருப்பது போல இருக்க முடியாது. முன்பிருந்த கடமைப்பாடுகள் முற்றாக அழிந்து போவதில்லை (முதலாளித்துவ சமுதாயத்தில்) அவைகள் அற்றுப் போக
வேண்டிய தேவையுள்ளது. முன்பிருந்த கடமை உணர்ச்சிகள், பொறுப்புகள், உதறித் தள்ள வேண்டியது
முக்கியமாகின்றது. இந்நிலையில் தனிநபர்கள் தம்மீது செலுத்தப்
படுகின்ற சமூகக் கோட்பாடுகளை, சாத்திர சம்பிரதாயங்களை உதறித்
தள்ள வேண்டிய நிலையில் அதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். இந்த
சமூக எச்சங்களில் இருந்து விடுதலை கோரிப் போராடுகின்றனர். ஆண்,
பெண் என்ற தனிநபர்களுக்கான சனநாயகக் கோரிக்கைகள் என்ற நிலையை
அடைகின்றது. ஆண், பெண்ணிற்கான
தனிமனிதர்களின் உரிமைக் கோரிக்கைகள் எழும்புகின்றது.
தனித்துவவாதச் சிந்தனைத் தோற்றும் பற்றி பின்புலத்தினை
அறிந்து கொள்வதன் ஊடாகவே தற்காலத்தில் பன்முக அணுகுமுறைச் சிந்தனைகளின் ஒரு
பகுதியைப் புரிந்து கொள்ள முடியும். தனித்துவவாதச் சிந்தனை என்பது தவிர்க்க முடியாத சமூக உறவு சார்ந்து
விரிந்துள்ளதையும் மறுக்க முடியாது.
உளவியல்
கோட்பாடு
அன்றாட வாழ்க்கையில் உளவியல் பிரச்சனைகளை தவிர்த்துவிட்டுச்
செல்லமுடியாது. தனிமனிதர்களின் உளவியல் பெரும்
சோகத்தை சமூகத்திற்கு தரவல்லது. அதேபோல சமூகத்தின் உளவியல்
என்பதும் பெரும் தாக்கத்தை தரும். நாம் உளவியல் பற்றிய
தீண்டத்தகாக முறையில் பார்க்கும் பார்வை என்பது சமூகத்திற்கு தீங்கு
விளைவிக்கின்றது. இதன் பொருள் உளவியல் திணைக்களம் என்பது
நோயாளிக்கும் அவர்களின் உளவியல் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு நிறுவனம்
அவசியமானதாகும். உளவியல் பிரச்சனை எமது சமூகத்தில்
அங்கீகரிக்கப்படாத ஒரு துறையாகவே இருக்கின்றது.
உளவியல் திணைக்களம் என்பது இந்தக் இன்றைய சமூகக்
கட்டமைப்பில் அவசியமானதாகவும் இருக்கின்றது. ஆனால் அரசியல் மனிதர்களாகவும் இருக்கின்ற வேளையில் உளவியல் மனிதர்களின்
கருத்தியல் என்பது பொதுவுண்மையான்தான (சர்வப் பொதுவாதையாக (universal) கொண்டு சமூகத் தளத்திற்கு கொண்டு
வருவது பல எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றது. தனிமனிதர்களின் அனுபவம் என்பது பொதுமையாக்குவது மார்க்சிய அணுகுமுறை அன்று.
அரசியல் மனிதர்களை உளவியல் மனிதர்களாக இனம்காணவைத்து தனிமனிதர்களை
நோக்கும் நிலையை நாம் ஒரு அரசியல் இயந்திரத்தின் ஊடாக கண்டுள்ளோம்.
தனிமனிதர்களின் நடைமுறை, தத்துவத் தோல்வியை அல்லது இணைந்து போகமுடியாத தனிமனிதப் பலவீனத்தை சமூகப்
பொது உண்மையாக்கி பிரதியிடப்படுகின்றது. இதுதான் தன்னிலையை
மையமாகக் கொண்ட அறிதல் அணுகுமுறை சார்ந்ததாகும். தம்மைச்
சுற்றிய குழுக்களை உருவாக்கிக் கொள்வதும், கருத்துமுதல்வாத
சிந்தனையை (மற்றைய கோட்பாடுகளை) ஒரு
குறிப்பிட்ட நிலவரம் தொடர்பான விடயங்களில் பயன்படுத்துகின்ற நடைமுறையில் அறிந்து
கொள்ள முடிகின்றது.
தனிமனிதர்களின் நடைமுறை, தத்துவத்தின் தோல்வியை அல்லது இணைந்து போக முடியாத தனிமனிதப்பலயீனத்தை
சமூக பொது உண்மையாக்கி பிரதியிடுகின்றனர். இது தன்னிலையை
மையமாகக் கொண்ட அறிதல்- அணுகுமுறை சார்ந்ததாகும். மார்க்சீயத்திற்கு மாற்றான அணுகுமுறையை
சமூகத்தளத்தில் வைப்பது
புரட்சிகர அரசியல் தளத்தில் வைப்பது
அகநிலைவாதத்தினை முன்னிறுத்துகின்ற கோட்பாடுகளை பல்வேறு
பெயர்களில் முன்வைக்கப்படுகின்றது. ஒன்றோடொன்று தொடர்புடையாத இருக்கின்றது. எனவே இங்கு
முன்னைய ஆய்வாளர்களின் கருத்துக்களை அதிகமாக நேடியாகவே முழுமையாக தரப்படுகின்றது.
மார்க்சிம் கோர்க்கி “ஒரு நீதி நெறிக்கொள்கையை உருவாக்கி, ஒருவரையொருவர் கடித்துக் தின்பதற்கு வெறிகொண்ட இவர்கள் முயன்றனர், கூர்மையான தன்னுணர்வும், தன்னோக்குமுடையவர்கள்
தங்களைப் போன்றே அடுத்தவர்கள் இருந்தால் பொறாமையும், பகைமையும்
கொண்டனர். மனித உறவுகளில் ஒருவர் மற்றொருவர் மீது
பொறாமையையும் கமைமையும் கொண்டனர். மனித உறவுகளில், ஒருவர் மற்றொருவர் மீது பொறாமையும், சந்தேகமும்
கொள்வது சாதாரண நிலைமையாயிற்று. உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுதல் கால வழக்கமாயிற்று. நல்ல உடல்நலமுள்ளவர்கள் இரண்டு
மாதத்தில் பித்துக்குளிகளாகவும் சித்தவிகாரமுள்ளவர்களாகவும் ஆயினர். “ மேலும் மார்க்சிம் கோர்க்கி கூறுகின்றார். “ நமது
அறிவாளிகளின் “தனி மனத் சுதந்திர உணர்வு” சித்தப் பிரமைக்கும்
முழுப்பைத்தியத்திற்கும் அவர்களை ஆளாக்கியது. இவ்வாறு
“தனிமனிதம்” என்ற கொள்கையுடையவர்களது உள்ளங்கள் ஒடிந்து, மனம்
குழம்பி உயர்வு எண்ணங்கள் குன்றி பள்ளத்தில் வீழ்ந்து விட்டனர். இவர்கள் மனநோயால் பீடிக்கப்பட்டு உளறுகின்றார்கள். தங்கள்
மீது கழிவிரக்கம் கொண்டு கதறுகின்றார்கள். தங்கள் மீது
பிறரும் இரக்கம் காட்டவேண்டும் என்று
உரக்கக் கூவுகின்றார்கள்.
ஆம்! இவர்கள்
தான் தங்களைத் தாங்கள் காதலித்தவர்கள். பிறரைக் காதலிக்கத்
தெரியாதவர்கள். இன்று இவர்களுக்கு பிறர் அனுதாபம் தேவையாம்.
மனிதர் கூட்டத்தை மந்தையென்றும் கேலி செய்தவர்களுக்கு, இம்மந்தையின் இரக்கம் வேண்டுமாம்.
சிறுமுதலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவாளிகள் நிலை இதுவாக
பெரும்முதலாளிகள், தமக்கெதிராகத் திரண்டு வரும் மக்கள்
கூட்டத்தையும், அதன் தலைமையில் நிற்கும் தொழிலாளி
வர்க்கத்தையும் கண்டு அஞ்சி நடுங்கிப் புலம்பினர். தைரியமாக
இருப்பதாகக் காட்டிக் கொள்ளுவதற்காக போலி வீரவாசகங்கள் பேசினர். அதனோடு தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்களையும் திரட்டிக் கொண்டனர்.”
ஏகபோகங்கள் வளர்ச்சியுற்று, மேல்தர வர்க்கங்களின் மக்கள் உள்ளத்தில் பயமும், உறுதித் தளர்ச்சியும் ஏற்பட்ட காலத்தில், நரம்பு
வியாதிகளும், சித்தக் கோளாறுகளும் அதிகரிக்கபட்டன.”
“தனிமனிதம்” (Inidividualism) என்ற கொள்கையில் ஊறிய ஃபிராய்டு, சமூகத்திலிருந்தும்
உற்பத்தி வளர்ச்சிப் போக்குகள் தோற்றுவித்த மனித உறவு நிலைகளினின்றும் மனிதனைப்
பிரித்து, மனிதனுடைய உள்ளத்தை தோண்டிப் பார்த்தது இயற்கைதான்.
விஞ்ஞானத்திற்கு பொதுவான விதிகளைப், ஆய்வு முறைகளையும், ஆய்வுமுறைகளையும்
கைவிட்டு, அகவயமான கற்பனை முறைகளை கையாண்டு தமது கொள்கைகளை
உருவாக்கினார்.
சமூக இயலுக்கும், வரவாற்றிற்கும் இக்கொள்கையை அடிப்படையாகக் கொள்ளும் பொழுது, சமூகத்தை ஒதுக்கி, மனித நடத்தையை “காம்ப்ளெக்ஸ்” அடிப்படையில்
ஆராய்வதாகச் சுருங்கிவிடும். இக்கொள்கையின் படி மனித
இயக்கமும் சமூக இயக்கமும் அடக்கப்பட்ட ஆசைகளின் தொகுப்பான “ஆழ்உணர்வின்” வீலைகளே.
இக்கொள்கையில் மனித நடத்தைக் கெல்லாம் காரணம் மனித நடத்தைத்
கெல்லாம் காரணம் “ஆழ்உணர்வு” அல்லது (sexual energy) என்பதற்குப் பெரும் எதிர்ப்புத் தோன்றிய பின் ஃபிராய்டின்
சீடர்கள், அடிப்படை அதுவாயினும், அவ்வுணர்ச்சிக்குப் பல வாய்க்கால்கள் உண்டென்றும், “அறிவு
ஆசை” ஆதிக்க ஆசை”, முக்கியன அதில் சேர்க்கப்பட வேண்டுமெனவும்
கூறினர். இவருடைய முக்கிய சீடர்கள் ஆட்லர், ஜங் முதலியவர்கள், நவீன ஃபிராய்டிஸம், அடிப்படைக் கொள்கைகளை ஒப்புக் கொண்டே இன்ப நுகர்வு ஆசை “இணை விழைச்சு (sex)
மட்டுமல்லவென்றும் பிற ஆசைகளும் அதனுள் அடங்குமெனவும் கூறுவர்
இவர்கள் ஆய்வு முறையிலும் அதீத கற்பனை நீக்கி மட்டுப்படுத்தினர்.
ஆயினும் சமூக நிகழ்ச்சிகளுக்கும், வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் (subconscious) ஆழ் உணர்வுதான் காரணம் என்பதை
இவர்கள் ஏற்றுக் கொள்ளுவர் (பக்கம்
153-5 நா. வானமாமலை ஆய்வு வட்ட
வெளியீடு 4)
இங்கு பால்லுணர்வு, அகமனித உணர்வளின் அடிப்படையில் செயல்படும் அணுமுறையை உளவியல் சேவை
திணைக்களத்திற்கு அப்பால் சமூக ஆய்வுத் தளத்துக்கு நகர்த்தப்பட்டதை கவனத்தில்
கொள்ளமுடிகின்றது. தனிமனிதப் போக்கைக் கொண்ட சமூக வளர்ச்சியினை
100 வருடங்களுக்கு முன்னரே தோழர் கோர்க்கி
வெளிப்படுத்துவதையும் கவனத்தில் கொள்வது தகும்.
தனிமனிதர்கள் மாற்றம் என்பது ஒருவகையில் அவர்களின் அகமனத்
தேவைகளை பூர்த்தி செய்கின்ற ஒன்றாக இருந்திருக்கின்றது. தனித்துவவாதம், சுதந்திரமான
புணர்ச்சி என முன்னிலையில் நிறுத்திய 1990களின் தமிழ்
பெண்ணியம். மேற்கத்தைய சமூகம் கொடுக்கின்ற சமூகப் பாதுகாப்பு,
தனித்துவம் (privacy) என்பவைகள் கிடைத்த காரணத்தினால் இவர்களினால் முற்போக்கு
சக்திகளிடையே உபகலாச்சாரத்தினை ஏற்படுத்த முடிந்தது. உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றி மாற்றம் கொள்ள வைப்பதன் ஊடாகத்
தான் உண்மையான பெண்விடுதலை கிடைக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு எதிராக முதலாளித்துவ
ஜனநாயகக் கோரிக்கைகளையே பெண்விடுதலைக்கான இலக்காகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு சென்றவர்கள் கூட்டுக் கலவியிலும் ஈடுபட்டார்கள். இங்கு கூட ஒரு மாற்றம் அடைந்திருக்கின்றது. அந்த
மாற்றம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க முடியவில்லை. இவர்கள்
பழைய சமூக அமைப்பிற்குள் பெரும்பான்மையானவர்கள் உள்ளடக்கப்பட்டார்கள். இவர்கள் கொண்ட மாற்றம் என்ன? இவ்வாறான மாற்றங்கள்
எவ்வகையாக இருக்கப்பட வேண்டும்? மாற்றங்கள் இந்தச்
சமூகத்தில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது?
ஆனால் தனித்துவமான அன்றாடச் சீவியத்தில் இருந்து மட்டும்
பார்க்கின்ற போது மனித வாழ்க்கையே ஓடும் புளியம்பழமும் போல உறவுகள் உதிர்ந்து
செல்கின்றது. தனித்துவவாத
வாழ்க்கையை சீவியத்திற்கான அணுகுமுறையை பின்பற்றிக் கொண்டிருக்கும் போது உறவுகளின்
சிதைவு தவிர்க்க முடியாது போகின்றது.
மனிதர்களின் உணர்வுகள் என்பது ஒரு பொருளாதாரத்தின்
வெளிப்பாடுகளாகத் தான் இருக்க முடியும்.
’உணர்வு அறிவு (Cognition) சமுதாய உறவுகள்
ஆகியவற்றின் ஒவ்வொரு காலகட்டமும் தத்தம் காலத்தையும் நிலைமைகளையும் வைத்து நியாயம்
பெறுகின்றது. ஆனால், அதற்கு மேல் அது
போவதில்லை. இந்தக் கண்ணோட்ட முறையினுடைய பழைமைத் தன்மை
சார்புடையது.’’ (ப. 17 லுத்விக்ஃபாயர்பாகும்
மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்- ஏங்கெல்ஸ்)
உளவியல் கோட்டுபாடு அரசியல் பொருளாதார அமைப்பை விளங்க
வைக்கும் தத்துவமாக கொள்ள முடியும் என்பது தவறானதாகும். மனிதர்களின் உளவியல், நடத்தைகள் என்பதை பெருமனித உளவியல் கோட்பாடுகளை முன்வைத்த பெரும் அறிவாளி
என்பது மறுக்கமுடியாது. மனிதர்களின் உளவியல், நடத்தைகள் என்பதை இந்த சமூக அமைப்பின் வெளிப்பாடுகளினால் ஏற்படும்
அனர்த்தங்களேயன்றி தனிமனிதர்களின் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள் அல்ல. இவ்வாறே உலகில் ஏற்படும் யுத்தங்களுமாகும். ஃப்ரொய்டி (Freud) “யுத்தம் இயற்கையான ஒன்றாகவே எனக்குப்படுகிறது. ஏனெனில் ஆக்கிரமிப்பு எண்ணமும்
அழிக்கும் எண்ணமும் ஒவ்வொரு மனிதன்
உள்ளத்திலும் எப்பொழுதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. மனித
வாழ்க்கையை அழித்துப் பழைய அசேதன நிலைக்கே மாற்றி விட அது முனைகிறது. எனவே போர் இயல்பானது தான்” (ப.16 வெ. கிருஸ்ணமூர்த்தி வெளியீடு 5) இது மார்க்சின் மனிதர்களின் உணர்வுகள் தீர்மானிப்பதில்லை என்பதற்கு
எதிர்க்கருத்தாகும். யுத்தங்கள் ஏகாதிபத்தியம் சந்தைக்கான
போட்டியில் இறங்குகின்ற போட்டியாளர்களுக்கு இடையேயான முரண்பாடுகளினால்
ஏற்படுகின்றது என்பதை உளவியல் கோட்பாடு விளக்க முடிவதில்லை. இந்த
போட்டியாளர் உள்ளுர் தேசிய முதலாளியாகவோ அல்லது போட்டி ஏகாதிபத்தியங்களாகவோ இருக்க
முடியும்;. இவர்களுக்கு இடையேயான சந்தைக்கான மோதல்கள்
எப்பவும் இடம்பெற்றிக் கொண்டிருக்கும் யுத்தமாகும். இது
கட்புலனாகாவும், கட்புலனற்றதாகவும் இருக்கின்றது.
உளவியலா- அரசியல் அறக்கோபமா
அரசியல் பொருளாதார பார்வையை விட்டு
அதிலிருந்து உளவியல் ரீதியான கோட்பாடுகளை முன்னிறுத்தும் போக்கினை காணமுடிகின்றது.
இயங்கியல், வரலாற்று, வர்க்கப் போராட்ட அம்சங்களை தவிர்த்துவிட்டு உளவியல்
கோட்பாடுகளின் (உதாரணத்திற்கு இவ்வாறான உளவியல் நோய்க்கூறுகளான செலக்டிவ்
அம்னீசியா ஒருவகை மறதிநோய், Isonomia disease
அரசியல்
ரீதியாக மனிதரை புறந்தள்ளவும்) ஊடாக சமூகத்தை பார்க்கும் பார்வையை மார்க்சியமாக
சமூகமயப்படுத்துகின்றனர்.
உளவியல் கோட்பாடுகளை அரசியல்
தளத்தில் பயன்படுத்துவது போலவே அரச இயந்திரத் தரப்பில் இருந்தும் கூட்டு உளவியலை
மாற்றுகின்ற போக்குடன் அரசியல் உணர்வை புனரமைப்பு என்றஅடிப்படையில் இயங்க
முடியும். அரசியல் உணர்வு கொண்டவர்களை பிரிந்து வைத்து சிந்தனையில் மாற்றத்தை
உண்டு பண்ணமுடியும்.
1.கொலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராடி
கென்ய நாட்டவரை தடுப்புமுகாமினுள் அடைத்துவைத்தார்கள்.
2. யப்பானியர்களை இரண்டாம் உலக
யுத்தத்தின் போது அமெரிக்காவில் அடைத்து வைத்தனர். இவ்வாறே யூதர்களை அடைத்து
கொலைசெய்தனர்.
3. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில்
நோர்வே நாட்டில் போராடிய பலர் கிட்லரின் இராணுவ கைதிகளாக இருந்தனர். நாடு விடுதலை
அடைந்தபின்னர் அவர்கள் அனைவரும் கிறினி என்ற முகாமில் அடைத்து வைக்கப்பட்டு
ஒவ்வொரு கைதிகளின் விபரங்கள் அணைத்தையும் பெற்றுக் கொண்டே விடுதலை செய்யப்பட்டனர்.
4. 2009 வைகாசியில் ஈழத்தவர்கள்
முள்ளிவாய்காலின் பின்னர் இவ்வாறே திறந்தவெளிச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் வடிகட்டப்பட்டு போராளிகள் தனிமுகாமிற்கு அனுப்பப்பட்டனர். புனரமைப்பு
முகாம்கள் என்ற போர்வையில் உளவியல் பரிசோதனை, வகுப்புகள், மறைமுறை சிறைக்கு
அனுப்பப்பட்டோர். ஜெயகுமாரியை புனர்வாழ்வு முகாமிக்கு அனுப்பவேண்டும் என்ற அரச
இயந்திரத்தில் இருந்து வந்து குரலையும் கவனத்தில் கொள்வது நல்லது.
”நோர்வே போன்ற நாடுகளின் இருந்து
அனுபவங்களில் இருந்து இலங்கை அரசஇயந்திரமும் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இங்கு
உளவியல் திணைக்களத்தின் பங்களிப்பை அரச இயந்திரத்தினை பாதுகாக்கும் நிலைக்கு
உள்ளாக்க முடியும் என்பதற்கே இந்த உதாரணங்கள். அரசியல் மனிதனை உளவியல்மனிதாக்கி
அவர்களின் அரசியல் உணர்வை சிதைக்க முடியும். அரச இயந்திரமும் உளவியல் ஊடாக
மன்மாற்றம், உளமாற்றம், சிந்தனை மாற்றம் என்று பின்னவீனத்துவத்தின் பின்னரான
சிந்தனையில் வெளிப்பாடாகும்.
மனிதர்கள் இந்த சமூகத்தின் மீதான
அறக்கோபம், சிந்தாந்தப்பற்று ஆகியவற்றை உளவியல் பார்வைக்குள் அடக்குகின்ற போக்கை
அரசுகள் மறைமுகமாகவும், அரசியல் தளத்தில் அரசியல் ஆவலர்களும்
முன்னெடுக்கின்றார்கள். இங்கு உளவியல் திணைக்களத்தின் ஊடாக தனிமனிதர்களின் தேவையை
பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். அரசியல் எதிர்ப்புக்களை களைவதற்கு ஒடுக்குமுறை
இயந்திரம் வகுக்கும் தந்திரோபாயமாக மேற்கொள்ளும் நிலைக்கு வளர்ந்து வந்துள்ளது.
ஆனால் அரசியல் நபர்கள் மார்க்சியம்
வலியுறுத்துகின்ற மூன்று தத்துவக் கூறுகளுக்கு மாற்றாக உபகோட்பாட்டை
சமூகத்தளத்தில் பயன்படுத்துவது ஆபத்தான நிலையைத் தான் தோற்றுவிக்கும்.
பின்நவீனத்துவம்
Jean Baudrillard (ழீன் போதிரிலார்) கருதுகோள்களை மொழிபெயர்த்து தருகின்றார்
உலோ. செந்தமிழ்க்கோதை. “சிந்தனையைச்
சிதற வைக்கும் எத்தகைய வியப்பான எண்ணம் இது! குறிப்பிட்ட
புள்ளியில், வரலாறு உண்மையற்று, கடந்த
நிலையடைய, முழு மனித குலமும் திடீரென நடப்பிலிருந்து கடந்து
நிலை எல்லையுள் மூழ்கிறது. நடப்பன எவற்றையும் அறிய முடியாத நிலை
அப்புள்ளியிலிருந்து நடப்பனவெல்லாம் அறியமுடியாததாகி விடுவதால் உண்மையல்ல என்று
ஆகிவிடுகின்றது. அதாவது அவற்றை நம்மால் காணமுடியாது. நமது வருங்காலப் பணியே அத்தகைய வரலாற்று நிலைப்புள்ளியை கண்டறிய முயல்வது
தான். அதுவரை தற்பொழுது நிலவும் நடப்பு வாழ்வின் கட்டாயமாக
அமைந்த அழிதல் நிலைமைக்கு ஆட்பட்டு வாழ்வைத் தொடர்வதுதான்” - எலியா கானெட்டி” (பக்70 வெ
கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 6)
“முழு மனித குலமும் திடீரென நடப்பு நிலையிலிருந்து
விலகியோடுகிறது என்ற எலியாகானெட்டியின் வாக்கியம். வான்பொருள் இயக்கவியலின் தப்பிப்பு விரைவு (Escape velocity) என்ற கருத்தை போதிரிலாருக்கு
நினைவூட்டுகிறது. இந்தத்
தப்பிப்பு விரைவு என்பது ஒரு பொருளானது, ஒரு கோள் அல்லது
வேறு ஏதாவது விண்பொருளின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட அப்பொருள் அடைய வேண்டிய
அல்லது அப்பொருளுக்குத் தரவேண்டிய விரைவைக் (velocity) குறிப்பிடும். இந்த தப்பிப்பு விரைவு அடையாத நிலையில் ஒரு
பொருள் கோளின் ஈர்ப்பு விசைக்கு ஆட்பட்டு கோளை நோக்கி விழும், தப்பிப்பு விகரவை அடைந்து விட்டால் கோளின் கட்டுப்பாட்டிலிருந்து
தப்பித்துக் கொண்டு விண்வெளியில் மறைந்து விடும். இந்த
உருவகத்தைப் போதிரிலார் பின்னைப் புதுமை நிலையில் உள்ள சமூகத்துக்குப் பொருத்திப்
பார்க்கிறார்.
“பின்னைப் புதுமை நிலையின் முடுக்கம்
நமது தொழில் நுட்பத்தை, நிகழ்வுகளை,
ஊடகங்களை ஏன் பொருளாதார, அரசியல், பாலியல் போன்ற அனைத்து வகையான பரிமாற்றங்களையும், தப்பிப்பு
விரைவு”க்கு நம்மைக் கொண்டு சென்று விட்டது. இதன் விரைவு
நாம் வரலாறு, நடப்பு நிலை என்ற மேற்கோள் சட்டகங்களைத் (reference frames) தாண்டி விட்டோம்.
“விடுபாடு” அல்லது “விடுபேறு (liberation) என்ற சொல்லின் முழுப்
பொருளுக்குரிய வகையில் கால, வெளித்தடத்தை
விட்டுப் பிரிந்து “கடந்த வலிமையான நிலை” எய்தி விட்டோம். வலிமையான
ஈர்ப்பு விசை செயல்படுகிற நடப்பு நிலையை அறிய முடிகிற- பொருள்களில்
அவற்றின் எதிர்பலிப்புப் பண்பு செயல்படுவதால் பதில் விளைவுகள் நிகழ்கிற
“நடப்புநிலையைக் கடந்து விட்டோம்.’
“ஓரளவுக்கும் குறைவான வேகம் (மிக அதிகமாக இருக்கக் கூடாது), ஓரளவான தொலைவு (மிக அதிகமான தொலைவல்ல), ஓரளவான விடுபாடு அல்லது விடுதலை (மாற்றமும் குலைவும்
நடக்கமுடிந்த அளவுக்கே ஆற்றல் உள்ள விடுபாடு) இவையே வரலாறு
என்ற சமூக நிகழ்வின் தனி நிகழ்ச்சிகளை உருவாக்கி தனித்தனி நிகழ்ச்சிகளாக அவற்றைப்
பிரித்தறியுமாறு படிகநிலைப்படுத்திச் செறிவுறச் செய்கிறது. இதையே,
நாம் நடப்பு நிலை அல்லது எதார்த்தம் என்கிறோம்”
“கோளைச் சுற்றிவரும் வட்டணையில் (orbit) பொருள்களை நிலை நிறுத்தும் இந்த ஈர்ப்பு விசையின் விளைவு
எல்லைக்கு அப்பால், பொருள்
அல்லது அர்த்தம் என்கிற சுவடுகளின் அணுக்கள் எல்லாம் பரந்துபட்ட விண்வெளியில்
தொலைந்து விடுகின்றன ஒவ்வொர் அணுவும் தனக்கே உரிய ஒரு பயணப்பாதையில் விண்வெளி ஊடே
முடிவிலியை நோக்கிப் பயணஞ் செய்து மறைந்து விடுகின்றன. இதேநிலைமை
தான் இன்றைய நிலைச் சமுதாய அமைப்பிலும்
நிகழ்கின்றது. இத்தகைய முடுக்கத்தில் சமூகத்தில்
நடக்கும் ஒவ்வொரு பொருளும், செய்தியும் செயல்பாடுகளும்
பல்வேறு திசைகளில் செயற்படும் படி, தற்கால ஊடகங்கள் ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும் தனித்தனிப் பயணப் பாதையை உருவகப்படுத்துகின்றன. ஒவ்வொரு அரசியல், வரலாற்று, பண்பாட்டு,
உண்மையும் அவை பெற்றுள்ள பேரளவு இயக்க ஆற்றலால், அதனுடைய இயல்புவெளியிலிருந்து விடுபடச் செய்து, அதீத
வெளி (hyper space) நோக்கிப் பயணப்படச் செய்து விடுகிறது. இந்த அதீத வெளிப்பயணம் திரும்ப இயலாத தன்மையைத் தருவதோடு அதனுடைய அனைத்து
வகைப் பொருளையும் இழக்கச் செய்து விடுகிறது. அறிவியல் புனைகதைகளுக்கே இங்கு
இடம் இல்லை. கணிப்பொறியும் சுற்றமைப்புகளும் இணைப்பும்
அத்தகைய மர்மங்களையும் மாயா சாலங்களையும் நிகழ்த்தி விடுகின்றன. நம்மிடமுள்ள துகள் முடுக்கிகள் (particle accellerations) பொருளின் அனைத்து மேற்கோள்
சட்டகங்களையும் உடைத்துப் தூள் தூளாக்குகிறது.”
“வரலாற்றைப் பொறுத்த வரை அதன் நவிலல் (telling) இயலாததாகி விடுகிறது. ஏனெனில் வரையறைப்படி “நவிலல்” என்ற செயல்முறை. புறநிலையைப்
பற்றிய நெருங்கிய பொருள் உள்ள சொல், தொடர்களின் மீள்
நிகழ்வுதானே! தற்போது நிலவும் சமூக வேகம் தரம் தூண்டுகை (impulse), நிகழ்ச்சிகளைத் தூள் தூளாகச் சிதறடித்து
விடுதலை தந்து அணுவாக, அணுக்கருவாக
அணுத்துகளாக மாற்றி பல்வேறு முடிவற்ற பயணப் பாதைகளில் இயங்கச் செய்து விடுகிறதே!
எனவே, இந்நிலை அனைத்து நிகழ்ச்சிகளையும்
பொருளற்ற முடிவிலா நிலையை அடையும் திரும்பவியலாத வேகம் பெறச் செய்து, வரலாறு என்னும் களத்தை விட்டு என்றென்றைக்கும் விலகிடும் நிலைக்குக்
கடந்து விடச் செய்கின்றன. “
“பண்பாட்டுத் தொகுதியோ அல்லது பிற
நிகழச்சிகளோ அல்லது இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் தொகுப்புகளோ துண்டுதுண்டாகப்
பிரிக்கப்பட்டு மின் சுற்றமைப்புகளுடே செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் இரும எண்மானக்
குறியீடுகளாக மாற்றப்பட்டு, நமது நினைவில் அல்ல, சுடர்விடும் மின்னணுக் கணிப்பொறியின் நினைவகங்களில் தேக்கிச்
சுழலவிடப்படுகின்றன. எந்த மனிதகுல மொழியும் இந்த
ஒளிவேகத்தைத் தாங்க முடியாது. எந்த நிகழ்ச்சியும் இதுபோல
உலகளாவிய நிகழ்வாக மாறுவதால் அதன் நடப்பு நிலையின் தன்மையோடு காண இயலாததாகிறது.
எந்தச் சொல்லின் பொருளும் இந்த வேகத்துக்கு ஈடுதரமுடியாமல்
குறியீடுகளாக உலவ வேண்டியதாகிறது. எந்த வரலாறும், நிகழ்ச்சிகளின் இத்தகைய மையவிலகு விசையைத் தாங்காது நடப்புக் கால எல்லையை
உடைத்துக் குறுகிணைவை ஏற்படுத்திக் கொள்ளுதலை, விவரிக்க
முடியாது. இந்த நிலையில் குறிப்பிட்ட வகைப்பட்ட சிந்தனைத்
தொடர் கூட நிகழமுடியாது. இத்தகைய விடுதலை நிலையை எந்த வகைப்
பாலியல் உறவும் தாக்க முடியாது. இந்த அதீத நிலையில் எந்த
மனிதப் பண்பாடும் ஏற்க இயலாது. இந்த அதீத நிலையில் எந்த வித
உண்மையையும் நடப்பு விதிகள் மூலம் நிறுவிட முடியாது.”
“எனவே, வரலாறும் எதையும் எதிர்பலிக்க (reflect) முடியாது. இந்நிலை எல்லாக் கருத்துகளையும் அதன்
மேற்கோளச் சட்டகத்திலிருந்து துண்டித்துச் சிதைத்து அவற்றை அறியவியலாத திரும்பி
வராத கடந்த நிலைக்கு விலகியோடச் செய்து விடுகிறது. அவை
உருவகப்பாடு (simulation) என்றும் மின்னணுவியல் மீவெளியில் (hyperspace) இயங்கத் தொடங்கி விடுகின்றன. எனவே “புறநிலைத் தன்மை” என்பதற்குரிய
எல்லாத் தன்மைகளையும் இழந்து புனைவியல் தன்மையை அடைகின்றன. அதாவது
தற்போது நிலவும் அதீத அமைப்பின் நடப்பியல் தன்மையை நோக்கி கணிசமாக நெருங்குகின்றன.”
“இரண்டாவது கருது கோள் முதல்
கருதுகோளைப் போன்றதல்ல, அதற்கு
நேர் எதிரானது. இதில் நிகழ்வுகள் அதிவேகப்படுவதால் அன்றி
மாறாக மிக குறைந்த வேகத்தை நோக்கிச் செல்வதால் ஏற்படும். இந்த
கருதுகோளும் இயற்பியிலில் இருந்தே பெறப்படுகிறது.
அடிபொருள், காலத்தின் கடப்பு வேகத்தைத் தணித்துக் குறைக்கிறது. மிக
அடர்ந்த பொருளின் புறப்பரப்பில் காலம் மெதுவாகக் கடக்கிறது. அடர்த்தி
கூட கூட கால வேகமும் குறைந்து கொண்டே போகும். இத்தகைய பொருள்
உமிழும் ஒளியின் அலை நீளம் மிகவும் நீண்டு விடும் தோற்றம் காண்பவருக்குத் தெரியும்
ஓரெல்லைக்கப்பால் காலம் உறைந்து நின்றுவிடும். ஆலை நீளம்
முடிவிலியாகி விடும். அதாவது, அலையே
இருக்காது மறைந்துவிடும், ஒளிமறைந்துவிடும்”
“இதேபோல வரலாறும் தனது வேகம் குறைந்து
நின்று விடும் காட்சிக்குத்தக்கதோர் ஒப்புமை பின்னை நவீனச் சமூகத்தில் நிலவுகிறது. அமைதியான சமூகச் செயற்பாட்டில் ஈடுபடாத
பெரும்பான்மை மக்களாகிய “விண்பொருளுடன் வரலாறு உறவு கொள்ளும் நிலையில்
வரலாறும் நிகழ்ச்சிப் பதிவுகளற்று நின்று
போகிறது. நமது சமூக அமைப்புகள் பேரளவுத் திரள்
செயல்பாடுகளால் பெரிதும் ஆட்படுகின்றன. சமூகவியல், மக்கள் தொகையில் என்ற பொருளில் அல்ல, திரும்பி வர
இயலாத உய்யநிலைப் பொருண்மை (critical mass) அடைதல் என்ற பொருளில் திரள்
செயல்பாடுகள் நிகழ்கின்றன. இந்த
நிகழ்வுதான் மிகக் கருதத்தக்க கணிசமான (முந்தைய நூற்றாண்டு
சமுதாய நிகழ்வுகளின் செந்திரங்களோடு (standards) ஒப்பிடும் போது புரட்சிகரமானது) பொது நகர்வால் (mass mobilisation) ஏற்படுகிறது. இதன் இணையாகச் செயல்படும் பொருள் திணிவும் உருவகம் பெரும்பாலோரின் ஆழ்ந்த
பொருட்படுத்தாமையும் (indifference) அதன் அமைவாக தேக்க ஆற்றலும்
சேர்ந்து உருவாக்கும் விளைவு ஆகும். சமூகத்தின் இந்த முடக்கப் பொருள் (inert matter) பரிமாற்றங்கள் இல்லாததாலோ, தகவல் இல்லாததாலோ, செய்தி
தொடர்பு இல்லாததாலோ ஏற்படவில்லை, மாறாக நகரங்களில் உள்ள
மக்கள் நெரிசலும் அளவிறந்த சரக்குகளாலும் எண்ணற்ற தகவல் அடர்த்தி வலைகளாலும்
ஏற்பட்டுள்ள ஏராளமான பரிமாற்றங்களின் பன்முகப் பெருக்கத்தால் விண்மீன்” நிலைக்குக்
கொண்டு செல்கிறது. இத்தகைய சமூகப் பரப்பில் வரலாறும்
குளிர்ந்து இயக்கமற்றுத் தேங்கி நின்று விடுகிறது. பொருட்படுத்தாமையால்
ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்துவரும் நிகழ்வுகள் ஒன்றையொன்று எதிர்த்து செயலற்ற
முடக்க நிலையை உருவாக்குகின்றன. தகவல் பெருக்கத்தால்
மருட்டப்பட்டுப் பொதுமைப்படுத்தி விடுவதால் அவர்களது செயலூக்கத்தை உறிஞ்சி
விடுகிறது. அவர்களுக்கு தனிவிருப்பமோ, பொருளோ,
தன் நினைப்போ (consciousness)
இன்றி, தமது வரலாற்றைத் தம் மந்தத்தில் (inertness) இழந்து விடுகின்றனர், அதனால் அனைத்து கால வரலாறும் பொருளும்
விருப்பங்களும் எச்சமாக இந்தச் சமூகப்
பரப்பில் தேங்கி நிலவுகின்றன. சமகால வரலாறு நின்று போகிறது.
இன்று நிலவும் புதுமை நிலை, அனைத்து நுட்பமான
இயக்கங்களையும் கலக்கி மருட்சி விளைவிக்கும் எதிர்நிகழ்வுகளைத் தோற்றுவித்து
நடப்பைப் புரிய வொட்டாமல் செய்து, இன்றைய அரசியல், சமூக செயல்திட்டங்களின் அணிவகுப்பனைத்தையும் தடம்பரளச் செய்து விடுகிறது.”
“இந்நிலையில் முன்கருதுகோளுக்கு எதிரான
சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில்
வரலாறு, பொருள், முன்னேற்றம் ஆகிய
அனைத்துமே தமது தப்பிப்பு விரைவை அடைய முடியாமல் தணிந்து (மந்தப்பட்டு)
போகின்றன. இச்சமூக அடர்த்திப் பொருளை விட்டு
அவற்றால் வெளியேற முடிவதில்லை. அவற்றின் பயணப் பாதைகளின்
வேகமும் குறைந்து மந்தப்பட்டு விடுகிறது. எனவே கால வேகம்
குறைகிறது. எதிர்காலத்தைக் கணிக்கும் கற்பனை வளமும்
நுண்ணுணர்வும், மங்கித் தேய்ந்து விடுகிறது. சமூகம், வரலாறு, காலம்
ஆகியவற்றின் கடப்பு நிலை, அமைதிமிகப் பொருட்படுத்தாமை
என்னும் பொருண்மையுள் பொதிந்து உறைந்துவிடுகிறது. நம்மைத்
தூண்டித் செயல்பட வைக்கும் ஆற்றல் அரசியல் துறையிலும் இல்லாமற் போகிறது. எனவே சமூக நிகழ்வும் ஓட்டுமொத்த மெத்தனத்தால் அமைதியான திரைப்படம் போல
அசைகிறது. எனவே இந்நிலையிலும் வரலாறு நின்று விடுகிறது.
செயல் வீரர்கள் இல்லாததாலோ, வன்முறையின்
போதைமையாலோ (உண்மையில் வன்முறை பெருகி வளர்ந்து வருகிறது.)
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இல்லாமையாலோ (உண்மையில்
செய்தி வலைப் பின்னலாலும் பரந்துபட்ட மக்கள் ஊடகங்களாலும் நிகழ்வுகள் பல்கிப்
பெருகியுள்ளன), அல்ல, மாறாக, பெரும்பாலாரின் ஒருவித ஒடுக்க உணர்வாலும், மெத்தனத்
தன்மையாலும் முட்டாள் தனத்தாலும் தான்
வரலாறு நின்றுவிடுகிறது. எனவே இற்றைச் சமூகம்
தன்னைத்தானே கடக்க முடியாமல் தனது அறுதி இலக்கை வடிவமைக்க முடியாமல், தனது இலக்கை அல்லது இதுதி முடிவைப் பற்றிய கனவு கூட காண இயலாமல், நிகழ்கால நிகழ்வுகளில் அதன் சிறப்புக் கவர்ச்சியில் உடனடிப் பலன் நோக்கிய
சின்ன சின்னக் குறிக்கோள்களில் மூழ்கிக் கிடக்கிறது.”
“வரலாறு தனது முடிவு நோக்கிக்
கிளர்ந்தெழ வல்லதாக இல்லாமையால் வரலாற்றின் முடிவுக் காலம் என்பது சரிவாது. வரலாற்றின் புறத்தோற்றம் முடுக்க
மடைந்தாலும் ஆழ்ந்த அகக் கருப்பொருள் ஓங்கிக் கொண்டு வருகிறது. வரம்பிலாத பொருண்மையின் அண்மையில் ஒளியும் காலமும் அணைந்து ஒடுங்கிப்
போவது போல வரலாறும் முடிவில் நின்று போகும் நிலையை அடைகிறது.
அண்டத்தைப் போல மனித குலத்துக்கும் விரிவும் ஒடுக்கமும் (big bang) நேர்கிறது. மக்களின் வரலாறு என்னும் தோற்றத்தின் பெருந்தகர்வுக்கு வழிவகுத்து முந்தைய
நாகரீகங்களின் அடர்ந்த மையக் கருவைச்
சிதறச் செய்கிறது. இன்றோ இதன் எதிர்விளைவு நம் கண்முன்னே
நிகழ்கிறது. மக்கள் தொகை, நிகழ்ச்சிகள்
தகவல் பெருக்கம் ஆகியவற்றின் குறிப்பிட்ட உய்யப் பொருண்மை அளவுக்கும் (critical mass) மேலான வளர்ச்சி, உடன் விளைவாக வரலாற்று, அரசியல் முடக்கத் தன்மையை (inertia) உருவாக்கும் எதிர் செயல்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நமது அண்டத்தின் உய்யப் பொருண்மை, அது விரிந்து போதலுக்கு உரிய அளவை அடைந்ததா இல்லையா என்பதை இதுவரை
அறுதியாக நம்மால் உய்த்தறிய முடியவில்லை. ஆனால் நமது சமூகம்
வரம்புடையது என்பதால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெருகும் பிறப்பு எண்ணிக்கை, மக்கட் தொகை, பரிமாற்றங்கள், தொழில்நுட்பப்
பெருக்கம் ஆகியவை நமது சமூகத்தின் தொடக்க நிலையில் இருந்த செயலாற்றலையும் உறிஞ்சி முடக்கி உள்ள நோக்கிக்
குறுகும் செயல்பாட்டைத் தாண்டி வருகிறது.
முடிவிலி நோக்கி அண்டம் விரிவடைவதும் சிறு சிறு
அணுக்கருக்கள் உள்ள முடிவிலா பேரளவிலிருந்து அண்டம் சுருங்குவதும் அண்டத்தின் உய்யப்
பொருண்மை அளவைச் சார்ந்துள்ளது (புதுப்புது அணுத் துகள்கள் கண்டறியப்பட்டு வருவது போல அண்டக் கருப்பொருளை
வரையறுப்பதும் முடிவில்லாது நீளும் அறிவுப்பயண நிலையிலேயே உள்ளது) இதே போல நமது குலமும் விரிவடைவது
சுருங்குவது சமூக நிகழ்வின் உய்யப் பொருண்மையைப் பொருத்தே நிகழும். வரலாறு என்னும்
சமூக இயக்கம் என்பது சமூக மக்கள் இனங்களின் செயல் விரைவு அவை நிலவும் மனித குலம்
என்ற ஓட்டுமொத்தப் பொருண்மை தரும். முடக்கும் விசையின்
விளைவிலிருந்து தப்பி வெளியேறி வெல்லும் அளவுக்கு கூடியுள்ளதா? நாம் பால் வழி போல ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட தொலைவில் உள்ளபடி முடிவில்
நோக்கிப் பறந்து சென்று கொண்டிருக்கின்றோமா? அல்லது
இதற்கெதிரான ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு மையம் நோக்கி சுருங்கிக் கொண்டுள்ளோமா?
நாள்தோறும் வளர்ந்து பெருகிவரும் மக்களினப் பெருக்கம் இதுபோன்ற
அலைவை, துடிப்பைக் கட்டுப்படுத்த வல்லதா? “
“இனி மூன்றாவது கருதுகோளைப் பார்ப்போம். இதுவும் முன்னிரண்டைப் போலவே ஓர் உருவக
விளக்கமே. மறையும் அந்தி பற்றி, மாயமாகிப்
போகும் புள்ளி பற்றி தான் இசைவழியாக இந்த உருவகமும் விளக்குகிறது. இந்த உருவகத்தின் அடிப்படையை பருநிலை ஒலிப்பரவல் விளைவு (stereophonic effect) எனப்படும் கருத்தைச் சார்ந்ததாகும். நாம் நமது ஒலியிசைக் கருவி முன் அமர்ந்து
ஒலி அளவை, அலைவெண்ணை, ஒலித்தரத்தை
பலவகைப்பட்ட விசைக் குமிழ்களைத் திருகி மாற்றுகிறோம். இதை -
இந்த கருவி உருவாக்கும் தரமான இசையை நாம் இயல்பான இசையாகக் கருத முடியுமா? இசையே மறைந்துவிடும். இந்த உயர்
நம்பக வாயில் (high fidelity treshold) எந்த அளவில் உள்ளது? இசை எங்கே மறைந்துவிட்டது? ஓர் எல்லையைத் தாண்டும்
போது குரல் இசை, கருவி எனும் பொருள் அதிர்வின் விளைவாகி,
கருவிக்குரிய தனிப்பண்பாக மாறிவிடுகிறது. மனிதக்
குரல் மறைந்து விடுகிறது. இதற்கு மேல், இசை நுகரின்பமோ, இசையை மதிப்பிடும் உணர்வோ உள்ளதா?
இசைமை என்பதன் அதாவது மனிதச் சார்பில்லாத புறவிளைவின்
மெய்விதிர்ப்பும் (பரவசமும்) அதன்
விளைவுமாக இசைநுகர்வு எஞ்சுகிறது. மனித உறவு அதன் விளைவும் பண்பாட்டுத் தொடுகையாக நிலவவில்லையே”
“வரலாறு நின்று விடுவது இது போன்றதான
நிகழ்வே எனலாம் நாம் ஓர் எல்லைக்கு அப்பால் வந்து விட்டோம். நிகழ்ச்சிகளின் மெருகூட்டமும் தகவலும் தான்
உள்ளதே தவிர வரலாறு என்ற மனித குலத் தொடர்
நிகழ்வு எங்கே உள்ளது? நிலவுவன எல்லாம் உயர் விசையுடைய ஒலிபரப்பு, சிறப்பு
விளைவுகள், இரண்டாம் நிலை காட்சி விளைவுகள், ஒளிர்வும் மக்கலும் கலந்த காட்சிகள் ஒலிவாயிலும் ஒலிவாங்கியும் அருகருகே
அமையும் போது ஏற்படும் பின்னூட்டல் விளைவு போன்றவை தாமே. இதபோல
தான் நம் வரலாறும் உண்மைக்குப் புறம்பான
நிகழ்ச்சித் தொகுப்பாகி விட்டது. வரலாற்று நிகழ்வும்
அந்நிகழ்வைப் பரப்புதலும் உடனே நடப்பதால் நுண் இயற்பியலில் கருவியும் கருவி
அளக்கும் புற நிகழ்வும் ஒன்றோடொன்று எதிர்வினை புரிவது போல நிகழ்வு எது, நிகழ்வின் பரம்பல் எது எனப் புரிந்து கொள்ளமுடியாத மயக்க நிலை உருவாகிறது.
வரலாற்றில் மட்டுமல்ல, மனித வாழ்வியல் துறைகள்
அனைத்திலும் இதே மயக்க நிலைதான் நிலவுகிறது. “உயர்
நம்பகத்திறன்” இசையின் உண்மையில் ஐயம் ஏற்படுத்துவது போலவே நிகழ்வுப்பரப்பல்
அடர்த்தி நிகழ்வின் மீதிலே ஐயங்கொள்ளச் செய்கிறது. எலியா
கானெட்டி இதை நன்று கூறுகிறார். “இந்தப் புள்ளிக்கப்பால்
ஏதும் உண்மையல்ல” இந்தக் காரணத்தினால் தான் இன்றைய வரலாறு பற்றிய அறிவும்
புரிதலும் ஐயத்திற்கிடமானதாக உண்மைக்கு புறம்பானதாக ஆகிவிடுகிறது. இதுபோல வரலாறுகள் நுண்ணியற்பியல் நோக்கிகளில் செயற்கையான பருநிலை ஒலி
விளைவுகளில் பதுங்கி மறைந்து விடுகிறது அல்லது மறைக்கப்பட்டுவிடுகிறது.”
“செய்தி பரப்பலின் மையத்தில் வரலாற்று
மறைந்து விடுகிறது. உயர்
நம்பக இசைபரப்பில் (மனிதக் குரல்) இசை
மறைந்து விடுகிறது. செய்முறைக் கூடத்தில் அறிவியல் ஆயும்
கருப்பொருள் அமிழ்ந்து விடுகிறது. பால் விளக்கவியல் (pronography) பாலுணர்வு (sexuality) மறைந்து விடுகிறது. எங்கெங்கும் பருநிலை ஒலிப்பரவல் விளைவும் உண்மைக்கருகே அதன்
உருவாக்கத்தின் அணுக்கநிலவுகையும் (proximity effect) உருவக விளைவும் (simulation effect) நிகழ்வதால் உண்மையெது? உண்மையின் நனலெது! ஏன்ற குழப்பமும்
உண்மை, நகல் ஊடாட்டத்தால், உண்மை பால்
ஐயமும் நிலவுகிறது”
“வரையறைப்படியான வரலாற்றின் இந்த
மறைதல் புள்ளி தற்போது விளங்கும். இந்தப் புள்ளியை மறந்துவிட்டு, வரலாற்று
இப்படித்தான்ட நடந்தது, இவை இப்படித்தான் இருந்தது என்று
வரையறுக்க முடியாது. தொழில் நுட்பவியலாக உயர்நம்பக அளவின்
திறமை எல்லை ஏது? தொழில் நுட்பக் கருதி நுட்பம் வளரவளர உயர
நம்பக அளவு கூடும் அன்றோ? செய்தி அறிக்கை எங்கு முடியப்
போகிறது? உடனடி ஒலிப்பரப்பு, நேரடி
ஒளிபரப்பு என்ற இந்த கவர்ச்சி, இசை கேட்டலில் உள்ள “உயர
நம்பக அளவு” போன்றதேயாகும். இது ஒரு போலி நிகழ்வாகும்.
இந்தப் புள்ளியைத் தாண்டிப் போதல் திரும்பமுடியாத செயல்
ஆகும். நாம் இனி எங்கே கருவி இடையீடில்லாத இசையைக்
கேட்கமுடியும்? நாம் இனி எங்கே செய்திப் பரப்பலுக்கு முந்திய,
செய்தி ஊடகத்துக்கு முந்திய வரலாற்றுக்கு போக முடியும்? இசையின் மூல உணர்வும் வரலாற்றின் மூல உண்மையும் (இந்தப்
பொருளில்) மறைந்து விட்டனவே. இயல்பான
நிகழ்வை அதன் உயர்தரப் படிம நிலையிலிருந்து- உருவகக் காட்சி
நிலையிலிருந்து - அதீத நிகழ்விலிருந்து (hyper reality) எப்படி மீட்டெடுக்க முடியும்? தற்போது நிலவும் உயர்தரத்
தரப்படுத்தலால் இயல்பான சமூக, இசை உண்மையை அறியவே முடியாது போகினறது. தற்போது
நிலவும் தொழில நுட்பத் தரஊடகச் செய்தியின் விளம்பர நிலைக்குப் பின்னணியில் மறைந்துள்ள வரலாற்று நிகழ்வை அறிவே
இயலாது. எப்பொருள் பற்றியும், அது அதன்
படிமமான (model) மாற்றப்படுவதற்கு முன் எப்படி இருந்தது என அறியவே வழி இல்லை.” (உலோ. செந்தமிழ்க்கோதை
பக்71-81 வெ கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 6)
மேலே உள்ளவிடயங்கள் பின்னவீனத்துவவாதிகளின் சொந்த
எழுத்துக்களில் இருந்து கருத்துமுதல்வாதக் கூறுகளை அறிந்து கொள்ள முடியும். இங்கு சுருக்கமாகவே தரப்படுகின்றன, காரணம் வெவ்வேறு இடங்களில் ஒரேவிடயத்தை தருவதை தவிர்ப்பதேயாகும்.
1. புறநிலை மறுப்பு
2. மாயத் தோற்றம் உள்ளதாக கருகின்றது, மனிதவாழ்வியலில் மயக்கநிலையையும், ஐயத்தினையும் ஊட்டி இயங்கியலை மறுக்கின்றது.
3. அறிவியலில் சிந்தனை, இயற்கை, சமூகம்
என்பதை இயங்கியல் ரீதியாக விளக்கும் சிந்தனையை குறிப்பட்ட நிலையில் இருந்து
பொதுமைப்பைப் படுத்தும் அணுகுமுறையை முன்வைக்கின்றது. உதாரணத்திற்கு
ஒரு தேற்றத்தில் முடிவை சமூக நிலையில் ஒப்பிடும் முறைமையை முன்வைக்கின்றது.
4. உருமாற்றம் - பண்பு மாற்றத்தை இயங்கியல் ரீதியாக பார்க்க
மறுக்கின்றது
5. அறிவொணா வாதத்தை முன்வைக்கின்றது.
6. இசை, வரலாறு என்பது வர்க்கம் சார்ந்தது என்பதை பார்க்க தவறுகின்றது
7. முரண்பாடுகள் அணைத்து தளங்களிலும்
உள்ளதை பார்க்கத் தவறுகின்றது.
8. மனித வளர்ச்சியில் வர்க்கப்
போராட்டத்தினை அறியத் தவறுகின்றது.
“மார்க்சீய அடிப்படையில் இயக்கவியல்
கருத்தினங்களைப் புரிந்தவர்க்கு அமைப்பின் உறுப்பை அல்லது பகுதியை
ஓட்டுமொத்தத்துடன் குழப்புவதும் (முதல், இரண்டாம் கருதுகோள்) தோற்ற
நிலையைச் சாரத்துடன் ஒப்பிட்டுக் குழப்புவதும் (மூன்றாம்
கருதுகோள்) தெட்டத்தெளிவாக விளங்கும்.” (உலோ. செந்தமிழ்க்கோதை பக்86 வெ
கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 6)
அளவுமாற்றம்
குணமாற்றம்
இயற்கை, சமூகம், சிந்தனை பற்றிய அடிப்படைகளை மார்க்சியம்
படைத்து தந்துள்ளது. ஒரு செயற்பாடு இன்னொரு
செயற்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. ஒரு பொருள் அளவு (பொருளை வெப்பப்படுத்தும் போது வெப்பம் அதிகரிக்கிறது.) மாற்றமும், பண்பு (குண ரீதியான
நீர் நீராவி ஆவது) மாற்றமும் பெறுகின்றது. மார்க்சியம் சித்தாந்தம் இந்த உலகத்தை புரிந்து கொள்வதில் புதிய அறிவொளியை
செலுத்தியது. முன்னர் இருந்த கோட்பாடுகளை தலைகீழாக்கி
மார்க்ஸ் தந்துள்ளார். மார்க்சின் காலத்திலேயே மார்க்சின் திறனாய்வு முறையை விமர்சித்ததை
மார்க்ஸ் கவனத்தில் கொள்கின்றார். உலகத்தை புரிந்து கொள்வது
என்பதுடன் மார்க்சியம் உலகத்தை எவ்வாறு மாற்றுவது என்பதை கற்றுக் தருகின்றது.
“அனைத்துப் பொருட்களிலும் ஒப்பீட்டளவான ஓய்வு தெட்டத் தெளிவாக
மாற்றம் என இரண்டு இயக்க நிலைகளுள்ளன, ஒரு பொருளிலுள்ள
முரண்பட்ட இரு மூலக்கூறுக்கிடையே நடைபெறும் போராட்டத்திலேயே ஏற்படுகிறது.
ஒரு பொருளானது முதலாவது இயக்க நிலையிலிருக்கும் போது ஒரு
பொருள் பண்பு ரீதியாக மாற்றத்தை மட்டுமே பெறாது. அளவியல் ரீதியான மாற்றத்தை மட்டுமே பெறுவதோடு, வெளித்தோற்றத்தில் ஓய்வு நிலையில் இருப்பது போலவும் காணப்படுகிறது.
அப்பொருள் இரண்டாவது இயக்க நிலையில் இருக்கும் போது, முதலாவது ஒரு உச்சச் கட்டத்தை அடைத்து,
ஒற்றுமை நிலையிலுள்ள அப்பொருளைப் பிரிக்கிறது. இதனால் ஒரு பண்பு ரீதியான மாற்றம் விளைகிறது. அதனால்
தெட்டத் தெளிவான தொருமாற்றம் தோற்றம் அளிக்கிறது.
நாம் தினசரி நடைமுறை வாழ்க்கையிற் காணும் இந்த ஒற்றுமை, ஒருமைப்பாடு, சேர்க்கை,
இணக்கம், சமன்பாட்டு நிலை, தேக்க நிலை, இக்கட்டான நிலை, ஓய்வு,
இடைவிடா நிகழ்வு, சமநிலை, உறுதிப்பாடு, கவர்ச்சி, இன்ன
பிற எல்லாம் அளவியல் ரீதியாக மாற்ற நிலையிலுள்ள பொருட்களின் தோற்றங்களே.
மறுபுறம் ஒற்றை நிலையில் உள்ள பொருட்களின் முறிவு, அதாவது இந்த ஒருமைப்பாடு, சேர்க்கை, இணக்கம், சமன்பாட்டு
நிலை, தேக்க நிலை, இக்கட்டான நிலை,
ஓய்வு, இடைவிடா நிகழ்வு, சமநிலை, உறுதிப்பாடு, கவர்ச்சி
ஆகிய இவைகளின் அழிவு, ஒவ்வொன்றும் தன்னுடைய எதிரானதாக
மாறுவதனைத்தும் பண்பு ரீதியான மாற்ற நிலையிலுள்ள பொருட்களின் தோற்றங்களாகும்.
ஒரு வளர்ச்சிப் போக்கு மற்றொன்றாகும் மாற்றமாகும்.
பொருட்கள் முதலாவது இயக்க நிலையிலிருந்து இரண்டாவது
நிலைக்குத் தம்மை தாமே இடைவிடாது மாற்றிக் கொள்கின்றன. எதிரானவைகளின் போராட்டம் இரண்டு நிலையிலும்
தொடர்ந்தும் நடைபெறுகிறது. ஆனால் முரண்பாடு இரண்டாவது
நிலையூடாகவே தீர்க்கப்படுகிறது. அதனால் தான் நாம், எதிரானவைகளின் ஒற்றுமை நிபந்தனைக்குட்டதாகவும், தற்காலிகமானதாகவும்,
சார்புடையதாகவும் இருக்க, ஒன்றையொன்று
தனிப்பட்ட எதிரானவைகளின் போராட்டம் சார்பற்றதாக இருக்கிறது எனக் கூறுகிறோம்.
இரண்டு எதிரெதிரான மூலக்கூறுகளுக்கிடையே ஒத்த
இயல்பிருப்பதன் காரணமாக அவை ஒரே பொருளிற்குள் சகவாழ்வு நடத்தி, தாமாகவே ஒன்று மற்றொன்றாக மாறிக்
கொள்கின்றன என்று நாம் குறிப்பிட்ட போது, நாம் இந்த சார்புத்
தன்மையைப் பற்றியே கூறினோம். அதாவது, குறிப்பிட்ட
சூழ்நிலைமைகளில் கூறின், இரண்டு முரண்பட்ட பொருட்கள்
ஒற்றுமைபட்டு தாமாகவே ஒன்று மற்றொன்றாக மாறமுடியும். ஆனால்
இந்த நிலைமைகளில்லாத போது அவற்றால், ஒரு முரண்பாட்டை
ஏற்படுத்தவும், ஒரே பொருளிற்குள்ளேயே சகவாழ்வு நடத்தவும்
தாமாகவே ஒன்று மற்றொன்றாக மாறவும் முடியாது. குறிப்பிட்ட
நிலைமைகளில் மாத்திரமே எதிரானவைகளின் ஒத்த இயல்பு காணப்படுவதாலேயே நாம், ஒத்த இயல்பு நிபந்தனைக்குட்டபட்டது, சார்புடையதுமாகிறது
என்று கூறியுள்ளோம். (பக்71-72 மாவோ-
முரண்பாடு பற்றி)
மேற்கண்ட மாவோவின் விளக்கம் என்பது
பின்னவீனத்துவவாதிகளின் அறிவொணாவாதத்திற்கும்
மாற்றாக முரண்பாடுகளின் அடிப்படையில் சமூகம், இயற்கை, சிந்தனை ஆகியவற்றின் மாற்றத்திற்கு
வழிவகுப்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது. ஒரு பொருளுடன்
கொண்டுள்ள உறவு அதாவது பொருளுக்குள் இருக்கும் குறித்த இயல்பும், எங்கும் நிறைந்த இயல்பு ஆகியவற்றை முழுமையாக ஆராய்தல் வேண்டும். இவ்வாறே முரண்பாட்டின் முதன்மை, முதன்மையற்ற கூறுகளை
ஆராயவேண்டும். முரண்பாட்டின் பக்கங்களின் வேறுபட்ட இயல்புகளை ஆராய வேண்டும்.
ஆராயும் போது ஒரு தலைப்பட்டசமாகவோ, அகநிலைப்போக்குடனோ,
தன்னிச்சைப் போக்குடனோ ஆராய்தல் கூடாது. பருண்மையான
பகுப்பாய்வு இன்றி எந்தவொரு முரண்பாட்டின் தனிஇயல்பு பற்றி அறிந்து கொள்ளமுடியாது.
அதேவேளை உற்பத்திச் சக்தி உற்பத்தி உறவு (அடித்தளம்)
வகிக்கும் பாத்திரத்தினை தவிர்ப்பது பொருள்முதல்வாதமாக இருக்க
முடியாது. ஏனெனில் பருண்மையான நிலைமைகளை (general) பிரச்சினைகளை பருண்மையான முறையில்
பகுத்தாய்வு செய்ய வேண்டும்.
புதிய அணுகுமுறைகள் இந்த சமூகத்திற்கான உற்பத்தி உறவைப்
பற்றிய நிர்ணயத்தில் இருந்து உருவாகின்றது. முதலாளித்துவ சமூக அமைப்பும்
அதன் நிறுவனங்களும் மார்க்சியத்தை எதிர்க்கின்றது. இவ்வாறு
எதிர்க்கின்ற போது அதற்கு மாற்றீடாக புரிதல் ஒன்றை முன்வைக்க வேண்டிய தேவையும்
இருக்கின்றது. இவ்வாறான தேவைகளின் நிமித்தம் வெளிவருகின்ற
சிந்தனை படிகளை மற்றவர்கள் சுமந்து செல்வது ஒரு போக்காக (trend) இருக்கின்றது. இந்த வகையிலேயே தமிழர் சூழலில் பின்னவீனத்துவம் உட்பட கோட்பாடுகளும்
அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த சமூக, இயற்கை, சிந்தனை ஆகியவற்றிற்கான தோற்றப்பாடு பற்றி
இரண்டு முகாம்களாக பிரிந்து நின்று தான் விவாதிக்க முடியும். பொருள்முதல்வாதம், மற்றையது கருத்துமுதல்வாதம் இவை இரண்டையும் விட்டு இன்னொன்று உள்ளதாக
காட்டப்படுகின்ற போது அது கருத்து முதல்வாதிகளுக்கான தேவையை பூர்த்தி செய்கின்றது.
இது எந்த வகையிலும் பொருள் முதல்வாதத்திற்கும், அதன் சிந்தாந்தத்திற்கும் மாற்றீடாக வந்துவிட முடியாது.
முதலாளித்துவ முறையில் ஏற்படுகின்ற சமூகக் குறைகளை புதிய
மதக்குழுக்கள் (new religious sect) மதக்குழுக்களின் இருந்து உளத்திருப்தியை வேண்டி ஒடுகின்றார்கள். ஆக இந்த முதலாளிய அமைப்பிற்கான அவலத்தின் தீர்வாக முரணற்ற வகையில்
மார்க்சியமே தீர்வை முன்வைக்கின்றது.
பின்நவீனத்துவம் என்பதை கால எல்லைகளை இங்கு அதிகம்
கவனத்தில் கொள்ளவில்லை. பின்நவீனத்துவத்தின்
உள்ளடக்கமாக இருக்கின்ற அணுமுறையில் கருத்துமுதல்வாத - பொருள்முதல்வாத
என்ற இருபிரிவில் பின்நவீனத்துவம் எந்த அரங்கை சார்ந்தது என்பது பற்றிய கவனத்தையே
இங்கு செலுத்தப்படுகின்றது.
பின்நவீனத்துவம் என்று பலராலும் பேசப்படும் சிந்தனை வடிவம்
பலபற்பல கூறுகளின் கூட்டுக்கலவை எனலாம். பின்நவீனத்துவ கோட்பாடுகள் சமூகத்தினை பகுதி பகுதியாக சமூகத்தின் தன்மைகளையும், வளர்ச்சிப் போக்கை விபரித்துள்ளது. இவற்றிற்கு
மாற்றாக மார்க்சீயம் முழுமையாக சமூக வளர்ச்சிப் போக்கை விளக்குவது மாத்திரம் அல்ல.
சமூக விதிகளை விளக்கி சமூகத்தை எவ்வாறு மாற்றமுடியும் என்று கற்றுக்
கொடுக்கின்றது. பின்னவீனவத்துவவாதிகள் ஆலையில்லை ஊரில் இலுப்பங்காய் சக்கரை என்பது
போல மற்றவர்களுக்கு தெரியாத புதிய விடயத்தை சமூகத்திடமும், கல்வியாளர்களிடமும்
முன்கொண்டு வந்ததாக பாவனை காட்டியுள்ளனர்.
Jean Francis Lyotard “what then is
the postmodern? What place does it or does it not occupy on the vertiginous
work of the questions hurled at the rules of image and narration? It is
undoubtedly a part of modern” இவ்வாறு கூறும் ஸ்யோதார்த் “all that has been received if
only yesterday (modo, modo) must be suspected”என்றும் கூறுகின்றார். இதன் பொருள் மேலே கூறியபடி பின்நவீனத்துவம்
என்பது நவீனத்துவத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கின்றது. ஆனால்
அதே சமயம் அது நவீனத்துவத்தைச் சந்தேகப்படுவதாகவும் உள்ளது என்பதே ஆகும். (ப22 வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு
வட்ட வெளியீடு 5)
கதையாடல் - பெருங்கதையாடல்
பற்பல கருத்துகளை, சிந்தனைகள் அல்லது சார்பு நிலை (தன்னியல்பு- பாலுணர்வு, சூழலியல், விளிம்பு
நிலை, தலித்தியம்) கோட்பாடுகளை
முன்நிறுத்துவது, தனிமனித புரிதல்களை முன்னிறுத்துவதும்,
அவர்கள் சார்ந்த பார்வையை பொதுமைப்படுத்துவதை ஏற்கின்றவர்கள்.
வரலாறு பண்பாடு, மனித இன அடையாளங்கள், பொருளாதார அமைப்பை விளக்கும் ஓட்டுமொத்தமான சித்தாந்தமாகவும், கோட்பாட்டை உருவாக்க முடிகின்ற சித்தாந்தம் மார்க்சியமே. மார்க்சியத்தை எதிர்ப்பதற்கு
பெருங்கதையாடல் எதிர்ப்பை முன்வைக்கின்றார்கள்.
“பெர்க்லி பாதிரியார், புறஉலகு பற்றிய அறிவை உணர்வுகளின் தொகுப்பு
என்று கூறினார். காண்ட்
அதனை நிகழ்வுப் பதிவு (phenomenon) என்று சொன்னார். பின்அமைப்புவாதிகளோ அதனைக் குறிப்பான என்றழைத்தார்கள். பின்நவீனத்துவவாதிகள் அதனைக் கதையாடல் என்கிறார்கள். இவ்வாறு உலகலே இக்கதையாடல்களுக்குள் அடங்கும் எனக் கூறும் ல்யோதார்த்
கதையாடல், பெருங்கதையாடலாக (meganarrative) ஆக உருவெடுக்கிறது என்றும்
கூறுகின்றார்கள் (ப.26கிருஸ்ணமூர்த்தி. ஆய்வு வட்ட வெளியீடு 5) “ கதையாடல் வெறும் கருத்து தொகுப்பு என்றும் அவ்வாறே
பெருங்கதையாடல் என்பது ஒரு ஊகத் தொகுப்பு தான் என்று பின்நவீனத்துவம்
கருதுகின்றது.
“பெருங்கதையாடல் எனக் கூறுப்படுபவை எவை? இவர்கள் பட்டியலே தருகிறார்கள். 1)மதங்கள் முவைத்த கடவுள் வேதங்கள் 2)ஆடம்ஸ்மித் முன்
வைத்த சொத்து வளர்ச்சி 3)ஹெகல் முன்வைத்த இயங்கியல் வளர்ச்சி
4)நவீனத்துவம் முன்மொழிந்த பகுத்தறிவின் இறுதி விடுதலை.
மார்க்சீயம் முன்மொழிந்த பாட்டாளி வர்க்கத்தின் மூலம் உலக விடுதலை
என்பன போன்றவையே பெருங்கதையாடல்கள் என்னிறார்கள். (ப27வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 5) இவ்வாறு புறநிலையதார்த்தினை ஒதுக்கும் சிந்தனை ஒரு குறிப்பிட்டதில் (particular ) இருந்து பொதுவான (general) ஆய்வு முறையை முன்வைக்கின்றது. இது மார்க்சீய அணுகுமுறைக்கு
எதிர்நிலையானாகும். இதன் பொருள் மார்க்சீயம் தனிப்பட்ட
நிலையை மறுப்பதல்ல. பொதுவில் இருந்துதான் தனிப்பட்ட
நிலைக்குச் சென்று இரண்டையும் ஒன்றுக்கொண்றுள்ள முரண்பாடுகளையும் முரண்நிலைகளையும்
கண்டுகொள்கின்றது.
பொசிற்சிவிசம்
(positivism)
சிந்தனை வளர்ச்சிப் போக்கு தத்துவ
விசாரணைகள் மனித வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு வந்துள்ளது. புத்தர்
காலத்தில் இருந்து இன்று வரை அறிவாராட்சி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
இ.யற்கை, சமூகம் அதன்
சிந்தனை பற்றிய கேள்விகள்
கைத்தொழிற் புரட்சி 1600களின் பின்னரான காலம்
1789 களின் பின்னாரன நாடாளுமன்ற ஜனநாயக
உருவாக்க காலம்
1871கொம்யூன் புரட்சியின் பின்னரான காலச்
சிந்தனை வடிவம்
சோவியத் புரட்சியின் பின்னரான காலம்
மாவோவின் பின்னரான காலம்
இன்றைய காலத்தில் ஏகாதிபத்திய சமூக உறவில் அமைந்த சிந்தனை
வடிவத்தில் காலங்கள் என்று அடிக்கிக் கொண்டே போகலாம். ஏகாதிபத்திய கொலனித்துவத்திற்கெதிரான
போராட்டம் சிந்தனை செயற்பாடுகளில் மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. எனவே கருத்துமுதல்வாதிகளின் மையநிலைக்கு நாம் செல்ல வேண்டிய தேவையில்லை.
இவ்வாறான வரலாற்றுக் காலத்தினைக் கடந்து வந்திருக்கும் நாம்
வரலாற்று, இயங்கியல் பொருள்முதல்வாதம், வர்க்கப் போராட்டம் என்ற மூன்று அம்சங்களின் துணைகொண்டு இந்த சமூகத்தினை
பகுப்பாய்வு செய்திட முடியும்.
இங்கு திறனாய்வுக் கோட்பாடா அல்லது வாழ்வியல் கோட்பாடா என்ற
கேள்விகள் எழுகின்றது. வாழ்நிலைகள்
எமது சிந்தனைகளை தீர்மானிக்கின்றது. கிரேக்க தத்துவம்,
இந்திய தத்துவம், தமிழ் நிலப்பிரபுத்துவ
எழுச்சிக் (பக்தி இலக்கிய) காலத்தில்
அந்த சமூக அமைப்பின் காலத்து பொருளாதார அமைப்பிற்கேயான சிந்தனைகளே மனிதரை
வழிநடத்துகின்றது.
தத்துவவியாலார் கற்றுணர்ந்த நடத்தை (learned behaviour, biological behaviour) உயிரியல் சார் நடத்தை, சூழ்நிலை நிர்ணயவாதம்- அறுதிப்பாட்டியம் (environmental determinism) அறிவொளி காலத்து சிந்தனை
வளர்ச்சியின் தொடர்ச்சியாக மானிடவியல் பார்வை உருவாகியது “காலத்தால் அழியாத பங்களிப்பு மனிதநேயம் (humanism) என்றும் கோட்பாடாகும். இக்கோட்பாடு இனம், சாதி, வகுப்பு, சமயம் போன்ற அனைத்து பிரிவுகளையும் மதிப்பையும் வலியுறுத்துகிறது. அறிவொளிக் காலத்திய பங்களிப்பில் இரண்டாவதாகக் குறிப்பிட வேண்டியது கல்வி,
சமுதாயச் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியது.
குறிப்பாக, இளம் வயதினரைச் சமுதாயவயமாக்கும் (socialization) முறை பற்றியது. நடத்தைசார் கொள்கையில் இன்றவும்
ஒன்றியமாகிக் காணப்படும் கருத்துக்கள்
மூன்றாவது பங்களிப்பாகும். இக்கருத்துப்படி, இயற்கை உலகத்தின் ஒரு பகுதியாக மனிதன் திகழ்கின்றான், இதிலிருந்த அவன் தனித்தோ ஒதுங்கியோ வாழவில்லை, இயற்கையின்
விதிக்குட்பட்டே இயங்குகின்றான். ஆகையால், இப்போக்கின் அடிப்படையில் மட்டுமே மனிதனை அறிவேண்டும். மேற்கூறிய கருத்துப்படி (அறிவொளிக் காலச் சமுதாயத்
தத்துவியல் மனிதரைத் தெய்வீகப் பிறப்பு என்ற
நிலையிலிருந்து விடுவித்து அவனைச் செயலறிவு ஆய்விற்கு (empirical research) ஈடுபடுத்தும் நிலைக்குக் கொண்டு
வந்தது) (பக் 37 பண்பாட்டு
மானிடவியல்)
பின்நவீனத்துவவாதி எனக் கருதப்படும் தமிழவன்
அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991)
என்ற புத்தகத்தில் கைலாசபதியை விமர்சிக்கின்றார். ஆனால் அந்த விமர்சனத்தில் மார்க்சிசத்தினை அடிப்படையை புரிந்து கொள்ள
முடியாத நிலையைத் தன்னகத்தே வெளிப்படுத்துகின்றார். “புற
உலகம் தானே இயங்கிக் கொண்ருக்கிற தென்றால் நிலப்பிரபுத்துவம் தானே இயங்கி
முதலாளித்துவமாகும். முதலாளித்துவம் தானே இயங்கி சோசலிசமாக
மாறும் என்ற அர்த்தம் வருகின்றது “ (ப31 தமிழவன் அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991) இவரின் கருத்திற்கு எதிரான விளக்கத்தை மார்க்சீயம் பற்றிய பகுதியில்
மேலதிகமாக பார்ப்போம். மார்க்சியத்தின் அடிப்படையை புரிந்து
கொள்ளாமலே மார்க்சீயத்தினை விமர்சித்து அவலநிலையே கைலாசபதி மீதான விமர்சனம்
இருக்கின்றது. மார்க்சீய லெனினியம் வெல்லமுடியாத ஒரு அணுமுறை
மாத்திரம் அல்ல. சிந்தனை முறை சமூகத்தினை மாற்றத்தினை கோரி
நிற்கும் முழுமையான ஒரு தத்துவம் உற்பத்தி சக்திக்கும், உற்பத்தி உறவிற்குமான
உறவினை பற்றிய படிப்பினை மார்க்சீயத்தில் முக்கியமானதாகும்.
“இங்குதான் பாசிட்டிவிசம் நுழைகின்றது. இந்த பாசிட்டிவிசம் என்பதுதான் என்ன?
இது மனிதவியல் துறைகளின் ஒரு ஆய்வுப் போக்கு இயற்கை விஞ்ஞான விதிகளை
மனிதவியல் துறைகளில் பயன்படுத்துபவர்களின் பார்வை இது. அதாவது
மனிதவியல் துறைகளிலும் இயற்கை விஞ்ஞானம் போல் விதிகள் இயங்குவதைக் காண்பதைப்
பிரதான ஓய்வு நோக்கமாக இவர்கள் கொள்கிறார்கள். பாசிட்டிவிசம்,
ஆய்வுகள் நடுநிலையாக (value -free) நடைபெற வேண்டுமென்றும் கூறுகிறது.
மொத்தத்தில் கைலாசபதியிடம் செயல்படும் ஆய்வுமுறை இது என்று எளிதில்
சொல்லிவிடலாம். (ப32 தமிழவன்
அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991) புறநிலை என்பது
ஒரு அங்கமாக மார்க்சீயம் அணுகுகின்றது. புறவயத்தை ஏற்றும்
கொள்ளும் நிலையில் இல்லை என்பதைதான் பின்நவீனத்துவவாதிகள் கவனமாக மார்க்சீயத்தை
எதிர்ப்பதில் கவனமாக இருக்கின்றார்கள் எனலாம்.
“நடுநிலை ஆய்வு என்பது புற
உலகத்திலிருந்து தகவல்களைத் தொகுத்துக் கொள்வதன் மூலம் நம் புலன்கள் புற உலகை அறிந்து கொள்கின்றன என்ற பார்வையின்
அடிப்படையில் உருவாகிறது. மனிதமனம்
அதனைச் சுற்றியுள்ள உலகை அறிந்து கொள்கிறது என்று “எம்பிரிசம்” என்ற பிரிட்டிஸ்
தத்துவப் பார்வை வலியுறுத்துகிறது. (ப28 தமிழவன் அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991)
சமூகம், இயற்கை, சிந்தனை பற்றிய பிரச்சினையில் ஒன்றைவிட்டு
ஒன்று அகல்வதில்லை என்பது மார்க்சிய இயங்கியல்பார்வை. அறிவுஜீவிகளாக
குட்டி முதலாளிய வர்க்கமே ஒரு போராட்டத்தை ஆரம்பத்தில் வழிநடத்துவதும், புதிய கோட்பாடுகளை வந்தடைய உதவுபவர்களாக இருக்கின்றார்கள். ரஸ்யப், சீனப் புரட்சியில் கூட குட்டி முதலாளிய
வர்க்கத்தை சேர்ந்த லெனின், மாவோ போன்றோர் தலைமை தாங்கினர்.
ஆனால் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு நேர்மையாக இருந்து தமது
புரட்சிகர கடமையை நிறைவேற்றிக் கொண்டார்கள். இங்கு
நாட்டிற்கான கோட்பாட்டை வந்தடைதல் என்பதை தவறாக கற்பிதம் செய்யும் நிலையை
பின்நவீனத்துவவாதிகள் செய்கின்றார்கள். “புறவயமான விதிகளைக்
கண்டு பிடிப்பவர்கள் ஒரு சில படிப்பாளிகள் என்றும் மாற்றுகிறவர்கள் தொழிலாளர்கள்
என்றும் முடிவு கிடைக்கும். சோவியத் ரஸ்யா போன்ற நாடுகளின்
ஒரு சில படிப்பாளிகளால் மத்தியப்படுத்தப்பட்ட ஆளும் முறை இங்கு மறைமுகமாக
ஆதரிக்கப்படுகிற பண்பு தெரிகிறது. (ப.32 தமிழவன் அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991) இது மார்க்சீயம் பற்றிய புரிதல் என்பது அவசியம் அற்றதாகவும் வெறும்
எதிர்ப்புணர்விற்கு உள்ளான கருத்தியல் ஆகும்.
பின்நவீனத்துவாதிகளின் குழப்பமான அணுமுறைபற்றி “தமிழவன்
மற்றும் அவரது குழுவினர் முன்வைக்கும் பின்நவீனத்துவக் கருத்தாக்கங்கள் கடும்
விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்யவை. பின்நவீனத்துவத்திற்குள் பல போக்குகள்
இருந்தாலும் அவற்றுள் பெருங்கதையால்களின் சிதைவு, மொத்த
தத்துவத்தை மறுத்தல், பன்மைத் தன்மைகளை வலியுறுத்தல்
போன்றவற்றை அவர்கள் வற்புறுத்துவதில்லை. தன்னிலையை மையமாகக்
கொண்ட அறிதல் முறையையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்கியதாக் தெரியவில்லை.” (ப. 86 ந. இரவீந்திரன் பின்
நவீனத்துவமும் அழகியலும் 1997) இந்த விமர்சனத்தில் தன்னிலை
கொண்ட விமர்சனப் பார்வையைத் தான் கைலாசபதி மீது மேற்வைக்கப்பட்டுள்ளதை அறிந்து
கொள்ள முடியும். பின்நவீனத்துவவாதிகள்
தனிமனித அனுபவம் மார்க்சீயம் பங்களித்த துறைகளில் எங்கும் ஒதுக்கும் முறையை
தமிழவன் அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (1991) என்ற
புத்தகத்தில் கைலாசபதியை விமர்சிக்கின்றார். இங்கு
கருத்தியல்வாதத்தினை பன்முகப்பார்வை என்ற நிலையில் முன்வைக்கின்றார்.
இருப்பியல்வாதம் (existentialism )
இதன் முக்கியவர்களான சீமோன் டி
புவா, போல் சாத்தர் போன்றவர்கள் மார்க்சியத்தை
ஏற்றுக் கொண்டு மக்கள் புரட்சியை வழிநடத்தியவர்கள். இவர்களின்
செயற்பாடுகள் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. எனினும்
அவர்களின் சிந்தனை வடிவத்திற்கும் மார்க்சியம் கூறும் சிந்தனையின் தோற்றுவாய்க்கும்
உள்ள முரண்பட்ட கருத்துக்களை அறிந்து கொள்ளவது அவசியமாகும். ஏனெனில்
வரலாற்றில் உதிரிக் கோட்பாடுகளை முன்னிறுத்தும் வலதுசாரி சிந்தனையாளர்களின்
எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளை புரிந்துணர முடியும்.
நீட்சே, ஃபிராய்ட் போன்றவர்கள் “புற உலகச் சிக்கல்களுக்கான தீர்வுகளை இவர்கள்
ஆழ்மனத்தில் தேடினார்கள் இவ்வகையில்
பெர்க்லீயின் வழியில் வந்த அகவயக்கருத்து முதல்வாதிகளாகவே இவர்கள் திகழ்கிறார்கள்.
இத்தகைய கருத்துமுதல்வாதத்தின் இன்னொரு விதவெளிப்பாடே
எக்ஸிஸ்டென்சியலிஸம் எனலாம்.
அறிபவன் (subject) அல்லது நான், அறியப்படும் பொருள் (object) என இரண்டு உண்டு என்பதைத்
தத்துவங்கள் ஒப்புக் கொள்கின்றன. இவைகளுக்கு இடையே உள்ள உறவை- எது எதனை
நிர்ணயிக்கினறது என்பதை அவை ஆராய்கின்றன.
ஆனால் எக்ஸிஸ்டென்சியலிஸிட்டுக்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக எக்ஸிஸ்டென்ஸ் அல்லது இருப்பு என்று
கூறும் போது அது Being என்ற புறவய இருப்பைக்
குறிப்பதில்லை. மாறாக அது
அறிபவன் (subject) அறியப்படும் பொருள் (object) ஆகியவற்றின் ஒற்றுமை நிலையைக் குறிக்கும். இந்நிலையே உண்மையானது. இயற்கையானது. அதைவிட்டு தன்னிலை. முன்னிலை (object) என்று பிரிப்பது செயற்கையானது.
உலகின் எல்லாப்பொருள்களையும் ஏன் தன்னிலையையும் (subject) புறவயப்படுத்த இயலும் என்றாலும் மனித இருப்பைப் (existence) புறவயப்படுத்த முடியாது. அதனை அறிதலுக்கும் உட்படுத்த முடியாது. அதே போன்று
இதனை விஞ்ஞானபூர்வமான சிந்தனையால் புரிந்து கொள்ள முடியாது. சாதாரண
வாழ்க்கையில் மனிதன் தனது இந்த இருப்பை
உணர்வதில்லை. அதைப் புரிந்து கொள்ள ஒரு எல்லை நிலையை
அடையவேண்டும். (Borderline situation) இதற்குத் தர்க்க ரீதியான அறிவு
உதவாது. உள்ளுணர்வினாலேயே புரிந்து கொள்ள இயலும்.
இது சாவு போன்ற நிலை. இந்த நிலையில் தனது
எக்ஸிஸ்டென்ஸைப் புரிந்து கொள்ளும் போதே அவனுக்கு விடுதலை கிடைக்கும். (இந்தியப் கருத்துமுதல்வாதம் சொல்கின்ற “முக்தி” என்பது போன்றே இது)
பகுத்தறிவைக் காட்டியும் உள்ளுணர்வே சிறந்ததெனக் கருதும்
எக்ஸிஸ்டென்சியலிசம் ஒரு அகவயக் கருத்துமுதல்வாதமே என்பது சொல்லாமலே விளங்கும். ஏனெனில் அது தன்னிலை இல்லாமல் பொருள் இல்லை எனக்
கூறுகின்றது. (There is no object without a subject) (ப.17 வெ கிருஸ்ணமூர்த்தி ஆய்வுவட்டம் 5) பொருள்கள்
மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே இருந்திருக்கின்றன. மனிதர்களின்
தமது வாழ்வியலின் நடைமுறையின் ஊடாகவே கற்றுக் கொள்கின்றார்கள்.
“ஸர்ரியலிஸம், எஃஸிஸ்டென்சியலிஸம் என்ற கலை இலக்கியக்
கொள்கைள் தோன்றினஃ இவற்றின் தத்துவ அடிப்படைகள் “காண்டின்” உலகக் கண்ணோட்டமாகும்.
“ஸர்ரியலிஸம் முதல் உலகப் போருக்குப் பின் முதிர்ந்து விட்ட
முதலாளித்துவ முரண்பாடுகளின் விளைவாக கருத்துக்களே இக்கொள்கையின் அடிப்படை அந்த
தத்துவ அடிப்படைகள் ஃபிராய்டின் அகவயக் கொள்கையின் மீது அமைந்தவை
ஃபிராய்டிஸவாதிகள் இணைவிழைச்சு உணர்ச்சியின் படைப்பும், விளைவும்
தான் கலையும், இலக்கியமும் என்று கருதுகின்றனர். “ஸர்ரியலிஸம் இதன் அடிப்படையில் தான் “இணைவிழைசுத் துடிப்புகளும்,
(sexual impulses) வாழ்க்கையச்சமும், இறப்பு
அச்சமும் தான் கலையின் உள்ளடக்கமாக இருத்தல் வேண்டுமெனக் கூறுகிறது. போருக்குப் பின் முதிர்ச்சியடைந்த முதலாளித்துவ முரண்பாடுகள் சமுதாயத்தை
வறண்ட பாலை வனமாக்கிவிடும். அதனை மனிதனால் தடுக்க
முடியாதென்ற சோக ஒலம் “ஸர்ரியலிஸ்டுகள் படைப்புகளின் காணப்படுகின்றன. சிலர் வாழ்க்கையின் மீது அருவருப்பும், அச்சமும்
ஏற்படும்படி வாழ்க்கையைக் கோரமாக சித்தரித்துக்காட்டி, மனிதனது
வாழ்க்கைப் பற்றையும், வருங்காலத்தில் நம்பிக்கையையும்
வறண்டு போகச் செய்கின்றனர். இவர்களுக்கு மிகவும் பிடித்த இலக்கியக்
கருக்கள், பயங்கரக் கனவுகள் உருவெளித் தோற்றங்கள் பயங்கர
மனோவிகாரங்கள் முதலியன. நாவல்களிலும் கதைகளிலும் அமெரிக்க
முதலாளித்துவ எழுத்தாளர்களில் பலர் இவ்விலக்கிய வழியில் செல்கின்றனர்.
(...)
“ஜீன்பால்ஸார்த்திரே என்ற புகழ்பெற்ற
பிரரெஞ்சுப் படைப்பாளி எஃஸிஸ்டென்சியலிஸம்(existentialism)
என்ற தத்துவத்திலிருந்தும், ஃபிராய்டின்
கொள்கைகளிலிருந்தும் தமது கலை இலக்கியக் கொள்கையை உருவாக்கினார். அவரைப் பின்பற்றுவோர் ஐரோப்பிய இலக்கிய உலகத்தில் மிகப்பலர். இவர்களில் ஒரு பிரிவினர் சமயத்திற்கு அழுத்தம் கொடுப்பவர்கள். இவர்கள் மார்ஸல், ஜான்பர்ஸ், ஸர்டியேவ்
முதலியோர். ஸாத்ரே இப்பரிவைச் சேர்ந்தவரல்ல. அவர் நாஸ்தீக எஃஸிஸ்டென்சியலிஸம்” (atheistic existentialism) என்ற பிரிவைச் சேர்ந்தவர். இப்பிரிந்வைச்
சேர்ந்தவர்கள் ஸார்த்திரே, ஹைடக்கர், காமஸ்
முதலியோர். ஐரோப்பியத் தத்துவங்கள் அறிபவன், அறியப்படுவது (subject, object) என்ற கருத்துக்கள்
விளக்குகின்றன. ஆனால் எஃஸிஸ்டென்சியலிஸ்டுகள் இதனை மறுத்து (subject,
object) அறிபவனும், அறியப்படுபவதும் ஐக்கிய
நிலையில் இருப்பதாகக் கருதுவர். இவ்வொற்றுமையை (எஃஸிஸ்டென்ஸ் என்று கூறுவர். இவ்வொற்றுமை அறிய
மனிதன் “எல்லை நிலை” (boder line situation) இல்
இருத்தல்வேண்டும். அது சாவு போன்று நிலை உயிரோப்பதும்,
அதனை நீக்குவதும் முரண்பட்டவை. அதன் எல்லை
நிலை சாவு. இந்நிலையில் உலகம் அறிபவனுக்கும் மிக நெருக்கமாக
வருகிறது. பிரபஞ்சத்தை அறிய இவர்கள் உள்ளுணர்வேயே நம்புகிறார்கள்.
விஞ்ஞான முறைகளை உதறித் தள்ளிவிடுகின்றார்கள்.
சுதந்திரம் இவர்களுக்கு மிக முக்கியமான கொள்கை. மனிதன் முன்னால் பல வாய்ப்புக்கள்
இருப்பதல் அவனுக்கு இஸ்டமானதைத் தேர்ந்து கொள்ளும் உரிமையே சுதந்திரம் (voluntary
choice) இங்கு சூழ்நிலையை,
மனிதனது தேந்தெடுக்கும் உரிமையினின்று பிரித்து
விடுகின்றார்கள். சுதந்திரத்த ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக்கி
மிதமிஞ்சிய தனிமனிதத்தை (extreme individualism) செய்கிறார்கள்.
சமூகத்திலிருந்து மனிதன் சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையும்
இதினின்றும் எழுகிறது. சமூக நிலைகளையும், முரண்பாடுகளையும், வரலாற்றுண்மைகளையும் மறுத்து.
“மனிதன் தன்மைத்தானே உருவாக்கிக் கொள்ளுகின்றான்” man is
what he makes himself” இவ்வாறு உருவாக்குவது புறவய சமூக
நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று இவர்கள் கூறுகின்றார்கள்.
சாத்திரே இந்த அகவயமான, ஆன்மீகக் கொள்கைகளை இதற்கு நேர்
முரணாக மார்க்ஸீய தத்துவங்களின் அடிப்படையில் விளக்க முயன்றார். அதனால் விசித்திரமான பல முரண்பாடுகள் ஸர்ரியலிஸக் கொள்கையில் தோன்றின.
(பக் 156-159 நா. வானமாமலை
ஆய்வு வட்ட வெளியீடு 4) மனிதர்களின் உணர்வைகள் தீர்மானிக்க
முடியுமா என்பதைப் பற்றிய விமர்சனத்தை மார்க்சியப் பார்வையின் கீழ் பார்ப்போம்.
அமைப்பியல்வாதம்...
அமைப்பியல்வாதம் மார்க்சிய சிந்தனையில் இருந்து உருவான முறைமை- அணுகுமுறை போக்காக கொள்ளமுடியும். தமிழக கட்டமைப்புவாதிகள் (அமைப்பியல்வாதம்) கட்டமைப்புவாதத்தினுள் மார்க்சீயத்தை அடக்கிக் கொள்ள
வேண்டுமென்கின்றார்கள். இது மார்க்சீயத்தினை
கற்கமுயற்சிக்கும் இளம் கல்வியாளர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கின்றார்கள்.
“ஸ்ட்ரக்சுலிஸம் என்று அழைக்கப்படும் அமைப்பியல் குறியியலின்
(semiotics) அடிப்படையில் உருவானது. உலகமே குறிகள் மயமானது அவற்றை
மொழியியலின் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே
அறிதலில், மொழி எவ்வளவு மகத்தான் பங்கு வகிக்கிறது என அது
காட்டியது. எந்த ஒரு சொல்லிலும் சொன்னமை, பொருண்மை என இருபகுதிகள் உண்டு. சொல்லைக் குறி (sign)
என்று கொண்டால் சொன்மையை (signifier) என்றும்
நாம் கொள்ளலாம். குறிப்பானுக்கும் குறிப்பீடுக்கும் இடையோன
தொடர்பே. உறவு அமைப்பு (sturcture) என்று
அழைக்கப்படுகிறது.” (ப.19வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு5)
“ குறிப்பான்களின் மாற்றமே வளர்ச்சி
என்றும் மொழி, சமூகம்
ஆகியவற்றிற்கும் பொருந்தும் அமைப்பியல்வாதம் கருதுகிறது. உலகில்
எல்லாமே குறிப்பான்களேயன்றி வேறில்லை என்னும் பின்அமைப்பியல்வாதம் கூறுகிறது.
இதன் பொருள், மாற்றம் அல்லது வளர்ச்சி என்பது
குறிப்பீடுகளுக்குச் சம்பந்தம் இல்லாதது
என்பதே ஆகும். அதாவது கருத்தே முதல், பொருள்
அல்ல என்ற அகவயக் கருத்துமுதல்வாதமே பின்அமைப்பியல்வாதத்தின் அடிச்சுவடாகும்.
(ப.34 ஆய்வு வட்ட வெளியீடு 4) பண்பாடு என்பது (subconscious) ஆழ்மனப்பட்டது
மக்களின் ஆழ்மனத்தினுள் புதைந்து கிடக்கிறது. மக்களின் ஆழ்நிலை அமைப்பு (deep structure) என்று உளவியல் கோட்பாட்டை முன்னிறுத்துகின்றது.
மார்க்சியத்தை எதிர்க்கின்ற சிந்தனை வடிவங்களை படித்தறிந்து
கொள்வது அவசியமாகும். அப்போதுதான்
மார்க்சியம் எவ்வாறு மற்றைய சிந்தனையில் இருந்து மாறுபடுகின்றது என்பதை அறிந்து
கொள்ள முடியும். மார்க்சியத்தை கற்றறிய விரும்பும் வரலாற்று
மாணவர்கள் பல்வேறு பட்ட சிந்தனை வடிவங்களை இந்த சமூக அமைப்பில் உள்ள பிரதிநிதிகள்
முன்வைக்கின்ற போது அது சரியா இல்லை இதுசரியா என்ற குழப்பத்திற்கு உள்ளாவது
இலகுவாகவே நடைபெறுகின்றது.
அமைப்பியல்வாதம் (Levi
Strauss என்பவர்) இந்தச் சமூக அமைப்பிலே
சின்னங்கள் (குறியீடு) அர்த்தக்
கூறுகள் இருப்பதாக கருதுகின்றார். இது மானிடவியில் உள்ள
அணுகுமுறையில் ஒரு திசைவழிப் போக்கை உருவாக்கிக் கொண்டார். சின்னங்கள்
(குறியீடு) அர்த்தங்களை விளங்க முனைந்த
வேளையில் இவரின் அணுகுமுறை மொழியியல் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்களின் வாழ்வியலுக்கு அப்பால் உள்ளது என்ற கருத்துமுதல்வாதத்தை
ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் சின்னங்களின் முழுமையான
அர்த்தங்களை வெளிப்படுத்த முடியாத குறைபாடு உள்ளதாக அமைப்பியல்வாத எதிர்விமர்சனம்
முன்வைக்கப்படுகின்றது. மார்க்சின் சிந்தனையில் இருந்து ஒரு
அணுகுமுறையை உருவாக்கிக் கொண்ட போதிலும் மார்க்சீய அணுகுமுறைக்கு நிகராக
சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டடைய முடியவில்லை என்பது
கட்டமைப்புவாதம் மீதான விமர்சனமாகும்.
“தம்முடைய Treatise concerning the
principals of human knowledge என்ற நூலில் அவர் எழுதுகின்றார்.
”(உலகை) கருத்துக்களின் (உணர்வுகளின் ) தொகுப்பு என நாம் கூறும் பொழுது காரண,
காரியத் தொடர்பை நாம் கூறவில்லை அதை குறிப்பீடுடன் தொடர்புரைடய
ஒரு குறியாகவே நாம் பார்க்கிறோம் என்றார் பெர்க்லி இவ்வாறு கூறும் போது
குறிக்கும் குறிப்பீட்டுக்கும் இடையேயுள்ள உறவு பொருளற்றது - காரண காரியத் தொடர்பற்றது என்று கூறி குறியீட்டை ஒதுக்குகிறார் என்பது
புரிகிறது (லெனின்)” ப19 வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு5)
மார்க்சியம் என்பது பரந்த உலகப் பார்வை ஆனால்
கட்டமைப்புவாதம் ஒரு உலகப் பார்வையல்ல. ஆனால் கட்டமைப்புவாதிகள் மார்க்சியத்தினை தமது தகுதிக்கு ஒப்ப உலகப்பார்வையாக
சுருக்கிக் கொள்கின்றனர்.
“சூழ்நிலைகள், வளர்ப்பு ஆகியவை உற்பத்தி செய்த பொருட்களே
மனிதர்கள், ஏற்கனவே வேறு சூழ்நிலைமைகளின் மாறுபட்ட மனிதர்கள்
என்னும் பொருள் முதல்வாதப் போதனை, மனிதர்கள் தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும்
கல்வி கற்பிக்கிறவனுக்கே கல்வி கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது.
எனவே, இப்போதனை தவிர்க்க முடியாததாகச்
சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் வந்து சேருகிறது. அதில் ஒன்று சமுதாயத்திற்கு மேலாக உள்ளது ().
சூழ்நிலைகளின் மாற்றமும் மனித நடவடிக்கைகளும் பொருந்திப்
போவதை, நடைமுறையானது புரட்சி கரமானதாக
ஆக்கப்படுகிறது என்று மட்டுமே கருத்தில் கொள்ளமுடியும், பகுத்தறிவு
ரீதியான அப்படித்தான் புரிந்து கொள்ளமுடியும்.” (மார்க்ஸ் ப.
96 லுத்விக்ஃபாயர்பாகும்.-ஏங்கெல்ஸ்) சிந்தனைகள், வெளிப்பாடுகள் அனைத்தும் வானத்தில்
இருந்து ஒன்றும் வந்து விழுந்து விடவில்லை. மாறாக அனைத்தும்
இந்தச் சமூக அமைப்பில் (Structure) இருந்து பெறப்பட்டதாகும்.
செயற்பாட்டியல் (Functionalism)
சமூகத்தின் வழக்காறுகளும், நெறிமுறைகளும் சமூகத்தினை இணங்கிப் போதற்கு ஏற்பவே
இருக்கின்றது. ஏனெனில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும்
வகையில் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. “பண்பாடு என்பது
ஒருவகையான ஒருங்கிணைப்பு நிலையில் உள்ளதாக அறிந்தார். அதை
விளக்கும் போது - எந்த ஒரு பண்பாட்டிலும் அதன் வழக்கங்கள்,
பயன்படும் பொருட்கள், கருத்துக்கள், நம்பிக்கைள் போன்ற அனைத்துக் கூறுகளும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதான
உள்ளன. ஏதோ ஒன்றை முழுமை பெறச் செய்யும் நோக்கத்தைக்
கொண்டுள்ளன. இவை அனைத்தும் பண்பாடு என்ற அமைப்பில் பிரிக்க
முடியாத உறுப்புகளாக உள்ளன. (ப.177 பண்பாட்டு
மானிடவியல் 1990)
“ செயலளவில் தனித்து நிற்கும்
கூறுகள் தனிமனிதர்களின் தேவைகளுக்காகச்
செயற்படுவது கிடையாது. அவை
சமுதாயத்தின் மொத்த அமைப்பை நிலைப்படுத்துவதற்காகச் செயல்படுகினறன என்கிறார்.
(ப.183 பண்பாட்டு மானிடவியல் 1990) இது செயற்பாட்டு வாதத்தில் இருந்து மாறுபடுகின்றது.
சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் சமூக இருப்பிற்கானது என்கின்றனர். “பல்வேறு உறுப்பினர்கள் செய்யும் இப்பணிகள் அனைத்தும் ஒன்றோடொன்று
ஒருங்கிணைந்து பரஸ்பர உறவுநிலையில் அமைந்து சமுதாய வாழ்வு இயங்கவும், நிலைபெற்று நிற்கவும் பங்காற்றுகின்றன. இவ்வாறு
ஒவ்வொரு உறுப்பினர்ரும் ஏற்றுள்ள பங்கே அவர்களின் செயல்களாகும். ராட்கிளிஃப் பிரௌன் “செயல்” பற்றிய கருத்தைப் பயன்படுத்தும் போது இது
மக்களின் எதிர்பார்ப்புக்கும் நிறுவனத்திற்கும் இடையே நிகழும் பங்குகளின் மூலம்
விளைவதாகும் எனக் குறிப்பிடுவார். இக்கருத்து (Durkheim)
தர்க்கைமிடமிருந்து கடன் பெற்றதாகும்.
சமுதாயத்தில் ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெறுவதை
ராட்கிளிஃப் பிரௌன் பின்வருமாறு குறிப்பிடுவார். ஒவ்வோர் அலகும் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் தொடர்ச்சியான
செயல்கள் அச்சமுதாயம் என்னும் முழுமையை நிலைப்படுத்த நடைபெறும் பராமரிப்புச்
செயல்களாகும் எனகின்றார். சமுதாயத்தின் உட்கூறுகளுக்கிடையே நிலவும்
உறவுகள் (அமைப்புகள்) எவ்வாறு சமுதாயம்
என்றும் முழுமையை அமைப்பிற்குச் சிறப்பிடம் கொடுத்ததால் இவரது கொள்கை அமைப்பியற் -
செயற்பாட்டியற்கொள்கை (Structrual functionalism) (ப186 பண்பாட்டு மானிடவியல் 1990)
“செயற்பாட்டியலில் அடுத்த நிலை
சமுதாயத்தின் சமநிலையைப் (equilibrium) பற்றியது. இக்கருத்துப்படி சமுதாயம் என்பது நிரந்தர
அமைப்பைக் கொண்டதாகவும், அந்த அமைப்பின் இயக்கம் எப்போதும்
சமநிலையைக் கொண்டதாகவும் உள்ளது. சமுதாயத்தின் உள் அலகுகளுக்கிடையே (சமுதாயக் கூறுகள்)
எப்போதும் ஒரு சமநிலையில் இருக்கும். ஆனால்
சமுதாய அமைப்பிற்குள்ளேயும் வெளியேயும் உள்ள கூறுகளில் இச்சமநிலை பாதிக்கப்படக்
கூடும். அவ்வாறான சூழலில் சமுதாய அமைப்பிற்குள் நிலவும் சில
“இயக்கப்பாடுகள்” (mechanisms) அப்போதைய மாறுபட்ட
சூழலிற்கேற்ப அதைச் சரிசெய்து மீண்டும் சமநிலையை ஏற்படுத்தும் அதன் சமநிலை பாதிக்கப்பட்டால்
அதை மீண்டும் சமநிலையில் தூக்கி நிறுத்தக் கூடிய”வலுவான இயக்கப்பாடுகள்” மூலம்
சமுதாயம் அதன் சமன்பாட்டு நிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றது. (ப187 பண்பாட்டு மானிடவியல் 1990) மோதல்களும், முரண்பாடுகளும்
இல்லாது ஒரு சமூகம் இருக்குமென்றால் மனிதக்குரங்குவகையாகவே வாழ்ந்து
மடிந்திருப்பர்.
செயற்பாட்டுவாதத்தினை டுர்க்கெயிம் (Durkheim) தற்கொலை (suicide) பற்றி ஆராய்ந்த போது யூதர்களிடையே அதிக அதிக கூட்டுறவைக் கொண்ட சமூக உறவு
இருந்துள்ளதையும், இதன் காரணத்தினால் தற்கொலை விகிதம்
குறைந்திருந்ததையும் ஆய்வில் கொண்டு வந்தார். சமூகத்தின்
உறுப்பினர்கள் சமூக நியதிக்கு ஒப்ப கடமையாற்றுவதாக கருதிக் கொண்டார். செயற்பாட்டுவாதம் என்கின்ற போது “ஒவ்வொரு செயலிலும் சமுதாயத்தின் நோக்கம் (தேவைகள்) நிறைவேற்றப்படுகின்றன. இத்தொடர்பு நிகழ்வில் ஒவ்வொரு செயலிலும் தனித்தனி வகையான மக்கள் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு செயலும் தனித்தனி வகையான நெறிமுறைகளால்
ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஒவ்வொரு செயலுக்குகென்றும்
தனித்தனி வகையான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தனித்தனி
வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாய நோக்கத்தில்
செயல் என்ற இறுதி நிலையின் வாயிலாக வெளிப்படுவதால் எந்த ஒரு கூறையும் தனியாகப்
பிரித்து ஆராயக்கூடாது” (ப.179 பண்பாட்டு மானிடவியல் 1990)
செயற்பாட்டுவாதம் சமாதானமாக சமூகம் இயங்குவதாக புரிந்து
கொள்கின்றது. சமூகம்
ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்கின்றது. சமூகம் முரண்பாடுகளைக் கொண்டு
இயங்குகின்ற மார்க்சியம் போல் விளக்குவதில்லை. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகள்
பற்றியும், பொருளாதாரப் பற்றிய புரிதல்களை
வெளிப்படுத்துவதில்லை. உழைப்புப் பிரிவினையானது வளர்ச்சிக்
கட்டங்களை கடந்து வந் துள்ளது. உழைப்புப் பிரிவினை உற்பத்தி
சாதனத்தின் வளர்ச்சி, பரிவர்த்தனை, வினைபயன்
சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பரஸ்பர உறவுகளை நிர்ணயம் செய்கின்றது. மேற்குறிப்பிட்ட இரண்டு அணுகுமுறைகளும் குறைபாடுகளைக் கொண்டுள்ளதை
அவதானிக்க முடியும். மனித வர்க்கமானது பொருளாதாரம் (அடித்தளம்) நிர்ணயக் காரணி என்பதை இவைகள் காணத்தவறுகின்றன என்பது பொதுவான
விமர்சனமாகும்.
பொருளாதார வாதம்
மார்க்சிய முகாம்களில் இருந்து பல்வேறு புதிய கோட்பாடுகளை
முன்வைக்கின்றனர். இவர்களில்
யேர்மனி பிராங்பேட் நடைமுறைக் கொள்கையாளர் கருத்தோட்டம் என இருபகுதியினரை
வகைப்படுத்துகின்றார் பேராசிரியர் கோ.
கேசவன். இவர்கள் எந்தவகையான குறைபாடுகளைக்
கொண்டுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
சமூக நிகழ்வுப் போக்கை விளங்கிக் கொள்வதில் அகநிலைவாதத்தை
அதிகம் வலியுறுத்தல்.
சமூக நடைமுறையில், அகநலை மனோபாவக் கூறுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தல்.
இதனால் கலாச்சார மேல்தளத்தின் ஒப்பீட்டுத் தன்மையின்
முக்கியத்துவத்தைப் பெரிதுபடுத்தல்.
விஞ்ஞானத்தையும் தத்துவஞானத்தையும் இணைப்பதற்குப் பதில், தத்துவத்திலிருந்து முற்றாக விஞ்ஞானத்தைப்
பிரித்தெடுத்தல்.
பாட்டாளி வர்க்கம் புரட்சிகரத் தன்மையை இழந்துவிட்டதெனக்
கருதி, அதன் தலைமையை மறுத்துரைத்தல்.” இந்தப் பிராங்பேட் வகையினர் “மார்க்சீயத்தின் இரண்டு அடிப்படைக் கூறுகளை-பொருளியல் முக்கியத்துவத்தையும் (The importance and principle nature of material conditions.- Tom
Bottom) அதன் முதன்மையையும் பாட்டாளி வர்க்க புரட்சிகர
மறுத்துவிட்டனர்” என்கின்றார் ரொம்.
மார்க்சிய நடைமுறைக் கொள்கையாளர் பிரிவு (Theorists of Marxian praxis) என்ற
பகுதியினர் பின்வருமாறு மாறுபடுகின்றனர்.
சமூகத்தில் இயக்கவியல் விதிகள் செயல்படுகின்றனவெனினும்
மனிதன் தனக்;கு இருக்கும்
சுதந்திரமான படைப்பாக்கல் திறனால் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடைமுறையின் மூலம் இயற்கையை
மாற்றியமைக்க முடியும்.
ஏங்கெல்ஸ், மார்க்சிய இயங்கியலைச் சரியாக வாங்கிக் கொள்ளாது, இயற்கைக்கு
அதை இயந்திரமயமாகப் பொருத்தினர். ( ஜோர்ஜ் லூக்காஸ்)
இயக்கவியல் விதிகளை மனிதனுக்கும் சமூகத்திற்கும் மட்டுமே
பொருத்த வேண்டும், இந்த
வரையறையைத் தாண்டினால் மார்க்சீயம் “சித்தபிரமையாளனின் கனவாகும்.”( சாத்ரே)
இருத்தலுக்கும் (Being)
சிந்தனைக்கும் இடையிலான இயங்கியல் உறவை மறுத்து அதில் இருத்தலின்
முதன்மைத் தன்மையை உறுத்து, அத்தகைய போக்கு மனித உணர்வின்
ஆக்கபூர்வமான பங்களிப்பை மறுக்கிறது. (ஜோர்ஜ் லூக்காஸ்)
பிரதிபலிப்புக் கொள்கை என்பது பதினெட்டாம் நூற்றாண்டு
இயந்திரவியல் பொருள் முதல் வாதத்தின் மறுபதிப்பு.
பொருளியல் முரண்பாடு மட்டும் அனைத்தும் தீர்மானிக்கும்
சக்தியாக (Determining Factor) இல்லை, அதுவும் பல மேல்தள அம்சங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.” (பக்.197-198 கோ. கேசவன்,
இலக்கிய விமர்சனம்- ஒரு மார்க்சியப் பார்வை)
பொருளாதாரவாதம் என்ற அரசியல்
சொற்பதத்திற்கு உள்ள மயக்கத்தைப் போக்குதல் அவசியமாகின்றது. இந்தச் சொற்பதம் வெவ்வேறு கட்டத்தில்
வெவ்வேறு விதமாக கருத்துக் கொடுத்துப் பாவிக்கப்படுகின்றது. முதலில்
ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் சொல் பாவனை பற்றிப் பார்ப்போம்.
“பொருளாதாரப் போராட்டம் என்று சொல்லும் போது (நம்மிடையே
ஏற்கப்பட்டுள்ள வழக்காற்றில் உள்ளபடி) நடைமுறை வழிப்பட்ட
பொருளாதாரப் போராட்டத்தை நாம் குறிப்பிடுகிறோம். () முதலாளிகளுக்கு
எதிர்ப்பு என்று ஏங்கெல்ஸ் வர்ணித்தார். சுதந்திர நாடுகளில்
இது தொழில் வாரியாக ஒழுங்கமைக்கப் பெற்ற தொழிலாளர்களின் போராட்டம் சின்டிக்கேட்டு
வழிப்பட்ட போராட்டம் அல்லது தொழிற்சங்கப் போராட்டம் என்று பெயர்பெற்றது.” (ப.84 என்ன செய்யவேண்டும்) லெனின் பொருளாதாரம் பற்றிய விவாதத்தை “பொருளாதார ஆதரவாளர்களுடன் உரையாடல்”
(நூல் திரட்டு 1) என்ற கட்டுரையில் விரிவாகவே விவாதத்தை மேற்கொள்ளுகின்றார்.
அவரின் கருத்தானது கூலிஉயர்வு சலுகைகள் போன்றவற்றை மையமாக
வைத்து தொழிற்சங்கப் போராட்டம் நடத்துபவர்களை பொருளாதாரவாதிகள் என அழைத்தார். மார்க்சீயத்தின் மீதான தாக்குதல்கள்
எவ்வகையான தாக்குதல்கள் நடைபெறுகின்றது என்பதற்காக மேலே பல சிந்தனைப் போக்குக்களை
அறிவதன் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும்.
ஒருமை -இருமை
அகம் - புறம் என்று தமிழ் வரலாற்றில் இருந்து அறிய முடியும். அகம் புறம் என்பதும் சங்கப் பாடல்களில் வெகுதெளிவாகவே பாடப்படுவதை
அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஆராய்ந்துள்ளார்கள். “அகம், மணத்திற்கு முந்திய ஆண் பெண்
இணைவிழைவுணர்ச்சியையும், மணத்திற்கும் பிந்திய பாலுணர்வையும்
கருப்பொருளாகக் கொண்டது. (நா. வானமாமலை பக்151 ஆய்வு வட்டம் வெளியீடு 6)
பன்முகம் என்பதை மார்க்சீயம் கூறும் இயங்கியல் பார்வையை மறுதலித்து
நிற்கும் சொல்லாடலுக்குள் அடக்கி விடுகின்றது. புறநிலை, அகநிலை என்ற இருமைத் தன்மையை ஏற்றுக்
கொள்ளும் மார்க்சீயம். இதனை இருமை என்று அழைத்துக் கொள்வதை
மார்க்சீயமாக கருத முடியாது. அதுவா இதுவான என்று அறுதிட்டுக்
கூறும் நிலையில் இல்லாத நிலையை வெளிப்படுத்துவது. ஆனாலும்
இருமைவாதிகள் “இருமையியல், அறிவியலைப் பொறுத்தவரையில் பொருள்
முதலியலாகவே இருக்கின்றது. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களை அகற்றிய பின்புதான் அறிவியல்வளரும் என்பதை ஒத்துக் கொள்கினறது. ஆனால் அடுத்து உடனே பொருட்களின்
வெளித் தோற்றங்களைத் தான் அறிவியல் நமக்கு அறிவிக்கின்றது. பொருட்களைத்
தவிர யதார்த்த நிலையில் வேறொன்றும் இல்லை என்று நிரூபிக்கத் தயாராக இல்லை, அதைப்பற்றி அறிய மனித அறிவுக்குச் சக்திகிடையாது என்கிறது.
“தனது பொருள்முதலியவைப் பற்றித் தாமே
வெட்கப்படுகிற பொருள் முதலியலார்” என்று
இருமையியலாரை ஏங்கெல்ஸ் குறிப்பிடுகின்றார்.
(ப15 இயங்கியற் பொருள்முதலியல் பேரா.வெ. தங்கவேல் 1998
தாமரை பதிப்பகம்)
“இந்தச் சூத்திரம் வரலாற்று
வளர்ச்சியின் எல்லா “வடிவங்களுக்கும்” இடம்
தரக்கூடிய அளவு போதுமான பரிபூர்ணம் பெற்றுள்ளது. அதேநேரத்தில் பல்வேறு
சமூக சக்திகளுக்கு இடையேயுள்ள பரஸ்பர செயற்பாட்டிற்கு அப்பால் செல்லும் திறமையற்ற
கதம்பவாதம் இதில் சிறிதுமில்லை. இந்த சக்திகள் பரஸ்பரம்
செயல்படுவது அவற்றின் தோற்றத்தைப் பற்றிய
பிரச்சினைக்கான எந்த தீர்வையும் தரவில்லை என்ற உண்மையைக் கூட இக்கதம்பவாதம் அறிந்து கொள்ளவேயில்லை
இந்தச் சூத்திரம் ஓர் ஒருமைவாதச் சூத்திரம். இந்த ஒருமைவாதச் சூத்திரம்
பொருள்முதல்வாதத்தில் முற்றிலும் தோய்ந்திருக்கின்றது. ஹெகல்
ஆன்மாவின் தத்துவஞானம் என்ற தனது நூலில் ஆன்மா தான் வரலாற்றை இயக்கும் ஒரே
கோட்பாடு என்று கூறினார். வாழ்நிலை சிந்தனையால் தீர்மானிக்கப்படுகிறது
என்ற கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ளும் ஒருவரால் வேறுவிதமாகச்
சிந்திக்க முடியாது.
மார்க்சின் பொருள் முதல்வாதம் எந்த விதத்தில் சிந்தனையின்
வரலாறு வாழ்நிலையின் வரலாற்றால் தீர்மானிக்கப்படுகிறது என்று காட்டுகிறது. ஆனால் கருத்துமுதல்வாதம் “ஆன்மாவின்
வளர்ச்சியால் வரையறுக்கப்பட்ட காரணமாகிய பொருளாதாரக் காரணிகளை
அங்கீகரிப்பதிலிருந்து ஹெகலைத் தடுக்கவில்லை, அதேபோல்
பொருள்முதல்வாதம், வரலாற்றில் ஒவ்வொரு குறிப்பிட்ட
காலத்திலும் இறுதிப் பகுப்பாய்விலும் பொருளாதார வளர்ச்சியின் போக்கால் தீர்மானிக்கப்படும்
திசையில் செல்லும் சக்தியாக “ஆன்மா” வை அங்கீகரிப்பதிலிருந்து மார்க்சைத்
தடுக்கவில்லை. எல்லாச் சித்தாந்தங்களும் ஒரேபொதுவான வேரை-
குறிப்பிட்ட ஒரு சகாப்தத்தின் உளவியல்- கொண்டுள்ளன
என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. உண்மைகளை மிகச்
சிறிதளவேனும் அறிந்த எவரும் உணர்வர்.” (பிளெஹனவ் -ப110-111) இங்கு ஆன்மா என்பது அகநிலையைக் குறித்து
நிற்கின்றது. சமூக அமைப்பில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு
அடிப்படையானது உற்பத்திச் சக்திக்கும் உற்பத்தி உறவிற்கும் இடையேயான முரண்பாடுகள்.
முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது மக்களை புரட்சியை நோக்கி
தள்ளப்படுகின்றார்கள். இங்கு புறநிலைத் தாக்கம் என்பது
அகத்தினை மாற்றுதலுக்கு உட்படுத்துகின்றது.
தமிழ் சூழலில் பொருள்முதல்வாதம்
சமூகத்தினை அதன் வளர்ச்சிப் போக்கில் இருந்து ஆராய
சார்புநிலைக் (சாதிய, பெண்ணியம், மத) கோட்பாடுள்
தடையாக இருக்கின்றது. ஒரு மையவாதச் சிந்தனைக்குள் இருந்து
விடத்தைப் பார்க்கும் தவறான அணுமுறை எங்கும் புரையோடிப்போய் உள்ளது. வேலைப்பிரிவினையை இராஜராஜன் உருவாக்கினான் என்றால் அவன் தனது ஆக்கிரமிப்பு
அரசியலுக்கு உட்பட்டதே. ராஜராஜனுடைய ஆக்கிரமிப்பும் தேவையான
தொழிற்துறை வளர்ச்சி என்பது அவசியமானதாகும். சாதியக்,
மதக்கட்டமைப்பு என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக் கொண்டு
இருக்கின்ற நிலைதான் இருக்கின்றது. மனித வளர்ச்சி எவ்வாறு
இருந்திருக்க முடியும் என்ற அடிப்படையில் இயங்கியல் பொருள்முதல்வாதத்தின்
துணையுடன் ஆராயமுடியும்.
வாசிப்பு முறை என்பது இந்த சமூகத்தில் இருக்கின்ற சிந்தனையே
தீர்மானிக்கின்றது. அதேவேளை
மீள்வாசிப்பு என்பது அன்றைய சமுதாய ஓட்டத்தில் இருந்து வாசிப்பது எவ்வாறு என்பது
ஒரு பயிற்சி தேவை என்பது மறுப்பதற்கு இல்லை. பரிணாம
வளர்ச்சியை புல்லாகிப் பூண்டாகி, புழுவாகி, மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி,
பாம்பாகி, கல்லாய், மனிதராய்
வந்தது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார். பெண்களுக்கு
இயற்கையிலே கூந்தலில் மணம் இல்லை என்ற விவாதத்தை நோக்கும் போது அறிவியல் ரீதியான
சிந்திக்கும் நிலை இருந்துள்ளதை அவதானிக்க முடியும். மனிதர்களின்
செயற்பாடுகளே ஒரு விளைவைத் தீர்மானிக்கின்றது என்ற கருத்தை (இயற்கையாக
மனம் உண்டாகாது) முன்வைத்ததை அவதானிக்க முடிகின்றது. புராண
இதிசாசம் சொல்லும் அணுபற்றிய (அணுக்குண்டு, விமானம் இருந்தது
என்று கருதுவது தவறு) சிந்தனை, பொருள்முதல்வாதக் கூறுகளை
ஆராய்ந்து படிப்பது என்பதில் கூட நம்மிடம் பயிற்சி இல்லை என்பதும் உண்மைதான்.
இந்திய தத்துவத்தில் அகத்திற்கும் (Subjectiv, Purusa), (Objectiv, Prakrit) புறத்திற்கும்
(இடையேயான கருத்துக்குள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் சமூகத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையைப் பற்றி எவரும் ஆராய
முயற்சிக்கவில்லை என்று கருதுகின்றார்
பேராசிரியர் நா. வானமாமலை. தமிழ்
இலக்கியத்தில் பொருள்முதல்முதல்வாதச் - உலோகாயதத்தை
சிந்தனையை ஆராய்ந்துள்ளார். பேராசிரியரின் தமிழ் இலக்கியப்
பரப்பில் செய்ததையே அவர் சொல்லில் இங்கு தரப்படுகின்றது.
தமிழில் உள்ள பௌத்த சமய நூல்களான மணிமேகலை, நீலகேசரியில் உலகாயதம்
விவரிக்கப்பட்டுள்ளது. “ஒன்று பொருள்முதல்வாதம், மற்றொன்று கருந்து முதல்வாதம், இவற்றையே உலகாயதம்,
ஆன்மீகவாதம் என்றும் கூறலாம். இவையிரண்டும்
நேர்முரணான கண்ணோட்டங்கள். இப்பிரபஞ்சத்திற்கு அடிப்படையாது?
பிரபஞ்சத்தின் பொருள்கள் சக்திகள், உயிர்கள்
இவையாவும் எதன் அடிப்படையில் தோன்றின? இக்கேள்விக்கு
இருவிடைகளை தத்துவங்களில் காணலாம். பிறுபாடுகளாலும்
நிலைபெறுகொண்டு இயங்குகின்றன. பிரபஞ்ச வாழ்க்கையின் அடிப்படை
பொருளே (matter), என்ற கண்ணோட்டம் உலகாயதம் அல்லது
பொருள்முதல்வாதம் எனப்படும்” (148)
“இவ்வுலகில் அறவாழ்க்கைக்கு செல்வம்
துணையாகுமானால் அதுவே இன்பவாழ்க்கை என வள்ளுவர் கருதுவார். இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பதே இன்ப
வாழ்க்கைக்கு வழி என்ற கூற்றினை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்
மனித வாழ்க்கைக்குகந்ததாக ஏற்றுக் கொண்ட குறிக்கோள்கள் அறவாழ்க்கை, பொருளீட்டல், இவையிரண்டால் ஏற்படும் இன்பமான இல்லற
வாழ்க்கை ஆகிய மூன்றுமே> பிற்பால சமய நூலார் கூறும்
வீட்டினை வள்ளுவர் முக்கியமான குறிக்கோளாகக் கூறவில்லை. வாழ்க்கை
உண்மையையும்> வாழ்க்கையின்பத்தையும் மறுக்காமல் அவற்றோடு
உடன்பட்டு வாழ்க்கையில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கோடுதான் மிகப்பெரும்பான்மையான
புலவர்கள் பாடினர்” (155)
“தொடியுடைய தோள் மணந்தனன்
குடிகாவிற் பூச் சூடினன்
தண்கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழித்தனன்
நட்டோரை அயர்பு கூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
வேற்று புகழ் வையத்து ஓங்குபுகழ் தோன்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங் கண்டனன்
கடும்பரியமாக கடவினன்
நெடுந்தெருவில் தேர் வழங்கினன்
ஓங்கியல் களி றூர்ந்தனன்
தீஞ்செறி தசும்பு தொலைச்சினன்
மயக்குடைய மொழி விடுத்தனன்- ஆங்கு
செய்பவெல்லாம் செய்தனனாகலின்
இடுகவென்றோ, கடுகவென்றோ
படுவழி வடுக, இப்புகழ் வெய்யோன் தனையே
அப்பாடல் ஒரு மன்னனின் வாழ்க்கையை
வருணிக்கிறது. இதனைப் புலவர்
இலட்சிய வாழ்க்கையென்று கருதுகிறார். இந்த இலட்சியம்
உலகாயதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்வுலகு
உண்மையானது. இவ்வுலகின்
பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க வேண்டும். உண்மை நமது
பிடிக்கு அகப்படாது, அது வெறும் மாயைத் தோற்றம் என்று
கருதுதல் தவறு.
இம்மனிதன் தனது மனைவியை மகிழ்ச்சியோடு வாழச் செய்தான். நண்பர்களுக்கு உதவினான். பகைவர்களோடு வீரத்தோடு போராடினான். பாணர், புலவர் முதலியோரை அவன் உணவும் பரிசிலும் அளித்து உபசரிக்க வேண்டும்.
ஏனெனில் அவர்கள் பாட்டாலும், இசையாலும் மனிதனை
மகிழ்விப்பவர்கள். “
“ இளமை மாறாமல் இருந்தல் வேண்டும்’ மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.’ என்ற ஆர்வம் எல்லாப் பூர்வீக மக்களுக்கும் பொதுவானது.
‘எலீக்ஸீர் ஆப் லைப்’ (elixir of life) அம்ருததாரை
முதலிய கற்பனைச் சாகா மருத்துகளைத் தேடி அலை அவர்களுக்கு இந்த ஆர்வமே ஊக்கம்
ஊட்டியது. சித்தர்களும், தாந்திரீகவாதிகளும்
தங்களது கபாலத்தில் அதனைக் கண்டு கொண்டதாகக் கற்பனை செய்து கொண்டார்கள். யோகத்தின் மூலம் கலாபத்திலுள்ள அமிருதத்தை இளகச் செய்து, சொட்டுச் சொட்டாக வடியச் செய்தால் மரணமின்றி வாழலாம் என்று சித்தர்களும்,
தாந்திரீகளும் நம்பினார்கள். இதற்கு
எதிரிடையாக புறவாழ்க்கையே இன்பத்திற்கு அடிப்படை என்ற கருத்துக் கொண்ட புறப்பாடல்
ஒன்றிருக்கிறது. அது பிசிராந்தையார் எழுதியது. அவருடைய நண்பன் கோப்பெருஞ் சோழனது வினாவிற்கு விடையாகக் கூறியது அப்பாடல். வயது
முதிர்ந்தவராய் இருந்ததும் தலை நரைக்காமலிருந்தது ஏன் என்று சோழன்
புலவரைக் கேட்டான். இதற்குப் பதிலாகக் புலவர்,
தமது மனைவியும் மக்களும் அறிவுடையவர்களாய் இருந்தமையும், அவரது இளையவர்கள் அவர் மனம்போல நடந்தமையும், அரசன்
பிறரால் தீங்குவராமல் காத்தமையும் அவர் ஊரில் நல்லவர்கள் பலர் வாழ்ந்தமையுமே தமது
தலைநரைக்காமலிருக்கக் காரணங்கள் என்று கூறுகின்றார்.
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யங்காகியர் என வினவுதிராயின்
மாண்ட என் மனைவியோடே என் மக்களும் நிரம்பினர்,
யான் கண்டனையார் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான்வாழும் ஊரே” (159-161)
“குடுமி வாழ்க, புலவர்களுக்குப் பொன்றும் நீரும் வழங்கும்
குமிடு வாழ்க’ கடல் விழாக் கொண்டாடும் குமிடு வாழ்க’ பஃறுறி ஆற்றின் மணல் போல்
வாழ்நாட்கள் அதிகமாகுக.’
முதுகுடுமிப் பெருவழுதியை நெடுமாறன் பாடிய பாட்டின்
கருத்தாவது:
கடற்கரை மணலைப் போல உனது ஆயுள் நாட்கள் மிகுவதாக’
மருதன் இளநாகனார் என்னும் புலவர் நன்மாறன் என்னும் பாண்டிய
மன்னனை வாழ்த்திப் பாடிய பாடலின் கருத்து:
‘நுரை மீதேறப் பெற்ற அலைபொங்கும்
கடலின் மணல்போல உன் ஆண்டுகள் மிகுவதாக”
வேறோர் வாழ்த்து: பாணர்களுக்குப் பொன் ஆபரணங்களை
அணிவிப்பான். யவனர் கொணர்ந்த மதுவைப் பொற்கலசங்களில்
அழகிய இளநங்கையர் அளிக்கப்பருகுவான். இத்தகைய மகிழ்ச்சியான
வாழ்க்கையில் நீ பல்லாண்டுகள் வாழ்வாயாக.
மேற்கூறிய சான்றுகளிலிருந்து புறம்பாடிப் புலவர்கள் (1) இம்மை வாழ்க்கை அல்லது இவ்வுலக
வாழ்க்கையில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்கள். (2) இவ்வுலக
வாழ்க்கையை உண்மையென்று கருதினார்கள். (3) இன்பத்தை இவ்வுலக
வாழ்க்கையிலேயே பெறலாம். (4) ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக
நீதிக்குட்பட்டு இவ்வுலகிலேயே இன்பத்தைத் தேடிப்பெறலாம் என்ற கருத்துக்கள்
ஆற்றுப்படைப்பாடல்களில் காணலாம். (5) இனக்குழு உலகக்
கண்ணோட்டத்தின் எச்சமாக முன்னிலை உலகாயதக் கருத்துக்களை புறப்பாடலகளில் காணலாம்.
உண்மையாக, உலகாயதக் கண்ணோட்டத்தின் ஆரம்பம் பஞ்சபூதக் கொள்கை என்னும் சிந்தனை ஒரு
இனத்தாரிடம் தோன்றிய காலத்தின் தான் என்று கூறலாம்.” ( 162)
“பிரக்ஞை உடலின் ஒரு செயல். பொருளின் துகள்களில் உணர்வு இல்லை. இப்பொருட் துகள்கள் சிக்கலான ஆனால் ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்டு
ஐக்கியமாகும் பொழுது உயிர்ப்பண்புகள் அப்பொருளமைப்பில் தோன்றுகின்றன. உணர்வும் உயிரும் ஒன்றே. நமது சிந்தனைக்கு அது தோன்ற
ஏதுவாகயிருக்கும் சிந்தனைச் சக்தி மூலகங்களின் ஐக்கியம் சிதையும் பொழுது மறைந்து
போகிறது. உடல் அழிகிற போது உணர்வும் அழிந்து போகிறது.
ஊடலில்லாமல் உணர்வை மட்டும் தனியாக அறிய முடியுமா? உடல் அழிந்த பிறகு உணர்வு அல்லது உயிரும் அழிந்து போவதால் செத்த பிறகு
அவ்வுடலிலிருந்து கூடுவிட்டு கூடு பாய்வதற்கு எவ்வித சக்தியும் கிடையாது. சூரிய வெளிச்சத்தால் தாமரை இதழ்கள் விரிகின்றன. அதுயில்லாத
போது சுருங்குகின்றன. இதுபோலவே புறத்தூண்டுதல்களால்
மனிதர்கள் இயங்குகின்றனர். அவர்களில் உடல் இயக்கம், உள்ள இயக்கம் இவையனைத்திற்கும் புறத்தூண்டுதல்களே காரணம். மனித வாழ்க்கையையோ, பிரபஞ்ச இயக்கத்தையோ
தூண்டுவதற்கு ஒரு சிருஸ்டிகர்த்தா, இறைவன் அல்லது கடவுள்
தேவையில்லை” (165)
இந்த இடத்தில் ஏங்கெல்சின் கருத்தானது “பருப்பொருள் என்பது
சிந்தனையின் உற்பத்திப் பொருள் அல்ல, சிந்தனை என்பது பருப்பொருளின் உன்னதமான விளைபொருளே தவிரவேறில்லை. இது பச்சையான பொருள் முதல்வாதம் என்பது உண்மையே’ (ப.
35 லுத்விக்ஃபாயர்பாகும் - ஏங்கெல்ஸ்)
“மணிமேகலையில் இருந்து
“பூதவாதியைப் புகல் நீ என்னத்
தூதகிப் பூவும்
கட்டியும் இட்டு
மற்றங் கூட்டத்து மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடு பூதத்துணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அப்வப்பூத அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோசையில் கெடும்
உயிரொடுங்கூட்டிய உணர்வுடையப் பூதமும்
அவ்வப்பபூத வழியவை பிறக்கும்
மெய்வகை இதுவே>
வேறுரைவிகற்பமும்
உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே
கண் கூடல்லது கருத்தளவழியும்
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்மை மறுமையுண்டாய்வினை துய்த்தலே
“தாதகிப் பூவையும் கருப்புக் கட்டியைச்
சேர்த்துக் கொதிக்க வைத்தால் மதுச்சாறு உண்டாகிறது. அமே அறிவு பெறமுடியும். அனுமானப்
பிரமாணம் போலித் தன்மையுடையது. உண்மையை அறி அது சரியான
பிரமாணமாகாது. உலகம் உண்மையானது. அதன்
விளைவுகள் இவ்வுலகத்தில் தான் காணப்படும். வேறோர் உலகத்தில்
இவ்வுலக வினைகளில் பயன்பளைத் துய்ப்போம் என்பது பொய்யாகும்”.
“பூதவாத விளக்கத்தைக் கேட்டபின்னர்
மணிமேகலை அதனை மறுத்துரைக்கும் முறையில் சிலகேள்விகளை கேட்கிறாள். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் அதிசயச்
செயலின் மூலம் அவள் தனது முற்கால வாழ்வின் நிகழ்ச்சிகளை அறிந்திருந்தாள். இது கதை, உருவெளித் தோற்றங்களும், கனவு நிகழ்ச்சிகளும், தெய்வ நம்பிக்கையால் தோன்றும்
மயக்கங்களும் பொய்யென்று பூதவாதி கூறுகின்றான். அவற்றைப் பற்றி
ஐயுறுதல் வேண்டும்.
பழைய உரையாசிரியர் இத்தத்துவத்தின் மூன்று விசேட வகைகளை
வேறுபடுத்திக் கூறுகின்றார். 1) பூதவாதம்
2) உலகாயதம் 3) சாருவாகம்
பூதவாதத்தின் உட்பிரிவுகள்:
பூதவாதிகள் ஐம்பூதங்களில் நம்பிக்கையுடையவர்கள். ஆனால் சாருவகர்களும், உலகாயதர்களும் நான்கு பூதங்களில் நம்பிக்கையுடையவர்கள். ஆகாயம் அல்லது விண்ணினை அவர்கள் ஒரு பூதமாகக் கருதவில்லை. இதனை தட்சிண் நாராயண
சாஸ்திரி கூறுகின்றார். ‘உணர்வு’ என்பது உணர்வற்ற பூதங்களின் கூட்டால் ஏற்படுகிறது என்பதே
உலகநாயதர் கொள்கை. உயிருடைப் பூதம், உயிரில்
பூதம் என்று மணிமேகலையில் பூதவாதி கூறுவது போன்று இருவகைப் பூதங்கள் அவர்கள்
கொள்கைப்படி இல்லை. இவ்விருவகைப் பூதக் கொள்கை> முரணற்ற பொருள்முதல்வாதக் கொள்கைக்கு
முரணானது. ஏனெனில் உயிருடைப் பூதம் என்பது
பூதங்களில்லாமல் வேறோர் சக்தியோடு இயைபு கொண்டு தோன்றுவதாக இருத்தல் வேண்டும். உயிர் என்பது என்னவென்பதை
அக்கருத்துப்படி பூதங்களின் கூட்டால் தான் உலகிலுள்ள அனைத்தும் உண்டாகின்றன என்று
விளக்குவது இயலாது. இவ்விருவகைப் பூதங்கள் பற்றி உலகாயதர்
கருத்துக்கள் யாவை என்று அறிவதற்குச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
மணிமேகலைக் காவியத்தில், பூதவாதியின் தத்துவவிளக்கத்தை கேட்டபின்னர், அவனுடைய
விவாதத்தை முறியடிக்க மணிமேகலை சில வினாக்களை விடுத்ததாகச் சொல்லபட்டிருக்கின்றது.
தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசய சம்பவம் ஒன்றின் மூலமாக தனது
முற்பிறப்பைப் பற்றி அறிந்து கொண்டிருந்ததாக மணிமேகலையின் கதை கூறும். தனது முற்பிறப்பு பற்றித் தனக்குத் தெரியுமென்று அவள் பூதவாதியிடம்
கூறுகிறாள். இதற்குப் பதிலாக, தெய்வங்களின்
மீது நம்பிக்கை கொள்வதால் அத்தெய்வங்களை நேரில் கண்டதாகக் கூறுவதும் உருவெளித்
தோற்றங்களும், மாயைத் தோற்றங்களும், கனவுகளும்
பிரக்ஞையற்ற நிலையும் ஆகிய அனைத்தும் நம்பத் தகாதவை என்று பூதவாதி கூறுகின்றான். காட்சிப் பிரமாணம் (direct
perception) ஒன்றையே தான் நம்புவதாகப் பூதவாதி கூறுவதாக
வேண்டுமென்றே எண்ணிக் கொண்டு, அவனிடம் அவள் ஒரு கேள்வி
கேட்கிறாள், “அனுமானத்தின் மூலம் அல்லாமல், உன்னுடைய பெற்றோர்களை நீ எவ்வாறு அறிவாய், நேரடிக்
காட்சியால் மட்டும் அல்லாமல், அனுமானத்தின் மூலம் நாம்
உண்மையை அறிகிறோம். அனுமானத்தின் மூலமான் அறியும் உண்மைகளை
நம்ப மறுக்காதே.” (175)
“மணிமேகலையிலும், நீலகேசரிலும் கூறப்படும் பூதவாதக் கருத்துக்களில் காணப்படும் வேறுபாட்டை
மணிமேகலை உரையாசிரியர் குறிப்பிட்டு விளக்குகிறார். மணிமேகலையின்
பூதவாதி உயிருள்ள பூதம் உயரற்ற பூதம் என இருவகை பூதங்கள் உள்ளனவென்று சொல்லுகிறான.
உயிருள்ள பூதங்களிலிருந்து உயிருள்ளவையும், உயிரற்ற
பூதங்களிலிருந்து உயிரற்றவையும் தோன்றுவதாக
அவனே கூறுகிறான். உலகாயதர்கள் இவன் சொல்லுவது போல
இரண்டுவகைப் பூதங்கள் உள்ளனவென்று ஒப்புக் கொள்ளுவதில்லை. மணிமேகலையின்
பூதவாதி இத்தத்துவத்தில் சிற்சில வேறுபாடுகள் கொண்ட சிலவகைச் சித்தாந்தங்கள்
உள்ளனவென்று கூறுகின்றான். நீலகேசியில் பூதங்களே தம்முள்
கூடி உணர்வு, மகிழ்ச்சி முதலிய பிரக்ஞைகளைத் தோற்றுவிப்பதாக
ஆசிரியர் கூறுகிறார், பூதத்திரள்களில் உயிருள்ளவை உயிரில்லாதவை என்ற பாகுபாட்டை
நீலகேசரி கூறவில்லை. (177)
“வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள்
சில உள்ளன. அவற்றிற்கு எந்தத் தத்துவமும் விடையளிக்க
வேண்டும். உயிர் என்றால் என்ன? உடலுக்கும்
உயிருக்கும் என்ன தொடர்பு? இப்பிரபஞ்சத்தை மனிதன் எவ்வாறு
அறிகிறான்? பிரக்ஞை என்றால் என்ன? சாவுக்குப்
பின் உயிரின் நிலை என்ன? இவ்வுலகத்தில் புனர்ஜன்மம் உண்டா?
வேறோர் உலகில் வாழ்க்கை உண்டா? இக்கேள்விகளுக்கு
ஐம்பூதக் கொள்கையடிப்படையில் உலகாதர்கள் விடையளித்தனரா? அவர்களே
எழுதிய நூல்களெதுவும் பண்டைக் காலத்திலிருந்து நமக்கு கிடைக்காததால், இக்கேள்விகளுக்கு அவர்கள் என்ன விடையளித்தனர் என்பதை நம்மால் அறிய
முடியவில்லை. உலகாயதரின் பகைவர்களே அவர்களது கருத்துக்கள்
இவையென்று பண்டைக் காலமுதல் சொல்லி வந்திருக்கிறார்கள். அதுவே
பூர்வ பட்சவாதம், உலகாயதர்களுடைய கருத்துக்களை பகைவர்கள் திரிபின்றிக் கூறுவார்கள் என்று
எதிர்பார்க்க முடியாது. பகைவர்கள், உலகாயதர்களின்
கருத்தை திரித்துக் கூறுவது எளிது. பகைவர்களின் பூர்வபட்சக்
கருத்துகளிலிருந்து உலகாயத்தின் உருவத்தை முழுமையாக அறிவது கடினம்..” (178)
மீமாம்சம், வேதவாதம், சாக்கியம், நியாயம்,
வைசேசிகம் முதலிய தத்துவங்களிலும் மிகவும் பழமையானது உலகாயதம்
என்கிறார் பேரா. வானமாமலை.
“1.தொன்மையான இந்திய உலகாயதர்கள் உலகம்
உண்மையானதென்று நம்பினர். (அதாவது
உலகம் மாயைத் தோற்றமல்ல உண்மையானது)
2. பொருள்களின் இயற்றை செயல்கள்
இவற்றினடிப்படையிலேயே வாழ்க்கை எழுகிறது.
3. உலக வாழ்க்கையின் பொருளாயத
அடிப்படையில் ஐம்பூதங்கள் (நான்கு
என்று கருதுவோரும் இருந்தனர்)
4. ஐம்பூதங்களின் பல்வேறு வகையான
சேர்க்கையால் பிரபஞ்சத்தின் பல்வேறு பொருள்களும் உயிரினங்களும் உண்டாகின்றன.
5. உணர்வும் உயிரும் ஒன்றே அது ஐம்பூதச்
சேர்க்கையால் உண்டாவதே. ஐம்பூதங்களின்
ஒரு குறிப்பிட்ட விதமான சேர்க்கையால்
உணர்வு என்ற குணம் பொருளில் தோன்றுகிறது.
6. உண்மையைக் காட்சிப் பிரமாணத்தால்
அறியலாம்.
7. காட்சியும், காட்சியை அடிப்படையாகக் கொண்ட அனுமானமும்
அறிவைப் பெறும் வாயில்கள் அல்லது இவையே அறிவின் ஊற்றுக் கண்கள், காட்சியின்றி, அனுமாமில்லை. அனுமானமின்றி
அறிவு தோன்றுவதில்லை.
ஏழவாவது எண்ணுள்ள கருத்தைப் பற்றி தத்துவ உலகில் ஒரு
விவாதம் நிகழந்துள்ளது. பண்டை
உலகாயதர்களுடைய கருத்தில் அனுமானம் என்பது ஓர் அறிவுச் சாதனம் என்று அவர்கள் கருதினார்களா? இந்த
விவாதத்தை விளக்கிக் கொள்ள முயல்வோம். மணிமேகலைக் காப்பியம்
பல்வேறு தத்துவங்களின் கருத்துக்களை எதிர்த்துக் கூறி அவை ஒவ்வொன்றின் அறிதல்
முறையையும் விளக்கிக் கூறுகிறது. இவையணைத்தையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. “உலகாயதம் பிரத்தியட்சத்தை மட்டும் ஒப்புக் கொள்ளுகின்றது. பௌத்தம் பிரத்தியட்சத்தையும் அனுமாத்தையும் ஒப்புக் கொள்ளுகிறது. சாங்கியம் மேற்கண்ட இரண்டோடு ஆகமத்தையும் ஒப்புக் கொள்ளுகிறது. நியாயவாதிகள் மேற்மேற்கண்ட நான்கோடு அருத்தா பக்தியை ஒப்புக்
கொள்ளுகிறார்கள். மீமாம்சகர்கள் மேற்கண்ட ஐந்தோடு
அபாவத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.”
“இதிலிருந்து பண்டை உலகாயதர்கள்
காட்சிப் பிரமாணம் அல்லது பிரத்தியட்சத்தை மட்டும் அறிவு அபறும் முறையாக
கருதினார்கள் என்பது மற்றைய தத்துவாதிகளின் கருத்து என்பது புலனாகிறது. இக்கருத்து மணிமேகலையில் மீமாம்சவாதியின்
வாயிலாக கூறப்படுகிறது. மணிமேகலை உரைக்காரர், இக்கருத்தோடு வரதராயர் போன்ற பிற்கால தருக்க ஆசிரியர்கள் ஒன்று படுவதாகக்
கூறுகிறார். வரதராயரின் தருக்க ரட்சை என்ற நூலில் உலகாயதர்
கருத்தில் அறிவு பெறும் வழி காட்சிப் பிரமாணம் ஒன்றே என்று கூறுகிறார். இதனை மணிமேகலை உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
பண்டை உலகாயதர்கள் காட்சிப் பிரமாணம் ஒன்றைத் தான் அறிவு
பெறும் வழி என்று கருதினார்களா? அனுமானத்தை அறவே ஒதுக்கிவிட்டார்களா?
மேற்கூறிய விவரங்களிலிருந்து உலகாயதத்தின் விரோதிகள்
அவ்வாறு கருதினார்கள் என்று தெரிகிறது. ஆனால் பகைவர்களின் கூற்றிலிருந்தே பூதவாதிகளின் தத்துவத்தில்
முடிவுகளுக்கு வர அவர்கள் காட்சி, அனுமானம் என்று இரண்டு
அறிதல் முறைகளையும் பயன்படுத்தினார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அனுமானத்தை உடலின் வேறாக ஆத்மா உள்ளது என்ற கூற்றை நிரூபிக்கவோ இம்மையிற்
செய்த வினைகளின் பயன்களை அனுபவிக்க மறுமையுலகம் ஒன்று உண்டு என்பதை நிரூபிக்கவோ
பயன்படுத்தலாகாது என்று உலகாயதவாதிகள் கூறினார்கள்.
இந்தப் பிரச்சினையை தட்சிண நாராயண சாஸ்திரி ஆராய்ந்துள்ளார். அவர்
கூறுவதாவது “ உலகாயதர்கள் அனுமாத்தை இருவையாகப் பிரிக்கிறார்கள். ஓன்று வருங்காலத்தை குறித்த அனுமானம், மற்றொன்று
இறந்த காலத்தை குறித்த அனுமானம். வருங்காலம் குறிந்த
அனுமானம் தவறானது. அனுமானம் என்ற அறிதல் முறையின்
எல்லைக்கப்பாற்பட்டது. இறந்த காலம் குறித்த அனுமானம் அறிதல்
எல்லைக்குட்பட்டது. எனவே முதலாவது முறை தவறானது இரண்டாவது
சரியானது.”
இவ்வாறு தட்சிண நாராயண சாஸ்திரி சொல்வதை தாஸ்குப்தா
விளக்கிக் கூறுகிறார். அவர்
ஏழாவது நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தரர் என்னும் உலகாயதவாதியை மேற்கொள்
காட்டுகிறார். “புரந்தரர், உலகையறிய
அனுமானமும் உபயோகமான அறிதல் முறையே. ஆனால் ஒவ்வொரு அனுமானத்திற்கும்
காட்சியின் அடிப்படையான சான்று வேண்டும். அனுமானத்திற்கு
அடிப்படையாகக் காட்சி அல்லது அனுபவம் இருந்தல் வேண்டும். மறுமை
உலகை நிரூபிக்கவோ சாவுக்குப் பின் வாழ்க்கை நீடிக்கிறது என்ற கொள்கையை நிரூபிக்கவோ
அனுமானத்தைப் பயன்படுத்தலாகாது. ஏனெனில் இவை மூன்று
காட்சிக்கும் அனுபவத்திற்கும் எட்டாதவை” என்று கூறுகின்றார்.”
“இப்பொழுது தட்சிண நாராயண சாஸ்திரியின்
கூற்று தெளிவாகிறது. அனுமானமுறை
பொருளடிப்படையிலான இம்மை வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டாம். சாவுக்கு அப்பாலுள்ள வாழ்க்கை போன்ற இம்மை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட
கருத்துக்களை நியாயப்படுத்த அனுமானத்தைப்
பயன்படுத்தலாகாது. தாஸ்குப்தா, புரந்தரர்
கூறுவதாக மேற்கோள் காட்டும் பகுதி இதனை இன்னும் தெளிவாக்குகிறது. “அனுமானத்தைப் பயன்படுதுவதில் இரு வேறு உலகங்களைப் பிரித்தறிய வேண்டும்.
ஒன்று அனுபவத்திற்குட்பட்ட உலகம் மற்றொன்று அனுவத்திற்கப்பாற்பட்ட
உலகம். உலகாயதர்கள் அனுமாத்தை அனுபவ உலகத்திற்குப்
பயன்படுத்துகிறார்கள். அதற்கப்பாற்பட்ட உலகத்திற்கு
பயன்படுத்த மறுத்தார்கள். கடவுள் இருக்கிறார்,’ மறுபிறப்பு உண்டு’ மறு உலகம் உண்டு’ யக்ஞவினைகளால் பயன் விளையும்’ நற்செயல்களால்
சொர்க்கமும் தீய செயல்களால் நரகமும் கிடைக்கும் இது போன்ற அனுமானங்கள் அனுபவ
உலகத்திற்கு அப்பாற்பட்டவை. இதனை உலகாயதர்கள் மறுத்தார்கள்.
ஆனால் உலகாயதத்தின் பகைவர்கள்
அவர்கள் அனுமானத்தையே மறுத்ததாகக் கூறி உலகாயதன் புகை கண்டவிடத்துத் தீயை
ஒப்புக் கொள்ள மாட்டான் என்று கேலி செய்தார்கள். புகையும்
தீயும் அறிதல் முறையாகப் பயன்படுத்துவதை உலகாயதர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் ஆன்மீகவாதத் தத்துவவாதிகள் உலகாயதத்தை மறுப்பதற்காக உண்மையை
மறுத்தார்கள்.
தென்னிந்திய உலகாயதத்தைப் பற்றி மேலும் ஆராய்தல் அவசியம். பிற்காலத் தத்துவ நூல்கள் தவிர சித்த
நூல்களையும் ஆராய்தல் வேண்டும். சில உலகாயத தத்துவக்
கோட்பாடுகள் சித்தர் பாடல்களில் உள்ளன. ஆனால் சைவசித்தாந்த
கருத்துக்களோடு கலந்தே காணப்படுகின்றன.
உலகாயதக் கொள்கைகளுக்கும், சைவசித்தாந்த
ஆன்மீகக் கொள்கைகளுக்கும் சித்தர் பாடல்களுக்கும் உள்ள முரண்பாடுகளை, தத்துவச் சூழ்நிலை, கருத்து வளர்ச்சி, வரலாற்றுப் போக்கு என்ற ரீதியில் ஆராந்தால் தமிழ் நாட்டு தத்துவ
அறிவுக்குப் பெரும் பயன்விளையும். “179-183 நா. வானமாமலை- வெ. கிருஸ்ணமூர்த்தி
ஆய்வு வட்ட வெளியீடு 6)
“தம்மால் முடியும் என்ற நம்பிக்கை, மனித சக்தியில் நம்பிக்கை முதலிய
கருத்துக்கள் இச்சமுதாயத்தின் உலகக் கண்ணோட்டமாயிருந்தன.” (157) இனக்குழுத்தின் காலத்தில் இயற்கை மீதான பயம் என்பது தன்னை வெல்ல முடியாத
சக்தி என்பதினால் ஆகும். எப்போ இயற்கையை தன்னால்
கண்டுப்படுத்த முடியும் என்ற சக்தி பெற்றபின்னர். மனிதர்கள்
தான் உருவாக்கியவற்றிற்கே அடிமையாகிப் போனார்கள். பழந்தமிழ்
இலக்கியத்தில் இருந்த பொருள்முதல்வாதக் கருத்தானது வீரயுகத்தில் இருந்து
ஆரம்பமாகின்றது. இந்தக் காலத்தில் இனக்குழும முறையின்
சிதைவையும், நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தொடர்ச்சியை சுட்டி
நிற்கின்ற காலத்தைய பொருள்முதல்வாதத்தினை முன்னிலை உலகாயதம் (proto
materialism) என்று வரையறைத்துக் கொள்கின்றார்.
தமிழ் இலக்கியத்தின் சுவையை பக்தி இலக்கியங்களை தவிர்த்து
விட்டு பார்க்க முடியாது. அந்த
இலக்கியங்களில் உள்ள இலக்கண வளம் போன்றவை மதம் சார்ந்த சிந்தனையை பறைசாற்றுகின்றது
என்ற காரணத்திற்காக ஒதுக்கிக் கொள்ள முடியாது. ஆனால் அந்த
இலக்கியத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையை முன்கொண்டு வருவது கூட பெரும்
சவாலே. தமிழ் சமூகத்தில் பொருள்முதல்வாதம் இருந்துள்ளதை நாம்
அன்னிய தேசத்தவர்களின் ஆய்வின் ஊடாக அறிய முடிகின்ற அலவம் இருக்கின்றது. இதில் பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த ஆய்வு
முறை முன்னோக்கிச் செல்லவேண்டும் என்றால் இயங்கியல்- வரலாற்று
பொருள்முதல்வாதத்தில் நீண்ட பரீட்சையம் எவ்வளவு முக்கியமே தமிழ் இலக்கிய
வரலாற்றைப் பற்றிய பரீட்சையும் அவசியமாகும்.
இயங்கியல் - வரலாற்று
பொருள்முதல்வாதம்:-
இயங்கியல், வரலாற்று பொருள்முதல்வாதம் (அரசியல் பொருளாதாரம்), வர்க்கப்
போராட்டம் மார்க்சீயத்தின் உயிர்நாடியாகும். மார்க்சியத்தின்
மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
மார்க்சீய வரலாற்று மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொருள்முதல்வாதம் அனைத்து விதமான கருத்துமுதல்வாத
குப்பைகளையும், மதம்
கற்பிற்கும் புரட்டுகளையும் எதிர்த்து நிற்கும் ஒரே தத்துவம். மூடநம்பிக்கைளை எதிர்த்து நிற்பது பொருள்முதல்வாதம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மார்க்சீயத்தின் தத்துவத்தினை
நிரூபிக்கின்றன. இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான,
ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில்
வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக
வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின்
சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார்.
இயற்கை:
இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும்
பருப்பொருள். சுயமாக இயங்கிக்
கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையை மனித அறிவில்
பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து
பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே
உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு வளர்ச்சிக்
கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து
வந்துள்ளது.
உழைப்புப் பிரிவினையானது வளர்ச்சிக் கட்டங்களை கடந்து
வந்துள்ளது. உழைப்புப்
பிரிவினை உற்பத்தி சாதனத்தின் வளர்ச்சி, பரிவர்த்தனை,
வினைபயன் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பரஸ்பர உறவுகளை நிர்ணயம்
செய்கின்றது. “மார்க்ஸ் உடைமையின் முதல் வடிவம் பூர்வகுடி (stammeigentum)
உடமையாகும். உற்பத்தியின் வளர்ச்சியற்ற
கட்டத்துக்கு இது பொருத்தமானது, இந்த கட்டத்தில் மக்கள்
வேட்டையாடுதல் மீன்பிடித்தல் மூலமும், விலங்குகளை வளர்த்தல்
அல்லது ஆக உயர்ந்த கட்டத்தில் விவசாயம் மூலமும் வாழ்ந்து வந்தனர்.” (பக்.23 தேர்வு நூல்கள் 1) பூர்வக்குடியென்றும்
இனக்குழுமவடித்தின் ஊடாக புதிய சமூக அலகுகள் உருவாகியும் விரிந்து செல்வதையும்
மார்க்சீயம் விளங்கவைக்கின்றது. இவ்வாறு வளரும் சமூகம்
உழைப்பை வழங்காமல் அறிவை மட்டும் வர்க்கம் உருவாக்கப்படுகின்றது. இவர்களுக்கே தத்துவவிசாரணை செய்யும்
வல்லமை பெறுகின்றனர். தத்துவ ஆய்வு செய்யும் புலமை
கொண்டவர்கள் பண்டையக் காலத்தில் இருந்து இன்றுவரை சிந்தனை எவ்வாறு தோன்றுகின்றது
என்பது பற்றிய பிரச்சினை இருந்து கொண்டு வருகின்றது. விண்ணில்
இருந்து மண்ணுக்கு இறங்கும் ஜேர்மன் தத்துவஞானத்திற்கு நேர்மாறாக முறையில் தாம்
மண்ணில் இருந்து விண்ணுக்கு ஏறுகின்றோம் என ஜேர்மன் சித்தாத்த்தில் ஏங்கெல்ஸ்
எழுதுகின்றார். மேலும்
அனுபவவாத மூலம் சரிபார்க்க முயல்வதும் மற்றும்; பொருள்வகை
மெய்க்கோள்களுக்கு கட்டுப்படுபட்டதுமாகும். இவ்வாறாக தார்மீக
ஒழுக்க, சமய, இயக்க மறுப்புவாதம்
மீதமுள்ள சித்தாந்தம் அனைத்தும் மற்றம்
பொருத்தமான அவற்றின் உணர்வின் வடிவங்களும்
இனிமேல் சுயேட்சையின் சாயலைக் கூட நீடித்து வைத்திருக்க முடியாது. அவற்றிற்கு வரலாறு இல்லை.
ஆனால் பொருள் உற்பத்தியையும் பொருளாதார ஒட்டுறவையும் வளர்த்து
சிந்தனையின் விளைபயனை மாற்றிக் கொள்கின்றார்கள். வாழ்க்கை
உணர்வால் தீர்மானிக்கப்படுவதில்லை.
ஆனால் உணர்வு வாழ்க்கையால் நிர்ணயிக்கப்படுகின்றது. முதல் அணுகுமுறையில் வாழும் நபர் என்ற வகையில் எடுத்துக் கொள்ளப்படும்
உணர்வு துவக்க நிலையாக இருக்கும். இரண்டாவது முறையில் இது
மெய்யான வாழ்க்கையுடன் பொருத்தியங்கும். மனிதர்கள்
கண்டுணரும் வளர்ச்சிப் போக்கிலான மனிதர்கள் ஆவர். மனிதர்களின்
அகவுணர்வைத் தீர்மானிப்பது புறவுல மாற்றங்களும், நிகழ்வுகளும்
புலவுலகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப மனிதர்கள் தமது சிந்தனையை மாற்றிக்
கொள்கின்றார்கள். (மேற்குலகில் நம்மவர்கள் குறிப்பிட்டளவு
சிந்தனை மாற்றத்திற்கு உற்பட்டுள்ளார்கள்) மனிதர்களின்
அகநிலை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள புறநிலையில் மாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும்.
இயங்காவியல்
|
இயங்கியல்
|
இயற்கைப் பொருட்களும் அவற்றின்
நிகழ்வுகளும் தற்செயலாகக் குவிந்து கிடக்கும் ஏதோ ஒரு குவியல். அவைகளுள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை.
ஒவ்வொன்றும் மற்றவைகளிலிருந்து பிரிந்து இருக்கின்றது. ஒன்றையொன்று சார்ந்து இராமல் தனித்திருக்கின்றன.
|
இயற்கைப் பொருட்களும் அவற்றின்
நிகழ்வுகளும் முழுமைத் தன்மையுடையவை. ஒன்றுடன் ஒன்று
உடலும் உயிரும் போல் பிணைக்கப்பட்டவை. ஒன்றையொன்று
சார்ந்தவை. ஒன்றின் தன்மை மற்றொன்றின் தன்மையை
நிர்ணயிப்பவை.
|
ஒவ்வொரு பொருளிலும் இயக்கப்
போக்கிலும் ஒரே ஒரு கூறுமட்டும் உண்டு. உதாரணமாக போரில் போர் என்ற கூறு மட்டும் உண்டு.
|
ஒவ்வொரு பொருளியலும் இயக்கப்
போக்கிலும் இரு எதிர் மறையான கூறுகள் உண்டு. உதாரணமாக போரில் போர், அமைதி என்ற
இரண்டு கூறுகள் உண்டு.
|
இயற்கை இயங்கா நிலையில் தேங்கிய
நிலையில் மாறா நிலையில் உள்ளது.
|
இயற்கை இடையறாது இயங்கிக்
கொண்டிருக்கிறது. மாறிக்
கொண்டிருக்கின்றது. தன்னை தானே புதுப்பித்து
கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இயற்கையில் எப்பொழுதும் ஏதாவதுதொன்று நொறுங்கிச் சிதைந்து
கொண்டும் அழிந்து கொண்டுமுள்ளது. எப்பொழுதும் ஏதாவது ஒன்று
தோன்றி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
|
வளர்ச்சியின் போக்கை சாதாரணமாக
வளர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு போக்கா கருதுகின்றது. ஒரு பொருளில் ஏற்படும் அளவுமாற்றம்
குணமாற்றத்தை உருவாக்குவதில்லை.
|
ஒரு பொருளின் அளவில் ஏற்படும்
அற்பமான புலனுக்கெட்டாத மாறுதல்கள் அந்தப் பொருளின் பகிரங்மான அடிப்படையான
மாறுதல்களை, குணமாற்றங்களை
உருவாக்குகின்றன. இதுதான் வளர்ச்சி.
|
வளர்ச்சிக்கு அகக்காரணத்தை (உள்முரண்பாட்டை) மறுக்கின்றது. புறக் காரணம் தான் வளர்ச்சிக்குக் காரணம்.
|
அகக் காரணம் (உள்முரண்பாடு) தான்
வளர்ச்சிக்கு அடிப்படை. புறக்காரணம் துணையானது தான்.
|
பொருளின் குணத்தில் ஏற்படும்
மாறுதல்கள் படிப்படியாக நிகழ்கின்றன.
|
பொருளில் ஏற்படும் குணமாற்றம்
திடீரென பாய்ச்சலில் ஏற்பட்டு படிப்படியாக முழுமையடைகின்றது.
|
கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு
ஏற்படும் வளர்ச்சிப் போக்கு இணக்கத்துடன் வெளிப்படும் நிகழ்சியாகும்.
|
ஒன்றின் இருத்தல் மற்றது
இருப்பதற்கு நிபந்தனையாக இருந்து ஒரு பொருளில் சகவாழ்வு நடத்துகின்ற இரு
எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டத்தின் விளைவாக ஒன்று மற்றொன்றாக மாறுதல், ஒன்றின் இடத்துக்கு மற்றொன்று மாறுதல்
காரணமாக பாய்ச்சலில் வளர்ச்சி- குணமாற்றம் ஏற்படுகின்றது.
|
வளர்ச்சி படிப்படியாக நேர்கோட்டில்
நடைபெறுகின்றது.
|
வளர்ச்சி வட்டப் பாதையில் நிகழாமல்
சுழலேணி முறையில் நிகழ்கின்றது. நிலை மறுப்பின் நிலைமறுப்பு காரணமாக வளர்ச்சி நடைபெறுகினறது.
|
(ப.45-47
பேரா. வெ. தங்கவேல்சாமி -இயங்கியற் பொருள்முதலியல் 1998)
பொருளாதாரம்:
கருத்துமுதலியல் (கருத்துமுதல்வாதம்)
|
பொருள்முதலியல் (பொருள்முதல்வாதம்)
|
முற்றுமையான கருத்தின் (absolute idea)) பிரிதிபிம்பமே இந்த உலகம்.
பரம்பொருளின் (universal spirit) உருவமே
உலகம். கருத்து இருப்பதாலே இந்த உலகம் உள்ளது.
|
உலகம் என்பது அதன் தன்மையிலேயே, இயல்பிலேயே ஒரு பொருளாக அமைந்துள்ளது.
பொருளின் இயக்க விதிகளின்படி தான் உலகம் வளர்கிறது. அதன் வளர்ச்சிக்கு ஒரு ‘பரம்பொருள்’ தேவையில்லை.
|
கருத்து மட்டும் தான் உண்மையில்
இருக்கின்றது. பௌதிக உலகம்,
வாழ்வு இயற்கை அனைத்தும் நமது கருத்தில் புலனுணர்வுகளில்
மட்டுமேயிருக்கின்றன.
|
பொருள், வாழ்வு, இயற்கை
அனைத்தும் நமது கருத்தைச் சார்ந்திராமல் புறவயமாக நிலவுகின்றன.
|
கருத்துமுதன்மையானது, அது பொருள் தோன்றுவதற்கு அடிப்படை.
|
பொருள் முதன்மையானது, அது கருத்து தோன்றுவதற்கு அடிப்படை
|
உலகத்தை அதன் விதிகளையும் தெரிந்து
கொள்ளுதல் இயலாது.
|
உலகத்தையும் அதன் விதிகளையும்
முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியும்.
|
உலகைப் பற்றிய நமது அறிவு நம்பத்
தகுந்தல்ல.
|
சோதனை மூலமாகவும், நடைமுறை மூலமாகவும் சோதிக்கப்பட்ட இயற்கை
விதிகள் பற்றிய அறிவு நம்பத்தகுந்தது.
|
புறவயமான உண்மையை (objective truth) அங்கீகரிப்பதில்லை.
அறிவியலால் தெரிந்து கொள்ள முடியாத பொருட்களால் நிரம்பியதே
இவ்வுலகம்
|
புறவயமான உண்மையை அங்கீகரிக்கின்றது. தெரியமுடியாத பொருட்கள் ஏதும் உலகிலில்லை.
அறிவியலின் முயற்சியாலும் நடைமுறையாலும் இன்னும் தெரியப்பட
வேண்டிய பொருட்கள் உலகிலுள்ளன.
|
ஒரு சமுதாயத்தின் (society) ஆன்மீகவாழ்வு (spiritual
life) (அதாவது, ஒரு சமூகத்தில் தோன்றும்
கருத்துக்கள் (ideas) தத்துவங்கள் (theories) அரசியற் கொள்கைகள் (political
views முதன்மையானது. இதுதான் அந்தச்
சமுதாயத்தின் பௌதிக வாழ்வின் (material life) அதாவது
குறிப்பிட்ட உறவுகளைக் கொண்ட சமூக அமைப்பின் அடிப்படை.
|
ஒரு சமுதாயத்தின் பௌதிக வாழ்வு (அதாவது குறிப்பிட்ட உறவுகளைக் கொண்ட சமூக
அமைப்பு) முன்மையானது. இதுதான்
அச்சமூகத்தில் தோன்றும் கருத்துக்கள், தத்துவங்கள்,
அரசியல் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படை.
|
ஒரு சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வு
தான் புறவயமான உண்மை (objective
reality) இதுதான் சமுதாயத்தின் பௌதிக வாழ்வை அமைக்கின்றது.
|
ஒரு சமுதாயத்தின் பௌதிகவாழ்வு
மனிதனின் அகநிலை விருப்பங்களுக்கு அப்பால்பட்ட ஒரு புறவயமான உண்மை. இந்தப் புறவயமான உண்மையின் பிரதிபலிப்பு தான் ஒரு
சமுதாயத்தின் ஆன்மீக வாழ்வாகும்.
|
சமூகக் கருத்துக்கள் தத்துவங்கள். அரசியற் கொள்கைகள், அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் தோற்றத்தை கருத்துக்கள், தத்துவங்கள், அரசியல் நிறுவனங்களிலேயே காண
வேண்டும்.
|
சமூகக் கருத்துக்கள், தத்துவங்கள், அரசியல்
கொள்கைகள், அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் தோற்றத்தை ஒரு
சமுதாயத்தின் பௌதிக வாழ்நிலையில், சமூக வாழ்வில் காண
வேண்டும். ஏனெனில் இந்தக் கருத்துக்கள், தத்துவங்கள் எல்லாம் சமுதாயதத்தின் பௌதிக வாழ்நிலையின், சமூக வாழ்வின் பிரதிபலிப்பு தான். (சமூகக்
கருத்துக்களின் தோற்றத்தைத் தான் சமுதாயத்தின் பௌதிக வாழ்வில் காணவேண்டுமே தவிர
அது பௌதிக வாழ்வின் மீது செயற்படாது என்று அர்த்தமல்ல. சமுதாயத்தின்
பௌதிக வாழ்வை மேம்படுத்தத் தோன்றிய கருத்துக்கள் கொள்கைகள் அரசியல் நிறுவனங்கள்
சமுதாயத்தின் பௌதிக வாழ்வின் மீதும் செயல்பட்டு சமுதாயத்தின் பௌதிக வாழ்வை
மேலும் மேம்படுத்த உதவுகின்றன)
|
சமூக உணர்வு (social consciousness) சமூக வாழ்நிலையை (social
being) நிர்ணயிக்கின்றது.
|
சமூக வாழ்நிலை சமூக உணர்வை
நிர்ணயிக்கிறது.
|
சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும்
சக்தி புற நிலைக்கப்பால் நிற்கும் ‘மனிதனின் அரூபமான கோட்பாடுகளின்’ அடிப்படையிலமைந்த செயல்களும் பெரிய மனிதர்களின்
நல்லெண்ணங்களும் ஆகும்.
|
சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும்
சக்தி சமுதாயத்தின் பௌதிக வாழ்வின் ஸ்தூலமான நிலைகளின் அடிப்படையிலமைந்த
செயல்களும் சமுதாயத்தின் பௌதிக வாழ்வு வளம் பெறுவதற்கான உண்மைத் தேவைகளும் ஆகும்.
|
(ப.12-14 பேரா. வெ. தங்கவேல்சாமி -இயங்கியற் பொருள்முதலியல் 1998)
அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக்
கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி
உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பு சார்ந்ததாகும். பொருளாதார
அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, விநியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது.
பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின் மீதுதான்
அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை
வெளிக் கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின்
மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான
உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுதாக விளக்கினார் என்கின்றார்
லெனின். பொருட்களுக்கு
இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார். பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில்
பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது.
மூலதனம் இந்த பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது.
மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை
நிறுவினார்.
தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது
உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது. மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து
முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த
உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான
தோற்றுவாய். உபரி
பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சீயத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.
மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே
தத்துவம் என்று லெனின் நிரூபித்தார்.
வர்க்கப் போராட்டம்:
மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது வர்க்கப்
போராட்டமாகும். வர்க்கப்
போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும்
ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக
அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள
முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின்
ஊடாக மனித சரித்திரமம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின்,
இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே
வந்திருக்கின்றது.
மார்க்சீய அணுகுமுறை பற்றி ஒரு நோக்கு-
மார்க்சீயம் லெனினியம் கற்பிக்கும் உற்பத்தி போராட்டம், வர்க்கப்போராட்டம், விஞ்ஞானப்
பரிசோதனை போன்று மூன்று அம்சத்தை விளங்கிக் கொள்வதற்கு இடையே புகுத்தப்படும்
சிந்தனை மாறுபாடுகள் பற்றிய விரிவான போதனையை ஜேர்மன் சித்தாந்தம் (லுத்விக்ப்ஃபாயர்க்) டூரிங்குக்கு மறுப்பு,
மார்க்சீயத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்,
முரண்பாடு பற்றி, நடைமுறைபற்றி போன்றவற்றில்
மூலவர்கள் தாராளமாகவே விண்ணுலகத்தில் இருந்து தத்துவங்கள் உருவாகியதாக கருதிய
கோட்பாட்டிற்கு முற்றுப் புள்ளிவைத்தார்கள். “பொருளுற்பத்திக்கான
நடவடிக்கையே மிகவும் அடிப்படையான நடைமுறைச் செயல், அதுதான்
அவர்களுடைய பிறநடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயல் என மூலவர்கள்
நிரூபித்தனர். இந்தப் பகுதியில் புலனறிவின் ஊடாக பெறப்படும்
அறிவு என்பது புறநிலையான பொருட்களின் உள்முரண்பாடுகளை விரிவாகவும், படிப்படியாகவும் அறிந்து கொள்வது, அதன் விதிகளையும்,
அதன் நிகழ்ச்சிப் போக்கிற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான உறவுகளை
அறிந்து கொள்வதுமாகும்.
சமூக வளர்ச்சிப் போக்கில் முன்னைய சிந்தனையில் இருந்து
பெற்றி அறிவு முதிர்ச்சியை நமக்கு கற்றுத் தருகின்றது. மார்க்சியம் மனிதர் தன்னிலையை அறிந்து
கொள்ளவும், இந்தச் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும்
என்பதையும் கற்பிக்கின்றது. ஒவ்வொருவருடைய உறுதியான
முதுகெலும்பைக் கொண்ட மக்களாக உருவாக்கின்றது. மற்றைய
தத்துவங்கள் மனிதர்களின் மேல் ஏறி சவாரி செய்ய நித்தம் முயற்சிக்கின்றன. இதுவே மற்றைய தத்துவங்களுக்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வித்தியாசமாகும்.
நாம் ஒரு பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன்வைக்கும் போது
அப்பிரச்சினை எங்கிருந்து தொடங்குகின்றது, அதன் தோற்றத்தின் மூலகாரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்து அறிந்து, அப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் போது தான் அப்பிரச்சினையை சரியாகக்
கையாள முடியும். அதனை விடுத்து மேல் எழுந்த வாரியாக
சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு ஆத்திர, அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது என்பது விஞ்ஞான பூர்வமான
அணுகுமுறையாகாது. அணுகுமுறை வெறும் உணர்வுக்கு அடிமைப்பட்ட,
கதம்பமான நிலையினைத் தான் தோற்றுவிக்கும்.
மனித வாழ்க்கையில் காணப்படுகின்ற பிரச்சினையை பல கோணங்களில் பார்க்க முடியும். எனினும் இரண்டு பெரும் பிரிவாக பிரித்துப்
பார்க்க முடியும். அன்றாட வாழ்வியலில் காணப்படும்
சிந்தனையைக் கொண்டு அதாவது எமது சமூக அமைப்பில் காணப்படுகின்ற தன்மைகளைக் கொண்டு
அவற்றிற்கு விளக்கம் கொடுக்க முடியும். விஞ்ஞான ரிதியாக
சிந்திக்கின்ற வழிமுறைகள் அறிவுப் பார்வை என்பதாகும். இந்தப்
பார்வை என்பது அறிவு வளர்ச்சியின் மையப் புள்ளியாகும். புறநிலை
சார்ந்த சிந்தனைப் போக்கில் அமைந்த சமூகப் பார்வையே இங்கே கூறப்படுகின்றது.
கருத்துமுதல்வாத, பொருள்முதல்வாத சிந்தனையோட்டத்தைக் கொண்ட பதில்களுக்கும் நிறைய
வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களை இலகுவில்
தீர்ப்பதோ அல்லது ஒன்றை ஒன்று மேவுவதோ இலகுவானது அல்ல. ஆனால்
முதலில் குறிப்பிடப்படும் சிந்தனையானது பரந்த ஆதிக்கத்தில் இருக்கின்றது. அகநிலை சார்ந்த சிந்தனை ஆதிக்கத்தில் இருப்பதனால் பல பிரச்சினைகளை இலகுவாக
தீர்க்க முடிவதில்லை. மாறாக பிரச்சினையானது வளர்ந்து
பேரளிவிற்கே சென்று விடுகின்றது. இதுவே சமூகத்தின் அனைத்து
அலகுகளிலும் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.
ஆனால் விஞ்ஞானப் பூர்வமான ரிதியில் அதாவது வர்க்க ரிதியாக
எல்லாவற்றையும் அணுகி ஆராய்கின்ற போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். அவற்றை விடுத்து வெறும் இனவாத
கோசத்தினுள்ளும், போட்டி, பொறாமை,
வஞ்சகம், சூது என்ற சமூக அடக்கத்திலும்.
தாம் தமது உறவு அல்லது சாதி என்ற வகுப்புவாதச் சகதிக்குள் எல்லா
பிரச்சினைகளையும் அடக்கிவிடுவதனால் எந்தப் பிரச்சினைகளும் மறைந்து விடுவதில்லை
ஏனெனில் இவை அவிஞ்ஞானப் போக்காகும். இந்தப் போக்கை
பரந்துபட்ட மக்களிடத்தில் எதிர்பார்ப்பது சிரமமானதே.
பல ஆய்வு முறைகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தாந்தத்திற்கு
சேவகம் செய்கின்றன. அதேபோல் மார்க்சியத்திற்கு ஆய்வுமுறை
என்பது இருக்கின்றது. இதுவே இயங்கியல்-வரலாற்றுப்
பொருள்முதல் வாதம் ஆகும். இதற்குள் எவ்வகையான உள்ளடக்கக்
கூறுகள் உள்ளடங்கி இருக்கின்றது என்பதைப் பார்ப்போம். இவற்றின்
மூலமாக சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் சரியான பாதைக்கு வரவும் இவைகள்
துணை செய்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளை பொருளாதார
உற்பத்தி முறைகளில் இருந்து தான் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் படி
வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் சமூக
அமைப்பிலிருந்து தான் பார்க்கக் கோருகின்றது. ஒரு
குறிப்பிட்ட முடிவிலிருந்து அதனை பொதுமைப்படுத்துதலும் முடியாததாகும்.
இதற்கு நம்மூர் பழமொழியை இங்கு பார்ப்பது பொருந்தும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது
எவ்வகையிலும் பொருந்தாது. இது ஒரு குறிப்பிட்ட ஒரு
தேற்றத்தில் இருந்து ஒரு கணக்கை தீர்ப்பதைப் போன்றதாகும். ஆனால்
ஒரு தேற்றத்திலிருந்து ஒரு விடைபெற முயல்வது சமூக விஞ்ஞானத்திற்கு பொருந்தாது.
புறத்திலிருந்து அகத்தை நோக்கிச் செல்லல் வேண்டும் மாறாக
அகத்திலிருந்து புறத்தை நோக்கியல்ல மார்க்சியம் கூறுகின்றது. சமூகம் எவ்வாறு உள்ளதோ, அதற்கு ஏற்றவாறாகவே
தனிமனிதர்களும் படைக்கப்படுகின்றார்கள். மார்க்சிய
ஆய்வாளர்களின் அணுகுமுறையானது புறவயத்தை அடிப்படையாகக் கொண்டே ஆய்வினை
மேற்கொள்வதாகும், அதாவது பொதுமையான பொருளில் இருந்து ஆகும்.
“நாம் மார்க்சியவாதிகள். நாம் ஒரு பிரச்சினைகளை அணுகும் போது,
யதார்த்த உண்மையிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமேயன்றி, வெறும் வரைவிலக்கணங்களிலிருந்து அல்ல என்னும், இந்த
உண்மைகளை ஆராய்வதன் மூலம் நமது வழிகாட்டும் கோட்பாடுகள், கொள்கைகள்,
வழிமுறைகள் ஆகியவற்றை வகுக்கவேண்டும் என்றும் மார்க்சியம் போதிக்கின்றது.’’ (மாவோ -ப 301 மாவோ
மேற்கோள்கள்)
இந்தச் சமூகத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது பற்றிய
போதனையை தனித்தே இயங்கியல் - வரலாற்று
பொருள்முதல்வாதம் என்று என்று கூறிவிட்டுப் போவதினால் நாம் எல்லாற்றையும் விளங்கி
விட்டோம் என்றோ விளங்கம் கொடுத்து விட்டோம் என்றில்லை.
சமூக பொருளாதார அடிப்படையை விளக்கும் மார்க்சீயம் சமூக
பொருளாதாரத் பகுப்பாய்வு முறைமையையும் அது வளர்த்து வந்துள்ளது. மார்க்சீய அணுகுமுறை என்பது தோழர் மாவோ “முரண்பாடு பற்றி” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்
வளர்த்துவிட்டுச் சென்றுள்ளார்.
சமூகப் புரட்சிப் பற்றி மார்க்ஸ் இன் மேற்கோளில் மார்க்ஸ்
எதனை எமக்கு கற்பிக்கின்றார் என்பதை இங்கு
சிறு விளக்கமாக தரப்படுகின்றது. கீழே மார்க்சிய அணுகுமுறை முறைமையை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது
பற்றிய சிறிய குறிப்பு இது,
அகம் (புலன் subject) - புறம் (object ) (அகம் -புறம் என்று instrumental ஆக இங்கு பயன்படுத்தப்படுகின்றது
இதனை தனிப் பிரிவாக இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கு பிறிம்பாக
அறியமுற்படக்கூடாது) என்ற சிந்தனையை புரிந்துகொள்ள
முயற்சிப்பது.!!
மார்க்சீய சித்தாந்தத்தை பற்றி “இப்போ புகழ்பெற்ற
அடித்தளத்திற்கும் அதை விடக்குறையாத புகழ்பெற்ற மேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலான
உறவைக்குறித்து மார்க்சும் ஏங்கெஸ்சும் கொண்டிருந்த கருத்தைச் சுருக்கமாக
வெளிப்படுத்த நாம் விரும்பினால் அது பின்வரும் விதத்திலிருக்கும்.
உற்பத்தி சக்திகளின் நிலை
அது நிர்ணயிக்கும் பொருளாதார உறவுகள்
குறிப்பிட்ட பொருளாதார “அடித்தளத்தில்” வளர்ச்சியுற்றிருக்கும்
சமூக-அரசியல் அமைப்பு
ஓரளவிற்கு நேரடியாகப் பொருளாதாரத்தாலும் ஓரளவிற்கு அதன்
அடிப்படையில் எழுந்திருக்கும் சமூக-அரசியல் முறையாலும் நிர்ணயிக்கப்படும் சமூக மனிதனின் மனப்பாங்கு, அந்த மனப்பாங்கின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பலவிதமான சித்தாந்தங்கள்.”
(பிளெஹனவ், பக். 109 மார்க்சியத்தின்
அடிப்படைப் பிரச்சினைகள்)
புரட்சியை தீர்மானிப்பது அல்லது தூண்டுவது புறநிலையா அல்லது
அகநிலையா??
புறநிலை தீர்மனகரமானது அகநிலை அதனை நடைமுறைப்படுத்துகிறது. இவற்றிற்கு அகநிலையில் முதலில் மாற்றம்
கொள்ள வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். அகநிலை (மேற்கட்டுமான) (அகவிருப்பு, மதம்,
சாதி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம்,
பிரதேசவாதம், இனவாதம் முதலியவை)
திடீரென்று மாறாது இது புறநிலையோடு
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
அகநிலையானது புறநிலையை மறுத்து அகநிலைக்கு முதன்மை
கொடுப்பதை குறிக்கும் இது ஆன்மா பற்றிய
தேடலுக்குமான சம்பந்தமாகும், அது
மதவாதச் சக்திகள் கோருவது போன்றதுமாகும். புறநிலை என்பது
முன்நிபந்தனையாது உற்பத்தி சாதனத்தினை கைப்பற்றும் வேலைத்திட்டம் முதன்மையானது
ஆனால் அதுவே இறுதி இலட்சியம். கலாச்சார புரட்சிக்கான தயாரிப்பு இரண்டாம் நிலை ஆயத்த வேலைத்திட்டம்
அமையவேண்டும். ஆம் கடந்த காலத் தவறுகளில் இருந்து
பார்க்கின்ற அகநிலையினை படிப்படிப்படியாக புரட்சிகரமாக மாற்ற வேண்டும்.
உணர்வு, சிந்தனை அந்த உணர்வு அடிக்கட்டுமானம் (உற்பத்திச்
முறை) சார்ந்து இயங்குகின்றது. உற்பத்தி
முறைமையை மாற்றாது மனிதர்களின் மேற்கட்டுமானத்தில் அமைந்த சிந்தனையை வெற்றி கொள்ள
முடியாது. மாற்றம் ஏற்படுவது புறநிலையின் நிபந்தனைக்கு
உட்பட்டதாகும். அகநிலை மாற்றம் பல்வேறு தளங்களில்
நடைபெறுகிறது. இதற்கு
அடிப்படையாக பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம்
இவற்றிற்கு அடிப்படையான கட்சி, தத்துவ, மக்கள் மயப்படுத்தல் என்பன ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
(இன்றைய உற்பத்தி சக்தியின்
வளர்ச்சிக்கு ஏற்ப கட்சித் திட்டம் இருக்க வேண்டும். கட்சியின் வேலை என்பது இன்றைய நடைமுறையை இறுதிய லட்சியத்தை
நோக்கியதாக இருக்க வேண்டும். இறுதி இலட்சியம் பற்றி
படிப்பினை பெறாது தற்கால உற்பத்தி நிலையை மாற்ற வைக்கமுடியாது.)
அகநிலை என்பது கூட்டுச் செயற்பாட்டை உருவாக்குவதன் ஊடாகவே
மாற்றமுடியும். புறநிலையின்
அடிப்படைக்கு இணையான அகநிலை மாற்றமே வெற்றி பெறும். அடிக்கட்டுமானத்தில்
மாற்றத்தினை ஏற்படுத்தாது. மேற்கட்டுமானத்தில் மாற்றத்தினை
வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது. இந்த அழுகிய சமூக அமைப்பில்
மாற்றத்தை கோருவது நடைமுறைச் சாத்தியமில்லை.
சமூக பொருளாதாரம் மாறுவதற்கு முன்னர் அவைகள் முழுமையான
மாற்றமாக கொள்ள முடியாது. வரலாற்றில்
அனார்க்கி குழுக்கள் இவ்வாறு ஒதுங்கியிருந்து சீரளிந்துள்ளது. இது ஐரோப்பாவெங்கும் பல நாடுகளில் நடைபெற்றுள்ளது. இந்தச் சமூக வளர்ச்சியின்
புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்
திசைவழியைத் தெரிந்து, அதனடிப்படையில் தனது செயற்தந்திரத்தை
அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.
மக்கள் எந்த செயற்பாட்டையும் உணர்வு பூர்வமாகவே தமது
குறிக்கோளை அமைத்து, அதன்படியே
செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை
தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை, அரசியல்
போராட்டத்தினை புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர்.
இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.
அகநிலை மாற்றம் என்பதை மதவாதிகள் கூறுவது போல் புரிந்து
வைத்துள்ளார்கள். இங்கு மக்களை அரசியல
மயப்படுத்தப்படுதலையும் சிந்தனை மாற்றத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பும் நிலையை
அவதானிக்க முடிகின்றது. இவை இரண்டும் ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தச் சமூகத்தில் மாற்றம் என்று அனார்க்கிக் (anarchy) குழுக்களைப் போல் சமூகத்தில்
இருந்து ஒதுங்கிவாழ்வது போல் இல்லை. இவர்களின் அகவுணர்வுத் திருப்தி என்பது மக்கள்
மத்தியில் இருந்து செயற்பட்டு அவர்களை அணிதிரட்டும் முறைக்கும் மாறுபாடுள்ளது.
அகநிலைமாற்றம் என்பது
வர்க்கப்புரட்சியின் பின்னரே லெனின், மாவோ செயற்படுத்தினர்.
புரட்சியின் முன்னரான காலத்தில் அகநிலை பற்றிய பிரச்சினைகளை
முன்னெச்சரிக்கையாக புரிந்து வைத்திருப்பதும் பாடம் கற்பதும் அவசியமாகும். (நாம் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்த
பின்னரும் எமது பழைய சிந்தனை எம்மிடம் ஒட்டியே இருக்கின்றது என்பதும், பழைய உற்பத்திசார்ந்த சிந்தனைக்கு விடுதலைக்கு விடைகொடுக்க முடியாதுள்ளது.
பழைய உற்பத்தி முறை முழுமையாக மாற்றம் கொள்ளாத வரை முழுமையாக அகநிலை
மாற்றமும் ஏற்படாது.
புரட்சியின் பின்னர் உருவாகிய புதிய உற்பத்தி உறவிற்கு ஏற்ப
சமூக உறவுகளை கட்டியமைக்கும் நோக்குடன் வெளிப்பட்டதே கலாச்சாரப் புரட்சி. கலாச்சாரப் புரட்சியின் பின்னரான
தாக்கத்தையும் தவறுகளையும் தோழர் சண் (கம்யூனிசப்
போராளியின் நினைவுகள்) வில்லியம் கிண்டன் (சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்- மாவோவின்
பாத்திரம் போன்ற வரலாற்று ஆவணங்களின் ஊடாக வெளிப்படும்
ஆய்வுமுடிவுகள் இயங்கியலுடன் இணைந்ததாக உள்ளது.
இவர்கள் உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்து வெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றது. உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும் மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது. உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களை தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனை அறிவுறுத்தியும் இருந்தனர். நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரஸ்யப் புரட்சியின் பின்னரும், சீனப் புரட்சியின் பின்னரா கலாச்சாரப் புரட்சி என்பன எம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும்.
இங்கு ஜனநாயக மத்தியத்துவம், அல்லது பாட்டாளிவர்க்கச் கலாச்சாரம் என்பதை நிலமானிய - முதலாளித்துவ எச்சத்தில் இருந்து வரையறுக்கப் போகின்றோமா அல்லது பயன்பாட்டுப்பெறுமதியை மையம் கொண்ட உறவல்லாது உழைப்பதும், உடலுழைப்பை வளங்குவதும், பரஸ்பர ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கப் போகின்றோமா? புதிய சமூக உறவு எவ்வகையான ஜனநாயக விழுமியங்களை கொண்டதாக .இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும்.
இவர்கள் உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்து வெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றது. உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும் மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது. உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களை தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனை அறிவுறுத்தியும் இருந்தனர். நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரஸ்யப் புரட்சியின் பின்னரும், சீனப் புரட்சியின் பின்னரா கலாச்சாரப் புரட்சி என்பன எம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும்.
இங்கு ஜனநாயக மத்தியத்துவம், அல்லது பாட்டாளிவர்க்கச் கலாச்சாரம் என்பதை நிலமானிய - முதலாளித்துவ எச்சத்தில் இருந்து வரையறுக்கப் போகின்றோமா அல்லது பயன்பாட்டுப்பெறுமதியை மையம் கொண்ட உறவல்லாது உழைப்பதும், உடலுழைப்பை வளங்குவதும், பரஸ்பர ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற புதிய கலாச்சாரத்தை உருவாக்கப் போகின்றோமா? புதிய சமூக உறவு எவ்வகையான ஜனநாயக விழுமியங்களை கொண்டதாக .இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும்.
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள்
அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, மார்க்ஸ் கூறுகின்றார் இது மிகச் சரியானது.
அது எப்படி படிப்படி மாற்றம் அடைகிறதோ அதே போல் அகநிலையிலும்
படிப்படி மாற்றம் ஏற்படும், ஏற்படுத்த வேண்டும்.
பழைய உற்பத்தி முறை முழுமையாக மாற்றம் பெறாத வரையில் பழைய
உற்பத்தி உறவு மறைவதில்லை. ஆனால் மறையும் என்று எண்ணிச்
செயற்படுவது இயங்கியலாகாது. ஆனால் அகநிலை பற்றிய
பிரச்சினைதான் முதன்மைப் பிரச்சினை என்று கொள்வது பிராங்பேட் மாக்சியர்கள் கூறுவது
போலவே இருக்கும். “அடித்தள மாற்றத்தை மட்டுமே
வலியுறுத்திற்றோ அவ்வளவுக்கவ்வளவு மேற்கோப்பை வலியுறுத்தும் போக்கு இடதுசாரி
சிந்தனையாளரிடையே தோன்றலாயிற்று. முப்பதுகளில் தோன்றி
வளர்ந்த ஃபிராங்பர்ட் சிந்தனைப் பள்ளி இதற்கு ஒரு உதாரணமாகும். () இவர்களெல்லாம் தங்களை மார்க்ஸீயவாதிகள் என்றே அழைத்துக் கொண்டார்கள்.
ஏற்கனவே கூறியபடி மேற்கோப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது
என்று தொடங்கி அடித்தளமாற்றமே தேவையற்றது என்று கூறுமளவுக்கு இவர்கள் மார்க்ஸீய
எதிரிகளாக மாறிப்போனார்ககள். (ப.14 வெ.
கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 4)
சமூகப் புரட்சிப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-
“...உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே
சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது
சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும்
உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக,
அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை
நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய
வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே
அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள்
அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச்
சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன.
இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள்
என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன.
இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே
சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன.
இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார
நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை
விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம்,
அரசியல், மதம், கலைத்
துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச்
சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை
மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும்
வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
...
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான
உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும்
அழிக்கப்படுவதில்லை, புதிய,
உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத
நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய
உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம்
தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக்
கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய
பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக்
கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக
ஆராயும் பொழுது புலப்படும்.” (முன்னுரை - அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)
ஒவ்வொரு விடயங்களையும் புறநிலையில் இருந்து பகுப்பாய்வு
செய்தல் வேண்டும். பொதுநிலையில்
இருந்து குறிப்பிட்ட விடயங்களை நாம் ஆராய வேண்டுமானால் கட்டுமானங்களிடையே உள்ள
உறவின் அடிப்படையில் இருந்து ஆராய்தல் வேண்டும். அகம் -
புறம் என்ற விடயத்திலும் முரண்பாடு பற்றி மாவோ கூறுகின்ற அணுகுமுறை
அவசியமானது. ஆய்வுகளையும் முடிவுகளையும் இந்த நிலையில்
இருந்து மேற்கொள்வதற்கு பயன்படுகின்றது.
இறுதியாக:
”இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம்
பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்)
விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல்
பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது.
முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில்
குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது
அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும்
உள்ளடக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் மார்க்சினால் கொடுக்கப்பட்டது.”
இன்றையக் காலத்தில்
மார்க்சியத்தினை புரிந்து கொள்வதே பெரும் போராட்டமாகவே இருக்கின்றது. பன்முகப் பார்வை என்று புதிய அணுமுறைக் கோட்பாடுகளை முன்வைப்பதையும்
அதற்கான தெளிவுகளையும் சுயமாக வந்தடையும் வகையிலான அணுகுமுறையில்
விளக்கப்பட்டுள்ளது. தனிமனிதர்கள் தத்தமது புரிதலின்
அடிப்படையில் தன்முனைப்புக் கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். தனிமனிதர்களின்
புரிதல்கள் சமூகப் பொதுவுண்மையாகக் கொள்ள வேண்டியதில்லை. கூட்டுச்
செயற்பாடும் முக்கியமானதாகும். கூட்டுப் படிப்பும் பன்முக
வாசிப்பு முறையை வளர்த்துக் கொள்வதும் அவசியமானதாகும்.
”மார்க்சின் தத்துவத்தை நாங்கள்
முற்றும் முடிவான ஒன்றாய் மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது
சோசலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே கொடுத்திருக்கிறது. சோசலிஸ்டுகள் வாழ்க்கையுடன்
சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசையிலும்
வளர்த்துச் செல்வது அவசியம் என்பதைநாம் ஐயமற அறிவோம். மார்க்ஸின்
தத்துவத்தை தன்னிச்சையாக முறையில் அவை
விரிவுபட வளர்த்திடுவது முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு
தேவையாகுமெனக் கருதுகின்றோம். ஏனெனில் இந்தத் தத்துவம்
பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்திருக்திடுகிறது, தனிப்பட்ட
முறையில் அவை பிரான்சிலிருந்து வேறு விதமாய்
இங்கிலாந்திலும், ஜேர்மனியிலிருந்து வேறு விதமாய்
பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜேர்மனியிலும்
கையாயளப்படுகிறவை.” (பக்54 லெனின் நூல்
திரட்டு!)

வேலன் எனும் வலைப்பூவிலுள்ள அனைத்துக் கட்டுரைகளும் மேலோட்டாமாமகப் ” வேலன்” இதழ் பார்த்தேன். அனைத்தும் ஏதோவோர் பிரச்சனைபற்றிய ஆழப்பார்வையாகவே உள்ளது. நிச்சயமாகப் படிக்கிறேன். அக் கருத்தை வழர்த்தெடுக்கும் முயற்சியில் முடிந்தவரை ஒத்துழைக்கின்றேன். ஆனால், காலம் எடுக்கும். நன்றி.
ReplyDeleteமிகச் சிறப்பு தோழர் நீண்ட நாட்களுக்கு பின் தளத்தில் வ்ந்தேன் வாசித்தேன் தோழர்
ReplyDeleteமார்க்சிய சமூகக் கட்டமைப்பு 100 ஆண்டுகளுக்குப்பிறகு கூட எந்த நாட்டிலும் உருவாகாத சூழல் நிலவுகின்ற எழுதப்பட்ட நீண்ட கட்டுரை... மார்க்சியத்தின் சாரங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றது... நடைமுறைத்தவறுகளை சுட்டிக்காட்டத் தவறியுள்ளது... அருமை!!! அருமை!!!
ReplyDelete