Popular Posts

Thursday, 19 August 2021

JVP இன் பேரினவாத அரசியல்

 

ஜே.வி.பியினர்     சுயநிர்ணய உரிமையை   ஏற்றுக் கொள்ளவில்லை!!!!

 

May be an image of 4 people, wedding, temple and text  

சிங்கள பௌத்த பேரினவாத அடையாளம்,

கொவிக சாதியின் அடையாள இருப்பு, 

நிலமானிய கட்டமைப்பை காக்கும் தூண்.



May be an image of 4 people and temple


 May be an illustration of tea strainer

 

 

 

May be a doodle

 


இது பல்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டதாகும். இன்று ஜேவிபி தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில் மதிப்பீடுகள் அவசியமாகின்றது. இன்றைய சூழல் என்பது தேசிய இனச் சிக்கலை முன்னெடுத்துக் செல்லும் இடதுசாரிகளில்லை. இந்த வெற்றிடம் வெவ்வேறு வர்க்கங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது.
கட்சித் திட்டத்தில் வைத்திருப்பவர்கள் செயலூக்கமாக இல்லை.
கட்சித் திட்டத்தில் வைத்துக் கொள்ளாதவர்கள் என்றிருக்கின்றார்கள்.
கட்சித் திட்டத்தில் இருந்தாலும் சுயநிர்ணயம் பற்றிய விடயத்தில் மா.லெ நிலைப்பாடு கொண்டவர்களாக இல்லை. இந்த நிலை என்பது தொடர்ந்த காரணத்தினால் தேசிய முதலாளித்துவத் தலைமைகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள்.
மார்க்ஸ் பேசுகின்ற சமூகக் கட்டத்தை உள்வாங்காது பயணிக்கின்றார்கள். அதேவேளை இந்த இடதுசாரிக் கட்சிகள் எனப்படுபவர்களிடம் ரொட்ஸ்கிய, புகாரின் (உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம்), காவுட்ஸ்கி (நாகரீகமற்ற சமூகம்) போக்குள் அதிகமாகவே இருக்கின்றன. இதேவேளை மார்க்ஸ்- மாவோவரை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பாட்டுவாதிகளும் உள்ளார்கள். இந்தப் போக்கை இலகுவில் விளக்கிக் கொள்ள மாட்டார்கள்.
இது ஒரு கோட்பாட்டுப் பிரச்சனையாகும். இது மார்க்சியத்திற்கும் திரிபுவாதத்திற்கும் இடையிலான பிரச்சனையாகும். தேசிய இனப்பிரச்சனையை முதலாளித்துவ வர்க்கத்திற்கானதாக சுருக்கிவிடும் பொருளாதாரவாதிகள் இருக்கின்றார்கள்.  
சுயநிர்ணயத்தை அதிகாரப் பரவலாக்கம், பிராந்திய சுயாட்சி, சமஸ்ரி என்ற நிலைப்பாடு கொண்டவர்களும் உள்ளார்கள்.  இதே போல பிரசைகளுக்கான உரிமை, சமவுரிமை, மக்கள் மன்றம் என்ற நிலைப்பாடு உடையவர்களும் உண்டு. ஆனால் அடிப்படையில் மார்க்சிய நிலையில் சுயநிர்ணயம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

இதற்கு (https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/08/blog-post_12.html) தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் - தோழர் லெனின் என்ற வழிகாட்டலை கற்க வேண்டும்.

இந்தத் தொகுப்பில் என்னுடைய சிந்தனை வளர்ச்சியில் எற்பட்ட வளர்ச்சியை  அவதானிக்க முடியும்.  சமூகத்தின் வளர்ச்சி என்பது ஏற்றத் தாழ்வாகவே இருக்கும். முதன்மை முரண்பாடு கொண்டதும் இரண்டாம் பாத்திரம் வகிக்கிக்கின்ற கூறுகள்  பற்றிய மதிப்பீட்டில் பக்குவம் இன்மை இருந்ததே காரணமாகும்.  முரண்பாடு ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றை ஒன்றுடன் ஊடுருவியும் உள்ளது. குறிப்பான சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை அறியாத நிலை என்பது எமது சிந்தனை முதிர்ச்சியின் பின்னடைவே காரணமாகும். எனவே முன்னைய கருத்துக்கும் இன்று கொண்டுள்ள கருத்துக்களை இடையே முரண்பாடுகள் உண்டு. எனவே இன்றைய நிலையே மார்க்கிய லெனினியமாக கொள்ள முடியும்.  முன்னையது சிந்தனையில் வளர்ச்சி வளர் நிலையில் இருந்தது அல்லது மார்க்சிய புரிதலில் ஏற்பட்ட தவறேயாகும்.  இன்றையக் கருத்துக்களை தோழர்கள் மார்க்ஸ், லெனின், ஸ்ராலின், மாவோ வந்தடைந்த கருத்துக்களைக் கொண்டே  மதிப்பீடு செய்ய முடியும். எனவே அன்று எழுதிய கருத்துக்கள் எவையும் மாற்றம் இல்லாது அவ்வாறே தொகுக்கின்றேன்.

இதில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (ரு.ச.ஜதொ.கட்சியினது செயல் திட்டத்தில் 9 வது பிரிவு)

செயலூக்கமானது

பிரிந்து செல்வதற்கான கிளர்ச்சி, போராட்டம்,  வாக்கெடுப்பு என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையாகும். இதனை மறுப்பது சர்வதேசியமாகிவிடாது என்கின்றார்  தோழர் லெனின்.

 

இது போலிஷ்விக்குளின் நிலைப்பாடு.

சுயநிர்ணயத்துக்குப் பதிலாகக் கூட்டு  நிர்ணயம் பற்றிய இக்கடைசி வாதம் நமது போலிஷ் தோழர்களுக்குப் பெருமகிழ்ச்சியை ஊட்டுகிறது ; எனவே தங்களது ஆய்வுகளில் அவர்கள் அதை மும்முறை  திருப்பித் திருப்பிக் கூறுகின்றார்கள்! திரும்பித் திருப்பிச் சொல்வதினால் இந்த  அக்டோபர்வாத, பிற்போக்கு வாதமானது சமூக- ஜனநாயகவாதமாகிவிடாது.  (206) 

மேலும் பொது நாடாளுமன்றத்தின் ஊடாக  நாடாளுமன்றத்தில் கூட்டாக நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை பூர்சுவாக்கள் பேசுவது பற்றி லெனின் விளக்கம் தருகின்றார்.  பிரிந்து போகும் உரிமையை தட்டிக் கழிப்பது தவறென்கின்றார். 

இரண்டு நடவடிக்கைகள்

1.எல்லாத் தேசிய இனங்களுக்கும் சமத்துவம். இதை யாரும் மறுக்க முடியாது. இது அரசின் எல்லைக்குள் நடக்கும் சம்பவங்களை மட்டும் தான் பாதிக்கின்றது;

2. அரசியல் ரீதியில் பிரிந்து போகும் சுதந்திரம். இது அரசின் எல்லைக் கோடுகளை வரைவதைக் குறிக்கிறது. இது மட்டும் தான்  ஆட்சேபத்துக்குரியது. இதைப் பற்றித் தான் நமது எதிராளிகள் மௌனம் சாதிக்கிறார்ள். அவர்கள் அரசின் எல்லை எல்லைகளைப் பற்றியோ அல்லது அரசைப் பற்றியோ கூடச் சிந்தித்துப் பார்க்க விரும்பவில்லை. முதலாளித்துவம் வெற்றி பெற்று விட்டது, எனவே  அரசியல் பிரச்சனைகளை எடுத்துக் கொள்வது நேரத்தை வீணாக்குவாகும் என்று வாதித்த 1894-1902ன் பழையபொருளாதாரவாதத்தை” ஒத்த ஒருவகை ”ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம்” இது.  ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றுவிட்டது; எனவே  அரசியல் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது நேரத்தை வீணாக்குவதாகும்! அரசியல் அற்ற இத்தகைய சித்தாந்தம் அடிப்படையில் மார்க்சியத்துக்குத் தீமை பயக்கும். (207)

இதற்கு அப்பால் மார்க்சிய வழிகாட்டலை என்னுடையவை புதிதானவை என்பது பொலித் தனமேயாகும்.

புதிய திரிபுவாதிகள் ஜேவிபியின் பங்களிப்பை புனிதப்படுத்தும் சேவகம் செய்யவும், தமிழ் மக்களை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சிந்தனையை நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட அடிவருடிகளே.

மேலும் அதிகாரம் வர்க்கம் என்பதை விளங்க வேண்டும் என்றால் அரசு (லெனின்) என்றால் என்ன என்று விளக்கத்தை முழுமையாக உள்வாங்கிவர்களால் மட்டுமே முடியும். ஒடுக்கும் வர்க்க அரசில் பங்கேற்று மந்தி- மந்திரிகைகள் (அமைச்சர்கள்)

ஜேவிபி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டும் மக்களை இருக்கின்ற சட்டவரையறைக்குள் ஒடுக்கி திரிபுவாத- சிங்கள பெருந்தேசியவாத ஒட்டுண்ணியே ஜேவிபி.

ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டு அதிகாரவர்க்கம் இல்லை

என்பதே மார்க்சியம் இல்லை.

ஒடுக்குமுறையை நிறுவனத்தின் ஒரு அங்கம்.

இருக்கின்ற ஆட்சிமுறைக்கு உட்பட்டு CPC - NSSP - LSSP- JVP பங்கெடுத்துள்ளார்கள்.

ஒடுக்குமுறையாளர்களே.

போலி மார்க்சிய- சிந்தனையாளர்களின் தன்முனைப்பு என்பது ஈழ தேசத்தின் விடுதலை அல்ல.

பாரம்பரிய இடதுசாரிகளின் இயலாண்மை, சிந்தனை முடிவிற்கும் ஈழ விடுதலைக்கான முயற்சியும் ஒன்றல்ல.

 

  

இவர்கள் 2009 ஈழத்தின் மீதான ஆக்கிரமிப்பு  யுத்ததில் சிங்கள தேசத்தின் ஆயுதப்படையின் கூலிப்படையாக இருந்து பதுங்குழிகள் அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அன்றைய போது ஈழ மக்கள்,  இரத்த உறவுகளை (குடும்ப)  குருதி வெள்ளத்தில் நேரலையாக கண்டு கொண்டோம்.  

 

23.03.2015·

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்!!!

சிறிலங்கா ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்பட்டதாக ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த தேர்தல் ஊடாக பெற்ற மாற்றத்தை சுவாசிப்பதற்காகவும், பண்புமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வகுப்பெடுங்கின்றார்கள். இந்த மாற்றத்தை முழுமையாக நம்பாதவர்களை அரசியல் அறிவிலிகளாக கொள்ளும் போக்கை பிரபல்ய அரசியல்வாதிகளிடம் வெளிப்படுகின்றது.

உயர்வர்க்கத்தவர்களின் உறவுகளில் ஏற்படும் (தமிழ் - சிங்கள- மூஸ்லீம்- மலையக) சமரசத்தை மக்களுக்கான சமரமாக காட்டப்படுகின்றது.

புலிகள் இருந்த போது புலியை ஆதரித்தார்கள் இப்போ சுமி- சம்பந்தரை சுமக்கின்றார்கள்.

தேர்தலில் போட்டியிடப்போகின்றேன் என்று எவ்வாறு கூறுகின்றார்?

இவர் எந்த மக்களுக்கு வேலைசெய்கின்றார்?

இணக்க அரசியலைக் தாண்டி சிந்திக்க முயற்சி செய்யும் அப்பு.

மக்களைச் சொல்லியே மிளகாய் அரைக்கின்றார் அப்பு.

சுமி- சம்பந்தர் கூட்டு என்பதை ஏற்றுக் கொள்கின்றார். அப்போ அமைப்பில் உட்கட்சி ஜனநாயகம் என்றால் என்ன??

ஆகா அமைச்சராகப் போகின்றார்- அப்போ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை கிடைத்துவிடுமா?

சின்னப்பிள்ளை இல்லை பேரினவாதத்தின் உண்மை முகம். இவர் என்ன மற்றவர்களை வெங்காயம் என்றா நினைக்கின்றார்?? (மேலே காட்டது சுமியின் பேட்டியின் வெளிப்பாடு)

உயர் வர்க்கச் சமரசத்தினை மறைப்பதற்கு போடும் மறைப்பே என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வளர்ந்து வருகின்ற பொருளாதார மாற்றத்திற்கேற்க ஜனநாயக விழுமியங்கள் மாறுகின்றன. அந்த மாற்றத்திற்கு ஏற்ப தனிமனிதர்களின் உரிமையில் இருந்து கூட்டு குழுவின் உரிமை என வளர்ச்சிடைகின்றது, மாறுதலும் அடைகின்றது. ஆனால் தமிழ் மக்கள் கேட்பது கூட்டு உரிமையே தவிர தனிமனித மையங்கொண்ட உரிமை அல்ல. தனிமனித உரிமைசார்ந்த போக்கை கொண்டவர்கள்

அனாதரவான குழந்தைகளை தெருவில் போறவர்கள் எல்லாம் குட்டுவார்கள். அதனைப் போல் ஒடுக்கப்படும் மக்களுக்கு இலவச அறிவுறுத்தல்களும் நிறைவே கொடுக்கின்றார்கள். வரலாற்றை சமூக அமைப்பில் இருந்து பார்க்காது அனுபவவாதத்தினை முன்வைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்குதான் இலவசமாக அறிவுறுத்தல்கள் எல்லோரும் சொல்லிக் கொள்கின்றார்கள்.

பெரும்பான்மை இனத்தவருடன் அனுசரித்து செல்லுங்கள்

தோல்வியில் இருந்து வெற்றி பெறவேண்மானால் இப்போதைய உரிமையைப் பற்றிக் கவலைகொள்ளாதே

அனுசரித்துப் போ

இணங்கிப் போ

'கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்

பாடத்தை கற்றுக் கொள்

ஒடுக்குமுறைகளை முழுமையாக சமூக அமைப்பில் இருந்து பார்க்கின்ற பார்வையை விட்டு அடையாள அரசியல் ஊடாக புரிந்து கொள்ள வைப்பதான சிந்தனை முன்னிறுத்துகின்றார்கள். இவ்வாறு பார்ப்பது தனிமனிதர்களின் உரிமையாக இருந்தவிட்டுப் போகலாம். ஆனால் ஒரு கூட்டுக் குழுவின் ஒருமித்த உரிமைபற்றிய பிரச்சனையாக பார்க்கமறுக்கு அரைகுறை சமூகப்பார்வையானது அடையாள அரசியல் ஊடாக சமூகத்தைப் பார்க்கின்ற பார்வையினால் ஏற்படும் சமூக தாக்கம் என்பதும் ஆபத்தானதுதான்.

இனமையவாதத்திற்கு அப்பால் சிந்திக்க முடியாது என்று நமக்கு வகுப்பு எடுப்பதில் நீங்கள் சுயதிருப்தி அடையலாம். ஆனால் சமூகக் கட்டமைப்பில் உள்ள அனைந்து முரண்பாடுகளை பாருங்கள். அதனை விடுத்து அடையாள அரசியல் ஊடாக கற்பிதம் செய்யாதீர்.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை என்பது இதில் பிரசன்னமாகின்ற அரசியல் வியாபாரிகள் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. புலிகளின் தவறான போராட்ட தந்திரோபாயத்தின் விழைவினால் எழுந்த வெற்றிடம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் உரிமையை மறுப்பதாக இருக்கக் கூடாது.

முதலாளித்துவம் தேசங்களை உருவாக்குகின்றது. தமிழ் மக்கள் என்பது தேசம் இது தனக்கான உரிமையை நிலைநாட்ட போராடுகின்றது. தேசிய இனங்களின் வளர்ச்சி என்பது நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள், மொழி, கலாச்சாரம், மனப்பாங்கு மேலும் ஜனநாயக பண்பைக் கொண்டு வளர்த்துக் கொள்ளும் நோக்கில் அமைந்ததாக இருக்க வேண்டும். இதனைத் தான் தமிழ் மக்கள் வேண்டுகின்றார்கள்.

தமிழ் தேசிய இனம் சங்ககாலத்திலேயே உருவாகிவிட்டது. அதாவது நிலப்பிரபுத்துவம் தேசிய இனங்களை உருவாகின்றது. சங்ககாலத்திலேயே நிலப்பிரபுத்துவம் உருவாகிவிட்டது. பொருளுற்பத்தி- பரிவர்த்தனை- மூலதனக் குவியல்- நிலப்பிரதுத்துவம் உருவாகின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி சந்தைக்கான எல்லை உருவாக்கிக் கொண்டு தனது சந்தைக்கான எல்லையை உருவாக்கிக் கொண்டு நாடுகளாக உருவாகியது. இதில் சந்தையை சமமாக பங்கிட்டுக் கொண்ட பலதேசங்களைப் கொண்ட ஒரு நாடாக உருவாகியதற்கு உதாரணம் சுவீஸ், பெல்ஜியம்.

தனிநாடு என்பது ஒரு விடயம்- சுயநிர்ணயம் என்பது ஒரு விடயம். தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் உரிமைதான் தேவை. ஒரு நாட்டில் உள்ள முதலாளித்துவம் பரஸ்பரம் சந்தையை பிரிந்துக் கொள்வதில் அடங்கியிருக்கின்றது. மாறாக என்ன நடைபெறுகின்றால் மற்றைய தேசிய இனங்களின் மொழி, நிலம், பொருளாதாரம், கலாச்சாரத்தினை அழிப்பதில் தான் முனைப்புக் காட்டுகின்றார்கள். ஒரு பக்கம் காணிகளை வழங்குவதாக பிரச்சாரம் செய்து கொண்டு மறுபக்கம் புதிய முகாம்களின் எல்லையை அதிகரிக்கும் போக்கு நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

தேசிய இனங்களின் வளர்ச்சி என்பது நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள், மொழி, கலாச்சாரம், மனப்பாங்கு மேலும் ஜனநாயக பண்பைக் கொண்டு வளர்த்துக் கொள்ளும் நோக்கில் அமைந்ததாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஜனநாயகக் கோரிக்கை இது ஒரு கூட்டு ஜனநாயகத்திற்கான குறைந்தபட்சம். இது பிச்சை போடுவதல்ல தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பது. தனிமனித விழுமியங்களில் இருந்து சமூகத்திற்கான ஜனநாயக வரையறையை ஏற்றுக் கொள்ள முடியாது.

நிறுவனம் போடும் பிச்சையே போதுமானது என்று உபதேசம் செய்கின்றது மாத்திரம் இல்லை

மேலும் மேற்கு நாடுகளில் அதிகபட்ச ஜனநாயக உரிமைகளை அனுபவித்துக் கொண்டு - அதுவும் ஏகாதிபத்திய சமூக உறவான தனித்துவவாதத்தை அனுபவித்துக் கொண்டு. மற்றவர்களை அடங்கிப் போ என்று உபதேசங்கள் கூறிக் கொண்டுதான் உள்ளார்கள்.

போராட்டம் என்பது ஆயுதம் தூக்கினால் தான் போராட்டம் என்று தவறாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தமது உரிமைக்காக பதாதை பிடிப்பதும் போராட்டம் தான். மக்களின் உரிமைகள் பற்றியும் அவற்றிற்கான அவசியம் பற்றியும் ஜனநாயக சக்திகள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இணக்க- சமரச அரசியலின் தோல்வியே ஆயுதப் போராட்டம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வீங்கி வெடித்த போராட்டம் என்பது தனியே நாட்டில் மாத்திரம் அல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் சிதைந்தே உள்ளது. ஒவ்வொரு பகுதியினரும் தத்தம் நலனுக்காக தமது நட்புசக்திகளை பிரிந்து கொண்டு மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கின்றார்கள். 25.3.15 (thanks for fotoes மயூரப்பிரியன் mayurapriyan )

 

 

 

 

02.08.2015

2te SAipooocunnsgtooiusrte ined20dh15r  ·

ஜேவிபியும் மார்க்சியப் புரிதலும்

Vijitha Herath, a JVP spokesperson, said the TNA, which had raised the demand at the time of election to in Northern Provincial Council two years ago, has done it again to get votes as parliamentary polls are due this month. This is being used by “chauvinistic political parties” in southern parts of the country to seek votes from the Sinhala Buddhist community. “It is not healthy,” he added.

-----------------------

at every election thus fueling Sinhala hardliners and resulting in unwanted ethnic tension.

சரியான தத்துவம் இல்லையெனில் சரியான நடைமுறையிருக்காது (தோழர் ஸ்ராலின்) இது பல ஆயிரம் தடவை உண்மையான கூற்று என்பதை ஒரு இளம் தென்னிலங்கை கட்சியைச் சேர்ந்த தமிழ் அன்பருடன் உரையாடும் போது ஏற்பட்டது. அந்த இளம் உறுப்பினரின் சிந்தனை தூண்டப்பட்டுள்ளதும், சமூகத்தினைப் பற்றி வேறு தளத்தில் சிந்திக்க முடியும் என்பதும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றே. இந்த உரையாடல் தனிப்பட்ட முறையில் அமைந்தது. இந்த வேளையில் ஒரு அமைப்பின் கொள்கை, செயற்பாடுகள், மார்க்சியப் புரிதல் என்பது பற்றிய கேள்வியை ஏற்படுத்தியிருந்தது.

இங்கு மார்க்சிய அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் சமூகத்தினை பார்க்க போதிய பயிற்சி உண்டா, பொருத்தமான வகையில் சமூகத்தினைப் பற்றிய ஆய்வுகள் இடம்பெற்றிருக்கின்றதா என்ற பிரச்சனை அடிப்படையாகின்றது.

தேசங்களின் வளர்ச்சிபற்றிய சிந்தனையை புரிந்து கொள்கின்ற போதுதான் தேசிய இனப்பிரச்சனை பற்றிய புரிதலையும் பெற்றுக் கொள்ள முடியும்.

நாம் இனவாதம் பார்ப்பதில்லை, சாதிபார்ப்பதில்லை நாம் பொதுவாக எல்லாவற்றையும் நிதானமாகவே குரல்கொடுக்கின்றோம் என்ற சிந்தனை வடிவம். தாரண்மைவாதச் சிந்தனை முன்னிறுத்தி எல்லாம் சமத்துவம் நாம் இனவாதிகளில்லை என்று பச்சாத்தாப அரசியல் முறையை முன்வைப்பதை அறிய முடியும். இவர்கள் உரிமை பற்றிப் பேசுவது, ஜனநாயக உரிமையைக் கோருவது என்பது மற்றைய மனிதர்களை தனிமைப்படுத்தி அன்னியப்படுத்துகின்றது என்ற இனிப்புத்தடவிய வார்த்தை ஊடாக வலம்வரும் ஒத்தோட்டவாதிகளின் வசதியான கருத்துருவாக்கமாகும். இந்தப் பார்வை குறைந்த பட்ச முதலாளித்துவ உரிமைகளைக் கூட வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சமூகத்தினை சமூக விஞ்ஞானப் பார்வையாக மார்க்சியம் இருக்கின்றது. இங்கு இயங்கியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், வர்க்கப் போராட்டம் என்ற மூன்று தொற்றுவாய்கள் மூன்று உள்ளக்கக் கூறுகள் அடிப்படையில் உருவாகியருக்கின்ற மார்க்சிய அணுகுமுறைப்படியேதான் சமூகத்தினை அணுக முடியும். இவற்றில் ஒன்றை விட்டு குறுக்கி விட்டுப் பார்க்கும் பார்வை தவறானதாகும்.

லெனின்:-

"இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டமைப்பாகும்."

(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் )

மேற்கண்ட அம்சங்களை போதிய பரீட்சையம் உடைய சமூக ஊழியர்களாக வளர்க்கப்பட வேண்டும். நமக்கு போதிய மார்க்சிய அணுகுமுறைப் பயிற்சியை மேற்கொள்வதன் ஊடாகவே சமூகத்தினை விளங்கிக் கொள்ள முடியும்.

இதனை தவிர்த்துக் கொண்டு கேள்விஞானத்தின் அடிப்படையில் அரசியல் பேசுகின்றதோ அல்லது மார்க்சிய அரசியல் படிப்பதோ சாத்தியம் இல்லை. இந்த உரையாடல் 32 வருடங்களுக்கு முன்னர் எமக்கு மார்க்சியம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அப்பால் வளரவில்லை.

தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்று ஜேவிபினரிடம் கேட்டால்

----- இலங்கையென்றொரு சிறு தீவினுள், 13ம் சீர்திருத்தமென்பது சாத்தியமற்றது. அதையுந்தாண்டி, சமவுரிமைக் கோட்பாடைப்பற்றி ஆராய வேண்டும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் 13 இனை எதிர்ப்பது என்பது இரண்டு விடயத்தில் எதிர்க்கப்படுகின்றது. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் போதாமை என்பதாகும்.

ஆனால் ஜேவிபி எதிர்ப்பது தமிழர்  தேசிய இனம் என்ற அடிப்படையில் அதிகாரத்தைப் பகிர்வதையாகும். இங்கு வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்றம் சென்று பிரிந்தவர்கள் தமிழ் தேசத்தினை ஏற்றுக் கொள்வார்களா?

 

1.Nation question தீர்வை வையுங்கள்2. புலிகளின் அரசியல் நமக்குத் தெரிந்தது3. சமவுரிமை என்கின்றீர்கள் அது என்ன? 4. தமிழர்கள் மாற்று அரசியலில் ஈடுபட வேண்Lம் என்கி்ன்றீர்கள் அது என்ன?

இவற்றிற்கு ஜேவிபியினரிடம் பதில் இல்லை ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி எதிர்க்கும்.

விளைவுகளை காட்டி காரணங்களை மறைப்பது அடையாள அரசியலாகும். சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் என்பது இருந்து வந்துள்ளது. சமூக முரண்பாடுகள் சில குறிப்பிட்ட உயர் வர்க்கத்தவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட உயர் வர்க்கம் என்பது ஒரு நாட்டில், பிரதேசத்தில் குறிப்பிட்ட விகிதமானவர்களே. எனவே இங்கு பிரதேசவாதமாக காட்டுவது என்பது சரியானதா? ஒரு பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் மற்றைய பிரதேசத்தினை சுரண்டுகின்றார்களா? இவ்வாறு பிரதேசவாத அடிப்படையில் சமூகத்தில நோக்குதல் என்பது சரியான கண்ணோட்டமா? எப்பவும் சமூகத்தில் உயர் வர்க்கத்தில் உள்ளவர்களின கோசமே பிரதேசவாதமாகவும், மதவாதப் பிரிவாக காட்டும் ஏகாதிபத்தியவாத பொருளமைப்புக்கு சார்பாக இயங்கும் சிந்தனை போக்காகும். அதாவது உன்னுடம்பில் சிரங்கு சொறி இருக்கு போல் இருக்கு அதனை பார் என்று தூண்டுகின்ற போது சொறிந்து சிரங்காகி அழுகிக் கொள்ளும் போக்கை சமூகத்தில் ஏற்படுத்தும் சிந்தனைப் போக்காகும். பிரதேச, சாதியச் சிரங்குக்குள் இருந்து சொறிந்து பார்க்கும் பார்வையாகும். வர்க்கப்பார்வையற்ற அராஜக வரலாற்று ஆய்வியல் அணுகுமுறைப் போக்கு சமூகத்தின் வளர்ச்சியைக் கூட சிதைத்துவிடும் வல்லமை உள்ளது.

தமிழ் சமூகம் என்பது மாத்திரம் அல்ல அனைத்துச சமூகமும் பல அகமுரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது என்பது உண்மையே. இது இருப்பதற்குக் காரணம் அடித்தளத்தில் மேல்கட்டப்பட்ட மேற்கட்டமைப்புச் (அரசு, நீதி, குடும்பம், மதம்) சார்ந்து இருக்கின்றது. நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சி என்பது அகமுரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றே. இங்கு தமிழ் தேசமும் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே முற்படுகின்றது.

. ”உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர;ச்சியும்தான்.” (லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)

இறுதியாக அந்தநீங்கள் மார்க்சியம் கதைக்கவில்லை இதுவரையில் நீங்கள் என்னுடன் உரையாடியதில் இருந்து ஜேவிபியை புரிந்து கொள்வது என்றால் அவர்கள் மார்க்சிய அணுகுமுறை மார்க்சிய சமூகவிஞ்ஞானத்தினை தனது உறுப்பினர்களுக்கு கற்பிக்க முடியவில்லை. மார்க்சியத்தில் இருந்து விலகியதை அறியமுடிகின்றது. மார்க்சியத்திற்கு பதிலாக தாரண்மைவாதமும் ஜீவகாருண்யம் தேவையற்றதாகும்.

 

 

1.தமிழர் ஒரு தேசத்தவர்கள் 2. சுயநிர்ணயம் உடையவர்கள்3. வடக்கு கிழக்கு என்பது தமிழர் தேசம் இவற்றை ஜேவிபி ஏற்கின்றார்களா????

“””வடக்கு கிழக்கு என்பதை விட மேலாக எற்பார்கள்

முதல் இரண்டும் பெரிய பிரச்சனை அல்ல. “”

இங்கு ஆண்டபரம்பரை மீண்டும் ஆளவேண்டும் என்பதற்காகவோ, தமிழர்களே தொன்மையானவர்கள் என்பதற்காக அல்ல. இங்கு இனவாதத்தையும் தேசத்தையும் போட்டுக் குழப்பும் அறிவாளிகளே அதிகம். பேரினவாதத்தின் வெளிப்பாடு குறுந்தேசியவாதமாகும். குறுந்தேசியத்தின் வெளிப்பாடே இனப்பெருமையை முன்னிறுத்துவதாகும். ஆனால் பெருந்தேசியவாதமும் ஒடுக்கப்படுபவர்களின் சின்னங்கள் மீதான புனரமைப்பு என்பது தனது ஒடுக்குமுறையில் இருந்து மீள்வதற்காகும். இதன் பொருள் குறுங்குழுவாதத்தின் இனப்பெருமை என்பது கவனத்தில் கொள்ளக் கூடாது என்பதல்ல. அது முதன்மையானது என்பதோ அல்லது பெருந்தேசியவாதத்திற்கு ஒப்பானது என்ற அடிப்படையே தவறானதாகும். பேரினவாதத்தை இனவாதம் என்ற அடைமொழிக்குள் அடக்கிக் கொள்வதன் ஊடாக போராடும் தேசிய இனங்களின் உரிமையை தேசியவாதம் என்று மறுக்கின்ற பிரச்சார வேட்டையாகும்.

http://www.dailymirror.lk/.../tna-fueling-hardliners-with...

 

 

- -- - - - - - -

31.07.2015

3teShgiiompci1onsoro eeJauliyu 2015d  ·

தமிழ் தேசிய அரசியலில் மாற்றுத் தான் எது?

தென்னிலங்கையை மையங்கொண்ட வலதுசாரி அமைப்புக்களும் தங்களை இடதுசாரி என்றும் தாமே மாற்று என்று பிரகடனப்படுத்தும் அமைப்புக்களும் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சிந்தனை வடிவம் என்பது இருப்பது இயல்பானதாகும்.

சமூகச் சிந்தனை வடிவங்களையும் செயல்முறை வடிவங்களையும் சிந்தனை வெளிப்பாடுகளின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலை வழங்குவோம் என்பதே நமது நிலைப்பாடாகும். சுயாட்சி கோரிக்கை அதிகபட்சமானதாகும். எவ்வாறாயினும் அதிகளவில் கேட்டால் குறைந்தபட்சமாவது கிடைக்கும் என்பதே பொது நிலைப்பாடாகும்.

1954ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் சமஷ்டியைக் கொண்ட கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி காணப்படுகிறது. தமிழ்க் கட்சிகள் அதனை கோரிய பின்னரே சமஷ்டி என்பது குறித்த அச்சம் ஏற்பட்டது.”

அனைத்துச் சக்திகளும் ஒன்றுகூடும் மையம் என்பது சிங்கள் பௌத்த தேசியவாதமே. இதனை இங்கே சம்பிக்கை பின்வருமாறு தெரிவிக்கின்றார்.

தமிழ்மக்கள் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு வாழவேண்டும் என கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனையவர்களும் பிரிவினைவாதமும், சமஷ்டியும் சாத்தியமற்ற விடயங்கள் என்பதை எற்கவேண்டும்.” மேலும்

இலங்கை சமூகம் ஓரு கருணைமிகுந்த சமூகம், எமது நாடு பௌத்தத்துவததை அடிப்படையாக கொண்டது. பௌத்த தத்துவம் சகல மக்களும் சமம் என்பதை எங்களுக்கு அறிவுறுத்துகின்றதுதாராள பௌத்த மையச் சிந்தனையில் இருந்து சமவுரிமை (Institutional rights not constitutional rights) கொடுக்க தயாராக இருக்கின்றார்கள். அதாவது நிறுவனமயப்பட்ட உரிமை மாத்திரம் தான் உண்டு. ஆனால் தேசிய இனங்கள் தமது தேவைகளை சுயமாக முடிவெடுக்க இறைமை கொண்ட அரசாக முடியாது.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள் பறக்கவிட்டிருந்ததுஇந்த இனவாதத்திற்கு காரணம் தமிழ் இனவாதிகளின் சுயநிர்ணயத்திற்கான கோரிக்கையே. பௌத்த சிங்கள தேசியவாத சமவுரிமையை மறுத்தால் இதுதான் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.

மேலே குறிப்பிட்ட விடயங்களை அவதானித்தால் சிங்கள பௌத்தை பேரினவாதம் உறுதியாக தனது கருத்தில் இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்படுகின்ற தேசமும். தேசிய இனங்களும் தமது விடுதலையின் பொருட்டு உறுதியான கருத்துப் பாடுகளைக் கொண்டதாக இல்லை.

மேற்கூறியவிடயங்களில் இருந்து ஒருதேசம் (Institutional rights not constitutional rights) சுயமாக முடிவெடுக்கும் உரிமையை அங்கீகரிக்காது என்பதையே வெளிப்படுத்துகின்றது.

 

 

பௌத்த பேரினவாத மையச் சிந்தனைகள் - ஜீவகாரூண்யம்- அமைதிவழி (pacifism)

 

------------------------------------------

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் இனி யாரின் பிள்ளைகளை பறிகொடுக்கப் போகின்றீர்கள். தேசிய உரிமையைப் பற்றிப் பேசுவது என்பதே யுத்தமாகும். பலிகொடுக்கத் தயாராக இருக்க வேண்டிய அரசியல் கோசம் என்று எதிர்க்கருத்துருவாக்கம் என்பதை சுமந்து வருவதை வலதுசாரியத்தினால் திட்டமிட்டு விதைக்கப்பட்டது. இந்த நிலையானது தோல்வியிலும் அழிவினையும் சந்தித்த மக்களின் ஒரு பகுதியினரிடம் சென்றடைந்தது. இதனைக் குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் அறுவடை செய்தனர். இதனைப் பயன்படுத்தி தமது வாக்குவங்கிகளாக மாற்றிக் கொண்டனர்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று பௌத்த பேரினவாதம் தனது முடிவில் நிற்கின்றது. இவர்கள் சர்வதேசத்திடம் கோரிக்கையை முன்வைத்து தமது பலத்தைக் காட்டுவதற்காய் பாவனை காட்டத் தான் இவர்களால் முடியும்.

 

 

 இணக்க அரசியலின் வெளிப்பாடாக சிங்கள பௌத்த பேரினவாத அழுத்தத்திற்கு பணிந்த நிலையில்

(1) சிங்கக் கொடியினை ஏற்றுக்கொள்ளல்;

 (2) இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டமை;

(3) 13ஆம் திருத்தத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளல்;

(4) ஆயுதப் போராட்டத்தினை இழிவுபடுத்தல்.” போன்றவற்றிற்கு துணை போகின்ற நிலை என்பது தற்செயலாக நடைபெற்றதல்ல. இவைகள் எல்லாம் இணக்க அரசியலின் வெளிப்பாடாகும். இணக்க அரசியல்வாதிகளின் ஏமாற்ற அரசியலுக்கு மாற்றாக மீறிவளர்ந்ததே ஆயுதப் போராட்டமாகும்.

 

 

இவ்வருட சுதந்திர தின விழாவில் வாசிக்கப்பட்ட சமாதானத்துக்கான பிரகடனத்தில் பின்வரும் கருத்துக்கள் அடங்கியிருந்தன:

(1) சமாதானமும், பாதுகாப்பும். ஜனநாயகத்தினதும் குடியுரிமையினதும் பலன்கள் நாட்டின் அனைவருக்கும் உரித்துடமையாக வேண்டும் என்ற பிரேரணை.

(2) நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர், குறிப்பாக 30 வருட கால யுத்தத்தின் வினையாக இறந்த அனைத்து இன, மொழி, சமயங்களையும் சார்ந்தவர்களுக்குமான பொதுவான நினைவு கூரலும். மரியாதை செலுத்தலும்.

(3) அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நல்லிணக்கம். நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றை நிலைநிறுத்தல். மேம்படுத்தல் என்ற உறுதி பூணல்.

(4) சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு மற்றும் இணக்கப்பாடு என்பவற்றுடன் கூடியதொரு பன்மைத்துவச் சமுதாயத்தை வளர்க்க வேண்டும் என்ற பிரதிக்ஞை.

(5) மீண்டுமொரு இரத்தம் சிந்தல் நாட்டிற்கு வேண்டாம் என்ற உறுதிப்பாடு.

மேற்கண்ட இணக்க அரசியல் வழியில் அமைந்த அரசியல் போக்கினை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் பயிற்றிவிக்கப்படுகின்றார்கள்.

ஒவ்வொரு செயற்பாட்டிற்கும், மனிதர்களுக்கம், அமைப்பிற்களுக்குப் பின்னால் உள்ள வர்க்கத்தவர்களின் நலன் உள்ளது என்பதை அறியாமையில் வைத்திருப்பதும் மேட்டுக்குடிகளையும் வலதுசாரி அமைப்புக்களையும் திருப்தி செய்வதாகும். இந்த வகையில் கூட்டமைப்பிற்கு வந்த சோதனை, ஏகபோகத்திற்கு கிடைத்த சோதனை. பதவிக்கு ஆபத்து என்றும் மென் போக்கு கடும்போக்கு என்று அரசியல் சித்தாந்த பற்றாக்குறை கொண்ட வலது அணிகளை திருப்திபடுத்துவதும். அவர்களை அம்பலப்படுத்தாது பாதுகாப்பதும் தான் வலதுசாரிய எழுத்துப்பணியாக இருக்கின்றது.

சமூக விஞ்ஞானத்தில் தரகு வர்க்கம் ஒன்று உள்ளது.

இந்த தரகு வர்க்கம் என்பது அன்னிய மூலதனத்தினை நம்பியும், தம்மை ஆளும் வர்க்கத்துடன் இணைத்துக் கொள்வதும் தான் இந்த வர்க்கத்தவர்களின் இயல்பாகும். தமது நலனுக்காக இணக்க அரசியல் செய்தும் மற்றவர்களைக் காட்டுக் கொடுப்பதும் தான் இந்த வர்க்கத்தின் செயற்பாடகும். இவ்வாற வர்க்கத்தவர்களின் கைகளிலேயே தேசிய இனப் போராட்டம் கைச் சென்றுள்ளது.

இந்த வர்க்கம் ஒற்றையாட்சிக்குள் தான் உரிமை என்பதை வெவ்வேறு வடிவத்தில் தேன் தடவியும். கவர்ச்சி ஊட்டியும் முன்வைக்கப்படுகின்றன. மக்களின் உரிமையை ஜீவகாருண்ய (Institutional rights not constitutional rights) அடிப்படையில் வழங்க முற்படும் அல்லது சிந்திக்க வைக்கும் முறைதான் பௌத்த சிங்கள தேசியவாதிகளான இடது - வலதுகளிடம் உள்ளது- வெளிப்படுகின்றது.

ஒடுக்கப்படும் தேசமும், தேசிய இனங்களுக்கு உத்தரவாதப்படுத்த வேண்டிய குறைந்தபட்ச உயர்ந்த முதலாளித்துவ ஜனநாயக உரிமையை நோக்கியதாகவே இருக்க முடியும். மாற்றாக விண்ணுலகில் உரிமையை பெறலாம் என்ற சிந்தனை வடிவம் சார்ந்தது அல்ல.

மென்சக்தி- கடும் போக்காளர் என்பது உண்டா? இந்த மாயக் கருத்துக்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன? கல்தோன்றி மன்தோன்றாக் காலத்தில் தோண்றிய தமிழருக்கு விடுதலைப் புலிகளின் தலைமையில் தான் போராட்டம் வெற்றி கொள்ளப்படும் அவர்களை விட்டால் வேறு ஒருவரும் இல்லை எனக் கூறுப்பட்டது. அந்தத் தலைமை முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. இப்போ .தே.கூ தான் ஏக பிரதிநிதி என்று நம்பச் சொல்லி மல்லுக் கட்டுகின்றீர்கள். மல்லுக் கட்டி வெளிப்படுத்த விம்பத்திற்கு அரசியல் அவசியம் இல்லையா? சரி முள்ளிவாய்க்காலுக்கு என்ன காரணம். காரணமானவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒன்று இல்லையா?

தமிழ் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ததேம முன்னணியும். எம்மை திடப்படுத்துங்கள், பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த 20 தாருங்கள் என்று ததே.கூ ஆகிய இரு கட்சிகளும் மக்களிடத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார்கள். இங்கு இந்தச் சக்திகளை மென் தன்மைப் போக்காவும். கடும்போக்காவும் சித்தரிக்கப்படுகின்றது. இங்கு இவர்கள் தேசத்தின் - தேசிய இனங்களின் உரிமை பற்றி எவ்வகையான விளக்கங்களைக் கொண்டுள்ளார்கள் என்பது உண்மையில் அவர்களுக்கு தெரிந்துள்ளதா என்பதே சந்தேகம்.

இந்த இரண்டு சக்திகளும் தங்களிடம் மாறுபட்ட கருத்து உள்ளதாக கூறிக் கொள்ளகின்றன. இந்த அமைப்புக்களின் விசுவாசிகள் உலகம் அழிந்துவிட்டு இறுதிக் காலம் வந்துவிட்டதாக கருதி பிரச்சாரத்தினை செய்கின்றார்கள்.

.தே. கூட்டமைப்போ ஏகசக்தி என்பதாகும் அவர்களால் மாத்திரமே தீர்வினை கொடுக்க முடியும் என்ற விம்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். தீவிர சக்திகள் தம்மை மீளவும் அழிவிற்கு இட்டுச் செல்லும் என்ற அச்சத்தை கூட்டுகின்றார்கள். இது மனிதச் சிந்தனையில் அச்சத்தைப் பயன்படுத்தி அடக்கிவிடும் சிந்தனைப் போக்காகும். தமிழ் வலதுசாரிகள் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்களிடத்தில் அம்பலப்படுத்தப்படாது கச்சிதமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த வலதுசாரிகள் சுயநிர்ணயத்திற்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

மென்சக்தி- கடும் சக்தி என்று பூசிமெழுகப்படும் தரகு (அன்னிய சக்திக்காய் உழைப்பவர்கள்) வர்க்கத்தவர்களின் பாதையை உதறி புரட்சிகர முற்போக்கு தேசியப்பாதையில் பயணிப்பதே ஒரே வழி.

தேர்தல் பாதை திருடர் பாதை!

தேர்தலை நிராகரியுங்கள்!

 

 

 

04.02.2016

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது உண்மையான சுதந்திரமா?

சோவியத் புரட்சியும், இரண்டாம் உலக யுத்தமும் நேரடியாக கொலனிகளை வைத்துக் கொள்ளும் அரசியல் பொருளாதார சூழல் என்பது பூகோள அரசியலில் மாற்றம் பெற்றது. இதனை கணிப்பிட்ட கொலனித்துவ ஆட்சியாளர்கள் தமக்கு விசுவாசமான ஆளும் வர்க்கத்தினை தெரிவு செய்துதிட்டமிட்டு வளர்த்து. ஆட்சி பற்றிய வகுப்புகளையும் அப்பவே வெவ்வேறு காலப்பகுதியில் ஆணைக்குழுக்கள் ஊடாக கற்பித்து வந்துள்ளது.

இரண்டு தேசங்களாக வளரக் கூடிய வளம் கொண்ட தேசிய இனத்தினைக் கொண்ட இலங்கை நாடாது ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்றையக் காலத்தில் தரகு வர்க்கத்தவர்களான தமிழ் தலைமைகளால் கடைந்தெடுத்த நிலப்பிரபுத்துவச் சிந்தனையில் ஆட்பட்டதினால் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கையும் அவை கோரும் ஜனநாயக உரிமைகள் பற்றிய பார்வை என்பது இருக்க வில்லை. (இன்றும் சுமந்திரம், சம்பந்தன் அணியின் இப்போதைய நிலையும் அதுதான்) படுபிற்போக்கு நிலைப்பாடுகளை அனைத்து தேசிய இனங்களின் ஆளும் வர்க்கம் முடிவெடுத்தது. தனியான தேசங்களாக வளரக் கூடியவற்றை கட்டாயமாக இணைத்துக் கொண்டு ஆட்சி செய்த கொலனித்துவம் அப்படியே பெரும்பான்மை தேசிய இனத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றது. இலங்கையில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் லங்கா என்ற சிங்கள தேசத்திற்கான நாட்டில் உள்ள சிறுபான்மையாக கருதிவருகின்றது. தமிழர்கள் சிறுபான்மைதேசிய இனம் அல்ல. அது ஒருதேசத்தவர்கள் என்ற போராட்டமே ஆயுதரீதியாக வளர்ச்சி கண்டது.

இவ்வாறுதான் கொலனித்துவத்தின் நேரடி ஆட்சி என்பது மாறி தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆட்சியாளர்களை இருந்திவிட்டுச் சென்றது. இங்கு நேரடியாக அல்லாது மறைமுக ஆட்சியை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. இந்த வகையில் இறைமையற்ற சுதந்திரம் இது ஒரு போலியானது. இதன் வளர்ச்சியை இன்று பார்க்கின்ற போது சிங்கள தேசத்தின் தரகு வர்க்கமும், தமிழ் தேசத்தின் தரகு வர்க்கமும் மாத்திரம் அல்ல முஸ்லீம் தரகு அணி மற்றும் மலைய தரகு - புதிய குட்டிமுதலாளிய அணியும் ஒன்று ஏகாதிபத்திய சந்தைக்காய் மடைதிறந்து விட்டுள்ளது. இதற்கு விலை அதிக விலை கொடுப்படுப்பது ஒடுக்கப்படும் தேசிய இனங்களே.

இந்த நிலையில் எந்த தேசிய இனத்திற்கும் அதற்கு ஒவ்வாத குறிப்பான்கள், அல்லது தேசிய கீதங்கள் மீதான புனிதம் என்பது இல்லாதகின்றது.

தேசியக் கீதத்தில் அல்லது குறிப்பானான கொடி என்பது புனிதமாகவும் ஒடுக்கப்படும் மக்களின் அடையாளமாகவும் இருக்கப் போவதில்லை.

இறைமையற்ற அடிமைச் சமூகமும், பெரும்பான்மை சமூகமும் போலிச் சுதந்திரத்தின் கீழ்த்தான் இப்பவும் இருக்கின்றது. முழு நாட்டின் இறைமை என்பது அன்னிய ஆட்சியாளர்களின் பிடியில் தான் உள்ளது.

இங்கு ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் விடுதலைபெற வேண்டுமானால் சிங்கள தேசத்தவர்கள் முதலில் தங்களின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமையை ஏற்றுக் கொண்டு சொந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும்.

இதனை விடுத்து ஜேவிபி போன்று போலி இடதுசாரிய கோசமாகிய ஒரு தேசம் - ஒரு நாடு என்பது பெருந்தேசியத்தினை பாதுகாப்பது மாத்திரம் அல்ல அந்த சமூக அமைப்பை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.

Srilanka is one nation but not ceylon. there are two nations one country there are lanka and eelam thats is ceylon. இலங்கை என்பது இரண்டு தேசங்களைக் கொண்ட நாடு. லங்கா- ஈழம் இரண்டும் வெவ்வேறு தேசங்கள் (நேசன்)

 

 

26.03.2016

 

பேரினவாத ஜேவிபியும் முதலைக் கண்ணீரும்!!

 

தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதா என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் போல துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள்.

 

மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சிக்கு இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் விலாங்கு மீன் அரசியலை வெளிப்படுத்துகின்றது.

 

ஜேவிபி மீதான கேள்வி என்பது --

 

சுயநிர்ணயத்தை அவர் ஏற்றுக் கொள்கின்றோம் என்று பிரகடனப்படுத்துவாரா?? அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க சுதந்திரமான வாக்கெடுப்பை நடத்த போராடுவார்களா??

 

அதனை தெற்கில் பிரச்சாரம் செய்வாரா?? நல்லிணக்கம் என்பது உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகதான் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

 

இந்தக் கேள்வியை மீளவும் இவர்களிடம் திரும்பத்திரும்ப கேட்கவேண்டிய தேவை என்ன இருக்கின்றது? அல்லது இவர்களின் மீதான காழ்புணர்ச்சி காரணமாக இந்தக் கேள்விகள் கட்டமைக்கப்படுகின்றதா?? இவர்களின் மீதான இந்தக் கேள்வி என்பது வலதுசாரிகளுக்கு உரித்தானதா? இவ்வாறு கேள்வி வைப்பதன் ஊடாகவே தேசிய வெறியராக இருக்க முடியுமா?

 

ஒரு வரிப் பதில் தான் தேசிய இனங்கள் தேசத்தைக் கொண்ட பண்பைக் கொண்டு வளரும் போது அங்கு தேசிய இனப்பிரச்சனை உருவாகின்றது என்ற மார்க்சிய அடிப்படை அறிவு தேவையானது.

 

இலங்கையில் ஒரு பக்கத்தில் தேசிய இனம் தனது உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் தென்னிலங்கை ஆட்சியில் (சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்டு) மகிந்த அமைச்சரவையில் பங்கு பற்றி சிங்கள மக்கள் உட்பட அனைத்து சமூகத்தையும் ஒடுக்க துணைபோனவர்கள் தான். ஆட்சியில் பங்கு கொண்டதால் அரசு என்பதே ஒடுக்குமுறை நிறுவனவடிவம் இல்லை என்றும் வாதிடுவார்கள்.

 

முள்ளிவாய்க்காலில் பதுங்கு குழி அமைத்து கொடுத்தவர்கள் இவர்கள் தானே. ஒன்றும் தெரியாதமாதிரி பேசிக் கொள்வதால் இடதுசாரிய வேடம் எடுபடாது. எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இதுதானா முக்கிய பிரச்சனையாகத் தெரிகின்றது. இது இனவாதம் கோசத்தினை பேசிக் கொண்டு உழைப்பாளிகளை பிரிப்பதாக கடந்த 40 வருடங்களாக இதைத் தான் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

இவர்கள் ஐக்கியப்பட்ட போராட்டத்தை எந்தக் காலத்திலும் முன்னெடுத்ததில்லை. இவர்கள் அடையாள- பொருளாதாரவாத போராட்ட முறையினுள் இருந்து கொண்டு வெளிப்படும் சமூகத்தினை முன்னோக்கிச் சென்றடைய விடாது. தேசிய இனங்களுக்கிடையேயான ஐக்கியம் என்ற தேன் ஒழுகும் வார்த்தையை உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

 

ஜேவிபி உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் அரசியலையும், ஜேவிபி உறுப்பினர்களின் வெளிப்பாடு இங்கு பார்ப்போம்.

 

--‘‘இன்று தென்னிலங்கையில் உள்ள அரசியல் நிலைமையில் இதுதான் சாத்தியம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணக்கூடிய வழியும் இதுதான் இதை விடுத்து சுயநிர்ணயம் பேசுவது கூரையேறி கோழி பிடிக்க முடியதவர்கள் வானம் ஏற்றி வைகுந்தம் காட்டுகிறொம் என்பது போன்றது. ‘‘‘‘--

 

------நாங்கள் லெனின் வாதத்தினை ஏற்றுக் கொள்கிறோம். தேசிய இனங்களுக்கான சுய நிர்ணயத்தினையும் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இன்றைய காலத்தில் முதலாளித்துவ சமுதாயத்தில்,ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகப் பேசப் படுகின்ற சுய நிர்ணயத்தினை நிராகரிக்கின்றோம்.
ஒரு காலத்தில் சிங்களவர்களும் எம்மைப் போன்று மேல் நாடு, கீழ் நாடென்று பிரிந்தே காணப்பட்டனர். பின்னர் அவர்களாகவே ஒன்று சேர்ந்தனர். அதே போன்று, இந்திய இலங்கைத் தமிழர்கள் ஒன்று சேராமல், தேசிய இனம் என்ற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது. காரணம் பேசும் மொழி, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வணங்கும் தெய்வங்கள் என்பன ஒன்றாகவே காணப்படுகின்றன. மாறாக, அவர்கள் வேறு நாங்கள் வேறு என்று நாங்கள் பேச முன்வரும் பட்சத்தில், எமது தற்போது எஞ்சி இருக்கும் இனமும் சிதைவடைய வாய்ப்புண்டு. ஆகவே பிரிவினைவாதம் ஒருபோதும் தீர்வாக அமையாது. முதலில் நாங்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட வேண்டும். நாம் ஒரு சோஷலிச நாட்டினைக் கட்டி எழுப்புவோம். இன்று எழும் சந்தேகங்கள் பல எமக்கு சோசலிசத்தின் கீழ் தாமாகவே தீரும். ---

 

நீங்கள் சொல்வது போல பார்த்தால், எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழ் இனமும், மென் மேலும் சிதைவடையவே வழிவகுக்கின்றது. இது ஒருபோதும் சமூக விருத்தியை நோக்கிச் செல்லாது. தமது கட்சியை நாடாத்திச் செல்லகூட உறுப்பினர்களை உள்வாங்கும் சக்தியற்ற வெறும் எட்டுச் சுரக்காயான பழைய இடது சாரிகள் எனச் சொல்லப் படுபவர்களை நாம் சந்தர்ப்பவாதிகளாகவே கருதுகிறோம். காலம் விரைவில் பதில் சொல்லும். முப்பு எம்மைச் செவி மடுக்க மறுத்தவர்கள், இன்று செவி மடுக்கின்றனர். இன்று மறுத்தவர்கள், நாளை மறுப்பார்கள்.-----

 

== நீங்கள் பக்கம் பக்கமாக எழுதலாம், தமிழரை, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கலாம். சுய நிர்ணயம் என்ற காரணத்தினால் மட்டும் சந்தர்ப்பவாத இடதுசாரியாக மாறியிருக்கலாம். எனினும் நாம் அவ்வாறானவர்கள் அல்ல. லங்கா/இலங்கை என்பதே தமிழ் பெயர் என்பதும், முழு இலங்கையையும் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததும், பிரித்தானியர் வரும்போது கிழக்கு மாகாணமும் அதில் வாழ்ந்த தமிழர்களும் கண்டி இராச்சியத்தின் கீழ் வாழ்ந்ததும், கண்டியை பல தமிழ் மன்னர்கள் ஆண்டதும், கண்டிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழில் கையொப்பங்கள் இடப்பட்டமையும் வரலாறு. உங்களது செயற்பாடு ஆண்ட யாழ்ப்பாணத்து மேட்டுக் குடியினர் ஆள வேண்டும் என்பதனையே இங்கு மறைமுகமாகக் காட்டுகிறது. நான்றாகக் குழம்பிப் போய் உள்ளீர்கள். பிரயோகம் இல்லாத அறிவு சூனியம் என்ற பொன்மொழி செயல் மூலம் காட்டப் படுகிறது.-----

 

மேற்கண்ட கூற்றுக்கள் ஜேவிபி உறுப்பினர்களின் வெளிப்பாடு

 

===============

 

1. வரலாற்றை முறையாக கற்றுக் கொள்ளாமை

 

2. விடயங்களை அரசியல் ரீதியாக வரையறுக்க முடியாது பொத்தாம் பொதுவாக முத்திரை குத்திவிட்டுச் செல்வது

 

3. மீளாய்வு, விடயங்களை கற்றுக் கொள்ளல், சீர்தூக்குதல் பார்ப்பதில்லை, அறிவியல் ரீதியாக சிந்திப்பதை உதாசீனம் செய்வது. எதனையும் கேள்விக்கு உட்படுத்தாது வளர்ந்து வருகின்ற பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப கோட்பாடு மாற்றங்களை ஏற்க மறுப்பது.

 

4. வழமையாக தேசம் -தேசிய இனம் பற்றிய தெளிவான பார்வையின்மை. இதனால் மலையாளிகளும் புட்டும், சொதியும் வைக்கின்றார்கள். அதேபோல தமிழர்களும் செய்கின்றார்கள். எனவே அவர்களை தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்கின்ற அபர்த்தவாதம் முன்வைக்கப்படுகின்றது.

 

நடைமுறைசாத்தியத்தையும் ,கடந்தகால அனுபவத்தையும் --- சாத்தியவாதமும், அனுபவவாதமும் மார்க்சியம் இல்லை. அது வெறும் அகவுணர்வுசார்ந்த கருத்துமுதல்வாதமாகும். -----சுயநிர்ணயம் பேசுவது கூரையேறி கோழி பிடிக்க முடியதவர்கள் வானம் ----- இது அதனை விட மோசமான பிற்போக்கு கருத்துமுதல்வாதல் வாந்தி.

 

சோசலிசத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் விடைபெறகிடைக்கும் என்ற நிலைப்பாடானது இன்றைய உலகில் உனக்கு கிடைக்காததை இட்டு கவலை கொள்ளாதே விண்ணுலக இராட்சியத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்து முதல்வாதத்திற்கு ஒப்பாகும்.

 

எச்சியிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கின்ற போது அங்கு பிரச்சனை இருக்கின்றது என்பது தானே அர்த்தம் இவற்றை உள்வாங்க மறுக்கும் சிந்தனை வடிவம் தான் என்ன?

 

=============

 

சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாக பார்ப்பதே அபர்த்தமான கருத்து என்பது மாத்திரம் அல்ல. லெனின் முன்வைக்கின்ற வர்க்க வளர்ச்சிப் போக்கில் தேசிய இயக்கம் எவ்வாறு தோன்றுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளாத ‘‘பாரம்பாரி இடதுசாரிகள் ‘‘‘ போல இனவாத ஜேவிபி உள்ளதில் ஆச்சரிப்படத்தேவையில்லை.

 

மலையகமும் ஜேவிபியும்

 

ஜேவிபி கடைந்தெடுத்த அயோக்கிய கருத்து என்னவெனில் மலையத்தமிழர்களை இந்திய தமிழர்கள் என்று அழைக்க வேண்டுமா என்று 2016 இல் கேட்பது. இது ஆச்சரியம் இல்லை நாம் ஜிஜி யை திட்டியுள்ளோம். அதனை விட ஜேவிபி மலையக மக்களை கூட்டாக தண்டித்தது அதாவது 5ம் படையாக வரையறுத்து அவர்களை துரோகியாக்கினார்கள்.

 

ஆனால் தமிழர் தேசத்தின் போராட்டத்தின் ஆரம்பத்தில் போராளிகள் சிவக்குமார், நாபா போன்றவர்கள் 1973களில் மலையகம் சென்று அங்கு வாழ்ந்து அவர்களின் உரிமை பற்றி கரிசனை கொண்டார்கள். சுமர் 40 வருடங்களுக்கு முன்னரே இந்திய வம்சாவளி மக்களை ““மலையக மக்கள்““ என்று ஜனநாயக பூர்வமாக வரையறுத்துள்ளது.

 

அந்த வரலாற்றை மறைத்துக் கொண்டு இன்றுதான் நித்திரையில் இருந்து எழும்பியுள்ளார்கள் இவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் வலுக்கட்டாயமாக கலத்தல் (assimilation) செய்வதே அவர்களின் நோக்காக உள்ளது. இதே போல அரசியலில் பதின்ம வயது கொண்டவர்கள் பேரினவாதத்திற்கு துணைபோகும் கருத்தை விதைக்கின்றார்கள். மக்கள் முட்டாள் என்று நிறுவுகின்றார்கள். தனிமனித தெரிவும் மக்களின் கூட்டு உரிமையும் ஒன்றல்ல. மலையக மக்கள் எங்கும் சென்று வாழ முடியும், தெரிவு உள்ளது என்பது கூட்டு அரசியல் உரிமையாகாது.

 

ஒரு பிரசை எங்கு வேண்டுமென்றாலும் போய் வாழலாம், எவர் எந்த மூலையிலும் இருக்கலாம் என்பதை கபடமாக முன்வைக்கின்றது. ஆம் நிச்சயம் தனிமனிதர்களாக எங்கும் சென்று வாழ முடியும். இங்கு தனிமனிதர்களின் தெரிவும் திட்டமிட்ட கூட்டுக் குடியேற்றமும் ஒன்று என்ற தட்டையான புரிதலை முன்வைக்கின்றது. ஆம் இஸ்ரேல் குடியேற்றவாதிகள் இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகியவை தமது மண் என்று யூதர்கள் குடியேற்றத்தை ஏற்றுக் கொள்வதை பலஸ்தீனர்கள் ஏற்றுக் கொள் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். இங்கு திட்டமிட்ட குடியேற்றங்கள் கல்லோயா திட்டம் தொடக்கம் கிழக்குமாகாணம், வன்னிப் பகுதியில் செய்து வரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என்பது ஒடுக்கும் தேசிய இனங்கள் எவையும் சிங்கள தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து தமது அடையாளங்களை திணிக்கவில்லை.

 

இவர்கள் தேசிய இனம் என்றால் என்ன? அது எவ்வாறு தேசமாக வளரும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் மலையக மக்கள் என்ற அடையாளத்தை அழிப்பதன் ஊடாக (assimilation) இல்லாதாக்கல்- ஒன்று கலத்தல் அரசியலைச் செய்கின்றார்கள். இங்கு வர்க்கம் கடந்து ஒன்று கலத்தல் என்பது உரிமையை உறுதி செய்யப்பட்டு வாழ்வதன் ஊடாகவே இருக்கும். இங்கு வர்க்கம் கடந்த ஒன்று கலத்தல் என்பதை இல்லாதாக்கல் செய்வது என்று விளங்கிக் கொண்டு அதனை பேரினவாதத்திற்கு இணையாக செயற்படுகின்றார்கள். இந்த வகையில் தான் மலையக மக்கள் பற்றிய ஜேவிபியின் கருத்தாகும்

 

குமார அப்பாவி போல் நடித்த கேள்வி என்பது 1949 விட படுபாதாளத்திற்கு அவர்களை கொண்டு செல்லும் அரசியல். அதில் தேசம் - என்பது லங்கா சிங்கள பௌத்த மக்களை குறிக்கும் பண்பைப் கொண்டதாகவும் அதில் மற்றையவர்கள் சிறுபான்மை என்ற அபர்த்த அரசியல். இதில் வாழ்ந்த பூமியை சொந்தமாக்கக் கூடாது என்று கருத்துருவாக்கம். மலையக தமிழ் மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசங்களை உருவாக்கிக் கொள்வதும் காவல்துறை- காணி- சிவில் நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது. இதே போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

 

தமிழர் சிறுபான்மை என்பது எண்கணக்கில் கொள்ளும் மார்க்சிய இயங்கியல் மறுப்பு என்பது பொதுவான போக்காக இலங்கையில் இருக்கின்றது. இங்கு தமிழர் தேசத்தினை எண்கணக்கில் சிறுபான்மை என்று வரையறுக்கும் அரசியல் அபர்த்தமும் இலங்கையில் உண்டு.

 

சிங்கள தேசம் என்ற ஒற்றைத் தேசியத்தினுள் மற்றவர்கள் சிறுபான்மை என்று பெருந்தேசியவாதிகள் தொடக்கம்பாரம்பரிய இடதுசாரிகள்‘‘‘ இனவாத இடதுசாரிகள், பேரினவாதிகள் இலங்கையர் என்ற தேசியத்தை முன்வைக்கின்றார்கள்.

 

(பலஸ்தீனமானது ஒரு தேசமாக ஏற்றுக் கொள்ளாது அதனை அழிக்கும் இஸ்ரேலின் செயற்பாடுகளை தமிழர் தேசத்தில் பொருத்திப் பாருங்கள் விடயங்கள் விளங்கும்)

 

சோவியத் ஒன்றியத்தில் சுயநிர்ணயம் பெற்ற தேசங்கள் பல இருந்தது. அந்த தேசங்கள் பின்னர் சோவியத் உடைவின் பின்னர் இரத்தக் களரி இல்லாது தனித்துச் சென்றதை இங்கு கவனிக்க வேண்டும். சோவியத் காலத்தில் தான் ஒன்று கலத்தல் என்பது உயர்ந்த ஜனநாயக வடிவமாக இருந்துள்ளது. குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாது இன, குல, மத பேதமற்ற மக்களாக ஒன்றிணைவோம் என்பது பேரினவாதக் கூற்றேயாகும்.

 

ஒரு சிறுபான்மை தேசிய இனத்தை இல்லாக்குவதன் ஊடாக அவர்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை. அவர்களுக்கான காணியுரிமை, பொருளாதாரத்தில் தெரிவற்ற வகையில் தொடர்ந்தும் லயத்தின் அடிமைகளாக வைக்க முடியும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு விடயங்களில் சலுகையை மாத்திரம் பெற்றுக் கொண்டிருக்க முடியும். இதனை முதலில் மனோ தொடங்கி வைத்தார். குமார அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றார். உரிமைகளை உறுதி செய்வதற்குப் பதிலாக அவர்களின் அடையாளம் தான் முக்கியமானதாக இவர்களுக்கு இருப்பதன் சூட்சமம் என்னவாக இருக்கின்றது என்பதை அறிய பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டியதி்ல்லை.

=  -

 

 

Velan 28.05.2016

28sdu rMtSagyapm 2son0s1Seornn6med  ·

ஜேவிபியின் பேரினவாதத் தொண்டு பற்றி!!

 

மனித வளர்ச்சியின் போக்கை விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதவளர்ச்சிப் போக்கை விளங்கிக் கொள்ளாவிடின் எதனையும் தீர்க்க மாக விளங்கிக் கொள்ள முடியாது.

1. மனித வளர்ச்சிப் போக்கை போக்கை விளங்குவது

2. சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வு

இங்கு மனித வளர்ச்சிப் போக்கையே விளங்கி்க் கொள்ளாது தீர்வு வைக்கப்படுகின்றது. இது பெரும் பிற்போக்குத் தனமான சிந்தனைப் போக்கு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இங்கு விவாதிக்கும் அல்லது இலங்கை இடதுசாரிய அமைப்புக்களிடையே உள்ள பொதுவான பிரச்சனையாகும்.

நாகரீக மனிதகுலம் குடிகளாக- குலங்களாக (clan) வாழ்ந்த மக்கள் இனங்குழுமமாக வளர்ச்சி பெறுகின்றது. இந்த இனக்குழுமம் பின்னர் தேசிய இனமாக வளர்ச்சி பெறுகின்றது. இதுவே முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தினை அடைகின்ற போது தேசிய இனங்களுக்காக உறுதிபடுத்தப்பட வேண்டிய உரிமை பற்றியதாகும்.

-- தேசம் (nation) என்பது நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள், மொழி, கலாச்சாரம், மனப்பாங்கு இவற்றில் காணும் சில தனித்தன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே வரலாற்று வழியில் உருவாகிய ஒற்றுமையைக் குறிக்கிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்துக்குரிய உறவுகள் உருவாகிய போது தேசிய இனத்தின் (nationality) காட்டிலும் மேலான சமூக-வரலாற்று வழிபட்டதாகிய தேசம் உருவாகி வளர்கிறது. மனித இனம் (race) இனக்குழுமம் (tribe) மதம், அரசு ஆகியவற்றிலிருந்து தேசத்தை வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். ---- தோழர் ஸ்ராலின்

தேசங்களின் இறைமை என்பது முதலாளித்துவ தேசிய ஜனநாயக மரபு சார்ந்த உரிமை. இதனை விளங்கிக் கொள்ளாது.

லெனின் அது கூறினார். இதுகூறினார் என்று உப்புச் சப்பற்ற மேற்கோள்கள் வெறும் அபர்த்தமாகும். மனித வளர்ச்சிப் போக்கை விளங்காது லெனின் வெவ்வேறு (ரஸ்ய) சூழலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக விளங்கங்களும் வழிகாட்டிகளுமாகும்.

ஆக மனிதவளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தும் லெனினின் கூற்றை உள்வாங்க முடியவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட நாட்டிற்கான கோட்பாடுகளை வகுக்கும்போது பயன்படுத்திக் கொள்ளும் நிலைப்பாடுகளை பொருத்தி விடுவதில் கோட்பாட்டுப் பிரச்சனைகளை தீர்த்துவிடுகின்றனர். இதுவே தேசியஇனப் பிரச்சனையில் படுபிற்போக்கான முடிவுகளை முன்வைப்பதில் முடிந்து விடுகின்றது.

இலங்கை போன்ற நாடுகளில் தொன்மையான இனக்குழுமங்கள், தேசிய இனங்கள் தேசங்களாக பரிணமிக்கின்றன. இதனை லெனின் கொலனித்துவத்தின் ஊடாக புதிய தேசங்கள் உருவாகிவருவதை குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இங்கு லெனின் கூறுகின்ற தேசிய இயக்கங்கள் உருவாகும் என்பது ஏகாதிபத்திய காலத்திற்கானது. அவர் சரியாகவே வரையறுக்கின்றார், -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.

தேசிய இனங்களின் முரண்பாடுகள் என்பது தனியே கொலனித்துவத்தின் காரணமாகத் தான் உருவாகியது என்பது பகுதி வெளிப்பாடு மாத்திரம் தான். தேசங்களாக பரிணமிக்கக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் அவர்கள் விருப்பில்லாமல் இணைக்கப்பட்டது. பின்னர் போலிச் சுதந்திரத்தினை (தரகு வர்க்கம் உள்நாட்டில் முன்னைய கொலனி நாடுகளின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது) அறிவித்துவிட்டுச் சென்றது போது தேசிய இனங்களின் விருப்பை பெறாமலே இணைத்து விட்டுச் சென்றது. இங்கு பெருந்தேசியத்தில் இருந்து ஆளும் வர்க்கத்தின், உயர்வர்க்கத்தின் முரண்பாடுகள் என்பது வளங்களை பிரித்துக் கொள்வதில் ஏற்படுகின்றது என்பது வர்க்க நலனில் அமைந்ததாக மாத்திரம் இருப்பதில்லை. மாறான கையகப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இல்லாதாக்கல் முனைப்புகள் முரண்பாடுகளை அதிகரிக்கின்றது. ஆக வர்க்க முரண்பாடுகள், கொலனித்துவத்தின் அரசியல் போக்கு, தேசிய இனம் தேசமாக வளரும் என்ற அனைத்தையும் சேர்ந்தே ஆராயப்படவேண்டும்.

இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாவிடின் ஒரு அடி முன்னேற முடியாது.

எவர்தான் லெனின் மேற்கோளை தமது தேவைக்காக பயன்படுத்துவது என்பது வெறும் கழிவுத் தொட்டிக்குச் சமனாகும்.

தீர்வு என்பது சேர்ந்திருப்பதான இல்லையா- அல்லது தனிநாடா? ஐக்கிய இலங்கையா என்பதை இலங்கை சமூகக் கட்டமைப்பை ஆராய்ந்து கற்பதன் ஊடாக வருவதாகும். சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை தகர்க்க வக்கில்லாத தென்னிலங்கை இடதுசாரிகளுக்கு தமிழ் தேசத்தின் இறைமை பற்றிய உரிமையை முடிவெடுக்கும் உரிமை இல்லை.

===

இரத்தை வாடை கொண்ட ஜேவிபியின் அரசியல் என்பது ஒரு மோசடி அரசியலேயாகும்.

மறுகாலனிய ஆக்கிரமிப்பு யுத்தத்தில் புலிகள் அழிக்கப்படும் போது உதவியவர்கள் தான் ஜேவிபி. இந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கு மார்க்சிய- லெனினிய மாவோ சிந்தனை அவசியமானது. விக்கிபீடியாவில் மார்க்சியத்தை படிக்க முடியாது. இதற்கான விளங்கங்களை மாபெரும் விவாதம்- கீழ்திசை நாடுகளின் இரண்டாவது காங்கிரஸ் லெனின் ஆற்றிய உரை போய் தேடுங்கள். ஒடுக்கப்படும் தேசத்தின் அடக்குமுறையை ஒடுக்கும் தேசத்தில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கம் துணை செய்து போராட்டத்தினை பாதுகாத்திருக்க வேண்டும். அதாவது உதாரணத்திற்கு பிலிப்பீன். .கட்சி மதவாத அமைப்பாக இருப்பினும் மோறோத விடுதலைப்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அக்கம் பக்கமாக ஒடுக்குமுறையாளனுக்கு எதிராக போராடுகின்றது. ஆனால் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பில் போலி இடதுசாரிகளான ஜேவிபி போர் தொடுக்க உதவினார்கள்.

ஜேவிபி தனது கொள்கையில் இருந்து மாறியிருக்கின்றது என்றால் தமிழ் தேசம் என்பதை ஏற்றுக் கொண்டு, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்காக தெற்கில் போராட வேண்டும். மாறாக நானும் நீயும் ஒன்று என்று ஜீவகாரூண்யப் போக்கில் அல்ல.

இதில் 1. ஏகாதிபத்தியத்தின் பங்காளிகளாக ஜேவிபி இருந்துள்ளது.

2. ஒடுக்குமுறையாளான தமிழ் தேசத்திற்கு காட்டியிருக்கின்றது.

3. இலங்கை முழு ஒடுக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்திருக்கின்றது. இது 1972- 1989 களில் ஜனநாயகக் கட்டத்திற்கான புரட்சிகளை தனது குட்டிமுதலாளிய - குறுங்குழுவாத நிலைப்பாடு காரணமாக எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தை ஆற்றியதன் உச்ச நிலையை தமிழ் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஜேவிபியின் பங்களிப்பாகும். இதுதான் கடந்த கால ஜேவிபி மீதான மதிப்பீடாக இருக்கின்றது. இது தான் ஜேவிபியை பச்சை இனவாதக் கட்சியாக மதிப்பிடப்படுகின்றது. மாறாக அவர்கள் கோழி களவு எடுத்தார்கள், அது செய்தார்கள் இதுசெய்தார்கள் என்ற பொதுப்புத்தியில் இருந்து அல்ல.

 

Velan 11.11.16

 

தேசிய - முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தை ----

 

யுத்த தந்திரம் - செயற்தந்திரம் என்பதை தீர்மானிப்பது ஒரு மனிதர் கொண்ட உலகப் பார்வை. எனவே ஒரு அமைப்பில் சேர்வதும் சேராமல் இருப்பதும் தீர்மானிப்பது உலகப் பார்வையே.

தலைமைப் பாத்திரம் கொடுக்க வேண்டியவர்கள் மார்க்சிய லெனினியவாதிகளேயன்றி பூர்சுவா வர்க்கத்தை தலைமை தாங்கக் கோருவது அல்ல.

உழைப்பவர்களை அரசியல் மயப்படுத்தி அவர்கள் தலைமையில் தான் போராட்டம் நடைபெற வேண்டும்.

புரட்சிகர சக்திகள் தலைமை தாங்காது இருந்துவிட்டு முற்போக்கு தேசியம் தலைமை தாங்கினால் போராடுவது என்று கடமையை செய்யாது விடின். அந்தச் சமூகத்தில் உருவாகும் தலைமை என்பது பூர்சுவா சிந்தனை கொண்டதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. (சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. ) கொம்யூனிஸ்ட் கட்சி கொள்கையை மறைக்கத் தேவையில்லை. கொள்கை வெளிப்படையாகபிரகடனப்படுத்த வேண்டும்.

உள்நாட்டில் தேசிய - முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தை அடைவதற்கான போராட்டம் என்பது முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த நாட்டில் உள்ள பெருந்தேசிய இனம் தனது சொந்த தேசிய இனத்திடம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமை பற்றி வெளிப்படுத்த வேண்டும். ஒடுக்கும் தேசத்தின் பொதுவுடமைவாதிகள் ஒடுக்கும் தேசத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்று போராட அணிதிரட்ட வேண்டும். பெருந்தேசியவாதம் உருவாகும் இதனால் மக்களிடம் வெளியே வைக்க முடியாது என்று காரணம் காட்ட முடியாது. காரணம் கொள்கைகள் வெளிப்படையாக முன்வைக்க வேண்டும்.

தமிழர் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்படும் மலையக, முஸ்லீம் தேசிய இனங்களின் ஐக்கியத்தின் ஊடாக பொது எதரிக்கு எதிரான போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும்.

சர்வதேசத்தில் சூழ்ந்திருக்கும் யுத்த மேகத்தையும் சந்தைக்காய் எம்மை மறுகாலனியாதிக்க முற்படும் நிலையில் பிற

நாடுகளையும், தேசங்களையும் ஆக்கிரமிக்கும் யுத்தத்திற்கு எதிராக உலகில் உள்ள முற்போக்காளர்கள், உழைப்பாளிகள், யுத்த எதிர்ப்பாளர்கள், இவர்களுடன் இணைந்தே ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்க்க முடியும்.

 

 

 

பேரினவாதம் இலகுவில் அழியாது!!!

முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல் என்பது தனியே இனவாதம் (racism) என்று கடந்து செல்லப்படுகின்றது. இதற்குப் பின்னால் இயங்குவது பேர் அகங்காரம் (சிங்கள பௌத்த பேரினவாதம் -chauvinism ) உள்வாங்காது இது வெறும் வதந்தி மட்டுமே காரணமாக இருக்கின்றது என்றால்

1. சிந்தனைக் கட்டமைப்பு

2. அதிகாரம்

இவைகளை உள்வாங்காததே காரணமாகும்.

இவைகள் இருக்கும் போது ஒடுக்கப்படுபவர்களுக்கு நீதி என்பது கிடைக்காது. மாறாக கோட்பாடுக் குறுக்கல்வாதிகள் இனவாதம் என்று பொதுமைப்படுத்தி சென்றுவிட முடியும்.

அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களின் சிந்தனைக் கட்டமைப்பும், அதிகாரமற்றவர்களின் சிந்தனைக் கட்டமைப்பும் மாறுபாட்டே இருக்கும். சிந்தனைக் கட்டமைப்பின் எதிர்வினை வெவ்வேறு வடிவங்களில் இருப்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். உணர்வு மேலோங்கி நிற்பது என்றால் அந்த அமைப்புச் சார்ந்த பலவீனமானமாகும். கட்டமைப்பை மாற்றத் தயாரில்லாத நிலையில் மற்றையவை வெற்றுப் பேச்சே.

1. 1915 முஸ்லீம்களின் மூலதனம் சிதைக்கப்பட்டது

2. 1930 களில் மலையாளிகளின் இருப்பு மறுக்கப்பட்டது தேசிய இனமாக இல்லாது உதிரிச் சமூகமாக்கியது.

3. 1949 தேசிய இனமாக இல்லாது உதிரிச் சமூகமாக்கும் நோக்கில் குடியுரிமை பறிக்கப்பட்டது.

4. பரந்து வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வு, பொருளாதாரம் அடித்து நொருக்கப்பட்டே இதுதான் தமிழர் தாயகம் என்று வடக்கு கிழக்கிற்கு கப்பலில் அனுப்பப்பட்டனர்.

தமிழ் தேசத்தின் போராட்டத்தின் வளர்ச்சி வியாபார வர்க்கத்தின் மீதான தாக்குதல், மலையாளிகளை, மலையக மக்களை தொடர் தேசிய இனமாக வளரக் கூடாது என்பதை கணித்த தாக்குதல் ஊடாகத் தான் முன்னேறி வந்தது. இன்றும் சிங்கள வர்த்தக வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் போக்கு இப்போ இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சி முழுமையடையாத நாடுகளில் (நிர்வாக அலகில்) ஏற்படுகின்ற தேவைகளின் பொருட்டு எழும் அரசியல் உரிமையான தேசியப் போராட்டமாக உருப்பெறுகின்ற புரிதலை எந்த முஸ்லீம் செயற்பாட்டாளிடமும் இல்லை. இலங்கையைப் பிரிக்கமாட்டோம், ஈழப் போராட்டம் பயங்கரவாதம் என்ற நிலையில் வாதிடும் பொதுப்புத்திதான் மேலோங்கியிருக்கின்றுது.

ஈரோசில் செயற்பட்ட செயற்பாட்டார் கூட தமிழ் தேசம் என்பதை சிறுபான்மை என்றுதான் வரையறுக்கின்றார். இதுதான் புலியெதிர்ப்பு போலி இடதுசாரிகளிடமும் உள்ளது. தமிழ் தரப்பு கோட்பாட்டு ரீதியாக எதிர்க் கொள்ள முடியாது தவறான அணுகுமுறை பயன்படுத்தியே தமிழ் தேசத்தின் நியாயத்தை முன்வைக்கின்றார்கள். இது ஒரு பக்கம் உணர்ச்சியாகும், அறிவார்ந்ததாகவும் இருக்க முடிவதில்லை.

இதனால் ‘‘தமிழ் இனவாதம்‘‘ என்று புலியெதிர்ப்பாளர்கள், போலி இடதுசாரிகளால் முத்திரை குத்த முடிகின்றது.

அரசியல் ரீதியாக சிந்தித்து செயற்படாதவரையில் சாத்தியமில்லை.

இதேவேளை சிங்கள பௌத்த கட்டமைப்பு சிந்தனையில், அதிகாரத்தில் செயற்படும் பாங்கு

முஸ்லீம் மதக் கட்டமைப்பு, அவர்களின் இணக்க அரசியல் நிலைப்பாடும் அரசியல் செயற்பாட்டில் எவ்வாறு தென்பகுதி வர்த்தக, அதிகார நலன்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளல் அவசியமாகின்றது. தென்னிலங்கை வர்த்தக வர்க்கத்திற்கு எதிராகவும் எழுந்ததே அரஸ்ரப்பின் எழுச்சியாகும். வடக்கு கிழக்கை மையங்கொண்ட அஸ்ரப்பின் எழுச்சி என்பது தனிச் சக்தியாக தென்னிலங்கை முஸ்லீம் வர்த்தக வர்க்கத்திற்கு போட்டிய எழுந்திட முடிந்தது. இந்தப் வரலாற்றுப் போக்கில் அரசியல் எழுச்சி என்பது இணக்க அரசியலுக்குள் மூழ்கிவிட்டது. இதேவேளை ஈழ விடுதலை அமைப்புக்களின் நடைமுறைத் தவறுகளைப் பயன்படுத்திக் கொண்டு சிங்கள பௌத்த பேரினவாதம் நிரந்தரப் பிளவை ஏற்படுத்திவிட்டது. இணக்க அரசியலில் ஈடுபடுகின்ற போது எந்த கட்சி அரசாங்கம் அமைத்தாலும் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. பதவி - அந்தஸ்து- பணம் இவையை பாதுகாக்கும் இணக்க அரசியல் சோற்றுக்கான அரசியல் விடுதலைக்கான அரசியல் இல்லை. ஆனால் மக்களை தொடர்ச்சியாக மத அடையாளத்தை முன்னிறுத்திய முஸ்லீம், மலையக, தமிழ் தரகு வர்க்கமும் செயற்படுகின்றார்கள். மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

மதஅடையாளம் என்பது நிலமானியத்தின் இறுகிய நிலையில் தான் (இந்துத்துவா- பிராமணியம் போன்று) இருக்கின்றது. இந்தச் சிந்தனைக் கட்டமைப்பை விளங்கிக் கொள்ளாது சமூகத்தில் எழும் எதிர்வினைகளை விளங்கிட முடியாது. கிழக்கில் மாற்றப்படும் அரபு அடையாளங்கள் என்பது ஒரு சமூகத்தில் எதிர்வினையை நிச்சயம் ஏற்படுத்தும் இதுபற்றிய எவரும் கவனத்தில் கொள்வதாக இல்லை. மாறாக சமூகச் சிந்தனை கொண்டவர்கள் அர்த்த பூர்வமாக ஆராயவோ, விவாதிக்கவோ தயாராக இல்லாத நிலையில் இருக்கின்றது.

தமிழ்த் தாய்க்குப் பிறந்த இஸ்லாமியர் ஏன் தங்களை தமிழராக உணரக்கூடாதா என்ற கேள்வி தமிழ் தரப்பில் இருந்து வந்து கொண்டே இருக்கின்றது. இவற்றிற்கான வாதங்களானது பொதுப்புத்தியில் அமைந்ததாகவே இருக்கின்றது.

தமிழகத்தில் முதலாளித்துவ சனநாயக இயக்கமானது சீர்திருத்தம், சமூக நீதி வழிவந்தது. இதே பாராம்பரியம் தமிழ் சமூகத்தில் வளர்ந்திடவில்லை. (சாதியயெதிர்ப்புப் போராட்டம் கூட அடுத்த கட்டத்திற்கு தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை). நிலமானியச் சிந்தனையோட்டம் தமிழ் - முஸ்லீம்களிடம் முழுமையாதுடைத்தெறியப்படவில்லை. இதற்கான போராட்ட வடிவங்கள் முன்னெடுக்கப்படவும் இல்லை.

தமிழ் - முஸ்லீம் உரையாடல் என்பது குறைந்த பட்சம் முதலாளித்துவ சனநாயகத்தின் அடிப்படையில் இருக்கப்பட வேண்டும்.

1. நிலப்பிரபுத்துவச் சிந்தனைக் கட்டமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு முழுமையாக சிதைக்கப்படவில்லை.

2. முதலாளித்துவ உற்பத்திமுறை, சிந்தனை கட்டமைப்பு வளர்ச்சியடைவில்லை.

3. சமவுரிமை அமைப்பு உற்பத்திச் சாதனத்தை பொதுமையாக்கி அதன் ஊடாக மக்களுக்கான சமத்துவம் என்ற வரலாற்றுப் போக்கைப் புரிந்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியிருக்கின்றது.

தமிழர் ஒரு தேசம் என்பதையும் தமிழர் தாயகத்தில் வாழும் மதச் சிறுபான்மை உரிமை அங்கீகரிக்க வேண்டும் என்பதில் தமிழ் தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதேவேளை தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லீம்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கின்றார்களோ அதே நிலைப்பாட்டை முஸ்லீம் தரப்பு முன்வைக்கின்றனர்.

இதில் தமிழ் தேசம் பற்றி முஸ்லீம் செயற்பாட்டாளர்கள் தமிழ் தேசத்தின் இருப்பை மறுப்பதும், ஞானசார தேரர் முஸ்லீம் மக்களுக்கு எவ்வாறு பேரினவாத வெறியை முன்னிறுத்திய பதிலை கொடுக்கின்றார்களோ . அதே மொழியில் தான் தமிழ் தேசத்தின் மீதும் கொடுகின்றார்கள். இங்கு அரசியல் மயப்படுத்தலில் உள்ள இடைவெளி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சனை- முதலாளித்துவ கட்டம் பற்றி பிரச்சனையில் காழ்ப்புணர்வைத் தான் முன்னிறுத்துகின்றார்கள். இது போராட்ட இயக்கங்களின் தவறுகளில் இருந்து அணுகுவதாலும் ஏற்படுகின்றது.

மதம் கடந்து இணைவதே ஒரே வழி!!

06032018

 

 13.11.16

நல்லெண்ணம் நரகத்திற்கு (வீழ்ச்சிக்கு) இட்டுச் செல்லும்

சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு -

 

தமிழ் சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கருத்துருவாக்கிகள், பொதுப்புத்தியில் எழுதுபவர்கள் என வெவ்வேறு தரப்பினர் உள்ளனர், இவர்களால் அதிகம் தமிழ் சமூகப் பற்றிய சிந்தனை வடிவம், அது கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தளம் பற்றிய போதிய புரிதல் அற்றவர்களாகவும் விஞ்ஞானப் பார்வையை தமக்கு ஏற்ப எழுதும் போக்கு காணப்படுகின்றது. தேங்காய் உடைப்பதை நக்கல் அடித்துவிட்டு போவது போல சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையை கடந்துவிடமுடியாது.

ஆறுமுகநாவலரை கேள்வி கேட்டுத்துளைப்பதுபோல அனாகரிக தர்மபால கட்டிவிட்டுச் சென்ற பெருந்தேசியக் கட்டமைப்பை சாட்டுக்கு கேள்வி கேட்டுவிட்டுச் செல்லமுடியாது. தனிமனித உணர்வையும் எதிர்ப்பையும் தமிழ் சமூகக் கட்டமைப்பின் மேல் தீர்த்துவிட்டுப் போகும் பொழுது போக்கு நிலையிலும் செயற்பட முடியாது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பழைய உற்பத்தி முறையில் அமைந்த சிந்தனை முறைபற்றிய ஜனநாயக விரோத சிந்தனை வடிவத்திற்கு எதிரான கருத்தமைவுகள் இருப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.

ஆனாலும் தமிழ் சமூகக் கட்டமைப்பு என்பது சிங்கள கட்டமைப்பை விட ஏதோ மாறுபட்டதாகவும், கொடுமையானதாகவும் கட்டமைக்கப்படும் படுமோசமான விம்பம் என்பது ஆபத்தானது. இதன் அடிப்படையில் இருந்து தான் அகமுரண்பாடு முன்னிறுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஒன்று போராடும் தேசிய இனம் அது கட்டமைக்குப் எதிர்வினைகளும் ஒடுக்கும் தேசம் கட்டமைக்கும் சிந்தனை வடிவமும் ஒன்றல்ல. ஒன்று என்று திரிக்கப்படுகின்றது.

சிங்கள பெருந்தேசிய சிந்தனை வடிவம் என்பது காலங்காலமாக கடத்திவரப்படும் ஐதீகங்களின் ஊடாக தன்மை இறுகக் கட்டமைத்து வருகின்றது. ஆறுமுகநாவலர் கட்டமைத்த சைவம்- தமிழ்- சாதியம் என்ற கட்டமைப்பு என்பது அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக உற்பத்தியில் சாதியம் நிர்ணயம் என்பது இல்லாதாக்கப்பட்டது. ஆனால் பௌத்த விகாரயை சுற்றிய சிந்தனைக் கட்டமைப்பும், அது மதச் சிந்தனையையும், பௌத்த பேரினவாதக் கருத்தியலையும் தொடர்ந்தும் தக்க வைக்கப்படுகின்றது. இதற்கு எதிராக திடமான போராட்ட வடிவம் இருந்ததா என்றால் வரலாற்றில் அவ்வாறு பெரிய தடயங்கள் இல்லை.

இதன் பொருள் இடதுசாரிய தாக்கம், முதலாளிய சகாப்பத்தின் நுழைவு என்பன பழைய கட்டமைப்பில் நெகிழ்வுத் தன்மையை கொடுக்கவில்லை என்று அர்த்தமாகாது.

இடதுசாரிகள் கூட பௌத்த பிக்குக்களை முன்னிறுத்தி காரியம் செயலாற்றுவதைக் கூட இவர்களால் எதிர்த்துக் கேள்வி கேட்டதும் இல்லை. கத்தோலிக்க போப் விஜயம் செய்த போது எழுத்து நிற்கவில்லை. ( மதச் சுதந்திரத்தைப் பொறுத்த வரை அவர்கள் உரிமை) இதிலிருந்து பௌத்த கட்டமைப்பின் இறுக்கத்தை அறிய

முடிகின்றது. இது பார்ப்பணர்கள் கருவறையில் ஒடுக்கப்பட்ட மக்களை நுழையவிடாத நிலையையும், சகல மக்களும் அர்ச்சகராவிடாது தடுக்கும் சிந்தனைக்கு ஒத்ததகும்.

அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் - ‘‘இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் சாதிமுறை ஒப்பீட்டளவில் பலவீனமாக இருப்பதற்கு புத்த மதத்தின் தாக்கம் காரணமாக இருக்குமா என லக்மாலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் புத்தமதம் தனது அடிப்படையான போதனைகளில் சாதி முறைக்கு எதிரானதாகத் தான் இருக்கிறதெனினும் இலங்கையில் அது இறுக்கமான சாதியமைப்பைக் காப்பாற்றும் தன்மையுடனேயே இருக்கிறது. இலங்கை பவுத்த நிறுவனத்தின் "நிக்காய" முறை மிக இறுக்கமாகச் சாதி அடிப்படையிலானது. அது தவிர இலங்கையில் பவுத்தம் தன்னை நிலவுடைமையோடு இறுகப் பிணைத்துள்ளது. பவுத்த நிறுவனங்களே இலங்கையின் பெரிய நிலவுடைமையாளர்களாக இருக்கின்றன. துறவிகள் நிலவுடைமையாளர்களாக இயங்குகிறார்கள். இதனாற் சாதி அமைப்புத் தகர்வதை இலங்கையில் உள்ள பவுத்தம் ஒருபோதும் விரும்பாது. சொல்லப்போனால் சாதியமைப்பைக் காப்பாற்றுவதில் தான் பவுத்தத்தின் பங்கு இங்கே அதிகமாக இருக்கிறது. ‘‘- (தகவல் முகப்புத்தகத்தில் இருந்து கையாளப்படுகின்றது)

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்பதுபவுத்த நிறுவனங்களே இலங்கையின் பெரிய நிலவுடைமையாளர்களாக இருக்கின்றன. துறவிகள் நிலவுடைமையாளர்களாக இயங்குகிறார்கள்.‘‘ இந்த நிலை என்பது சமூகப் புரட்சியில் பெரும் சிக்கலான விடயம். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்திட வில்லை. அதே வேளை சிங்க தேசத்தில் நடத்திட முயற்சிக்கப்பட்ட இரண்டு ஆயுதப் போராட்டங்களும் ஈழப்போராட்டம் நிகழ்த்திய பழைய சிந்தனை முறை சிதைவிளை ஏற்படுத்தி விடவில்லை என்பது மிகைப்படுத்தப்படும் கூற்றா?

நயினாதீவு பௌத்த விகாரதிபதியின் சொத்தும், பெரிய தோணியும், அதிகாரமும் ஒரு குட்டி இராட்சியத்தை ஆளும் குறுநிலமன்னருக்கு சமனாகும். இதுபற்றி எவரும் வாய் திறந்ததாக இல்லை.

பௌத்த சிலைகள் ஈழ தேசம் எங்கும் முளைத்துக் கொண்டிருப்பதும் ஏதோ தற்செயலானது செயலாகவே ஒத்தோடிகள், முற்போக்குக்களால் கொள்ளப்படுகின்றது போலும். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அகங்காரம் புத்தபிக்குக்களின் வாய்தர்க்கங்களின் ஊடாகவும் வெளிவருகின்றது. பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரச நிறுவனகக் கட்டமைப்பில் காவல்துறை மென்மையாக கையாளத் தான் முடியும். இதேவேளை உரிமைக்காக போராடுபவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதலை மேற்கொள்ளும்.

நல்லிணக்கம், இன- மத- குலபேதமற்று வாழ்வோம் என்று வகுப்பெடுப்பது வீழ்த்தப்பட்ட தேசத்திற்கு மட்டும் தான்.

இங்கு பொதுப்புத்தியில் இருக்கும் போக்கையும் அவதானிக்கப்பட வேண்டும். சைவம்,, கத்தோலிக்கம், பௌத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதக்குழுக்களிடையே மதப்பிடிப்பு, மதவாதம், மதவெறி இருக்கின்றது.

இந்த வகையில் மதங்களுக்கும், மதத்தை பின்பற்றுபவர்களிடமும் நெகிழ்வுப் போக்கு உள்ளது. ஒவ்வொரு மதமும் தமது மதச் சின்னங்களை தமது அயல் இடங்களில் வைத்துக் கொள்கின்றனர், இது மதப் பற்று- மதவெறி- பிற்போக்குச் சிந்தனை சார்ந்தது.

ஆனால் புத்தர் சிலைகள் தமிழ்- முஸ்லீம் மக்கள் தாயகத்தில் முளைப்பது பேரினவாத ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புக்கும் மதப் பற்றைக் கொண்ட பிற்போக்குச் சிந்தனையும் ஒன்றல்ல.

முதலில் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை சிங்கள தேசத்து முற்போக்கு- இடதுசாரி- பொதுவுடமையாளர்களே சிதைத்து முதலாளித்துவ ஜனநாயகப் போராட்டத்தை செய்யுங்கள். பிறகு வந்து ஐக்கியம் பற்றி பேசுங்கள்.

நல்லெண்ணம் நரகத்திற்கு (வீழ்ச்சிக்கு) இட்டுச் செல்லும்

 

 

toSf2 MaprotnscshSt or2h0sechs1l5dr  ·

இணக்க அரசியலை எதிர்க் கொள்ளல் #

 

 

சமூகக் கட்டமைப்பில் உள்ள அம்சங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இதன் ஊடாக எமது சமூகக் கட்டமைப்பில் உள்ள ஜனநாயக் குறைபாடுகளை களைந்தெடுப்பதற்கு துணைபுரியும். எமது சமூகக் கட்டமைப்பில் உள்ள ஜனநாயக மறுப்பு நிலைக்கு எதிராக குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கள் என்ன அதனை பெறுவது எவ்வாறு என்றும் இன்றும் வர்க்க பேதமற்ற சமூகத்தில் இருக்கக் கூடிய ஜனநாயக விழுமியங்களுக்காக போராடுவதற்கான படிப்பினைகளையும் பெறமுடியும். உற்பத்திச் சாதனத்தை பெரும்மக்கள் உரிமையாகக் கொள்கின்ற போதே பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இது நெடுந்தூரப்பயணம் எனினும் வர்க்கச் சிந்தனையே அரசியலையும் தீர்மானிக்கின்றது. சமூகத்தின் அனைத்துத் தளத்திற்கான உரிமைக்காக போராட்டத்தை வழிநடத்துவது நெறிப்படுத்துவதற்கும் இடையே வர்க்கத்தின் தாக்கம் இல்லாது எவையும் சாத்தியம் இல்லை.

அண்மையில் உருவப்படம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்களை நோக்குகின்ற போது பலவிடயங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த நிலை புலிகள் இருந்த போது வேறுவடிவத்தில் முரண்பட்ட மனிதர்களுக்கானதாக இருந்தார்கள். இன்று புலிகளை ஆதரித்தவர்களே பலகூறாக இருக்கின்ற நிலைதான் இருக்கின்றது. கடந்த காலத்தில் புலிகள் தமது அணியினருக்கான அரசியலை செய்திருக்கின்றார்களா என்பதில் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. இணக்க அரசியலுக்கான மனப்பான்மையை வெவ்வேறு வகையாக அவதானிக்க முடியும்.

இணக்க அரசியலை ஆதரிப்பவர்கள்

1.பேரினவாத்தினையும்- பேரினவாதிகளைக் காட்டியே மற்றவர்களை அடங்கிப் போ என்று உபதேசிக்கும் போக்கும் மறைமுக பேரிவாத ஆதரவே.

இது இணக்க அரசியலுக்கு வித்திடுகின்றது.

2. அரசியல் ரீதியாக தன்னியல்பாக செயற்பட்டுக் கொள்பவர்கள்

3. இணக்க அரசியலை எவ்வாறு எதிர்க்கொள்வது என்ற சிக்கலின் வெளிவடிவமே இந்த எரிப்பு நிகழ்வு. ஒரு அமைப்பில் ஜனநாயக மத்தியத்தில் அடிப்படையில் செயற்படவில்லை என்பதுதான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். ஆக அமைப்பில் ஜனநாயகம் உள்ளதா என்ற கேள்விக்கு விடைகண்டாகவேண்டும். நிலமானிய எச்சத்தின் - வக்கீல் அரசியல் தலைமையின் எச்சம் என்பது இன்றைய உலகப் போக்கை எதிர்கொள்ள வல்லமையற்றதாகும்.

இவற்றிற்கான விடையை நமது சமூக அமைப்பில் இருந்துதான் விடைபெறமுடியும். அதாவது எச்சமூகத்தில் வாழ்கின்றாரோ அந்தச் சமூகத்துக்கேயுரித்தான சிந்தனைதான் ஆளுமை செலுத்தும் என்ற வரையறைக்குள்ளேயிருந்து பார்க்கவேண்டும். சுதந்திரமான ஆய்வுகள் விவாதங்கள் என்பன கடந்த காலத்தில் வேரோடு அறுக்கப்பட்டதைத் தான் நாம் கடந்த வந்து வரலாறுகள் காட்டி நின்றன. இவற்றை இன்றைய இளையோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு நிகழ்கால அரசியல் நிகழ்வில் இருந்துதான் செயற்படுகின்றார்கள். இளையோர் கடந்த கால வரலாற்றைப் படிப்பதும் நிகழ்காலத்தையும் ஆய்ந்து எதிர்காலத்திற்கான பாதையை கண்டறிய வேண்டும்.

சமூகத்தில் காணப்படும் சில தன்மைகள்

அரசியலைப் பொறுத்தவரை வயது வந்ததும் இளம் வயதினருக்கு ஒதுங்கி இடம் கொடுக்கும் முறை என்பதை நாம் காணமுடியாது. மூப்பு என்ற சமூகத்தன்மை என்பது அரணாக இருந்து காப்பாற்றிக் கொள்கின்றது. ஒருநபர் ஒரு குறிப்பிட்ட பதவியை வகிக்கின்றார் எனில் அவர் அப்பதவியை விட்டு விலகுவதற்கு எப்பவும் தயாராக இல்லை காரணம் பதவியை விட்டு விலகுவதென்பது கௌரவம் விட்டுப் போய் விடுவது என்பது ஆகும். இந்த மனோ நிலையானது மக்கள் விமோசனம், புரட்சி, விடுதலை என உரக்கப் பேசுபவர்களிடமும் காணப்படுகின்றது.

சமூகத்தில் முகத்தை இழப்பது என்பது பெரிய விடயம். சமூகத்தில் பலர் தற்கொலை கூடசெய்து கொள்கின்றனர். உதாரணமாகப் பார்ப்போமானால கௌரவக் கொலை- ஆணவக்கொலை - என்பது போன்றே பெயருக்கு ஏதாவது வகையில் கலங்கம் ஏற்படுகின்றது. ஏன் இச்சமூகத்தில் அதுவும் ஒரு மனித உயிர் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. இந்த சமூக அமைப்பானது பல எழுதாத விதி முறைகளை கொண்டுள்ளது. இதனை மீறுவது இச்சமூகத்தில் இருந்து அந்நியப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றேம். இதன் காரணமாக சமூகத்தின் பழிப்புக்கும் ஆளாகின்றேம். இச்சமூக அமைப்பின் நெருக்குதல்களுக்கு பணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதினால் முகத்தை இழப்பதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புவதில்லை. இதன்காரணமாக தொடர்ந்தும் வரட்டுத்தனமான போலி கௌரவம், மரியாதை, என்பவற்றை பாதுகாத்துக் கொண்டு வருகின்றோம். (இதன்காரணமாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதில் பூரணமாக ஈடுபடுத்திக்கொள்வதில்லை. இதனால் ஒரு அமைப்பை சீரழிவிற்கே இட்டுச்செல்கின்றது.)

ஒருவர் ஒரு விடயத்தை தெரிந்து கொண்டால் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் விருப்பமின்மை (இங்கு அமைப்பு இரகசியத்தினை குறிப்பிடவில்லை) ஏனெனில் மற்றவர் மீதுள்ள கட்டுப்பாடு சீர்குலைந்து விடும் அல்லது கட்டுப்பாடு இல்லாது போய்விடும் என்பதாலேயாகும். எப்பவும் மற்றவர்களை தமக்கு கீழ் வைத்திருக்கும் போது தமக்கு நிகரான ஒரு போட்டியாளன் உருவாகமாட்டான் என்ற நம்பிக்கையாகும். உதாரணத்திற்கு ஒரு பிராமணன் (தெய்வபாசா என்று திரித்துக் கொண்டு) மந்திரத்தை கற்றுக்கொடுக்கும் போது அனைத்து மந்திரத்தினையும் முழுமையாக கற்றுக் கொடுப்பதில்லை என்பார்கள். ஏனெனில் முழுமையாக கற்றுக்கொடுத்தால் தன்னை விடஉயர்ந்தவனாக வந்துவிடுவான் என்பதேயாகும். போட்டி மனப்பான்மை காரணமாக இவ்வாறு இடம்பெறுகின்றது. ஒரு மனிதன் தனக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதன் மூலம் தான் வாழ்வதற்காக கிடைக்கின்ற வளத்தை இழக்க விரும்புவதில்லை. காரணம் இச்சமூக அமைப்பில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக தனக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது அடைவதன்மூலம் தனது தேவைகளை தீர்க்க முயற்சிக்கின்றான். இப்படிப்பட்ட மனப்பான்மை மனிதன் தனது பதவியைக் காப்பாற்றும் பொருட்டு அமைப்பினுள் பிரயோகித்து சாதித்துக்கொள்கினான்.

குரு சீடன் உறவு முறையாகும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் படிப்பிக்கும் போது மாணவர்களை கதைக்க விடுவதில்லை, தான் கூறுவதுதான் சரி அதாவது ஆசிரியர் பிழையாக பாடம் கற்பிப்பாராயின் அதனையும் மாணவர்கள் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இதேபோன்ற நிலை ஒரு அமைப்பினுள்ளும் தலை தூக்கின்ற நிலமைகளை கடந்தகால போலாட்ட வரலாற்றில் இருந்து பெறமுடிகிறது. பெரியவன் சிறியவன் என்ற தன்மையின் வெளிப்பாட்டினை இயக்கங்களுக்குள் அதிகமாக காணக்கூடியதாக இருந்தது. இத்தன்மையின் வெளிப்பாடானது எம் சமூகத்தில் காணப்படுகின்ற உறவு முறைகளில் இருந்து பெறப்பட்டது எனக்கருதுகின்றேன். சிறு வயதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவெனில் பெரியவர்களை அண்ணன், அக்கா, மாமா, மாமி எனக் கூப்பிடும் படி கற்றுத்தந்துள்ளனர் நமது பெரியவர்கள். இதன் மூலம் பெறப்பட்ட பழக்கங்கள் நம்மை இலகுவாக குரு சீடன் மனப்பான்மையில் ஆட்கொள்ள வைக்கின்றது.

அதாவது நிலவுகின்ற சமூக அமைப்பின் ஊடாக பெறப்பட்ட சிந்தனை, பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் ஊறியுள்ளள. ஒரு பிள்ளை நல்லவனாவதும் கெட்டனாவதும் அன்னையிலேயே தங்கியுள்ளது எனக் கூறுவர் இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு பிள்ளை குடும்பம் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்ததும் சமூகத்தில் இருந்து பலவற்றை கற்றுக்கொள்கின்றது. இதன் வெளிப்பாடுகளை பிள்ளைகள் ழூலம் கண்டுகொள்ளமுடியும் இதனை விரிவாகப் பார்ப்போமானால் குடும்பம் என்ற வட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் வரையறைக்குட்பட்டே கற்றுக்கொள்கின்றன ஆனால் இவற்றை விட மேலதிகமாக சுற்றம் சூழலில் நிகழ்கின்றவற்றை, குடும்பத்தை விட்டு அதிக நேரத்தை பிள்ளையானது செலவிடுவதனால், சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கற்றுக்கொள்கின்றன. இந்தப் பொருளாதார அமைப்பின் மீது கட்டப்பட்ட சமூக அமைப்பானது , இந்த பொருளாதார நலனுக்கு ஏற்றவாறாக உருவாக்கப்படும் கவ்வி, மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றால் உருவாக்கப்படும் சிந்தனைகள் எம்மிடம் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவை எம்மிடம் ஊறியுள்ளவை எவ்வாறு ஒரு அமைப்பை, அல்லது ஒரு தேசத்தின் தலைவிதியை மாற்றுகின்ற சக்தியாக விளங்குகிறது.

 

நீ இந்தச் சமூகத்தில் வாழவேண்டுமானால் சமூகத்துடன் ஒத்துப்போ அல்லது நீ விசரன் ஆக்கப்படுவாய். ஏனெனில் இச்சமூகும், தன் நலத்துக்கு எவ்வித பாங்கும் இழைக்கப்படக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது இதில் நீ குறிக்கிடுவாய் எனில் வேண்டப்படாதனவாய் ஆகின்றாய். இதன்காரணமாய் நீயும் மற்றவர்கள் போல் வாழவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றாய்.

சாதாரணமாக இச்சமூகத்தில் ஒரு மனிதன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கின்றார்கள். ஏனெனில் இச்சமூகமானது ஒருவரை ஏறி மிதித்தே வாழப்பழகிக் கொண்டுள்ளது. மேற்கூறியது போல் ஒவ்வொரு மனிதருடைய எதிர்காலமும் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டதாகவும் வாழ்க்கை கேள்விக் குறியைக் கொண்டதாகவும் இருப்பதால் மனிதர் தனக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவதில்லை. இங்கு எவன் வலுத்தவனோ அவனே தான் உயிர் வாழ்வான். அதாவது வலுத்தவன் வாழ்வான் எனலாம்.

மானப்பிரட்சினை மனிதன் ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் போது தாம் எடுத்த முடிவை சரியோ பிழையோ அதனை நிறைவேற்றியே ஆகவேண்டும் அம்முடிவானது மக்களுக்கு நன்மை பயர்க்குமா என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. அது மக்களுக்கு நன்மை பயர்க்காது எனறு தெரிந்தும் அதனை நிறைவேற்றவேண்டும் என பிடிவாதம் பிடிப்பது. எடுத்த முடிவை வாபஸ் வாங்க விருப்பமில்லை. ஏனெனில் கௌரவ பிரட்சினையாகின்றது. அதேவேளை எதிரியானவன் தன்னை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பது. நான் பெரியதா நீ பெரிதா என்ற ஆண்டான்அடிமைச் சிந்தனை வெளிப்பாடுகள் சமூகத்தின் பல தளங்களில் இருக்கின்றது.

தம்மை அரசியல் ஆய்வாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் செய்வது என்னவெனில் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து விவாதத்தை தொடங்கம் போது தமது நிலை மையமாகக் கொண்டு அதாவது தமக்கு இருக்கின்ற அரசியல் ஞானத்தை (மையமாகக்) கொண்டு, அதன் தரத்தில் இருந்து விவாதத்தை தொடங்குகின்றனர். உதாரணமாக திருவிளையாடல் திரைப்படத்தில் புலவருக்கும் நற்கீரருக்கும் விவாதம் போல இவ்விவாதமானது அடிநிலைக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதில்லை இடையில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் மூலம் குறைந்த பட்சம் ஆர்வம் உள்ளவர்கள் கூடவிவாதங்களில் பங்குபற்றமுடிவதில்லை இதன்காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதியினரே விவாதங்களில் கலந்து கொள்கின்றனர். இவ்ஆய்வாளர்களின் முறைமையானது ஒரு குறிப்பிட்ட குழுவை (elite) உருவாக்கின்றது. இக்குழுவே எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கின்றது. இவ்வாறு உருவாகும் சக்திகளை இரண்டாக பிரிக்கலாம் உண்மையாகவே பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் மற்றைய பிரிவினர் தாம் பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டுதான் இயங்குகிறேம் என பெயரளவில் கூறிக்கொண்டு தமது நலனை மாத்திரம் கவனத்தில் கொண்டு இயங்குபவர்கள் இவர்களின் செயற்பாட்டை உற்றுநோக்குமிடத்தில் இச்சமூகத்தில் காணப்படும் தொற்றுவியாதிகளை தம்மிடத்தில் வைத்துக்கொண்டும், அவ்வியாதிகளை தமது நலனிற்கு தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொண்டு உயிர்வாழ்கின்றனர். அதாவது தமது இருப்பை ஸ்திலப்படுத்துகின்றனர். (பிகு. சமூகத்தில் காணப்படும் சில தன்மைகள் - 1995களில் எழுதியது)

சமூகத்தில் இருந்து உருவாகும் உள்முரண்பாடுகளைக் கொண்ட மோதல்களாக சாதி, பிரதேசம், மதவாதம் அனைத்தும் இந்த சமூக அமைப்பின் உருவான சிந்தனைவடிவமாகும். இவை ஒவ்வொரு பொருளாதார அமைப்புக்கு ஏற்ப மாறுபடுகின்றது.

இன்றைய இளையோர்

வரலாறு எழுதுவதில் முரண்நிலை என்னவெனில் இளம் தலைமுறைகள் கட்டது பேரினவாத அரசின் ஒடுக்குமுறை யாகும். தெற்கில் ஒரு மாதிரியும் வடக்கில் ஒரு மாதிரியும் பாரபட்சமாக நடந்து கொண்ட அரசி்ன் நடவடிக்கைகளே இவர்களின் மனதில் இருக்கப்போகின்றது. 2004-2007 இடையிலே யாழ்ப்பாணத்தில் பல நூற்றுக்கணக்கான போராளிகள் கடத்திக் கொல்லப்பட்டனர். இறுதியில் முள்ளிவாய்க்காலில் இறந்த இரத்தம் தான் இந்தத் தலைமுறைக்கு தெரியும்.

இவ்வாறான வரலாறுகள் தமிழ் தேசத்திற்கான உரிமைக்கான போராட்டத்தில் எதிர்மறை விளைவைத் தான் கொடுக்கின்றது. இன்று மறைந்த போராளிகளினதும், பிரபாவின் மீது பக்தி கொண்ட ஒரு சமூகத்தில் சுயவிமர்சனம்- மீள்ளாய்வு என்பது கூட சிக்கலானது. நாம் விரும்பியோ விரும்பாமலோ. தேசிய இனத்தின் அபிலாசைகள் பூர்த்தி செய்யாது போது பிரபா தமிழ் தேசியத்தின் (icon - national symbol) சின்னமாக தோற்றம் பெறும். புலம்பெயர் தேசங்களில் புலிகளின் கொடிகளை கொண்டுசெல்வது, பிரபாவின் படங்களை கொண்டு செல்லது என்பது பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்படுத்தி ஏகாதிபத்தியங்கள், சிங்கள பெருந்தேசியவாதம் எமது போராட்டத்தை சிதைக்கும். இங்கு பிரபாகரன் மீதான பக்திக்கு அப்பால் மக்களின் உரிமை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு அவசியமானதாகும்.

அரசியல் ஜனநாயகப்பண்புகள், குழிபறிப்புமற்ற, ஏமாற்றத்திற்கு திரும்பவும் இடம் கொடுக்கக்கூடிய நிலையில்லாமை இருக்கவேண்டும். இதனை விடுத்து பழைய குருடி, கதவை திறவடி என்பது போல் இருத்தல் கூடாது. இந்த அடிப்படையில் இருந்தே கடந்தகால போராட்ட வரலாற்றை ஆய்வுக்குட்படுத்துவது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

புதிய கோட்பாடுகளை உருவாக்குவதும் இன்றைய முக்கிய தேவையாகும். ஏனெனில் இவ்வுருவாக்கத்தின் மூலமே எதிர்காலப் போராட்டதை நேர்வழியில் செலுத்த முடியும் என்பது அபிப்பிராயமாகும்.

எந்த ஆட்சியிலும் மந்திரி

இலங்கையைப் பொறுத்தவரை எந்த ஆட்சியிலும் அமைச்சராக இருந்த பலரை நாம் குறிப்பாக 1977க்கு பின்னர் பலர் இருந்திருக்கின்றார்கள். இதில் மூன்று தேசிய இனங்களைச் (முஸ்லீம், மலையக, தமிழ்) சேர்ந்தவர்கள் பாகுபாடில்லாது அபிவிருத்தி அரசியல் செய்திருக்கின்றார்கள்.

இவர்கள் கூறுவது உரிமையை கேட்கின்ற போது மோதல்- சண்டை என்ற போக்கு இல்லாது சேர்ந்து செயற்படுவதன் ஊடாக நல்லதைச் செய்யலாம் எனப் போதிக்கின்றார்கள். முதலில் அரசியல்வாதிகளின் தங்கள் உயர்வர்க்க நலனை பாதுகாப்பதற்கு கூறும் ஒரு பதிலையேயாகும். இணக்க அரசியல் ஊடாக சாதித்துவிடலாம் என்பது போன்ற கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. (ஏகாதிபத்திய உலகில் இணக்க அரசியலுக்கு இன்னொரு பெயர் லொபி- தனிமனிதர்களை ஆபத்தாண்டவர்களாக முன்னிறுத்தும் போக்கையும் நாம் அவதானிக்க வேண்டும்) - உரிமைகள் என்பது யாசித்துப் பெறுவது அல்ல. அவை பிறப்புரிமை- பிச்சை எடுப்பது இல்லை. யாரும் யாருக்கும் பிச்சையாக உரிமை கொடுக்கத் தேவையில்லை.

இதனால் எவருக்கும் பணிந்து - கூனிக்குறுகி உரிமை பற்றி கேட்கவேண்டியதில்லை. மக்கள் இவ்வாறு உறுதியாக கேட்டுமிடத்தில் ஆயுதம் கொண்டு அடக்குவதுதான் அரசு. இதனைத் தான் இன்பம்- செல்வம் போன்றவர்களை இல்லாதொழித்த காலத்தில் இருந்து பலர் இல்லாதொழிக்கப்பட்டனர்- கைது செய்தனர். இதன் பின்னர் யுத்தத்தின் ஊடாக இனவழிப்பின் ஊடாக நடைபெற்று முடிந்தது.

கூட்டமைப்பில் இருக்கின்ற அமைப்புகளில் பல்வேறு பட்ட வர்க்கக் கூறுகளை கொண்டதாக இருக்கின்ற காரணத்தில் வெவ்வேறு திசைவழிப் போக்குக்களை காணமுடிகின்றது. இதனை புரிந்து கொள்ளாது தனிமனித குணாம்சமாக திரித்துப் பார்க்கின்ற பார்வையைத் தான் காணமுடிகின்றது. தனிநபர் வசைபாடல்கள் வர்க்கக் குணாம்சத்தை அறியவிடாது தடுக்கின்றது.

பொருளாதார ரீதியாக அன்னிய மூலதனத்தினையும் அன்னிய நலன்களையும் பாதுகாக்கும் வர்க்கத்தவர்களே (தரகு வர்க்கத்தவர் தமிழரசுக்கட்சியினர்). இந்த வர்க்கக் குணாம்சம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகத் தான் இருக்கும்.

இதனால் பல்வேறு கூட்டுக்களின் கலப்பே கூட்டமைப்பு இதனால் ஏற்படுகின்ற குழப்பங்களை பல்வேறு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. கூட்டமைப்பில் உள்ள முன்நாள் இயக்கங்கள் - கூட்டணி போன்றவற்றிற்கும் இடையேயான முரண்பாடுகளை இலகுவில் தீர்த்துக் கொள்ள முடியாது. முன்னைநாள் இயக்கங்களின் அரசியல் தவறுகளை வைத்தே அவர்களை எதிர்க்கொள்ளும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. புலிகளின் விசுவாசிகளுக்கே உரித்தான உணர்ச்சிவசப்படும் தன்மை, முள்ளிவாய்க்காலில் எவ்வாறு வீழ்ந்தோம்- வீழ்த்தப்பட்டோம் என்ற சுய பரிசோதனை இடம்பெற்றதா என்று கேள்விக்குறியே. இவ்வாறான பல தன்மைகள் கொண்ட நிலையில் தான் நடைமுறை உலகம் இருக்கின்றது.

Constitutional rights is different from institutional rights

அரசியல் உரிமை

நிலவுடமையின் சிதைவிற்கு மாற்றீடாக முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை சமூகக் கட்டுமானம் எங்கும் அறிமுகப்படுத்துகின்றது. கட்டுண்டு கிடந்த தொழிலாளர்களை சுதந்திரமாக சுரண்டக் கூடிய வகையில் தொழிலாளர்களை பிணைத்திருப்பதை முதலாளித்துவம் விரும்புவதில்லை. சட்டரீதியாக உரிமைகளை உறுதிப் படுத்துகின்றது இதன் ஊடாக அரசு தான் முதலாளிக்கு சார்பானவர் (அது எப்பவும் ஒரு வர்க்கம் சார்பானதுதான்) இல்லை என்பதை பிரகடனப்படுத்துகின்றது.

ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் ஜனநாயக உரிமைக்கான பரிமாணம் மாறிக் கொண்டு செல்கின்றது. கொலனித்துவ காலத்தின் பின்னர் குறைவிருத்தி கொண்ட நாட்டில் இருந்த மக்களின் உரிமை என்பது அதன் பரிமாணத்தில் இருந்து இன்று மாறியிருக்கின்றது. இலங்கை போன்ற நாடானது குறைவிருத்தி கொண்ட நிலையில் குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கோரிக்கைக்கான போராட்டம் கூட அவசியமாக இருக்கின்றது. மக்களுக்கும் சரி சமூக நலன் கருதி சிந்திப்பவர்களிடம் கூட மக்களிற்கான உரிமை இணைந்து சென்று பெறுவோம் என்ற நிலபிரப்பிரபுத்துவத் சிந்தனைதான் வேரோடி இருக்கின்றது. இவ்வாறான நிலையில் முதலாளித்துவ உரிமை என்ன என்பதைக் கூட தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். பழைய சமூக உறவுகளை முதலாளித்துவம் சிதைக்கின்ற போது அதற்;கு மாற்றாக சுதந்திரமான உற்பத்தி சக்திகளை (தொழிலாளி) பெறும் நோக்கோடு பற்பல அரச நிறுவனங்கள் ஊடாக உறுதி செய்கின்றது.

சலுகை- மானியம்- இலவசம் - சமூகக் கொடுப்பணவு

சோசலிச எழுச்சியின் காரணமாக சமூக நல அரசுகள் தோற்றத்தின் ஊடாக தனது குடிகளுக்கான சமூகக் கொடுப்பணவுகளை (institutional rights) உறுதி செய்து தனது குடிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் குறைவிருத்தி கொண்ட தேசங்களின் இவ்வாறான முதலாளித்துவ உரிமைகளை சலுகை என்ற நிலைக்கு எமது அரசியல்வாதிகள் கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் மக்களின் உரிமையை சோற்று நிகரானதாக மாற்றிக் கொண்டனர். தாம் கொடுக்கும் இலவசத்தின் ஊடாக தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதிலும் மக்களின் உரிமை வாங்கு வங்கி- சோற்றுக்கு மேலானது என்று மக்கள் உணர்ந்துவிடாதவாறு வெகுகர்ச்சிதமாகவே செயற்படுகின்றார்கள். சமூக நலவிடயங்களை அரச நிறுவனக்கட்டமைப்பு ஊடாக உறுதி செய்யப்படுகின்றது. இவை சட்டரீதியாக மக்களுக்கு கிடைக்கவேண்டியவையே. இதனையே மக்களின் உரிமையாக பிரகடனப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது.

இங்கு வடக்கு முதலமைச்சரின் கருத்தை இங்கு பொருத்திப் பார்ப்பது நல்ல. “நாங்கள், 67 வருடமாகத் தீர்க்கப்படாத எமது பிரச்சனை பற்றி சதா கூறிக் கொண்டு இருக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். பொருளாதார விருத்தியால் மட்டும் எமது மக்கள் குறை தீர்ந்து விடாது. பலாத்காரமாகப் பறித்ததைத் திரும்பக் கையளித்தால் மட்டும் எமது பிரச்சனைகள் நீங்கி விடா. சட்டப்படி சேர வேண்டிய உரித்துக்கள் அவர்களைப் போய்ச் சேரவேண்டும். 67 வருடங்களாக எமக்கு நடந்தது போல் எம்மை மீண்டும் அரசாங்கங்கள் ஏமாற்ற முனையக் கூடாது.” இணக்க - அபிவிருத்தி செய்த அரசியல் என்பது அடிப்படை உரிமை (institutional rights) என்பதை இங்கு கோடிட்டுக் காட்டுகின்றார்.

ஆனால் தேசிய இனங்கள் தங்களின் நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள், மொழி, கலாச்சாரம், மனப்பாங்கு மேலும் ஜனநாயக பண்பைக் கொண்டு வளர்த்துக் கொள்ள முடிவெடுக்கும் உரிமைகளே தேசிய இனங்கள் வேண்டிநிற்கின்றனர்.

இதனை தென்னிலங்கை இடதுசாரிகளும் சரி இணக்க அரசியல்- அபிவிருத்தி அரசியல் செய்பவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அபிவிருத்தி அரசியல்- நிறுவன (மேற்கட்டுமான) உரிமைகள் பற்றிப் பேசி சுயநிர்ணய உரிமையை கீழ்மைப்படுத்தும் அரசியல் செய்யப்படுகின்றது. அனைத்து மனிதவிரோதிகளும் ஒன்றுசேர்ந்து கொள்கின்ற போது இதற்கு எதிராக மக்கள் சக்தியை நம்பி மாத்திரமே போராட்டங்களை மேற்கொள்ள முடியும்.

இறுதியாக

முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் தேசிய இனங்களின் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் அரசியல் நகர்வுகளாகவே இருக்கின்றது. அமைப்புக்கள் அரசியல்வாதிகள் தமது குறுகிய நலனுக்காக அரசியல் செயற்பாடுகளில் இறங்குகின்றனர்.

மக்களின் உரிமை பற்றி மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு உள்ளது. இவை 1983களின் நிலைக்குத் தான் செல்வவேண்டியிருக்கின்றது. அன்றையக் காலத்தில் அரசியல்மயப்படுத்தும் வேலைமுறையைக் கொண்டிருந்தனர். அன்றையப் பொழுதில் வடக்கின் ஒரு மூலையில் மலையகத்தைப் பற்றி அறிந்து அவர்கள் பற்றிய தீர்வை கோரிய நிலை அன்றைய காலங்களில் உருவாகியிருந்தது. மலையத்தைப் பற்றிய விபரத்தை அறிந்த மக்கள் அவர்களே மற்றைய இயக்கங்களிடம் கேள்விகேட்டார்கள். இங்கு மக்களிடம்அரசியல் மயப்படுத்தல் என்பது முக்கியமானதாகும். இவை கற்றல்கப்பித்தல் என்ற அடிப்படையில் இருக்கின்ற போது மக்களே அரசியலை இன்னும் திறமையான முறையில் வழிநடத்துவார்கள்.

02032015

 

 

 

அதிகாரத்தினை மையப்படுத்தலும் மாகாணங்களை குறுங்குதலும்!!!

Details

Published on Thursday, 15 November 2012 23:11

Written by

Hits: 330

ஆட்சியில் முழு அதிகாரத்தினையும் தமது கைகளில் வைத்துள்ள ராஜபக்ச சகோதரர்கள்; தாம் மக்களில் இருந்து அன்னியப்படுகின்ற போது மக்களை தூண்டி விடுவதன் மூலம் அரசியல் லாபம் பெறுகின்றனர். இதனால் பெருதேசிய சிந்தனைகளை முன்னோக்கி நகர்த்தும் நிகழ்வுகள் பல்வேறு முனைகளில் நடந்தேறுகின்றன. இதன்விளைவாக இனங்களுக்கிடையாயேன முரண்பாடுகளையும், சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு ஆளும் கட்சி தொடர்ச்சியாக செயற்படுகின்றது. இதனை புரிந்து கொள்வதன் மூலம் தொடர்ச்சியான பல நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.

பேரினவாத கருத்துக்களை ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய, பசில், வீரவன்ச, சம்பிக்க, தினேஸ் குணவர்தன ஆகியோர் மூலமாக அரசு பேச வைக்கிறது. இலங்கையில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களை மூன்று மாகாணங்களாக மாற்றுவதற்கு இலங்கை அரசிடம் ஒரு சதித்திட்டம் உள்ளதாக அறியப்படுகின்றது. இந்த சதித்திட்டத்துக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தலைமை தாங்குகிறார். அவருக்கு ஆளும் கூட்டணியின், சிங்கள தீவிரவாத பங்காளி கட்சிகள் துணை இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதம் உண்டு எனவும் அறியப்படுகின்றது. மேலும் பிரபா கணேசன் என்ற ஆழும் கட்சி உறுப்பினர் 13 திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என்றால் தான் ஆழும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

மையங்கொண்ட அதிகாரம்:

இலங்கை அரசாங்கம் உள்ளுர் சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதாக்குவதும், அதனை மைய ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டத்தினை செயற்படுத்த முனைந்துள்ளது. இதன் ஆரம்பமே திவிநெகும திட்டமாகும். ஏற்கனவே சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி முறை இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. இருக்கும் அதிகாரத்தின் ஊடாக நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும். பெயரளவிற்கு ஏனும் இருக்கும் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பட்டினசபை போன்றவற்றின் அதிகாரத்தை இல்லாதாக்கும் செயலை அரசு ஆரம்பித்து விட்டது.

முதலாளித்துவ கட்டத்தில் ஏற்படுகின்ற அரசியமைப்பு வளர்ச்சியானது புதிய அதிகார நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு மக்களை நிர்வகிக்கின்றது. இங்கு முதலாளித்துவ நிறுவனங்களை உருவாக்குவதன் ஊடாக உள்ளுர் ஜனநாயகத்தை பெயரளவிற்கேனும் வழங்குகின்றது. இன்று அதிகாரம் மையம் கொண்டு செயற்படுவது பாசீசத்தின் உச்சத்து செல்கின்றதை இது காட்டி நிற்கின்றது. முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியானது உள்ளுர் மட்டத்தில் அதிகாரத்தை பகிர்கின்றது. முக்கியமான சட்டம், நிர்வாகம், நீதி, நிதி, இராணுவம், நிலம் தவிர்ந்த பல அதிகாரங்களை பட்டினசபை, நகரசபை, மாநகரசபை போன்றவற்றுடன் பகிர்ந்து கொள்கின்றது. இப்போ அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை உள்ளுர் சபைகள் வெறும் கண்துடைப்பிற்கும், பொம்மையாகவும் மாற்றப்படுகின்றது.

உள்ளுர் தேர்தலில் தெரிவு செய்யப்படுபவர்களின் அதிகாரம் பறிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்த நகர்வையே இனவாதிகள் செய்கின்றனர்.

ஏற்கனவே வடக்கு கிழக்கை சட்டரீதியாக பிரித்தனர், இப்போ 13 திருத்தச் சட்டத்தை பிரபாகரனே எதிர்த்தவர் என்கின்றனர். அந்த சட்டத்தினை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறும் பாதுகாப்புச் செயலாளர். இன, மத, மொழி, ஜாதி, பால் அடிப்படையில் இலங்கையில் எவருக்கும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை புள்ளி விபர ரீதியில் நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவியர் கல்வி பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளில் எவருக்கும் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என கோதாபய குறிப்பிட்டார். இவைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றுதான். இவர்களின் செயற்பாடாது, அரசியல் சாசனத்தின் ஊடாக உரிமைகளை உறுதி செய்யப்படுவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடமையாகும். இன்றைய செயற்பாடுகள் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படைக் கூறுகளை கேள்விக்குள்ளாக்கின்றது.

இனவாதத்தை வளர்ப்பது:

இங்கு மாகாணங்களை குறைத்து சிங்கள மக்களை பெரும்பான்மை கொண்ட மாநிலங்கள் ஆக்குவது இனத்துவ பேதங்களை அதிகரிக்கவே செய்யும். சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் தொன்மை கொண்ட வரலாற்றைக் கொண்டது. சிங்கள மக்கள் ஆரிய இனம் என்ற பெருமையைக் கொள்கின்ற போதிலும் சமூக வளர்ச்சிக் நோக்கில் பார்க்கின்ற போது, இவை ஒரு கருத்துருவம் மட்டும் தான். ஆனால் சிங்கள தேசிய இனம் என்பதும் பழமையானது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். 1960களில் இலங்கையில் நடைபெற்ற மொழி மாநாடு ஒன்றில் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையில் பிறந்த குழந்தைதான் சிங்களம் என்பார் மொழி அறிஞர் காலம் சென்ற வணபிதா டேவிட் அடிகளார். அவர் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக் ஒரு கருத்தாகும். மொழிகள் அன்றைய காலத்தில் ஏற்படுகின்ற ஆட்சிகளின் அனுசரனையுடன் வளர்க்கப்படுவதே மொழியாகும். மலையாளம் தனிமொழியாகி 1700 வருடங்கள் ஆகின்றது எனில் சிங்களம் அதற்கு முதல் உருவாகியிருக்கின்றது. எனவே சிங்களமும் தொன்மை மொழிதான். அந்த மொழியை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார, பண்பாட்டைக் கொண்டது சிங்கள இனமாகும்.

தொன்மை கொண்ட இனங்களை (Assimilate) கலப்பு இனமாக மாற்றுவது அவ்வளவு இலகுவானது அல்ல. இவ்வாறு கட்டாய இனக்கலப்பை ஏற்படுத்திக் கொள்ளவே முடியாது. நாம் சிங்கள் இனத்தை எவ்வாறு தமிழ் இனத்தின் கீழ் கலப்புச் செய்ய முடியாதோ, அதேபோல தான் ஒரு இனத்தினை இன்னொரு இனத்துடன் இனக்கலப்பினை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது. இனங்களானது பெருமை கொள்கின்ற வரலாறு, மொழி, கலாச்சாரம், நிலப்பரப்பு என வாழ்ந்து வந்த இனத்தினை கட்டாயப்படுத்தி பனியவைக்க முடியாது.

1981களில் கட்டாய சிங்கள மொழிப் போதனையை பாடசாலைகளில் நிர்ப்பந்தித்த போது நாம் எதிர்த்திருந்தோம். ஆனால் நாம் இன்று புலம்பெயர் தேசங்களில் அன்னிய மொழியை கற்றுக் கொள்ளும் முரண்பட்; போக்கு இருப்பதைக் கவனிக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொருவரின் அடையாளத்தை ஏற்றுக் கொள்கின்றது. அடையாளத்தை ஏற்றுக் கொள்வதன் ஊடாக இந்தச் சமூகத்தில் (Integration) இணைத்துக் கொள்கின்றது. மொழி கூட பொருளாதார அமைப்பில் ஈடுபடுவதற்கு அவசியமானது என்பது ஒரு புறமிருக்க, இனங்களின் அடையாளத்தினை பாதுகாத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். பலதேசிய இனங்களைக் கொண்ட சுவீஸ்லாந்து நாட்டில் தேசிய இனங்கள் ஒரு அடையாளத்தினை ஒருவர் ஏற்றுக் கொள்வதன் ஊடாக சமாதானமாக வாழ்கின்றார்கள். ஒரு இனம் மற்றைய இனத்தை அழித்துவிடும் என்ற அச்சம் போக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு அரசியல் உரிமை கொண்ட மக்கள் கூட்டத்தினை கொண்ட ஒரு நாடாக இலங்கை உருவாகுவதன் மூலமே இனங்கள் சமாதானமாக வாழ முடியும்.

இன்று கடற்கரையோர மக்கள் முன்னர் தமிழர்களாகவும், மலையாளிகளாவும் இருந்தவர்கள் இன்று சிங்களவர்களாக இருக்கின்றார்கள். இவை காலப்போக்கில் நடைபெறும் தேசிய இனப்பெருக்கமாகும். இவ்வாறு இருந்த போதிலும் மேற்கு கரையில் இருக்கும் தற்காலத் தமிழர்கள் தமது அடையாளம் நிர்ப்பந்தத்தின் மூலம் அழிக்கப்படுவதாக உணர்கின்றனர்.

இவ்வாறாக கட்டாய சிங்கள மயமாக்கல் இனத்துவ ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. ஏற்கனவே இராணுவக் குடியிருப்பையும், அதனைச் சுற்றிய பொருளாதாரத்தினையும் கொண்ட ஆக்கிரமிப்பு உள்ளது. இது நெடுங்காலமாக விதைக்கப்பட்ட இனவாதச் சிந்தனையை இன்றும் சமூகத்தில் ஆளஊடுவும். இவ்வாறான செயற்பாடுகளை இனத்துவ ஐக்கியத்தை கோரும் முற்போக்குச் சக்திகளுக்கும், உழைக்கும் வர்க்கத்தவர்களும் எதிர்க்கொள்ளும் சவாலாகும்.

இனவாதத்தை எதிர்ப்பது

இனவாதத்தினை கட்டமைப்பில் மாற்றம் கொள்ளவைப்பதன் ஊடாகவே முடியும். முழுச் சமூக அமைப்பில் இனவாதம் புரையோயோடிப் போயிள்ளது. இனவாத்தை இனவாத அரசு விதைக்கின்ற வேளையில் சிறியளவு பலமற்ற நிலையில் இருக்கின்ற முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதத்தை எதிர்த்து கட்டமைப்பில் மாற்றங் கொள்ளும் தந்திரோபாயத்தில் வேலைமுறையை மேற்கின்றார்கள். இவ்முயற்சி ஆதரிக்கப்பட வேண்டும். மேற்நிலையில் இருந்து வருகின்ற ஆதிக்க குரல்களை கீழ்நிலையில் இருந்து செயற்படுத்தப்படும் வேலை ஊடாவே எதிர்க்க வேண்டும். வேலைமுறையை ஆரம்பிக்காது விடின் மென்மேலும் இனவாதம் சமூகத்தில் ஆழவூடுருவி சாக்கடை சமூதாயமாகவே நிலைநிறுத்திக் கொள்ளும். ஏனெனில் இந்தச் மார்க்ஸ் கூறுவது போல எந்தச் உற்பத்தி முறைசார்ந்த சிந்தனை இருக்கின்றதோ அதே சமூகத்தின் சிந்தனை தான் எம்மையும் ஆட்கொள்கின்றது. அதாவது நாம் ஆதிக்கவர்க்கத்தின் சிந்தனையான பிற்போக்குச் சிந்தனையின் படியோதான் மனிதர்கள் சிந்திக்கின்றார்கள். ஆதிக்கவர்க்கச் சிந்தனையை எதிர்ப்பதும் மாற்றங் கொள்ளவைக்கும் சமூக மாற்றத்திற்கான போராட்டம் அவசியமாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டம் புரட்சிக்கு முன்னரும் பின்னரும் நடைபெறவேண்டும். இதன் ஊடாக மக்களை அரசியல் மயப்படுத்த முடியும்.

இடைநிலை அதிகார வர்க்கம்:

ஏகாதிபத்தின் இடத்தரகர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். இதே போல இனவெறியரசின் கைக்கூலிகளாக உள்ளவர்களும், பாராளுமன்றத்தை நம்பி வாழும் இந்த சமூக அமைப்பின் தூண்களுக்கு பெரும் விளைவுகள் ஏற்படப் போவதில்லை. சம்பிரதாயத்திற்கு தேர்தல்கள் நடைபெறப் போகின்றது. இதன் மூலம் நிர்வாக அலகுகளின் சபை உறுப்பினர்களுக்கான ஊதியத்தில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. இதனை உணர்ந்தே அரசின் கைக்கூலிகளாக இருக்கும் கட்சியானது. சமுத்தி ஊழியர்களை இணைத்து ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி செய்திருந்தனர். இனவாத அரசின் பாதங்தாங்கிகளுக்கு ஒரு இனத்தின் ஜனநாயகக் கோரிக்கைகள் பெரிய விடயமாக தெரிவதில்லை. ஏனெனில் இந்த சமூக அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் இடைநிலை அதிகார வர்க்கம் சொத்துக்களை சேர்க்கின்றனர். இவர்கள் லஞ்சம், செயற்திட்டங்களை (Contractor) பொறுப்பெடுத்து செய்கின்ற பெறப்படும் லாப வேட்டைக்காக ஒரு இனத்தின் உரிமையை ஏலம் போடுகின்றார்கள். இவ்வாறான இடைநிலை வர்க்கமாக சுயலாபத்திற்காக செயற்படுகின்றார்கள்

ஏகாதிபத்தியவாதிகளுக்கும், பிராந்தியவல்லரசுகளுக்கும் இனவாதிகள் ஏவல் நாய்களாக இருக்கின்றனர். இதே போல சிற்றரசர்களாக இடைநிலை வர்க்கத்தவர்கள் ஏவல்நாய்களாக செயற்படுகின்றார்கள். உள்@ர் ஆட்சியாளர்களை கொண்டு மக்களை அடக்க பயன்படுத்தப் படுகின்றார்கள். தமிழர், முஸ்லீம், மலையக இடைத்தரகர்களும் சிங்கள இனவெறி அரச பாசீசத்திற்கு சேவகம் செய்கின்றார்கள். இனவாதத்தினை விதைத்து மக்களைப் பிரிக்கின்றார்கள், அடிப்படை ஜனநாயகத்தை மக்களிடம் இருந்து பறித்தெடுக்கின்றார்கள்.

இடசாரிகளினதும் ஜனநாயக சக்திகளின் கடமைகள்

இன்று பாசீச அரசமைப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் இனவெறியரசு செய்கின்றது. இதில் அனைத்து இனமக்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்றால் இந்த சமூக அமைப்பு மாற்றமடைய வேண்டும். இவைகள் ஒரேயடியாக ஏற்படப் போவதில்லை. முதலில் பாசீசத்தினை எதிர்ப்பதற்கு அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவது அவசியமாகும். இணைந்து போராடுவதன் ஊடாக குறைந்தபட்டசம் முதலாளித்துவ நிறுவனமயப்பட்ட உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

 

 

லங்கா என்ற போலித் தேசியம்!!!

வரலாறு என்பது முன்னோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கின்றது. வரலாறு முன்னோக்கி நகர்ந்து செல்லதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வியாக்கியானம் செய்ய முடியும்.

ஒரு பொருளாதார அமைப்பு என்பது மாறிச் செல்கின்ற போது அதற்கு போதிய கட்டமைப்புக் கொண்ட ஜனநாயக வளர்ச்சி இல்லை என்றால் அதன் எல்லைகளை மீறித்தான் முன்னோக்கிச் செல்கின்றது. இந்த மாற்றம் சமாதான முறையில் அல்லது பலாத்காரத்தின் ஊடாக நடைபெறலாம். ஆனால் அங்கு முரண்பாடுகள் இல்லாத காரணத்தினால் அல்ல. பழையதற்கும் புதியதற்கும் இடையோன முரண்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முன்னோக்கிச் சென்று முதலாளித்துவம் கட்டத்தை அடைகின்ற போது அதற்கான ஜனநாயக உரிமைகள், உட்கட்டுமானம், நிறுவனமயமாதல் என்பது மாற்றத்திற்கு உள்ளாகித் தான் வந்திருக்கின்றது. மாற்றத்திற்கு உள்ளாகித் தான் இருக்கும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையானது தமிழ் இனவாதிகளாலோ அல்லதுஆயுதக் குழுக்களின் தான் உருவாக்கியதன்று. தேசிய இனப்பிரச்சனை என்பது தனியே இலங்கைக்கு மாத்திரம் பிரத்தியோகமானதல்ல.

முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ் மக்களை இணக்கிப் போங்கள்,

‘‘-- ... அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலையாகும்..

மாறாக சாத்தியமில்லாதவைகளுக்காக காலத்தை விரையம் செய்கின்ற அரசியலியலாளர்களை கொண்டுள்ள இனமானது அழிவைத்தான் சந்திக்கும்.‘‘----

இதனை பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் மீது அல்லது சிங்கள மக்கள் மீது கூற முடியுமா?

அது சரி தமிழ் மக்கள் அல்லது ஒடுக்கப்படும் மற்றைய தேசிய இனம் எந்த வகையில் தீண்டத்தகாதாரனவர்கள் ஆகின்றார்கள்? ஒடுக்கப்படுபவர்கள் மாத்திரம் மேலாதிக்கத்திற்கு ஒடுங்கிப் போக வேண்டும்.

1920களில் பிரித்தானியாவின் ஆணைக்குழுவில் தமிழர்களுக்கான அந்தஸ்துப் பற்றிப் பேசிய பொன். அருணாசலத்தின் கோரிக்கை என்பது உயிர்ப்புப் பெற்று புதிய தலைமைக்கு 1949 இல் கைமாறியது.

இதே காலத்தில் கொலனித்துவத்தின் விழைவாக மாத்திரம் அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு செல்கின்ற போது மொழியின் தன்னாட்சி, பொருளாதாரத்தில் தன்னாட்சி, நிலத்தின் மீதான தன்னாட்சி, கலாச்சாரப் பண்பாட்டு தன்னாட்சி என்று தேசிய இனங்கள் பண்பைக் கொண்டதாக வளர்கின்றது.

இந்த வளர்ச்சிப் போக்கை அடைகின்ற போது கோரிக்கைகள் முரண்பாடாக வெளிப்படுகின்றது.

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்த கட்டத்திற்கு அடைகின்ற போது புதிய புதிய எல்லைகளைக் கொண்ட நிர்வக அலகுகளாக பரிணமித்துள்ளது. ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் (nation) இருக்க முடியும். இதற்கு உதாரணம் சுவீஸ், பெல்ஜியம், இந்தியா என பல நாடுகள் உள்ளது.

ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களை நிர்வாக வசதிக்காக இணைத்த போக்கினை இலங்கை, குர்து (சிரியா, ஈரான், ஈராக், துருக்கி என பிரித்துள்ளார்கள் - காஸ்மீர் தேசிய இனமும் பாக்கிஸ்தான் - இந்தியா என்று பிரித்துள்ளனர் ) போன்ற தேசிய இனங்களை குறிப்பிடலாம்.

வரலாற்று ஓட்டத்தை மையப்படுத்தியதாகவும் அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கை கணிக்காத ஆய்வுகள், சிந்தனைகள், வெளிப்பாடுகள் தீர்வுகள் என்பது வரலாற்றில் எவ்வித புரட்சிகர பாத்திரத்தை கொடுக்கப்போவதில்லை. . வரலாற்றை பின்னோக்கி குறிப்பிட்ட காலத்திற்கு நகர்த்த முடியும். ஆனால் அது எப்பொழுதும் சாத்தியம் இல்லை.

வரலாற்று அனுபவம் என்பது முழுமையான உண்மையாக இருப்பதில்லை. அனுபவவாதம் என்பது வரலாற்று உண்மையல்ல.

வரலாறு முன்னோக்கிச் செல்லாது என்கின்றீர்கள். சாணக்கியம் என்பது வழிகாட்டும் சிந்தனையில் இருந்து தான் முடிவு பெறுகின்றது. ---ஒரு இனத்தின் அரசியலானது காலத்துக்கு ஏற்பவும் புதிப்பிக்கப்படவேண்டும்.---- நீங்கள் தான் மறுக்கின்றீர்கள். 1920களிலும் பின்னர் 1948 ஆட்சி கைமாறிய பின்னரான அரசியலை தொடர வகுப்பெடுக்கப்படுகின்றது. அன்றைய காலத்திலும் அன்றைய அரசியல் தலைமைகளின் அரசியல் முதிர்சிக்கமைய கோரிக்கைகள் வைத்துக் கொண்டு தேசிய அரசு என்ற போலித் தனத்தின் கீழ் உரிமையைக் கேட்கப்பட்டது.

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவ கட்டத்திற்கு வந்து கொண்டிருந்த தேசிய இனங்கள்- தேசம் பற்றி லெனின் தீர்க்கதரிசனமாக கூறிவிட்டார்.

----‘‘‘ இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது. எல்லாக் காலனிகளுக்கும் நஷ்ட ஈடு இல்லாமல், நிபந்தனையற்ற வகையில் உடனடியாக சுதந்திரம் அளிக்க வேண்டும்- இந்தக் கோரிக்கையின் அரசியல் அர்த்தம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை- என்பதைக் கோருவதோடு சோஷலிஸ்டுகள் நின்றுவிடக் கூடாது. இந்த நாடுகளின் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும். தங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வல்லரகுள்கு எதிராக அவைகளின் ஆயதந் தாங்கிய எழுச்சிக்கு அல்லது புரட்சிகரமான யுத்தத்துக்கு - அது ஏற்படுமானால்- உதவி செய்ய வேண்டும். ‘‘‘

தேசிய இனங்கள் ஜனநாயகத்திற்கான கட்டத்தை அடைய முற்படுவது தனிமனிதர்களின் சிந்தனையில் இருந்து அல்ல. அதனை தடுத்து நீங்களோ நானோ தடுத்து விறுத்திவிட முடியாது. 1922 களில் பொன் அருணாசலம் காலத்தில் இருந்த தலைமையை விட புதிய தலைமை 1949 இல் ஏற்படுகின்றது. இது பின்னர் 1977 க்குப் பின்னர் தேர்தல் பாதையை, சமரசவாதத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

நாம் விரும்பி ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட வில்லை.

ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது ஏதோ ஒரு காலத்தில் முன்னோக்கிச் செல்ல முடியுமேயன்றி பின்னோக்கிச் செல்ல முடியாது. தடைகள் ஏற்படுவது இயல்பு.

முள்ளிவாய்க்கால் ஏன் ஏற்பட்டது என்று சுயஆய்விற்கு உள்ளாக்கிச் செல்கின்ற போதுதான் அடுத்த கட்டத்திற்கான போராட்டம் என்பது வெற்றி கொள்ள முடியும்.

--------------மாற்றம் ஒன்றே மாறாதது!!! -

ஜனநாயக உரிமையை மறுத்துரைக்கின்ற மனிதர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து வருகின்ற போதும் கூட்டுச் சமூக உறவில் இருந்து தனித்துவவாத - சமூக விழுமியங்கள்- தனிமனித உரிமை என்று வளர்ந்து தான் உள்ளது.

பழைய சிந்தனை முறை, வாழ்வுமுறை, உற்பத்தி முறை எதனையும் புதிய முறை அங்கீகரிப்பதில்லை. சிலவேளைகளில் பழையதை உள்வாங்கிக் கொள்ளும் ஆனால் அது பழைய முறையில் தொடர்வதை அங்கீகரிப்பதில்லை.

இவ்வாறு தேசிய இனங்களின், தேசங்களின் உரிமை என்பதை விளக்கிக் கொள்ள வேண்டும்.

தேசம் - தேசிய உரிமை என்பதை துடக்காகப் பார்ப்பது மாத்திரம் அல்ல அதனை வர்க்கப் போராட்டத்தின்அங்கமாக பார்க்காத பார்வை என்பது தொடர்வது மாற்றப்பட வேண்டும்.  

02.12.2015  


ஜேவிபி தாம் சிங்கள பௌத்தத்தின் பிரதிநிதிகள் என்ப பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்துகின்றார்கள்.
National People’s Power (NPP) presidential candidate Anura Kumara Dissanayake’s pronouncement in Jaffna earlier this week that he did not come to bargain for votes by assuring that he would give ’13 plus’ or a ‘federal solution’ begs the crucial question as to what exactly is the NPP’s public position in regard to these and other thorny issues including the militarisation of the Sri Lankan State? (

https://www.sundaytimes.lk/240407/news/the-npps-sidestepping-in-jaffna-and-repeating-deadly-mistakes-554026.html

 21.05.24

 

 

 

 

 

பாட்டாளி வர்க்கமானது வெற்றியை சாதிக்க வேண்டும் என்றால் தேசிய இனவேறுபாடுகளை தகர்த்து ஒன்றுபட வேண்டும். இது சரியான விளக்கமாக தெரியும். ஆனால் சமூக அமைப்பின் போக்கை இவ்வாறு தட்டையாக விளங்கிட முடியாது. முதலாளித்துவ கட்டத்திற்கானதாக கணிக்கப்பட்டிருந்த வேளையில் அது சரியாக இருந்திருக்கின்றது. ஆனால் சோசலிச, ஏகாதிபத்திய கட்டத்தில் சுயநிர்ணயம் பற்றிப் பேசப்படுகின்றது. அந்த நிலையை வந்தடைந்த பின்னர் பழையதை ஒப்புவிக்க முடியாது.
தேசிய பொருளாதாரக் கட்டமைப்பை அவசியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இது சுயநிர்ணயம் சார்ந்த விடயத்தை சட்டத்தினுள் குறுக்கிவிட்டமையை இன்று அவதானிக்க முடியும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்பது அடுத்த கட்டத்திற்கு அவசியமானதாகும்.
சுயநிர்ணயத்திற்காக போராட்டத்தை தலைமை தாங்கிட வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை. தேசிய, குட்டிமுதலாளிய, தரகு வர்க்கமே தமிழ் தரப்பை பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருகின்றார்கள். தேசிய ஜனநாயகக்கட்டத்தை பாட்டாளி வர்க்கமே தலைமை தாங்க வேண்டும். அந்த வெற்றிடம் உள்ளது. அதற்காகவும் போராட வேண்டியுள்ளது.
தேசிய ஜனநாயகப் புரட்சியை மறுதலித்துவிட்டதை இன்று இடதுசாரிக் கட்சிகள் நிறுவுகின்றது. இதற்கு மாற்றாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும். அந்த வெற்றிடத்திற்கான போராட்டமும் உள்ளடங்கியதே. திரிபுவாத இடதுசாரிகளின் பின்னால் எம்மைப் போன்றவர்கள் பயணிப்பதில் அர்த்தமில்லை.

May be an image of 1 person and text

 

 

 May be an image of 3 people

 

 

https://www.tamilguardian.com/content/jvp-lashes-out-north-east-merger-demand-tamil-parties 

The Janatha Vimukthi Peramuna (JVP) came out and declared it would not back the merging of the Northern and Eastern provinces, as demanded by Tamil parties, stating that it was the “ambition of separatists”.

JVP Propaganda Secretary Vijitha Herath said the National People's Power (NPP) coalition which is led by the party, would not back the proposal.

“Ambition of the separatists has been to get the North and the East merged in order to show the international community that a majority in those areas are Tamils, hence they could demand a separate administration,” he told a press conference.

“Such a proposal has been submitted by Tamil political parties in every election. We are against this move.”

The merging of the provinces was effected in 1987 as part of the Indo-Sri Lanka Accord, until Sri Lanka’s Supreme Court declared it  "null and void and illegal” in 2006.

The JVP and the hardline Buddhist JHU party campaigned against the merger, bringing it to the court and celebrated its ruling, with jubilant party members lighting firecrackers the building at the time.

 

 

 

 


 

 

 

 

 

 

 

 


 

No comments:

Post a Comment