இன்றைய அரசியல் போக்கு 7
**** தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு இதுதான் தீர்வு இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஒரு பிரிவு உள்ளது.
**** தாம் தான் சரியானவர்கள் எமது கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தாமாகவே முன்வந்து சிங்கள தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள்.
**** சிங்கள தேசத்தினுள் ஒரு பிரஜையாக இரு என்ற அடிப்படையில் அரசியல் நகர்த்துகின்றது. இதனை அறியாத தமிழர் தலைவர்கள்.
**** புத்த சிலை வைப்பு என்பதை தனியே சிங்கள சக்திகளுக்கு இடையிலான காணிப் பிரச்சனையாக குறுக்கப்படுகின்ற போக்கை அவதானிக்கலாம். வரலாற்றைத் தவிர்த்த அணுகுமுறை மோசடித்தனமானது.
*** “ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னர், முழுமையான சுயாட்சியை உடனடியாக அடைவது சாத்தியமில்லை. கிடைத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டப் பரப்பை (மாகாணசபை) பயன்படுத்தி அதிகாரப் பகிர்வை முன்னேற்றுவது தான் நடைமுறைச் சாத்தியம்.” (வரதர்)
பல்துருவப் போக்கின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் இலங்கையில் 1972-89 ஆயுதம் தூக்கியவர்கள் ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள். அவர்களிடம் இருந்து அரசியல் கற்க வேண்டும் என்ற கருத்தாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு ஒரு விசேட பண்பு உள்ளது. அது தான் அவர்கள் இலங்கையில் பெருந்தேசிய இனமாக இருக்கின்றார்கள். ஆட்சி மாற்றம் கூட தற்செயலாக நடைபெற்றதாகும். சிங்கள தேசத்திற்கு தேவையான மாற்றத்தை அவர்கள் கொடுக்க முடியும். அதே வேளை ஊழல் படிந்த சிங்கள தேசத்தில் முதலாளித்துவ ஜனநாயக சக்தி ஆட்சியில் வந்துள்ளது. அதனை யாரும் தீவிரமாக எதிர்க்கவில்லை. 70 வருட காலத்தில் இருந்து மாற்றம் பெற்ற புதிய வர்க்கப் பிரிவு. அந்த வர்க்கப் பிரிவு யாருக்காக சேவை செய்யும் என்பதில் தெளிவு உண்டு. சிங்கள தேசம் முதலாளித்துவ ஜனநாயகத்தை அனுபவிக்கின்ற வேளையில் தமிழர் தேசம் அதனை அனுபவிக்க முடியாத நிலை தான் உள்ளது.
ஆட்சியைக் கவிழ்ப்போம்: நுகேகொடை கூட்டத்தில் நாமல் சபதம்! “துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும்” இவ்வாறு பழைய ஆட்சியாளர்கள் பேசலாம். பழைய ஆட்சியாளர்களை விட சிங்கள தேசத்திற்கு பொருத்தமானவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்.
இன்றைய ஆட்சியாளர்கள் தமிழர் தேசத்திற்கு நேச சக்தியா? அதாவது ஒடுக்கப்படும் தேசத்தின் நட்பு சக்தியா? என்றால் இல்லை.
NDMLP இல் இருந்தும் சிலர் JVP இன் வெற்றிக் காக உழைத்தார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் அதிகாரப் பரவலாக்கம், சுயாட்சிதான் சுயநிர்ணயம் என ஒப்பித்தவர்கள். இந்த அற்பாவாதிகள் தொடர்ச்சியான அரசியல் மாற்றமில்லாது இவ்வாறு தான் இருந்துள்ளது.
ஆளும் தரப்பு (சிங்கள தேசம்) மீது கொடுக்கப்பட வேண்டிய அழுத்தத்தை ஏன் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் மீது தொடுக்கின்றார்கள்?
6 பிரிவினைவாத மற்றம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கம், வடக்கு கிழக்கு இணைப்பு, திம்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தல் போன்றவற்றை முதல் கட்டமாக JVP மீது முன்வைத்து அழுத்தம் ஏற்படுத்த யார் உங்களைத் தடுத்தார்கள்.
இன்றைய உலகப் போக்கு, குறிப்பான நாட்டின் வரலாறு, எதிர்கால சமூக இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக அழுத்தக் குழுவாக (pressure group) இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய விலகலாகும். சீர்திருத்தவாதக் குழுக்கள் இந்த நிலைப்பாட்டில் உள்ளன.
ஜேவிபியின் வெற்றியை இட்டு பதட்டப்படுவதாக கூறப்படுவதும், விமர்சிப்பவர்களை வலதுசாரியப் போக்கு, போலி இடதுசாரிகள் என்று விமர்சிக்கப்படுகின்றது. இது எவ்வாறெனில் அமெரிக்க அதிபர் புஸ் எம்முடன் ஒத்துழை அல்லது நீ பயங்கவாதிகளின் பக்கம் என்பது போல ஆகும்.
JVP/NPPயை கடுமையாக விமர்சிக்கக் கூடாது என்கின்றார்கள். அவ்வாறு கூறுபவர்கள் JVP/NPPயின் திசை வழிப் போக்கைப் பற்றி விளக்கம் தரமாட்டார்கள். ஆனால் கிளிப் பிள்ளை போல ஒப்பித்துக் கடந்து செல்கின்றனர். துருப்பிடித்த முளையை செருக்கிக் கொள்ளுங்கள். ஆட்சி பற்றி முன்னாள் ஆயுத இயக்கநபர்கள், திடீர் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் என்பவர்களின் தொடர் இம்சை தொடர்கின்றது.
அது என்ன முதலாளித்துவ ஜனநாயகம்?
பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றும் வரையில் அனுபவிக்க முடிகின்ற உரிமையை அடைவதாகும். அந்த வகையில் ஜேவிபி சிங்கள தேசத்திற்கு கொடுக்க தயாராக இருக்கும். உரிமையை கொடுக்கவில்லை எனில் அடுத்த ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வர முடியாது.சிங்கள தேசத்திற்கு செய்ய முனையும் அரசியல் செயற்பாட்டின் போக்கை மதிப்பிட முடியாத கருத்தாளர்கள் உள்ளார்கள்.
முதலாளித்துவப் புரட்சியின் பயனாக முன்வைக்கப்பட்ட அரசியல் கோட்பாடுகள் முதலாளித்துவ பொருள் நலன் சார்ந்து உருவாகுவதாகும். முதலாளித்துவ வளர்ச்சியே எல்லையை கோரியது. பல எல்லைகள் முதிர்ந்த ஜனநாயக முறையில் வகுக்கப்பட்டன. அந்த அரசு வடிவத்தை மார்க்சியம் ஏற்பதில்லை. தேசியம் என்பதே ஐரோப்பிய கண்டுபிடிப்பு என்கின்றனர்.
n ஏக்காரட்சிய மற்றும் 13 ஆதரவாளர்கள்
மாற்றம் என்பது ஒரு நாட்டில் மாத்திரம் நடைபெறவில்லை. லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது, ஆபீரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வயதை விட சிறியவர்களே மாற்றத்தை நிகழ்த்தி உள்ளார்கள்.
கோட்பாடு பற்றிய புரிதல் உள்ள அறிவாளிகளாக இன்று காட்டிக் கொள்கின்றார்கள். இவர்கள் 1969, 1975களில் அரசியலுக்கு வந்தவர்கள், பின்னர் 1982களில் அரசியலுக்கு வந்தார்கள். 1983 பின்னர் அரசியலுக்கு வந்தவர்கள் என உள்ளார்கள். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் உங்களால் உலகப் போக்கை கற்க முடியவில்லையா? உலகின் பாகங்களில் உள்ளவர்கள் இவர்களை சிறிய வயதுடையவர்களே தமது முன்னோர் விட்ட தவறை கற்றுணர்கின்றார்கள்.
ஆனால் இன்று ஈழத்தவர்கள் தமது மூப்பின் காரணம் ஒன்றே போதும் என்று அரசியல் செய்ய முற்படுகின்றார்கள். மூப்புத் தான் உங்களுக்கான ஒரே தகுதி என்றால் உங்களை எண்ணி நாம் அனுதாபம் தான் கொள்ள முடியும்.
தொலைபேசி அழைப்புக் கேட்டால் தூதரங்களுக்கும், விமானத்திலும் பறப்பது தான் வேலையாகக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு என சுயமான அரசியல் இவர்களுக்கு இல்லை. ஆனால் அனைத்திற்கும் தீர்வு உள்ளவர்களாக காட்டிக் கொள்கின்றார்கள். நாம் கேள்வி கேட்டால் உங்களுக்கு யதார்த்த அரசியல் என்ன என்றால் தெரியாது என்பதே பதிலாக இருக்கும். மற்றவர்களை மொக்குகள் மோடுகள் என்பார்கள். இந்த ஏவல் அரசியலை விட்டுத் தொலையுங்கள். ஏவல் அரசியல் செய்து கொண்டு வீண் வீராப்பு பேசுவதை விடுங்கள்.
``அவரது வாதம் தெளிவாக உள்ளது “ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னர், முழுமையான சுயாட்சியை உடனடியாக அடைவது சாத்தியமில்லை. கிடைத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டப் பரப்பை (மாகாணசபை) பயன்படுத்தி அதிகாரப் பகிர்வை முன்னேற்றுவது தான் நடைமுறைச் சாத்தியம்.” இது ஒரு யதார்த்த அரசியல் நிலைப்பாடு. அதே சமயம், பல தமிழ் அரசியல் குழுக்களில் இது “சமரசத்தின் பெயரில் அடிமை நிலைக்கு ஒப்புதல்” என்ற குற்றச்சாட்டையும் எழுப்புகிறது.”
இது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலாகும். இந்த மோசடிக் கருத்தை முன்வைப்பவர்கள் தம்மை இடதுசாரி என்று கருத்தெழுதும் முன்னைநாள் EPRLFஇன் உளவுத்துறை தலைவர். இந்த சந்தர்ப்பவாதிகள் அரசு என்ற விடயத்திற்காக தொடர்ச்சியாக போராட வேண்டியவர்கள்
அரசை மறுக்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்பதை இவர்களின் மண்டைக்குள் ஏறவில்லை. புரட்சி என்று புறப்பட்ட பின்னர் குறுக்குவழியை நாடிய போக்கை மறைப்பதற்காக மீளவும் கதையாடல் நடைபெறுகின்றது.
``13வது திருத்தம், மாகாணசபை மற்றும் தமிழ் அரசியலின் புதிய விவாதம் இன்றைய தமிழ் அரசியலில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் அரசியல் நிலைப்பாடு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அவர் வலியுறுத்தும் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபை முறைமையைச் சார்ந்த அணுகுமுறை, “தமிழ் மக்களின் அரசியல் இலக்கு என்ன?” என்ற அடிப்படை கேள்வியை மீண்டும் உயிர்ப்பிக்கிறது.”
இவ்வாறு கவர்ச்சிகரமாக பேசப்படுவதில் அரசியல் உள்ளடக்கம் ஏதாவது உள்ளதா? ஈழப் போராட்டம் என்ன அடிப்படையில் எழுந்தது? அது பற்றிப் பேசிடாது கடந்து போகும் அரசியல் என்ன?
வரதராஜபெருமாளின் யதார்த்த அரசியல் என்பது எது? 9 மாகாண சபை என்று ஒரு தீர்வை முன்வைத்தார், பின்னர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்குக் கேட்டார்.
1988-ல் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் உருவான வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவரும், பின்னர் தமிழீழப் பிரகடனத்திற்குப் பிறகு இந்தியாவுக்குக் கடந்து சென்றவருமான வரதராஜபெருமாள், இன்று தமிழ் அரசியலில் மீண்டும் ஒரு நடைமுறை வழிமுறையைக் குறிக்கிறார்.
மீளவும் வரதர் குழுக்களிடம் கேட்க வேண்டியது என்னவெனில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டா இல்லை என்பதே. சுயநிர்ணயம் என்பதைப் பற்றிப் பேசாமல் தம்மை பெரும் மனிதர்களாக நிலைநிறுத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு.
``இந்தியாவில் மொழிவழியில் புதிதாக உருவாகியுள்ள தேசீய இனங்கள் சிதறிக் கிடக்கும் தங்கள் தாயகங்களை முறையாக சீரமைத்துக் கொள்ளும் பொருட்டு, சிதறுண்ட நிலையே சீரான நிலை என்று கூறுவோரை எதிர்த்துப் போராடுகின்றன என்பதையேக் காட்டுகிறது.” (ஜீவானந்தம்) லெனின் வழியில் தேசங்களின் அரசு பற்றிப் பேசியுள்ளார்.
அரசு பற்றி
தங்களை இடதுசாரிகள் என்பவர்கள் தேசத்திற்கான அரசு பற்றி ஏன் இவர்களால் பேசமுடியவில்லை. தம்மை இடதுசாரிகள் என்று கருத்துருவாக்கம் செய்பவர்கள் பேசாமல் தவிர்ப்பதன் நோக்கமென்ன. ஒரு இடதுசாரி என்றால் அரசு பற்றிய புரிதல் கொண்டிருக்க வேண்டும். ஜே.ஆர், பிரேமதாசாவிற்கு இவைகள் விளங்க முடியாது என்று காரணத்தை சொல்ல முடியும். ஆனால் ஏன் இவர்கள் JVPக்கு வாக்குக் கேட்டவர்கள். JVP பல்வேறு நாடுகளில் இருந்து கருத்துருவாக்கம் செய்தவர்கள். மேற்கு நாடுகளில் கருத்துருவாக்கிகள் (think tank) முன்னைய ஆயுத இயக்கங்களில் இருந்தவர்கள் இணைந்துள்ளார்கள். இவர்களும் JVP வாக்கு கேட்டவர்கள். NLFT/PLFT, PLOT, EPRLF செயற்பட்டவர்கள் அந்த மதியுரைகுழுவில் பங்கெடுத்துள்ளார்கள். சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்ட முன்னைய JVP உறுப்பினர்களும் வாக்குக் கேட்டார்கள். இன்றும் அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கின்றார்கள்.
இவர்களால் ஏன் தமிழ் மக்களுக்கு கருத்துக் கூறுவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றார்கள். இவர்களுக்க சுயநிர்ணயம் பற்றிய மார்க்சியப் புரிதல் இருக்கின்றதா? அவ்வாறு புரிதல் இல்லை என்றால் போய் படியுங்கள்.
கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பதை தவிர்க்க வாதங்களை அடுக்குகின்றார்கள். ``ஒரு பக்கத்தில் பார்த்தால்” அப்படி இருக்கக் கூடும் ஆனால் ``இன்னொரு பக்கத்தில் பார்த்தால்” அப்படி இல்லாமல் இருக்கக் கூடும் என்று வாதிடுகின்றார்கள்; அவர்களின் சிந்தனைகள் எல்லாவிதமான விவகாரங்களையும் தொட்டுத் தொட்டு அலைகின்றனர்; தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்வதைப் பார்க்காமலிருக்க எப்போதும் முயன்றவண்ணம் இருக்கிறார்கள். இலக்கை திசைதிருப்பும் அரசியல் தொடர்கின்றன. படாடோபமான வாய்ச்சொற்களை எடுத்து வீசுவது வர்க்கத்தன்மையிழந்த குட்டிப்பூர்சுவா அறிவுஜீவியின் குணக்குறியாகும்.

No comments:
Post a Comment