Popular Posts

Wednesday, 14 October 2026

வர்க்கங்களின் பாத்திரம்- இலக்கு மாறுபாடு!!!

 


        வர்க்கங்களின் பாத்திரம்- இலக்கு மாறுபாடு!!!

ஒவ்வொருவரும் தமது வர்க்க நிலையை பிரகடனப்படுத்தும் போக்கு இருக்கின்றது. மார்க்சியம் கற்றுக் கொண்டதால் தம்மை கம்யூனிஸ்ட் என்பவர்களும் உள்ளார்கள். இங்கு எல்லோரும் கட்சியில் இருப்பதால், மார்க்சியத்தினை வாசித்திருப்பதால் ஒவ்வொருவரும் இடதுசாரிகளாகவே, மார்க்சிஸ்டாவோ அமைய முடியாது. இடதுசாரிய முகாமில் வெவ்வேறு முகாம்கள் உள்ளன. அந்த முகாம்கள் வெவ்வேறு போக்கை கொண்டவர்கள் உள்ளார்கள். இந்த முகாம்களின் அரசியல் முடிவுகளும் போக்குகளும் ஆளும் வர்க்கத்திற்கு துணை போகின்றார்கள்.

வர்க்கங்களின் மனோபாவமும் நிலைப்பாடும் சமூகத்தில் அவற்றின் பொருளாதார நிலையினால் தான் முழுமையாக தீர்மானிக்கப்படுகின்றன. அதேவேளை இலக்குகளும் கடமைகளும் சமூக பொருளாதார அமைப்பு, இயல்பினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த தமிழ் சமூகத்தில் உள்ள வெவ்வேறு வர்க்கங்களை ஆராயப்பட வேண்டும். அதே வேளை ஒவ்வொரு வர்க்கத்தின் இயல்புகளையும் ஆராயப்பட வேண்டும்.

மறுபுறத்தே சாதியம் சிந்தனையை தீர்மானிக்கும் முடிவாக கொள்கின்ற போக்கும் உள்ளது. ``சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரம்” அல்லது ``குணம் குலத்தளவே” என்ற போக்கும் உள்ளது. சாதியை அடிப்படையாக வைத்து சமூக ஆய்வை முன்வை என்ற போக்கும் உள்ளது. சாதிய அளவீடும் அதன் பண்பை முன்னிறுத்தும் போக்கு என்பது சமரசம் செய்யப்பட்டே வந்துள்ளது. அவ்வாறு மீறினால் அவர்களை ஒடுக்கப்பட்டோரின் வலியை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், எதிரியாகவும் காட்டப்பட்டது. இந்தப் போக்குதான் சமூகத்தில் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. வர்க்கப் பார்வை, அணுகுமுறை என்பது மலினப்படுத்தப்படுகின்றதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும் வளர்ந்துள்ளது. இங்கு இரண்டு போக்கு எழுகின்றது.

புறநிலைவாதம்- பொருள் உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கு.

அகநிலைவாதம்- சாதி, ஒடுக்கப்பட்டேன், கொலனித்துவகாலம் அதன் வரலாற்றால் ஒடுக்கப்பட்டோம்.

புறநிலைவாதம் (புறவயப் பார்வை - Materialist Objectivity)

பொருளின் முதன்மைத் தன்மை: மனிதனின் மனம், உணர்வு அல்லது விருப்பங்களைச் சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும் ஒரு புற உலகம் (பருப்பொருள் உலகம்) உள்ளது என்பதை மார்க்சியம் ஏற்கிறது. கார்ல் மார்க்ஸின் கூற்றுப்படி, மனிதர்களின் சிந்தனை அவர்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை; மாறாக, மனிதர்களின் சமூக வாழ்வே (புறவயப் பொருளாதார, உற்பத்தி நிலைமைகளே) அவர்களது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. சமூகம், அரசியல், வர்க்கப் போராட்டங்கள் போன்ற அனைத்தும் மனிதர்களின் கற்பனையால் உருவாவதில்லை; மாறாக, புறவயமான சமூகப் பொருளாதார விதிகளின்படியே இயங்குகின்றன.

அகநிலைவாதம் (அகவயப் பார்வை - Subjectivism)

கருத்தின் முதன்மைத் தன்மை: மனிதனின் சொந்த எண்ணங்கள், விருப்பங்கள், உணர்வுகள் அல்லது தத்துவார்த்தக் கற்பனைகளே முதன்மையானவை என்றும், புற உலகம் அவற்றைச் சார்ந்து இயங்குகிறது அல்லது மனித மனதின் பிரதிபலிப்பே உலகம் என்றும் கருதுவது அகநிலைவாதம் ஆகும். அகநிலைவாதத்தை மார்க்சியம் கருத்துமுதல்வாதப் (Idealism) போக்காகப் பார்க்கிறது. புறவய நிலைமைகளை, உற்பத்தி உறவுகளை மற்றும் சமூக எதார்த்தங்களை உணராமல், தனிமனிதரின் மனோவிருப்பம் அல்லது கொள்கை வெறியால் மட்டுமே வரலாற்றையோ சமூகத்தையோ மாற்றிவிடலாம் என்று நினைப்பது தவறான அகநிலைவாதமாகும் (Subjectivist voluntarism).

சுருக்கமாகக் கூறின், மார்க்சியத்தின்படி புறவய எதார்த்தமே (புறநிலை) அடிப்படையானது; அகநிலை உணர்வு என்பது அந்தப் புற எதார்த்தத்தின் பிரதிபலிப்பு மட்டுமே. அதேநேரம், சரியான புறநிலை விதிகளைப் புரிந்து கொண்டபின் மனித அகநிலைச் செயல்பாடு (புரட்சிகர நடைமுறை / Praxis) மீண்டும் புற உலகத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது.

இவற்றினை கணக்கில் எடுக்காமல் தமது உள்ளக் கிடங்கினை முன்றுத்துகின்றார்கள். சாதிகளுக்குள்ளும் வர்க்கம் இருக்கின்றது. ஒடுக்கப்பட்டவர்களும் தமது சாதியத்தை சேர்ந்த நலிந்தவர்களை ஒடுக்குவார்கள்.  ஏனெனில் ஒடுக்கப்பட்ட சாதியில் உள்ளவர்களும் தமது பழைய நிலையில் இருந்து வெளியே முயற்சிப்பார். இதனை குட்டி முதலாளிய சிந்தனை என்று வரையறுக்கலாம். ஆனால் ஏன் அவர் உடனடியாக முதலாளி என்பவர்களும் உண்டு. சாதி எந்த வரலாற்றுக் காலத்தில் உருவாகியது? அதன் சிந்தனை வடிவம் என்பதை ஆராயத் தயாராக இல்லை.  சமூகப் போக்கில் அமைதியாக இணைந்து போக முற்படும் மனிதர்களும் உள்ளார்கள். (அவர்கள் தீர்மானிப்பதில்லை) இந்தப் போக்கை பொதுப்புத்தி என்பதா? வளர்ச்சியடையாத சமூகப் போக்கு என்பதா?

இன்றைய சமூகப் போக்கு முதலாளித்துவ தாராளவாத சிந்தனைக்கு சமூகமயப்படுத்தலுக்கு உள்ளாகின்றார்கள். கற்கால சிந்தனை மரபு, இடைநிலை முதலாளித்துவ சிந்தனை மரபு, முதலாளித்துவ தாராளவாத சிந்தனை மரபிற்குள் உட்பட்டவர்கள் ஆவர். தமிழ் சமூகத்தில் தொழிலாளிகளிடம் பிரபுகுலத்துவ (Labor Aristocracy) மனப்பாங்கு விதைக்கப்படுகின்றது. ``கொலனிகளைச் சுரண்டிப் பெறும் இந்தப் பிரம்மாண்டமான மிகை லாபத்தில் ஒரு சிறிய பகுதியை, ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு மேல்மட்டப் பிரிவினருக்கும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் உயர் கூலியாகவும் சலுகைகளாகவும் வழங்குகின்றனர். இதன் மூலம் அந்த மேல்மட்டத் தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு ஆதரவானவர்களாக (முதலாளித்துவத்தின் ஏஜெண்டுகளாக) மாறுகின்றனர். தொழிலாளர் இயக்கங்களுக்குள் முதலாளித்துவ ஆதரவு, சந்தர்ப்பவாதம், சீர்திருத்தவாதம் ஆகியவை வளர்ந்ததற்கான பொருளாதார அடிப்படை இதுவே ஆகும். இந்தத் தொழிலாளர் பிரபுத்துவப் பிரிவினரையும் சந்தர்ப்பவாதத் தலைவர்களையும் அம்பலப்படுத்தாமல் தொழிலாளர் புரட்சி வெற்றி பெற முடியாது என்கின்றார் லெனின்.

"வரலாற்றுரீதியாக நிர்ணயிக்கப்பட்ட சமூக உற்பத்தி முறையில் மனிதர்கள் வகிக்கும் இடம், உற்பத்திச் சாதனங்களுடன் அவர்களுக்கு உள்ள உறவு, உழைப்பின் சமூக அமைப்பில் அவர்களின் பங்கு, மற்றும் சமூக செல்வத்தில் அவர்கள் பெறும் பங்கின் அளவு ஆகியவற்றால் ஒருவருக்கொருவர் வேறுபடும் பெரும் மக்கள் குழுக்களே வர்க்கங்கள் எனப்படும்." (லெ)

மார்க்சியப் பகுப்பாய்வில் ஒருவரின் தனிப்பட்ட நற்குணங்களோ அல்லது வருமானத்தின் அளவோ அவரது வர்க்கத்தைத் தீர்மானிப்பதில்லை. உற்பத்தி சாதனங்கள் மீதான உரிமை, பிறர் உழைப்பைச் சுரண்டும் திறன், சமூக உழைப்புப் பிரிவினையில் உள்ள இடம் ஆகியவையே ஒருவரை முதலாளியா, சிறு முதலாளியா அல்லது பாட்டாளியா என்பதைத் தீர்மானிக்கின்றன.

 

வர்க்கத்தை அலகுகளாக அணுகல்

வர்க்கங்களை வெவ்வேறு அலகுகளாக பிரித்து ஆராய முடியும்.  ஆய்வில் பொதுவாக வர்க்கங்கள் என்கின்ற போது மக்கள் குழுவில் உள்ள பிரிவுகளை பற்றிப் பேசுகின்றது. வர்க்கங்கள் எதுவும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அணுகப்படுவதில்லை. அது குறிப்பான பொருளாதார நிலைகளில் இருந்து அணுகுவதாகும்.

Micro-scale: நுண்ணளவு (அல்லது நுண்ணளவிலான பார்வை) மற்றும் நுண்ணியப் பொருளாதாரம் (Microeconomics): ஒரு தனி மனிதர், ஒரு குடும்பம் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனம் எடுக்கும் நிதி முடிவுகளை மட்டும் ஆராய்வது (எ.கா. ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை, ஒரு நிறுவனத்தின் வருமானம்). விவசாய வர்க்கம் என்று பொதுவாக அழைத்துக் கொண்டாலும் அதற்குள் இருக்கும் உட்பிரிவுகளின் போக்கைப் பற்றிய விஞ்ஞான அறிவும் அவசியமானதாகும்.

Macro-scale: பருமமானளவு (சூழலில் பரந்த அளவு) பேரியல் பொருளாதாரம் (Macroeconomics): ஒட்டுமொத்த நாட்டின் அல்லது உலகின் பொருளாதாரத்தை ஆராய்வது (எ.கா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - GDP, பணவீக்கம், வேலையின்மை விகிதம்). தொழிலாளி, பாட்டாளி, குட்டி முதலாளி என்று அழைத்து விட்டுச் செல்ல முடிகின்றது. அதற்குள்ளும் வெவ்வேறு சிந்தனைப் போக்கு இருந்து கொண்டிருக்கும்.

பொதுவாக வர்க்கங்கள் என்று அழைத்து விட்டுப் போவதால் மாத்திரம் சமூக அசைவியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. சமூகக்கட்டத்தினை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வகையில் தான் வர்க்கப் பகுப்பாய்வு அவசியமாக உள்ளது.

 

முற்போக்கு, நடுநிலை, வலதுசாரிகள்

தோழர் மாவோ அவர்கள் 1957 மே 15 அன்று எழுதிய "நிலைமைகள் மாறத் தொடங்கிவிட்டன" (Things Are Beginning to Change) என்ற கட்டுரையில் உள்ள பகுதிகள்,  வர்க்கங்களின் போக்குகள் மற்றும் இயக்கவியல் முரண்பாடுகள் குறித்து பின்வருமாறு விளக்குகின்றன:

1. அறிவுஜீவிகள் மற்றும் வர்க்கப் பிரிவுகளின் சதவிகிதமும் போக்கும்

சீனச் சமூகத்தில், குறிப்பாக அறிவுஜீவிகள் மத்தியில் உள்ள அரசியல் பிரிவுகளை மாவோ மூன்று முக்கியக் கூறுகளாகப் பிரிக்கிறார்:

கம்யூனிசக் கொள்கைகளிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் (இடதுசாரிகள் சுமார் 20%)மற்றும் சோசலிசப் பாதையிலும் உறுதியாக நிற்பவர்கள்.

இவர்களே அறிவுஜீவிகளில் பெரும்பான்மையினர். இவர்கள் நிலைமையை உற்றுநோக்கும் ஊசலாட்ட (நடுநிலையாளர்கள் சுமார் 70%): மனநிலையில் இருப்பவர்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து கொண்டு சோசலிசத்தை எதிர்த்து, முதலாளித்துவப் பாதையை (வலதுசாரிகள் 1% முதல் 10% வரை மீண்டும் கொண்டுவரத் துடிப்பவர்கள்.

2. நடுநிலையாளர்களின் ஊசலாட்டம்

இயற்கையான குணம்: பாட்டாளி வர்க்கம் ஒரு முனையிலும், முதலாளி வர்க்கம் மறுமுனையிலும் நிற்கும்போது, நடுவே உள்ள நடுநிலையாளர்கள் இருபக்கமும் ஊசலாடுவது அவர்களின் வர்க்க இயல்பு. வலதுசாரிகள் ஆவேசமாகத் தாக்குதல் தொடுக்கும்போது, நடுநிலையாளர்கள் பயந்து மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். வலதுசாரிகள் இவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

வலதுசாரிகளின் இந்த மூர்க்கமான போக்கை நடுநிலையாளர்கள் கவனித்து உணர்வதே அவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். இடதுசாரிகள் நடுநிலையாளர்களைத் தங்களின் பக்கம் ஈர்த்து, வலதுசாரிகளைத் தனிமைப்படுத்த வேண்டும்.

3. வலதுசாரிகளின் உச்சகட்டப் போக்கு

 * வலதுசாரிகள் ஜனநாயகக் கட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற தளங்களில் தீவிரத் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.

 * மாவோவின் அணுகுமுறை: "அவர்கள் முழு வீச்சில் உச்சக்கட்டத்தை அடையட்டும்; விஷச் செடிகள் முளைத்து வெளிவரட்டும், அப்போதுதான் அவற்றை வேரோடு பிடுங்கி எறிய முடியும்" என்ற இயக்கவியல் தந்திரத்தைக் கையாள்கிறார்.

4. "எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைப்பும் போராட்டமும் சமூக வாழ்வில் பொதுவான விதி" - விளக்கம்

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் (Dialectical Materialism) அடிப்படை விதியான "முரண்பாடுகளின் ஒன்றிணைப்பும் போராட்டமும்" (Unity and Struggle of Opposites) என்பதை மாவோ இங்கு விளக்குகிறார்:

ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல் (ஒருங்கிணைப்பு/ ஒற்றுமை): ஒரு வர்க்கச் சமூகத்தில் இடது, வலது மற்றும் நடுநிலை ஆகிய எதிர்மறைத் தன்மைகள் ஒரே சமூக அமைப்பிற்குள் ஒன்றாகவே இயங்குகின்றன. ஒன்று இல்லாமல் மற்றொன்றுக்கு அடையாளம் இல்லை (பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளி வர்க்கம் இல்லை). தொடர்ச்சியாக எதிர் துருவங்களுக்கு இடையே நிலவும் இந்த ஒற்றுமை தற்காலிகமானது மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டது; ஆனால் அவற்றுக்கு இடையே நடக்கும் வர்க்கப் போராட்டம் நிரந்தரமானது மற்றும் முடிவற்றது. சமூகம் தானாக நேர்கோட்டில் முன்னேறிவிடாது. எதிர்மறை சக்திகளுக்கு இடையே நிகழும் தொடர் போராட்டங்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலமே சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

வலதுசாரிகள் தங்களது முழு பலத்துடன் சோசலிசத்தைத் தாக்கும் போது, அந்த எதிர்மறைத் தாக்குதலை இடதுசாரிகள் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்துடன் எதிர்கொண்டு போராட வேண்டும். அத்தகைய வர்க்கப் போராட்டத்தின் மூலமே நடுநிலையாளர்களை விழிப்படையச் செய்து, ஒன்றுபடுத்தி, சோசலிசக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதே மாவோவின் வாதமாகும்.(646-8, மாவோ 5)

 

தரகு, குட்டி, தேசிய முதலாளிய வர்க்கம்

இந்த மூன்று வரையறைகளை தனித்தனியே படித்தறிய வேண்டும். இவை அவசியமான வரையறைகளாகும். அரசியல் முடிவுகள் எடுப்பதற்கு தாக்கம் செலுத்தும் வர்க்கம் பற்றிய படிப்பினை அவசியமானதாகும். தேசிய விடுதலை என்பது எந்த வர்க்கம் தலைமை தாக்குவது என்பதைக் கொண்டு ஆதரவு, எதிர்ப்பு இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் இன்னொரு யுத்தத்தினால் அந்த முரண்பாடு தீர்க்கப்படும் என்பதே லெனினியமாகும்.

 

Ø  தரகு வர்க்கம்

அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டில், குறிப்பாக மாவோ சேதுங்கின் எழுத்துக்கள் மற்றும் சார்புக் கோட்பாடுகளில் (Dependency Theory) தரகு முதலாளித்துவ வர்க்கம் (Comprador Bourgeoisie) என்பது ஒரு முக்கியமான ஆய்வுப் பொருளாகும். மூன்றாம் உலக நாடுகளிலும், கொலனித்துவ மற்றும் அரை-நிலப்பிரபுத்துவ சமூகங்களிலும் இவர்கள் வகிக்கும் பாத்திரம் மிகவும் குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்டது.

1. வர்க்கத் தன்மை (Class Nature)

தரகு முதலாளிகளின் வர்க்க அடிப்படை அவர்களின் உற்பத்தி முறையோடு (Mode of Production) நேரடியாகத் தொடர்புடையது: ஒட்டுண்ணித் தன்மை (Parasitic Capital): கொண்டதாகும். இவர்கள் உண்மையான உற்பத்தியில் (Industrial Production) மூலதனத்தை முதலீடு செய்வதைவிட, பரிவர்த்தனை மற்றும் வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். சொந்தமாகப் புதிய தொழிற்சாலைகளையோ, உற்பத்தி சக்திகளையோ வளர்க்காமல், வெளிநாட்டுப் பண்டங்களை உள்நாட்டில் விநியோகிக்கும் முகவர்களாகச் செயல்படுகின்றனர்.

இவர்களது மூலதனம் சுதந்திரமானது அல்ல; மாறாக உலக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் (Global Finance Capital) கிளையாக மட்டுமே இயங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆதரவு இன்றி இந்த வர்க்கம் தனித்து நிலைத்திருக்க முடியாது.தொழிற்புரட்சியை முன்னெடுக்கும் முற்போக்கு முதலாளிகளைப் போலன்றி, இவர்கள் உள்நாட்டு நிலப்பிரபுத்துவ, சாதிய, பழமைவாத அதிகாரக் கட்டமைப்புகளோடு சமரசம் செய்து அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் தங்களின் சமூக செல்வாக்கைத் தக்கவைக்கின்றனர்.

இடைத்தரகர் பாத்திரம்: உள்நாட்டின் இயற்கை வளங்கள் (கனிமங்கள், விவசாய மூலப்பொருட்கள்) குறைந்த விலையில் ஏகாதிபத்திய நாடுகளுக்குச் செல்லவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முடிவுற்ற பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்கப்படவும் இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர்.                

சர்வதேச அரங்கில் வெளிநாட்டு நிதி அமைப்புகள் (IMF, உலக வங்கி) மற்றும் வல்லரசுகளின் கட்டளைகளைத் தங்கள் நாட்டு கொள்கைகளாக மாற்றும் அரசியல் அமைப்புகளையே இவர்கள் ஆதரிப்பார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் எந்தவொரு உரிமைப் போராட்டத்தையும் அல்லது தேசிய விடுதலை இயக்கங்களையும் தீவிரமாக எதிர்ப்பார்கள். அதிகாரப் பகிர்வு அல்லது சமத்துவத்தை விரும்பாத தீவிர வலதுசாரி அல்லது சர்வாதிகார அரசியல் சக்திகளுக்கு நிதி வழங்கி வளர்ப்பார்கள்.

சொந்த நாட்டு மக்கள் மீதான அணுகுமுறை (Stance on Their Own People)

சுருக்கமாகச் சொன்னால், தரகு முதலாளித்துவ வர்க்கம் என்பது தேசத்தின் எல்லைக்குள் வாழ்ந்தாலும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முழுமையாக ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்குச் சேவை செய்யும் ஒரு பிற்போக்கு வர்க்கமாகும்.

``தரகுப் பெரு முதலாளி வர்க்கம் ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு நேரடியாக சேவை செய்வதோடு அவர்களால் வளர்க்கப்படுகிறது; எண்ணற்ற பிணைப்புகள் அதை நாட்டுப் புறத்தில் உள்ள நிலவுடமை சக்திகளோடு நெருக்கமாக இணைக் கின்றன. ஆகவே, அது சீனப் புரட்சியின் இலக்காகும். மேலும், புரட்சியின் வரலாற்றில் ஒரு பொழுதும் இயக்கு சக்தியாக இருந்து வந்ததில்லை.

ஆயினும், தரகுப் பெரு முதலாளி வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறு ஏகாதிபத்திய வல்லரசுகளை சார்ந்து இருக் கின்றன. ஆகவே, ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையே முரண் பாடுகள் மிகவும் கூர்மையாகி புரட்சி குறிப்பிட்ட ஓர் ஏகாதிபத்திய வல்லரசுக்கு எதிராக திருப்பப்படும்பொழுது குறிப்பிட்ட காலப் பகுதிக்கு குறிப்பிட்ட அளவு நடப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் இணைவது பிற ஏகாதிபத்திய குழுக்களுக்கு சேவை செய்கிற தரகு வர்க்கத்தின் பிரிவுகளுக்கு சாத்தியமாக மாறுகிறது. ஆனால் அவற்றின் எஜமானர்கள் சீன புரட்சிக்கு எதிராக திரும்பும் கணத்திலேயே அவையும் அவ்வாறே செய்யும். (420)

 

Ø  குட்டி முதலாளித்துவ வர்க்கம் என்றால் யார்?

மனிதர்கள் வெவ்வேறு கருத்துகள் மற்றும் விருப்பார்வங்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் காரணம் அவர்கள் தமது தேவைகளை நிறைவுபடுத்திக் கொள்வதற்கு வெவ்வேறு காலகட்டங்களில் இயற்கையை எதிர்த்து வெவ்வேறு வகையில் போராடினார்கள் என்பதையும் அதற்கேற்ப அவர்களின் பொருளாதார உறவுகள் வெவ்வேறு வடிவங்களை எய்தின என்பதையும் வரலாறு காட்டுகிறது.” உற்பத்தி வெவ்வேறு சமூகத்தில் வெவ்வேறு அலகில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். சமூகத்தில் உள்ள வர்க்க உறவுகள் பொருளாதார உறவில் மாறுபடுகின்றன. குட்டி முதலாளிய வர்க்கத்தின் போக்கினை இங்கு கவனிப்போம்.

``தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் அவர் தனது காலணி தயாரிப்புப் பட்டறையை மூடிவிட்டு டிப்லீசு நகரில் உள்ள காலணி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்வதாகக் கொள்வோம். ஒரு நிரந்தரமான கூலித்தொழிலாளியாக மாறும் நோக்கத்தோடு அவர் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லாமல் சிறிது தொகையைச் சேமிக்கும் நோக்கத்துடன், தனது பட்டறையை மீண்டும் திறக்க ஏதுவாக ஒரு சிறு அளவான மூலதனத்தைச் சேமிக்கும் நோக்கத்துடன் செல்கிறார்.

நீங்கள் காண்கிறபடி இந்தக் காலணி தயாரிப்பவரின் தகுதி பாட்டாளி வர்க்கத்துக்குரியதானாலும் அவரது சிந்தனை இன்னும் பாட்டாளி வர்க்கத் தன்மையற்று ஒரு முழுநிறைவான குட்டிமுதலாளிவர்க்கத் தன்மை கொண்டதாக உள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தக் காலணி தயாரிப்பவரிடம் ஏற்கனவே குட்டிமுதலாளிவர்க்க நிலை அவரைவிட்டுச் சென்றுவிட்ட நிலைமையிலும், அவரிடம் உள்ள குட்டிமுதலாளிவர்க்க சிந்தனை இன்னும் எதார்த்த நிலைக்கேற்ப இல்லாமல், அவரை விட்டுச் செல்லாமல் உள்ளது.

இங்கும்கூட சமூக வாழ்க்கையில் முதலில் புறவய நிலைமைகள் மாறுகின்றன, மனிதர்களின் நிலைமைகள் மாறுகின்றன, அதன்பின்பு அதற்கேற்ப அவர்களது சிந்தனை மாறுகிறது என்பது தெளிவாக உள்ளது.

எனினும் நாம் நமது காலணி தயாரிப்பாளரிடமே வருவோம். அவர் ஒரு சிறுதொகையைச் சேமித்து தனது பட்டறையை மீண்டும் திறக்க எண்ணியிருந்தார் என்பது நாம் ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால் பாட்டாளியாக்கப்பட்ட இந்த காலணி தயாரிப்பாளர் வேலை செய்து கொண்டே இருக்கும்போதுதான், பணத்தைச் சேமிப்பது எவ்வளவு கடினமானதாக உள்ளது என்று உணர்கிறார். ஏனெனில் அவர் பாடுபட்டு உழைத்து ஈட்டும் ஊதியம் ஏதோ அவரைப் பராமரித்துக் கொள்வதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அவர் தனது பட்டறைக்கு செலுத்தவேண்டிய வாடகை, வாடிக்கையாளர்களின் நிலையற்ற தன்மை, பணப்பற்றாக்குறை, பெருந் தயாரிப்பாளர்களுடனான போட்டி மற்றும் இது போன்ற கவலைகள் ஆகியன தனியார் பட்டறை உடைமையாளரின் உள்ளத்தை வதைக்கின்ற பிரச்சனைகளை எண்ணிப்பார்த்தபோது அவருக்குத் தனது பட்டறையைத் திறப்பது அந்தளவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இல்லை என்பதையும் கூடுதலாக அவர் உணர்கிறார்.

மறுபுறம் பாட்டாளி என்பவரோ ஒப்பீட்டு ரீதியில் பார்த்தால் இத்தகைய கவலைகளில் இருந்து விடுபட்டவராக உள்ளார்; அவருக்கு வாடிக்கையாளர்களின் தொந்தரவு இல்லை அல்லது இட வாடகைக்குப் பணம் அளிக்கும் பிரச்சனையும் இல்லை. அவர் ஒவ்வொரு நாள் காலையிலும் தொழிற்சாலைக்குச் செல்கிறார். அமைதியாக மாலையில் வீடு திரும்புகிறார், சனிக்கிழமைகளில் தனது "சம்பளத்தை" அதே அமைதியுடன் தனது சட்டைப்பையில் வைத்துக் கொள்கிறார். இங்குதான் முதலில் நமது காலணி தயாரிப்பவரின் குட்டி முதலாளித்துவக் கனவுச் சிறகுகள் வெட்டப்படுகின்றன; இங்குதான் அவரது உள்ளத்தில் பாட்டாளிகளுக்குரிய போராட்ட உணர்ச்சிகள் முதன்முதலாக விழித்தெழுகின்றன.

காலம் கடந்து செல்கிறது, நமது காலணி தயாரிப்பாளர் தனது அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்குக்கூட தன்னிடம் போதிய தொகை இல்லை என்பதைக் காண்கிறார். எனவே தனக்கு மிகவும் தேவைப்படுவது ஊதிய உயர்வுதான் என்பதையும் உணர்கிறார். அதே சமயத்தில் அவர் தனது சக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் பற்றியும், வேலைநிறுத்தங்கள் பற்றியும் பேசிவருவதைக் கேட்கிறார். இங்கு தனது வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த வேண்டுமென்றால் எசமானர்களை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிரத் தானே சொந்தமாக ஒரு பட்டறையைத் திறக்கக்கூடாது என்பதையும் அவர் உணர்கிறார். அவர் தொழிற்சங்கத்தில் இணைந்து வேலைநிறுத்த இயக்கத்தில் நுழைகிறார், விரைவிலேயே அவர் சோசலிசக் கருத்துக்களால் ஊக்கம் பெற்றவராகி விடுகிறார்.

இவ்வாறு நீண்டகால நோக்கில் பார்த்தால், காலணித் தயாரிப்பாளரின் பொருளாயத நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றமானது அவரது சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது: முதலில் அவரது பொருளாயத நிலைமைகள் மாறின அதன்பின்னர் சிறிது காலத்திற்குப் பின் அதற்கேற்ப அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. (333-4)

சிறிது தொகையைச் சேமித்து மீண்டும் தன் பட்டறையைத் திறக்கும் நோக்குடனேயே செல்கிறார். அவரது தகுதி பாட்டாளி வர்க்கத்துக்குரியதானாலும், சிந்தனை இன்னும் குட்டி முதலாளித்துவத் தன்மையிலேயே நீடிக்கிறது.

யதார்த்த உணர்வு: பாட்டாளியாக்கப்பட்ட நிலையில் உழைக்கும்போதுதான் பணத்தைச் சேமிப்பது கடினம் என்பதை உணர்கிறார்.

மாற்றம்: அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட பணம் போதாத நிலையில், தனக்குத் தேவை ஊதிய உயர்வுதான் என்பதையும், முதலாளிகளை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர சொந்தமாக பட்டறை திறக்க முடியாது என்பதையும் உணர்கிறார்.

முடிவாக இவரால் காலணி தயாரிப்பாளரின் பொருள்கோள்/பொருளாயத நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றமே, சிறிது காலத்திற்குப் பின் அவரது சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தான் முன்னேறி அடுத்த நிலைக்குச் செல்லும் போராட்டத்தில் ஏற்படும் பிரச்சனையை எதிர்க் கொள்கின்றார். அந்த தொழிலாளியின் குட்டிமுதலாளித்துவச் சிந்தனைக்கு உட்பட்டுள்ளார்.

ஸ்டாலின் தனது நூலில் விளக்கும் ‘குட்டி முதலாளித்துவ வர்க்கம்’ (Petty Bourgeoisie) பற்றிய விரிவான பகுப்பாய்வை இங்கு பார்ப்போம். அதன் தோற்றம், சமூகப் பண்பு, உளவியல் மற்றும் வரலாற்றுப் போக்கு ஆகிய கோணங்களில் இதனை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்.

முதலாளித்துவ சமூகத்தில் பிரதானமாக இரண்டு வர்க்கங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன:

*முதலாளி வர்க்கம் (Bourgeoisie): உற்பத்திச் சாதனங்களை (பெரிய ஆலைகள், நிலம், பெருமுதலீடு) சொந்தமாக வைத்துக்கொண்டு, பிறரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள்.

* பாட்டாளி வர்க்கம் (Proletariat): உழைப்பைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லாத, கூலிக்காகத் தங்களின் உழைப்புச் சக்தியை விற்கும் தொழிலாளர்கள்.

இந்த இரண்டுக்கும் நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும் இடைப்பட்ட வர்க்கமே குட்டி முதலாளித்துவ வர்க்கம் (Petty Bourgeoisie) ஆகும்.

சிறு விவசாயிகள் (Peasants), சிறு பட்டறை வைத்திருக்கும் கைவினைஞர்கள் (புத்தகத்தில் வரும் காலணி தைப்பவர் போல), சிறு கடைக்காரர்கள், வர்த்தகர்கள், சுதந்திரமான தொழில் புரியும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அலுவலக எழுத்தர்கள் போன்றோர் இதில் அடங்குவர்?

* முக்கிய அம்சம்: இவர்களிடம் ஒரு சிறிய சொந்த உற்பத்திச் சாதனம் (ஒரு சிறிய கடை, நிலம் அல்லது பட்டறை) இருக்கும். ஆனால், அவர்கள் பிறரின் உழைப்பைச் சுரண்டி வாழும் அளவுக்குப் பெரிய ஆட்கள் அல்ல; தங்களின் சொந்த உழைப்பையே பிரதானமாக நம்பி வாழ்பவர்கள்.

2. குட்டி முதலாளித்துவத்தின் இரட்டைத் தன்மை (Dual Nature)

ஸ்டாலின் மற்றும் மார்க்சியவாதிகள் இவர்களைப் புரட்சியின் முதன்மைச் சக்தியாக ஏற்க மறுப்பதற்குக் காரணம் இவர்களது உள்ளார்ந்த இரட்டைத் தன்மை ஆகும்:

* உழைப்பாளி என்ற முகம்: இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்; பெரிய முதலாளிகளாலும் வங்கியாளர்களாலும் நசுக்கப்படுகிறார்கள், கடனில் மூழ்குகிறார்கள், வறுமையில் வாடுகிறார்கள். இந்த வகையில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தோடு நெருங்கி வருகிறார்கள்.

 * சொத்துடைமையாளர் என்ற முகம்: அதே வேளையில், தங்களிடம் உள்ள "சிறு சொத்து" மீது அளவுகடந்த பிடிப்பு கொண்டவர்கள். எப்படியாவது இன்னும் கொஞ்சம் பணத்தைச் சேர்த்து நாமும் ஒரு "பெரிய முதலாளி" ஆகிவிட மாட்டோமா என்ற ஆசையும் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும்.

இந்த முரண்பாட்டினால், இவர்களால் ஒருபோதும் வரலாற்று ரீதியாக உறுதியான, தீர்க்கமான ஒரு வர்க்க நிலைப்பாட்டை எடுக்க முடிவதில்லை.

3. அவர்களுக்கு "என்ன நடக்கப் போகிறது?" (வரலாற்று ரீதியான விதி)

முதலாளித்துவம் வளரும்போது குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கு என்ன நடக்கும் என்பதை மார்க்சியம் மிகத் தெளிவாகக் கூறுகிறது:

 * அழிவு மற்றும் பாட்டாளியாக்கல் (Proletarianization):

   * பெரிய இயந்திரங்களும், நவீன தொழில்நுட்பமும், பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் ஆலைகளும் சந்தைக்குள் வரும்போது, கைவினைஞர்களாலும் சிறு கடைக்காரர்களாலும் விலைப் போட்டியைத் தாங்க முடியாது.

   * நூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ள காலணி தைப்பவரைப் போல- முதலில் வாடகை கொடுக்க முடியாமல் திணறி, கடனாளியாகி, பட்டறையை இழந்து, கடைசியில் வாழ்வாதாரத்திற்காக ஒரு பெரிய ஆலைக்கே சென்று கூலித் தொழிலாளியாக மாறுவார்கள்.

   * அதாவது, குட்டி முதலாளித்துவத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே பணக்கார முதலாளிகளாக உயரும்; பெரும்பான்மையான பகுதி திவாலாகி பாட்டாளி (தொழிலாளி) வர்க்கமாகத் தள்ளப்படும்.

எனவேதான் ஸ்டாலின், "இவ்வர்க்கத்தின் காலடி நிலம் மெதுவாக நழுவிச் சென்றுகொண்டே இருக்கிறது, அது நாளுக்கு நாள் முதுமையடைந்து, அழுகிக்கொண்டே இருக்கிறது" என்று எழுதுகிறார். முதலாளித்துவ வளர்ச்சி குட்டி முதலாளித்துவப் பொருளாதார முறையைச் சிதைத்து அழிக்கிறது.

4. ஊசலாட்டம் (Vacillation): குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் உளவியல் மற்றும் அரசியல் பலவீனம்

* இவர்கள் பெரிய முதலாளித்துவத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையில் எப்போதும் ஊசலாடிக்கொண்டே இருப்பார்கள்.

   * பொருளாதாரம் சீராக இருக்கும்போது முதலாளித்துவ ஒழுங்கை ஆதரிப்பார்கள்.

   * நெருக்கடி வந்து திவாலாகும் நிலைக்கு வரும்போது புரட்சிகர ஆவேசம் கொள்வார்கள். ஆனால் அந்த ஆவேசமும் நிலைத்து நிற்காது; எளிதில் சோர்வடைந்து அமைதியாகிவிடுவார்கள் அல்லது பிளவுபட்டுப் போவார்கள்.

தொழிலாளி வர்க்கம் தொழிற்சாலைகளில் ஒன்றாக இணைந்து வேலை செய்வதால், அவர்களுக்குத் "கூட்டு உணர்வும்" (Collectivism) அமைப்பாகத் திரளும் ஒற்றுமையும் இயற்கையிலேயே வந்துவிடும். ஆனால், குட்டி முதலாளித்துவவாதி தனித்தனியாகத் தொழில் செய்வதால், அவரிடம் "தனிநபர்வாதமும் போட்டிக் குணமும்" மேலோங்கி இருக்கும். தனக்கான லாபத்தையும் பாதுகாப்பையுமே முதன்மையாகப் பார்ப்பார்.

 * பின்னோக்கிய கனவு (Reactionary Utopianism): பெரிய முதலாளிகளால் நசுக்கப்படும்போது இவர்கள் முன்நோக்கி சோசலிசத்தை நோக்கிப் பார்க்காமல், பெரும்பாலும் பின்னோக்கிப் பார்ப்பார்கள்: "பழைய காலமே சிறந்தது; பெரிய ஆலைகள் இல்லாமல் எல்லாரும் அவரவர் சிறு நிலத்தையும் கடையையும் வைத்துக்கொண்டிருந்த பொற்காலத்திற்கு நாம் திரும்ப வேண்டும்" என்று நினைப்பார்கள். ஆனால் வரலாறு ஒருபோதும் பின்னோக்கிச் செல்வதில்லை.

5. புரட்சியில் இவர்களின் இடம் என்ன? (ஸ்டாலினின் தெளிவுரை)

ரஷ்யாவில் நரோத்னிக்குகள், "குட்டி முதலாளிகள்தான் பெரும்பான்மை, எனவே அவர்களே புரட்சியை வழிநடத்த வேண்டும்" என்றனர். அதற்கு மார்க்சியவாதிகள் கூறிய பதில்:

 * குட்டி முதலாளித்துவத்தால் புரட்சிக்குத் தலைமை தாங்க முடியாது: இவர்களது வர்க்கத் தன்மை உறுதியற்றது, குழப்பமானது, அழியக்கூடியது.

 * அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் பின்னால் அணிதிரள வேண்டும்:

   * பாட்டாளி வர்க்கம் மட்டுமே வரலாற்றின் வளர்ந்துவரும், அமைப்பாக்கப்பட்ட சக்தி.

   * பாட்டாளி வர்க்கம் இந்தச் சிறு விவசாயிகள் மற்றும் சிறு கைவினைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்து, அவர்களைப் பெருமுதலாளிகளுக்கு எதிரான நேச சக்தியாகத் தன் தலைமையில் அணிதிரட்ட வேண்டும்.

   * பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நிற்கும் வரை மட்டுமே குட்டி முதலாளித்துவ மக்கள் தங்களின் அழிவிலிருந்து மீள முடியும்; அவர்கள் தனித்து நின்று தலைமை தாங்க நினைத்தால் தோல்வியே மிஞ்சும்.

குட்டி முதலாளித்துவம் என்பது வரலாற்று ரீதியாகத் தனித்து நீடிக்க முடியாத, முதலாளித்துவப் போட்டியினால் பாட்டாளி வர்க்கமாக உருமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு 'இடைநிலை வர்க்கம்'. அதனால்தான் மார்க்சியம் அவர்களைப் புரட்சியின் தலைமைச் சக்தியாக ஏற்காமல், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான ஒரு நேச சக்தியாக மட்டுமே வகைப்படுத்துகிறது. (317/ V1 Stalin)

``சிறந்த அரசியல் மார்க்கத்தை உருவாக்க இளந் தலைமுறையினர் மத்தியில் இருந்து முற்போக்குத் தமிழ்த் தேசியம் உருவாக வேண்டும்.”  என்கிறார்.  இது எவ்வாறு இருக்கின்றது என்றால் ‘‘ஏரும் கலப்பையும் விட்டு வரும் விவசாயிகள் போல கட்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு  போருக்குக் கிளம்பிவிட்டார்கள்.” (152எ.செ.வே)

இவர்கள் எவ்வித நடைமுறையும் அற்று அறிக்கை விடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள். இது அண்ணளவாக 40 வருட வரலாறு இவ்வாறு தான் இருக்கின்றது.

``தற்போது கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் உள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரே பெருபான்மையினராக உள்ளனர் என்பதும், அவர்கள் வறியோர்களாகவும் உள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் அதுதான் இங்கு தீர்மானிக்கக் கூடியதா என்ன?  நீண்டகாலமாகவே குட்டிமுதலாளிய வர்க்கம் பெரும்பான்மையானதாக உள்ளது, ஆயினும் இப்போ வரை அது ``சுதந்திரத்துக்கான”  போராட்டதில் யாதொரு முன்முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் உதவியின்றி வெளிப்படுத்தவில்லையே. ஏன்? ஏனெனில் குட்டி முதலாளிய வர்க்கமானது, ஒரு வர்க்கமான வளர்ந்து கொண்டே இருக்கவில்லை மாறாக அது நாளுக்கு நாள் சிதலமடைந்து, பாட்டாளி வர்க்கமாகவும், முதலாளி வர்க்கமாகவும் பிரிவுற்று வருகின்றது. மாறாக இங்கு வறிய நிலை என்பது தீர்மானகரமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, நிச்சயமாக ``நாடோடிகள்” குட்டி முதலாளிய வர்க்கத்தினரை விட வறியோராக இருப்பினும், ”ருசியாவை விடுவிக்கும்” கடமையை அவர்களால் மேற்கொள்ள முடியுமென்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

நீங்கள் காண்கிறபடி, இன்று எந்த வர்க்கம் பெருபான்மையாக உள்ளதென்பதே, எந்த வர்க்கம் வறுமையில் உள்ளது என்பதோ இங்கு பொருட்படுத்த வேண்டியதல்ல, ஆனால் எந்த வர்க்கம் வலிமைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்பதும் எந்த வர்க்கம் அழுகிக் கொண்டே இருக்கிற்து என்பதும் தான் இங்கு கவனத்துக்குரியதாகும். (317 தொ1 ஸ்)

ஏகாதிபத்தியத்தின் உள்ளார்ந்த தீவிர முரண்பாடுகளையும் போர்களின் தவிர்க்க முடியாத தன்மையையும் மூடிமறைத்து, ஏகாதிபத்தியக் கட்டமைப்பிற்குள்ளேயே சமாதானமும் நிரந்தர ஜனநாயகமும் சாத்தியம் என்று தொழிலாளர்களை நம்ப வைத்தனர்.

இது குட்டி முதலாளித்துவ மனப்பான்மையின் விளைவு. பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமானால், இந்தச் சந்தர்ப்பவாத, சீர்திருத்தவாதப் போக்குகளை முறியடிப்பது மிக அவசியம் என்று லெனின் கூறுகிறார். வர்க்கத் துரோகம் செய்கின்றார்கள். ஆதரவாளர்கள் மார்க்சியத்தின் புரட்சிகரக் கோட்பாடுகளைக் கைவிட்டுவிட்டு, முதலாளித்துவத்திற்கு ஆதரவாகச் சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்தியா மற்றும் இலங்கையில், இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்கு இடையே சாதிய முரண்பாடு (அடையாள அரசியல் / சமூக ஒடுக்குமுறை) மற்றும் பொருளாதார முரண்பாடு (வர்க்கச் சுரண்டல்) ஆகிய இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு உள்ளது. பொருளாதார வர்க்க முரண்பாட்டை மட்டுமே முதன்மையாகக் காணும் போக்கு (பொருளாதார வாதம் / Economic Determinism)

தொழிற்சங்கப் போராட்டங்கள், நில மீட்புப் போராட்டங்கள் மற்றும் கூலி உயர்வுப் போராட்டங்களை மட்டுமே முதன்மையாக முன்னெடுப்பது; சாதியக் கொடுமைகளைத் தனித்துப் பார்ப்பதும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சமாக மட்டுமே பார்க்க மறுப்பதும் ஆகும்.

 

 

Ø  தேசிய முதலாளித்துவ வர்க்கம்

தேசிய முதலாளிகள் யார் என்ற விவாதம் ஈழப் போராட்ட ஆரம்பகாலங்களில் இருந்து பேசப்பட்டு வருவதாகும். மார்க்சியம் பேசுபவர்கள் தேசங்களின் வளர்ச்சிப் போக்கினை விளங்கிக் கொள்ளாதவர்களாக உள்ளார்கள். தேசத்தின் வளர்ச்சியில் அரசின் அவசியத்தை ஏற்காதவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

``மக்களின் பரந்துபட்ட பெருந்திரளினர் என்பதன் பொருள் ஏகாதிபத்தியத்தாலும், நிலப்பிரபுத்துவத்தாலும் அதிகார வர்க்க முதலாளித்துவத்தாலும் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, அல்லது விலங்கிடப்பட்ட அனைவரும். அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீர்கள், அறிவுஜீவிகள், வணிகர்கள் மற்றும் பிறதேசபக்தர்கள் என்பதாகும்.”  (268/4மாவோ)

‘‘அந்த அறிக்கையில்” அறிவுஜீவிகள்” என்பார் தண்டிக்கப்பட்ட, விலங்கிடப்பட்ட அனைத்து அறிவுஜீவுகளும் ஆவர்;”வணிகர்கள் என்பார்”  தண்டிக்கப்பட்ட, விலங்கிடப்பட்ட அனைத்து அனைத்து தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினரும், அதாவது, நடுத்தர மற்றும் குட்டி முதலாளி வர்க்கத்தினர்  அனைவரும் ஆவர். ``பிற தேசபக்தர்கள்” என்பது முதன்மையான அறிவூட்டப் பெற்ற மேட்டுக் குடியினரைக் குறிக்கிறது. (268-4மாவோ)

வர்க்கங்களின் தன்மை, போராட்டங்களை முன்னெடுப்பது குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். முரண்பாடு கொண்டதாகவும் இருக்கின்ற வேளை ஐக்கியமாகவும் இருக்க முடியும். இவ்வாறு முரணான சக்திகள் ஐக்கிய முன்னணிகள் யுத்தகாலங்களில் உருவாக முடியும். நிலப்பிரபுத்துவ சிந்தனை கொண்டவர்கள் தரகு வர்க்க பண்பை கொண்டவர்களும் சுயாதிபத்தியத்தை ஏற்கும் பிரிவு என்று உள்ளது. தரகு வர்க்க அணியை அரசியல் ரீதியாக புறந்தள்ளி அவர்களை நீக்கம் செய்வதன் அவசியமும் உள்ளது.

“ஜப்பான் எதிர்ப்புப் போர் காலப்பகுதியில், கோமிண்டாங் ஜப்பானை எதிர்த்தலுக்கு சாதகமாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டதால் கோமிட்டாங் மற்றும் உள்ளூர் நிலவுடமை சக்திகளை நோக்கி மிதமான கொள்கையினை அது பின்பற்றியிருக்கிறது. மேற்கண்ட சூழ்நிலைமைகள் இப்பொழுது இரு கட்சிகளுக்கிடையிலான கூட்டணியாக விளைந்து இருக்கின்றது. இப்பொழுது அவற்றிற்கு இடையிலான போராட்டத்திலும் கூட்டணி காலப் பகுதிகளின் போதுகூட ஒரே சமயத்திலான போராட்டமும் கூட்டணியும் என்ற சிக்கலான நிலை இருந்து வந்திருக்கிறது. இம்முரண்பாடாடின் இரு கூறுகளின் குறிப்பான அம்சங்களை பயிலாவிடில் பிற சக்திகளுடனான ஒவ்வொரு கட்சியின் உறவுகளை மட்டுமின்றி இவ்விருகட்சிகளுக்கிடையிலான உறவுகளையும் புரிந்து கொள்ள தவறுவோம். இவ்வாறு நாம் பருப்பொருள் இயங்குதலின் ஒவ்வொரு வடிவிலும் உள்ள முரண்பாடு, அதன் வளர்ச்சிப் போக்குகளின் ஒவ்வொன்றிலும் உள்ள முரண்பாடு, ஒவ்வொரு நிகழ்வுப் போக்கிலும் உள்ள முரண்பாட்டின் இருகூறுகள், நிகழ்வுப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முரண்பாட்டின் இரு கூறுகள் எனப்படுகிற முரண்பாட்டின் எந்த வகையான குறிப்பான தன்மையினை ஆய்வு செய்வதிலும் இம்முரண்பாடுகள் அனைத்தும் குறிப்பான தன்மையினை ஆய்வு செய்வதிலும் கட்டாயம் அகவயமாகவும், தன்னிச்சையாகவும் இருந்திடாமல், அதை கட்டாயம் பருண்மையாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் என் காண முடியும்.” (457 மாவோ 1)

‘‘அந்தக் காலத்தில் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினரை அரசியல் ரீதியாக வென்றெடுக்கவோ அல்லது பொருளாதார ரீதியாக அதைப் பாதுகாப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்றும் அல்லது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினரின் பால் நமது இடது தீவிரவாதக் கொள்கை சாகசவாதத் தன்மை கொண்டதாக இல்லை என்றும் நினைகக் கூடாது. மாறாக,  அந்தக் காலக் கட்டத்தில், நமது  கொள்கை அப்போதும் தேசிய முதலாளிததுவ வர்க்கத்திரைப் பாதுகாக்கக்  கூடியதாகவும் அவர்களை வென்றெடுத்து, அதன் மூலம் நமது முதன்மையான எதிரிகளுக்கு எதிராக சண்டையிடும் நமது முயற்சிகளில் நாம் கவனத்தை ஒருங்கு குவித்திருக்க வேண்டும். (271மா1) ‘‘அறிவு ஜீவிகளை (அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நிலப்பிரபுத்துவ அல்லது பணக்கார விவசாயக் குடும்பங்களிலிருந்து வருகின்றார்கள்) வென்றெடுப்பதற்கும் நாடு முழுவதிலும் தேசிய முதலாளி வர்க்கத்தினரையும் அறிவூட்டப் பெற்ற மேட்டுக்குடியினரையும் (அவர்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கிறார்கள்) வென்றெடுப்பதற்கும் சீனப்புரட்சியின் முதன்மையான எதிரியான சியாங்கை ஷேக் பிற்போக்குவாதிகளைத் தனிமைப்படுத்துவதற்கும் உதவும். (272/1)

கூலி உழைப்பாளிகள், இடைநிலை வர்க்கங்கள் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வர்க்கங்களில் பிளவுகளும் உருவாகின்றன. சில வர்க்கங்கள் பொருளாதாரத்தில் வளர்ந்தும், சிலவர்க்கம்  பொருளாதாரத்தில் நலிவடைந்து விடுகின்றன.

``முதலாளித்துவ சமுதாயத்தில் இது தவிர்க்க முடியாததாய் இருப்பதன் மூலகாரணம் என்ன? தேசிய தனி இயல்புகளிலும் முதலாளித்துவ வளர்ச்சியின் அளவுகளிலும் இருக்கும் வேறுபாடுகளைக் காட்டிலும் இது ஆழமுடையதாய் இருப்பது ஏன்? ஏனெனில் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்துடன் கூடவே விரிவான சிறுமுதலாளித்துவத்துவப் பகுதியினர், சிறு உடமையாளர்கள் எப்பொழுதுமே இருந்து வருகிறார்கள்.  முதலாளித்துவம் சிற்றளவான உற்பத்தியிலிருந்து தான் தோன்றியது, இடையறாது தோன்றிக் கொண்டும் இருக்கின்றது. முதலாளித்துவம் தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் பல புதிய ”மத்தியதரப் பகுதிகளை” (ஆலை அண்டிப் பிழைக்கும் தொழிலகங்கள்,  வீட்டுப்  பணித்துறை, சைக்கிள், மோட்டார் தொழில்களைப் போன்ற பெருந்தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடெங்கிலும் சிதறிக் கிடக்கும் சிறு தொழிலகங்கள், இன்ன பிற) தோற்றுவித்துக்  கொண்டிருக்கின்றது. இந்தப் புதிய சிறு உற்பத்தியாளர்கள் இதே  போலத் தவிர்க்க  முடியாதபடித் திரும்பவும் பாட்டாளி வர்க்க அணிகளுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். வரிவான தொழிலாளர் கட்சிகளில் அணிகளில் சிறு முதலாளித்துவ உலக் கண்ணோட்டம் திரும்பத் திரும்பத் தலைதூக்குவது இயற்கையே.  பாட்டாளி வர்க்கப் புரட்சியால் கதிமாற்றங்கள் ஏற்படுகின்ற வரையில் இது இது இப்படியேதான் இருக்கும், இருக்க வேண்டும் என்பது இயற்கையே. ஏனெனில் இத்தகைய ஒரு புரட்சியை உண்டாக்க மக்கள்  மக்கள் தொகையில் பெருவாரியானோர் ‘‘அறவே‘‘ பாட்டாளி வர்க்கத்தவராக்கப்படுவது அவசியமென நினைப்பது மிகப்பெரும் தவறாகும்.” (49- தொ1.லெ)

‘‘விவசாயி மக்கள் முதலாளி வர்க்க ஜனநாயகத்தின் அர்த்தத்தில் புரட்சிகரமானவர்களாக இருக்கிற அதே நேரத்தில் ``சமுதாயமயமாக்கல்” எனும் இலட்சியத்தைத் தம்முள் ஏந்திச் செல்கிறவர்களாக இல்லை. விவசாயி மக்கள் முதலாளி வர்க்கத்துக்கும் கிராப்புறத்துத் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயுள்ள ஒரு புதிய வர்க்கப் பேராட்டத்துக்குரிய விதைகளைத் தான் ஏந்திச் செல்கிறார்கள்.” (87 தொ1.லெ) 

சமூகத்தில் உள்ள வர்க்கப் பிரிவுகள், நலன்கள் என்ன என்பதை தோழர்  லெனின் ஆராய்கின்றார். வர்க்கங்களின் வளர்ச்சிப்  போக்கும் பிரிவானது சமூகமயமாக்கம்  நடைபெறுகின்றது.  புதிய சமூக உறவுகளைக் கற்றுக் கொள்ளவும், வர்க்க நலனையும், முரண்பாடுகளை கணிப்பதற்கும், பெருந்திரளை அமைப்புருவாக்கம் செய்வதன் ஊடாக வேலைத் திட்டம், போர்யுக்தி, நடைமுறை ரீதியான செயற்பாடுகளை விரிவுபடுத்தவும்  முடியும். மக்கள் திரட்சி ஊடாக புரட்சியை நடத்த முடியாது என்ற கற்பிதங்களை தகர்த்திட முடியும். ஆனால்  எந்த அமைப்புக் கட்டமைப்பு செயல்வடிவம் இல்லாது

``சிறந்த அரசியல் மார்க்கத்தை உருவாக்க இளந் தலைமுறையினர் மத்தியில் இருந்து முற்போக்குத் தமிழ்த் தேசியம் உருவாக வேண்டும்.”  என்கிறார்.  இது எவ்வாறு இருக்கின்றது என்றால் ‘‘ஏரும் கலப்பையும் விட்டு வரும் விவசாயிகள் போல கட்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு  போருக்குக் கிளம்பிவிட்டார்கள்.” (152எ.செ.வே)

 

மாவோவின் மதிப்பீடு

மாவோ சேதுங்கின் புதிய ஜனநாயகப் புரட்சியில், சீனச் சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் புரட்சியில் எத்தகைய பங்கினை வகிக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. மாவோவின் வரையறையில் தரகு, குட்டி, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினை விரிவாக மேலே எழுதப்பட்டுள்ளது. அதன் சுருக்க வடிவத்தை ஒரு சமூக ஒழுங்கின் அடிப்படையில் இங்கு பகுப்பாய்வு செய்கின்றார்.  

1. நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் தரகுப் பெருமுதலாளி வர்க்கம் (எதிரி சக்திகள்)

 * தரகுப் பெருமுதலாளி வர்க்கம் (Comprador-Capitalist Class):

   * இது ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தால் நேரடியாக உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வர்க்கமாகும்.

   * கிராமப்புறத்தில் நிலவுடைமை சக்திகளோடு (நிலப்பிரபுக்கள்/Landlords) கைகோர்த்து நின்று மக்களைச் சுரண்டுகிறது. எனவே, இது சீனப் புரட்சியின் நேரடி இலக்காகும்.

   * இந்த வர்க்கம் வெவ்வேறு ஏகாதிபத்திய வல்லரசுகளுக்குக் கீழ் பிரிந்து நிற்கிறது. ஒரு குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கு (எ.கா. ஜப்பான்) எதிரான போரின்போது, பிற மேற்கத்திய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த பெருமுதலாளிகள் தற்காலிகமாகப் புரட்சிகர முன்னணியில் இணையக்கூடும். ஆனால், அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்கள் புரட்சிக்கு எதிராகத் திரும்பும்போது அவர்களும் புரட்சிக்கு எதிராகவே மாறுவார்கள்.

 2. தேசிய முதலாளி வர்க்கம் (National Bourgeoisie)

 * இரட்டைத் தன்மை (Dual Character):

   * புரட்சிகரப் போக்கு: வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தாலும், உள்நாட்டு நிலப்பிரபுக்களாலும் ஒடுக்கப்படுவதால், குறிப்பிட்ட காலத்திற்கு ஏகாதிபத்தியத்திற்கும் போர் பிரபுக்களுக்கும் (War lords) எதிராகப் போராட முன்வருகிறது.

   * சமரசம் மற்றும் பிற்போக்குத் தன்மை: அதேநேரம், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருப்பதாலும், ஏகாதிபத்தியம் மற்றும் நிலவுடைமையோடு பிணைப்புகளைக் கொண்டிருப்பதாலும், தொழிலாளர்-விவசாயி மக்களின் புரட்சிகர எழுச்சியைக் கண்டு பயந்து தயங்குகிறது.

 * எனவே, இந்த வர்க்கத்தை புரட்சிக்குள் குறிப்பிட்ட எல்லை வரை ஐக்கியப்படுத்தவும், அதேவேளை அவர்களின் ஊசலாட்டப் போக்கைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

 3. குட்டி முதலாளி வர்க்கம் (Petty Bourgeoisie)

குட்டி முதலாளி வர்க்கம் (உழவர்கள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள்)

உழவர்களைத் தவிர்த்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தில் அறிவுஜீவிகள், மாணவர்கள், சிறு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் தொழிலியலாளர்கள் அடங்குவர். இவர்களின் பொதுவான வாழ்க்கை நிலை நடுத்தர உழவர்களை ஒத்தது. இவர்கள் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெருமுதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையினால் வறுமை மற்றும் திவால் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மாவோ இப்பிரிவினரை நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பகுப்பாய்வு செய்கிறார்:

v  அறிவுஜீவிகளும் மாணவர்களும் (Intellectuals and Students)

 * வர்க்க நிலை: இவர்கள் தனித்த ஒரு உற்பத்தி வர்க்கமாகவோ அல்லது அடுக்காகவோ அமைவதில்லை. இவர்களின் குடும்பப் பின்னணி, பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கை முறையின் அடிப்படையில் இவர்கள் குட்டி முதலாளித்துவ வர்க்க வரம்புக்குள் வருகின்றனர்.

 * அரசியல் உணர்வு: இவர்கள் ஏகாதிபத்தியம், நிலவுடைமை மற்றும் பெருமுதலாளித்துவத்தால் வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி தடைபடும் அச்சத்தில் வாழ்கின்றனர். இதனால் புரட்சிகர உணர்வு மிக விரைவாக இவர்களிடம் பற்றிக்கொள்கிறது.

 * புரட்சியில் பங்கு:

   * மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளைச் சீனாவில் பரப்பியதிலும், பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஊட்டியதிலும் முன்னணியில் நின்றனர். (எ.கா: 1919 மே 4 இயக்கம், 1925 மே 30 இயக்கம், 1935 டிசம்பர் 9 இயக்கம்).

   * இவர்கள் தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுடன் புரட்சிகரக் கருத்துக்களை இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாகவும் (Bridge/Transmission belt), புரட்சியின் முன்னணிப் படையாகவும் திகழ்கின்றனர்.

 * பலவீனம்: இவர்கள் தனித்து நின்று புரட்சியை நடத்த இயலாது. தொழிலாளர்கள் மற்றும் உழவர்களோடு இரண்டறக் கலக்காவிட்டால், இவர்களது கருத்துக்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே நின்றுவிடும்.

v  சிறு வணிகர்கள் (Small Traders)

 * நிலை: பொதுவாக இவர்களிடம் சிறிய கடைகள் இருக்கும்; ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்களை (அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு) வேலைக்கு வைத்து நடத்துவர்.

 * தாக்கம்: இவர்கள் வாங்கும் பொருட்களின் விலை உயர்வு, சந்தைப் போட்டி, அதிக வரிகள், மற்றும் கந்து வட்டியாளர்களின் சுரண்டலால் எப்போதும் திவாலாகும் மற்றும் ஓட்டாண்டியாகும் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.

 * நிலைப்பாடு: இவர்களின் இந்தத் தொடர் பொருளாதார நெருக்கடி இவர்களைப் புரட்சியின் பக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் தோழமையின் பக்கமும் தள்ளுகிறது.

v  கைவினைஞர்கள் (Handicraftsmen)

 * நிலை: இவர்கள் சொந்தமாக உற்பத்திச் சாதனங்களை (கருவிகளை) வைத்துக்கொண்டு, தங்கள் சொந்த உழைப்பையோ அல்லது குறைந்த எண்ணிக்கையிலான கூலி ஆட்களையோ, பழகுநர்களையோ (Apprentices) பணியமர்த்திப் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.

 * தாக்கம்: நவீன ஆலைகளின் உற்பத்திப் போட்டியைச் சமாளிக்க முடியாமலும், மூலப்பொருள் பற்றாக்குறையாலும் நடுத்தர உழவர்களைப் போன்றே கடுமையான நெருக்கடியில் வாழ்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு நெருக்கமான கூட்டாளிகள் ஆவர்.

v  தொழிலியலாளர்கள் (Professionals)

 * நிலை: மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் போன்ற சொந்தத் தொழில் செய்பவர்கள்.

 * சுரண்டல் பண்பு: இவர்கள் மற்றவர்களைச் சுரண்டுவதில்லை; அல்லது மிகக் குறைந்த அளவிலேயே உதவியாளர்களைக் கொண்டு தொழில் நடத்துவர்.

 * அணுகுமுறை: இவர்களின் நிலைமை கைவினைஞர்களைப் போன்றதே ஆகும். இவர்கள் தொழிலாளர்-விவசாயி புரட்சிகர அணிக்கு ஆதரவளிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இருப்பினும் இவர்களிடம் ஊசலாட்டம் எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதால், முறையான புரட்சிகரப் பிரச்சாரமும் அமைப்பாக்கமும் இவர்களிடம் அவசியம்.

 4. உழவர் வர்க்கம் (Peasantry)

சீன மக்கள் தொகையில் உழவர்கள் தோராயமாக 80 சதவீதத்தினர் ஆவர். நாட்டின் பொருளாதாரத்தின் முதன்மை அடித்தளமே இவர்கள்தான். இவர்களிடையே ஏற்பட்டுள்ள தீவிரமான துருவமயமாதலை (பொருளாதார ஏற்றத்தாழ்வை) அடிப்படையாகக் கொண்டு மாவோ இவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்:

1. பணக்கார உழவர்கள் (Rich Peasants)

 * எண்ணிக்கை: கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 5% (சில பகுதிகளில் நிலப்பிரபுக்களுடன் சேர்த்து 10% வரை).

 * பொருளாதாரப் பண்பு: இவர்கள் தங்களுக்குச் சொந்தமான பெரிய அளவிலான நிலங்களைக் கொண்டிருப்பர்; தங்களின் நிலத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் குத்தகைக்கு விடுவர். கந்து வட்டித் தொழில் செய்வதுடன், பண்ணைத் தொழிலாளர்களைக் கூலிக்கு வைத்து இரக்கமின்றிச் சுரண்டுவர்.

 * வர்க்க இயல்பு: இவர்கள் அடிப்படையில் 'கிராமப்புற முதலாளிகள்' மற்றும் அரை-நிலவுடைமைத் தன்மை கொண்டவர்கள்.

 * புரட்சியில் பங்கு: இவர்கள் தாமும் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடுவதால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசியப் போராட்டக் கட்டத்தில் குறிப்பிட்ட அளவு பங்களிப்பு செய்வர். ஆனால் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான தீவிர விவசாயப் புரட்சியின் போது இவர்கள் நழுவி நடுநிலையாக நிற்கக்கூடும். எனவே இவர்களை நிலப்பிரபுக்களாகவே கருதி முன்கூட்டியே எதிரிகளாக்கி விடாமல், தந்திரோபாயமாக அணுக வேண்டும்.

2. நடுத்தர உழவர்கள் (Middle Peasants)

 * எண்ணிக்கை: கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 20%.

 * பொருளாதாரப் பண்பு: பொருளாதார ரீதியாகத் தற்சார்புடையவர்கள்; உணவு மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான நிலமும் உற்பத்தியும் இவர்களிடம் இருக்கும். எதிர்காலத் தேவைகளுக்குச் சிறிதளவு சேமித்து வைக்கும் வாய்ப்பும் உண்டு.

 * சுரண்டல் தன்மை: பிறரைச் சுரண்டுவதில்லை; மற்றவர்களின் உழைப்பில் வாழ்வதில்லை. மாறாக, ஏகாதிபத்திய வரிகள், போர் பிரபுக்களின் கட்டாய வசூல்கள் மற்றும் நிலப்பிரபுத்துவ அமைப்பால் இவர்களும் மறைமுகமாகச் சுரண்டப்படுகின்றனர்.

 * புரட்சியில் பங்கு: இவர்களுக்கு அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதால், ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சியில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்குப் பக்கபலமான, நம்பகமான நேச சக்தியாகத் திகழ்வர். இவர்களைக் கூட்டணியில் சேர்ப்பது புரட்சியின் வெற்றிக்கு இன்றியமையாதது.

3. ஏழை உழவர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் (Poor Peasants)

 * எண்ணிக்கை: கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 70% பேர் இவர்களே.

 * பொருளாதாரப் பண்பு: சொந்தமாக நிலமற்றவர்கள் அல்லது குடும்பத் தேவைக்கு முற்றிலும் போதுமான நிலம் இல்லாதவர்கள். நிலப்பிரபுக்களிடம் குத்தகைக்கு உழுது, கொடுமையான வாரப் பகிர்வு மற்றும் கந்து வட்டிக் கொடுமைகளுக்கு ஆளாகும் பரந்த ஏழை மக்கள்.

 * புரட்சியில் பங்கு:

   * கிராமப்புறத்தில் நிலவும் கொடூரமான சுரண்டலை உடைக்கத் துடிக்கும் இவர்கள், புரட்சியின் மிகப்பெரிய உந்து சக்தி (Motor force) ஆவர்.

   * பாட்டாளி வர்க்கத்தின் மிக இயற்கையான, அசைக்க முடியாத, முதன்மையான கூட்டாளி வர்க்கம் இதுவே ஆகும்.

   * சீனப் புரட்சியின் அடிப்படை ராணுவ பலமாகவும், கெரில்லாப் படைகளின் முதுகெலும்பாகவும் இந்த ஏழை உழவர்களே திகழ்ந்தனர்.

சுருக்கம்: மாணவர்களுக்கான புரிதல்

 * குட்டி முதலாளித்துவம்: புரட்சியின் சிந்தனை மற்றும் அறிவுப் பரவலுக்கான ஊடகம்; பாட்டாளி வர்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட துணைப்படை.

 * ஏழை மற்றும் நடுத்தர உழவர்கள்: புரட்சியின் மனிதவளம் மற்றும் களப் போர்க்களம்; பாட்டாளி வர்க்கத்திற்குத் தோள் கொடுக்கும் பெரும்பான்மை உழைக்கும் படை.

 * பாட்டாளி வர்க்கம்: இந்த அனைத்து உழைக்கும் சக்திகளையும் ஒன்றிணைத்து வழிநடத்தும் தலைமைச் சக்தி.

சீன மக்கள் தொகையில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ள இவர்களே பொருளாதாரத்தின் முதன்மைச் சக்தியாவர். மாவோ இவர்களை மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கிறார்:

 * பணக்கார உழவர்கள் (Rich Peasants):

   * கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 5% உள்ள இவர்கள், நிலத்தை குத்தகைக்கு விடுவது, கந்து வட்டி வாங்குவது மற்றும் கூலி விவசாயிகளைச் சுரண்டுவது மூலம் நிலப்பிரபுத்துவத் தன்மையைப் பெற்றுள்ளனர்.

   * இருப்பினும், தாமும் உழைப்பில் ஈடுபடுவதால் நிலப்பிரபுக்களுக்கு எதிரான தீவிரப் போராட்டக் கட்டத்தில் இவர்களை நடுநிலையாக்க முடியும்.

 * நடுத்தர உழவர்கள் (Middle Peasants):

   * கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 20% உள்ள இவர்கள் பெரும்பாலும் தற்சார்புடையவர்கள், பிறரைச் சுரண்டுவதில்லை.

   * ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் பாட்டாளி வர்க்கத்திற்குப் பக்கபலமான கூட்டாளியாக இருப்பார்கள்.

 * ஏழை உழவர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் (Poor Peasants):

   * கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 70% உள்ள பெரும்பான்மை மக்கள்.

   * நிலமற்ற அல்லது போதிய நிலமில்லாத இவர்கள் கடுமையான நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

   * இவர்களே சீனப் புரட்சியின் மிகப்பெரிய உந்துசக்தியாகவும் (Motor force), பாட்டாளி வர்க்கத்தின் இயற்கையான, முதன்மையான நேச சக்தியாகவும் திகழ்கின்றனர்.

 

 5. பாட்டாளி வர்க்கம் (Proletariat)

 * நவீன ஆலைத் தொழிலாளர்கள், நகரக் கைவினைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பண்ணைத் தொழிலாளர்களை உள்ளடக்கியது.

 * இந்த வர்க்கம் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தியோடு இணைந்திருப்பதால் மிகுந்த ஒழுக்கமும் போர்க்குணமும் கொண்டது.

 * ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய மூன்று கொடிய நுகத்தடிகளால் ஒடுக்கப்படுவதால் மிக உறுதியான புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்கிறது.

 * ஏழை உழவர்களோடு இயற்கையான பிணைப்பைக் கொண்டுள்ளதால், சீனப் புரட்சியை வழிநடத்தும் தகுதிவாய்ந்த தலைமை வர்க்கம் இதுவே ஆகும்.

 

6. நாடோடிகள் / லும்பன் பாட்டாளி வர்க்கம் (Lumpen-Proletariat)

 * நிலமற்ற, நிலையான வேலையற்ற திருடர்கள், பிச்சைக்காரர்கள், சூதாடிகள் உள்ளிட்ட வர்க்க நீக்கம் செய்யப்பட்ட மனிதர்களைக் குறிக்கும்.

 * சரியான புரட்சிகர வழிகாட்டல் இருந்தால் இவர்களைப் புரட்சிகரப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்; தவறினால் இவர்கள் எளிதில் பிற்போக்குச் சக்திகளாலும் நிலப்பிரபுக்களாலும் பிளவுவாதக் கூலிகளாகப் பயன்படுத்தப்பட்டு அழிவுச் சக்தியாக மாறும் அபாயம் உண்டு.

சீனப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ், பெரும்பான்மை விவசாயிகள் மற்றும் குட்டி முதலாளிகளை உறுதியான கூட்டாளிகளாக இணைத்து, தேசிய முதலாளிகளை நிபந்தனையுடன் ஆதரித்து, ஏகாதிபத்தியத்தையும் அதன் தூண்களான நிலப்பிரபுக்களையும் தரகுப் பெருமுதலாளிகளையும் வீழ்த்துவதே புதிய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை வர்க்கக் கூட்டணியாகும். (424-428)

 

எமது சமூகத்தை பகுப்பாய்வு செய்வது

எமது சமூகத்தை ஆய்வு செய்வது பற்றிய புரிதல் அவசியமாகும். தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், கடல்தொழில், சிறு முயற்சியாளர், தொழிலாளிகள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், வேலையற்றோர் போன்ற பிரிவினரை பகுப்பாய்வு செய்வது பற்றிய புரிதல் அவசியமாகும். இந்த வழியில் எமது சமூகத்தை ஆய்வு செய்ய பரீட்சையத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ் தேசத்தின் மூலதன வளர்ச்சி என்பது சுயமாக வளரமுடியாத நிலையில் தான் இருக்கின்றது. தேசத்தின் மூலதன வளர்ச்சிக்கு அவசியம் என்பதை பொருளாதார தன்னுணர்ச்சிவாதிகள் ஏற்பதில்லை.

முன்னைய காலத்தில் மார்க்சியத்தை கற்றுத் கொடுத்தவர்களின் குறையான மார்க்சியப் புரிதல் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகும். மார்க்சியத்தை கற்றுக் கொள்ளும் முறையில் குறைபாடு என்பது வர்க்க நிலையே தீர்மானிக்கின்றது.

‘‘இந்த சீர்திருத்தவாத முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. கொலனி நாடுகளில் தீர்திருத்தவாதக் கட்சிகள் ஏற்கனவே இருந்து வருகின்றன. இவற்றின் பிரதிநிதிகள் சில சமயம் தம்மை சமூக- ஜனநாயகவாதிகள் என்றும் சோசலிஸ்டுகள் என்றும் அழைத்துக் கொள்கின்றார்கள். நாம் குறிப்பிட்டுள்ள இந்தப் பாகுபாடு எல்லா விரிவுரைகளிலும் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விளைவாய் நமது கருத்தோட்டம் மேலும் துல்லியமாய் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (202/4)

எனவே இவர்கள் முற்போக்காளர்கள், இடதுசாரிகள், மார்க்சியர்கள் என தம்மை அழைத்துக் கொண்டாலும் அவர்களின் அரசியல் வெளிப்பாடுகளில் இருந்து அவர்களின் வர்க்க நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்டு விடுகின்றது. கொலனித்துவ நாடுகளில் கல்வி கற்றவர்களின் மார்க்சியம் மட்டுப்பட்ட புரிதல் கொண்டதே.

 

அடையாள அரசியல்

அடையாள அரசியல் / சாதிய முரண்பாட்டை மட்டுமே முதன்மையாகக் காணும் போக்கு (Social Identity First). தெற்காசியச் சூழலில் வர்க்கத்திற்கு முன்பே மனிதனின் அதிகாரத்தையும் சமூக அந்தஸ்தையும் முதன்மை கொள்கின்றார்கள். சாதிய உணர்வு இருக்கும் வரை தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒரு வர்க்கமாகத் திரள முடியாது; எனவே, பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சாதி ஒழிப்பும் அதிகாரப் பகிர்வுமே முதல் இலக்காக இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். இடஒதுக்கீடு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் பிரதிநிதித்துவம், சுயமரியாதை மற்றும் கலாச்சார விடுதலைப் போராட்டங்களை முன்னிறுத்துவது.

 

அராஜகவாதிகள் (Anarchist)

அரசு (State) என்ற அதிகாரக் கட்டமைப்பே மனித சுதந்திரத்திற்கு எதிரானது; புரட்சி நடந்த உடனேயே அரசை உடனடியாக அடியோடு தகர்க்க வேண்டும் என வாதிடுகின்றனர். இடைக்கால பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையோ அல்லது மையப்படுத்தப்பட்ட கட்சியையோ நிராகரிப்பார்கள். சுயநிர்ணய விடயத்திலும் மார்க்சியவாதிகள் என்போர் மறுக்கின்றார்கள். சுயநிர்ணயவிடயத்திலும் அரசு (ஏங்கெல்ஸ்) பற்றிய போதனையை மறுக்கின்றார்கள். அரசு இருந்தால் தான் ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட ஆட்சியும் நடத்திட முடியும்.

 

புகாரிய, ரொட்ஸ்கியவாதிகள்

இனமதகுலமற்று ஒன்றிணைவோம் என்கின்றார்கள். இந்தப் பிரிவனர் மக்கள் ஒன்று கலத்தல் என்பதை தவறாக வியாக்கியானம் செய்கின்றார்கள். தேசங்கள் ஒன்று கலப்பதில்லை. ஆனால் தேசங்கள் ஒன்று கலப்பதாக விளங்கிக் கொண்டுள்ளார்கள். அதேவேளை இனமதகுலமற்று ஒன்றிணையுங்கள் என்பது தேசங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கின்றார்கள். மாறாக மக்களுக்குத் தான் சுயநிர்ணயம் என்று தலைகீழாக லெனினின் பார்வையில் இருந்து மாறுபடுகின்றார்கள்.

ரொட்ஸ்கியவாதிகள் (Trotskyists) சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்துவம் பெருகிவிட்டதாகவும், 'ஒரே நாட்டில் சோசலிசம்' சாத்தியமில்லை என்றும் வாதிட்டனர். உலகெங்கும் புரட்சி தொடர்ந்து பரவ வேண்டும் என்ற நிரந்தரப் புரட்சி (Permanent Revolution) கோட்பாட்டை முன்னிறுத்தினர்.

புகாரின்வாத வலது எதிர்ப்பு (Right Opposition / Bukharinists) என்பார் விரைவான கட்டாய கூட்டுப்பண்ணை மயமாக்கலை எதிர்த்து, விவசாயிகளுக்குச் சந்தை ஊக்கங்களை அளிக்கும் 'புதிய பொருளாதாரக் கொள்கையை' (NEP) நீட்டிக்க வேண்டும் என வாதிட்டனர்.

Leon Trotsky, Nikolai Bukharin சிந்தனையில் அமைக்கப்பட்ட நான்காவது அகிலம் (Fourth International) மற்றும் இலங்கையின் லங்கா சமசமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party - LSSP). இன்றைய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் பின்தொடர்ச்சியாக வந்தவர்களும் இந்த தாக்கத்திற்கு உட்பட்டவர்களும் உள்ளார்கள். இந்தப் போக்கில் உள்ளவர்களின் அரசியல் முடிவுகளும், செயற்பாடுகளும் வெவ்வேறானவையாகும்.

``மக்கள் திரள்” என்பதாகப் பேசுவது காவுத்ஸ்கிவாதத்தின் சகஜமான குதர்க்கவாதங்களில் ஒன்றாகும். மக்கள் திரளிடமிருந்தும் வெகுஜன நிறுவனங்களிடமிருந்தும் தாம் முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்று காவுத்ஸ்கிவாதிகள் கூறுகிறார்கள்! (53லெனின்1*)

மூல மார்க்சியத்தையும், லெனினின் ஏகாதிபத்திய ஆய்வு, கட்சி அமைப்பு முறை மற்றும் அக்டோபர் புரட்சியின் வழிகாட்டலையும் மட்டுமே ஏற்பவர்கள். லெனினுக்குப் பிந்தைய சோவியத் தலைமைகளின் நடைமுறைகளை லெனினியத்தின் சிதைவாகவோ அல்லது தவறான திசைவழிப் போக்காகவோ கருதுவர். மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையாளர்களுக்கும் இடையே உள்ள கோட்பாடு மாறுபாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மார்க்சிய-லெனினியத்தின் தொடர்ச்சியாக, சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் ஸ்டாலினின் பங்களிப்பையும், அரை-நிலப்பிரபுத்துவ மற்றும் அரை-காலனிய நாடுகளில் புரட்சியை நடத்துவதில் மாவோவின் பங்களிப்பையும் ஏற்பவர்கள். பாட்டாளி வர்க்கத் தலைமை, விவசாயிகளின் முன்னணிப் பங்கு, தேசங்களின் சுயநிர்ணயத்தை லெனினிய வழியில் ஏற்றுக் கொள்வார்கள். புதிய ஜனநாயகப் புரட்சி, மக்கள் யுத்தம் (Protracted People's War), மற்றும் சோசலிசக் கட்டத்திலும் முதலாளித்துவ மீட்சியைத் தடுக்க கலாச்சாரப் புரட்சி அவசியம் என்பதை வலியுறுத்துகின்றனர்.

 

ஏகாதிபத்தியக் கட்டம்

‘‘ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவிற்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறவேண்டும். இத்தகைய இலக்கணம் யாவற்றிலும் முக்கியமானதை தன்னுள் கொண்டதாக இருக்கும். ஏனெனில் ஒருபுறத்தில் நிதி மூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்து விட்ட ஒருசில மிகப் பெரிய ஏகபோக வங்கிகளின் வங்கி மூலதனமாகும். மறுபுறத்தில் உலகின் பங்கீடானது எந்த முதலாளித்துவ அரசாலும் கைப்படாத பிரதேசங்களுக்கு தடையின்றிப் பரவிச் செல்லும். கொலனியாதிக்கக் கொள்கையிலிருந்து முற்றும் பங்கிடப்பட்டுக் கொண்டு விட்ட உலக நிலப்பரப்பை ஏகபோக உடனடியாக கொண்டிருப்பதற்குரிய கொலனியாதிக்கக் கொள்கைக்கு மாற்றிச் செல்வதாகும். ஆனால் மிகவும் சுருக்கமான இலக்கணங்கள் முக்கிய அம்சங்களைத் தொகுத்துத் தருவது வசதியாக இருந்தாலுங் கூட அவை பற்றாக் குறையானவையே. ஏனெனில் வரையறை செய்யப்பட வேண்டிய நிகழ்வின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை அவற்றிலிருந்து வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே எல்லா இலக்கணங்களும் நிபந்தனைக்கு உட்பட்ட சார்பு நிலையிலான மதிப்பே கொண்டவை. நிகழ்வினது முழு வளர்ச்சியிலும் அதன் தொடர்புடமைகள் யாவும் அடங்கியனவாய் ஒரு போதும் இருக்க முடியாது என்பதை மறக்காமல் மனதில் கொண்டு ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்.

1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.

2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ‘நிதி மூலதனத்தின்” அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.

3) பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.

4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்

5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே (நம்பிக்கை நிதியம்) உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக் கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.” (லெ3* 142)

இந்த ஐந்து போக்கை கொண்டதாக இன்றுவரை உள்ளது. அதற்கு அப்பால் எவையும் இல்லை. மேல் கண்ட வரையறை அடிப்படையில் உலகை பங்கு போடுவது என்றால் நடைமுறைச் செயற்பாடுகளில் வளர்ச்சிப் போக்கு இருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அபாரமானதாக இருக்கவில்லை. ஆனால் இன்று அவ்வாறு இல்லை அனைத்து வளர்ந்த நாடுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை வைத்துள்ளன. அதன் அடிப்படையில் அந்தந்த நாடுகள் வேலைப் பிரிவினை அடிப்படையில் செயற்படுகின்றன. அவைகள் சர்வதேச வலைப்பின்னலை சீர் செய்து ஒழுங்குபடுத்துகின்றன.

 

அமைப்புத் தேவை

ஜனவரி 1934-இல் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷிவிக்) 17-வது பேராயத்தில் ஸ்டாலின் ஆற்றிய அறிக்கை. “சரியான அரசியல் வழி வகுக்கப்பட்ட பின், வெற்றியோ தோல்வியோ, அரசியல் வழியின் விதியை உள்ளிட்ட அனைத்தையும் அமைப்புப் பணியே தீர்மானிக்கிறது.”

நாம் கொள்கை அளவில் அல்லது கோட்பாட்டு அளவில் ஒரு மிகச் சரியான முடிவை (அரசியல் வழியை) எடுத்துவிட்டாலும், அந்த முடிவை மக்கள் மத்தியில் கொண்டு சென்று களத்தில் வேலை செய்யக்கூடிய வலுவான அமைப்பு ரீதியான கட்டமைப்பு இல்லையென்றால் வெற்றி கிடைக்காது. திட்டத்தை விட அதைச் செயல்படுத்தும் அமைப்பின் ஒழுங்கமைப்பே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கிறது.

“ஊழியர்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்.”

இயந்திரங்களோ, ஆயுதங்களோ அல்லது வெறும் திட்ட அறிக்கைகளோ மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது; அவற்றை இயக்கும், கொள்கைப் பிடிப்புள்ள, அர்ப்பணிப்புடன் உழைக்கும் திறமையான ஊழியர்களே (Cadres) ஒரு இயக்கத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறார்கள்.

“சரியான அரசியல் வழி வகுக்கப்பட்டு நடைமுறையில்...”

கொள்கை வகுக்கப்பட்ட பிறகு, அதை நடைமுறையில் சரிவர அமல்படுத்துவதிலும், அதற்கேற்ற சரியான மனிதர்களைப் பொறுப்புகளில் அமர்த்துவதிலுமே இயக்கத்தின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஒரு நல்ல தேர்வுத் திட்டம் (அரசியல் வழி) கையில் இருப்பதை விட, தினமும் ஒழுக்கமாகப் படித்துத் தேர்வு எழுதும் மாணவனின் உழைப்பே (அமைப்புப் பணியும் ஊழியர்களும்) வெற்றியைத் தருவது போல, கட்சியிலும் கொள்கையை வழிநடத்தும் திறமையான மனிதர்களும் (ஊழியர்கள்), கட்டமைப்பும் (அமைப்புப் பணி) தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. (285/V2Mao)


No comments:

Post a Comment