பல்துருவப் போக்கு - 2
தொடரும்-----
இலங்கையில் விமானநிலையம், கப்பல் துறைமுகம், கடற்கரை வணிக மண்டலம் அமைப்பதன் ஊடாக அரசியலை கையாள்கின்றது. சீனத்தின் அரசுகள் அற்ற தேசங்களுடன் உறவை பேணுவதில்லை என்ற கொள்கை போராடுகின்ற தமிழ் தேசத்திற்கு பாதகமான நிலை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது.
இதுவரை காலமும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் ஊடாக சந்தையை நிலைப்படுத்தும் போக்கு இருக்கின்றது. அமெரிக்க அரைக்கோளத்தில் (Hemishere) சீனா கால்பதிப்பதை இட்டு அச்சம் கொள்கின்றது. ஆனால் சீனாவும் சந்தையை விரிவாக்கிக் கொண்டு தான் வருகின்றது. சந்தையை யுத்தத்தின் ஊடாக விரிவாக்கம் செய்து கொள்ளவில்லை. பொருளாதார உதவி, உட்கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் ஊடாக தம்வசப்படுத்தி வைத்திருக்கின்றது. பேருவில் Port Chasey துறைமுகத்தை 3.5 பில்லியனில் கட்டிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் 35 நாட்கள் எடுக்கும் பயணத்தை 23 நாட் பயணமாக குறைத்திருப்பதன் ஊடாக 20 விகித செலவினத்தைக் குறைத்துள்ளது. பிரேசிலில் 12.5 பில்லியனை முதலிட்டுள்ளது. தென் அமெரிக்காவில் இது வரையில் சீனம் 137 பில்லியன் டொலரை முதலீடு செய்துள்ளது.
ருசிய எரிசக்தி நிறுவனம் குவத்தமாலா, நிக்கரகுவா, பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் 7 பில்லியனை கடந்த 3 வருடங்களில் முதலிட்டுள்ளது. குவத்தமாலாவில் எரிசக்திப் பற்றாக் குறை இருந்து வந்துள்ளது. இது 1850 மெகாவட்ஸ் ஆக உள்ளது. நீர்வீழ்ச்சி மின்சாரத் திட்டம், மின்சார உற்பத்தி உபநிலையங்களை நவீனப்படுத்த 1923 இல் இருந்து அமெரிக்காவிடம் உதவி கேட்டு வந்துள்ளது. ஆனால் ஒப்புக்கு சில மில்லியன்களை USAID கொடுத்துவிட்டுச் சென்றது. ஆனால் ருசியா 2பில்லியன் டொலர்களை முதலிட்டுள்ளது. ஆனால் US 481 மில்லினை பாதுகாப்புக்கு (2024) என்று தென் அமெரிக்க பிராந்தியத்திற்கு ஒதுக்கியுள்ளது.
ருசியா, சீனத்தின் முதலீடுகள் எவற்றை மையமாகக் கொண்டு அமையப் பெறுகின்றது என்ற மாறுபாட்டை அறிவது அவசியமாகும். ஏனெனில் 1953 இல் வாழைப்பழ முதலாளிகளின் நலனுக்காக குவத்தமாலா ஆட்சி கவிழ்க்கப்படுகின்றது. இதன் காரணமாக 20000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 1996 ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது. அமெரிக்கா எவ்வித நட்டஈடும் கொடுக்கவில்லை. 2023 மீளவும் உதவியைக் கேட்ட போது USA செய்யவில்லை. ஆனால் ருசியா 15 வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
மேற்காசிய வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (Gulf Cooperation Council -GCC) நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் மீது ஐ.நா பாதுகாப்புச் சபையில் கண்டனத் தீர்மானத்தை வழிமொழித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் சீனா, ருசியா புறக்கணித்த நிலையில் 135 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்ற வேற்றப்பட்டுள்ளது. இதனை இந்தியாவின் வெற்றியாக கொள்ள முடியுமா?
ஈராக்கின் மீது தொடுக்கப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒரு நாளைக்கு ஒரு Billion $ என்ற கணக்கில் தான் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இன்றைய காலத்து யுத்தம் என்பது அவ்வளவு விலைவாசி அதிகம் கொண்டதாகும். உற்பத்திப் பொருள்களின் விலை நிர்ணயம் என்பது உற்பத்தியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். உழைப்பாளி கொடுக்கும் வேலைநேரம், தொழிலாளியின் சிறப்புத் தேர்ச்சி, மூலப் பொருட்களின் விலை, சர்வதேச உழைப்பு பிரிவினை ஊடாக உற்பத்தி செய்யப்படும் செலவுகள் (பகுதி உதிரிப் பாகங்கள் வெவ்வேறு நாடுகளில் தயாரிக்கப்படுவனவாகும். இதனால் உற்பத்தியின் இறுதி விலையும் மாறுதலுக்கு உள்ளாகும்) ஊடாகவும், முதலீடு செய்பவர்களின் லாபத்தின் விகிதத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதுவேதான் கூறுகின்றோம் இந்த யுத்தத்தின் ஊடாக லாபம் பெறுபவர்கள் ஆயுத வியாபாரிகளே.
வங்கியின் கடன் அட்டையைப் பயன்படுத்தும் முறை மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் இடைத்தரகருக்கு கொடுக்கும் கட்டணமும் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. வங்கி அட்டையைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு நாடும் அதற்கான சேவை செலவை அறவிடுகின்றன. இவை என்ன மாற்றத்திற்கு உள்ளாகும் என்று தற்பொழுது தெரியவில்லை. வங்கி அட்டையில் கடனாக அல்லது வைப்பில் உள்ள பணத்தை எந்த நாட்டில் இருந்து எடுத்தாலும் வங்கியிலிருந்து வங்கியின் ஊடாகவே நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். முன்னர் இருந்த இடைதரகரான அமெரிக்க வங்கி முறையை நீக்கி விட்டு, எந்த வங்கியின் வாடிக்கையாளரோ அந்த வங்கியில் இருந்தே (``wero’’ and SEPA) நேரடியாக கொடுக்கல்/வாங்கல் நடைபெறும் என்று ஐரோப்பா நாடுகள் முடிவெடுத்துள்ளன.
உலக மத்திய வங்கியானது டொலருக்குப் பதிலாக தங்கத்தினை மாற்றீடு செய்துள்ளது. அமெரிக்காவின் கடனானது 36 Trillion $ ஆக அதிகரித்துள்ளதம், பணவீக்கமானது ஏற்பட்ட நிலையில் தோற்றுவித்துள்ளது. இதனால் மற்றைய நாடுகள் தமது பணத்தின் ஸ்திரத் தன்மையை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரை காலமும் டொலரே பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தி வரப்பட்டது. இதனைப் ஆயுதமாக அமெரிக்க ஈடுபட்டதை ஒரு முடிவிற்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் புதிய உலக ஒழுங்கில் அவசியமாகின்றது. 5.1 Trillion பெறுமதியுள்ள $ அகற்றிவிட்டு தங்கத்தினை மாற்றீடு செய்துள்ளது. ஆக பயன்பாட்டில் அதிகமாக இருந்த $ தாள்கள் பயனற்றதாக அந்தந்த நாடுகளில் மாறுகின்றன. டொலரான கையிலிருப்பில் வைத்திருப்பது பாதுகாப்பு அற்றது என்பதே இதன் பொருளாகும்.
யப்பான் டொலருக்குப் பதிலாக யுவானை பயன்படுத்த தீர்மானித்துள்ளது. ஏற்கனவே ஈரான் தன்னுடன் யுவானில் தான் வணிகம் செய்ய முடியும் என்று அறிவித்திருந்தது. GCCகளில் சிலவும் யுவானைத் தெரிவு செய்துள்ளது.
முனிச் (Munich) மாநாட்டில்
Rubio Marco ஐரோப்பா முக்கியமான நட்பு நாடு, இவை இரண்டிற்குமான உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஒருவருக்கொருவர் இணைந்து செயற்படுவதன் முன்னைப் போல பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்ப விடயங்களில் ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில் பேசியுள்ளார்.
Kallas பேசும் போது மனிவுரிமை விடயத்தில் உலகில் 2ம் தரவரிசையில் இருக்கின்ற நாட்டை 52 வரிசையுள் உள்ள நாடு (US) விமர்சிப்பதை சிரித்து கடந்து போவதாக என்னும் தொனியில் கூறினார்.
ஜேர்மன், பிரான்ஸ் அதிபர்கள் இரண்டாம் உலகயுத்ததின் பின்னரான அரசியல் போக்கு திசைமாறும் நிலையில் செல்கின்றது. பழைய போக்கு முடிவிற்கு வருவதாக கூறினார்.
புதிய பல்துருவப் போக்கின் அரசியலில் ஐ.ஒ தனக்கான பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு தோன்றியுள்ளது. உலக அரங்கில் தனித்துவமாகவும், இணைந்தும் செயற்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு உருவாகியுள்ளது.
உலக யுத்தத்தின் பின்னர் இருந்து அரசியல் செயற்பாடுகள், ஒத்துழைப்புகள் பல வருடங்களுக்கு முன்னரே தோல்வியுற்றிருந்தது. எனினும் வெளியே உடைவு ஏற்படாது தொடர்ந்து என்பதை ஐ.ஒ ஏற்றுக் கொள்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின்
நேட்ரோ மீளவும் ருசியாவுடன் மென்மை நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜேர்மன் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்தை பிரான்ஸ் அதிபரும் கொண்டுள்ளார். 2022 இருந்து ருசியாவிடம் அமெரிக்காவின் சார்பு நிலையில் இருந்து கடுமையான போக்கையே கடைப்பிடித்துவந்துள்ளது. முன்னர் பூட்டின் ஒரு பேசத் தக்க மனிதர் அல்ல, சர்வாதிகாரி என்றவர்கள் இறங்கி வந்துள்ளார்கள்.
தற்போது அமெரிக்கா நேரடியாகவே உக்கிரேன் விடயத்தில் தனித்து செயற்படுகின்றது. எந்தப் பேச்சுகளிலும் பங்காளிகளாக ஐ.ஒ இணைக்கவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை சிக்கல் என்பது ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது. அதேவேளை தொழில்துறை அமெரிக்காவை நோக்கி நகர்வதாக கூறப்படுகின்றது. பொருளாதாரம், மக்களின் அன்றாடம் வாழ்வாதாரத்தில் எரிபொருள் தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து வெளியேற வேண்டியது இன்றைய தேவையாக இருக்கின்றது.
கிறீலாந்தினை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரியது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளது.
சோவியத் வீழ்ந்த பின்னர் சந்தைப் பொருளாதாரத்தை பின்பற்றி வந்தது. சோவியத் வீழ்ந்த பின்னரும் ருசியா எதிரியாகவே அமெரிக் நடத்தி வந்துள்ளது. எவ்வித கொள்கை மாற்றமும் நடைபெறவில்லை. வார்சோ ஒப்பந்தத்தை பின்பற்றி நாடுகளை தனதாக்கிக் கொண்டது. நேற்ரோ எல்லையை விரிவாக்குவதில்லை என்று உறுதி மொழி கொடுத்தது.
முதலாளித்துவம் சமத்துவம், சகோரதத்துவம், சுதந்திரம் என்றும் தாராளவாத சிந்தனை என்பது தனிமனதத்தை நிறுத்திய வாழ்வியலைப்
பனிப் போர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட போலி விம்பத்தின் மீது தான் சமூகம் வழிநடத்தப்பட்டன. இந்தப் போக்கு அனைத்து சமூக அலகுகளிலும் தவிர்க்க முடியாது ஆளுகை செலுத்தியது. மேற்கு நாடுகளின் ஆதிகத்திற்கு துணையாக
Europian Union ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் பற்றி முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னரே உரையாடல் நடந்துள்ளது. அன்றைய காலத்தினை மதிப்பீட்டினை லெனின் முன்வைக்கின்றார். அந்த வழிகாட்டல் இன்றும் பொருந்துகின்றது.
தேசங்களின் சுயநிர்ணயம் என்பதை லெனின் கவனத்தில் கொள்கின்றார். ஐரோப்பிய ஒன்றியம் முதலாளிகளின் நலனுக்காக இறைமை இழக்கப்பட்டு உருவாக்கப்படுவதாகும். லெனின் சோசலிசப் புரட்சி தனியொரு செயற்கை இல்லை என்கின்றார். ஐரோப்பிய ஒன்றியம் பிற்போக்கு ஆட்சியை தொடர்ந்து கொண்டிருந்தன. பழைய பிற்போக்கு மன்னராட்சி பல நாடுகளில் தொடந்திருந்தன. இந்த முதலாளிகள் தான் குறிப்பாக ஆபீரிக்காவை பங்கு போட்டு வளங்களைப் கொள்ளையடித்துக் கொண்டிருந்தன. சூரியன் மறையாத நாடு என்ற பெருமையையும் பறைசாற்றிக் கொண்டிருந்த கொலனித்துவ ஆட்சிக் காலமாகும். உலகை பங்குபோட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுந்த கோரிக்கையே ஐ.ஒன்றியமாகும். இன்று கொலனித்துவம் மறுகொலனித்துவ நிலையில் தான் ஆட்சிகள் பல நாடுகளில் நடைபெறுகின்றன. மூலதன ஏற்றுமதி உருவாக்கியும், சர்வதேசமயமாகிவிட்டதும், ஏகபோகமாகி இருந்த காலத்தில் உருவாக்கிய இந்த கூட்டு முதலாளிகளுக்கானதும், சுரண்டலையும், மறுகொலனியாதிக்கத்தையும் தொடர்கின்ற போக்கே லெனின் காலத்திலும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ``முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்பது” சுரண்டலுக்கான சந்தையாகும்.
ஏகாதிபத்தியங்களின் நரைவேட்டை தொடர்கின்றது. ஏகாதிபத்தியம் இருக்கும் வரையில் உலகில் அமைதி என்பது ஏற்படப் போவதில்லை. காலத்துக்கு காலம் முதலாளித்துவ முகாம்கள் ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டிருப்பார்கள்.
இரண்டாம் உலகயுத்த த்தின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மேற்குஐரோப்பிய நாடுகளின் மீள் கட்டுமானம் ஆனது அமெரிக்காவின் தயவில்தான் (Marshall plan) இருந்தது. அதிலிருந்து சுயாதீனமாக வளரவேண்டிய தேவை ஐரோப்பிய முதலாளிகளின் நலன் பற்றிய அவசியம் அன்றிருந்தது. முதலில் தாதுப்பொருள்கள் பற்றிய பிரச்சனை என்பது மீளக் கட்டமைப்பதற்கு அவசியமானதாகும். ஐரோப்பிய ஒன்றிய வரலாறு இவ்வாறு தான் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாகியது. (In April 1951 Paris Treaty the was signed, creating the European coal and steel community (ECSC). Belgium, France, Italy, Luxembourg, the Netherlands, West Germany.) ஆறு நாடுகளுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தக் கூட்டு உருவாகியது. ஐரோப்பிய வர்த்தக ஒன்றியம் உருவாக்கப்பட்டது. (he European Economic Community (EEC) 1957 Treaty of Rome) அந்த ஒப்பந்தத்தில் பல நாடுகள் இணைந்து கொள்ளப்பட்டன. அடுத்த கட்டமாக ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதாகும். (1993 - The Treaty on European Union, commonly known as the Maastricht Treaty, 12 countries Belgium, Denmark, France, Greece, Ireland, Italy, Luxembourg, Netherlands, Portugal, Spain, United Kingdom, Germany. the ECB replaced its shadow European monetary institute on 1 June 1998, and began exercising its full powers with the introduction of the euro on 1 January 1999.)
ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் என்பது பின்னர் சோவியத் உடைவின் பின்னர் பழைய வோர்சோ நாடுகள் எனப்படும் நாடுகளில் பெரும்பான்மை இணைக்கப்பட்டன. இதேபோல நேட்ரோ என்ற இராணுவக் கூட்டும் விரிவாக்கப்பட்டன.
வரலாற்றில் கடற்கொள்ளையர் பற்றி நாம் அறிந்திருப்போம். மன்னர் ஆட்சிக் காலத்தில் வணிகர்களை பாதுகாக்க வேளைக்காரப் படையைக் கொண்டு கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டனர். கொலனித்துவ காலங்களிலும் கடற் கொள்ளையர்கள் இருந்திருக்கின்றார்கள். மேற்குநாட்டு திரைப்படங்கள் தாராளமாக உள்ளன. இதே போல சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்றைய காலத்தில் இருந்துள்ளார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த வலிமை மிக்க நாடுகள் பல தமது கடற்படைக் கப்பல்களை கொண்டு சரக்குகப்பலின் போக்குவரத்தை பாதுகாத்துக் கொண்டனர்.
ஆனால் இன்று அமெரிக்க பேரரசு பொருளாதாரத் தடை, கடல்போக்குவரத்துத் தடை என்று மேற்கொள்கின்றது. பேரரசின் இந்த நடவடிக்கை ஆயுத பலத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரையில் வெனிசுவேலாவின் 80 மில்லியன் பரல்கள் (அல்ஜசீரா) எண்ணையையும், 6 கொள்கலன்களையும் (பிபிசி) கைப்பற்றியுள்ளது. வெனிசுவேலாவின் எண்ணை வருவாய் என்பது (Venezuela’s oil fund has Secretary of State Marco Rubio and a Qatari bank account.) வங்கியொன்றில் வைப்பிடுவதாக கூறுகின்றது. இதேவேளை அமெரிக்க கூட்டு பல மில்லியன் ஈரானிய வளங்களை கைப்பற்றியுள்ளதாக நத்தான்யாகு கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு இந்த கூட்டுக் களவில் இஸ்ரேலுக்கும் பங்கு உண்டு என்பதேயாகும்.
ஈரானின் 980000 பரல்களையும் இது 38.5 மில்லியன் டொலர் பெறுமதி என்றும், இதுவரையில் 300 மில்லியன் பெறுமதியான எண்ணையை கைப்பற்றி உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இங்கு கைப்பற்றப்பட்ட எண்ணைகளில் இருந்து பெறப்படும் வருவாய்க்கு என்ன நடக்கின்றது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை.
ஐ.நாவின் கண்காணிப்பின் ஒரு சிறப்பு கண்காணிப்பாளர் பொதுநிர்வாகி மற்றும் அதன் எண்ணெய் நிதியை கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கீழ் ஈராக்கின் எண்ணையை விற்பதும், அதனை வளர்ச்சிக்காக பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்கள். ஏனெனில் இனிமேலும் பயங்கரவாத நாடான ஈராக் ஆயுதங்களையும், பயங்கரவாத த்தையும் ஊக்குவிக்கக்கூடாது என்பதே காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்தப் (Iraq’s reconstruction effort had a United Nations mandate, a special inspector general and international monitors overseeing its oil fund - and it still lost track of $8.7 billion.) பணம் மாயமாக மறைந்து போய் விட்டது. இந்தக் கொலைகாரர்கள். அரை மில்லியன் குழந்தைகளை ஊனமாக்கிய கொடூரர்களை நம்பியது இந்த உலகம். பரிசோதகர்களை நியமித்து நியாயவாதிகளாக நடந்து கொண்டார்கள் என்பதை இந்த உலகம் நம்பிக் கொண்டு தான் இருக்கின்றது.
அமைதிப்பேச்சு
இரண்டாம் சுற்றுப் அமைதிப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்துள்ளது. என்ன நிபந்தனை? யாரின் நலன்? என்ற பிரச்சனை இங்கு எழுகின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனது நேரடி யுத்தம் அல்ல என்று அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதி விளங்கிக் கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடு அணுவாயுதம் பற்றிய உரையாடல் வந்த பொழுது இராணுவ மேலிடம் முற்றாக புறக்கணித்துள்ளது. அணுவாயுதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உண்மையில் ஒரு நின்மதிப் பெருமூச்சு விட வேண்டியது தான்.
ஈரானின் சரக்குக் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டத்தற்கு எதிர்வினையாக US போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்துகின்றது. தமது கடற்பரப்பில் நிற்றும் யுத்தக் கப்பல்களை இந்து சமுத்திரத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கின்றது. US தொடுக்கும் போர் என்பது பல பில்லியன் செலவைக் கொண்ட யுத்தமாகும். இதனால் தொடர்ந்து யுத்தம் நடத்தவோ, தாக்குதல் நடத்தவோ முடியாத காரியமாகும். இங்கு அமெரிக்கா கால அவசாசம் பெற முற்படுகின்றது. அதேவேளை ஈரானின் உள்நாட்டு உற்பத்தி, வினியோகம், பற்றாக்குறை, உள்நாட்டு கிளர்ச்சி ஏற்படுவதன் ஊடாக ஈரானை அடிபணிய வைக்க முயற்சிக்கின்றது.
பேரரச எண்ணப்பாடு என்பது எப்பொழுதும் தமது நலனில் இருந்து மற்றவர்களை அடக்கி ஆழ்வது தான். இந்த நிலையில் அடக்குமுறையில் தொடர்ந்து இருப்பதா? அல்லது தொடர்ந்து போராடி வெற்றி பெறுவதா என்ற நிலைப்பாட்டில் ஈரான் வந்து நிற்கின்றது. ஆனால் பொதுப்புத்தி என்பது ஐயோ இவர்கள் போராடி அழியப் போகின்றார்கள் என்பதேயாகும். இவ்வாறான சிந்தனை என்பதே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்களினால் கட்டமைக்கப்பட்ட அமைதிவாதம். ஒரு பக்கம் அமைதிவாதத்தை கட்டமைத்துக் கொண்டு, மறுபக்கத்தில் ஒடுக்குமுறையை மேற்கொண்டு வருகின்றது. ஏகாதிபத்தியம் என்பது தான் மட்டுமே ஆயுதம் வைத்திருக்கும் உரிமை உள்ளது என்று கூறிக் கொள்கின்றது. உலகை அடக்குவதற்காக ஏகபோகத்தை கோரி நிற்கின்றது.
Trump ஆட்சிக்கு வந்ததால் அமைதியாக இருந்த உலகம் சுடுகாடாக ஆக்குகின்றார்கள் என்ற கருத்து வைக்கப்படுகின்றது. Trump ஆட்சி என்பது தீவிர வலதுசாரி ஆட்சி என்பது உண்மையே. ஆனால் நிதிமூலதனத்தின் மேல்தட்டு வர்க்கத்தின் கொடூரமான முகத்தைக் கொண்ட ஆட்சியாளர்கள் இப்போது USல் உள்ளார்கள். பாசீச போக்கை அவதானிக்க முடிகின்றது. மீளவும் சிறப்பாக (great again, anointed by jesus யேசுவால் ஆசிர்வதிக்கப்பட்ட) வருவோம் என்பது மதப்பண்பாட்டுடன் இணைத்துப் போகின்றது. US யுத்த அமைச்சர் பத்திரிகையாளர் மாநாட்டில் மத வழிபாட்டைச் செய்கின்றார். Trump தன்னை மீட்பராக கருதுகின்றார். அத்துடன் ஈரான் மீதான தாக்குதலை விவிலியத்தின் தொடர்ச்சியாக கருத்தாக்கம் செய்யப்படுகின்றது. அதாவது யூதர்களுக்கு வாக்களித்த பூமியைப் பெறும் நேரம் வந்துவிட்டது என்ற கருத்தாக்கம் செய்யப்படுகின்றது. அகண்ட இஸ்ரேலிய நோக்கில் தான் இஸ்ரேலின் தாக்குதல் அமைந்திருக்கின்றது. லெபனானில் ஒரு பகுதியை பாதுகாப்பு வலையமாக அறிவித்துள்ளது.
மக்கள் நீண்டகால நலனுக்காக, குறுகிய காலத்தில் (short term pain long term gain) ஏற்படும் சுமையை சமாளிக்கவேண்டும். இவ்வாறான கருத்துருவாக்கத்தை செய்யத் தொடங்கி விட்டார்கள். நிதிமூலனத்தின் முழக்கமாக இன்று கருத்தாக்கம் செய்யப்படுகின்றது. உற்பத்தி மறுவுற்பத்தியில் ஏற்படும் மாற்றம் வேலைஇழப்பு, விலைவாசி அதிகம், வறுமை சமூகத்தில் அதிகரிக்கும். ஆனால் பொறுமையாக மக்களை இருக்கக் கோருகின்றது. யுத்தம் என்பது மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும், அகதிவாழ்வின் அவலம் என்று தொடரப் போகின்றது. இவைகள் எல்லாவற்றையும் மக்கள் அமைதியாக கடந்து போகவேண்டும் என்கின்றனர்.
இந்தப் போக்கு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் USன் இராச்சியக் கட்டமைப்பு கடல், ஆகாயம், தொழில்நுட்ப, நிதிமேலான்மை போன்றவற்றைக் கொண்டு உலகை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முயற்சிக்கின்றது. அரசு வடிவமே அதிகாரத்தை உரித்துடைய ஏக நிறுவனமாக இருக்கின்றது. இவ்வாறே ஏகாதிபத்தியமும் தன்னை விட யாரையும் ஆதிக்கம் கொள்ளாத வகையில் ஏகபோகமாக நிலைநிறுத்துகின்றது. எனினும் உலகம் பூராவும் தமது படைத்தளங்களை வைத்திருக்கின்றது. ஆனால் அனைத்து நாடுகளிலும் தனது படையை தரையில் வைத்திருக்க முடியாது. ஆனால் தனக்கான ஆதரவுத் தளங்களையும், ஆட்சியாளர்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். இதுவரைகாலமும் நடைபெற்ற யுத்தங்களில் இன்றைய காலத்தில் நடைபெறும் யுத்தம் என்பது மிகவும் ஆபத்தானமாகும். இரண்டாம் உலகயுத்த காலத்தில் அணுவாயுதம் என்பது முழுமையாக உருவாகப்படவில்லை. இறுதிக் கட்டத்தில் உருவாகினாலும் யப்பான் சோவியத், சீனத்தின் தாக்குதலால் மிகவும் பலவீனம் அடைந்திருந்தது. யப்பான் சரணடையும் நிலையில் தான் இருந்தது. ஆனால் அமெரிக்கா தனது மேலான்மையை நிறுவ யப்பான் மீது குண்டு போட்டு அழித்தது. அணுவின் தாக்கமும், உயிர் அச்சுறுத்தலும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது உண்மையே. அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் அணுவாயுதங்களை கொண்டுள்ளன. பிரான்ஸ், ருசியா, இந்தியா, வடகொரியா, சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் வைத்துள்ளன. இந்த நிலையில் உலகப் போக்கு எவ்வாறு செல்லும் என்று ஊகிக்க முடியாது.
மேற்கு ஆசிய (அரபு) நாடுகளில் இவ்வாறு தான் தனது படைத்தளத்தை விரிவாக்கி வைத்திருந்தது. அந்த நாடுகளின் செலவில் பெரும் இராணுவ, பாதுகாப்பு கண்காணிப்பு தளங்களை விரிபுபடுத்தி வைத்திருந்தது. 80 நாடுகளில் 800 தளங்களை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு தளத்திற்கு ஒரு வருடத்திற்கு 200 மில்லியம் $ பராமரிப்புச் செலவு ஆகின்றது என்றும் கருதப்படுகின்றது. தளத்தை பாராமிப்பதற்கு 200 $மில்லியன் என்கின்ற போது இதர செலவுகளை கணக்கிட்டால் அது அதிகமாக வரும். ஆயுதங்களினால் பலனடைவது தயாரிப்பு நிறுவனங்களேயாகும். அந்த நிறுவனங்கள் யுத்தத்தை வைத்தே பல பில்லியன்களை வருவாயாகப் பெறுகின்றன.
கடந்த காலங்களில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது, மேட்டுக்குடிகளின் களிப்பாட்ட இடமாக குவைத், கட்டார், பஹ்ரேன், டுபாய் இருந்துள்ளது. இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கம், மன்னர் பரம்பரை இதுவரைகாலமும் தாம் பக்கச் சார்பு அல்ல என்று கூறிக் கொண்டிருந்தன. ஆனால் நடைமுறையில் அமெரிக்க படைகளையும், மேற்கு நாடுகளின் படைகளையும், தொழில் நுட்பத்தையும் பெறுவதில் கவனம் செலுத்தினார்கள். மேற்கின் ஆளும் வர்க்கத்திற்கும், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு தாராளமாக பரிசுப் பொருட்களையும் கொடுத்த மன்னராட்சித் திமிரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மன்னர் பரம்பரையில் பணச் செருக்கு என்பது கட்டுக்கடங்காமல் இருக்கின்றது.
Ursula Von der Leyen -commission president ஈரானிய மக்கள் விடுதலையடைய வேண்டுமாம். அவர்கள் இதுவரையில் 17000 மக்களை கொண்றொழித்துள்ளார்களாம். ஈரான் ஆட்சியாளர்களை இட்டு கண்ணீர் விடத் தேவையில்லையாம். ஆம் இதனைத் தான் நாடும் கூறுகின்றோம். ஈரானிய மக்கள் தமக்கான விடுதலையை தாமே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுக்குள் 75000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதற்கு என்ன நீதி வழக்கப் போகின்றார்கள்.
இதேபோல மனுவல்லா (Manuela Bergerot- Spain parliamentarian) பெண்ணியத்தின் பெயரில்
யுத்தம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றார். ஆம் முன்னர் ஜனநாயகம், பேச்சுரிமை,
எழுத்துரிமை, தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பல நாடுகள் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை
நடத்தியது
1.4 billoin$ அமெரிக்க அரச பணத்தை Trump ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சவூதியில், வியட்னாமில் golf மைதானம், வீடுகள் விற்பனை பரிமாற்றம் போன்றவற்றில் முறைகேடுகள், நாட்டின் இரகசிய செய்திகளை கொடுத்ததாகவும், AI தொழில் நுட்பத்தை UAE கொடுத்தாகவும், அதில் 2பில்லியம் 400 மில்லியன் கட்டாரிடம் பெற்ற விமானம் போன்றவை பற்றியும் செனற் விசாரணையில் ரூபியோ மாக்கோவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இவற்றை பலநாடுகளில் கேளிக்கை தளங்களை உருவாக்க பயன்படுத்தியதாக Trump குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான பணத்தை பிறநாட்டு பயங்கரவாதிகளுக்கு ஆயுதத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அந்தப் பணத்தை தனது நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்திக் கொண்டால் வளர்ந்தால் முன்னணி நாடாக இருக்கும்.
வளைகுடா நாடுகளின் இராணுவக் கட்டமைப்பும், இராணுவத்தின் எண்ணிக்கை, மனப்பாங்கு இவை பற்றி பேசப்பட வேண்டும். சவுதி 36 மில்லியன் மக்களில் 45வீதம் குடியேற்றவாதிகளாகும்.
இதே போல தான் மற்றைய வளைகுடா நாடுகளாகும். குறிப்பாக வளைகுடா மக்களின் யுத்தம் பற்றிய புரிதல், சண்டையிடும் மனப்பாங்கு பற்றி Soctt Ritter (former CIA/IAEA inspector) கருத்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் யுத்தம் புரிவதற்குரிய ஆட்களை எடுப்பது என்பது முக்கியமானதாகும். Ritterஇன் கருத்துப்படி அரபு மேட்டுக்குடிகளின் சோம்பேறித் தனம் என்பது யுத்தத்தில் நின்று பிடிக்க முடியாது. குடியேற்றவாதிகளால் நீண்ட காலத்திற்கு சண்டையிட முடியாது. அவர்கள் வெறும் கூலிப்படை மாத்திரமாகும்.
ஈரானின் தந்திரோபாயம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை ஊகிக்க முடியவில்லை. ஈரான் பொருளாதாரம், நிதிக் கட்டுமானம், அத்தியாவசிய தேவை போன்றவற்றை சிதைப்பதன் ஊடாக US படையை வெளியேற்றுவது.
இதன் ஊடாக வளைகுடா நாடுகளில் உள்நாட்டு நெருக்கடியை ஏற்படுத்துவது, இதன் ஊடாக ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது என்ற அடிப்படையில் செயற்படுகின்றது. இது நீண்ட உள்நாட்டுப் போருக்கு வழி வகுக்கும். மன்னராட்சியினையும், முதலாளித்துவ நலனையும் பாதுகாக்க முதலாளித்துவ நாடுகள் தொடர்ச்சியாக உதவியை கொடுக்க முனையும். அவ்வாற போது இன்று ஒதுங்கியிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நேரடியாக உதவி செய்ய முன்வரும்.
பொருளாதார முகாம் மாறல்
இந்த யுத்த த்தினால் உரங்களுக்காக பற்றாக்குறை, எண்ணை, எரிவாயுப் பற்றாக்குறை, இரசாயன மற்றும் மருந்துப் பற்றாக்குறை இவற்றைத் தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் புதிய வழியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டன. அதேபோல அமெரிக்கா வரியை கூட்டிய பின்னர் பொருளாதார முகாம்கள் மாறத் தொடங்கியுள்ளது. சீன, அவுஸ்ரேலிய சந்தையை நோக்கி கனடா நகர்ந்துள்ளது. கனடா வரும் 3 வருடத்திற்கான கார் வணிகத்தில் குறிப்பிட்ட அளவு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை நோக்கிச் சென்று ஒப்பந்தங்கள் செய்தார்கள். பிரித்தானியா சீனாவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.
ரஸ்யாவின் எண்ணை யுத்தத்தை பலப்படுத்தும் என்று கருதுகின்றார்கள். இரஸ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ள போதிலும் சில நாடுகள் எண்ணை, எரிவாயுவை பெற்றுக் கொண்டு தான் உள்ளார்கள்.
ஹெங்கேரி, செக், ஸ்லோவக்கிய நாடுகள் ஐ.ஒ நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டு கொடுக்க வேண்டிய நிதியை முடக்கியுள்ளார்கள். இன்று ஹெங்கேரியில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின்னர் உரையாற்றிய புதிய பிரதமர். உக்கிரேனுக்கு வழங்கவிருந்த உதவியை தடைசெய்ததை (வீட்ரோ) அகற்றிவிட்டுச் செல்லுமாறு கோரியுள்ளார்.
90 பில்லியன் ஈரோ கடனாக கொடுப்பது என்பதும், பின்னர் ருசியாவில் இருந்து நட்டஈடு பெற்றுக் கொள்ளும் போது திரும்பி தந்தால் போதும் என்ற அடிப்படையில் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த யுத்தம் என்பது நாடுகளின், மக்களின் சேமிப்பு நிதி என்பது இல்லாமல் போகின்ற அபாயம் உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த ஒவ்வொரு நாடும் முயற்சிக்கும். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வீட்டுக்கடன் செலுத்த முடியாமை, வட்டிவிகிதம் (மக்களிடம் கறப்பது) அதிகரிக்கும், மக்களிடம் வாங்கும் சக்தி குறையும் இவ்வாறான எதிர்நிலைப் போக்கு ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
கனடா, அவுஸ்ரேலியா, யப்பான், இந்தியா புதிய பொருளாதார வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த பசுபிக், அத்திலாந்திக் வலையத்தில் (Pacific Atlantic economic compact) 2 பில்லியன் மக்களைக் கொண்ட வலைப்பின்னலாகும். இந்த நாடுகளில் மூலப் பொருட்கள், மனிதவளம், தொழில் நுட்பம், உணவு உற்பத்தி, தொழிற்சாலை வலுவைக் கொண்டதாகவும், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவை உள்ளடக்கிய கூட்டாகும். தடைகளை நீக்குவதன் ஊடாக வேகமான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கருதப்படுகின்றது. வெவ்வேறு நாடுகளில் உள்ள வேலைப் பிரிவினையை திறம்பட பயன்படுத்திக் கொள்வது நடைபெறுகின்றது.
வரியைக் குறைத்தல், உற்பத்தி தங்கு தடையின்றிச் பரிமாறல், உற்பத்திச் சான்றிதல் என்பது ஒரு நாட்டின் தரத்தை மற்றைய நாடுகள் ஏற்றுக் கொள்ளல், தொழில்நுட்ப பரிவர்த்தனை, மூலதனம்- உற்பத்தி-தொழிற்நுட்பம் என்பன பரிமாறிக் கொள்ளல். (தொழில் நுட்பம், உணவு உற்பத்தி தரம், நிதிக் கட்டுப்பாடு)
இந்தியா 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட விரிந்த சந்தையாகும். புதிய மத்தியதர வர்க்கத்தின் வளர்ச்சி என்பது சந்தையை பரந்ததாக இருக்கின்றது. இந்தியாவிற்கு தேவையான உற்பத்தி, தொழில்நுட்பம், மூலப் பொருட்கள் என்பன இந்த நாடுகளின் ஊடாக கிடைக்கும். இந்தியாவில் இருந்து மலிந்த விலையில் உழைப்பாளிகள், தொழிற்சாலை கட்டுமானம், கணணி ஊழியர்களை பெறமுடியும்.
குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட சக்தி (Clean energy, eco friendly) காற்றாலை, சூரிய ஆற்றல், நீர் மின்சாரம், மருந்துப் பொருட்கள், துணி- ஆடை உற்பத்தி, உணவு உற்பத்தி போன்றவை இன்று அவசியமாகின்றது.
ஒவ்வொரு நாடுகளும் சமாந்திரமாக நடத்தப்படும். இந்த ஒப்பந்த வலையத்தினுள் அமெரிக்காவை இணைத்துக் கொள்ளவில்லை. பலநாடுகள் அமெரிக்காவை தங்கியிருக்காத பொருளாதாரத்தை கட்டமைக்க முயல்கின்றன. வணிகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா போன்ற நாடுகளும் தனித்துவமான போக்கை முன்னெடுத்துள்ளன.
மொன்றியல் கப்பல்துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்படுகின்றது. இந்த விரிவாக்கம் என்பது நேரடியான இறக்குமதி, ஏற்றுமதியை அதிகரிக்கும், வினைத்திறன் கொண்டதாக 60 per cent அதிக விரிவாக்கம் கொண்டதாகவும் அமையும் என்கின்றார். இதன் ஊடாக எரிவாயு, கனிமவளங்கள் ஏற்றுமதி செய்ய இலகுவாக அமையும் என்கின்றார்கள். கனடாவின் தேசிய நெடுஞ்சாலைகள், தொடர்வண்டிப் பாதை, நதிவழிப்பாதையை ஒன்றிணைத்ததாக அமையும். அதே வேளை வடதுருவ நாடுகளான faroe island, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் தொடர்பும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கனடா வடதுருவ நாடுகளுடன் வணிக ஒப்பந்தம் என்றை ஏற்படுத்தியிருந்தது.
கனடா அனைவருக்குமே, வலுவான கனடாவை உருவாக்குவோம், யாருமே அதனை பறித்திட முடியாது, கனடாவே முதன்மையானது என்று முழங்குகின்றார் மார்க்கோனி.
கனடியர்களின் தீர்க்கமான போக்கும், வலிமை என்பது சூழல் திடீரெனத் தோன்றவில்லை. அது மெதுவாகவே தோன்றியது. உல்லாசப் பயணம், மதுபானம், பனிக்கால விளையாட்டு, கொடைகால விளையாட்டு என்பன கனடாவிலும் மாற்று உள்ளது. அதனை தெரிவு செய்யமுடியும் என்று எடுத்துக்காட்டுகளுடன் கூறினார். உல்லாசப் பயணத்துறையில் 13 வீகிதம், தேசிய கண்காட்சியில் 15 விகித அதிகரிப்பு, 15விகிதம் (50000) தொடர்வண்டிப் பயணம் அதிகரித்துள்ளதுள்ளது. தமது வானத்தின் மீதும் சூரியன் தென்படும் நாமே நமக்கு எசமானர்கள் என்கின்றார் கனடா பிரதமர் மார்க்கோனி.
கனடா டொலரில் வணிகப் பரிமாற்றம் செய்ய சில நாடுகள் முன்வந்துள்ளன. வியட்னாம், ஈக்குவடோர், கென்யா, யூ.எ.இ, இந்தோனேசியா, வங்காளதேசம்.
கனடா துருவப் பரப்பில் தனது வணிகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் ஊடாக பாதுகாப்பு,
சீனாவுடனான ஒப்பந்தம் என்பது கடல்உணவு (lobster), பட்டாணி, canola போன்றவற்றை ஏற்றுமதி செய்து என்றும், 48000 மின்சார கார்களை 3வருடத்தில் இறக்குமதி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கு 100விகித வரியில் இருந்து 6விகிதமாக வரி அறவிடப்படுகின்றது. இதேபோல தொழில்துறை, மாட்டிறைச்சி ஏற்றுமதி போன்றவை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இதே போல கனடாவின் 75விகித எண்ணை அமெரிக்காவிற்கு செல்வதற்கான மாற்று உருவாக்குவது பற்றியும் பேசப்படுகின்றது.
ஐ.ஒ ஆணையர் பேசுகின்ற போது அவுஸ்ரேலியா பலமூலப் பொருட்களைக் கொண்ட நாடாக இருக்கின்றது. குறிப்பாக உலகில் அதிகளவில் லித்திதயத்தை கொண்ட நாடாக இருக்கின்றது. அனைவருக்கும் தெரியும் சீனமே மூலப் பொருட்களை சுத்தீகரிப்பது, செயல்முறைப்படுத்துவது தனியுரிமை கொண்டுள்ளது. உங்களின் பொருட்கள் பெறுமதி ஊட்டப் பெறாமலே நாட்டை விட்டுச் செல்கின்றது. இதனை மாற்றும் பொருட்டு அனைத்து மூலப் பொருட்களுக்கு மாத்திரம் அல்ல உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்குமான வரிகளையும் ரத்து செய்கின்றது. இவ்வாறு செய்வதன் ஊடாக இரு பகுதியினரும் தடையற்ற முதலீடு, உற்பத்தி, உள்ளுர் செயல்முறையை (local processing) ஊக்குவிப்பதன் ஊடாக வளங்களின் பயன்பெறுமதியை அதிகரித்துக் கொண்டு கொள்ள முடியும்.
F35 வாங்கும் எண்ணத்தை இடைநிறுத்தி வைத்துள்ளது. ஏனெனில் இந்த யுத்த விமானமானத்தில் உள்ள தொழில்நுட்பத்தின் ஆபத்தை உணர்ந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. ஒரு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (screening) வல்லமை கொண்டதாகும். இதன் ஊடாக தங்கள் நாடுகளின் சுயாதிபத்தியம் இழக்கப்படுவதாக கருதப்படுகின்றது.
கனடா மொத்த உற்பத்தியில் 2% natoவிற்கான பங்களிப்பு 5% அதிகரித்துள்ளது. கனடா வணிகப் பரப்பை, பாதுகாப்பை, சந்தையை நம்பகமாகவும், சுயாதீனமாகவும் தன்னைக் கட்டமைத்து வருகின்றது. கனடா முதன்மை என்பது அரசியல் முழக்கமாக மாறுகின்றது. இது கனடா முதலாளித்துவ வர்க்கத்திற்கான பாதுகாப்பாகவும் அமைகின்றது.

No comments:
Post a Comment