Popular Posts

Friday, 15 May 2026

தமிழ்த்‌ தேசியப் பொதுப் புள்ளி ‌‌ என்பது என்ன? CKS

 

 


தமிழ்த்‌ தேசியப் பொதுப் புள்ளி ‌‌ என்பது என்ன? எவ்வாறு தேடுவது? **************************************************

என்ற தலைப்பில் சி. கா. செந்தில்வேல் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அவற்றிற்கு எதிர்வினையாற்றுவதா அல்லது அவரை கடந்து செல்வதா என்ற குழப்பம்.

இலக்கு, வேலைத் திட்டத்தில் அமைய வேண்டிய அம்சங்கள், போராட்டத் தலைமை இவைகள் பற்றித் தான் மனப்பாடம் செய்துள்ளார். இது இயங்கியல் பார்வை அற்ற வெறும் அகநிலைவாத எண்ணப்பாடு மாத்திரமே. இதனை லெனின் அனுபவவாத விமர்சனம் என்பார்.

 

##தலைப்பும் தலையைச் சுற்றுகின்றது

`` தமிழ்த்‌ தேசியப் பொதுப் புள்ளி

இங்கு தேசங்களின் சுயநிர்ணயமா? தேசியவாதமா?

தமிழ் தேசத்தின் பிரச்சனையை தேசிவாத முழக்கம் என்ற மட்டத்தினுள் அடக்குகின்றார். இதுவும் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.  இது தேசிய இனப்பிரச்சனையை மார்க்சிய வழியில் இவர்களால் என்றும் அணுக முடியவில்லை. இவர்கள் லெனினியத்தைப் படிக்கவே இல்லை.

இலங்கையில் உள்ள பிரச்சனை தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றியே.

அந்த தேசத்தை ஒடுக்குவது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பே.  பிறிதொரு இடத்தில் தமிழ் தலைமையையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தலைமையும் ஒப்பிடுகின்றார்.

 

##இலக்கு அல்லது தீர்வு

``ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒடுக்குதல்களுக்கு எதிரான உறுதிமிக்கப் பிராந்திய சுயாட்சிக்கும் அதனை வென்றெடுப்பதற்கும் ஒரு பரந்த வெகுஜன எழுச்சிக்கும் கொள்கை வகுத்து அதனைப் பொதுப் புள்ளியாகக் கொண்ட அறைகூவலை முன் வைக்க எந்தத் தமிழ்த் தேசியவாதத் தரப்பும் தயாராக இல்லை.

இதை ஒரு வலதுசாரி அல்லது புகாரியவாதி, ரொட்ஸ்கியவாதி எழுதியிருந்தால் கடந்து சென்றிருக்க முடியும். ஆனால் கட்சியில் பு.ஜ. மார்க்சிய லெனினியக் கட்சி என்று வைத்துக் கொண்டு இவ்வாறு லெனினியத்திற்கு முரணான கருத்தை முன்வைக்கின்ற போது கடந்து செல்ல முடியாது.

சுயநிர்ணயம் என்பது அரசு பற்றியதே. அரசியல் அதிகாரம் பற்றியதே. அதைவிட வேறு எந்தச் சொல்லிலும் லெனின் கூறவில்லை. அதிலும் சுயநிர்ணய விடயத்தை அரசை மறுக்கும் புருத்தோனியவாதிகள் என்கின்றார்.

அரசு என்ற விடயத்தை விட்டுவிட்டு எதையே இவர்கள் எழுதுகின்றார்கள். “

இதே போல உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம்  என்பது புகாரியவாதம். தேசங்களுக்குத் தான் சுயநிர்ணயம் என்பது லெனினியம். லெனின் வழிகாட்டல் இதுதான்.

அரசை மறுக்கும் அராஜகவாதிகள் (அனார்க்கியர்கள்) தான் இவர்கள்.

இந்த வகையில் இவர்கள் முன்வைப்பது மார்க்சிய லெனினியம் அல்ல. இவர்கள் புகாரியத்தையும், அராஜகவாதத்தையும், புருத்தோனியத்தையும் மார்க்சியம் என்கின்றார்கள்.

இன்னொரு விடயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

``இதுவே இருந்து வரும் தமிழர் தரப்பு அரசியல் யதார்த்தமாகும்.

மார்க்சியம் பேசுவது சமூகத்தை மாற்றியமைப்பது. அது நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது. சமூகக் கட்டத்திற்கு முன்னைய கட்டமே தேசிய ஜனநாயகப் போராட்டம் அதனைக் கூட தலைமை தாங்க முடியாதவர்கள் எவ்வாறு சமூகக் கட்டத்தை மாற்றியமைக்கப் போகின்றார்கள். தனது நூலான வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை என்ற நூலில் போராட்டமே தவறு,  

 

## வேலைத் திட்டத்தில் அமைய வேண்டிய அம்சங்கள்

`` உழைக்கும் ஒடுக்கப்படும் தமிழ் மக்களும் அவர்களது அனைத்துப் பிரச்சனைகளும் தொடரவே செய்யும். இந்த இடத்திலேயே புதிய அரசியல் சிந்தனையும் அதற்கான புதிய போராட்டப் பாதையும் தேவைப் படுகின்றன என்பது ஆழ்ந்து உணரப்படுவது அவசியமாகிறது. 

-இந்தப் பிரச்சனைக்கான தீர்வு தேசிய ஜனநாயகப் புரட்சி இல்லையா?

போராட்டத்தை தலைமை தாங்க வேண்டியவர்கள் மார்க்சிய லெனினியவாதிகளே. அவர்கள் செய்ய வேண்டிய வேலை என்பது சுயநிர்ணயப் போராட்ட வேலைத் திட்டத்தில் வர்க்கம், சாதியம், பெண்டிமைத்தனம், ஆணாதிக்கம், பிரதேசவாதம் போன்ற விடயங்களை கையில் எடுக்க வேண்டும்.

மார்க்சியவாதிகள் கையில் எடுக்க வேண்டிய விடயத்தை எங்கோ தேடுகின்றார்.

 

##போராட்டத் தலைமை

``இது தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாத உயர்வர்க்க மேட்டுக் குடி அரசியலுக்கு எவ்வகையிலும் குறைந் தவை அல்ல.

ஒடுக்கும் தேசியவாதமும், ஒடுக்கப்படும் தேசியவாதமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு வர்க்கக் கூறுகள் என்பதை விளங்காது ஒன்றுபடுத்தப்படுகின்றது. தமிழ் தலைமைகளில் பிழை இல்லாமல் இல்லை. ஆனால் வர்க்கப் பகுப்பாய்வு கவனமாக செய்யப்பட வேண்டும்.

 

தேசிய ஜனநாயகப் போராட்டத் தலைமை 2009 ஒடுக்கப்பட்டது.  இரத்தம் சிந்தும் அரசியல் தான் ஒடுக்கப்பட்டது. தமிழர் தேசத்தின் இறைமையை யாரும் இன்றுவரையில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தமிழ் மிதவாதத் தலைமைகளுடன் முரண்பட்டுக் கொண்டே தேசிய ஜனநாயகப் போராட்டத் தலைமை உயிர் பெற்று வந்தது. இது பற்றி எவ்வித வரலாற்றுப் பார்வையும் இன்றி வர்க்கப் பகுப்பாய்வும் இன்றி பொதுவாக எல்லாலோரையும் ஒரே தட்டில் வைத்துக் கொள்வதும் காவுட்ஸ்கி வாதம்.

காவுட்கிதான் கூறுகின்றார் `` மக்கள் திரள்‘ என்பதாகப் பேசுவது காவுத்ஸ்கிவாதத்தின் சகஜமான குதர்க்கவாதங்களில் ஒன்றாகும். மக்கள் திரளிடமிருந்தும் வெகுஜன நிறுவனங்களிடமிருந்தும் தாம் முறித்துக் கொள்ள விரும்பவில்லை.என்று காவுத்ஸ்கிவாதிகள் கூறுகிறார்கள்!

தமிழ் பரப்பில் தரகுமுதலாளிய வர்க்கம்

தேசிய ஜனநாயக சக்திகள்

ஊசலாட்டச் சக்திகள்

செயலற்ற போலி மார்க்சியப் பிரிவுகள் தான் உள்ளது.

செயலற்ற போலி மார்க்சியர்கள் சமூகத்தை திட்டுவதை விட்டு மார்க்சியத்தை கற்று எழுதுங்கள். உங்கள் செயல்ல தன்மை என்பது தமிழ் இளையோரை  மார்க்சியத்தில் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்.

 

இறுதியாக

60 வருடமாக மார்க்சியத்தைப் படிக்கவில்லை. இனியாவது மார்க்சியத்தைப் படியுங்கள். அதனை விடுத்து அனுபவவாதத்தை மார்க்சியம் என்று கூறாதீர்கள். நீங்கள் எழுதுவது எல்லாம் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று எண்ணிக் கொள்ளும் பாமரர்களை  மார்க்சியத்தில் இருந்து அன்னியப்பட வைக்காதீர்கள்.

நீங்கள் பேசுவது எதுவும் மார்க்சிய லெனினியம் அல்ல. அது வெறும் அனுபவவாதக் குப்பையே.

 

 

https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/08/blog-post_12.html 

 https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/07/03071921.html  தோழர் சண்

https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2016/02/blog-post.html  

 

No comments:

Post a Comment