மாகாண சபையும் தீர்மானங்களும்

மாகாண சபையும் இனவழிப்பும்
ஒரு அரசியல் பாதையை விமர்சிக்கும் போது பிரச்சனையின் மையநிலையில் இருந்து பார்க்க வேண்டும்.
சமூகத்தின் போக்கை வியாபகமாக
(மொத்தத்துவமாக ) அணுகுமுறை கொண்டிருக்க வேண்டும். இதற்கு மாற்றாக ஒரு விடயத்தின் உப விளைவுகளை பிரதான நிலையாக கருதும் போக்கை காணமுடிகின்றது. அவ்வாறு பிரச்சனைளை அளவிட முடியாது. சில குறிப்பான விடயங்கள் என்பது ஒன்றில் பங்கவிளைவாக அல்லது தொடர் விளைவாக இருக்க முடியும்.
ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நிலைப்பாடுகளில் இருந்து தான் மற்றையவைகள் அணுகப்பட வேண்டும். தேசிய இனத்தின் உரிமைகள் மொழி, பொருளாதாரம், நிலம், கலாச்சார வாழ்வை தானே தீர்மானிக்கும் மையநிலையில் இருந்து அணுகுவதாகும்.
தன் சொந்த நீதியை கோருவதற்கு உரிமை உடையதா இல்லை? நாம் ஏன் அடக்கப்பட்டோம், எதற்காக போராடினோம்? ஏன் தற்காப்பு யுத்தம் நடைபெற்றது என்பதில் இருந்து தான் அணுகப்பட வேண்டும். மாறாக வென்றவர்களின் எகதாளத்தின் மையத்தில் இருந்து அல்ல. பலவிடயங்களை தேசத்திற்கான அதிகாரங்கள் என்ற நிலையில் இருந்து அணுகப்பட வேண்டும். மாறான தன்னுடைய பதவியின் அடிப்படையில் இருந்தல்ல.
இரண்டு தேசங்களைக் கொண்ட இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள அரசின் கீழ் வந்ததன் பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட தேசிய இனங்களை சிறுபான்மைக் குடிகளாக மாற்றுவதற்கு எதிராக எழுந்தது தான் போராட்டங்கள்.
இலங்கை வரலாற்றில் எத்தனையோ ஒப்பந்தங்கள், எத்தனை ஆணைக்குழுக்கள், எத்தனை வட்ட மேசை மாநாடு, நாடாளுமன்ற தெரிவுக்குழு என எத்தனையோ வந்துவிட்டது. இது போக எத்தனை தீர்வுத் திட்டம் வந்து விட்டது. கண்டி யாத்திரை தொடங்கி, சந்திரிக்காவின் தீர்வுப் பொதி எனவும், ரணில் எதிர்த்தது வரை கண்டுள்ளோம். அரசியல்வாதிகளின் சில செயற்பாடுகளை வைத்துக் கொண்டு திட்டித் தீர்ப்பதில் எவ்வித பிரயோசனம் இல்லை.
ஆகவே அகிம்சைப் போராட்டம் – ஆயுதம்- மனிதவுரிமை பற்றிப் பேசுவதெல்லாம் பக்க விழைவுகளைப் பற்றியே ஆகும். பக்க விளைவுகளைக் கொண்டு பிரச்சனையின் மூலத்தினை கண்டுவிட முடியாது. முதலில் அகிம்சை வடிவில் இருந்து ஆயுதப் பரிமாணத்திற்கு போராட்டம் எவ்வாறு வளர்ந்து வந்தது என அறிய வேண்டும். மாறாக பக்க விழைவுகளை முன்னிறுத்துவது (வரலாற்றுப் போக்கை மறுத்த) பின்னவீனத்துவம். பிரச்சனைக்கான மூலவேரைத் தேடிப் போய் ஆராய்ந்து அணுகுவதன் ஊடாகவே பிரச்சனைக்கான தீர்வினை பெற முடியும்.
தமிழ்தேசிய அரசியல்வாதிகள்
தேசத்தின் நலன் என்பதை விளங்கிக் கொள்ளாத நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
1. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களிடம் புனர்வாழ்விற்கு நிதிதிரட்டுவது, புலம்பெயர் மக்களின் மூலதனங்களை தமிழ் பகுதியில் முதலிடுவதன் அவசியத்தை முற்றும் உணராதவர்களாக இருக்கின்றார்கள்.
2. தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் குழு மோதலை அடக்க விசேடபடையைக் கோருவது.
3. வேலையில்லாத் திண்டாட்டத்தினை இதை எதிர்த்து வேலையில்லாப் பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர்.
4. இனப்படுகொலை என நிரூபிப்பதற்கான போதிய தடயங்கள் காணாது என்ற கூற்று. (https://www.youtube.com/watch?v=b0Y9fGcNI8w&ab_channel=NewsTK)
5. இங்கு சிங்கள மக்களிடம் இனவாதத்தினை ஊட்டி இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை குழப்ப முடியும் என்ற வாய்பாட்டு மீளுவும் ஒப்பிக்கப்பட்டது.
6.சம்பூர் காணிப் பிரச்சனை பற்றிய பொய்யான கூற்றுக்கள்- அதாவது சேனப்பயிர் செய்கைக் காணிகள் அனல் மின்னிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது வேடுவர்கள் சுதந்திரமாக நடமாடி தேவையான வாழ்வாதாரத்தினை திரட்டிக் கொள்கின்றனர். இதனை மறுத்து காணிகள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றார்கள்.
7. தமிழக சக்திகளை வாயை மூடுங்கள் என்று கூறுவது.
இவ்வாறான முரண்பட்ட செயற்பாடுகளும், போக்கும் மக்களுக்கு பயன்தராது. இணக்க அரசியல், தோல்வி மனப்பாங்கை வளர்த்துக் கொள்வது, தொழில்முறை அரசியல்வாதிகளை உருவாக்கிக் கொள்வதும் பயன்தராது.
சர்வதேச விசாரணை
சர்வதேச நீதி விசாரணை மண்குதிரையின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஈழத்தவர்களின் போராட்டம் சுருங்கியுள்ளது. ஆனால் ஆளும் வர்க்கம் வெவ்வேறு திசைவழிகளை காட்டி நிற்கின்றது தான் இன்றைய நிலையாகும். இந்த நிலையில் அரசியல்வாதிகளின் போக்குச் சிந்தனை என்பன ஏதோ புதியதாக தோற்றம் கொடுக்கின்றது. சர்வதேச விசாரணை என்பது வல்லாதிக்க சக்திகளின் நிலைப்பாடுகளின் ஊடாக செயற்படுபவையாகும். எனினும் இந்த நிலைப்பாடு குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கையாக இருப்பதையும் மறுத்திட முடியாது.
தேர்தல் காலத்தில் இந்தச் சக்திகள் பற்றி பல்வேறு கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டது. அவர்களின் அரசியல் என்பது வீழ்த்தப்பட்ட தேசத்தின், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கு உதவப் போவதில்லை என்பதையும், அவர்களின் வர்க்க நிலை என்பது எவ்வாறு சரணாகதிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. தேர்தல் நேரங்களில் ‘‘பிரபாகரனுக்கு சிலை எடுப்பது, தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண கட்சியையும் எதிர்ப்பேன்,
2016ற்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு” இப்படிப்பல வீரவசனங்களை கேட்டிருப்போம். இந்த வசனங்கள் எல்லாம் இலங்கை சமூக அமைப்பும், அரச கட்டமைப்பின் சிந்தனையில் அடித்தளம், அதன் ஆட்சியாளர்களின் சிந்தனாவட்டம் என்பதை பகுத்தறிந்து ஆராயாத அரசியல்வாதிகளின் பிதட்டலுக்கு அப்பால் எவையும் இல்லை.
இனப்படுகொலை என நிரூபிப்பதற்கான போதிய தடயங்கள் காணாது என்ற கூற்று.
தேசம் என்பது மொழிக்கான தன்னுரிமை, பொருளாதார (வேலைவாய்ப்பு, முதலீடு, சந்தை, உழைப்பிற்கான வாய்ப்பு) தன்னுரிமை, பண்பாட்டிற்கான தன்னுரிமை, நிலப்பரப்பிற்கான தன்னுரிமை (நிலஆக்கிரமிப்பு, நிலஅபகரிப்பு) அடங்கியதாகும். இவை நான்கு அம்சங்களைக் பண்புகளைக் கொண்ட தேசிய இனம் என்பது ஒரு தேசத்திற்கானவர்கள். இந்த அடிப்படையில் 4 அம்சங்களைக் தன்னுரிமையாகக் கொண்ட ஈழதேசமாகும். அவர்கள் சுயநிர்ணயம் கொண்டவர்களாவர்.
தேசியஇனப்பிரச்சனையை முதலாளிகளின் பிரச்சனையாக பார்ப்பது தவறானதாகும். இங்கு சந்தை கூட ஒரு அம்சமேயன்றி தனிக்கூறு அல்ல. தனிக்கூறாகப் பார்க்கும் பார்வை எழுத்ததே தேசிய இனப்பிரச்சனையை முதலாளிகளின், உயர்சமூகத்தின் பிரச்சனையாக மட்டும் பார்ப்பதாகும். எனவே பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு முழுமையான
(holistic approach) பார்வையில் இருந்து பிரச்சனையை அணுகவேண்டியது அவசியமாகும்.
ஆனால் முழுமையான போக்கில் சமூகத்தின் தேவையை முன்வைக்கப்படுகின்றதா? அந்த தேவையில் கருதி செயற்படுகின்றார்களா என்பதை மக்கள் மீளாய்வு செய்ய வேண்டியதேவை இருக்கின்றது. இதற்கு மாறாக நடப்பது என்னவெனில் தேசம் என்றால் நாடு என்பதற்கான சமஸ்கிருத சொல் என்று இப்போ தான் வரிவரிப்பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
சுயநிர்ணயம் – தேசம் என்பது பற்றிய பிரச்சனையை மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது அன்றே அமிர்தலிங்கம் வழிமொழிந்து பேசிவிட்டார். அதாவது தமிழர் ஒரு தேசிய இனம் அவர்களுக்கு சுயநிர்ணயம் உடையவர்கள் என்பதாகும். இதிலும் வரலாற்றுக் காலம் எங்கிலும் இரண்டு தேசக் கூறுகளாக (முதலாளித்துவம் தேசங்களை உருவாக்குகின்றது) தமிழ்- சிங்களம் என இரண்டு தேசங்கள் தனித்தனியே இருந்து வந்துள்ளது.
இதற்கு ஒருபடிமேலே வளர்ந்த போது திம்புக் கோரிக்கையில் இடம்பெற்ற 4 அம்சங்களில் தேசியம்- தாயகம்- சுயநிர்ணயம் என்ற (மலையகமக்களின் வாக்குரிமை மற்றையது) அனைத்து இயக்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை எந்த ஆளும் வர்க்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
போலிச் சுதந்திரம் அடைகின்ற போது பெரும்பான்மையான தேசத்திடம் கையளிக்கப்பட்டது.
1948 அன்றே சிங்கள தேசம் பெருந்தன்மையாக இருந்திருந்தால் (சுவீஸ் போன்று) இரண்டு தன்னாட்சி கொண்ட மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடாக பரிணமித்திருக்கும். (பண்டாவின் மாநில சமஸ்ரி பின்னர் செல்வாவின் சமஸ்ரி) ஆனால் பெருந்தேசிய அரசியல் போக்கே மேலோங்கியிருந்திருக்கின்றது. தமிழ் தேசத்தினை விழுங்கிக் கொள்ளும் முயற்சிலேயே செயற்பட்டது. இது லங்கா என்ற பெருந்தேசியத்தினுள் சிறுபான்மை என்ற அந்தஸ்துக்கு அப்பால் எதற்கும் தயாராக இல்லாத நிலையில் தான் அன்று தொடக்கம் இன்றுவரை இருந்து வருக்கின்றது
மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பு, நிலஆக்கிரமிப்பு கல்லோயாத் திட்டத்தின் ஊடே எல்லைக் கிராமங்களில் அபகரிப்பு இடம்பெற்று வந்திருக்கின்றது. இதே போல தன்தேசத்தில் தன் இருப்பை மாத்திரம் உறுதி செய்யும் பொருட்டு சிங்கள தேசத்தில் இருந்து சுத்திகரிப்பு நடைபெற்றது. அகதிகளாக
1958, 1961, 1977, 1981, 1983 எனவும் தமிழ் பிரதேசத்திற்கு கப்பலிலும், பொது வாகனங்களிலும் அனுப்பி வைத்தது. லங்கா தேசம் இறுதியில் பல பகுதியில் இருந்து தமிழர்களை சுத்தீகரித்தது.
மொழிச் சட்டத்தை உருவாக்கி தமிழ் பேசும் அதிகார வர்க்கத்தை அகற்றி சிங்கள தேசிய இனத்தின் அதிகார வர்க்கத்திற்கு கொடுத்து தமிழ் பேசுபவர்களின் சந்தர்ப்பத்தை பறித்தது. தமிழ் தேசத்தில் உள்ள தமிழ் பண்பாட்டுச் சின்னங்களை (தமிழ் மகாயண புத்த) சிங்கள மயமாக்கியது, நூல்நிலையத்தை எதிரித்தது, தற்பொழுதும் சிங்க பௌத்த சின்னங்களை தமிழ் தேசம் எங்கும் அமைத்துக் கொண்டு வருகின்றது.
இவைகள் சரித்திரம் மாத்திரம் அல்ல, இன்றும் தொடர்ச்சியான தொடர்ந்த கொண்டிருப்பவையாகும் இதனை எவரும் மறுக்க முடியாது. மேற்கூறிய அம்சங்களை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் என்பது இனவழிப்பேயாகும்.
நல்லெண்ணங்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லும், விருப்பங்களை வைத்துக் கொண்டு புரட்சி செய்ய முடியாது. இவைகள் அறநெறிகளாக இருக்கும். இவைகளை வைத்துக் கொண்டு சமூகமாற்றத்தை கொண்டு வந்து விட முடியாது. பஞ்சு சிலுவையைச் சுமந்து கொண்டு நாடாகமாட முடியாது. தமிழ் தேசம் தற்பாதுகாப்பு யுத்தத்தை மேற்கொண்டது. எனவே போராளிகள் போராடியது ஒன்றும் இல்லாத பிரச்சனைக்காக அல்ல.
இலங்கை அரசியல் என்பது இரண்டு வகை தேசங்களின் நலன் என்ற அடிப்படையில் இருந்தும் ஒடுக்கப்படும் மக்களின் நலனில் இருந்து அணுகும் போக்கு அறவேயில்லை என்பதே யதார்த்தம். இரண்டு தேசங்களினதும், மதச் சிறுபான்மை, மலையக தேசிய இனத்தின் நலன் வெவ்வேறு தளத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்பதை போராடும் சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மலையக, மதச் சிறுபான்மையினரின் பிரச்சனை பற்றி அரசியல் வெளியில் தெளிவில்லை. பண்பாட்டுத் தேசியவாதம், தேசிய இனச் சிக்கல் என்பது தீர்க்கப்பட வேண்டியவையாகும்.
போராட்ம் என்பதே ஆயுதம் மாத்திரம் தான் என்ற சிந்தனைப் போக்கில் மூழ்கியிருப்பதும், வீழ்த்தப்பட்ட பின்னர் ‘‘சர்வதேச” ஆளும் வர்க்கத்தவரிடம் கனவான் அரசியல் (லொபி- lobby work) ஊடாக வெற்றி கொள்ள முடியும் என்று நம்பும் போக்கு வலுவாக வளர்க்கப்பட்டுள்ளது. எந்தப் போராட்டமும் ஆளும் வர்க்கங்களின் தயவில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர், சரணடைந்தோர், இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு, கண்காணிப்பு என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்று நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற சிங்கள பெருந்தேசிய நிகழ்ச்சி நிரல்கள் தொடர்கின்றன.
தமிழ் அரசியல்வாதிகள் தமது பிரதேசங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என புலம்புவதும், ரணில் வடக்கு மாகாண முதலமைச்சர் பற்றிய கருத்துக்களை த.தே.கூ அசட்டை செய்வதும், மாகாணசபை உறுப்பினர்கள் பிரதம அதீதிகளாக கலந்து கொள்வதும், பத்திரிகையில் தமது புகைப்படங்கள் வருவதில் கவனம் செலுத்துடன் கடமை முடிந்து விட்டது என்ற சிந்தனை வடிவமேயாகும்.
குழுமோதல்கள்-
சமூகத்தில் உருவாகும் உபபண்பாடு தன்மைகள் என்பதும், குற்றச் செயல்கள் என்பதும் வெவ்வேறு வகையானதாகும். உபபண்பாட்டினை கையாளும் வகையில் மாநில அரசு அதற்கான திணைக்களங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். அதே போல சமூகத்தில் சிந்தனைப் பண்பாட்டு மாற்றங்களை நோக்கிய செயற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையும், அதனை நெறிப்படுத்த வேண்டிய தேவையும் மக்கள் நிர்வாகத்திற்கு உண்டு.
நீதி நிர்வாகத்திற்கான உரிமையை மாநில அரசிற்கானதாக இருக்கும் அடிப்படையில் செயற்படுவதை ஏனோ தவிர்க்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் நீதிமன்றமே சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நிலையில் இருக்கின்றது. (இங்கு மைய அரசு அதிகாரத்தினை பகிர்வதை விருப்பவில்லை என்பதற்கு ஒரு சான்று) நீதிபதியே முடிவுகளை எடுத்து ஒரு நீதி நிர்வாகத்தை கையில் எடுப்பது ஜனநாயக விரோதமானதாகும். மாநில என்ற நிலையில் நோக்கிய காவல்துறைக்கான அதிகாரம் நோக்கியதாக வடிவமைக்கப்பட வேண்டும். தேசக்கட்டுமானம் என்ற சிந்தனை வடிவத்தினை கொண்டியங்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை.
இதற்கு மாற்றாக ஒரு நீதிமன்றம் நேரிடையாக மக்களை நிர்வகிக்க வருக்கின்றது. பாசீசத் தன்மையையும் நன்மை கருதி அனுமதிப்பதை ஏற்க முடியாது. அது குறுக்கு வழிதான். மக்களுக்கான ஜனநாயக உரிமையை நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும். மாகாண சபையில் கையாலாகத் தனத்தை வெளிப்படையாக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். இவ்வாறு மக்களிடம் கொண்டு செல்லும் போது மக்கள் அரசியல்
ரீதியாக பக்குவப்படுவார்கள்.
முதலீடு
முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் நிர்வாக
கட்டமைப்புக்ளை முதலாளித்துவம் ஏற்படுத்தி வழிகாட்டுகின்றது. நிதி
மூலதன நிறுவனனங்கள் வழிகாட்டு முறை ஐரோப்பிய ஒன்றியம், (EU directives and regulations, WTO agreements, the legal ground-rules for international commerce and for trade
policy) WTO வின் வழிகாட்டல் என்பது உள்கட்டுமானத்தில் மாற்றத்தினை
ஏற்படுத்த வழிகாட்டுகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் முதலாளித்துவம் முற்றுப்
பெறவில்லை. இலங்கையைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ கட்டத்திற்கு தயாராக இருப்பது
ஈழ தேசத்தவர்களே. எந்தப் புரட்சியும் நடைபெற்று முடிந்திட வில்லை.
வடக்கின்
வசந்தம், கிழக்கின் வசந்தம் எற்று பெயர் கூட்டிக் கொண்டு ஆக்கிரமிப்பு
அரசியலை மேற்கொண்டனர். மைத்திரியின் ஆட்சிவரையில் தொடர்ந்தது. இதில்
கம்பரலிய நிதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிதி கச்சேரிகளின்
ஊடாக பகிரப்பட்டது. பிரதேச சபைகள், கோவில்கள், வாசிகசாலைகள், விளையாட்டு
கழகங்கள, பாடசாலைகளுக்கு தேவையின் பொருட்டு திட்டங்கள் முன்வைக்கலாம்.
அவற்றிற்கு சச்சேரிகள் நிதியைப் பங்கீடு செய்யும். கிராம அபிவிருத்திச்
சங்கங்கள் வீதிகளைப் போடுவதற்கு விண்ணப்பிக்க முடியும். வீதி போடுவதற்கான
(விண்ணப்பம்) Tender கோர முடியும். இதில் குறிப்பிட்ட சில விழுக்காடு
அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும். அந்த நிதியில் எவ்வளவு மக்களின் நலனுக்கு பயன்படும் என்பது கேள்விக் குறியே. இதில் இனனொரு விடயம் பேசப்டுகின்றது. அதாவது இவ்வாறு ஒதுக்கினாலும் மக்களுக்கு செல்கின்றது தானே என்பதாகும்.
முதலீடு என்பது முதலில் அந்தப் மாநிலத்தில் உள்ளவர்களின் முயற்சிகளில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் மாநிலம் வரி அறவிடும் உரிமையைக் கொண்டு அதனைப் பயன்படுத்திக் (கூட்டுறவு மூலம்) முதலீடு செய்ய முடியும். இதே போல மத்திய அரசில் இருந்து பெறும் ஒதுக்கீட்டில் கொண்டும் முதலிட முடியும். இங்கு மாநிலம் என்ற நிர்வாகப் கட்டமைப்பிற்கு மாற்றாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் கொடுத்து உதிரி முறைகளில் லங்கா அரசு செய்கின்றது.
மாநில அரசிற்கு அதிகாரம் அற்ற நிலையில் எவரும் முதலிடமாட்டார்கள் அவ்வாறு செய்யவும் முடியாது. முதலீட்டுக்கான உத்தரவாதம் என்பது அற்ற நிலை தான் இலங்கையில் உள்ளது. தரகு முதலாளித்துவத்தை அங்கீகரிக்கும் லங்கா அரசு. தமிழ் தேசிய முதலாளித்துவத்தை ஏற்றுக் கொள்ளப் போதில்லை. (எத்தனை விகிதம் தமிழ் தேசிய முதலாளிகள் இருக்கின்றார்களா என்பது ஆய்விற்குரியது. தேசிய வர்க்கமானது ஈழ தேச விடுதலைக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்ற நிலையில் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.)
இங்கு தான் நீதியரசர் விக்கினேஸ்வரன் கொண்டு வந்த முதலமைச்சர் நிதியம் பற்றி ஆராயப்பட வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் என்று உள்ளது. மேற்கு நாடுகளை மையமாகக் கொண்ட நிதிநிறுவனம் ஒன்றை உருவாக்கியிருக்க முடியும். இதனை எவ்வாறு செய்து முடிக்க முடியும் என்பது பற்றி வல்லுனர்களின் வழிகாட்டலைப் பெற்று அமைத்திட முடியும்.
பொருளாதார வல்லுனர்கள் நிறையே உண்டு. இவர்களின் ஆலோசனையைப்
பெற்றாவது த.தே.கூ முடிவுளை அறிவித்திருக்க முடியும். ஆனால் எவ்வித பொருளாதார அறிதல் இல்லாது அலட்சியம்
செய்தார்கள்.தேசத்தின் கட்டமைப்புக கட்டமைப்பு நிதிக் கட்டமைப்பு என்பது அவசியமானதாகும். சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத் திரட்சி
இராணுவம் சார் உற்பத்தி சேவை என்பது தொடர்கின்றது
1. பௌத்த துறவியின் ஆளுமைக்குள்ளும், அதிகாரத்தினுள் இருக்கின்ற நயினாதீவு படகுச் சேவை மாநிலத்தின் கூட்டுறவு முறைக்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
2. இராணுவம் கடல்தொழில் முயற்சிகளை மாநில கூட்டுறவு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படப் வேண்டும்.
3. இராணுவத்தின் உல்லாச பயணவிடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள், மாநிலத்தின் கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
4. இராணுவம் 1970
நிலைகளுக்குச் சென்று காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் நிலங்களை மாநில அரசிற்கு கொடுக்கப்பட வேண்டும்.
கடல்பிரதேசங்களில் அத்துமீறும் பிறகு கடல்தொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் சிறுதானியங்கள், மரக்கறிவகைகள், வீட்டு தோட்ட அமைப்பு முறை என மக்களே செய்து தமது வாழ்வை பாதுகாத்துக் கொள்வார்கள்.
இவ்வாறு கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக மாநிலத்திற்கு வரி கிடைப்பதுடன் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் ஊடாக நிதிநிறுவனங்களின் தொழில்துறை உள்நுழைவதை தடுக்க முடியும். ஆனால் லங்கா ஆளும் வர்க்கம் இதனை அனுமதிக்கப் போவதில்லை. மாறான அன்னிய நிறுவனங்களுக்கு தானும் அடிமைப்பட்டு மற்றவர்களையும் அடிமை கொள்ளவைக்கின்றது.
காணிப்பிரச்சனையை சொத்துரிமைப் பிரச்சனையாக சுருக்குவதோ அல்லது தேசத்தின் உரிமையை முதலாளிகளின் பிரச்சனையாக பார்ப்பது அபர்த்தமாகும்.
மக்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. மானியம் கேட்கவில்லை, சலுகைகேட்கவில்லை, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிச்சை கேட்கவில்லை. தமது வயல்வெளிகளை, காணிகளை, சேனைப் பயிர்ச்செய்கை (வேடுவர்) காணிகளைக் கேட்கின்றார்கள். சம்பூர் காணிப் பிரச்சனையில் உண்மையை மறுக்கின்றனர். (இதற்கான ஒரு கவனயீர்ப்பாக வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்)
தமது பிழைப்பை உறுதிப்படுத்த வேண்டி நிற்கின்றார்கள். இந்தப் பிரச்சனையில் தமிழ் அரசியல் தலைமை என்பது லங்கா ஆளும் தரப்பு வரையறுக்கும் கோடுகளில் இருந்து செயற்படுகின்றார்கள்.
வேலையில்லாப் பட்டதாரிகள் நடத்திய அடையாளப் போராட்டத்தில் பேசிய முதல்வர் விக்கி எந்தத் துறைகளில் வெற்றிடம் உள்ளது என்று கேட்பதும், தகமை இருப்பவர்களை நியமனம் செய்யுங்கள் என பிரதம செயலாளர் ஊடாக கவனயீர்ப்புக் கடிதத்தினை லங்காவின் அமைச்சருக்கு எழுத முனைவதாகவும் கூறினார். இங்கு ஒரு தமிழ் மக்களுக்கான சபை என்பது வேலை வழங்குவதற்கே மைய அரசை கேட்கவேண்டியுள்ளது. இவ்வாறான ஒரு அமைப்பை தொடர்ந்தும் இயங்க வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. சும்மா பதவிகளை வைத்துக் கொண்டிருப்பதை விட இராஜினாமா செய்து விட்டு எதிர்ப்பைக் காட்டலாமே?
தமிழகம் – ஈழ நட்புறவு
ஈழத்தின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை 1. மக்கள் 2. சர்வதேச அமைப்புகள் 3. ஐநா என்ற தளத்தில் விரிந்திருந்தாலும் பிரதானமாக ஆதரவுச் சக்திகள் மற்றைய நாடுகளில் வாழும் தமிழர்களாகும்.
சரியோ பிழையோ தமிழக மக்கள்- சக்திகள் தங்களின் அரசியல் முதிர்ச்சிக் கேற்ப குரல் கொடுப்பது அவர்களின் தெரிவும் கடமையும் ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை சிதைப்பதில் பற்பல கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. குறிப்பாக சிங்கள – தமிழ மேட்டுக்குடிகள் நடத்தி முடித்த
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா கூட கருத்துருவாக்கத்திற்கு உட்பட்டதே. இவ்வகை கருத்துருவாக்கத்தை முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் மேட்டுக்குடிகள் (அரைநிலமானிய சிந்தனையாளர்கள்) சுயநிர்ணயத்திற்கு எதிராக கருத்துக்களை உருவாக்கி வருகின்றார்கள். சுயநிர்ணயத்திற்கான போராட்டம் இனவாதம், குறுந்தேசியவாதம், பிரிவினை வாதம் என்றும், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மாத்திரம் அல்ல அமைப்புவடிவம், சமூகச் சிந்தனைச் சிதைவு என்று உருவாக்குவதால் சமூகத்தில் உபகலாச்சாரத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. இதன் வெளிப்பாடுகள் தான் குழுமோதல்களாகும். இது சமூகத்தில் உள்ள பிரச்சனைகளின் வெளிப்பாடுகளாகும்.
முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் அனைத்துவகை போராட்டங்களையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டத்தை வைத்தே அடக்கிக் கொள்ள முடியும். சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது சேடமிழுத்துக் கொண்டிருக்கையில் புறவுலத்தில் உள்ள சிறிய எதிர்ப்பும் அவசியமே.
இந்த வகையில் புலம்பெயர் சமூகம், தமிழக தமிழர்கள் போராடுவது ஏற்றுக் கொள்ளப் படவேண்டியதே. இங்கு வர்க்கச் சிந்தனை காரணமாக வெவ்வேறான அடிப்படையில் போராடுவதன் ஊடாக குறைபாடுகள் இருப்பது விமர்சன ரீதியா அணுகப்பட வேண்டியது சரியானதாகும்.
இனப்படுகொலை- இனஅழிப்பு பற்றி-
இங்கு சிங்கள மக்களிடம் இனவாதத்தினை ஊட்டி இனப்பிரச்சனைக்கான தீர்வுகளை குழப்ப முடியும் என்று தமிழ் மக்களிடம் கூறும் கூற்று என்பது அரசியல் ரீதியாக முதிர்ச்சியற்ற போக்கு என்றுதான் கூற வேண்டும். கடந்த ஒரு நூற்றாண்டின் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் கூட தொடர்ச்சிய பெருந்தேசியத்தின் தலைமையே எப்பொழுதும் இருந்துள்ளது. இதனை அவதானித்தில் கொள்ளாது அரசியல் நிலைப்பாடு எடுப்பது கோளாறுடையதே.
இங்கு நாட்டின் பல்லினத்தன்மை உறுதிப்படுத்தவேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்தில் .
pluralisic character- என ஆங்கிலத்திலும் உள்ளது. . pluralisic
character- ethnic இவை இரண்டும் வெவ்வேறானவை பன்முக தன்மை கொண்டதை தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் என்று இரண்டை நிலைப்பாட்டை இரண்டும் ஒன்று என்று வாதிடும் அபர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது. இந்தக் கபடம் ஏன்? ஆக வரைவில் கூட கபடம் இருப்பதை புரிந்து கொள்ள சட்டம் படித்த மோதாவியாக இருக்க வேண்டியதில்லை. (இந்த விடயத்தில் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. டக்கிளசின் கருத்து சரியானதே) இந்த அரசியல் யாப்பில் பெருந்தேசியவாதம் நிலைத்து நிற்பதையும் சிங்கள பெருந்தேசியவாதத்தினை உறுதி செய்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை தேசியம் என்றும் ஒன்றை ஐக்கியத்தின் பெயரால் நிறுத்தப்படுகின்றது. இந்த வகை இலங்கை (சிங்கள பௌத்த நாட்டுக்குள்) தேசியம் என்றவகையில் பிரஜைகளுக்கான உரிமை (நிறுவனமயப்பட்ட உரிமை), நிவிநெகும – கிராம பஞ்சாயத்து என முன்மொழியப்படுகின்றன.
நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை என்ற அடிப்படையில் கூட்டாட்சியின் நம்பிக்கை ஏற்படுத்துவதும், அனைத்து மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புதல், சட்ட நிர்வாகத்தில், சீர்திருத்தங்களை அரசியில் சாசனத்தில் மாற்றங்களை கொண்டு வரவும், தென்னாபிரிக்காவைப் போன்று பொறுப்புக் கூறல், உண்மையைக் கட்டறிதல் பொறிமுறைகளை ஏற்படுத்தப் போவதாகவும் நாடாளுமன்றத்தில் ரணில் தெரிவித்தார். மேலும் குரோதங்களை வித்திடும் பிரச்சாரங்கள் பலவந்தமாக காணாமல் போகுதல் என்பவற்றை தடுக்க பொறிமுறை ஏற்படுத்த போவதாக மேலும் தெரிவித்தார். இங்கு இவர்கள் இனப்பிரச்சனைக்கான உரிமை என்பது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மை பிரஜைகள் என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகை வரைபுதான் பன்முகத் தன்மை என்ற வரையறை கொடுக்கின்றது. வடமாகாண சபையை ரணில் புறக்கணிப்பதும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது.
ஈழ தேசத்தின் இறைமை அதனை மறுப்பது என்ற போக்கில் அமைந்த அரசியல் தான் இன்றைய நிலை. இதில் ஈழ தேசத்திற்கான எவ்வித சுவாசக் காற்றையும் விடக்கூடாது என்பதும் அதனை கொண்டு செல்வது சுமந்திரன்- சம்பந்தர் கூட்டு. தரகு முதலாளித்துவம் எப்பவும் தேசத்திற்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை.
சர்வதேச சட்ட நுணுக்கத்தில் இருந்து ஈழ தேசத்தைப் பார்க்க முடியாது. சர்வதேச சட்டநுணுக்கத்தில் இருந்து எழுத்தது அல்ல ஈழத்தின் இறைமைக்கான போராட்டம். தன் சொந்த நீதியை கோருவதற்கு உரிமை உடையதா இல்லை? நாம் ஏன் அடக்கப்பட்டோம், எதற்காக போராடினோம்? ஏன் தற்காப்பு யுத்தம் நடைபெற்றது என்பதில் இருந்து தான் அணுகப்பட வேண்டும். மாறாக வென்றவர்களின் எகத்தாளத்தின் மையத்தில் இருந்து அல்ல.
தமிழ் மக்கள் சிங்கள தேசியச் சிந்தனை ஊட்டுவதாக கூறப்படுகின்றது. இது அனகாரிக தர்மபாலவின் புத்தெழுச்சியுடன் வீரியம் பெறுகின்றது. ஆனால் பௌத்த – சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து வந்தது பக்தி இலக்கிய காலத்திற்கு பின்னராகும். தமிழக- இலங்கை உறவுகள் இருந்த போது எதிர்ப்புணர்வும் இருந்து வந்துள்ளது. பக்தி இலக்கியத்தின் பின்னர் மாகோணின் பின்னரான சிங்கள- பௌத்த கருத்துருவாக்கம் என்பதும் பின்னர் அனாகரிக தர்மபாலாவின் கருத்துருவாக்கம் என்பது வளர்ந்துள்ளது. தர்மபாலாவிற்கு முன்னை எதிர்ப்பு வடிவம் என்பது தேசியஇனப் பிரச்சனையாக வரையறுத்திட முடியாது. அது மன்னராட்சிக்கு உட்பட்டது தேசிய இனப் போராட்டமாவதில்லை. ஏனெனில் அங்கு மன்னர் எவ்வழியோ அவ்வாறே குடிகளாகும். ஆனால் தேசிய இனப்பிரச்சனை தேசங்களின்ஆட்சியதிகாரப் பிரச்சனையாகும்.
இந்த சிந்தனை மரபை உடைக்காது அதன் மேல் கட்டப்பட்ட இடதுசாரியம் என்பது பேரினவாத்தினை பாதுகாப்பது மாத்திரம் அல்ல, அனைத்து தேசிய இனங்களையும் பௌத்த மேலாதிக்கத்தினை ஏற்றுக் கொள்ள கொடுக்கும் அழுத்தமாகும். இதனை மறுத்துரைப்பவர்களை இனவாதி என்று வரையறுப்பது இலங்கைச் சமூகப் பொருளாதாரா உறவினை பொறுப்பாக ஆராயவில்லை என்பதைத் தான் காட்டுகின்றது.
இறுதியாக இவைகள் வெறும் (முதலாளித்துவ) ஜனநாயகக் கோரிக்கை என மட்டுப்படுத்த முடியாது. இந்த அடிப்படை உரிமையைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயராக இல்லை. இதனை நடைமுறை ரீதியாக அம்பலப்படுத்த வேண்டியது தமிழர் தரப்பின் கடமையாகும். இங்கு அரசியல்வாதிகள், அமைப்புக்கள், தனிநபர்கள் பிரச்சனையில் ஆழத்தை அறிந்து அதற்காக செயலாற்ற வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்திய, சீன, அமெரிக்க, லங்கா ஆட்சியாளர்களின் ஆட்டத்திற்கு ஆடும் ஆட்டம் தேவையற்றது. மாறாக சொந்த மக்களின் நலன்களில் இருந்து தேவையை நிறைவேற்ற முயற்சிப்பதே அவசியமானதாகும்.
‘‘அரசியலானது மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் வரை எமது மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உரிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உள்நாட்டு வெளிநாட்டு எமது உறவுகளின் உதவியுடன் முன்னேறுவது தான் சிறந்தது. (முதல்வர் விக்கி 20.09.15) என அறிக்கை விடுவது தரகுமுதலாளித்துவ நலன் சார்ந்த இயங்கும் த.தே.கூ அரசியலை அம்பலப்படுத்துவதாகும். தரகு முதலாளித்துவத்தின் பித்தலாட்ட அரசியல் என்பதை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.
(மாகாணசபைக் காலத்தில் இனவழிப்புத் தீர்மானம், சர்வதேச நீதி விசாரணை, முதலமைச்சர் நிதியம் என்பதை வைத்தே ரணில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரனை வைத்து எதிர் அரசியலை செய்தார்.)
16.01.2016 திருத்தி பதியப்பட்டது. மீளவும் 14.01.21 எழுத்துப் பிழை, வசனப் பிழை மறுவாசிப்பு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment