யாருக்கான யாப்பு வரைவு?
யாருக்கான யாப்பு வரைவு?
-------------
யாப்பு எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பது நானும் நீயும் சமம் என்பதே அடிப்படையான அளவீடாகும். இலங்கையில் இரண்டு தேசங்கள் தன்னாட்சி கொண்டதாக அமையக் கூடியதாக வரலாறெங்கும் இருந்திருக்கின்றது. அந்த ஆற்றல்வளம் கொண்ட தேசங்கள் 1833 இல் இணைக்கப்பட்டது. இந்த அடிப்படைப் புரிதலைக் கொள்ளாத எந்த வரைவும், எந்தத் தீர்வும் பயனளிக்கப் போவதில்லை.
பெயர் முக்கியமல்ல என்று சுயநிர்ணய உரிமையை நீர்த்து போக வைக்கவும் லங்கா என்ற தேசத்தினுள் மற்றைய எண்கணக்கில் சிறுபான்மையினராக பிரஜைகளுக்காக உரிமையுடன் நின்றுவிடும் அரசியல் போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் தீர்வு என்பது வெறும் சட்டவரைவினுள் அடக்கவோ, பொதுப்புத்தி அரசியலானது பௌத்த பெருந்தேசிய அரசியலுக்கு முண்டு கொடுத்துச் செல்வது தான் வரைவில் அறியமுடிகின்றது.
1.கடந்த 35 வருட ஆயுதப் போராட்டம் சுயநிர்ணயத்திற்கானது.
2. அதிகாரப் பகிர்வு- இது மானிலங்களைக் கொண்டதாக (தமிழக மாதிரிப்படிவம்)
3. தற்பொழுது எழுதப்படுவது பிரசைகளுக்கான உரிமையாகும்
இந்த வித்தியாசங்களை விளங்கிக் கொள்வதே யாப்பினை விளங்கிக் கொள்வதற்கான அடிப்படையாகும்.
இங்கு தமிழ் மக்கள் முன்னால் உள்ள தெரிவு என்ன?
சிங்கள தேசமும், அதன் ஆதரவாளர்களும் முன்வைக்கும் அரசியல் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
-யாப்பு வரைவின் முன்னரான கருத்துக்களை அறிந்து கொள்வது
-சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை விளங்கிக்
”ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.”” (தை 16 இல் எழுதியஎனது கட்டுரையில் )
திம்புக்கு மாற்றாக நாட்டின் பன்மைத்துவம் (Pluralisic character சுமந்திரனின் வாதம்) மற்றையது பல்லினத்தன்மை (ethnic) உறுதிப்படுத்தவேண்டும் என்று தமிழிலும், ஆங்கிலத்தில் pluralisic character (மேற்கில் வேலைவாய்புத் தொடர்பான வழிகாட்டுமுறை அவதானிக்கலாம்) - என ஆங்கிலத்திலும் உள்ளது. Pluralisic character- ethnic இவை இரண்டும் வெவ்வேறானவை பன்முக தன்மை கொண்டதை தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் என்று இரண்டை நிலைப்பாட்டை இரண்டும் ஒன்று என்று வாதிடும் அபர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது. multi ethnic (அரசசாசன வடிவத்தில் உள்ளடக்குவது) என்றவாதத்தை டக்கிளஸ் முன்வைக்க pluralisic character என சுமந்திரன் வாதித்தது என்பது வெறும் தற்செயலானது என்று எடுத்துவிட முடியாது. (சந்திரிக்காவின் கூற்றையும் கவனத்தில் கொள்க)
இந்தக் கபடம் ஏன்? ஆக வரைவில் கூட கபடம் இருப்பதை புரிந்து கொள்ள சட்டம் படித்த மோதாவியாக இருக்க வேண்டியதில்லை. (இந்த விடயத்தில் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. டக்கிளசின் கருத்து சுமந்திரனின் கருத்தை விட மாறியிருக்கின்றதை கவனிக்க முடியும். )
யாப்பு முன்வரைவிற்கு முன்னரான கருத்துருவாக்கத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று அகங்காரத்துடன் சுமந்திரன் எவ்வாறு ஊடகங்களுக்கும், பொதுவெளியிடும் அகங்காரமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்பதை கவனித்தல் வேண்டும்.
இந்த அரசியல் யாப்பில் பெருந்தேசியவாதம் நிலைத்து நிற்பதையும் சிங்கள பெருந்தேசியவாதத்தினை உறுதி செய்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை தேசியம் என்றும் ஒன்றை ஐக்கியத்தின் பெயரால் நிறுத்தப்படுகின்றது. இந்த வகை இலங்கை (சிங்கள பௌத்த நாட்டுக்குள்) தேசியம் என்றவகையில் பிரஜைகளுக்கான உரிமை ( நிறுவனமயப்பட்ட உரிமை), சமவுரிமை (முன்னிலை சோசலிசக்கட்சி), நிவிநெகும - கிராம பஞ்சாயத்து என முன்மொழியப்படுகின்றன. ‘‘அதிகாரப் பகிர்வுக் கோட்பாடு‘‘ (ப49) என்ற தலைப்பில் சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகள் முன்வைத்த பிரசைகளுக்கான உரிமை என்ற அமைப்புவடிவத்தை விட்டு எவ்வகையிலும் உயர்ந்த சனநாயகக் கோட்பாடு கொண்டதாக இல்லை. சிங்கள தேசத்தின் கீழ் உள்ள நிருவாக அலகின் கீழ்தான் தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்காகும்.
ஒரு நாடு என்ற அளவில் பிரசைகள் அனைவருக்கும் ஒரே அளவிலான உரிமை. இது கல்வி (நீட்), அரசியல் உரிமையை இனமத குலம் அற்று சிந்திப்போம் என்று இன்றைய இந்துத்துவா- இந்திய விஸ்தரிப்புவாதம் முன்னெடுக்கின்றது. இதனைப் பொருத்திப் பார்ப்பது முக்கியமாகும். பன்முகத்தன்மையாக கொள்ள முடியாது - பல்லின நாடு என்பது இந்தியாவில் தனித்துவம் அங்கீகரிக்க வேண்டும்.
‘‘நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை என்ற அடிப்படையில் கூட்டாட்சியின் நம்பிக்கை ஏற்படுத்துவதும், அனைத்து மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புதல், சட்ட நிர்வாகத்தில், சீர்திருத்தங்களை அரசியல் சாசனத்தில் மாற்றங்களை கொண்டு வரவும், தென்னாபிரிக்காவைப் போன்று பொறுப்புக் கூறல், உண்மையைக் கட்டறிதல் பொறிமுறைகளை ஏற்படுத்தப் போவதாகவும் நாடாளுமன்றத்தில் ரணில் தெரிவித்தார். மேலும் குரோதங்களை வித்திடும் பிரச்சாரங்கள் பலவந்தமாக காணாலம் போகுதல் என்பவற்றை தடுப்படும் என்று உள்ள பொறிமுறை ஏற்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்தார். இங்கு இவர்கள் இனப்பிரச்சனைக்கான உரிமை என்பது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மை பிரஜைகள் என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகை வரைபுதான் பன்முகத் தன்மை என்ற வரையறை கொடுக்கின்றது. வடமாகாண சபையை ரணில் புறக்கணித்ததை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது.
மைய அரசின் கீழ் உள்ள திணைக்களங்களின் ஊழியர்கள், கிராமசபை, கிராம ஊழியர்கள், விதானைகள், அரசாங்க அதிபர்கள் கட்டுப்பட்டுள்ளனர். மாகாண சபைக்கு பதில் கொடுக்க, கட்டுப்படவோ தேவையில்லை. இது நிர்வாகச் சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றது.
விக்கினேஸ்வன் அவர்களுக்கு அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதல் முழுமையாக இருக்கும் என்று நம்பவில்லை. இதேவேளை கிழக்குமாகாணத்தைப் போல அபிவிருத்தி அரசியல் செய்ய முடியும் என்று நம்புவது அறியாமை. அது முழுமையான இணக்க- அபிவிருத்தி அரசியல். அ) இனவழிப்பு ஆ) சர்வதேச விசாரணை என்ற பிரேரனையின் பின்னரான முறுகல் அரசியல். இதற்குப் பின்னர் மாகாண சபை அபிவிருத்தி செய்து நல்ல பெயர் வாக்க சிங்கள அரசு விரும்பும் என்பதையோ, அரச கட்டமைப்பு வளர்வதையே சிங்கள அரசு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த நிலையில் தான் விக்கினேஸ்வரன், மாகாண சபைமீதான தாக்குதல் நடக்கின்றது. கீழ் நிலை அரச நிர்வாகத்தைக் கொண்டு எவ்வாறு ஆக்கிரமிப்பு அரசியல் நடைபெறுகின்றது என்பதை கிழக்கு மாகாணத்தில் கட்புலனுக்கு உட்பட்டவையாக அறிய முடியும். இது வடக்கில் நிர்வாகம் நடத்தத் தெரியாத மாகாண சபையாகத் தெரியும்.
ஈழ தேசத்தின் இறைமை அதனை மறுப்பது என்ற போக்கில் அமைந்த அரசியல் தான் இன்றைய நிலை. இதில் ஈழ தேசத்திற்கான எவ்வித சுவாசக் காற்றையும் விடக்கூடாது என்பதும் அதனை கொண்டு செல்வது சுமி- சாம் கூட்டு.
சர்வதேச சட்ட நுணுக்கத்தில் இருந்து ஈழ தேசத்தைப் பார்க்க முடியாது. சர்வதேச சட்டநுணுக்கத்தில் இருந்து எழுத்தது அல்ல ஈழத்தின் இறைமைக்கான போராட்டம். தன் சொந்த நீதியை கோருவதற்கு உரிமை உடையதா இல்லை? நாம் ஏன் அடக்கப்பட்டோம், எதற்காக போராடினோம்? ஏன் தற்காப்பு யுத்தம் நடைபெற்றது என்பதில் இருந்து தான் அணுகப்பட வேண்டும்.
இந்திய மாதிரி
(1). Union List
(2 ) State List
(3). Concurrent List இவ்வாறுதான் இந்தியாவின் யாப்பு வகுக்கப்பட்டடுள்ளது. மோடி வந்ததன் பின்னர் மைய ஆட்சியானது மானிலப் பட்டியலில் உள்ளவற்றில் தலையிட்டுக் கொள்கின்றது. இது நீற், ஏறுதழுவல், நில உரிமை பற்றியதாகும். இதுதான் கதிராமங்களம், நெடுவாசல், மீத்தேன் வாயு, வரி நிர்ணய உரிமை
போன்ற விடயங்களில் தமிழக உரிமை பறிபோய்க்கொண்டிருக்கின்றது. மானில அரசின் நடவடிக்கைகளில் ஆளுனர் தலையிடுவதையும் தற்காலத்தில் அவதானிக்க முடியும். ஆளுனர் பதவி என்பது சம்பிரதாயப்பதவியாகும். இலங்கையில் இப்போதே ஆளுனர் தலையிடுவதையும் கவனத்தில் கொள்ளலாம்.
கிராமிய ராஜ் என்ற சட்டவரைவின் ஊடாக மத்திய அரசே மானிலங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான நிதியைக் கொடுக்கின்றது. இது ராஜீவ் காந்தியினால் கொண்டு வரப்பட்டதாகும். இந்தச் சட்டத்தின் ஊடாக மானிலத்தின் உரிமையில் தலையிடுகின்றது. ஏற்கனவே கல்வியானது மானிலப்பட்டியில் இருந்த வேளையில் அவசரகால நிலமையில் இந்திராவினால் மத்திய பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இந்திய நாட்டில் இருக்கின்ற தேசங்கள், தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவை அல்ல. மாறாக அதிகாரப் பகிர்வைக் கொண்டதாக இருக்கின்றது. அதிகாரப் பகிர்வைக் கொண்ட போதிலும் மத்திய அரசு மானில உரிமையில் தலையிடுகின்றது. இந்திய யாப்பு வடிவம் என்பது இலங்கையின் யாப்பு வடிவத்தை விட உயர்ந்த - வளர்ச்சியடைந்ததாக இருக்கின்றது. எனினும் மத்திய அரசு மானில உரிமையில் தலையிடுகின்றது. இன்றைய காலத்தில் அதிகாரப் பகிர்விற்குக் கூட அச்சுறுத்தல் உள்ளதை இந்திய அனுபவம் காட்டுகின்றது.
ஒற்றையாட்சி முறை
இந்த யாப்பின் முன்வரையில் தமிழ் தேசத்தின் இருப்பை தெளிவாகவே மறுக்கின்றது. சுதந்திரமான தேசங்களின் இணைவு என்பது கணவன் மனைவிக்கு ஒப்பாகும். சிங்கள பௌத்த பேரினவாதம். இது நுட்பமாகவே யாப்பை ஒன்றையாட்சி என வரையறுத்துக் கொள்கின்றது.
“யுனிற்ரெறி ஸ்ரேற் ” (Unitary state) எனும் ஆங்கிலப் பதத்தின் பண்டைய வரைவிலக்கணம் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வட அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்திலும் தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லக்கூடியதாயுள்ளது. எனவே, ஆங்கிலப் பதமான “யுனிற்ரறி ஸ்ரேட்” (Unitary state” இலங்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கும். பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்பதை சிங்களப் பதமான ‘‘ஏகிய இராஜ்ஜிய‘‘ நன்று விபரிக்கப்படுகிறது. இது தமிழ் மொழியில் ‘ஒருமித்த நாடு‘ என்பதற்கு சமனாகும். ‘‘ (page1-2)
சமஸ்ரி
கொடி
மாகாணத்திற்கு அதிகாரப் பகிர்வு
‘‘அரசகாணி அனைத்தும் குடியரசுக்கு உரித்தாதல் வேண்டும். ‘ அரசகாணி என்பது அரசியலமைப்பு ஆரம்பிப்பதற்கு உடனடுத்து இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கு உரித்தாக்கப்பட்ட இலங்கையிலுங்கள அனைத்துக் காணிகளுமாகும்.‘‘ (ப 19-20)
நிலப்பரப்பில் உள்ள வளங்கள் அனைத்தும் மத்திய அரசிற்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஏற்கனவே வளத்தின் மீதான உரிமைக்காக போராடும் மக்களின் உரிமை மீறப்படுகின்றது. இங்கு மக்கள் காணியை விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் தலைமைகளின் ஒப்புதலுடன் பறிக்கப்படுகின்றது. நிலப்பரப்பு என்பது தனியே சொத்தல்ல அந்தந்த தேசத்தின் உற்பத்திச் சாதனமாகும் (mode of prod. middle) . உற்பத்திச் சாதனத்தின் உரிமையை மறுத்துக் கொண்டு தேசிய இனத்திற்கான உரிமையை கொடுப்பது என்பது வெறும் பித்தலாட்டமே.
நிலவுரிமை என்பது வாழ்வுரிமைக்கு முக்கியமானது, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது. வாழ்வுரிமையை மறுத்துக் கொள்ளும் நிலையில் இறைமையானது மறுக்கப்படுகின்றது. நிலத்தினையும், வளங்களையும் சிங்கள தேசத்தின் கீழ் வைத்துக் கொண்டு யாப்பை ஏற்றுக் கொள் என்பது மாத்திரம் அல்ல நம்மை ஏக்க இராச்சியத்தை சுற்றி நம்மை ஏமாற்றுகின்றது.
“இலங்கையிலிருந்து பிரிந்து தனியாக்குவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது‘‘ (ப 8) என்பது தேசத்தின் இறைமையை அங்கீகரிக்க மறுக்கின்றதுடன் வலுக்கட்டாயமாக இணைத்து வைத்திருப்பதே சனநாயக மீறல் தான். 6வது சட்டத்தை தொடர்ந்தும் இறுக்கிக் கொள்வதற்கு கொடுக்கப்படும் சான்றாகவே இந்த யாப்பு வரைபு உள்ளது. இந்த யாப்பு வரைவில் அடிமைச் சாசனத்தை நிரந்தரமாக அனுமதிக்கின்றது.
சுயநிர்ணயம் என்பதே குடும்ப வாழ்விற்கு ஒப்பானதாகும். ஆனால் இங்கு மனமொத்த வாழ்க்கை இல்லாத இடத்தில் கூட கட்டாயமாக வாழும் வாழ்க்கையை வலியுறுத்துகின்றது.
பின்தங்கி சனநாயக விழுமியங்களின் பின்னால் செல்லும்படி ஆட்சியாளர்கள், ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் பாடம் கற்பிற்கின்றார்கள். ஆனால் நிறுவனமயப்பட்ட சனநாயக உலகில் நாளாந்தம் நிறுவனங்களில் (intitutions) சனநாயகப்படுத்தல் நடைபெற்றுக் கொண்டே செல்கின்றது. சனநாயகம் வளர்த்தெடுக்கப்படுவதாகவே இன்று கருத்ப்படுகின்றது. முன்னைய தவறுகளில் இருந்து திரித்திக் கொண்டு முன்னேறும் வழிமுறைகள், பரீட்சாத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறாக வளர்ச்சி, கேள்வி, சுயபரிசோதனை ஊடாக தன்னை வளர்த்துக் கொண்டு செல்கின்றது.
இதற்கெனவே கலாசாலைகலை ஆய்வுக்கென்று நிதி கூட ஒதுக்கப்படுகின்றது. முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாட்டில்
1.பிரச்சனைக்கான மூலக் காரணம் (root of the cause) (சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்புப் பற்றிய போதிய விளக்கம் இன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)
2. அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறை
3. எந்தச் பொருளுற்பத்தி முறையில் வாழ்ந்து, சமூகம் கடந்து கொண்டிருக்கின்றது.
முதலாளித்துவ பொருளுற்பத்தில் வாழ்கின்ற போது சர்வதேச ரீதியான அனுபவங்கள், வளர்ச்சியடைந்த சனநாயக பரிமாணங்கள், சமூகத்தவர்களுக்கான அங்கீகாரம் என்ற உயர்ந்த சனநாயக வழிமுறைகளை முன்வைக்க முடியும் என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதன் ஊடாக அடுத்த கட்டத்தை நகர்த்திக் கொள்ள முடியும்.
இங்கு நான் மற்றவரை எனக்கு சமமானவராக நடத்தமாட்டேன் என்ற முன்முடிவு எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகப் போவதில்லை.
இதே வேளை வளர்ந்து வருகின்ற சனநாயக சமூக அமைப்பில் குறுக்கி வெட்டுதல், இசைவாக்கம் செய்யும் கருத்துருவாக்கம். இவைகள் காலாவதியாகிப் போனதன் விழைவே
60 ஆண்டு கால தமிழர்களின் போராட்ட வரலாறு. இந்த வரலாற்றைக் கடந்து எந்த நிலையையும் கடந்து விடவோ, புதிதாக படைத்துவிடவோ முடியாது.
அரசியல் அமைப்பு எழுதுகின்ற போது தெளிவாக - வரையறை கொடுக்கப்பட வேண்டியது அடிப்படையானது. அரசியலமைப்பில் சொற்சிலம்பத்திற்கு எவ்வித இடமும் இல்லை. ஆனால் சொற்கள் தான் மக்களை பிளவுபடுத்துகின்றது என மலினமாக கடந்து விட முடியாது.
தமிழர் தேசம் சமவுரிமை அற்று - ஆக்கிரமிக்கப்பட்ட நிலையும்
சிங்கள பெருந்தேசியம் ஆட்சியதிகாரம் (world view and social relation) கொண்டதாகவும், தான் வைத்திருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டு மற்றைய தேசிய இனங்கனை தனக்கு கீழ் இரு என்றே சட்டவரைவை உருவாக்கிக் கொள்கின்றது. இது அடிப்படையில் பிறப்புரிமையை மீறுவதாகும்.
வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை [21 புரட்டாசி 2017] பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவைகள் விவாதிக்க தகுதி பெற்றவர்கள் தொழில் சார் சட்டவாளர்கள் என்ற நிலையில் சுருக்கிவிட்டது. சிங்கள அரசின் சி்ந்தனையில் கீழ் செயற்படும் விரல்விட்டு எண்ணக் கூடி கருத்தாளர்களைக் கொண்டு வரையப்பட்டதாகும்.
இரண்டு சிந்தனைப் போக்கை கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. ஜெயம்பதியின் தாயார் நாடு பிரித்தலை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற உணர்வை முன்னுதாரணமாக முன்னிறுத்துவது.
2. என்.எம். பெரேராவின் மகள் இவ்வாறான அழிவைச் சந்திக்க தமிழ் சமூகம் இன்னொருமுறை தயாராக இருக்கின்றதா என்று வினவியுள்ளார்.
3. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை முறை
இவற்றிற்கு அப்பால உயர்ந்த ஜனநாயகம் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலையில் வளரும் சமூகம் இருக்கின்றது.
இந்தச் சட்டவாளர்கள் வியாக்கியானம் செய்வதே பொதுவுண்மையாக நிலைநிறுத்தப்படுகின்றது. தாம் செய்யும் வாதங்களை அதட்டல் ஊடாக திணிக்கின்றனர். இவ்வாறாக விடயங்களை திணிப்பதும் சனநாயக மீறலாகும். சந்தைப் பொருளாதாரம் முழுமையாக வளர்ச்சியடைவில்லை. தேசிய இனங்கள் தமது சந்தைகளை உறுதி செய்வதும், மூலதனம் ஆதிக்கத்திலும் சுரண்டலுக்கும் உள்ளாகின்ற வேளையில் சுய சந்தையை உறுதிப்படுத் வேண்டிய அவசியம் இருக்கின்றது. தேசிய இனங்களின் இருப்பையும், ஆட்சியதிகாரத்தையும் மறுக்கின்றது.
மூலதனத்திற்காகவும், தனது மிகை உற்பத்தி(industralization, globalization, privatization, and selling state-owned institutions to (privatized) state departments) பொருளுக்கான சந்தைக்காகவும் நாடுகளையும், நாட்டரசுகளையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. தேசிய இனங்களையும், தேசங்களையும் ஆக்கிரமிக்கின்ற நிகழ்ச்சிப் போக்கில் சுயசந்தையை உறுதிசெய்வதுடன், அந்தந்த நாடுகளில் போராட வேண்டியிருக்கின்றது. இதன் ஊடாகவே பெரும் எதிரியை எதிர்க் கொள்ள முடியும். இதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராப் போராட வேண்டுமென்பது அடிப்படையாகும். தமிழ் மக்கள் தமது வாழ்வுரிமைக்காக போராட வேண்டியிருக்கின்றது. இது பற்றிய தீர்க்கதரிசனமான பார்வை இருக்க வேண்டும்.
****சிங்கள தேசம் யாப்பை சனநாயக வழியாக வரைவதாக உலகத்திற்கு காட்டுகின்றது. ஆனால் நடைமுறையில் சிங்கள தேசத்தின் ஆட்சியதிகாரம் எவ்வாறு உள்ளதை என்பதை கவனத்தில் கொள்ளாது அது வரையும் யாப்பை விளங்கிவிட முடியாது.
****மொழியதிகாரம் இருப்பதாக கூறிக் கொள்கின்ற போதிலும் நடைமுறையில் எத்தனை இடையூறுகளையும் தனித்தன்மையையும் கொண்ட செயற்பாடுகளுக்கு பற்றாக் குறை இருந்து கொண்டே இருக்கின்றது. மொழித் தன்னாட்சியை கொண்டதாக இருப்பதால் மொழியை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மொழியுரிமை என்பது ஏதோ ஒப்புக்கு வரையறுத்து விடுவதல்ல. அதுவே உயிர் நாடியாகும். தமிழ் தேசிய இனம் தொன்மை கொண்டதாகவும், மொழியை அன்றாட வாழ்வியலில் வளர்த்தும், பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கப்பட வேண்டும். சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டிருக்கும் தமிழ் பேசும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக பிறப்புரிமையை நிலைநிறுத்துவதாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேற்கு கரையோர தமிழர்களின் பிறப்புரிமை திட்டமிட்டு பறிக்கப்படுகின்றது. வாய்பாட்டு இடதுசாரிகள்- சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று வகுப்பெடுக்க முடியும். ஆனால் அது
**** சிங்கள தேசம் தனது இராணுவ இயந்திரத்தின் ஊடாக தமிழ் தேசத்தின் உற்பத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்றது. சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழ் தேசத்தின் மக்கள் நிலவுரிமை இழந்தது என்பதே வெறும் வாதம் அல்ல. மாறாக மக்களுக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். சிங்கள ஆக்கிரமிப்புகள் பிறப்புரிமையை இழந்த தமிழ் தேசத்தின் குடிகளாகும். நிலம் என்பது தனியே சொத்துடமை மாத்திரம் அல்ல. மாறாக அன்றாடச் சீவியத்தினை (வீட்டுத் தோட்டம், சிறுபயிர்ச்செய்கை) உறுதிப்படுத்தும் (Production middle ) உற்பத்திச் சாதனமாகும். தமது வளத்தின் ஊடாக வாழ்வியல் சிக்களை போக்கும் முறையை சிதைக்கின்றது என்பதில் இருந்து அணுகப்பட வேண்டும்.
சிங்களக் குடியேற்றம் கடல்வளத்தை கைப்பற்றிக் கொள்கின்றது, தீவுகளை படையின் கட்டுபாட்டினுள் கொண்டு வந்து அவர்களே அது சார்ந்த பலனை அனுபவித்துக் கொள்கின்றது. தமிழ் தேசத்தின் பாராம்பரிய நிலப்பரப்பு சிங்கள பெயர் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. குடிசனப் பரம்பலை திட்டமிட்டு மாற்றுகின்றது.
‘‘அரசியலானது மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் வரை எமது மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உரிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உள்நாட்டு வெளிநாட்டு எமது உறவுகளின் உதவியுடன் முன்னேறுவது தான் சிறந்தது. (முதல்வர் விக்கி 20.09.15) என அறிக்கை விடுவது அரசின், த.தே.கூ அரசியலை அம்பலப்படுத்துகின்றது. தமிழ் தேசம் தனக்கான மூலதனத் திரட்சியை வளர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடு என்று விளங்கிக் கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள தேசக் கட்டமைப்பு திட்டமிட்டு மறுக்கின்றது. சிங்கள ஆட்சியமைப்பின் கீழ் மூலதனத்தின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்பது மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருக்க முடியும்.
****தமிழ் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது திட்டமிட்டு மறுக்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாகவே முதலமைச்சர் நிதியத்தினை ஏற்படுத்துவதற்கு சிங்கள தேசம் விருப்பாததை கவனத்தில் கொள்ளல் வேண்டும். தேசத்தின் இருப்பிற்கு அவசியமானது மூலதனத்தின் செறிவு பொருளாதார வளர்ச்சியின் ஊடாக வளர்வதாகும். தமிழ் தேசத்தின் வளர்ச்சியை சிங்கள தேசத்துடன் ஒப்பிடுகின்ற போது பல பத்து வருடங்கள் பின்தங்கியிருக்கின்றது. இவ்வாறு பின்தங்கிய நிலையில் இருக்கின்ற போது தொழில் இல்லாதவர்கள் அதிகரிப்பார்கள், வறுமை, கல்வியில் தேக்கம், போதிய பயிற்சி பெற்ற தமிழ் தேசத்தின் குடிகளின் பற்றாக்குறை என தமிழ் தேசத்தின் உற்பத்தி சக்தி பின்தங்கிய நிலையில் தான் இருக்கும். இந்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காக சிங்கள பட்டதாரிகள், தொழில் நுட்பவியலாளர்களின் தமிழ் தேசத்தின் மீதான வருகை இன்னும் சில வருடங்களில் அதிகரிக்கும். ஆக்கிரமிப்பு இராணுவமும் அது சார்ந்த உற்பத்தியை தமிழ் தேசத்தில் ஈடுபடுகின்றார்கள்.
****சிங்கள பண்பாட்டுக் கூறுகனை தமிழ் தேசத்தில் நுழைத்து தமிழ் பண்பாட்டுக்கான முன்னுரிமையை மறுக்கின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் பௌத்த அடையாளங்களை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானதாக கட்டமைக்கின்றது,. அவற்றில் பௌத்த விகாரை, மடம் போன்றவற்றை எழுப்பி பௌத்த தேரவாத அடையாளத்தை உருவாக்கிக் கொள்கின்றது.
தொல்பழங்குடி (உதாரணம்- குஞ்சுமாப்பா , கிழக்கு மாகாணம்) தமிழ் மரபை ஆக்கிரமித்து சிங்கள குடிகள், தேரவாத அடையாளங்களை உருவாக்கிக் கொள்கின்றது. சிங்கள மக்கள் வாழாத இடங்களில் அரச மரம் எங்கு காணப்படுகின்றதோ அங்கே புத்தர் சிலை முளைப்பது வாடிக்கையாக இருக்கின்றது.
****‘
‘‘பாராளுமன்றம் மற்றும் இரண்டாலம் சகை ஆகிய இரண்டிலும் விசேட (2/3) பெரும்பான்மைகளுடன் நிறைவேற்றப்பட்டாலன்றி, எந்தவொரு அரசியல்மைப்புத் திருத்தமும் சட்டவாக்கம் செய்யப்படலாகாது‘‘ (ப32)இங்கு மறுபடியும் எண்கணக்கில் வந்து நிற்கின்றது. வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு இடம்பெற்றதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் சிறுபான்மை என்ற மொழியாடல் தமிழ் தரப்பால் மீளப் பயன்படுத்தப்படுகின்றது. சிங்கள தேசம் எவ்வாறு தேசம் என்பதை அங்கீகரிக்க மறுக்கின்றதோ அதே போல தான் தமிழ் தரப்பும் அவர்களுக்கு சார்பாக சிறுபான்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள். இங்கும் பெரும்பான்மை என்பது எப்பவும் சிங்கள தேசத்திற்கு சாதகமானதே. சனாதிபதி முறையை மாற்ற கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பான்மை இருந்தும் எந்தக் காலத்திலும் மாற்றத்திற்கு உள்ளாகவில்லை.
இதில் இன்னொரு விடயம் என்பது சனத்தொகையில் எண்ணிக்கையில் இருந்து தேசம் வரையறுக்கப்பட முடியாது. அது பொதுவான நிலத்தொடர், மொழி, பண்பாடு, பொருளாதாரத் கொண்ட தாகும். இங்கு முஸ்லீம்கள் ஒரு தேசம் என்பது தவறு அவர்கள் மதச் சிறுபான்மையினராக தமிழர் தாயகத்திலும் சிங்கள தேசத்திலும் இருக்கின்றார்கள். இவர்கள் தேசிய இனம் என்று அங்கரிப்பது என்பது தேசமாக வளரமுடியாத நிலைதான் சிங்கள தேசத்திலும் உள்ளது. முஸ்லீம்களுக்கான தனியலகை தமிழர் தாயகத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதே வேளை சிங்கள தேசத்தில் தமக்கான உரிமையை அங்கு தான் உறுதிப்படுத்த வேண்டும். இங்கு தென்னிலங்கை வியாபார வர்க்கத்தின் நலன் என்பது தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற முஸ்லீம்களின் நலனின் பின்னால் நின்று அரசியலை செய்கின்றது.
மலைய மக்கள் தமிழர் தாயகத்தில் ஒரு அங்கமாக இருக்கின்ற வேளையில் தனியாக அலகை சிங்கள தேசத்தில் கோர முடியும். அவர்கள் ஒரு தேசமாக வளர்ந்து விடுவார்கள் என்ற அடிப்படையிலேயே குடியுரிமை பறிக்கப்பட்டு நிலத்தொடர் துண்டாக்கப்பட்டது.
இந்தக் கண்ணோட்டத்தில் தான் பெரும்பான்மை சிறுபான்மை என்பது அணுகப்பட வேண்டும்.
தமிழ் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது
சிங்கள தேசம் ஆட்சியுரிமையைக் கொண்டுள்ளதும் மற்றவர்களை ஒடுக்குகின்றது என்பதை மறந்து கொண்டு விடயங்களை விவாதிக்க முடியாது. இவர்கள் கூறும் Westminster முறை என்பதும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவது தான் (ப44) மாகாண நிருவாகத்தில் -- என தொடங்கி - ‘அவர்களால் பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்களை சனாதிபதி பொறுப்பேற்கலாம். இவ்வாறு தலையிடுவது என்பது 155 இந்திய பிரகாரம் என்பதற்கு எவ்வகையிலும் உயர்ந்தது அல்ல. 155 வரைவு இந்தியாவில் பல கட்டங்களைத் தாண்டி கண்டபடி மானில அரசைக் கவிழ்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல், நீதி மன்றம் (வடக்கு கிழக்கை ஜேவிபி வழக்குத் தொடுத்து பிரித்தார்கள்) என்பது சிங்கள தேசத்திற்கு உட்பட்டதும் பெரும்பான்மையைக் கொண்ட சிங்கள தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு உட்பட்டதே.
இறுதியாக
சுயநிர்ணயத்தைக் கைவிட்ட தமிழ் அமைப்புகள்
அதிகாரப் பகிர்விற்கு ஒப்புக் கொண்டார்கள்.
அதிகாரப் பகிர்வு கூட வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதை ஏற்க மறுக்கின்றது.
இது திம்புக் கோரிக்கைக்கு முரணாகவே தமிழ் விதேசிகள் செயற்படுகின்றார்கள்.
It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
- recognition of the Tamils of Ceylon as a nation
- recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon
- recognition of the right of self determination of the Tamil nation ------------------------
(- recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon- சாத்தியப்பட்டது achived )
இன்றைக்குத் தேவையானது திம்புக் கோரிக்கையை மையப்படுத்திய ஐக்கிய முன்னணியாகும்.

No comments:
Post a Comment