2015 தேர்தல் காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு!
2015 தேர்தல் காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பகுதியில் எவ்வாறு தேசிய முழக்கங்களை வாக்கிற்காக வைத்துப் பேசினார்கள் என்பதை அறியமுடியும்.
வாங்கு வங்கிக்காக வி.பு தலைவர் பிரபாகரனையும், மாண்ட தேசிய வீரர்களின் தியாயகம் போற்றப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த பின்னர் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியைப் பாதுகாப்பதற்காக தலைகீழாக நின்று முதலாளித்துவ தேசிய சக்திகளும், தரகு- விதேசிய வர்க்கத்தவர்களும் வேலை செய்தார்கள்.
07.07.2015
l7 JstSpouhrhly nesgsro2rlae0s1d5 ·
#பிரபல்யமான கைதிகள் எங்கே?
பிரபல்யமான போராளிகள் வெளியே வந்தால் தமது இருப்பிற்கு அச்சுறுத்தல் என்று த.தே. கூட்டமைப்பு எண்ணுகின்றதா?
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் தேர்தலின் பின்னர் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. அதன்போது அரசியல் கைதிகளது பெற்றோர்கள், காணாமல் போனவர்களது பெற்றோர்களும் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து தமது நிலைப்பாட்டினை தெரியப்படுத்தினர்.
அதன்போதே தலைவரால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், உறவுகளுடைய ஆதங்கங்களை நாங்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த விடயங்களை இனியும் நீடித்துச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது.
தேர்தலின் பின்னர் அமையும் பதிய அரசின் ஊடாக இந்த விடயங்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது செய்தி..........!
கண்காணிப்பு
குடும்ப உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக இருந்தார்கள்
என்பதற்காக கிராமசேவகர்களாக தேர்வாகியவர்யவருக்கு நியமனம் இடைநிறுத்தம் செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக செய்தி .
அப்படியாயின் வடக்கில் இனிவருங்காலங்களில் 75% மானவர்கள் புனர்வாழ்வுக்கு உடபடுத்தப்படவேண்டும் இந்த விடயம் ஏன் பெரிதாக்கப்படவில்லை நம்ம அரசியல் வாதிகள் இது விடயம் சம்மந்தமாகவும்உடன்படிக்கையை கொண்டுள்ளார்களா? நல்லாட்சியில் இதுகும் ஒரு அங்கமாகுமா? இவ்வாறான கண்காணிப்பு என்பது தொடர்கின்றது. ஆனால் தேர்தலில் பதவியைப் பெறும் நோக்கோடு செயற்படுபவர்கள் அடக்குமுறை வடிவத்தை கவனத்தில் கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனை பற்றி அக்கறைப் பட்டதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் அக்கறைப்படப் போவதுமில்லை. இராணுவமயமாக்கல், அவதானிப்பு, எதிர்ப்பு அலைகளை கட்டுப்படுத்துவது சிதைப்பது என்று அடக்குமுறை தொடர்கின்றது. இதனை அம்பலப்படுத்தி மக்கள் திரள் போராட்டங்களை எவரும் நடத்துவதில்லை. இது இவ்வாறு இருக்க..
முள்ளிவாய்க்காலின் பின்னர் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் ரகசிய சிறையிலோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கின்றனர். முள்ளிவாய்க்காலின் கடைசிநாளில் சரணடைந்த போராளிகள், தளபதிகள், கத்தோலிக்க குருங்கள் பற்றிய எவ்வித செய்தியையும் இதயத்தினால் ஒன்றிணைந்தவர்களுக்கு பதில் தெரியாமலே உள்ளது.
இதயத்தினால் ஒன்றிணைவு என்றால் சரணடைந்தவர்கள் பற்றிய முழு விபரங்களையும் நேர்வையாக வெளியில் வந்திருக்க வேண்டும்.
கைதிகளின் விடுதலைக்காக ஒப்பிற்காக போராடுவது, அறிக்கை விடுவது எல்லாம் பித்தலாட்டமேயாகும்.
முள்ளிவாக்காலின் போது வெவ்வேறு தொகுதியாக சரணடைந்து உள்ளார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவு போராளிகள் வணபிதா பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் தலைமையில் சரணடைந்துள்ளார்கள். வணபிரா அரசின் வாகனத்தில் ஏறியதை வடக்கு – கிழக்கு ஆயர்கள் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இவர் மாத்திரம் அல்ல பாலகுமாரும் அவர் மகனும் கைது செய்யப்பட்டு ஒரு இடத்தில் இருக்கவைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியிருக்கின்றது.
யாழ் துணை அரசியல்பொறுப்பாளர் செம்மனனன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு மக்களுடன் மக்களாக வரும் போது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். இவரை கண்டவர்கள் பல பொதுமக்கள் உள்ளார்கள்.
பிரபலயமான பலர் சரண்டைந்துள்ளார்கள் யோகி, திலகர், காக்கா, கரிகாலன், இளந்திரையன் என இப்படி பல நூற்றுக்கணக்கான தளபதிகள், முக்கியமான உறுப்பினர்கள் சரணடைந்தார்கள்.
குறிப்பிட்ட தளபதிகள், போராளிகள், குருங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தும் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் அற்ற நடவடிக்கைகள் கைதிகளின் குடும்பங்களுக்கு எவ்வித பயணையும் கொடுக்கப்போவதில்லை.
மின்னல் நிகழ்ச்சியில் கொடுத்த பேட்டியில் 278 கைதிகள் இருப்பதாகவும்
54 கைதிகள் தீர்ப்பு கிடைக்கப்பட்டவர்கள்
60 எவ்வித குற்றச் சாட்டும் இன்னும் சுமத்தப்படாதவர்கள்
மற்றவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்கள்.
இங்கு தான் சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பினரின் ஏமாற்று அரசியல் வெளிப்டுகின்றது.
இவர் இவ்வாறு கூறுகின்ற போது கிளிநொச்சியில் புலிகளின் காவல்துறையில் வேலை செய்தவர்கள் என்ற காரணத்திற்காக சிறையில் இருக்கும் நூற்றுக்கணக்காணவர்களை இவர்கள் ஏன் கவனத்தில் கொள்வில்லை.
முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்கள் பற்றிப் இவர்கள் பேசத் தயாராக இல்லை. ஆனால் தாம் வழக்குகளில் ஆஜராகிப் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவதாக கூறுகின்றார்கள். சுயதம்பட்டம் அடிக்கின்றார்கள் ஆனால் முள்ளிவாய்க்காலில் உள்ளவர்கள் பற்றிப் பேசுகின்ற போது கள்ளமௌனம் அல்லது திசைதிருப்பிக் கொள்கின்றார்கள்.
அவர்களுக்கு நடந்து என்ன?
ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுகின்றார்கள் இல்லை?
இப்போ தேர்தல் வருகின்றது.
முன்னர் சிறிலங்கா அரச ஆட்சியாளர்கள் தான் வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதில் ஈடுபடுவார்கள். இப்போ ஆட்சியாளர்களுக்குப் பதிலாக வாக்குறுதிகளை வழங்கும் தொழிலை கூட்டமைப்பினர் கச்சிதமாகவே செய்கின்றார்கள். இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள், புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் ஒரு இரட்சகர் என்ற நிலையில் பிரச்சாரம் செய்தார்கள்.
சிறிலங்கா ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்பட்டதாக ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர், கடந்த தேர்தல் ஊடாக பெற்ற மாற்றத்தை சுவாசிப்பதற்காகவும், பண்புமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வகுப்பெடுத்தார்கள். இந்த மாற்றத்தை முழுமையாக நம்பாதவர்களை அரசியல் அறிவிலிகளாக கொள்ளும் போக்கை பிரபல்ய அரசியல்வாதிகளிடம் வெளிப்பட்டது.
உயர்வர்க்கத்தவர்களின் இடையே ஏற்படும் உறவுகளை (தமிழ் - சிங்கள- மூஸ்லீம்- மலையக) சமரசத்தை மக்களுக்கான சமரமாக காட்டப்பட்டது.
ஒவ்வொரு முறையும் தாம் அம்பலப்பட்டுப் போகின்ற போது புனித வாக்கியம் இருக்கிறது. அதுதான் அரசு எம்மை ஏமாற்றி விட்டது.
127 shares
09.07.2015
l9 JstSpouhrhly nesgsro2rlae0s1d5 ·
தேர்தல் திருவிழா!!
தேர்தல் அறிவித்தாகிவிட்ட நிலையில் வாக்குவேட்டைக்கான திருவிழா ஆரம்பித்து விட்டது. பற்பல அரசியல் பாதை கொண்டவர்கள், நலன் கொண்டவர்கள் தேர்தலில் குதித்துள்ளார்கள். பல்தரப்பட்ட அரசியல் கோசங்கள் முன்னொழியப்படுகின்றன. அனைத்தும் கவச்சிகரமானதாகவும் நியாயம் கொண்டதாகவும் மக்களுக்கு வெளிப்படுகின்றது.
வக்கிரமான கதைகளாக குப்பி கடித்து வீரச்சாடையாதோரை போராளிகள் என்று கூற முடியாது என்பது தொடக்கம் பேரம்பேசும் வல்லமை பெற வாக்களியுங்கள் என்ற தேசிய முழக்கங்கள் தொடங்கிவிட்டன.
கூட்டணியின் தேர்தல் அரசியல் பற்றி திரு வே. பிரபாகரனின் பேட்டியைக் கேட்க முடிந்தது. அதில் கூறுவது முழுமையாக இன்றைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தமானதாகும். அவர் 1981 தேர்தல் வேளையில் நடைபெற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டு பேட்டி கொடுக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
இங்கு தேர்தல் அரசியல் என்பது ஒன்று அது தொடுக்கும் மக்கள் மீதான கருத்துப் போர் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இங்கு சில கட்சிகளிடம் உள்ள திட்டம் பற்றியதே
1. #இனப்பிரச்சனைக்கான என்ன தீர்வை வைத்துள்ளீர்கள்
2. பொருளாதார திட்டம் என்ன உள்ளது?
3. சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப் போகின்றீர்கள்?
4. சுதேசியத்தினை கட்டமைக்க உங்களிடம் உள்ள பார்வை என்ன?
இவற்றிற்கு அரசியல் கட்சிகள் பதில் கொடுக்க வேண்டும்.
#ஐதேக- சுகட்சி- ஜேவிபி
துரையப்பா, பட்டியிருப்பு கனகரத்தினம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு இராசதுரையை, கல்குடா வேதநாயகம் உட்பட பலரை துரோகியாக்கியது தமிழ் தேசியம்.
இங்கு தமிழ் தேசத்தின் அபிலாசைக்கு மாற்றாக அனைவரும் இருந்தார்கள் என்பது உண்மையே. (இங்கு அழித்தொழிப்பு விவாதிக்கவில்லை அந்த அரசியலில் நம்பிக்கை நமக்கு இல்லை) இங்கு தமிழ் தேச உருவாக்க கருத்துருவாக்கத்தின் எதிர்நிலை என்பது தமிழ் மக்களுக்கு எதிரானது தான். இதில் தமிழ் உறுப்பினர்கள் பெருந்தேசியவாதக் கட்சிகளில் அங்கம் வகித்துக் கொண்டு தமிழ் தேசத்தின் நலனைப் அல்லது சிறுபான்மையினரின் பாதுகாக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. இவர்கள் வர்க்கம் என்பது இல்லை என்ற மாயச் சிந்தனையில் இருப்பவர்கள். இவர்களின் சிந்தனையின் பின்னால் உள்ள வர்க்கச் சிந்தனை மக்கள் நலன் என்ற காட்டுக் கூச்சலுக்குப் பின்னால் மறைக்கப்படுகின்றது.
இந்தக் கட்சிகள் பெருந்தேசியவாதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகும். இதில் இணைந்து சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுப்பது என்பது இருக்க முடியாது. மக்களின் நலனை காட்டிக் கொண்டு தமது சொந்த வியாபார வர்க்க நலனைப் பேணுபவர்களேயாவர்.
அரசியல் பேசிக் கொண்டு வியாபார நலனைப் பாதுகாப்பவர்களே அதிகமாக உள்ளார்கள். மக்கள் நலம் மக்கள் நலன் என்பதற்கு அப்பால் உள்ள வர்க்க நலனையும் வர்க்க பாசத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று இந்தக் கட்சியில் உள்ளவர்கள் பெருந்தேசியக் கட்சிகள் சொல்கின்ற அரசியலை ஒப்பித்துக் கொள்கின்றார்கள். இவர்களிடம் மேற்கேட்ட கேள்விகளுக்கான பதிலை தருவார்களா?
இதில் குறிப்பாக அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களின் கட்சிகளுக்கும் பொருத்தமானதாகும்.
மக்களைச் சொல்லியே கருணா, பிள்ளையான், தொண்டைமான் வகையறாக்கள் உள்ளார்கள்.
குறிப்பாக திருமதிமகேஸ்ரவன், இராமநாதன் போன்றவர்கள் தீவிர தேசியவாதிகள் போல கருத்துக் கூறுவார்கள். (திரு மகேஸ்வரனை புலிகள் பயன்படுத்தினார்கள், புலிகளை மகேஸ்வரன் பயன்படுத்தினார் தனிமனிதன் பெரும் முதலாளியானார். இங்கு மகேஸ்வரனை தேசியவீராக்குவது அபர்த்தமாகும்) இவர்களின் நலனுக்குப் பின்னால் உள்ள அரசியல் கயமைத் தனத்த மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் தேசத்தின் உரிமை என்பது தேசத்தின் வளர்ச்சியின் ஊடாகப் பார்க்காது பொருளாதாரவாதத்தின் ஊடாக பார்க்கும் அரசியல் பார்வை என்பது பெருந்தேசிய மையவாதத்தின் துணை உற்பத்தி பண்டமே. இங்கு நாகரீகமான வார்த்தைகளின் ஊடாக பெருந்தேசியவாதத்தினை சிறுமைப்படுத்தி அரசியல் செய்வது விலாங்கு மீன் அரசியலாகும்.
தெரிந்த பேய் என்று கூறலாம். ஏனெனில் தமிழ் தேசியத்தின் பெயரில் பலபேய்கள் உள்ள நிலையில் அவ்வாறு குறிப்பிடலாம். இவர்களை மக்கள் நிராகரித்துக் கொண்டு வருகின்றார்கள் எனவே இவர்களைப் பற்றி அதிகம் எழுதத்தேவையில்லை. இங்கு கூட்டமைப்பிற்கும் இவர்களுக்குமான இணக்க அரசியலை யார் குத்தகைக்கு எடுப்பது என்பதான போட்டியே நிகழ்கின்றது. இந்தப் போட்டியில் ததேகூ முன்னிடம் பெறுகின்றது.
#தமிழ் தேசிய மக்கள் முன்னணி-
இவர்களிடம் முக்கியமாக அனைத்துக் கேள்விகளையும் கேட்கவேண்டும். சும்மா தனியே தேசம் என்பதை மாத்திரம் வைத்து அரசியல் நடத்துவதால் எவ்வித முன்னேற்றகரமான நிகழ்வும் நிகழப் போவதில்லை. இனப்பிரச்சனைக்கான அரசியல் திட்டம் என்ன இருக்கின்றது? இதில் தேசம் என்பது மாத்திரம் போதுமானதாக இருக்க முடியாது. பொருளாதாரத்திட்டம் என்பது அவசியமானதாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு-
இவர்கள் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னால் ஏகபிரதிநிதிகள் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள். இவர்களின் அமைப்புவடிமும் அதன் உறுப்பினர்களின் எதேர்ச்சாதிகார நடவடிக்கைகள் ஒரு அமைப்பை சீரளிப்பது என்பது நமக்கு அக்கறை இல்லை. ஆனால் முக்கியமானது இவர்கள் அன்னியச் சக்திகளுக்கு ஏவலாளர்களாக இருக்கின்றார்கள் என்பதாகும்.
அரசின் முகவர்களாக தற்பொழுது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசின் வாக்குறுதிகளை மக்களிடம் கொடுக்கும் பொறுப்பை ததேகூ செய்கின்றது.
தமிழ் தேசத்தின் ஜனநாயகக் கோரிக்கைகள் என்பது அந்த மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்துவதாகும். இங்கு தேசியக் கோரிக்கைகள் என்பது குறிப்பிட்ட பிரிவினரின் நலனைப் பாதுகாப்பதல்ல. ஐபிசிக்கு கொடுத்த பேட்டியில் மேற்கு கூறுவதை மக்களுக்கும் மக்கள் கூறுவதை மேற்கிற்கும் கூறுவதான இது புகட்டுவது என்ன?
இவர்கள் சுதேசியப் பார்வையை விட்டு அன்னிய நலனில் இருந்து செயற்படுவதைத் தான். இங்கு இவர்களைப் போன்றவர்கள் அல்லது இந்தக் கொள்கை உடையவர்கள் தான் முள்ளிவாக்காலுக்கும் காரணமாகியவர்கள். திரு பிரபாகரனை சூரிய தீபனாக்கி முள்ளிவாக்காலில் பலியாக்கினார்கள். இந்த முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளே தமிழ் தேசியத்தின் பெயரால் தலைமை தாங்குகின்றார்கள். மேல் வர்க்கம் கீழ் வர்க்கம் என்று உள்ளதையும் இவர்கள் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்ற அரசியல் பார்வையை மக்கள் கொள்வதும் அவசியமாகும்.
இறுதியாக
தமிழ் தேசத்தின் உரிமையை சிதைப்பதற்கு சிங்கள பெருந்தேசியவாதத்தின் கைத்தடிகள் உருவாகப்படுகின்றது. பெருந்தேசியத்தின் கைத்தடிகளாக ஒரு தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டியதில்லை. முதலாளித்துவ வர்க்க உறவைப் பேணும் வியாபாரிகளே போதுமானதாகும். தமிழ் தேசத்தின் உரிமை என்பது ஜனநாயகம் சார்ந்ததாகும் எனினும் அதற்கான பொருளாதார, பண்பாடு, சமூகப் பிரச்சனை பற்றிய துல்லியமான பார்வை என்பது அவசியமானதாகும். தேசியத்தினையும் சுதேசிய பொருளாதாரத்தினையும் அகற்றிட முடியாது. இந்த அரசியல் கட்சிகளிடம் உள்ள பொருளாதாரப் பார்வை பற்றிய விடங்களை நிபந்தனையாக வைக்கப்பட வேண்டும்.
பேரம் பேசும் சக்தி என்பது அரசியல் கருத்துக்களை மக்கள் முன்வைத்து அவற்றை மக்கள் கோருவதாகும்.
அரசியல் தீர்வை வெளிப்படையாக வை!!
மக்களே தீர்மானமான சக்தியாகும்!!!!
15.07.2015
tS1n5poee Jmuloynstor eued2c01nh5lt ·
கிடங்கு நாய்களை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!
கிடங்கு நாயும் தமிழ் தலைமையும்!!
ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் இன்று பிரதானமாக தமிழ் அரசியலை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் கிடங்கு நாய்கள் என்றார். இந்த நாய்களைப் பற்றி அறிந்திருக்கின்றேன் ஏன் நானும் எனது உறவினர்களின் வீட்டுக்குப் போகும் போது இந்த வகை நாய் இருப்பதால் உடனடியாக வீட்டுக்குள் செல்ல முயற்சிப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள் அந்த நாயை பாதுகாப்பாக கட்டிவிட்டார்களா என்று பார்த்தபின்னரே உள்ளே செல்வேன்.
சரி இந்த கிடக்கு நாய் என்ற சொல்லாடலை நேற்றுத் தான் உரையாடலின் மூலம் அறிந்தேன். அந்த நாய் உரியவை விட மற்றவர்கள் யாரை என்றாலும் கடிக்கும். அதற்கு தன்வீட்டில் உறவில் உள்ள உறுப்பினர்கள் யார் என்று தெரியாது. அது வீட்டுச் சொந்தக் காரனின் சொந்தப் பிள்ளையைக் கூட கடித்துக் குதறும்.
அது சரி கிடக்கு நாய்க்கும் தமிழ் அரசியலிங்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பே.
#உளவாளிகள்- ஏவலாளிகள்
ஆம் அதுதான் அன்னிய சக்திகளின் உளவுப்பிரிவிற்காக வேலை செய்பவர்கள்.
அன்னிய மூலதனத்திற்காய் சேவகம் செய்பவர்கள்
அன்னிய நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு செயற்படுபவர்கள்.
தமிழ் தேசியத்தின் உரிமையை மீட்டெடுக்க வாக்குக் கேட்பவர்கள்
இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மீட்டெடுப்பதற்காய் வாக்குக் கேட்பவர்களை வழிநடத்துவது அன்னிய சக்திகளே. சீன, இந்திய, மேற்கு ஏகாதிபத்தியங்களின், பௌத்த – சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கின்றார்கள்.
மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கு மக்களை விட பதவி. புகழ். அந்தஸ்து, பணம், சுயநலம், சுகபோகம், சலுகைகள் என்பவே முக்கியம்.
போலி முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு அங்கமான தேர்தல் ஊடாக மக்களை ஏமாற்றுகின்றார்கள். ஜனநாயகம் இருப்பதான மக்களை ஏமாற்றுகின்ற அரசியலமைப்பும் அதன் தேர்தலும் இருக்கின்றது.
இதனைப் பயன்படுத்தி தன்கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல தேர்தல் ஊடாக மக்கள் தமது கண்ணைக் குத்திக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு வந்த பின்னர் ஏற்கனவே திட்டமிட்ட அரசியல் பொருளாதார நகர்வுகளை செயற்படுத்துவதற்கும் அதிகார வர்க்கம் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் தான் அனைத்து சட்டதிட்டங்களும் தீர்மானிக்கப்படுவதாக பாசாங்கு காட்டப்படுகின்றதேயன்றி அனைத்து தீர்மானங்களை தீர்மானிப்பதாக அன்னிய சக்திகளும், அவர்களின் நிதிநிறுவனங்கள் இருக்கின்றன. சிங்கள- பௌத்த பெருந்தேசியவாதம் தனது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ள அனைத்து யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்கின்றது.
தொடரும் அடக்குமுறைகள்------
தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை இராணுவமும் அதுசார்ந்த உற்பத்திமுறையின் ஊடாக தமிழ் தேசத்தின் உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றது. இங்கு பெரும் மூலதனச் செறிவைக் கொண்டிருக்காத பெரும்பான்மை மக்களை பாதிக்கின்ற செயற்பாடாகும். இவை பற்றிய புரிதல் என்பது தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிக்கு இல்லை. இவர்கள் பசிக்கின்றது பாண் கேட்ட மக்களிடம் கேக் சாப்பிடுங்கள் என்று கூறிய அரசவம்சத்தின் சிந்தனையே இருக்கின்றது.
உளவுப்படைகளின் கண்கள் என்பது அதிகம் பேசப்படாத விடயமாகவும், மறக்கப்பட்ட விடயமாகவும் உள்ளது. இந்த கபட அரசியலை மேற்கொள்பவர்கள் இன- மத- வர்க்க பேதமற்று அரசியல் அமைப்புக்கள் இருக்கின்றார்கள்.. உரிமைகள் பற்றிப் பேசுகின்ற போது (Selective) தெரிவிற்குட்பட்டவையே அரசியல் கோரிக்கையாக முன்னிறுத்துகின்ற போது அவை வரம்பிற்குட்பட்டவையாக இருக்கின்றது.
காணாமல் போனவர்கள், கட்டுப்பாட்டிற்குள், புனர்வாழ்விற்கு அனுப்பப்படுபட்டுக் கொண்டு இருக்கும் மக்களை இட்டு மேட்டுக்குடி அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வார்கள் இல்லை.
சம்பூரில் அனல்மின்நிலையத்தின் காணியைப் பற்றி எந்த அரசியல்வாதியும் மூச்சுவிடுவதாக இல்லை. சம்பூர் காணியைக் பற்றிக் கதைக்கின்ற போது கிடங்கு நாய்கள் இன்னொரு பாக்கிஸ்தான் நாய்கள் உள்ளதாக கட்டுக்கதை கட்டி விடுகின்றது.
ஆக மொத்தத்தில் தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறை பல்திசைகளிலும் தொடர்கின்ற போது மேட்டுக்குடி கிடங்கு நாய்கள் தமிழ் மக்களின் உரிமையை சிதைப்பதற்கு துணைபோவர்களாகவே இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலுக்கு காரணமான கிடக்கு நாய்களின் செயற்பாடுகள் தொடர்கின்றது. தேர்தலுக்காக ஆண்டபரப்பரைக் கதைகளை வெவ்வேறு வடிவத்தில் கதைவிடுகின்ற கிடங்கு நாய் தமிழ் மக்களின் சாபமாக இருக்கின்றது.
கிடங்கு நாய்களை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!
17.07.2015
tS1n7poee Jmuloynstor eued2c01nh5lt ·
கூட்டமைப்பு உருவாக்க முனையும் மீளவொரு முள்ளிவாய்க்கால்!!!!
முள்ளிவாய்க்காலில் வீழ்ச்சி கண்ட புலிகளின் போராட்டச் சிந்தனை, வழிமுறை, அவர்கள் நம்பிய கோட்பாடாகும். ஆனால் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது முற்றுக் பெறவில்லை.
போராட்டத்தலைமையானது தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தினை நகரமுடியாதவாறு முற்றாக அழிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தார்கள் பல பத்து தளபதிகள் வணபிதா பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் சரணடைந்தார்கள்.
இதில் பல முக்கிய போராளிகளின் விடுதலைக்காக ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தமிழர் தலைமையாக ததேகூட்டமைப்பு ஏகதலைமை என்ற போக்கில் கடந்த 2009பின்னர் தன்மை தகவமைத்துக் கொண்டது.
இன்று தம்மையே அரசியல் சாணக்கியம் கொண்டவர்கள் என்றும், தமக்கே தமிழ் மக்களின் உரிமையை பற்றிப் பேசக் கூடியவர்கள் என்றும், தமக்கு பேரம் பேசும் பலத்தை தரும் படி கோருகின்றார்கள்.
தேசிய விரோதிகள்
த.தே. கூட்டமைப்பை எதிர்ப்பவர்கள் தேசியத்தின் விரோதிகளாகவும், ஒட்டுக்குழுக்களாகவும், மகிந்தையின் கைப்பாவை என வெவ்வேறு வகையான சொற்களில் சித்தரிக்கப்படுகின்றது. இது புலிகளின் காலத்தில் இருந்த அரசியல்கலாச்சாரத்தின் தொடர்ச்சியாகும். புலிகளின் தலைமை இராணுவவாதத்தில் முக்கியத்துவம் கொடுத்து தமது செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
1. தீவிர புலியெதிர்ப்பாளர்கள் - அரசுடன் ஒத்துழைத்தவர்கள்- இவர்களுக்கு புலிக்காய்ச்சல் அதிகமாகவே இருக்கின்றது. இன்றும் தீவிர புலியெதிர்ப்புவாதத்தினை முன்வைப்பதுடன் அரசபயங்கரவாதத்தினையும் தனிமனிதபயங்கரவாதத்தினையும் ஒரே அளவுகோள் கொண்டு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை சிதைக்கும் நுண்ணரசில் கொண்டவர்களாக உள்ளனர்.
2. ஜனநாயக சக்திகள் இவர்கள் அரச பயங்கரவாதம் என்பதே பிரதான எதிரியாக கணித்து அரசினையும் விமர்சித்தவர்கள். அதேவேளை போராட்டப் பாதையில் உள்ள தவறை அரசியல் ரீதியாக புலிகளை விமர்சித்தவர்கள்.
இந்த வேளையில் புலியை ஆதரிக்க வேண்டும் இல்லை மற்றவர்கள் எல்லாம் ஒட்டுக் குழுக்கள் என்று மாற்று அரசியல் கருத்துக்களை நலமடித்தவர்கள் வலதுசாரிய முகாமைச் சேர்ந்தவர்கள். இந்தச் சக்திகள் தான் முள்ளிவாய்க்காலில் போராட்டத்தினை முறியடித்ததற்கு பங்காற்றியவர்கள். இங்கு பிரபாகரன் தலைமை அழிக்கப்பட்டது ஆனால் அழிவிற்கு காரணமான சூத்திரதாரிகள் தொடர்கின்றார்கள்.
இன்று தேர்தல் வேளையில் புலிகளின் பழைய பாணி அரசியல் போக்கினை எதிர்க்கருத்தாளர்களை தாக்கிக் கொள்ள ஒரே யுக்தியை பயன்படுத்திக் கொள்கின்றது.
ததே கூட்டமைப்பின் மௌனம்
பல முக்கியமான பிரச்சனைகளில் மௌனம் கார்ந்து வருகின்றார்கள் அல்லது சந்தர்ப்பமாக நடந்து வருகின்றார்கள்.
1. சம்பூர் அனல்மின்நிலையம் அந்தக் காணிப்பிரச்சனை பற்றி
2. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பற்றி
3. கைதிகள் பற்றிய பிரச்சனையில்- இதிலும் குறிப்பாக சிறுமிகளைத் தேடும் தாய்மாரின் கோரிக்கையை கவனம் செலுத்தவில்லை. பிரபல்யமான கைதிகளான தளபதிகள் பற்றி எவ்விதமான காத்திரமான பாத்திரம் வகிக்கவில்லை.
4. பேச்சுவார்த்தை பற்றிய நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படவில்லை திட்டம் முன்வைக்கப்படவில்லை
5. சுன்னாகம் நிலத்தடிநீர் மாறுபடுதல் பற்றிய பிரச்சனையில் உரிமையாளர்களின் பால் அக்கறை கொண்டு
6. அன்னிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பச் செயற்படுகின்றனர்
என தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் உரிமையான சுயநிர்ணயத்திற்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு வருகின்ற வேளையில் தான் விமர்சனங்கள் எழுகின்றது.
இந்த விமர்சனங்களை அரசியல் ரீதியாக தம்மை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில் துரோகிப் பட்டத்தினை தேசியத்திற்கு எதிரானவர்கள் என்ற கருத்தாடல் ஊடாக மற்றவர்களை முத்திரை குத்துகின்றனர்.
மக்களின் வாக்குக்களை பெறுவதற்கு என்றே சமூகத்தில் உள்ள மேட்டுக்குடிகளை அமைப்ப ரீதியாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர். இவர்கள் அரசியல் போராட்டம் என்பது நாடாளுமன்றத்திற்குப் போய்
நாலு பேச்சுவார்த்தை
நாலு அறிக்கை
நாலு திட்டல்
அரசு ஏமாற்றிவிட்டது
சர்வதேசம் ஏமாற்றி விட்டது
என்று தான் கூறப்போகின்றார்கள்.
இப்படியான நிலையில் முற்போக்கு அரசியல் சிந்தனை
நிரந்தர அரசியல் தீர்வு, நிலையான அபிவிருந்தி நோக்கி என்று வெவ்வேறு கோசத்தின் கீழ் சுயநிர்ணயம்- தேசங்களின் வளர்ச்சியைப் பற்றிய சமூக விஞ்ஞானப் புரிதல் அற்ற வெறும் தேர்தல் பிதட்டல்களின் ஊடாக வாக்குக்களை பெறும் யுக்திகளை மேற்கொள்கின்றனர்.
கூட்டமைப்பு அழிப்பது யார்?
தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தினை கைவிட்டார்கள். அவர்கள் தேர்தல், பதவி, அபிவிருத்தி, சலுகை, சுகபோகம் என்றும் அன்னிய நிகழ்ச்சிநிரலுக்கு இசைவாகவே செயற்படுகின்றார்கள். இந்த நிலையில் கூட்டமைப்பின் சிதைவிற்கு காரணம் அமைப்பு வடிவமும் அதன் கொள்கையும் ஆகும். இந்த நிலையில் இவர்கள் மாத்திரம் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், கூட்டமைப்பின் சிதைவு என்பது தழிழ் மக்களின் வீழ்ச்சி என்று மிகைப்படுத்தப்படுகின்றது.
அரசியல் ரீதியான விமர்சனங்களையும், அவர்களின் தவறுகளையும், வலதுசாரியப் பாதையில் பயணிப்பதை மூடி மறைப்பதற்காக தம்மை எதிர்ப்பது தேசியத்தின் சிதைவு என்று கூப்பாடு போடத் தொடங்கிவிட்டது.
இவ்வாறான வலதுசாரிய அரசியல் ஒப்பாரிகளை புலிகள் பலமாக இருந்த போது கேட்க முடிந்தவைகள் தான். இன்று வலதுசாரி அரசியலை முன்னெடுக்கும் அதே சக்திகள் தான் புலிகளை ஏகபிரதிநிதியாகவும், பிரபாவை சூரிய தேவன் என்று கொண்டாடியவர்கள். போராடிய புலிகளின் பின்னால் அணிவகுத்திருந்த வலதுசாரிகள் இன்று கூட்டமைப்பின் பின்னால் அணிவருத்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலுக்கு காரணமான இந்த வலதுசாரிகள் மீளவும் இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு தயார்படுத்துகின்றார்கள். அதாவது ஒடுக்கப்படும் மக்களின் சுயநிர்ணய உரிமையை சிதைப்பது, போராட்டச் சிந்தனையை சிதைப்பது, சலுகை இணக்க அரசியலுக்குள் மக்களை கொண்டு செல்வதாகும். இது 2009 வைகாசி முள்ளிவாய்க்கால் அழிவை விட மிகப்பெரியதாகும்.
நாம் ஏன் வீழ்ந்தோம் எவ்வாறு வீழ்த்தப்பட்டோம் என்று ஆய்ந்தறிந்து முன்னோக்கிச் செல்வதற்கு சமூக விஞ்ஞானப் பார்வை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது.
இந்த அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை எதிர்க் கொள்வது என்பது மக்கள் தம்மை தயார்படுத்தி தமது கோரிக்கைக்காக போராடுவதுதான் ஒரு வழியுண்டு.
தேர்தல் அரசியல்வாதிகளை நம்பவைக்கும் எந்த எழுத்துக்களும் மக்கள் நலன் கொண்டவவைகள் அல்ல.
1. இன்று தாய்மார் அழும் கண்ணீருக்கான உடனடி நடவடிக்கை என்ன?
2. பிழைப்பு நடத்த முடியாத காணிகளை இழந்தவர்களின் நிலை என்ன?
3. சுற்றியும் உளவாளிகளின் நடுவே வாழும் மக்களின் நின்மதியாக நித்திரை கொள்ள உங்கள்
நிலைப்பாடு அவசர நடவடிக்கை என்ன?
4. பல்தேசியக் நிறுவனத்திற்கு தாரைவார்த்த சம்பூர் நிலத்தினைப் பற்றிய த.தே. கூ மௌனம்
காப்பது ஏனோ? உங்கள் நிலைப்பாடு என்ன?
தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு என்ன? அதனை வெளியிட முடியுமா?
இந்த தேர்தல் வேளையில் தீர்விற்கான உள்ளடக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லாத காரணம் தான் என்ன??
கூட்டமைப்பின் சிதைவு என்பது தமிழ் மக்களின் அரசியலில் ஆரோக்கியமான பாதையை திறந்து விடும்.
23.07.2015
2g3nu tuJSupoulhnyhsS e2o0o1trenhd5s ·
தலைவரால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற தகுதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதிலேயே ஏனைய தமிழ்தேசியவாதிக்கட்சிகள் முனைப்புக் காட்டுகிறார்கள் ஆனால் பொது எதிரியைப் பற்றியோ முட்டுக்கொடுக்கும் அடிவருடிகளைப் பற்றியோ இவர்கள் எதிர்ப்பதாய் இல்லை.
இவர்களுக்கு கொடுக்கப்பட்ட செயல்திட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியை சரிய வைப்பதோ என்று எண்ணத் தோன்றுகிறது?
தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு இதனை சிதைக்க அனுமதிக்க முடியாது.
இவ்வாறான சிந்தனை வடிவங்களை பொதுத்தளத்தில் காணமுடியும்.
இந்த விதமான பாமரத் தன்மை கொண்ட விளக்கங்கள் தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்திற்கு எவ்வகையாக உதவும் என்பதை ஆராய வேண்டியுள்ளது.
தலைவரால் உருவாக்கப்பட்டது
இங்கு திரு பிரபாகரனை தலைவராக அல்லது கடவுகளாக எண்ணுவது தனிமனித சுதந்திரம் இதில் எவரும் தலையிட முடியாது. ஆனால் அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரு அரசியல் கோட்பாடு என்பது அவசியமானதாகும். இங்கு பிரபாவினதும் அவர் தலைமையில் அமைந்த செயற்பாடுகள் என்பது தோல்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோல்வியை முள்ளிவாக்காலில் கண்டுள்ளோம்.
இங்கு பிரபா என்பதை குறிப்பானாக கொள்வது தேச உருவாக்கத்தில் இயல்பானதே. அவரை தலைவராகவோ அல்லது ஆத்மாத்த வழிகாட்டியாகவோ கொள்ள எவருக்கும் உரிமை உண்டு. பிரபாவை நேசிப்பது, பின்பற்றுவது தனிமனித உரிமை ஆனால் அரசியல்வாதிகளின் போலிமுகம்தான் ஆபத்தானதாகும்.
தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டத்தினை சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்> போராட்டப்பாதையூடாகவும் தெளிந்தபார்வை கொண்டதாக இருக்கப்பட வேண்டும்.
இன்றைய நிலையில் பல வர்க்கப்பிரிவினரின் கூட்டாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிடன் ஒன்றுபட்ட கருத்து இல்லை.
அதில் வெவ்வேறு வர்க்கக் கூறுகள் இருக்கின்றது. ஆனால் பதவி நலனுக்காக தேசியத் தலைவர் என்றும் மறைந்த மாவீரர்கள் கனவு என்று வெற்றுக் கோசம் போடும் அரசியல்வாதிகளே அதிகம்;.
அரசியல் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும்
அரசியல் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் முக்கியமானதாகும் ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் வாக்குக்களை எமக்குத் தாருங்கள் நாங்கள் எல்லாம் பாத்துக் கொள்கின்றோம் என்பதேயாகும். இது தான் ஆபத்தானது இது மக்களை ஆட்டுமந்தைகளாக்கும் செயற்பாடாகும்.
இந்த வெற்று அரசியல்வாதிகளின் கோசங்கள் சிலவற்றைப் பார்த்தாலே விளங்கிக் கொள்ள முடியும். தமிழ் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தினை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
வழிகாட்டும் தத்துவம்
புரட்சிகர அமைப்பு
புரட்சிகர செயற்பாடுகள்
இவைகளே மக்களின் விடுதலைக்கான ஒரு வழியாகும்.
06.08.2015
6t mucggmnAfungudSsrgpto nso2rie01dnu5 ·
தாய்மார் அழும் கண்ணீரும் - தேர்தலும்
‘‘‘அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று காட்டாப்பு காட்டம் தேவையில்லை.‘‘‘
---------------------------------------------------------
திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ,வவுனியா, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து உறவுகளை இழந்தவர்கள் பங்கேற்றனர்.
திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணாமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தினால் இக்கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்தச் சக்திகளின் தன்னியல்பான போராட்டம் என்பது வரவேற்கப்பட வேண்டியதே. அதில் வந்த ஒரு தாயார்......
‘‘நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறன்
என் கணவர் 2008 12 02 எஸ்ரிஎவ் இனால் பிடிக்கப்பட்;டார்.
காணாமல் போனவர் காணாமல் போகவத்து போகவில்லை.
ஒரு பொருளில்லை ஒரு உயிரை எஸ்ரிஎவ் கொண்டு போனதற்கு ஆதார பூர்வமிருக்கு
அதனை ஒருத்தரும் கணக்கில் எடுத்தது மாதிரியில்ல
நாங்கள் எவ்வளவு சொல்லியும்
பொருள் பண்டத்தை ஆட்டமாட்டை தொலைத்துவிட்டுப் போனமாதிரி தான் போகிற இடமெல்லாம் காணாமல் போனவர்கள் பற்றித்தான் ”இதுசெய்யது”
இப்ப ஒரு கூத்து இலக்சன் என்ட கூத்து நடக்குது
இந்த நாட்டில் எங்களுக்கு இதுரையில எவனாவது வந்து 7 அரை வருசமா எதனையும் முன் நிண்டு செய்தில்லை.
ஆனால் எலக்சன் வோட்போதுவதற்கு மட்டும் வந்து நாங்கள் அதைச் செய்வோம்
இதைச் செய்வோம் என்டு அங்க எடுத்துத்தருவோம்
இஞ்ச இருக்கிறாங்க என்று சொல்லுறானுங்கள்
இந்த மீடியக்கார ஆக்களாவது நாங்கள் கதைக்கிறத மீடியாக்காரர் முழுமையாக பரப்ப வேண்டும்.
2 சொல் 3 சொல்ல மட்டும் காட்டுறதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.
அதுக்காக வேண்டி மட்டக்களப்பில் இருந்து ரிங்கோவிற்கு வரவில்லை.
எங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.
நல்லவொரு முடிவு கிடைக்க வேண்டும்
இதோடயாவது எங்கட ஆதாரமும் நாங்கள் எங்களுக்கு தீர்வு இல்லாமல் வோட் பண்ணமாட்டோம். என்னத்துக்கு வேண்டி
புதிய ஜனாதிபதி புதிய அரசாங்கம் வேணும் என்றுதான் இதை செய்தநாங்க
ஒரு உயிரை தாறதற்கு 100 நாள் காணாதா?
ஒரு உயிரை காட்ட 100 நாள் காணாதா? இதுவரை
அதைப் பற்றியான கதை இந்த ஜனாதிபதி கதைக்கவில்லை.
இனிவரப்போறவங்களும் கதைக்கப்போறாங்கள் என்ற நம்பிக்கையில்லை
அதுதான் எங்களுக்குத் தேவையானது
எங்களுக்கு இவங்கள் எந்த நம்பிக்கையும் சொல்லப்போவதில்லை.
அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று காட்டாப்பு காட்டம் தேவையில்லை.
எவனாவது எங்களுக்கு முன்னுக்கு வந்து வோட் எடுக்க முதல் எங்கள் புரிசன், பிள்ளைளை எங்களுக்கு காட்டுவானுகள் என்றால் நாங்க அவங்களுக்கு வோட் போடுவோம்.
அதுதான் எங்களுக்கு கிடைக்க வேண்டியது.
அதுக்கு புறகு காணி பூமிபிரச்சனைகளை பார்க்கலாம்.
எங்களுட உயிர் ஒன்டு இல்லாத இடத்தில் ஆரோட வாழுறத்திற்கு காணி பூமி தேவை அதுதான்
எங்களுக்கு தேவைப்பட்ட விசயம்
நீங்களாவது முழுமையாக கேட்கக் கூடியவனுக்கு போட்டுக் காட்டுங்கள்
அதுதான் எங்களுக்குத் தேவை
https://www.youtube.com/watch?t=78&v=28Em7cdYVjg
இந்த தாய்மாரின் கண்ணீர் கவனிக்கப்படாமைக்கு என்ன காரணம்?----------------------
சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் தேசத்தின் மீதும், தேசிய இனங்களின் மீதும் திணிக்கப்பட்ட தேர்தலுக்கு துணை போகின்ற தரகுமுதலாளி வர்க்கத்தவர்கள். தமிழ் தேசத்தினை ஜனநாயகத்திற்காக அழித்தவர். தமிழ் மக்களுக்குஜனநாயகத்தை வழங்குவதற்காக தேர்தலில் பங்கு கொள்ளுமாறு திணிக்கப்படுகின்றது. ஒடுக்கும் தேசம் தன்சொந்தச் செலவில் சூனியம் செய்வதே இன்றைய தேர்தலாகும். தமிழ் தேசத்திற்காக போராடிய சமூகம் வாக்குக்களை போடும்படியும், தீர்வுகளை பெற்றுத் தருவார்கள் என்று பசப்புவார்த்தை பேசும் அரசியல்வாதிகளும் உள்ள நிலையே இன்று.
சிங்கள தேசத்தின் உயரிய ஜனநாயக வடிவம் என்பதை திணிக்கின்றது. சிங்கள தேசிய வரையறைக்குள் இருந்து உரிமையை சலுகையாக முன்னிறுத்துகின்றது, தீர்வுகளைப் பற்றியும் பேசுகின்றது.
இலங்கை பௌத்த மேலாதிக்கத்தினை அனைத்து மக்கள் மீது திணித்துள்ள நிலையில் அதற்கு மாற்றான ஜனநாயக வடிவம் என்பதை உருவாக்கிக் கொள்வதுதான் உயர்ந்த ஜனநாயகமாகும். தேசங்களின் - தேசிய இனங்களின் உரிமையுடனே சிங்கள மக்களுக்கான உரிமையும் சாத்தியமாகும்.
comprador-bourgeoisie. A section of an indigenous middle class allied with foreign investors, multi-national corporations, bankers, and military interests. - அரசியலின் பின்னால் உள்ள அரசியல் என்பதே சகலதையும் தீர்மானிப்பது. சுமந்திரன் பிரதிநிதித்தவம் செய்வது தரகு முதலாளித்துவ வர்க்கமாகும். தரகு முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்ததுதான் ஆயுதப் போராட்டம். இங்கு நாடாளுமன்ற அரசியல் ஊடாக மாற்றத்தினை கொண்டு வர முடியாது. 1. சரணடைந்தவர்களை கொண்டுவர முடியவில்லை.2. காணியை மீட்க முடியவில்லை3. புதிய கலாச்சார நிலையங்கள் முளைத்துக் கொண்டு இருப்பதை தடுக்க முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தினை சிதைப்பது - நலினப்படுத்துவது- பெருந்தேசியம் செய்யும் விடயங்களை அனைத்தையும் தமிழ் தரப்பை வைத்தே செய்கின்றது, இங்கு சிங்கள பௌத்த பேரினவாதம் அதிகம் பிரச்சார வேலையை தமிழ் பகுதியில் செய்யத் தேவையில்லை.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே வளர்க்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஆட்சியாளர்கள் சார்பாக சிங்கள மேலாதிக்கத்தின் பணியான தமிழ் தேசத்தினை சிதைக்க போகின்றார்கள்.
தரகு முதலாளித்துவ வர்க்கம் புலம்பெயர் நாடுகளிலும் - இலங்கையில் அரசியல் அமைப்புக்களில் செயற்பாடுகளை தீர்மானிப்பவர்களாக உள்ளார்கள்.
புலிகள் இருந்த போது தேசம்- ஏகதலைமை- தேசியத் தலைவர் என்று கூடியிருந்த பதர்கள் 2009 முள்ளிவாய்க்காலின் பின்னர் சொந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு புலிகளின் தலைமை இல்லாத நிலையில் வெளிப்படுகின்றார்கள். இந்தச் சக்திகள் வெவ்வேறு அமைப்புக்களாக பிரிந்திருப்பதற்கும் முதன்மைக் காரணம் ஒவ்வொவரின் வர்க்க நலனே.
இதனை வெளிப்படைய அம்பலப்படுத்தி எழுதுகின்ற போது அமைப்புக்கள் இதனை திசை திருப்பிக் கொள்ள முடியும். ஆனால் வர்க்கநலனின் அடிப்படையில் இருந்து காட்டிக் கொடுக்கப்பட்டதே முள்ளிவாய்க்காலாகும்.
ஏற்கனவே உள்ள இராணுவ புலனாய்வுப் கட்டமைப்பு அதிகாரத்தின் ஊடாகவும் சிந்தனைத் தளத்தில் தமிழ் தரப்பு ஊடாகவும் செய்யும். இங்கு தரகு முதலாளித்துவ பிரதிநிதிகளை அகற்றுவதே முதன்மையானது. இன்று தமிழ் தே. தலைமை தரகு முதலாளித்துவ தலைமையே.
முள்ளிவாய்க்காலின் தோல்வியை நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டியவை இலங்கை போன் அரைக்காலனிய- அரைநிலப்பிரபுத்துவம் இதில் இருந்து உருவாகிய தேசங்களும் - தேசிய இனங்களின் உயர்ந்த பட்ச ஜனநாயக உரிமையான சுயநிர்ணயத்திற்கான போராட்டம் கட்டமைக்கப்பட்டது. எவ்வாறு நோர்வேயின் சதிவலையில் வீழ்ந்து அழிந்தார்கள் என்பதை ஆராயப்பட வேண்டும். ஜனநாயக காலவர்கள் சரணடையச் சொன்னார்கள். எல்லோரையும் கொண்று குவித்தார்கள். ஜனநாயக மீட்பு என்ற பெயரில் நடைபெற்ற அனைத்தும் ஜனநாயகவாதிகளால் பதில் கூற முடியவில்லை. சிங்களப் நாடாளுமன்றத்தை போர்க்களமாக்குவோம் என்ற புறப்பட்ட சக்திகள் எவ்வாறு அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு செயலாற்றினார்கள் என்பதும் இன்று எவ்வாறு தரகு வர்க்கம் தமிழ் தேசத்திற்கான போராட்டத்தினை சிதைப்பதற்கு வழிகோலிய சிந்ததாந்தம் என்பதும் ஆராயப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தேசம் தன்னை ஒடுக்கியவனின் சிந்தனை மையத்தில் இருந்தும் சிங்கள மேலாதிக்கத்தை போசித்து வளர்த்துக் கொண்டு தேசிய இனப்போராட்டத்தை மழுங்கடிப்பதையும் மக்கள் முன் கொண்டு வரப்படவேண்டும்.
இவற்றை மூடிமறைத்துக் கொண்டு தேர்தல் திருவிழாவில் பங்கெடுக்கும் அதிகார வர்க்கத்தின் தலைமையில் மக்களின் விடிவு இருக்கப் போவதில்லை.
தேர்தலில் நிற்கும் அதிகார வர்க்கம்
----------------------
இன்று அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் மாலைகளும் பகட்டும் பலருக்கு சாப்பாடு போட முடியும். சோத்துப் பாசல்களை மக்களிடம் வாங்கித் தான் இயக்கங்கள் வளர்ந்தது. இன்று அவர்களை தீர்மானிக்கும் எஜமானர்களாக மாறியுள்ளார்கள்.
தேர்தல் வந்தால் வாக்கினை பெற்றுக் கொள்வதற்காக பணம், மது, வெவ்வேறான கவர்ச்சியைக் காட்டியே வாக்குக்களை பெற்றுக் கொள்ள முனைகின்றார்கள்.
எத்தனையோ திருகுதாளங்களைப் பார்க்க முடியும்.
நல்லூர் செட்டித்தெருவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசிய வேட்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் தன்னை கைது செய்து தாக்கியதை விட அப்போதிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் வினர் தன்னைத்தாக்கியது தனக்கு இன்னும் வலித்துக்கொண்டிருப்பதாக ஓர் புதிய கதையை அவிழ்த்து விட்டு அனுதாபம்தேட முற்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பாணியில் கரைவேட்டி, நிறங்கொண்ட சால்வை, நெஞ்சில் பச்ஞ், தலையில் மகுடம், அன்னதானம் என தேர்தல் கூத்து தொடங்கிவிட்டது. இந்த நிலையில் காலில் விழும் கலாச்சாரமும் தொடங்கிவிட்டாயிற்று நாடாளுமன்ற பன்றித் தொழுவத்தின் குறியீடாக வெளிப்படுகின்றது.
யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை காலை முதல் காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதனால், காணாமல் போனவர்கள் தொடர்பான புகைப்படம் மற்றும் அவர்களின் தரவுகளுடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வந்து பதிவுகளை மேற்கொள்ளலாம் என உள்ளூர் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதனை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் குறித்த விடுதிக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர் சென்று காணாமல் போனவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொண்டனர்.
பேரினவாதத்தின் தொங்கு சதைகள் இவ்வாறு வாக்கிக்காக செய்வார்கள் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. வாக்குப் பிச்சைதான் முக்கியம் இவர்களுக்கு. கண்ணீரை வாக்குக்களாக அறுவடை செய்யும் பொறுக்கி அரசியல். இவர்கள் மக்களின் உரிமை என்பது வாக்கு- சோறு என்று கூறியே வயிறு வயிறு வளர்க்கும் இணக்க அரசியல் கிடங்கு நாய்கள். இந்தக் கிடங்கு நாய்களுக்கு ( உரிமையாளனைத் தவிர மற்றவர்களை குதறும் வளர்ப்பு நாய்) உரிமை என்றால் என்ன என்று தெரியாதவர்கள். institutional rights is different from constitutional right.
இறுதியாக
மக்களின் கண்ணீரை, தேவையை, மக்களின் உரிமையைப் பற்றிய கரிசனை இல்லாத அதிகார வர்க்கத்தின் - தரகு வர்க்கத்தின் ஊடாக மக்களுக்கான விடுதலை கிடைக்கப் போவதில்லை. வர்க்கமற்ற சமூக அரசியல் இருப்பதாக பாசாங்கு செய்யும் தரகு வர்க்கமும், அதிகார வர்க்கமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. தேர்தலின் ஊடாக தமிழ் மக்களின் எந்தப் பிரச்சனைகளும் தீர்க்கப்படப் போவதில்லை.
கட்சிபேதமற்று மறைந்திருக்கும் தரகு வர்க்கத்தை
அகற்ற ஒரு வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!
12.08.2015
12c tSgpmnSoAnuusotguslot drre2lms015cod ·
தேர்தல் யாருக்காக !!!
சுமந்திரன் தாம் தான் ஆட்சிமாற்றத்தினை உட்படுத்தியதாக பிதட்டிக் கொள்கின்றார். ஆனால் உண்மையில் அது சர்வதேச நிகழ்வுகளின் ஒரு அங்கமாக இடம்பெற்றது. அதில் திரைமறைவு நகர்வுகள் என்பதும் சதாம், கடாபிக்கு நடந்தது என்ன என்ற பாடத்தில் அமைந்த மகிந்தவின் அமைதி வெளியேற்றமாகும். இதனை புரிந்து கொள்ள பெரிய சட்டம் படித்த புரக்கிராசிமாராக இருக்க வேண்டிய தேவையில்லை. இவை மாத்திரம் இல்லை த.தே. கூட்டமைப்பே சர்வதேசிய அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்று பிதட்டுவதுமாகும்.
தமிழ் அரசியல் பரப்பில் உள்ள நிலைகளில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடுகள் - செயற்பாடுகள்- கொள்கைவழி விளக்கங்கள் என்பவற்றில் இருந்து ஒடுக்கப்படும் தேசங்களின், தேசிய இனங்களின் உரிமையைப் பற்றிப் பேசிவிடவோ, முடிவிற்கு வரமுடியாது. இலங்கையின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இருந்து தான் அரசியல் நிலைகளை ஆராய முடியும். இன்றைய அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறிக் கொள்கின்றது. அதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் வாக்கு வேட்டைக்காக கூறிக் கொள்கின்றார்கள். அதற்கு அப்பால் இவர்களால் ஒரு அடியும் நகர முடியாது என்பதே யதார்த்தமாகும்.
சுதந்திர இலங்கையில் பொருளாதாரம் என்பதை கட்டிவைத்திருக்கும் சக்திகளின் அரசியல் போக்கும் அதற்கு எதிராக எழுந்த போராட்டங்கள் என்பன பல்வேறு கட்டத்தை கொண்டதாக இருக்கின்றது. அரசியல் நிலப்பிரபுத்துவப் பின்புலத்தில் உருவான அரசியல் சக்திகளான பொன். அருணாசலம், யாழ் இளைஞர் கொங்கிரஸ் போன்றவற்றின் ஊடாக சுதந்திரத்தின் பின்னர் தந்தை செல்வா- ஜிஜி - திருச்செல்வம் போன்றவர்களின் அரசியல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமஸ்ரி அமைப்பை ஏற்றுக் கொள்ளாத ஜிஜியை விட்டு பிரிந்து தனித்து கட்சி தொடங்கிய பின்னர். பல ஒப்பந்தங்கள் போட்டார்கள் எனினும் தேசத்திற்காக போராடாது நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் குறியாக இருந்துள்ளார்கள். அன்றைய வேளையில் தமிழ் தேசம் முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் இவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தது மாத்திரம் அல்ல பதவிச் சுவையை சுவைப்பதில் அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் பின்னால் அணிதிரண்ட மக்கள் கூட்டத்தை தமது பதவிக்காக பயன்படுத்திக் கொண்டு தமிழரசுக் கட்சியின் மேட்டுக்குடி உள்வாக்கிய பிரக்கிராசிமார் சுகபோகம் அடைந்தனர்.
ஆனால் மக்களின் ஒடுக்குமுறை என்பது ஒடுக்கப்படும் தேசத்தின்- தேசிய இனத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்வதினால் அடக்குமுறை, சுரண்டல் இல்லாமல் ஒழிவதில்லை. சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பதை தமதுபதிவிக்காகவும் தமது பொருளாதார உயர்விற்காகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
1948 இல் இருந்து சில நபர்களுக்கு தமது செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பை, சிபாரி கடிதங்களை கொடுப்பதிலும் ஈடுபட்டனர். இவ்வாறு தம்மை அணுகியவர்களின் ஊடாக தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்கள். இவ்வாறு அந்த நபர்களை கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொண்டு வருகின்ற தேர்தல் வெற்றிகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறான சிபாரிசு கடிதம் கொடுப்பது, வெற்றிடங்களை நிரப்ப தமது உறவினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் நலனுக்காக செயற்படுவதன் ஊடாக தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ளும் பிழைப்புவாத அரசியல் முள்ளிவாய்க்காலின் பின்னர் வெகுவாக கொடிகட்டிப்பறக்கின்றது. சரணாகதி அரசியல் தான் இவர்களின் நிலைப்பாடுகளாலும் இவற்றிற்கு அப்பால் வெளிப்படுபவைகள் வெற்றுக் கூச்சலாகும்.
நிலமானிய எச்சமும் அன்னிய மூலதனத்திற்கும், இணக்க அரசியலுக்கும் (தரகுமுதலாளித்துவ) துணைபோகும் இந்த சக்திகளே இன்று தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயப் போராட்டத்தினை தலைமை தாங்கியிருக்கின்றது.
தமிழகத்தினை எடுத்துக் கொண்டால் தரகு சக்திகளாக திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எவ்வாறு சுயாட்சிக் கொள்கையை விட்டு பதவியைப் பிடித்தது என்பதும்; இது இன்று பெரும் நிதி மூலதனத்தைக் கொண்ட சக்திகளாக வளர்ந்து சீரளிந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளமுடியும்.
இவ்வாறே முள்ளிவாய்க்காலின் பின் சிங்கள பௌத்த தேசத்தின் கீழ் இருந்துதான் உரிமைமையை பேசிக் கொள்ள முடியும் என்று போலி இடது- மற்றும் வலதுகள் முன்னிறுத்துகின்றனர். சிங்கள பௌத்த தேசத்தின் ஜனநாயக வடிவம் என்பது காலாவதியாகிய நிலமானிய எச்சத்தின் மேல் கட்டப்பட்டதை சிதைக்கவிடாது பாதுகாத்துக் கொள்ளும் இடது- வலது என்று பேதமில்லாத சமூக பொருளாதார உற்பத்தியையும் பொருளாதார உறவையும் கட்டிக் காக்கின்றது.
தன்னுடைய பூமியில் இவ்வாறுதான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்திக்கப்பட்ட முறைமைக்கும், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட அழுத்ததிற்கு எதிராக 60 வருடமாக போராடி வருகின்றது. இந்தப் போராட்டத்திற்கு கொடுக்கப்பட்ட விலை என்பது அதிகமானதாகும். ஆனாலும் கூட வெற்றி கொண்டவர்கள் தாம் அதன் கீழ் நிலையில் என்ற சிங்கள பௌத்த மையவாதம் என்பது எவ்வித ஆட்டமும் கொள்ளவில்லை.
கட்டற்ற தனியார் மயமாக்கலைக் கொண்ட பொருளாதார உற்பத்தி முறை கட்டமைக்கப்பட்ட வேளையில் சிங்கள தேசம் என்பது ஒடுக்கப்படும் தேசத்தினையும் தேசிய இனங்களின் வளங்களையும், சுரண்டி ஒடுக்குவதன் ஊடாக தன்னிடம் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு வருகின்றது.
தேசியங்களை மறுத்து சர்வதேசிய பாட்டாளிவர்க் சர்வாதிகாரத்தை முன்னிறுத்து என்பது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமாகும். அதே வேளை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தினை மறுத்து தேசியத்தினை முன்வைப்பதும் கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமாகும். ஒற்றுமைக்காகவும், ஐக்கியத்திற்காகவும் போராட வேண்டும். ஐக்கியம் என்பதை சிதைக்கும் முரண்பாடை அகற்ற வேண்டும். புலிகள் அழிந்து விட்டார்கள் என்ற காரணத்தினால் தேசியவிடுதலைபற்றிய தேவை இல்லை என்றோ ஒடுக்குமுறை தீர்ந்து விட்டது என்று பொருள் படுவது சமூக கட்டமைப்பினை உள்வாங்காத நிலையாகும். ஒரு தேசத்தின் வீழ்ச்சி என்பது முடிவாகாததும் ஒடுக்குமுறை பரிமாணம் மாறியது என்பதும் அர்த்தமாகாது. இங்கு தேசிய வெறியை தேசங்கள் உருவாகுவது பற்றியும் அது ஏற்படுத்தும் முரண்பாடுகள் என்பதும், ஒரு தேச- தேசிய இனங்களின் ஒடுக்குமுறையே மூலாதாரமாகக் கொண்டே பிற்போக்கு ஆட்சிமுறையும் அதன் பாலான சமூக உறவுகளும் நீடிக்கின்றது.
பொதுவாக பொதுவாக வடக்கு - கிழக்கில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கம் ஒடுக்குமுறை என்பது தென்கே செல்வதில்லை. இங்கு சிங்கள மேட்டுக்குடி அரசியல்வாதிகள் தமது தேவைக்கு ஏற்ப பெருந்தேசியவாத உணர்வை வெளிப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு விசயகலா ஈழப்படத்தையும், புலிகளைப் பற்றிப் பேசுகின்ற போது பெருந்தேசிய உணர்வு கொண்ட சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள். யுத்த அவலங்கள், அது ஏற்படுத்திய வடு, மக்களின் தேவை, அவர்களுக்கான உரிமை பற்றி வவுனியாவிற்கு அப்பால் சிங்கள மக்களுக்கு செல்வதில்லை. சிங்கள மக்களின் இனவுணர்வையும், சிந்தனை வடிவத்தையும் தீர்மானிப்பது தமிழ் அரசியல் அல்ல. சிங்கள பிரதேசத்தில் இருக்கும் பௌத்த- சிங்கள உணர்வுதான் எப்பவும் தீர்மானிக்கும். இங்கு முரண்பாடுகள் என்பது தமிழ்ர் உரிமையை கோரினால் தெற்கில் இனவாதம் ஊண்றும் என்பது என்ஜிஓ (தன்னார்வ) சிந்தனை. பௌத்த நிலமகளையும், தேரர்களும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் கவனிப்பவர்களாகவும் அரசியலை தீர்மானிப்பவர்களாகவும் உள்ளார்கள்.
இணக்க அரசியலின் வடிவத்தை இடது- வலது என்றில்லாதது போதித்துக் கொண்டு தான் உள்ளார்கள். பின்தங்கிய வளர்ச்சியில் உள்ள மக்கள் சமூகம் என்பது இந்தச் சக்திகளால் இணக்க அரசியலுக்குள் மீளவும் அமிழ்த்திவிடும் செயற்பாடுகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். அரசியல் பொருளாதார உரிமை- மாற்றம் என்பது சட்டவாக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியாது. சமூக மாற்றத்தினை மாத்திரம் அல்ல ஒடுக்கப்படும் தேசங்களின் - தேசிய இனங்களின் ஜனநாயகத்தினை மீட்டெடுப்பது என்பது மாயையே. இந்த வேளையில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கிடைக்கும் என்பதுமாகும்.
தேசங்களின் உரிமையான தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைக்கான என்பது இனவாதமோ, குறுந்தேசியவாதமோ, பிரிவினைவாதமோ அல்ல. இதணை ஒரு நிலம்சார்ந்த அல்லது இதனை ஒரு பொருள் பண்டாகத் தான் பார்க்கின்றார்கள் போலும் ஆனால் இது தேசங்களின் -தேசிய இனங்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமை சார்ந்ததாகும்.
இங்கு தரகுமுதலாளிகள் தேவைக்காக இடப்படும் குறுந்தேசியவாதக் கோசம் என்பது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காகும் போடும் வேசங்கள் எல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு கொடுக்கின்ற இனவாதபோசாக்கான எலும்புத் துண்டு அல்ல. குறுங்குழுவாதத்தன் பிரதிநிதியாக தரகுவர்க்கமே 1920களில் இருந்து தமிழ் தேசியம் பேசி வந்திருக்கின்றது. முற்போக்கு தேசியம் என்பது துளிர்விடுவதற்கு முன்னரே 1985களில் சிதைக்கப்படுகின்றது. இன்றும் பகிடிக்கு சுயநிர்ணயத்திற்காக போராடுவதாக பாசாங்கு செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் புலம்பெயர் அமைப்புக்களும் வெளிப்படுத்துகின்றன.
சக்திகள் வெவ்வேறு வடிவத்தை முன்வைத்து
பௌத்த மையவாதத்தில் இருந்து சிந்தித்துக் கொண்டு ஒடுக்கப்படும் தேசங்களின்- தேசிய இனங்களின் உரிமையை இனவாத- குலவாத- சாதிவாத- பிரிவினைவாத- பயங்கரவாத என்று வரையறுத்துக் கொள்வதும் கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாகும். இதன் காரணமாக ஒடுக்கப்படும் தேசங்கள் - தேசிய இனங்கள் உரிமை பற்றிப் பேசினால் முத்திரை குத்தப்படுகின்றது. தமிழ் மக்கள் சிறுபான்மைத் தேசிய இனம் அல்ல அவர்கள் ஒரு தேசத்திற்கானவர்கள் எனவே
ஒடுக்கப்படும் தேசத்தின் தேசிய இனங்களின் உரிமைக்கான பிரச்சாரத்தை தன்னும் தெற்கில் செய்யமுடியாத தமது கையாலாகாத தனத்தை மூடிமறைப்பதற்காக புரட்சிகர கோசம் போடுவதால் பௌத்த- சிங்கள பேரினவாத மையவாதச் சிந்தனையை மறைத்துவிட முடிவதில்லை. பௌத்த சிங்கள பேரினவாத போலி இடதுகள் தொடக்கம் அனைத்து
போலி தேசியர்களையும் புறக்கணியுங்கள்.
மாற்றங்களை உருவாக்கக் கூடியது மக்கள் திரள் போராட்ட வடிவங்களேயாகும்.
சலுகைகள் உரிமை அல்ல.
தேர்தல் என்ற மாயவலையில் சிக்குவதன் ஊடாக அரசியல்வாதிகளுக்கு பதவிச் சுகத்தைத் தான் கொடுக்க முடியும்.
மக்களை சிந்தனை ரீதியாக மொட்டையடிக்கும் போலிகளை நிராகரியுங்கள்.
தமிழ் தேசத்தின் மீது திணிக்கப்பட்ட தேர்தலை புறக்கணியுங்கள்.
15.08.2015
15c tSgpmnSoAnuusotguslot drre2lms015cod ·
பிரபாவின் நாமமும் தேர்தல் களியாட்டமும்!!!
--------------------------------------
தேர்தல் என்பது முதலாளித்துவம் தருகின்ற களியாட்ட விழாவாகும். அந்த விழாவில் யார் வேண்டும் என்றாலும் களத்தில் இறங்கி மக்களை மடைகளாக வைத்திருக்கும் செயற்பாட்டில் இறங்க முடியும். தேர்தல் என்பது பிரச்சார மேடையாக பயன்படுத்துவது என்பது வேறாகும். இங்கு தேர்தல் முறைக்குள் மக்களை பயிற்றிவிப்பதும், தேர்தல் முறையை நம்பிக்கை கொள்ள வைப்பதான செயற்பாடுகளே முதன்மையாகவும் பெரும்பான்மை சக்திகளாலும் செயற்படுத்தப்படுகின்றது.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்வாதிகள் என்னவிதமான கீழ்த்தரமான செய்தாகினும் மக்களை தமக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்றே செயற்படுகின்றார்.
கட்சி வேறுபாடின்றி பித்தலாட்ட அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். "விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இறக்கவில்லை காணாமல் போனார்" என அங்கயன் ராமநாதன்.
. "விடுதலைப் புலிகளின் தலைவருக்கு யாழ்ப்பாணத்தில் சிலை வைப்பேன்"... விஜயகலா மகேஸ்வரன் -
இதில் கூட்டமைப்பு இலங்கைக்கு வெளியே உள்ள பிரமுகர்கள் தம்மை ஆதரிப்பதாக பத்திரிகை விளம்பரம் கொடுத்திருந்தார்கள். இதில் உள்ள கேவலமானது என்னவென்றால் படித்து பட்டம் இருந்தால் நாங்கள் ஆட்டு மந்தைகள் போல அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கடைந்தெடுத்த பொறுக்கிச் சிந்தனை இதுதான் இங்கு கவனிக்க வேண்டும்.
இதேபோல யாழ் பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி ததேகூ தமக்கு ஆதரவு இருப்பதாக அறிக்கை விட்டது.
கொள்கைப்பிடிப்பின்மை, தமது செயற்பாட்டிலேயே உள்ள பித்தலாட்டம், ஏமாற்று வித்தைகள் உள்ளது என்பதைத் தான் இவைகள் காட்டுகின்றது. அரசியல் எதிர் நிலை கொண்டவர்களை ஒட்டுக் குழு என்று அழைப்பது தொடக்கம் வெவ்வேறு சேறு பூச்சுகளும் இடம்பெற்றது. அதில் முள்ளிவாய்க்கால் காலத்தில் யார் என்ன செய்தார்கள் என்பதே.
முள்ளிவாய்க்கால் காலத்தில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், பிரமுகர்கள், புலம்பெயர் அரசசார் ஜனநாயகவாதிகள் இப்படி பலரை அழைத்து யுத்தத்தை முடித்துக் கொள்ள ஆதரவு தரும்படியும். யுத்தம் முடிந்த பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வு தரப்படும் என்று கூறப்பட்டதாக நம்பப்படுகின்றது.
அன்று செக்குமாடுகள் போல் இருந்து செயற்பட்டவர்கள் ஜனநாயக வேசம் போடுகின்றார்கள்.
இந்தப் பித்தலாட்டங்கள் எதற்காக?
------------------------------------------------
தேர்தலின் போது பிரபாவையும் மாவீரர்களும் தேவைப்படுகின்றார்கள். இன்றைய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இரணடு வகையான சிக்கல்கள் - விருப்புக்கள் உள்ளது இவ்வாறு இரண்டைக் கொள்ளி எறுப்பு போல அரசியல்வாதிகள் செயற்பட வேண்டியுள்ளது.
1. உள்ளங்கத்தில் போராட்டம் - தியாகம்- கொள்கை என்று பேசிக் கொண்டும், இனப்பெருமை பேசிக் கொண்டும்
2. பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஒத்தோடுவது
-புலிகளில் நின்று விலகி நிற்பது
-பிரிவினைவாத எதிர்ப்பு
-நிதிநிறுவனங்களின் - உலக மறுபங்கீட்டுக்கமைய செயற்படுவது என இசைவாக ஒத்தோடுவதுதான் முதலாளித்துவ சக்திகளின் சரணடையும் இடமாக இருக்கின்றது இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான் ஏக போக சக்தி என்றும் தமது வெற்றியை எதிர்பார்த்து சர்வதேச இருப்பது என்பது அறிவெளிச்சி போதியளவில் வளர்ச்சியடையாத நிலையில் மக்களை ஏமாற்றும் கோசத்தின் வெளிப்பாடாகும்.
இசைவாக இணங்கிப் போதலுக்கு பிரதான முகவர்களாக இருப்பவர்கள் (சுமி- சாம்) போக மற்றவர்களை இணைத்துக் கொண்டு காட்டிக் கொடுப்பு அரசியலை செய்வதை மறைப்பதற்கு மற்றவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். இவ்வாறான போலி அரசியலை மூடிமறைப்பற்கு இராணித் தேனிக்குப் பாதுகாப்பாக இருக்கும் சேவக குளவிளைப் போன்றவர்களே உதிரி உறுப்பினர்கள். இந்த தேர்தல் பயணத்தில் பல வேட்பாளர்கள் தம்மை தோலுரிததுக் காட்டியுள்ள நிகழ்வுகளை பிரச்சார வேளையின் போது வெளிப்பட்டது. சிலர் தேவையில்லாத சிக்கலில் ஈடுபடாது தமது வெற்றில் மாத்திரம் கவனமாக இருக்கின்றார்கள்.
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களன் எண்ணிக்கைக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கும் சம்பந்தம் உள்ளதாக காட்டப்படுகின்றது போதிக்கப்படுகின்றது, இதில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகளின் இருந்து மாத்திரம் இல்லை. அரசறிவியல் ரீதியில அணுகினாலும் கூட அரச அமைப்பு அவ்வாறு இல்லை.
இவ்வாறே மகிந்த வென்றால் சிவில் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பூச்சாண்டி காட்டப்படுகின்றது. சில மாற்றங்கள் உட்பட்டாலும் அவைகள் உலக அரசியல் நிலைகளின் ஆதிக்கத்தில் உள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஒத்தோடுவாராக இருந்தால் மகிந்த வரமுடியும் இதனை கூட்டமைப்பால் கூட தடுத்து நிறுத்திவிட முடியாது. இந்த நிலையில் சம்பந்தர் ரணில் - மைத்திரி அரசை ஆதரிக்கப்போவதாக அறிக்கை விட்டுள்ளார்.
இது மீளவும் நிரூபிப்பது என்னவெனில் இது ஒரு தரகு (ஏவல் செய்து முடிப்பதே) வர்க்கம் என்பதேயாகும். தரகு வர்க்கம் தேசியத்தினை விற்றுப் பிழைக்கும்.
துணைவேண்டும்---
-----------------------------------
சம்பந்தருக்கு துணைவேண்டுமாம் பல்வேறு தருனங்களில் சுமந்திரன் உதவியுள்ளாராம். இதில் வேடிக்கை என்னவெனில் மாத்தையா- தமிழ் செல்வன் பல்வேறு கட்டங்களில் பிரபாகரன் கையெழுத்து இடும் போதும் பத்திரங்களை வழங்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகவோ என்னவோ தனககும் ஒரு பிரக்கிராசி கைத் தடி வேண்டும் என்ற காரணத்தனால் சுமந்திரனை வலியுறுத்துகின்றார் போலும்.
தலைவருக்கு ஒருவர் துணையாக வேண்டும் என்றால் ஒரு செயலாளரை நியமிக்க முடியும், ஆலோசனைக் குழுவை உருவாக்கிக் கொள்ள முடியும் ஏன் பலஸ்தீனர்கள் வைத்திருப்பது போன்ற நாடாளுமன்றத்திற்கு நிகரான ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு எதுவுமே செய்யாது தனிநபர் சாகச நடவடிக்கை என்பது மக்களின் நலன்சார்ந்திருக்க முடியாது.
இன்று தேர்தலில் பங்கு பெறும் குறுந்தேசியவாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக போடும் கோசங்களே.
இறுதியாக-
இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றடையவில்லை என்பதை எமது மக்கள் அனுபவ ரீதியாக அறிந்துள்ளனர். இவ்வாறேஇலங்கையில் அரசியல் தீர்வின் பின்னால் இருப்பவர்கள் உள்நாட்டு விவகாரத்திற்கான அதிகாரிகளும், கொள்கை வகுப்பாளர்களுமாகும். இதில் மகிந்தச் சிந்தனை என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது தான் இது இனவாத இடதுசாரியத்தினால் கட்டமைக்கப்பட்டது தான் மகிந்த சிந்தனை.
இலங்கையின் அரசியல் அமைப்பு - பௌத்த நாடு- பௌத்தம் அரச மதம்- சிங்களவர்களின் நாடு- தமிழர் வந்தேறு குடிகள்- ஆரியர் என்ற மனப்பாங்கு என்ற பௌத்த சித்தாந்த அரசியல் தளத்தினை உடைத்து எவராலும் அரசியல் செய்ய முடியாது. இதனை தகர்க்கப்படுவதற்கு மாற்றாக அதன் மீதுதான் அனைத்து அரசியல் கட்சிகளின் அரசியல் சிந்தாந்தம் தென்னிலங்கையில் இருந்து கட்டப்பட்டிருக்கின்றது.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது எவ்வாறு கருணா போன்றவர்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்பதை பாலசிங்கம் அம்பலப்படுத்தியிருந்தார் என்பதை இந்த நேரத்தில் ஒப்பிட்டு பார்ப்பது தகும்.
இவ்வாறே ‘பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆனார்கள் என்பதையும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். இரண்டு மக்கள் குழுக்களின் பிரதிநிதி தலைவர்கள் உறுப்பினர்கள் குடும்ப நண்பர்கள் ஆனார்கள். ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகி அவ்வவ் இனங்களின் உயர் குடி அந்தஸ்துக்கு ஏற்றவாறாக நடந்து கொள்கின்றனர். இவர்களிடையே இனம், மொழி, மதம் என்ற பேதங்களை விட்டுவிட்டு தொழில் கூட்டாளிகள் ஆகியிருக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு வருபவர்களை விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள் என்பதும் பலஸ்தீன அனுபவங்களில் இருந்து பெறமுடிகின்றது. (18052001)‘
கடந்த கால அனுபவங்கள் என்பது ஈழ. பலஸ்தீனப் போராட்டங்களில் இருந்து நிறையவே உள்ளது. ஆளும் வர்க்கத்துடன் கூடிக் குலாவ ஒத்தோடிகளை நாமே தெரிவு செய்வதை முடிவிற்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு தான் பேச்சுவார்த்தைகள்- நிகழ்ச்சி நிரல்கள் உருவாக்கப்படுகின்றது என்பதை வரலாற்று ஒட்டத்தில் அறிந்து கொள்ள முடியும்.
இஞ்சிக்கு ஏலம் கொண்டாட்டம் போல பிரபாவின் பெயரும் மாவீரர்களும் ஒத்தோடிகளுக்கு தேவையாகின்றது.
ஒத்தோடிகளை அகற்ற வேண்டும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை வென்றெடுக்க வேண்டுமென்றால் தேர்தல் புறக்கணிப்பு பாதையே சரியான வழியாகும்.
சிங்கள தேசக்கட்டமைப்பை எதிர்ப்பதும் - புறக்கணிப்பதும் அவசியமாகும்.
ஆம் இந்த போலிகளை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணித்து படிப்பினை புகட்டுவதாகும்.
18.05.2015
atSpot1a8 anASsougaSucurst 2ne0diiml1f5 ·
தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன?
இலங்கை ஒற்றையாட்சிக்குள் தமிழ்மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களின் உரிமையை நோக்கிய நிலையில் செயற்பட்ட சக்திகளின் வெற்றி என்பது ஒடுக்கப்படும் தேசத்தின் வெற்றியாக கொள்ளத் தேவையில்லை. இது இருக்கின்ற சமூகக் கட்டமைப்பில் சமூகத்தினை செயற்பட வைக்கும் சிந்தனை வடிவத்தின் விளைவாக எழுந்த அழுத்தத்தின் வெளிப்பாடாகும்.
தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுமாயின் தம்மை அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் பிரதமர் அணுகினால் நாம் அதனை ஆராய்வோம் என புதியதலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் மாவை தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பேட்டியின் வெளிப்பாடு நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்பது போல தரகுவர்க்கத்தின் சரணடைவுப் பாதையின் வெளிப்பாடேயாகும். தரகு வர்க்கம் என்பது பதவிகளை அனுபவிப்பதற்காக பயன்படுத்தியே வந்திருக்கின்றது. 1977களில் தமிழீழக் கோரிக்கையை வைத்து தேர்தலை சந்தித்த இவர்கள் மாகாண சபையை ஏற்று பதவிகளை சுவைப்பதில் தான் ஆவல் கொண்டிருக்கின்றார்களேயன்றி அதற்கு அப்பால் எந்தக் காலத்திலும் இவர்களால் நகர முடியாது. இவர்கள் கிடைக்கின்ற ஒவ்வொரு பதவிகளையும் எவ்வாறு அடைவது பதவியைச் சுவைப்பது என்பதற்கு அப்பால் இவர்களால் சிந்திக்கவோ செயற்படவோ முடியாது.
தரகு வர்க்கத்தினை விட மாற்றாக
தரகு வர்க்கத்தினை விட மாற்றான சக்தியாக த.தே.ம முன்னணி இல்லாவிடினும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தெளிவாக உள்ளார்கள் என்று கொள்ள வேண்டும். இதே போல தேர்தலில் வாக்களிக்காது விட்டவர்கள் மற்றும் புறக்கணித்தவர்களின் கருத்துக்களை இல்லாதாக்கவும் முடியாது. சமூகத்தில் முன்னேறிய பிரிவினர் உள்ளனர் என்பதைத் தான் காட்டுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தோல்வி என்பது சுயநிர்ணயத்திற்கான தோல்வியாக கொள்ள முடியாது. இது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை புரட்சிகரவடிவத்தில் கொண்டு செல்லாததன் தோல்வியேயன்றி போராட்டத்திற்கான தோல்வியல்ல.
இங்கு புலம்பெயர் பேரவைகள் போன்ற வியாபாரிகள் நம்பிக்கை வைத்து ஏறிய குதிரையில் வீழ்ச்சி என்பதும் கொண்டாடப்பட வேண்டியதே. ஆனால் இணக்க அரசியலை மேற்கொள்ளும் சுமி- சாம் கூட்டணியின் திமிர்த்தன் இன்னும் துல்லியமாக வெளிப்படும். இதனை எதிர்க் கொள்ள வழமையான சிந்தனைக்குள் உழன்று கொண்டிருக்கும் அரசியல்பாதை கொண்டவர்களால் எதிர்க் கொள்ள முடியாது. இதற்கு மாற்றாக புரட்சிகர சிந்தாந்தத்தை நோக்கிய பாதையை தெரிவு செய்வதே சமூகத்தின் முன்னோக்கிச் சிந்திக்கின்ற பிரிவினரின் கடமையாகும்.
யுத்தத்தின் பின்னரான மத்திய தரவர்க்கத்தின் வெளிப்பாடு கிடைக்கின்றதை பிடுங்கியெடுக்கின்ற சிந்தனைவடிவமாகும். இது சமூகமாற்றத்தை அரசியல் உரிமையை வலியுறுத்தியதாக இருக்கத் தேவையில்லை. இதன் வழியில் அமைந்த சிந்தனை வடிவம் என்பது உயர்ந்த ஜனநாயக விழுமியங்களையோ அல்லது புதிய கலாச்சார வடிவம் கொண்டதாகவோ இருக்க முடியாது.
மக்களின் இறைமையை வலியுறுத்துபவர்களை விட சலுகை, பதவி (விதானையார், ஜேபிபட்டம் இதரபல) , இணக்க அரசியல் என மேட்டுக்குடி அரசியல் வழியை முன்னிறுத்திய பிரவினரின் பிரச்சாரம் வெற்றி கொண்டுள்ளது.
ஆனால் மக்களை சலுகைகளுக்காகவும், மானியத்திற்காகவும், இலவசத்திற்காக கையேந்தும் அரசியல் பாரம்பரியத்தினை உருவாக்கிக் கொள்ளும் ஒரு சமூகக் கட்டத்தை நோக்கிய அரசியல் பாதையின் வெற்றியேயாகும். அதிகாரத்தினை சுவைக்க வேண்டும் என்றால் இன்னொரு பெரும்பகுதி பிச்சைப் பாத்திரம் ஏந்துபவர்களை தொடர்ச்சியான அப்படியே வைத்திருப்பது அவசியமாகும். தேர்தல் என்பது ஒரு இலட்சியத்திற்கான பாதையாக காட்டுவது மோசடி என்பது தெரிந்ததே.
இறுதியாக முன்னர் வலியுறுத்திய போன்று தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. தேர்தல் மூலம் மாற்றத்தினை கொண்டு வரலாம் என்று நம்பிக் கொண்டவர்கள் ஏமாற்றம் கொள்வது (குட்டிமுதலாளிய) கிடைக்கின்றதை கொண்டு முன்னேறிவிட துடிக்கும் அல்லது கிடைப்பதையும் விட்டுவிட முடியாது என்கின்ற மனப் போக்காகும்.
இப்போ கிடைத்த பதவியின் ஊடாக தமது அன்னிய எஜமானர்களாக இந்திய மேற்கு நாடுகளுக்கு சேவகம் செய்தே தமது வாழ்நாளைப் போக்குவார்கள். அத்துடன் தமது பதவிச் சுகத்தினை அனுபவிப்பார்கள். மக்களின் உரிமையை சட்டவாதத்தின் ஊடாக பெற்றிட முடியாது. ஆம் பொறுங்கள் நாம் ஏமாற்றப்பட்டோம் என்று 2020 தேர்தலில் மீண்டும் சோக கீதம் பாடிக் கொண்டு மக்களிடம் அங்கீகாரம் வேண்டி வாக்குப் பிச்சைக்காக வருவார்கள்.
மக்களின் விடுதலைக்கான பாதை காட்டக் கூடிய புரட்சிகர அரசியல்பாதையை தேர்ந்தெடுப்பதே.
30.06.2015
3t0uldaSph ueonJhsounrrreln h2emd015 ·
காணிகள்- இராணுவமுகாம்களும் தேர்தல் திருவிழாவும்!
நடைபெறப்போகும் பொதுத் தேர்தல் தமிழர்களுக்கு முக்கியமானது என தமிழரசுக்கட்சி மத்திய குழுக்கூட்டத்தில் சம்பந்தன் உரையாற்றினார். இனநெருக்கடிக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றைக் காண காண்பதற்கு பொதுத்தேர்தலின் பின்னர் புதிதாக பதவிக்குவரும் அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்து வேண்டும் என்றும் சர்வதேசம் தம்மை உற்று நோக்குவதாகவும் இதனால் இத்தேர்தல் முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார். இதனால் த.தே. கூ பலமான வெற்றியைப் பெறவேண்டுமாம் என அறைகூவல்விடுத்துள்ளார். ஆனால் என்னவிடயம் என்றால் ஏற்கனவே ஒரு கட்டமைப்பு உள்ளது அந்தக் கட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும்.
இதற்கிடையில் தேர்தல் நாடகங்கள் தொடங்கிவிட்டது. மக்களின் நாடியைத் தொடக்கூடிய விடயங்களில் மக்களை தொட்டு அரசியல் கழியாட்டத்தினை தொடங்கி விட்டார்கள்.
27 December 2014 • வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை; வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் ஜனதிபதி யாழ் விஜயம் சென்று விடுவிக்கப்பட்ட சில ஏக்கர் காணிகளுக்கான பத்திரங்களை சம்பிரதாய ரீதியாக ஒப்படைத்தார். சில வாரங்களுக்கு முன்னர் படையினர் ஆக்கிரமித்த காணிகளில் இருந்து வெளியேறவில்லை என ரணில் குறிப்பிட்டிருந்தார். இங்கு அரசியல் நிலைப்பாடுகள் என்பது பெருந்தேசியம்- தேர்தல் – வாக்கு என்பவற்றை பாதுகாப்பது நோக்காக கொண்டிருக்கின்றது.
உண்மையில் கண்ணாம்பூச்சியாட்டம் தான் நடைபெறுகின்றது.
படைகளின் வசம் உள்ள காணிகளை விடுதலை செய்யப்படும் என்று வாக்குறுதிக்கு மேல் வாக்குறுதி வழங்கப்பட்டு வருகின்றது. இதில் வெவ்வேறு பிரிவினர்களும் தாமே காணிகளை விடுவித்தவர்கள் என்று உரிமை கோரும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றார்கள். இன்று 290615 அன்று வடலில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பட்டாளம் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் சென்று பார்வையிடுகின்றனர்.
இதற்கு முன்னர் தேர்தல் முடிந்த கையோடு விடுவிக்கப்பட்ட பகுதிகள், காணிகள் என்று விழாவைத்து உரியவர்களுக்கு உறுதிகளை வழங்கியிருந்து படம் காட்டினார்கள்.
அப்போ வந்த விமர்சனம் என்பது படையினர் சில இடங்களில் அகன்றுவிட்டு புதிய இடங்களில் இடங்களை உள்ளடக்கி புதிய முட்கம்பி வேலிகளை அடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அரசியல்வாதிகள் சம்பிரதாய பத்திரிகை அறிக்கைகள் வழங்குப் போட்டுள்ளோம், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றும் ரணிலின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் என்றும் முனுமுனுப்புடன் நின்று கொண்டது. தமது காணிகளை விடுவிக்கும் படி வயோதிபர்கள் உண்ணாவிரமும் இருந்தார்கள். அவ்வேளை போலி வாக்குறுதியுடன் அந்தப் போராட்டத்தினை நிறுத்தி வைத்தார்கள்.
இதே போல தனியார் வீடுகளின் அரசியல் கட்சிகள் கையகப்படுத்தி வைப்பதையிட்டு வழக்குகள் மனுக்கள் போட்டுக் கொண்டும் மக்கள் இருக்கின்றார்கள். அவர்களை இட்டு அரசியல்வாதிகள் வழக்கம் போல பாராமுகமாக இருக்கின்றார்கள். ஏன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காணியை அபகரிக்க முற்படுவதாகவும் காணியுரிமையாளர் குற்றம் சாட்டினார்.
இப்போ பலாலி விமானத் தளத்தை கடலுக்குள் விஸ்தரிப்பதற்கு ஜப்பானட உதவி செய்யவிருப்பதாகவும், அது பூர்த்தியடைந்ததும் இடம்பெயர்ந்த வலி வடக்கு மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றலாம் என்று ரணில் கூறியதாக விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மறுபுறத்தே இராமநாதன் (சுதந்திரக்கட்சி) என்ற நபர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகின்றார்.
மக்களிடத்தில் தாமும் செயற்படுவதாக பாவனை காட்டிக் கொண்டே மக்களை தம் வசம் திருப்ப முற்படுகின்றார்கள்.
இங்கு சில காணிகளை அடையாளத்திற்கு விட்டுவிடுவதும் புகைப்படங்கள் எடுத்து பத்திரிகைகளில் இணையங்களில் போடுவதும் எவ்விதமான நன்மைகளும் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.
நிலம் என்பது ஒரு தேசத்தின், தேசிய இனத்தின் உரிமையாகும். நிலத்தினை பயன்படுத்திக் கொள்ள உரிமையை உள்ளடக்கியதாகும். இங்கு அடையாள அரசியல் வழிதான் மார்க்கமென கருத்துருவாக்கப்படுகின்றது.
இதனால் அரசியல்வாதிகளை நம்பியும், அரசியல்வாதிகளிடம் இரந்தும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்துகின்றார்கள். இவ்வாறு மக்களை இரந்தும் நிலையை ஏற்படுத்துவதே ஒரு அவமானகரமான செயற்பாடாகும்.
இராணுவம் காடுகளை அழித்து, தரிசு நிலங்களை எடுத்தும், தனியார் காணிகளை எடுத்தும் முகாமிட்டிருக்கின்றது.
மக்களின் ஒப்புதல் இல்லாது தொழில்பேட்டை அமைப்பதற்காக, அனல் மின்னிலையம் அமைப்பதற்காக மக்களிடம் இருந்து காணிகளை அபகரித்து உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து இராணுவம் 1970 ஆண்டுக்கு முற்பட்ட நிலைக்கு பின்வாங்கப்பட வேண்டும் என்பதை மக்கள் வலியுறுத்த வேண்டும்.
1970களுக்கு முன்னரான நிலைக்கு இராணுவ முகாம்கள் பின்செல்லவேண்டும் என்ற மக்கள் இயக்கம் என்பது அவசியமானதாகும்.
தமிழ் மக்களின் உரிமையை சலுகையாகவும், தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்வதிலும் தான் அரசியவாதிகள் கவனத்தினை செலுத்துகின்றார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகள், வழக்கறிஞர்கள் என தேர்தலில் வாக்குக்களை பெறுவதற்காக போராடுகின்றார்கள்.
ஆனால் மக்களின் உரிமை என்பது கால்தூசிக்கும் பெறுமதியற்றதாகவே இருக்கின்றது என்பதுதான் உண்மை.
நடக்கட்டும் தேர்தல் திருவிழா மக்களே போலிகளை இட்டு தகுந்த பாடம் புகட்டுங்கள்.
(இந்தப்படத்தில் இருக்கும் பெரியோர் தமது காணிக்காக போராட்டம் நடத்தியவர்கள். இவர்களை பிச்சை எடுக்க வைப்பதே இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்)
22.08.2015
00= = இந்தக் காலத்தில் பிஜேபி பிரதிநிதியை சுமந்திரன் சந்தித்தார். இந்திய இந்துத்துவ தேசியம், ஒன்றுபட்ட இலங்கை என்ற போக்கின் இணைவுப் புள்ளி. = = 00
atSpot2a2 anASsougaSucurst 2ne0diiml1f5 ·
அரசியல் திருப்பம்- சர்வநாசம்!!!
தேர்தலின் ஊடாக ஜனநாயகம் வாழ்வதாக இருக்கின்ற பொருளாதார அமைப்பு திரும்பத் திரும்பக் கூறும் ஒரு அம்சமாகும். இப்போ நடந்து முடிந்த தேர்தலும் கூட சிறந்த ஜனநாயகம் வெளிப்படுத்தப் பட்டதாக இடதுசாரி விக்கிரபாகு உட்பட பலர் புழங்காகிதம் அடைந்தார்கள். இவர்கள் ஒரு படிமேலே போய் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக அமைதியாக நடந்ததாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அனைவரும் திருப்தி கொள்கின்றார்கள்.
தை 8 அன்று நடைபெற்ற மாற்றம் என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்தொன்றேயாகும். இப்போதும் இரண்டாவது தடவையாக மாற்றத்தினை கொண்டு வந்திருக்கின்றது. இங்கு தமிழ் தேசத்தின் இறைமை, ஒடுக்கப்படும் தேசிய இனங்களின்- மதச் சிறுபான்மையினரின் வரையறுக்கப்பட்ட ஜனநாயகக் கோரிக்கையை மறுத்துரைப்பதுடன் போராட்டத்தினை சிதைப்பதன் நோக்கோடு அரசியல் நகர்வுகள் இடம்பெறுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் உரிமை என்பது இனவாதமல்ல அது மக்களின் இறைமை சார்ந்தது.
இப்போ நடைபெற்று முடிந்த தேர்தல் என்பதே தேர்தலுக்குள் ஒரு தேர்தலாக குறிப்பிட்ட வர்க்கத்தினை சார்ந்து தெரிவாகியுள்ளனர். இந்தப் தரம்பிரிப்பை அடையாள (சாதிய- பிரதேச- பாலின அடிப்படையில்) அரசியல் ஊடாக விளங்கிக் கொள்ள முற்படுவது வெறும் அபர்த்தம். இந்த அபர்த்தப் போக்கை சமூகத்தில் உள்ள வலதுசாரிப்பிரிவுகள் செய்து வருகின்றது என்பது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியது அல்ல. அடையாள அரசியல் ஊடாக அறிய முற்படுகின்ற வேளையில் கடும் போக்கு என்றும் மென்போக்கு என்றும் நாமம் சூட்டப்படுகின்றது
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தரகுமுதலாளித்துவ - மேட்டுக்குடிகளின் உறுப்பினர்களைத் தலைமையாகக் கொண்ட அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்களை இணைத்துக் கொள்வது என்றால் அது எடுபிடிகளாக வைத்திருப்பதற்கு மாத்திரமேயாகும். இந்த நிலையில் தரகுமுதலாளித்துவ அமைப்பு என்பதே தேசிய நலனை எந்தக் காலத்திலும் சேகவகம் செய்யாது என்று தெரிந்தும் மென்சக்தி என்று அதனை வரையறுத்தும் மற்றவர்களை தீவிரவாதிகளாக, இனவாதிகளா, பயங்கரவாதிகளா, பிரிவினைவாதிகளாக முத்திரை குத்தப்படுகின்றது.
தேர்தல் என்பதும் அதில் தெரிவு செய்யப்படும் நபர்களைக் கொண்டு ஒரு கொள்கை சரியானது என தீர்ப்பளித்துவிட முடியாது. இன்று போதிக்கப்படும் சிந்தனை வெளிப்பாடுகளில் இருந்து தேர்தலை நோக்குவது பொருத்தமாக இருக்கும் .
உரிமையை மறுப்பது ----
பொது அமைதியையும், சட்டத்தினையும், மக்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு கோவிலில் திருவிழாவில் ஒடுக்கப்படுபவர்கள் பங்கு பற்றாத நிலை ஏற்படுமானால் திருவிழா நடத்த முடியாது என்று நீதிமன்று வழிகாட்டிள்ளது. நீதிமன்றம் காவல்துறைக்கு வழங்கியுள்ள தீர்ப்பானது பொது அமைதிக்கு பங்கம் விழைப்பதாக இருந்தால் மனித சுதந்திரத்தினை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. பொது அமைதிக்கும் பக்கம் இருப்பது என்றால் திருவிழாவை தடைசெய்யலாம்.
சாதாரணமாக நடத்த முடியும் என்றால் நடத்துங்கள், தீய சக்திகளின் ஆபத்து இருப்பதால் திருவிழா நடத்த முடியாது என்று முடிவெடுக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
ஆக அமைதியாக நடத்திக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் ஒடுக்கப்படும் மக்களுக்கான உரிமையைப் பற்றிய அக்கறை கொள்ளத் தேவையில்லை.
ஆம் ஆண்டாண்டு காலம் அடிமையாக ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமையை வலியுறுத்தாது சட்டம் உயர்சாதிய விழுமியங்களை சிதைக்காது பாதுகாக்கும் போக்கைக் கொண்ட நீதிமன்ற உறுதிப்படுத்தாது பழைய சமூகத்தின் ஒடுக்குமுறை வடிவத்தை பாதுகாத்தே நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இரு என்பதாகும்.
இங்கு மக்களின் ஜனநாயக விழுமியங்களை மறுத்துரைக்கும் சாத்தியவாத அரசியல்வழியாகும். இலங்கையில் இணைந்து போல, எல்லாம் இழந்து விட்டாயிற்று இனபேதமில்லாது ஒன்றாக போராடுவோம் என்ற ஜீவகாரூண்யம் முன்னிறுத்துவதாகும்.
தன்னார்வ போக்கு
இதனை இலங்கைத் தேர்தலின் முடிவுகளுடன் ஒப்பிடும் போது ஒரு கருத்துருவாக்கம் நடைபெறுகின்றது. தேர்தல் நடத்துவதில் வெற்றி என்றும் தேசிய அரசாங்கம் என்று உருவாக்கியிருக்கின்ற வேளையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பண்புகள் என்பதும், தேர்வு செய்யப்படாத உறுப்பினர்கள் யார் என்பதையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இதனை குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசிய முதலாளித்துவ சக்திகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். சுரேஸ், அரியனேந்திரன் போன்றவர்கள் தோல்விக்குள்ளாகியிருக்கின்றனர்.
தமிழ் தேசியத்தினை அகற்ற கிழக்கில் தேசியச் சக்திகளுக்கு மாற்றாக இந்துத்துவாதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறே வடக்கில் வாயை மூடிக் கொண்டிருப்பவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சுமி- சாம் இற்கு எதிர்நிலையில் நிற்கக் கூடியவர்கள் அகற்றப்பட்டுள்ளார்கள்.
போலி தேர்தல் முறையில் கூட வடிகட்ட முடியும் என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஆனாலும் மக்களின் ஒடுக்குமுறை என்பது ஒடுக்கப்படும் தேசத்தின்- தேசிய இனத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்வதினால் அடக்குமுறை, சுரண்டல் இல்லாமல் ஒழிவதில்லை. சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பதை தமதுபதிவிக்காகவும் தமது பொருளாதார உயர்விற்காகவும் பயன்படுத்தப்படுமேயன்றி அதற்கு மேலாக எதுவும் நடக்கப்போவதில்லை.
இவ்வாறே தமிழ் தேசத்தின் உரிமை என்பதை அபிவிருத்தி அரசியலுக்குள் நுழைக்கும் அழுத்தத்தினை கொடுக்கும் முகமாக வடக்கில் தெரிவு செய்யப்பட்ட தென்னிலங்கை பேரினவாதக் கட்சியைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கியிருப்பது என்பது அபிவிருத்தி அரசியல் நோக்கிய அழுதத்தின் தொடக்கமேயாகும்.
இந்த நிலையில் கூட்டமைப்பு பதவியேற்பு விழாவில் இல்லை என்று தன்னை பாவனை காட்டி - நான் விலகி நிற்கின்றேன் என்ற மனப்போக்கை உருவாக்குவது உருவாக்க முயற்சிக்கின்றது.
த.தே. கூட்டமைப்பு என்பதே தமிழ் மக்களின் இறைமைக்காக போராடும் அமைப்பு இல்லை என்பதும் அது இணக்க அரசியலின் ஊடாக ஈழ தேசத்தின் இறைமையைச் சிதைக்கும் பௌத்த பேரினவாதத்தின் வேலையை ததேகூ செய்து முடிப்பார்கள்.
வவுனியாவிற்கு அப்பால் சிங்கள மக்களுக்கு செல்வதில்லை. சிங்கள பிரதேசத்தில் இருக்கும் பௌத்த- சிங்கள உணர்வுதான் எப்பவும் தீர்மானிக்கும். இங்கு முரண்பாடுகள் என்பது தமிழ்ர் உரிமையை கோரினால் தெற்கில் இனவாதம் ஊண்றும் என்பது என்ஜிஓ சிந்தனை. பௌத்த நிலமேகளையும் தேரர்களும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளையும் கவனிப்பவர்களாகவும் அரசியலை தீர்மானிப்பவர்களாகவும் உள்ளார்கள்.
-- பௌத்த மையவாத பேரினவாத வலது- போலி இடதுசாரகளிகளின் போக்கும்
-- அபிவிருத்தி அரசியலை முன்வைக்கும் டக்கிளஸ் இன் அரசியல் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இவர்களுக்கு இடையே யார் உண்மையான பெருந்தேசியத்தின் கைத்தடி என்ற போட்டி இடம்பெறும் இதற்கு துணையாக பழைய ஒட்டுக்குழு (இபிடிபி) என்ற வடுச் சொல்லைப் பயன்படுத்தியே சுமி- சாம் தம்மை புனிதமானவர்களாக காட்டிக் கொண்டு ததேகூ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதை எதிர்பார்க்கலாம்.
இதற்கென இருக்கும் பத்தி எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் தரகுமுதலாளித்துவ சக்திகளை நோகவிடாது கட்டிப் பாதுகாப்பார்கள். அரசியலை கற்பதும், முடிவெடுப்பதும் சில ஆய்வாளர்களின், பந்தி எழுத்தாளர்களின், அரசியவாதிகளின் வெற்றுப் பேச்சுக்களில் இருந்து அல்ல.
இந்த சமூகத்தினை சமூக விஞ்ஞான ரீதியாக அறிந்து கொள்வதும், சமூக விஞ்ஞான ரீதியாக வியாக்கியானம் செய்ய பயிற்சி எடுப்பதும், சமூகத்தினை மாற்ற சமூக விஞ்ஞானப் பார்வையின் ஊடே முயற்சிப்பதாகும்.
இன்று ஈழ தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தினை சிதைக்கின்ற வழிகளில் ஏவலாளர்களைக் (தரகு வர்க்கமான த.தே.கூ) கொண்டே ஒடுக்குமுறையாளர்கள் செய்யப் போகின்றார்கள். ஏற்கனவே சேடமிழுத்துக் கொண்டிருக்கின் ஈழத்தேசத்தின் இறைமையை சிதைப்பதை நோக்கமாக கொண்டும் அதன் அடிப்படையில் கைத்தடிகளைக் கொண்டதாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கப் போகின்றார்கள். இதில் ஒடுக்கப்பட்ட சாதிகள் அல்லது பெண் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் தமிழ் தேசத்தின் பிரச்சனைக்கு தீர்வுகள் எட்டப் போவதில்லை, எதுவும் ஆகப்போவதில்லை. தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சங்கு ஊதப்படுகின்றது.
குறைந்தபட்சம் திம்புக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட வேண்டிய தேவை முன்எப்பொழுதும் இல்லாதவாறு உள்ளது என்பதே இன்றைய நிதர்சனம்.
31.05.2015
3t1 nSMdSahpoiyclns ocg2S01o5redse ·
சாபப்பட்ட தமிழ் மக்களும் - தலைமைகளும்!!
சுமந்திரனுக்கும் கஜேந்திரனுக்கும் இடையேயான உரையாடல் 150515 அன்று சுவாமி ஜேக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வாறான உரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். இவ்வாறான உரையாடல்கள் ஆரோக்கியமான நிலையைத் தோற்றுவிக்கும். அரசியல் நீக்கம் கொண்ட சிந்தனைப் போக்கிற்கு கடிவாளம் இடக்கூடிய வகையில் இருக்க முடியும்.
இங்கு எழுந்த கேள்வியே சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தா அல்லது கூட்டமைப்பின் கருத்தா என்ற கேள்விக்கான வெற்றிடமாக தொடர்ந்து இருந்துள்ளது. அன்றைய உரையாடலில் சுமந்திரன் தன்னை மையப்படுத்திய கருத்துக்களைத் தான் முன்வைத்திருந்தார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் கட்சிகளிடம் உள்ளதா என்பது பற்றிய ஐயத்தை கலைக்குமா என்பது பற்றி அலசுவது அவசியமாகின்றது.
கைதிகள்
கைதிகள் தொடர்பாக நம்பிக்கை ஏற்படுத்தும் வார்த்தைகளை வெளிப்படுத்தினார். கைதிகள் கட்டாயம் விடுதலை செய்யப்படுவார் என்று கூறியது ஒரு பக்கம் இருக்க. கைதிகளில் சிலர் வழக்குகளை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றது. மேலும் இவர்கள் நேரிடையாக மக்களைத் தாக்கியவர்களும் உள்ளடக்கம் என்ற கருத்தானது பலகேள்விகளை முன்னெழுகின்றது.
ஈழப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகளேயாகும். இந்தக் கைதிகளை குற்றவாளிகளாகக் கருதுவதும் அவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்கும் முரண்பாட்டை சுமந்திரம் தந்திரமாக அரசியல் நீக்கம் செய்ததாகும். 1987களில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் அனைத்து சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர், ஆனால் பத்மநாபா உட்பட 21 பேர் கொண்ட சதிவழக்கு மாத்திரம் மாற்றத்திற்கு உள்ளாகவில்லை. மட்டக்களப்பில் தாக்குதல் நடத்திவிட்டு ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்கள், நாகப்படையைச் சேர்ந்த 50 போராளிகள் கூட விடுதலை செய்யப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்கள் நிலை என்பது பற்றிய கருத்துக்கள் கூட வெறும் கைதிகள் விடுதலையின் உள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றது. இவற்றை சட்டவாக்கத்தினுள்ளும், தனிப்பட்ட கூட்டமைப்பின் செயல்வீரமாகவும் குறிக்கி விடப்படுகின்றது.
இங்கு அரசியல் கைதிகள் என்பது முள்ளிவாய்க்காலில் சரண்டைந்தவர்களும் உள்ளடங்கும். ஆனால் மக்களைத் தாக்கியவர்கள் என்ற வெற்றுக் கருத்தாக்கத்தை சரியானதென அரசியல்மயப்படுத்தும் போக்கு ஆபத்தானதாகும்.
இங்கு சிங்கள பேரினவாதத்தின் அரசியல் முறை என்பது மாத்திரம் அன்று அது ஒரு அடக்குமுறை இயந்திரமாகும். இந்த அரச இயந்திரம் சிங்கள மக்களையும் அடக்குகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிமன்றம் என்பது மக்களை அடக்கி வைப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரச இயந்திரம் ஆகும். நீதிமன்றம் என்ற அரச இயந்திரத்தில் பல பிரிவுகள் இருக்கின்றது. மக்களின் குற்றங்களை விசாரிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதாக இது உள்ளது. எதிர்காலத்தில் போராட்டங்கள் கிளர்ச்சிகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கின்றது. சிறை, கைது, காணாமலாக்கல் என்று பயமுறுத்தும் கூட்டு உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிந்தனையாகும்.
இப்படித்தான் இலங்கை அரசு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டது. இனி நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கை இணைக்க பாராளுமன்றத்தின் ஊடாக தடைசெய்யப்படும். உண்மையில் நீதிமன்றம் என்பது சுயாதீனமானது என்று முதலாளித்தவம் பாசாங்கு செய்யும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை.
தேசியக் கோரிக்கைகள் முதலாளித்துவ ஜனநாயக உரிமை சார்ந்ததாகும். அதனால் இனங்களுக்கான சமத்துவமான அடிப்படையில் அரசியல் யாப்பின் ஊடாக நிறைவேற்றப்படும் உரிமைகள் என்பதை தவர்த்துவிட்டு பார்க்கும் பார்வை முன்வைக்கப்படுகின்றது. இவைகள் நிறுவனத்திற்கு உட்பட்டவையாக மாற்றப்படுகின்றது. நீதிபரிபாலனத்தினுள் தேடுகின்ற அரசியல் முறை என்பது வெறும் காகிதத்திற்கு ஒப்பானதாகும். சட்டவாக்கத்தினுள்- நிறுவனத்தினுள் குறுக்கிப் பேசும் அரசியல் என்பது ஒரு இனத்தினை (சிங்கள தேசிய இனத்தினை) முன்னிறுத்திய போக்கில் அமைந்து விடுகின்றது. இங்கு முதலாளித்துவ வகைப்பட்ட அரசியல்யாப்புக் வரையறையில் அமைந்த உரிமையும், நிறுவனங்களினால் வழங்கப்படும் சலுகையும் ஒன்றல்ல.
இராணுவ முகாம்கள்
இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த காணிகள் மீள கையளிக்கப்பட்டன. இவற்றையிட்டு காணி உரியைாளர்கள் சந்தோசம் அடைந்தார்கள். அவர்களின் சந்தோசம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. இங்கு எமது சமூகத்தில் உள்ள நிலப்பற்று- சொத்துடமை மீதான அதீத நாட்டம் என்ற நிலையில் இவைகளை அதிகாரவர்க்கத்தினாலும், அரசியல்வாதிகளினாலும் பயன்படுத்தப்பட்டது பற்றி இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
காணிகள் சில ஒப்படைக்கப்பட்டது என்பது நடைபெற்ற வேளையில் வேறு காணிகளை விஸ்தரிப்புச் செய்யப்பட்டது ஒரு புறமிருக்க. கிழக்கில் பல கிலோமீற்றர் தூரம் கொண்ட காணியை கடற்படைக்காக (இது மட்டக்களப்புக்கும்- மூதூருக்கும் இடைப்பட்ட பகுதில் வாகரைக்கு அண்மையில் உள்ளது.) ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே சங்குபிட்டியில் இருந்து மன்னார் போகும் வரையிலான இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டு அதன் நடுவே இராணுவமுகாம் உள்ளது. இவ்வாறே கிளிநொச்சி தொடக்கம் முல்லைத்தீவு வரையிலும் உள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு இடங்களில் இராணுவமுகாம் உள்ளது ஏன் கண்ணுக்குப்படவில்லை என்பதே இங்கு எழும் கேள்வி. 200000 (சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவலின்படி) இதில் 30 மேற்கு, தெற்கிலும் மிகுதி 170000 வடக்கு கிழக்கிலும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டது மாத்திரம் அல்ல. மக்கள் இராணுவமயமாக்கலின் கீழ் வாழ்கின்றனர். இராணுவத்தில் 30000 கிழக்கிலும் மிகுதி வடக்கிலும் இருப்பதாக கூறப்படுகின்றது.
காடுகளை அழித்து இராணுவமுகாம் அமைத்துக் கொண்டு இராணுவம் சார் உற்பத்தியையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
இவ்வாறே காட்டுமிருகங்கள், வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். இதுவும் வளமும் மிருகங்களை பாதுகாக்கும் நோக்கமும் கொண்டதாகும் இருக்கின்றது. இயற்கை வளத்தை அழிப்பதும், தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொண்டு அதனை ஆக்கிரமிப்பது பற்றி எம்மவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.
எமக்கு எலும்புத் துண்டைக் காட்டி பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கின்றது. இது வெறும் இராணுவப் பிரசன்னம் என்ற அடைமொழிக்குள் இருந்து அரசியல் செய்வது போல் அல்ல. ஒரு தேசிய இனத்தின் வளம் அந்த வளத்தை அனுபவிக்கும் உரிமை, வளர்த்தெடுக்கும் உரிமை சம்பந்தப் பட்ட பிரச்சனையாகும். இதனை மறுதலித்து அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கருத்து முன்வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
மின்நிலைய கழிவும் அரசியலும்
மின்நிலையம் சம்பந்தப்பட்ட நபர்களைப் பாதுகாப்பது என்பது முதலாளிகளை பாதுகாப்பதாகும். இதில் இடைத்தரகர்களாக இருக்கின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளே.
உடனடியாக சுற்றாடலை சுத்தப்படுத்தும் பணியை ஆரம்பிக்க வேண்டும்.
நிறுவனத்தில் இருந்து நட்ட ஈடு பெறப்பட வேண்டும்
சுத்தப்படுத்துவதற்கான செலவீனங்களை அந்த நிறுவனமே மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காண தண்ணீரை போதியளவு கொடுப்பதற்கான முயற்சியை மேற்கொள் வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் அதன் செலவினத்தை மக்கள் மேல் சுமத்தக் கூடாது.
எதிர்காலத்தில் மின்நிலையம் மாகாண சபையின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படவேண்டும்.
சுற்றாடல் மாசுபடாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றை பற்றி அக்கறை கொள்ளாது அரசியலாக்கக் கூடாது என்று கூறுவதன் மர்மம் என்ன? இங்கு மின்நிலையத்தினை நிர்வகிக்கும் நிறுவனத்தையும், உரிமையாளரையும் பாதுகாப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். அனைத்தும் அரசியலே என்பது சமூக விஞ்ஞானப் போக்கு அற்ற அரசியல்வாதிகளினால் மக்களின் மீது தொடுக்கும் அநீதியா’கும்.
பிரச்சனைகளை தனிமனிதப் பிரச்சனையாக்கல்
அன்று நடைபெற்றிருந்த உரையாடலை தனிமனிதர் சார்ந்ததாக குறுக்கும் அவலம் நடைபெற்றது. இங்கு தனிமனிதர்களின் முரண்பாடாக குறுக்கி விடுவது சமூக விஞ்ஞானப் பார்வை வளர்ச்சியடையாத நிலையில் சாத்தியமாகின்றது. அங்கு பிரசன்னமாகிய பிரமுகர்களின் பொருளாதாரம், அவர்களின் சந்ததிகள் வெளிநாடுகளில் அல்லது அங்கேயே சகல வளம் கொண்டு வாழமுடியக் கூடிய பொருளாதாரம் கொண்டவர்கள் தான். ஆனால் ஒரு தேசத்தின் நலனின் அடிப்படையில் இருந்து தான் பிரச்சனைகளைப் அணுகப்பட வேண்டும்.
இவர்களின் கபட அரசியல் என்பது மக்களின் உரிமையை நசுக்கின்ற தொழிலை சிரம்படச் செய்கின்றார்கள். இவர்கள் மக்கள் நலன் என்று வெளியில் உலாவிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரியாகவே இருக்கின்றார்கள்.
இந்தவகையில் விடயங்களை இங்கு கவனித்தல் நல்லது.
புலிகளின் கருத்துக்களையோ, அவர்களுடன் அணிசேர்கையோ வைத்திருக்கவில்லை. அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. மாறாக தாம் தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடுவதாக கூறுகின்றார் சுமந்திரன். (No we do not have any allegiance to the LTTE nor are we committed to their ideology. We stand up for the rights of the Tamil people but we are not in favour of terrorism nor do we encourage it and everyone knows this. ) என ஆளும் வர்க்கத்திற்கு முன்னால் தம்மை தோல்லுரித்துக் காட்டியிருக்கின்றார்கள்.
தற்பொழுது கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும், குறிப்பாக கட்சிப்பதிவு தொடர்பில் பேசிவரும் முன்னைநாள் போராட்ட அமைப்புக்கள் எவைவும், தங்களின் சொந்த முகத்தில் தமிழ் மக்களை எதிர்க்கொள்ள முடியாதவை. சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தாத்தன், அடைக்கலநாதன் ஆகியோருக்கு சொந்தமும் இல்லை. அதனால் தான் அவர்கள் புதியதொரு முகத்திற்குள் மறைந்து கொள்ள முற்படுகின்றனர்.
இங்கு மற்றைய இயக்கங்களுக்கு கடந்த கால அரசியல் காரணமாக ஏற்பட்ட சமூக (social Stigma ) வடு ஆதாரமாகக் வைத்துக் கொண்டு ஒதுக்குவதில் காட்டும் முனைப்பு என்பது மக்களின் நலனின் இருந்து மேற்கொள்ளப்படவில்லை. நிலமானிய தூய்மைவாதச் சிந்தனையானதை மென்மேலும் சமூகமயப்படுத்துவதில் குறிப்பிட்ட வெற்றியை பழைமைவாதத் தலைமை கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு செல்லபவர்கள் வரிசைகளின் நிற்கின்றார்கள். விதம் விதமான உணவு, பயணம் செய்ய வாகனம், ஓய்வூதியம் எனவும் பல இத்தியாதிகளை பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதனால் பலர் இதற்கு அலைவதும் தமக்கு முன்னே வரதுடிப்பவர்களை அடிக்கி வைப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வின் அடிப்படையில் தான் பலர் பிரச்சனையை அணுகுகின்றார்கள்.
ஆனால் யார் முள்ளிவாய்க்காலில் வீழந்த தேசத்தின் உரிமையை மீட்டெடுக்கப் போகின்றார்கள் என்பதே அடிப்படையாகும்.
இதயத்தால் ஒன்றுபடல்
கடந்த 6 வருடகாலத்தில் இருந்து கையறு நிலையை முன்னிறுத்திய பேச்சுக்களே முதன்மையாக இருந்தது. இந்த 6 வருட காலத்தில் மக்களை அணிதிரட்டி அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து என்ன போராட்டத்தினை நடத்தினர்? ஏன் இவர்களால் மக்களை அணிதிரட்ட முடியவில்லை? பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்த இவர்கள் என்ன செய்தார்கள்?
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலின் அதிர்வினாலும், அடக்குமுறையாலும் பல நேரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் போராடியிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு உண்மையா போராட்டத் தலைமையாக இருந்திருக்கும் பட்சத்தில் இன்றும் வீரியமா இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. ஆனால் முடிந்தவரை மழுங்கடித்து விடுவதில் தான் முனைப்பில் இருந்தார்கள் இந்த தலைமைகள்.
புலிகளின் முன்னைய விசுவாசிகள் புதிய அதிகார வர்க்கமாக தோற்றம் பெற்றுள்ளனர். இவர்கள் இன்று வெவ்வேறு அமைப்புக்களாக பிரிந்துள்ளனர். தமது நலனையும் வெவ்வேறு பிராந்தியங்களின் நலனைப் பாதுகாத்து வருகின்றார்கள். இவர்கள் கனவான் (லொபிவேலை) அரசியலை முன்னெடுப்பவர்களாக உள்ளனர். இவர்கள் புலிகளைச் சொல்லி தமது நலனைப் பேனுபவர்களாக உள்ளார்கள்.
புதிய அதிகார வர்க்கத்தினை தீர்மானிப்பது ஆளுமை செலுத்துகின்ற அரசியல் உலகம் தான். புதிய அதிகார வர்க்கத்தை வளர்த்துவிடுவதில் பிராந்திய, உலக வல்லரசுகள் தயாராக இருக்கின்றன. உலக வல்லரசுகளின் நோக்கம் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகும்.
2009 பின்னர் மக்களை குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்த சக்திகள் வெற்றி கண்டுள்ளன. மக்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கான கருத்துருவாக்கம் என்பதை அன்னிய (மக்கள் நலனை அல்ல) சக்திகளை நம்பியிருக்கும் செய்து வந்திருக்கின்றன.
இந்த புதிய அதிகார வர்க்கம் இந்தியா, சிறிலங்கா உளவுப்படையுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார்கள். தமக்கு முரணானவர்களை காட்டிக் கொடுப்பதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள். அரசியல் நீக்கத்தின் தொடர்ச்சியாக பல அம்சங்களிலும் பலமுனைகளிலும் நடைபெறுகின்றது.
பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆனார்கள் என்பதையும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். இரண்டு மக்கள் குழுக்களின் பிரதிநிதி தலைவர்கள் உறுப்பினர்கள் குடும்ப நண்பர்கள் ஆனார்கள். ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகி அவ்வவ் இனங்களின் உயர் குடி அந்தஸ்துக்கு ஏற்றவாறாக நடந்து கொள்கின்றனர். இவர்களிடையே இனம், மொழி, மதம் என்ற பேதங்களை விட்டுவிட்டு தொழில் கூட்டாளிகள் ஆகியிருக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு வருபவர்களை விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள் என்பதும் பலஸ்தீன அனுபவங்களில் இருந்து பெறமுடிகின்றது.
இங்கு பசியால் வாடியவன் பாண் கேட்ட போது கேக் சாப்பிடச்சொல்லி கூறிய சிந்தனைக்கும் இடையேயுள்ள இடைவெளிதான் இதயத்தால் ஒன்றிணைவதாகும். இது ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்படுபவனுக்கும் உள்ள இடைவெளியில் இருந்து அணுக வேண்டும். இவர்கள் சுமந்திரன்- சம்பந்தனுக்கும் மைத்திரிக்கும் உள்ள உறவு என்பது ஒரே வர்க்க உறவாகத் தான் இருக்கும். தாய்லாந்தில் பேச்சுவார்த்தைக் சென்ற பிரதிநிதிகளுக்கு தாராளமாக பணமும், உல்லாச வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதை திரு பாலசிங்கம் வெளிப்படுத்தியதை இந்த நேரத்தில் நியாபகத்தில் கொள்வது நல்லது.
வல்லரசுகளும் தமது தமைமையும்
சுமந்திரனின் நோர்வேப் ’(2012) பயணம், சிங்கப்பூர் உடன்படிக்கை, கனடியப் பயணம், அவுஸ்ரேலியபப் பணயம் என பல நிகழ்வுகளுக்குப் பின்னால் சுமந்திரன் உள்ளார். இங்குதான் சுமந்திரனின் கருத்தா அல்ல கூட்டமைப்பின் ஓட்டுமொத்தக் கருத்தா என்பதில் ஐயம் கொள்ள வேண்டியிருக்கின்றது.
தேசத்தின் எல்லைக் காண போராட்டம் என்பது 1915களில் ஏற்பட்டு விட்டது. தேசத்தின் வளர்ச்சி என்பது மந்தமாகவும் அரைகுறையாகவும் வளர்ந்துள்ள நிலையில் தான் சுதந்திரத்திற்குப் பின்னரும் இருந்தது.
இது 1983 இற்கு பின்னர் சர்வதேச அரசியல் சூழ்நிலையாலும், இந்தியாவின் தலையீட்டாலும் வீங்கி வெடித்தது. ஆனாலும் புலிகள் தேவையற்ற நிலையில் 2009 முள்ளிவாய்காலில் சவப்பெட்டி அடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் என்பதே தேசத்தின் சிதைப்புடன் தான் முற்றுப்பெற்றது. இதனைப் புரிந்து கொள்ளாது தேசத்தின் வளர்ச்சிப் போக்கை தரைப்படுத்தல், வேலையில்லாப்பிரச்சனை, விரக்தி என்று தட்டையாகப் புரிந்து கொள்கின்ற நிலை பெரும் ஆபத்தானதாகும்.
இவற்றின் விளைவே சிவசங்கர் மேனன், நாராயணனின் அழுத்தத்திற்கு பணிந்து போய் இருந்த நிலமையாகும். இதே போல நாச்சியப்பன் 13 அப்பால் போகவேண்டாம் அதற்குள் ஒரு முடிவிற்கு வாருங்கள் என்று அழுத்தம் கொடுத்த போது ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.
மக்களிடம் இருந்து அரசியல் அகற்றி வைப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். மக்களுக்கு அரசியல் விடயங்கள் தெரியவைக்கக் கூடாது என்பதில் திட்டமிட்டு செயற்படுகின்றார்கள். தமது வர்க்க நலனை மறைப்பதற்கு பயன்பாட்டுவாதம், அடையாள அரசியலையும், இணக்க அரசியல் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். மக்களைப் பார்வையாளராக வைத்திருக்க வேண்டும் என்பது உலக நிதியாதார அரசியல் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகும். இந்த நிலையில் தான் ஜோன் கெரியின் இன்றைய 2015 விஜயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
புலிகளை அழித்தபின்னர் சமஸ்டி அடிப்படையில் தீர்வு என்ற நயவஞ்சக அரசியலை ஏற்றுக் கொண்டவர்களே தமிழ் கட்சிகள். இங்கு வல்லரசுகள் எனப்படுபவை தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மக்களின் உரிமையை எவரும் தாம்பாளத்தில் வைத்து தரப்போவதில்லை. தமிழ் கட்சிகள் மக்கள் சார்ந்த அரசியலில் முனைப்பு காட்டவில்லை. மக்களை அரசியல் மயப்படுத்துவதன் ஊடாகவே புதிய சமூகத்திற்கான போராட்டத்தினை நடத்த முடியும்.
இன்றைய அரசியல் போக்கானது சிங்கள பௌத்தபேரினவாதத்தின் மையப் போக்கில் இருந்து சிறிதும் பிசகாத பொதுவுரிமையை நிறுவனங்களில் தேடலை உருவாக்கும் சிந்தனையை திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இதற்கு பெரும்பான்மையான அரசியல்வாதிகள் பின்னிக்கின்றார்கள்.
மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம்!!!
18.09.2015
1rt8a lnSopsSofeopntembegsr 2nioreus0o1dfn5mSs ·
சுயநிர்ணயமும் - ”சர்வதேச நீதியும்” !!!
ஈழ மக்களின் உரிமையை மறுதலித்த அரசின் ஒடுக்குமுறைகள் போலிச் சுதந்திரத்தின் பின்னர் அதிகப்படுத்தப்பட்டு வந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது அகிம்சையில் இருந்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்து வந்தது.
சுயநிர்ணயத்திற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புடன் நேரடி ஆயுத போராட்டம் பெரும் அழிப்புடன் நிறுத்தப்பட்டது. அன்று மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட பார்த்துக் கொண்டு பார்வையாளர்களாக இருந்த ”சர்வதேச” சமூகம் இன்று நீதிவழங்கப் போகின்றதான் என ஈழமக்களை நம்ப வைத்திருக்கின்றது.
ஈழ தேசத்தின் மீதான ஒடுக்குமுறை தொடர்கின்றது. தன்னார்வ தொண்டு நிறுவன அரசியல் செய்பவர்களால் இனவழிப்பின் முறைமைகள் மூடி மறைக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டினுள்ளும், புலனாய்வு நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாகவும், இராணுவம் சார் உற்பத்தியும், பௌத்தநாடாக்கல் என்பது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெற்று 6 வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஈழ தேசம் அழிவை சந்தித்த போதும் அதில் இருந்து அரசியல் பொருளாதார ரீதியாக தன்மை மீளக் கட்டமைத்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்றது. தடைகள் என்பது அகத்தேயும், புறத்தேயும் உள்ளது. ஈழ தேசத்தின் இறைமையை மறுத்த கருத்துரைகள் பலமட்டங்களில் உள்ளது.
தேர்தலிற்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த தரகு முதலாளிய (சிங்கள- தமிழ்) வர்க்கத்தின் இணைவு என்பது ஈழ தேசத்தின் இறைமைக்கு எதிரான பெரும் தடைக்கல்லாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் தரகு முதலாளித்துவத்தை அதிகாரத்தில் இருந்தியுள்ள தேர்தல் என்பது தற்செயலாக நடைபெற்றதல்ல.
தரகு முதலாளித்துவம் (அன்னிய சக்திகளுக்காய் உழைப்பவர்கள், இணக்க அரசியல்வாதிகள் என ஏவலாளர்களாக செயற்படுபவர்கள்) முன்னெடுப்பதற்கு இரண்டு கட்சிகள் (பெரும்தேசிய கட்சிகள்) அவசியமற்றது எனவே இரண்டு கட்சிகள் இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு தரகுமுதலாளிகள் அன்னிய நிதிநிறுவனங்களின் நலன்களுக்காக சொந்த மக்களையும் நாட்டையும் காட்டிக் கொடுத்து செயற்படப் போகின்றவர்களே. இந்தநிலையில் சீன முகாமை தவிர்த்துக் கொள்வதற்காக இரண்டு கட்சிகளில் உள்ள மேலாண்மை; சக்திகள் இணைந்து செயற்படுகின்றன. இங்கு சீன முகாம் என்பது தற்காலிய முகாம் தோல்விக்கு உட்பட்டாலும் சீன பழைய மாதிரி உறங்கிய நிலையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும்.
தமிழ் பகுதியில் தேர்தல்
தேர்தலின் ஊடாக தரகு வர்க்கம் தான் தமிழ் தரப்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரகுவர்க்கத்தன் தெரிவு என்பது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்ட மீளவொரு தடையாகும். இந்த நிலையில் தேர்தல் முடிவை வைத்துக் கொண்டு த. தே. கூ பாதைதான் சரியாது என்றோ அல்லது மாற்றுப் பாதை இல்லை கற்பிதம் செய்வது சமூக வளர்ச்சிக் கோட்பாட்டை மறுத்துரைக்கும் சிந்தனை வடிவத்திற்கு அப்பால் ஒன்றுமில்லை. தமிழ் தரகு வர்க்கத்தின் பாதையை 1949 இருந்து 1982 வரையில் மாவட்ட அபிவிருத்தி சபையுடன் திருப்தி கொண்டடு சரணடைந்தது. பின்னர் மீளவும் 2009 பின்னர் தன் கையில் ”சுயநிர்ணயப்” போராட்டத்தினை தலைமை ஏற்றுள்ளது.
30 வருட போராட்டம் என்பது பல சாதகமான நிலையை தோற்றுவித்தாலும் 2009ல் இருந்து சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறு தரகு வர்க்கம் என்பது தனது எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கின்றது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கு மனிவுரிமைக் கூட்டத்தொடருக்கு அனந்தி, சுரேஸ், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அவர்களின் பயணம் என்பது அழுத்தங்களினால் தடைப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் வந்து எதுவும் சாதித்து விடப் போவதில்லை எனினும் இதில் இருந்து பெறும் செய்தி என்னவெனில் தேர்தல் என்பது மக்களின் சிறிய எழுச்சிக்குக் கூட பயங்கொள்கின்றது என்பதாகும். இது புலம் பெயர் சமூகத்தின் அல்லது வடக்கு கிழக்கு பகுதியிலாகட்டும் ஆளும் வர்க்கக் கூட்டு (தமிழ் - சிங்கள தரகுவர்க்கம்) செயற்படுகின்றது.
சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது மக்கள் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தாக இருந்து புரட்சிகர சிந்தாந்தத்தில் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு வெளியில் மாற்றுப் பாதை என்பது மக்கள் விரோதமானது, சுயநிர்ணயத்திற்கு எதிரான போக்கை கொண்டதாகும். இன்று இணக்க அரசியல் பாதையில் பயணிக்கும் அரசியல் தலைமையின் செயற்பாடுகளை உலக ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொள்ளும், அவர்களின் சமரசப் பாதையை போற்றிப் புகழும் இதில் இருந்தே மக்கள் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.
'சர்வதேச விசாரணை'
இன்று தமிழ் மக்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் 'சர்வதேச' விசாரணை என்ற மண்குதிரையைச் சுற்றியதாகவே இருக்கின்றது. ஈழமக்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே ”சர்வதேசம்” என்ற துரோகிகள் தம்மை கைவிட்டுச் சென்றார்கள் என்று அனுபவ ரீதியாக தெரிந்தே வைத்துள்ளார்கள்.
ஆனால் மக்கள் திரள் அரசியலை மறுதலித்த அரசியல் போக்கே அரசியல் தளத்தில் தலைமை தாங்குகின்றது. இந்த நிலையில் மக்கள் திரள் அரசியலை முன்னெடுக்கக் கூடிய இடதுசாரிகள் பலம்மற்ற நிலையில் உள்ள நிலையில் உள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று ”சர்வதேச” விசாரணை என்ற அபரிமித நம்பிக்கையாகக் கொண்ட அரசியல் போக்கு தன்னைத் தானே அம்பலப்படுத்தியே உள்ள நிலையில் ஈழ தேசத்தின் இறைமைக்கான போராட்டம் என்பது பக்க (அக) முரண்பாடுகளை ஜனநாயக ரீதியாக அணுகி அரவணைத்து உழைக்கும் மக்களின் தலைமையில் நடைபெற வேண்டிய வரலாற்றுக் கடமையை கொண்டதாக இருக்கின்றது.
மக்கள் மீது மேலாண்மை கொண்ட சக்திகளான தரகு வர்க்கம் என்பது 'சர்வதேசம்' என்ற மண்குதிரையை நம்பு என்று மீண்டும் மீண்டும் தம் இயலாமை அரசியலான இணக்க - சரணாகதி அரசியலை மக்கள் மீது திணிக்கின்றார்கள்.
போராளிகள் பயங்கரவாதிகளா?
ஈழ தேசத்திற்கான போராட்டத்தினை அரைநிலமானிய சிந்தனையில் இருந்து உருவாகிய குட்டிமுதலாளிய சக்திகளினால் தலைமை தாங்கப் பட்டது. குட்டிமுதலாளிய வர்க்கத்தின் தலைமையாகக் கொண்ட அமைப்பின் அமைப்புத் தவறுகள், போராட்டப்பாதைபற்றிய தவறுகள், அரசியல் வியூகம், தன்னை கட்டமைக்கப்பட்டவையாகவே இருக்கும். இது புலிகளின் அல்லது தலைமை என்பது இந்த சமூகத்தின் உற்பத்தியே அன்றி அதற்கு அப்பால் இருக்க முடியாது. தான் வலிந்து கொண்ட இலட்சிய வேட்கையில் தன்னுடைய நொந்த வர்க்க வெளிப்பாடுகளுக்கு ஏற்பட போராட்டத்தை நடத்தியது. ( புரட்சிகர வர்க்கத்திற்கான புரட்சிகர தத்துவம் என்பது இல்லாத காரணத்தினால் முள்ளிவாய்க்காலுடன் முடித்துக் கொண்டது) ஆனாலும் இந்தப் பலவீனங்கள் சர்வதேச உளவு நிறுவனங்கள், உள்வீட்டுச் சதி என்பன நந்திக்கரைவரை அழைத்துவரப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.
ஈழப்போராட்டத்தினை சிதைத்த சதியாளர்கள் தான் இன்று வெவ்வேறு ரூபத்தில் ”சுயநிர்ணயத்திற்கான” (போலி தீர்வான அதிகாரப் பகிர்விற்காக) போராட்டத்திற்கு தலைமையைக் கொண்டுள்ளது. தலைமை வகிக்கும் தரகு வர்க்கத்தின் குணாம்சம் காரணமாக மேற்குலகம் சார்ந்ததாகவே அன்று 1949 தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றனர்.
வெஜனத் தளத்தில் மேற்குசார்- தாராளவாத ஜனநாயகச் சிந்தனைக் (ஏகாதிபத்திய நலன்) கொண்ட சிந்தனையாக இருக்கின்றது. இந்தச் சிந்தனையில் இருந்துதான் போராட்டம் பற்றிய பார்வை சமூகமும் அதன் அங்கமான ஊடாகம், புத்திஜீவிகளும் அனுகின்றார்கள். மேற்குசார் பிரச்சாரத்திற்கும் நலனுக்கும் அடங்கிய சிந்தனையில் இருந்துதான் (ஏகாதிபத்தியங்களும்) இறைமைக்கான போராட்டங்களை அளவிட்டுக் கொள்கின்றார்கள்.
மேற்கின் கிருஸ்தவ ஜீவகாரூண்ய மையவாதச் சிந்தனையை ஏகாதிபத்தியம் நாலபக்கமும் விதைத்துள்ளது இந்தச் சிந்தனையைக் கொண்டு அளவிடும் போக்கு என்பது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் கருத்துருவாக்கிகள் தன்னார்வ சிந்தனையாளர், எழுத்தாளர், ஊடகவியலாளர், இலக்கியவாதிகள் என அனைவரிடமும் மேற்குசார் சிந்தனை நீதி நெறிதான் அளவுகோளாக இருக்கின்றது.
மேற்கு சிந்தனை வடிவத்தை
கலாச்சாலை அணுகுமுறைக் கண்ணோட்டம்
தன்னார் நிறுவனங்கள், ஜீவகாரூண்யம் என மிருகவதை, சுற்றாடல் மாசுபடல் என் தன்னார்வச் செயற்பாடுகள் ஊடாக சமூகத்தில்விதைக்கப்படுகின்றது.
மேற்கு சிந்தனை வடிவம் கொண்ட சிந்தனை வடிவம் என்பதைக் கொண்டே போராட்டங்களை தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தெரிவு செய்யப்பட்ட மனித உரிமை பற்றிய பிரஞ்ஞை என ஏகாதிபத்திய நலன் சார்ந்த பிரச்சாங்களுக்கு உட்பட்டு இயங்க சமூகத்தில் படித்த - வசதிபடைத்த பிரிவு இருக்கின்றனர்.
இவர்களே மனிதஉரிமை மீறல் என்றும், குழந்தை உழைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஏகாதிபத்திய நிதிநிறுவனங்கள் கட்டளை இடுகின்றன. ஆனால் போராட்டத்தில் சிறுவர்களை இணைத்துக் கொள்கின்ற போது குழந்தைப் போராளிகள் என்று வரையறுத்து மனித உரிமை பேசுகின்றன.
இயல்பான வளர்ச்சியை அடையவிடாது தடுத்தும் இயற்கையாக வாழ முற்படும் சமூகத்தின் மீது ஏகாதிபத்திய பொருளாதார உற்பத்தி முறையை திணிக்கின்றது.
தமது சந்தைக்காகவும் தமது நலனுக்காகவும் பயங்கரவாதத்தினை அழிப்பதன் பெயரால் விசக் குண்டுகளை போட்டு அழிக்கின்றார்கள்.
ஏகாதிபத்திய பொருளாதார சிந்தனை நலன் கொண்ட பிரச்சாரத்திற்கு பலியானவர்கள் புலிகளின் போராட்டத்தையே பயங்கரவாதமாக பார்க்கின்ற பார்வையை, அளவுகோளைக் கொண்டு போராட்டம் என்பதையே பங்கரவாதமாக பார்க்கும் பார்வையை நிலைநிறுத்துவதும் மக்கள் மீது திணிப்பதிலும் அக்கறையாக உள்ளார்கள்.
புலிகளின் அமைப்பு என்பதே முன்னர் கூறியது போல அரைநிலமானிய சிந்தனையின் மீது கட்டப்பட்டது. புலிகளிடம் ஏகாதிபத்திய ஜனநாயக விழுமியங்களின் மையவாதச் சிந்தனையில் இருந்து பார்ப்பது அபர்த்தமாகும். புலிகள் அமைப்பு தவறுகள் என்பதை அரசபயங்கரவாதத்திற்கு நிகராக நிறுத்துவது ஏகாதிபத்திய நலன் சார் அயோக்கிய அரசியலாகும்.
ஆனால் எதிர்காலத்தில் புதிய ஜனநாயகக் பண்புகளைக் கொண்டதாக அமைப்பு வடிவம் முன்னேறுவது மாத்திரம் அல்ல. அது புரட்சிகர அரசியலையும் முன்னெடுப்பதாகவும் இருக்க வேண்டும்.
இறுதியாக
மனித உரிமை ஆவலர்களை சில விடயங்களில் திருப்தி செய்ய வேண்டியதும் ஏகாதிபத்தியத்தின் அன்பு முகத்தைக் காட்டும் காட்சிக்கு உட்பட்டதாகும். இன்று இலங்கையின் ஆளும் வர்க்கமான ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இலங்கை (மங்களவின் உரையில் காணமுடியும்) சீர்திருத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை முன்மொழிகின்றது இது மேற்குதேசங்களின் நலன்களுக்கு இசைவாக நடந்து கொள்ளும் என்ற உறுதிப்பாடாகும். இந்தச் சீர்திருத்தங்களை மேற்கு ஏகாதிபத்தியங்கள் வரவேற்று புகழப் போகின்றது. இந்தச் சொல்லாடல் என்பது வெவ்வேறு தளங்களைக் கொண்டதும் அதற்கான சமிக்கை என்பதை மேற்கிற்கு ஐ.நா அரங்கில் மறுபடியும் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள்.
சிங்கள புரட்சிகர சக்திகள் தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைபற்றி மக்கள் இயக்கம் எடுத்து அணிதிரட்டியும் தமிழ் தேசத்திற்கான போராட்டத்தின் நியாயத்தையம் முன்வைத்துப் போராட வேண்டும். சிங்கள இடதுசாரிகள் சொந்த மக்களை அணிதிரட்டிப் போராடுவதன் ஊடாகவே சிங்கள மக்களும் விடுதலை பெற முடியும். இந்த வெற்றிடம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் அவர்களும், அரசும் இலங்கையில் விசாரணை என்ற மண்குதிரைக்கு சிங்கள பௌத்த மையவாதமும் இடம் கொடுக்கப் போவதில்லை.
தமிழ்; தரகு (ததேகூ) வர்க்கத்தின் வெளிப்பாடு என்னவெனில் நாங்களே எதிர்ப்பதற்கான சூழலை உருவாக்கக் கூடாது என்றும் அரசு செய்யும் நம்பலாம் என்று கூறுகின்றார். (சுமி)
போராடும் தேசம் நல்லெண்ணத்தை காட்டுவது என்பது வேறு இணக்க அரசியல் என்பது வேறானதாகும். இங்கு இணக்க அரசியலை தான் தமிழ் தரகுமுதலாளித்துவம் முன்வைக்கின்றது. இன்று தமிழ் தேசியத்தினை தலைமைதாங்கும் தரகு வர்க்கமானது தன்னை அப்பழுக்கற்ற தேசியவாதியாக தன்மை எவ்வளவுதான் கூவிக் கூவி தன்மை பிரகடனப்படுத்தினாலும் அரசியல் வெளிப்பாடுகளில் துரோகத்தனம் வெளிப்படுத்தப்பட்டு விடுகின்றது. இன்று ஈழ தேசத்தின் தலைமை என்பது (போலி தீர்வான அதிகாரப் பகிர்விற்காக) தரகுமுதலாளித்தின் கைகளில் உள்ளது என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனாலும் இந்த சக்திகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பலவற்றை தமிழ் மக்கள் எதிர்க்கொள்ள வேண்டும்.
இவ்வாறான போலி அரசியல் கூத்துக்களை வெற்றி கொள்வதன் ஊடாகவே ஒடுக்கப்படும் மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது வெற்றி கொள்ள முடியும்.
தரகு முதலாளி வர்க்கத்தை அன்னியப்படுத்துவதன் ஊடாக சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தினை முன்னெடுப்போம்.
”சர்வதேச” நீதியை தாண்டி சுயநிர்ணயத்திற்கான போராட்டம் தொடரப்பட வேண்டும்.
28.12.2015
Velan
2aedgg8 amDrecnfetmbSfpghereonrso ore2S0h1d5 ·
சமரச சக்தியைக் கூட மூர்க்கமாக எதிர்க்கும் சிங்கள பௌத்த பேரினவாத்தின் எடுபிடிகள்!!!
மாவையார் மக்கள் ஆணைதந்துள்ளார்கள் என்று ஏகபிரதிநிதிக் கோட்பாட்டை புதுப்பிக்கின்றார்.
1977 ஆணை தந்தார்கள் அது என்னாயிற்று? மாவட்ட அபிவிருத்தி சபைக்கு ஆணை (1982) இன்று பிரதேசசபைக்கான ஆணை என்று தொடரப் போகின்றார்கள்.
சரணடைந்த போராளிகள் பற்றிய கேள்வியை ஏன் முன்வைக்கவில்லை? எங்கே தோழர் பாலக்குமார், யோகி, கரிகாலன், செம்மணணன், திலகர், சுவாமி பிரான்சிஸ் .....!!! இவர்களின் மீது எவருக்கும் அக்கறை இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
இவர்களின் உயிர்கள் மரியாதைக்கு உரியவை இல்லையா? இந்த போராளிகளின் விடயம் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனையை விட கீழாகும்? அந்தப் போராளிகளின் மனிதவுரிமை மீறல் என்பது ஜனநாயக மீறல் இல்லையா?
த.தே. கூ உள்ள தீர்வுத் திட்டம் என்ன?
தமிழ் மக்களின் (premise ) தேவைகளில் இருந்து பிரச்சனை முன்வைக்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை என்றால் அதில் உள்ளடக்கத்தை வெளியே வைக்க முடியுமா?
த.தே.கூ என்ன இருக்கின்ற அறியும் உரிமை பொதுமக்களாகிய எமக்கு இருக்கின்றது. அதனை வெளியே வைக்க வேண்டும். அதுபற்றி கருத்துக் கூற எமக்கு உரிமை உள்ளது.
இதனை மறுப்பது அடிப்படை மனிதவுரிமை மீறலேயாகும்.
மூடிய அறையில் பேசாதா!
பிரச்சனையை முன்வை!
அனைத்தையும் அறியும் உரிமை உண்டு!
வைக்கோல் பட்டறை நாய்கள் போல தலைவர்கள் செயற்பட முடியாது.
It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
- recognition of the Tamils of Ceylon as a nation
- recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon
- recognition of the right of self determination of the Tamil nation ------------------------
(- recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon- சாத்தியப்பட்டது achived )
------------------------------------
மேற்கண்ட திம்புக் கோரிக்கையை குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்கின்றீர்களா? உங்கள் நிலைப்பாடு இவையாக இருக்குமெனில் தமிிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கை ஏற்றுச் செயற்படுகின்றதா? பாராளுமன்றக்குழு அல்லது மாவட்ட அபிவிருத்திக்குழு பதவியும் தமிழ் மக்களின் மொழியின் மீதான தன்னாட்சி- நிலமீதான தன்னாட்சி- கலாச்சார ரீதியான தன்னாட்சி- பொருளாதாரம் மீதான தன்னாட்சி இவைபற்றி எவ்வாறு செயற்படுகின்றார்கள். ??
அடிப்படை அரசியல் அபிலாசை- தேவை என்பது பற்றியது இதற்கு இணையாக செயற்படுவது என்பது பூட்டிய அறையின் உள் அல்ல. கைதிகளின் சின்னப்பிரச்சனை அல்ல. இது ஒரு அம்புலிமாமா கதையும் அல்ல. சரணடைந்த போராளிகளும் அரசியல் கைதிகள் தான். தனியே 200 சொச்சக் கைதிகள் மாத்திரம் கைதிகள் அல்ல. அவர்கள் பற்றிப் பேசாத ஒரு தமிழ் தேசியத் தலைமை வேண்டுமா? அவர்கள் தமிழ் தேசியத் தலைமை என்று எவ்வாறு வரையறுக்க முடியும். கிடைப்பதை பெற்றுக் கொள் என்று சொல்வதற்கு ஒரு அரசியல் தலைமை தேவையில்லை. ஏனெனில் மக்கள் தமது தேவைகளை ஏதோ ஒரு வகையில் தீர்த்துக் கொண்டும், சமரசம் செய்து கொண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
---------------------------------------- இதில் விரல்விட்டுக் எண்ணக் கூடியவர்கள் தமது பதவி உயர்வு, அந்தஸ்து காரணமாக த.தே. கூட்டமைப்பிற்கு வால்பிடிக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை சுயநலம் தான். எனவே கூவிக்கூவி த.தே. கூட்டமைப்பிற்காய் கருத்திடுபவர்களை விட்டுவிடுவது நல்லது. தமிழ் மக்களின்- தமிழ் தேசத்தின் இரத்தத்தின் மீது தங்கள் மாளிகைகளை கட்டட்டும்.
பௌத்த தேசியவாதத்தினை பாதுகாத்துக் கொண்டு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சமரசவாத சக்தியைக் கூட மாற்றாக வரக்கூடாது என்பதில் பிற்போக்குச் சக்திகள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

No comments:
Post a Comment