Popular Posts

Monday, 15 August 2022

தை எழுச்சியும் தமிழ் தேசமும்

 தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன் | வினவு    

தை எழுச்சியும் தமிழ் தேசமும்

எறுதழுவலுக்காக  அலங்கா நல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், பொதுமக்களின் விடுதலைக்காக ஒன்று கூடிய சில மாணவர்களின்  போராட்டம் பெரும் எழுச்சியாகியது.  இந்த எழுச்சி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை தமிழகத்தை நோக்கிய திருப்பிய பெரும் போராட்டமாகும். சினிமா, நடிகர், நுகர்வுக் கலாச்சாரம், நகர்புறமயமாதலில் ஏற்படுகின்ற பண்பாட்டு மாற்றங்களை கொண்ட இளையோரிடையே ஏற்பட்ட  எதிர்மறையான வீச்சு.  அரசியல் வாதிகளுக்கு, நடிகர்களுக்கு, பெரும்முதலாளிகளுக்கு, காவல்துறைக்குச்  பின்னால் செல்கின்ற  ஊடகத்தை மாணவர்களை  நோக்கி திருப்பிய போராட்டம்.  இது தன்னியல்பிற்கு உட்பட்ட போராட்டம் என்ற வகையில் அது தன்னகத்தை பலவீனத்தைக் கொண்டதாக இருப்பினும் இந்தப் போராட்டத்தைப் பற்றி கிலாகிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்தப் போராட்டத்தின் அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.  ஆனாலும் இவற்றினுள் முழுமையாக சிறிய கட்டுரையில் விளக்கிவிட முடியாது.  ஆனாலும் ஆய்வுக்கான அடிப்படை வியாபகமான நிலையில் இருந்து குறிப்பான நிலைக்குச் செல்வதாகும்.  குறிப்பான நிலையில் இடம்பெறும் அகத்தை பற்றி ஆராய்வதாகும்.

 

சமூகத்தின் நிகழ்வை தீர்மானிப்பது ‘‘புறவயமான அம்சம் (Objective aspect); அதாவது தன்னிகழ்வான அம்சம் (Spontaneous aspect) மற்றது, அகவயமான அம்சம் (Subjective aspect); அதாவது உணர்வுபூர்வமான அம்சம் (Conscious aspect). புறவயமானதும் தன்னிகழ்வானதுமான அம்சம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் உணர்வுபூர்வமான நெறிமுறைப்படுத்தும் சித்தத்தைச் சார்ந்திராது சுயேச்சையாக நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகளின் தொகுதி ஆகும். ‘‘  சமூகத்தில் ஏற்பட முடிகின்ற அகநிலைமாற்றம் என்பதை சமூகத்தின் முன்கொண்டு வருவதும் சமூகத்தினை முன்னோக்கிச் கொண்டு செல்லும் கடமை தான் இன்றுள்ள முக்கிய கடமையாகும்.  

இந்தப் போராட்டத்தில் பின்வரும் அம்சங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவையாகும். 

 

கூட்டு மனப்பாங்கை உருவாக்குவது,  பொதுப்பண்பாடு ஒன்று உள்ளதா? உருவாகுமா ?

சுதேசிய உற்பத்தி- குறிப்பான், உறுதி மொழிகளும்- தீர்மானங்களும் மக்களால் மேற்கொள்ளப்பட்டது.

சமூகப் பிரச்சனையின் வடிவங்கள்- விவசாயம், சாதிய, வறுமை, - ஏற்றத் தாழ்வு

இடதுசாரிகளும் தை எழுச்சியும்

தை எழுச்சியின் எதிர்காலம்

தேவை- தன்னியல்பை எவ்வகையில் வழிநடத்துவது?

தலித்தியவாதம்- அதுக்காக  இதுக்காக போராடவில்லை.

 

தமிழ் தேசிய எழுச்சிக்கு எதிரான நடவடிக்கைகள்

அரசும்- அரசியல்வாதிகளின் கூட்டு- ஊடகம்-,  சினிமா பிரமுகர்கள், - காவல்துறை நண்பர் சாத்தியமா?  இந்தக் கூட்டு  சமூகத்தின் மீதான தாக்குதல் எவ்வாறு செயற்படுகின்றது. 

தை எழுச்சியின் பின்னரான சேறடிப்பு – தாக்குதல் - இலக்குகள் - 

இந்த விடயங்களை ஆழமாக ஆராயப்பட வேண்டியதாகும்.

 மேற் கூறிய விடயங்களை சமூகத்தை முன்னோக்கிச் செல்வதற்கான  சிந்தனைப் பார்வை அவசியமாகின்றது. மறுமலர்ச்சி பெரும் மாற்றத்தைக் கொடுக்கும். போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட புதிய தொடர்பு பண்பாட்டு விழுமியங்கள் உருவாகும்.  போராட்டக்களத்தில் கூடியவர்கள் அரசியல் முதிர்ச்சியற்ற, அரசியல் மயப்படல் என்பது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. ஆனால் போராட்டத்தை வழிநடத்தியவர்களுக்கு வர்க்கச் அரசியல் இல்லை என்று கூறிவிட முடியாது.  தன்னியல்பான போராட்டத்துக்குரிய குறைபாடுகள் இருக்கவே செய்யும்..

 

 

குறிப்பான் – பொதுவடையாளத்தை நோக்கி

ஒவ்வொரு குலங்களும் தம்மகத்தே ஒவ்வொரு சின்னங்களையும், அடையாளங்களையும் கொண்டுள்ளன. அந்தச் குலச்சின்னங்களின் பெயர்கள் என்பது அதன் புவியியல் இருப்பில் இருந்து வேறுபடுகின்றன. குலங்களை அப்பெயர் கொண்டு அழைப்பது இன்று வரைக்கும் வரலாற்றில் காணப்படுகின்றன. அன்றைய காலத்தில் தமிழ் மக்கள் மரங்கள், (நாவல் மரம்) புலி, கயல், மலைகள், கல், மீன், கலப்பை (Totem)  போன்றவற்றை தமது குலச்சின்னமாக கொண்டுள்ளனர்.  குலச் சின்னங்கள் அரச, தேசிய இனங்களின் கொடிகள், குறிப்பான் என்பவற்றிக்கு முன்னோடியாகின்றது.

தேசியக் கோரிக்கை எழுகின்ற போது பழைய அடையாளங்களை முன்னிறுத்தம் போக்கினை தமிழ் மக்களின் வரலாற்றில் கண்டிருக்க முடியும். இங்கு சின்னங்களின் புத்துயிர்ப்பும், தேசிய சின்னங்களை ஒட்டிய பெருமையை முன்னிறுத்திய போக்கினை கண்டுள்ளோம்.  

முதலாளித்துவ வளர்ச்சி தேசங்களிடையேயான முரண்பாடுகள் தான் தேசிய உணர்வை தூண்டுகின்றது. தேசிய எழுச்சி தன்னிருப்பை, அடையாளத்தை, வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மரபுரீதியாக கடத்தப்படும் ஐதீகங்களை உருவாக்கிக் கொள்கின்றது, இவ்வாறு ஐதீகங்களில் இருந்து உருவாக்கப்படும் தேசிய வீரர்கள், தேசிய சின்னங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ‘‘தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.‘‘ அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை வடிவத்தைக் கொண்டு அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும்.

மொழி அடிப்படையில் தம்மை ஒரு தேசிய இனமாக தகவமைத்துக் கொள்வது என்பது தாம் பேசுகின்ற மொழியில் ஊடாக ஒன்றிணைக்கப்படுகின்ற சமூகப் போக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் வெளிப்படும்  எதிர்வினை என்பதை கணித்திட வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட இயக்கப் போக்கை யார் கைகளில் வசம் உள்ளது என்பதை கணிப்பிட்டே  சமூகத்தின் தேவைக்கான போராட்டங்களின் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும். தேச (formation of national identity and unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கம்.

ஏறுதழுவல் போராட்டம் என்றது ஒரு குறிப்பான் மட்டுமே. போராட்டத்தின் பின்னால் இருந்த நெடுங்காலக் கோபத்திற்கு எழுந்திருந்த வரலாற்று மாற்றம். தை எழுச்சிக்கான திரட்டாக குறிப்பான் செயற்பட்டிருக்கின்றது.  தமிழ் தேசத்தின் சாதிகடந்த, நிலமானியச் சிந்தனையை களைந்த பண்பாட்டு உருவாக்கம் அவசியமானதாகவும் நிபந்தனையாகவும் உள்ளது.  தையெழுச்சியின் போடு சிலபம்பாட்டம், தாரை தப்பட்டை, எழுச்சிப் பாடல்கள்  இசைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கதாகும்.  தையெழுச்சியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாக கருதப்பட்ட தாரை தப்பட்டடை பொதுவெளியில் பயன்பாட்டிற்கு உள்ளாகியதை மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.  இரண்டு சகாப்த காலங்களாக மதஅடையாளங்களை வேறுபடுத்தியே சமூகத்தை அடையாளம் காட்டப்பட்டது. அதற்கு மாறாக குறிபானை நோக்கி மதங்களைக் கடந்து தம்மை தமிழர்கள் என்று இணைந்தார்கள். தமிழ் தேசமாக சிந்திப்பதும், அந்தக் கருத்துருவாக்கத்தை வலியுறுத்துவது பிற்போக்குத் தனமாகாது.

 

கூட்டுச் சிந்தனை

தமிழ் மக்கள் வர்ணாச்சிரம சிந்தனை என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. வர்ணா்சிரம பண்பாட்டு சிந்தனை வடிவத்திற்கு உட்பட்டது தான் அனைத்து சமூக உறவும் சாதியெதிர்ப்பாளர்கள், முற்போக்காளர்களுக்கு அதற்கு உட்பட்டவர்கள் தான். ஆனால் சிந்தனையில் ஜனநாயகமயமாக்கலின் ஊடாக மற்றவர்களை விட ஜனநாயக பூர்வமாக சிந்திக்க, நடக்க முடியும். ஆனால் முழுமையாக வர்ணாசிரம சிந்தனை அழிந்து விடுவதில்லை. சாதியை, ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டுமேயொழிய ஒரு பண்பாட்டுக் கூறை ஒரு அடையாளத்தை அழிப்பது என்பது வேறானது. தையெழுச்சியின் தாக்கத்தினை முன்னோக்கிச் கொண்டு செல்வது தான் இந்தப் போராட்டத்தின்  படிப்பினையாகும்.

காலில் விழும் பண்பாட்டிற்கும், படித்தவர்கள், பரம்பரை அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால்  அனைவருமே தலைவர்கள் என்ற நிலைப்பாட்டில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட போராட்டம். சிந்தனைகளை மதங்கள் தான் வழிநடத்த முடியும் என்றும் வயதும், அனுபவம் கொண்டவர்களால் தான் காரியமாற்ற முடியும் என்ற கற்பனையையும் உடைத்தே சென்றது. பழைய வழிமுறைகளை கொண்டிருந்த்தது.

 இந்தப் போராட்டம் சாதிமதம் அற்ற திரட்சி தமிழர்களாக  உருவாக முயற்சிக்கப்பட்டது.  அது தனது அகமுரண்பாடுகளைக் தொடர்ச்சியாக கொண்டதாகவே இருக்கும்.  ஏனெனில் இந்த நிலைமாறும் காலத்தில் அவ்வாறு இருப்பது இயல்பான தாகும்.  சமூகத்தின் பிரதான முரண்பாடு முன்நகரும் போது மற்றைய முரண்பாடுகள் இரண்டாம் நிலைக்கு அல்லது முக்கியம் அற்றதாகவும் மாறிவிடும்.  எனவே அகமுரண்பாடு என்பது சிந்தனை, சமூக உறவு உற்பத்தியில் முழுமையாக மாற்றம் கொள்ளாத வரையில் முழுமையாக மாற்றமடையாது.

பண்பாட்டு விழுமியங்கள் ஒரு தேசியஇனத்தில் சர்வம் (universal) தழுவியதாக இருக்காது. அது பழைய இனக்குழும வாழ்வின் எச்சனைக் கொண்டிருப்பதால் அது பிராந்திய-  வட்டார
பண்பாடு எப்பவும் புதுப்பிக்கப்படுகின்றன எனவே பண்பாடுகள் புதுப்பிக்கக் கூடாது என்பது அல்ல.  பகுத்தறிவுவாதிகள் என்போர் பண்பாடு என்பது பொதுவாக இல்லை.  இது வர்ணாச்சிரமாக இருக்கின்றது என்றும் புதிய பண்பாட்டுத் தளத்தை வளர்க்காது  வாய்ப்பாட்டையே கூறியே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட முடியாது என்கின்றனர்.  

கூட்டு சிந்தனை வடிவத்தின் வளர்ச்சி நிரந்தர சமூக ஒழுங்கமைவாக உருவாகும். தேசமாக உணர்வது, சிந்திப்பது, இணைவது, செயற்படுவது  என்பதை மென்மேலும் உறுதியாக்கும்.  ஆனால் அதனை ஆரம்பத்தில் உடைத்தெறிவது அடக்குமுறையாளருக்கு அவசியமாகின்றது. இந்தப் போராட்டத்தினை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியும் நோக்கில் அமைந்ததே தையெழுச்சியின் இறுதி நாளில் காவல்துறையினர் மாணவர்கள், கடல்தொழிலாளர்கள், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி உழைப்பாளிகளை சுதந்திரக் கூலியாக மாற்றிவிடுகின்றது. சமூக ஒப்புறவு கொண்டு கூட்டாக இருந்தவர்கள், சிந்தித்தவர்கள், செயற்பட்டவர்கள், வாழ்ந்தவர்கள், மக்களுக்காக இணைந்தவர்கள் இன்று தனித்துவாத மனிதர்களாக இருக்கின்றனர். இவர்களை மறுபடியும் கூட்டுமுறையில் இணைப்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை. ஒரு செயற்பாட்டின் வீரியத்தை தீர்மானிக்கும் காரணியாகவும் கூட்டு இணைவுதான் தீர்மானிக்க முடியும். தனித்துவவாத மனிதர்களாக இருக்கின்ற நமக்குகென்று குடும்பங்களும் அவர்கள் மீதான பொறுப்பும், குடும்பம் என்கின்ற அலகு கொடுக்கும் அழுத்தங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சமூக உறவில் தனித்துவாதம் நவீன தொழில்நுட்பத்தின், நுகர்வின், பரிவர்த்தனை காரணமாக சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தைப் பொருளாதாரத்தின் போக்கில் 1990 பின்னர் தீவிரமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.  இதுதனித்துவவாத மனிதர்களாக சிதைந்துள்ள நிலையில் சிந்தனைகளும் தனிமனிதத் தீவுகளாக உருவாகியிருக்கின்றது. இந்தியச் சமூகங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த தனிமனிதர்களாக உதிரிகளாக சமூகமயப்படுத்தப்படவில்லை. அவர்கள் அன்பு, பழமை, குடும்பத்தை முதன்மையாகக் கொண்ட முடிவெடுக்கும் முறை, கூடிவாழும் முறை போன்றவற்றினுள் தான் வாழ்கின்றார்கள். தனிமனிதர்களாக வாழக்கூடிய சமூக அமைப்பு என்பது வெகுசிறிய விகிதத்தினருக்கே சாத்தியமாகும். ஆனாலும் அவர்கள் வாழ்வதும் சாத்திர சம்பிரதாயத்திற்கு உட்பட்ட சமூக அமைப்பாகும்.

தனியார் ஊழியர்கள், IT ஊழியர்கள், பிறதுறையைச் சேர்ந்தவர்களின் நகர்ப்புறவாழ்விற்கு உட்பட்ட புதிய நுகர்வு வகைகள் உருவாக்கியிருந்தது.  இது களியாட்ட நடன அரங்கு, தனிமனித வாழ்வியல் என்பது அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது அரைநிலமானியச் சமூக உறவில் வாழ்ந்தவர்களுக்கு ஐரோப்பிய தனித்துவ வாத உறவு பற்றிய போதிய புரிதல் இருக்கமுடியாது. இளைஞர்கள் தவறாக தனித்துவாதத்தினை (vulgar way of interpreting individualism) விளங்கிக் கொண்டதாகத் தான் இருக்க முடியும்.  கூட்டுச் சமூக சிந்தனை சிதைவிற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற புதிய நடுத்தரவர்க்கத்தின் போக்கிலும் வாழ்வியலும் ஏற்பட்ட பண்பாட்டு தாக்குதலுக்கு உள்ளாகிய சமூக உறவையும் மீற தையெழுச்சியில் பங்குபற்றியுள்ளார்கள். 6 நாட்களாக நடைபெற்ற பயிற்சிப்பாசறை, விருந்தோம்பல், ஒரே இடத்தில் தூங்குவது, குப்பையை தாமே அகற்றுவது, பெண் பேச்சாளர்கள் அதிகளவில் இருந்தது, முன்னணி வகித்தது, கட்டுக் கோப்பு என்ற பூர்சுவாச் சிந்தனை வடிவத்திற்கு ஒற்றதாக இருந்ததையும் கவனத்தில் கொள்ள முடியும்.

முதலாளித்துவ சமூக உறவில், பொதுபண்பாட்டு அடையாளம் நோக்கிய பயணத்திற்கான ஆரம்ப முயற்சி என்பதால் வரவேற்கப்பட வேண்டும். இந்த மாற்றம் நிலையானதாக இருக்குமா? மாற்றங்கள் உடனடியாக மாற்றத்திற்கு உள்ளாக முடியுமா என்பது முன் அனுமானம் செய்ய முடியாது. அதே வேளை மாற்றங்கள் முழுமை அடைவதற்கு முழுமையாக பொருளாதார உற்பத்திமுறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

 

சுதேசியக் கோசங்கள் பற்றி

ஏறுதழுவல் என்ற ஒரு விளையாட்டிற்கு அப்பால் பொருளாதாரத்துடன் சம்பந்தப் பட்டது. மாடுகளின் வளர்ச்சி, நலன் என்பது பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டது. இது ஒரு தேசத்தின் உற்பத்திச் சாதனத்துடன் நேரடித் தொடர்பு கொண்டதாகும். இது அன்னிய நாட்டு வகை மாடுகள், சுற்றாடல், இயற்கை என்பவற்றுடன் தொடர்பு கொள்கின்றது. இது பொருளாதாரப் பிரச்சனையே என்பதை கவனத்தில் எடுக்க முடியும்.

தை எழுச்சி தமது புகைச்சலுக்கு நெருப்பூட்டியதாக .. பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். சிறு முதலாளிகள் குறிப்பிட்ட பொருளை விற்க மாட்டோம் என்ற பிரகடனப்படுத்துகின்றார்கள் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதன் சாதக அம்சம் வெளிப்பட சில காலங்கள் எடுக்கும். உள்ளுர் உற்பத்தியை பெருக்க முடியும் இது அகவயமான அம்சம் (Subjective aspect); அதாவது உணர்வுபூர்வமான அம்சம் (Conscious aspect). தொடர்புடையாக உள்ளது.
சந்தையை ஏகாதிபத்தியங்களின் ஒப்பந்தங்களே தீர்மானிக்கின்றது இதற்கு மாற்றாக உள்ளுர் உற்பத்தியாளர்களும் வினியோகஸ்தரும், நுகர்வோரும் தீர்மானிக்கின்றார்கள்.
உற்பத்தி செய்யப்படுவது இந்தியாவில் இருந்தாலும் அதில் இருந்து பெறப்படும் லாபம் என்பது நாட்டை விட்டு வெளியேறுகின்றது.
இதற்கு மாற்றாக உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியும், நுகர்வும் அதிகரிக்கின்ற போது விற்பனை செய்பவர்களுக்கும் உற்பத்தியை செய்பவர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். இதன் ஊடாக உற்பத்தி செய்பவர்களுக்கு மேலதிகமாகவும், சேதாரம் குறைவாக இருப்பதால் உற்பத்தி செய்பவர்களுக்கு நன்மை பெறுவர்.
உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதும், வினியோகிப்பதும் வெற்றி பெற வைப்பதற்கு நிற்பதற்கு நிச்சயம் சிறு, குறு முதலாளிகள் உற்பத்தியாளர்கள் பலன் பெறுவார்கள். வேலைவாய்ப்பு என்பது அதிகரிக்கும்.

கால்நடை உற்பத்தி சாதனமா இல்லையா என்ற வாதம்  அவசியமானதாகும்.  ஆனால் பழமை என்ற அடிப்படையில் வேறு திசை நோக்கி பிரச்சனையை அணுகிட முடியாது. இது இருக்கின்ற வளம், சக்திகளை முறையாக பயன்படுத்துவதும், சுயாதிபத்தியம் தொடர்பானதாகும். உற்பத்திச் சாதனம் என்பது வெவ்வேறு பொருளாதாரத்தில் வெவ்வேறு அலகைக் கொண்டு வளர்ந்துள்ளது. வேட்டையாடிய மனிதனுக்கு அம்பும் வில்லும் என்று தொடங்கி  விவசாய  நிலத்தில் ஏர்கலப்பை, எருதுகளின் துணை கொண்ட உற்பத்தி முறை உழவு இயந்திரத்தினை அறிமுகப்படுத்திக் கொண்டது. தொழிற்துறைப் புரட்சி என்பது போட்டி, ஏகபோக பொருளாதாரத்தில் பெரும்  தொழில் நுட்பத்தைக் கொண்டே ஆட்குறைப்புச் செய்யும் பொருளாதார நிலைக்கு வந்துள்ளது.
”சிறு நில உடமை முறை என்பது சிற்றளவான உற்பத்தியின் சகஜமான வடிவமாகும். முதலாளித்துவத்தின் கீழ் அது சீர்குலைந்து, சரிந்து நாசமடைகளிறது. ”சிறுவிவசாயிகளின் சொத்து அதன் இயல்பின் காரணமாகவே உழைப்பின் சமூதாய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும், உழைப்பின் சமுதாக வடிவங்களுக்கும், மூலதனங்கள் சமுதாய வழிகளில் குவிவதற்கும், பரந்த அளவிலே கால்நடைகளை வளர்ப்பதற்கும், விஞ்ஞானத்தைப் மேலும் மேலும் செயல்படுத்துவதற்கும் இடம் கொடுப்பதில்லை.” (69 லெனின்- மா வ வ சில சிறப்பியல்புகள்) இந்தப் போக்கு முதலாளித்துவ உற்பத்தி முறை உருவாக்கத்தில் ஏற்படுகின்ற பிரச்சனையாகும். விவசாய உற்பத்தி முறையில் ஏற்படும் சிக்கல்களை கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.

நிலம், கடல்பரப்பு என்பது இயற்கையாக கிடைத்த வளமாகும். இந்த நிலத்தைப் பண்படுத்திக் கொள்வதற்கு மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன. மனித உழைப்பைப் பயன்படுத்தி உழைத்து பண்படுத்திய நிலத்தில் இருந்து பெற்ற உற்பத்திதான் உணவாகின்றது. இதே போல் கடல்வளம் என்பது இயற்கை தந்தது எனினும் உயிரைப் பயணம் வைத்து கடல்தொழிலாளிகளால் மீன் பிடிக்கப்படுகின்றது. எவையும் உற்பத்திச் சக்தியை (உடல் உழைப்பு) வழங்காது சாத்தியம் இல்லை.

தொழிற்துறை உடமையாளன் உற்பத்திச் சாதனத்தை வைத்திருப்பதால்  தொழிலாளி உற்பத்தி சக்தியை விற்கின்றார்கள்.    இன்று உலகச் சொத்துக்களை வெறு 8 நபர்களே  உரிமையாகக் கொண்டுள்ளார்கள்.   மக்களே உற்பத்திச் சாதனங்களை கையப்படுத்த வேண்டும். இது இரண்டு கட்டங்களைக் கொண்டதாகும். தேசத்தின் ஆட்சியதிகாரம் பின்னர் அவற்றை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும்.

தமிழ் தேசத்தைப் பொறுத்தவரையில் தமிழ் தேசத்தின் ஆட்சியதிகாரம்   நிலவுரிமைக்கான போராட்டமும் உள்ளடக்கியதே. தமிழ் தேசத்திற்கு விவசாயிகளின் நிலம், தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொள்வது என்கின்ற போது உற்பத்திச் சாதனம் பொருளாதார பண்பை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

சீன நிலை பற்றி ஆராய்ந்த வில்லியம் கின்ரன் என்பவர் 1964களில் விவசாய உற்பத்தில் அன்றிருந்த நிலையில் இருந்து கழுதைகளையும், கிடைக்கின்ற சாதனங்களையும் பயன்படுத்தாத காரணத்தால் ஏற்பட்ட விளைவை குறிப்பிட்டிருந்தார். இவ்வாறே முதலாளித்துவ வளர்ச்சி முழுமையடையான நாடுகளில் உள்ளதைப் பயன்படுத்த முடியும்.

சோவியத் உடைவின் பின்னர் பல நாடுகள் கியூபாவிற்கு உதவி செய்வதையும், அரசியல் ரீதியான தொடர்புகளையும் மேற்கொள்வதை தவிர்த்துக் கொண்டன. அன்னியச் செலவானி,  உணவு இறக்குமதி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டது.  இதனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் கொள்கையை மேற்கொண்டது. இதில் குறிப்பாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் பொருட்டான திட்டங்களை முன்வைத்தது. வீட்டுத் தோட்டங்கள், தரிசு நிலங்கயை உற்பத்தி செய்வதற்கு ஏற்ப மேற்கொண்டு தனது உணவுப் பற்றாக் குறையை தீர்த்துக் கொண்டது. சுற்றிலாத்துறை, மருத்துவர்களின் சேவையினால் பெறப்படும் வருவாய், மருத்து ஏற்றுமதியால் பெறப்படும் வருவாயை வைத்து தன்னை காப்பாற்றிக் கொண்டது. கியூபாவில் விவசாயம் தற்சார்பு கொண்டு வளர்க்கப்பட்டதும் அதுவே 25 வருடம் தன்னைக் காப்பாற்றி வந்துள்ளது.

இவ்வாறே தொழிற்துறையிலும் விவசாயத்திலும் ஸ்ராலின் முன்னிலை கொடுத்தது சோவியத் தொழிற்துறையில் 5 ஆண்டு திட்டத்தின் ஊடாக வளர்ச்சி கண்டது.  1917- 1939 ஆண்டுகளுக்கிடையே ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி என்பது அபாரானமானதாகும். விவசாயம், தொழிற்துறை, தொழில் நுட்ப, ஆயுத உற்பத்தி, அணுச் சக்தி போன்றவற்றின் வளர்ச்சியே உலகை நாசீச ஆட்சியில் இருந்து இவ்வுலகை காப்பாற்றியது.  சோவியத்தின் அபார வளர்ச்சி ஏற்பட்டிருக்காவிடின் அரசியல். இராணுவ வெற்றியை பெற்றிருக்க முடியாது.

எத்தியோப்பியாவில் பணப்பயிர் செய்கை மேற்கொண்டதால் செயற்கையாக வறுமை ஏற்படுத்தப்பட்டதும் கவனித்தில் கொள்ள வேண்டும். இதேவேளை பஞ்சாப்பில் உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதும் உற்பத்திக்கான செலவை ஈடு செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டதாகும்.  இதன் விளைவே தற்கொலை, உற்பத்திக்கான செலவை ஈடுசெய்யமுடியாது கடனாளிகளாக மாறுகின்றார்கள்.

ஏழுதழுவல் என்ற ஒரு விளையாட்டிற்கு அப்பால் பொருளாதாரத்துடன் சம்பந்தப் பட்டது. மாடுகளின் வளர்ச்சி, நலன் என்பது பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டது. இது ஒரு தேசத்தின் உற்பத்திச் சாதனத்துடன் நேரடித் தொடர்பு கொண்டதாகும். இது அன்னிய நாட்டு வகை மாடுகள், சுற்றாடல், இயற்கை என்பவற்றுடன் தொடர்பு கொள்கின்றது. இது பொருளாதாரப் பிரச்சனையே என்பதை கவனத்தில் எடுக்க முடியும்.

சுயாதிபத்தியம் என்பது முதலாளித்துவ விவசாய உற்பத்தி முறை வளராத நிலையில் நடுத்தர, சிறிய விவசாயிகளைக் கொண்ட நாட்டில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி வளரமுடியும். கால்நடைகளைக் கொண்டு பெரிய செலவு இல்லாது உற்பத்தியில் தன்னிறைவை அடையமுடியும்.  

 

தனிமனித உரிமை

மனிதவுரிமை வாதிகள் என்பவர்கள் மேற்கின் நிகழ்ச்சிக்கு பயிற்றப்பட்டவர்களா என்பதை அறியக் கூடிய ஒரு அளவுகோள்.
ஒடுக்குமுறைகள் பற்றிய வித்தியாசம் தெரியாது வேலை செய்பது தான் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்த்தவர்கள் தான். மனிதவுரிமைப் போராளிகள் அரசின் ஒடுக்குமுறையை மயிலிறகால் வருடிக் கொண்டு ஒடுக்குமுறையை ஆதரிப்பது.
மனிதவுரிமை என்பது இன்றையக் காலத்தில் எனது இருப்புக்கான அச்சம், நம்பிக்கையீனம், இருப்பிற்கு உத்தரவாதமற்ற நிலை.  இவர்களுக்கு மனிதர்களை  மற்றவைகள் தான் முக்கியமானது முன்னிறுத்தப்படும். மேற்கின் சிந்தனை வடிவம் என்பதே சமூகத்தினை விட தனிமனிதவுரிமையே முக்கியமென முன்னிறுத்தும் சமூக உறவைக் கொண்டதாகும்.  தனிமனித இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக துடிக்கும் புதிய மத்திய தரவர்க்கத்தவர்களின் புகழிடமாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் இருக்கின்றது. அரைநிலமானிய ( சிந்தனை )குறைவிருத்தி முதலாளித்துவ- நிதிமூலதனத்தைக் கொண்ட தென்கிழக்காசிய நாடுகளின் சதிவலை என்பது மூலதனத்தை கொண்டவர்கள் கைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நுகரும்  பொருட்களின் விற்பனைத் தடையானது தனிமனித உரிமை  மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இங்கு சிறு, நடுத்த வியாபாரிகள் விற்பனை செய்வதை மறுப்பதும் அரசு தடைபோடுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. மேலும் தனிமனித சுதந்திரம் என்பது ஏகாதிபத்திய பொருள் உற்பத்திக்கானது.  ஆனால் சுதேசியச் சிந்தனை என்பது சொந்தக் காலில் நிற்பதாகும்.  
குடிபானம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகும்.
அன்னிய மூலதனத்தை ஆதரிப்பவர்கள் பதறுகின்றார்கள். தற்சார்பு பற்றிப் பேசுபவது தொழில் நுட்பத்தையும், சுயமாக தங்கி நிற்கக் கூடிய உற்பத்தியையும் போட்டுக் குழப்புகின்றார்கள்.  ஒற்றைப் பரிமாணம் கொண்ட நுகர்வை திணிக்கும் மூலதன ஆதிக்கத்தினை மறைக்கப்படுகின்றுது.

 மிருக நலன், மனதவுரிமை, சுற்றாடல் மாசுபடல் என்பவை மலிந்த  உற்பத்தி சக்திக்காகவும்,  பண்டங்களை சந்தைப்படுத்துவதற்காகவும் நடைபெறும் அத்துமீறல்களை மறுத்து வேலை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தான்.

 

இடதுசாரிகளும் தை எழுச்சியும்

அரபுப் எழுச்சி, உக்கிரேன் மஞ்சல் (yellow) எழுச்சி என்பன ஏகாதிபத்தியங்களின் நிதி, தன்னார்வத்  தொண்டு நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டதாகும்.  இந்த அடிப்படையில் முன்முடிவும், (முன் அணுமானத்திற்கும்)  நடைமுறைவாதம் ( functionalism- சமூகம் இவ்வாறுதான் தொழிற்படும், அதற்கு அப்பால் செல்லமுடியாது. குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இயங்க முடியும் போன்ற சிந்தனை வடிவம்).  ஆனால் எழுச்சிகள் அனைத்துக்கும் பின்னால் உள்ள சமூகத்தேவை உள்ளது என்பதை கணிப்பது தான் இயங்கியலாகும்.

எழுச்சி வெற்றிக்கு இட்டுச் செல்வது என்பதில்லை. போராட்டங்கள் எவையும் உடன் வெற்றி பெறும் என்பது இல்லை.  ஒரு போராட்டத்தின் எதிர்வினையின் மாற்றத்தை அடையாளம் கொண்டு செல்ல நீண்ட காலம் எடுக்கும். இவ்வாறான தன்னியல்பான எழுச்சிகளும் ,போராட்டங்களும் படிப்பினைக்கு உட்பட்டது தான்.

 மாணவர்களின் போராட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் இடதுசாரி, பெரியாரிய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவன எழுத்தாளர்கள் ஐயத்துடனே அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் போராட்டத்தை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வேலையாக பார்ப்பதிலும்  தன்னார்வத் தொண்டு எழுத்தாளர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

இங்கு NGOகள் பதறுவது முடிந்தவரையில் உணர்ச்சிகரமாக தன்னியல்பான எழுச்சியை முடிந்தரை தமது சந்தகப் பெட்டியுள் அடக்கிட முயற்சிக்கின்றார்கள். NGO வும் ஆளும் வர்க்கமும் பதறியது. இந்த எழுச்சியை அரபு வசந்ததுடன்  இணைத்துவிடவே கருத்துருவாக்கிகள் முயற்சி செய்தார்கள்.  

 ஆனால் மூன்றாம் நாளில் இருந்து அரசியல் பரிமாணம் வேறாக மாற்றம் கொண்டது. இந்த வேளையில் இடதுசாரிய அமைப்புக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.   மாணவர்களின் கோரிக்கைகள்  விரிந்த பரப்பைக் கொண்டதை  அங்கு நடந்த கூட்டங்களில் இருந்து வெளியே ஊடாக வாயிலாக வெளிப்பட்டது. பல தலைப்புகளைக் கொண்டு எண்ணுக்கணக்கான  பேச்சாளர்கள் பேசினார்கள்.  இது ஒரு போராட்டக் களமே  அரசியல் பள்ளியாகியது இவ்வாறான எழுச்சி என்பது  சமூக ஓட்டத்தின் ஓட்டுமொத்தமான கோபத்தின் வெளிப்பாடாகவே இரண்டாம் நாளில் இருந்து வெளிப்பட்டது.

தன்னியல்பான போராட்டம் என்பது வீறுகொண்டு எழுந்தமும். அதில் தமிழ் தேசத்தில் புகைத்துக் கொண்டிருந்த பெரும்பான்மையான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. 

ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒவ்வொரு தன்னியல்பான போராட்டத்தையும் சமூக மாற்றத்திற்கு ஏற்ப நெறிப்படுத்த வேண்டும்.  ஆனால் இங்கு மார்க்சியம் பேசிக் கொண்டு தமது புத்தகவரிகளுக்குள் எழுச்சியையும், புரட்சியையும் எதிர்பார்க்கின்றார்கள். முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை முன்னகர்த்தி கொண்டு செல்வது தான் புரட்சிகரவாதிகளின் கடமையாகும்.

 

தலித்திய- பெரியாரியவாதிகள்

தை எழுச்சி நடந்து கொண்டிருந்த போது வெவ்வேறு சமூகப் பிரச்சனை இருக்கின்றது. அந்த பிரச்சனைகளுக்கு எதிராக போராடவில்லை,  ஆனால் ஆதிக்கச் சாதி மாத்திரம் விளையாடும் விளையாட்டிற்காக போராடுகின்றார்கள் என்பதேயாகும்.  குறிப்பாக ஏறுதழுவல் மேற்கொள்பவர்கள் ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதேயாகும். ஆனால் சமூகச் செயற்பாட்டாளர்கள் வலையர் உட்பட பறையர் வரையில் ஏறுதழுவல் விளையாடுவதாக களஆய்வை முன்வைத்தார்கள். ஆனாலும் இந்த விளையாட்டு அருகி வருவதும் உண்மையே. 

ஆனால் தேசத்தின் உள் இருக்கும் பிரதான- அகமுரண்பாடு வெவ்வேறு தளத்தில் தீர்க்கப்பட வேண்டியவையாகும். முதலில் சாதியை ஒழி அதன் பின்னர் ஈழத்திற்காக போராடலாம் என்ற அகநிலை வாதம். ஈழத்து தலித்தியவாதிகள் போலதான் தமிழகத்தில் ஏழுதழுவலை எதிர்க்கும் முற்போக்குகளின் நிலையாக இருக்கின்றது.  ஈழத்தில் நடைபெற்றது போது சாதி உற்பத்தியை தீர்மானிக்கும் நிலையை மாற்றத்திற்கு உள்ளாக்க முடியும். ஆனால் சிந்தனையில் உடனடியாக மாற்றத்திற்கு உள்ளாக்கிவிட முடியாது. உற்பத்தியில் சாதியை ஒழிக்க முடியும் என்றால் அது அடையாள அரசியலால் முடியாது. ஈழத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் தலைமையால் தான் உற்பத்தியை தீர்மானிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. அது ஏன் தமிழகத்தில் நடக்கவில்லை?

சமூகத்தில் உள்ள அகமுரண்பாட்டை போக்குவதற்கான போராட்டத்தினை தீர்த்துக் கொண்ட பின்னர்தான்  பிரதான முரண்பாட்டை தீர்க்க முடியும் என்ற தந்திரோபாயம் என்பது தவறானதாகும். இங்கு பிரதான முரண்பாடு தேசிய எழுச்சியுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது.

சாதியமற்ற தான பண்பாட்டிற்கு உழைப்பது. தந்தை பெரியார் செய்தது போல ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஒரு கடவுள் மறுப்பாளின் சரியான செயற்தந்திரம்.  இதனை மறுத்தே தலித்திய, பெரியாரிவாதிகளின்  எதிர்நிலை யாக இருந்தது.  தமிழ் நாட்டு மக்கள் என்ற சமூக ஒழுங்கமைவு என்பதும், அதற்குள் உள்ள அகமுரண்பாடு என்பதில் இருந்து விவாதிப்பது ஒன்று மற்றையது TN as a tamil nation--- இவை இரண்டும் வெவ்வேறு தளங்களைக் கொண்டது.

 முதலாளித்துவ- தேசிய - ஜனநாயகப் புரட்சிக்கான நிலையில் தலித்திய அரசியல் இவைகள் எல்லாம் போதைமை உள்ள சித்தாந்தங்கள். தலித்தியம் இன்றைய சிந்தனை வடிவம்

டேய் நீ பள்ளன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் நீ பறையன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையாமா?

டேய் நீ தலித்து தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் நீ சக்கிலியன் தேசிய - வர்க்கப் போராட்டத்தில் இணையலாமா?

டேய் எங்களை ஒடுக்கிறான்கள் அவர்களுடன் எவ்வாறு வேலை செய்வாய்?

டேய் அவங்களுக்கு நாம் சமமா? என்று மனிதரை சிந்திக்கவிடாது வைத்திருக்கும் சிந்தனைத் தளம் தொடர்கின்றது. இது சலுகை, இலவசம், சமூக நீதி என்பதை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றது. உற்பத்தி முறையை மாற்றுவது அல்ல.

இந்தக் குறுகிய அடையாளப் போக்காக சிந்திப்பது இடம்பெறுகின்றது. தமிழகத்தில் அடையாள அரசியலுக்கு உட்பட்டுத் தான் சமூகத்தில் கருத்துருவாக்கியுள்ளது, சாதியந்தன் புத்தி குலமந்தன் ஆசாரம் என்ற என்ற கருத்துமுதல்வாத சிந்தனைதான் எங்கும் உள்ளது. இதன் தற்போதை பட்டையம் பெற்ற கருத்துருவாக்கிகள் உள்ளார்கள். . இதற்கு மாலெ அமைப்புக்களும் பலியாகியுள்ளது.  சமூகத்தையும் மேலும் அடையாள ரீதியாக அணிதிரட்டி உள்ளது. இவ்வாக அகநிலையில் இருந்து சமூகத்தை அணுகுகின்ற போது அரசியல் வியூகங்களை மேற்கொள்ளும் போது அரசியல் தவறு ஏற்படுகின்றது.

 புறநிலை என்பது முன்நிபந்தனையாது உற்பத்திசாதனத்தினை கைப்பற்றும் வேலைத்தி்ட்டம் முதன்மையானது ஆனால் அதுவே இறுதி இலட்சியம்.
கலாச்சார புரட்சிக்கான தயாரிப்பு இரண்டாம் நிலை ஆயத்த வேலைத்திட்டம் அமையவேண்டும். ஆம் கடந்த காலத் தவறுகளில் இருந்து பார்க்கின்ற அகநிலையினை படிப்படிப்படியாக புரட்சிகரமாக மாற்ற வேண்டும். மனிதர்கள் எல்லாம் மாறிய பின்னர் தான் வர்க்கப்புரட்சி சாத்தியம் என்று கருதும் போக்கு அகநிலைவாதம். புறநிலை உலகின் விதிகளைப் புரிந்து அவற்றை விளக்குவதில் திறமைபெற்றிருப்பது மிக முக்கியமான பிரச்சினை அல்ல: பதிலுக்கு ஊக்கமாக உலகை மாற்றுவதற்கு அவ்விதிகள் பற்றிய அறிவை பிரயோகிப்பது தான் மிக முக்கியமான பிரச்சினை என்று மார்க்சிச தத்துவம் கருதுகிறது.

மக்கள் விரோத சக்திகள்

போராட்டத்தின் இறுதிநாளில் என்ன நடந்தது இதுதான் முக்கியமாகும். ஆனால் போராட்டத் தலமையை கொச்சைப்படுத்துவதும், அவர்களை ஒடுக்குவது தான் நோக்கம்.
ஆளும் வர்க்கம்  அதிகாரத்தினை பயன்படுத்தும் போதே அதன் பின்னால்  திருட்டு அரசியல் இருக்கின்றது என்பதேயாகும். சமூக விரோதிகள், தேசவிரோதிகள் வந்திட்டாங்களாம் என போராட்டக் கார்கள் மீது பழிசுமந்தப்பட்டது. 

அரசியல்வாதிகள், ஆட்சியாளர், காவல்துறை மீது கடுமையான வார்த்தை பயன்படுத்தக் கூடாது என்று வரம்பை ஊடகங்கள் போட்டன. எவரையும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கின்றது. விமர்சனம் செய்யும் உரிமையை ஊடகமும், அரசும் அரசியல் வாதிகளும் சேர்ந்தே மறுக்கின்றார்கள். (தேசிய ஒடுக்குமுறையை பற்றிப் பேசக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை) காவல்துறையையும் அரசையும் திட்டமிட்டு பிரிக்கும் அரசியல் விஞ்ஞானிகளாக  ஊடகவியலாளர்களும் ஊடகமும் செயற்பட்டது. காவல்துறை சொல்வதை சொல்வது என்றால் பிறகேன் 4 கண் என்று அழைக்கப்பட வேண்டும்? ஊடகங்கள் இவ்வாறு தான் கருத்தாளர்கள் பேசவேண்டும் என்று பகிங்கரமாகவே நெறுப்படுத்துகின்றார்கள்.  மனிதர் தனக்கான கருத்தை முன்வைப்பதற்கு உள்ள உரிமையை  ஆளும் வர்க்க, அரச இயந்திரத்திற்கு ஏற்ப வடிவமைக்கின்றார்கள். இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பாகும்

அரச கூலிகளாக மாறிய சாதிய அமைப்புக்கள், பிரபல்யங்கள், ஊடகங்கள் ஏறுதழுவலுக்கு மட்டுமான போராட்டம் என்று சுருக்குவது அப்பட்டமான அரசியல் மோசடி. இந்த மோசடியை தொடர்வதன் ஊடாக போராட்டத்தின் திசை மாற்றயமைக்க முற்பட்டார்கள்.  பிரபல்யங்களின், ஊடகவியலாளர்களின் அறியாமை என்பது திட்டமிட்ட செயல்தான். ஏறுதழுவலுக்கான போட்டம் மட்டும் என்று சுருக்கிவிடுவது அரசியல் மோசடியாகும்.

மாணவர்களைப் போல விரிந்த பார்வையற்ற ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், காவல்துறை ஆகியோரின் மோசடிஅரசியல் தொடர்கின்றது.  மாணவர்களின் வெற்றியை அனுபவிக்க முடியாத நிலையை தடுத்த சதிகாரர் ஆளும் வர்க்கம் தான். உளவுப்படைகள், காவற்படைகள்,   அரசின் கூட்டாக ஊடகம்- நடிகர்கள் மொத்த மனிதவிரோதிகள் என்ற ஆளும் வர்க்கம் ஆகியோரின் கூட்டுச் சதியாகும்.

அரசு யாருடையது?
மாணவர்களின் எழுச்சியின் விளைவுகள் அரசியல்வாதிகளின் தமது பிடியில் இருந்து சமூகம் நழுவுகின்றது என்ற பயமும், சமூக மாற்றத்திற்கு உள்ளாகின்றது என்பதே முக்கியமாகும்.
ஐயா வெள்ளையன் போன்றவர்களின் சுடச் சுட காரியம் ஆற்றுகின்றார்கள். இதனால் ஏற்பட்ட பயம் அன்னிய மூலனத்தின் நலனை பாதுகாக்க வேண்டியிருக்கின்றது. சமூக- தேச விரோதிகள் என்ற கூற்றுக்குப் பின்னால் உள்ள மோசடி அரசியலாகும்.
ஜனநாயகம் என்பதே ஒடுக்குபவர்கள் மாறிமாறி ஒடுக்குவதற்கு தெரிவு செய்து விடுவதே ஜனநாயகம் ஆகும். அரசியல் வாதிகள் கூறும் ஜனநாயகம் என்பது ஆளும் வர்க்க நலனுக்கு உட்பட்டதே.

மனிதர்களை இல்லாதொழிப்பது
சொத்து சூறையாடல்
அச்சுறுத்தல்
இனிபோராடாதே என்பதே போராட்டத்தின் மீதான அடக்குமுறையாகும். இது ஈழப்  போராட்டத்தின் எழுச்சியின் ஆரம்பக் காலத்தில போராளிகளை, இளைஞர்களை கடத்தி கொலை செய்தார்கள், வியாபார நிறுவனங்கள், நூலகம், பாடசாலை போன்றவற்றை கொழுத்தி எரித்தார்கள்.  இதனை தையெழுச்சியை ஒடுக்கியவிதத்தில் உள்ள ஒற்றுமை கவனிக்க முடியும்.  

தை எழுச்சியின் பின்னால் இருக்கின்ற முரண்பாட்டுக் கூறுகளை கவனத்தில் எடுக்க வேண்டும். தை எழுச்சியை வன்முறை ரீதியாக அடக்கியது இந்திய அரச இயந்திரம். தமிழ் நாடு ஆட்சியதிகாரம் அனைத்தையும் கொண்ட ஒரு தேசம் அல்ல. அங்கு எழும் முரண்பாடுகளை அடக்குவது முழு இந்திய அடக்குமுறை இயந்திரத்தின் ஒரு அங்கம். அகண்ட இந்தியா என்பதற்கு அப்பால் தமிழ் நாடு அரச இயந்திரம் செயற்பட முடியாது.

அரசினையும், காவல்துறையையும் வேறுபடுத்தும் ஊடகங்களின் சதியரசியலாகும். அரச இயந்திரம் என்பது மக்களை ஒடுக்குவதற்கும்,  நிதிநிறுவனங்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பதுமேயாகும். ஜனநாயகம் என்பதை எம்மை ஆட்சி செய்வதற்காய் மாற்றி மாற்றி ஒடுக்குமுறையாளர்களை மாற்றிக் கொள்வது தான். சட்டம், நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் ஆகியன அரசின் வன்முறைக் கருவியாகும். ஆளும் வர்க்கத்தின் நலன்களாக அரசை பாதுகாப்பதேயாகும்.
"
மக்கள் திரளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்கின்ற சமூக அதிகாரமே அரசின் அடிப்படையான குணாம்சம். ... குடிமக்களைப் பொறுத்தமட்டில் சமூக அதிகாரம் முதலில் ஒரு போலிஸ்படை என்ற வடிவத்தில் மட்டுமே இருந்தது. அரசு தோன்றிய காலத்தில் இருந்தே போலீஸ்படை இருந்து வந்ததனால்தான் 18ஆம் நூற்றாண்ட சேர்ந்த அப்பாவி பிரெஞ்சுகாரர்கள் நாகரிகமடைந்த தேசங்கள் என்று கூறுவதற்கு பதிலாக போலீஸ் தேசங்கள் என்று கூறினார்கள். ... தெற்கு ஜெர்மனியிலும் ஸ்விட்சர்லாந்திலும் இவர்களை Landjager என்று கூறுகிறார்கள். இந்தப் போலீஸ் படையில் இருந்தவர்கள் அடிமைகளே. " - எங்கெல்ஸ் (குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம். பக்கம் 187) அரசு வடிவம் இந்திய பிராந்தியவாதத்திற்கு உட்பட்டதும் இதில் உள்ள ஓரு தேசமே தமிழ் நாடாகும்.
அரசு என்பது ஒரு வர்க்கத்தை எப்பவும் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்கமற்ற் அரசு என்பது பொதுவுடமை அரசு மாத்திரம் புதிய ஜனநாயக அரசிலும், சோசலிச அரசிலும் உழைப்பாளிகளின் நலன் முதன்மையாகக் கொண்டிருக்கும். முதலாளித்துவ  அரசில் முதலாளிகளின் நலனாகவும் அவர்களே அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தமிழ் நாட்டு அரசு என்பது ஏதோ ஒன்றும் தமிழர்களின் அரச அல்ல. அது இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு உளவுத் துறையாலும் மத்திய அரசிற்கு கட்டுப்பட்டது. மக்களை தாக்கியது தனியே தமிழ் நாட்டு அரசபடை மாத்திரம் அல்ல மத்திய சிறப்பும் படையும் தான்.

தமிழ் தேசத்தின் எழுச்சியை அடக்குவது

சமூகப் பிரச்சனைக்காக எழுச்சி கொண்ட எதுவும் எழக்கூடாது

அகண்டபார அதிகார வர்க்கம் தமிழ் தேசத்தின் மீதான எழுச்சியை முளையில் கிள்ளி எறியும் அடக்குமுறையே நடந்தேறுகின்றது.  இவைகள் பொதுவான ஆரம்ப ஒடுக்குமுறை வடிவமாகின்றது.

தை எழுச்சி என்பது தேசிய ஜனநாயக் கட்டத்திற்கான எழுச்சியை கட்டியம் கூறியதோகும்.  தேசங்களாக வளரக்கூடிய ஆற்றல்வளம் (potential)  கொண்ட  தேசிய இனங்கள் நிர்வாக வசதிக்காக இணைக்கப்பட்டது  வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்றிருக்கின்றன. இதனை ‘இனவாதிகள் நான் 70 வருடமாகத் தான் இந்தியன் 5000 வருடமாக தமிழன்‘ இது எளிய வார்த்தையின் ஊடாக  எல்லோரிடமும் செல்கின்றது.  இதனை -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.--- இங்கு லெனின் தேசிய இனங்கள் தேசத்திற்கான பண்பைக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது அல்லது வளரும் என்று வரையறுக்கின்றார்.

தை எழுச்சி ஒடுக்குமுறைக்கு உள்ளாகியதன் காரணம் தேசிய இனங்களின் ஜனநாயகக்  கட்டத்தை ஒடுக்குவதாகும்.

  

லெனின்- மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் என்சிபிஎச் 1985

 ==============================================    Top of Form

No comments:

Post a Comment