ஏகாதிபத்திய சகாப்பத்தை விளங்கிக் கொள்ளல்
ஏகாதிபத்தியத்தின் போக்கை விளங்கிக் கொள்வது கோட்பாட்டுப் பிரச்சனையாகும். சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை, சிந்தனை முறை, வளர்ச்சியும், முரண்பாடுகளையும் அறிந்து கொள்ள இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையில் அணுக முடியும். 1990களின் பின்னர் பின்னடைவிற்குள்ளான மார்க்சியத்திற்கு புதிய விளக்கம் கொடுக்க முயற்சிக்கப்படுகின்றது.
இந்தப் போக்கிற்கு மாற்றாக மூலவர்களின் வழிகாட்டலின் ஊடாக இன்றைய உலக ஒழுக்குப் போக்கை விளங்கிட முடியும். முன்னைய ஏகாதிபத்தியங்களுக்கும் செல்வியல் ஏகாதிபத்தியத்திற்கும் உள்ள பண்பு மாற்றம், அளவு மாற்றத்தை கொண்டு அளவிட முடியும். பண்பு மாற்றம் அளவு மாற்றம் என்பதைக் கொண்டு மூலவர்களின் வழிகாட்டலில் போதாமை உள்ளதா இல்லையா என்பதை நிறுவிட முடியும். இந்தப் பகுதியில் தோழர் லெனின், தோழர் மாவோவின் மதிப்பீடு பற்றிய நேரடியான எழுத்துக்களையும், வரையறையும் முதலின் கவனிப்போம். ஏகாதிபத்தியங்கள் வரலாற்றுக் காலத்தில் எவ்வாறு இராணுவ, அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு ஒடுக்குமுறை வழிகளைப் பயன்படுத்திக் கொள்வதும், தொடரவும் செய்கின்றது என்பதைப் பார்ப்போம்.
உலகம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளால் சிக்கித் தவிக்கின்றன. முதலாளித்துவ ஏகாதிபத்திய இணக்கமாகவும், யுத்தங்களின் மூலம் சந்தையை பங்கிட்டுக் கொள்கின்றன. புல்லுருவித்தனமாகிவிட்ட அல்லது அழுகத் தொடங்கிவிட்ட முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும். உற்பத்திச் சந்தையில் தனியார் உடமை நிலவுகின்றதை உறுதிப்படுத்துகின்றது. 1900 பின்னர் குடியரசு, முடியரசு வர்க்கத்தாருக்களுக்கிடையே வேறுபாடு மறைந்து சென்றது. தொழிற்கட்சிகள், சமூக ஜனநாயகக் கட்சிகள் என்பன இன்றைக்கு ஏகாதிபத்தியங்களின் நலனை வெளிப்படையாக செய்கின்றன. விரல்விட்டு எண்ணக் கூடிய நிதிமூலதனத்தைக் கொண்ட வர்க்கம் வளர்ந்து வந்துள்ளது. மூலதன ஏற்றுமதி என்பது கட்டுப்பாடு அற்று நகர்கின்றன. நிதிமூலதனம் தனது ஆதிக்கத்திற்காக ‘‘சுதந்திரம்” என்ற பெயரில் விரிவாக்கம் செய்கின்றது. இசுரேல் மீதான ஹமாசின் (07.10.23) தாக்குதல் நடத்தின. அதன் பின்னர் ஏகாதிபத்தியங்கள் ஒன்று சேர இசுரேலிய இனவழிப்பை வெட்கமின்றி ஆதரித்து நிற்கின்றன. அரசியல்வாதிகளையும், சமூகத்தையும் இலஞ்சமும் ஊழலும் எங்கும் நிறைந்திருக்கின்றன. இந்தச் சமூகப் போக்கை அனைத்து வழிகளிலும் சமூகமயமாக்கிவிட்டிருக்கின்றது. அனைத்து வகைகளிலும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற்கொள்வதன் ஊடாக கடந்த 100 வருடங்களுக்கு மேலாக சந்தையை உறுதி செய்கின்றது. ஏகாதிபத்திய நாடுகளில் பிரகுலத்தவராக மாறிய தொழிலாளர் வர்க்கம், மேட்டுக்குடிகள் வறிய நாடுகளின் செலவில் வாழ்கின்றார்கள். ஏகபோகம் தோற்றுவிக்கப்படல், ஒன்றிணைந்த நிறுவனக் கட்டமைப்பு பொருள் உற்பத்தியை ஒன்று குவிக்கின்றன, வங்கிகள் முறை வலுவாக கட்டமைக்கப்பட்டது, மூலப் பொருட்களுக்கான கட்டுபாட்டைக் கொண்டது, சந்தையைப் பிரித்தல், தேவையான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல் ஆகும்.
ஏகாதிபத்தியத்தின் மீதான எதிர்ப்புப் போர் என்பது வெவ்வேறு சமூக அலகில் இருந்து தொடங்கிட வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் கட்டமைக்கப்படவில்லை. ஏன் அங்கிருக்கும் தேசிய இனச் சிச்கலையும் அது உள்வாங்கவில்லை. இடதுசாரி என்பவர்கள் பொருளாதாரவாதிகளாக சீரளிந்து உள்ளதை மீளாய்வு செய்ய முயல்கின்றார்களா? சமூகக் கட்டத்தை கடப்பதற்காக போராட்டத்தினை தொடராத அனைத்துவித நிலைப்பாடுகளையும் மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும். குறிப்பான நாடுகளின் நிலமைகளை ஆராய்கின்ற வேளையில், நிதிமூலதனத்தின் தாக்கம், அது கொடுக்கும் சமூக அழுத்தம், முரண்பாடுகளை கற்றறியவேண்டும்.
‘‘ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் மீதான ஒரு மேற்கட்டுமானம். அது தகர்ந்து விழும்போது நாம் உச்சியை அழிப்பதிலும் அடித்தளத்தை அம்பலப்படுத்துவதும் ஈடுபடுவதைக் காண்கிறோம். இதனால் தான் வேலை திட்டம் அது பிழையற்றதாக இருக்குமானால் உள்ளபடியே என்ன நிலவுகிறது என்பதைச் சாற்ற வேண்டும். பழைய முதலாளித்துவம் இருக்கிறது, அது பல கிளைகளில் ஏகாதிபத்தியமாக வாழ்ந்திருக்கிறது. அதன் போக்கியல்புகள் தனி முழுமையாயும் ஏகாதிபத்தியத் தன்மையுடையவை. ஏகாதிபத்தியத்தின் கருத்து நிலையில் இருந்து மட்டுமே அடிப்படையான விடயங்களைப் பரிசீக்க முடியும். இந்தப் போக்கியல்பின் கருத்தை நிலையில் இருந்தல்லாமல் வேறு எந்த வழிகளிலும் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கை சம்பந்தப்பட்ட எந்தத் தனி ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. வேலைத்திட்டம் இப்போது விளக்குவது இதைப்பற்றி அல்ல, எதார்த்தத்தில் பழைய முதலாளித்துவத்தின் மிக பரவலான அடித்தளம் இருக்கிறது. போருக்கு இட்டுச் சென்ற ஏகாதிபத்தியத்தின் மேற்கட்டுமானம் இருக்கிறது. இந்தப் போரில் இருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தொடக்கம் பின் நிகழ்ந்தது. இந்த கட்டத்தை நீங்கள் தவிர்க்க முடியாது. இந்த மெயநடப்பு உலகம் முழுவதுமான பாட்டாளி வர்க்க புரட்சியின் மெய் வீதத்தின் சிறப்பம்சமாகும், வரப் போகும் பல ஆண்டுகளுக்கு மெய்யாகவே நீடிக்கும். (200-லெ9)
1. ஏகாதிபத்தியம்- தோழர் லெனின்
ஏகாதிபத்தியம் பற்றிய வரையறையின் பொருளாதார உள்ளடக்கம் கொண்ட வரையறை நமக்கு தோழர் லெனின் எமக்கு தந்துள்ளார். அதற்கு அப்பால் புதிய வரையறையைத் தேடிச் செல்பவர்களும் உண்டு. இன்று சீனாவை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்ற சிக்கலும் உண்டு. அதேவேளை சீனம் உலக மக்களை சுரண்டுகின்றதை கடந்து சென்றிட முடியாது. உலகமயம் என்பதே திருட்டு வரையறை. ஏகாதிபத்தியத்தின் உண்மை முகத்தை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட கலாசாலை வரையறையேயாகும். ஆனால் நிதிமூலதனத்தின் கோர முகத்தினை கலாசாலை பாடத்திட்டத்தில் ஏகாதிபத்தியம் என்று கற்றுக் கொடுக்காது.
‘‘ஏகாதிபத்தியத்தைப் பற்றி இயன்ற அளவிற்கு சுருக்கமான இலக்கணம் அளிக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறவேண்டும். இத்தகைய இலக்கணம் யாவற்றிலும் முக்கியமானதை தன்னுள் கொண்டதாக இருக்கும். ஏனெனில் ஒருபுறத்தில் நிதி மூலதனம் என்பது தொழிலதிபர்களின் ஏகபோகக் கூட்டுக்களின் மூலதனத்துடன் ஒன்று கலந்து விட்ட ஒருசில மிகப் பெரிய ஏகபோக வங்கிகளின் வங்கி மூலதனமாகும். மறுபுறத்தில் உலகின் பங்கீடானது எந்த முதலாளித்துவ அரசாலும் கைப்படாத பிரதேசங்களுக்கு தடையின்றிப் பரவிச் செல்லும். கொலனியாதிக்கக் கொள்கையிலிருந்து முற்றும் பங்கிடப்பட்டுக் கொண்டு விட்ட உலக நிலப்பரப்பை ஏகபோக உடனடியாக கொண்டிருப்பதற்குரிய கொலனியாதிக்கக் கொள்கைக்கு மாற்றிச் செல்வதாகும். ஆனால் மிகவும் சுருக்கமான இலக்கணங்கள் முக்கிய அம்சங்களைத் தொகுத்துத் தருவது வசதியாக இருந்தாலுங் கூட அவை பற்றாக் குறையானவையே. ஏனெனில் வரையறை செய்யப்படவேண்டிய நிகழ்வின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை அவற்றிலிருந்து வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே எல்லா இலக்கணங்களும் நிபந்தனைக்கு உட்பட்ட சார்பு நிலையிலான மதிப்பே கொண்டவை. நிகழ்வினது முழு வளர்ச்சியிலும் அதன் தொடர்புடமைகள் யாவும் அடங்கியனவாய் ஒரு போதும் இருக்க முடியாது என்பதை மறக்காமல் மனதில் கொண்டு ஏகாதிபத்தியத்தின் பின்வரும் ஐந்து அடிப்படை இயல்புகளும் உள்ளடங்குமாறு அதற்கு இலக்கணம் கூறியாக வேண்டும்.
1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களை தோற்றுவிக்கும் படியான உயர்ந்த கட்டத்திற்கு உற்பத்தியின் மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்து விடுதல்.
2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ‘நிதி மூலதனத்தின்‘ அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாதலும்.
3) பண்ட ஏற்றுமதியிலிருந்து வேறுபடுத்தபட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியத்துவம் பெறுதல்.
4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவ கூட்டுக்கள் உருவாகி, உலகையே இவைகள் தமக்கிடையே பங்கு போட்டுக் கொள்ளுதல்
5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவு பெறுகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக் கட்டத்தில் ஏகபோகங்கள் நிதிமூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகிறதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியதத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச டிரஸ்டுக்களிடையே உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்று விட்டதோ, அக் கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.‘‘ (ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் பாகம் 141, 142 லெனின்)
பொருளாதார ஒப்பந்தங்கள்
ஆயுத ஒப்பந்தங்கள்
நேட்டோ ஒப்பந்த நாடுகள்
தன்னார்வக் குழுக்கள்
நவீன ஊடகத்துறை கூடாக நுகர்வையம், சந்தையையும் அறிமுகப்படுத்துகின்றது, நுகர்வு அதிகப்படுத்தும்
இன்று தோழர் லெனினின் ஏகாதிபத்திய வரையறை போதாது, ஏகாதிபத்திய முறை வேறாக உள்ளது என்கின்றார்கள். ஏகாதிபத்தியம் பண்பு முறையில் வளர்ச்சியடைந்துள்ளது. அது மென்மேலும் முதலாளித்துவ ஜனநாயக நிர்வாக அலகில் தனக்குத் தேவையான வகையில் சிறப்புத் தேர்ச்சியை முன்னிறுத்தியிருக்கின்றது.
‘‘நான்காவதாக, விரிந்து பரவத் துடித்துக் கொண்டிருக்கும் நிதி மூலதனமானது எந்த ஒரு நாட்டினுடையவும், ‘‘சுயேட்சையான” நாட்டினதுங் கூட மிகச் சுதந்திரமான ஜனநாயக, குடியரசு அரசாங்கத்தையும் அதன் தேர்ந்தெடுக்கபட்ட அதிகாரிகளையும் ‘‘சுதந்திரமான” விலைகொடுத்து வாங்கவோ அல்லது கைக்கூலி கொடுத்து வசப்படுத்தவோ முடியும். அரசியல் ஜனநாயகத் துறையில் எந்த விதமான சீர்திருத்தங்களையும் செய்வதன் மூலம் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை, பொதுவாக மூலதனத்தின் ஆதிக்கத்தை அகற்றிவிட முடியாது; சுயநிர்ணயம் என்பது முழுமையாகவும் பிரத்தியேகமாகவும் இத்துறையைச் சேர்ந்தது . ஆனால் அரசியல் ஜனநாயகம் ஒடுக்குமுறை, வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் அதிக சுதந்திரமான, பரவலான, தெளிவான ஒரு வடிவம் என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மையை நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கம் சிறிதும் சிதைப்பதில்லை. எனவே முதலாளித்துவத்தின் கீழ் அரசியல் ஜனநாயகத்துக்கான ஒரு கோரிக்கை பொருளாதார ரீதியில் ”செயல்பூர்வமற்றது” என்று கூறும் வாதங்கள் அனைத்தையும் சுருக்கினால் அவை முதலாளித்துவத்தின் பொதுவான, அடிப்படை உறவுகளையும் மொத்தத்தில் அரசியல் ஜனநாயகத்தையும் தத்துவார்த்த ரீதியில் தவறாக வரையறை செய்வதாகின்றன.” (182-3)
1. தொழில்துறையில் ஏகபோகங்கள்
“விற்பனையில் நிபந்தனைகள், பணம் செலுத்துவதற்கான கெடுக்கள் முதலியவை பற்றி கார்ட்டல்கள் ஒப்பந்தத்திற்கு வருகின்றன. சந்தைகளை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்றன. உற்பத்தி செய்யப்பட வேண்டிய பண்டங்களின் அளவை நிர்ணயிக்கின்றன. விலைகளை நிர்ணயிக்கின்றன. பற்பல தொழில் நிலையங்களுக்கிடையில் லாபங்களைப் பிரித்துக் கொள்கின்றன.” (பக்கம் 33)
“போட்டியானது ஏகபோகமாக மாற்றமடைந்து வருகிறது. உற்பத்தியின் சமூகமயமாக்கம் இதன் விளைவாகப் பிரமாதமாக முன்னேறியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் மேம்பாடுமாகிய வளர்ச்சிப் போக்கு சமூகமயமாக்கப்படுகிறது” (பக்கம் 38)
“தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மிதமிஞ்சிய துரித வேகமானது தேசப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுக்கும், அராஜகத்துக்கும், நெருக்கடிகளுக்குமான கூறுகளை மேலும் மேலும் அதிகமாகத் தோற்றுவிக்கிறது” (பக்கம் 45)
“ஏகபோகம் – ‘முதலாளித்துவ வளர்ச்சியின் மிக அண்மைய கட்டத்தில்’ இதுவேதான் இறுதி முடிவாய்க் கூறக்கூடிய சொல்.” (பக்கம் 46)
2. வங்கிகளும் அவை ஆற்றும் புதிய பங்கும்
“வங்கித் தொழில் வளர்ந்து சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்களில் ஒன்று குவியும்போது, வங்கிகள் சாமான்ய இடைத்தரகரின் நிலையிலிருந்து வளர்ந்து சக்திவாய்ந்த ஏகபோகங்களாகி, எல்லா முதலாளிகள் வசமும் சிறு தொழில், வாணிபத் துறையினர் வசமும் உள்ள பண மூலதனத்தில் அனைகமாய் அனைத்தையும், மற்றும் குறிப்பிட்ட ஒரு நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலுமுள்ள உற்பத்திச் சாதனங்கள், மூலப்பொருள் ஆதாரங்களில் பெரும்பகுதியையும் தங்களது பிடிக்குள் கொண்டனவாகி விடுகின்றன. எண்ணிறந்த சாமான்ய இடைத்தரகர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய சொற்ப ஏகபோகக்காரர்களாக இப்படி மாற்றம் பெறுவது, முதலாளித்துவமானது முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக வளர்வதன் அடிப்படையான நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்றாகும்.” (பக்கம் 47)
தொழில்துறையில் ஏகபோகங்கள்
“விற்பனையில் நிபந்தனைகள், பணம் செலுத்துவதற்கான கெடுக்கள் முதலியவை பற்றி கார்ட்டல்கள் ஒப்பந்தத்திற்கு வருகின்றன. சந்தைகளை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்றன. உற்பத்தி செய்யப்பட வேண்டிய பண்டங்களின் அளவை நிர்ணயிக்கின்றன. விலைகளை நிர்ணயிக்கின்றன. பற்பல தொழில் நிலையங்களுக்கிடையில் லாபங்களைப் பிரித்துக் கொள்கின்றன.” (பக்கம் 33)
“போட்டியானது ஏகபோகமாக மாற்றமடைந்து வருகிறது. உற்பத்தியின் சமூகமயமாக்கம் இதன் விளைவாகப் பிரமாதமாக முன்னேறியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் மேம்பாடுமாகிய வளர்ச்சிப் போக்கு சமூகமயமாக்கப்படுகிறது” (பக்கம் 38)
“தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மிதமிஞ்சிய துரித வேகமானது தேசப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுக்கும், அராஜகத்துக்கும், நெருக்கடிகளுக்குமான கூறுகளை மேலும் மேலும் அதிகமாகத் தோற்றுவிக்கிறது” (பக்கம் 45)
“ஏகபோகம் – ‘முதலாளித்துவ வளர்ச்சியின் மிக அண்மைய கட்டத்தில்’ இதுவேதான் இறுதி முடிவாய்க் கூறக்கூடிய சொல்.” (பக்கம் 46)
“பழைய முதலாளித்துவம் காலம் கடந்ததாகி விட்டது. புதிய முதலாளித்துவம் வேறொன்றை [சோசலிசத்தை] நோக்கி மாறிச் செல்வதற்கான இடைநிலைக் கட்டத்தைக் குறிக்கிறது. ஏகபோகத்தைத் தடையில்லாப் போட்டியுடன் ‘இணக்கம் கொள்ளச்’ செய்வதற்குரிய ‘நிலையான கோட்பாடுகளையும் திட்டவட்டமான குறிக்கோளையும்’ தேடிப் பயனில்லைதான்” (பக்கம் 72)
3. நிதி மூலதனமும் நிதியாதிக்கக் கும்பலும்
“உற்பத்தியின் ஒன்றுகுவிப்பு; அதிலிருந்து ஏகபோகம் எழுதல்; வங்கிகள் தொழில்துறையுடன் இணைதல் அல்லது ஒன்றுகலத்தல் – இதுதான் நிதி மூலதனத்தின் உதயத்தினுடைய வரலாறு; இதுதான் நிதி மூலதனம் என்ற கருத்தினத்தின் உள்ளடக்கம்” (பக்கம் 74)
“ஒருசிலரது கைகளில் ஒன்றுகுவிந்து நடைமுறையில் ஏகபோக நிலை வகிக்கும் நிதி மூலதனமானது கம்பெனிகளை முன்னேற்றுதல், பங்குகளை வெளியிடுதல், அரசாங்கக் கடன்கள் முதலானவற்றின் மூலம், இடையறாது தொடர்ந்து அதிகரிக்கும் பிரம்மாண்ட லாபங்களை மூட்டை கட்டிக் கொள்கிறது; நிதியாதிக்கக் கும்பலின் ஆதிபத்தியத்தை வலுவாக்கிச் செல்கிறது; மற்றும் ஏகபோகக்காரர்களின் ஆதாயத்துக்காகச் சமுதாயம் முழுவதிலுமிருந்து கப்பம் வசூலிக்கிறது.” (பக்கம் 85)
“நிதி மூலதனத்தின் பிரதான செயல்களில் ஒன்றாகிய பத்திர வெளியீட்டிலிருந்து மிதமிஞ்சி உயர் விகிதத்தில் கிடைக்கும் லாபமானது, நிதியாதிக்கக் கும்பலை வளர்த்திடுவதற்கும் வலுவாக்குவதற்கும் மிக முக்கிய பங்காற்றுகிறது” (பக்கம் 87)
“ஏகாதிபத்தியம் அல்லது நிதி மூலதன ஆதிக்கம் என்பது இந்தப் பிரிவினை மிகப் பெரும் அளவுகளுக்கு அதிகரித்து விடும் முதலாளித்துவத்தின் உச்சகட்டமாகும். மூலதனத்தின் ஏனைய எல்லா வடிவங்களின் மீதும் நிதி மூலதனம் தலைமையதிகாரம் பெறுவதானது முதலீட்டாளரும் நிதியாதிக்கக் கும்பலும் தலைமையாதிபத்தியம் பெறுவதைக் குறிக்கிறது; நிதித் துறையில் “சக்தி வாய்ந்தவையாக” இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான அரசுகள் ஏனைய எல்லா அரசுகளிலும் உயர்ந்தனவாய் தனித்த நிலை பெறுவதை இது குறிக்கிறது” (பக்கம் 95)
4. மூலதன ஏற்றுமதி
“தடையில்லாப் போட்டி தனியாட்சி புரிந்த பழைய முதலாளித்துவத்தின் குறிப்பண்பாய் இருந்தது பண்டங்களின் ஏற்றுமதி. ஏகபோகங்கள் ஆட்சி செய்யும் புதிய முதலாளித்துவத்தின் இன்றைய கட்டத்தின் குறிப்பண்பாய் இருப்பது மூலதனத்தின் ஏற்றுமதி” (பக்கம் 97)
“முதலாளித்துவம் முதலாளித்துவமாகவே இருக்கிறவரை, உபரி மூலதனமானது அந்த நாட்டின் மக்கள் பெருந்திரளினரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது. ஏனென்றால் அது முதலாளிகளின் லாபங்களைச் சரிந்து விழச் செய்வதாகி விடும்; லாபங்களை அதிகமாக்கும் பொருட்டு பிற்பட்ட நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வதற்கே உபரி மூலதனம் பயன்படுத்தப்படும்” (பக்கம் 99)
“மூலதனத்தின் ஏற்றுமதி, எந்த நாடுகளுக்கு அது ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் மீது செல்வாக்கு செலுத்துகிறது, இந்த வளர்ச்சியை வெகுவாகத் துரிதப்படுத்துகிறது. ஆகவே மூலதன ஏற்றுமதியானது, மூலதன-ஏற்றுமதி நாடுகளின் வளர்ச்சியை ஓரளவுக்கு தடைப்படுத்தக் கூடும் என்றாலும், உலகெங்கும் மேலும் தொடர்ந்து முதலாளித்துவம் காணும் வளர்ச்சியை விரிவுபடுத்தியும் ஆழமாக்கியும் செல்வதன் மூலமே இதனைச் செய்ய முடியும்” (பக்கம் 102-3)
5. முதலாளித்துவக் கூட்டுகளிடையே உலகம் பங்கிடப்படுதல்
“மாறுகிறவையும் ஒப்பளவில் பிரத்தியேகமானவையும் தாற்காலிகமானவையும் ஆகிய காரணங்களுக்கு ஏற்ப, போராட்டத்தின் வடிவங்கள் மாறக் கூடும், இடையறாது மாற்றமடையவும் செய்கின்றன. ஆனால், போராட்டத்தின் சாராம்சம், அதன் வர்க்க உள்ளடக்கம், வர்க்கங்கள் இருந்து வரும் வரை நிச்சயம் மாற்றமடைய முடியாது. இன்றையப் பொருளாதாரப் போராட்டத்தின் சாராம்சத்தை (உலகின் பங்கீட்டை) மறைப்பதும், இப்போராட்டத்தின் ஒரு வடிவத்தை ஒரு சமயமும் இன்னொரு வடிவத்தை இன்னொரு சமயமும் வலியுறுத்துவதும், உதாரணமாக ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்கே இயற்கையான உகந்தனவாகும்.” (பக்கம் 119)
“முதலாளித்துவத்தின் மிக அண்மைய கட்டத்துக்குரிய இந்தச் சகாப்தம் நமக்குத் தெளிவுபடுத்துவது என்னவெனில் : உலகின் பொருளாதாரப் பங்கீட்டின் அடிப்படையில் முதலாளித்துவக் கூட்டுகளிடையே குறிப்பிட்ட சில உறவுகள் வளர்கின்றன; அதேபோது இதற்கு இணைவாகவும் இதனுடன் தொடர்பு கொண்டும் உலகின் பிரதேசப் பங்கீட்டின் அடிப்படையில், காலனிகளுக்கான போராட்டத்தின், ‘செல்வாக்கு மண்டலங்களுக்கான போராட்டத்தின்’ அடிப்படையில் அரசியல் கூட்டணிகளுக்கிடையில், அரசுகளுக்கிடையில் குறிப்பிட்ட சில உறவுகள் வளருகின்றன என்பதுதான்.” (பக்கம் 120)
6. வல்லரசுகளுக்கிடையே உலகம் பங்கிடப்படுதல்
“உலகமானது முதன்முதலாக இப்போது முழு அளவுக்கு பங்கிட்டுக் கொள்ளப்பட்டு விட்டது, ஆகவே இனி வருங்காலத்தில் மறுபங்கீடு மட்டுமேதான் சாத்தியம்” (பக்கம் 121)
“ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மூலப் பொருள் ஆதாரங்களில் மட்டுமின்றி, இனி உருவாக்கப்படக் கூடியவற்றிலும் நிதி மூலதனம் அக்கறை கொண்டுள்ளது.” (பக்கம் 133)
“’நிதி மூலதனம் சுதந்திரத்தை விரும்பவில்லை, ஆதிக்கத்தையே விரும்புகிறது’” (பக்கம் 135)
“… நிதி மூலதனமும் அதன் அயல்நாட்டுக் கொள்கையும் அரசுச் சார்புநிலையின் பல இடைநிலை வடிவங்களைத் தோற்றுவிக்கின்றன…. காலனி உடைமை நாடுகள் என்றும் காலனிகள் என்றும் நாடுகளிடையிலான பிரதான தொகுதிகள் மட்டுமின்றி, அரசியல் துறையில் பெயரளவில் சுயேச்சையானவை என்றாலும் உண்மையில் நிதித்துறை, அரசுத் தந்திரத் துறை சார்புநிலை என்னும் வலைப்பின்னலால் கட்டுண்டிருக்கும் சார்பு நாடுகளின் பல்வேறு வடிவங்களும் இச்சகாப்தத்துக்குரிய இனமாதிரியானவை ஆகும்” (பக்கம் 136)
7. முதலாளித்துவத்தின் தனியொரு கட்டமாகிய ஏகாதிபத்தியம்
“பொதுவாக முதலாளித்துவத்தின் அடிப்படை குணாதிசயங்களின் வளர்ச்சியாகவும், நேரடியான தொடர்ச்சியாகவும் ஏகாதிபத்தியம் எழுந்தது. ஆனால் முதலாளித்துவம் அதன் வளர்ச்சியில் திட்டவட்டமான, மிக உயர்ந்த கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக மாறியது; இக்கட்டத்தில்தான் முதலாளித்துவத்தின் சில அடிப்படை குணாதிசயங்கள் அவற்றின் நேர் எதிரானவையாக மாற ஆரம்பித்தன; முதலாளித்துவத்திலிருந்து மேலான சமுதாய அமைப்புக்கு [சோசலிசத்துக்கு] மாறிச் செல்வதற்கான காலத்தினுடைய இயல்புகள் உருப்பெற்று எழுந்து எல்லாத் துறைகளிலும் தம்மை வெளிக்காட்டிக் கொண்டன.
பொருளாதார வழியில் இந்த நிகழ்ச்சிப் போக்கின் மிக முக்கிய அம்சம், தடையில்லா முதலாளித்துவப் போட்டி அகற்றப்பட்டு அதனிடத்தில் முதலாளித்துவ ஏகபோகம் எழுந்ததுதான். தடையில்லாப் போட்டிதான், முதலாளித்துவத்துக்கும் பொதுவாகப் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்குமுரிய அடிப்படை இயல்பு; ஏகபோகம் தடையில்லாப் போட்டிக்கு நேர் எதிரானதாகும். ஆனால் தடையில்லாப் போட்டி நம் கண்முன்னால் ஏகபோகமாக மாற்றப்படக் கண்டோம்.”
“தடையிலாப் போட்டியிலிருந்து வளர்ந்தெழுந்த இந்த ஏகபோகங்கள் அதேபோது போட்டியை அகற்றிவிடவில்லை, போட்டிக்கு மேலும் அதனுடன் கூடவும் நிலவுகின்றன, இவ்வழியில் மிகுந்த கடுமையும் உக்கிரமும் வாய்ந்த மிகப் பல முரண்பாடுகளையும் பூசல்களையும் மோதல்களையும் தோற்றுவிக்கின்றன. ஏகபோகமானது முதலாளித்துவத்திலிருந்து அதைவிட மேலானதொரு அமைப்புக்கு [சோசலிசத்துக்கு] மாறிச் செல்வதாகும்” (பக்கம் 141)
“முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூற வேண்டும்” (பக்கம் 141)
8. முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் அழுகலும்
“ஏகபோகமே ஏகாதிபத்தியத்தின் ஆழ்நிலைப் பொருளாதார அடிப்படையாகும்…. இது முதலாளித்துவ ஏகபோகமாகும், அதாவது முதலாளித்துவத்திலிருந்து தோன்றி, முதலாளித்துவத்துக்கும் பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திக்கும் போட்டிக்குமான பொதுவான சூழலில், இந்தப் பொதுச் சூழலுக்கு நிரந்தரமான, தீர்வு காண முடியாத முரண்பாடான ஒன்றாய் நிலவும் ஏகபோகமாகும்.
ஆன போதிலும், எல்லா விதமான ஏகபோகத்தையும் போலவே இதுவும் தவிர்க்க முடியாதபடித் தேக்கத்துக்கும் அழுகலுக்குமான போக்கை உண்டாக்குகிறது. ஏகபோக விலைகள், தற்காலிகமாகவே ஆயினும், நிலைநாட்டப்பட்டிருப்பதால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இதன் விளைவாய் எல்லா முன்னேற்றத்துக்கும் உந்துவிசையாய் அமையும் காரணமானது ஓரளவுக்கு மறைந்து விடுகிறது, தவிரவும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதற்கான பொருளாதாரச் சாத்தியப்பாடு உதித்தெழுகிறது” (பக்கம் 159)
“ஏகாதிபத்தியத்தின் மிகவும் முக்கியமான பொருளாதார அடித்தளங்களில் ஒன்றான மூலதன ஏற்றுமதியானது, பண மூலதனத்தைக் கொண்டு சுகஜீவிகளாக வாழ்வோரைப் பொருளுற்பத்தியிலிருந்து மேலும் முழுமையாகத் தனிமைப்படுத்தி ஒதுக்குகிறது, கடல் கடந்த நாடுகளும் காலனிகளுமான சிலவற்றின் உழைப்பைச் சுரண்டி வாழும் புல்லுருவித்தனமானது ஒரு நாடு முழுவதையுமே பீடித்துக் கொள்கிறது” (பக்கம் 160)
பகுதி 2. தோழர் மாவோவின் ஏகாதிபத்தியங்களின் செயற்பாடு மீதான மதிப்பீடு.
1. கொலனித்துவத்தின் தாக்கம், முதலாளித்துவ ஆரம்ப நிலையில் --‘‘நிலப்பகுதியை வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளுதலுக்கு கூடுதலாக, பெரிய இழப்பீட்டுத் தொகைகளையும் பறித்தன. இவ்வாறு, சீனாவின் பெரிய நிலவுடமை பேரரசுமீது கனத்த அடிகள் கொடுக்கப்பட்டன. ”
2. ஏகாதிபத்திய வல்லரசுகள் எண்ணற்ற சமமற்ற ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திடுமாறு சீனாவை நிர்ப்பந்தித்துள்ளன. அதன் வாயிலாக , சீனாவின் தரை மற்றும் கடற்படைகள் நிலை கொள்ளவும் அதன் வாயிலாக , சீனாவில் தரை மற்றும் கடற்படைகள் நிலை கொள்ளவும் அயல் நாட்டு தூதரக அதிகார வரம்பை கெயற்படுத்துவதற்கான உரிமையை பெற்றுள்ளதுடன் ஓட்டுமொத்த நாட்டையும் ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலங்களாக துண்களாக்கியுள்ளன. (தமது நாட்டு எல்லை கடந்த படைகளை நிலை நிறுத்துவது, மாத்திரம் அல்ல தூதரங்களை வைத்தே ஆட்சியாளர்களை மாற்றவும், சதியைச் மேற்கொள்ளும் செயற்பாட்டை செய்தார்கள்.)
3. ஏகாதிபத்திய வல்லரசுகள் சமனற்ற இவ்வொப்பந்தங்களின் வாயிலாக, சீனாவில் உள்ள முக்கிய வணிக துறை முகங்களின்களாக எல்லைகளை வரையறுத்த பல பகுதிகளில் தங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ள சலுகைகளாக எல்லைகளை வரையறுத்து பிரித்துள்ளன. அவை சீனாவின் சுங்கவரிகள், அன்னிய வாணிகம் மற்றும் போக்குவரத்து வழிகளின் (கடல், தரை, உள்நாட்டு நீர் வழி மற்றும் வான்) மீதான கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளன. இவ்வாறு, சீனாவில் தமது பொருட்களை குவித்து தொழில் துறை பொருட்களுக்கு சந்தையாக மாற்றி அதேவேளையில் தமது ஏகாதிபத்திய தேவைகளுக்கான சந்தையாக மாற்றி அதேவேளையில் தமது ஏகாதிபத்திய தேவைகளுக்கு அதன் விவசாயத்தை கீழ்படுத்த ஏதுவாக இருந்து வந்துள்ளன. ( இது பிற்காலத்தில் WTO போன்ற அமைப்புகள் உருவாக்கத்தின் பின்னர் நடுநிலை முகத்தைக் கொடுக்கப்பட்டது )
4. ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவின் மூலப் பொருட்களையும் அவ்விடத்திலேயே மலிவான உழைப்பையும் பயன்படுத்தும் வண்ணம், அதன் இலகு மற்றும் கனரக தொழிற்துறையில் பல தொழிற்நிறுவனங்களை இயக்குகின்றன. அதன் வாயிலாக நேரடியாக செலுத்தி அதன் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறு செய்கின்றன. (வரிச் சலுகை, தனிமனித உரிமை, நாடாளுமன்ற சனநாயகத்தின் மகிமை என அன்பு முகம் காட்டும் )
5. ஏகாதிபத்திய வல்லரசு சீன அரசாங்கத்திற்கு கடன்களை அளித்து சீனாவில் வங்கிகளை நிறுவுவதன் வாயிலாக சீனாவின் வங்கி மற்றும் நிதித் துறைகளை ஏகபோகமாக்குகின்றன. இவ்வாறு சரங்கு போட்டியில் சீனாவின் தேசிய முதலாளியத்தை விஞ்சியிருப்பது மட்டுமன்றி, அதன் வங்கி மற்றும் நிதியின் மீது கிடுக்கிப் பிடியையும் போட்டுள்ளன.
6. ஏகாதிபத்திய வல்லரசுகள் சீன உழவர் திரள்கள் மற்றும் மக்களின் இதர பிரிவினர் மீதான தமது சுரண்டலுக்கு வழிவகை செய்வதற்கு வணிகத் துறைமுகங்கள் முதல் தொலைக் கோடி நாட்டுப் புறங்கள் வரை, சீனாவின் நெடுகிலும் தரகு மற்றும் வணிக கந்து வட்டி சுரண்டல் வலைப் பின்னலை நிறுவியுள்ளதோடு தமது சேவைக்காக தரகு மற்றும் வணிக கந்து வட்டிக்கார வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. (The IMF was established in 1944 Established: December 1945 சர்வதேச நிலையில் பெரும் வட்டியாளர்களை நிறுவனமயப்படுத்தியுள்ளது. நுண்கடன்களைக் கொடுத்து மக்களின் சிறுசேமிப்புக்களை சுரண்டும் முறையும் விரிவாக்கம் அடைந்துள்ளது.)
7. ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவில் நிலவுடமை நிலக்கிழார் வர்க்கத்தையும் அதே சமயத்தில் தரகு வர்க்கத்தையும் தங்கள் ஆட்சியின் தலையான ஊன்று கோல்களாக ஆக்கியுள்ளன. ஏகாதிபத்தியம் ‘முதல்ல முந்தைய சமூக கட்டமைப்பின் ஆளும் சமூக அடுக்குகளோடும் அதாவது நிலவுடமைக் கிழார்களோடு வணிக மற்றும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் முதலாளி வர்க்கத்தோடும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக கூட்டுச் சேர்கிறது. ஏகாதிபத்தியம், எங்கனும், தன்பிற்போக்கான கூட்டாளிகளின் இருத்தலுக்கான அடிப்படையாக சேவை செய்கிற, முதலாளியத்திற்கு முந்தைய சுரண்டல் வடிவங்கள் (பிரத்யேமாக, கிராமங்களில்) அனைத்தையும் பாதுகாக்கவும் நீடித்திருக்கச் செய்யவும் எத்தனிக்கிறது. ‘ஏகாதிபதித்தியமானது, சீனாவில் தனது நிதி மற்றும் இராணுவ வலிமை அனைத்தையும் கொண்டு நிலவுடமை எச்சங்களை அவற்றின் ஒட்டுமொத்த அதிகார வர்க்க - இராணுவ மேற்மானத்தோடு ஆதரிக்கின்ற, உத்வேகமூட்டுகின்ற, ஊட்டி வருகின்ற, பாதுகாக்கின்ற சக்தியாகும்.”
8. ஏகாதிபத்திய வல்லரசுகள் போர்க்கிழார்கள் தங்களுக்கிடையே தொடர்ந்து சட்டையிட்டுக் கொள்ளவும் சீன மக்களை அடக்கவும் பெருமளவிலான படைக்கலங்களையும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவ ஆலோசகர்களையும் பிற்போக் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன.
9. மேலும், ஏகாதிபத்திய வல்லரசுகள்
சீன மக்களின் மனங்களை நச்சாக்குவதற்கு
தமது முயற்சிகளை ஒரு பொழுதும் தளர்த்தியிருக்கவில்லை. இது அவற்றின் பண்பாட்டு ஆக்கிரமிப்பு
கொள்கையாகும். அது சமயப்பரப்புப் பணியின் மூலமாகவும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்
கூடங்களை நிறுவுதல், செய்தித் தாள்களை வெளியிடுதல், வெளிநாடுகளில் பயில்வதற்கு சீன
மாணவர்களை தூண்டுதல் ஆகியவற்றின் மூலமாகவும்
மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றின் குறிக்கோளானது அவர்களின் நலன்களுக்கு சேவை செய்யவுள்ள
அறிவுஜீவிகளை பயிற்றுவிப்பதும் மக்களை ஏமாற்றுவதும் ஆகும். (408-410 தொ. 2 மாவோ இந்தப் பகுதியில் தோழர் மாவோவின்
எழுத்தை மேலதிகமாக விளங்கிட நீல எழுத்துக்களில்
சில விளக்கங்களை இன்றைய காலத்திற்கு ஏற்ப சில
விளக்கம் எழுதியுள்ளேன்.
9 பகுதியில் குறிப்பிடப்படும் தோழர் மாவோவின் அவதானிப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட கொலனித்துவ காலம், கொலனித்துவம் வெளியேற்றப்பட்ட பின்னர் தொடக்கம் இன்று வரை உயர் மேட்டுக்குடி குளாம் உருவாக்கப்பட்டே வந்திருக்கின்றது. இந்த மேட்டுக்குடிகள் அரசியல்வாதிகளாக, கருத்துருவாக்கிகளாகவும், இன்று வளர்ந்துள்ள உலகலாவிய ஊடகங்களின் வளர்ச்சி இன்று ஏகாதிபத்தியங்களின் கருத்துக்களை சமூகத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது.)
குறிப்பான சூழலில் உள்ள உள்ள விடங்களை இன்றைய காலத்தை ஒட்டி விளங்கிக் கொள்ள முயல வேண்டும். குறிப்பான சூழலில் பிரதான முரண்பாடு, அடிப்படை முரண்பாடு பற்றி பார்ப்போம்.
‘‘ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்கும் இடையிலான முரண்பாடும் நிலவுடமைக்கும் மக்களின் பெருந்திரள்களுக்கும் இடையிலான முரண்பாடும் நவசீன சமூகத்தில் அடிப்படை முரண்பாடாகும். முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, பிற்போக்கு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு போன்ற பிறவும் உள்ளன என்பது ஐயமற்றது. ஆனால், ஏகாதிபத்தியத்திற்கும் சீன தேசத்திற்கும் இடையிலான முரண்பாடே முதன்மையானது. இம் முரண்பாடுகளுகம் அவை உக்கிரமாதலும் தவிர்க்கவியலாதவாறு புரட்சிகர இயக்கங்களின் இடைவிடா வளர்ச்சியாக கட்டாயம் விளைய வேண்டும். நவீன மற்றும் சமகால சீனாவில் மாபெரும் புரட்சிகள் இந்த அடிப்படை முரண்பாடுகளின் அடிப்படையில் தான் தோன்றி வளர்ந்துள்ளன. (ப.411 தொ2)
3..தொகுப்பு
அரசியல் பொருளாதாரம் எவ்வாறு சமூகத்தில் இயங்குகின்றது என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம். தொழிற்துறை வளர்ச்சியின் ஏற்படுத்திய பொருளாதார மாற்றம் உலகின் பல பாகங்களிலும் மாற்றத்தை கொண்டு வந்ததுள்ளது. 1789- 1871 காலப் பகுதியில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவப் புரட்சி நடைபெற்று விட்டாயிற்று. ஆனால் இன்னும் பல நாடுகளில் இன்னும் இனக்குழும, நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பே உள்ளது. முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையை முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை. இன்னும் பல கட்டங்களை கடந்தே செல்லவேண்டியுள்ளது. இயல்பாக வளரவேண்டிய சமூகங்கள் வலுக்கட்டாயமாக வேண்டிய நிலைக்கு வந்தது. இந்த வகையில் முதலாளித்துவ உற்பத்தி முறை ஏற்படுத்திய சமூகப் போக்கையும், ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியில் ஏற்பட்ட போக்கையும் இங்கு கவனிப்போம்.
3.1கொலனியாதிக்கம்
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியும். கனிப் பொருட்களுக்கான தேவையும் நாடுபிடிக்கும் பயணங்களுக்கு காரணமாக இருந்தது. இந்த நாடுபிடிக்கும் பயணங்கள் பற்பல மாற்றத்தை உண்டு பண்ணக் காரணமாக இருந்தது.
1500களில் தொழில் வளர்ச்சியினால் ஏற்பட்ட மாற்றமானது முதலாளித்துவம் என்ற கட்டத்தை உருவாக்கக் காரணம் ஆக்கியதுடன் செல்வச் செழிப்பில் இருந்த நாடுகளை சுரண்டிக் கொழுத்தனர். அதேவேளை மூன்றாம், நாலாம் (பழங்குடிகளின் உலகம்) உலக நாடுகள் என்பது கொலனியாதிக்க வாதிகளின் பொருளாதார நலனுக்கு ஏற்றதாகவே மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டது. வயல் வெளிகளை, காடுகளையும் இயற்கையாகக் கொண்ட மலைகளை தேயிலை கோப்பி போன்றவற்றிற்கும், பணப் பயிர்களை பயிரிடும் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.
கொலனித்துவத்திற்கு முற்பட்ட கொலனித்துவத்திற்கு ஈழப் பொருளாதாரமானது கடல்தொழில், விவசாயத்தையே மூலாதாரமாகக் கொண்டிருந்ததுடன், மக்கள் இயற்கையுடன் தம்மை இணைத்துக் கொண்டு தமது வாழ்க்கையை நடத்திய மக்கள் தம்மிடம் இருந்த நிலப்பரப்பைக் கொண்டு, தம்மிடம் இருந்த உபகரணங்களைக் கொண்டும் தமது உழைப்பை வழங்கி தமது சீவியத்தைப் போக்கினர். உணவுப் பொருள்களான மிளகு, கறுவா, ஏலங்காய் போதுமானதை எடுத்துவிட்டு மீதியை வேற்று நாட்டிற்கு அனுப்புமளவிற்கு தன்னிறைவு அடைந்திருந்தது.
விவசாயிகள் (சுதந்திரமான விவசாயிகள்) தம்மிடம் இருந்த நிலப்பரப்பைக் கொண்டு பயிர்செய்கையை மேற்கொண்டு வந்தனர். நிலமற்ற விவசாயிகள் நிலவுடமையாளனின் கூலியாகவும் வாழ்ந்தனர். அதேபோல் நிலமற்ற விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து பயிர்செய்கையை மேற்கொண்டனர். கொலனித்துவவாதிகள் தமது வியாபாரத்துக்கு இலங்கையை பயன்படுத்தினார்கள். வியாபாரத்தின் முக்கியத்துவம் கருதி கோப்பி, தேயிலை, கறுவா, இறப்பர் போன்றவற்றின் செய்கை பிரபல்யம் பெற்றது. இதன் காரணமாக காடாய் கிடந்த நிலங்களெல்லாம் தோட்டங்களாக மாறின. புதிய புதிய தோட்டங்கள் திறக்கப்பட்டன. இவைகள் எல்லாம் பணப்பயிரையே மையமாகக் கொண்டதாக விளங்கியது. மலையக மக்களின் வரலாற்றுப் பாத்திரம் முக்கியமானதாகும். அவர்களே காடுகளை சுத்தப்படுத்தினர், காட்டுப் பாதையை, அழகான தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். இதற்குப் பின்னால் உள்ள மலையக மக்களின் குருதியினால் தான் அவை சாத்தியமாகியது.
மக்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களின் உற்பத்தி முறையில் மாற்றம் எற்பட்டு அதற்கு மாற்றாக பணப்பயிர் செய்யும் உற்பத்தி முறை மேற்கொள்ளப்பட்டது. அதாவது பணப்பயிரை செய்த சிறு உற்பத்தியாளர்கள் பெரிய உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாது தோற்றனர். சிறுவிவசாயிகள் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டது. இது புதிய வகை பொருள் உற்பத்தி முறையைச் சார்ந்த இயங்க வேண்டியிருந்தது. போட்டியில் ஈடுபட முடியாதவர்கள் சொத்துக்களை இழந்து அவ்மக்கள் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஒரு பகுதியாயினர். வலிந்து திணிக்கப்பட்ட உற்பத்தி முறை மனிதர்களிடையே வர்க்க வேற்றுமைகளையும் உருவாக்கி விட்டிருக்கின்றது.
ஆதிக்கவாதிகள் தமது சுரண்டலை விஸ்தரிக்கும்
பொருட்டு அடிமைகளாக ஆபிரிக்காவில் இருந்து பல லட்சக் கணக்கானோரை கொண்டு சென்றனர். ‘‘அமெரிக்காவின் பூர்வீக சனங்களை வேரறுத்து அடிமைப்படுத்தி
தங்கம், வெள்ளிச் சுரங்கங்களில் சமாதி
செய்தது, இந்தியாவை
வென்று சூறையாடியது, அடிமை வியாபாரம், ‘கறுப்புத் தோல்களை வாணிப வேட்டையாடுவதற்கான ஒரு முயற்சிக்
காடாக ஆபிரிக்காவை மாற்றியது.‘‘ (ப5 மார்க்ஸ் மூ. தோற்றம்) இவற்றின்
மூலம் மூலதனத் திரட்சிக்கு வழிவகுத்தது என மார்க்ஸ் கூறுகின்றார். இன்றைய ஆபிரிக்காவானது உலகின் சனத்தொகையில் 17%, 54% coal production, உலகின் half of gold production, 35 % uranium, 70% Platinum, 9.6 % Oil, 90% Colbat, 75% Cotton, உலகின் பகுதி 2/3 Manganes கனிம வளங்களைக் கொண்டுள்ளது. ஏனினும் ஆபிரிக்காவானது தொடர்ச்சியாக வறுமையைக் கொண்டதாக இருக்கின்றது.
இச்செயற்பாடானது கொலனித்துவ ஆட்சியாளர்களுக்கு மூலதனத் திரட்சியைக் கொடுத்தது மாத்திரம் அல்ல அப்பிரதேசங்களின் சுதந்திரமான வளர்ச்சியையும் தடுத்து நிறுத்தியது. ‘‘மெக்சிக்கர்கள் வான் கோழியையும் இதர பறவைகளையும் பழக்கி வைத்திருந்தார்கள், பெருவியர்கள் லாமா என்ற மிருகத்தைப் பழக்கி வைத்திருந்தார்கள் அதுமட்டுமின்றி அவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவும் அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இரும்பைப் பற்றித் தெரியாது. அவர்கள் கல் ஆயுதங்களையும் கற்கருவிகளையும் இன்றும் கைவிடாதிருந்ததற்கு இது ஒரு காரணமாகும். அங்கே ஸ்பெயின் நாட்டினரின் ஆட்சி ஏற்பட்டு அவர்கள் மேற்கோண்டு சுதந்திரமாக வளர்ச்சியடைவதை நிறுத்திவிட்டது.” (கு. த, அ. தோ, ஏங்கல்ஸ் ப.42) இவ்வாறு ஒரு சீரான வளர்ச்சி ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்ட இயற்கையின் மீதான தாக்குதல் பழைய சமூக உறவுகளை முழுமையாகச் சிதைக்கவில்லை மாறாக பின்வரும் முக்கியமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
1. நிலப்பரப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.
2. பணத்தை மையமாகக் கொண்டு பொருளாதாரம் அமைக்கப்பட்டது.
3. முதலாளித்துவத்தின் காரணமாக சுயமாக வளரப்படவேண்டிய சமூக உறவுகள் ( குலச் சமுதாய, நிலப்பிரபுத்துவ உறவுகள் சுதந்திரமாக சிதையவில்லை.) பலாத்காரமாகத் திணிக்கப்பட்டது.
4. மேற்கத்தைய பாணியிலான மத்தியமயப்பட்ட அதிகார அலகுகளைக் கொண்ட நிர்வாக ஒழுங்கு முறை கொண்டு வரப்பட்டது.
5. தேசிய இனங்களின் ஒப்புதல் இன்றி நாட்டரசினுள் திணிக்கப்பட்டார்கள். சுதந்திரமான தேசங்களாக இருக்க வேண்டிய பல தேசங்கள் இன்னொரு ஆதிக்கத்தின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. இதன் அடிப்படையில் இருந்து தேசிய இனச் சிக்கல்கள் ஆராயப்பட வேண்டும். வளர்ந்து வரும் முதலாளித்துவ பொருள் உற்பத்தியானது தேசிய இயக்கங்களையும் தேச அரசுகளையும் தோற்றுவினக்கின்றது. மொழிவழியில் அமைந்த தேசிய இனங்களின் ஒற்றுமையும் இணைவும் மொழி அடிப்படையில் இணைகின்றது. மற்றையாக நிலமானியச் சிந்தனை (மத) மதவாதிகளின் ஆதிக்கம் என்ற கற்காலச் சிந்தனை மறுத்து வளர்ந்து வருவதாகும்.
“ உலகப் புரட்சி” இனிமேலும் பழைய உலகப் புரட்சியை குறிப்பதில்லை. ஏனெனில் பழைய முதலாளிய உலகப்புரட்சி கடந்த காலத்தை சேர்ந்த பொருளாகி வெகு நாளாகிறது. அது புதிய உலப் புரட்சியான உலகச் சோசலிசப் புரட்சியைக் குறிக்கிறது. அதே போல பகுதி என்பதன் பொருள் பழைய முதலாளிய புரட்சியின் பகுதியாக அமைவதல்ல; மாறாக புதிய சோசலிசப் புரட்சியின் பகுதியாக அமைகிறது. (ப454 தொ2)
3.2 நாடுகளே கிராமங்களாக உலகப் பரப்பில்
முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது உலகத்தைச் சுருக்கியுள்ளது உலகத்தில் மூலை முடுக்குகளில் இடம் பெறும் செயற்பாடுகளானது உலகத்தின் மற்றைய பாகங்களையும் பாதிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மிகையான உற்பத்தி, சந்தை, அதற்கான நுகர்வாளர்களுக்காக உலகத்தை பங்கு போடும் போட்டியில் ஏகாதிபத்தியங்கள் இருக்கின்றன. இரண்டு பெரிய உலக யுத்தத்தையும், பல ஆயிரக்கணக்கான சிறு யுத்தத்தையும் உருவாக்கியுள்ளது. இவ்யுத்தங்களினால் எத்தனையோ லட்சக்கணக்கான மக்களை பலிவாங்கியுள்ளது.
கிழட்டு வல்லரசுகள், கிழட்டு ஏகாதிபத்தியங்கள் ஒடிந்து போக புதிய ஏகாதிபத்தியங்கள் தோன்றிக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஏகாதிபத்தியங்கள் தனித்துச் செல்லாமல் ஏகாதிபத்தியங்களிடையே காணப்படும் போட்டி காரணமாக ஒன்று சேரும் முனைப்புக்களிலும் சொந்த எல்லைகளிளேயே சந்தையின் பொருட்டு நிலப்பரப்பை அதிகரித்துக் கொள்கின்றன. எப்பவும் மூலதனம் மாத்திரம் இருந்தால் போதாது சனத்தொகையும் இருத்தல் அவசியமாகும். சந்தையை விஸ்தரிக்கும் பொருட்டு தனது நாட்டு எல்லைக்கு அப்பால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே ஈடுபடும் அரசியலாகும். அதிகாரத்தில் இருப்பவர்களை அகற்றுவதும் பதவியில் அமர்த்துவதும் இவர்களுக்கு கைவந்த கலையாகும். முன்வாசலை வேறு ஒருவருக்கு திறந்து விட்டு பழைய பெருச்சாலிகளை பின் கதவால் அரவணைப்பது ஆகும். இதனை பிலிப்பைன்ஸ்ஸில் வெற்றி கரமாக நிறைவேற்றினர். இந்த எடுத்துக் காட்டு என்பது வரலாற்று ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பல நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புக்களைச் செய்திருக்கின்றது. இராணுவ தலையீட்டையும் செய்திருக்கின்றது. கடந்த 150 வருடங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அவர்களின் துணைச் சக்திகளும் நடத்திய இராணுவத் தலையீடே வரலாற்று எங்கும் நிறைந்திருக்கின்றது. கடந்த 30 வருடங்களில் பல நாடுகளை பிளந்து சிறு நாடுகளாகவும், அரசியல் தலைவர்களை கொண்றும், சர்வதேச குற்ற நீதி மன்றத்தைப் பயன்படுத்தி குற்றவாளியாக்கியுள்ளனர்.
ஏனெனில் இவர்கள் தமது அரசியல் நலனின் காரணமாக புதியவர்களைக் கொண்டு தமக்கு அணுகூலமான கொள்கை வகுக்கும் முகமாக, அந்தந்த நாட்டு அரசாங்கங்களை உருவாக்கும் பொருட்டாகும்..
விரல்விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளால் உலகத்தை தற்பொழுது தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை இன்று கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. இவ்வளர்ச்சி நிலையானது வெறுமனே சில வருடங்களில் நடைபெறவில்லை. மாறாக ஒரு நீண்ட போராட்டத்தின் ஊடாகவே ஏகாதிபத்தியம் வெற்றி கண்டுள்ளது.
தமது ஏக போக நிறுவனங்களின் மூலமாக எமது நாடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கு இவர்களே காப்புரிமை (Copy Rights) உடையவர்கள் என உரிமை கொண்டாடுகின்றனர். இது பல உற்பத்தி பண்டங்களை உரிமை தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக எமது நாடுகளில் இருந்து பெறப்படும் வேப்பம் விதைக்கு அமெரிக்க நிறுவனம் உரிமை கோரியதற்கு எதிராக இந்திய முற்போக்குச் சக்திகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது பற்றிய உரை யாடல் 1990களில் நிறையவே நடைபெற்றது.
தமக்கு தேவையான கனிப்பொருட்களை தமக்கு ஏற்றவாறான விலையை நிர்ணயிக்கும் பொருட்டு WTO (GATT), மூலம் உடன்பாடுகளை கொண்டு வறிய நாடுகள் மீது தமது ஆதிக்கத்தை திணிக்கின்றது. இதன் காரணமாக வறிய நாடுகளுக்கு வரவேண்டிய மொத்த தேசிய வருவாய் என்பது நலிவடைகின்றது. இதன் மூலமாக கடன் அதிகரிக்கின்றது, ஆண்டுக்கான வரவிலும்(வரவுசெலவில்) துண்டு விழுகின்றது. அந்தந்த நாடுகள் மென்மேலும் கடனாளிகளாகின்றார்கள். ( 51 பில்லியன் கடனைக் கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது. இன்று கடனில் மூழ்கியுள்ள இலங்கையின் நிலை தற்செயலாக ஆகவில்லை. இது நெடுங்கால பொருளாதார திட்டத்தின் விளைவாகும். GST வரிச் சலுகையை நாடி ஐரோப்பாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து இரங்குவார்கள்) ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகரித்து இருக்கும் போது (deficits) பற்றாக்குறை ஏற்படும். நிதிநிறுவனங்களில் பெறும் கடனுக்கு வட்டி கட்டுவதன் ஊடாக பெரும் பகுதி வருவாய் கடன் பெற்ற நாடுகளில் தங்கிவிடுகின்றன. இதனால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதியினை திரட்டமுடியாதுள்ளது. இதனால் மக்கள் தமக்கு வேண்டிய உரிமைகளை பெற முடியாது போகின்றது. அரசாங்க வாக்குறுதிகள் எந்தக் காலத்திலும் நிறைவேற்றுப்பாடமல், வெற்று வாக்குறுதிகளினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
அமெரிக்கா, யப்பான், ஐரோப்பிய நாடுகளின் தலைமையின் கீழ் உலகப் பொருளாதாரமானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களின் நலனின் கீழ்ப்பட்ட கொள்கையின் கீழ் சர்வதேச நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவை நிதிநிறுவனங்கள் அல்லது தொலைத் தொடர்பு நிறுவனங்களாக இருக்கட்டும் இதுவே தான் நிலை. இந்த கொள்கை உருவாக்கங்கள் ஏகாதிபத்திய பொருளாதார நலனைப் பாதுகாத்து நிற்கின்றன. கண்மூடித்தனமான ஏகாதிபத்தியச் சுரண்டலை விஸ்தரிக்கும் நோக்கில் ஐ.நா சபை போன்ற பொது நிறுவனங்கள் செயற்படுகின்றன.
ஐ.நா வின் சமாதானப் படை நடவடிக்கைகள் இதற்குட்பட்டதே. பல குலச் சமுதாயமாக பிரிந்து வாழ்கின்ற மக்கள் பிரிவினரை ஏகாதிபத்தியமானது பலாத்காரமாக ஒன்றிணைந்த எல்லையை உருவாக்க முயன்றது. ஆனாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டு நாட்டை விட்டே வெளியேற (சோமாலியா) வேண்டி இருந்தது. ஆபீரிக்கா, ஆசிய, தென்னமெரிக்க நாடுகளில் பல இனக்குழுமங்களை கொண்ட தாகவும், தேசமாக வளராத நிலையில் இருக்கின்ற மக்கள் கூட்டத்தின் பிரச்சனை என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். உலகில் உள்ள பல இனக்குழுமங்கள் - தேசிய இனங்கள் மொழிவழியில் இணைந்து தேசங்களாக இணைவதும் தேசிய இன இயக்கம் எழுவதும், அரசு அமைப்பதும் இன்றும் முற்றும் பெறவில்லை. ஏனெனில் முதலாளித்துவ வளர்ச்சி பல நாடுகளில் நடைபெற்று முடியவில்லை. இது உலகில் உள்ள பல வளர்ந்து வரும் நாடுகள் எதிர்க்க இருக்கின்ற போக்கு.
இதை விளங்கிக் கொள்ளது தேசியவாதியாக கருத்துமுதல்வாதிகள் கருதிக் கொள்கின்றார்கள். தேசிய இயக்கம் என்பது முதலாளித்துவ கட்டம் என்ற வரலாற்றுக் காலம் போய் சோசலிச வரலாற்றுக் கட்டத்தின் பகுதியாக அமைகின்றது.
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலின் அகோரம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தென்படுகின்றன. இதன் விழைவுகளின் சாட்சியங்கள் தான் எமது நாடுகளில் நிலங்கள் எல்லாம் மனித இரத்தத்தால் நனைக்கப்படுதலாகும். இன்றைய நிலைக்கு அத்திவாரமானது பலநூற்றாண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது. இன்று சிரியா, லிபியா, ஈராக், யெர்மன் போன்ற நாடுகளில் இரத்தக் களரியை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிய ஏகாதிபத்தியத்தின் திட்டம் என்பது புதிய ஆக்கிரமிப்பு போரை எதிர்க் கொண்டுள்ளது உக்கிரேன். சோவியத், வார்சோவா நாடுகளின் உடைவின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஐரோப்பிய ஒன்றியத்திலும், நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிலும் இணைந்து கொண்டன.
3.2 பொருளாதார ஒப்பந்தங்கள்
போட்டிச் சந்தை முதலாளித்துவத்தின் பிரதான கோட்பாடாகும். இதனையே முதலாளித்துவம் தனது பிரதான யுக்தியாக கொண்டுள்ளது. போட்டிச் சந்தை என்னும் போது போட்டிச் சந்தையின் ஊடாக பொருளின் விலை நிர்ணயம் பொறுகின்றது. இந்நிலையானது முதலாளித்துவ நாடுகள் ஒன்றிணைகின்ற போது அந்தச் சுதந்திரத்தை எமது நாட்டு முதலாளித்துவம் இழந்து விடுகின்றது. ஆனால் எமது நாடுகளில் உள்நாட்டுச் சந்தையில் மாத்திரம் போட்டிச் சந்தை இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றது. இது சனநாயகக் காற்றை சுவாசிக்க வேண்டும் என் பிரச்சாரத்தின் கீழ் அவர்கள் முன்வைக்கின்றனர். மாறாக அமெரிக்கா, (NAFTA வட அத்திலாந்திக் திறந்த வர்த்தக வலையம் ) யப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (EU) ஆகியன உலக பொருளாதார ஒன்றியத்தின் (WTO) ஊடாக விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
தமக்கு தேவையான கனிப்பொருட்களை தமக்கு ஏற்றவாறான விலையை நிர்ணயிக்கும் பொருட்டு WTO மூலம் உடன்பாடுகளை கொண்டு வறிய நாடுகள் மீது தமது ஆதிக்கத்தை திணிக்கின்றது. இதன் காரணமாக இவர்களுக்கு வரவேண்டிய மொத்த தேசிய வருவாய் என்பது நலிவடைகின்றது. இதன் மூலமாக கடன் அதிகரிக்கின்றது. . WHO கொண்டுள்ள செயல் திட்டமானது வர்த்தகம் சார் அறிவுச் சொத்துடமை, விவசாயம், சேவைத்துறைகள் வர்த்தகம் சார் முதலீட்டு நடவடிக்கைகள் போன்ற தளங்களில் செயற்படுகின்றன. இந்தக் தளங்களில் ஒத்துழைக்காத பட்சத்தில் 301 சட்டங்களை காட் ஒப்பந்தத்திற்குப் பின்னும் அமெரிக்கா அதன் நலனுக்கு தகுந்தபடி ஏவி விடமுடியும். நாடுகள் மீறும் பட்சத்தில் சனநாயகத்தை பாதுகாப்பது என்ற பெயரில் பொருளாதார தடைகளை மேற்கொள்ள முடியும்.
WTO (GATT), IMF, WORLD BANK போன்றவற்றின் மூலம் தமது நலன்களை பாதுகாத்துக் கொள்கின்றது. தமது செயற்பாட்டை நிறைவேற்ற அங்கத்தவர்களின் (Lobby) ஆதரவு அங்கத்தவர்களின் - பிரமுகர்களின் ஆதரவு கோரிச் செயல்படும் முறை என்பது அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது. ஆனால் மேற்கத்தைய நாடுகளில் இச்செயற்பாடானது அனைத்து மட்டங்களிலும் தாராளமாக சிறப்பு நிலையில் வளர்ந்துள்ளது.) சட்டமியற்றல் என்பது நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலே தரகுகள் அனுசரணையுடன் வறிய நாடுகளில் நிறைவேற்றப்படுகின்றது. Crony capitalism - சீழ் முதலாளித்துவத்துவம் கையூட்டு வாங்கிக் கொண்டே திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் அதிகாரிகளும், இடைத்தரகர்களாக உறவினர், மற்றும் இதற்கான பிரமுகர்களும் இருப்பார்கள். லஞ்சம் கொடுத்தல் ஆகியவற்றின் மூலமும் தமது காரியங்களைச் செய்கின்றனர்.இந்த வலைப் பின்னில் தமக்குத் தேவயானவர்களுக்கு முக்கிய பதவி கொடுத்தல் நடைபெறும்.
European Union முதலாளித்துவ நாடுகளான எமது நாடுகள் இருப்பதனால் ஏற்படும் சில விழைவுகளைப் பார்ப்போம். உதிரியாக -தனித்தனியாக நாடுகள் இருக்கின்ற போது போட்டிச் சந்தையின் காரணமாக தகுந்த விலை என்பது கிடைக்க வழிஇருக்கின்றது. அதாவது மாற்றுச் சந்தை இருக்கின்றது மாறாக இணைவின் காரணமாக போட்டி நிலை என்பது இல்லாது போகின்றது. இதன் மூலம் வருகின்ற லாபத்தை ஐ. ஒன்றியம் தாமே அனுபவிக்கின்றனர். ஆனால் மாற்றுச் சந்தை இல்லாததினால் இவர்களின் தான் தோன்றித்தனத்திற்கு வறியநாடுகள் பலியாக வோண்டியுள்ளது. உதாரணமாக 1995 இல் EU கைத்தறி, மற்றும் தேயிலை, கோப்பி போன்றவற்றிற்கான இறக்குமதி வரியைக் அதிகரித்தினால், எமது நாடு தன் சொந்த உற்பத்தியின் பலனாக கிடைத்த லாபத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது போக, உழைக்காமமே லாபத்தை அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவித்தது. உழைக்காமல் தமது வருவாயை பெருக்கி கொள்ளும் இந்த பணமுதலைகளினால், எமது நாடுகள் கடனைத் தான் பெருக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க எப்படித் தான் இரந்து கேட்டாலும் எமது நாட்டு முதலாளித்தவத்திற்கு சலுகை வழங்க இவர்கள் தயாராக இல்லை. வருவாயில் துண்டு விழும் நிலையேற்படும்போது எமது நாடுகளில் பல விழைவுகள் ஏற்படுகின்றன.
உலக வல்லரசு நாடுகள் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்து கொண்டு சக்தி மிக்க ஆயுதங்களை வைத்துள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு இன்று உலக நாடுகளை பயமுறுத்துகின்றன. பழைய ஆயுதங்களை அகற்றிவிட்டு புதிய ரக ஆயுதங்களை வைத்துள்ள வல்லரசுகள், சுதந்திர நாடுகள் மீது தாக்குதல் நடத்தி உங்களுக்கும் இதே நிலைதான் என பயமுறுத்துவதுடன், தம்மிடம் உள்ள நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு இருக்க அணு ஆயுதங்கள் மற்றும் பௌதீக ரக ஆயுதங்களையும், கண்ணி வெடியை தடைசெய்யவும் ஏகாதிபத்திய நாடுகளில் சில முன்வருகின்றன. இவ்வகையான ஒப்பந்தங்கள் எவ்வகையான பெரிய மாற்றத்தை ஒப்பிட்ட ரிதியாக கொண்டு வரும் என்பது ஐயமே.
உலகின் பல பாகங்களிலும் கண்ணி வெடி வைத்துக் கொண்டு தான் இருக்கின்றது. இலங்கையும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஏனெனில் பிரச்சினைகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடுகளில் இது தவிர்க்க முடியாது தொடரவே செய்யும் இங்கு முக்கியமாக எதிர்ப் புரட்சி அமைப்புக்கள் ஏகாதிபத்தியங்களின் துணையுடன் இயங்குபவைகள் தொடர்ந்தும் உதவி பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அங்கோலாவில் தொடர்ந்தும் எதிர்ப்பு புரட்சியமைப்பான (UNITA) யுனிட்டா கண்ணி வெடிகளை விதைத்தது.
கண்ணி வெடியின் பாவனை என்பது வறிய நாடுகளே அதிகமாக பாவிக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் உயர்தர தொழில் நுட்பத்தைக் கொண்ட ஆயுதங்களைக் கொண்டுள்ளன. யூக்கோ மீதான தாக்குதலின் போது புதிய வகை குண்டு வீசப்பட்டது. பெரியவகை குண்டினுள் பல சிறிய 150 குண்டுகள் (Cluster bombs உள்ளுக்குள் இருக்கும். அவை நிலத்தில் விழுந்த பின்னராக சிதறும் வெடிப்பவைகள் போக மற்றைவைகள் கண்ணிவெடி போல மற்றவைகள் நிலத்தில் கிடக்கும், இவை கண்ணி வெடியைவிட இந்தவகை குண்டுகள் சக்தி வாய்ந்தாகும். ஆனால் வளர்ச்சியடையாத நாடுகள் இவ்வாறான கண்ணி வெடியைப் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணி வெடியே வறியவர்களின் ஆயுதமாகும். உயர் தர தொழில் நுட்டம் என்பது இவர்களிடையே இல்லை.
உதாரணமாக எதிரியை தொலைவில் இருந்து கண்காணிக்கப் பயன்படக் கூடிய விண்வெளி தொடர்பு, விண்வெளி படம் பிடிப்பு போன்ற வசதி என்பது இவர்களிடம் இல்லை. அத்துடன் இன்றைய நிலையானது சாதாரண மக்கள் இவ்வாறான வெடிகளின் மூலமாக மக்கள் தொல்லைக்கு உள்ளாவதை அறிந்து கொள்கின்றனர். அறிந்து கொள்கின்ற மக்கள் இந்தத் துன்பத்தை போக்க மனதார விருப்பத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை அறிந்து கொண்ட ஆளும் வர்க்கம் இவற்றை இல்லாது போக்க தாமும் பாடுபடுவதாக காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் தாம் எவ்வளவு இரக்க மனப்பான்மை கொண்டுள்ளனர் என பறைசாற்ற உதவுகின்றன. ஏமாற்றுவித்தைக்;கு மக்கள் பலியாகப் போவது தற்பொழுது தவிர்க்க முடியாதாக உள்ளது.
அணு ஆயுதத்தை மட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களையும் செய்ய முயற்சிக்கின்றன. குறிப்பாக இந்தியா, வடகொரியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் மீதே அழுத்தத்தைச் செலுத்துகின்றன. அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிடின் தடைகளை ஏற்படுத்தி பனிய வைக்க முயற்சிக்கின்றன. ஆனால் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாகிய அமெரிக்க ஏகாதிபத்தியம் 1961-1973 இடைப்பட்ட காலத்தில் 23 தடவைகள் அணுக் குண்டுப் பரிசோதனையை செய்துள்ளது. இவை கீரோசீமாவில் போட்ட குண்டிலும் பார்க்க 6 மடங்கு பலமாதாகும். இது 4, 75 அலை வேக பூமியதிர்ச்சிக்கு ஒப்பானதாகும். இது 12 மில்லியன் தொன் மணல் பரப்பை அசைக்கின்றது. இந்த பரிசோதனை பாலங்கள், கடல் கீழ் சுரங்கங்கள், துறைமுகங்கள் அமைக்க சாத்திய முறைகள் பற்றிய பரிசோனையாக கணிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் எல்லாவிதமான எதிர்ப்புக்களையும் அசட்டை செய்து விட்டு பிரான்ஸ் பலதடவை நியு கலிடோனியாவில் பரிசோதனை செய்தனர். எந்தவிதமான நடவடிக்கைகளையும் சக ஏகாதிபத்தியங்கள் எடுக்கவில்லை. இதனைப் பார்த்து சீனா பரிசோதனை செய்தனர், இவர்களைத் தொடர்ந்து இந்தியா, பாக்கிஸ்தான் செய்து கொண்டனர். இவர்களிடம் எவ்வகையான வலிமை கொண்டது என்பது இங்கு பார்ப்பது அவசியமல்ல. ஆனால் இவர்கள் பரிசோதனை நடத்திய பின்னர் பொருளாதார தடையை ஏற்படுத்தியது. அமெரிக்கா தடையை சில மாதங்களில கைவிட்டது. இவ்வகையான தடையை ஏற்படுத்துகின்ற ஏகாதிபத்தியங்கள் பாரபட்சமில்லாது நடந்து கொள்ளவில்லை. வறிய நாடுகள் அணு ஆயுதம் அல்லது அக்கினி போன்ற நடுத்தர ஏவுகணைகள் வைத்துக் கொள்வதை ஏகாதிபத்திங்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனால் வறியநாடுகள் மாத்திரம் வைத்துக் கொள்ளும் போது மாத்திரம் நடவடிக்கை எடுக்கின்றது. அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளாக இஸ்ரேல், பாக்கிஸ்தான், போன்ற கூட்டாளி நாடுகளும், முன்னர் இனவெறி தென் ஆபீரிக்கா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது பாரமுகமாக இருந்து கொண்டது. இங்கு 90க்கு முன்னர் ஏகாதிபத்தியங்களின் வெளியுறவுக் கொள்கை என்பது சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர் மாறுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
சமாதானம் பேசுகின்ற ஏகாதிபத்தியங்கள் கடந்த ஐ.நா கூட்டத் தொடரில் இடம் பெற்ற அணுஆயுதத்தை முற்றாக தடை மீதான செய்வது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு வந்த போது சுமார் 100 நாடுகள் ஆதரித்தும் 26 நாடுகள் எதிர்த்தும் 24 நாடுகள் வாக்களிக்காது தவிர்த்துக் கொண்டன. அதனை எதிர்த்து வாக்களித்த மேற்கு நாடுகளாகும். ஆனால் சீனா இப்பிரேரனைக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீனா நல்நோக்கத்திற்காக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. என்ன மேற்கு நாடுகள் ஆதரித்து வாக்களித்திருந்தால் சீனா எதிர்த்து வாக்களித்திருக்கும்.
உலக அமைதி, ஜனநாயகம் என வயிறுகிழியக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் மிதிவெடிகளை முற்றாக தடை செய்ய முழுமையான ஆதரவு கொடுக்காது தவிர்க்கின்றன. அமெரிக்காவோ தென் கொரியா எல்லையை பாதுகாப்பது தொடர்பாக அக்கறை காட்டிக் கொள்வதாக கூறிக் கொள்கின்றது. தென் கொரியாவின் பாதுகாப்பு தொடர்பான விடயம் அடங்கி இருப்பதினால் அதற்காக தாம் முழுமையாக தடை செய்யும் பிரேரனைக்கு ஆதரவு அளிக்க முடியாது இருப்பதாக நொண்டிச் சாட்டுக் கூறுகின்றது.
3.3 அப்பாவி அமெரிக்கா பிச்சை எடுத்த இடங்கள்.
இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஏகாதிபத்தியங்கள் வெவ்வேறு வியூகம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டன. ஆரம்பத்தில் சோவியத்தை கிட்லரின் நாசிப்படை தாக்குவார்கள் என எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை என்று தெரிந்து கொண்ட பின்னர் வேறு வியூகம் அமைத்துக் கொண்டார்கள்.
இது anglo - saxon கூட்டுச் சேர்ந்து சோவியத்தைத தாக்கும் திட்டம் போடப்பட்டது. Potsdam conference ஊடாக ஒத்துழைப்பு பேச்சுவாத்தை நடத்திக் கொண்டிருந்த போதே. ஏகாதிபத்தியங்கள் 809 chris plan -இத் திட்டத்தின் ஊடாக 100000 நாசி சிறப்புப் படைப்பிரிவின் உதவியுடன் சோவியத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது. அதாவது சோவியத்தின் உதவியுடன் நாசிக்களை வீழ்த்துவதை தொடர்ந்தனர். மறுபுறலத்தில் நாசிக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டனர். 1945 சோவியத்திற்கு தெரியாது பின்புறமாக நாசிக்களை சரணடைய பேச்சுவார்த்தையை மேற்கு அணி மேற்கொண்டது. அதனை அறிந்த தோழர் ஸ்ராலின் மேற்கின் மீது குற்றம் சாட்டினார். ஏகாதிபத்தியங்கள் தவறான செய்து என்று பதில் கொடுத்தனர். அதற்கு தோழர் ஸ்ராலின் தமக்கு செய்தி தந்தவர்களின் நேர்மையைப் பற்றி புகழ்ந்தே பதிலடி கொடுத்தார். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் மேற்கு ஏகாதிபத்தியங்கள் 10 நாசிப் படைப்பிரிவுகளை மாத்திரமே எதிர்க் கொள்ள நேர்ந்தது.
ஆனால் செம்படை 200 நாசி படைமுனைகளை தனியே எதிர் கொண்டார்கள். செம்படை வீரர்களின் தியாகமானது நயவஞ்சகதையும், துரோகத்தையும் வீழ்த்தியது. இவ்வாறு நேர்மையற்ற ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு யுத்தங்களின் வரலாற்றை கவனிப்போம்.
1845-48 மெக்சிக்கோவுடனான யுத்தம்
1898 ஸ்பெயின் மீதான யுத்தம் (Puerto Rico) பற்றிய மோதல்
1898 கவாய் (Hawai) இணைத்துக் கொள்வது
1901 பிலிப்பீனை பிரதேச அரசாங்கமாக இணைத்து (J William H Taft) ) கவர்னரா நியமித்தல்
1903 பனாமா ஆக்கிரமிக்கப்படல் பின்னர் பனாமா கால்வாய் உருவாக்கப்படல்.
1906 இல் கியூபாவில் பிரதேச அரசு நியமித்துக் கொள்ளல்
1912- 33 வரையில் நிக்கரகுவா மீது படைகளை தங்கவைத்துக் கொள்ளல்
1914 Haitiயில் தலையிடல்
1914 மெக்சிக்கோவில் Veracruz ஆக்கிமித்தல்
1915- 1934 வரை கெயிற்ரியில் தலையிடல்
1916- 1924 டொமினிக்கன் குடியரசில் தலையீடு
1945 யப்பானில் கீரோசீமாஇ நாகசாக்கி மீது அணுக்குண்டு வீச்சு
1947 பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான போர்ப்பிரகடனம் Turman, Mc Carty
1950 -1953இல் கொரியா யுத்தம்இ ஐ.நாவின் பெயரில் அமெரிக்கா தலையிட்டுக் கொண்டது.
1957 மத்தியகிழக்கில் பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான உதவிகள் ( Eisenhowe)
1961 கியூபா மீதான ஆக்கிரமிப்பு தோல்வியில் முடிவடைகின்றது
1962 missle crisis (Cuba- US)
1962 லாவோஸ் தலையீடு
1964 பனாமா நெருக்கடி
1965 டொமினிக்கன் குடியரசிற்கு ஆயுதங்கள் வழங்கல்
1964 வியட்னாமிற்கு படை அனுப்புதல்
1965-73 வரை வியட்னாம் யுத்தம்
1966 இல் இந்தோனேசிய எதிர்ப்புரட்சிக்கு ஆதரவு கொடுத்தல்
1967 ஒக்ரோபர் 8 சர்வதேசியவாதியான சேகுவரா கொல்லப்படல் (பல தடவைகள் பிடல் காஸ்ரோவை கொல்ல முயற்சி எடுக்கப்பட்டது.)
1968 இல் வியட்னாமில் படுகொலை நிகழ்வு
1971 வங்கத்தின் மீதான இந்திய தலையீடை அடுத்து அமெரிக்கா தனது ஏழாவது கப்பற் படையை இந்துமாக்கடலில் கொண்டு வந்து நிறுத்தி அச்சுறுத்தியது.
1973 இல் சிலிநாட்டில் பினோச்சேயின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உதவுதல்
1979 நிக்கரகுவாப்புரட்சி நடைபெறல்
1983 கிரனடா மீது ஆக்கிரமிப்பு
1986 இல் கொண்டுராஸ் - ஈரான் ஆயுதவிற்பனை விசாரணை
1989 பனாமா ஆக்கிரமிப்பு
1991 இல் ஈராக் மீது தாக்குதல்
1999 யூக்கோஸ்லாவியா மீது தாக்குதல்
2000 கொலம்பியாவில் போதைப் பொருள் அழித்தல் என்ற பெயரில் கிருமிநாசினி தூவுதல்
ஈரானின் 270 பயணிகளுடன் விமானத்தை (flight 655) சுட்டுவிழுத்தியது இந்த விமானம் சுட்டு விழ்த்திய போது அன்றைய சம்பவத்தில் மூன்று பெரும் போர்க்கப்பல்கள் பங்குபற்றியிருந்தன.
USS sides, Montogomery, Vincennes (Admiral Willian Roger செலுத்தியிருந்தார்) என்பனவாகும்.
வின்சென்ஸ் என்ற கப்பலானது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் சென்றதாகக் கூறியதுடன் யுத்தக் கப்பல் கூட ஈரானிய கடல் எல்லையினுள் வைத்தே விமானத்தை சுட்டு விழுத்தியது.
Uss aide கருத்துப்படி பிரயாணிகளுடன் சென்ற விமானம் சீரான வேகத்தில் சென்றது என்றும், ஆபத்துக்குரியதாக இல்லை எனவும் தெரிவித்துக் கொண்டனர். (தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்துக் கொண்டார் Willian Crowe)
தென்சூடான் கிறிஸ்தவ விடுதலைப்படைக்கு 4 மில்லியன் டொலர், ஈராக் (Irak National congress) எதிர்க்கட்சிகளுக்கு 4 மில்லியன் டொலர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் 2-3 பில்லியன் டொரை இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றது. குறிப்பாக இசுரேலின் இன்றைய வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் பாதுகாப்பாக இருப்பது ஒன்றாகவும் கோர முகம் கொண்டதாகவும் இருக்கின்றது. 1991 செய்து கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தத்தை மீறி பலஸ்தீனர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தைச் செய்கின்றது. பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை, பிறப்புரிமையை மறுத்துக் கொண்டிருக்கின்றது.
3.4 நவகொலனித்துவம்
விரல்விட்டு எண்ணக் கூடிய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் தரகர்களாக செயற்படுகின்றனர் என்பதை காணக்கூடியதாக உள்ளது. 1920இல் மூன்றாம் அகிலக் கூட்டத்தில் பின்வருமாறு முடிவிற்கு வந்தனர். கொலனித்துவத்திற்கு பிற்பட்ட சூழ்நிலையானது விசேட தன்மையை வந்தடைந்துள்ளது என்றும், நிலபிரபுக்களும் ஏகாதிபத்திய வாதிகளும் ஒருவருக்கொருவர் அணிசேர்ந்து கொள்கின்றனர் எனவும் முடிவிற்கு வரப்பட்டது.
மாவோ பின்வருமாறு வரையறுத்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அரைக் கொலனித்துவ சீனாவில் நிலப்பிரபுக்களும் தரகு முதலாளிகளும் சர்வதேச முதலாளிகளைத் தங்கியிருக்கின்றனர். ஏனெனில் இவர்கள் உயிர் வாழ்வது என்றால் ஏகாதிபத்தியத்தின் உதவி இவர்களுக்கு அவசியமாகிறது. இவர்கள் சர்வதேச மூலதனத்தின் மூலம் தமக்கு பற்றாக்குறையாக உள்ள மூலதனத்தின் தேவையை பூர்த்தி செய்வதுடன் அவ்வுதவியுடன் தமது மூலதனத்தைப் பெருக்குகின்றனர். இவர்களே பிற்போக்காளர்களாகவும், புரட்சிக்கு கேடு விளைவிப்பவர்களாகவும் செயற்படுவார்கள்.
இரண்டாம் உலகயுத்தத்தின் பின்பும் குறிப்பாக 60களிலும் எற்பட்ட சுதந்திர எழுச்சிகளின் பிற்பாடு தமது கொள்கையை மாற்றிக் கொண்டனரெனலாம். இந்தத் தரகு முதலாளிகளினுடாக தமது நலனைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். அதிகமான நாடுகள் பெயருக்குத் தான் சுதந்திரமான நாடுகள் எனக் கொள்ளப்படுகிறது. ஆனால் வறிய நாடுகள் தமது இறைமையைக் காப்பாற்ற அரும்பாடுபட வேண்டியுள்ளது.
நவீன கொலனியாதிக்க தந்திரோபாயம் என்னவென்றால், மோதல் நிலைமைகளில் தமது பொருளாதார மைய்யங்களை அனைத்து தளங்களிலும் அதாவது உலக சமுதாய, பொருளாதார அமைப்புக்களின் பதட்ட நிலையை தனிப்பதும். அதேவேளை மோதலும், தமது தளங்கள் பறிபோகும் நிலைமைகள் வரும்போது, ஏகாதிபத்தியங்கள் வளரும் நாடுகள் மீது மேற்கொள்ளும் அரசியல், ராணுவக் கொள்கையாகும். கடந்த பத்து ஆண்டுகளில் சனநாயகத்தைப் பாதுகாத்துக் கொள்வதாக கூறிக்கொள்கின்ற ஏகாதிபத்தியங்கள் எந்தக் காலத்திலும் உண்மையாக வறிய மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படவில்லை. மாறாக பற்பல ஒப்பந்தங்கள் மூலமாகவும், மிரட்டல்கள் பொருளாதாரத் தடைகள் மூலமாகவும் மற்றைய நாடுகளை பணிய வைக்கின்றன. இவை முடியாத பட்டத்தில் ஆக்கிரமிப்பு மூலமாக தமது எண்ணத்தை நிறைவேற்றுகின்றனர். இந்த தொடர் போக்கை கியூபா, வட கொரியா, ஈராக், லிபியா, யூக்கோ ஆகிவற்றின் மீது தொடுத்த நேரடி, மறைமுக தொடுத்துக் கொள்கின்ற ஆக்கிரமிப்பு மூலமாக அவதானித்துக் கொள்ள முடியும். இதில் ஈராக், லிபியா, யூகோஸ்லாவிய நாடுகளை சிதைத்து விட்டிருக்கின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே படைகளைக் குறைப்பது பற்றியும், அணு ஆயுதப் பரிசோதனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றன. அதே வேளை பனிப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறிக் கொள்கின்ற போதிலும் இவர்கள் நவீன ஆயுதங்கள் இருப்பதினால் பழைய ஆயுதங்களை இல்லாது செய்து விட்டு எம்மை ஏமாற்றுகின்றனர். இன்று இந்த ஏகாதிபத்தியங்கள் சர்வதேச ரீதியில் பின்வரும் தளங்களில் செயற்படுகின்றன. இங்கு எழும் முக்கிய கேள்வி எவ்வாறு மேற்கு நாடுகள் உபரிமதிப்பு பெருக்கிக் கொள்வதை தடுப்பதாகும். இந்த நிலையோற்படாதவாறு தமது நலனை அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன.
இங்கு விதேசிய வர்க்கத்தை வைத்தே தொலை தூரத்தில் வைத்து தன்னியங்கியைக் கொண்டு இயக்குகின்றது.
ஐ.நா என்பதும், சர்வதேச சமூகம் என்பது 1991 பின்னரான காலத்தில் முதலாளித்துவ ஏகாதிபத்திய நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளையும், அவர்களின் நலனை உள்ளடக்கியதாக இருந்து வந்துள்ளது. ஏகாதிபத்தியங்கள் பல நாடுகளில் தலையிட்டுச் சிதைத்தும், பல நாடுகளாக உருவாக்கியும், தமது சந்தையை விரிவாக்கியும் உள்ளது.
அரபு மொழி பேசும் நாடுகளில் இருந்து முதலாளித்துவ சனநாயக கட்சிகளை அகற்றி விட்டு கற்காலச் சிந்தனை கொண்ட பழமைவாதிகளை ஆட்சியில் அமர்த்தவும், அந்த நாடுகளை மத அடிப்படைவாதச் சிந்தனைக்கு இட்டுச் செல்லவும் வழியமைத்துக் கொடுத்துள்ளது. முதலாளித்துவ சனநாயகத்திற்கு அப்பால் இசுலாமிய போபியாவை வளர்த்து விட்டது என்பது சமூகத்தை பின்னோக்கி நகர்த்திவிட முடியும் என்பதை நிரூபித்துள்ளது. சமூகம் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தை புரட்சிகர சக்திகள் தான் தலைமை ஏற்க வேண்டும் என்பதை இது நிரூபிக்கின்றது. ஏனெனில் ஒரு முதிர்ச்சியான உற்பத்தி முறை மாற்றம் அடையாத வரையில் மக்களின் சிந்தனை முறை முழுமையாக மாற்றம் கொள்ள முடியாது.
அரேபிய நாடுளில் தொடரும் உள்நாட்டு யுத்தம் என்ற போர்வையில் நடப்பவை அனைத்தும் ஏகாதிபத்திய – கற்கால மரபைக் காப்பாற்றும் அரசவம்சத்தின் நலனைப் பாதுகாப்பவையாக இருக்கின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தம் என்பது கூட புரட்சிகர அரசியல் சிந்தாந்தத்தை கொண்டதாக இல்லாது இருப்பதால் பலவீனமான தலைமையைக் கொண்டதாக இருக்கின்றது.
3.5 நேட்டோ ஒப்பந்த நாடுகள்
பனிப்போர் முடிவுக்கு வந்திருப்பதாக கூறிக் கொள்கின்ற போதிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தமது பாதுகாப்புக் (NATO) கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தக் கூட்டமைப்பு என்பது முன்னர் வார்சோவா ஒப்பந்த நாடுகளுக்கு இணையாக இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அமெரிக்கா தனது ஆயுதங்களை வெவ்வேறு நாடுகளிலும் வைத்திருக்கின்றன. ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் ஆயுதங்கள் படைகள் நிலை கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவின் சிறு ரக அணு ஆயுதம் பெல்யியம் நாட்டில் வைத்திருப்பதும், மற்றைய நாடுகளில் தமது படைபலத்தை வைத்திருப்பதை கைவிடவில்லை.
அமெரிக்க படையினர் ஜரோப்பிய நாடுகளின் தளங்கள் அமைத்துக் கொள்வதன் மூலம் தனது ஒப்பந்த நாடுகளை பாதுகாப்பதாக காட்டிக் கொண்டது. அமெரிக்க தனது நலனை பாதுகாக்கின்றது என்ற காரணத்தால் பிரான்ஸ் நாட்டு அதிபராக இருந்தா டி கோல் என்பவர் நேட்டோவிற்கு பிறப்பாக தமது நாட்டுப்படையை தனித்துவமான பாதுகாப்பு இயந்திரமாக உருவாக்கிக் கொண்டார். அண்மைக் காலங்களில் பிரான்சும் இணைந்து கொண்டது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நாடாகளான சுவீஸ்லாந்து, சுவீடன் மாத்திரம் நேட்டோவில் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (ஆனால் இன்று சுவீஸ்லாந்து தவிர) பின்லாந்து, சுவீடன் கூட்டில் இணைந்துள்ளன)
அமெரிக்க தனது தளத்தை நோட்டோ ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பாவிலும் மற்றைய வறிய நாடுகளான பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா தீவுகளிலும், வட ஆபிரிக்காவிலும், தென் கொரியாவிலும், சவுதி அரேபியாவிலும் தனது தளத்தை வைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் பாதுகாப்பு வலயத்தை அமைத்துக் கொண்டுள்ளது. முன்னர் சோவியத் ஒன்றியம் இருந்த போது சர்வதேச படை பலம் என்பது சமமாக இருந்தது. அப்பொழுது சர்வதேசத்தில் போராட்டங்களை ஆதரிப்பது, ஆக்கிரமிப்புச் செய்த நாட்டையும், தமது கருத்தையும் ஆதரிப்பதிலும் போட்டி போட்டுக் கொண்டு செயற்பட்டனர். அன்றைய காலத்தில் அரசியலில் நேர்மையான போக்கு இருந்தது இல்லை. ஏட்டிக்குப் போட்டி என்ற நிலைதான் இருந்து கொண்டது. அப்படி ஏட்டிக்குப் போட்டியான வல்லரசுகளின் நிலை இருந்த போது வறிய, நலிந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு ஒரளவு பாதுகாப்பு உத்தரவாதம் இருந்து கொண்டது. இதற்கு அணிசேரா நாடுகள், ஐக்கியநாடுகள் சபை வலிமையாக இருந்து கொண்டது.
அணிசேரா நாடுகளுக்கு யூக்கோஸ்லாவியா, கியூபா, இந்தியா போன்ற நாடுகள் வலிமையாக இருந்து செயற்பட்டது. இந்த நிலை என்பது சோவியத் ஒன்றிய உடைவின் போது முக்கிய திருப்பம் ஏற்பட்டது. இந்தத் திருப்பம் என்பது ஈராக்கானது குவைத்தை ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. ஐ.நாவின் ஒப்புதலின் மூலம் அமெரிக்காவானது தனது தளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நிறைவேற்றிக் கொண்டது. இதன் பிறகு ஏற்பட்ட மாற்றம் அதாவது சர்வதேச அரசியலில் ஏற்பட்ட வல்லரசின் வெற்றிடமும், புதிய நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னிடம் வைத்துக் கொண்ட நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி உலகப் பொலீஸ் என்பதை சர்வதேச சமூகம் என்ற அநீதியை பொறுத்துக் கொள்ளாது என்ற பெயரில் நிறைவேற்றிக் கொண்டது.
படை பலத்தைக் காட்ட சர்வதேசத்தில் இருந்த படைபலச் சமன் என்பது இல்லாது போகவே, இதனை வாய்ப்பாக பயன்படுத்திச் செயற்பட்டது. இந்தப் போக்கு என்பது வறிய, பலம் குன்றிய நாடுகளில் இருப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இன்று பல அமெரிக்க, கனடாவுடன் ஐரோப்பிய நாடுகளும் ஈராக்கின் மீதான ஐ.நாவின் பெயரின் கீழ் செய்து கொண்ட ஆக்கிரமிப்பிற்குப் பிற்பாடு புதிய நிலைப்பாடு எடுத்துக் கொண்டு செயற்படுகின்றன. நேட்டோ அணியானது ஐரோப்பாவில் ஜனநாயகத்தை (முதலாளித்துவத்தை) நிலைநாட்டுவதே முதலாவது வேலைப்பாடாகக் கொண்டது. இந்தப் வேலைதிட்டம் என்பது சோவியத் ரஷ்யாவினதும், கிழக்கைரோப்பாவின் உடைவின் பின்னரும் கையாளத் தொடங்கிவிட்டன. தற்பொழுது உலகில் இருக்கின்ற ஆதிக்க நாடுகள் எல்லாம் சுரண்டும் பொருளாதார நலனைக் கொண்டுள்ளது. இதனால் ஒவ்வொரு ஏகாதிபத்திய நாடுகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தத்தமது நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு தந்திரோபாயம் வகுத்துக் கொண்டு செயற்படுகின்றன.
கடந்த பத்துவருட காலத்தில் அமெரிக்காவும் மற்றைய முதலாளித்துவ பொருளாதார கூட்டாளி நாடுகளும் மற்றைய நாடுகளின் சுதந்திரத்தையும், இறைமையையும் பாதிப்பதிலும் அச்சுறுத்துவதிலும் இடைவிடாது செயற்பட்டு வருகின்றது. சுரண்டல் பொருளாதார நலன்களைப் பேனக்கூடிய அரசியல் தலைமைகளையும், கிளர்ச்சிகளையும் வரவேற்கின்றன. முடியாத பட்டத்தில் எதிர்ப்புக் கொள்கின்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றன. முன்னர் பார்த்தது போல் சுரண்டும் பொருளாதார நலனை சர்வதேச ஒப்பந்தங்கள் மூலமாக தினிக்கின்றன. நடைமுறையில் அவை சுதந்திரமாக செயற்படுவதாக காட்டிக் கொள்கின்றன. சுருக்கமாகச் சொல்வது என்றால் மனித உரிமைக்கும், பணத்திற்கும் அதாவது உலகவங்கிக்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் தொடர்பில்லாத நிலையை தோற்று வித்துள்ளது. (இது மார்க்சீயத்திற்கு எதிராக தொடக்கின்ற பிரச்சார அம்சத்துடனும், தனிமைப்படுத்தல் என்ற அம்சத்தினையும் இணைத்துப் பார்க்கவும்) இந்த தொடர்பில்லாத நிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தமது ஊடகங்கள் அனைத்தையும் பாவிக்கின்றன.
இன்று கருத்திற்கு எதிர் கருத்தை முன்வைத்து பாகுபடுத்திக் காட்டுகின்றனர். இவைகளை பின்வருமாறு காணலாம், சனநாயத்திற்கு எதிர் சர்வாதிகாரம், காட்டுமிராண்டித்தனம் எதிர் நாகரீகம், நல்லதுக்கு எதிர் கெட்டவை இவை கிருத்தவ மதப் பாரம்பாரியத்தில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு சுரண்டப்படும் சிந்தாந்தத்தைக் கொண்ட மக்களிடத்தில் இவ்வகையான சொற் தொடர்களைக் கொண்டு நியாயத்தைக் கற்பிக்கின்றனர். எந்தத் தாக்குதல்களை தொடங்குகின்ற போதும், பெரும் ஐயப்பாட்டுடன் தொடங்கப்படுகின்றது. இவை அரசியல் தலைமையாக இருந்தால் என்ன சாதாரண மக்களாக இருந்தால் என்ன இந்த நிலையே ஆரம்பத்தில் தொடங்கப்படுகின்ற நிலை என்பது திசை மாறி பின்னர் மக்கள் தாமாவே ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாக செயற்படுகின்ற ஒரு பிரமையை, ஒரு போக்கை தொலைத் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. உதாரணமாக யூக்கோஸ்லாவிய அரசியல் தலைமை என்பது கொசோவே மக்களை வெளியேற்றும் என் எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்ட அல்லது தற்செயலாக நடைபெற்ற அகதிகள் வெளியேற்றத்தினை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது பயங்கர வாதத்தை நியாயப்படுத்துகின்றனர்.
இங்கு நேட்ரோ நாடுகளின் எல்லைக்கப்பால் தனது ஆக்கிரமிப்பை விரிவாக்கியுள்ளது. அமெரிக்காவானது ஒப்பந்த நாடுகளையும் சேர்த்துக் கொண்டு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது இதுவே முதல் தடவையாகும். 50 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் நேட்ரோவானது புதிய போக்கை கொண்டது எனினும் எல்லா உறுப்புநாடுகளும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் எவரும் தீர்க்கமான எதிர்ப்பைக் காட்டவில்லை. இங்கு மேற்கு ஐரோப்பாவில் நிகழும் முக்கிய அரசியல் போக்கையும் அரசியல் தன்மையையும் கவனிக்க வேண்டும். இன்று 100 வருடங்களுக்கு அல்லது முதலாம் உலக யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் இருந்து கொண்டது போல் பழமைவாத, முதலாளித்துவ கிருத்தவக் கட்சிகள் மாத்திரம் ஆட்சி செய்யவில்லை. மாறாக சமூக சனநாயக கட்சிகளும் (இதுபற்றி தனியே பார்ப்போம்) ஆட்சிப் பீடம் ஏறுகின்றன. இந்தக் கட்சிகள் எந்த விதமான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலையும் கொண்டு நடத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இன்று அமெரிக்கா, பிரித்தானியா இவை இரண்டு நாடுகளும் மற்றைய நாடுகளை மேவி செயற்படுகின்றன. இதனை எந்த விதத்திலும் தடுக்க முடியவில்லை மாறாக அமெரிக்காவின் பின்னால் செயற்படுகின்றனர். புதிய நேட்டோ எவ்வாறு செயற்படும் என்பது பற்றி பலவாறான கருத்துக்கள் இருக்கின்றன. இத்துடன் ஐரோப்பா ஒன்றியம் தனக்கென பாதுகாப்பு படையை அமைக்க திட்டமிடுகின்றது. இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகின்றது. எனினும், இவ்வாறான அமைப்பின் மூலமாக உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை. மாறாக ஏகாதிபத்தியங்களின் நாடுபிடிக்கும் ஆவலுக்கு பயன்படுத்தப்படும். படைபலம் என்பதே முதலாளித்துவ வர்க்க எதிரிகளிடம் இருந்து முதலாளித்துவ வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்வதாகும்.
முன்னர் ஐ.நாவின் ஒப்புதலின் பெயரில் முன்னர் ஈராக் மீது தாக்குதல் நடத்தினர். இப்போது சமாதானத்திற்குகான ஐக்கியம் என்ற தீர்மானம் சொல்லாட்சியும், சமாதானத்திற்கான யுத்தம் என்ற கருத்தையும் நியாயப்படுத்தி தற்பொழுது ஐ.நாவினை செயலற்றதாக்கி சுதந்திர நாட்டின் மீது குண்டு பொழிந்துள்ளனர். முன்னர் ஐ.நாவின் ஒத்துழைப்பின் கீழ்தான் எந்தச் செயற்பாடும் இருக்க வேண்டும் என்ற கருத்து இருந்தது. இன்றைய நிலை முன்னைய நிலைப்பாட்டை மீறியிருப்பதன் மூலம் குறிப்பாக பணக்கார நாடுகள் எந்த நாட்டின் மீதும் தமது படைகளை நீதியை நிலை நாட்டுவது என்ற போர்வையில் படைகளை அகற்றமுடியும். ஏகாதிபத்தியங்கள் முன்னர் எப்பொழுதும் சர்வாதிகாரிகள் மட்டில் சுண்டுவிரலைக் கூடகாட்டியது கிடையாது. இன்று ஏற்பட்டுள்ள இந்த புதிய நிலை எல்லா நாடுகளுக்கும் ஆபத்தானதே.
சோவியத் வீழ்ச்சியின் பின்னர் ஏகாதிபத்தியங்களின் நடத்தை என்பது மிகவும் மோசமாக இருக்கின்றது. ஆனால் இன்றைய காலத்தில் பலதுருவங்களாக உலகம் பிரிந்துள்ளது. இந்தப் போக்கு 1990- 2015 வரையிலான போக்கேயாகும்.
பிரான்சிய, ஜெர்மானிய, இத்தாலி நிதிமூலனத்திற்கும், பிரித்தானிய நிதிமூலதனத்திற்குமான முரணில் ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாக வெளியேறியுள்ளது.
1. உயர்நிலை வல்லரசுகள் அமெரிக்க- ஐரோப்பிய கூட்டும் அதன் அரசியல், பொருளாதார போக்கு
2. சீனத்தின் பட்டுப்பாதை அரசியல், பொருளாதார போக்கு வலைப் பின்னலை உருவாக்கியது.
3. ருசியா தனதே பெரும்ஜாரிய மனப்பாங்கை மீளக் கட்டமைக்கும் போக்கு
4. இந்தியம் என்ற பிராந்திய மேலாதிக்க மனநிலையில் செய்யும் அடாவடித்தனப் போக்கு
ஐரோப்பிய ஒன்றியம், நேற்ரோவின் விரிவாக்கம் என்பத யுக்கிரேனிய ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
3.6 புதிய முகாம்களும் பிராந்திய நலன்களும்
அமெரிக்க ஏகாதிபத்திய தலைமை ஈராக், லிபியா போன்ற நாடுகளில் பாத் கட்சியை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டையே சீரளித்தார்கள். இதில் இறுதியாக ஆட்சி செய்யும் நாடாக சிரியா இருக்கின்றது. சிரியாவை பாதுகாப்பதற்காக ருசியா நேரடியாக இறங்கியுள்ளது. குர்துவிடுதலைப் போராளிகளை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் isis எதிரான யுத்தத்தில் பயன்படுத்திவிட்டு கைகழுவி விட்டனர். அரபுநாடுகள், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஐரோப்பிய நாடெங்கும் இரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டது. இதன் ஊடாக தனது சந்தையைக் கைப்பற்றிக் கொண்டது.
ஏகாதிபத்தியங்கள் தமது சந்தைல் க்காக அலைந்து கொண்டும், யுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கும். முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சமூக சனநாயக பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளைக் கூட தலையிடாமல் விட்டதில்லை. குறிப்பாக பொலிவியா, வெனிசுவேலா, பிரேசில் என்று அண்மையக் கால வரலாறு வெளிப்படுத்துகின்றது. சிலியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் என்பது கூட முதலாளித்துவ எல்லைக்கு அப்பால் நடந்து விட வில்லை என்பதை நிரூபிக்கின்றது. ஆட்சி பொறுப்பு ஏற்பில் அமெரிக்க பிரதிநிதி கலந்து கொண்டதையும் கவனத்தில் கொள்ள முடியும். சிலி அமெரிக்க எதிரான தென் அமெரிக்க ஆட்சியார்களை அழைக்கவில்லை.
ஏகாதிபத்தியங்களின் அன்பு முகம் என்பது சனநாயகம், மனிதவுரிமை, தேர்தல், தனிநபர் பேச்சுரிமை என ஒரு புறமும், மறுபுறம் கொடுமையான இராணுவாதத்தின் ஊடாக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் வியூகங்களையும் அமைத்துக் கொள்ளும்.
ருசிய தனது நலனின் பொருட்டு உக்கிரேன் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. ருசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும் உக்கிரேன் இன்று நடத்துவது ஏகாதிபத்தியத்தின் யுத்தத்தையே தேசபக்தியின் பெயரால் நடத்திக் கொண்டிருக்கின்றது.
1. கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய இராணுவ செயற்பாடுகள் அதிகரிக்கப் போகின்றது.
2. ருசிய கறடியின் அச்சுறுத்தல் மேலும் இராணவமயமாக்கல் சிந்தனையை சமூகத்தில் ஏற்படுத்துவார்கள்.
3. முன்னர் கொசோவோ அகதிகளை பல்வேறு நாடுகள் பங்கிட்டு வாழ் விடம் கொடுத்தார்கள். இதன் ஊடாக தாம் மனிதாபிமானிகள் என்று உலகிற்கு பறைசாற்றினார்கள்.
அதே பாணியில் 1 இலட்சம் வெள்ளைக் நிறம், நீலக் கண் உடையவர்களுக்கு US அடைக்கலம் கொடுக்கப் போகின்றார்கள்.
4. நேட்ரோவின் யுத்தத்தைப் புரியும் யுக்கிரேனை மீள் கட்டமைப்புச் செய்கின்றேன் என்று எத்தனை மேற்கு ஏகாதிபத்திய நிறுவனங்கள் காத்துக் கிடக்கின்றன??
மீள் கட்டுமானம் என்பதும் பெரும் வியாபாரம், ஆயுத விற்கனையும் பெரும் வியாபாரம், ஆயுத பரிசோதனைகளும் பெரும் வியாபாரம்,
5. மேற்கு செய்த அதே பரப்புரையைத் இப்போ ருசிய செய்கின்றது.
தடைசெய்யப்பட்ட பௌதீக இரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள், நாசீசப்படைகள் அங்குள்ளது, அனாஆக்கிரமிப்பு நிலைப்பாட்டில் யுக்கிரேன் இருக்க வேண்டும் என்று ருசியாக வலியுறுத்துகின்றது.
6. ஈராக்கின் மீது குண்டு மழை பொழிவதற்கு இவ்வாறு தான் காரணங்களை கற்பித்தார்கள்.
முதலாளித்துவ பொருள் உற்பத்தி ஆதரவாளர்களாக ஊடகவியலாளர்கள் கருத்துருவாக்கம் செய்தார்கள்.
7. குழந்தைகள், வைத்தியசாலைகள், வயோதிபர்கள் துன்பம் அடைகின்றார்கள் என்று பழைய பாணியில் ருசியாவிற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்கின்றார்கள். அதேவேளை வைத்தியசாலை ஒன்று தாக்கப்பட்டதாகவும், அதில் அந்தக் காட்சியில் பிரபல்ய நடிகை அதில் பங்கு கொண்டதாகவும் ருசிய குற்றம் சுமத்தியது.
சந்தைக்காக அலையும் ஏகாதிபத்தியங்கள் தொடர்ச்சியான யுத்தங்களை ஏற்படுத்தியே தீரும். ஏகாதிபத்திய நாடுகள் தேசியவாதக் குரலை உயர்த்தும், தாய்நாட்டைப்பாதுகாப்போம் என்று கூக்குரல் இடுவார்கள்.
இந்த தேசியவாதக் குரலையும் தேசங்களின் உரிமையையும் ஒன்றாக இணைத்து திரிப்பவர்களும் உள்ளார்கள்.
ஒவ்வொரு தேசங்களும் தமது எல்லைகளையும், சந்தையையும் பாதுகாக்க வேண்டும். ஏகாதிபத்திய வலையத்தினுள் தங்கியிருப்பதில் இருந்து மீள வேண்டும்.
மூலதனத்தின் ஆதிக்கத்தில், வெள்ளை நிறவாதத்தில் இருந்து வெளியே வேண்டும்.
எனவே புதிய உலக ஒழுங்கினால் ஏற்படும் அழுத்தங்களில் இருந்து வெளியேறும் போராட்டம், வியூகம் பற்றி சிந்திக்க செயற்பட வேண்டும்.
உக்கிரையின் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை நேட்ரோ கூட்டை விரிவாக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. இந்த போக்கினை தவிர்த்துவிட்டு யுத்த மேகத்தை மதிப்பீடு செய்ய முடியாது.
வார்சோ நாடுகள் கூட்டு சோவியத் வீழ்ச்சியுடன் முடிவிற்கு வந்தது. ஆனால் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் முன்னைய வார்சோ கூட்டு நாடுகளை EU, NATO இணைத்துக் கொண்டார்கள்.
ருசியா போன்ற ஏகாதிபத்தியம் தன் இருப்பையும், சந்தையையும் காத்துக் கொள்ளும் நெருக்கடிக்கு உள்ளாகியது. இது இன்று ஆக்கிரப்பு யுத்தத்தில் வந்து முடிந்துள்ளது.
நிதிமூலதனத்தின் விரிவாக்கமே ஐரோப்பிய ஒன்றியம், நேட்ரோ கூட்டாகும். இந்த ஆதிக்கம் உடைக்கப்பட வேண்டும். இதேவேளை இந்தக் கட்டத்தில் அனாஆக்கிரமிப்பு, அணிசேரா நிலைப்பாடு பேணப்பட வேண்டும். அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்.
ருசியா வெளியேற வேண்டும், டொன்பார்ஸ், லுகான்ஸ் தனிநாடாக அறிவிக்க வேண்டும்.
உக்கிரையின் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை நேட்டே கூட்டை விரிவாக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. இந்த போக்கினை தவிர்த்துவிட்டு யுத்த மேகத்தை மதிப்பீடு செய்ய முடியாது.
வார்சோ நாடுகள் கூட்டு சோவியத் வீழ்ச்சியுடன் முடிவிற்கு வந்தது. ஆனால் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் முன்னைய வார்சோ கூட்டு நாடுகளை EU, NATO இணைத்துக் கொண்டார்கள். நடுநிலைவகித்துக் கொண்ட சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளை நேட்ரோவில் இணைத்துக் கொள்ள சம்மதம் துருகியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள்.
ருசியா போன்ற ஏகாதிபத்தியம் தன் இருப்பையும், சந்தையையும் காத்துக் கொள்ளும் நெருக்கடிக்கு உள்ளாகியது. இது இன்று ஆக்கிரமிப்பு யுத்தத்தில் வந்து முடிந்துள்ளது.
ஏகாதிபத்தியங்கள் அன்பு முகம் என்பது சனநாயகம், பன்மைத்துவம், தனிமனித சுதந்திரம், தேர்தல் என்பதை முன்னிறுத்தும் என்பதை அறிந்திருப்போம். ஆனால் அதற்குப் பின்னால் கட்மைப்பில் சீர்திருத்தத்தை கோரும் (structural adjustment programmes) இது தனியார்மயமாக்கலை அடிப்படையாக கொண்டதும், அரசின் கடமை இல்லை. தனிமனிதர்கள் தமது நலனுக்காக உழைப்பதே முக்கியம் என்ற முதலாளித்துவ தாராளவாதத்தை நிலை நிறுத்தும். பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் ஏற்பட்ட சமூக நல அரசைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது பொருளாதார தடையை ஏற்படுத்தியது. பொருளாதார தடை என்பது ஒரு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியை மட்டுப்படுத்துகின்றது. இதனால் ஒரு நாட்டின் வருவாயையும், வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை தொடர்ச்சியாக ஏற்படுத்தும். இதனால் பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், சமூக நலத்திட்டத்தை செயற்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, தனியார் வங்கிகள், பங்குச் சந்தையின் (hamilton crush bank) முதலீட்டார்களின் குழுமங்கள் என நிறுவனப்பட்ட நிறுவனங்களை ஏகாதிபத்தியங்கள் பின்புலமாக கொண்டுள்ளன. சீன, ருசியாவிற்கு இவ்வாறான நிறுவனக் கட்டமைப்பு இன்றும் உருவாக்கப்பட வில்லை.
நிதிமூலதனத்தின் தேவை என்பது நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ளும். swift transportation ஊடாக பணங்கள் பரிமாறப்படுவதை மேற்கு ஏகாதிபத்தியங்கள் இடையூறு ஏற்படுத்தியது. இங்கு பணம் பரிமாற்றம் மையப்பட்ட நிறுவனத்தின் ஊடாக செல்வதால் கட்டுப்படுத்த முடிகின்றது. இதே போல பரிமாற்ற நாணயமாக டொலர் உள்ளது. இதற்கு மாற்றாக சொந்த நாணயத்தைதே பரிமாற்றப் நாணயமாக முன்னிறுத்துகின்ற போக்கு இப்போ வளர்ந்து வருகின்றது.
இனிவருங்காலத்தில் ருசிய, சீன மூலதனம் என்பது தமக்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். சுதந்திரமான முரண்பட்ட ஏகாதிபத்தியங்கள் வெவ்வேறு முகாங்களாக எதிரும் புதிருமாக செயற்படும். ஏகாதிபத்தியங்களின் சதிராட்டத்தில் பலநாடுகளும், நாடற்ற தேசங்களும் வெவ்வேறு இடையூறுகளை சந்தித்தித்தே ஆக வேண்டும்.
ஏகாதிபத்தியங்கள் நாடுகள், தேசங்களை தமது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும், இதன் ஊடாக முகாம்களை உருவாக்கிக் கொள்ளும், இந்தப் போக்கு தவிர்க்க முடியாததே.
3.7 தமிழக அரசியல் போக்கு......
முதலாளித்துவ பொருள் உற்பத்திசார்ந்த பொருளாதாரம் என்பதை மீறி எதுவும் இருக்கப் போவதில்லை. அவர்கள் பொருளாதார சீர்திருத்தம் செய்வார்கள் எனினும் அது அந்த உற்பத்தி முறைக்கு ஏற்ற சீர்திருத்தமே. இன்று அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் கொள்வார்கள். ஆனால் எவையும் இவர்கள் பேசுகின்ற சமூக நீதியை முழுமையாக நடைமுறைப்படுத்திவிட முடியாது. இடைநிலை சமூகங்களின் பொருளாதார, வர்க்க, சனத்தொகைக்கு ஏற்பவே சீர்திருத்தங்கள் நடைபெறும் அதற்கு மீறு நடந்திட முடியாது என்பதை பல்வேறு விடயங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
இன்று ஈழஆக்கிரமிப்பு, இனப்படுகொலை நினைவை தடைசெய்தது ஒன்றும் (காவல்துறை நேரடியாக உத்தியோக பூர்வமற்ற நிலையில் நேரடியாக வழிகாட்டப்படுபவையாகும்) தற்செயலானது அல்ல.
மன்னர் ஆட்சிக் காலத்திலா வாழ்வது போல திமுக அனுதாபிகள் அழுகின்றார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட, இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்திற்காக குரல் கொடுப்பது ஒரு மனிதரின் பிறப்புரிமை.
ஈழத்திற்கு ஆதரவாக இருந்ததற்காக ஆட்சியையே இழந்தவர் கலைஞர். அவரது ஈழ ஆதரவை உலகம் அறியும். அந்த காரணத்திற்காகவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்படுத்தி 1991-ல் தி.மு.க.வை ஆட்சிக்கே வரவிடாமல் தடுத்தார்கள்.””
ஆட்சியைக் கலைத்தது இந்திய விரிவாதிக்க நிலைப்பாடு கொண்ட ஆளும் வர்க்கம். நீங்கள் போராட வேண்டியது.
கிந்தியத்திற்கு எதிராக மாறாக ஒப்பாரி வைக்க வேண்டியது ஈழ அரசியலை எதிர்த்து அல்ல. இந்திய ஆட்சியதிகாரத்திற்கும், மாநிலப் பட்டியலை மீறும் மத்திய ஆட்சியதிகாரத்திற்கு முண்டு கொடுக்கப்படுகின்றது.
பெரும்முதலாளிகளின் நலன்
இந்திய தேசியத்தின் பின்னால் உள்ள நலன்
புதிய மத்திய தர வர்க்கத்தின் நலன்
பழைய ஆதிக்கச் சக்திகளின் நலன் இவைகளைக் கொண்டே தமிழக அரசாங்கம் முடிவெடுக்கும். இதற்கு எந்தக் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல. குறிப்பான இரண்டு திராவிடக் கட்சிகளும் பெரும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் கட்சிகளாக மாறிவிட்டன. அவற்றில் பண்பளவு முற்போக்கு, பழமைவாத போக்கு இருப்பினும் அவர்களால் முதலாளித்துவ சமூகப் புரட்சியை நடத்துவார்கள் என எதிர்பார்க்கவே முடியாது.
இங்கு திராவிட பாணி என்பது (பெரியாரியம், பகுத்தறிவு, திராவிட வரையறை இவற்றிற்கு முழுமையான தொடர்பில்லை). பாசாக வரும் என்று உழைத்த முற்போக்கு சக்திகள் இன்று இக்கட்டு ஆட்பட்டுள்ளார்கள். ஒரு கொள்கை நிலையில் ஐக்கிய முன்னணி நிலைப்பாட்டிற்கும் சித்தாந்தத்திற்கு மாறுபாடு உண்டு.
இந்த முரண்பட்ட போக்கு அடையாள அரசியல் இன்றும் சிக்கல்களை உருவாக்கி விட்டிருக்கின்றது. உற்பத்தி முறையை, அரசியல் அதிகாரம் (தேச அரச) போன்ற விடயங்களைப் பற்றிப் பேசாது சலுகை, சீர்திருத்தம், பதவி (சட்டமன்ற, நாடாளுமன்ற) பதவிகளே அரசியல் அதிகாரம் என்று கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த இரண்டு போக்கிற்கும் இடையே உள்ள மாறுபாட்டை முதலில் விளங்கிட வேண்டும். இதற்கான உரைடயாடல் இன்று தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவசியமாகின்றது.
தொழில் முறை தேர்தல் இடதுசாரிக் கட்சிகளின் தாக்கம் தமிழகத்தில் உள்ளது. அவர்களிடத்தில் சமூக ஒழுங்கமைவின் வளர்ச்சிப் போக்கு, உலகப் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களின் போக்கு என்பவற்றை உள்வாங்காதவர்களாக உள்ளனர். இதற்கு மாற்றாக மார்க்சிய வழியில் கட்சியைக் கட்ட வேண்டிய நிலைதான் உள்ளது.
3.8 இலங்கையின் தற்போதைய நிலை
இலங்கை 51 பில்லியன் டொலர் கடனைக் கொண்டுள்ளது. இலங்கையில் ஏற்றுமதியால் வரும் வருவாய் குறைந்தும், இறக்குமதியில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பு என்பது வட்டியைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிறுவனம் 14 தடவை தலையிட்டுக் காப்பாற்றியுள்ளது. அதேவேளை புரட்சிகரத் தலைமை இலங்கையில் இல்லாமையும், புரட்சிக்கான கட்சி, அரசியல் இயங்கங்கள், செயற்பாடுகள் இல்லாத நிலையில் சீர்திருத்தப் போக்கி அமைந்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் முழு மக்களின் பொருளாதாரப் பிரச்சனை என்பது முழு இலங்கைக்கும் ஆனது என்றாலும் தொழிற்துறை வளர்ச்சியும், வாழ்வியல் மாற்றமும் கொண்டதால் ஏற்பட்ட தட்டுப்பாடு என்பது அளவு மாற்றம் கொண்டே இருக்கும். அதேவேளை மக்கள் கூட்டத்தின் சமூக அவசியமே அவர்களின் அரசியல் முழக்கங்களையும், வியூகங்களை கொண்டதாக இருக்கும்.
தமிழர் தேசம் பொருளாதாரச் சிக்கலை இன்று எதிர் கொண்டது அல்ல. தமிழ் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது திட்டமிட்டே தடைப் பட்டு வந்துள்ளது. ஆனால் இன்று பொருளாதாரவாதிகள் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை இட்டு அலறுகின்றார்கள். ஆனால் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது பலபிரச்சனைகளை உருவாக்கிவிட்டே இருக்கும்.
சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் அரசியல் அதிகாரம் உள்ளது. அதனை பாதுகாக்கும் அனைத்து நிறுவனங்கள் (அரசாங்கம், நீதி, இராணுவம், சிறை) உள்ளன. இன்று சிக்கித் தவிப்பது பொருளாதாரத்தில் என்பதை விளங்கிக் கொள்ளாத அரசியல் முடிவுகள் தமிழ் மக்களை மீளவும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதை விளங்கிட வேண்டும்.
பொருளாதாரப் பிரச்சனை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியலை ஜீவகாரூண்ய வழியில் நடத்துவது தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல. சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்கு பலன் கொடுக்காது. அவர்கள் தமது வர்க்க எதிரியை அறியவிடாது தடுப்பதில் தான் கொண்டு வந்து விடுகின்றது.
தம்மை இடதுசாரிய பேச்சாளர் என்பவர் இவ்வாறுதான் பொருளாதாரப் பிரச்சனை தமிழர்களுக்கு இருக்கின்றது என்று அறிக்கைவிட்டார். இங்கு அவர்கள் பொருளாதாரவாதிகளாக சீரளிந்து விட்டனர். பொருளாதார நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையை தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. அந்தச் சுமையை ஒரு ஒடுக்கும் அரச இயந்திரத்தினை பாதுகாப்பதற்கு பயன்படுத்த வேண்டியதில்லை.
முதலாளித்துவப் புரட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்திற்கே உதவிடும் என்ற கருதுகோள் இருந்து கொண்டே இருக்கின்றது. தேசிய இனக் கோரிக்கையே பாட்டாளி வர்க்கத்திற்கானது இல்லை என்று ஒப்பிக்கப்பட்டு வருகின்றது. உற்பத்தி மாற்றம் என்பது சமூக பொருளாதார விடயங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சி என்பது சமூக உறவில், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
‘‘முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாது, ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை விட அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும். ஆனால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அறவே வெளியிடுகிறதில்லை என்று நினைப்பது சுத்த அபர்த்தமாகும். முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கதின் நலன்களுக்கு எதிரானது, எனவே முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் நமக்குத் தேவையில்லை”-- (135- தொ 1.) என்பது நரோத்தியம் என்கின்றார் தோழர் லெனின்.
சமூக வளர்ச்சிப் போக்கை விளங்கிட முயற்சி செய்ய வேண்டும்.----
‘‘முதலாளித்துவ சமுதாயத்தில் இது தவர்க்க முடியாததாய் இருப்பதன் மூலகாரணம் என்ன? தேசிய தனி இயல்புகளிலும் முதலாளித்துவ வளர்ச்சியின் அளவுகளிலும் இருக்கும் வேறுபாடுகளைக் காட்டிலும் இது ஆழமுடையதாய் இருப்பது ஏன்? ஏனெனில் ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்துடன் கூடவே விரிவான சிறுமுதலாளித்துவத்துவப் பகுதியினர், சிறு உடமையாளர்கள் எப்பொழுதுமே இருந்து வருகிறார்கள். முதலாளித்துவம் சிற்றளவான உற்பத்தியிலிருந்து தான் தோன்றியது, இடையறாது தோன்றிக் கொண்டும் இருக்கின்றது. முதலாளித்துவம் தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் பல புதிய ”மத்தியதரப் பகுதிகளை”” (ஆலை அண்டிப் பிழைக்கும் தொழிலகங்கள், வீட்டுப் பணித்துறை, சைக்கிள் , மோட்டார் தொழில்களைப் போன்ற பெருந்தொழில்களின் தேவைகளைப் பூர்த்திய செய்ய நாடெங்கிலும் சிதறிக் கிடக்கும் சிறு தொழிலகங்கள், இன்ன பிற) தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தப் புதிய சிறு உற்பத்தியாளர்கள் இதே போலத் தவிர்க்க முடியாதபடித் திரும்பவும் பாட்டாளி வர்க்க அணிகளுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். வரிவான தொழிலாளர் கட்சிகளில் அணிகளில் சிறு முதலாளித்துவ உலக் கண்ணோட்டம் திரும்பத் திரும்பத் தலைதூக்குவது இயற்கையே. பாட்டாளி வர்க்கப் புரட்சியால் கதிமாற்றங்கள் ஏற்படுகின்ற வரையில் இது இது இப்படியேதான் இருக்கும், இருக்க வேண்டும் என்பது இயற்கையே. ஏனெனில் இத்தகைய ஒரு புரட்சியை உண்டாக்க மக்கள் மக்கள் தொகையில் பெருவாரியானோர் ‘‘அறவே‘‘ பாட்டாளி வர்க்கத்தவராக்கப்படுவது அவசியமென நினைப்பது மிகப்பெரும் தவறாகும். ” (49- தொ1.லெ.) பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்தியின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய ஒடுக்குமுறையால் பின்தங்கியே இருக்கின்றது.
சிங்கள தேசம் தனது உற்பத்திச் சக்திகளை மேலும் சிறப்புத் தேர்ச்சி உள்ளதாக வளர்த்துக் கொள்வதில் கவனம் கொண்டு இருக்கின்றது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்பது ஈழ தேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கான மக்கள் போக்குவரத்து வசதிகள், பண்டங்களை இன்னொரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது, மூலப்பொருட்கள் இலகுவாக கிடைப்பது, தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அனுமதியில் கட்டுப்பாடு என பல இடையூறுகள் உள்ளன. இவைகள் எல்லாம் ஒரு தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து விடக் கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்படுவதாகும்.
புரட்சிகரமாற்றம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவது, அன்னியக்கடன்களை இரத்து செய்வது, அரசுடமையாக்குவது, அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்படுதல் என்பதற்கு அப்பால் சீர்திருத்தங்கள் தான் நடைபெறும். அதற்கு அப்பால் எவையும் புரட்சியாக இருக்க முடியாது.
ஆட்சியாளர்களை மாற்றும் போராட்டத்தில் ஒரு அரச நிறுவனத்திடம் நீதியை நிலைநாட்டுப் படியே கோரிக்கைகள் இருந்தன. அதாவது ஆட்சியாளர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாகும். அதே வேளை அரசாங்கத்தை- நாடாளுமன்றத்தை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வாறான ஊலசாட்ட கோரிக்கைகளும், முழக்கங்களும் அரச கட்டமைப்பை அசைத்திட முடியாது.
1. முதன்மை நிதிமூலதனத்தின் தெரிவு (IMF, WB)
2. பிராந்திய பண்ணையாரின் தெரிவு. (இந்திய)
3. ஆசியான் என்ற முதலீட்டாளர்களின் தெரிவு
4. புரட்சி ஒன்று ஏற்படாவிடினும், ஏதேனும் விபரீதமான அரசியல் மாற்றம் ஏற்படாத வகையில் இத்துடன் புகைச்சலை கட்டுக்குள் கொண்டு வருவது.
என்ற வகையில் எசமானர்களின் சிறந்த அடிமைச் சேவகர். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
குறிப்பாக இராசபக்சைகளின் சொத்துக்குவிப்பு இடங்கள் மீதான தாக்குதல் நடைபெற்றது. அதில் பக்சைகள் நிறைய சொத்துக்களை இழந்துள்ளார்கள். மேலும் ஒரு இழப்பை சந்திக்கவும் தயாராகவும் இருக்கப் போவதில்லை. ஒரு சிறப்பம்சம் என்னவெனில் இராசபக்சைகளின் மற்றும் ஆதரவாளர்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்கி அழித்ததாகும். குறிப்பான அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம் சொத்துடமையை இழக்கவிரும்பாமையும், மாற்று அதிகாரத்துடன் அதனை காப்பாற்றிக் கொள்ளவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிகை உற்பத்திக்கான சந்தை, சந்தைக்கான நுகர்வின் அடித்தளம் என்பது மாற்றம் அடையப் போவதில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தன்னியல்பான போராட்டமானது, அரசியல் அமைப்பை இறுக்கமாகக் கொண்ட அமைப்பு வடிவத்தால் வழிநடத்தப்பட வில்லை. உயர் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையே முதன்மையாக பிரதிபலித்தது. இதனை அவர்களின் 5 கோரிக்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.
போராட்டமானது முகமாற்றத்துடன் முடிவிற்கு வந்தது. போராட்டத்தினை அமைதிய பல நாட்கள் அனுமதித்தது கூட உலக வங்கி, நாணய நிதியம் ஆகியவற்றின் நிபந்தனைக்கு உட்பட்டதே. எந்தப் போராட்டமும் ” “பொருளாதாரப் போராட்டத்திற்காக அரசியல் போராட்டத்தை மறுப்பதானது சர்வதேச சமூக சனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை விலகுவதாகும்.(56-லெ v1)” தேசத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்சியின் கடமை. அவற்றை இந்தப் போராட்டத்தில் காணமுடியவில்லை. இனவழிப்பு, முள்ளிவாய்க்கால் ஆக்கிரமிப்பு யுத்தம் இவைகளை அரசியல் ரீதியாக முழக்கங்களை வைக்காது கடந்து சென்ற போக்கை காண முடிந்தது.
இனமதகுலமற்று ஒன்றாக இணைவோம் என்பதே இரண்டாம் அகிலகாலத்தைய அரசியல் போக்கு. அதற்கு அப்பால் புரட்சியின் பகுதியாக இல்லை. உலகப் புரட்சியின் பகுதியாகவே உலகப் புரட்சி அமைகின்றது.
உலகப் புரட்சியானது சோசலிசத்தின் பகுதியாக அமைகின்ற வேளையில் தேசிய இனங்களின் சுயநிர்ணயம், தேச அரசு கள் என்பது தவிர்க்க முடியாத போக்காக இருக்கின்றது. ஏகாதிபத்திய கட்டத்தில் ஒவ்வொரு நாடுகளும், தேசங்களும் தமது எல்லைகளை பாதுகாக்கப் போராட வேண்டும்.
ஆட்சியதிகாரத்திற்கான போராட்டம் என்பது புதிய உற்பத்தி முறைக்கான போக்கில் அமைந்து விடுகின்றது. இதில் குறிப்பாக தேச விடுதலைப் போராட்டம் என்பது நிலமானியச் சிந்தனைக் கட்டமைப்பை சிதைத்துக் கொண்டே முன்னேறுகின்றது. புரட்சியைக் கடக்காமலே முன்னரே ஆரூடம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். தேச உருவாக்கம், அதிகாரற்திற்கான போராட்டம் தவறானது என்ற பொருளில் தான் தமிழ் தேசிய எதிர்ப்புக் கருத்து முன்வைக்கப்படுகின்றது.
3.9 முதலாளித்துவ கருத்தியல் போக்கு
இரண்டாம் உலக போருக்குப் பின்னரான காலத்தில் அகிம்சை என்ற துருப்பை வைத்துக் கொண்டே சமூகத்தை வழிநடத்திச் சென்றது. அந்த துருப்பு 1990 பின்னர் அதனை வைத்தே வேகமாக தன்னை வளர்த்துக் கொண்டது. ஒற்றைத் துருவத்தில் தனக்கு முரணான போக்கை கொண்டவர்களை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. இந்தக் காலத்தில் ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புக்களை தேர்தல் பாதைக்கு கொண்டு வந்தார்கள். புதிய எதிரியாக இஸ்லாமிய போபியாவை உருவாக்கினார்கள்.
மக்களுக்கு அகிம்சையைப் போதித்துக் கொண்டு, ஏகாதிபத்தியங்கள் ஆயுதங்களால் பிரச்சனையை தீர்த்துக் கொண்டு தான் வந்துள்ளது.
இங்கு கருத்துருவாக்கிகள், வலதுசாரி, தாராளவாதிகள் என்போரும் ஏகாதிபத்திய அகிம்சை, சனநாயகம், மனிதாபிமானம், ஜீவகாரூண்யம் என்ற கருத்துக்களை சுமந்து கொண்டே வந்தார்கள். இவர்கள் தான் மனிதவுரிமை, அரசியலில் விளையாட்டை சேர்க்கக் கூடாது, பாலுரிமைச் சமத்துவம், அதாவது கூட்டுரிமையை விட தனிநபர்களின் உரிமையே முதன்மையானது என்று கட்டமைக்கப்பட்டது. அந்தக் கற்பிதத்தில் இருந்து மீளமுடியாத நிலை தான் உள்ளது. இதில் மார்க்சியத்தை நம்புபவர்கள் என்பவர்கள் கூட திருத்தல்வாதத்தில் இருந்து வெளியேறவில்லை.
அரசியல் அதிகாரம் என்பது அரசை கைப்பற்றுவது, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவது என்பதை விளங்கிடாது புரட்சி பற்றி பொழுதுபோக்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
பொருளாதார ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் இருந்து தான் அணிதிரட்ட முடியும். ஆனால் அடையாள அரசியலை முதன்மைப்படுத்தியே வியூகம் எடுக்கப்படுகின்றது. அதுவே நியாயமான அரசியல் போக்காக கொள்ளப்படுகின்றது.
இன்று இன்னொரு மத்தியகாலச் சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு மத்தியகாலச் சிந்தனையை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதுவும் இன்று மனிதவுரிமை என்ற பெயர் கொடுக்கப்படுகின்றது. இன்னொரு படி சென்று மற்றவர்களை ”இனவாதிகள்” குறிப்பிட்ட ”மதவெறுப்பாளர்” என்று இலகுவாக கூறிவிட்டுச் செல்கின்றார்கள்.
ஏகாதிபத்தியங்கள் சந்தையை விரிவாக்கம் செய்வதை கைவிடவில்லை. சமூக பொருள் உற்பத்தி முறையில் ஏற்படும் சிக்கல்களை யுத்தங்களை ஏற்படுத்தும், அதனை தவிர்க்க முடியாது. அந்த த்தங்கள் இன்னொரு உள்ளாட்டு யுத்தத்தின் மூலமே தீர்க்கப்படும். தேசங்கள் தமக்கான ஆட்சியுரிமை, சுதேசிய வலிமையைக் அடைவதன் ஊடாகவே சாத்தியம்.
வாழ்வியல் சிந்தனைப் போக்கு- சமூகமயப்படுத்தல் (socialization) இவற்றை விளங்கிடமுடியாதவர்கள் மத்தியில் உரையாடல் கல்லில் நாருப்பது போன்றே. அவர்களுடன் உரையாடுவதில் இருந்து விலகி நிற்பது ஒரு வகையில் அமைதி உருவாக்க முடியும். உரையாடல் களத்தில் நினைவில் வைத்து பேசவேண்டியதில்லை. அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எதையும் கூறிவிட்டு சென்றிட முடிகின்றது.
ஆனால் எழுத்து களம் என்பது அவ்வாறில்லை. இதனால் எவரும் எழுத்துத் தளத்தில் முரணாக கருத்து இருந்தாலும், சரியான கருத்தாக இருந்தாலும் கருத்திடுவதில் இருந்து தவிர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் அவ்வாறு எழுதும் இடத்தில் நீண்ட ஆய்விற்கு செல்லவேண்டிய தேவை உள்ளது. ஆய்வினை செய்யவேண்டியதில்லை. மாறாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்க முடியும். அவ்வாறு அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருப்பது இலகுவானதாகும்.
தொடர்ப்புச் சாதனங்களின் வளர்ச்சி என்பது தாராளவாதத்தினை ( Anarchy ) வளர்த்து விட்டுள்ளது. கட்சியில் இருந்து கொண்டே தன்முனைப்புடன் கருத்துச் சொல்பவர்கள். அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு தனிநபர் சார்ந்த நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள். இவர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கின்ற போது கிண்டலும், கேலி செய்வதுமான இருக்கின்றார்கள்.
வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கும் பிரிவானது சமூகமயமாக்கம் நடைபெறுகின்றது. புதிய சமூக உறவுகளைக் கற்றுக் கொள்ளவும், வர்க்க நலனையும், முரண்பாடுகளை கணிப்பதற்கும், பெருந்திரளை அமைப்புருவாக்கம் செய்வதன் ஊடாக வேலைத் திட்டம், போர்யுக்தி, நடைமுறை ரீதியான செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் முடியும். மக்கள் திரட்சி ஊடாக புரட்சியை நடத்த முடியாது என்ற கற்பிதங்களை தகர்த்திட முடியும். ஆனால் எந்த அமைப்புக் கட்டமைப்பு செயல்வடிவம் இல்லாது ” சிறந்த அரசியல் மார்க்கத்தை உருவாக்க இளந் தலைமுறையினர் மத்தியில்இருந்து முற்போக்குத் தமிழ்த் தேசியம் உருவாக வேண்டும்.” என்கிறார்.
இது எவ்வாறு இருக்கின்றது என்றால் ‘‘ஏரும் கலப்பையும் விட்டு வரும் விவசாயிகள் போல கம்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு பேர்ருக்குக் கிளம்பிவிட்டார்கள்.” (152எ.செ.வே) நடைமுறையே அனைத்தைத்தையும் தீர்மானிக்கும் நடைமுறையில் எதுவும் இல்லாது குறுந்தேசியவாதம் என்று ஒப்பித்துக் கொண்டிருப்பதால் உங்களால் ஒரு அடியும் நகரமுடியாது.
இந்தக் கட்சியினால் வழிநடத்தப்படுபவர்கள் மார்க்சியப் புரிதல் இல்லாது பொதுவெளியில் திரிபுவாதிகளாக உலாவுதை அறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
மார்க்சியத்தை வரட்டுச் சூத்திரமாக கருதவில்லை. சமூகவியலை உள்வாங்கி ஆய்வு செய்ய துணையாக உள்ளது. குறுந்தேசிய, புரிதல் குறைவில், வரட்டுவாதியாக தொங்கிக் கொண்டிருக்கவில்லை. சமூகவியல் ஆய்வு முறை கற்றுத் தருவதை கலாசாலை ரீதியாக கற்றுக் கொண்டதை முறித்துக் கொண்டு இயங்கியல் பொருள்முதல் ரீதியாக ஆராய கற்றுக் கொண்ட அடிப்படையில் தான் எழுதப்படுகின்றது. மார்க்சிய மேற்கோள்களை தேவைக்கு ஏற்ப வெட்டி ஒட்டுவதும் சமூகத்திற்கு எவ்வகையிலும் பலன் கொடுக்க முடியாது.
இறுதியாக
முதலாளித்துவ வளர்ச்சி முழுமை அடையாத நாடுகள், தேசங்கள் உள்ளன. இதேவேளை ஏகாதிபத்திய காலகட்டத்தில் எவ்வாறு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக கோட்பாடுகளை வகுப்பதே எம் முன்னால் உள்ளால் உள்ள வரலாற்றுக் கடமையாகும். இந்திய, இலங்கை பொதுவுடமைக் கட்சிகள் தோழர் லெனின் தலைமையிலான கட்சியின் பாணியில் புரட்சிகர கட்சிகளை கட்டமைக்க முனைந்தார்கள். ஆனால் புரட்சிகரக் கட்சியை, தேசிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்கவில்லை.
300 வருட பழமையான முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை இன்னும் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை. நிலமானியச் சிந்தனைக் கட்டமைப்பில் சமரசம் செய்து கொண்டு முதலாளித்துவ புரட்சி வெற்றி பெற்றிருந்தாலும் பழைய- நிலமானிய சிந்தனைக் கட்டமைப்பு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
இந்தப் போக்கில் சோசலிசப் புரட்சி 1917 இல் வெற்றி கொண்டிருந்தாலும் அது வீழ்த்தப்பட்டது. ஆனால் மார்க்சியம் வீழ்ச்சி அடைந்த்ததாக கற்பிதம் செய்யப்படுகின்றது. மார்க்சியம் ஒரு சித்தாந்தம், திறனாய்வு சமூகவியல் என்பது வீழ்ச்சி அடையவில்லை. வலதுசாரி சிந்தனையாளர்கள் திறனாய்வு சமூகவியல், சித்தாந்தம் என்பது வெளிப்படுத்தும் உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம், சமூகமாற்றம் என்பது எதையும் விளங்கிட வில்லை. சோசலிச நாடுகளின் வீழ்ச்சியை கொண்டாடுபவர்கள். உற்பத்தி முறை மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், சமூக முரண்பாடு ஏற்பட்டுக் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. சமூகப் போக்கை பகுதியாக பிரித்து கருத்துக்களை வெளிப்படுத்துவதன் ஊடாக கருத்தாளர்களாக உருவாகவும், நிலைநிறுத்தவும் செய்கின்றார்கள்.
ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி முறையை அறிந்து வாழ்கின்ற வகையில் அவை தான் இறுதியானதாக கற்பிதம் செய்யப்படுகின்றது. உலகின் பல பகுதிகளிலும் இன்னும் முதலாளித்துவத்துவ நுகர்தடியைச் சந்திக்கவில்லை. அவைகள் பலதூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. முதலாளித்துவ நுகர்த்தடி என்பது ஏதோ தீண்டத் தகாது என்ற
போக்கை புரட்சிகர மாற்றம் நடைபெற்று விடாமலே கற்பனையில் பேசிட முடிகின்றது. ஒரு சமூக பொருளாதார உற்பத்தி முறை மாற்றத்திற்கு பல ஆண்டுகள் தேவையானது. ஆனால் புரட்சி எதுவும் நடைபெறவில்லை. அதற்கு முன்னராகவே முன் அனுமானம் செய்யப்படும் கற்பனாவாத சிந்தனைப் போக்கு என்பது வழிகாட்டி விட முடியாது.
ஏகாதிபத்திய பொருளாதார நலன், பண்பாட்டுத் தாக்கம், இராணுவாதம், அரசியல் ஆகியவற்றில் எவ்வாறு தாக்கம் அடைகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான் சொந்த கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியும். இனமதகுலமற்ற நிலையில் ஒன்றிணைய முடியும் என்பதும் போலித்தனமானதாகும்.
”உலகப் புரட்சியினுடைய இரண்டு வகைகளை பார்த்திட இயலும். முதலாவது முதலாளிய வகையினத்திற்கு சார்ந்த்ததாயிருக்கிறது. இந்த வகைப் பட்ட உலகப் புரட்சியின் காலகட்டம் மிகவும் காலம் கடந்த தொன்றாயிருக்கிறது.” (456- மாவோ2) இங்கு முதலாளித்துவ புரட்சியை நடத்திவிடவோ, உலகப் புரட்சியின் அங்கமாக புரட்சியை வழிநடத்தக் கட்சியே இல்லை. சமூகத்தையே முழுமையாக அறிந்திடாத நிலையில் தான் கட்சிகளை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடத்தில் மார்க்கியத்திற்கு மாற்றாக இரண்டாம் அகிலத்தின் கோட்பாடுகளை மீள முன்னிறுத்தி அதுவே புரட்சிகர மார்க்சியம் என்ற போர்வையில் தான் கட்சிகள் இருக்கின்றன. இதற்கு மாற்றாக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையில் பயணிப்பதே சரியான பாதையாக அமையமுடியும்.
No comments:
Post a Comment