பல்கலைக்கழகமும் தேச விடுதலைக் கருத்தியலும்
12.01.21

சமூகத்தின்
பண்பாட்ட வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்கள் முக்கிய அடையாளமாக இருந்து
வருகின்றன. இது ஆசீவக சிந்தனை மரபு, சமண, பௌத்த பள்ளிகளின் உருவாக்கம்
கேள்வி கேட்ட சமூகத்தின் அடையாளமே. இவ்வாறு சமூகத்தின் அடையாளமாக விளங்க
வேண்டும் என்று கருத்தை ஆதரிப்பவர்கள்கூட குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டே
கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
பல்கலைக்கழக
வளாகத்தில் இருந்த நினைவுச் சின்னம் அழிக்கப்பட்ட பின்னர், பல்வேறு
கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும்
தனித்தனியாகவும், வியாபகமான (Holistic approach) அணுகுமுறையில் இருந்து
விடயங்களைப் பார்க்க வேண்டும். இங்கு விவாதத்தின் அடிப்படையே
தேசவிடுதலைக்காக வீழ்ந்தவர்கள் பற்றியதே. தேசிய சனாநாயகப் போராட்டமும்
வர்க்கப் போராட்டமே. ஆகவே இது வர்க்கப் போராட்டத்தில் வீழ்ந்தவர்கள்
பற்றிய பிரச்சனையாக அணுகப்பட வேண்டும். அங்கு அமைக்கப்பட்ட சின்னமானது
தலைவர்களுக்கானது அல்ல.
இந்த இடத்தில்
ஒடுக்கப்படுபவர்கள் அமைக்கும் நினைவு வடிவத்திற்கும், ஒடுக்குபவர்கள்
வடிவமைக்கும் நினைவுச் சின்னங்களுக்கும் மாறுபாடு உண்டு. இங்கு எழும்
விவாதம் ஆக்கிரமிப்பாளர்கள் வெற்றிச் சின்னத்தை நிறுவும் போது மௌனமாக
கடந்து செல்பவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் சின்னங்களை நிறுவும்
சந்தர்ப்பத்தில் தான் திட்டங்கள், ஆலோசனை தெரிவிப்பதில் முதன்மையாக
உள்ளார்கள்.
1. சிந்தனை வடிவம் பற்றியது
யுத்த
காலத்தில் சமூகத்திற்கு இருந்த சிந்தனை என்பது மாறுபட்டது. அந்தச்
சிந்தனையானது யுத்த முடிவிற்குப் பின்னர் மாற்றத்திற்கு
உள்ளாகியிருக்கின்றது. பல்கலைக்கழகத்தினுள் பன்முகப்படுத்தப்பட்ட
கருத்துகள் என்கின்ற போது பற்பல சிந்தனை வடிவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட தமிழ்த்தரப்புகளின் கருத்துக்கள் தான் பல்கலைக்கழகத்தில்
உள்ளது என்பது அல்ல. அனைத்துச் சிந்தனையும் சிங்கள தேசத்தின்
ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதற்கு அப்பால் சுதந்திரமாக செயற்பட
முடியாது.
2009 பின்னர் மனித முகம் கொண்ட முதலாளித்துவ
(human face of capitalism) தந்திரோபாயத்தை மேற்கும், பேரினவாதக்
அரசாங்கங்களும் பயன்படுத்தியுள்ளன. இராணுவாத நிலைப்பாடுகள் பிராந்திய
நலனின் அடிப்படையில் அமைந்து விடுகின்றன. இங்கு ஜனநாயகம், நல்லாட்சி
(Democracy, Good Governance) என்பது கட்டமைப்பில் சீர்திருத்தத்தை
கோருவதும், உட்கட்டமைப்பை (infrastructure) உருவாக்கிக் கொண்டு சந்தையை
மென்மேலும் திறந்து விடவதனைக் குறிக்கோளாகக் கொணடது. இன்றையபோக்கு
நிதிநிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்படுகின்றது. இதிலும்
இந்தியா அபிவிருத்தி பற்றி கவனம் எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. இங்கு
முதலாளித்துவ உற்பத்தி முறை, அது சார்ந்த அரசியல் சந்தையை மையப்படுத்தியே
இருக்கின்றது. 2009க்கு முன்னர் இலங்கையில் முழுச் சந்தையும் சர்வதேச
நிதிமூலதனத்தின் ஆளுகைக்குள் இருக்கவில்லை. கடல்வளம், உள்நாட்டுச் சந்தை
என்பது கட்டுப்பட்ட நிலையில் தான் இருந்து. இதற்கு மாற்றான சிந்தனைகளை
ஊட்டுவதில் கடந்த 10 வருடத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்கு
எதார்த்தவாதம், சமயோசிதம் என்று நிறையவே எல்லோரும் வகுப்பெடுத்துக்
கொண்டார்கள்.
2. துறைசார் நிபுணத்துவம்
இங்கு
கலாசாலையில் கல்வி கற்கும் போது தெரிவு செய்யும் போது சட்டவாளர்,
வைத்தியர், கணக்காளர் போன்ற பட்டப்படிப்பே தெரிவு செய்யப்படுகின்றது.
இந்தத் துறைகளில் தமிழ் பிரிவினர் திறமையுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்கள் உலகம்முழுவதும் செறிந்து தமது திறமையைக் காட்டுகின்றார்கள். ஆனால்
இக்கட்டுரை சமூகச் சிந்தனையை எவ்வாறு முற்போக்குச் சிந்தனை சார்பாகவும்,
ஒடுக்குமுறைக்கு எதிராக கட்டமைப்பது பற்றியதாகும்.
எதார்த்தவாதமும்,
சமயோசிதவாத்தினை சமூகத்திற்கு ஊட்டுவதில் குறிப்பிட்ட வெற்றியைக்
கண்டுள்ளனர். இலங்கைச் சமூகங்கள் நிலப்பிரபுத்துவச் சிந்தனையில்
கட்டுண்டுதான் உள்ளாது. சமூகம் கல்வி, அரச வேலை, நிலையான சம்பளம்,
ஓய்வூதியம், சொந்த ஊரிலேயே வேலை, சீதனம், சொந்த வீடு என்ற வட்டத்தில்
உழழும் மத்திய தரவர்க்க மனோபாங்கு கொண்டவர்களின் வர்க்கம் வளர்ந்து கொண்டு
தான் இருக்கின்றது.
இதே போல விரைவாக பணத்தை உழைப்பது என்பது பற்றிய பிரச்சனை, நுண்கடன், வேலையில்லாப் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகள் உண்டு.
இந்த
வர்க்கப் பிரிவினர் மாத்திரம் தமிழர் தேசத்தவர்கள் அல்ல. கடல்தொழிலாளர்,
விவசாயிகள், தனிமுயற்சியாளர்கள் என பல்வேறு வர்க்கப் பிரிவினை கொண்டவர்கள்
உள்ளாார்கள். சிங்கள தேச அரசியல் பொருளாதார சூழமர்வில் பொருளாதார, தேசிய
ஒடுக்குமுறைக்குள் ஆளாகியுள்ள தமிழ் சமூகம் தன்னை வளர்த்துக் கொள்வதிலும்
பெரும் இடையூறு உள்ளது. இங்கு தேசிய இனப்பிரச்சனை பிரதான முரண்பாடு என்ற
ரீதியில் அணுகப்படுகின்றது. இங்கு மதச் சிறுபான்மையினரான முஸ்லீம், மலையகத்
தமிழ்த்தேசிய இனம் பற்றிப் வேறு தளத்தில் பேசுவோம். எனினும் தமிழ்
தேசத்தில் வாழ்கின்ற மதச் சிறுபான்மையினரின் முதலாளித்துவ சனநாயக உரிமை
அங்கீரிப்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.
பன்முகத்துவம் பேசுபவர்களின் சிந்தனைப் புள்ளியை கீழே பார்ப்போம்..
3. ஒப்பாரி
இந்தவிடயத்தில் முக்கியமாக ஒரு பதிலை முதலே கொடுத்துவிட்டு விரிவாக எழுதுவது பொருத்தமாகும்.
இயக்கங்கள் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஒரு வர்க்கத்தைச்
சேர்ந்வர்கள் மற்றைய ஊசலாட்ட வர்க்கப் பிரிவுளையும், இடதுசாரி
அமைப்புக்களையும் தடைசெய்தார்கள். இதன் விழைவு பல பின்னடைவுகளைக்
கொடுத்தது.
2009 பின்னர் ஈழப் போராட்டத்திற்கான
திடமான த தலைமை இல்லாமல் இருப்பதுதான் இன்றைய நிலைமை. நீங்கள் நம்பிய
கொள்கையை தொடர இன்று வெற்றிடம் உள்ளது.
நீங்கள் நடைமுறையில் செயற்பட வி.புகள் இல்லை. அவர்களின் ஆயுதமும் இல்லை. உங்களை போராட்டக் களத்திற்கு தடையாக இருப்பது யார்?
நீங்கள்
என்ன செய்து செய்து கொண்டிருக்கின்றீர்கள். இனக்குழும, சாதிய சிந்தனைச்
சமூகங்கள் தங்களிடையோன பகையை எத்தனை வருடங்கள் சென்றாலும் பழிதீர்த்துக்
கொள்ளும் மனப்பாங்கில் இருக்கும். இந்த வகையான பழிவாங்கும் சிந்தனை
வடிவத்திற்கு அப்பால் முதிர்ந்த சனநாயக, முற்போக்குச் சிந்தனை கொண்ட போக்கு
அவற்றிடம் இல்லை.
இன்று கருத்துக் கூறுபவர்கள்
தாங்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்றார்கள். சமூகம் செல்ல
வேண்டிய பாதையை ஆராய்ந்து உணராமல் நுனிப்புல் மேய்ந்து வெளித்தோற்றத்தை
மாத்திரம் கண்டவர்களுக்கு சமூகப் போக்கில் அநேக முரண்பாடுகள் தோன்றலாம்.
ஒரு நிலையில் இல்லாமல் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளதாக தோன்றலாம்.
சமூகத்தின் போக்கை ஆராய்ந்து வியூகம் அமைக்கப்பட வேண்டும்.
அனுபவங்களை
ஒப்பித்துக் கொண்டிருப்பதும் வெட்டரிவாள், வேல்கம்பை தூக்கிக் கொண்டு
பழிவாங்குவது போன்ற பிற்போக்குக் கருத்தியலை விதைப்பது அல்ல.
காட்டுமிராண்டித்தனமான மனநிலையை (savage mindset). புலம்பெயர்ந்த நாடுகளில்
வசித்தால் கூட பழைய சிந்தனையைத் தொடர்கின்றார்கள். இவ்வாறான மனிதர்கள்
தான் புதிய சமூகச் சிந்தனை உருவாக்கப் போகின்றார்கள் என்று புலம்பிக்
கொண்டு இருக்கின்றார்கள்.
இயங்கியல் போக்கு அற்ற
ஆய்வுகள், கருத்துக்கள் என்பன வெறும் கருத்துக்களாக சுருங்கி விடுகின்றன.
சமூகப் போக்கின் தேவையை அறிதல் வேண்டும். சமூகப் போக்கின் அறிதலை விடுத்து
தமது அகவிருப்பு கொண்டு சமூகத்திற்கு கருத்துக் கொடுத்துவிட முடியாது.
4. புது இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பது
2009
வைகாசி17 பின்னர் மக்கள் எவரையும் முள்ளிவாய்க்கால் சுற்றாடல் வரையில்
எவரும் நுழையாத வகையில் தடைசெய்திருந்தனர். இந்தக் காலத்தில்
இறந்தவர்களின் எச்சங்கள் இல்லாது ஆக்கப்பட்டன, மிச்ச மீதியாக இருந்த
மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இனவழிப்புக்கான அடையாளங்கள் இல்லாமல்
ஆக்கப்பட்ட பின்னரே வரையறைக்குட்ட காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய
அனுமதித்தனர். இதன் பிறகும் தொடர்ச்சியாக கேப்பாப்புலவு மக்கள் நிலமீட்புக்
கோரிக்கைக்காக போராட தொடங்கினார்கள்.
மாவீரர்
துயிலும் இல்லங்களை 2009 வைகாசியின் பின்னர் தரைமட்டமாக்கினர். பிற்பட்ட
காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு, மாவீரர் நாள் போன்றவற்றை நனைவு
கூர்வதில் பல இடையூறுகள் செய்து வந்துள்ளார்கள்.
இங்கு
ஒரு தேசிய இனத்தின் சின்னங்கள், அடையாளங்களை இல்லாது ஒழிப்பது சிங்கள
தேசத்திற்கு அவசியமானது ஒன்றுதான். ஆனால் புலியெதிர்ப்புவாதிகளை ஆளும்
வர்க்கத்திற்கு துணை நிற்பதைத் தான் இவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.
எனவே புலிக்காய்ச்சலுக்கு எவராலும் மருந்து கொடுக்க முடியாது.
தமிழ்
தரப்பின் சிறிய குழுக்களில் இருந்து வரும் எதிர்ப்புணர்வை அலசிட
வேண்டியுள்ளது. இந்தத் தரப்பல் பல சாத்தியவாத, அனுபவவாத, எதார்த்தவாத,
மிதவாத, சாதியவாத, மேட்டுக்குடி ஜீவகாரூண்யவாதிகளின் பிரிவுகளையே
பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள். இந்தச் சக்திகளின் தன்னலம் சார்ந்த
இலக்குகளைக் கொண்டு இருக்கின்றார்கள். தன்னலம் சார்ந்த இலக்கு, தேவையைக்
கொண்டவர்களுக்கு இடையே வியாபகமான அணுகுமுறையில் ஒரு பார்வையை அவர்களிடம்
இருந்து பெற்றுவிட முடியாது. சிங்கள அரச கட்டமைப்பில் வி.பு தலைமைகளுக்கு
எவ்வித அடையாளச் சின்னங்கள் எழுப்பிட முடியாது. அதற்கு சிங்கள தேச அரச
கட்டுமானம் அனுமதிக்காது என்பது சாதாரண மக்களுக்குத் தெரியும்.
பல்கலைக்கழகத்தில்
அமைக்கப்படும் சின்னங்கள் யாரை அடையாளப்படுத்துகின்றன என்பது பற்றி
பல்வேறு கருத்துக்கள் உண்டு. தேசவிடுதலைக்கான போராட்டத்தில் லட்சக்
கணக்கான மக்கள், பல்லாயிரம் தேசபக்தர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஈழ
தேசமானது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் இன்று அன்னிய மூலதனத்தின்
உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கும் தேச அரசிற்கும்
வித்தியாசம் தெரியாவிடின் ஒதுங்கிருந்து நேர்மையாக சிங்கள தேசத்தின்
மகிமையைப் போற்றுங்கள். அது தான் உங்களுக்கான இடம்.
தென்னிலங்கை
பல்கலைக்கழகங்களில் இருக்கும் குறியீடுகள் வர்க்கப் போராட்டத்தை
பிரதிநிதித்துவப் படுத்துகின்றதாம். வடக்கில் உள்ளது புலிப் பயங்கரவாதிகள்,
பிரிவினைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதாம்.
இதையே
சிலவருடங்களுக்கு முன்னர் மகிந்தவும் சொன்னார். மகிந்தவிற்கும்,
புலியெதிர்ப்புவாதிகளுக்கும் வர்க்கப் போராட்டம் என்றால் என்னவெனத்
தெரியவில்லை.
அடிப்படையில் பொருளாதாரப் போராட்டம்,
தேசிய சனநாயகப் புரட்சியும் வர்க்கப் போராட்டங்களே என்ற மார்க்சிய
அடிப்படை விளங்கிடாத பண்டிதர்களைக் கொண்டவர்களே கட்சிகள், அரசியல்
நடாத்துகின்றார்கள். இவர்களுடன் லக்ஸ்மன் கதிர்காமரின் வாரிசுகள்
மறுபுறத்தே களமாடுகின்றார்கள்.
தனிநபர்களே
முக்கியம் ஒரு சமூக ஒழுங்கமைவு முக்கியமில்லை என்பதும், தனிநபர்களை
முதன்மைப்படுத்துவதோ இணையாக நிறுத்துவது பற்றியதில் தான் மாறுபாடு உண்டு.
செல்வி,
ராஜினி, மனோகரன் என்ற தனிநபர்களின் இழப்பு இழப்புத் தான். யாரும்
யாருக்கும் சிலை வைப்பதாயின் வைத்துவிட்டு செல்லுங்கள். தனிநபரை நினைவு
கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம் இழப்புக்களை நினைவு கூர உரிமை உண்டு.
இங்கு
தமிழ் தேசத்தின் அடையாளத்தை, இருப்பை, இனவழிப்பை, மறுத்துக் கொண்டல்ல.
பல்கலைக்கழகத்தில் அமையக் கூடியது வி.பு தலைவர்களின் அல்ல. தேசபக்தர்கள்,
ஈழ தேசமக்களின் நினைவுச் சின்னமே.
5.பன்முகத் தன்மை சமூகத்தில் இல்லையா?
யாழ் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரை பல அரசியல் போக்கு உள்ளவர்கள் இயங்குகின்றார்கள்.
1.
தமிழ் தேசிய சிந்தனை – இந்தப் பிரிவு வெளிப்படையாக தம்மை நிலை நிறுத்தி
வேலை செய்ய முடியாத நிலை. எனினும் தமது செயற்பாட்டை ஏதோ ஒரு வகையில்
செயற்படுத்தியே வருகின்றனர். இந்தச் சிறுபிரிவினரே தமிழ் மக்கள் சார்
அரசியலை சிறிதளவேனும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
2.
கதிர்காமர் கும்பல்களின் வழித் தோன்றல்களின் (ரொட்க்சிய) இவர்கள் தமிழ்
தேசிய சிந்தனை கொண்டவர்களை சிந்தனைக் குருடர்களாக மாற்றுவதில்
பல்கலைக்கழகத்தில் செயற்படுகின்றார்கள். இது ஒரு புகைச்சலாக இருக்கின்ற
விடயம். பல்கலைக்கழத்தில் உள்ள செயற்பாட்டார்களுக்கு இந்த விடயம் தெரியும்.
ஆனால் இது வெளியே பேசப்படுவதில்லை. இந்தப் பிரிவினர் பொதுவுடமைவாதிகள்
எனப்படுபவர்களுக்கும் ஆலோசகர்களாக இருக்கின்றார்கள்.
3.
மார்க்சிய வழியில் பயணிப்பவர்கள் ஆளுமையில் இல்லை. (மார்க்சிய திறனாய்வு
முறையில் கைலாசபதி, சிவத்தம்பியின் வழியில் அவர்களின் மாணவர்கள் எவரும்
இல்லை. சமூக அடையாளம் – இருப்கைக்கருதி அவர்களின் மாணவர்கள் என்று
பிரகடனப்படுத்துவார்கள். இதற்கு மாற்றாக தமிழகத்தில் மார்க்சிய
கல்வியாளர்கள் பலர் ஆய்வுலகில் பெரும் பங்காற்றியுள்ளார்கள். இதில்
பேராசிரியர்கள் கோ. கேசவன், ஆர் சிவசுப்பிரமணியன், . வெ. கிருஸ்ணமூர்த்தி,
மருதையன், தோத்தாத்திரி, போன்ற ஆளுமைகள் உள்ளார்கள்) ஆனால்
சூல்கெயிமினுடன் புகைப்படம் எடுக்கும் தமிழ் பூர்சுவா வர்க்கத்தினர் போல
தாம் கைலாசபதி, சிவத்தம்பியின் மாணவர் என்று சுயதம்பட்டம் அடிப்பதுடன்
நிறுத்திவிடுவார்கள்.
இதில் மிஞ்சியிருப்து இலங்கையைப்
பொறுத்தவரையில் பேராசிரியர் சண்முகரத்தினம் என்ற சமுத்திரன். இவரின் மாணவர்
எவரும் அடுத்த நிலையை எடுத்துச் செல்வார் இல்லை. பேரா. சிவசேகரம்
மார்க்சிய பின்புலம் கொண்டவர் என்றாலும் அவர் திரிபுவாத அணியில் தான்
உள்ளார் என்பதை தத்துவார்த்த ரீதியாக நம்மால் நிறுவிட முடியும்.
பன்முகச்
சிந்தனை என்பது புலியெதிர்ப்புவாத – ரிம்மர் மண்டப வாரிசுகளால்
காயடிக்கப்படுவதை இந்த மேட்டுக்குடிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தம்மீதான விமர்சனத்தை மதவர்மம் கக்குவதாக மடைமாற்றுவார்கள்.
தமிழ்
தேசிய சிந்தனை கொண்டவர்களை இலக்காக கொண்டே பன்முகச் சிந்தனை என்ற
தாக்குதல் நடைபெறுகின்றது. இதற்கு இன்னொரு சமூகப் போக்கும் உள்ளது. 1990
பின்னர் வர்க்கமற்ற மேட்டுக்குடி மனப் போக்கு இணைவு என்பதும் முன்னர்
அணிகளாகச் (மு. தலையசிங்கம்- கைலாசபதி அணி) செயற்பட்டவர்கள். பின்னரான
காலத்தில் தாராளவாதத்தினுள் நுழைந்து கொண்டார்கள். இவர்களின் தாராளவாத
சிந்தனைப் போக்கினை சமூகமயப்படுத்தினார்கள். இவர்களின் தொடர்ச்சியாக
அங்கீகாரத்திற்காக ஏங்கும் இளையோரை உருவாக்கி விட்டுள்ளார்கள்.
இதிலும் பெயருக்காக
1.முற்போக்கு
என்ற பெயரில் இயங்கும் புதிய வகை இலக்கியம் என அகநிலையை முன்னிறுத்தும்
பிரிவு. இந்தப் பிரிவு அங்கீகாரத்திற்காக பிரமுகர்களின் பின்னால்
செல்கின்றனர். இந்த பிரிவினர் அரசியல் பொருளாதாரம் இரண்டாம் நிலையாக
இருக்கின்றது. இது அவர்களின் இலக்கியத்தில் இருந்து பெறப்பட்ட மதிப்பீடு
அல்ல. மாறான அவர்கள் வெளிப்படுத்தும் அரசியல் கருத்துக்களில் இருந்து வந்த
முடிவாகும்.
2.முற்போக்கு முகாம் என்ற போர்வையில் எழுத்தை தொழில் முறையாகக் கொண்டவர்கள். இந்தப் பிரிவிற்கு கட்சியும் இலக்கியமும் ஒன்றுதான்.
3.
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழகத்தில் உள்ள சந்தைக்காக முற்போக்கு
பேசும் நபர்கள். தமிழக முற்போக்கு எழுத்தாளர்களுடன் தம்மை இணைத்துக்
கொள்வார்கள். இலங்கை எனும் போது தம்மை அன்னியப்படுத்தக் கூடாது என்ற
மனப்பாங்கில் சிந்திப்பவர்கள், செயற்படுபவர்கள் உண்டு. அவர்களை நாம்
நொந்துவிட முடியாது. ஏனெனில் தமிழகமும், இலங்கையும் ஒன்றல்ல. இதேவேளை
தமிழகத்தில் உறவை பேணுகின்ற போது அங்கு தமிழர்கள். இங்குஇலங்கை என்று வரும்
போது மத அடையாளம் பேணுவார்கள். இந்தப் போது ஒற்றைப் போக்காக இல்லை.
இதில் பெரும்பான்மை காலச்சுவடு, ஜெயமோகனுடன் அணிகோர்ப்பார்கள்.
6.போராட்டத்தில் மதச் சிறுபான்மையினரின் இணைவு
ஈழப்
போராட்ட காலத்தில் மதச் சிறுபான்மையினர் சிங்கள தேசத்தின்
அச்சுறுத்தலுக்கு குறிப்பிட்ட அளவில் அச்சத்தில் இருக்கவில்லை. யுத்த
முடிவின் பின்னர் இஸ்லாமிய எதிர்ப்பு சிங்கள தேசத்தில் பரவியது. பல
இடங்களில் மோசமான தாக்குதல் இடம் பெற்றது.
வெள்ளைத்துணிப்
போராட்டத்தை பிரதான முஸ்லீம் கட்சிகள் வெளிப்படையாக போராட்டக் களத்தில்
இல்லை என்ற விமர்சனம் செயற்பாட்டார்களால் முன்வைக்கப்பட்டது. இந்தப்
போராட்டத்தை சாதாரண மட்டத்தில் இருந்து வெளிப்பட்ட வேளையில் அரசியல்வாதிகள்
நேரடியாகவே அச்சுறுத்தல், இது தேவையில்லாத போராட்டம், அபிவிருத்தி
முக்கியம் என்ற கருத்தை முன்வைத்ததாக செயற்பாட்டாளர்கள் குற்றம்
சுமத்தினார்கள். (ஊடறு செயற்பாட்டார்கள் நடத்திய Zoom meeting) அரசியல்
உரிமை இல்லாத அபிவிருத்தி எதற்கு என்றும் அந்தச் செயற்பாட்டார்கள் கேள்வி
கேட்டார்கள். இதில் அவர்கள் சொன்ன முக்கியவிடயம் என்னவெனில் தம்முடன்
மற்றைய மதத்தவர்களே இணைந்து கொண்டதாகவும், ஆதரவு தருவதாகவும் கூறினர்.
அரசியல்
கட்சிகளின் நிலைப்பாடு இணக்க அரசியல் என்பது இலக்கு என்பதை மீளவும்
அரசியல்வாதிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். சாதாரண மக்களின் போராட்டத்தை
அறுவடை செய்ய பல நாட்கள் கழிந்த பின்னர் ஒப்புக்கு பதாதைகளை கொண்டு
தெருவில் இறங்கியதாக விமர்சிக்கப்பட்டார்கள்.
வர்க்கச்
சமூகத்தில் மதம் பிரதான முரண்பாடாக இருப்பதில்லை. பொருளாதாரச் சுரண்டல்,
தேசிய இன ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை என விரிந்துள்ளது. இந்த நிலையில்
முரண்பாடுகளை களைவது என்பது அந்தக் கட்டத்திற்கு தேவையான இங்கு மதம்
அரசியலுக்குள் நுழைகின்றது.
1.கத்தோலிக்கள்- புரட்டஸ்தாந்து
2. இஸ்லாமியர்கள்
3. சைவர்கள் (சிறுவர்களை எரிப்பதில்லை)
6.1 ஆழிப் பேரலை- சுனாமி
இதனால்
தான் வெள்ளை துணி கட்டுவது பல மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கு ஆழிப்
பேரலைகாலத்தில் மனிதர்களின் இயல்பாக உள்ள ஜீவகாரூண்யத்தைப் பற்றி நிறையவே
பேசப்பட்டது. அப்போதும் மக்களிடையே ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி
அரசியல்வாதிகள், முற்போக்காளர்கள் என எழுதித் தள்ளினார்கள். அப்போ நானும்
பெரிய கட்டுரை எழுதியுள்ளேன். அன்று ஒரு பொது உளவியலை எல்லா மக்களிடமும்
ஏற்படுத்தியதே. தென்கிழக்காசியாவில் இறப்பு- பிறப்பு என்பது முக்கிய
சடங்காக இருந்து வந்துள்ளது. இது தொல்பழங்காலமாக தொடர்ந்து வரும் தொடர்ச்சி
என்பதால் இழப்பின் வேளையில் தன்னியல்பாக மனிதர்களின் மனது இரக்க
உணர்விற்கு வந்துவிடுகின்றன. ஆனால் அந்த மாற்றம் என்பது எவ்விதத்திலும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடவில்லை. ஆழிப் பேரலையால் இறந்தவர்கள்,
சொத்துக்களை இழந்தவர்கள் வெறும் சொற்பம்.
ஆழிப் பேரலை மொத்தமாக (230,000 lives in a matter of hours.) வும், இலங்கையில் 30000 பேரைக் காவு கொண்டது.
2004-2009
சரியாக நான்கரை வருடத்தினுள் 149000 மக்கள் முள்ளிவாய்க்காலில்
கொல்லப்பட்டார்கள். இதை இனவழிப்பா, போர்க்குற்றமா என்று விவாதித்துக்
கொண்டிருக்கின்றார்கள். யுத்த முடிவு எதனைக் காட்டியது. சிங்கள பௌத்த
பேரினவாதக் கட்டமைப்பு வெற்றிச் சின்னங்களை தமிழர் தேசமெங்கும் அமைத்துக்
கொண்டது. பொங்கல் பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
மதம்
என்பது அரசியல் இருந்து தனிப்பட்ட விடயமாக இல்லை என்பது தான் தற்போதையை
நிலை. சிங்கள தேசம் மதத்தை அரசியலில் இருந்து பிரிக்கத் தயாராக இல்லை.
இன்று தொற்றுக் காலத்தில் பிணங்களை எரிப்பது தானத மதச் சிறுபான்மையினரின்
உள்மனதை தாக்கியுள்ளது. மதம் எப்பொழுதும் உயிர்த்துடிப்புள்ள விடயமாகவே
இருக்கும். ஒரு சமூகத்தின் உலகக் கண்ணோட்டம் முற்போக்கானதாக இருப்பதில்லை.
மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தாலும் பழைய சிந்தனை முறை தொடர்வதையும்
கவனத்தில் கொள்ளலாம். கத்தோலிக்கர்கள் இங்கு வ்நத பின்னர் கோவில்கள்
கட்டவேண்டிய தேவையில்லை. ஏற்கனவே இருக்கும் உட்கட்டுமானங்கள் அவர்களை
உள்வாங்கி விடுகின்றன.
பிறமதத்தவர்கள் தமக்கான
கோவில்கள், பள்ளிவாசல்களை கட்டுகின்றார்கள். இது மேற்கில் மதத்திற்கு
அப்பால் சிந்திப்பவர்களை உருவாக்கியுள்ள நிலையில் இருந்து மாறுபட்டதாக
இருக்கின்றது.
பழைய சிந்தனை முறையில்‘‘ அடிமைப்பட்ட
மக்கள் தங்கள் தங்கள் மனிதத் தன்மையை முற்றிலும் மறந்து, நாகரீகமான
வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற எண்ணம் சிறிதுமின்றி உழலச் செய்யும் வழியே
சமயமாகும்‘‘ (மதமாகும்) என்றும் கூறியுள்ளார். (18) சுரண்டப்படுவதை அரசியல்
ரீதியாக உணர்வினைப் பெறாது போலியுணர்வில் மூழ்கியிருப்பதை குறிப்பிட
அபினுக்கு சமப்படுத்துகின்றார்.
பிணங்களின்
எரிப்பிற்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் இல்லை. அதே போல புதைப்பதனால் எவ்வித
தீங்கும் இல்லை என்பதற்கு விஞ்ஞான முடிவுகள் இல்லை. கிருமியானது
உருமாற்றமடைந்த நிலையில் தான் புதிய வகையானதாக தொற்றுப் பரவுகின்றது.
இதற்கான விஞ்ஞான முடிவுகள் உடனடியாக கிடைத்துவிடாது. 10 மாதத்தினுள்ளேயே
மறுவார்ப்பாக இங்கிலாந்தில் பரவுகின்றது. மரபணுமாற்றம் பற்றியும்
ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதில்
இஸ்லாமியரின், கிறிஸ்தவர்களின் மதநம்பிக்கையை மீறிய செயல் என்பது. சமூக
வழமைக்கு மாற்றாக வெளியில் இருந்து திணிக்கப்பட்ட முறை தாக்கத்தை
ஏற்படுத்துகின்றது. இது பழைய விடயங்களை மறைத்து உளபோக்கில் மாற்றத்தை
ஏற்படுத்துகின்றது. இந்தப் புள்ளியில் தான் இணைகின்றார்கள். ஆனால் இவர்கள்
பொருளாதார, அரசியல் அதிகாரம் பற்றிய புரிதலில் இருந்து இணையவில்லை.
ஒடுக்கப்படும்
சமூகங்கள் இணைத்து வேலை செய்வது முக்கியமே. ஆனால் இது மதம் என்ற
அடையாளத்தினுள் சுருக்கிவிடக் கூடாது. தமிழ் தேசிய இனத்தின் அங்கமாக
வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் உள்ள இஸ்லாமிய மதச் சிறுபான்மையினர்
தமிழ் தேசிய இனத்துடன் போராட்டத்தில் ஐக்கியமாவது அவசியமே. முதலாளித்துச
சனநாயகத்தை ஏற்றுக் இருவரும் பயணிப்பது எதிர் காலத்திற்கு அவசியமே.
முஸ்லீம்
அடையாள அரசியல் என்பது வணிக, மேட்டுக்குடி வர்க்கத்தினரால் வழிநடத்தப்
படுவர்கள். இணக்க அரசியல்வாதிகளை முஸ்லீம் சமூகம் இனம் கண்டுள்ளது. ஆனால்
அரசியல் பொருளாதாரம் சார்ந்த அரசியல் வளர்த்தெடுக்கப்படவில்லை.
இங்கு
தொல்பழங்காலமாக மதமாறிய வடக்கு கிழக்கு இஸ்லாமியர்களும், தமிழ் மக்களும்
மதத்தினை ஒதுக்கிவைத்து விட்டு அரசியலில் மதத்தை இணைக்காது ஐக்கியமாக வேலை
செய்ய முயற்சி எடுக்க வேண்டும். மதம் கட்சி விடயத்தில் தனிப்பட்ட விடயமாகக்
கொள்ள வேண்டும். மதங்கள் அரசியல் பொருளாதாரப் போராட்டத்திற்கு இடையூறாக
இல்லாத வகையில் இருக்க வேண்டும்.
இறுதியாக
இலங்கை
இரண்டு தேசங்களைக் கொண்டதாகும். தமிழர் தேசத்தில் உள்ள மக்களின் தேவைகள்
நலன்கள் என்பதும் சிங்கள தேசத்தில் வாழ்கின்ற மதச் சிறுபான்மை, மலைய தேசிய
இனத்தின் தேவைகள் மாறுபட்டவை. ஒரு போராட்டத்தில் ஐக்கிய முன்னணி வேலை முறை
என்பது ஒன்று. அதேவேளை அரசியல் சார்ந்த விடயங்கள் வேறுபடும். மேல் உள்ள
எழுத்துக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் ஈழ தேசத்தின்
விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் அடையாளம் (symbols/totem) என்பது பண்டைய
காலத்தின் தொடர்ச்சி. தனிமனிதர்களின் அடையாளங்களை விட ஒரு மக்கள்
கூட்டத்தின் அடையாளம் முக்கியமானது. தனிநபர்கள் எங்கும் உங்கள் நினைவுகளை
நிறுவுங்கள். வரலாறு எங்கும் தனிநபர்களும் நடுகற்கள் ஊடாக நினைவு
கொள்ளப்பட்டே வந்துள்ளார்கள். இங்கு தனிநபர் இருப்பு மறுக்கவில்லை.
விடுதலை
அமைப்பைப் பற்றிய விமர்சனங்களை தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும்
விமர்சனத்திற்கும், சுய ஆய்விற்கும் உட்பட்டவை தான். இதனை இங்கு எவரும்
மறுக்கவில்லை. மக்கள் கூட்டத்தை விடுத்து தாராளவாதம் பேசுவது
வேடிக்கையாகும். ஒரு மக்கள் கூட்டத்தை தனிநபர்களுக்கு இணையாக நிறுத்தி
அரசியல் நீக்கம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனிதர்களின் கழிவிரக்கம்
என்பது நீண்ட காலத்திற்கு நிலைக்கப் போவதில்லை.
தமிழ்
பேசும் சக்திகளிடையே, பல்கலைக்கழகத்தில் பன்முக சிந்தனைப் போக்கு உள்ளது.
இங்கு அபாயச் சங்கு என்பது தமிழ் தேசத்தின் ஆட்சியுரிமையை பேசுபவர்களையும்,
தேச சிந்தனை நீக்கம் பற்றிய தாக்குதலே அடிப்படையாக இருக்கின்றது.
பிகு-யாழ்
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரால் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்
நினைவுத்தூபி இருந்த இடத்தில் மீண்டும் கட்டப்படப்போவது சமாதானத்தூபியாம்
என துணைவேந்தர் பேட்டியளித்துள்ளார்.
https://www.history.com/.../deadliest-tsunami-2004-indian...
No comments:
Post a Comment