புதிய அதிபர்!!!
NPP/JVP இணை தூக்கித் திரியும் தீடீர் புரட்சியாளர்கள், ஜீவகாரூண்ய வாதிகள், NPP/JVP இன் ஆலோசகர்கள் என்று உருவாகியுள்ளார்கள். இவர்களுக்கு இடதுசாரிக் கட்சியின் வடிவம், எடுக்கப்படும் தீர்மானங்கள், கொள்கை வரைவுகள், உறுப்பினர் விதி பற்றிய விடயங்களை அறிந்தவர்களா என்பது சந்தேகமே. இந்தப் புரட்சியாளர்கள், ஆலோசகர்கள், ஜீவகாரூண்யவாதிகள் போன்றோர் NPP/JVP அதீத நம்பிக்கை வைக்கும்படி இரஞ்சுகின்றார்கள். சிங்கள வேளாளியத்தை (கொவிகம) பாதுகாத்து பௌத்த மதபீடங்களை மரபின் அடிப்படையில் வணங்கி, வாழ்த்துப் பெற்ற இன்னொரு அடிப்படைவாதி என்பதில் சந்தேகமில்லை.
2022 இல் இடம் பெற்ற மக்கள் எழுச்சி, சனாதிபதி ரணிலின் பதவியேற்பிற்குப் பின்னால் தேர்தல் ஊடாக புதிய சனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு பிரிவினர்கள் அதிபர் மாற்றத்தை இட்டு கிலாகிக்கின்றார்கள். அவர்கள் கிலாகிப்பதற்கு உரிமை உண்டு. திரிபுவாதம், சீர்திருத்தவாதம், கலைப்புவாதம், சாகசவாதம், கட்டமைப்பில் சீர்திருத்தவாதம், முறைமை மாற்றம் இவற்றிற்குப் பின்னால் உள்ள அரசியலை உள்ளவாங்கிக் கொள்ளாது பலர் அங்குமிங்கும் ஓடுகின்றார்கள். இந்தப் போக்கை கணிப்பீடு செய்ய மார்க்ஸ்- லெனின்- மாவோ வழியில் தான் சாத்தியமாகும்.
2022 இல் போராட்டக்கார்கள் முதல் வெளியிடப்பட்ட 6 அம்சம் அல்லது பின்னர் வெளியிட்ட 25 கோரிக்கைளில் தமிழ் தேச மக்களின் அரசியல் நலன் பற்றிய விடயங்களை கவனத்தில் கொண்டதாக இல்லை. ஆனால் சிங்கள தேசத்திற்காக சீர்திருத்தக் கோரிக்கைகள் இருக்கின்றன. அந்த சீர்திருத்தம் பதிலாக முதலாளித்துவ சமூக கொள்கையை பின்பற்றுவதைக் குறிக்கிறது. இதனை விட வேறு அங்கு இல்லை. ஏற்கனவே சிங்கள் தேசம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள், சான்றிதல் எடுக்க அறிவுறுத்துகின்றது, இழப்பீடு பெறும்படி வலியுறுத்துகின்றது.
காலிமுகத்திடலில் எவ்வகையான முழக்கங்களை வைப்பது என்பது பற்றிய உரையாடலில் கூட தமிழ் மக்களின் தீவிர முழக்கங்கள், முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை போன்ற பதங்கள் தவிர்க்கப்பட்டதும் இப்போ 25 அம்சத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், விசாரணை என ஒப்பிற்கு முழக்கம் வைத்தார்கள்.
தேர்தலின் ஊடாக மக்களை அரசியல் கற்றுக் கொடுப்பதற்காக பயன்படுத்த முடியும். முகமாற்றம் ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது ஏற்படுவதாகும். ஆனால் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை.
அதிபர் மாற்றத்தின் பின்னர் இலங்கை சிவந்தது. "இடது பாதையில் இலங்கை” "இலங்கையில் கம்யூனிஸ்ட் ஆட்சி" என்று பல தோழர்கள் பூரிப்படைகிறார்கள். இலங்கையில் சிகப்பு அலை வீசியுள்ளது, வங்கக் கடலில் எழுந்த செங்கடல் என்று பேசுகின்றார்கள். மேலும் தூய இடதுசாரிகள் எங்கு இருக்கின்றார்கள் என்றும் கேட்கின்றார்கள்.
முன்னர் மகிந்த, கோத்தபாயா முற்போக்குச் சக்தி, பயங்கரவாதத்தை வீழ்த்தியவர் என்றவர்கள், இன்று அனுரவிற்குப் பின்னால் நிற்கின்றார்கள். இதில் முன்னைய இயக்கத்தை சேர்ந்தவர்கள், தம்மை இடதுசாரிகள் என்று கருதுபவர்கள், புலியெதிர்ப்பாளர்கள், மற்றவர்களுடன் பிரச்சனை வேண்டாம் என ஒதுங்கி வாழும் பிரிவினரிடையே இந்த அதிபர் மாற்றம் ஆகர்சத்தை ஏற்பத்தி உள்ளது



**இவற்றை விட அரசியல் ரீதியாக முரண்படுபவர்கள், கோட்பாட்டு ரீதியான மாறுபடுபவர்கள் என்று பல கூறுகள் விமர்சன ரீதியாக அணுகுகின்றார்கள்.
**Npp க்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை கொடுத்து மக்கள் இந்த மாற்றத்தை முயற்சித்துப் பார்க்க அவகாசம் வழங்காவிடில் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பத்தை வரலாற்றில் இழந்தவராவோம்.
**தமிழனை தமிழன் ஒடுக்குகின்ற சிந்தனை பற்றிப் பேசப்படுகின்றது போல சிங்கள ”கொவிகம” (சிங்கள வேளாளியம் பற்றிப் பேசுவது இல்லை.
**ஆனால் எதிர் நோக்க இருக்கும் அரசியல் நெருக்கடிகள் சர்வசாதாணமாக கடந்துவிட முடியாது. அதிபர் மாற்றம் என்பது ஒன்று அதே வேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற வேண்டும்.
**சுயநிர்ணயம் என்ன என்பது பற்றி இடதுசாரி என்பவர்களுக்கு முழுமையான புரிதல் இல்லை. மார்க்சிய வழியில் சிந்திக்க, செயற்பட முடியவில்லை என்பதை தான் உரையாடல் ஊடாக அறிய முடிகின்றது.
**பண்டம், உற்பத்தி, விநியோகம் என்பது தேசங்கள், தேசிய இனங்களுக்கு இடையே ஏற்படுவது என்பது ஏதோ அயலவனுடன் பங்குண்டு வாழ், அன்பைச் செலுத்து என்பது போன்று பார்க்கப்படுகின்றது.
**தமிழ் அமைப்புகள் செய்யாத கொலைகளையும் தவறுகளையுமா JVP செய்து விட்டது என்றெல்லாம் நியாயத்தராசு தூக்கி திரிய வேண்டாம்
பொதுப்புத்தியின் அடிப்படையில் எழும் கருத்துக்கள் நல்விருப்புகள், நல்லெண்ணங்கள், ஜீவகாரூண்யம் என்ற அடிப்படையில் அரசியல் பொருளாதாரப் போக்கை அணுகிட முடியாது. ஒரு சமூகத்தில் ஒரு சமூகப் பிரிவு என்பது அது உள்ள சமூக நிலையில் இருந்து மாறிக் கொண்டு செல்கின்றது. அவ்வாறு மாறிக் கொண்டு செல்கின்ற சமூகம் என்பது வெவ்வேறு சிக்கலை எதிர்க் கொண்டு தான் இருக்கும். அனுபவாத கோட்பாடுகள் சமூகத்திற்கானதாக இருப்பதில்லை. மாறாக அழுகிய சமூகத்தை தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட துணைசெய்கின்றது.
சமூகக் கட்டத்தை கடப்பதற்கான கோட்பாடு பற்றிய நிலைப்பாடுகளில் யார் எவ்வாறு நிலைப்பாடு எடுகின்றார்கள் என்பதே பிரச்சனையாகும். சமூகக் கட்டம் பற்றிய தெளிவை கொண்டிருந்தால் மாத்திரமே முன்னேறிட முடியும்.தேர்தல் என்பது முதலாளித்துவ சனநாயக வடிவமாகும். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திம் என்ற முதலாளித்துவ ஜனநாயக வகையாகும். அதற்கு அப்பாலும் செல்ல வேண்டியது அனைத்துச் சமூகத்தின் நலனாக இருக்கின்றது. அடுத்த கட்டத்திற்கான சமூகக் கட்டம் என்பது அரசியல் பொருளாதார முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு செல்வதாகும். அடுத்த கட்டம் என்பது வெவ்வேறு முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்வதாகும். ஆகவே முன்றேறிச் செல்வது என்பது தன்னியல்பான அமைப்பு வடிவம், செயற்பாடுகளால் முழுமையாக வெற்றி கொள்ள முடியாது.
( இராணுவ மருத்துவர் பதவி ஏற்ற பின்னர்)
Populism- கவற்சிவாதம்
முறைமை மாற்றம் என்பது உடனடியாக ஏற்பட்டுவிடுவதில்லை. தேர்தலுக்கு முன்னர் பின்வரும் இலக்கு முன்வைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் தேர்தல் வெற்றி கொண்டதாக காட்டப்படுகின்றது.
**அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் , ஊழல் மற்றும் அதிகாரிகள் உட்பட இராசபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயற்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
***பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் 6 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுத்தல்
***மக்கள் சபை அமைக்க வேண்டும்.
நாடாளுமன்ற அதிகாரத்துக்கு நிகராக நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்கள் சபை அமைக்கப்பட்டு, தற்காலிக அரசில் மக்கள் அமைக்கப்பட்டு, தற்காலிக அரசில் மக்கள் சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், கலைஞர்கள், மாணர்வர்கள், தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள் உள்ளடங்கிய சபை ஒன்றிற்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.”
Anna Hazare (ஹசாரே) போன்ற சாகசவாதம் ஊழலை ஒழிக்க முடியும் என்ற போராட்டம் நடத்தியதை அறியப்படுகின்றார். அவர்களால் ஒரு மாநிலத்தைக் கூட முழுமையாக மாற்றமடைய வைக்க முடியவில்லை.
ஆட்சிக்கு வந்த பின்னர். ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வரும், 800க்கும் அதிகமான வாகனங்கள் இப்போது காலி முகத்திடலிலும் இலங்கை மன்றக் கல்லூரி வளாகத்திலும் காட்சிப் படுத்தப்படுகின்றன. தென் இலங்கையின் சாதாரண மக்கள், அவற்றை பெரு மகிழ்வோடு காண்கிறார்கள். தங்களின் வரிப்பணத்தில் சொகுசு அனுபவித்தவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டதாக மகிழ்கின்றார்கள். ஆனால் அனைத்து வாகனமும் அரசாங்க திணைக்கள தேவைக்காக கொடுக்கப்பட்டவையும் அடங்கும். இவ்வாறான ஊதாரித் தனம் தொடரவேண்டுமா என்றால் இல்லை. இவை அவசியமற்ற செலவே.
இதே போல‘சாராய லைசன்ஸ்’ வாங்கியோர் விபரங்களையும் வெளியிடுவார்கள். அதன்மூலம், ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் நேரடியாக தோலுரிப்பார் எனவும் எதிர்பார்ப்பை உண்டாக்கினார்கள்.
அதிகார வர்க்க எண்ணப்பாடாது தனது சேவை காலத்தினை எவ்வாறு கடத்திச் செல்வது, இருப்பை நிலைநிறுத்திக் கொள்வது, எவ்வளவு காசை உழைப்பது அல்லது சேமிப்பது என்றும் தனது சொத்திருப்பை அதிகப்படுத்திக் கொள்வதாகவே இருக்கின்றது. இந்த மனப்பாங்கு தேர்தல் அரசியல்வாதிகளிடமும் உள்ளது.

சமூக அமைப்பு
தோல்வி அடைந்த சிங்கள தேசத்திற்காக விடிவு என்பது இலகுவாக அமையப் போவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய இனப் பிரச்சனையே பிரதான பிரச்சனை. பொருளாதார நெருக்கடி அதனை மாற்றிவிடுவதில்லை. மாறான தமிழ் தேசத்தின் நெருக்கடிக்கான தீர்வே. சிங்கள மக்களையும் விடிவிற்கு கொண்டு வரும்.
1. கடன் கொடுத்த அன்னியர்களின் கடனை இல்லாமல் ஆக்குதல்
2. அரச நிறுவனத்தை கையகப்படுத்தலே மாற்றத்தைக் கொடுக்கும். இவற்றை முன்னெடுப்பதற்கு சாத்தியம் இல்லை.
3. தேசிய இனச் சிக்கல்
இவை எதுவும் நடந்துவிடப் போவதில்லை. உலகில் இன்று சீர்திருத்தப் போக்கை முன்வைத்தாலும் மூட அவைகளை நிறைவேற்ற முடியுமா என்பதில் சந்தேகமே. பனிப் போர்க் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஏகாதிபத்தியத் தலையீடு இன்றும் மென் வடிவத்தில் உள்ளது. ஆனால் அது தேவையானபோது யுத்தமூலம் தீர்க்கப்பட்டே வந்துள்ளது.
வெனிசுவேலா, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தின் ஊடாக ஆட்சி மாறப் பட்டு வந்துள்ளது. அந்தக் காலத்திலும் அந்த நாடுகளுக்கு அண்மையில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதாரத் தடைவிதித்தது. அதாவது சமூகநலக் கொடுப்பனவு, (சமூக ஜனநாயக பாணியிலான ) சீர்திருத்தங்களைக் கூட அது இடையூறு செய்தது. ஏகாதிபத்தியக் கொள்கையானது ஏகபோகம் தோற்றுவிக்கப்படல், ஒன்றிணைந்த நிறுவனக் கட்டமைப்பு பொருள் உற்பத்தியை ஒன்று குவிக்கின்றன, வங்கிகள் முறை வலுவாக கட்டமைக்கப்பட்டது, மூலப் பொருட்களுக்கான கட்டுபாட்டைக் கொண்டது, சந்தையைப் பிரித்தல், தேவையான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல் ஆகும். இவற்றிற்கு அப்பால் சுதந்திரமான அரசுகளை அவை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டே இருக்கும்.
அரசு என்பது இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை, நாடாளுமன்றம், திணைக்களங்கள் மற்றும் காவல்துறை போன்ற நிறுவனங்களைக் கொண்டதாகும். 1871 பரீஸ் கம்யூன் நடைபெற்ற புரட்சியின் பின்னர். பழைய நிறுவனக் கட்டமைப்புகள் அவ்வாறு தொடர்வது புரட்சியைக் காப்பாற்றாது என்று நடைமுறை ரீதியாக முடிவிற்கு வந்தார்கள். எனிலும் 1960களில் தேர்தல் மூலமாக புரட்சியைச் சாதிக்கலாம் என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது., 1973 சிலிநாட்டில் சல்வடோர் அலன்டே ஆட்சியைக் கைப் பற்றினார். ஆனாலும் அவரின் ஆட்சி நீடிக்க முடியாது ஏகாதிபத்தியங்களின் துணையுடன் ஆட்சிக் கவிழ்ப்புச் செய்யப்பட்டது.
நேப்பாள் நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டது. அதையும் இந்தியாவின் அழுத்தத்தின் ஊடாக புரட்சியை சிதைத்தது. இந்த வரலாறுத் தரவுகள் ஒரு புறமிருக்க” ஜேவிபி தலைவர்கள் இந்தியா வந்து மோடி அரசுடனும் இந்திய தலைவர்கள் உடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு உள்ளனர்.
இலங்கையில் IMF செயல்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமையை ஜேவிபியை காரணம் காட்டி குறைக்க இலங்கை ஆளும் வர்க்கம் முயல்கிறது போலிருக்கிறது. இலங்கையின் பழைய ஆளும் வர்க்கம் மக்களை திரட்டி imf ஐ வற்புறுத்தும் திறனை இழந்து விட்டது.
வழக்கம் போல தமிழ் தேசிய வாதம், கம்யுனிசம் வந்து விடக் கூடாது என்று இந்தியா ஜெவிபியை கட்டித் தழுவிக் கொள்கிறது.
நேபால், வங்க தேசம், இலங்கை எல்லாமே IMF வகுத்த எல்லைக்குள் தான் கம்யூனிசமும், அரசியல் இஸ்லாமும் பேசுகின்றன. பாட்டாளி வர்க்க கட்சியாக இருந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சிக்கே இந்த நிலை. ஜேவிபி அப்படிப்பட்ட கட்சியும் இல்லை.” (இரா. முருகவேள்- எழுத்தாளர்)
நாடாளுமன்றத்தை மேடையாக பயன்படுத்துதல், பொருளாதார அரசியல் வேலைநிறுத்தங்கள், தொழிற் சங்கங்களை அமைப்பாக்கி தொழிலாளர்களுக்கு கல்வி புகட்டுதல் என்ற நீண்ட சட்டரீதியான போராட்டமே ஆகும். அங்கே அமைப்பு வடிவம் என்னவெனில் சட்டரீதியானதுடன் போராட்ட வடிவமும் குருதியற்றதும் (இராணுவம் சாராத) ஆகும். தேர்தல் பாதை என்பது மட்டுப்படுத்தப்பட்டதே. ஏனெனில் பழைய நிர்வனக் கட்டமைப்பு, அதிகார வர்க்கம், பழைய நிர்வாக அறநெறி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பிற நாட்டு அனுபவம்
1990 களின் பின்னராக காலங்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தங்கள், பொருளாதார தடைகள், முதலாளித்துவக் கட்சிகளை இல்லாது ஒழித்தல் என்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சோவியத் காலத்து அரசியல் என்பது ஏதேர்ச்சாதிகாரத்திற்கு கடிவாளம் இருந்தது. ஆனால் ஒற்றைத் துருவ காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் என்பது இன்று இறுக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பல்துருவப் போக்கு வளர்ந்து வருகின்றது.
இந்தக் காலத்தில் மார்க்சியத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது பற்றி பிரஞ்ஞை அற்றவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே அகிலத்தின் சிதைவு, அரசியல் பாதை மாறல் என்ற வரலாறு இருக்கின்றது. ஒரு உலகப் பரப்பில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் இன்னொரு பரப்பில் இன்னும் முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. அதே போல நாட்டரசுகளை உருவாக்கிக் கொண்ட நாடுகளும் மறுகொலனித்துவ ஆட்சியாளர்களைக் உருவாக்கிக் கொண்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிகளை இல்லாதாக்கியது. பாத் கட்சியின் எச்சத்தைக் கூட அழிக்க இன்னுவரை முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. இறுதியாக எச்சியிருப்பது சிரிய நாட்டின் ஆட்சியாளர்கள்.
வெனிசுவேலா
1998களில் ஆட்சிக்கு வந்த வெனிசுவேலா அதிபர் சாவேஸ் 1998ல் புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினார். எண்ணை வளம் கொண்ட நாடானது அதில் இருந்து மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தியது.
அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின்போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.
மக்கள் நலன் அரசை பேணுவதற்கு அவசியமான பண்டங்கள் கிடைப்பதற்கு எதிராக பொருளாதாரத் தடையினால் ஏற்படுத்தினர். 2002ல் இராணுவ கலகம், 2007ல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கருத்துக் கணிப்பில் தோல்வி, தொடர்ச்சியான எதிர்பிரச்சாரம் என்று பல வகையான தாக்குதல்களை வெனிசுவேலாவில் இடம்பெற்றது.
நாட்டின் மொத்த மூலதனத்தின் விருத்திக்கு வீட்டுப் பெண்கள், சிறுமியர் பங்களிப்பதைப் போன்று குடும்பத்தின் தேவையையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டுப் பெறுமானத்தின் பங்களிப்பின் முக்கியத்தை உணர்ந்த காரணத்தினால் வெனிசுவேலா நாட்டில் வீட்டுப் பெண்களுக்கு சம்பளம் கொடுக்கும் திட்டத்தினை உருவாக்கியுள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் பயன்பாட்டுப் பெருமானத்தை உருவாக்கிக் கொள்கின்ற காரணத்தினால் நாட்டின் மூலதனத்தை உருவாக்குகின்றதை அங்கீகரித்தலும், அவர்களுக்கு அரசு கொடுக்கும் சன்மானமாக இன்று வெனிசுவேலா ஊழியம் வழக்குதலை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு வீட்டுப் பெண்களுக்கு ஊதியம் வழங்குவதை முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் ஊதியம் கொடுக்க வேண்டுமென்றால் வரியினை அறவிட வேண்டும். இதற்கு உயர் மத்திய வர்க்கமும் கூட எதிரியாக இருக்கும். பெரும் எதிர்ப்புக்கும் மத்தியில் இவ்வாறான சமூக வளர்ச்சிக்கு உதவக் கூடிய திட்டத்தினை வெனிசுவேலா அரசு உருவாக்கியிருக்கின்றது. “ஒவ்வொரு சரக்கின் பயன்-மதிப்பிலும். பயனுள்ள உழைப்பு, அதாவது ஒரு திட்டமான வகையைச் சேர்ந்ததும் திட்டமான ஒரு நோக்கத்துடன் பிரயோகிக்கப்படுவதுமான உற்பத்தி நடவடிக்கை அடங்கியுள்ளது. பயன்-மதிப்புகள். அவற்றில் உருக்கொண்டுள்ள பயனுள்ள உழைப்பு அவை ஒவ்வொன்றிலும் பண்பு வழியில் வேறுபட்டதாக இல்லையேல். சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்ள முடியாது.
உபயோகம் அல்லது நுகர்வின் மூலமே பயன்-மதிப்புகள் மெய்ம்மையாகின்றன. அவை செல்வம் அனைத்தின் சாரமாகவும் அமைகின்றன-அந்தச் செல்வத்தின் சமுதாய வடிவம் எதுவானாலும் சரி. நாம் பரிசீலிக்கப் போகும் சமுதாய வடிவத்தில் அவை பரிவர்த்தனை-மதிப்பின் (exchange-value) பொருளாயத சேமிப்பங்களாகவும் உள்ளன" வெனிசுவேலா உலகில் 4வது எண்ணை வளம் கொண்ட நாடாகும். இவ்வாறு வளம் கொண்ட நாடே பொருளாதாரத் தடையால் அல்லலுக்கு உட்பட்டது.
இவ்வாறு கொடுப்பனவு கொடுப்பதன் ஊடாக குடும்பத்தின் பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற சுமையை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த நிதியின் ஊடாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்க முடியும். இதன் ஊடாக சிறுவயது முதல் எழுத்தறிவு உள்ள சமூகமாக உருவாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு பிள்ளைகளைப் படிப்பிக்க வைப்பதன் ஊடாக சிறுவர் உழைப்பை இல்லாதாக்க முடிந்தது.
சமூகமாற்றத்தின் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்றதாத காரணத்தினால் தொடர்ச்சியாக நாட்டில் இருக்கும் பழைமைவாதிகள், நிலபிரபுக்கள், அதிகார வர்க்கத்தவர்கள், ஏகாதிபத்திய அடிவருடிகளை சமூகத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. குறைந்த பட்சம் ஐரோப்பிய வகையினான சமூக நல அரசை நிலை நிறுத்துவதற்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் தொடர்ச்சியாக செயற்படுகின்றது. சில நோர்வே இடதுசாரிகள் சுயநிர்ணயத்தை விட மனிதவுரிமை அவசியமானது என்ற நிலையில் கூட வந்துள்ளார்கள்.
உக்கிரேன் யுத்தத்தின் பின்னர் பொருளாதாரத் தடையில் சிறு தளர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னைய அதிபர் சாவேஸ் புற்றுநோய் ஏற்படுத்தி ஏகாதிபத்தியம் கொலை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது.

கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs)
ஏகாதிபத்தியங்களின் அரசியல் பொருளாதார நகர்வு என்பது திட்டமிட்டு நடைபெறுகின்றது. அதற்கு ஏற்பவே மற்றைய நாடுகளை தன் அரசியல், பொருளாதார, இராணுவப் பிடிக்குள் வைத்துக் கொள்கின்றது. ஊழலை எதிர்ப்பது என்று கவர்ச்சிவாதப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதிலும் நீதித்துறையில் லசந்த கொலை, Siraz Dhajudeen என்ற விளையாட்டு வீரனின் கொலை என்பது கடற்படை வீரர் Rogitha என்ற இராசபக்சவின் இரண்டாவது மகன் சம்பந்தப்பட்டதாகும். இவைகள் எல்லாம் தூசி தட்டப்படுமா என்பதும் கேள்விக்குறியாகும்.
அரசியல் நகர்வுகள் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றது. இங்கு கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு ஒப்ப குறைந்த வட்டியின் கடன் கொடுப்பது, வறுமைக்கோட்டைக் குறைப்பது, சந்தைப் பொருளாதாரம், சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மாத்திரம் அல்ல. சிந்தனையை ஓட்டத்தினை அதற்கொப்ப வளர்த்தெடுப்பதும் ஆகும். இவ்வாறான மனிதஉரிமை மீறல் தொடர்பான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்தம் வேலைகளையே வல்லரசுகள் செய்கின்றது.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு பற்பல நிறுவனங்கள் பல்வேறு வகையான வேலைப்பிரிவினையை கொண்டு செயற்படுகின்றார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அதன் பங்கிற்கு செயலாற்றுகின்றன. WTO/ GATT, World Finance Corporation, hemisphere corporation சமூகநலத் திட்டங்களை இவர்களை மீறிச் செய்திட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
- Sri Lanka external debt for 2022 was $58,712,654,401, a 0.03% decline from 2021.
- Sri Lanka external debt for 2021 was $58,732,518,598, a 3.27% increase from 2020.
- Sri Lanka external debt for 2020 was $56,874,445,630, a 1.35% increase from 2019.
- Sri Lanka external debt for 2019 was $56,117,855,647, a 6.04% increase from 2018
Sri Lanka’s total debt has exceeded $83 billion, of which $41.5 billion is foreign and $42.1 billion is domestic.
கடன் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் அன்னியச் செலவாணியில் $- டொலர் சேகரிக்க வேண்டியதேவை உள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதும் சவாலே. பணவீக்கம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் பெரும் பிரச்சனையே.
நிதிமூலதனம் முன்வைக்கும் சீராள முதலாளித்துவ வளர்ச்சி (சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்) அடிப்படையினாதாகும். இது நாடாளுமன்ற தேர்தலில் மேல் கட்டப்படுவதாகும். இவர்கள் முன்வைக்கும் ஊழல் அற்ற ஆட்சி, நிர்வாகத்தில் சீர்திருத்தம், அரச உத்தியோகத்தர்களை குறைக்கும் படியும் கோருகின்றது. அரச உத்தியோகத்தர்கள் என்கின்ற போது இராணுவம் அளவுக்கதிகமாக இருக்கின்றார்கள். அவர்களைக் குறைப்பதற்கு தயாரா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.
மானியம் வழங்குவது, சேவைகளுக்கானவைகளை பண வருவாயை ஏற்படுத்த அது நிர்ப்பந்திக்கும். ஏற்கனவே தனியார் கிணறு வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு வரி கட்டவேண்டும். சீழ் முதலாளித்துவத்தில் ஊழல், இலஞ்சம் என்பது தவிர்க்க முடியாத போக்காகும். இது அதிகார வர்க்கம் இடம் கொடுக்குமா என்பதும் சவாலே.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பினை பாதுகாப்பதும் அதன் பொருட்டான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வது இதன் அடிப்படையாகும். முதலாளித்துவத்தினை பாதுகாக்கும் பொருட்டு உலக வர்த்தக வலையத்தினால் கட்டமைப்பில் சீரமைப்புத் திட்ட (structural adjustment programs) நிகழ்ச்சிக்கு ஒப்ப வேலைப்பிரிவினையில் செயற்படுகின்றது. இங்கு தான் ஒரு நாட்டின் சுயாதிபத்தியத்தை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது.
அரசியல் நீங்கம் செய்யப்படும் ஒரு வேலைமுறையின் கீழ் நடத்தப்படும் ஒரு சிந்தனை வெளிப்பாடு. இங்குதான் ஏக போக முதலாளித்துவத்தையும், வளங்களையும், சந்தையையும் பாதுகாத்துக் கொள்ள பலாத்கார, மென்தன்மை என இரண்டு வழிகளிலும் செயற்படுகின்றது. மென்மைப் போக்கினை தன்னுடைய சர்வதேச நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்துகின்றது.
புவிசார் அரசியலைக் கையாள்வதற்கு சந்தை, மறுவுற்பத்தி, மிகை உற்பத்தி, நிதிமூலதனம் அசைவியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்குலகோடு ஒத்தியங்கும் மேலங்கியைப் போத்தி உலக அரசியலைக் கையாளத் தேவையான அறிவைப் பெறவேண்டும். மேற்கு முதலாளித்துவம் வளர்ச்சி அடையாத நாடுகளில் ஆட்சியாளர்களை உருவாக்கும் திட்டம் இருந்துள்ளது. அதன் படி ஏகாபத்திய நலன் சார்ந்து இயங்கக் கூடி நவநாகரீக ஆட்சியாளர் குழுமத்தை உருவாக்க முயற்சி எடுத்தார்கள், எடுக்கின்றார்கள். இந்த அடிப்படையில் தான் பச்சை, மஞ்சல் புரட்சி என்று பல நாடுகளில் உருவாக்கிக் கொண்டார்கள். அதே போலதான் அரகலை (போராட்டம்) என்ற முறைமை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் புரட்சிகள் மக்களின் ஜனநாயகத்தை முன்னிறுத்துவதாக கூறிக் கொண்டாலும் அவை உற்பத்திமுறை, அதிகாரம், நிறுவனக் கட்டமைப்பு மாற்றம் எவையும் நடைபெற்றதாக இல்லை.
அரச உத்தியோகத்தகர்களின் தொகையை குறைக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு அதிகமாக ஊழியர்களைக் கொண்ட நாட்டரசில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது அவ்வளவு இலகு அல்ல. இதே போல இராணுவத்தின் தொகையைக் குறைப்பதும் ஆகும். இவ்வாறு தொகை குறைப்பின் ஊடாக ஏற்படும் வேலையில்லாப்பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை, சமூகச் சீரளிவு,சமூகப் பதட்டம் என்பது ஏற்படும். இதற்கு எந்த ஆட்சியாளர்களும் தயாராக இருக்க மாட்டார்கள்.
14 % இற்குப் பதிலாக 30 % வரி செலுத்த வேண்டும் என முன்மொழியப்படுகின்றது. இதுவும் நடுத்தர வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் வரிச் சுமையாகும். ஏற்கனவே விலைவாசி அதிகரித்த நிலையில் வாழ்க்கைச் செலவில் திண்டாடுகின்றார்கள்.
இது இலங்கையில் சந்தையின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவும்
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சூழலை உருவாக்கவும் உதவும்." என ஆளும் வர்க்கத்தால் கருதப்பட்டது.இவ்வாறான அரசியல் முடிவுகள் கடன் கொடுப்பவர்களினால் வழிகாட்டப்படுவதாகும்.

மதமும் அரசியலும்
அரசியலில் இருந்து மதத்தினை அகற்றிட வேண்டியது நவீன கால அரசியலாகும். பிரெஞ்சுப் புரட்சியின் வழிகாக இது நடந்தேறியது. இது குறிப்பாக முதலாளித்துவத் புரட்சி முழுமையடையாத நாடுகளில் உள்ள சிக்கலாகும். சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனைக் கட்டமைப்பு இலங்கை அரசியலில் பெருந்தாக்கம் செலுத்திவரும் மதமாகும். இது அரசியல் அமைப்பின் ஊடாக அரசமதமாக இருக்கின்றது. பௌத்த தம்மத்தை பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் என புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எனவும், தம்மதீப கோட்பாடு மகாவம்சத்தின் வழியில் நடத்தப்படுவதாகும். இத்துடன் விஜயன் பரம்பரையில் வந்த மக்கள் கூட்டமாகும், ஆரிய மொழி என்றும் கருதுகின்றது. அனகாரிக தர்மபாலாவினால் ஊன்றி வளர்க்கப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமாக அரசியலில் இன்றுவரையில் ஆளுகை செலுத்துகின்றது.
வரலாற்றில் சமயம் கூட பொருளாதார உற்பத்தி முறைக்கு துணைபுரிந்துள்ளதை இங்கு கவனிப்போம். 'ஆனால் ஒப்ந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும்என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ”சுதந்திரமான” 'சமத்துவமான” மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.” இவ்வாறான மாற்றங்கள் எதுவும் இலங்கையில் நடைபெறவில்லை.
நிக்கரகுவா, கியூபா போன்ற நாடுகளிலும், போலந்து போன்ற நாட்டிலும் கூட புரட்சிகள் நடைபெற்றும் மதத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. வியட்னாம், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளிலும் நிலப்பிரபுத்துவ எச்சங்கள் இருக்கின்றது. எனவே சிந்தனை பற்றிய பிரச்சனை நிலமானிய சிந்தனை உடைவு முழுமையாக ஏற்படாத நாடுகளிலும் சிக்கலானதாகும்.
|
Party |
SLPP |
UNP |
||||
|
Alliance |
SLPFA |
NDF |
||||
|
Popular vote |
6,924,255 |
5,564,239 |
||||
|
Percentage |
52.25% |
41.99% |
||||
|
Anura Kumara Dissanayake National Peoples Power |
418,553லச்சம் 3.16% |
|
|
|||
கடந்த தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள். இந்த வாக்கு இன்று எவ்வாறு மாற்றமடைந்துள்ளதை சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
2022 இல் நடைபெற்ற போராட்டத்தின் பின்னர் நடைபெற்ற தேர்தலில் இன்று புதிய அதிபர் வெற்றி பெற்றாலும், அவர் பெற்ற வாக்கு தனியே ஊழல், விலைவாசி உயர்வு,வேலையில்லாத் திண்டாட்டம், எண்ணைத் தட்டுப்பாடு, உரப் பிரச்சனை பற்றிய விளைவாக பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. ஊழலை முன்னிறுத்திய தேர்தலாக காட்டப்பட்டாலும், ஏன் வெற்றி பெற்ற பின்னர் பௌத்தத்திற்கான இடத்தை இவர்கள் தவிர்ப்பார்களா என்பது கேள்விக்குறியே.
சிங்கள பௌத்த அடையாளம், முதன்மை இடம் என்பது பௌத்தத்திற்கு கொடுக்கப்படுகின்றது. இது தான் அரசியல் யாப்பில் 9வது சரத்தை அகற்றுவது பற்றி NPP- அனுர முழுமையாக செயற்படப் போவதில்லை. இதன் வெளிப்பாடே சிங்கள பௌத்த – கொவிகம (சிங்கள வேளாளிய) பாதுகாக்கும் விகாரைகளுக்கு சென்றதாகும். கண்டி தலதாமாளிகை என்பது நிலப்பிரபுத்துவ- மன்னராட்சிக் காலத்தின் அடையாளம். மன்னர் முடிசூடுவது, ஏனைய சடங்குகளை பின்பற்றும் பொறிமுயறையைக் கொண்டது. அதன் பாராம்பரியம் காப்பாற்றப்படுகின்றது. கொவிக (வேளாளிய) சாதியில் 9 உட்பிரிவுகளும், 20க்கும் அதிகமான வெவ்வேறு சாதிகளை உள்ளடக்கியதாகும். இந்தச் சமூகம் பௌத்த விகாரையை ஒட்டியதான சமூக ஒழுக்கமைவு உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதம் சமூகமயப்படுத்தப்படும் மையமாக விகாரைகள் (மற்றைய சமூகங்களைப் போலவே) உள்ளன. தமிழ் சமூகத்தில் உள்ள சாதியம் போல சிங்கள மக்களிடை உள்ள சாதி பற்றி பேசுவது இல்லை. ஆனால் தமிழர்களிடம் மட்டும் தான் சாதி உள்ளது போல தோற்றப்பாடு கொடுக்கப்படுகின்றது.
‘‘நிக்காய"
முறை மிக இறுக்கமாகச் சாதி
அடிப்படையிலானது. அது தவிர இலங்கையில் பவுத்தம் தன்னை நிலவுடைமையோடு இறுகப் பிணைத்துள்ளது. பவுத்த
நிறுவனங்களே இலங்கையின் பெரிய
நிலவுடைமையாளர்களாக இருக்கின்றன. துறவிகள் நிலவுடைமையாளர்களாக
இயங்குகிறார்கள். இதனாற் சாதி
அமைப்புத் தகர்வதை இலங்கையில் உள்ள பவுத்தம் ஒருபோதும் விரும்பாது. சொல்லப்போனால் சாதியமைப்பைக்
காப்பாற்றுவதில் தான் பவுத்தத்தின்
பங்கு இங்கே அதிகமாக இருக்கிறது.” இந்த
நிலை என்பது சமூகப் புரட்சியில் பெரும் சிக்கலான விடயம். முதலாளித்துவ ஜனநாயகப்
புரட்சியை நடத்திட வில்லை. அதே வேளை சிங்கள தேசத்தில் நடத்திட முயற்சிக்கப்பட்ட
இரண்டு ஆயுதப் போராட்டங்களால் வெற்றியடையவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை
என்றே கொள்ள வேண்டும். நயினாதீவு பௌத்த
விகாரதிபதியின் சொத்தும், பெரிய
தோணியும், அதிகாரமும் ஒரு குட்டி இராட்சியத்தை ஆளும் குறுநிலமன்னருக்கு
சமனாகும். இதுபற்றி எவரும் வாய் திறந்ததாக இல்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த
தோணி உரிமையாளர்களின் வருவாயை திருடுவதாக இருக்கின்றார். இதிலும் சிங்கள தேசத்தில்
இருந்து வரும் பயணிகளுக்காக பௌத்த வகுப்பு, சிங்கள பெருமிதம் போன்றவற்றை பயிற்றுவிக்கும்
இடமாகவும் நயினாதீவு விகாரை உள்ளது.
பௌத்த சிலைகள் ஈழ தேசம் எங்கும் முளைத்துக் கொண்டிருப்பதும் ஏதோ
தற்செயலானது செயலாகவே ஒத்தோடிகள், முற்போக்காளர்களால்
கொள்ளப்படுகின்றது. தொல்லியல் என்ற போர்வையில் பௌத்த அடையாளம் என்ற போர்வையில்
நிலங்கள் அபகரிக்கபட்டிருக்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின்
அகங்காரம் புத்தபிக்குக்களின் வாய்தர்க்கங்களின் ஊடாகவும் வெளிவருகின்றது. பௌத்தத்திற்கு
முன்னுரிமை கொடுக்கும் அரச நிறுவனகக் கட்டமைப்பில் காவல்துறை மென்மையாக கையாளத்
தான் முடியும். இதேவேளை உரிமைக்காக போராடுபவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதலை
மேற்கொள்ளும்.
நல்லிணக்கம், இன- மத- குலபேதமற்று வாழ்வோம்
என்று வகுப்பெடுப்பது வீழ்த்தப்பட்ட தேசத்திற்கு மட்டும் தான் என்பதே வரலாறாக
இருக்கின்றது. இங்கு பொதுப்புத்தியில் இருக்கும் போக்கையும்
அவதானிக்கப்பட வேண்டும். சைவம்,, கத்தோலிக்கம், பௌத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம்,
மற்றும் கிறிஸ்தவ மதக்குழுக்களிடையே மதப்பிடிப்பு, மதவாதம், மதவெறி இருக்கின்றது.
இந்த வகையில் மதங்களுக்கும், மதத்தை
பின்பற்றுபவர்களிடமும் நெகிழ்வுப் போக்கு உள்ளது. ஒவ்வொரு மதமும் தமது மதச்
சின்னங்களை தமது அயல் இடங்களில் வைத்துக் கொள்கின்றனர், இது
மதப் பற்று- மதவெறி- பிற்போக்குச் சிந்தனை சார்ந்தது. ஆனால் புத்தர் சிலைகள்
தமிழ்- முஸ்லீம் மக்கள் தாயகத்தில் முளைப்பது பேரினவாத ஆக்கிரமிப்பு.
ஆக்கிரமிப்புக்கும் மதப் பற்றைக் கொண்ட பிற்போக்குச் சிந்தனையும் ஒன்றல்ல. சிங்கள
பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை
சிங்கள தேசத்து முற்போக்கு- இடதுசாரி- பொதுவுடமையாளர்களே சிதைத்து முதலாளித்துவ
ஜனநாயகப் போராட்டத்தை செய்யுங்கள் என்று தான் கோர முடியுகின்றது. தேர்தலின்
ஊடாக ஏதோ புரட்சியை நடத்தி முடித்துவிட்டதாக பரப்புரை செய்யப்படுகின்றது. இனி அனைத்து
மாற்றங்களை தம்மால் செய்ய முடியும் என்ற போக்கு உருவாக்கப்படுகின்றது.
இனி வரவிருக்கும் தேர்தலில் சிங்கள பௌத்த
பேரினவாதக் கட்டமைப்பின் தயவு என்பது அனுர திசநாயக்காவிற்கு தேவையானதாகும். கடந்த தேர்தலில்
வாங்கு என்பது திசைமாறியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக இராணுவம், பொதுநிர்வாகம்,
அதிகார வர்க்கம்,
இன்றுவரையில் பதவி கொடுக்கப்பட்டவர்களின் பின்புலத்தை ஆராய்வது அவசியமானதாகும்.
இராணுவத்தை பொதுச் (சிவில்) சேவையில் ஈடுபடுத்துவது, காவல்துறை நியமனம், ஓய்வு பெற்ற அதிகாரிகளை அரச நிறுவனத்தில் உள்வாங்கிக்
கொள்ளல், அரச நிறுவனம் போன்றவற்றில் பழைய அதிகார வர்க்கமே பதவிக்கு கொண்டு வரப்படுகின்றார்கள்.
‘‘நல்லெண்ணம்
நரகத்திற்கு (வீழ்ச்சிக்கு) இட்டுச் செல்லும்”
ஈழப் பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டமைப்புச் செய்ய வேண்டும். 1972களில் சிறிமாவின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் செய்யப்பட்ட அரசியல் முனைப்புகள் நிச்சயம் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால் அன்றைய பல்துருவ காலத்தில் துணிந்து செயற்பட முடிந்த் போல இப்போ அது சாத்தியமா என்றால் சந்தேகம் தான்.
குறிப்பாக தமிழ் தேசத்தவர்களைப் பொறுத்தவரையில் மூலதனத்திரட்சி, தொழிற்துறை வளர்ச்சி ஏற்படவில்லை. அது 1958, 77, 81, 83, மற்றும் 2009 வரையில் நடைபெற்ற இழிப்பில் மோசமாக நிலையில் உள்ளது. அவர்களின் வளர்ச்சியைப் பற்றியப் புரிதல் அற்ற சிங்கள இடதுசாரி, முதலாளித்துவ அரசியல் பிரிவுகள் உள்ளன.
கொலனித்துவம் விலகிச் சென்ற போது ‘‘தேச” அரசுகள் பற்றிய விடயங்களில் முதிர்ச்சி இன்மை இருந்தது. தேசங்களை தொடர்ச்சியாக பின்தங்கிய நிலையில் வைத்துக் கொண்ட அடக்குமுறை அரசமைப்பே கொலனித்துவம் வெளியேறிய பின்னர் உருவாகிய பெரும்பான்மை நாட்டரசுகளின் நிலையாக இருந்துள்ளது. தேசங்களுக்கான சுயநிர்ணயம் என்ற முழக்கம், அரசியல் என்பது சுதந்திர அரசு என்பது பற்றித் தெளிவின்மை இருந்தது. மூலதனத்தின் ஆதிக்கம், சுயமான மூலதனத் திரட்சி பற்றிய புரிதலை தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.
1948 இருந்து இந்தப் போக்கு இருந்து வருகின்றது. மிகவும் பின்தங்கிய தேசமாக தமிழர் தேசம் இருக்கின்றது. ‘‘அரசு வாடி உதிர்ந்து போகுங்காலம் முடிவடையும் ஒரு போக்கு, தேசிய இனங்கள் தீவிரமாக நெருங்கி கொண்டு முழுமையாகக் கலத்தல் என்பது நடைபெறுகின்றது. இதுதான் மார்க்சியத் தத்துவம்; (211.தே.இ.பி) இதனை மறுத்தே ஒன்று கலத்தல் பற்றிப் பேசப்படுகின்றது. இவை மாத்திரம் அல்ல சோவியத் ஒன்றியத்திலும் ஒன்று கலத்தல் அரசியல் தான் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தவறான கருத்துருவாக்கமாகும்.
ஈழப் பொருளாதாரம் என்று குறிப்பாக பேசவேண்டியிருக்கின்றது. உற்பத்திச் சக்தியின் (தொழிலாளர்களின் திறமை, சிறப்புத் தேர்ச்சி) வளர்ச்சி அவசியமாகின்றதெனில் மூலதனத்திரட்சி அவசியமானதாகும். மூலதனத் திரட்ச்சியை ஒரு தேசம் தன்னகத்தே பெறுகின்ற போது தான் உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியை வளர்த்துக் கொள்வதன் ஊடாகத் தான் உற்பத்தி உறவும் மாறுதலுக்கு உள்ளாகும். சோசலிசம் கிடைத்த பின்னர் இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்பது கற்பனைவாதமாகும். மாறாக தேசிய முதலாளித்துவ வளர்ச்சி சோசலிசத்தை விரைவுபடுத்திச் செல்லும் என்பது தான் இயங்கியல். இதில் முதலாளித்துவ வர்க்கம் முற்போக்குப் பாத்திரத்தை இழந்து விட்டது என்பது உண்மையே. ஆனால் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியின் தாக்கம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உற்பத்தி உறவுகளின் மாற்றமே நிலப்பிரபுத்துவ சிந்தனைக் கட்டமைப்பை சிதைப்பதற்கான உந்து சக்தியாக அமையும். ஏனெனில் பொருத்தமான பொருளாதார உறவுகள் வளரும் வரையில் பழைய சிந்தனை முறை மாறுவதில்லை.
கொலனியாதிக்க மனப்பாங்கு
2009 இருந்து இன்று வரையில் சிங்கள பௌத்த பேரினவாத அடையாளங்களை அகற்றுவதற்கான எந்த முனைப்பும் எடுத்தது இல்லை. இராணுவமுகாம் அது சார்ந்த உற்பத்தி, சேவை தொடர்கின்றது.
இராணுவம் சார்ந்த உற்பத்தி முறை என்பது தெற்கில் அதாவது சிங்கள தேசத்தில் இல்லை. மாறாக ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தில் தான் அனைத்து நடவடிக்கைளும் உள்ளது. தமிழர் தேசமெங்கும் தமிழர் 6:1 இராணுவம் என்று உள்ளார்கள். இவர்களின் தொகையை குறைப்பதற்கு தயாரா? அரச ஊழியர்களுக்கு கொடுக்கும் செலவை குறைக்க வழிகாட்டுகின்ற போது எவ்வாறு நிலைப்பாடு எடுப்பார்கள்? இராணுவத்தின் தொகையைக் குறைப்பார்களா? அவ்வாறு குறைத்தாலும் அவர்கள் வேலையில்லாத குடிமக்களாக ஆவார்கள். அவர்களுக்கான மாற்றுத் திட்டம் உள்ளதா?
(https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/02/blog-post.html) அனுர ஆட்சிக்கு வந்தபின்னர் பலாலி முகாமின் பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதியை திறந்து விட்ட பின்னர் அவற்றை சாதனை ஆக்கினர். ஆனால் இராணுவ முகாம்களின் (தமிழர் பகுதியில்) அளவையும், அதன் ஆக்கிரமிப்பு வடிவத்தையும் கவனத்தில் கொள்ளவில்லை.
தேசிய இனச் சிக்கல்
தேசிய சனாநாயகப் போராட்டமும் வர்க்கப் போராட்டமே என்ற புரிதல் அடிப்படையில் இலங்கை, இந்திய பொதுவுடமைக் கட்சிகளிடம் இல்லை. ஏனெனில் ஒரு போராட்டத்தில் வர்க்கப் போராட்டம் தேசியப் போராட்ட வடிவத்தை மேற்கொள்கின்றது. குறிப்பிட்ட வரலாற்று காலப் பகுதியை கவனத்தில் கொள்ள வேண்டும். தேசியப் பாராட்டத்தின் கோரிக்கைகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருந்திட வேண்டும். இவ்வாறு ஐக்கியத்திற்கும் சுதந்திரத்திக்கும் இடையிலான ஐக்கிய முன்னணியிலும் தேசியப் போராட்டத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையிலும் முற்றொருமை உள்ளது. (290)
இலங்கையைப் பொறுத்தவரையில் பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டம் (6வது) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இது தேச ஒடுக்குமுறை மாத்திரம் அல்ல. மனிதவுரிமை மீறல் என்பதையும் இணைத்துப் பேசவேண்டியுள்ளது. இது குறிப்பாக இடதுசாரிகளிடம் சுமத்தப்பட்டுள்ள கடமையாகும்.
JVP/ FLSP போன்றவர்களிடம் புகாரியவாதமே அவர்களிடம் இருக்கின்றது. மக்கள் மன்றம, சமவுரிமை இயக்கம் என்பது பிரசைகளுக்கான உரிமையாகவும், மனிதவுரிமையாகவுமே மதிப்பிடுகின்றார்கள். புகாரியவாதிகள் உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம் என்கின்றார்கள். லெனின் தேசங்களுக்கு என்று கூறுகின்றார்.
FLSP- NDMLP மக்களின் கொள்கை
‘NDMLP என்ற கட்சியினர். கட்சித் திட்டத்தில் சுயநிர்ணயத்தையும் அதற்குத் தீர்வாக சுயாட்சி என்றும் வரையுறுத்துள்ளார்கள். இவர்கள் ஈழப் போராட்டமே தவறு, போராடியதும் தவறு என்று சொல்பவர்கள். 2009 பின்னர் தேசிய முதலாளித்துவ சக்தி தலைமை தாங்கினால் அவர்களுடன் செயற்பட முடியும் என்றார்கள். 2019 தேர்தல் காலத்தில் தலித்தியத்தை உயர்த்திப் பிடித்தார்கள். இன்று ஐக்கிய முன்னணியின் கீழ் தேர்தலில் நிற்கின்றார்கள். இவர்களைப் பற்றி நிறையவே முன்னர் எழுதப் பட்டுள்ளது. தோழர் சண்ணின் நூற்றாண்டு தொடர்பான கட்டுரையில் இவர்களை விமர்சிக்கப்பட்டுள்ளது. இங்கு இவர்கள் பற்றிய விமர்சனமும் https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/07/03071921.html இங்கு தவிர்க்கப்படுகின்றது. மேற்கண்ட கட்டுரை தொடரை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
FLSP இவர்கள் 2022 அரகலை போராட்டம் வரையில் சுயாட்சி, சுயநிர்ணயம் பற்றிப் பேசவில்லை.
‘‘வடக்கு மற்றும் கிழக்கு அடிப்படையில் உருவான
தமிழ் முதலாளித்துவ மற்றும் சிறிய முதலாளித்துவ தேசியவாத அரசியல்
கட்சிகளின் பிரவேசம், தேசிய அடிப்படையில் தமது கட்சியின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அவையும் இனவாதத்திடம்
தஞ்சம் புகுந்தன. (ப151 flsp) சமவுரிமை (புகாரியம்- உழைப்பாளர்களுக்கு சுயநிர்ணயம்- மனிதவுரிமை) திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது என்ன வகை அரசியல் இது? தேர்தல் பரப்புரையில் இவ்வகையான சாகசக் கருத்து சந்தர்ப்பவாதம் என்பது எவ்வித பலனும் தராது. திரிபுவாதி செந்தில்வேல் போன்றவர்கள் இதன் பின்னால் செல்வது ஆச்சரியம் இல்லை. கட்சித் திட்டம், சுயநிர்ணயம் பற்றி இவர்களுக்கு புரிதல் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
”தமிழீழத்திற்காக நின்றவர்கள் நிறைய பேர் இன்று அந்த சித்தாந்தத்தை கைவிட்டுள்ளனர். நாடு முழுவதுக்கும் பொதுவான பொருளாதாரப் பிரச்சனைக்காக வெவ்வேறு இன மத மற்றும் கலாசாரக் குழுக்கள் எவ்வாறு இலங்கையர்களாக தமது சொந்த அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு இணைந்து போராட முடியும் என்பதைப் பார்க்கிறோம். (குமார் குணரட்னம் வீரசேகரி 29.5.22- சமகாலம்) இந்த நிலைப்பாட்டில் இருந்து இன்று எவ்வாறு நிலைப்பாட்டில் மாறினார்கள் என்பது ஆச்சரியத்துக்குரியதாகும்.
We request north to use the election as a referendum (நுவன் போபகே) அது என்ன வடக்கு மட்டும்? எப்பவும் ஒரு கட்சியின் முடிவு என்பது மாநாடு (கொங்கிரஸ்) கூடி முன்னரே எடுக்கப்பட்டிருக்கும். இவையே மார்க்கிய கட்சிகளின் நிறுவன வடிவமாகும். கட்சியின் முடிவுகள் நினைத்தபடி மாற்றிட முடியாது. அரகலையின் போது குமாரின் நிலைப்பாடு எவ்வாறு தாற்றமடைந்துள்ளது? நுவன் போபகேயின் நிலைப்பாடு மாறும்? இதே போல தான் JVP- NPP இரசிகர்கள் அனுர பல விடயங்களை மாற்றத்திற்கு கொண்டு வருவார்கள் என்று கருத்தாடி வருகின்றார்கள்.
https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/08/blog-post_12.html இவர்களின் விவாதங்கள் தொடர்பாக எழுதப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் பரப்புரையினால் ஏற்பட்ட தாக்கம் அதற்கான விடையை தோழர் லெனினின் எழுத்துக்களில் இருந்து எழுதப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்வது என்றால் சுயநிர்ணயம் பற்றிய விளக்கம் அற்ற புரிதலை இவர்கள் கொண்டுள்ளார்கள்.
JVP- NPP தேசியப் பிரச்சனை தீர்ப்பதற்கான அணுகுமுறை
‘‘ ஒரு தடவை மூப்படைந்தும், மறுதடவை தற்காலிகமாக மறைக்கப்பட்டும் வளர்ந்து வந்த இப்பிரச்சனை பல்வேறு உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், இனவாதம் பரவுவதற்கும்
இனக்கலவரங்களின் மூலமாகவும் ஆகிய செயற்பாடுகள் காரணமாக 1980 தசாப்தங்களில் பிரிவினைவாத போராட்டம் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. 2009ஆம் ஆண்டு
தேசியப் பிரச்சினை தீர்ப்பதற்கான அணுகுமுறை மே மாதம் பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்தபோதிலும் அதற்கு பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பிரிவினைவாதம் இன்னுமொரு வடிவத்தில் தலைதூக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் அந்த ஆபத்தின் முகட்டிலேயே நிற்கின்றனர்..
மக்களை தேசிய இன அடிப்படையில் படிப்படியாக பிரித்து துண்டாடுகின்ற அதன் மூலமாக வர்க்கத்தை பிரிக்கும் திசையை நோக்கி நகர்ந்துள்ள ஆபத்தான நிலையை தோல்வியுறச்செய்து
தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் திசையை நோக்கி, தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்ப அணுகுமுறையை எடுக்கும் திசையில், தேசியப் பிரச்சினைத் தொடர்பான ஒரு கருத்தாடலை
ஆரம்பிப்பது அத்தியாவசியமாயிருக்கிறது”. (jvp- p2)
(https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/08/jvp.html )
தேசிய ஒடுக்குமுறை, சிங்கள பௌத்த பேரகங்காரம் இருக்கும் வரையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெளியே வரும். அவ்வாறு வெளிவரும் குரலை தமிழ் இனவாதப் பேச்சு என்பது அற்பவாதிகளின் கருத்தேயாகும். தமிழர்களின் நிலைப்பாடு, எதிர்ப்புணர்வு தமிழினவாதம் அல்ல. தமிழர் வாக்கு தமிழருக்கு என்பது இனவாதம் அல்ல. பொருளாதாரவாதம் என்பது மார்க்சியம் அல்ல. பொருளாதாரப் பிரச்சனை தீரவேண்டும் என்றால் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தேசம் தனக்கான பொருளாதார நிதிக்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தனியான கட்டமைப்பு, பொருளாத வாழ்வு, சமூக வாழ்வு கட்டமைக்கப்படும் போதே அந்த மக்கள் வளர்வார்கள். பின்னரே சிங்கள தேசத்து பாட்டாளி வர்க்கம் தனக்கான பிரச்சனை, யார் தன்னை ஒடுக்குகின்றார்கள் என்று தன் சொந்த எதிரிக்கு எதிராக மாறுவார்கள். அது வரையில் மற்றவர்களை எதிரியாக்கும் சமூகக் கட்டமைப்பு சிதையப் போவதில்லை.
இரண்டு அணிகளின் கொள்கை என்பது மார்க்சியம் முன்வைக்கும் சமூக வளர்ச்சிப் போக்கை உள்வாங்கியுள்ளார்களா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. அரசு- தேசம்- நாட்டரசு போன்ற விடயங்களை மிக முன்னேறிய கோட்பாடுகள் மார்க்சியம் முன்வைத்துள்ளது.
இனவழிப்பு, ஆக்கிரமிப்பு யுத்தம், இனக்கலவரம், போர்க்குற்றம் என்ற விடயங்களை தந்திரமாக தவிர்ப்பது மார்க்சிய வழி அல்ல. மேலும் இனக்கலவரம் என்பது இரண்டு பக்கமும் சமமாக இருந்து மோதிக் கொள்வது. அவ்வாறு 1915, 1958, 77, 81,83 களில் நடைபெறவில்லை. என்ன இந்தச் சொல்லாடலில் கூட மாற்றம் கொள்ளவில்லை. ஏன் தேசத்தின் அரச அதிகாரத்திற்கான போராட்டத்தையும் பிரிவினைவாதமாக பார்க்கின்றார்கள். இவர்கள் இலங்கையராக சிந்தி என்பதே சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஏற்றுக் கொள் என்பதேயாகும். ஆனால் தான் தன்னுடைய அடையாளத்தை மாற்ற மாட்டேன். அதற்கான பாதுகாப்பு என்பது பௌத்தத்திற்கு முன்னிலை கொடுப்பது என்பதாகும்.
இனவழிப்பு நடைபெற்ற நாட்டில் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றார்கள் என்றால் அதன் பொருள் என்ன? இவ்வாறு மோசமாக பின்தங்கிய கோட்பாட்டைக் வெளிப்படுத்துகின்றார்கள். இதற்கு இடதுசாரியம் என்ற சாயமும் பூசுப்படுகின்றது. இன்று தமிழ் ‘‘இடதுசாரிகள்” எனப்படுபவர்கள் ஆலோசனைகளுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். அந்தப் பேர்வழிகள் இனமதகுலமற்று இலங்கையராக இணைவோம், கடந்த காலத்தில் வாழாது நிகழ்காலத்தில் வாழ்வோம் என்கின்றார்கள். இன்று ஒரு படி சென்று இலங்கையில் இருப்பது 95 விழுக்காடு பொருளாதாரப் பிரச்சனை என்கின்றார்கள். இவ்வாறான பொருளாதாரவாதிகளின் கருத்தை அரசியலாக முன்னெடுக்கப்படுகின்றது. புலியெதிர்ப்பாளர்கள், முன்னைய இயக்கங்களின் பிரமுகர்கள், ரொட்ஸ்கியம் பேசியவர்கள் இன்று ஜேவிபிக்குப் பின்னால் அணிதிரள்கின்றார்கள்.
1. நிலப்பிரபுத்துவ எச்சம்
2.ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அரசியல்
3.தேச ஒடுக்குமுறை- ஆக்கிரமிப்பு இந்த விடயங்களை கோர்வையாக அணுகி ஆராயமுடியவில்லை என்றால் உங்களுக்கு மக்கள் கூட்டத்தின் அரசியல் நியாயத்தை பேசத் தகுதி இல்லாதவர்கள். இந்த விடயத்தை விளங்காவிடின் மார்க்சியர்கள் எனக் கூறிக் கொள்ளாதீர்கள்.
இன்றைய உலகப் போக்கு, குறிப்பான நாட்டின் வரலாறு, எதிர்கால சமூக இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும். இதற்கு மாற்றாக அழுத்தக்
குழுவாக (pressure group) இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய விலகலாகும்.
ஜேவிபியின் வெற்றியை இட்டு பதட்டப்படுவதாக கூறப்படுவதும், விமர்சிப்பவர்களை வலதுசாரியப் போக்கு, போலி இடதுசாரிகள் என்று விமர்சிக்கப்படுகின்றது. இது எவ்வாறெனில் அமெரிக்க அதிபர் புஸ் எம்முடன் ஒத்துழை அல்லது நீ பயங்கவாதிகளின் பக்கம் என்பது போல ஆகும்.
1970களில் அரசியல் நிலைப்பாட்டை இன்று வைக்க முடியுமா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மார்க்சியத்தின் பேரில் கேள்வி கேட்பவர்களிடம் மறுபடியும் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் ‘‘முதலாளித்துவப் புரட்சி நடைபெற்று விட்டதா?” என்பதேயாகும்.
தேசிய இனப் பிரச்சினை என்பது தேசிய முதலாளித்துவத்தின் முழக்கமே தவிர பாட்டாளி வர்க்கத்தினுடையது அல்ல என்ற வறட்டுத்தனமான கோட்பாட்டை இன்னும் முன்வைத்துக் கொள்கின்றார்கள். சுயநிர்ணயம் என்றால் பிரிந்து செல்வது அல்ல என்ற போக்கை முன்வைக்கின்றார்கள்.
அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஜனநாயக கோரிக்கைகளை முன்வைக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சனை இலங்கை, இந்திய இடதுசாரிகளிடம் உள்ள ஒரு பிரச்சனையாகும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாட்டில் தேசிய இனச் சிக்கலை விளங்கிக் கொள்ளாமல் ஒப்பிக்கப்படுகின்றது. சுயநிர்ணயத்தை புரட்சியின் கருவியாக மதிப்பிடப்பட்டிருந்தது.
1.
‘‘மூலதனத்தின்
அதிகாரம், ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிதல், பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகிய பொது பிரச்சனையோடு
தொடர்பு எதுவும் இல்லாத சுயேட்சையான பிரச்சனையாக ஒரு சீர்திருத்த நோக்கு நிலையில் இருந்து
தேசிய இனப்பிரச்சனை பார்க்கப்பட்டது.”
2. ‘‘முதலாளி வர்க்கங்களுக்கு இடையே நடக்கின்ற போராட்டமே” என்பது ஏகாதிபத்தியப் போருக்கு முன்னதாக எடுக்கப்பட்ட நிலைப்பாடாகும். அன்றைய சூழலில், தேசிய இனங்களின் பிரச்சனையை உலக முக்கியத்தும் வாய்ந்த ஒரு பிரச்சனையாக மார்க்சியர்கள் மதிப்பிட்டிருக்கவில்லை; மார்க்சியர்களின் அடிப்படைக் கோரிக்கையான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை., மாறாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே மதிப்பிடப்பட்டிருந்தது ஏகாதிபத்தியப் போருக்குப் பின்னர் சர்வதேசச் சூழலில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும், ஏகாதிபத்தியப் போர் ஒருபுறம்- ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி மறுபுறம் இரண்டும் சேர்ந்து, தேசியப் பிரச்சனையை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலையிலிருந்து மாற்றி, இது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதி என்ற நிலைக்கு கொண்டு சென்றதையும் காணமறுப்பது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று.
3. ‘‘தேசங்களின் சுயநிர்ணயக் கொள்கை வழக்கமாக தவறாகப் பொருள் விளக்கமளிக்கப்படும்; சுயாட்சிக்கான தேசங்களின் உரிமை என்பதாக இந்த எண்ணத்தை அடிக்கடி குறுக்கி வைப்பது உண்டு. சுயநிர்ணய உரிமையை கலாச்சார சுயாட்சி” என குறுக்கிய போக்கு
4.
சுதந்திர தேசங்களின் இருப்பு, அரசின் இருப்பினால் மேலும்
உறுதி செய்யப்படுவது என்ற போக்கில் முன்னேற வேண்டியிருக்கின்றது. (அரசு உதிர்வது
பற்றி லெனின் பேசுவது இதன் நிலைப்பாட்டை ஒற்றியோகும்.)
பொதுவுடமைக் கட்சிகளால் இந்த தவறுகள் தொடர்ச்சியாக விடப்படுகின்றது. இந்த அரசியல் நிலைப்பாட்டை செயலூக்கம் அற்ற கட்சிகளால் திருத்திக் கொள்ளவில்லை. இவர்கள் அடிப்படையில் இரண்டாம் அகிலத்தின் நிலையிலே இன்றும் உள்ளார்கள். இன்று இவர்கள் படித்தவர்கள், இளைஞர்கள், பரம்பரை ரீதியாக வராதவர்கள் என்ற தோற்றப்பாடு கொடுக்கப்படுகின்றது. இந்தத் தோற்றப்பாடுகளுக்கு அப்பால் கோட்பாட்டு ரீதியாக அணுகப்பட வேண்டும்.
சமமான தேசங்களின் வளர்ச்சியில் உள்ள ஏற்றத் தாழ்வைப் போக்கிடும் அரசியல் என்ன என்ற புரிதல் அடிப்படையில் அவசியமாகின்றது. அதாவது பின்தங்கிய தேசத்தின் உழைப்பாளி மக்கள், அவர்கள் முன்னேறிய தேசத்தினை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைய உதவாத நிலைப்பாடுகள் எவையும் பயனற்றவை. இதற்கான பொருளாதார வாழ்வியல் வளர்ச்சி என்பது அவசியமானதாகும். இதனை விட்டு இவர்கள் பேசும் சீர்திருத்தம் என்பது போலித் தனமானதாகும்.
பின்தங்கிய தேசத்தின் உற்பத்திச் சக்தியின் உயர் நிலை என்பது பசிக்கு பாண் (ரொட்டி) துண்டு போடுவது போல அல்ல. அது அனைத்து சமூக வாழ்விலும் அதிகாரமுடையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதாகும். ஏதோ புதிய ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொண்டு விட்டதாகவும், முழு அதிகாரத்தைக் கொண்டதாகவும் கருத்தப்படுகின்றது.
லெனின் புரட்சியின் பின்னர் பின்வருமாறு பிரகடனப்படுத்துகின்றார்.
‘‘இதர தேச மக்கள் எவரையும் விட அதிகமான தேசங்களை ஒடுக்கி வந்துள்ள மாருஷ்யர்களான நாம் போலந்து , உக்ரேனியா அல்லது பின்லாந்தின் பிரிந்து போகும் உரிமையை ஏன் மறுக்க வேண்டும்?
தேசிய வெறியர்களாகும்படி நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். காரணம் அவ்வாறு செய்வதன் மூலம் போலந்திலுள்ள சமூக ஜனநாயகவாதிகளின் நிலையைச் சற்றே இடர் குறைந்ததாக்குவோம்.
நாம் போலந்தை விடுதலை செய்ய முயல்வதாகப் பாசாங்கு செய்யவில்லை. ஏனெனில் போராடும் ஆற்றலுடைய இரு அரசுகளுக்கு இடையில் போலந்து மக்கள் வாழ்கிறார்கள்.
ஒரு சோசலிஸ்டுக் கட்சியில் தேசிய வெறியர்களுக்கு இடமில்லை , எனவே போலந்து மக்கள் கட்டாயம் விடுதலை பெற வேண்டும் என்று சாதிக்கும் என்று சமூக - ஜனநாயகவாதிகள் மட்டுமே உண்மையான ஜனநாயகவாதிகள் ஆகும் போலந்து தொழிலாளர்களிடம் கூறுவதற்குப் பதில் , ருஷ்யத் தொழிலாளர்களுடனான இணைப்பு சாதகமானது என்று கண்டு அவர்கள் போலந்து பிரிந்து செல்வதை எதிர்க்கிறார்கள் என்பதாகப் போலந்து சமூக - ஜனநாயகவாதிகள் வாதிக்கிறார்கள்.
அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் , சர்வ தேசியத்தை வலுப்படுத்துவதற்கு அதே சொற்களை நீங்கள் திரும்பவும் கூறவேண்டியதில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள விரும்ப வில்லை.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன வென்றால் , ருஷ்யாவில் ஒடுக்கப்பட்ட தேசங்களின் பிரிந்து போகும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும், போலந்தில் அவை ஒன்று சேர்வதற் கான சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும். ஒன்று சேர்வதற்கான சுதந்திரம் பிரிந்து செல்வதற்கான சுதந்திரத்தை உணர்த்துகிறது. ருஷ்யர்களான நாம் பிரிந்து போகும் சுதந்திரத்தை வற்புறுத்த வேண்டும், அதே போதில் போலந்தியர் ஒன்று சேரும் சுதந்திரத்தை வற்புறுத்த வேண்டும்.”
இது தான் மார்க்சிய வழி. இதற்கு அப்பால் குறுக்கு வழி இல்லை. இவர்கள் பேசுகின்ற ‘‘சுயாட்சி உரிமை கோரிக்கை” ”மக்கள் மன்றம்” என்பது எல்லாம் சுயநிர்ணயம் அல்ல.
உழைப்பாளிகளுக்குத் தான் சுயநிர்ணயம் என்பது புகாரின் கருத்தாக்கம். இந்த கருத்தாக்கம் ‘‘சமவுரிமை இயக்கம்” ‘‘மக்கள் மன்றம்” என மார்க்சியமாக முன்வைக்கின்றார்கள்.
‘‘தேசங்களுக்கு” சுயநிர்ணயம் என்பதே லெனின் முன்வைக்கின்ற மார்க்சிய வழி.
இந்த மாறுபாட்டை கோட்பாட்டு ரீதியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை விடுத்து சந்தர்ப்பவாதப் போக்கை மார்க்சியமாக முன்வைப்பது அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது.
இன்றைய தேர்தலில் பெறப்பட்ட ”முகமாற்றம்” இராணுவ, அதிகார வர்க்க, நீதிமன்ற, சட்டத்திற்கு உட்பட்டதே.
சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியில் இன்றைக்கு நமக்கு தெரிந்தவர்களை விட சிங்கள முற்போக்குச் சக்திகள் மத்தியில் புரட்சிகரக் கருத்துக்களை விதைக்கப்பட்டவர்களில் ஒருவராக நியூட்டன் குணசிங்கா அறியமுடிகின்றது. 1983 ஆடி நிகழ்வை Holocaust என்ற சொல்லாடல் பயன்படுத்தியதாக அறிய முடிகின்றது. இனவழிப்பின் வடிவம் என்று ஒரு சிங்கள கல்வியாளர் முன்வைத்திருக்கின்றார்.
1833 இல் தேசமாக வளரக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட இரண்டு தேசிய இனங்களின் நிர்வாக பகுதிகள் இணைக்கப்பட்டன. இவற்றைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அரசியல் புரிதல் என்பது இருக்கவில்லை. இலங்கையில் எழுந்த அதிகாரம் பற்றிய communal issues- வகுப்புவாதச் சக்திகளின் முரண்பாடாகக் கண்டனர். இந்த வழிவந்தவர்களான யாழ்ப்பான வாலிபர் கொங்கிரஸின் கருத்தையே புழங்காகிதமடைந்து எழுதுபவர்களும் உள்ளார்கள்.
தோழர் சண் 1993களில் தனது சுயசரிதையில் தான் தொழிற்சங்கவாதத்திற்கு பலியாகிவிட்டார் என்கின்றார். ஆனால் இன்றும் தம்மை பு.ஜ.மா.லெ.கட்சியும் பழைய திரிபுவாதப் பாதையில் தான் தொடர்கின்றது. இலங்கை மார்க்சியர்களின் அரசியல் புரிதல், தெளிவு பற்றிய பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. இன்றைய தவறுகளுக்கான காரணம் கடந்த காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் வளர்ச்சியடையாத காலத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியை நாகரீகம் அற்றதாக ஒதுக்கியது. இன்று ஈழப் போராட்டம் யாழ் சைவ வேளாளியம் என்று புறந்தள்ளியது.
தமிழகத்தில் தோழர் தமிழரசன், தோழர் ஏ.எம் கோரண்டராமன் போன்றவர்கள் 1983களில் ஈழப் பிரச்சனை பற்றி திடமான கருத்திற்கு வந்துள்ளார்கள். ஆகவே பொத்தாம் பொதுவாக இனப்பிரச்சனை பற்றி புரிதல் இல்லை என்று கூறிவிட்டுச் செல்ல முடியாது. இங்கு தான் கலாசாலை சார் ஆய்வுமுறையும், அரசியல் நிலைப்பாடு சார் முடிவுகளும் மாறுபடுகின்றது.
கலாசாலைக்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எப்பவும் மாறுபாடு உண்டு. இந்த எல்லையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கட்சித்திட்டத்தில் சுயநிர்யணம் பற்றிய நிலைப்பாடு எடுப்பதும் கலாசாலை சார் ஆய்வாளர்களின் நலன்களும் எல்லைகளும் மாறுபட்டவையாகும்.
சிங்கள முற்போக்கு சக்திகள் என்கின்ற போது ஜேவிபி போன்றவை தான் நமக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தான் தோற்றப்பாடு கொடுக்கப்படுகின்றது. இதன் விளைவே மற்றைய நாடுகளின் தோழமைகள் எண்ணிக் கொள்கின்றார்கள். சிங்கள முற்போக்கு சக்திகளில் குமாரி ஜெயவர்த்தனா முக்கியமான ஆய்வாளர். அவரிடம் தேசிய இனங்களின் ஜனநாயக வளர்ச்சிக் கட்டம் பற்றிய புரிதலை பெற முடியவில்லை. மாறாக வளர்நிலைப் புரிதல் நியூட்டன் குணசிங்காவிடம் காணமுடிகின்றது.
ஜேவிபியில் இருந்து பிரிந்த சிங்களப் புலி என்று அழைப்பட்டவர்கள் ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள். அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். இன்று விராஜ் மென்டிஸ் போன்றவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திச் செயற்பட்டார்.
சமூக இயக்கப் போக்கில் சமூகக் கட்டம் பற்றிய பிரச்சனையில் யார் எந்த நிலையில் உள்ளார்கள் என்பது அவசியமாக விளங்கிக் கொள்ள வேண்டும். சமூக இயக்கப் போக்கை தாம் புரிந்து கொண்ட நிலைதான் சரியானதாக கொள்கின்றார்கள். சமூகம் அன்பினால் தன்னை முன்னோக்கி நகர்த்துவிட முடியும் என்று நம்ப வைக்கப்படுகின்றது. சமூகம் அன்பினால் இன, மத, குல பேதமாக பிரிந்திருப்பது இனி நடந்து விடக் கூடாது என்றும் விரும்பம் இருக்க முடியும் நம்ப வைக்கப்படுகின்றது. ””நல்ல உறவுகளின் வளர்ச்சியிலிருந்து தேசிய ஒற்றுமையும், தேசிய உறவுகளும் எழும்” என்பது சாத்தியமில்லை””. (349)
மலையகம் :
இது ஒரு புறமிருக்க தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரச்சனை முக்கிய பிரச்சனையாகும். காட்டுப் பாதையை சீரமைத்தார்கள், காடுகளாக இருந்த நிலத்தை பண்படுத்தி பூங்காவாக்கினர், தோட்டங்களை அமைத்துக் கொடுத்தார்கள், தொடர்வண்டிப் பாதையை அமைத்தார்கள், இந்த மக்களின் உழைப்புத் தான் கடந்த 200 வருட காலத்தில் கோப்பி, தேயிலை, இரப்பர், இதர வாசனைத் திரவியங்களான ஏலக்காய், கறுவா, கராம்பு உற்பத்தியினால் அன்னியச் செலவானியை ஈட்டிக் கொடுத்த மக்களாவார். 1949 முன்னர் குடியுரிமை பறிப்பதற்கு முன்னர் பெரும்பான்மையானவர்கள் மலையகத் தமிழர்களே.
***தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்விற்காக
***இந்திய தோட்டத் தொழிலாளர் என்ற கொத்தடிமைச் சட்டத்தை எதிர்த்து
***தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த நிலம் வாங்க முடியாது. அவர்கள் வேலை செய்யும் காலம் முழுவதும் வாழ்வதற்கு மட்டுமே. மலையக மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை இவர்களால் செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறியே.
இவைகள் மலையக மக்களின் உடனடிப் பிரச்சனையாகும். இதேவேளை தாம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள்.
மலையக மக்களுக்கான வாக்குரிமை முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதேவேளை சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக திருப்பி அனுப்பப்பட்ட மக்கள் இன்றுவரையில் இந்திய குடியுரிமை, ஏனைய உரிமைகள் கிடைக்காது வாழ்கின்றார்கள். அவர்களின் நலனின் பொருட்டும் செயற்பட வேண்டும்.
1972 ஐந்தாம் படை என்று மலையக மக்களை குறிந்து (இந்திய விரிவாதிக்கத்திற்கு துணை போவர்) இன்று வரையில் சுயவிமர்சனம் செய்யவில்லை.
முஸ்லீம்
முஸ்லீம் மதச் சிறுபான்மையினர் பற்றிய போதுமான மார்க்சிய ஆய்வு அதிகம் இல்லை. இலங்கை முஸ்லீம் சமூகத்தில் கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் மரபுரீதியான தமிழ் மக்களிடம் இருந்து மதமாறிய பெரும்பகுதி மக்களாகும். அவர்களின் வரலாற்றை கீழக்கரை, காயல்பட்டினம், தூத்துக்குடியின் வரலாற்றுடன் இணைத்து படிக்க வேண்டியுள்ளது.
தென்பகுதி வணிக வர்க்கம்- படித்த மேட்டுக்குடியினர்- மதத்தலைவர்களின் பின்னால் அணிதிரட்டப்பட்ட மக்களாக இருக்கின்றார்கள். இவர்களின் அடிப்படை மதத்தினை தமது அடையாளமாக முன்னிறுத்துகின்றார்கள். தம்மை தமிழர் என்று கருதுபவர்களும் உள்ளார்கள். தமிழே தாய்மொழி என்பவர்களும் உள்ளார்கள். சிலர் அரபை தமது மொழியாகக் கொள்ள வேண்டுமென்பவர்களும் உள்ளார்கள். ஆனால் இவர்கள் பண்பாட்டுத் தேசியவாதம் பேசும் மக்களாக இருக்கின்றார்கள். இவர்களின் இருப்பு ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதிலிருந்தே அவர்களின் அடிப்படையை விளங்கிட முடியும். (ஆய்வுக்குரிய விடயங்கள் உள்ளது) ஆனால் வரலாற்று ரீதியான மத ரீதியான அணிதிரட்டலுக்கு வரலாறு உண்டும். அதனை உலக வரலாற்றுடன் அறிந்து கொள்வோம்.
‘‘Pan இஸ்லாமிய ஒரு பிற்போக்கு மற்றும் அரசியல் சித்தாந்தம், இது 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், சுல்தான் துருக்கியில், துருக்கிய நிலப்பிரபுக்கள் முதலாளிவர்க்கத்தினர், மற்றும் மதகுருமார்களிடையே தோன்றியதாகும். பின்னர் இது முஸ்லிம்களின் சொத்து படைத்த வர்க்கத்தினரிடையே பரவியது. இசுலாத்தை வழிபடும் (முஸ்லிம் மத) மக்களினங்களையும் ஒன்றுபடுத்துவதாக இது கூறிக் கொண்டது . பான்- இஸ்லாமியத்தின் உதவியுடன் முஸ்லிம் மக்களின் ஆளும் வர்க்கங்கள் அவர்களுடைய நிலையைப் பலப்படுத்திக் கொள்ளவும், கிழக்கின் உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதற்கும் முயற்சி செய்தன.
பான்- துருக்கியத்தின் குறுக்கோள் அனைத்துத் துருக்கி மக்களினங்களையும் துருக்கிய ஆட்சிக்குக் கீழ்ப்படுத்துவதாகும். அது 1912-13 பால்கன் யுத்தங்களின் போது தோன்றியது. 1914-18 யுத்தத்தின் போது, அது மிகவும் தீவிரமான ஓர் ஆதிக்கவெறி கொண்ட சித்தாந்தமாக வளர்ந்தது. ரஷ்யாவில் அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு, பான் - இஸ்லாமியமும், பான் - துருக்கியமும் சோவியத் அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்காக எதிர்ப்புரட்சி சக்தியிளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியதிற்கும் மக்கள் ஜனநாயகத்திற்கும் எதிரான ஏகாதிபத்திய யுத்தத்திற்கான தாயாரிப்பிலும், தேசிய விடுதலை இயக்கங்களை நசுக்குவதற்காகவும், பான்- இஸ்லாமிய மற்றும் பான்- துருக்கியத்தை, ஆங்கிலோ - அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய முகாமைகளாகப் பயன்படுத்தினர்.” (5ஸ் 404)
இந்தப் போக்கு உயர் குழாமால் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பது பற்றிய சில எழுத்தாளர்கள், பத்திரிகைச் செய்தி ஊடாக அறிந்து கொள்வோம். அந்த மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று என்னால் ஆரூடம் கூற முடியாது. இது தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறவும் முடியாது.
சில செய்திகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியின் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகிக்கொள்வதாகவும் இம்முறை பொதுத் தேர்தலிலும் தான் போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.(வீரகேசரி)
‘‘சுதந்திர பத்திரிகையாளரான நிஜாம்தீன் தெற்கு இலங்கை நகரமான காலியில் உள்ள தனது சுற்றுப்புறத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் திசாநாயக்கவை ஆதரிப்பதாகக் கூறினார். "இது இலங்கையின் பாரம்பரிய அரசியலின் முறிவு என்று நான் கருதுகிறேன்" என்று அவர் அல்ஜசீராவிடம் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொவிட் பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னர் முஸ்லீம் சமூகம் "முக்கிய கட்சிகளுடன் மட்டுமல்ல தங்கள் சொந்த பிரதிநிதிகள் குறித்தும்நம்பிக்கையை இழந்தது" என்று நிஜாம்தீன் கூறினார்.
"தேசிய தலைவர்களும் நமது சொந்த முஸ்லீம் தலைவர்களும் ஒவ்வொரு தேர்தலிலும் பல விஷயங்களை உறுதியளித்தனர் ஆனால் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. கோவிட்-19 பரவலின் போது கோட்டபய ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தபோது முஸ்லீம் சமூகம் மிகவும் வேதனை அடைந்தது "என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
எனவே இது அனுர குமாராவுக்கு (திசாநாயக்க) வாக்களித்ததை விட முஸ்லீம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட அந்த தலைவர்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்காக நான் உணர்கிறேன். ஆனால் அவர் இப்போது ஆட்சியில் இருப்பதால் எல்லாம் ஒரே இரவில் தீர்க்கப்படும். (தகவல்-வீரகேசரி)
‘‘மெளலானா மெளதூதியை புகழ்ந்த பலர், இப்போது தோழர்களான ரோஹண விஜேவீரவையும், அனுர குமாரவையும் புகழத் தொடங்கி உள்ளனர்!
JVP குறைந்த பட்ச இடதுசாரிய அமைப்பு, NPP என்பது அதன் அரசியல் கூட்டு முண்ணனி. முஸ்லிம்களுக்குள் உள்ள மதவாத அமைப்பின் உறுப்பினர்களை , “ பஞ்சத்திற்கு ஆள்” என்ற கோதாவில் Jvp, NPP இறக்க யோசிப்பதே தவறு! இதன் சீரழிவை , பின்னர் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்!
மக்கள் ( முஸ்லிம்கள்) சுயாதீனமாக முடிவெடுப்பார்கள்! அவர்களுக்கு இடையில் புகுந்து , குட்டையை குழப்பாதீர்கள்! மக்கள் ஜனநாயக சுயாதீன அரசியலுக்கு வழி விடுங்கள்! ...Arijil Hanifa
தமிழ் தேசிய…
தமிழ் தேசிய ஜனநாயகப் போராட்டத்தை முன்னோக்கி செல்லும் பாதையை கண்டடையாத நிலையில் பல குழப்பங்கள் ஏற்பட்டே தீரும். இங்கு பலருக்கு தமிழர்களின் அரசியல் என்ன என்பது பற்றிப் புரிதல் இல்லை. இதனால் ஆட்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக் கூறுகின்றார்கள்.
தேசிய ஜனநாயகப் போராட்டம் என்பது தேர்தல் அரசியல் கட்டமைக்கவும் முடியாது.
இப்போ தமிழ் கட்சிகளிடையே தேர்தல் பற்றிய உரையாடலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சிகளுக்கே தேசிய ஜனநாயகப் புரட்சி பற்றி முழுமையான தெளிவில்லை.
*** ‘‘சுயநிர்ணயத்திற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆணை தாருங்கள்”
*** ‘‘எமக்கு 15- 20” நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத் தாருங்கள் என்பதாகவே இருக்கின்றது.
இந்த தேர்தல் முறை என்பது ஊழல் பெருச்சாளிகளைத் தான் உருவாக்கி வைத்திருக்கின்றது. தேர்தல் முறையின் ஊடாக எவ்வித பேரம் பேசலும் இவ்வளவு காலமும் நடைபெறவில்லை.
ஒவ்வொரு அணியும் வெவ்வேறு ஓட்டம் ஓடுகின்றார்கள். அணிகளின் தேவையும் தேசிய ஜனநாயகப் புரட்சியின் தேவையும் ஒன்றாக இல்லை.
இன்றைய தேர்தல் முடிவு சமூகத்தில் உள்ள ஓரு பகுதியினரை குழப்பத்தில் வீழ்த்தி விட்டது என்னவோ உண்மைதான். பல முகங்கள் இப்போ வெளியே வருகின்றன. இந்தப் பிரிவு எப்பவும் ஊசலாட்டம் கொண்டதாகவே இருக்கும். அதாவது சாதாரண மக்களில் உள்ள பிரிவினர்.
கட்சி, மக்கள் பிரிவினர் சரியான தெளிவைப் பெற்றால் தேர்தலுக்கு அப்பால் ஐக்கியமாக இருப்பார்கள். பெருந்தேசிய முகமூடிகளுக்கு தகுந்த பதில் கொடுப்பார்கள்.
புலியெதிர்ப்பாளர்கள்- போலி இடதுசாரிகள்
புலியெதிர்ப்பாளர்கள், வாய்ப்பாட்டு வாத மார்க்சியர்கள், பழைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், ரொட்ஸ்கியவாதிகள் என்போர் களத்தில் இறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு சமூகத்தை முன்னோக்கிய பாதைக்கு கொண்டு செல்லக் கூடிய கோட்பாடுகளை சுயமாக வகுத்தது கிடையாது. ஆனால் ஜெயம்பதியுடன் பின்னால் ஓடினார்கள், இன்று அனுரவிற்குப் பின்னால் ஓடுகின்றார்கள். தமக்கெட்டிய விடயங்களை கோட்பாடுகளாக்க முயற்கிக்கின்றார்கள்.
பல இடங்களும் ஒடித் திரியும் ஒரு பேர்வழியின் கருத்தைப் அவதானிப்போம். “இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. உங்களைப் போன்றவர்கள் இச் சந்தர்ப்பத்தில் பல செய்ய வெண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் தேசியம் என்ற பெயரில் இதுவரை நடத்திய போலி அரசியலின் முகத் திரையை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதே வேளை பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்க அடிப்படையிலான தீர்வை சிங்கள மக்களும் ஏற்றுள்ளதோடு தமிழ் மக்களும் அனுர, சஜித் என்போருக்கு பெருமளவு வாக்களித்து அங்கீகரித்துள்ளார்கள். எனவே ஜன்னாயகத்தை நேசிப்போர் இம் முடிவை பலப்படுத்துவ்தோடு, குறும் தேசியவாத அரசியல் இனிமேலும் முன்னோக்கிச் செல்வதை தடுப்பதையும் நிறுத்த வேணும். என்வே மேற்குறித்த அரசியல் போக்கை ஆதரிக்கும் சக்திகள் ஒரே அணியில் திரண்டு தமிழரசுக் கட்சியை பலமான ஜனநாயக அமைப்பாக மாற்ற பங்களிக்க வேண்டும். அதே வேளை தமிழரசுக் கட்சி பரந்த அமைப்பாக மாற்றும் வகையில் சகல சக்திகளுக்கும் அழைப்பை விடுக்க வேண்டும். இதுவே எமது பணி. ஆர்வமுள்ள அனைவரும் குரிப்பாக இடதுசாரி மைய சக்திகள் செயற்பாட்டில் இறங்க வேண்டும்.‘‘
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்பது போல
தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்பது வேறாகும். இவைகள் மனிதர் கூட்டத்தின் பிறப்புரிமை சார்ந்த அரசியல் உள்ளடக்கம். அந்த உள்ளடக்கத்தை விளங்கிட அரசியல் அறிவு வேண்டும். அந்த அரசியல் அறிவு இருந்தால் மட்டும் போதுமா? இல்லைவே இல்லை. அதற்கு ஒரு சிந்தாந்தத் தெளிவும் வேண்டும். இனமதகுமலமற்று என்று மக்களை சுரண்டி, தனது பண்டங்களுக்கான சந்தையை நிலைநிறுத்திக் கொள்வது, அந்த சந்தையை பாதுகாக்க பயன்படும் கருத்துருவாக்கம், உருவாக்கிகள் என எங்கும், எப்பவும் இருந்துள்ளார்கள். ஒடுக்கும் நிறுவனக் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் இருக்கப் போவதில்லை. தோல்வியுற்ற தேசத்தின் அரச கட்டமைப்பை மட்டும் மீளச் சீர்செய்வதற்காக கோரிக்கை விடுகின்றார்கள். அந்த தோல்வியுற்ற தேசமோ இன்னொரு தேசத்தினை ஆக்கிரமித்து வைத்துள்ளது.
அந்த ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் பொருளாதார வளர்ச்சி, மொழி, பண்பாடு, நிலப்பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விடயமே. இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை பேசவேண்டுமா? தேசம் என்பது இன்னொரு தேசத்திற்கு சமாந்திராக வளர்வதாகும். சமாந்திரமான தேச வளர்ச்சிக்குக்கு துணை போகாது இணங்கி (ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் காகோலை இடுப்பில் கட்டி ஆதிக்க சாதிகளின் கிராமங்கள் ஊடாக நடந்து போவதே சனநாயகம் என்று போதிப்பது போல)
தமிழ் தரப்பில் முற்போக்கு சனநாயக வழியில் சிந்திப்பவர்கள் அரிதாக இருக்கின்றார்களா? சரி இருப்பார்கள் என்றால் அதனை முன்னேறிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை உள்ளது. அந்தக் கடமையை செய்யாது உபதேசம் செய்கின்றார்கள்.
ஈழப் போராட்டம் அடிப்படையில் சிரட்டை கொண்ட வடிவத்தை உடைத்துக் கொண்டு முளையில் விட்டு தேங்காய் ஓட்டை உடைந்து வெளியே வந்தடைவது நாற்றாகும்.
குட்டிமுதலாளிய சிந்தனை, பிரதிநிதிகள் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைவது போல. ஒடுக்கப்பட்டவர்களில் உள்ள (சாதி) பிரதிநிதித்துவம் கோருகின்றார்கள். வர்க்கப் பார்வை விட்டு அடையாள அரசியலுக்குள் இருந்து அலம்புகின்றார்கள். இந்தப் பேர்வழிகள் என் அனுபவத்தின் படி கடைந்தெடுத்த ஆதிக்க வெறியர்கள்.
இந்த ஆதிக்க வெறியர்கள் தம்மை மேன்மக்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் காட்டிக் கொள்ளும் கடைந்தெடுத்த சமூக வீிரோதிகள்.
NPP என்போர் ஏதோ கொவிகம- சிங்கள வெள்ளாயியத்தை உதறிவிட்டு வந்து மேன்மக்கள் போல கட்டமைக்கப்படுகின்றது. NPP மார்க்சியம் படித்தவர்களா? அது எந்த வகை மார்க்சியம்? பட்டப்படிப்பு படித்தால் சமூகப் பொருளாதார உறவை விளங்கிக் கொண்டவர்கள் ஆவார்களா?
சமூக மாற்றத்தை வழிநடத்தக் கூடியவர்கள், தலைமை தாங்கக் கூடியவர்கள் உழைக்கும் வர்க்கம் என்பதில் சந்தேமில்லை.
யாழ் மேயர் என்பவர் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி. அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து இனவழிப்பை ஏற்று, நியாயப்படுத்திய வரலாறு உண்டு. ஒருவர் ஒடுக்கப்பட்டவர் என்பதால் மாத்திரம் புனிதராக முடியாது. அவரது வர்க்க நிலை என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். யாழ் நூலகம் இனவழிப்பின் அடையாளம். இனவழிப்பின் அடையாளத்தை மூடிமறைக்கின்ற கபட அரசியலுக்கு துணை போனவர்களை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் வெள்ளையடிக்க முடியாது.
பிரமுகர்களே ஆதிக்கசாதி மேன்மை நிறுவதற்காக நீங்கள் புனிதர்களாக காட்டுங்கள்.
ஆதிக்கசாதி கணவான்களே!!
**நீங்கள் உங்களை மற்றவர்களை விட கணவான்களாக காட்டிக் கொள்ளுங்கள்.
**மற்றவர்களை விட புது வடிவத்தில் சிந்திப்பதாக காட்டிக் கொள்ளுங்கள்.
**ஈழப் போராட்டம் என்பதே பிரிவாதமாக காட்டுங்கள்.
இனமதகுலமாக சிந்திக்க முடியாதவர்களின் போக்காக காட்டுங்கள்.
**ஈழப் போராட்ட அமைப்புகளே பாசிசவாதிகள் எனக் காட்டுங்கள்.
**சாதியம் சிந்தனை, உழைப்பு, வேலை என்பதை தீர்மானிக்கும் நிலை பற்றி புரிதல் கொண்டவர்களாக நீங்கள் நிலைநிறுத்துங்கள்.
ஏகாதிபத்தியத்தின் மீதான எதிர்ப்புப் போர் என்பது வெவ்வேறு சமூக அலகில் இருந்து தொடங்கிட வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் கட்டமைக்கப்படவில்லை. ஏன் அங்கிருக்கும் தேசிய இனச் சிச்கலையும் அது உள்வாங்கவில்லை. இடதுசாரி என்பவர்கள் பொருளாதாரவாதிகளாக சீரளிந்து உள்ளதை மீளாய்வு செய்ய முயல்கின்றார்களா? சமூகக் கட்டத்தை கடப்பதற்காக போராட்டத்தினை தொடராத அனைத்துவித நிலைப்பாடுகளையும் மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும்.
-- இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஏன் புதிதாக சிந்திக்க முடியவில்லை என்பதை யாராவது ஆராய்கின்றார்களா?
சமூகப் பொருளாதார அசைவியத்திற்கு ஏற்ப அரசியல் பயணிக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போக்கிற்குச் செல்கின்றார்கள்.
இனவழிப்புச் செய்த அரசியல் கட்டமைப்பை தொடர்ந்தும் நம்பும் படியான அரசியல் முன்வைப்பது மிக மோசமான போக்காகும். சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பின் தூண்களாக இருந்து செயற்பட்ட அரசியல் சக்திகள் மீதான மதிப்பீடு என்பது மாற முடியாது. அதன் சிந்தனை வடிவம் என்பதே ஆழ பதிந்துள்ளது. அது இது வரையில் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை, தலைமைச் சக்திகளும் அதன் சிந்தனையை அனுசரித்தே செல்கின்றன. இவ்வாறு இருக்கையில் ஒடுக்கப்பட்டவர்களாகிய எம்மவரின் கட்சிகள் ஏன் இவ்வாறு சீரளிந்த போக்கை தொடர்கின்றன?
தமிழ் சமூகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான அரசியல் பாதையை முன்னெடுத்து வைக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கமானது வெற்றியை சாதிக்க வேண்டும் என்றால் தேசிய இனவேறுபாடுகளை தகர்த்து ஒன்றுபட வேண்டும். இது சரியான விளக்கமாக தெரியும். ஆனால் சமூக அமைப்பின் போக்கை இவ்வாறு தட்டையாக விளங்கிட முடியாது. முதலாளித்துவ கட்டத்திற்கானதாக கணிக்கப்பட்டிருந்த வேளையில் அது சரியாக இருந்திருக்கின்றது. ஆனால் சோசலிச, ஏகாதிபத்திய கட்டத்தில் சுயநிர்ணயம் பற்றிப் பேசப்படுகின்றது. அந்த நிலையை வந்தடைந்த பின்னர் பழையதை ஒப்புவிக்க முடியாது.
தேசிய பொருளாதாரக் கட்டமைப்பை அவசியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இது சுயநிர்ணயம் சார்ந்த விடயத்தை சட்டத்தினுள் குறுக்கிவிட்டமையை இன்று அவதானிக்க முடியும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்பது அடுத்த கட்டத்திற்கு அவசியமானதாகும்.
சுயநிர்ணயத்திற்காக போராட்டத்தை தலைமை தாங்கிட வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை. தேசிய, குட்டிமுதலாளிய, தரகு வர்க்கமே தமிழ் தரப்பை பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருகின்றார்கள். தேசிய ஜனநாயகக்கட்டத்தை பாட்டாளி வர்க்கமே தலைமை தாங்க வேண்டும். அந்த வெற்றிடம் உள்ளது. அதற்காகவும் போராட வேண்டியுள்ளது.
தேசிய ஜனநாயகப் புரட்சியை மறுதலித்துவிட்டதை இன்று இடதுசாரிக் கட்சிகள் நிறுவுகின்றது. இதற்கு மாற்றாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும். அந்த வெற்றிடத்திற்கான போராட்டமும் உள்ளடங்கியதே. திரிபுவாத இடதுசாரிகளின் பின்னால் எம்மைப் போன்றவர்கள் பயணிப்பதில் அர்த்தமில்லை
தமிழ் கட்சிகளின் பிளவு என்பது யாருக்கு நன்மை கொடுக்கின்றதோ இல்லையோ பலன் பெறுபவர்கள் சுமந்திரம் மற்றும் சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள்.
இடதுசாரியத்தின் கவற்சிவாத முகத்தின் மீதான விம்பத்தை விதைக்கும் போலி தமிழ் இடதுகள், தீவிர இடது எதிர்ப்பாளர்களின் தொல்லை மறுபுறம் தொடர்கின்றது. இந்தப் பிரிவு தாம் முற்போக்காளர்கள் என்ற விம்பத்தை தொடர்ந்து காப்பாற்றவும், ஜீவகாரூண்யத்தை வெளிப்படுத்துவதே முதன்மையான போக்காக உள்ளது.
இந்த இடதுகள் கவற்சிவாதத்திற்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இந்தப பிரிவு கோட்பாட்டுப் பிரச்சனையில் தெளிவற்றவர்களாகவே இருக்கின்றார்கள். கோட்பாட்டுத் தளத்தில் எவ்விதத்திலும் முன்னேறிய சிந்தனையை வளர்த்துக் கொண்டவர்கள் கிடையாது.
கோட்பாட்டு ரீதியாக தெளிவற்றவர்களின் கூற்றை வைத்துக் கொண்டர்கள் பின்னே மக்கள் செல்ல முடியாது.
இவர்கள் கூறும் மாற்றம் என்பது என்ன? அது அவர்களுக்கே தெரியாது. கோட்பாட்டு ரீதியாக ஜனரஞ்சக நிலையில் தான் கொண்டுள்ளார்கள்.
போலி இடதுசாரிகள் திடமான கொள்கை அற்றவர்களாக இருக்கின்றார்கள். இந்தப் போக்கே பெருந்தேசியத்தினுள் தேசத்தையும், தேசிய இனங்களையும் கரைந்து செல்லும் அரசியலுக்கு இட்டுச் செல்கின்றது. போலி இடதுசாரிகள் செய்யும் திரிபுவாத அரசியலை புரட்சிகரமாக வெளிப்படுத்துகின்றது.

அரசு என்றால் என்ன? அதன் வகைகள், வளர்ச்சிப் போக்கில் அரசு
வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஓர் உறுப்பே அரசு (12) சமூக ஒழுங்கமைவு என்றால் என்னவென்பது தெரியாத அற்பவாதிகள் தான் இன்றுள்ளார்கள்.
‘‘தனிவகைப்‘‘ படைகளுக்கும் ‘‘தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கும்‘‘ இடையிலான உறவு பற்றிய பிரச்சனையை மேற்கூறிய மேற்கோளில் ஏங்கெல்ஸ் தத்துவார்த்த வழியில் எழுப்புகிறார். (16) புராதன சமூக ஒழுங்கமைவில் இருந்து மாறுபட்டு வந்துள்ளது. இயல்பாக மக்கள் தம்மை பாதுகாக்கம் நிலையை மறுத்துக் கொண்டு வளர்ந்து வந்த அரச கட்டமைப்புப் பற்றிய விளங்கிட வேண்டும்.
ஆனால் போலி இடதுகள் தேசத்திற்கான போராட்டத்தை
பிரிவினைவாதமாக அணுகுகின்றனர்.NPP/JVP அறிவுஜீவிகளும் லெனினியம் பேசும் தேசிய இனப் பிரச்சனையை இவர்களால் பேசவில்லை.
பழங்குடிவாழ்வியல் கொண்ட அதிகார வர்க்கம் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றது. அந்த அதிகாரி என்பவர் அன்னியப்படாலம் மக்களால் (charismatic) ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.
நிலப்பிரபுத்துவம் மன்னரால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இதில் தான்
சாதியக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலம். இதை உடைப்பது முதலாளித்துவமே.
முதலாளித்துவத்தின் அதிகார வர்க்கம் என்பது நிறுவனக்கட்டமைபுக் கொண்டதாக இருக்கின்றது. அங்கு மக்களின் விருப்பு என்பது அவசியமற்றதாக இருக்கின்றது. அதிகார வர்க்கத்திற்கு கட்டுப்பட்ட மனிதர்களாக இருக்கின்றார்கள். இந்தக் காலத்தில் அரசின் கட்டமைப்பு மேம்பட்ட நிறுவனமாக உருவாகின்றது. இதன் பின்னர் தான் கடற்படை, விமானப்படை, தரப்படை என்றும் காவல்துறை என்றும் பாதுகாப்பு படை வலிமையாக நிறுவனக்கட்டமைப்பாக உருவாகின்றது. இலகுவாக இருந்த அரசு என்பது வலிமை கொண்டதாக வளர்ச்சி அடைந்தது.
ஏகாதிபத்தியம் வளர் நிலையில் இருந்து வளர்ச்சி உற்ற காலத்தை அரசு நவீனமயாக்கி இறுக்கமாக்கியது. முன்னர் வெட்டரிவாள் வேல்கம்பு கொண்ட சமூகக் கட்டமைப்பு இல்லை. ஏகாதிபத்திய கட்டத்தில் தேசிய எழுச்சி என்பது தவிர்க்க முடியாதது. அது சர்வதேசியவாத்தை ஊக்குவிப்பதாகும். அது தன்னலவில் தனக்கான கடமையை செய்வதாகும். புகாரியவாதத்தை முன்னெடுக்கும் இந்தச் சக்திகளை ஆதரிப்பது சந்தர்ப்பவாதம். புகாரியவாதிகளுடன் கரைந்து போகச் சொல்கின்றார்கள். மார்க்ஸ் பேசுகின்ற சமூகக் கட்டத்தை விளக்கிக் கொள்ளாத போக்மும், மார்க்சிய விரோதிகளிடம் சமூகம் விலகி நிற்க வேண்டும்.
(தமிழ் கட்சிகள் பற்றிய விமர்சனம் தனியாகப் பார்க்கப்பட வேண்டும்.) குட்டிமுதலாளி, தேசிய முதலாளிய , குட்டிமுதலாளிய வலது பிரிவுகளின் போக்கு பின்னடைவே ஏற்படுத்தியுள்ளது.)
No comments:
Post a Comment