Popular Posts

Monday, 23 June 2025

பத்மநாபா தீர்க்கதரசியா? திரிபுவாதியா?

 

 

Indian Peacekeeping Forces-soldiers, prob. In Trincomalee. 

            பத்மநாபா தீர்க்கதரசியா? திரிபுவாதியா

 

 

நாபாவின் சிந்தனை வழிதான் இனி தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல, முழு இலங்கைக்கும் பொருத்தமுடையதாகும் என நேற்றைய தினம் கிளப்ஹெவுசில் நாபாவின் நினைவுநாளில் பலர் பேசினார்கள்.

இவ்வாறு பேசுபவர்கள் நாபாவின் எழுத்துகளை முன்னிறுத்திப் பேசவில்லை. அதற்கான சான்றுகள் எதுவுமற்று மார்க்சியத்துடனும் தொடர்பை இணைக்கின்றார்கள். இந்தக் உரையாடல்கள் தம்மை இடதுசாரிகள் என பிரகடனப்படுத்தியே வெளிப்படுத்துகின்றார்கள்.

 

தேசிய இனப்பிரச்சனை தீர்வு பற்றிய லெனின், ஸ்ராலின் போன்றவர்கள் தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார்கள். மார்க்சிய மூலவர்களின் கருத்துக்கும் நாபாவின் கருத்துக்கும் உள்ள முரண் மற்றும் உடன்பாடா விடயங்களை இணைத்துப் பார்ப்பதுமில்லை.

நாபாவின் அரசியல் முடிவிற்கு அப்பால் எதுவும் இல்லையா? அவ்வாறு என்ன இருக்கின்றது.? இவ்வாறு பேசுபவர்களின் பின்னணியை கவனிக்கும் போது இவர்களின் உள்ளார்ந்த அரசியலை விளக்கிக் கொள்ள முடியும். நாபாவின் எழுத்துகள் என்று எதுவும் சான்றாக இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் முன்வையுங்கள்.

1.     ரொட்ஸ்கிய- புகாரியச் சிந்தனை (சந்திரிகாவின்)

2.    தீவிர புலியெதிர்ப்பாளர்கள் (தேவையான போது மகிந்தவுடன் நிற்பார்கள், NPP/JVP or FLSP நிற்பவர்களின்.

3.    மார்க்சியத்தை தமக்கு ஏற்ப திரிந்து வளைத்துப் போடும் அரசியல் போக்கு கொண்டவர்கள்.

4.    இந்திய உளவுத்துறையைச் சார்ந்த நபர்

இந்தப் பிரிவினரின் அரசியல் போக்கில் இருந்து நாபாவை  அணுகமுடியுமே. மாறாக நாபாவின் எழுத்துகளில் இருந்து எழுத முடியாதுள்ளது. இந்தப் பிரிவு தாமே தூய இடதுசாரிகள் என்று பிரகடனப்படுத்துவதை தொடர்ச்சியாக மேற்கொள்பவர்கள்.

 

அரகலை வெற்றியா?

புரட்சி வென்று விட்டார்கள் என்று பிரகடனப்படுத்துகின்றார்கள். அரகலை என்பது முஸ்லீம் வெறுப்பு, பெருந்தேசியவாதம், பல்வேறு பிரச்சனைகளை வெளிப்படுத்தித் விட்டது. பொருளாதாரப் நெருக்கடி, ஊழல் போன்றவற்றை இல்லாதாக்கி புதிய இலங்கையை படைக்கும் சக்தி ஆட்சிக்கு வந்து விட்டது. இதன் எல்லை என்பதை விளங்கிவிடாத போக்குத்தான் உள்ளது. வரலாற்றில் தேர்தல் ஊடாக சோசலிச பொருள் உற்பத்தியைக் கொண்ட சமூகத்தைப் படைத்த வரலாறு எங்கும் இல்லை. 1973இல் சிலியின் அனுபவத்தை கற்றுக் கொள்பவர்களாக இல்லை. அதே போல 1871ன் பரீஸ் கொம்யூன் புரட்சியின் படிப்பினையையும் கவனத்தில் கொள்ள முடியவில்லை. தேர்தல் நடந்த பின்னர் NPP ஆட்சியாளர்கள் தம்மால் எதையும் செய்ய முடியவில்லையாம். இதனை எதிர்க் கொள்வதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமாம். தமிழ் மக்களின் ஒத்துழைப்பை பெறுவது என்றால் அவர்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இவர்கள் இனமதகுலமற்ற இலங்கையை படைப்போம் என்பது மேலாதிக்கம் கொண்ட சிங்கள தேசத்தின் பிரசைகளாக வாழ்வதே அன்றி வேறில்லை.

தோல்வியுற்ற சிங்கள தேசக் கட்டுமானத்தை மீளக் கட்டமைக்க ஏன் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும்? ஆனால் தமிழ் தேசம் தனக்கான மூலதனத்திரட்சியை பெறமுடியாமல் இருப்பதற்கான காரணத்தையும் ஆராய இந்த நாபா இரசிகர்கள் தயாராக இல்லை.

(அரகலை- பற்றி மேலும் வாசிக்க https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2022/09/blog-post.html )

 

குறுந்தேசியவாதம்

தேசத்திற்கான போராட்டத்தை குறுந்தேசியவாதமாக அணுவது மார்க்சியப் பார்வை அல்ல. தேசிய விடுதலை என்பது சொந்த நாட்டில் உள்ள தேசிய ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பதாக பொருள் படுகின்றது.

சிங்கள பௌத்த பேரகங்காரச் சிந்தனைவடிவத்தினுள் தான் சிங்கள தேசம் சமூகமயப்பட்டிருக்கின்றது. சிங்கள தேசம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்திமுடித்திட வில்லை. இந்த அதே அரைநிலமானிய சிந்தனைக் கட்டமைப்பாதுகாத்து நிற்கும் இன்றைய ஆட்சியாளர்களையும்ஏன் ஆதரிக்க வேண்டும்?

இது ஒரு பொன்னான சந்தர்ப்பம் என்று கதைகட்டுகின்றார்கள். இது வரையில் எந்த விடயங்களையும் தமிழ் மக்கள் நம்பும் படியாக செய்துவிடவில்லை.

புலியெதிர்ப்புவாதிகள் சிறுபான்மை என்று தான் தமிழர்களை அழைக்கின்றார்கள். இவர்கள் மார்க்சிய கோட்பாட்டு அடிப்படையில் மறுத்து நிற்கின்றார்கள்.

தமிழர் போராட்டம் குறுந்தேசியவாதம் அல்ல. (மேலதிகமாக வாசிக்க

https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2016/02/ )

 

இரண்டாம் புரட்சி

இரண்டாம் புரட்சி என்பது சுயபொருளாதாரம், ஜனநாயகம், நவதாராள எதிர்ப்பு என்று கூறுகின்றார்கள். இதற்காக அரசியல் பொருளாதார அடிப்படையில் அரசியல் செயற்பாடுகள் இருப்பதாக எண்ணுகின்றார்கள். இவர்களின் அகவிருப்பின் அடிப்படையில் இணைத்துவிட்டு தமது விருப்பை முன்வைக்கின்றார்கள்.

குடியேற்றவாதச் சிந்தனைக்கு எதிரானது என்கின்றார்கள்.

1.     ஏகாதிபத்திய எதிர்ப்பு

2.    சுயநிர்ணயத்தை ஏற்பது

3.    நிலப்பிரபுத்துவ சிந்தனை உடைதெறிவது

இவைகள் அடங்கியது தான் புரட்சி. மாறாக தேர்தலில் ஏற்பட்ட முகமாற்றம் எந்த பழைய சமூகக் கட்டமைப்பை மாற்றிவிடவில்ல. இந்தப் பிரிவு சீர்திருத்தம், சமரசவாதம், சமூக தேசியவெறி போன்ற பாதையில் பயணிப்பவர்கள். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வெற்றி பெற்று விட்டார்கள் என்று திரிபுவாதிகள் மாத்திரம் ஏற்றுக் கொள்வார்கள்.

  

அரசு பற்றிய பிரச்சனை

 அரசு:  அரசாங்கம் (நாடாளுமன்றம்), நீதிமன்றம், சிறைச்சாலை, இராணுவம், காவல்துறை, மற்றும் அரசதிணைக்களங்கள். இவைகள் அடங்கியதே. இந்தக் கட்டமைப்பில் பங்குபற்றிய அனைவரும் சிங்கள தேச கட்டமைப்பில் பங்காளிகள். 

13ஐ ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இறைமை, அதிகாரத்தில் பங்குகேட்கின்ற அடிப்படையில் அமைகின்றது. இந்த அடிப்படையில் இனி எழுதப் போகும் யாப்பில் பங்கு கேட்பதாக அமைவதால் ஆகும். அவ்வாறு பங்கு கேட்பதால் சிங்கள பௌத்த பேரினவாத எதேர்ச்சாதிகாரத்தை தடுக்கமுடியும் என்கின்றனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமானது மாத்திரம் அல்ல. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அரசு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசுக்கான போராட்டத்தை ஒப்பந்தத்தின் ஊடாகவே மறுகின்றது. அதிலும் குறிப்பாக ஆளுனர் ஒன்றை உருவாக்கி இந்திய மாதிரி என்று சோடித்துக் காட்டினார்கள். இந்தியாவில் இருப்பது போன்று அரைகுறை அதிகாரம் கூட அற்ற ஒரு வெற்றுக் அமைப்புக் கொண்டதே மாகாண அமைப்பு முறை. அந்த ஆளுனரும் சிங்கள தேசத்தினால் நியமிக்கப்படுவார், ஆளுனரிம் அனைத்திற்கும் ஒப்புதல் பெறவேண்டும்.  ஆளுனரிடம் தான் அதிகாரம் உள்ளது.  வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ``கனவான் ஒப்பந்தம்” (gentleman aggreement) என்பதையும் மீறி ஜேவிபினால் பிரிக்கப்பட்டது. இந்திய அதிகார வர்க்கம் வாய்மொழி மூலம் செய்யப்பட்ட கனவான் ஒப்பந்தமும் காற்றில் பறந்து விட்டது. இதை eprlf முழுமையாக அறிந்துள்ளார்கள். இன்று பத்மநாபா மக்கள் முன்னணி (மகிந்த ஆதரவு அணி) கும்பல் என்ன சொல்லப் போகின்றார்கள்? 

`ஆளுநர்கள் மற்றும் பொதுவாக மேலிருந்து நியமிக்கப்படும் அனைத்து அதிகாரிகள்) ஆகியவற்றை நாங்கள் உறுதியாக ஒழிக்க விரும்புகிறோம். அதன்படி, எங்கெல்ஸ் வேலைத்திட்டத்தில் தன்னாட்சி ஷரத்துக்குப் பின்வரும் வார்த்தைகளை முன்மொழிகிறார்:

"மாகாணங்களுக்கும் [குபேர்னியாக்கள் அல்லது பிரதேசங்களுக்கும்], மாவட்டங்களுக்கும், கம்யூன்களுக்கும் சர்வஜன வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மூலம் முழுமையான சுயாட்சி. அரசால் நியமிக்கப்பட்ட அனைத்து உள்ளூர் மற்றும் மாகாண அதிகாரிகளும் ஒழிக்கப்பட வேண்டும்."

இங்கு அதிகாரிகள் கூட தேர்தல் முறையால் தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறெனில் கட்சி எவரையும் நியமிப்பது இல்லை. அது மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இது ஒரு புதுமையான வடிவமே.  13ம் திருத்தச் சட்டத்தின் படி மெல் இருந்து ஆளுநர் நியமிக்கப்படுகின்றார். இந்த வடிவமும் சுயநிர்ணயம் கொண்ட நிர்வாக அரசும் ஒன்றல்ல.  அரசு பற்றிப் பேசுகின்ற போது வெவ்வேறு வகை அரசு முறை பற்றிப் பேசுவார்கள். இந்த நிலைப்பாடுகள் முதலாளித்துவ அறிவாளிகளில், சீர்திருத்தவாதிகள், மார்க்சியத்தை ஏற்பவர்களிடம் இருந்து மாறுபடுகின்றது. அரசு இறைமை கொண்டதாக இருக்க வேண்டும்.  

அரசு என்பதை வடிவத்தை ஒரு குறிப்பிட்ட வரலாற்றக் கட்டம் வரையில் அவசியம் என்பதில் மார்க்சியம் ஏற்றுக் கொள்கின்றது.

‘‘புருதோனியவாதிகள் தம்மை ‘‘அதிகார -எதிர்ப்பாளர்களாய்” அழைத்துக் கொண்டவர்கள், அவர்கள் எல்லாவகையான அதிகாரத்தையும், கீழ்படிதலையும், ஆட்சியையும் நிராகரித்தவர்கள்.” (87அ.பு) ஏன் அரசு என்பது அவசியம் குறித்த தெளிவு அராஜகவாதிகளிடம் இல்லை.

மையவாதம் என்பது அரசு முறையின் அதிகாரத்தை குறிக்கின்றது. அராஜகவாதிகள் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கின்றார்கள். ஆனால் அரசு ஒன்று இருக்கக் கூடாது என்கின்றார்கள். இது பற்றி அரசும் புரட்சி என்னும் நூலில் விரிவாக எழுதியிருப்பார் லெனின். சனநாயக மத்தியத்துவமும் லெனினியவாதிகளின் சனாநாயக மத்தியத்துவமும் ஒன்றாக இருக்க முடியாது.

‘‘தனது கோதா செயல்திட்டத்தின் விமர்சனம் என்ற நூலில் மார்க்ஸ் எழுதினார்: ‘‘முதலாளித்துவ சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாகப் புரட்சிகரமான முறையில்  மாற்றப்படும் காலகட்டம் இருக்கிறது. இதற்கு இணையான ஒரு அரசியல் இடைநிலைக் காலகட்டமும் இருக்கிறது, இக்கால கட்டத்தில் அரசு என்பது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் தவிர வேறாக இருக்க முடியாது.” இன்று வரை இது சோஷலிஸ்டுகளுக்கு மறுக்க முடியாத உண்மையாக இருந்து வந்துள்ளது. வெற்றிகர சோஷலிசமானது பூரண கம்யூசமாக வளரும் வரை அரசு நிலைத்திருக்கும் என்ற உண்மையை ஏற்பதும் இதிலடங்கியிருக்கிறது. அரசு  வாடி உதிர்ந்து போதல் என்ற ஏங்கெல்சின் சொற்றொடர் நன்று தெரிந்ததே. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம் என்றும் அரசு வாடி உதிர்ந்து போகும் போது அதுவும் வாடி உதிர்ந்து விடும் என்றும் வேண்டுமென்றே தான் நாம் முதல் ஆய்வுரைகளில் வலியுறத்தினோம். எமது எதிராளிகள் மார்க்சியத்துக்குப் பதிலாக ”அரசு அல்லாத” ஒரு வகைக் கண்ணோட்டத்தை மேற்கொண்டாலொழிய அவர்களது வாதங்கள் பெருந்தவறாகவே விளங்கும். (207 தே.இ.பி.பா.ச)

ஆனால் இதனை தவறாக வியாக்கியானம் செய்து கொள்ளப்படுகின்றது.

‘‘சோஷலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கருவியாக அரசு நோக்கப்பட்டது. அரசு பற்றிய இந்நோக்கு மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கான கருத்தியல் உந்தலாக விளங்கியது. 1917 ஆம் ஆண்டில் லெனின் ‘அரசும் புரட்சியும்’ என்ற தலைப்பிலான பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரம் சோஷலிசத்திற்கான மாற்றத்தில் அரசின் பங்கு என்பதன் அர்த்தம் யாது என்பதை விளக்குவதாக இருந்தது. அரசு பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கான கருவி, பாட்டாளி வர்க்கம் புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றிய பின்னர் முன்பு இருந்த அரசு யந்திரத்தை உடைத்து நொருக்கி அதனிடத்தில் புதிய ‘அரசு யந்திரத்தை’ நிறுவுகிறது. (ஜெ.உயன்கொட - எழுநா2)

இங்கு சிங்கள இடதுசாரிகள் என்போர் சிங்களபௌத்த பேரினவாத அடிப்படையில் தான் சிந்திக்கின்றார்கள். ஈழச் சிக்கலில் அரசு பற்றிய விடயத்திற்கு தலைகீழாகவே மார்க்சிய வழிகாட்டலை பொருத்துகின்றார்கள்.

இங்கு லெனின் மயக்கமின்றி தேசங்களுக்கான அரசை வலியுறுத்துகின்றார். இதன் காரணத்தினால் கோதா திட்டம், புருத்தோனியத்தை மறுக்கின்றார். அராஜகவாதிகளைப் பற்றிப் பேசுகின்ற போது லெனின் தெளிவாக வரையறுக்கின்றார்.

 

1. அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாக கொண்டுள்ள அதேவேளை சோசலிசப் புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான், சோலிசம் நிலைநாட்டப்படுவதன் விளைவாய் மட்டுமே, இந்த நோக்கம் நிறைவேற முடியும், அரசு உலர்ந்து உதிர வழி வகுக்கிறது. அரசை உடனடியாக ஒழைக்க முடியாது. அரசை அராஜகவாதிகள் நிராகரிக்கின்றார்கள்.

2. பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை வென்று கொண்டதும் இது பழைய அரசு பொறியமைவை அடியோடு அழித்துவிட வேண்டுமென்பதையும், அதனிடத்தில் கம்யூன் வகைப்பட்ட ஆயுதம் ஒன்றை நிறுவிக் கொள்வது அவசியமென்பதை அங்கீகரிக்கின்றார்கள். இதனை அராஜகவாதிகள் மறுக்கின்றார்கள்.

3. அரசைப் பயன்படுத்தி புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்திற்கு பயிற்சி  வேண்டுமென்று கோருகின்றார்கள். அராஜகவாதிகள் நிராகரிக்கின்றார்கள். (161 அரசும் புரட்சியும்)

 

தமிழ் மக்கள் வேண்டியிருக்கும் அரசை மறுப்பவர்கள் மார்க்சியர்கள் அல்ல. மார்க்சியத்தை தமக்கு ஏற்றால் போல திரிக்கின்றார்கள். அரசு முதலாளித்துவ கட்டத்திலும், சோசலிச கட்டத்தில் அவசியமானது. 

 

மண்? மக்களா?

நாபா மண்ணை நேசித்தார் என்று வரட்டுத் தனமாக பேசவில்லை. அவர் மக்களை நேசித்தார். குறுங்குழுவாதிகளைப் போல் அல்லாமல் அனைத்து மக்களையும் நேசித்தார். இவை ஒன்றுக்கு ஒன்று முரணான அரசியல் நிலைப்பாடாகும்.

மண் என்பது தனித்து இயங்குவதில்லை. மண் மக்கள் உருவாகுவதற்கு முன்னரே மண் இருந்துள்ளது. அந்த மண்ணில் தோன்றிய மனிதர் அதன் வெளிவடிவம் அவ்வளவே. இங்கு நவீன காலத்தில் தேசத்தின் உரிமை பற்றிப் பேசப்படுகின்றது. அப்போ மற்றைய மூன்றுவிடயங்களையும் இணைத்தே பேசவேண்டும். சமூக ஓட்டத்தை வியாபகமாக அணுகுவது என்பது அது தான். பொருளாதாரம் என்கின்ற போது மூலதனத்திற்கும் தேசத்திற்குமான வளர்ச்சியின் பங்கு பற்றியும் ஆராயப்பட வேண்டும். ஒன்றை தவிர்த்துவிட்டு அதில் இருந்து கோட்பாட்டு முடிவு எடுக்க முடியாது.

ஒரு மார்க்சியர் தன்சொந்த தேசிய இனத்தின் விடுதலையுடன் சமரசம் செய்துவிட முடியாது. மண், பொருளாதாரம், பண்பாடு, மொழி இவைகள் அடங்கியது தேசம். தேசம் என்பது மக்கள் அடங்கியது தான். அவர்களுக்கே கோட்பாட்டுப் புரிதல் இல்லை. இதனால் மக்களையும் மண்ணையும் பிரித்துப் பார்த்து பெருமை அடைகின்றார்கள்.

தேசிய விடுதலை- முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி- சோசலித்திற்கான பாதை அமைத்தல். இவை பற்றிய தெளிவு நாபாவிடம் இருந்துள்ளதா?

சுயநிர்ணயம் என்பது அரசுபற்றிய பிரச்சனை. தமிழர் பிரச்சனையில் அரசைமறுக்கும் ஜேவிபியின் அரசியல் எவ்வாறு முற்போக்கானது?

 

சுருக்கமாக இலங்கை முழுவதற்குமான விடுதலையை விருப்பிய நாபாவின் கனவை இன்றைய ஆட்சியாளர்கள் ஊடாக வெற்றி கொள்ளும் கனிந்துள்ளது என்கின்றார்கள். சரி நாபாவிடம் சுயநிர்ணயம், தேசிய, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி பற்றிய பார்வை இருந்திருக்குமா என்பது என் கேள்வி? 2009 பின்னர் மார்க்சிய சக்திகள் தலைமைதாங்காது தயங்குகின்றார்கள். மார்க்சியர்கள் பேசுகின்றர்கள் ஏதோ தாம் பேசுவது அனைத்தும் மார்க்சியம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள்.

புலியெதிர்ப்பாளர்கள் தமக்கு மறுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை இன்று கையில் எடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? இந்தப் பிரிவு ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதில் தான் திருப்தி கொள்கின்றார்கள். மற்றும் படி இவர்களைப் பொறுத்த வரையில் வெறும் வாய்ப்பேச்சுதான் மிஞ்சி நிற்கின்றது.

 

நாபா என்ற ஒரு திரிபுவாதியை வைத்து பிழைப்பு நடத்துகின்றார்கள். இந்திய விரிவாதிக்கத்தின் பின்னால் சென்று ஈழப் புரட்சியை காட்டிக் கொடுத்தார்கள். இந்தியம் என்ற விரிவாதிக்க வாதம் அணிசேராக் கொள்கை என்ற குதிரையில் ஓடியதை இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நண்பர் என்று தவறாக மதிப்பீடு செய்துவிட்ட பின்னரும் தெற்காசியாவிற்கு சிறந்த தலைவராக வந்திருக்கக் கூடிய தலைவர் பத்மநாபா என்பது பகடிக்கிடமான பேச்சாகும்.

நல்ல எண்ணங்களால், நற்பண்புகளால் புரட்சி வென்றிட முடியாது!!!

 

No comments:

Post a Comment