Popular Posts

Wednesday, 3 December 2025

இன்றைய அரசியல் போக்கு 10

 

            இயற்கை இடரால் கொல்லப்பட்ட அனைவருக்கும் அஞ்சலிகள்

 


 

இன்றைய அரசியல் போக்கு 10

 இயற்கை பேரிடரை அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்க் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் இக்கட்டான நிலையில் உதவி செய்ய வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இடர் ஏற்படுகின்ற போது அண்டை நாடுகள் உதவி வழங்குவதும் இயல்பான போக்காகும்.

இயற்கை இடர் பற்றிய எழுகின்ற போது சிக்கல் இருந்தது. இந்த இழப்புக்கிடையே எவ்வித கருத்தை எழுதுவது? அரசியல் இருக்கலாமா அல்லது தவிர்க்கப்பட வேண்டுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. இனவாதம் என்ற சொல்லாடல் அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை கருத்துரைக்கின்ற போது கவனத்தில் கொள்வதில்லை. அனைத்துமே இனவாதம் என்றால் ஒரு கருத்தியல் இருக்க முடியாது. எது இனவாதம் என்ற புரிதல் இல்லாமல் வரையறையை புகுத்திவிடுவது. இங்கு இயங்கை அழிவு ஒரு புறம், அரசியல் அறிவு பற்றிய பிரச்சனை, இயற்கை பற்றிய பிரச்சனை, நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, பாதுகாப்பு முன்னேற்பாடு (Health and safety measuresments) என்ற பிரச்சனை என பலவிடயங்கள் உள்ளன. Health and safety என்ற விடயத்தில் மொழி முக்கியமானது என்ற புரிதல் இல்லாமலே மேற்குநாடுகளில் வாழ்ந்து கொண்டு கருத்தெழுதும் பேர்வழிகளை என்னவென்பது? மக்களை ஆபத்தில் கைவிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் என்றால் இவை பற்றியும் பேசப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் உலகம் என்பது இழப்பு வீட்டினுள் அரசியல் பேசாதே என்று கற்பிக்கப்பட்டு வருகின்றது. சோகத்தை சோகமாக எடுத்துக் கொள் என்கின்றனர். தம்மை ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்கின்றார்கள் அவர்களுக்கு அகநிலைவாதம், புறநிலைவாதம் என்பது அவசியமற்றதாகின்றது. இவைகள் தெரியாமலே இடதுசாரி கருத்தாளர்களாக வலம்வருகிறார்கள்.

எந்த ஆட்சியிருந்தாலும் இயற்கை இடரை சமாளிப்பது பெரும் சவாலே. ஏனெனில் இயற்கை இடரை யாராலும் தவிர்க்க முடியாது. இயற்கைக்கு எதிராக மனிதர்கள் குறிப்பிட்ட அளவில் தான் எதிர்த்துப் போராட முடியும். ஆனால் அரசியல் கருத்துகள் பல்வேறு நிலைப்பாடு கொண்டு முன்வைக்கப்படும். இயற்கையால் உருவாகும் அழிவு என்பது வேறாகும். இதனை யாரும் தடுத்திட முடியாது. ஆனால் கடந்த கால அரசியல், பொருளாதார முடிவுகளினால் எற்பட்ட தாக்கமும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் விமர்சிக்கப்பட வேண்டியதுதான்.

 இராணுவம்- ஆயுதப்படைகள்

இராணுவம் மற்றும் இதர படைகள்  என்பன அரசினைப் பாதுகாப்பதாகும். அரசு என்கின்ற போதே அதன் அரசாங்கம், திணைக்களங்கள், நீதிமன்றம், இராணுவம், சிறைச்சாலை அடங்கியதாகும். அரசினை இந்த நிறுவனக் கட்டமைப்புகள் பாதுகாப்பதே அதன் கடமையாகும். ஆட்சித் தலைவரே முப்படைகளின் Commander in Chief.  இந்த ஆயுதப்படைகள் தான் மக்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அரகலையின் போது இதே இராணுவம் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியாது. அதன் போது எவரும் கொல்லப்படவில்லை என்பதற்காக மனிதாபிமானம் கொண்டதாக இராணுவத்தை கூற முடியாது. ஆனால் வலதுசாரிகள் கூறுவார்கள். இராணுவத்தினர் நினைவாக பொப்பி மலர் சூடுவார்கள்.

இதிலும் குறிப்பாக சிறிலங்காவின் ஆயுதப் படைகள் தமிழர் பகுதிகளில் தான் முகாமிட்டிருக்கின்றார்கள். தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு படையாக இருப்பது தான் அவர்களுக்கு கொடுத்த வேலையை அவர்கள் செய்கின்றார்கள். ஈழத்தில் முகாமிட்டிருக்கும் ஆக்கிரமிப்பு படை எவ்வாறு புனிதமாகின்றது என்பதை கருத்தாளர்கள் தான் வெளிப்படுத்த வேண்டும்.

ஆயுதப் படைகள் எவையும் நடுநிலையானவை அல்ல. அது பக்கச் சார்பு கொண்டதாக இருக்கின்றது. அவ்வாறு இல்லையென அரைகுறை இடதுசாரிகள் வாதிக்கின்றார்கள். ஏதோ ஒரு இயக்கம் சிங்கள நண்பருக்கு என்று 1985 என நினைக்கின்றேன் பிரசுரம் எழுதினார்கள். அதில் உன் வர்க்கத்தை எண்ணிப் பார், நீ ஒரு கூலிப்படை அவ்வளவே. நீங்கள் அதிகார வர்க்கத்திற்காக பலியாகின்றீர்கள் என பிரசுரத்தில் எழுதியிருந்தார்கள்.  இவ்வாறு வி.பு பிரசுரம் எழுதியும் உள்ளார்கள்.

தமிழ் பகுதியில்  உள்ள படைகள் எல்லாம் ஆக்கிரமிப்புப் படைகள் தான். அவர்களுக்கு புனித வேடம் கொடுக்க வேண்டியதில்லை.

சுனாமி- பேரலையின் கோலம்

பேரலையினால் கொல்லப்பட்டவர்கள் (31299) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என மொத்தமாக 35392 மக்கள் இழக்கப்பட்டிருந்தார்கள். அந்த இழப்பை எவ்வாறு மனித குலம் எதிர்க் கொண்டது என்பது எழுதி விளங்கிவிடத் தேவையில்லை. இந்த இழப்பு என்பது கிழக்கு கடல்பகுதியையே அதிகம் பாதித்து இருந்தது. அந்தப் பகுதி என்பது பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களாகும். அந்தக் காலத்தில் அன்றைக்கிருந்த நிழல் அரசு தன்னந்தனியே மீட்புப் பணிகளில் ஈடுபட்டு திறம்பட ஈடுபட்டிருந்தார்கள்.

இது வரலாறு விட்டுவிடலாம். ஆனால் இன்றைக்கு அரசியல் எழுதுபவர்களின் அரசியல் புரிதலும், எழுத்துக்குமான மாறுபாடுகளை எழுதவேண்டியுள்ளது.  இன்றைய லங்கா அரச கட்டமைப்பு என்பது முன்னையப் போலவே அனைத்து நிறுவனங்களை கொண்டதாகும். அந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக இங்கிக் கொண்டு தான் உள்ளன.

ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பேரிடல் அழிவு பெரிதோ சிறிதோ என்று வாதிட முடியாது. ஆனால் அரசியல் சந்தர்ப்பவாதம் வரலாற்றை மறந்து ஒப்பிக்கின்றது. அன்றும் அனைத்து மக்களும் இழப்பில் கலந்து கொண்டார்கள். எல்லாப் பகுதியிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்தார்கள். மக்கள் தமது இரக்கு குணத்தை வெளிப்படுத்தினார்கள். 

விடுதலைப்புலிகளுக்கு எதிராக JVP களம் ஆடினர் எனக் சுருக்கிக் கொள்ள முடியாது. அது அன்றைய காலத்தில் அழிவில் இருந்து காப்பாற்ற தேவையானது நிதி மறுக்கப்படுகின்றது. நிதி மறுப்பது ஜனநாயக விரோதம் இல்லையா? இதனையும் விக்கினேஸ்வரன் முன்மொழிந்து நிதியமைச்சர் நிதியத்தையும் ஒப்பிட்டு நோக்குவது தகும். தேசத்தின் வளர்ச்சியில் மூலதனத்தின் அவசியத்தை ஏற்காதவர்கள் எதிர்ப்பார்கள்.

ஜனநாயக மறுப்பு

வி.புலிகளைப் புலிகளைத் தவிர்ந்த எவரும் அரசு (அரசும் புரட்சி, 1919லெனின் விரிவுரை, தே.இ.பி.பா.வ.ச, ஸ்ராலின் தொகுதியின் உள்ள கட்டுரைகள் படித்து கருத்துச் சொல்லுங்கள்) பற்றிய பிரச்சனையில் தீர்க்கமான கோட்பாட்டுப் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை. இந்தப் பிரச்சனையை புறநிலைரீதியாக சுய ஆய்வு அல்லது ஆய்வு செய்ய எவரும் தயாராக இல்லை. இடதுசாரி சந்தர்ப்பவாத அரசியலே இன்றைக்கும் நேர்மை கொண்டதாக ஒப்பிக்கப்படுகின்றது. இதில் ஏன் உமாமகேஸ்வரன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று யாரும் உரையாடிய தரவுகளும் இல்லை. 13 என்பதே அரசு என்ற பிரச்சனையை மறுத்துள்ளது. இதுபற்றி பலமுறை எழுதினாலும், அரசியல் பேசுகின்றனவர்கள் தொடர்ச்சியாக தொடக்கப்புள்ளாக கருத வேண்டுமென்கின்றார்கள்.

போர் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிகமான படைகள் தமிழர் பகுதியில் உள்ளார்கள். நீங்கள் வரிந்து கொண்ட அரசியலுக்காக ஏன் உங்களால் போராட முடியவில்லை. திரிபுவாதக் கும்பல் தமது அரசியல் புரிதல் தான் மார்க்சியம் என்றும், தேசியப் போராட்டம் என்பதே முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை எனவும் ஒப்பித்தார்கள்.

eprlf,plot,eros,nlft,plft, endlf போன்ற அமைப்புகளில் இருந்து மார்ச்சியம் மாதிரியாக எதையோ கற்றுக் கொண்டார்கள். கோட்பாட்டுத் தளத்தில் தமிழீழக் கட்சி அரசியல் நிலைப்பாட்டை சிலர் ஏற்றுப் பயணித்தவர்களும் இன்று சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பை மென்மையாக போகவேண்டும் என்கின்றார்கள்.

எந்த diplomatic உம் இல்லாத தமிழ் அரசியல் என்பதே அபர்த்தமானது. உண்மையான இடதுசாரிகள் என்றால் சுயநிர்ணயம் என்பதை பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட தேசம் தான் முன்வைக்க வேண்டும்.

குறிப்பாக வயோதிப காலத்தில் வாழ்கின்ற முன்னைய ஆயுத இயக்க அரைகுறை அறிவாளிகளின் இம்சை என்பது மிகவும் மோசமாக உள்ளது. வி. பு உங்களை தடைசெய்த காரணத்தால் வரலாற்றுக் கடமையை செய்ய முடிவில்லை என்று இன்றும் அழுது கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் 2009 இருந்து இன்றுவரையில் வி.பு அமைப்பாக இல்லை. உங்களின் அரசியலை செய்யும் கால வெற்றிடம் உள்ளது. இதனை எவ்வாறு எதிர்க் கொண்டீர்கள்?

``தத்துவமே மனித குலத்தின் உரிமைகளை அர்த்தப்படுத்துகின்றது; அரசாங்கம் என்பது மனித இயற்கையின் அரசாங்கமாக இருக்க வேண்டுமெனக் கோருகின்றது” (33) இன்றைய கருத்தாளர்கள் தலைகீழாக மார்க்சியத்தை முன்வைக்கின்றார்கள். இங்கு தனிநபர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அது எனது எழுத்து முறையும் அல்ல. இந்த வித மோசடி கருத்தாளர்களை ஒரு சமூகம் அரசியல் மயப்படுத்தும் போதே விளங்கிக் கொள்ளவோ அம்பலப்படுத்தவோ முடியும். மாறாக நபர்களை குறிப்பதால் எவ்வித மாற்றமும் நடந்துவிடப் போவதில்லை.

 

 முதலாளித்துவ பொருளாதார

2012இல் திருமலையில் இருந்து மூதூர் செல்லும் பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அந்த பாதை போட்டு ஒரு வருடம் கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. ஒப்பந்தக்காரரின் குறைபாடுகள் பலவுள்ளன. அந்த இடம் பற்றிய அறிவு, திட்டம் பற்றிய அறிவு, செலவைக் குறைக்க வேண்டும் என்ற முனைப்பு இவைகள் எல்லாம் பிரச்சனைதான். இயல்பாகவே  அந்தப் பகுதி அருவியிலிருந்து நீர் வந்தடையும் இடம். அவ்வாறு இருக்கின்ற போது நீரோட்டம் தடையின்றி செல்லும் வகையில் வழி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அங்கு வீதி நிர்மாணிக்கப்படவில்லை. அவ்வாறு சிறிய நீரோடைக்கான பாலம் அமைத்திருந்தால் அந்தச் சேதம் நடைபெற்றிருக்காது.

இவ்வாறு இன்று நடைபெற்ற அழிவில் இரயில்பாதை மண் அரிப்பு ஏற்பட்டு தண்டாவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் நீர் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டிருந்ததா தெரியவில்லை. அவ்வாறான இடங்களில் திட்டமிடும் போது அந்த சூழல் பற்றிய அறிவு முக்கியமானதாகும்.

முதலாளித்துவத்தின் வளம் சார்ந்த இயற்கை அழிப்பு

அரசாங்கங்களின் திட்டமிடல்

போதிய முன் எச்சரிக்கை இன்மை

செம்பரம்பாக்கம் மக்களுக்கு அறிவித்தல் கொடுக்காமலே அணைக்கதவை திறந்து விட்ட வரலாறு உண்டு. பிலிப்பீன் நாட்டில் தொழில்புரியும் வானிலை ஆராய்ச்சி நிபுணர் இவ்வாறு பெரும் புயல் வரும் என எச்சரித்ததாகவும், அதனை அரசு கவனிக்கவில்லை என்றும் விமர்சனம் உள்ளது. வெள்ள எச்சரிக்கை வரும் போது முன்னரே நீர் நிலைகளின் மதவை திறந்து விடுவார்கள். அவ்வாறு திறந்து விடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

குடியிருப்புகளை மேற்கொள்ளும் முன்னர் அந்த இடத்தினை பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவ்வாறான முறை உள்ளதா என்பது தெரியவில்லை. இயங்கை ஒரு புறம் அழிவை ஏற்படுத்துவது இயற்கையில் வெளிப்பாடு. ஆனால் மனிதர்களின் விவேகமின்மை, மிகை நுகர்வு, வளத்தை அழிப்பது சுரண்டல் பொருளாதார அரசியலாகும்.

 

இயற்கை அழிவைக்  காட்டி அரசியல் உரிமைகளை மறந்து விடு என்று கூறிட முடியாது. சுனாமி நடந்து முடிந்த பின்னர் தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் நடந்தேறியது. ஆகவே கழிவிரக்கம் என்பது நிரந்தரமற்றது. அதற்கு அரசியல் உள்ளடக்கம் இருக்கப் போவதில்லை. விஞ்ஞான அறிவே மனிதகுலத்திற்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது.

மொழிப்பிரச்சனை பற்றிப் பேசுகின்ற சிங்கள தேசத்தவர்கள் பேரகங்காரத்தினை வெளியிட்டார்கள். பேரகங்காரம் என்பது இலகுவாக அழிந்து விடுவதில்லை. 

தொடரும்.... .....

 

 

சர்வ-கட்சி குழுவாக நாம் நிவாரணங்கள் வழங்கி, சேதங்களை கண்டறிய வந்தோம். அரசுடன் சண்டை இட எமக்கு நேரமில்லை. ஆனால், உங்களுக்கு புதிய மண்சரிவு அபாயம் இல்லாத சாலை ஓரமாக காணிகள் வழங்க அரசை நாம் வலியுறுத்துவோம். அங்கே இந்திய அரசின் உதவியுடன் வீடு கட்டுவோம். இந்த அனர்த்த துன்பத்தை, "மண்சரிவு அபாய மலைகளில், வாழாமல், சாலை ஓரம் வீடு கட்டி வாழும் புதிய வாழ்வுக்காக", பயன் படுத்துவேன்.

No comments:

Post a Comment