Popular Posts

Tuesday, 22 July 2025

இனவழிப்பின் தொடர்ச்சி 58, 61, 77, 83, 2009

 


 

 

 இனவொதுக்கல், சந்தையை நிலைப்படுத்தல், நிர்வாகத்தில் பிறரை அகற்றல், மூலதனத்தை அகற்றல்,


1983 என்பது இன்று வாழும் மனிதர்களின் வாழ்வியலையே மாற்றியமைத்த காலப் புள்ளி. அந்தக் காலப் புள்ளியை அரசியல், பொருளாதார, வரலாற்றுப் போக்கில் இருந்து அணுகிட வேண்டும். அந்தக் காலம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் சுயமரியாதை பற்றிய பிரஞ்ஞை உருவாக்கிய காலமாகும். தமது உரிமைக்காக தாமே போராட வேண்டும் என்ற எண்ணப்பாடு புறநிலைத் தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னரே சிங்கள பெளத்த பேரகங்கார சிந்தனை வடிவம் 1886, 1915, 1933 என்று தொடங்கிய அரசியல் போக்கு எம்முன்னால் உள்ள வரலாறாக இருக்கின்றது. ஒவ்வொரு காலத்திலும் நடைபெற்ற இனவொதுக்கல் தாக்குதல் என்பது அரச கட்டமைப்பின் ஆதரவில் தான் நடைபெற்றது. ஆட்சியதிகாரம் கொண்ட சிங்கள தேசத்தின் பெருந்தேசிய மனப்பாங்கு கொண்டவர்களுக்கு வழங்கும் ஊட்டச் சக்தியாக அரச கட்டமைப்பு தன் பின்னால் நிற்கின்றது என்ற நம்பிக்கையாகும்.  பேரகங்காரத்தை கட்சிகள் மாத்திரம் வளர்த்து விடவில்லை. மாறாக சமூக அமைப்பின் சிந்தனை வடிவம் என்பதே மக்களை நிலைப்பாடு எடுக்க துணைநிற்கின்றது. தமிழர் தரப்பு அனுரவிற்கு தார்மீக ஆதரவு கொடுத்திருந்தால் முற்போக்கு நிலை உருவாகியிருக்கும் என்று நம்புகின்றார்கள். ஏனெனில் அனுர நல்லவர் என்கின்றார்கள். அவர் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையை உடைக்க முடியும் என்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியம் என்பதை அனுர இரசிகர்கள் எண்ணுகின்றார்கள்?

 

1958இல் உருவாகிய அரசியல் போக்கு பின்னர் வெவ்வேறு அரசியல் ஒப்பந்தங்கள் நடைபெற்றது. அன்றையக் காலங்களில் அகிம்சை முறையில் தான் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. வரலாறு எங்கும் அரசு அதிகாரத்தைக் கொண்ட சக்தியின் ஒடுக்குமுறையை எதிர்ப்பது என்றால் எதிரி பயன்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியே எதிர்க்கொள்ளமுடியும் என்ற நிலைப்பாட்டிற்கு வருகின்றார்கள்.

 

1982ல் சேமபால ஏக்கநாயக்க என்பவன் தனது மகனையும், மனைவியையும், 300000 டொலர் கேட்டு விமானத்தைக் கடத்திய குற்றத்திற்காக வெலிகடையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தமிழ் கைதிகளை கொலைதாக்குதல் நடத்தியதை சிறைஉடைப்பின் பின்னர் எழுதப்பட்ட நினைவு உரையில் இவரின் பங்கு பதியப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட கொலைகாரன் 1987 சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் கொலை செய்யப்பட்ட விடயத்திற்கு கூட இன்றுவரையில் எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. ஆனால் கொலையாளிகள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அவர்களை எவரும் தண்டிக்கவும் இல்லை. இது பற்றிய உரையாடல் நடைபெறவேயில்லை. இப்போ இந்தக் குழந்தைப் பிள்ளைகள் புதிய கோட்பாடுகளை முன்வைக்கின்றார்கள்.

 

சகோதரத்தினைப் பெருமைப்படுத்தும் நாளை முன்னிட்டு யூலை 23ஆம் திகதி சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கின்றது..!

சகோதரத்தினை நினைவுகூரும் நாளுக்காக எதிர்வரும் யூலை 23ஆம் திகதி, சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி ரயிலில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கின்றது..! இன்று (21ஆம் திகதி) இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

'கருப்பு யூலை' என வர்ணிக்கப்படும் திகதியை, இனவாத நினைவாக அல்லாது சகோதரத்தினை நினைவுகூரும் நாளாக மாற்றும் முயற்சியை இலங்கையின் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இவர்கள் சொல்ல வருவது என்ன? இவர்கள் தேசிய இனப்பிரச்சனையின் வேரை தேடி கண்டைந்து விட்டார்களா?

 

இனவொதுக்கல் நடைபெற்றதை எவ்வாறு பெருமைப்படுத்தும் நாளாக மாற்ற இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. இனவொதுக்கலைச் சந்தித்தது தமிழர்கள். சிங்கள தேசத்தின் நிலப்பரப்பில் இருந்து 1958,61, 77, 83 களில் பல்வேறு தடவைகள் அகற்றப்பட்டவர்கள்.  அழிக்கப்பட்ட உயிர்கள், சொத்துகள், வணிக நிதிகள் என்பதை எல்லாம் மறைக்கும் அரசியல். அதாவது சிங்கள தேசத்தில் நிலத்தில் வாழ்ந்து வணிகர்கள், மக்கள், பண்பாட்டு சின்னங்களை அழிப்பதன் ஊடாக சிங்கள தேசம் தமக்குரிய நிலப்பகுதி என நிலைநாட்டினர். இதனை ஏன் உங்கள் மோசடி அரசியலால் மறைக்கின்றீர்கள்?   ``கருப்பு யூலை” என்பதே தவறு. அதுவும் இனவாத நினைவாக என்பது அதுவும் மோசடி அரசியல்.  தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட இனவொதுக்கலை மறைக்கப்படுகின்றது.

 

சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய விடயத்தை தவிர்த்துள்ளார்கள். 1958 இருந்து பலமுறை நடைபெற்ற விடயங்கள் எல்லாம் சிங்கள பௌத்த பேரகங்கார சிந்தனையில் வெளிப்பாடேயாகும். இனவழிப்பை பற்றிப் பேசமாட்டேம். ஆனால் சகோதரத்துவத்தை வளர்க்க முடியும் என்ற போக்கு அபர்த்த அரசியலாகும்.

 

ஆக்கிரமிப்பு யுத்தம் அதனை எதிர்த்து நின்றார்களா? ஏன் `` யுத்தத்தின் மூலம் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதையும், அதற்கான தீர்வு அமைதியிலும், ஒற்றுமையிலும், சகோதரத்துவம் இருக்கின்றது” 2009 முன்னர்

 * பொது வேலைத்திட்டம் கைச்சாத்தானவுடன் உடனடியாக 2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறுதல். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் புலிகளுக்கு பல சலுகைகளை வழங்க உடன்பட்டதில் இருந்தே ஜே.வி.பி. அதைப்பற்றி விமர்சித்து வருவதுடன் இடைவிடாது அதைக் கீழறுக்க முயற்சித்து வந்துள்ளது.

* உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஒரு வாரத்திற்குள் சமாதான முன்னெடுப்பின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வேயை வெளியேற்றுதல். ஜே.வி.பி, நோர்வே அனுசரணையாளர்களையும் மற்றும் தற்போதைய யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் ஸ்கன்டினேவிய நாடுகளின் தலைமையிலான இலங்கைக் கண்காணிப்புக் குழுவையும் "புலிகளுக்கு சார்பானவர்கள்" என மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

* தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் அரசாங்கத்தின் ஆளுமையை அமுல்படுத்த உடனடியாக, சாத்தியமானால் ஆயுதப் படைகளை நிலை நிறுத்துவதன் ஊடாக நடவடிக்கை எடுத்தல்.

* வடகிழக்கு மாகாணத்தை இரு வேறுபட்ட மாகாணங்களாக பிரித்தல். இந்த மாகாணங்கள் முதல் தடவையாக சமாதான பேச்சுக்களை நடத்த மேற்கொண்ட முயற்சியின் போது, 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்டன. 2002 யுத்த நிறுத்தத்தை அடுத்து, சமஷ்டி இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பிடத்தக்களவில் அதிகாரத்தைப் பரவலாக்குவதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் பேரில், புலிகள் தமது தனித் தமிழீழ அரசிற்கான கோரிக்கையை கைவிட்டனர். வடக்கு கிழக்கை பிரிப்பதானது மேலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளை விளைபயனுள்ள விதத்தில் நாசம் செய்யும்.

(https://www.wsws.org/tamil/articles/2006/aug/290806_SLJVP.shtml)

 

1994 இல் இருந்து 2009 மே இறுதிப் போர் வரையும் புலிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தீவிரமாக செயற்பட்டார்கள். இராணுவத்திற்கு ஆட்களைச் திரட்டிக் கொடுத்தார்கள். 1994 இல் ஜனநாயக அரசியலில் ஈடுபட ஆரம்பித்து, 1995 இல் சமாதான பேச்சை குழப்பி சந்திரிகாவை புலிகளுக்கு எதிரான போருக்குத் தள்ளி, அதன் பின்னர் மகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்து சமாதான பேச்சை குழப்பி, மீண்டும் மகிந்தவை மற்றொரு போருக்குத் தள்ளி, 2009 இல் உங்கள் இலக்கை அடைந்தீர்கள் அல்லவா?

 

``ஒற்றுமையின் காரியங்களாக, நூல்கள், களிமண் நடுகைகள் மற்றும் ஓவியங்களை வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.“ சிங்கள பௌத்த பேரினவாதத்தை சிதைப்பது, சமூக நல்லிணக்கத்தை இவ்வாறு செய்வதன் ஊடாக ஏற்படுத்த முடியும் என்று அரசியல் மயப்படுத்தப்படாத கீழ்மட்ட உறுப்பினர்களை நம்ப வைக்கப்படுகின்றது. இதை கோட்பாட்டு ரீதியாக புரிதல் இல்லாமல் முன்னெடுக்கின்றார்கள்.

கடந்த 300 நாட்களாகின்றது ஆட்சிமாற்றம் நடைபெற்றது. இந்தக் காலத்தில் தேசிய இனப்பிரச்சனைக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையும் நடைபெறவில்லை.  இந்தக் காலத்தில் தொல்பொருள் திணைக்களம், விகாரை அமைப்பு, காணி விடுவிப்பு, இராணுவ முகாமைக் குறைத்தல், கைதிகள் விடுதலை, அரசியலில் மதத்தை விலக்குதல், பொருளாதார சீர்திருத்தங்கள் எவையும் முன்னெடுக்கப்பட்டதாக இல்லை. பேரினவாத ஆட்சியாளர்கள் பாதுகாப்புக்காக நிதியை ஒதுக்கியுள்ளார்கள். இது ஏறத்தாழ 40 பில்லியன்களுக்கும் மேலாக அநுர அரசாங்கம் பாதுகாப்பு செலவுக்காக ஒதுக்கியுள்ளது.

 

மார்க்சியம் என்பது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மக்களை சரியான வழிநடத்துவும், முதுகெலும்புள்ள மனிதர்களையும் உருவாக்கிக் கொள்கின்றது. மார்க்சியம் இந்த சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டுகின்றது. மார்க்ச்சியம் தேசிய இனப்பிரச்சனை,  பொருளாதாரச் சுரண்டலைப் பற்றி, சமூகத்தில் ஏற்படுகின்ற முரண்பாடு பற்றி முரணற்ற முறையில் வழிகாட்டுகின்றது. சமூகக் கட்டத்தினைப் பற்றிய மார்க்சிய போதனைகளை கற்றுக் கொள்ளுவது, நடைமுறையில் செயற்படுத்துவதை விடுத்து குறுக்குவழியில் எதையும் மார்க்சியம் முன்வைத்தது கிடையாது. இங்கு பலர் மார்க்சியம் போல எதையோ மார்க்சியம் என ஒப்பிக்கின்றார்கள்.

 

 

 

 

https://noolaham.net/project/170/16980/16980.pdf சோமவன்ச 

 

https://noolaham.net/project/300/29960/29960.pdf நோர்வேயை வெளியேற்றுவது குறித்து...

 

No comments:

Post a Comment