Popular Posts

Monday, 18 August 2025

இன்றைய அரசியல் போக்கு 18.08.25

 

இன்றைய அரசியல் போக்கு

 

இன்றைய சமூகப் போக்கை விளங்கிக் கொள்வதற்கு வர்க்கப் பார்வை ஏன் தேவை? வர்க்கப் பார்வை ஊடாகவே நண்பர் யார் எதிரி யார் என கண்டடைய முடியும். மனிதர்கள் மொழி அடிப்படையில் மாத்திரம் மாறுபடுவதில்லை. அவர்களின் சிந்தனை வடிவத்திலும் மாறுபடுகின்றனர். இந்த மாறுபாட்டை உள்வாங்கிக் கொள்வதன் ஊடாகவே அரசியல் பாதையை தெளிவாக அடையாளம் காண முடியும். அரசியல் பாதையை வெகுமக்கள், இளைஞர், மாணவர்கள் விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். அரசியல் ரீதியாக தெளிவு இல்லையென்றால் இலகுவாக மற்றவர்களை கையாள முடியும் என்ற எண்ணப் போக்கு தமிழ் கட்சியினரிடத்தில் உள்ளது.

தமிழ் கட்சிகள் தொடர்ச்சியாக மக்களை அன்னியப்படுத்தி வைப்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். இவ்வாறு வைத்திருப்பதன் ஊடாக காலத்திற்கு காலம் வெவ்வேறு நிலைப்பாடுகளை மக்கள் முன்வைப்பதற்கு வசதியாக இருக்கின்றது. மக்களை தமது தேவைக்கு ஏற்ப ஆட்டுமந்தைகளாக நடத்துகின்றார்கள்.

மக்களை ஆட்டுமந்தைகளாக வைத்துக் கொண்டிருப்பது மக்களின் நலன் சார்ந்ததாக இருப்பதாக தமது நாவன்மையால் நிறுவுகின்றார்கள். இவர்களிடம் தர்க்கம் என்பது அரசியல் பொருளாதார, சமூக உற்பத்திப் போக்கினை வெளிப்படுத்தப்படுவதில்லை. சில அரசியல்வாதிகள் தமது இரசிகர்களைக் கொண்டு தனிநபர்சாகசவாதம் முன்னெடுக்கின்றார்.

"இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது" "முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம். நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது." வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்"

ஆக வாழ்வதற்கு சமூக அமைப்பை புரிந்துக் கொள்ள திறன் வேண்டும்.

உலகம் என்பது முன்னரே தயாரிக்கப்பட்ட, முழுமையான பொருட்களின் தொகுதி என்றவாறில்லாமல் நிகழ்வுப் போக்குகளின் தொகுதி, இதில் நம்முடைய மூளைகளில் அவற்றின் பிம்பங்களுக்கு, கருத்தமைப்புகளுக்கு சிறிதும் குறையாத அளவில் வெளித்தோற்றத்தில் நிலையாகத் தோன்றுகின்ற பொருட்கள், மறைதல் என்னும் இடையிடில்லாத மாற்றத்துக்கு உள்ளாகின்றன. மனித அறிதல் எனப்படுவது நேர்கோடு அல்ல, ஆனால் அது ஒரு வளைகோடு, அது தொடர் வரிசையான வளையங்களை, ஒரு சுழலேணியை முடிவில்லாதபடி நெருங்கி வருகின்றது.

 அரச வடிவம்

போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வகையாக இருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் எதிரியை முடக்கும் வகையில் இருக்கின்றதா என்பதே அளவுகோளாகும். ஆதிகாலம் தொடக்கம் தம்மைப் பாதுகாத்தே வந்துள்ளனர். முன்னர் ஆயுதங்களை தாங்கும் உரிமை கொண்ட மக்களின் வாழ்வியல் மறுக்கப்பட்டது. ஆயுதம் ஏந்தும் அதிகாரம் அரசிற்கு மாத்திரமே உள்ளது என்ற ஆதிக்க கருத்தியல் உருவாக்கப்பட்டது.

அந்த அதிகாரம் கொண்ட அரசு வடிவமே மக்களை அடக்குகின்றது. மக்கள் தமது உரிமைக்காக போராடுகின்றது போது அடக்குகின்றது. நவீன காலத்தில் நிலையான காவல்துறை, இராணுவம், சிறைகள் ஊடாக மக்களை அடக்குகின்றது. இந்தக் கட்டுப்பாடு இன்று சட்டத்தின் ஆட்சியாக மாற்றம் பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியில் குடிகள் அடங்கி நடக்க கற்பிக்கப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி என்ற அடக்குமுறை அல்லது மேலாதிக்க வடிவத்தினை நியாயப்படுத்துகின்றது. இந்த நியாயப்பாட்டை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் கருத்தியலை விதைக்கின்றார்கள்.

இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் இராணுவம் வேறு காவல்துறை வேறு என்று வியாக்கியானம் செய்கின்றார்கள். இந்த படைகள் அனைத்தும் மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டதே. இந்தப் படைகள் நடுநிலையாக செயற்படும் என்றே கற்பிதம் செய்யப்படுகின்றது. இன்றைய முதலாளித்துவ அரசுகளின் படைகள் அனைத்தும் பெரும் முதலாளிகள், அவர்களின் சேவகர்களாக இருக்கும் உள்ளூர்/நாட்டாட்சியாளர்களின் நலனின் அடிப்படையில் செயற்படும். எந்த படைகளும் நடுநிலையானதாக இருக்கப் போவதில்லை என்பதை மக்கள் நலனில் இருந்து செயற்படுபவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சிங்கள தேசத்தின் படை அன்னிய நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது போலவே தமிழ் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இறுதி யுத்தத்தில் குண்டுமழை பொழிந்தது, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக் கொண்டது. தமிழர் தேசத்தை பொறுத்த வரையில் ஆக்கிரமிப்புப் படை என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

அரச இயந்திரம் என்பதே ஒடுக்குமுறை இயந்திரம் தான். இதற்கு சட்ட அறிவு அவசியம் இல்லை. அரசு என்பதே:  அரசாங்கம் (நாடாளுமன்றம்), நீதிமன்றம், சிறைச்சாலை, இராணுவம், காவல்துறை, மற்றும் அரசதிணைக்களங்கள். இவைகள் அடங்கியதே. இந்தக் கட்டமைப்பில் பங்குபற்றிய அனைவரும் சிங்கள தேச கட்டமைப்பில் பங்காளிகள். 

எமது போராட்டமே நாம் சிங்கள தேசத்தின் அங்கம் இல்லை என்பதே. எமது அரசுரிமை 1833இல் கிழக்கிந்திய கொம்பனியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த புரிதல் போராடும் தேசத்தவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை விடுத்த அரசியல் நீக்கம் என்பது சிங்கள தேசத்தின் நலன் சார் அரசியல் உரையாடலாகும்.

நாம் சிங்கள தேசத்தின் அங்கமாக இருக்க முடியாது. சரி தனது குடிகள் என்றால் ஏன் அவ்வாறு குண்டுமழை பொழிந்தார்கள்? சிங்களே தேசமே நடைமுறையில் மாற்றன் குடி என்று தான் எம்மை தடத்தியது, நடத்துகின்றது.

https://www.youtube.com/watch?v=b0Y9fGcNI8w (We are the part of the state here.  We are the political party and part of the state structure) நாம் அரசு அற்ற தேசம். அரசு அற்ற தேசம் என்பது அதன் பகுதி அல்ல. தமிழ் தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, திம்பு என்பவை அரசை வலியுறுத்துவதேயாகும். ஏன் இவர்கள் பேசும் சமஸ்ரி கூட ``அரசு” வடிவத்தை உள்ளடக்கியதே. சமஸ்ரி முழுமையான அதிகாரம் கொண்டதா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் கொள்கையை உள்வாங்காமல் சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்ளது தமிழ் மக்களின் மீதான நலனில் இருந்து அமையப்படும் அரசியல் அல்ல.

தமிழ் அரசியல் வாதிக்கு STF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. தமிழ் அரசியவாதிக்கு இவ்வாறு பாதுகாப்பு கொடுக்கும் என்றால் யாரின் நலனில் இருந்து செயற்படுபவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதிலும் காவல்துறை வேறு இராணுவம் வேறு என்றும் வியாக்கியானம் செய்கின்றார்.

 

அரச அடக்குமுறை நிறுவனம்:

இதில் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்கு புதிய வகை நிறுவன அமைப்பு வடிவமும் இதற்குத் தேவைப்படுகின்றது. ஆண்டான் அடிமைச் சமூகத்தில்  அரசு என்பது தோற்றம் பெறுகின்றது. முதலாளித்துவ அரசின் வளர்ச்சிக் கட்டமானது, பழைய உற்பத்தி முறையான நிலப் பிரபுத்துவ உறவுகளை தென்னாசியாவில் ஓரளவுக்கு சிதைக்கின்றது. தொழிற்துறை வளச்சியின் மூலம் முதலாளித்துவம் வளற்சியடைகின்ற போதும், பழைய ஆட்சிமுறை உற்பத்தி முறைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவதில்லை. வளர்ற்சிடையந்த முதலாளித்துவ உறவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அலகுகள் நிர்வகிப்பதற்கு தேவையானது. ஏகாதிபத்திய கட்டத்தில் பற்பல ஒப்பந்தங்களையும் வழிகாட்டல்களையும் நிதிமூலதன நிறுவனங்கள் முன்வைக்கின்றன.

அரசு நாட்டினை நிர்வகிக்கும் முகமாக வரியை வசூலிக்கின்றது. ஆனால் எழுகின்ற மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுக்கும் அரசானது நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆயுதப் படைகளைக் கொண்டு மக்களை அடக்குகின்றது. சில விரல் விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளின் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு, வளர்ச்சி என்பதே அரசிற்கு முக்கிய விடயமாக இருக்கின்றது. இங்கு அரசு என்பது ஒரு வர்க்கத்திற்கு சார்பானதாகவும், அதுவும் நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு பாதுகாக்கும் ஒரு கருவியாகவே தனது நிறுவனங்களை வைத்துக் கொண்டு செயற்படுகின்றது.

இதில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் பாதுகாக்கும் ஒரு அரசினை கட்டுப்படுத்துவது பெரும் முதலாளிகளும், நிதிநிறுவனங்களும் ஆகும். இந்த அரச நிதிநிறுவனங்களுக்கும் அரசிற்கு வெளியே இருக்கின்ற சர்வதேச பெரும் நிதிநிறுவனங்களும், தொழிற்சாலை முதலாளிகள், வங்கிகள் என்பனவும் அரசை ஆட்டிவிக்கின்றது.

மக்களின் வற்புறுத்துதல் காரணமாக, (பூர்ஷ்வா) முதலாளிய பழமைவாத அரசு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆயினும் இப்படியான அரசு அடிப்படை சமூக மாற்றத்திற்கு அனுமதிக்க மாட்டாது. அது தமது அரசைக் காத்துக் கொள்ளச் செய்யும் இடைக்கால சமாதானமே சில சீர்திருத்தங்களாக அமைகின்றன. இதுதான் அரசின் சீர்திருத்தம். ஆனால் புரட்சி என்பது, அந்த ஆட்சி அதிகாரத்தை ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு மாற்றுவது என்பதாகும். இதனாலேயே பழமைவாத அரசின் சீர்திருத்தம் என்பது ஒருபோதும் புரட்சியாகாது. சீர்திருத்தத்தால் ஒருபோதும் சமூக மாற்றம் வராது” அடக்குமுறை நிறுவனத்தின் அதிகாரத்தினை ஒரு அரசியற் புரட்சியின் மூலமே வெற்றி கொள்ள முடியும்.

ஆயினும், அரச அதிகாரத்தை கைப்பற்றினால் மாத்திரம் போதாது. அரச நிறுவனங்கள் முதல் அனைத்துச் சமூக அமைப்பின் நிறுவனக் கட்டமைப்புகளிலும் மாற்றம் கொள்ளவேண்டும். சிந்தனா முறையிலும் மாற்றி அமைக்காவிடின், இந்தச் சமூகத்திற்கான பிரச்சினைகளை தீர்க்கவே முடியாது. உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றி  அரசின் கீழ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவதுவே உழைக்கும் மக்களுக்கான அரசாகும். 


சட்டவாம் என்பது:

நாடாளுமன்றங்கள் சட்டமியற்றுகின்ற அதிகாரம் என்பதை தேர்தல் ஊடாக வெற்றி பெற்ற நபர்களைக் கொண்டு செயற்படுத்துகின்றது. இது பிரித்தானிய மாதிரியாக தொடர்ச்சியாக செயற்படுத்துகின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றி சட்டங்களை உருவாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவது முதலாளித்துவச் சிந்தனையாகும். முதலாளியச் உற்பத்தி முறையை மாற்றம் கொள்வதில்லை. சமூக அமைப்பின் உற்பத்தி உறவுகள் மாற்றங் கொள்வதில்லை.

உண்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அதிகமான சட்டங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையினைப் பாதுகாக்கின்றது. சுதந்திரமாக உழைக்கும் மக்கள் சார்பாகவோ அல்லது ஒடுக்கப்படும் தேசிய, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எவ்வித உரிமையையும் உத்தரவாதம் செய்யும் நிலை இருக்கப்போவதில்லை. மாறாக முதலாளி வர்க்கத்தின் தேவையின் அடிப்படையில் இருந்து வழங்கப்படுபவையாகவே இருக்கும்.

நாடாளுமன்றமும் புதிய சட்டங்களை இயற்றி அதன் மூலம் போராடும் மக்களை அடக்குகின்றது. இதில் அரசிற்கு எதிராக வழக்குத் தொடர்கின்ற போது அரசு அதன் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை. ஆயினும் வழக்குகளுக்கு மேல் வழக்கு தொடர்ந்து குறிப்பிட்ட காரியத்தை சீர்குலைக்கின்றது, சின்னாபின்னமாக்கின்றது.

நீதிமன்றம் என்பது மக்களை அடக்கி வைப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரச இயந்திரம் ஆகும். நீதிமன்றம் என்ற அரச இயந்திரத்தில் பல பிரிவுகள் இருக்கின்றது. மக்களின் குற்றங்களை விசாரிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதாக இது உள்ளது. நுகர்வோர் நல வழக்கு, பொதுநல வழக்குத் தொடர்வது என்ற வழமைகள் இருக்கின்றது.

இப்படித்தான் இலங்கை அரசு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டது. இனி நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கை இணைக்க நாடாளுமன்றத்தின் ஊடாக தடைசெய்யப்படும். உண்மையில் நீதிமன்றம் என்பது சுயாதீனமானது என்று முதலாளித்தவம் பாசாங்கு செய்யும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை. 

இலங்கையில் கன்னியா வெண்ணீர் ஊற்று வழக்கு என்பது மற்றைய வழக்குகளில் இருந்து மாறுபட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் தமது அரசியல் நலனுக்காக போடப்படும் வழக்குகள் இருக்கின்றது. இதே வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான ஆட்கொணர்வு மறு என்று வழக்குகளை முன்னெடுக்கின்ற போது நீதிமன்றங்களின தீர்ப்பு என்பது தெரிவுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. நிர்வாக ரீதியாக வெவ்வேறு  வழக்குகள் வந்த போதிலும்  தெரிவு செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பே முன்மாதிரியாக சமூகத்தின் கொண்டு வரப்படுகின்றது.

ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியுமா?  முடியும். ஆனால் வெள்ளைக் கொடி கொண்டு சரணடைந்தவர்கள் பற்றி எந்த வழக்கும் தாக்கல் செய்ய முடியும் அவைகளை எவ்வாறு அணுகுவார்கள்?   

காணிகளை விடுவிக்க  வழக்கு தாக்கல் செய்ய முடியும்? முடிக்குரிய காணிகள் பற்றிய பிரச்சனையில் சிங்கள தேசத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன?

வடக்கு கிழக்கை  பிரிக்க  வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? முடியும் உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுக் கொள்ள முடியுமா? அரசின் கொள்கை என்ன?

இவ்வாறே கன்னியா வெண்ணீர் ஊற்று வழக்கு நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்பட்டது. இதிலும் ஒரு அரசியல் பிரமுகரான சுமந்திரன் என்பவர் தன்னை கொலை செய்ய முற்பட்ட நபர்கள் என்று அப்பாவிகளை சிறையில் அடைக்க முடிந்தது. ஆனால் தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை துரிதகெதியில் எந்த வழக்குத் தீர்வுகளும் வந்ததில்லை. குறிப்பிட்டு தெரிவு செய்யப்படும் வழக்குள் என்பது அரசிற்கு இடையூறு வராத நிலையில் பார்த்துக் கொள்வதும் நீதிமன்றங்களின் வேலையாகவும் இருக்கின்றது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று சொல்வது மரபு என்பதற்கு அப்பால் வேறில்லை.  இவ்வாறான நிலையில் சட்டரீதியாக மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று சட்டவாதத்தினை முன்னிறுத்துகின்றனர். மக்களின் பிரச்சனைகளை நீதிமன்றின் மூலம் தீர்க்க முடியும் என்பதை திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

தேசியக் கோரிக்கைகள் முதலாளித்துவ ஜனநாயக உரிமை சார்ந்ததாக மட்டுப்படுத்திப் பார்க்கும் பார்வை உள்ளது. ஆனால் அது அவ்வாறில்லை மாறாக சோசலிச சமத்துவ கட்டத்தை கடப்பதற்கும் அவசியமானதாகும். அதனால் இனங்களுக்கான சமவுரிமை அடிப்படையில்  அரசியல் யாப்பின் ஊடாக நிறைவேற்றப்படும் என்கின்றார்கள். பிறப்புரிமை என்பதை தவிர்த்துவிட்டு பார்க்கும் பார்வை முன்வைக்கப்படுகின்றது. இவைகள் நிறுவனமயப்பட்டவையாக மாற்றப்படுகின்றது.  நீதிபரிபாலனத்தினுள் தேடுகின்ற அரசியல் முறை என்பது வெறும் காகிதத்திற்கு ஒப்பானதாகும். சட்டவாக்கத்தினுள்- நிறுவனத்தினுள் குறுக்கிப் பேசும் அரசியல் என்பது ஒரு இனத்தினை (சிங்கள தேசிய இனத்தினை) முன்னிறுத்திய போக்கில் அமைந்து விடுகின்றது. இங்கு முதலாளித்துவ வகைப்பட்ட அரசியல்யாப்புக் வரையறையில் அமைந்த உரிமை, நிறுவனங்களினால் வழங்கப்படும் சலுகையும் ஒன்றென்கின்றனர். அதாவது (Constitutional rights is different from institutional rights) தனக்கான சுதந்திரமான ஆட்சியதிகாரத்தை கொண்டிருப்பதும் நிறுவனமயப்பட்ட உரிமையும் ஒன்றாக முடியாது. சட்டவாதத்தினுள் தமிழ் மக்களின் போராட்டத்தை கொண்டு நிறுவத்துவதில் சில தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டுள்ளார்கள். அதனை மீறி செயற்படுபவர்களை மக்களின் உணர்ச்சியை ஊட்டுகின்றார்கள் என முத்திரை குத்தியுள்ளார்கள். ஆளும் வர்க்கத்தின், விதேசிய பிரிவினர் மக்கள் திரள் போராட்டங்களை விரும்பமாட்டார்கள். மக்கள் அணிதிரட்டல் என்பது வசியமானதாகும். 

சுருக்கமாக சொல்வது என்றால் கூட்டுரிமை என்பதை மறந்து விடு. ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றத்தை நாடி உன் வாழ்வை போக்கிடு என்பதாகும். இவ்வாறு அறிவுரை கூறும் மாந்தர்களின் போக்கு என்பது கற்கால சிந்தனை, அடிமை மனப்பாங்கை சமூகத்திற்கு பரப்புவதும், தாம் சுகதேகியாக வாழ்கின்றவர்கள். செம்மணி பிரச்சனை உள்ள போது உல்லாசப் பயணத்தை என்னால் செய்ய முடியும் யார் என்னை கேட்பது என்பதாகும். தனிமனிதனைச் சுற்றிய அரசியல்  ஆபத்தில் தான் போய் முடியும். 

 

அரசியற் கட்சிமட்டம்:

தனிநபர் மட்டத்தில் தம்மால் முடிந்ததை செய்வோம் என எண்ணுதல். ஆனால் இவைகள் எல்லாம் தன்னார்வ நிலை எனக் கொள்வதில் எல்லோரும் உடன்பாடு கொள்ள மாட்டார்கள். வன்முறை கிளர்ச்சி செய்பவர்கள,  நாகரீகமற்ற மனிதர்களின் செயல்கள் என இவர்கள் கொள்கின்றனர். உலக அரசியல் ஓட்டத்தில் எவ்வகையான ஓட்டங்கள் நடைபெற்றாலும் பரவாயில்லை, தேவையில்லாமல் வல்லரசுகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதிலும் பார்க்க, தம்மால் செய்யக் கூடியவற்றை செய்வோம் என்ற மனோநிலையே இவர்களிடம் காணக்கூடியாக உள்ளது. இந்தப் போக்கை அரசியல்வாதிகள் சிறப்பாக கையாள்கின்றார்கள்.

இதில் தனிநபர் நலன் என்பது தமது இருப்பை உறுதி செய்வதற்கானது என, ஒரு அமைப்பில் தனிநபர்கள் எவ்வகையான பாத்திரத்தை வகிக்க முடியும் என்ற தெளிவில் பேசுபவர்கள் இவர்கள். இதனாலும் இவர்கள் தனிநபர் நலனை முதன்மைப்படுத்துகின்றனர்.

இப்படியானோர் தன்னியல்பிற்கு (Spontanious ) உட்பட்டு  தளங்களில் செயற்படுகின்றனர் எனில், அவை மனித உரிமை அமைப்புகள், பெண் விடுதலை அமைப்புகள் (இவைகளும் தமிழ் சமூகத்தில் குறிப்பிட்ட அளவு வளர்ச்சியில்லை), சாதிய எதிர்ப்புச் சக்திகள் (உளவாளிகள், சிங்கள தேசத்தின் கூலிகளைத் தவிர பெரிய அளவில் அமைப்பு வடிவம் இல்லை), குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக மட்டும் தம் சக்தியைப் பயன்படுத்தும் சக்திகளாக மட்டும் இவர்கள் இருக்கின்றனர். இவைகள் தன்னார்வச் செயற்பாட்டிற்கு அப்பால் செல்ல முடிவதில்லை. ஆனால் இவர்களின் சீர்திருத்தப் போராட்டங்களை ஒரு கட்சியும் கூட எதிர்ப்பதில்லை. அதனால் குறிப்பிட்ட வரம்பினுள் இவர்கள் திருப்தி அடைவதையும், மக்கள் தேவையற்றுத் தனிப்போக்கில் திசை திருப்பப்படுதலையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

மக்களிடையே தன்னியல்பான செயற்பாடுகள் என்பது தாராளமாகவே காணப்படும். அதனை ஒழுங்குபடுத்தி, போராட்டத்தை சரியான வழிக்கு நடத்திச் செல்ல வேண்டிய கடமையானது ஒரு கட்சியின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையை போக்குவதற்கு கட்சியானது கடுமையான உழைக்க வேண்டியுள்ளது. ஒரு கட்சியினுள் தன்னிச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது. அவற்றை கட்சியானது உடனுக்குடன் முடிவிற்கு கொண்டு வரவேண்டும். இது தான் பொதுவுடமைக் கட்சிக்கும் முதலாளித்துவ கட்சிக்கும் உள்ள வேறுபாடாகும். விதேசிய- தரகு முதலாளித்துவ தனிநபர்களின் சிந்தனைப் போக்கை வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டே அரசியல் விளையாட்டை நடத்தப்படுகின்றது.

 

இதனையே இளையோர், முற்போக்கு ஜனநாயக சக்திகள் விளங்கிக் கொள்ள வேண்டும். இளையோரை, முற்போக்கு ஜனநாயக சக்திகளை வளர்க்காமல் தனிநபரைச் சுற்றிய அரசியல் போக்கை வளர்க்கப்படுகின்றது. பிறகு கீழ் கண்டவாறான புலம்பலையும் முன்வைப்பார்கள். 

 

***நடுத்தெருவில் தமிழர்களை ஏமாற்றிவிட்டது நல்லாட்சி அரசாங்கம்

***தீர்வு முயற்சி இன்றேல் தமிழர் தாயகம் எங்கும் நிர்வாம் முடக்கம்

***அரசியல் தீர்வை அரசு தரத் தவறினால், தொடர்ந்தும் இழுத்தடிப்புப் பாக்கை கையாண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான நிலைப்பாடை எடுக்கும் (சாம்)

***26.10.22 இனப்பிரச்சனைக்கு ஒரு வருடத்தில் தீர்வு ஜனாபதியின் கருத்தை வரவேற்கிறோம், சுமந்திரன்- ரணிலின் வாக்குறுதிக்கு பதில்

***26.04.25- முழு அடைப்புப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காவில்டால்- சட்டமறுப்பு போராட்டம்.

***பொங்கல் செய்தி- இவ்வருடமும் ஏமாற்றினால் வேறு விளைவுகள் ஏற்படும்.

***பொபி மலரைத் தனது கோர்ட்டில் குத்திச் சென்று அதிகார வர்க்கத்தின் நண்பர்கள். 

இனவழிப்பு இராணுவத்தை வழிபடுவது, துதிபாடுவது ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பர்கள் அல்லர்.

முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களின் அரசியல் போக்காகும். முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களின் அரசியல் போக்கு எப்பவும் ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்தவர்களாக இருக்க முடியாது. முதலாளித்துவ சிந்தனைப் போக்கு,  செயற்பாடுகள், அரசியல் முடிவுகள் இவைகளே தமிழ் மக்களின் அரசியலாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.


பழைய சிந்தனைகள்:

முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்குவது மாத்திரம் இல்லை சிந்தனையும் மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தை மாற்றவேண்டும் என்றால், அதனை இந்தச் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்துதான் உருவாக்கவேண்டும். ஆனால் இன்று சமூக அரசியலில் யார் சரியான கோட்பாட்டாளர் என்ற போட்டி மனப்பான்மையும் ஒரு புறத்தில் உருவாகி இருக்கின்றது.

இவர்களும் இந்த அழுகிய சமூகத்தின் உற்பத்திப் பண்டங்கள் தான். இந்தப் பொருளாதாரம் படைக்கும் மனிதர்களும் இந்தச் சமூகத்திற்கு ஏற்பவே பிற்போக்குத்தனம் கொண்டவர்களாகவும், புரட்சிக்கு தயாரற்ற மனிதர்களாகவுமே இருக்கின்றனர்.

ஆண்டான் அடிமைக் காலத்தைப் போல, சொல்வதைக் கேட்டுக் கொண்டு கக்கத்தில் துண்டை வை என்று கூறும் ஆண்டான் அடிமையை நிலை நிறுத்தும் ஆதிக்கச் சிந்தனையே இது. இந்தச் சிந்தனையை யாழ் சைவ மேட்டுக்குடி வேளாளம் என்பார்கள் இலங்கையில். இந்தியாவில் பிராமணியம் என்பார்கள். இது அரை நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் ஆகும். அரை நிலப்பிரபுத்துவ சிந்தனையில் தூய்மைவாதமும் முக்கிய அம்சம்.

தூய்மைவாதம் ஒவ்வொரு மதங்களிலும் வெவ்வேறு வடிவத்தில் பொறிமுறைகளைக் கொண்டு இருக்கின்றது. துடக்கு, தீண்டத் தகாதவர் என்னும் சிந்தனை இதனுள்ளே இருக்கின்றது. இதில் தூய்மை வாதத்தை யார் எப்படிக் கதைக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.

கத்தோலிக்கத்தில் திருச்சபைக்கு விசுவாசமாக இல்லாது விடின், கோவில் சபையை விட்டு விலக்கி அன்னியப்படுத்துவது. கத்தோலிக்கத்தில் சுவாமியாகப் போகவேண்டும் என்றால், தவறு செய்யாதவனாக, திருமணம் முடிக்காதவனாக தூய்மையாக இருக்க வேண்டும். அவனே கிறிஸ்தவ பாதிரியாகப் போக முடியும். புரட்சிக்கும் அவ்வாறே தூய்மையானவர்களை தேடித் திரிகின்றார்கள் சிலர். புரட்சியை விரும்புவோர் எத்தளத்திலும் தவறு விட்டிருக்கக் கூடாது, அவ்வாறு தவறு விட்டிருந்தால் துடக்கு. ஆக புரட்சிக்கும் புரட்சியை முன்னெடுப்பதற்கும் துடக்கில்லா ஜீவன்களை தேடியோடுகின்றது இந்தச் சமூகச் சிந்தனை.

இந்தப் பழைய உற்பத்தி முறையின் சிந்தனைக்கு மாற்றாக, புதிய சிந்தனையை உருவாக்காது விடின், இந்த கவித்துவ - புத்திஜீவிப் புரட்சிக் காரர்களுக்கு முன்னால் எல்லோரும் தூய்மைவாதமான பாவம் செய்தவர்களாவும், தீண்டத் தகாதவர்களாகவுமே இருக்க முடியும்.

ஆகவே பாவம் செய்யாதவன் எவனோ..! அவன் வந்து கல்லெறி. தீட்டில்லாத உயர்குடியே நீ வந்து புரட்சி செய் போன்ற போலி உணர்வு சமூகத்தின் சிந்தனையில் ஆட்கொள்கின்றதுடன், சமூகக் கட்டுப்பாட்டையும் இப்படி விதிக்கின்றது.

அத்துடன் எதிரிக்குத் துணைபோகும் கருத்துக்கள், துணையாக நடப்பது என்பதும் கூட இந்தச் சமூக அமைப்பினால் உருவாக்கப்படும் லும்பன் சிந்தனை தான். தனிநபர்கள் தான் தப்பினால் போதும் என்ற சுய நலச் சிந்தனை தான். இதுவும் ஒரு வாழ்வு முறைதான். இந்த வாழ்வு முறையையும் இந்தச் சமூகம் உருவாக்கிக் கொள்கின்றது.

இந்தச் சமூகத்தில் உள்ளவர்களின் குற்றம் என்பது சந்தர்ப்பவசத்தாலும், உளவியல் ரீதியாகவும், லும்பன் தன்மையாலும் உருவாக்கப்படுகின்றது. இவைகளை திருத்த வேண்டியது அரசின் கடமையாகின்றது. ஆனால் அரச இயந்திரம் என்பது உழைக்கும் மக்களிடம் இல்லாதபோது இவ்வாறான தவறான பாதையில் செல்கின்றவர்களையும் சரியான பாதைக்கு கொண்டு வருவதும் ஒரு வேலைமுறைக்கு உட்பட்டதாக இருக்கின்றது.

இதேபோல அரசியல் சக்திகளில் மூளை உழைப்பில் மட்டும் தங்கியிருப்பவர்களில் சிலர் இந்தச் சமூக அமைப்பை பாதுகாக்கின்றவர்களாகவே உருவாகின்றார்கள். இவர்கள் தமது வர்க்க நிலை காரணமாக ஒரு அமைப்புக்கு எதிரான தனிமனித சிந்தனையை சமூகத்தில் முன்வைக்கின்றார்கள். இவர்களின் தனித்துவவாதச் சிந்தனை என்பது, ஏகாதிபத்தியப் பொருளாதார உற்பத்தியைக் கொண்ட நாடுகளில் வளர்ந்துள்ளது. ஆனால் அரை நிலபிரபுத்துவத்தில் முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையாத நாடுகளில் சுயநலம் உள்ளதாகவும், ஓர் அரைத் தனித்துவவாதம் கொண்டதாகவும் இது இருக்கின்றது. இதன் காரணம் யாதெனில் முழுமையாக தனித்துவ மனிதர்களாக மாறக்கூடிய பொருளாதார அமைப்பு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதாகும்.

இவ்வாறானவர்களை எவ்வாறு அணுகுவது என்பது ஆராயப்பட வேண்டும். ஆனால் இந்தச் சிந்தனையில் பிற்போக்கு பழமைவாதத் தன்மை கொண்டவர்களாக இருப்பினும், இவர்களும் இந்தப் பொருளாதார அமைப்பின் சுரண்டலுக்கு உள்ளாகின்றார்கள் என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியதும் கடமையாகின்றது. (இங்கு வர்க்க பேதங்கள், நேச சக்தி பற்றிய ஆய்வு அவசியம்) மக்களை அணிதிரட்டுவதற்கும், சமூகச் சூழலை அளவிடுவதற்கும் அளவுகோலாக பழைய உற்பத்தி முறை சார்ந்த நீதிநெறி உயிர்வாழ்கின்றது. பழைய உற்பத்திமுறை சார்ந்த அரை நிலப்பிரபுத்துவம் தொடர்ந்து உயிர்வாழ்வதை இன்றைய சமூக அமைப்பில் காணலாம். பழைய உற்பத்தி முறைக்கும் அது உருவாக்கிக் கொண்ட போலியுணர்விற்கும் புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்குமான சிந்தனை மாற்றத்திற்கான போராட்டம் என்பது, வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தே தொடர வேண்டும். இந்த பழைய உழுத்துப் போன சிந்தனையைப் பயன்படுத்துகின்றார்கள்.

 

போராட்டத்தைக் கட்டமைப்பது, உறுப்பினர்களை உள்வாங்குவது, கொள்கை வகுப்பது என்பது முதலாளித்துவ முறையில் அமைய முடியாது என்பதே 2009 வைகாசியில் இருந்து 2025 ஆவணி வரையிலான அரசியல் போக்கு வெளிப்படுத்தியுள்ளது.  மக்கள் திரள் போராட்டம் என்பது ஒடுக்குமுறை அரச இயந்திரத்தை அசைக்கும் படியாக இருக்க வேண்டும்.

போராட்ட முறை இரத்தம் சிந்தும் இரத்தம் சிந்தா வகையில் அமைய முடியும்.

இங்கு இரந்தம் சிந்தாப் போராட்டங்களை இறுக்கமாக கட்டமைக்க முடியும். இன்று நடந்ததாக (28.08.25) கூறப்படும் போராட்டம் வெற்றி அடையவில்லை என்றால் அதனை ஏற்பாடு செய்தவர்களின் அரசியல் குறைபாடே காரணமாகும். தனித் தவில் வாசிக்கும் அரசியல் போக்கு என்பது முதலாளித்துவ சிந்தனையாளர்களின் சிந்தனைப் போக்கு.

 

தமிழ் தேசிய அரசியல் என்பது முதலாளித்துவ சிந்தனை வர்க்கத்தாரின் நலனின் இருந்து அமைய முடியாது. முதலாளித்துவ சிந்தனைப் போக்கு கொண்டவர்களாக இருப்பினும் அவர்கள் விதேசிய -தரகு வர்க்க அணியினரே தமிழ்தேசிய முலாம் பூசிக் கொண்டுள்ளனர்.

அரசு என்பதை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக்கோரிக்கை

தாயகம்-தேசியம்- சுயநிர்ணய உரிமை

 

இது தான் எம் முன்னால் உள்ள அரசியல் பாதை. அரசை மறுத்த எந்தச் சக்தியும் அகற்றப்பட்ட வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தமும் அரசு  என்பதை மறுக்கின்றது.

 

சுருக்கமாக

யாழ் மக்களை மோசமானவர்களாவும் சித்தரிக்கப்படுகின்றது. இது தவறான அரசியல் முடிவாகும். தமிழ் பிரிவில் உள்ள ஏமாற்றுப் பிரிவை முதலில் சந்திப்பவர்கள் சிறிய பிரிவினராகவே இருப்பார்கள்.  அந்த பிரிவினரின் அரசியலை விதேசிய- தரகு வர்க்கப் பிரிவு தனக்கு ஏற்ப கூட்டிப் பிரிக்கும்.

 

"போராட்டம் வெடிக்கின்ற பொழுது 'சமரசவாதி' பாதுகாப்பை தேடி பேடித்தனமாக ஓடுகிறார். புரட்சிகரமான மக்கள் வெற்றி அடையும் பொழுது தன்னுடைய பதுங்குமிடத்திலிருந்து வெளியே ஊர்ந்து வருகிறார். அகம்பாவத்தோடு உடலை சிலிப்பிக் கொள்கிறார் . அது ஒரு மகத்தான அரசியல் வேலை நிறுத்தம் என்று கூச்சலிடுகிறார், தொண்டை கரகரக்கும்வரை பைத்தியம் பிடித்தவரை போல கூச்சலிடுகிறார்; ஆனால்! எதிர்ப் புரட்சி வெற்றி பெற்றால் 'சமரசவாதி' தோல்வி அடைந்தவர்கள் மீது போலியான கடிந்துரைகளையும் நல்லறிவு போதனைகளையும் குவிக்கிறார்.

வேலை நிறுத்தம் வெற்றியடைந்தால் அது மகத்தானது. வேலை நிறுத்தங்கள் தோல்வியடைந்தால் அவை குற்றவாளித்தனமானவை. பைத்தியக்காரத் தனமானவை! அறிவில்லாதவை! மற்றும் அராஜகமானவை.

தோல்வியடைந்த எழுச்சி முட்டாள்தனமானது. உணர்ச்சிவசப்பட்ட சக்திகள் செய்த கலகம்! கட்டுமிராண்டித்தனம் மற்றும் முரட்டுத்தனம்! சுருக்கமாகச் சொல்வதென்றால் அந்த சமயத்தில் எந்த தரப்பு மிகவும் பலமானதாக இருக்கிறதோ அதைப் பார்த்து கெஞ்சுவதற்கு சண்டை போடுபவர்களுக்கு நடுவே விழுந்து முதலில் ஒரு தரப்புக்கும் பிறகு மறு தரப்புக்கும் தீங்கு செய்து, சுதந்திரத்துக்காக ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களின் போராட்டத்தை மட்டுப்படுத்தவும். அவர்களின் புரட்சிகரமான உணர்வை மழுங்கடிக்கச் செய்யவும் 'சமரசவாதியின்' அரசியல் மனசாட்சியும் அரசியல் நுண்றிவும் அவரை தூண்டுகின்றன."

மேல் உள்ள பந்தியானது போலி தேசியவாதிகளையும், விதேசிய பிரிவின் வெற்று கூச்சலையும் அறிந்து கொள்ள முடியும்.

 

இன்றைய ஆட்சியாளர்கள் தமது அரசியலை சிங்கள தேசம் சார்பாக செயற்படுகின்றனர். விதேசிய- தரகு அணியில் உள்ள இரசிகர்கள் (Hurd mentality) கும்பல் சிந்தனையில் தான் செயற்படுவார்கள். இதற்கு மாற்றாக 

அரசு என்பதை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக்கோரிக்கை

தாயகம்-தேசியம்- சுயநிர்ணய உரிமை


No comments:

Post a Comment