Popular Posts

Monday, 27 July 2026

தமிழ் தேசத்தின் மீதான கருத்தியல் தாக்குதல்

 


தமிழ் தேசத்தின் மீதான கருத்தியல் தாக்குதல்

 

அரசியலின் வடிவம்:* தமிழர்களின் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலையை, உரிமைகளைப் பாதுகாப்பதை மற்றும் சுயநிர்ணய உரிமையை மையமாகக் கொண்டதாக அமைகிறது. இந்த அடிப்படையில் தான் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்றது. அந்த எழுச்சியைத் தீர்மானிப்பது வளர்ந்து வருகின்ற சமூக பொருள் உற்பத்தி முறையினால் ஏற்படும் முரண்பாடுகளாகும். அந்த முரண்பாடு தனிமனிர்களின் விருப்புச் சார்ந்து உருவாகுதில்லை. தேசிய ஜனநாயகக் கட்டம் பற்றிய புரிதல் என்பது அவசியமானதாகும். இதனை விளங்கிடாத எழுத்துகள்

 தத்துவார்த்த அடிப்படை*

இது மொழி வழியில் அமைந்த சமூக ஒழுங்கமைவானது தனது அரசியல் அதிகாரத்திற்காக போராடியது. தாயகக் கோட்பாடு மற்றும் ஜனநாயக ரீதியான உரிமைகோரல்களை அடிப்படையாகக் கொண்டது. அதாவது மொழி, நிலப்பரப்பு, பண்பாடு, பொருளாதார அடிப்படையாகக் கொண்டதாகும்.  பண்பாட்டுத் தேசியவாதம் (இலங்கை இஸ்லாமியம், இந்துத்துவா) என்பது மத அடிப்படையாகக் கொண்டதாகும். தேசத்தையும் மதத்தையும் போட்டுக் குழப்புபவர்கள் உள்ளார்கள்.

இலங்கை என்பது இரண்டு தேசங்களையும் மதச் சிறுபான்மை, மற்றும் தேசிய இனத்தையும் கொண்டதாகும்.  இரண்டு தேசங்களில் உள்ள மதச் சிறுபான்மை, தேசிய இனங்களின் பிரச்சனை தனித்தனியே பேசித் தீர்க்கப்பட வேண்டியவையாகும்.

 

வேளாளியம் என்று உரைப்பவர்கள் தமது மூளையை வேறொங்கோ அடைவு வைத்துவிட்டு கருத்தெழுதும் நபர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் தமது சுயஅரிப்பை தீர்ப்பது. இவ்வாறு திட்டித் தீர்க்கும் பேர்வழிகள்..

 

பண்பாட்டுத் தேசியவாதம்

பண்பாட்டுத் தேசியவாதம் பற்றிய புரிதல் அற்ற அரைகுறை இடதுசாரிகள் உள்ளார்கள். இந்த இடதுசாரி என்போருக்கு தேசம், தேசிய இனம், மதத் தேசியவாதம் என்பது பற்றிய எவ்வித புரதலும் இல்லை. குறிப்பாக தாராளவாதிகள் தமது சமூக அந்தஸ்தை, சமூக இருப்பை பாதுகாப்பதற்காக கருத்து கூறும் பேர்வழிகள்.

மதஅடையாளத்தை முன்னிறுத்தும் இந்துத்துவா அரசியலைப் போலவே. மதகுருமார்கள், உயர்வர்க்க (மேட்டுக்குடி) நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் காவலர்களால் முன்வைக்கப்படுவதாகும். யூத, இந்துத்துவா, இலங்கை இஸ்லாமியர்களின் போக்கும் இதற்கு உட்பட்டது தான். தமிழர்களிடம் உள்ள நிலப்பிரபுத்துவ (யாழ்சைவேளாளியம்) என்று விமர்சிப்பார்கள். மதத்தில் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளத்தை ஆதரிப்பது முற்போக்காக அமைந்து விடுகின்றது. லெனின் மொழியில் சொல்வது என்றால் இவர்கள் எவ்வளவு நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பினும் இவர்கள் இருக்க வேண்டியது பிற்போக்கு முகாமே.

முஸ்லீம்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையை ஏற்பதில் எவ்வித தயக்கமும் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவர்கள் தமிழர் தேசத்தின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். சிங்கள தேசத்திற்கு ஒரு முகமும், தமிழர் தேசத்திற்கு ஒரு முகமும் காட்டும் போக்கைப் பற்றி இந்த அறிவாளிகள் பேசப்போவதில்லை.

இரண்டை முகம் கொண்ட மனிதர்கள் தாராளமாக கருத்துக் கூறுவார்கள். இது பற்றி எவரும் ஆய்வு செய்யவும் இல்லை, முகத்துக்கு அஞ்சிய கருத்தாளர்களாக இருக்கின்றார்கள்.

 

இராச தந்திரம் என்பது

இன்றைய பல்துருவப் போக்கில் தமிழர்களின் வகிபாகம் என்பது தவிர்க்க முடியாது. தமிழ் மக்களை எந்த சக்திகளும் பயன்படுத்திக் கொள்ளும். இன்றைய புதிய உலக ஒழுங்கினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளில் ராஜதந்திரப் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் பலரும் முறையான 'வீட்டு வேலைகளைச்' (Homework) செய்யாமலேயே செயற்படுவதாகவும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் தமிழர்களின் அரசியல் இலக்குப் பற்றிய நிலைப்பாடு இல்லாமையே அடிப்படைக் காரணமாகும்.

எமது போராட்டம் என்பது அரசுக்கானது. அந்த அரசை வைத்துத்துதான் அரசியல் அதிகாரத்தை செயற்படுத்த முடியும்.

தமிழர்களை மேற்கு நாடுகள் பயன்படுத்தும் விதத்திற்கும் சீனா பயன்படுத்தும் விதத்திற்கும் மாறுபாடுகள் உண்டு. சீனா உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்று கூறிக் கொள்ளும். அது நாடு அற்ற தேசங்களின் பிரச்சனையில் தவறாக செயற்படும். அது சீனத்தின் கடந்த 50 கால வரலாறு. முன்னைய சீனத்தின் நிலை என்பது அவ்வாறில்லை.  சீனா தனது நலனுக்காக பல அண்டைய நாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளது. அது உட்கட்டுமானத்தை கட்டமைக்கின்றேன் என்று மறைமுக ஆக்கிரமிப்பை நடத்தி வரும் நாடாகும்.

 

தமிழக உறவு-

தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான அரசியல் உறவை வளர்ப்பது அவசியமானதாகும். ஈழத்தமிழர்களின் முதன்மை நட்பு சக்தி தமிழக மக்களே. நட்புசக்தியாக இருக்கின்ற நிலையை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை முன்பைவிட அதிகமாகவே உள்ளது. இவைகள் அவசியமற்றவை என்று கருதினால் அதன் பின்னால் ஏதோ ஒரு அரசியல் நலன் சார்ந்த சக்தியின் கருத்தாகவே இருக்கும்.

யூதர்களின் லொபியை தமிழர்களுடன் ஒப்பிடப்படுகின்றது. யூதர்களின் அரசியல் நிதிமூலதனத்துடன் ஆழப் புதைத்த அரசியல். அந்த அரசியலை விளங்கிக் கொள்ளாது யூதர்கள் என்று ஒப்பிப்பதே வழமையாகிவிட்டது.  AIPAC லொபி என்பது பெரும் வலைப்பின்னலைக் கொண்டது. இன்றைய உலகப் போக்கில் அமெரிக்காவின் துணைப்படையாக இஸ்ரேல் செயற்பட்டு வருகின்றது. இஸ்ரேலின் அதிகார வரம்பு பலநாடுகளின் அதிகார வர்க்கம், பாதுகாப்புப்படை போன்றவற்றை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளது. இவற்றைக் கவனிக்காது இஸ்ரேல் பற்றிப் பேசிகின்றார்கள். யூதர்களும் தமிழர்களின் நிலையும் ஒன்றல்ல.

கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக எவ்வித அரசியல் பொருளாதார, வரலாற்றுப் போக்கை கவனத்தில் கொள்ளது எழுதும் புலவர்கள் அதிகம் உள்ளார்கள்.

 

தமிழர்களின் அரசியலும் அதன் தத்துவார்த்த அடிப்படையும்: ஒரு பகுப்பாய்வு

 

தமிழர்களின் 2009 -2026  காலப்பகுதி அரசியல் என்பது சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் சென்றதா? இல்லை பின்னோக்கிச் சமூகத்தை இழுத்துக் சென்றதா என்ற ஆய்வு அவசியமா இருக்கின்றது. பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமது விருப்பிற்கு உட்பட்ட, சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்றார்கள், கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் சமூகத்தின் உறுப்பினர்கள் ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக நம்புகின்றார்கள். ஆனால் அவை சமூகத்தில் வர்க்கங்களாக பிளவுண்டு உள்ளார்கள். வர்க்கங்களின் தாக்கமே சிந்தனையாக வெளிப்படுகின்றது.

அரசியல் கருத்தாளர்கள் என்பவர்களை தனியே தமிழர் என்ற அடிப்படையில் ஒன்றாக அணுகிட முடியாது. தமிழர் என்பதால் அனைவரும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிப் கதைப்பது எல்லாம், தமிழர்களின் நலனுக்கானது என எண்ணிவிடவும் முடியாது.

தமிழர்களிடம் உள்ள கருத்தாளர்களில் தமிழர் தேசம் என்ற அடிப்படையில் யார் சிந்தித்துச் செயற்படுகின்றர்கள் என்பதே அளவுகோளாகும். அந்த அளவுகோளை கொள்ளாது எல்லோரும் தமிழ் மக்களின் நலனில் இருந்து எழுதுவார்கள் என்றில்லை.

சிந்தனைகள் எதுவும் நடுநிலையாகவோ, சார்புத் தன்மை அற்றதாகவோ இருக்க முடியாது. நாம் வாழுகின்ற சமூக அமைப்பின் வெளிப்பாடுகள் தான் சிந்தனை தீர்மானிக்கின்றது. தமிழ் மக்களிடம் எதுவும் இல்லை என்ற கருத்தாக்கம் எழுப்பப்படுகின்றது.

கோட்பாடுகள் வரலாற்று வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றது.

இயங்கியல் மறுப்பாளர்களான அனுபவவாதிகள், நேட்காட்சிவாதிகள், புகாரியவாதிகள், ரொட்ஸ்கியவாதிகள் எவ்விதத்திலும் வலதுசந்தர்ப்பவாதிகளை விட தமிழர் விடயத்தில் மாறுபட்டவர்கள் அல்லர்.

தேசிய இனப்பிரச்சனை சார்ந்து கருத்துக் கூறுபவர்கள் பல்வேறு பிரிவினராக உள்ளார்கள்.

 

வலதுசாரிப் பிரிவுகள்

கிளிநொச்சி- திருமலை கருத்தாளர்கள் அப்பட்டமான ஒத்தோடிகளான வலதுசாரிப் பிரிவு. அவர்களின் எழுத்துகள் என்பது கருத்துக் கூறியே தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்தும் பிரிவு.

ITAK பிரிவில் அரசு என்ற விடயத்தை ஏற்க மறுக்கும் பிரிவு உள்ளார்கள். இது ஏக்கராச்சியப் பிரிவு.

தம்மை நடுநிலையாளர்களாகவும், யதார்த்தவாதிகளாகவும் அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

இப்போ நீலன் திருச்செல்வத்தின் பங்களிப்பை மிகைப்படுத்தியும், சிறப்பையும் போற்றும் பிரிவு. இந்த நச்சுப் பிரிவு தம்மை அறிவுஜீவிகளாக காட்டிக் கொண்டு அறிவுத் தளத்தில் இருந்து மக்களை திசை திருப்புகின்றார்கள். இந்த அடியாள் கூட்டம் என்பது மிகவும் ஆபத்தானதே.

தேசியப் பிரச்சனை என்பதே அரசு பற்றிய பிரச்சனை. அரசு பற்றிய பிரச்சனையை விளங்கிக் கொள்ளாது தேசிய இனப்பிரச்சனை சார்ந்து எவரும் பேசிவிட முடியாது.

குறிப்பாக அறிவுஜீவி தளத்தில் இருந்து கொண்டு கருத்துக் கூறுபவர்கள் . இதேபோல மேற்கு ஆய்வாளர்களையும் கருத்தாளர்களாக இணைத்துக் கொண்டு தமது கருத்துக்கு வலுச் சேர்க்க முற்படுகின்றார்கள்.

மேற்கு கருத்தாளர்கள் முதலாளித்துவ கல்வியால் வார்க்கப்பட்டவர்கள். முதலாளித்துவ நலன் சார்ந்து உருவாக்கப்பட்டவர்கள். இவர்களின் கருத்து என்பது எந்தக் காலத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இருக்கப் போவதில்லை.

தமது கருத்துக்கு வலுச் சேர்ந்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு வலுச் சேர்க்கின்றார்கள். இன்று 2009 பின்னர் களமிறக்குவதன் ஊடாக அரசியல் நீக்கம் செய்கின்றார்கள்.

 

இடதுசாரிகள்

இடதுசாரிகள் என கூறிக் கொள்வோர் எவருக்கும் மார்க்சிய லெனினிய அடிப்படையில் கருத்துக் கூறுபவர்கள் எவரும் இல்லை. வரலாறு எங்கும் ஒப்பித்தனை ஒப்பித்துக் கொண்டிருக்கின்ற பிரதிநிதிகள். கடந்த காலத்தில் இருந்து அழுதுகொண்டிருப்பார்கள். இந்த அனுபவவாத, நேட்காட்சிவாதிகளின் அலப்பறை எதிர்க் கொள்வது இலகுவானது. ரொட்ஸ்கிய, புகாரியவாதிகளின் இயங்காவியல் எழுதுகள். இந்த மார்க்சிய விரோதிகளின் எழுத்துகள் ஏகாதிபத்திய, உள்நாட்டு ஆட்சியாளர்களின் நலன் சார்ந்தே இருக்கும். ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகளான இவர்கள் தொடர்ந்தும் தம்மை மார்க்சியர்கள் என அழைத்தும் கொள்வார்கள். இவர்களை மதிப்பீடு செய்வதும் இலகுவானது. ஆனால் இவர்கள் இடதுசாரி முகமூடிக்குள் இருந்து கொண்டு எழுதுவதால் அனைத்தும் மார்க்சிய வழி என கற்பிதம் செய்யப்படுகின்றது. சமூக தேசிய வெறியர்கள், ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகள் வலதுவிலகலே.

சில தற்குறிகளும் இதற்கு ஒத்தூதுகின்றார்கள். பழைய இயக்கம் சார்ந்தவர்களின் இயலாமையின் வெளிப்பாடு. தமது இயலாமை மறைப்பதற்கு ஈழ தேசத்தின் அரசியல் நியாயத்தை செறடிக்கின்றார்கள்.

(பிகு- சில தற்குறிகளின் பெயர்களை இங்கு தவிர்க்கின்றேன். அந்த தற்குறிகளுக்கு என்ன எழுதினாலும் விளங்காது)

 

அரசு

ஈழப் போராட்டம் என்பது அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை நீலன் திருச் செல்வம் வகையறா ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத வரலாற்றை மறைத்துக் கொள்கின்றார்கள். இதன் ஊடாக தமிழ் மக்களை பிழைக்கத் தெரியாதவர்கள், அதிகார வேட்கைக்காக பலியாக்கப்பட்டவர்கள் என்ற கருத்தாக்கத்தை மேற்கொள்கின்றார்கள்.

இன்று கருத்துக் கூறுபவர்களும் எமது போராட்டம் அடிப்படையில் அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்ளவில்லை. அதனை விளங்கிக் கொள்வதற்கு அரசியல் அறிவு அவசியமானதாகும்.

2009இல் முடிவிற்கு வந்தது இரத்தம் சிந்தும் போராட்டம் மட்டுமே. இரத்தம் சிந்தும் அரசியல் முடிவிற்கு வந்த காரணத்தினால் தமிழ் மக்களின் அரசியல் இலக்கு முற்றுக்கு வந்தது என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. அவ்வாறே தமிழ் பிரதிநிதிகள் பேசி வந்தார்கள். தோல்வி, அடிமை மனப்பாங்கை விதைத்து வந்தார்கள். அதில் ஒரு வகையில் வெற்றியும் கண்டார்கள். தமிழ் கட்சிகள் கொள்கை நிலையில் ஊசலாட்டம் கொள்ள இதுவே காரணமாகும்.

 

ஈழ தேசத்தின் அரசியல் அதிகாரத்தை விளங்கிக் கொள்ளாத உதிரி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் கருத்துகளை எதிர்க்கும் வல்லமையை இளம் தலைமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

இன்று எம்முன்னால் உள்ள கடமை இனவழிப்பு, ஈழ தேச ஆக்கிரமிப்பு, சுயநிர்ணயம் என்பது பற்றிப் பேசுவதே.

இந்த மூன்று விடயத்தைப் பேசாத தற்குறிகளை சமூகத்தில் இருந்து அகற்றுவதே.`

 

இனவழிப்பு, ஆக்கிரமிப்பு, சுயநிர்ணயம் போராட முழு உரிமையும் உடையவர்கள். அதனைகேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் யாருக்குமில்லை.

தமிழர்களின் உரிமையை இட்டு யாரும் பட்டிமன்றம் நடத்தவோ உரிய விவாதப் பொருள் அல்ல.

போராட்டம் நடத்தவும் யாரிடமும் அனுமதி பெறவேண்டிய தேவையும் இல்லை.

ஈழத்தவர்களின் அரசியல் இலக்கு அரசியல் அதிகாரம். அதற்கு அடிப்படையானது அரசாகும்.

 

 

``புதிய ஜனநாயகப் புரட்சி என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாட்டின் விடுதலையையும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக மக்களின் விடுதலையையும் நோக்கமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட தேசியப் புரட்சி, நிலப்பிரபுத்துவ உறவுகளை அறுத்தெறியும் ஜனநாயகப் புரட்சி இரண்டையும் உள்ளடக்கியதுதான்.

சீனாவைப் போன்ற அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை கொண்ட இந்தியாவில் இன்னமும் புதிய ஜனநாயகப் புரட்சி நடந்தேறவில்லை. அதற்கு முக்கிய முன் நிபந்தனையாக நாடு தழுவிய அளவில் ஒரு கட்சித் தலைமையின் கீழ் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. அதனை சாதிப்பதற்கு இன்னமும் பல மைல் தூரம் செல்லவேண்டியுள்ளது.’’

மாவோவின் உரை (28.04.69)க்கு விளக்கத்தை தாம் விரும்பியவாறு கொடுக்க முடியும்.

அடிப்படையில் இந்த உரை தோழர் ஸ்ராலின் மற்றும் அகிலத்தின் வழிகாட்டலை ஏற்றுக் கொண்ட நிலையில் மாவோ எழுதியது. (90 விழுக்காடு ஹான் தேசிய இனம்)

இங்கு தேசிய போராட்டம் லெனின் வழிகாட்டலும், ஸ்ராலின் வழிகாட்டலும் சீனத்திற்கும், இந்தியாவிற்கும் பொருந்தும்.

தேசிய ஜனநாயகப் போராட்டத்தில் முக்கிய விடயமே சுயநிர்ணயம் பற்றிய பிரச்சனையாகும். சமூக தேசியர்களாகவும், ஏகாதிபத்திய பொருளாதாரத்தினுள் சீரழிந்த பின்னர் தமக்கு தேவையான வகையில் வியாக்கியானம் செய்யப்படுகின்றது.

மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று திரிக்கப்படுகின்றது.

 உலகில் உள்ள பல இனக்குழுமங்கள்- தேசிய இனங்கள் மொழிவழியில் இணைந்து தேசங்களாக இணைவதும் தேசியஇன இயக்கம் எழுவதும், அரசு அமைப்பதும் இன்னும் முற்றும் பெறவில்லை. முதலாளித்துவ வளர்ச்சி, தேசிய எழுச்சி பல நாடுகளில் முற்றுப்பெறவில்லை. இது உலகில் உள்ள பல வளர்ந்து வரும் நாடுகளின் போக்காகும்.

 

No comments:

Post a Comment