``ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்தின்” முளைப் பருவப் போக்கு
ஏகாதிபத்திய பொருளாதாரவாதம் பற்றிய புரிதல் அவசியமாகும். இன்றைய உலகப் போக்கில் கட்சிகள் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்ற புரிதலை கொடுக்கும் வழிகாட்டலாகும். மார்க்சின் பொதுவான வழிகாட்டலில் இருந்து குறிப்பான நாட்டில் கோட்பாடு வகுப்பது என்பதை லெனின் வழிகாட்டியுள்ளார். ருசிய நிலையில் இருந்து இன்றைய போக்கை அணுகமுடியுமா என்றால் ஆம். ருசியா மிகவும் நிலமானியச் சமூக எச்சத்தினை கொண்ட நாடாகவும், முதலாளித்துவ புரட்சி நடைபெறாத காலத்தில் லெனினின் வழிகாட்டல். குறிப்பாக ஆசிய நாடுகளில் உள்ள நிலையும் அது தான். இதற்கிடையில் முதலாளித்துவ தாராளவாதக் கருத்துகள் சமூகத்தில் ஊட்டப்பட்ட நிலையில் சரியான போக்கை வந்தடைய இயங்கியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டும்.
மூலநூலில் இருந்து அரசியலைக் கற்றுக் கொள்வது என்பது இலகுவான விடயமே. மூலநூல்களில் இருந்து மேற்கோள்களை பயன்படுத்துவது சமூக ஆய்வாகாது. மேற்கோள்கள் ஆய்வுரைக்கு துணைபுரிவது மட்டுமே. குறிப்பான நாட்டிற்கான கோட்பாட்டை வகுப்பது என்பது அந்தச் சமூகத்தின் இன்றைய நிலையை ஆராய்வது ஊடாகவே ஆகும். மூலநூல்களை படிப்பதற்கு மார்க்சிய உலகக்கண்ணோட்டத்தை உள்வாங்கினால் மாத்திரமே சாத்தியமாகும். இங்கு பலர் உலகக்கண்ணாட்டத்தை உள்வாங்காமலே ஒப்பிக்கின்றனர். இடதுசாரிகள் என்போர் பல்வேறு முகாம்களாக இருக்கின்றார்கள் என்பதை உள்வாங்கிட வேண்டும். லெனினின் வழி வந்த சிந்தனைப் பள்ளி என்பது மாறுபட்ட போக்கை கொண்டதாகும். தோழர்கள் ஸ்ராலின், மாவோ போன்றவர்களின் வழிகாட்டல் உலகில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மற்றைய எந்த சிந்தனைப் பள்ளி எந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை. இந்தக் கட்டுரையானது லெனினால் புகாரியின் (Bukharin-Pyatakov-Bosh group) குழுவினருக்கு எதிராக எழுதப்பட்டதாகும். இவர்கள் அனுப்பிய ஆய்வுரையில் ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஜனநாயகத்திற்காக போராட வேண்டும் என்ற அவசியத்தை மறுத்தார்கள். கட்சி வழிகாட்டலான தேசிய சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை மறுத்து நின்றார்கள்.
ஆனால் 1990 பின்னர் உருவாகிய ஒற்றைத் துருவத்தின் பின்னர் சொந்தமாக கோட்பாட்டை உருவாக்குவதில் சிறப்புத் தேர்ச்சி உள்ளவர்களாக இன்றுள்ள மார்க்சியம் என்பவர்கள் இல்லை. மார்க்சிய அடிப்படையை விளங்கிக் கொள்வதற்கு உழைப்புத் தேவை. ஆனால் எமக்குத் தெரிந்தவற்றை ஒப்பித்துக் கொண்டிருப்பது இலகுவானதாகும். யதார்த்த அரசியலை விளங்குதல் என்பது தேசியப் போராட்டத்தை தொடர தேவையில்லை என்ற அடிப்படையில் எழுவதாகும். ஒரு சமூகம் இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதன் அவசியத்தை மறுத்து நிற்பதாகும். ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகளாக சீரளிந்த பின்னர் வந்து சேர்கின்ற இடம் சமரசவாதமாகும்.
##மார்க்சியம் என்பது புரட்சிகரப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது.
``யதார்த்த அரசியலைப் புரிய வைக்கவே கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றனவே தவிர கோட்பாடுகளுக்காக அரசியல் செயற்படுவதில்லை.’’
இங்கு பலர் யதார்த்தம் என்று பேசியும், எழுதியும் வருகின்றார்கள். உழுத்துப் போன கருத்து குப்பை மேடாகும், புதைகுழிக்கு வழிகாட்டுவோர் எனக் கூறிக் கடந்து செல்லப்படுகின்றது. இவைகளை குறிப்பான நாட்டின் சூழலை ஆராய்வதாகும். ஒரு குறிப்பான நாடு என்று கூறுகின்ற போது உலக நாடுகளில் ஒரு அங்கமாகும். உலக நாடுகளின் ஒரு அங்கம் என்கின்ற போது உலகை இன்று மிகப்பெரும் ஏகாதிபத்திய நாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. அதனையும் மீறி யாரும் சுயமாக சித்தம் தீர்மானித்திட முடியாது. நாடுகள் மீதான கட்டுப்பாடு என்பது பல்வேறு ஒப்பந்தங்கள் ஊடாகவும், இராணுவ அழுத்தம், உள்நாட்டு நண்பர்கள் ஆட்சிகளுக்கு துணையாக இருக்கின்றார்கள். உள்நாட்டு ஒடுக்குமுறையாளர்கள், புறநிலை முரண்பாடுகள் என இரண்டும் இருந்து கொண்டே இருக்கும். உலகம் பூராகவும் ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையைக் கொண்டதாக அரசுகள் உள்ளன. அந்த அரச வடிவத்தை ஏற்று அதற்குள் பயணிக்கும் படி ஆலோசனை வழங்குவதற்குப் பெயர்தான் ``யதார்த்தம்”
இவ்வாறான விடயங்களை விவாதிக்கும் போது ஏற்படும் சிக்கல் என்பது லெனினுக்கு ஏற்பட்டது போலவே இன்றும் உள்ளது. அதாவது இன்றைய இடதுசாரி என்போர் பொருளாதாரவாதிகள், திரிபுவாதிகள், ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகளாக இருக்கின்றார்கள். அவை மாத்திரம் அல்ல இன்றைய சமூகக் கட்டம் பற்றிய புரிதல் என்பது அறவே இருப்பதில்லை. மார்க்சியம் வழங்கிய பொதுவாக வழிகாட்டலில் இருந்து தமக்கான கோட்பாட்டை வகுக்கத் தெரியாதவர்களாக உள்ளார்கள். இவர்களை இட்டு லெனின் ``அவர்கள் படுசேற்றில் இறங்கிவிட்டார்கள், என்றும் அவர்களது ``கருத்துகளுக்கும்” மார்க்சியம் அல்லது புரட்சிகர சமூக-ஜனநாயகத்திற்கும் பொதுவான அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் சந்பந்தப்பட்ட தோழர்களை மீண்டும் மீண்டும் எச்சரிப்பது முற்றிலும் அவசியமாக இருந்தது. இந்த விவகாரத்தை இனிமேலும் ``மூடிவைக்க” முடியாது: அவ்வாறு செய்வது சித்தாந்தக் குழப்பத்தை ஊக்குவிப்பதாகும், அதை தவறான கருத்தினை படுமோசமான செல்வழியில் ``தனிப்பட்ட” மோதல்கள், இடைவிடாத ``உராய்வு” இத்தியாதிகளுக்குள் இயக்கி விடுகிறது. இதற்கு மாறாக, விவாதத்தில் எழுப்பப்படும் பிரச்சினைகளை முற்று முழுக்க சிந்தித்துப் பார்த்து ஆய்வு செய்ய செய்ய வேண்டும் என்ற கடப்பாட்டை மிகவும் அழுத்தமான மிகவும் ஆணித்தரமான முறையில் வலிறுத்தவேண்டுவது நமது கடமையாகும்.” (239/4)
இந்தக் காலம் என்பது பொருளாதாரப் போராட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும். அரசியல் போராட்டம் மிதவாதிகளுக்கும் என்ற போக்கை கொண்டதாக இருந்தது. இவ்வாறு பிரித்து அரசியல் செய்யும் போக்கு வளர்க்கப்பட்டுள்ளது. இந்தப் போக்கை அன்றே லெனின் விமர்சித்துள்ளார். இதேவேளை இந்தப் பகுதியினர் சுயநிர்ணயம் என்பதை ஏற்க மறுத்த போக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். புரட்சிகர போராட்டத்தை மறுதலித்த போக்கை எதிர்த்து நடைபெற்ற (1915) காலமாகும். இன்றைய காலத்தைப் பொறுத்தவரையில் முதலாளித்துவப் புரட்சி நடைபெற்று முடிவில்லை, ஒப்புக்கு 8 மணிநேரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது, நிலமில்லாத மக்கள் கூட்டம் தொடர்கின்ற காலமாகும். அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை பொருளாதாரவாதம் தடையாக நிற்கின்றது. ஒரு பக்கம் சுயநிர்ணயத்தை மறுக்கின்றது. மறுபக்கத்தில் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தையும் மறுக்கின்றது. அதாவது சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகப் போராட்டத்தை எதிர்க்கின்றது. இது சோசலிசப் புரட்சிக்கு ``முரணானதாகும்” இதனையே மார்க்சியத்திற்கு தொடர்பு அற்றது என்கின்றார் லெனின். ``அரசியல் அம்சத்தைப் புறக்கணிப்பதை” ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றிற்கு இடையில் உள்ள இணைப்பு புள்ளியை காணத்தவறுகின்றார்கள். சீர்திருத்தம், ஜனநாயகப் போராட்டம் என்பதுடன் நிறுத்திக் கொள்கின்றார்கள்.
``சுயநிர்ணயம் என்பது எவ்வகையிலும் ஒரு ``பகுதிப்“ பிரச்சனையல்ல மாறாக, ஒரு பொதுவான, அடிப்படையான பிரச்சனையாகும்” (239/4) ஏனெனில் அன்றும் `சமூகதேசியவெறி” (தாய்நாட்டை காப்போம்) சந்தர்ப்பவாதிகளாக இலங்கையில் இன்று செயற்படுகின்றார்கள். ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அரசியல் அம்சத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் வரலாற்றை அறியமுடிகின்றது.
வேலைத்திட்டத்தில் `வங்கி உடமையை பறித்தல், சுங்கவரிகளை ரத்துச் செய்தல், செனற்சபையை ஒழித்தல் போன்ற விடயங்களை முன்வைத்தனர். ஆனால் லெனின் இதனை ``அவர்களுக்கு பொருளாதார அம்சம் என்பது வங்கிகளையும்”: பெருவீத உற்பத்தியும்” (நிறுவனங்களை) பெருவீத ``உடைமை நீக்கம் செய்வதே” அரசியல் அம்சம் ஒரு குடியரசு இத்தியாதி. மற்றும் சரியானது!” (240) இந்தப் போக்கு முழுமை அல்ல என்பதைத் தான் லெனின் குறிப்பிடுகின்றார். அதாவது விடயங்களை பகுதி பகுதியாக அணுகிவிட முடியாது. அவ்வாறு அணுகும் போக்கை லெனின் எதிர்க் கொண்டுள்ளார்.
சமூகக் கட்டத்தை ஆராய்வதில் உள்ள குறைபாடுகளை இந்தப் பகுதியில் லெனின் சுட்டிக் காட்டுகின்றார். ``ஏகாதிபத்தியத்தின் வருகையை சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் எப்படி இணைப்பது என்ற பிரச்சனை” --ஏகாதிபத்தியத்தின் கீழ் ஜனநாயகக் கோரிக்கைகளை ``அடைய முடியாமை” சம்பந்தமாக முழுக்குழப்பம். இதன் பிளைவாக- அரசியல் போராட்டத்தை இப்போது, இன்று, உடனடியாகவும், எல்லாக் காலங்களிலும் புறக்கணிக்கும்- இது மார்க்சியவாதிகளுக்கு அனுமதிக்கக் கூடியதில்லை.”
``அரசியல் துறையில் தேசிய ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கான பொருளாதார அடிப்படைகளை சோசலிசம் உருவாக்குகிறது என்பதிலிருந்து அதன் காரணமாக” -அரசியல் பணிகளை முறைப்படுத்தி முன்வைக்க மறுக்கிறார்கள். (243) இந்தப் போக்கை இன்றைய இலங்கை, இந்திய கட்சிகளிடம் குறைபாடு உள்ளது. பொருளாதார விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றார்கள். அரசியல் அதிகாரம் சம்பந்தமாக அக்கறை காட்ட மறுக்கின்றார்கள். இந்தப் போக்கு ``மார்க்சியமும் தர்க்கவியலும் அப்பட்டமாக மீறப்பட்டதற்கான உதாரணங்களாகும்:”
இலங்கையில் தேசத்திற்கான போராட்டம் சாத்தியம் இல்லை என்று ஆரூடம் சொன்னவர்கள் உள்ளார்கள். அவர்களைப் போலவே லெனின் காலத்தில் ``அடையமுடியாமை” என்று கூறிக் கொண்டார்கள். சிலவிடயங்களை சாத்தியம் என்பவர்கள். சிலவை சாத்தியம் என்பார்கள். பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியம் என்பார்கள். சீர்திருத்தம், சுயநிர்ணயம் சாத்தியம் இல்லை என்பார்கள். இந்தப் போக்கை லெனின் விமர்சிக்கின்றார். சாத்தியம் என்பவர்கள் ``ஒரு சமுதாயப் புரட்சிக்கான அரசியல்”என்பதாக மட்டுமே அவர் குடியரசையும் குறைந்த பட்ச வேலைத்திட்டம் முழுவதையும் ஏற்றுக் கொள்கின்றார்.” ----- ``ஏகாதிபத்திய பொருளாதாரத்தின்” தர்க்கவியல் தவிர்த்து, ஒரு தினையளவு மார்க்சியமோ, ஒரு தினையளவு தர்க்கவியலோ கிடையாது.” (224)
அன்றைய சமூக தேசியவெறியர்கள் (சமூக தேசியவெறியர்கள்) தாய்நாட்டைக் காப்போம் என்று சொந்த தேசிய இன பெரும் முதலாளி வர்க்கத்தின் பக்கம் நின்றார்கள். முதலாம் உலகப் போரில் நடுநிலையும் வகித்த பொக்கும் இருந்துள்ளது. இந்தப் பிரிவினரும் சுயநிர்ணயம் என்ற விடயத்தில் பிற்போக்கு நிலைப்பாடு எடுத்தார்கள். இந்த போக்கில் தான் காவுட்ஸ்கி விமர்சிக்கப்படுகின்றார். இலங்கையிலும் இன்றைய ஆட்சியாளர்கள்-JVP தாய்நாட்டைக்காப்போம், பிரிவினைவாதிகளிடம் இருந்து மீட்போம் என்ற அரசியலை முன்னெடுத்தார்கள்.
``சமூக ஜனநாயகவாதிகள் ஏன் ``தாய்நாட்டின் தற்காப்புக்கு” எதிராக இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையை நீங்கள் சரிவரச் சிந்தித்துப் பார்க்கவில்லை.” என்கின்றார்.
இரண்டு வெவ்வேறு (a shoe brush and a mammal, will that be “monism”?) தன்மை கொண்டவற்றை இணைக்க முடியுமா என்ற கேள்வியை லெனின் எழுப்புகின்றார். அவ்வாறு இணைப்பதை ஒருமை என்று அழைக்க முடியுமா? என்கின்றார். ஒடுக்கப்படும் தேசத்திடம் சுயநிர்ணயத்தை கோரவேண்டாம் என்கின்றதை விமர்சிக்கின்றார். ஒடுக்கும் தேசத்தின் அரசியல், பொருளாதார நலனும், ஒடுக்கும் தேசத்தின் அரசியல் பொருளாதார நலனும் வெவ்வேறானவையாகும். அதனை விளங்கிக் கொள்ளாத ஆய்வுரைகள் சமூகத்திற்கு பயன்பாடு கொண்டதாக இருக்க முடியாது.
இறுதியாக: லெனின் எழுதிய கட்டுரையை லெனின் எழுதிய தேசிய இனப்பிரச்சனையும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் என்ற நூலினை படிப்பதன் மூலம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மார்க்சினைப் போல மையவாதியான லெனின் அரசு என்ற விடயத்தில் கறராக இருக்கின்றார். புகாரின் தேசங்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என்றும், தொழிலாளிகளுக்கே சுயநிர்ணயம் என்கின்றார். தேச அரசு என்ற விடயத்தில் மார்க்சிய விரோத நிலையை புகாரின் நிலைப்பாடு எடுக்கின்றார்.
இலங்கையிலும் இன்றைய ஆட்சியாளர்கள், கருத்துருவாக்கிகள், கட்சியில் இல்லாத பிரமுகர்கள், ரொட்ஸ்கியர் சுயநிர்ணய உரிமை என்பதை விட பொருளாதாரத்திற்கே முதன்மை கொடுக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இன்று புதிய யாப்பு வரைவிற்குப் பின்னால் செல்கின்றார்கள். தம்மை இடதுசாரிகள்- மார்க்சியர்கள் என்போர் பேசுவது மார்க்சிய விரோதப் போக்கு என்பதை அம்பலப்படுத்தவே லெனின் கட்டுரையை வாசித்து வாசகர்கள் உள்வாங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. (06.03.26)



No comments:
Post a Comment