30.03.2015 - 09.082020 காலங்களில் எழுதப்பட்ட தொகுப்புகள்
இந்தப் பகுதியில் 30.03.2015 - 09.082020 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். தேர்தல் பாதையில் பயணிக்கும் தேசியவாதிகளின் போக்கை அவதானிக்கலாம். போராட்டம் என்பது தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களின் தலைமையில் நடைபெற வேண்டும். ஆனால் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது நாடாளுமன்றத்திற்குள் குறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதையும் தாண்டி வெகுசனங்கள் போராட்டத்திற்கு இறங்குகின்றார்கள். அதனால் அரசியல்வாதிகளும் தவிர்க்க முடியாத அழுத்தத்திற்கு உள்ளாகுவதால் அவர்களும் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தேசிய விடுதலை என்பது மனித குலத்தின் முன்னேற்றகரமான சமூகத்தை நோக்கிய வளர்ச்சியின் அங்கமாகும். இவை முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் எல்லையும் இதுவேயாகும்.
09.082020
9t AlcSpuofgioecugsnst ohrf2rtf0eti2d0 ·
தேர்தல் சகதி
இலங்கை தேர்தல் முறையில் விருப்பு வாக்கை தேவைக்கேற்ப மாற்ற முடியும்.
ஆனால் மாற்றம் செய்ய வைத்தவர்கள் அரசியல்வாதிகள். கடந்த தேர்தலில் சரா, சுமி உள்வாங்கப்பட்டு அருந்தவபாலன், சுரேஸ் வெளியேற்றப்பட்டார்கள். (எவ்வகை என்றாலும் சுமியை வெல்வைக்க ரணில் விரும்பியிருந்தார்.) இவை மாத்திரம் அல்ல, சில TNPF (15000ல்) வாக்குகளை செல்லாதாக்கும்படி கேட்கப் பட்டது. அதனைச் செய்யாததால் தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. இதில் தேர்தல் கடமையில் ஈடுபட்டவர்கள் மீது பழிசுமத்திட முடியாது. தேர்தலில் விருப்பு வாக்கு என்பது கட்சிகளின் உள்விருப்பாக அமைவதே நடைமுறையாகும்.
தேர்தல் மோசடியை மறைத்து எழுதுகின்ற எழுத்தாளர்கள் புதுப்புது திரைக்கதை எழுதுகின்றார்கள். பூர்சுவா சிந்தனை ஒடுக்குமுறைக்கு எதிரானதாக இருந்து விடப் போவதில்லை. விதேசிய (தரகு), Petrinism சிந்தனையாகக் கொண்ட நபரைச் சுற்றியே விம்பம் கட்டமைக்கப்படுகின்றது. சட்டவாளர் என்பதால் அனைத்தும் தனக்கே தெரியும் என்ற வகையில் அவர் செயற்பாடு இருந்து வருகின்றது.
ஏக்க ராட்சிய- சிங்களம், பௌத்தம் என்ற மேலான்மைவாதத்தை திணிக்க துணை நின்றனே பின்கதவால் பதவியை தக்க வைத்துள்ளார்.
பூர்சுவா வர்க்கத்தின் கதையாடல்கள் இந்த சமூகப் பொருளாதார அமைப்பில் இசைந்து வாழ்வது, ஒடுக்குமுறை ஏற்கும் மனப்போக்கை சமூக மயப்படுத்துவதே தொழிலாகும்.
பொதுப்புத்தி சார்ந்த, தொழில் முறை, பிரல்யங்கள் கருத்துக்கள் பொழுது போக்கிற்கு உரியதாகவும், ஆளும் வர்க்க நலன் சார்ந்ததாக இருக்கின்றது.
11.03.2020
இந்தப் புள்ளி என்பது மக்கள் திரளை விட்டு பொருளாதாரத்திலும், நாடாளுமன்ற அரசியலும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பின்புலம் கொண்டவர்களை இணைப்பது திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த அரசியல் என்பது ஆட்சியதிகாரம் பெரும்பான்மை மக்கள் கைகளில் வருவதே. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் வேலையென்பதே புண்ணுக்கு மருந்து போடுவது, மக்களின் சுயசார்வை அழிப்பது, மரபான அறிவியலை, மரபான தொழில் நுட்பத்தை அழிப்பது. இது விவசாயம் உட்பட பலமுனைகளின் நடக்கின்றது.
·
தன்னார்வத் தொண்டு நிறுவன அரசியல்.
அரசியல் பொருளாதாரம் பற்றிய கோட்பாடுகளை உள்வாங்கிட முடியாத சமூகம் தன்னை முன்னோக்கி நகர்த்திட முடியாது. ஒவ்வொரு சிந்தனையின் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் உள்ளது. ஒவ்வொரு வர்க்கத்தின் நலன்களும் ஒடுக்கப்படும் தேசத்தின், குடிமக்களின் நலன்களும் ஒன்றாக இருக்க முடியாது. முன்னால், பின்னால் போகும் மக்கள் திரளுக்கு அரசியல் கல்வி அவசியமே. அரசியல் பொருளாதாரத்தை உள்வாங்குவதன் ஊடாகவே கோட்பாடுகளை வகுக்க முடியும். இதனை மறுத்து ஆட்டுமந்தைக் கூட்டமாக சமூகத்தை இருத்திட முடியாது.
இதற்குத் மாற்றகத் தான் சட்டவாளர்கள் இறக்கப்படுகின்றார்கள். சட்டம் தெரிந்தால் மட்டும் அரசியல் தெரிந்துவிடும் என்ற மாயைத் பிற்போக்கு அரசியல் முகாம் கட்டமைக்கின்றது. புத்திஜீவிக்கும் தொழிற்துறை சார்நத நபருக்கும் வித்தியாசம் உண்டு. புத்திஜீவி என்பது தொழிற்துறை சார்ந்த கல்வியை சார்ந்து இருப்பதில்லை.
முதலாளித்துவ அரசியல்
சமூக சனநாயக அரசியல்
பொதுவுடமை அரசியல் என்று இந்த நூற்றாண்டின் பெரும் அரசியல் போக்கின் கோட்பாடுகளை உதறிவிட முடியாது.
முதலாளித்துவச் சீர்திருத்தம் - இடவொதுக்கீடு எல்லாம் இந்தச் சமூகக் கட்டமைப்பில் முழுமையடையப் போவதில்லை. மாறாக அரசியல் அதிகாரத்தை (தேர்தல் பதவி அல்ல) அடைவதன் ஊடாகவே பொருளாதார மாற்றம், சமூகமாற்றம், பால்சமவுரிமை போன்றவற்றை அடைய முடியும். உரிமைக்காக போராடுவது மனிதர்களின் அடிப்படை உரிமையாகும்.
முன்னைநாள் பெண்போராளிகள் பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். இவர்கள் யார் என்று அவதானிப்பதாக இருந்தால், தான் நம்பிய அரசிடம், அதனை பரிபாலிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக என்ன போராட்டத்தை இவ்வளவு காலம் நடாத்தினார்? பெண்களின் தலைமையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் பலமாதங்களாக தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. தலைமைத்துவத்தில் பெண்கள் இல்லை என்பது வெற்றுவாதம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் (அரசியல் நீக்கம் செய்கின்ற) பிரதிநிதியாக இருந்து தனிமனித சாகசக் கருத்துக்களை இவ்வளவு காலமும் முன்வைத்து உங்கள் தனிமனித சுதந்திர செயற்பாட்டின் வெற்றியே முழு மக்களின் வெற்றியாக பாவனை செய்து கருத்துருவாக்கம் செய்த போது வராதது தேர்தல் காலங்களில் வந்துவிடுகின்றனவே.
நீங்கள் நம்புவதாக கூறும் முற்போக்குச் சிந்தனையை மரபுவாத தமிழரசுக்கட்சியில் எவ்வாறு கிடைக்கப் போகின்றது. நீங்கள் இவ்வளவு காலமும் முன்வைத்த முதலாளித்துவ (தனிமனித மையவாத) தாராளவாதச் சிந்தனைக்கும் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்கும் என்ன சம்பந்தம் என விளக்க முடியுமா? பிரதிநிதித்துவம் கிடைத்தால் போதும் என்பதே படுபிற்போக்குத் தனமாகும். கொள்கை, கோட்பாடு அற்றவர்களின், அரசியல் நீக்கம் செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கருத்தாகும்.
வன்முறை
நாம் எந்த ஆயுதத்தை ஏந்துவது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றார். 1956-58-61-72 (யாப்பில் இருந்த சோல்பரி பரிந்துரைகள் நீக்கம்) இந்தக் காலத்தில் யார் அடக்குமுறையை மேற்கொண்டார்கள். இந்தக் காலத்தில் ஆயுத எழுச்சி உருவாகப் படவில்லை.
1949 நிலப்பறிப்பு, மலையகமக்களின் குடியுரிமைப்பறிப்பு
56 மொழியுரிமை
58 (61, 77,81, 83) பொருளாதார வளங்களை அழித்தார்கள்.
நூலகம் எரிப்பு (பண்பாட்டு) இதற்கு காரணமாக விடயங்களையும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைக் கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாது. தமிழ் தேச விடுதலை என்பது ஆயுதத்தால் தான் முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட வரலாற்றுப் போக்கை வன்முறை என்பதே வெறும் அபர்த்தம் மாத்திரம் அல்ல ஆளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குரலே.
எம்மைப் பாதுகாப்பது வன்முறை அல்ல. அது தற்காப்புயுத்தம், அந்த தற்காப்பு யுத்தம் 2009 இல் எம்தேசத்தை ஆக்கிரமித்து, இன்று இராணுவ கட்டுப்பாட்டினுள் தான் ஈழம் முழுமையாக இருக்கின்றது.
இன்று இலங்கை முழுவதும் இராணுவ ஆட்சி வரப்போகின்றது என்று துடிக்கும் போலி இடதுசாரிகளும் உள்ளனர்.
உரிமைக்காக போராடுவதை வன்முறை, பிரிவினை வாதம் என்பது பிற்போக்குக் கருத்தியலாகும். இவர்களின் மனிதவுரிமை என்பது எல்லாம் ஏகாதிபத்திய காலத்தின் கண்ணாம்பூச்சி விளையாட்டே.
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் உள்ளது. மட்டக்களப்பு எல்லையில் இலங்கைதுறைமுகப் பட்டணத்தில் (குஞ்சுமாப்பா) பழங்குடிகளின் வழிபாட்டு சின்னம் சிங்களமயமாக்கப்பட்டிருக்கின்றது. இவைகள் மனிதவுரிமைப் போராளிக்குத் தெரியவில்லை.
ஆனால் போராளிகள் நிலம் இல்லாது அல்லல்படுகின்றார்கள் என்று கூறுகின்ற போது அடிப்படையில் சிங்கள தேசத்தின் நிலஆக்கிரமிப்புக்கெதிராக அல்லவா போராடியிருக்க வேண்டும்.
நாடாளுமன்றம் சென்று விடுவதால் மட்டும் நிலப்பிரச்சனை தீர்ந்துவிடுவதில்லை.
ஐக்கியம்
தமிழர்களின் உரிமையைப் பெற தமிழர்கள் ஐக்கியமாக இருக்க வேண்டுமாம். அதேவேளை பெண்களின் வாழ்வாதப் பிரச்சனையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அடுக்கிக் கொண்டு போகின்றதை கேட்க முடிகின்றது. பேரினவாதத்தினை எதிர்க்க ஐக்கியமாக செயற்பட வேண்டும்.
ஐக்கியம் என்பது என்ன? ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இன்றைய நிலையில் ஒன்றுபட வேண்டிய இடமே திம்பு பிரகடனம். இதுவே குறைந்தபட்ச நிபந்தனையாகும்.
தாயகம்
தேசியம்
சுயநிர்ணயம்
ஏக்கராட்சியத்தில் சுயாட்சி- சமஸ்ரி உண்டு என்று மக்களை முட்டாளிக்கிக் கொண்டிருந்த சிங்கள தேசத்தின் கூலி சுமந்திரனின் பித்தலாட்டத்தை தடுக்க முடியாத நிலையில் தான் த.தே.கூ உறுப்புக் கட்சிகள் உள்ளன. சம்பந்தர் செயற்படாத நிலையில் ஏதேர்ச்சாதிகாரமாக நடந்து கொள்ளும் சுமந்திரன் பின்னால் தொடர்ச்சியாக எவரும் செல்ல முடியாது.
ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சாணக்கியன் சுமந்திரன் தேர்தலுக்காக கூறுகின்றார். சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சியின் தலைமகன் எவ்வாறு நியாயமாக செயற்படுவார்
நம்புகின்ற அளவிற்று அரசியல் அறிவற்ற ஒரு வெற்று மனிதர் என்பதை சுமந்திரன் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
சிங்கள சக்திகளுடன் இணைந்து
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜேவிபி தமிழ் தரப்புடன் ஐக்கிய முன்னணித் தந்திரத்தை அடிப்படையில் கூட்டுச் சேர்ந்து பொது எதிரிக்கு எதிராக போராடியிருக்க முடியும். ஆனால் அவர்கள் பிரிவினைவாதம் என்று பெருந்தேசியத்தின் பின்னால் சென்று புரட்சியைக் காட்டிக் கொடுத்தார்கள். மேலும் 2009 இல் படையினருக்கு பதுங்கு குழி அமைத்துக் கொடுத்தார்கள்.
சிங்கள தேசத்தில் உள்ள முற்போக்குச் சக்திகள் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனை சிங்கள மக்களிடம் கொண்டு செல்லும் பெரும் கடமை அவர்களிடம் உள்ளது. தமிழர்கள் இணைந்து வேலை செய்வதில் போதாமை உள்ளதாம் இது என்ன அரசியல் புரிதல்??
இனமதகுல பேதமற்றுப் போராடுவோம் என்பதே தேசத்தின் இருப்பை, ஆக்கிரமிப்பை மறுத்து நிற்பதாகும். ””சிங்களவன் தன் இனத்தைக் காட்டி அரசியல் செய்தால் இனவாதம் அதையே தமிழன் செய்தால் இனப்பற்று” இவ்வாறு பெருந்தேசியவாதத்தையும் எதிர்த்து நிற்பதையும் ஒன்றுபடுத்துவதே வாய்ப்பாட்டாக போலி இடதுசாரி ஒப்பித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
இறுதியாக
தமிழ் தேசிய தேர்தல் அரசியலில் நுழைக்கப்பட்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்களின் பின்புலத்தை வரலாற்றுப் பார்வையில் அணுகிட வேண்டும். முதலாளித்துவ தாராளவாதம், NGOகளின் நுழைவு என்பது தற்செயலானது அல்ல. தேசிய விடுதலை பற்றிய பிரஞ்ஞையை தனியே இனபெருமிதமாகவும், பாசீசமாகவும், மக்களை இன, குல, மொழியைக் கொண்டு பிரிப்பதாகவும் பின்னவீனத்துவ கருத்தாக்கம் உள்ளது.
1. ஏக்கராட்சிய - (தரகு வர்க்கம்- நிலப்பிரபுத்துவ வர்க்க சிந்தனைக் கட்டமைப்பில் உருவாகும் வர்க்கப் பிரிவாகும். இந்த வர்க்கப் பிரிவிற்கு தேசிய நிலைப்பாடு இருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவர்கள். A comprador or compradore is a "person who acts as an agent for foreign organizations engaged in investment, trade, or economic or political exploitation".[1] A comprador is a native manager for a European business house in East and South East Asia, and, by extension, social groups that play broadly similar roles in other parts of the world.) தரகு வர்க்கத்தினை பிரதிநிதித்துவம் செய்பவர்களே சுமந்திரன், சம்பந்தன் அணியினராகும். இவர்களின் பின்னால் உள்ள குட்டி முதலாளிய- பூர்சுவா பிரிவு சந்தர்ப்பவாதமாக மௌனமாக பின்செல்கின்றார்கள். பதவி, அந்தஸ்து என்பவற்றை பாதுகாத்துக் கொள்ளும் வர்க்கப் பிரிவாக இருக்கின்றார்கள்.
2.அதிகாரப் பகிர்வு- இரண்டு பிரிவுகள்
உள்ளது. இந்தப் பிரிவுகள் தம்மை தூய்மைவாதிகளாக காட்டிக் கொள்கின்ற போதும் அதிகாரப் பரவலை ஏற்கும் இந்தப் பிரிவுகள் மேற்கு- இந்திய அணிகளாக உள்ளார்கள்.
பொ. குமார், சுரேஸ், விக்கினேஸ்வரன் போன்றவர்கள் குறுங்குழுவாதிகளாக உள்ள நிலையில் இணையமுடியாதவர்களாக உள்ளார்கள்.
இந்திய- மேற்கு நலன் கொண்டு செயற்படுபவர்கள் என்ற போதிலும் குறைந்த பட்சம் அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ளும் பிரிவாக உள்ளது. இவர்களிடம் உள்ள ஊசலாட்டம் என்பதை தீர்மானிப்பது குட்டிமுதலாளிய வர்க்கக் குணாம்சமாகும். இந்தப் பிரிவு தம்மை தூய்மைவாதிகளாக காட்டிக் கொண்டு பிரிந்து நிற்பது தரகு வர்க்கத்திற்கே துணைசெய்யும்.
3.சுயநிர்ணயத்திற்கான போராட்டச் சக்தி வெற்றிடமாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் NGOவும், தரகு வர்க்கமும் ஒரு வர்க்கமுகாமாக களம் இறக்கப்படுகின்றது. இந்தப் போக்கு ஏக்கராட்சி- தரகு வர்க்கத்தின் அறிவுசார் பிரிவின் ஊடாக தேசவிடுதலையை மடைமாற்ற இறக்கப்படுகின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைப் பற்றிப் பேசாது, தனிமனித இழப்புச் சார்ந்து கருத்துருவாக்கம் செய்த நபர்கள் எல்லாம் தமிழ் மக்களின் விடுதலை என உச்சரிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
அரசியல் பொருளாதாரப் போக்கை வைத்து விமர்சியுங்கள். தனிநபர் தாக்குதல் அவசியமற்றது.
15.11.2018
யாருக்கான சனநாயகம்??
சிங்கள தேசத்தின் அதிகாரத்தில் உள்ள ஆட்சியதிகாரம் என்பது சிங்கள தேசத்தின் நலனைக் கொண்டே இயங்குகின்றது என்பதை 1948 இல் இருந்து தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. மொழி, நிலம், பண்பாட்டழிப்பு, பொருளாதார அழிவுகளை திட்டமிட்டு செய்து வருகின்றது. ஈழம் ஆக்கிரமிப்பிக்குள்ளும், மறைமுக இராணுவ ஆட்சிக்கும் உட்பட்டிருக்கின்றது. ஆனால் விதேசிய சிந்தனை கொண்டவர்கள் சிங்கள தேசத்தில் நீதிபரிபாலனத்தில், சட்டமியற்றும் நிறுவனத்தில் சனநாயகம் இருப்பதாக கருத்தமைக்கப்படுகின்றது.
''We demonstrated to the world yesterday that Sri Lanka's judiciary is independent. Today, we showed that our legislature too is independent" என்கின்றார் திரு சம்பந்தர்.
இந்தச் சொல்லாடலை மரபார்ந்த சொல்லாடல் என்று கடந்துவிட முடியாது. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் வர்க்க அரசியல் உள்ளது. அதனை மறுத்துவிட்டு அரசியல் போராட்டத்தை நடத்திவிட முடியாது. அவுஸ்ரோலிய தொல்குடிகளின் உரிமையை எவ்வாறு நாட்டரசின் கீதத்தில் மறுக்தலிக்கின்றது என்பதை சிறுமி உலகிற்கு வெளிப்படுத்தினார். ஆனால் எந்த நோக்கத்திற்காக போராடி வீழ்ந்தோமே, அதன் தாற்பரியத்தை மறுத்து வெளிவந்த கருத்தே திரு சம்பந்தரின் கருத்தாகும்.
நீதிபரிபாலனம், சட்டமியற்றும் நிறுவனத்தின் நலம் என்பது சிங்கள தேசத்திறகாக இருந்து வந்துள்ளது. மலையக குடியுரிமை பறிப்பு, நாடுகடத்தில், தனிச் சிங்கள சட்டம், சோல்பரி சட்ட விதியை மாற்றியது, லங்கா என்று முழுநாட்டிற்கும் பெயர் வைத்து, திட்டமிட்ட இனப்படுகொலை என்பது இவர்கள் கூறுகின்ற சட்டவாக்கத்தின் துணையுடன் தான் நடைபெற்றது.
ஆட்சியதிகாரத்தில் உள்ள தேசம் தொடுத்த திட்டமிட்ட இனவழிப்பு செய்யும் நிறுவனக்கட்டமைப்பில் சனநாயகம் உள்ளதாக வெள்ளையடிப்பதே ஒடுக்கப்படும் தேசத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் தான். சிங்கள தேசத்தின் சனநாயக விரோதக் கட்டமைப்பை தமிழர்களின் தலைமை என்பவரால் நற்சான்றிதல் கொடுக்கப்பட்டுள்ளது.
சுமந்திரன், சம்பந்தர் சனநாயக மீட்டதாக கூறுகின்றார்கள். இரண்டுவருடங்களாக தொடர் போராட்டம் செய்யும் மக்களை சந்திக்கவும் முடியவில்லை. அவர்களின் கோரிக்கை சட்டத்தின் ஊடாக நிறைவேற்றவும் முடியவில்லை.
விதேசிகளின் போலி நாடகம் தொடர்கின்றது.
05.11.2018
இனவழிப்பாளர்கள் யார்??
===============
சமூகம் அடிமை- நிலப்பிரபுத்துவம்- முதலாளித்துவம் என்று பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சிப் போக்கை எவரும் தடுத்திட முடியாது. பொருளாதார மற்றம் என்பது பல்வேறு அக- புற முரண்பாடுகளை ஏற்பத்திக் கொள்ளும் என்பது இயல்பானதே. ஒன்றித் தாக்கம் இன்னொன்றில் அதிர்வையும், மாற்றத்தை ஏற்படுத்தும், அது வேறொரு தளத்தில் வேறொரு அதிர்வை ஏற்படுத்தும் என்பது இயல்பானதே.
ஒரு சமூகம் தன்னை பழைய நிலையில் இருந்து முன்னோக்கிச் கொண்டு செல்லும் தலைமை வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒரு சமூகத்தினை கொள்கை கோட்பாடு புதிய நீதிநெறியையும், சமத்துவத்திற்காகவும், சுயகௌரவம், ஆட்சியதிகாரத்தை நோக்கிப் பயணிக்கத் தகுந்த வகையில் இருக்க வேண்டும்.
புதிய பொருளாதார கட்டமைப்பை நோக்கி நகர்கின்ற போது புதிய புதிய சமூகச் சிக்கல்கள் எடும். இதற்கு மேற்கில் கலாசாலை ஆய்வுகள், கலந்துரையாடல்கள், அறிவியல் பட்டறைகள் நடக்கும். இவற்றை தேர்தல் கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. இதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்புள்ள சமூகமாக உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளும் அவர்கள் நலன்களும்
அரசியல்வாதிகளின் கருத்திற்குப் பின்னால் ஓடும் நிலையே பொதுப்புத்தி எங்கும் நிறைந்திருக்கின்றது. சமூகத்தில் கடத்திவரப்படும் தனிமனித சார்ந்த இருப்பும், சுயநலம், சமூகத்துடன் ஒத்துப் போவது என்ற கருத்தும் உள்ளடங்கியதே. அறிவார்ந்த தேடல்இல்லாத சமூகம் முன்னோக்கிச் சென்றுவிட முடியாது. இன்றைய சமூக அமைப்பானது மனிதர்களை சிந்திக்கவிடாது மடந்தைகளாக வைத்திருப்பதற்கு முன்னிக்கின்றது. இதற்கு ஊடகங்கள், கருத்தாளர்கள், தாராள சனநாயவாதிகள் ஒடுக்குமுறையாளனுக்கு ஆதர
இரண்டு பேரினவாதகட்சிகள் எசமானர்களுக்காக வேலை செய்வதில் தீயாக இருக்கின்றார்கள். சிங்கள தேசத்தவர்கள் அல்லது தேர்தலில் தெரிவு செய்கின்ற போது எந்த ஒடுக்குமுறையாளன் சிறந்தவர் என்பதே. சுரண்டும் வர்க்கத்திற்காக
மக்களை ஒடுக்க சனநாயகத்தைக் கோருகின்றார்கள் அரசியல்வாதிகள்.
இரண்டு பேரினவாதிகளுக்கு இடையில் இருந்து கம்பு சுத்துகின்றார்கள்.
சுயமான அரசியல் இல்லை என்பதே இவர்களின் அரசியல் வறுமை வெளிப்படுத்துகின்றது.
சிங்கள தேசம் ஆட்சியுரிமை கொண்டது. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தப் புரிதலை தமிழ அரசியல்வாதிகள் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இதேவேளை தமிழ் தேசத்திற்கு ஆட்சியுரிமை இல்லாத இடத்தில் எந்த சனநாயகத்தை சுமந்திரன்- சம்பந்தன் குழு பாதுகாக்கப் போகின்றது? சிங்கள அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத்தவர்கள் பயன்பாட்டுப் பொருளே. பயன்படுத்திய பின்னர் எறியப்படும் மக்கள் கூட்டம்.
சிங்கள தேசியக் கட்டமைப்பினுள் சரணாகதி அடைந்துவிட்டு வியாக்கியானங்கள் கூறலாம்.
மகிந்தவின் நியமனமே சுமந்திரன் குழு ஆதரித்து வந்த உத்தேச யாப்பு மாற்றத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்திவிட்டது. சனாதிபதி பிரதமரை பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சியமைக்க பிரதமரை கோர முடியும். இது சிங்கள தேசத்தின் உள்விடயம்.
உத்தேச யாப்பு வரைவில் ஆளுனர் மாகாணசபையை கலைக்க முடியும் என்று உள்ளது. இதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்கள் தான் சுமந்திரன்- சம்பந்தர் அணி. இந்த அணி இன்று அம்பலப்பட்டுப் போய் உள்ளது. இதனை மறைக்க (அம்பலப்பட்டுப் போன கோவத்தில்) வேண்டுமென்றால் வீர உரை சுமந்திரன் பேச முடியும்.
சிங்கள அரசியல்வாதிகள் ஏமாற்றி விட்டார்கள் என்று பண்டா - செல்வா ஒப்பந்தம்
டட்லி - செல்வா ஒப்பந்தம்
திம்புக் கோரிக்கை
இந்திய- இலங்கை ஒப்பந்தம்
சந்திரிக்கா தீர்வு
ஒஸ்லோ பேச்சு
ஏமாற்றப்பட்ட வரலாறே எம்கண்முன்னே இருக்கின்றது. இன்று சுமந்திரன் மைத்திரி தம்மை ஏமாற்றிவிட்டதாக ஒருமையில் பேசி தனது விசுவாசிகளை சாந்தப்படுத்துகின்றார்.
ஆனால் இவருக்கு முதலே தமிழ் மக்களை கடவுள் காப்பாற்ற வேண்டுமென்று ஈழத்து காந்தி எனவும் தந்தை செல்வா என்று அழைக்கபடுபவர் பேசிவிட்டு இறந்து 41 வருடங்களாகிவிட்டன.
புலிகள் இருந்த போது வடக்கு கிழக்காவது அன்னிய சக்திகளின் சந்தைக்கான இடமில்லாது பாதுகாக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் அன்னிய சக்திகள் நுழைவதை தடுப்பதும் புரட்சிகரமானதே என்பதை உள்வாக்காத கருத்துருவாக்கிகளே இருந்தார்கள்.
தேசம்- சுயநிர்ணயம்- ஆட்சியதிகாரம்
புலிகளின் வாரிசுகள் மாத்திரம் அல்ல
அனைத்து குஞ்சுகளும் மீள கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஒரு சமூகம் முன்னோக்கிச் செல்கின்ற போது அதற்கான உள்ளடத்தினையும், தாற்பரியத்தினையும் மீள கற்றுணருங்கள்.
***தாராளவாத சனநாயகவாதிகளுக்கு (புலியெதிர்ப்பாளர்ககள் தனிநபர் சுதந்திரத்தை, இருப்பை, தனிமனிதர் உரிமை பிரதானமானது என்பார்கள், கூட்டுக்குழும உரிமைய மறுப்பவர்கள்) ஒத்தோடிகளாக உள்ளனர். மிகவுயர்ந்த சனாநாயகவாதியாக (மேற்கின் தாராளவாதியாக ) இருக்கலாம். இவர்கள் மேற்கில் அந்த நாடுகள் கொடுக்கும் முதலாளித்துவ சனநாயக உரிமைமைய அனுபவித்துக் கொண்டே ஈழத்தவர்களின் உரிமையை மறுப்பார்கள்.
***ஆய்வாளர்கள் என்போர் இந்த சமூக அமைப்பில் எவ்வாறு ஒன்றித்துப் போவது என்று வகுப்பெடுப்பார்கள். இவர்களை பொறுத்தவரையில் உற்பத்தி உறவு- உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி பற்றிய புரிதலை அற்று அதிகார ஒத்தோடிக் கருத்துக்களை முன்வைப்பவர்கள்.
*** உளவுத்துறையின் திட்டமிட்ட கருத்தாளர்கள்.
ஒரு மக்கள் கூட்டத்தின் உரிமையும் உங்கள் தனிமனித உரிமை, விருப்பும் ஒன்றல்ல.
ஒரு மக்கள் கூட்டத்தின் மீது நீங்கள் தொடுக்கும் வன்மம் என்பது அருவருப்பானது, கொடுங்கோண்மையானது.
மொத்தத்தில் மனிதகுலவிரோதம் கொண்டது.
மேற்கில் வாழ்ந்து கொண்டு முதலாளித்துவ சனநாயகம் பற்றிய புரிதல் அற்ற ஒரு லும்பன். லும்பன்களின் அரசியல் கருத்துக்கள் முதலாளித்துவ சனநாயகத்திற்கு உட்பட்டது அல்ல. அஃது வெளிப்படுத்துவது லும்பன் என்பதே. லும்பன்கள் மக்கள் நலம் கொண்டவர்கள் அல்லர்.
***பொதுப்புத்தி கொண்டவர்கள் இவர்கள் இன்றைய தொலைத்தொடர்பு வசதி பெற்றதால் தங்களின் கருத்துக்களை முன்வைப்பவர்கள்.
தனிமனிதப் புரிதலும், விருப்பும் மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமையும் ஒன்றல்ல. தமிழர் தாயகத்தை பிரிக்கும் உரிமை தனிமனிதர்களுக்கு இன்னொரு தேசிய இனத்திற்கோ இல்லை. கூட்டுரிமை, அரசியல் உரிமை கொண்ட மக்களின் இறைமையாகும். இந்தப் பகுதியினர் பிரபாகரனை போற்றுவார்கள். ஆனால் பிரபாகரன் என்ற ஆளுமை எதற்காக போராடினார் என்ற புரிதல் அற்று விதேசிய அரசியலை ஆதரிப்பவர்களா இருக்கின்றார்கள். விதேசிகள் சிங்கள தேசத்தின் பாதுகாவலர்கள் தான்.
இப்போ துரோகிகள் என வசைபாடல் இடம்பெறுகின்றது. மல்லாக்கப்படுத்துக் கொண்டு துப்புதல் இதுதான்.
பேரினவாதக் கட்சிகள் யார்? இனவழிப்பாளர் யார்?
இந்தப் புரிதல் அவசியமானதாகும். காரணம் வரலாற்றில் இருந்து அரசியலை முடிவெடுக்கப்பட வேண்டும். இனவழிப்பு என்பது 2009 வைகாசியில் நடைபெற்றதன்று.
இது 1900 களில் அரசியல் கோரிக்கைகளை எழுந்த போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 1915 முஸ்லீம் மீதான தாக்குதல்
1949 மலையகமக்கள் (சிங்கள நிலவுடமையாளர்களின் நிலப்பிரச்சனையை தீர்ப்பதற்காய்) வாக்குரிமை பறிப்பு
கல்லோயாத்திட்டம்
சிங்கள மொழி
1958 எனத் தொடர்கின்றது.
நிலம்- பொருளாதாரம்- மொழி- பண்பாடு என்ற நான்கு தளங்களிலும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது இன்றுவரை தொடர்கின்றது. இந்த நான்கு அம்சங்களின் மீதானன தாக்குலே இனவழிப்பு. இதனைச் செய்பவர்கள் இரண்டு பேரினவாதக் கட்சிகளேயாகும்.
ஏதோ மகிந்த மாத்திரம் தான் இனவழிப்பாளர் என்று இட்டுக்கட்டப்படுகின்றது. ஐதேக. சி. சு கட்சியும் இனவழிப்புச் செய்த கட்சிகள் தான்.
தேசியத்தையும் வளத்தையும் பாதுகாக்கக்தான் இனவழிப்புச் செய்த கட்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.
இதைத்தான் வியாழேந்திரன் தொடங்கம் இன்னும் பலர் கூறப் போகின்றார்கள். தயவு செய்து தேசியம் என்று கூறுவதை தவிருங்கள்.
பேரினவாதக் கட்சிகள்- இனவழிப்பின் பங்காளிகள் தான் இரண்டு கட்சியும் ஆகும்.
இனவழிப்புச் செய்த கட்சிகள், அவர்களின் பங்கு பற்றி புரிதல் அற்று தமிழ் தேசத்தின் ஆட்சியதிகாரம் பற்றி பேசிவிட முடியாது.
இன்று இராணுவமயப்பட்ட நிலையில் மகிந்தவின் பாசீச ஆட்சி இரண்டை ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும். முதலாளித்துவ மேற்கின் நலன் நவீன நுட்பத்துடன் ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் இவைகளைத் தாண்டி தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமை கிடைக்கப் போவதில்லை.
இறுதியாக சிங்கள தேசம் ஆட்சியதிகாரம் கொண்டது. ஆட்சியதிகாரம் இருப்பதனால் அது மற்றைய தேசத்தையும், சிறுபான்மையையும் ஒடுக்குகின்றது. தன்னிடம் உள்ள பெரும்பான்மை என்ற எண்ணிக்கையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் கீழ் பேரம் பேசி இரண்டு ஆளும் வர்க்கக் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன. சிங்கள தேசத்திற்கு சுயநிர்யணம் இல்லை என்று வாதிடுபவர்கள் உள்ளார்கள். சிங்கள தேச ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கிடையே மோதிக் கொள்கின்றன. இவைதான் உண்மையாகும். இதே வேளை தேசிய ஒடுக்குமுறை என வருகின்ற போது இரண்டும் ஒரே நிலைப்பாடு எடுக்கும் என்பதை மறுத்துரைப்பதே இன்றைய த.தே.கூ இனதும், இரசிகமணிகளின் வேலையாகும்.
25.10.2018
2tn5oSmesa Ocopfirtoibeonrn s20ogre18gder ·
பூர்சுவாக்களின் பாத்திரம் ---
நேற்று எழுதத் தொடங்கி கட்டுரையானது பதிவிடாது அப்படியே கிடப்பில் விட்டேன். பல கேள்விகள் துழைத்துக் கொண்டிருக்கின்றது. இனங்கிப் போன சக்திகளின் மௌனம், பொதுப்புத்தியில் எழும் கேலியும் கிட்டலும், சமூக ஆர்வலர்களின் ஆதங்கம், இடதுசாரிகளின் முணுமுணுப்புகள் என்று பல பக்க கருத்துக்கள் முட்டி மோதுகின்றன. சிங்கள தேச இனவழிப்புக் கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டவர்கள், பிழைப்பவர்களும் சேர்ந்தே ஒப்பாரி வைக்கின்றார்கள். தேசிய மூலாம் பூசி நடைபெறுகின்றது. இவர்களின் பொதுப்புத்தியே பதட்டத்தைக் காட்டிவிடுகின்றது. இனவழிப்புச் செய்த கட்சிகளாக நீலம், பச்சையில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் இவர்கள் தம்மை தேசியவாதிகளாக ஏற்றுக் கொள்ளும் படி இரஞ்சுகின்றார்கள்.
இன்னொரு பகுதியின் பழையபடி தியாகி - துரோகி என்ற மட்டில் கருத்துக்களை விளாசிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு போராட்டத்தில் வெவ்வேறு வர்க்கப் பிரிவுகள் முன்னுக்கு வரும் அந்த வர்க்கப் பிரிவுகள் வெவ்வேறு தந்திரத்தை முன்நிறுத்தும் அதில் முன்னேறிய - பலமான வர்க்கப் பிரிவு முன்னேறிச் செல்லும் என்பது மாத்திரம் அல்ல. ஒன்றை ஒன்று அழித்தே முன்னுக்குச் செல்லும் என்பதும் இயங்கியலுக்கு உட்பட்டதே. இதுவரையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்கள் தான். இந்தப் போராட்டத்தை பயங்கரவாதம், தீவிரவாதம், பாசீசம் எப்படியாவது வரையறுத்தாலும் அந்தப் போராட்ங்களின் பின்னால் வர்க்க அரசியல் உள்ளது.
சிங்கள தேசமாகிய பிரதான எதிரி
எம்முள் இருக்கும் விதேசிய அணியே உள்ளக பிரதான எதிரி
ஊசலாடும் சக்திகள்
பாதிவழிக் கூட்டாளிகள்
நிரந்தர நண்பர்கள் என்ற பிரிவுகள் உள்ளது.
இதனை கொண்டே ஒரு ஐக்கிய முன்னணி கட்டப்படுகின்றது.
ஐக்கிய முன்னணி என்பது குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையிலும் அமைந்து கொள்ளும்.
இது தலைமை தாங்கும் சக்தியைக் கொண்டே தீர்மானம் பெறுகின்றது.
1985 இணைந்த புலிகள் அவர்களாகவே ஏகதலைமையாகினர். பின்னர்
அவர்களுக்கும் வெளியில் கூட்டு தேவைப்பட்டது இதுதான் 2000களில் சேர்க்கப்பட்ட அணியாகும்.
இந்த வகையில் பூர்சுவா வர்க்கம் தன்னிருப்பை வேண்டி நிற்கின்றது. இது தனியே தமிழ் பூர்சுவான அணியின் தேவை மாத்திரம் அல்ல. தமிழ் மக்களின் பிறப்புரிமையுடன் கூடிய தேவையே.
1. சரணாகதி
2. அதிகாரப் பகிர்வு
3.சுயநிர்ணயம்
இந்தப் போக்கில் பூர்சுவா அணி அதிகார பகிர்வை நோக்கிப் பணிக்கும் அணிகள் பிரிவுகள் தான் தற்போது உள்ளது.
இதில் சுயநிர்ணய உரிமைக்கான அணி வெற்றிடமாகவே உள்ளதே யதார்த்தம். என்னைப் பொறுத்தவரையில் தேசிய இனங்களின் முதலாளித்துவக் கட்டம் பற்றிய பிரச்சனையே இங்கு முதன்மையானதாக இருக்கின்றது. இந்த நிலைப்பாட்டை எடுப்பதனால் இனவாதி, புலிகளை ஏற்றுக் கொள்கின்றீர்களா? கொள்கையை ஏற்றுக் கொள்கின்றீர்களா என்று குதற்க கேள்விகளை முன்வைப்பார்கள். இவர்கள் முதலாளித்துவக் கட்டத்தின் தேசிய இயக்கங்கள் பற்றிய புரிதல் அற்றவர்கள் என்பது என்முடிவும். நாம் அமைப்பு வடிவம் இல்லாத நபரான என்னுடைய விமர்சனப் பார்வை இதுவாகவே இருக்கின்றது.
தமிழ் பரப்பில் மார்க்சிய வழியில் தேசம் பற்றிய புரிதலை வெளிப்படுத்தியவர்கள் தோழர்கள் கலியப்பெருமாள், தமிழரசன். ஆனாலும் இன்றுவரையிலும் மார்க்சியம் பேசுபவர்கள் மீள்படிப்புச் செய்யத் தயாராக இல்லை.
ஆகவே
மரங்கள் ஒய்வெடுக்க விரும்பினாலும் காற்று ஒய்வெடுக்க விடுவதில்லை. தேசிய சக்திகள் ஆயுதத்தின் ஊடாக வீழ்த்தப்பட்டதாலும் அது எந்த வகையிலும் மீள எழும் இது தவிர்க்க முடியாதது. சமூகத்தில் இருக்கின்ற சமூக அவசியமே அது மேலும் மேலும் தொடர்வதற்கான காரணம்.
இந்த வகையில் இன்று உருவாகியிருக்கும் புதிய கட்சியைப் மதிப்பிட வேண்டியிருக்கின்றது.
1. விதேச அணியாகி தரகு வர்க்கத்தின் அரசியல் சரணடைவு
பதவி- அந்தஸ்து- சமூக இருப்பு இவற்றை அடையவிரும்புபவர்களைக் கொண்டு சிங்கள தேசத்தின் குரலாக கடந்த 2012 களில் இருந்து செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களின் போக்கு அமீர்தலிங்கத்தின் தலைமையிலான அரசியல் போக்கை விட எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.
தரகு வர்க்கத்தின் அரசியல் என்பது எப்பவும் தேசிய நலனுக்கான இருக்காது என்பது இடதுசாரிய அரசியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அதிசயம் இல்லை.
ஆனால் பொதுப்புத்தி கொண்ட சிந்தனை கொண்டவர்களிடையே தேசியக் கருத்து இருப்பதாக நினைத்து ஏமார்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
2 அணியாக தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்கள். (TNPF, EPRLF உட்பட 10 பொதுஅமைப்புக்களை கொண்டதாகும்)
இவர்களின் வர்க்கப் போக்கானது ஊசலாட்ட குட்டிமுதலாளித்துவ- மேட்டுக்குடி- லொபி- தன்னார்வத் தொண்டு நிறுவன சிந்தனைக்கு உட்பட்ட சக்திகளைக் கொண்டதாகவும் இருக்கின்றது.
இங்கு தனிநபர்களின் கடவுள் நம்பிக்கை, அதிகார வர்க்க உடை, ஊதாரித்தனம் போன்ற தனிமனித பலவீனங்களைக் கொண்டு அரசியல் போக்கை மதிப்பீடு செய்ய முடியாது. இந்தச் சமூகத்தின் மனிதர்களின் சிந்தனை வளர்ச்சிக்கு உட்பட்டதே அவர்களின் நடைமுறையுமாகும்.
இந்த வர்க்கப் போக்கை கொண்டவர்களை தனித்தனியே ஆராயப்படவில்லை எனினும் இதற்குள்.
இந்த வகையில் மக்கள் விரோதிகள்
நடுநிலையாளர்கள்
முன்னோக்கிச் செல்லத் தக்கவர்கள் என்ற பிரிவு உள்ளது. இந்த பிரிவில் இருந்துதான் போராட்டம் கட்டியமைக்கப்படும். இதனுள் இருந்துதான் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய சக்திகள் வளர முடியும்.
ஏனெனில் தரகு வர்க்கம் (ஏவல்) தேசத்தின் ஆட்சிக்கான போராட்டத்தை வழிநடத்திச் சென்றிட முடியாது. இந்தப் பிரிவு மாற்று நிலை எடுக்காது விடின் அதிகாரப் பகிர்வை நோக்கிய பயணயத்தில் கூட சாத்தியமில்லை என்ற அரசியல் உண்மையின் வெளிப்பாடே இன்றைய புதிய கட்சியின் தோற்றமாகும்.
இற்றைக்கு TNPF தன்னை தூய்மைவாதியாகக் காட்டிக் கொண்டாலும் ஏதோ அணியில் சேர்ந்து பயணிக்க வேண்டும். இவர்களுக்கு புலம்பெயர் அமைப்புக்களின் செல்வாக்கு உள்ளதும், மற்றையவர்கள் பொதுப்புத்திக்கு அமைய ஒட்டுக்குழு இத்தியாதி வரைகளுக்கு இரையாவதும் காரணம். இவ்வாறான பொதுப்புத்திப் போக்கு பூர்சுவா வர்க்கத்தின் எதிர்நிலை கூட சிதைவை உருவாக்கும்.
3. வாய்பாட்டுவாத இடதுசாரியமும் தமிழ் தேசமும்
Orator Subramaniam. தலைமையில் 1976 பட்டி மன்றம் நடத்திய போன்று இன்றும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தால் பூர்சுவாக்களின் முன்னெடுப்புக்கள் தவிர்க்க முடியாதது.
இன்னும் 42 வருடம் இடதுசாரியம் பின்னோக்கித் தான் செல்லும். இன்றும் தொடரும் தத்துவார்த்த, கோட்பாட்டுச் சிக்கல். இலங்கை இடதுசாரிகள் இன்றும் வாய்ப்பாட்டு வாதத்தை தான் ஒப்பிக்கின்றார்கள்.
ஒரு குறிப்பான நாட்டின் சூழலில் வர்க்கப் புரட்சியை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பதை மீளாராய தயாராக இல்லை. ஈழம் சிங்கள பௌத்த பேரினவாத்தின் கீழும், கிந்திய மாநிலங்கள் வெள்வேறாக வளர்ச்சியைக் கொண்டிருக்கையில் எவ்வாறு சனநாயகப் புரட்சியை வெற்றி கொள்வது என்பதை மீளாயத் தயாராக இல்லை. தேசங்களின் விடுதலையே சனநாயகப் புரட்சியை வெற்றி (ஈழவிடுதலை உட்பட) ஈட்டித் தரும்.
சர்வம் தளுவிய புரட்சி என்பது சாத்தியமே இல்லை. தேசங்களின் வளர்ச்சிப் போக்கை (ஏறுதழுவல், நீற், நிலவுரிமைக்கான, கடல்வளத்திற்கான உற்பத்தி சாதனம் )யும் வளத்திற்கான போராட்டத்தை கவனத்தில் கொள்ள மறுக்கின்றார்கள். தமிழகத்திற்கு முன்னோடியாக ஈழம் தனது போராட்டத்தை நடத்தியது, அதன் செயல், யுத்ததந்திர தவறுகளால் இல்லாது ஒழிக்கப்பட்டது. இந்த உதாரணத்தைக் காட்டி தேசங்களின் ஆட்சியுரிமையை மறுப்பது சனநாயகப் புரட்சியை பின்னடையவைக்கும் ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்தின் நோயாகும்.
சிங்கள பௌத்த பேரினவாதக்கட்டமைப்பு சிதைவது முதலாளித்துவப் புரட்சியை நடத்திவிடாது சாத்தியமில்லை என்ற தத்துவார்த்தப் புரிதலை வாய்ப்பாட்டு இடதுசாரிகள் உள்ளவாங்குவதாக இல்லை.
இதே வேளை தமிழ் தேசத்தின் விடுதலையே சிஙகள தேசத்தில் முதலாளித்துவப் புரட்சியையும், பொதுவுடமை சமூகத்தை அமைக்க முடியும் என்ற மாலெ வழிகாட்டலை கற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
4. புதிய கட்சி எதிர்க்கொள்ளவிருக்கும் சவால்கள்.
இங்கு தேசத்தின் ஒடுக்குமுறை பற்றி முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை பலவருடங்களுக்கு முன்னரே வந்துள்ளது. இதே போல தமிழ் மக்கள் பேரவையில் அரசியல் முழக்கங்கள் முன்வைத்துள்ளார்கள். ஒரு அய்க்கிய முன்னணிக்கான குறைந்தபட்ச வேலைத்திட்டம் அங்கு உள்ளது என்னவோ உண்மைதான்.
அந்தக் கொள்கைகளை எவ்வாறு சமூகத்திடம் கொண்டு செல்லப் போகின்றார்கள் என்பதே பெரும் சவாலாகும்.
இதற்கான அமைப்பு வடிவம்- உறுப்பினர்களின் கடமை- உரிமை- செயற்பாடு பற்றியது.
செயல்திட்டம் என நிறைய வேலைகள் உண்டு.
1. பொருளாதாரத்திட்டம்
2. அரசியல் செயல்முறைகள்
3. அயல்நாட்டு உறவு
இதற்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருளாதார வாழ்வாதப் பிரச்சனைக்கு ஒரு செயற்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது அடிப்படையானதும் முக்கியமாகும்.
இதே போல மக்கள் திரள் அமைப்புக்ளையும், அரசியல் ரீதியான கருத்தரங்குள், அரசியல் (தேசம், ஆட்சியதிகாரம் பற்றிய அறிவுத்தேடல்) மயப்படுத்தல் போன்றவற்றையும் செய்ய வேண்டும்.
தேர்தலில் பங்குபெற்றினாலும் சிங்கள தேசத்தின் நிர்வாகத்தை முடக்க வேண்டும். இத்துடன் 6 சட்டத்தினை ஏற்றுக் கொள்ளாது விடவேண்டும். இது முக்கியமானதாகும் காரணம் இது தமிழ் தேசத்தின் இருப்பையே நாம் மறுதலித்துக் கொள்வதாகும்.
குறைந்த பட்சம் அதிகாரப் பகிவிற்காவது நியாயமாக இருப்பார்கள் என நம்புவோம்.
இடதுசாரியம் தூங்கிக் கொண்டிருக்க பூர்சுவா வர்க்கம் தலைமை தாங்குவார்கள்.
06.11.2017
6 tSNoproovruoemrSfboernna ma201rsoctre7dd ·
விதேசிகள் தேசியவாதிகள் அல்ல
தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டதே த.தே. கூட்டமைப்பு எற்று பிரகடனப்படுத்தி வாக்கைப் பெற்றனர். அவர்களின் பெயரில் வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக போலியான பிரகடனங்களுடன் தேர்தல் அறிக்கையை தயாரித்து மக்கள் மத்தியில் வைத்தார்கள்.
விசிலடிச்சான் குஞ்சுகள் தேசியத் தலைவர் உருவாக்கிய த.தே. கூ. வாக்கு போட வேண்டும் என்று நியாதிக்கம் பேசினார்கள். இவர்கள் அன்றும் என்றும் விசிலடிச்சான் குஞ்சுகள் தான். விதேசிகள் தான் தேசிய வேடம் போட்டுள்ளார்கள் என்று திரும்பத் திரும்ப அடித்துக் கூறுகின்ற போதெல்லாம் சுமந்திரம்- சம்பந்தன் தேசியக் காவலர்களாக முன்னிறுத்தப்பட்டார்கள்.
விருப்பு வாக்குகளை கட்சியின் தலைமைக்கு கொடுக்கும் அப்போ ரணில் மாமாவின் அணுசரனையுடன் சப்றா, சுமிக்கும் போடப்பட்டது என்றதை மலினப்படுத்தியவர்கள் தேசியத் தலைவர் வழியில் விசுவாசமாக இருக்கும் தேசிய- விசிலடிச்சான் குஞ்சுகள்.
இன்று சுமியின் ஆங்கில உரையை கிலாகிக்கின்றார்கள். ஆனால்அவர்கள் கட்டியருக்கும் கோமணம் அவிழ்க்கப்படுகின்றது என்பதை விளக்க அரசியல் பொருளாதார ஓட்டத்தை விளங்காத விசிலடிச்சான் குஞ்சுகள்.
தத்துவம்- வழிகாட்டி- மக்கள் நலன் கொண்ட இலக்கு அல்லாத தொழில் சார் அரசியல்வாதிகளின் நிலை என்பதுசோரம் போவது தவிர்க்க முடியாதது. ஆனால் ஏற்கனவே போலிகள் இவர்கள் என்று அம்பலப்படுத்துகின்ற போது விசிலடிச்சான் குஞ்சுகளின் முதிர்ச்சியற்ற அரசியல் பார்வை என்பது ஆபத்தானது என்பதை உறைக்கும் படி அவர்களுக்கு சொல்வது எவ்வாறு?
த.தே. கூட்டமைப்பில் இருந்து சுமந்திரன்- சம்பந்தர் அணியை வெளியேற்ற வேண்டும்.
கதிரைக்காகவும், கடத்தல் தொழில் சார் வழக்கிற்காகவும் அடிபணியும் போலி தேசிய அணியை அம்பலப்படுத்த வேண்டும்.
தொழில் சார் அரசியல்வாதிகளை கடமை என்ற நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் ( அவர்களின் ஊதியம் அமைப்பிற்கு முழுமையாக கொடுக்க வேண்டும். அன்றான வாழ்விற்கான அடிப்படைச் செலவை அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். 1983 முன்னர் இவ்வாறுதான் அமைப்பின் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது.) புதிய பண்பாடு உருவாக்கப்பட வேண்டும்
***
இன்றைய நிலையில் இரண்டு போக்குக்கள் உள்ளன.
சுமி- சாம் அணி நேரடியாகவே சிங்களதேசத்தின் அங்கமாக செயற்படுகின்றார்கள்.
குட்டி முதலாளிய ஊசலாட்டப் பிரிவு இது குறைந்த பட்சம் தமிழ் தேச அரசியலை முன்னெடுக்கின்றது.
இந்த நிலையில் அடுத்த கட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டார்களை ஈழ தேசத்தின் நலன் பால் உருவாக்க வேண்டும் என்றால் இரண்டாவது அணியாகிய குட்டிமுதலாளிய தேசியப் பிரிவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதில்இருந்து தான் புரட்சிகர சக்திகளை தலைமையாளர்களாக வளர்க்க முடியும்.
21.072016
21thsSh pmoonmdassJauoly r2edeo01dS6 ·
ஆக்கிரமிப்பு அரசியலும்- நல்லிணக்கமும்
தேசிய இனப் பிரச்சனை என்பது புலிகளை அழித்து விட்டதால் தீர்ந்து விட்டது என்றும், தேசிய நல்லிணக்கம் என்ற குண்டாம் சட்டிக்குள் தேடுவதாகும். நல்லிணக்கம் என்பது அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை ஏற்றுக் கொள்ள வைக்கும் சிந்தனை மனப்பாங்காகும். இதே போல உயர் வர்க்கம் என்பதற்கான கூட்டு உறவின் அடிப்படையில் தாம் தேசம் - தேசிய இனம் கடந்து சிந்திப்பதாக தம்மை புனிதவாதிகளாக நிலைநிறுத்தும் அரசியல் பாங்கில் இருந்து வெளிப்படுத்துவதாகும். 30 வருட ஆயுதப் போராட்டம் நடைபெற்ற நாட்டில் தொடர்ந்தும் முரண்பாடுகள் தொடர்கின்றது. புலிகளை அழித்து விட்டதால் முரண்பாடு அற்றது என்று அர்த்தம் கொள்வது அரசியல் தவறாகும். ஆனால் பெருந்தேசியம் முரண்பாடு தீர்க்கப்பட்டதாக கருதுகின்றது. இது தனது ஆக்கிரமிப்பு அரசியலை வெளிப்படுத்தி நின்று, உன்னை வீழ்த்தி விட்டேன் என்று வெற்றிக் களிப்பில் இருக்கின்றது.
ஏற்கனவே தேசம் பற்றி புரிதல் அற்ற சமூகப் பிரிவினர்களின் அரசியல் கருத்துக்கள் என்பது தன்னியல்பான பொதுப்புத்தியில் அமைந்த நீதி நெறிக்கு உட்பட்டதாகும். பொதுப்புத்தியில் அமைந்த பெருந்தேசிய ஆதிக்க சிந்தனை வடிவம் என்பதற்கு அரசியல் வடிவம் கொடுப்பதாகும். ஆக இவ்வகையான சிந்தனை வடிவத்தின் ஊடாக
தேசிய இனப் பிரச்சனையும் அகமுரண்பாடு வெளிப்பாடுகளை வெறும் ‘இனவாதம்‘ என்ற சொல்லாடலுக்குள் முடக்கிவிடும் சிந்தனை வடிவமாகும். இது முதலாளித்துவ வளர்ச்சி- தேசிய- தேசம் என்ற எழுச்சிக் போக்கில் இருந்து பார்க்கும் பார்வையற்றவையாக உள்ளது. மாணவர்களின் செயற்பாடுகளை விமர்சிப்பதும், பரந்து வாழும் தமிழ் மக்களின் சமயநெறியை ஏற்றுக் கொள்ளும் சிங்கள தேசத்தில் இருக்கையில் தமிழ் தேசத்தில் மாத்திரம் சிங்கள கலாச்சாரம் என்பது துடக்கு என்ற அற்பத்தனமான ஒத்தோடிப் புரிதல், சிலர் ஐயோகோ தமிழ் மாணவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றார்கள் என்ற பிரச்சாரம் என்பது முன்னெடுக்கப்பட்டது.
1. பொதுப்புத்தி -
2. ஒத்தோடிகள்
3. சீர்திருத்தவாத – திரிபுவாத இடதுகள்
4. தமிழ் மேட்டுக்குடிகள்
இந்தப் பரப்பின் ஓட்டுமொத்த கருத்து தாக்குதல் தமிழ் மாணவர்களை நோக்கியதாக இருந்துள்ளது.
ஒரு தேசத்தின் மீதான அடக்குமுறை, தேசிய இனத்தினை இல்லாதாக்கும் அரசியல் போக்கு, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனை வடிவத்தின் அமைந்த சமூக மேலான்மைத் போக்கு, ஒரு பண்பாட்டு மேலான்மையை திணிக்கும் போக்கிற்கும் என்ன தொடர்பு??
சமூகத்தில் உள்ள அகமுரண்பாடுகள் என்பது அனைத்துச் சமூகத்திலும் உள்ளது. ஏன் சிங்களச் சமூகத்திலும் உள்ளது. ஆனால் அரசியல் அரசியல் சிங்கள தேசத்தின் அகமுரண்பாடுகள் பற்றி எவரும் வகுப்பு எடுப்பது இல்லை. சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்பதில்லை. பொதுவாக அனைத்து இனவாதம் என்று பொதுமைப்படுத்தி சிங்கள பெருந்தேசியவாதத்தை காப்பாற்றும் மேட்டுக்குடி புனிதவாதம்.
இது பெருந்தேசிய மனப்பான்மையில் இருந்து வெளிப்படும் பல்வேறு செயற்பாடுகளையும் உள்வாங்கி கொண்டு அரசியல் செய்யப்படுவதில்லை. ஆனால் எது கவர்ச்சியானது என்ற அடிப்படையில் இருந்தும், பொதுவெளியில் மிகையாக வெளிச்சத்திற்கு வருவதில் இருந்து அரசியல் செய்யப்படுகின்றது.
நில ஆக்கிரமிப்பு
பௌத்த அடையாளங்களை புகுத்துவது
இராணுவம் முகாம் – இராணுவம் என்பதே ஆக்கிரமிப்புத் தான் என்ற அரசியல் மதிப்பீடு அற்ற நிலைகளில் எழும் லங்கா தேசத்தின் ஆதரவு நிலைப்பாடுகள்
தேசம் என்ற பண்பில் இருந்தும் அதன் ஜனநாயக உரிமை என்ற முழுமையான மதிப்பீட்டில் இருந்து வருவதல்ல. அரசியல் பார்வைகள்- பொதுப்புத்திகள் என்பது குறிப்பான- அல்லது பிரத்தியோகமான நிகழ்வுகளில் இருந்து வெளிப்படுத்துவதாகும். ஆக பிரத்தியோகமான வெளிப்பாடுகள், முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் என்பது அதற்கான அடித்தளம் என்பது சமூகக்கட்டுமாணத்தில் புதைந்துள்ளது. ஆக தன்னியாக மனிதர்கள் தம்மை தூய்மைவாதிகளாக நிலைநிறுத்தும் அரசியல் போக்கு என்பது கூட்டுச் சமூகத்தின் அரசியல் போக்கிற்கும் தனிமனித சிந்தனைப் போக்கிற்கும் நிகராக இட்டுக்கட்டும் சிந்தனைவடிவமாகும். அரசியல் நீங்கம் செய்கின்ற மேட்டுக்குடிவாதம். அது மற்றவர்களை விட முண்டித்துக் கொண்டு தம்மை புனிதர்களாக ஆக்கிவிடுகின்றது. இது தான் பொதுவெளியில் இனவாதம் என்ற கூக்குரல். சிங்கள மாணவர்களை தூண்டிய சிந்தனை வடிவமும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பின் வடிவமும் ஒன்றல்ல. இவைகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பொத்தாம் பொதுவான போக்கு.
பல்கலைக்கழக தற்செயலான நிகழ்வினை ஒட்டி வெளியாகிய அரசியல் கருத்துக்கள் என்பது பொதுப்புத்தியை நிறுவி தம்மை புனிதர்களாக ஆக்கிக் கொள்வதில் உள்ள முனைப்பு வெளிப்படுத்தியுள்ளது. தற்செயலாக நடந்த நிகழ்வில் இருந்து அரசியலை அணுகிட முடியாது. எந்தச் சமூகக் கட்டமைப்பு உள்ளதே அந்தச் சமூகச் சிந்தனை என்பதான் வெளிப்படும். இந்த நிலையில் மேலாதிக்க உணர்வும் அதனை எதிர்க் கொள்ளும் (அடிமையாக இருப்பதை எதிர்ப்பது) இரண்டும் ஒன்றல்ல.
தற்செயலான நிகழ்விற்குப் பின்னால் உள்ள சமூகச் சிந்தனையின் வேர் என்பது தான் அரசியல் மதிப்பீட்டை வந்தடைய உதவிடும். ஆனால் இது தனியான உதிரியான நிகழ்வில் இருந்து அல்ல. இந்த முரண்பாடு ஒடுக்குமுறைக்கும், அதனை எதிர்க்கும் போக்குக்குமான முரண்பாடாகும். இந்த நிகழ்வில் யார் முதலில் தடிதூக்கியது, அடித்தது, நொருக்கியது என்பது சட்டவாதம்.
ஆனால் அந்த நிகழ்விற்கு அடிப்படை என்ன என்பதை தேடாத அரசியல் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை எதுவும் செய்துவிட முடியாது. யாழ்ப்பாணியம்- சைவவேளாளம்- என்ற நிலமானிய எச்சங்களில் இருந்து வரும் அகநிலை முரண்பாடுகளை முன்னிறுத்தும் அனைத்துச் சக்திகளும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்திற்கு மயில் இறகால் வருடிவிடும் அரசியல் தான் செய்கின்றார்கள்.
சிங்கள பௌத்த பெருந்தேசியக் கட்டமைப்பிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற பொதுப்புத்திக்கு அப்பால் அவர்களுக்கு சிந்திக்க முடிவதில்லை. தமிழ் மாணவர்களின் சிந்தனைப் போக்கும் சிங்கள மாணவர்களின் சிந்தனைப் போக்கு உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிவதில்லை ஆனால் எத்தனையே அர்ப்பத்தனமாக ஆலோசனைகள், கருத்துங்கள், நீதிமான்களாக எழுதிவிடுவார்கள்.
இதில் ஜீவகாரூண்யத்தின் யார் சிறந்தவர்கள் என்ற வரலாற்றுச் சான்றுகளும் முன்வைத்து திட்டித் தீர்க்கப்பட்டது. 1983 இல் தமிழர்களை காப்பாற்றினோம், இப்படிய நடந்து கொள்வது? இங்கு வரலாற்றில் பெரும்பான்மையினரிடம் இனக்குரோதம் (பெருந்தேசிய- அதற்கு எதிரான இனப்பெருமை) இருக்கின்றது. இருந்தும் தீங்கான செயற்பாடுகளை பெரும்பான்மை நிகழ்த்துவதில்லை.
இரண்டு இனவாதிகளின் தூண்டுதல் மாத்திரம் என்ற ஒற்றைப் புரிதலை எதிர்பார்த்திருந்தேன். ------
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அரசியற் தீர்வொன்றுக்காகப் போராடும் அதேவேளை, இனப்பிளவுக்கெதிராகவும் போராடி வெற்றிபெற வேண்டிய இரட்டைச் சுமை எம் தோள்களில் உள்ளது. இதனை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது.----
இதைத்தான் 1948 இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
முதலாளித்துவ - ஜனநாயகக் காலம் என்ற சமூக வளர்ச்சிப் போக்கு என்ன?? இங்கு சேர்ந்திருத்தல், அல்லது ஒன்று கலத்தல் என்பது பிரிந்து வாழ்வதற்கான உரிமையும், பிரிந்து போவதற்கான உரிமையையும் உள்ளடக்கிய நிலையில் இருந்து தான் மாறாக சிங்கள தேசம் தமிழ் தேசத்தினை விழுங்கிவிடுவதல்ல. சிங்கள மயமாக்கலின் ஊடாக கரையோர தமிழர்களை சிங்கள தேசிய இனத்தவர்களாள மாற்றியது போல அல்ல. (சில பேராசிரியர்கள் சிங்கள கத்தோலிக்கத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல் இல்லை என்கின்றார்கள். )
2009 யுத்தம் என்பது சிங்கள தேசத்தின்ஆக்கிரமிப்பு என்ற அரசியல் மதிப்பீட்டை மறுத்துக் கொண்டு ‘இனவாதமாக- பிரிவினைவாதமாக- குறுந்தேசியமாக- உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பவர்களா- தேசிய இனங்களின் ஐக்கியத்திற்கு எதிரானவர்களாக- நிலைநிறுத்தப்படுகின்றது. இவர்கள் தேசிய ஒடுக்குமுறையை எதிர்க்கும் போது உண்டாகும் எதிர்ப்புணர்வையும், பெருந்தேசிய ஒடுக்குமுறை வடிவங்கள் - செற்பாடுகளை ஒன்றாக இணைத்து அரசியல் மதிப்பீடுகளை செய்கின்றார்கள். இந்த அரசியல் மதிப்பீடு என்பது அரசியல் பொருளாதாரப் போக்கை உள்ளவாங்காத கொச்சைப் பார்வையாகும்.
சுயநிர்ணய உரிமையை நீர்த்து போக வைக்கவும் லங்கா என்ற தேசத்தினுள் மற்றைய எண்கணக்கில் சிறுபான்மையினராக பிரஜைகளுக்காக உரிமையுடன் நின்றுவிடும் அரசியல் போக்காகும். இவைகளை திரித்துக் கொண்ட பொதுப்புத்தி அரசியல் என்பது பௌத்த பெருந்தேசிய அரசியலுக்கு முண்டு கொடுத்துச் செல்பவர்கள் தான்.
முதலாளித்துவ- தேசிய வளர்ச்சிக் கட்டமும் ஒடுக்குமுறைக்கு எதிரான போக்கில் இருந்துதான் அரசியல் மதிப்பீடும் அரசியல் போக்கும் முன்வைக்கப்படுகின்றது. தலைமைதாங்கும் சக்திகள் என்பது மத அடிப்படையவாதம் தொற்றிக் கொள்ளுமானால் அது சமூக வளர்ச்சிப் போக்கில் இருந்து உள்வாங்கப்படுவதாகும். இதனை பலஸ்தீனத்தில் கண்டு கொள்ள முடியும். முற்போக்கு - புரட்சியாளர்களின் கைகளில் இருந்த போராட்டம் கமாஸ் போன்ற பிற்போக்கு மதவாதிகளின் பிடியில் வந்திருக்கின்றது. அது பெரும்பான்மை இல்லை எனினும் மதவாதம் தலைதூக்கி இருக்கின்றது என்பதற்காய் பலஸ்தீன தேசத்தின் அரசுரிமையை எவராலும் மறுத்துவிட முடியாது. இதே போல இன்று தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தின் தலைமை என்பது பிற்போக்கு தரகு அணியிடம் சென்றுள்ளது. இதன் காரணமாக தமிழ் தேசத்தின் இறைமை மறுதலித்துக் கொண்டு சிங்கள பௌத்த ஜீவகாரூண்ய அரசியல் வழியில் நின்று ஒடுக்கப்படும் தேசங்களின்- தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை கொடுத்துவிடப் போவதில்லை.
=----------
கொக்கிளாய் மீனவர்கள் தம் பாரம்பரிய தொழில் கடலுக்கு மீன்பிடிக்க போனார்கள்.வாடி அமைத்தார்கள். அந்நேரம் பார்த்து பிக்கு தலமையில் சகோதர இனத்தவர்கள் அவ்விடம் வந்தனர். வாடிகளை பிடுங்கி எறிந்து தமிழ் மீனவர்களையும் விரட்டியடித்தனர்.அத்தோடு பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.தமிழ் மீனவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இது நல்லிணக்கத்துக்கு எதிரான செய்தியல்ல.கடந்தவாரம் கெம்பஸ்ல நடந்த விளையாட்டு செய்திக்கும் இந்த விளையாட்டு செய்திக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவே ஒளிப்பரப்பப்படுகின்றது. (நன்றி ஜெரா JE RA – செய்தியாளர்)
27.06.2016
Velan
2tn7 JSpucuonoedc ts2r0dlnsloo1c6red ·
காணியுரிமையும் இறைமையும்
வெல்கிறது மென்வலு
இதுவரை காலமும் இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்த காங்கேசன்துறையின் சில பகுதிகள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று பார்வையிட்டு சந்தோசமடைந்திருக்கின்றனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம் பேசுபொருளாக எடுக்கப்படும் வாரத்தில் இவ்வாறு நிலங்கள் விடுவிக்கப்படுகின்றமை மொன் வலுவின் உச்சக்கட்ட வீரியமாகவே கொள்ளப்பட வேண்டும். எனவே இந்த நில விடுவிப்புக்காகத் தம் கைவசமிருக்கும் ஆயுதமான மொன்வலுவை லாவகமாக பயன்படுத்தி வெற்றிகண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயா, அவருக்குத் தூணாக நின்றுழைக்கும் சுமந்திரன் சேர், மாவை அண்ணன் மற்றும் மொன் வலுவுக்கு வலுச் சேர்க்கும் பேஸ்புக் களமாடிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும் -இது பத்திரிகையாளரின் குறிப்பு.-------------------------------------------------------------------------------
இது நல்ல செய்தியா? சந்தோசப்படக் கூடிய செய்தியா? என்பது அரசியல் அல்ல. அது தனிமனித உணர்வு. அரசியல் நிகழ்வு என்பது திடமாக குறிப்பான செயற்பாடுகளை செய்வது, செய்து முடிப்பது வெளிப்படுவது.
ஆக இந்த நிகழ்வு என்பது அன்றாட பத்திரிகையில் வரும் பெட்டிச் செய்தியை விட இதற்கு அப்பால் ஒன்றில்லை.
ஆளும் வர்க்கம் முரண்பாடுகளை, சிக்கல்களை திசைதிருப்பிக் கொள்ள சிலவற்றை நல்லவைகளாக காட்டிக் கொள்ளச் செய்யும். அரசியல் போக்கில் உள்ள தந்திரம், நரித்தனம் இவற்றை உள்வாங்காது. நிகழ்வுகளை தனித்துருவி கருத்துக் கூறுவதும் அது பற்றி நக்கல் அடிப்பதும் பொழுதுபோக்கு அரசியல் சார்ந்தது.
இங்கு சின்ன விடயம் பெரிய விடயம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவான எழுதப்பட்ட வரையறைக் கொள்கை இல்லாது தனிமனிதர்கள் கதைப்பது அறிக்கை விடுவதுதான் அரசியல் என்றாகியிருக்கின்றது. இதனைத் தான் த.தே. கூ செய்கின்றது. இதனை விமர்சித்தால் குறிப்பான நபர்களின் கருத்து என்று மலினப்படுத்தி விட்டு கடந்து செல்லப்படுகின்றது.
தேசம் என்றால் அது வடமொழிச் சொல்லு, அது சைக்கிள்காறர்களின் கண்டுபிடிப்பு என்று அபர்த்தமான அரசியலை மேடைகளிலும் தமது அடிபொடிகளைக் கொண்டும் பிரச்சாரப்படுத்தியிருந்தது. இது கூட அரசியலில் உள்ள வியாபார அரசியலாகும்.
மேல் உள்ள அரசியல் கோசம் என்பது தெளிவான வரையறுக்கப்பட்ட அரசியலை முன்னிறுத்துகின்றது.
இங்கு அரச காணியை அரசு எடுக்கின்றது என்பது துரோக அரசியல் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசு தெளிவாகவே இருக்கின்றது 27 December 2014 •
no wonder !!
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை; மைத்திரிபால அறிவிப்பு
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை.
யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர்.
எனது புதிய அரசில் யுத்த வெற்றியை எதிர் கொண்ட தளபதிகளை மீள நாட்டிற்கு அழைத்து தேசிய பாதுகாப்புச் சபையை நான் பலப்படுத்துவேன்.
இந்த நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
சுமார் 250 000 மக்களையும், சுமார் 30000 போராளிகளையும் இழந்து ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் இறைமை என்றால் என்ன? தேசத்தின் பண்புகள் என்ன? தேசத்தின் பண்பை முன்னிறுத்தும் அரசியல் என்ன என்று தெரியப் படுத்தக் கூடாது என்ற அரசியல்- அறிய முயற்சிப்பது இல்லை- அவ்வாறு யாரும் கூறினால் அதனை முத்திரை குத்திவிட்டுச் செல்வது என்ற போக்கை த.தே. கூ தொடக்கம் மென்வலு ஆதரவாளர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
நிலம் என்பதை தனிச் மனிதச் சொத்துக்கு அப்பால் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். நிலம் என்பது என்பது ஒரு உற்பத்திச் சாதனம் மாத்திரம் அல்ல. தேசத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று அதைனை விளங்கிக் கொள்ள வேண்டும். இதுபற்றிய போதிய தெளிவு த. தே. கூ இல்லை. இதனை அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து அறிய முடிகின்றது. அவர்களிடம் இருந்தால் அது வெளிப்படையான அரசியல் ஊடாக வெளிப்படும்.
சம்பூர் அனல் மில்நிலையம்
சம்பூர் அனல் மில்நிலையம் அமைய இருக்கின்ற நிலத்தினை இந்தியாவிற்கு தாரைவார்த்துக் கொடுப்பதில் இருந்து அவர்களின் புரிதல் வெளிப்படையாக தெரிந்தது. ஆக பிரச்கிராசிமார்களுக்கு அதிகம் தெரியும் என்று வாதப்பிரதிவாதம் செய்ய முடியாது.
அனல் மின்னிலையத்தால் பாதிப்புப் பற்றி சரியா புரிதல் (பத்திரிகையாளர் ஜெரா எடுத்த ஆவணப்படம் எல்லோரும் பார்க்க வேண்டும். ) இல்லை என்பது வெளிப்படையானது என்பதை அவர்களின் பேட்டியில் இருந்தே அறிந்து கொள்ள முடியும். (சம்பூர் நிலம்பற்றி ஐபிசி பேட்டியை கவனியுங்கள்)
சம்பூர் மண் என்பது அங்கு வாழும் பூர்வக் குடிகளுக்குச் சொந்தமானது. இது சீனா என்றால் என்ன இந்தியா என்றால் என்ன அது எதிர்க்கப்பட வேண்டும். தமிழ் தேசத்திற்கு சொந்தமான நிலப்பரப்பும் என்பதை இந்த அரசியல்வாதிகள் ஏனே தற்செயலாக மறக்கின்றார்கள் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை.
ஆக தமிழ் தேசத்தின் ஆன்மாக்களில் ஒன்று உரிமை. அது இன்று அரச காணிகள் என்ற நாமத்தின் கீழ் உள்ளது. இங்கு ஒரே ஒரு கோசமாகத் தான் இருக்க முடியும்.
அது எமது நிலம் எமக்கு வேண்டும் என்பதே.
15.11.2015
Velan
1tl5Srirte NSSpoovncecsmfobearcrire t2015dsg ·
அரசியல் கைதிகள் - முதிர்ச்சியற்ற அரசியல் போக்கும்
யுத்தம் முடிந்த பின்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடப்பட வேண்டிய அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்தும் சிறைவைத்திருக்கின்றது சிங்கள பௌத்த பேரினவாத அரசு. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அற்ற நிலையில் தமிழ் தலைமைகள் உள்ளன.
அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் என்பது மலினப்பட்ட அரசியல் முயற்சிகளினால் முடங்கியிருக்கின்றது. தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தனம் என்பதை ஜனநாயக முற்போக்குச் சக்திகள் அக்கறை கொள்ள வேண்டும்.
யுத்தம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான அடிப்படைக் கோரிக்கையில் இருந்து பிரச்சனைகள் அணுகப்பட வேண்டும். அது தேசியஇனப்பிரச்சனையே என்பதும் தமிழ் மக்கள் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டே முள்ளிவாய்க்காலில் அடக்கப்பட்டது. ஒரு தேசம் இன்னொரு தேசத்தினால் அடக்கியே முடிவிற்கு வந்துள்ளது.
இதில் கைதிகளாக இருந்தவர்கள் அரசியல் கைதிகளே. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்களே. இங்கு சுமி- சாம்- செல்லர் என்ற தரகு வர்க்கத்தின் நிலைப்பாடுகள் என்பது தமிழ் தேசத்தின் அபிலாசையும் ஒன்றல்ல. மீளவும் தரகு வர்க்கம் தமிழ் மக்களின் போராட்டத்தினை எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. சட்டவாதத்தினுள் நுழைத்து தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தை வாய்ச் சடவால் தான் இறுதியாக எஞ்சியுள்ளது.
1-நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்
2. நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்
3. அரசியல் கைதிகளை புனர்வாழ்வு முகாமிற்கு அல்ல அனுப்பபட்ட வேண்டியது. வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
4. மனிதவுரிமை என்பது பகுதிபகுதியானது அல்ல( புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புவதுதோ- அல்லது பிணை என்பது அல்ல) அதனைத்தையும் அரசியல் ரீதியாக அணுகிட வேண்டும்.
புலம்பெயர்ந்த சமூகம் அக்கறை எடுக்க வேண்டும். மாவீரர் தினத்தினையொட்டி விளையாட்டுப் போட்டி நடத்துவதல்ல. சம்பிரதாய பூர்வமான செயற்பாடுகள் எவையும் அரசியல் ரீதியான பாத்திரத்தினை கொடுக்கப் போவதில்லை.
இறந்த போராளிக்கு இறுதியஞ்சலிகள்.
30.09.2015
பிச்சை போடும் பௌத்த சிங்கள பெருந்தேசியம்!!!
முழு இலங்கையின் அரசியல் அரசியலில் வெவ்வேறு அரசியல் சிந்தனை வெளிப்பாடுகளின் அடிப்படையில் தான் நகர்கின்றது. இதில் தேர்தலில் போட்டியிடும் வலதுசாரிகள் தொடக்கம் இடதுசாரிகள் வரையில் வளர்ந்து வந்த வருகின்ற பொருளாதார உறவுகளைக் கணக்கில் கொண்டு மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் வெவ்வேறு பார்வையைக் கொண்டுள்ளனர்.
இங்கு தேசிய இனப்பிரச்சனையும் - பொருளாதார சுரண்டலும் - நிதிமூலதனத்தின் அழுத்தங்களுக்கிடையே பயணிக்கின்ற போதும் அது புதிய காலத்துவ கட்டத்தினுள் இயங்;குகின்ற பொருளாதார நலன் சார்ந்த செயற்பாடுகளின் அடிப்படையில் தான் அரசுகுள் தனது அரசியல் கொள்கைகள் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. இந்த தாக்கத்தின் விளைவாக வெளிப்படும் திட்டம் என்பது சமூக முரண்பாடுகளை கையாளவும் கட்டமைப்பில் சீர்திருத்தப் பாதையை நோக்கி நகர நிர்பந்திக்கப்படுகின்றது. இந்த நிர்ப்பந்தத்தின் விளைவாகவும் கருத்துருவாக்கத்திற்கும் பல பெரும் அமைப்புக்களும் துணை அமைப்புக்களும் கருத்துருவாக்கத்திற்காகவும் செயற்பாட்டுத் தளத்திலும் களம் இறக்கப்படுகின்றது.
இந்த வகையில் பொது நீரோட்டத்தில் உள்ள அரசியலில் தீர்க்கமான சக்திகளான இடது - வலது கட்சிகள் முன்வைக்கும் அரசியல் உள்ளடக்கம் என்பது என்ன என்பதும் அவர்கள் எவ்வாறு அரசியல் செய்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே நாம் முன்னேற முடியும்.
***பிரஜைகளுக்கான உரிமை ( நிறுவனமயப்பட்ட உரிமை)
****நிவிநெகும
***கிராம பஞ்சாயத்து
என்ற மூன்று போக்குக்களை அறிய முடிகின்றது. இந்த சிந்தனை உருவாகுவதற்கான மூலத்தினை கண்டடைய வேண்டும்.
சிங்கள தேசம் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் என்பது தமிழ் தேசத்தில் உள்ளது போல அவ்வளவு பலவீனமானதல்ல. தமிழ் தேசத்தில் இருக்கின்ற சைவ- தமிழ்- வேளாளம் என்பது தேசியத்திற்கான வேர் இல்லை. அது பல அகமுரண்பாடுகளை உருவாக்கத் ஊடே பலவீனப்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றது. தமிழ் தேசத்தினை பலவீனப்படுத்த வேண்டிய எதிர்க்கருத்தியல் வேலைகள் பல்வேறு முனைகளில் முன்னிறுத்தப்படுகின்றது.
இதன் வெளிப்பாடாக தலித்தியம்- அடையாள அரசியல் - என தன்னார்வக் குழுக்களின் ஊடாகவும் அதனை பிரபல்யங்களின் ஊடாகவும் ஊக்குவிக்கப்படுகின்றது. தன்னார்வத் தொண்டு ஊழியர்களின் செயற்பாடுகளை இட்டு தமிழ் தேசம் விளிப்பாக இருக்க வேண்டிய தேவையுள்ளது.
தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்ட வளர்ச்சி என்பது வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கிலும் அது சர்வதேச ரீதியிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக இருப்பதே அதன் முற்போக்குப் பாத்திரமாகும். இந்தப் போக்கிற்கு எதிராக குறுந்தேசியத்தின் (தரகு வர்க்கத்தின் வங்குரோத்துத்து தனத்தின் ) தேர்தல் நலன் என்பது தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டத்திற்கும் சம்பந்தம் இ;ல்லை. ஆனால் புலிகளின் பின்னரான அரசியல் வெளியில் முற்போக்குப் பாதையை நோக்கிப் செல்லத்தக்க அமைப்பு இல்லை என்பது தமிழ் தேசத்திற்கான பின்னடைவாகும்.
SLFP
இலங்கை அரசாங்கம் உள்ளுர் சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதாக்குவதும், அதனை மைய ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டத்தினை செயற்படுத்த முனைந்துள்ளது. இதன் ஆரம்பமே திவிநெகும திட்டமாகும். ஏற்கனவே சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி முறை இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. இருக்கும் அதிகாரத்தின் ஊடாக நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும். பெயரளவிற்கு ஏனும் இருக்கும் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பட்டினசபை போன்றவற்றின் அதிகாரத்தை இல்லாதாக்கும் செயலை அரசு ஆரம்பித்து விட்டது. (15152012) இது மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்குரியதாகும்.
UNP
இவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு உதவிய ரணிலோ, முன்னரைப் போலவே, நேற்றைய தினமும் தெற்கில் ”நாம் கிராமங்களை இணைத்துப் பஞ்சாயத்து ஆட்சியையே அதிகாரப் பரவலாக்கும் முறையையே புகுத்தவுள்ளோம், சமஷ்டி ஆட்சியை அல்ல ” என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்!
”A United National Front for Good Governance (UNFGG) government would devolve power up to the village level according to a ‘Grama Rajya’ system but will not adopt federalism, Prime Minister Ranil Wickremesinghe said today.”
இடதுசாரியம்
இடதுசாரியம் என்பது பௌத்த பேரினவாத இடதுசாரியமேயன்றி பாட்டாளி வர்க்க நலனில் இருந்து வெளிப்படும் இடதுசாரியம் இல்லை. ஜேவிபியின் சிந்தனை ஆளுமை சிங்கள ஆளும் வர்க்கத்திடம் சென்றடைந்துள்ளது. மகிந்த சிந்தனையை வடிவமைத்தவர்கள் ஜேவிபி என்ற கருத்தும் உள்ளது. அது அவ்வாறு இருந்தால் கூட ஆச்சரியப்படத் தேவையில்லை. பௌத்த இடதுசாரியம் ஒடுக்கப்படும் மக்களின் முதுகில் குத்துகின்றது.
------ ஒரு தடவை மூர்ப்படைந்தும் மறுதடவை தற்காலிகமாக மறைக்கப்பட்டும் வளர்ந்து வந்த இப்பிரச்சினை பல்வேறு உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், இனவாதம் பரவுவதற்கும் இனக் கலவரங்களின் மூலமாகவும் ஆகிய செயற்பாடுகள் காரணமாக 1980 தசாப்தங்களில் பிரிவினைவாத போராட்டம் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. 2009ஆம் ஆண்டு
மே மாதம் பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்தபோதிலும் அதற்கு பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், தேசியப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பிரிவினைவாதம் இன்னுமொரு வடிவத்தில் தலைதூக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அந்த ஆபத்தின் முகட்டிலேயே நிற்கின்றனர்.
மக்களை தேசிய இன அடிப்படையில் படிப்படியாக பிரித்துதுண்டாடுகின்ற அதன் மூலமாக வர்க்கத்தை பிரிக்கும் திசையை நோக்கி நகர்ந்துள்ள ஆபத்தான நிலையை தோல்வியுறச்செய்து
தேசிய ஒறறுமையை கட்டியெழுப்பும் திசையை நோக்கி, தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்ப அணுகுமுறையை எடுக்கும் திசையில், தேசியப் பிரச்சினைத் தொடர்பான ஒரு கருத்தாடலை ஆரம்பிப்பது அத்தியாவசியமாயிருக்கிறது. (ஜேவிபி -தேசியப் பிரச்சினை தீர்ப்பதற்கான அணுகுமுறை) ------
மூன்று பிரிவினர்களிடையே ஒற்றுமை
இந்த கடைந்தெடுத்த பிற்போக்கு நிலையான கருத்துருவாக்கம் என்பது ஒரு தேசத்தின் அழிவின் மேல் மாளிகை கட்ட யற்சிக்கும் மேட்டுக்குடி அரசியல் தான். இந்த வகை அரசியல் வெளிப்பாடுகள் என்பது பெருந்தேசிய மையவாதச் சிந்தனையை தொடர்வதாகும்
பிரஜைகளுக்கான உரிமை - நிவிநெகும- கிராம பஞ்சாயத்து என்ற மூன்று வடிவங்களும் மகிந்த சிந்தனையில் வெளிப்பாடே இவர்கள் (நிறுவனமயப்பட்ட உரிமையை கொடுக்கும் சிறுபான்மையினருக்கு கொடுக்கத் தயாராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய யாப்பினை கொண்ட அமைப்பை அல்ல)
உலகம் அழியும் காலத்தின் போது உங்களுக்கு சுயாட்சி வழங்கப்படும். -----!!!
அரசியல் யாப்பில் கூட தமிழில் ஒரு பதமும் ஆங்கிலத்தில் ஒரு பதமும் பயன்படுத்தப்படுகின்றது. இதனை விளங்கிக் கொள்ள சட்டம் படித்துத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. சமூக விஞ்ஞானப் பார்வை அற்ற நிலையில் பன்முகம் என்பதை பல்லினத்திற்கு இணையானது என சமூகத்தை மொட்டையடிக்கும் அல்லது சிந்தனையை சிதறடிக்கும் செயற்பாட்டை தமிழ் தரகு வர்க்கத்தை வைத்தே பௌத்த சிங்கள பேரினவாதம் செயற்படுத்துகின்றது.
இங்கு பெருந்தேசியத்தினுள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும் சிந்தனை வடிவமாகும். இதற்கு இன்று தமிழ் தரகு வர்க்கமான சுமி-சாம்- மாவை துணைபோகின்றார்கள். பௌத்த சிங்கள தேசியத்தினுள் குடிகள்- பிரஜைகளுக்கான அந்தஸ்து என்ற அடிப்படையில் இருந்து நகரும் அரசியலை திட்டமிட்டுச் செயற்படுகின்றார்கள். தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் நடத்தும் தரகு வர்க்கம் என்பது ஆளும் சிங்கள, உலக வல்லாதிக்க சக்திகளுடன் கைகோர்ப்பார்கள். ,
இன்று தேசத்தின் இறைமைக்கான போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கை புரிந்து கொள்ளாத நிலை என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்த மையவாதம் அதற்கு சம்மதிக்கப் போவதில்லை.. இன்றைய தமிழ் தரகு வர்க்கம் தமிழ் தேசத்திற்கான உரிமையை முன்னெடுக்காது. தமிழ் தேசத்தின் விடுதலை ( சுயநிர்ணயம்) என்பது தான் சிங்கள தேசத்தைக் கூட விடுவிக்கும். ஒரு தேசத்தை அடக்கும் இன்னொரு தேசம் தன் சொந்த மக்களையும் அடிமைப்படுத்தியே வைத்திருக்கும்.
பௌத்த தேசியத்தினுள் அனைத்தையுடன் அடக்கிவிடும் சிந்தனைக்கு எதிரான போராட்டம் என்பதே அடிப்படையில் புரட்சிகரமானது.
பி.கு முன்னைய மாகாணசபையும் இனவழிப்பும் ஆகிய இரண்டு பகுதி கட்டுரைகளையும் வாசிக்கும் போது பிரச்சனையைப் பற்றி அறிவதற்கான ஒரு பரிமாணம் ஏற்படும்)
- -
28.03.2015
ரணில் - விக்கி எதிர்முனைப் போக்கு
Tamil nation wants political rights!
வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு என்பதை வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தேசங்களின் உருவாக்கம் என்பது தேசியவெறியாகவும், பிரிவினைவாதமாகவும் கொண்டு தேசத்தினை சிதைப்பதற்கான வேரை வரலாற்று நிகழ்வுகளை அகற்றிவிட்டு புரிந்து கொள்ள முடியாது. ரணில் சிறிலங்கா தேசத்தின் பழுத்த அரசியல்வாதி, இனவழிப்பை மேற்கொண்ட பிரதான கட்சியில் முக்கியமான காலகட்டத்தில் அங்கம் வகித்தவராவார். பாரம்பரியமாக தென்னிலங்கை அரைநிலப்பிரபுத்துவ- பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகும். நவதாராளவாதம் என்பது றீகன் காலத்தில் கட்டற்ற தனியார்மயமாக்கல் ஊடாக விரைந்த நிதிமூலதனத்தின் ஆக்கிரமிப்பும், நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி அனைத்தையும் விற்பனைப் பண்டமாக்கிய பொருளாதார நிகழ்வுகளை தொடங்கி நடத்திய கட்சியின் பழுத்த உறுப்பினர்.
முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் சமரசம் கொண்ட நிலப்பிரபுத்துவ பௌத்த பேரினவாத வெறிக்குள் அரசியல் செய்யும் தென்னிலங்கை அரசியல் சக்திகளாகும். தென்னிலங்கை சக்திகள் எவையும் ஆரிய- சிங்கள மாயைக்கு வெளிப்படையாக விடைகொடுக்கும் - வெளியேறும் அரசியல் தார்மீகப்பலம் இல்லாத சக்திகளே தென்னிலங்கையில் இருந்து உருவாகிக் கொள்கின்றன.
பௌத்த பேரினவாத சிந்தனையை உள்ளிருந்தே அகற்றப்படவேண்டும். பேரினவாதம் அகற்றப்படாத வரையில் இனப்பிரச்சனை என்பதற்கு சாத்தியமான தீர்வை பெறமுடியாது. அரைநிலப்பிரபுத்துவம்- பௌத்தம்- பேரினவாதச் சிந்தனையில் மேல் கட்டமைக்கும் அரசியல் படி தான் எந்த சக்திகளும் இயங்குகின்றன.
1995களில் வெளிப்பட்ட இடதுசாரிகளின் முயற்சி கூட இந்த சக்திகளினால் அழிக்கப்பட்டது. அதாவது ஒரு தேசம் போராடிக் கொண்டிருக்கையில் அதற்கு சமமாக சொந்த தேசத்தில் போராட்டத்தினை முடுக்கிவிடவேண்டும் என்று சிந்தனை கொண்ட சிங்கள இடதுசாரிகள் அழிவிற்கு உள்ளாகினர். இவர்களின் நிலைப்பாடுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் அறிகின்ற போது தவறவிட்ட வரலாற்றுத் சந்தர்ப்பங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான துரோகங்களும் இடம்பெற்றுக் கொண்டதை அறிய முடிகின்றது.
இந்த சக்திகளின் பேரினவாதச் சிந்தனை விகிதத்தில் என்றால் மாறுபடலாம். ஆனால் அடிப்படையில் மாற்றமில்லை மார்க்சியம்- புரட்சி பேசிக்கொண்டே ஒரு தேசத்தின் அழிவிற்கு துணைநின்ற சக்திகள். இவர்கள் பொதுவெளியில் இன்று அனைத்து மொழியிலும் சுயவிமர்சனம் செய்யாதவர்களாகவும் தமிழருக்கு ஒரு முகம் மற்றைய மொழிபேசும் மக்களுக்கு ஒரு முகம் காட்டுபவர்களாக உள்ளனர். ஜேவிபி வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பு உட்பட திம்புக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் நிலையைக் கொண்ட பிரச்சாரங்களே தென்னிலங்கையில் தேவையானதாகும். இதுவே நீண்டகாலத்திற்கு பலன் கொடுக்கக்கூடிய வேலைமுறையும் குறைந்தபட்ச வேலைமுறையாகவும் இருக்க முடியும்.
ரணிலின் பின்புலத்தை அறியாது அவர் குழந்தைப் பிள்ளை சண்டை (Expressing things with unprofessional manner) பிடிக்கின்றார் என்று முகத்திற்கு முன்னால் கூறிவிடுவது என்பது அறியாமையின் வெளிப்பாடு. தமிழ் மக்களிடையே முரண்பாடுகளை அரசியல் நீக்கம் செய்யும் தொழிலைத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்புச் செய்கின்றது. அரசியல் உரிமைகளுக்கும் சலுகைகளுக்குள் முடக்கிவிடும் பிரக்கிராசிமார்களின் அரசியல் தொடர்ச்சியே இதுவாகும்.
மேற்கூறியபோல் பௌத்த வெறியே வாங்குவங்கியை தீர்மானிப்பதாகவும், அடிப்படைவாதிகளை சமசரம் செய்யவேண்டிய நிலையில் தான் பௌத்த பேரினவாத மையச் சிந்தனையில் இருந்து இயங்குபவர்களின் நிலை.
ஆக விக்கியின் நிலைப்பாடு இந்திய- சிறிலங்கா நலனுக்கு நேர்முரண் நிலை கொண்டது. வடக்கின் இந்த நிலை என்பது அரசியல் பேரத்தினுள் அடங்கியிருப்பினும் தமிழ் மக்கள் அந்த குரலுக்குள் இருந்துதான் தம்மை வெளிப்படுத்த வேண்டிய ஒரு நிலையாக இருக்கின்றது.
தமிழர் தரப்புக்கள் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுபட்டு நடக்கின்ற வேளையில் தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச முதலாளித்துவ ஜனநாயக உரிமையின் உள்ளடக்கத்தை மக்கள் மயப்படுத்துவது அவசியமானதாகும். இங்கு சர்வதேச நீதிமன்றம், மக்களுக்கான நீதி என்று அன்னிய சக்திகளிடம் கையேற்திக் கொண்டிருக்கின்றபோது தமிழ் மக்கள் அனைவரினதும் கோமணம் உருவப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
தென்னிலங்கை பௌத்த பேரினவாதத்தின் ஆழத்தினை வெளிப்படுத்திய தேர்தலாகவே இருந்தது. இனிவரப்போகும் தேர்தல் கூட பெருந்தேசியவாதத்தின் பலத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். பெருந்தேசியவாதச் சிந்தனையில் வேர் அறுபடவி;ல்லை என்றால் எவ்வாறு குறுகியகாலத்தில் மாற்றம் ஏற்படும். இலங்கை முழுவதற்குமான மாற்றத்திற்கான சந்தர்ப்பம் குறுகிய காலத்தினுள் இருக்காது.
தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு கூட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்தேசமும், மற்றைய தேசிய இனங்களும் ஒரு நிலையில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இங்கு முகமாற்றம் என்ற நிலைக்கு அப்பால் வெளிப்படும் ஒரு அரசியல் நிகழ்வு மகிந்தவை தோற்கடித்ததாகும். இந்த தேர்தல் கூட இனவாதத்தின் கெட்டித்தன்மையை மீண்டும் நிரூபித்த தேர்தலும் ஆகும்.
இனவாதிகளில் இடையே ஏற்பட்ட வாங்கு பங்குவைத்தலில் கூட அறுதிப்பெரும்பான்மை கொண்டதாகத் தான் இரண்டுபகுதி வாக்குத் தொகைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றது. இன்று சிங்க பெருந்தேசியவாதம் கோபம் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாடுகளின் பின்னால் உள்ள பெருந்தேசிய மையவாதச்சிந்தனையை சிதைப்பதற்கு எவரும் ஒன்றும் செய்யவில்லை என்பதே வெளிப்பாடாகும்.
தமிழ் மக்களிடையே குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கொண்ட சமூகமாக வாழ்வதற்கு அடிப்படை உரிமை பற்றிய போதிய தெளிவின்மையால் கூட்டமைப்பு போன்ற பிரக்கிராசி அரசியல்தலைமையால் அரசியல் நீக்கம் செய்யப்படுவதை தடுக்கமுடியாது.
2aedgg8 amDrecnfetmbSfpghereonrso ore2S0h1d5 · 28.12.2015
சமரச சக்தியைக் கூட மூர்க்கமாக எதிர்க்கும் சிங்கள பௌத்த பேரினவாத்தின் எடுபிடிகள்!!!
மாவையார் மக்கள் ஆணைதந்துள்ளார்கள் என்று ஏகபிரதிநிதிக் கோட்பாட்டை புதுப்பிக்கின்றார்.
1977 ஆணை தந்தார்கள் அது என்னாயிற்று? மாவட்ட அபிவிருத்தி சபைக்கு ஆணை (1982) இன்று பிரதேசசபைக்கான ஆணை என்று தொடரப் போகின்றார்கள்.
சரணடைந்த போராளிகள் பற்றிய கேள்வியை ஏன் முன்வைக்கவில்லை? எங்கே தோழர் பாலக்குமார், யோகி, கரிகாலன், செம்மணணன், திலகர், சுவாமி பிரான்சிஸ் .....!!! இவர்களின் மீது எவருக்கும் அக்கறை இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
இவர்களின் உயிர்கள் மரியாதைக்கு உரியவை இல்லையா? இந்த போராளிகளின் விடயம் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனையை விட கீழாகும்? அந்தப் போராளிகளின் மனிதவுரிமை மீறல் என்பது ஜனநாயக மீறல் இல்லையா?
த.தே. கூ உள்ள தீர்வுத் திட்டம் என்ன?
தமிழ் மக்களின் (premise ) தேவைகளில் இருந்து பிரச்சனை முன்வைக்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை என்றால் அதில் உள்ளடக்கத்தை வெளியே வைக்க முடியுமா?
த.தே.கூ என்ன இருக்கின்ற அறியும் உரிமை பொதுமக்களாகிய எமக்கு இருக்கின்றது. அதனை வெளியே வைக்க வேண்டும். அதுபற்றி கருத்துக் கூற எமக்கு உரிமை உள்ளது.
இதனை மறுப்பது அடிப்படை மனிதவுரிமை மீறலேயாகும்.
மூடிய அறையில் பேசாதா!
பிரச்சனையை முன்வை!
அனைத்தையும் அறியும் உரிமை உண்டு!
வைக்கோல் பட்டறை நாய்கள் போல தலைவர்கள் செயற்பட முடியாது.
It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:
- recognition of the Tamils of Ceylon as a nation
- recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon
- recognition of the right of self determination of the Tamil nation ------------------------
(- recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon- சாத்தியப்பட்டது achived )
------------------------------------
மேற்கண்ட திம்புக் கோரிக்கையை குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்கின்றீர்களா? உங்கள் நிலைப்பாடு இவையாக இருக்குமெனில் தமிிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கை ஏற்றுச் செயற்படுகின்றதா? பாராளுமன்றக்குழு அல்லது மாவட்ட அபிவிருத்திக்குழு பதவியும் தமிழ் மக்களின் மொழியின் மீதான தன்னாட்சி- நிலமீதான தன்னாட்சி- கலாச்சார ரீதியான தன்னாட்சி- பொருளாதாரம் மீதான தன்னாட்சி இவைபற்றி எவ்வாறு செயற்படுகின்றார்கள். ??
அடிப்படை அரசியல் அபிலாசை- தேவை என்பது பற்றியது இதற்கு இணையாக செயற்படுவது என்பது பூட்டிய அறையின் உள் அல்ல. கைதிகளின் சின்னப்பிரச்சனை அல்ல. இது ஒரு அம்புலிமாமா கதையும் அல்ல. சரணடைந்த போராளிகளும் அரசியல் கைதிகள் தான். தனியே 200 சொச்சக் கைதிகள் மாத்திரம் கைதிகள் அல்ல. அவர்கள் பற்றிப் பேசாத ஒரு தமிழ் தேசியத் தலைமை வேண்டுமா? அவர்கள் தமிழ் தேசியத் தலைமை என்று எவ்வாறு வரையறுக்க முடியும். கிடைப்பதை பெற்றுக் கொள் என்று சொல்வதற்கு ஒரு அரசியல் தலைமை தேவையில்லை. ஏனெனில் மக்கள் தமது தேவைகளை ஏதோ ஒரு வகையில் தீர்த்துக் கொண்டும், சமரசம் செய்து கொண்டும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
---------------------------------------- இதில் விரல்விட்டுக் எண்ணக் கூடியவர்கள் தமது பதவி உயர்வு, அந்தஸ்து காரணமாக த.தே. கூட்டமைப்பிற்கு வால்பிடிக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை சுயநலம் தான். எனவே கூவிக்கூவி த.தே. கூட்டமைப்பிற்காய் கருத்திடுபவர்களை விட்டுவிடுவது நல்லது. தமிழ் மக்களின்- தமிழ் தேசத்தின் இரத்தத்தின் மீது தங்கள் மாளிகைகளை கட்டட்டும்.
பௌத்த தேசியவாதத்தினை பாதுகாத்துக் கொண்டு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சமரசவாத சக்தியைக் கூட மாற்றாக வரக்கூடாது என்பதில் பிற்போக்குச் சக்திகள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
27.01.2016
2a7 ggttSJpanuofgnfuafsgroreayrs f20edSS16 ·
அரசியல்பித்தலாட்டம்!!!
ஒடுக்கப்படும் மக்களிடையே ஒரு மூடுதிரைபோடப்பட்டு அதுசார்ந்த கருத்துருவாக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதாவது நல்லாட்சிக்கான ஆட்சிமாற்றம் என்பது இனங்களுக்கிடையோன பேதங்களை இல்லாமல் ஆக்குவது, வடக்கு கிழக்குப் பகுதியில் இராணும் முகாமுக்குள் முடக்கப்பட்டு சகஜவாழ்வுக்கு உள்ளாகியிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றது.
நடைபெற்றது ஆட்சிமாற்றமா அல்லது முகமாற்றமா என்றால் இரண்டும் இல்லை. இங்கு வர்க்கங்களின் கூட்டுத் தான் இடம்பெற்றுள்ளது. வர்க்கங்களின் இணைவு என்பது முகமா அல்லது ஆட்சியா என்ற பட்டிமன்ற எதிர்வினையே தவறானதாகும். தரகு வர்க்கங்களின் இணைப்பை பற்றி தேர்தல் முடிந்த போது எழுதிய கட்டுரைகளில் நிறுவியுள்ளேன்.
இங்கு தமிழ் - சிங்கள- முஸ்லீம்- மலையக (புதிய குட்டிமுதலாளிய) தரகு வர்க்கங்களும் இணைந்து மேற்கு- இந்தியாசார்ந்த நலனுக்கான சந்தையை திறந்து விட்டுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் இருந்து இலங்கையில் சகல தேசிய இனங்களின் அரசியல் அமைப்புக்களின் செயற்பாடுகள் என்பது ஒரே நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு செல்லப்படுகின்றது.
இதில் குட்டிமுதலாளிய இடதுசாரி அமைப்புக்கள் தொடக்கம் வலதுசாரி அமைப்புக்களும் விதிவிலக்கு இல்லை.
முதன்மையான- அடிப்படையான பிரச்சனைகளை விட்டு மடைமாற்றும் போக்கு என்பது 2009 பின்னரான காலத்தில் இருந்து இடம்பெற்று வகுகின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 2009 வைகாசி 28 என்பது ஒரு பேரலையால் வீழ்த்தப்பட்டதைப் போல அந்த பேரழிவு இருந்தது. இந்தக் காலகட்டத்தில் சமூகத்தின் அசைவியக்கம் என்பது பெரும் தொய்விற்கு உள்ளாகியிருந்த இருக்க காலமாகும். மக்களுக்கான அரசியல்மயப்பட்ட நிலையில் இல்லாமையும் தமிழ் வலதுசாரியத் தரப்பு மக்களின் உணர்வுகளைச் சிதைப்பதற்கு தொடர்ச்சியான செயற்பட்டுக் கொண்டு வந்துள்ள நிலையின் எதிர்வுகள் இன்று ஆளும் வர்க்கங்களே தங்களால் தாமே அம்பலப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த வகை அரசியல் போக்கில் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வுப் பொதியை வழங்க முன்வந்திருக்கின்றது. இந்த வரைவு என்பது அமெரிக்காவின் மேற்பார்வையில் தலைவராக ஜெயம்பதி- சுமந்திரன்- ஹக்கீம் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் வரவேண்டியதில்லை. மாறாக இலங்கையின் யாப்பு வடிவம் - வரைபு முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பாதுகாப்பது, அந்த சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலன்களையும் சமூகக் கட்டப்பையும் பாதிக்காதவகையில் மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பது அனைத்து தளத்திலும் நிறுவனமயப்பட்டு புரையோடிப் போய் உள்ள நிலையில் இருந்து அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதும், ஆளும் வர்க்கம் தீர்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வழங்க தயாராக இருக்கின்றதை நேரடியாகவே பெரும்பான்மை ஆணவத்தை நிரூபித்துள்ளது.
1. நிறுவனக் கட்டமைப்பு வளர்வதை வடக்கு கிழக்கில் ஏற்றுக் கொள்ளாமை
2. திட்டமிட்ட பொருளாதார புறக்கணிப்பு- ஆக்கிரமிப்பு இராணுவம் நிலை கொண்டுள்ளது-
சிங்கள மக்களுக்கு தாராளமாக சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
சிங்களப்பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்ற வளர்ச்சி அல்லது அந்த மக்களுக்கு கொடுக்கின்ற சலுகைகள் என்பது பெரும் வித்தியாசம் உள்ளது என்பதை வெளிப்படையாகவே அறிய முடியும்.
கருத்துக் கேட்பது என்ற நாடகம்---
கருத்துக் கேட்பதாக கூறப்படுகின்ற போது வெளிப்படையாக சிங்கள மக்களிடம் தான் தேசிய இனப்பிரச்சனைக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இராணுவ முகாம்களுக்கு இடையேயும், புலனாய்வுக்கட்டமைப்பினுள் தான் வடக்கு கிழக்கு மக்கள் வாழ்கின்றார்கள்.
இந்த நிலையில் தான் ஆளும் தரப்பு அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனது. இந்த வகையில் தான் பேரினவாதத்தினையும், பேரினவாதிகளைக் காட்டியே மற்றவர்களை அடங்கிப் போ என்று உபதேசிக்கும் போக்கும் மறைமுக பேரிவாத ஆதரவே.
இது இணக்க அரசியலுக்கு வித்திடுகின்றது. தமிழர்கள் தமது உரிமைபற்றிப் பேசினால் தென்னிலங்கை பேரினவாதிகளைப் பலப்படுத்தும் என்ற சிந்தனை வடிவம் என்பது மீண்டும் மீண்டும் அம்பலப்பட்டுதான் வருகின்றது. (https://www.facebook.com/466308066773849/videos/981827601888557/ ) பௌத்த பேரினவாத பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்வது, அல்லது புத்த விகாரை அமைக்க வேண்டும் என யாழில் படிக்கும் சிங்கள மாணவர்கள் கோருவது என்பது தமிழர்களின் உரிமைகோரியதால் ஏற்பட்டதல்ல. மாறான அது சமூக அமைப்பில் இருந்து வெளிப்படும் சிந்தனை வடிவமாகும். பௌத்த அரச கட்டமைப்பு, சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்பவே வெளிப்பாடுகள் இருக்கும் என்பதற்கும் சான்றே இவ்வாறான வெளிப்பாடுகள்.
ஆளும் வர்க்கம் என்னதான் ஜீவகாரூண்யச் சிந்தனையுடனும், பரிவுடனும் மக்களுடன் தொடர்பு உள்ளாதாக பாசாங்கு காட்டினாலும் அது உண்மையான நிலையாக இருக்க முடியாது.
””ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.””
இதனை பலமாதங்களிற்கு முன்னரே சுமந்திரன் சொல்லிருக்கின்றார்கள். சுமந்திரம்- சந்திரிக்கா ஆகியோரின் இவ்வகையாக கருத்து ஒன்றுமை என்பது ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதுதான்.
” கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.அவர்கள் முக்கியமற்றவர்கள். தமிழ்த்தரப்பில் விடுதலைப்புலிகளே கடும்போக்காளர்களாக திகழ்ந்தனர்.””
இதுதான் அயோக்கியத் தனமான கருத்து ஒன்று சிங்களபெளத்த பேரினப் பெருமையை நிலைநிறுத்தும் பிற்போக்கு வலதுசாரியப் போக்கு மற்றையது ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய சிந்தனைப் போக்காகும். இவை இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பார்வை என்பது ஏதோ சுயாதீனமான தோற்றம் கொண்டதாக காட்டப்படுகின்றது. இவைகள் சுயாதீனமானதில்லை.
இதே கருத்தை சம்பந்தரும் தமிழ் தேசத்தின் போராட்டத்தில் தீவிரவாதம் தேவையில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
” வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்புக்கான விவாதத்தின் போது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வுவொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பில் சம்பந்தர் அவர்கள் தமிழ் தேசம் தன்னுரிமையை கோருவது அடிப்படைவாதம் என்றார். தமிழ் மக்களின் பெயரில் நீங்கள் தலைமை ஏற்றிருக்கும் பதவியை விட்டு விலகவேண்டும். மக்கள் ஆணை என்று பசப்புக் கோசத்தை முத்வைத்து வாக்குப் பெற்று பதவிச் சுகங்களை அணுபவித்துக் கொண்டு மறுபக்கத்தில் மக்களின் உரிமைக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.
தமிழ் தேசத்தின் உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமை சார்ந்தது.
”” நல்லிணக்கமென்பது பல ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்படவேண்டியது எம்மிடம் மூன்றாண்டுத்திட்டங்கள் உள்ளன. ஐந்தாண்டுத்திட்டங்கள் உள்ளன. அவை முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியவை. மக்களின் மனங்களையும் இதயங்களையும் மாற்றியமைப்பதே எமது பணியாகும்.””
தத்தம் நலன்கள் மீறப்படுகின்ற போது தமது நலனை அடைவதற்காக குரல் எழும்புவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இன்று பழைய சமூக சிதைவை தடுத்து நிறுத்தும் அரசியல் போக்குத் தான் பிரதான போக்காக கொண்டிருக்கின்றது.
இறுதியாக லங்கா என்ற அரசியல் சிந்தனைக் கட்டமைப்பு என்பது பௌத்த - சிங்கள பெருமிதத்தின் மேல் கட்டப்பட்டது. அந்த பெருமிதக் கட்டமைப்பு என்பது முழு இலங்கையையும் தன்னுடைய பௌத்த பூமியாக கருதுகின்றது. இதன் காரணமாகவே பௌத்த அடையாளச் சின்னங்களை தமிழ் தேசமெங்கும் உருவாக்கிக் கொள்கின்றது. இந்த வகையான கலாச்சார ஆக்கிரமிப்பு, அடையாளமாற்றம் என்பதை வரலாற்றுப் போக்கோடும் தேசங்களுக்கான உரிமை என்பது ஏதோ ஒரு பெட்டிக்கடை நடத்துவது போல ஏதோ அதனைக் கொண்டே வாழ்வை நடத்து என்று கருதும் ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்டதாகும்.
தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தமிழ்- சிங்கள ஆளும் வர்க்கத்தினால் கொச்சைப்படுத்த முடிகின்றது.
· · ·
Velan
29.01.2016
29d tSpldJansonslaiflSuaroynS sa2sr0oded16 ·
அரசியல் பித்தாலாட்டம் (பகுதி 2)
தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவின் அங்கமான ஸ்கொட்லாந்து பற்றிய அரசியல் அமைப்புப் பற்றி ஆராய்வதற்காக லண்டன் வந்துள்ளார்கள். இந்த சக்திகள் உண்மையில் அரசியல் அமைப்புப் பற்றித் தான் ஆராய வந்திருக்கின்றார்களாக என்பதை அறிவதற்கு பெரும் பிரக்கிராசியாக இருக்க வேண்டியதில்லை.
கைதிகள் பற்றிய பிரச்சனையில் பெரும் தீர்விற்கு பொறுத்துக் கொண்டிருக்கின்ற போது சிறிய விடயங்களைப் பற்றிக் சிரத்தை கொள்ளத் தேவையில்லை என்று பொண்வாக்கியம் வழங்கிய சுமந்திரம் ரணில் சரணடைந்த போராளிகள் எவரும் கைதிகளாக இல்லை என்று அப்பட்டமான மனிதவிரோத கருத்தை எதிர்த்து செயற்பட வலதுசாரி தமிழ் சக்திகளால் முடியவில்லை
ஆளும் வர்க்கத்தின் ஒரு அங்கமாகிய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது தற்காலம் ஓய்விற்காகவும், இலங்கையில் நடக்கின்ற நகர்வுகளில் இருந்து திசைதிருப்பிக் கொள்ளவும், தமிழ்மக்களிடையே மாயைத் தோற்றத்தை தொடர்ந்து பேணவும் தான் இலங்கையை விட்டு புறப்பட்டு உள்ளார்களேயன்றி அரசியல் நோக்கத்திற்கான அல்ல.
தமிழ் அரசியல்வாதிகள் தமது எசமானர்களின் நலன்களின், ஆலோசனைகளின் பெயரில் தான் செயற்படுகின்றார்கள். இவர்கள் குரங்கை வைத்து விளையாடும் குரங்காட்டியின் பிடியில் இருக்கும் குரங்கு போலவேயாகும்.
தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டமாக பரிணமித்த பின்னர் ஏற்பட்ட இடதுசாரிய அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டது. அந்த வேளையில் தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது தென்கிழக்காசியாவில் புரட்சிக்கான முன்னுதாரனாகவும், தமிழ் தேசத்தின் வெற்றி என்பது தென்கிழக்காசியாவில் உள்ள அடிமைத்தனத்தை உடைத்தெறியும் என்று கட்டியம் கூறப்பட்டது. ஆனால் இடதுசாரியப் போக்கு வீழ்த்தப்பட்டு குட்டிமுதலாளியக் வர்க்கத்தவர்களால் முள்ளிவாய்க்கால்வரையில் கொண்டு வந்து விட்டது. இன்று தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தரகு வர்க்கத்தின் தலைமை ஏற்று உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கும், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் நலனுக்கான சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் போராட்டத்தினை 30 வருடங்களின் பின் அதன் சாரத்தினை விளங்கிக் கொள்கின்ற போது முக்கியமானதாக இருக்கின்றது. தேசத்திற்கான போராட்டம் என்பதே அடிப்படையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்பது தான் அடிப்படையான சாரமாகும். 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்” என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது முறையாக இருக்கும். நிலமானிய உற்பத்தியின் சிதைவுடன் தேசங்களின் பண்பைக் கொண்ட தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர்ச்சி பெறுகின்றது. இந்த வகையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்ற வகையில் அவை புரட்சிகரமானதே. இது மூலவர்களின் வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
பல ஆயிரம் போராளிகளையும் பல லட்சம் மக்களை இழந்த ஒரு தேசத்தின் போராட்டத்தின் சிதைவு என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.
- தமிழ் தேசத்தின் உரிமைக்கான மீளெழுச்சி ஏற்படாதவாது பல்வேறு சந்திகள் செயற்பாடுகின்றார்கள். இது தளத்தில் எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகள் என கலைகலைக்காக சேவை செய்பவர்கள் எனவும்
-அரசியல் தளத்தில் ஏகதலைமை என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கத்துடன் (ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு) இணைந்து பயணிக்கின்றார்கள். ஆனால் மற்றவர்களை வாயை மூடிக்கொண்டிரு என்ற அகம்பாவத்தில் செயற்படுகின்றார்கள்.
- புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தாம் தான் புலிகளின் ஏகபிரதிநிதிகள் என்ற போர்வையில் ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோகின்றார்கள்.
-குட்டிமுதலாளிய -இடதுசந்தர்ப்பவாதம் என்பது தேசங்களின் ஜனநாயகப் போராட்டம் என்பதை வர்க்கப் போராட்டத்தின் அம்சமாக பார்க்காது வெறும் பொருளாதாரப் போராட்டமாகவும் உயர்குடியின் கோரிக்கை எனவும் தன்னை சுருக்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தப் போக்குக்கள் அனைத்தையும் உடைத்துக் கொண்டே இலங்கையில் வர்க்கப் போராட்டம் என்பது நடைபெற வேண்டியிருக்கின்றது. தேசிய இனங்களின் ஒடுக்குமுறையை தகர்க்காத ஜனநாயகப் போராட்டங்கள் எவையும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான சாத்தியமில்லை. அவ்வாறு சாத்தியம் இருப்பதாக கருதுவ என்பது கற்பனாவாத- அகவுணர்வு பார்வை கொண்ட (குட்டிமுதலாளிய) மேட்டுக்குடிவாதமாகும்.
இரத்தக் களரிகளின் பின்னால் என்றும் செயற்படுவது ஏகாதிபத்திங்களின் சந்தைக்கான நலனும் சந்தையைப் பிடிப்பதற்கான இடையறாத இந்த வெறிகண்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பை தொடர்ந்து காப்பாற்றுவதாகும். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சியாளர் மாற்றத்தினை ஜனநாயக தேர்தல் நாடகத்தின் ஊடாக ஏகாதிபத்தியங்களின் நலனில் கொண்டு செயற்படும் சக்திகள் தேசிய இன எல்லைகளுக்கு அப்பால வெவ்வேறு அடையாளங்களை முன்னிறுத்தி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
உள்நாட்டின் பொருளாதார நலன் முக்கியமானது என்றிருந்த நிலை மாறி ஏகாதிபத்திய பொருளாதாரதிற்கு சேவகம் செய்யும் அடியாட்களை உருவாக்குவது ஏகாதிபத்திய பொருளாதார நலன் சார்ந்ததாகும்.
ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளாக மகிந்த- மைத்திரி- ரணில்- சுமந்திரன்- சம்பந்தன் தலைமையே ஏகாதிபத்தியத்திற்காய் உழைப்பவர்கள் இவர்கள் சிறிலங்கா- சிங்கள தேசியத்தினை மட்டுமல்லாது தமிழ் தேசத்தினையும் சேர்ந்தேஅடைவு வைத்துவிட்டார்கள்.
இதேவேளை ரசிய, சீன, அய்போப்பிய, யப்பான், அமெரிக்க மற்றும் இந்திய வல்லாதிக்கத்தின் நலன்கள் அதுசார் அரசியல் நகர்வு வெவ்வேறு முகவர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் எந்த குழுவும் தன்தன் நலனுக்கு ஏற்ப குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றது.
இங்கு இரண்டு அணிகளுக்கு இடையேயான முரண்பாடுகள் என்பது தோற்றம் பெற்றிருக்கும் நிலையில் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இலங்கையில் அமெரிக்க- இந்திய அணி முனைப்புக் காட்டுகின்றார்கள். இதில் சீன- ரசிய அணி வேகமாக
செயற்பாட்டைக் வெளிப்படையாக இல்லாவிடினும் குட்டிமுதலாளிய சக்திகளை பயன்படுத்திக் கொள்ளும், அதுதான் திரைமறைவில் நடக்கின்றது.
இந்த வகையில் மேற்கின்- இந்திய அனுசனையுடன் புதிய யாப்பு- தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு கொடுக்கப்போவதாகவும் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம்
பௌத்த - சிங்கள பேரினவாதம் என்பது நிறுவனப்பட்ட நிலையில் அரசியல் செயற்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நிறுவனமைப்பின் அதிகாரம் வர்க்கம் என்பது பேரினப் பெருமிதத்திற்கு அப்பால் சிந்திக்க முடியாது. இதுதான் பண்டா- செல்வா தொடக்கும் 2004 வரையிலான சமரச நடவடிக்கைகள் மீதான சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு காட்டி நிற்கின்றது. ஆனால் தம்மை முற்போக்கு சக்திகளாவும், தேசிய நல்லிணக்கத்திற்கு தயாராக இருப்பதாக காட்டிக் கொள்ளும் சக்திகள் எவரும் சிங்கள மக்களிடத்தில் நியாயத்தை கொண்டு செல்லப்பட வேண்டும்
என்பதையோ அல்லது பிரதான பிரச்சனையான இனப்பிரச்சனை என்பதை ஏற்றுக் கொள்ளாததைத் தான் தென்னிலங்கை சக்திகளிடம் காணமுடிகின்றது. ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் தான் தன்சொந்த தேசிய இனத்திடம் ஒடுக்கப்படும் மக்களின் நியாயத்தை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தமிழ் தேசத்தின் உரிமையை பிரிவினைவாதமாகவும், இனவாதமாகவும் வரையறுத்து ஒடுக்கும் சிங்கள தேச இராணுவ- ஆட்சியாளர்களுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் சவப்பெட்டி அடிக்க ஒத்துழைத்தார்கள். இன்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லாதது பிரசைகளுக்கான (தென்னிலங்கையில் தீர்க்கமான சக்தியாகிய ஜேவிபியின் தீர்வு பற்றிப் பார்க்க) உரிமை (ரணில் கிராமிய சபை போல) பிச்சைக்கு சமமான மக்களுக்கான ஜனநாயக உரிமையை சிறுமைப்படுத்துகின்றார்கள்.
ஜேவிபியின் புதிய யாப்புருவாக்கத்தில பங்கு என்பது கள்ளமௌமனம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் உரிமை பற்றிய ஜேவிபியின் நிலைப்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டியிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின்ஒடுக்குமுறை என்பது ஏகாதிபத்தியத்தின்- பிராந்திய வல்லரசின் ஒடுக்குமுறையே பிரதானமானதாகவும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களை சகிக்கும்படி கோரும் நிலையாகும். இது ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்திற்கு பலியாகிப் போனதன் விழைவாகும்.
ஒடுக்கும் தேசம் மற்றைய தேசத்தினையும், தேசிய இனங்களையும் ஒடுக்கிக் கொண்டு இருக்கின்ற வேளையில் சிங்கள தேசத்தவர்களும் சுதந்திரக் குடிகளாக இருக்க முடியாது.
வலதுசாரி சக்திகளால் முன்வைக்கப்படும் யாப்பு உருவாக்கம் என்பது மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதே. ஒடுக்கப்படும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் நிபந்தனை இன்றி ஆதரிக்க வேண்டும். முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையிலே விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்த முடியும். இவ்வாறு சொன்னால் ஏதோ ஆயுதப் போராட்டம் தான் என்ற தவறான கருத்தை முன்மொழிந்து அரசியல் கோரிக்கையை மழுங்கடிக்கும் வலதுசாரிய சிந்தனை வடிவம் என்பது ஏகாதிபத்திய நலன்களின் பால் செயற்படும் சக்திகளால் திட்டமிட்டு சுதந்திரமான தேசங்களை உருவாக்கத் தடைபோடும் அடக்குமுறை சிந்தனை வடிவமாகும்.
சட்டவாதத்தினை எதிர்ப்போம்
சமூக வளர்ச்சிப் போக்கை நிராகரிக்கும் போலிகளை நிராகரியுங்கள்
வலதுசாரி தமிழ் சக்திகளின் சதி அரசியலை முறியடிக்கப்பட வேண்டும்.
31.01.2016
31d tSpldJansonslaiflSuaroynS sa2sr0oded16 ·
அரசியல் பித்தாலாட்டம் (பகுதி 3)
இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தை எதிர்க்கப்போவதில்லை எனக் கூறிய முதலாவது எதிர்க்கட்சி தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்ப குரல் எழுப்புகின்றார். ஆளும் வர்க்கமாகவும், எதிர்க்கட்சியாகவும் தரகு வர்க்கத்தினை ஆட்சியில் இருந்தி நிதிமூலதனத்தின் சேவகம் செய்ய தமிழ் தேசத்தின் உரிமையை விலை கொடுக்க வேண்டிய நிலைதான் தான் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் இருக்கின்றது. தேசிய இனங்கள் தேசமாக வளர்தென்பதை மறுக்கின்ற வலதுசாரிகள் போக்கு எப்பொழுதும் நிரந்திரமானதல்ல. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகின்ற போது என்றோ ஒரு நாள் மறுபடியும் வீரியமாக எழும். ஆனால் இன்று சமரசவாதிகளும், அன்னிய சக்திக்காய் சேவகம் செய்யும் கிடங்கு நாய்கள் தான் இன்று அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றார்கள். அவர்களின் கருத்துருவாக்கமே அதிகளவு இருக்கின்றது. இவர்களே இன்று யாப்பு வரைவுகளை மேற்கொள்கின்றார்கள்.
யாப்பு வரைபுகளைப் பற்றி வெவ்வெறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றது. அரசியல் அமைப்பு எழுதும் சட்டவடிவம் ஒன்று உள்ளது. அவ்வாறு எழுதப்படும் சட்டவரைவு என்பது ஒரு கொள்கையின் அடிப்படையில் அதனை மீறாது எழுதப்படுவதேயாகும். அவ்வாறு எழுத்தப்படுகின்ற போது கலைச் சொற்கள் என்பது பயன்படுத்தப்படும். அங்கு பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் சிக்கலான பிரச்சனைகளை நாசூக்காக எழுதிவிட்டுச் செல்வதும், பின்னர் அது முரண்நிலைக்கு வரும் போது முரண்பாடுகள் சமூகத்தில் தான் தோன்றும் ஏனெனில் சட்டங்களைக் கொண்டே மக்களை ஆளாப்படுகின்றது. இந்த வகையில் எழுதப்படும் சட்டவரைவு என்பது கொள்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
யார் யாப்பு எழுதினாலும் அதனை சமூகம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும். இங்கு ஒடுக்கும் பெரும்பான்மை சமூகச்சிந்தனையை கட்டமைப்பாக கொண்ட ஒரு இயந்திரம் அதற்கு எதிராக நிற்கின்ற ஒடுக்கப்படும் சமூகங்களின் நலன். இவை இரண்டும் மோதலுக்கு உள்ளாகியே செல்லும்.
சமூகத்தினை சட்டரீதியாக உரிமை வழங்கி சமூகத்தினை மாற்றிவிட முடியாது. ஆனால் சட்டங்களின் மக்களை கட்டுப்படுத்த முடியும். சட்டங்கள் வகுக்கும் கட்டுப்பாடுகள் ஊடாக (we believe rule of law) மக்களை கட்டுப்படுத்த முடியும். இங்கு கட்டுப்படுத்தலுக்கும் உரிமைக்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. இது குறிப்பாக வலதுசாரி அரசியல் வாதிகளுக்கும் இந்த சமூக அமைப்பை அதியுச்ச ஜனநாயக உரிமையை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பவர்களின் கருத்துக்களுக்கும் நிறைவே வித்தியாசம் உள்ளது.
1974களின் பின்னரான ஆயுதப் போராட்டம் ஏன்?
அகிம்சை சக்திகளின் அரசியல் போராட்டத் தோல்வியும், அரச ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமாக பரிணமிக்கக் காரணமாகியது. ( திரு சுமந்திரன் /that it was disillusioned youth – often unemployed and angry – who have resorted to violence against the State, whether in the North East or in the South. / http://island.lk/index.php?page_cat=article-details...) இவர்கள் சொல்வது போல வேலையில்லாப்பிரச்சனை என்பது அது ஒரு பகுதிப் பிரச்சனையேயன்றி முதன்மையான பிரச்சனையாக இருப்பதில்லை. இந்த வலதுசாரிய அகநிலை ஆய்வுப் போக்கு என்பது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் என்பதை தற்போதை தமிழ் தலைமைகளின் செய்பாடுகள் அப்பட்டமாக காட்டி நிற்கின்றது.
தரப்படுத்தல் ( interpret ) பலமாதிரி வியாக்கியானம் செய்யலாம். அது michigan பல்கலைக் கழகத்தில் அல்லது தமிழகத்தில் இருப்பது போன்ற இடவொதுக்கீட்டுக் கொப்ப அரசியல் கொண்டதாக இருந்திருந்தால் ஆனால் அது அவ்வாறு அமையவில்லை. அது தமிழ் தேசத்தின் உருவாக்கத்தினை பின்னடிப்பது அல்லது வளர விடாது தடுப்பதில் இருந்து அமைந்து கொண்டதாகும். நிலம் - கல்லோயவுடனும், மொழி 1956 என்றும் பின்னர் பொருளாதாரம்- கலாச்சார அடையாளங்கள் என்று இல்லாதாக்கின்ற நிகழ்ச்சி நிரலில் அமைந்ததாகும். தரப்படுத்தலை சுருக்கிவிடுவது அடையாள அரசியலுக்கு உட்பட்டதே. தேசிய ஒடுக்குமுறை என்பதே அனைத்து தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கின்றது. தேசிய உரிமைக்கான போராட்டம் என்பது ஒடுக்கும் தேசத்தில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கவில்லை. தேசிய இனங்களின் உரிமை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை (ரொட்கிஸ்டுக்கள்) ஏற்றுக் கொள்வதில்லை.
தேசிய ஒடுக்குமுறையை மறைத்துக் கொண்டு எவ்வித யாப்பையும் புரட்சிகரமாக படைத்துவிட முடியாது. இன்றைய ஆளும் வர்க்கம் என்பது தரகு வர்க்கமாகவும், அரைநிலமானியத்தில் கட்டப்பட்டதாகும் வலதுசாரிய அரசியல் இருக்கின்றது. இங்கு முற்போக்கு முகாம் என்பது அரைநிலமானியத்தில் மேற் கட்டப்பட்ட போக்கு என்பது தேசிய ஒடுக்குமுறையை லங்கா எற்ற ஒற்றைத்தேசியத்தினுள் தீர்வை முன்வைக்கின்றது.
இந்த வகையில் தான் திரு வரதராஜப்பெருமாள் தலைகீழான யாப்பு ஆலோசனை உள்ளது. (The new Constitution is for building this country towards One Nation Formation. The Term “National” comprises all including Provincial Councils and the institutions functioning under the Provincial Councils. ---https://www.colombotelegraph.com/.../principle-elements.../ ) இது திம்புக் கோரிக்கையில் வைக்கப்பட்ட கருத்துக்கு நேர் எதிரான கருத்தாகும். மேலும் a) Governor - b) Provincial Council (PC) * Provincial legislative Assembly (PLA) including the Sub-Councils for minority nationalities in the Provinces; * Provincial Executive Council (PEC) of Ministers c) Provincial Public Administrations (PPA)--- என்று முன்மொழிவதன் ஊடாக தமிழர் ஒரு தேசத்தவர் என்ற மறுப்புரை என்பது ஆளும் வர்க்கத்தின் நலனில் அமைந்த பிரேரனையாகும்.
திரு வரதராஜப்பெருமாள் அவர்களின் அரசியல் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் திம்புக் கோரிக்கையை மறுக்கும் உரிமை எவருக்கும் வழங்கிட முடியாது.
தமிழர் தேசம் என்பது ஆண்ட பரம்பரையென விளங்கிக் கொண்டால் அது பெரும் அரசியல் தவறாகும். மனித வளர்ச்சிப் போக்கில் தேசிய இனங்கள் தேசமான வளரும் என்ற சமூக விஞ்ஞானப் பார்வையில் அமைகின்ற காரணத்தில் தேசங்களின் இருப்பை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. கொலனித்துவ காலத்திற்கு முன்னரே இரண்டு தேசங்களாக பரிணமிக்க கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் இருந்துள்ளது. ஆனால் ஆனால் தமிழ் சமூகத்தின் நிலமானிய ஒடுக்குமுறைச் செயற்பாடுகள் தமிழ் பேசும் முஸ்லீம் மதத்தவரை ஒரு தனி அடையாளமாக வளர்த்துவிட்டது. இது தமிழகத்தில் ஜனநாயகத்தின் ஊடாக தமிழ் தேசிய இனத்தவர்களாக பரிணமித்தது போன்று இலங்கையில் நடைபெறவில்லை. (அதாவது தமிழகத்தில் தமிழ் பேசும் முஸ்லீம் மதத்தவர் தமிழர்களாக உணர்கின்றார்கள்)
ஒடுக்கப்படும் மக்களை விடுவிக்கும் கொள்கையைக் கொண்டிரான எந்த அரசியல் யாப்பும் அர்த்தமற்றவையே. அது நிதிமூலனத்தின் சேவைக்காகவும், தேசிய இனங்களை ஒடுக்குவதன் ஊடாக உள்நாட்டு ஆளும் வர்க்கம் தன்னை பாதுகாத்துக் கொள்ளவுமே பயன்படும். மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது தொடரத் தான் போகின்றது.
06.02.2016
அரசியல் பித்தாலாட்டம் (பகுதி 4)
இலங்கையில் யாப்பைச் சுற்றிய நிகழ்வுகள், போலிச் சுதந்திரதின விழா, இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை, ரணிலின் சீனப்பயணத்திற்கான தயார் எனவும் பல்வேறு நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவை ஒரு யாப்பு வரைவு, தேசிய இனப்பிரச்சனைக்கான ஒரு வரைவை முன்வைத்துள்ள நிலையில் அந்த திட்டம் (நிறைய மாற்றுக் கருத்து உண்டு) குறித்து தரகு வர்க்கம் ஆட்டம் கண்டுள்ளது. சமூகமானது போதிய அரசியல் முதிர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது. இதனால் ஆளும் வர்க்கத்திற்காய் செயற்படுவதில் தரகு வர்க்கம் திட்டமிட்டுச் செயற்பட்டு வெற்றியும் கொள்கின்றது.
இங்கு இவர்கள் தனிமனித போட்டிக்கு உட்பட்டதாக காட்டப்படுவது அல்லது ஒரு கட்சியின் மீதான அதிர்ப்தி என்று காட்டப்படும் காட்சிகளுக்கு அப்பால் ஒரு அரசியல் நகர்வு இருந்து கொண்டு இருக்கின்றது.
”நல்லிணக்கத்தை வெளிக்காட்ட சம்மந்தன் மற்றும் சுமந்திரன் சுதந்திர நிகழ்வுக்குச் சென்றமை பிழையாகத் தெரியும் சிலருக்கு முதலமைச்சர் ஓடோடிச் சென்று விகாரையில் வழிபட்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியது பிழையில்லையாம்” என்று அர்ப்பத்தனமான மலினப்பட்ட முறையில் அரசியல் விளக்கம் அல்லது விளங்கிக் கொள்ளும் முறைதான் எங்கும் இருக்கின்றது. இது அரசியல் வறுமையின் காரணமாக ஏற்படுவதாகும். ஆயுதப் போராட்டம் நடைபெற்ற வேளையில் புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாத குறையின் வெளிப்பாடுகள் தான் இவ்வாற சமூக விஞ்ஞானப் பார்வையற்ற போக்கிற்கு ஒரு காரணம்.
இலங்கைக்கு கிடைத்த போலிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கை ஆளும் வர்க்கம் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும் அது பெரும் மாற்றம் என்று இட்டுக் கட்டி பிரச்சாரம் செய்கின்றது. போலிச் சுதந்திர அடையாளக் குறியாகிய தேசிய கீதத்தைதமிழில் முதன் முதலாக கேட்டு கண்ணீர் சிந்தினாராம். கண்ணீர் சிந்தல் என்பதும் ஒரு அரசியல் போக்காக நமக்கு புதிய பாதையை நமக்கு காட்டுகின்றது.
ஆனால் போராளிகளை கூட்டிவைத்து கட்டாயமாக சிங்களத்தில் தேசியம் கீதம் பாட நிர்ப்பந்திக்கின்றது. இவ்வகையான போலி வேடங்கள் சமூகங்களிடையோன நல்லிணக்கத்தினை எப்பொழுதும் ஏற்படுத்திவிடப் போவில்லை.
இதே வேளை ஒரு மதவாதி ஒரு சமயத் தலத்திற்கு செல்வது என்பது ஒரு அரசியல் போக்காக காட்டுவது என்பதே அபர்த்தமாகும். மனிதர்கள் சமயத்தலங்களுக்குச் செல்வது என்பது தனிமனிதர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு உட்பட்டதாக இருப்பதும் அரசியல் வாதிகள், வெகுமக்கள் பெரும்பான்மையினர் மத நம்பிக்கை கொண்டவர்களே. இதனால் மத நீதி நெறிகளை போலியாகவேயேறும் பின்பற்றுபவர்கள் தான் அதிகம் இதுதான் சமூகத்தன்மையாகும்.
1. பௌத்த சிங்கள சிந்தனைக் கட்டமைப்பு
2. தீர்வுகள் என்பது பௌத்த சிங்கள பேரினவாதக் கட்டமைப்பிற்கு உட்பட்டது
3. தமிழர் தேசத்தில் எந்தவிட நிர்வனக் கட்டமைப்பையும் வளர்த்திட சிங்கள பௌத்த பேரினவாதம் ஏற்படுத்த விட விரும்பாது என்று பல கட்டுரைகள் எங்கும் தெளிவு படுத்தி எழுதியுள்ளேன்.
தமிழ் அமைப்புகளுக்கிடையோன முரண்பாடு
முன்னர் கஜேந்திரன், சுரோஸ் போன்றவர்களுக்கும் த.தே.கூ சுமி- சாம் முரண்பாடுகளையும் சுமந்திரன்- விக்கி முரண்பாடு, ரணிலுக்கும் விக்கிக்கும் உள்ள முரண்பாடுகளை தனிமனிதராக சுருங்கினர்.
தமிழ் அமைப்புக்களுக்கிடையான முரண்பாடுகளை தனிமனிதப் போக்காகவும், தனிமனிதப் பிரச்சனையாகவும் சுருக்கிவிடுவதில் வெற்றிபெற்றிருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.
சமூகச் சிந்தனை என்பது பிரச்சனைகளை அறிவார்ந்த பூர்வமாக சிந்திக்கும் பக்குவம் (அரசியல் மயப்படுத்தலில் உள்ள குறைபாடு) என்பது சமூகத்தில் பெரும்பான்மையானவர்களிடம் இல்லை. அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் நடைபெறும் அறிந்து கொள்வதில் குறைபாடு இருக்கின்றது.
இன்று தமிழ் அரசியல் சக்திகளில் உள்ள குட்டிமுதலாளியப் பிரவினரால் முன்வைக்கப்பட்ட அரசியல் யாப்பு, தீர்வு பற்றிய ஆலோசனை என்பது லங்கா ஆளும் வர்க்கத்தை சுற்றிவரும் பிதட்டல் அரசியல்வாதிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்த நிலையில் சமூகத்தில் உள்ள அரசியல் வெறுமையை பயன்படுத்திக் கொண்டு தமிழரசுக் கட்சி அரசியல் கோமாளித்தனத்தை முன்னொடுத்து வருகின்றது.
இது அமைப்புக்கள் தமது கட்டுப் பாட்டினுள் இருப்பதாக பாவனை செய்ய வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் என்பது இருக்கின்றது. இந்த வகையில் சிவமோகன் கடந்த 2013-09-21 அன்று இடம்பெற்ற வட மாகாணசபைக்கான தேர்தலிலும் அதன் பின்னர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பில் வன்னித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சிவமோகன் இன்று மாவை.சேனாதிராசா முன்னிலையினில் அரசுக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அரசின் வரவு செலவுத்திட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி எதிர்த்து வாக்களித்த போது சிவமோகன் சத்தமின்றி வெளியேறி எதிர்த்து வாக்களிப்பதை தவிர்த்திருந்தார். இதன் பலனாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் பதவி சிவமோகனிற்கு அரசு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான சந்தர்ப்பவாதிகளுக்கு கட்சியில் இடம் கொடுப்பதை விட அரசியல் ரீதியாக வேலைசெய்து அனுபவமுள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடத்தினை கொடுத்திருக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்ப வாதிகள் தமது பதவியைத் துறந்து விட்டு தமிழரசுக் கட்சியில் இணைந்திருப்பார்களாயின் அவர்களின் கொள்கை பிடிப்பைப் வெளிப்படுத்தியிருக்க முடியும்.
இங்கு சுமந்திரம்- மாவை- சம்பந்தர் அணி முடிந்தவரை அதிகமான கோமாளிகளை தமது பக்கம் சேர்ந்து தேவையான போது குரங்காட்டியினால் ஆடவைக்கும் குரங்குகள் ஆடுவது போல ஆடவைப்பது தான் இந்த தரகு அணியின் நோக்கமாகும். இதன் ஊடாக தமது எசமானர் விசுவாசத்தினை காட்டுகின்றார்கள்.
ஒரு ஊரில் இருக்கும் சண்டியன் தன்னைவிட வலிமை இல்லாதவர்களை அடித்து தன் வீரத்தினை காட்டுவது போலதான் த.தே.கூ அரசியல் தலைமை செயற்படுகின்றது. தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கை சிதைத்துக் கொண்டு த.தே.கூ பித்தலாட்ட அரசியல் செய்கின்றது.
மக்கள் எதிர்க்கவில்லையா?
மக்கள் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தமது இழந்த செல்வங்களை இட்டு போலிச் சுதந்திர தினத்தில் போராடிக் கொண்டு தான் உள்ளார்கள். மக்கள் எதிர்க்கவில்லை என்று புலிகளின் காலத்தில் இருந்த ஏகபோக வியாதிக்குள் சுமந்திரம், மாவை- சம்பந்தர் கூட்டு நீந்திக் கொள்ள பெரும்முயற்சியெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆம் இவ்வளவு காலம் கொடுத்த இழப்புக்கள் எல்லாம் தமிழில் போலிச் சுதந்திரத்தின் அடையாளமான கீதத்தினை பாடுவதற்கா??
போலி சுதந்திர நாட்டின் தேசிய கீதம் தமிழில் முதன்முதலில் படிக்கப்பட்டதாக புல்லரிக்கின்றார்கள். இது கூட தலைநகரில் மட்டும் தான் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கையில் இருந்து வரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றது. ஆக வெறும் அடையாள வெளிப்பாடுகள் உண்மையான இணக்கப்பாட்டை கொண்டு வந்து விட முடியாது.
இங்கு அரசியல் ஓட்டங்கள் எதுவும் சுயாதீனமானதாக இருப்பதில்லை. ஒடுக்குபவனின் நிகழ்ச்சி நிரலுக்குள் கட்டுப்பட்டு நடப்பதும் அதற்கு எதிரான தத்தம் வர்க்க நலன் பாதிக்காத வகையில் செயற்படுவதும் இருந்து கொண்டு தான் இருக்கப்போகின்றது.
த.ம. பே போன்ற சீர்திருத்த வகையறாக்களைக் கூட தமிழ் தரகு வர்க்கம் எதிர்ப்பதில் லங்கா ஆளும் வர்க்கத்தின் வேலையைப் பிரிவினைக்கு ஏற்ப செயற்படுகின்றார்கள்.
பௌத்த சிங்கள தேசியப் பெருமிதத்தின் மீது கட்டப்பட்ட சிந்தனை என்பது குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்தில் எவ்வித தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. பௌத்த சிங்கள சிந்தனை வடிவம் என்பதும், தீர்வு என்பது பௌத்த சிங்கள சிந்தனைக்கு உட்பட்டது. இதற்கு அப்பால் ஒன்றுடமில்லை. ஆனால் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்றால் தரகு வர்க்கத்தை கடந்து தான் செல்லவேண்டியிருக்கின்றது. இதுதான் யதார்த்தம் மற்றவை அர்த்த மற்ற வெற்றுக் கூச்சலாகும்.
11.02.2016
அரசியல் பித்தலாட்டம் -5
இலங்கையில் இருக்கும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்விற்கும், இலங்கை அரசியல் சூழலை திறந்த பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப எவ்வாறு கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் புதிய யாப்பு வரையபட முயற்சிக்கப்படுகின்றது.
இந்த யாப்புருவாக்கம் என்பது மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதான கூறப்படுகின்றது. மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக தோற்றப்பாடுகளை வெளிப்படுத்துகின்றது. இதற்கு அடிப்படையாக கருத்துக் கேட்கும்குழு என்று இலங்கை பூராகவும் ஏதோ சுற்றி வருகின்றார்கள். போலிப் நாடாளுமன்ற அமைப்பு என்பது மக்களின் பிரதிதிநித்துவம் கொண்டாதாக காட்டப்படுகின்றது. இவாறு மக்களின் (participation democracy ) பங்களிப்புக் ஜனநாயகம் கொண்டதாக இருப்பதான தென்பட வைக்கின்ற போதிலும் அவை உண்மையில் அவ்வாறில்லை.
இதற்குள் எங்கட தமிழ் பிரக்கிராசி மார் எதனையும் வெளிப்படையாக செய்ய முடியாது. அது சிங்கள பெருந்தேசிய வெறியர்களை உசுப்பிவிடும் என்று காரணம் கூறப்பட்டு தமிழ் மக்களை வாயை மூடிவருகின்ற போக்கை சுமந்திரனால் பல்வேறு தடவைகள் கூறியிருக்கின்றார்.
இடது சந்தர்ப்பவாதம்-
//நீங்கள் நெருப்பைக் கொண்டு நெருப்பை எதிர்த்து போரிட முடியாது. நீங்கள் அதற்கு தண்ணீரை பயன்படுத்துவீர்கள். நாங்கள் தோழமை உணர்வு கொண்டு இனவாதத்தை எதிர்த்துப் போரிடுவோம். முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுவதற்காக கருப்பர்களின் முதலாளித்துவத்தை வளர்க்க மாட்டோம். நாங்கள் சோஷலிசத்தால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுவோம். மக்கள் தான் சோஷலிசம்.// - Fred Hampton (மேற்கண்ட நிலைப்பாடு என்பது அமெரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டப் பாதைக்கு பொதுத்தமாக இருக்கும். அங்கு தேசங்களின் வளர்ச்சியைப் பற்றிய பிரச்சனை அல்ல) இதனை இலங்கைக்கு பொருத்த முனையும் குட்டிமுதலாளியச் சிந்தனையாகும்.
சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை கறுப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கும் பார்வையாகும். இவ்வாறான பின்னவீனத்துவ சிந்தனை என்பதே 1980களி் பிரபல்ய கவிஞர் அமைப்பு ஒன்றில் அரசியல் வகுப்பு எடுத்தாராம் அப்போ உந்த சோசலிசம் பேசுபவர்கள் பூவுக்கும் வர்க்கம் இருக்காம் என்று நக்கல் அடித்தாராம். ஆம் பூவுக்கும் வர்க்கம் இருக்கின்றது வசதியற்றவன் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்குவதற்கு தேவையான பொருளாதார வலிமையும் ரோஜாப்பூ வாக்குவதற்கும் தேவையான பொருளாதாரத் தேவை என்பதும் நுகர்பவரின் பொருளாதாரம் என்பதும் மாறுபட்டுத் தான் உள்ளது. எனவே பூவை நுகர்வதற்கு வர்க்கத்தின் பங்கு தீர்மானிக்கின்றது.
இவ்வாறே அன்றே சமூக முரண்பாடுகளை கொச்சையாக விளங்கிக் கொள்ளும் போக்கு இருந்துள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதமும் அதன் தரகு வர்க்கமும் ஒடுக்குமுறையை தொடர்வதன் ஊடாகவே ஆட்சிக் கட்டிலைப் பாதுகாத்துக் கொள்கின்றது. தன்னுடைய இருப்பிற்கு அதிகம் விலைகொடுப்பவர்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாகும். ஏனெனில் ஒடுக்கும் தேசம் தன் நெருக்கடியை சமாளிப்பது தன்தேசிய இனத்தின் பிரிவிற்கு சலுகை கொடுப்பதன் ஊடாகவே இடம்பெறுகின்றது. மறுபுறத்தே ஒடுக்கப்படும் தேசிய இனத்தில் உள்ளவர்களுக்கான சந்தர்ப்பம் மறுக்கபடுகின்ற போது அவர்களின் வாழ்விற்கான சந்தர்ப்பம், வளர்ச்சி என்பது கிடைக்கப்படுவதில்லை.
தரகு வர்க்கம் உட்பட்ட குட்டிமுதலாளிய இடதுசாரியமும், அதன் சந்தர்ப்பவாதமும் தேசிய இனம் தேசமாக வளர்வதையும் ஏகாதிபத்தியங்கள் தமிழர் தேசத்தின் வளத்தை திருடுவது உண்மையோ அதே போல சிங்கள தேசமும் தன்னிருப்பிற்காக திருகின்றது.
இதில்குட்டிமுதலாளித்துவ இடதுசாரி சந்தர்ப்பவாதம் என்பது தேசிய இனங்கள் தேசமாக வளர்வதை ஏற்றுக் கொள்வது என்பது துடக்கைப் போன்றதாகவும் அதனை வெறும் பூர்சுவா வர்க்கத்தின் தேவையாகவும் தட்டையாக விளக்குகின்றது.
இவர்களின் ஒரு பகுதியினர் தமிழ் தேசத்தன் போராட்டம் பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்று புலிகளின் அழிப்பிற்கு துணைபோன இலங்கை இடதுசாரியத்தின் ( ரொட்கிய சிந்தனை வடிவம்) எச்சமாக வெளிப்படுகின்றது.
வலது சந்தர்ப்பவாதம்
தமிழ் தேசத்தின் சுயநிர்ணயத்தை மறுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பின்தொங்கிக் கொண்டு வாலாட்டும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும் அவர்களின் கருத்துருவாக்கிகளும் முதன்மை கொண்டுள்ளார்கள். இங்கு பங்களிப்பு ஜனநாயகம் இருப்பதாக நிலைநிறுத்தும் பொருட்டு அரசியல் வாதிகள் மக்கள் தயக்கமின்றி தங்களுடைய கருத்துக்களை முன் வைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து கருத்துக்களை முன்வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம் மேற்கொள்கின்ற குழுவிடம் வழங்கப்படும் என்று எல்லாம் வகுப்பெடுக்கின்றார்கள்.
இறுதியாக தமிழ் தேசத்தின் விடுதலை என்பது ஒடுக்குப்படும் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் பாதையினை ஏற்படுத்தும், தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்தினை எதிர்த்து வெளிப்படும் ஜனநாயகத்திற்கான போராட்டமேயாகும். சமூக விஞ்ஞானப் போக்கில் ஒரு அரசியல் போக்கை ஆய்வதற்கும் தனிமனிதர்களின் உணர்விற்கும் சம்பந்தமில்லை.
முதலில் தமிழ் தேசத்தின் அரசியல் உரிமை பற்றிக் பேசிய பொன் அருணாசலம் ஆயுதப் போராட்டம் வளரும் என்று அரசியல் கோரிக்கை விடவில்லை. ஆயுதப் போராட்டமென்பது அன்றைய பூலோக அரசியல் பொருளாதாரத்திற்கு ஏற்ப வீங்கி வெடித்தயேன்றி போராட்டத்தில் நியாயம் இல்லையென எவரும் கூறிவிட முடியாது.
சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்த சமூகத்தின் தேவை என்பதையும் வளர்ச்சியை மறுத்துரைப்பதும் ஜனநாயகப் போக்காக இருக்க முடியாது. ஒரு ஜனநாயத்திற்கான போராட்டத்தை சிறுமைப்படுத்தவது குறுகிய காலத்தில் அர்த்தமுள்ளதாக தெரிந்தாலும் சோசலிசம் கிடைத்த பின்னர் உரிமை நிலைநிறுத்த முடியும் என்பது விண்ணுல வாழ்வில் தகுந்த ஊதியம் கிடைக்கும் என்ற மதவாதிகளின் சிந்தனை போலாகும்.
‘‘நாடுகளின் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும். தங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு எதிராக அவைகளின் ஆயுதந் தாங்கிய எழுச்சிக்கு அல்லது புரட்சிகரமான யுத்தத்துக்கு - அது ஏற்படுமானால்- உதவி செய்ய வேண்டும்.‘‘‘
தொடரும்
03.12.2015
புலிநீக்கம்!!
விடுதலைப் புலிகளை விமர்சிக்க முடியாதா? நிச்சயம் விமர்சிக்கப்பட வேண்டும். அது தமிழ் தேசத்தின் போராட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் என்பது வானத்தில் இருந்து வந்திறங்கியவர்கள் அல்லர். அவர்கள் அரைநிலமானிய சமூகச் சிந்தனையின் மேல் கட்டப்பட்ட ஒரு அமைப்பாகும். அதன் சிந்தனை வடிவம், அதன் ஜனநாயக வடிவம் என்பது தாராளவாத முதலாளித்துவ மையத்தில் இருந்து அளவிட முடியாது.
அதிகமான பொதுப்புத்தி என்பது முதலாளித்துவ தாராளவாதத்தில் இருந்து புலிகளிடம் குறைந்தபட்ச ஜனநாயகத்தை எதிர்பார்த்தனர், அல்லது அரைநிலமானிய உறவை பாசீசமாக வரையறுத்தார்கள், எது புலி செய்தாலும் அதனை வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கில் இருந்து பார்க்கப்பட வில்லை. இதன் காரணமாக புலிக்காய்ச்சல் முத்திய போக்கையும் அவதானிக்க முடியும். புலிகளின் இடத்தில் எந்த இயக்கம் இருந்திருந்தாலும் அவர்களின் செயற்பாடுகளும் அரைநிலமானியத்தின் எச்சத்திற்கு அப்பால் முன்சென்றிருக்குமா என்பது கேள்விக்குறியே
இன்று புலிநீக்கம் என்பது தமிழர் தரகு வர்க்கத்தின் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது. ரணில் தலைமை அல்லது மகிந்த சிந்தனை அல்லது ஜேவிபி என்கின்ற சமூக (social chauvist) பெருந்தேசிவாதிகளானாலும் சரி (singhale national
chauvist) சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது ஒரு தேசம் (one
nation) என்ற பெருந்தேசிவாதத்தினுள் சிறுபான்மையினர் என்ற அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்பட்டதாகும். ஆனால் இலங்கை என்பது இரண்டு தேசங்களையும் பல தேசிய இனங்களையும்கொண்ட ஒரு நாடாகும்.
தமிழ் தரகு எந்தக் காலத்திலும் தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டத்தில் நேர்மையாக இருந்ததும் இல்லை, அவர்கள் இருக்கப் போவதுமில்லை.
எனவே த.தே. கூ என்ற தரகுவர்க்கத்தின் தலைமையை அல்லது போலித் தேசியவாதிகளின் வார்த்தைகளில் இருந்து தமிழ் தேசத்தின் போராட்டத்தி நடத்த முடியாது, வெற்றி கொள்ள முடியாது. தமிழ் தரகு வர்க்கம் என்பதே சரணடைவுப் பாதையாகும். இந்த நிலையில் தான் புலிகளின்போராட்டத்தினை பயங்கரவாதமாகக் (இது பயங்கரவாத எதிர்ப்பு என்ற மேற்கின் பிரச்சார எச்சத்தின் வெளிப்பாடாகும். )
காட்டுவதும், தமிழ் தேசத்தின் கோரிக்கையை அடிப்படைவாதம் என்று கூறுவதுமாகும்.
தமிழ் தேசத்தின் உரிமை என்பதை மறுத்துரைப்பது என்ற அரசியலில் இருந்து புலிநீக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தினார்களாக இல்லையா என்பதல்ல இன்றைய அரசியல் ஓட்டம். மாறாக அடிப்படைவாதம் என்று சிங்கள பேரினவாதத்தின் குரலை தமிழர் தரகு வர்க்கம் முன்வைப்பது என்பது ஒன்றும் தெரியாத பாப்பாக்கல் போன்று அல்ல. சிறி- மாவை என்பவர்கள் முட்டுக் கொடுக்கின்றார்கள் என்பது அபர்த்தமே. காரணம் இவ்வாறு சமன்படுத்துவது என்பது அவர்களின் ஓட்டுமொத்தமான அரசியல் போக்கே அப்பலப்படுத்தி விடுகின்றது. மேலும் இன்னும் புலிகள் தரப்பு இருக்கின்றது என்ற மாயை கூட தமிழ் தேசத்தின் சுயநிர்ணயத்திற்கு எதிரான நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவையாகும். ஆக புலிநீக்கம் (குறிப்பான்) என்பது அடிப்படையில் தமிழ் தேசத்தின் இறைமைக்கு எதிரானதாகும்.
தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டத்தில் பிரபாவும்- புலிகள்- மாவீரர்கள் என்பது குறிப்பான்கள்
(symbolic) இருப்பது என்பதை எவரும் இலகுவில் மறுத்து விட முடியாது. தமிழ் தேசத்தின் போராட்டத்தில் எவ்வித குறிப்பான்களும் இருக்கக் கூடாது என்பதால் மாவீரர் துயிலும் இல்லங்களை வடக்கு கிழக்குத் தாயகத்தில் இல்லாதொழித்தனர் என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது தகும்.
புலிகள் மீது புனித விம்பம் கட்டத் தேவையில்லை என்பது ஒரு புறமிருக்க இங்கு புலிநீக்கம் என்பது திட்டமிட்ட நயவஞ்சக அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாகும். அது தமிழ் தேசத்தின் உரிமையைச் சிதைப்பதாகும். இதன் தொடர்ச்சியாகவே புலம்பெயர் போலித் தேசியவாத அமைப்புக்கள் தடைநீக்கம் செய்யப்பட்டன. புலம்பெயர் போலித் தேசியவாதிகள் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட துயருக்கு பதில் சொல்ல வேண்டியவர்களே. சிங்கள பௌத்த பேரினவாதம் தனது கூட்டாளிகளுக்கான தடையை நீக்கியதே நிதர்சனமான உண்மையாகும்.
தமிழ் தேசத்தின் போராட்டம் வெல்லப்பட வேண்டுமென்றால் குண்டுச் சட்டிக்குள் இருந்து குதிரையோடுவதில்லை.
தமிழ் தேசத்திற்கான போராட்டம் என்பது அரசியல் உரிமை, சமூக மாற்றத்துடன் இணைந்தாகவும் இருக்கும். தமிழ் தேசத்தின் உரிமையை ஏகாதிபத்தியங்கள், தமிழர் தரகு, சிங்கள பெருந்தேசியவாதம் துணை நிக்கப்போவதில்லை. அனைத்து சக்திகளின் கபடங்களையும் கடந்த காலத் தவறுகளை சுயவிமர்சனம் செய்து முன்னேறுவதே ஒரேவழியாகும்.
- - - - - - -
03.02.2015
toSf2 MaprotnscshSt or2h0sechs1l5dr ·
இணக்க அரசியலை எதிர்க் கொள்ளல் #
சமூகக் கட்டமைப்பில் உள்ள அம்சங்களை கற்றுக் கொள்ளவேண்டும். இதன் ஊடாக எமது சமூகக் கட்டமைப்பில் உள்ள ஜனநாயக் குறைபாடுகளை களைந்தெடுப்பதற்கு துணைபுரியும். எமது சமூகக் கட்டமைப்பில் உள்ள ஜனநாயக மறுப்பு நிலைக்கு எதிராக குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கள் என்ன அதனை பெறுவது எவ்வாறு என்றும் இன்றும் வர்க்க பேதமற்ற சமூகத்தில் இருக்கக் கூடிய ஜனநாயக விழுமியங்களுக்காக போராடுவதற்கான படிப்பினைகளையும் பெறமுடியும். உற்பத்திச் சாதனத்தை பெரும்மக்கள் உரிமையாகக் கொள்கின்ற போதே பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலை நிர்ணயித்துக் கொள்ள முடியும். இது நெடுந்தூரப்பயணம் எனினும் வர்க்கச் சிந்தனையே அரசியலையும் தீர்மானிக்கின்றது. சமூகத்தின் அனைத்துத் தளத்திற்கான உரிமைக்காக போராட்டத்தை வழிநடத்துவது நெறிப்படுத்துவதற்கும் இடையே வர்க்கத்தின் தாக்கம் இல்லாது எவையும் சாத்தியம் இல்லை.
அண்மையில் உருவப்படம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாதப் பிரதிவாதங்களை நோக்குகின்ற போது பலவிடயங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த நிலை புலிகள் இருந்த போது வேறுவடிவத்தில் முரண்பட்ட மனிதர்களுக்கானதாக இருந்தார்கள். இன்று புலிகளை ஆதரித்தவர்களே பலகூறாக இருக்கின்ற நிலைதான் இருக்கின்றது. கடந்த காலத்தில் புலிகள் தமது அணியினருக்கான அரசியலை செய்திருக்கின்றார்களா என்பதில் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. இணக்க அரசியலுக்கான மனப்பான்மையை வெவ்வேறு வகையாக அவதானிக்க முடியும்.
இணக்க அரசியலை ஆதரிப்பவர்கள்
1.பேரினவாத்தினையும்- பேரினவாதிகளைக் காட்டியே மற்றவர்களை அடங்கிப் போ என்று உபதேசிக்கும் போக்கும் மறைமுக பேரிவாத ஆதரவே.
இது இணக்க அரசியலுக்கு வித்திடுகின்றது.
2. அரசியல் ரீதியாக தன்னியல்பாக செயற்பட்டுக் கொள்பவர்கள்
3. இணக்க அரசியலை எவ்வாறு எதிர்க்கொள்வது என்ற சிக்கலின் வெளிவடிவமே இந்த எரிப்பு நிகழ்வு. ஒரு அமைப்பில் ஜனநாயக மத்தியத்தில் அடிப்படையில் செயற்படவில்லை என்பதுதான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். ஆக அமைப்பில் ஜனநாயகம் உள்ளதா என்ற கேள்விக்கு விடைகண்டாகவேண்டும். நிலமானிய எச்சத்தின் - வக்கீல் அரசியல் தலைமையின் எச்சம் என்பது இன்றைய உலகப் போக்கை எதிர்கொள்ள வல்லமையற்றதாகும்.
இவற்றிற்கான விடையை நமது சமூக அமைப்பில் இருந்துதான் விடைபெறமுடியும். அதாவது எச்சமூகத்தில் வாழ்கின்றாரோ அந்தச் சமூகத்துக்கேயுரித்தான சிந்தனைதான் ஆளுமை செலுத்தும் என்ற வரையறைக்குள்ளேயிருந்து பார்க்கவேண்டும். சுதந்திரமான ஆய்வுகள் விவாதங்கள் என்பன கடந்த காலத்தில் வேரோடு அறுக்கப்பட்டதைத் தான் நாம் கடந்த வந்து வரலாறுகள் காட்டி நின்றன. இவற்றை இன்றைய இளையோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு நிகழ்கால அரசியல் நிகழ்வில் இருந்துதான் செயற்படுகின்றார்கள். இளையோர் கடந்த கால வரலாற்றைப் படிப்பதும் நிகழ்காலத்தையும் ஆய்ந்து எதிர்காலத்திற்கான பாதையை கண்டறிய வேண்டும்.
சமூகத்தில் காணப்படும் சில தன்மைகள்
அரசியலைப் பொறுத்தவரை வயது வந்ததும் இளம் வயதினருக்கு ஒதுங்கி இடம் கொடுக்கும் முறை என்பதை நாம் காணமுடியாது. மூப்பு என்ற சமூகத்தன்மை என்பது அரணாக இருந்து காப்பாற்றிக் கொள்கின்றது. ஒருநபர் ஒரு குறிப்பிட்ட பதவியை வகிக்கின்றார் எனில் அவர் அப்பதவியை விட்டு விலகுவதற்கு எப்பவும் தயாராக இல்லை காரணம் பதவியை விட்டு விலகுவதென்பது கௌரவம் விட்டுப் போய் விடுவது என்பது ஆகும். இந்த மனோ நிலையானது மக்கள் விமோசனம், புரட்சி, விடுதலை என உரக்கப் பேசுபவர்களிடமும் காணப்படுகின்றது.
சமூகத்தில் முகத்தை இழப்பது என்பது பெரிய விடயம். சமூகத்தில் பலர் தற்கொலை கூடசெய்து கொள்கின்றனர். உதாரணமாகப் பார்ப்போமானால கௌரவக் கொலை- ஆணவக்கொலை - என்பது போன்றே பெயருக்கு ஏதாவது வகையில் கலங்கம் ஏற்படுகின்றது. ஏன் இச்சமூகத்தில் அதுவும் ஒரு மனித உயிர் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. இந்த சமூக அமைப்பானது பல எழுதாத விதி முறைகளை கொண்டுள்ளது. இதனை மீறுவது இச்சமூகத்தில் இருந்து அந்நியப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றேம். இதன் காரணமாக சமூகத்தின் பழிப்புக்கும் ஆளாகின்றேம். இச்சமூக அமைப்பின் நெருக்குதல்களுக்கு பணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதினால் முகத்தை இழப்பதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புவதில்லை. இதன்காரணமாக தொடர்ந்தும் வரட்டுத்தனமான போலி கௌரவம், மரியாதை, என்பவற்றை பாதுகாத்துக் கொண்டு வருகின்றோம். (இதன்காரணமாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதில் பூரணமாக ஈடுபடுத்திக்கொள்வதில்லை. இதனால் ஒரு அமைப்பை சீரழிவிற்கே இட்டுச்செல்கின்றது.)
ஒருவர் ஒரு விடயத்தை தெரிந்து கொண்டால் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் விருப்பமின்மை (இங்கு அமைப்பு இரகசியத்தினை குறிப்பிடவில்லை) ஏனெனில் மற்றவர் மீதுள்ள கட்டுப்பாடு சீர்குலைந்து விடும் அல்லது கட்டுப்பாடு இல்லாது போய்விடும் என்பதாலேயாகும். எப்பவும் மற்றவர்களை தமக்கு கீழ் வைத்திருக்கும் போது தமக்கு நிகரான ஒரு போட்டியாளன் உருவாகமாட்டான் என்ற நம்பிக்கையாகும். உதாரணத்திற்கு ஒரு பிராமணன் (தெய்வபாசா என்று திரித்துக் கொண்டு) மந்திரத்தை கற்றுக்கொடுக்கும் போது அனைத்து மந்திரத்தினையும் முழுமையாக கற்றுக் கொடுப்பதில்லை என்பார்கள். ஏனெனில் முழுமையாக கற்றுக்கொடுத்தால் தன்னை விடஉயர்ந்தவனாக வந்துவிடுவான் என்பதேயாகும். போட்டி மனப்பான்மை காரணமாக இவ்வாறு இடம்பெறுகின்றது. ஒரு மனிதன் தனக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதன் மூலம் தான் வாழ்வதற்காக கிடைக்கின்ற வளத்தை இழக்க விரும்புவதில்லை. காரணம் இச்சமூக அமைப்பில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக தனக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது அடைவதன்மூலம் தனது தேவைகளை தீர்க்க முயற்சிக்கின்றான். இப்படிப்பட்ட மனப்பான்மை மனிதன் தனது பதவியைக் காப்பாற்றும் பொருட்டு அமைப்பினுள் பிரயோகித்து சாதித்துக்கொள்கினான்.
குரு சீடன் உறவு முறையாகும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் படிப்பிக்கும் போது மாணவர்களை கதைக்க விடுவதில்லை, தான் கூறுவதுதான் சரி அதாவது ஆசிரியர் பிழையாக பாடம் கற்பிப்பாராயின் அதனையும் மாணவர்கள் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இதேபோன்ற நிலை ஒரு அமைப்பினுள்ளும் தலை தூக்கின்ற நிலமைகளை கடந்தகால போலாட்ட வரலாற்றில் இருந்து பெறமுடிகிறது. பெரியவன் சிறியவன் என்ற தன்மையின் வெளிப்பாட்டினை இயக்கங்களுக்குள் அதிகமாக காணக்கூடியதாக இருந்தது. இத்தன்மையின் வெளிப்பாடானது எம் சமூகத்தில் காணப்படுகின்ற உறவு முறைகளில் இருந்து பெறப்பட்டது எனக்கருதுகின்றேன். சிறு வயதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவெனில் பெரியவர்களை அண்ணன், அக்கா, மாமா, மாமி எனக் கூப்பிடும் படி கற்றுத்தந்துள்ளனர் நமது பெரியவர்கள். இதன் மூலம் பெறப்பட்ட பழக்கங்கள் நம்மை இலகுவாக குரு சீடன் மனப்பான்மையில் ஆட்கொள்ள வைக்கின்றது.
அதாவது நிலவுகின்ற சமூக அமைப்பின் ஊடாக பெறப்பட்ட சிந்தனை, பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள் ஊறியுள்ளள. ஒரு பிள்ளை நல்லவனாவதும் கெட்டனாவதும் அன்னையிலேயே தங்கியுள்ளது எனக் கூறுவர் இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு பிள்ளை குடும்பம் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்ததும் சமூகத்தில் இருந்து பலவற்றை கற்றுக்கொள்கின்றது. இதன் வெளிப்பாடுகளை பிள்ளைகள் ழூலம் கண்டுகொள்ளமுடியும் இதனை விரிவாகப் பார்ப்போமானால் குடும்பம் என்ற வட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் வரையறைக்குட்பட்டே கற்றுக்கொள்கின்றன ஆனால் இவற்றை விட மேலதிகமாக சுற்றம் சூழலில் நிகழ்கின்றவற்றை, குடும்பத்தை விட்டு அதிக நேரத்தை பிள்ளையானது செலவிடுவதனால், சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கற்றுக்கொள்கின்றன. இந்தப் பொருளாதார அமைப்பின் மீது கட்டப்பட்ட சமூக அமைப்பானது , இந்த பொருளாதார நலனுக்கு ஏற்றவாறாக உருவாக்கப்படும் கவ்வி, மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றால் உருவாக்கப்படும் சிந்தனைகள் எம்மிடம் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவை எம்மிடம் ஊறியுள்ளவை எவ்வாறு ஒரு அமைப்பை, அல்லது ஒரு தேசத்தின் தலைவிதியை மாற்றுகின்ற சக்தியாக விளங்குகிறது.
நீ இந்தச் சமூகத்தில் வாழவேண்டுமானால் சமூகத்துடன் ஒத்துப்போ அல்லது நீ விசரன் ஆக்கப்படுவாய். ஏனெனில் இச்சமூகும், தன் நலத்துக்கு எவ்வித பாங்கும் இழைக்கப்படக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது இதில் நீ குறிக்கிடுவாய் எனில் வேண்டப்படாதனவாய் ஆகின்றாய். இதன்காரணமாய் நீயும் மற்றவர்கள் போல் வாழவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றாய்.
சாதாரணமாக இச்சமூகத்தில் ஒரு மனிதன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கின்றார்கள். ஏனெனில் இச்சமூகமானது ஒருவரை ஏறி மிதித்தே வாழப்பழகிக் கொண்டுள்ளது. மேற்கூறியது போல் ஒவ்வொரு மனிதருடைய எதிர்காலமும் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டதாகவும் வாழ்க்கை கேள்விக் குறியைக் கொண்டதாகவும் இருப்பதால் மனிதர் தனக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவதில்லை. இங்கு எவன் வலுத்தவனோ அவனே தான் உயிர் வாழ்வான். அதாவது வலுத்தவன் வாழ்வான் எனலாம்.
மானப்பிரட்சினை மனிதன் ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் போது தாம் எடுத்த முடிவை சரியோ பிழையோ அதனை நிறைவேற்றியே ஆகவேண்டும் அம்முடிவானது மக்களுக்கு நன்மை பயர்க்குமா என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. அது மக்களுக்கு நன்மை பயர்க்காது எனறு தெரிந்தும் அதனை நிறைவேற்றவேண்டும் என பிடிவாதம் பிடிப்பது. எடுத்த முடிவை வாபஸ் வாங்க விருப்பமில்லை. ஏனெனில் கௌரவ பிரட்சினையாகின்றது. அதேவேளை எதிரியானவன் தன்னை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பது. நான் பெரியதா நீ பெரிதா என்ற ஆண்டான்அடிமைச் சிந்தனை வெளிப்பாடுகள் சமூகத்தின் பல தளங்களில் இருக்கின்றது.
தம்மை அரசியல் ஆய்வாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் செய்வது என்னவெனில் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து விவாதத்தை தொடங்கம் போது தமது நிலை மையமாகக் கொண்டு அதாவது தமக்கு இருக்கின்ற அரசியல் ஞானத்தை (மையமாகக்) கொண்டு, அதன் தரத்தில் இருந்து விவாதத்தை தொடங்குகின்றனர். உதாரணமாக திருவிளையாடல் திரைப்படத்தில் புலவருக்கும் நற்கீரருக்கும் விவாதம் போல இவ்விவாதமானது அடிநிலைக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதில்லை இடையில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் மூலம் குறைந்த பட்சம் ஆர்வம் உள்ளவர்கள் கூடவிவாதங்களில் பங்குபற்றமுடிவதில்லை இதன்காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதியினரே விவாதங்களில் கலந்து கொள்கின்றனர். இவ்ஆய்வாளர்களின் முறைமையானது ஒரு குறிப்பிட்ட குழுவை (elite) உருவாக்கின்றது. இக்குழுவே எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கின்றது. இவ்வாறு உருவாகும் சக்திகளை இரண்டாக பிரிக்கலாம் உண்மையாகவே பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் மற்றைய பிரிவினர் தாம் பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டுதான் இயங்குகிறேம் என பெயரளவில் கூறிக்கொண்டு தமது நலனை மாத்திரம் கவனத்தில் கொண்டு இயங்குபவர்கள் இவர்களின் செயற்பாட்டை உற்றுநோக்குமிடத்தில் இச்சமூகத்தில் காணப்படும் தொற்றுவியாதிகளை தம்மிடத்தில் வைத்துக்கொண்டும், அவ்வியாதிகளை தமது நலனிற்கு தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொண்டு உயிர்வாழ்கின்றனர். அதாவது தமது இருப்பை ஸ்திலப்படுத்துகின்றனர். (பிகு. சமூகத்தில் காணப்படும் சில தன்மைகள் - 1995களில் எழுதியது)
சமூகத்தில் இருந்து உருவாகும் உள்முரண்பாடுகளைக் கொண்ட மோதல்களாக சாதி, பிரதேசம், மதவாதம் அனைத்தும் இந்த சமூக அமைப்பின் உருவான சிந்தனைவடிவமாகும். இவை ஒவ்வொரு பொருளாதார அமைப்புக்கு ஏற்ப மாறுபடுகின்றது.
இன்றைய இளையோர்
வரலாறு எழுதுவதில் முரண்நிலை என்னவெனில் இளம் தலைமுறைகள் கட்டது பேரினவாத அரசின் ஒடுக்குமுறை யாகும். தெற்கில் ஒரு மாதிரியும் வடக்கில் ஒரு மாதிரியும் பாரபட்சமாக நடந்து கொண்ட அரசி்ன் நடவடிக்கைகளே இவர்களின் மனதில் இருக்கப்போகின்றது. 2004-2007 இடையிலே யாழ்ப்பாணத்தில் பல நூற்றுக்கணக்கான போராளிகள் கடத்திக் கொல்லப்பட்டனர். இறுதியில் முள்ளிவாய்க்காலில் இறந்த இரத்தம் தான் இந்தத் தலைமுறைக்கு தெரியும்.
இவ்வாறான வரலாறுகள் தமிழ் தேசத்திற்கான உரிமைக்கான போராட்டத்தில் எதிர்மறை விளைவைத் தான் கொடுக்கின்றது. இன்று மறைந்த போராளிகளினதும், பிரபாவின் மீது பக்தி கொண்ட ஒரு சமூகத்தில் சுயவிமர்சனம்- மீள்ளாய்வு என்பது கூட சிக்கலானது. நாம் விரும்பியோ விரும்பாமலோ. தேசிய இனத்தின் அபிலாசைகள் பூர்த்தி செய்யாது போது பிரபா தமிழ் தேசியத்தின் (icon - national symbol) சின்னமாக தோற்றம் பெறும். புலம்பெயர் தேசங்களில் புலிகளின் கொடிகளை கொண்டுசெல்வது, பிரபாவின் படங்களை கொண்டு செல்லது என்பது பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்படுத்தி ஏகாதிபத்தியங்கள், சிங்கள பெருந்தேசியவாதம் எமது போராட்டத்தை சிதைக்கும். இங்கு பிரபாகரன் மீதான பக்திக்கு அப்பால் மக்களின் உரிமை என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு அவசியமானதாகும்.
அரசியல் ஜனநாயகப்பண்புகள், குழிபறிப்புமற்ற, ஏமாற்றத்திற்கு திரும்பவும் இடம் கொடுக்கக்கூடிய நிலையில்லாமை இருக்கவேண்டும். இதனை விடுத்து பழைய குருடி, கதவை திறவடி என்பது போல் இருத்தல் கூடாது. இந்த அடிப்படையில் இருந்தே கடந்தகால போராட்ட வரலாற்றை ஆய்வுக்குட்படுத்துவது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
புதிய கோட்பாடுகளை உருவாக்குவதும் இன்றைய முக்கிய தேவையாகும். ஏனெனில் இவ்வுருவாக்கத்தின் மூலமே எதிர்காலப் போராட்டதை நேர்வழியில் செலுத்த முடியும் என்பது அபிப்பிராயமாகும்.
எந்த ஆட்சியிலும் மந்திரி
இலங்கையைப் பொறுத்தவரை எந்த ஆட்சியிலும் அமைச்சராக இருந்த பலரை நாம் குறிப்பாக 1977க்கு பின்னர் பலர் இருந்திருக்கின்றார்கள். இதில் மூன்று தேசிய இனங்களைச் (முஸ்லீம், மலையக, தமிழ்) சேர்ந்தவர்கள் பாகுபாடில்லாது அபிவிருத்தி அரசியல் செய்திருக்கின்றார்கள்.
இவர்கள் கூறுவது உரிமையை கேட்கின்ற போது மோதல்- சண்டை என்ற போக்கு இல்லாது சேர்ந்து செயற்படுவதன் ஊடாக நல்லதைச் செய்யலாம் எனப் போதிக்கின்றார்கள். முதலில் அரசியல்வாதிகளின் தங்கள் உயர்வர்க்க நலனை பாதுகாப்பதற்கு கூறும் ஒரு பதிலையேயாகும். இணக்க அரசியல் ஊடாக சாதித்துவிடலாம் என்பது போன்ற கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. (ஏகாதிபத்திய உலகில் இணக்க அரசியலுக்கு இன்னொரு பெயர் லொபி- தனிமனிதர்களை ஆபத்தாண்டவர்களாக முன்னிறுத்தும் போக்கையும் நாம் அவதானிக்க வேண்டும்) - உரிமைகள் என்பது யாசித்துப் பெறுவது அல்ல. அவை பிறப்புரிமை- பிச்சை எடுப்பது இல்லை. யாரும் யாருக்கும் பிச்சையாக உரிமை கொடுக்கத் தேவையில்லை.
இதனால் எவருக்கும் பணிந்து - கூனிக்குறுகி உரிமை பற்றி கேட்கவேண்டியதில்லை. மக்கள் இவ்வாறு உறுதியாக கேட்டுமிடத்தில் ஆயுதம் கொண்டு அடக்குவதுதான் அரசு. இதனைத் தான் இன்பம்- செல்வம் போன்றவர்களை இல்லாதொழித்த காலத்தில் இருந்து பலர் இல்லாதொழிக்கப்பட்டனர்- கைது செய்தனர். இதன் பின்னர் யுத்தத்தின் ஊடாக இனவழிப்பின் ஊடாக நடைபெற்று முடிந்தது.
கூட்டமைப்பில் இருக்கின்ற அமைப்புகளில் பல்வேறு பட்ட வர்க்கக் கூறுகளை கொண்டதாக இருக்கின்ற காரணத்தில் வெவ்வேறு திசைவழிப் போக்குக்களை காணமுடிகின்றது. இதனை புரிந்து கொள்ளாது தனிமனித குணாம்சமாக திரித்துப் பார்க்கின்ற பார்வையைத் தான் காணமுடிகின்றது. தனிநபர் வசைபாடல்கள் வர்க்கக் குணாம்சத்தை அறியவிடாது தடுக்கின்றது.
பொருளாதார ரீதியாக அன்னிய மூலதனத்தினையும் அன்னிய நலன்களையும் பாதுகாக்கும் வர்க்கத்தவர்களே (தரகு வர்க்கத்தவர் தமிழரசுக்கட்சியினர்). இந்த வர்க்கக் குணாம்சம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகத் தான் இருக்கும்.
இதனால் பல்வேறு கூட்டுக்களின் கலப்பே கூட்டமைப்பு இதனால் ஏற்படுகின்ற குழப்பங்களை பல்வேறு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. கூட்டமைப்பில் உள்ள முன்நாள் இயக்கங்கள் - கூட்டணி போன்றவற்றிற்கும் இடையேயான முரண்பாடுகளை இலகுவில் தீர்த்துக் கொள்ள முடியாது. முன்னைநாள் இயக்கங்களின் அரசியல் தவறுகளை வைத்தே அவர்களை எதிர்க்கொள்ளும் நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. புலிகளின் விசுவாசிகளுக்கே உரித்தான உணர்ச்சிவசப்படும் தன்மை, முள்ளிவாய்க்காலில் எவ்வாறு வீழ்ந்தோம்- வீழ்த்தப்பட்டோம் என்ற சுய பரிசோதனை இடம்பெற்றதா என்று கேள்விக்குறியே. இவ்வாறான பல தன்மைகள் கொண்ட நிலையில் தான் நடைமுறை உலகம் இருக்கின்றது.
Constitutional rights is different from institutional rights
அரசியல் உரிமை
நிலவுடமையின் சிதைவிற்கு மாற்றீடாக முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை சமூகக் கட்டுமானம் எங்கும் அறிமுகப்படுத்துகின்றது. கட்டுண்டு கிடந்த தொழிலாளர்களை சுதந்திரமாக சுரண்டக் கூடிய வகையில் தொழிலாளர்களை பிணைத்திருப்பதை முதலாளித்துவம் விரும்புவதில்லை. சட்டரீதியாக உரிமைகளை உறுதிப் படுத்துகின்றது இதன் ஊடாக அரசு தான் முதலாளிக்கு சார்பானவர் (அது எப்பவும் ஒரு வர்க்கம் சார்பானதுதான்) இல்லை என்பதை பிரகடனப்படுத்துகின்றது.
ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் ஜனநாயக உரிமைக்கான பரிமாணம் மாறிக் கொண்டு செல்கின்றது. கொலனித்துவ காலத்தின் பின்னர் குறைவிருத்தி கொண்ட நாட்டில் இருந்த மக்களின் உரிமை என்பது அதன் பரிமாணத்தில் இருந்து இன்று மாறியிருக்கின்றது. இலங்கை போன்ற நாடானது குறைவிருத்தி கொண்ட நிலையில் குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கோரிக்கைக்கான போராட்டம் கூட அவசியமாக இருக்கின்றது. மக்களுக்கும் சரி சமூக நலன் கருதி சிந்திப்பவர்களிடம் கூட மக்களிற்கான உரிமை இணைந்து சென்று பெறுவோம் என்ற நிலபிரப்பிரபுத்துவத் சிந்தனைதான் வேரோடி இருக்கின்றது. இவ்வாறான நிலையில் முதலாளித்துவ உரிமை என்ன என்பதைக் கூட தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். பழைய சமூக உறவுகளை முதலாளித்துவம் சிதைக்கின்ற போது அதற்;கு மாற்றாக சுதந்திரமான உற்பத்தி சக்திகளை (தொழிலாளி) பெறும் நோக்கோடு பற்பல அரச நிறுவனங்கள் ஊடாக உறுதி செய்கின்றது.
சலுகை- மானியம்- இலவசம் - சமூகக் கொடுப்பணவு
சோசலிச எழுச்சியின் காரணமாக சமூக நல அரசுகள் தோற்றத்தின் ஊடாக தனது குடிகளுக்கான சமூகக் கொடுப்பணவுகளை (institutional rights) உறுதி செய்து தனது குடிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் குறைவிருத்தி கொண்ட தேசங்களின் இவ்வாறான முதலாளித்துவ உரிமைகளை சலுகை என்ற நிலைக்கு எமது அரசியல்வாதிகள் கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் மக்களின் உரிமையை சோற்று நிகரானதாக மாற்றிக் கொண்டனர். தாம் கொடுக்கும் இலவசத்தின் ஊடாக தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதிலும் மக்களின் உரிமை வாங்கு வங்கி- சோற்றுக்கு மேலானது என்று மக்கள் உணர்ந்துவிடாதவாறு வெகுகர்ச்சிதமாகவே செயற்படுகின்றார்கள். சமூக நலவிடயங்களை அரச நிறுவனக்கட்டமைப்பு ஊடாக உறுதி செய்யப்படுகின்றது. இவை சட்டரீதியாக மக்களுக்கு கிடைக்கவேண்டியவையே. இதனையே மக்களின் உரிமையாக பிரகடனப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது.
இங்கு வடக்கு முதலமைச்சரின் கருத்தை இங்கு பொருத்திப் பார்ப்பது நல்ல. “நாங்கள், 67 வருடமாகத் தீர்க்கப்படாத எமது பிரச்சனை பற்றி சதா கூறிக் கொண்டு இருக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். பொருளாதார விருத்தியால் மட்டும் எமது மக்கள் குறை தீர்ந்து விடாது. பலாத்காரமாகப் பறித்ததைத் திரும்பக் கையளித்தால் மட்டும் எமது பிரச்சனைகள் நீங்கி விடா. சட்டப்படி சேர வேண்டிய உரித்துக்கள் அவர்களைப் போய்ச் சேரவேண்டும். 67 வருடங்களாக எமக்கு நடந்தது போல் எம்மை மீண்டும் அரசாங்கங்கள் ஏமாற்ற முனையக் கூடாது.” இணக்க - அபிவிருத்தி செய்த அரசியல் என்பது அடிப்படை உரிமை (institutional rights) என்பதை இங்கு கோடிட்டுக் காட்டுகின்றார்.
ஆனால் தேசிய இனங்கள் தங்களின் நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள், மொழி, கலாச்சாரம், மனப்பாங்கு மேலும் ஜனநாயக பண்பைக் கொண்டு வளர்த்துக் கொள்ள முடிவெடுக்கும் உரிமைகளே தேசிய இனங்கள் வேண்டிநிற்கின்றனர்.
இதனை தென்னிலங்கை இடதுசாரிகளும் சரி இணக்க அரசியல்- அபிவிருத்தி அரசியல் செய்பவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அபிவிருத்தி அரசியல்- நிறுவன (மேற்கட்டுமான) உரிமைகள் பற்றிப் பேசி சுயநிர்ணய உரிமையை கீழ்மைப்படுத்தும் அரசியல் செய்யப்படுகின்றது. அனைத்து மனிதவிரோதிகளும் ஒன்றுசேர்ந்து கொள்கின்ற போது இதற்கு எதிராக மக்கள் சக்தியை நம்பி மாத்திரமே போராட்டங்களை மேற்கொள்ள முடியும்.
இறுதியாக
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் தேசிய இனங்களின் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் அரசியல் நகர்வுகளாகவே இருக்கின்றது. அமைப்புக்கள் அரசியல்வாதிகள் தமது குறுகிய நலனுக்காக அரசியல் செயற்பாடுகளில் இறங்குகின்றனர்.
மக்களின் உரிமை பற்றி மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு உள்ளது. இவை 1983களின் நிலைக்குத் தான் செல்வவேண்டியிருக்கின்றது. அன்றையக் காலத்தில் அரசியல்மயப்படுத்தும் வேலைமுறையைக் கொண்டிருந்தனர். அன்றையப் பொழுதில் வடக்கின் ஒரு மூலையில் மலையகத்தைப் பற்றி அறிந்து அவர்கள் பற்றிய தீர்வை கோரிய நிலை அன்றைய காலங்களில் உருவாகியிருந்தது. மலையத்தைப் பற்றிய விபரத்தை அறிந்த மக்கள் அவர்களே மற்றைய இயக்கங்களிடம் கேள்விகேட்டார்கள். இங்கு மக்களிடம்அரசியல் மயப்படுத்தல் என்பது முக்கியமானதாகும். இவை கற்றல்கப்பித்தல் என்ற அடிப்படையில் இருக்கின்ற போது மக்களே அரசியலை இன்னும் திறமையான முறையில் வழிநடத்துவார்கள்.
02032015
30.03.2015
Comment as Velan
· · ·
stSa30p dloMofnasromegchrir 20eh1td5d ·
தமிழ் அரசியல்வங்குரோத்து நிலை!!
புலிகளின் வீழ்ச்சிடையடைந்து 6 வருங்கள் ஆகப்போகின்றன. எந்தக் கோரிக்கைக்காக தமிழ்ர் விடுதலைக் கூட்டணி, வட்டுக்கோட்டை தீர்மானம், பின்னர் இயக்கங்கள்கூடி திம்புக்கோரிக்கை என்பதை மறந்தும், அண்மைய 40 வருட வரலாற்றில் இருந்து பாடம்படிக்காது திக்குத் திசைதெரியாது அவர் அவர் தமது சிந்தனையில் அடிப்படையிலும், தத்தம் நலனின் அடிப்படையில் செயற்படுகின்றார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.
அடிப்படையில் பார்த்தால் தனிநபர்களின் இருப்பு சம்பந்தமானதாக சுருங்கிவிட்ட அவலம் தான் வெளிப்படுகின்றதேயன்றி. மக்களின் குறைந்த பட்ச ஜனநாயக உரிமையை நிலைநாட்ட நாட்டமில்லாது தரம்தாழ்ந்துள்ளது. மக்களின் உயர்ந்த ஜனநாயகக் கோரிக்கைகளை கீழ்நிலைக்கு கொண்டு செல்லும் கூட்டமைப்பாகும்.
இந்த அரசியல்வாதிகள் பரிசளிப்புவிழா, திறப்புவிழா, மத்திய அமைச்சர்களை இணைத்துக் கொண்டு படத்திற்கு பாவனை கொடுப்பது ஆங்காங்கே உதிரிகளாக அறிக்கை கொடுப்பது என்று சுருங்கி, சிதைந்த நிலையில் அரசியல் நடவடிக்கைகள் தரம் தாழ்ந்து உள்ளது. மாகாண சபை என்பது முழுநேர அரசியல்வாதிகளை தொழில்சார் முறையில் பயிற்றுவிக்கும் நிறுவனமாக சுருங்கி சிதைகின்றது.
தேசத்தின் (நேசன்) வளர்ச்சியை பிரிவினைவாதமாகவும், பயங்கரவாதமாகவும் கற்பிதம் செய்யும் சிங்கள- பௌத்த பேரிவாதத்திற்கு எதிராக செயற்படுவதை விட்டு சலுகைகளை உரிமையாக சமூகமயப்படுத்தும் தொழிலை மாகாணசபை உறுப்பினர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
அரசியல் ரீதியாக ஒரு நிலைப்பாட்டில் இயங்க முடியாத நிலை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முதலில் பலவர்க்க முகாம்களின் கூட்டே கூட்டமைப்பு இந்த முகாமில் அவரவர் வர்க்க நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தளத்தை நகர்த்திக் கொண்டு செல்கின்றார்கள். உண்மையில் அடிப்படையில் ஒரு அமைப்பில் கூட்டுச் சேர்ந்து இருக்க முடியாத நபர்களை தலைமையாகக் கொண்டதே கூட்டமைப்பு.
கூட்டமைப்போ- தமிழ் தேசிய முன்னணியையோ மென்னரசியல் என்று சமூகமயப்படுத்துவதும், மென்அரசியலுக்கு ஏற்ற பிரதிநிதியாக கொள்வது என்பது சமூக இயங்குதளத்தை சிதைப்பதாகவே இருக்க முடியும். மேற்குலகின் சிந்தனையை ஒட்டிய போக்கும். இணக்க- சமரச- நிலமானிய சிந்தனையூடு கூட்டு சேர்ந்தியங்கும் சிந்தனைப் போக்காகும். இது மக்கள் திரள் நடவடிக்கைகளை எதிர்க்கின்றது.
இங்கு பேரம் பேசும் சக்தி என்பது வாக்குவங்கியையும், ஆயுதப் போராட்டத்தினையும் கொண்ட சிந்தனை வடிவத்தின் எச்சப் பார்வையில் அமைந்த சிந்தனை வடிவம் என்பது மக்கள் திரள்பாதையை மறுக்கின்றது. மக்களின் உரிமையையும் அவர்களுக்கான கடமையையும் மக்களிடத்தில் கொண்டு செல்லவிடாது பார்வையாளர்களாக வைத்திருக்கும் போக்கிற்கும் ஒத்த நிலைதான்.
கொழும்பு- தில்லி- மேற்கு என காவடி எடுப்பதற்கு முன்னர் மக்களின் தங்கள் பலத்தில் கருத்துப் பலத்தை உருவாக்குவதும், அடிப்படை உரிமையை கொண்ட போராட்டங்களை மேற்கொள்வதும் முக்கியமானதாகும்.
இதில் விமர்சனங்களுக்கு அப்பால் ஆனந்தி அவர்களின் செயற்பாடு என்பது மிதவாத- சமரச- இணக்க அரசியலுக்கும், எஜமானருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்றதினால் கூட்டமைப்பு தலைவர்களின் சினத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்.
ரணில் முன்னெடுக்கும் தேச (நேசன்) கட்டமைப்பை சிதைக்கின்ற போக்கிற்கு ஈடுகொடுக்க முடியாது ரணிலுக்குப் பின்னால் செல்லும் அவலநிலைதான் கடந்த காணி ஒப்படைப்பு நிகழ்வினை ஒட்டி நடைபெற்ற சம்பவங்கள் காட்டி நிற்கின்றன. இதன் தொடர்ச்சியே ரணில் - விக்கி முரண்பாடாகும் இதுவும் இரண்டு போக்குக்கு இடையே நடைபெறும் மோதல்தான். இதில் தமிழ் மக்கள் விக்கியின் பக்கம் தான் நிற்க முடியுமே தவிர தமிழ் தேசத்தின் இருப்பை சிதைக்கும் கூட்டமைப்பின்- ரணில் நிலைப்பாட்டிற்கு அல்ல.
”நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.”
”வடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.”
தனியான மாநிலத்தை உருவாக்கி தனியான காவல்துறை அதிகாரத்தைப் பற்றி கதையுங்கள் ரணில்!! என்று கூட்டமைப்போ அல்லது மக்கள் திரள் அமைப்புக்கள் குரல்கொடுத்து எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். இங்கு மானில - மாகாண உரிமையை பறிக்கும் நிலைப்பாடாக கல்விதிணைக்களத்தின் மீதான ரணிலின் கருந்து உள்ளது. தமிழ்ப் பிரதேசம் சுயமாக இயங்கும் நிலைக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதனை கூட்டமைப்பு கவனத்தில் கொள்வில்லை இது பெரும் அவலம்.
இங்கு விக்கியை தீவிர தேசியவாதியாக போற்ற நினைப்பது தவறான நிலைப்பாடாகும். விக்கி அவர்களின் தொழில்சார் நிலையில் அமைந்த சிந்தனை வடிவம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கேற்ப உருவாக்கப்படும் சட்ட உருவாக்கதின் ஊடாக வந்த நபர் என்பதே அவர் இரண்டு தேசம்- இனவழிப்பு என்ற சர்வதேச சட்டவாக்கத்திற்கு துணையாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் மரபுசார்ந்த நிலைப்பாட்டிற்கு அப்பால் ஒரு தேசிய நிலை எடுப்பார் என்பது தவறான பார்வையே.
மகிந்த ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் சிங்கள பெருந்தேசியவாதிகளை ஆத்திரப்படுத்தக் கூடாது என்றும் எவ்வளவு காலத்திற்கு அரசியல் செய்து கொண்டு இருக்கப் போகின்றீர்கள். மகிந்த நிதிமூலதனத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்ப செயற்படுவாராயின் அவர் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுக்கமுடியாது. ஆனால் பௌத்த பெருந்தேசியவாதத்திற்கு அனுசரித்துக் கொண்டுதான் எந்த ஆட்சியாளர்களும் இருப்பார்கள். ஏன் ஜேவிபி கூட பௌத்த சங்கத்தை எதிர்க்கமாட்டார்கள். இங்கு தனியே பௌத்த- பெருந்தேசியவாதம் தரகு அணிமாத்திரம் தீர்மானிப்பதில்லை.
இங்கு மகிந்த - ரணில்- மைத்திரி என்ற சொற்சிலம்பத்தினுள்ள செயற்படும் அரசியல் என்பது தமிழ் மக்களின் நலனோ அல்லது ஏனைய தேசிய இனங்களின் நலன் சார்ந்தது அல்ல. இந்த அரசியல் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் தான் அனைத்து அரசியல்வாதிகளும் செயற்படுகின்றார்கள்.

No comments:
Post a Comment