Popular Posts

Thursday, 9 October 2025

இன்றைய அரசியல் போக்கு -3

 

 

 


இன்றைய அரசியல் போக்கு -3 (09/10/25)

 

 

தேசிய இனப்பிரச்சனை சம்பந்தமாக உரையாடல், மன்னார் கனிமவளம், காற்றாலை சம்பந்தப்பட்ட மக்களின் எதிர்ப்பு, செம்மணி புதைகுழி, ஐ.நா மனிதவுரிமை இவைகள் உரையாடல்களாக இருக்கின்றன. செம்மணி அணையா விளக்கு இனந்தெரியாதவர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பேரினவாதம் இல்லை இனத்தெரியாதவர்கள் என்றே நம்பிக் கொள்வோம்.

ஆயர்- அனுர பேச்சில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் காற்றாலை நிர்மாணப் பணிகளை தொடரப் போகின்றார்களாம்.  ஆயரின் சொத்த மக்கள் அல்லது மக்கள் என்ன ஆட்டு மந்தைகளா? மக்களை ஆட்டு மந்தைகளாக கருதுவது கற்காலச் சிந்தனை. அந்த சிந்தனையை இன்றும் தொடர முடியும் ஆயரோ அல்லது புரட்சிவாதி அனுர நம்புகின்றார் போலும். (மன்னாரில் காற்றாலைகளை அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதியுடன் நாங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை. மக்களுடன் கலந்துரையாடிய பின்னரேயே எமது தீர்மானம் அமையும். இதை ஜனாதிபதியிடமும் தீர்க்கமாகக் கூறியுள்ளேன் - இவ்வாறு மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார்.)

 

ஐ.நா இன்னும் இரண்டு வருடங்கள் கால அவசாசம் கொடுத்துள்ளதாம். அதற்கு முன்னர் விஜித தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டிருந்தார்.  ஐநாவில் ஊழல் தான் பெரிய விடயம் என்று அரசு பேசியிருந்தார். இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் தேசிய வீரர்களை  பாதுகாப்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

 

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் மார்க்சியர்களும் வெவ்வேறு பாதைக் கொண்டவர்கள். மார்க்சியம் தேசிய இனப்பிரச்சனை அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகக் கருதுகின்றது. ஆனால் முதலாளித்துவவாதிகள், நிலமானியப் சிந்தனை கொண்டோர் அரசு என்ற விடயத்தை ஏற்பதில்லை.  அரசு என்பதை தவிர்த்துவிட்டு எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாது. ‘‘அரசு சம்பந்தமான பிரச்ச்சினைகள் மக்கள் திரளால் தீர்க்கப்படவேண்டும் . ”   

 

அரசு என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களை கொள்கை வழியில் இருந்து சிந்திக்க கூடாது என்கின்றார்கள். அவ்வாறு நிலைப்பாடு கொண்டால் சுயநலமானதாகவும், வரட்டுவாதம் என்று வாதிக்கப்படுகின்றது.  ஏதோ மாகாண சபையை ஏற்றுக் கொண்டால்  வளர்ச்சி பெற்றுவிடுவார்களாம். அவ்வாறு செய்யாவின்

‘‘புலம்பெயர் நிதிகள் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு பயன்படாமல், ஒரு வெளிப்படையான அரசியல் உருவத்தைத் தக்கவைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன.” என்கின்றார்கள்.

இவர்கள் எந்த உலகில் வாழ்கின்றார்கள். இவ்வாறான கருத்துகள் அரசியல் பொருளாதாரம் விளங்காத மக்களுக்கு வேண்டுமென்றால் அது சரியான நிலைப்பாடாக இருக்கும்.

 

இலட்சிய மயக்கம்

இலங்கையில் உள்ள பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. ஏன் இவ்வாறு முரண்பட்ட கருத்துகள் முன்வருகின்றது. இதில் குறிப்பாக ஏக்கராட்சியத்தை வலியுறுத்தும் தமிழ் பிரிவு அழுத்தக் குழுவாக செயற்படுகின்றது.  அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனையை மடைமாற்றுவது குறிப்பிட்ட வர்க்கத்தின் நலன் சார்ந்ததாக இருக்கின்றது. முன்னைய கட்டுரைகளில் 13 இனை வலியுறுத்தும் பிரிவினரின் அரசியல் போக்கை விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்திய- லங்கா ஒப்பந்தம் என்பது அரசு என்ற விடயத்தை மறுக்கின்றது.

சிங்கள  தேசத்தின் எல்லைக்குள் வாழும் மக்களுக்கான தீர்வும்

தமிழர் தேசத்தில் உள்ளவர்களுக்கான தீர்வும் வெவ்வேறானவை.

இந்த அடிப்படையை விளங்காமல் கருத்து எழுதும் போக்கு இருக்கின்றது. இவர்கள் தெரியாமல் கருத்துரைக்கவில்லை. மாறாக மக்களுக்கான தீர்வினை குறுக்கு வழியில் பெற முடியும் என்று நம்புகின்றார்கள்.  ஆக அரசு என்பதை ஏற்காது இடைத்தரகரை-  ஆளுனர் வைத்தே ஆள முடியும் என்று நம்புகின்றார்கள்.

‘‘ஒரு நாட்டை ஆள்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழி ஒரு குழுவின் தலைமையிலோ, ஒரு மனிதரின் தலைமையிலோ, ஆளுநர்கள் வடிவில் வட்டாரங்களில் கரங்களும் கண்களும் கொண்ட, ஒரு "எளிமைப்படுத்தப்பட்ட" கருவியை வைத்துக் கொள்வதாகும். இது மிகவும் எளிய ஓர் அரசாங்க வடிவம் ஆகும், இதில் நாட்டை ஆள்வதில் ஆட்சியாளர், ஆளுநர்களிடமிருந்து வரக்கூடிய வகையிலான தகவல்களைப் பெற்று, தாம் நேர்மையுடனும் நன்றாகவும் ஆட்சி செய்து கொண்டிருப்பதாக நம்பி தன்னைத் தேற்றிக்கொள்கிறார். தற்போது உரசல் தோன்றுகிறது, உரசல் மோதல்களாக, மோதல்கள் கலகங்களாக வளர்கின்றன. பின்னர் கலகங்கள் நசுக்கப்படுகிறன. இந்த அரசாங்க அமைப்பு முறை நம்முடைய அமைப்பு முறை அல்ல. மேலும் கூடுதலாக, அது எளிமையான ஒன்றாக இருந்தாலும் மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும்.

வலதுசாரிகள் சமரசத்தையும், மக்களை சுரண்டும் கட்டமைப்பையும் பாதுகாக்கும் வழிமுறைகளைத் தான் முன்வைப்பார்கள். இவ்வாறானவர்களின் கருத்துகளை கவனிப்போம்.

‘‘கஜேந்திரகுமார் தொடர்ந்து மாகாணசபை அமைப்பையும் பதின்மூன்றாவது திருத்தத்தையும் எதிர்த்து வந்துள்ளார். மாகாண சபைகளுக்கு ஆதரவாக விளம்பரப் பிரச்சாரம் செய்யக்கூடாது என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு (DTNA) அழுத்தம் கொடுத்து வருகிறார்.” (ராஜ்)

இந்த விமர்சனம் என்பது மோடியான கருத்தாகும். ஏனெனில் இந்திய- லங்கா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு மாகாண சபையை நடத்தியவர்கள். அவர்களுக்கு மத்திய- மாகாண- பொதுப்பட்டியல் பற்றி நடைமுறை ரீதியாக அறிந்தவர்கள். அவர்கள் தோற்றுப் போன அரசியலை மீளவும் முன்வைப்பத விமர்சிக்கப்பட வேண்டியதே. சுமந்திரனும் ஏக்கராட்சியத்தை ஏற்றுக் கொள்ளும் வரதராசப் பெருமாளும் சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின் பின்னால் உள்ளது இந்திய வலைப்பின்னல் என்பது வெளிப்படை. வரதர் ஏற்கனவே 9 மாகாண தீர்வை முன்வைத்த பத்மநாபாயிசத்தின் பிரதிநிதி.  இவர்கள் ஏக்கராச்சியத்தின் பின்னால் செல்வது என்பது தமிழ் மக்களின் நலனின் இருந்து அல்ல.

வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியவர்கள். அதே மண்குதிரையில் தான் ஏறித் தான் சவாரி செய்வேன் என்பது ஏமாற்று அரசியலே.  

 

‘‘கஜேந்திரகுமாரின் எதிர்ப்பின் மையப்புள்ளி, சுமந்திரனுக்கு எதிரான தனிப்பட்ட விரோதமே என தெளிவாக தெரிகிறது. (ராஜ் சிவநாதன்) இந்த விமர்சனமும் கயமைத் தனமானது. அரசு என்ற விடயத்தை சுமந்திரன் வெளிப்படையாக மறுதலித்துள்ளார். இதனை குறிப்பிட்ட நபர் விளங்கிக் கொள்ளாவிடின் மற்றவர்கள் இவர்களை கடந்து செல்ல வேண்டியது தான். கஜேந்திரகுமார் தெளிவாகவே அரசு என்ற விடயத்தை முன்வைக்கின்றார். அரசு பற்றிய புரிதலை அறிந்திராத தனிநபர்களின் விமர்சனம் இவ்வாது தான் மோசடியானதாக இருக்கும். 

 

 

‘‘தமிழ் அரசியலுக்கு இன்றைய தேவை, பிளவை உருவாக்கும் அகங்கார அரசியல் அல்ல -ஒருங்கிணைந்த, பொறுப்பான மற்றும் ஒத்துழைப்பான தலைமைத்துவமே.” (ராஜ்)

ஐக்கியம் என்பது வட்டுக்கோட்டை, திம்பு அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு அப்பால் வேறு தெரிவு தமிழ் மக்களிடம் இல்லை. இவ்வாறான கருத்துருவாக்கிகள் சமூகத்தில் உள்ளார்கள்.

வலது சந்தர்ப்பவாதிகளிடம் உள்ள அரசியல் வறுமையையும், சந்தர்ப்பவாத அரசியலையும் மறைப்பதற்கு போட்டி, பொறாமை, வஞ்சகம்  நிலமானிய (Feudals mindset) சிந்தனைக்குள் நின்று அணுகுகின்றீர்கள்.

அரசு என்பதை தவிர்த்துவிட்டு எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாது. இந்திய- லங்கா ஒப்பந்தம் என்பது அரசு என்ற விடயத்தை மறுக்கின்றது. இதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது.

அரசு பற்றிய அரசியல் விஞ்ஞானம் உங்களுக்கு தெரியவில்லையெனில் மக்களை முட்டாள் ஆக்கும் வகையில் கருத்து வைக்காதீர்கள்.

இவ்வாறான குழப்பம் ஏன் ஏற்படுகின்றது என்பதை இளைய சமூகம் கற்க வேண்டும். முரண்பாடுகள் எங்கிருந்து தோன்றுகின்றது?

அதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதார உறவை தீர்மானிக்கும் சக்தியாக எவை இருக்கின்றது?

 

குறிப்பான விடயத்தை அறிவது

இலங்கை அரசியல் போக்கை விளங்கிக் கொள்வது சமூகத்தின் அரசியல் சக்திகளின் அரசியல் புரிதலைக் கொண்டு அறிந்திட வேண்டும். எதார்த்த நிலைமையை சரியாக ஆய்வு செய்யாவிடில், வர்க்க சக்திகளை அகநிலையாக மதிப்பீடு செய்வதும், அகநிலைவாத வழிகாட்டலும் தோன்றுவது வலது சந்தர்ப்பவாதமாகவோ அல்லது சாகசமாகவோ சீரழியும். அகநிலைவாதத்தை துடைத்தெறிய வேண்டும். அவ்வாறு இல்லாது அனுமதிப்பது தவறாக நிலைப்பாட்டிற்கு சென்றடைந்து விடும். இலட்சிய மயக்கத்தை துடைத்தெறிய உள்ள ஒரே வழி உண்மைச் சூழ்நிலையை பரிசீலனை செய்வதன் ஊடாகவே சாத்தியம்.

எந்த ஒரு சமுதாயத்தை ஆராய்கின்ற போது அதை திட்டவட்டமான வரலாற்று வரம்புக்கள் வைத்தே பரிசீலிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பற்றியதாக இருக்கின்ற வேளையில் வரலாற்று சகாப்தத்தில் அந்த நாட்டை இதர நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனி அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வர்க்கச் சக்திகள் பற்றி மதிபீட்டிற்கு வருவதும் மேலும் போராட்டத்திற்கான சரியான உத்திகள் வகுப்பதே சமூகம் மற்றும் பொருளாதார பரிசீலனையின் நோக்கம். வர்க்கங்களின் சமூக ஓட்டம் வெவ்வேறு தன்மையில் அமைந்திருக்கும் அவற்றையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.  பல்வேறு வர்க்கங்களாக இருக்கின்ற வேளையில் சமூகங்களாக கிராமத்திற்கும் நகரத்திற்குமான சிந்தனை பண்பாட்டு சிந்தனைக்கும் இடையில் மாறுபாடுகள் இருக்கும்.  பல்வேறு சமூக வர்க்கங்களின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அறிவது முக்கிய நோக்கம். வர்க்கங்களின் உறவையும் சமூகப் போக்கையும் விளங்கி வைப்பதன் ஊடாக சமூக பொருளாதார படிநிலையில் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் பல்வேறு வர்க்கங்களின் எண்ணிக்கையும் அறிய வேண்டும். ஒவ்வொரு விவசாயம், கடல்தொழில், கூலி உழைப்பாளிகள், வணிகத்தின் நிலையை மட்டும் பரிசீலனை செய்தால் போதாது; குறிப்பாக அவற்றுக்குள் நிலவும் வர்க்க நிலையை பரிசீலிக்க முடியும்.  

வர்க்கங்களின் அரசியல் நிலையே இன்று தீர்மானமாகின்றது. இதற்கு வர்க்கங்களின் சிந்தைனையையும், செயற்பாட்டையும் தீர்மானிக்கின்றது.

தேசிய முதலாளித்துவ வர்க்கம் (ஒரு நாடு இருதேசம்)

மிதவாத முதலாளி வர்க்கமும் சோசலிச சந்தர்ப்பவாதிகள் (ஏக்கராட்சிய)

இந்தப் பிரிவினரே அரசியல் களத்தில் உள்ளார்கள். இவர்களின் அரசியல் என்பது குறிப்பிட்ட வரையறைக்குள் தான் அமைந்திருக்கின்றது. அரசியல் பொருளாதாரத்தினை கற்கவில்லை எனில் விவாதங்களும், கருத்து முரண்பாடுகளும் தோன்றவே செய்கின்றன. இங்கு பொதுச் சொல்லாடல், பொது அணுகுமுறை என்பது ஏற்பட முடியவில்லை. முரண்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டே செல்கின்றன.

தமிழ், சிங்கள மிதவாத முதலாளிய வர்க்கமும் சோசலிச சந்தர்ப்பவாதிகளும் அரசு, சுயநிர்ணயம் என்பதை மறுத்து நிற்கின்றார்கள்.

இந்தப் பிரிவினர் அன்னிய சக்திகளுடன் இணைந்து கட்டளைக்கு பணிந்து போகின்றார்கள். சிலவேளைகளில் மக்களின் நலனுக்காக நிற்பவர்களாக காட்டிக் கொள்கின்றார்கள்.

பின்னர் சந்தர்ப்பவாத நிலைப்பாடும் எடுக்கின்றார்கள்.  அரசியல், தூதரக, ஊடக துறை சார்ந்த நபர்கள் கூடும் இடம், அரசியல் போக்கு என்பது ஒடுக்குப்படும் மக்களின் பக்கம் நிற்பதில்லை.

 தொடரும்

No comments:

Post a Comment