இன்றைய அரசியல் போக்கு -4
ஒற்றையாட்சியை- ஏக்கியராட்சிய ஏற்கும் தரப்பு
ஏக்கராட்சியத்தை மறுக்கும் தரப்பு இவை இரண்டிற்குமான அரசியல் உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே கட்சி அரசியலுக்கு அப்பால் உரைடயால்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தேசிய முதலாளித்துவ வர்க்கம் (ஒரு நாடு இருதேசம்)
மிதவாத முதலாளி வர்க்கமும் சோசலிச சந்தர்ப்பவாதிகள் (ஏக்கராட்சிய)
தவராசா, வரதராஜப் பெருமாள் ஆகியோரின் உரையாடலை கேட்க முடிந்தது. அதில் வரதர் முறையாகவும், முழுமையானதாக மாகாண ஆட்சி முறை இருக்க வேண்டும் என்கின்றார். இதில் மாகாண அரசு என்று கூறக்கூடாது என்று பிரேமதாசா காலத்தில் இருந்து சொல்லப்பட்டுவரும் ஒரு விடயம் என்கின்றார். தவராசா காணி உரிமை உள்ளது. அதனை பயன்படுத்த தமிழர்களுக்குத் தெரியவில்லை. ஒரு வீட்டை பயன்படுத்தாது விடின் அதன் கூரை, ஓடு, கதவுகளை ஊரார் தூக்கிச் சென்றுவிடுவார்கள் என்கின்றார்கள். இவ்வாறு ஒவ்வொன்றாக இழக்கப்படும்.
இவர்கள் அறிந்து பேசுகின்றார்களா? அல்லது அறியாமல் பேசுகின்றார்களா? இவர்கள் நிச்சயமாக அறிந்தே தான் பேசுகின்றார்கள். இவர்களின் சிந்தனையில் பின்னால் ஒரு வர்க்க நலன் உள்ளது. அந்த வர்க்க நலனே இவர்களைப் பேசவைக்கின்றது.
அதிகாரம் அற்ற சபை என்று கூறிவிட்டுச் ஓடியவரும் இவர் தான். ஏலக்கூடியது இது தானாம் என்கின்றார். வயது போன நேரத்தில் இளைப்பாறும் வரதர். 1985களில் பேசியது போல இப்போ பேசமுடியாது. தமிழர்கள் தேசமாக இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்காத காரணத்தல் இன்று தமிழர்களிடம் ஒன்றுமில்லை.
இன்னொரு பொறியியலாளர் கூறுகின்றார் 1980க்கு முன்னர் 15 விகித GDPஜ வடக்கு வழங்கியதாம் இப்போ 4 விகிர GDP வழங்குகின்றதாம். கிழக்கு 5.5 GDPஜ வழங்குகின்றதாம்.
இந்த பொறியியலாளருக்கு அரசியல் பொருளாதார அறிவு இருக்கின்றதா என்ற கேள்வி கேட்க வேண்டியுள்ளது. தமிழ் தேசத்தின் சேமிப்பு இருப்பு 1958, 61, 77, 81, 83, 2009 வரையில் சிதைக்கப்பட்டதை இந்த படித்த அறிவு படைத்த மனிதருக்குத் தெரியவில்லை.
இங்கு பலர் அரசியல் தளத்தில் உலாவுகின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களிடம் எதிர்காலம் இல்லை. அதற்கு ஏற்ப தம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றார்கள்.
‘‘தமிழ் மக்கள் மத்தியில் நாம் எவற்றைச் சாத்தியமற்றவையென்றும் தவறானவையென்றும் மக்களுக்கு விரோதமானவையென்றும் கூறிவந்தோமோ அவை தீங்கானவை என இன்று மக்களின் பேரழிவுக்கு மத்தியில் நடைமுறையில் நிரூபணமாகி உள்ளது. (ப.3 வ- மு வரை சிகாசி.)
அரைகுறை மார்க்சியத்தை படித்துவிட்டு திண்ணையில் தூங்கும் திரிபுவாதிகள் இந்த உரையாடலில் கலந்து கொள்வதில்லை. இன்னொரு பிரிவு சமவுரிமை என்று அழுத்தக் குழுவாக தன்னைக் முன்னணி அமைப்பாக காட்டிக் கொண்டு லங்காவின் கட்சிக்கு நேர்மையாக செயற்படுகின்றது. ஒரு கட்சியில் இருந்து இரண்டு முன்னணிகள் செயற்படுகின்றன.இதன் அரசியல் போக்கு என்பது சிங்கள பௌத்த பேரினவாத- சமூக தேசியவாதத்திற்கு உட்பட்டதே.
யாப்பு பற்றிப் பேசிக் கொள்கின்றார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்பது அவர்களின் வாழ்வியல் அனுபவம் மட்டுமே சான்றாகவும், சமூக உண்மையாகவும், முடிவாகவும் முன்வைக்கப்படுகின்றது.
இதில் கலந்து கொள்ளும் இரண்டு நபர்களும் தேசியத்திற்கான வரையறை வெவ்வேறு கால கட்டத்தில் தாமே முன்வைத்ததாக கூறுகின்றார்கள். சரி இவர்களின் பெருமையை, சுயஇன்பத்தை நாம் குழப்பத் தேவையில்லை.
தேசியம் பற்றிய வரையறை ஏங்கெல்ஸ், மார்க்ஸ், லெனின் கொடுக்கவில்லை. அதனை முன்வைத்தது ஸ்ராலின். ஸ்ராலின் வரையறை அன்று சமூக ஜனநாயகக் கட்சியின் பேராயத்தில் லெனின் முன்நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவே இன்று பொது விதியாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது.
தேசிய இனச் சிக்கல் என்பது அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை. அந்தப் பிரச்சனையை முடிந்த வரையில் தவறாக வழிகாட்டுகின்றார்கள். அரசியல் முன்னெடுப்பு என்பது மக்கள் விரோதமாக இருக்கின்றது.
13 இணைப் பற்றியே இவர்கள் பேசிக் கொள்கின்றார்கள். மத்தியப் பட்டியல், பொதுப்பட்டியல், மாகாண பட்டியல் என்று சொல்லப்பட்டாலும் இவைகள் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு உப ஆட்சி வடிவம். இந்த உப ஆட்சி வடிவம் என்பது இருக்கும் உரிமைகள் மத்திய அரசியல் பறிக்கப்பட முடியும். அவ்வாறு பறிக்கப்பட்ட வரலாறாற்றை வரதராசப் பெருமாளின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. ஏன் அவை பற்றி வரதர் பேசுவதில்லை.
தமக்கு இருந்த அச்சுறுத்தல் பற்றியே பேசிக் கடந்து விடுகின்றார். திருமலையில் பாதுகாப்பு அரணுக்குள் இருந்து தான் ஆட்சியை நடத்தினார். அதிகாரம் அற்ற நிலையில் அவர் பேசிய விடயங்களை இன்று பேசவேண்டியது தானே. அந்த அரைகுறை தீர்வு முழுமை அற்றது என்பது தான் அன்று தோன்றிய முரண்பாடு.
அந்த முரண்பாடு என்பது அரசு பற்றியது என்பதை சந்தர்ப்பவாதமாக கடந்து செல்கின்றார்கள். பொதுவெளியில் அரசு பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் சந்தர்ப்பவாதமாக கடந்து செல்ல முடிகின்றது.
தமிழர் தேசமாக இல்லை!
தமிழர் தேசமாக இல்லை என்ற வாதம் ஒன்றும் புதிது இல்லை. இது ஏற்கனவே தலித்தியவாதிகளால் முன்வைக்கப்பட்டு வருவதே. வரதர் 1985களில் இருந்தது போல தமிழர் தேசமாக இல்லை என்கின்றார். இது ஒரு அபத்தமான கருத்தாக்கம். வரதரால் பண்பாட்டுத் தேசியவாதத்தின் போக்கை கவனிக்காது கடந்து சென்று விடுகின்றார். அதுவேளை தமிழர் தேசத்தவர்கள் இடம்பெயர்வு என்பது சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் விளைவு என்பதையும் கடந்து செல்கின்றார்.
வரதரின் தேசிய வரையறை என்பது அவரின் சுயகண்டுபிடிப்பு அல்ல. வரதர் கூறுவதால் தமிழர் ஒரு தேசம் இல்லை என்று ஆகிவிடாது. மார்க்சியத்தில் இருந்து விலத்திச் சென்ற பின்னர், சுயநிர்ணயம் என்பதில் அகன்று சென்ற பின்னர். இங்கு எவரும் புனிதர் வேடம் போட வேண்டியதில்லை. அதிலும் இனவழிப்பாளி கோத்தபாயவிற்கு வாக்குக் கேட்ட திரிபுவாதி பத்மநாபாவின் வாரிசுகள். இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்க வேண்டிய தேவையில்லை.
தேசம் என்ற அடிப்படையில்
சிந்திக்க வைக்காத அரசியல் போக்கு, சமூகப் போக்கு சிதைக்க வேண்டும். மொழி, பொருளாதாரம், நிலம், பண்பாடு இவற்றை சட்டவாதத்தினுள் மடைமாற்றி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சிங்கள பௌத்த பேரினவாதம் செயற்படுகின்றது. இதற்கு ஏற்றால் போல் ஏக்கராட்சியத் தரப்பு செயற்படுகின்றது.
படை அதிகாரம்
1990 சட்டம் 1ன் படி ஜனாதிபதி கையெழுத்து இட்டால் அன்றிலிருந்து சட்டம் அமுலுக்கு வரும் என்கின்றார். இந்த விவகாரம் 1990களில் விவாதிக்கப்பட்ட விபரமே. மத்திய அரசின் கீழ் உள்ள பொலீஸ் மா அதிபரின் கீழ் தான் கட்டுப்பட்டு இருக்கும். அது சுதந்திரமான அமைப்பாக இருக்காது என்ற விமர்சனத்தை கடந்து செல்கின்றார்களா?
காவல்துறை அதிகாரம் என்பது தேசிய படையை அமைத்துக் கொள்ளும் உரிமை என்ற அடிப்படையில் பேசப்பட வேண்டும். தேசியப் படை என்பது தேசங்கள் தமக்கான படையை உருவாக்கிக் கொள்வதில் அடங்கியிருக்கின்றது. இவை பற்றிய நிலைப்பாடு கொண்டவர்கள் இங்கு யார் உள்ளார்கள்?
தேசியப் படையைப் பற்றி பேசவேண்டியவர்கள் மார்க்சியவாதிகள் மௌனமாக உள்ளார்கள்.
154 F முதலமைச்சரின் ஆலோசனையின் படிதான் கவனர் செயற்பட வேண்டும். eide and advice. இதே வரதர் காவல்துறை பற்றிய பிரச்சனையில் அன்று பிரேமதாசாவுடன் முரண்பட்டார். இதை இன்று அவர் மறைப்பது ஏனோ?
காணி உரிமை
காணி உரிமை இருக்கின்றது ஆனால் தமிழர்களுக்கு பயன்படுத்த தெரியவில்லை என தவராசா கூறுகின்றார். ஆனால் தேசத்தின் கீழ் வரவேண்டிய காணி அதிகாரம் பற்றிய புரிதல் தவராசாவிடம் இல்லை. முடிக்குடிரிய காணிகள் (crown land issue) தமிழர் தேசத்திற்குள் வரவேண்டும் இது தான் அரசியல் நிலைப்பாடு. ஆனால் இது பற்றி இந்த ஏக்கராடசியப் பிரிவு துல்லியமாகவும், கட்டுடைத்தும் பேசுவதில்லை.
அபிவிருத்தி அரசியல்
அபிவிருத்தி அரசியலை முன்னெடுப்பதன் ஊடாக இறைமை அரசியலை நீர்த்துப் போக செய்ய முடியும் என்று நம்புகின்றார்கள்.
நியதிச் சட்டங்கள்
நியதிச் சட்டங்கள் நிறைவேற்றி மாகாண சபையை இயங்க வைக்க முடியும் என்கின்றார்கள். நியதிச் சட்டம் நிறைவேற்ற முடியாவிடின் நீதி மன்றத்தை நாடலாம். (சட்டவாதக் கனவான்களின் இம்சை இது தான்) இதனை சவாலுக்கு உட்படுத்தினோமா? இந்திய மாதிரிப் படிவம், வியாக்கியானங்கள் இவைகள் எல்லாம் ஒன்றா? கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறு, வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்கின்றனர். இந்தியாவில் இருக்கின்றது என்றாலும் அங்கே சுயநிர்ணயம் இல்லை என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.
996 மாகாணப்பாடசாலை 13 (??) தேசிய பாடசாலை இது அதிகாரம், நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் அடங்கியுள்ளன. தமிழ் மக்களுக்கான பாடத்திட்டம் பற்றிய பிரச்சனை உள்ளது. பாடத் திட்டம் பற்றிய பிரச்சனை பொதுவெளியில் பேசப்படுவதில்லை.
77 வைத்தியசாலை- இதை நிர்வாகம் செய்ய முற்படுவதில்லை. வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள், ஊழல், தனியார் மருத்துவமனைப் பிரச்சனை போன்ற விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் அதிகாரம் இல்லாத நிலையில் எதையும் சீர் செய்ய முடியாது. நிர்வாகத்தை சீர் செய்யத் தெரியவில்லை. அதனை மத்திய (லங்கா) அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாக்கம் anarchist மருத்துவரால் முன்வைக்கப்பட்டது.
பொதுப்பயன்பாட்டு மருத்துவ நிர்வாகம் அதிகாரம் இருந்தால் தான் செயற்படுத்த முடியும். இங்கும் அரசியல் அதிகாரம் இல்லாவிடின் எதுவும் செய்துவிட முடியாது.
supreme court ற்குத் தான் நாட்டின் யாப்பையும், சட்டவரைவையும் பொருள்கோடல்- வியாக்கியானப் படுத்தும் பொறுப்பு உள்ளது. அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. 9 நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பு கொடுத்துவிட்டது. 32 தீர்ப்புகளில் (2010) உள்ளது.
பாராளுமன்றம் அரசியல் தீர்வு என்பது சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு உட்பட்டது. அதிலும் தம்மை இடதுசாரிகள் என்கின்றார்கள். வரதர், தவராசா போன்றவர்கள் தம்மை இடதுசாரி என்கின்றார். ஏன் இவர்களால் இன்றைய அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான பிரச்சனையை முன்வைக்க முடியவில்லை. மாறாக தமிழ் மக்களை இணைந்து போ என்றே வகுப்பெடுக்கின்றார்கள்.
மாகாண சபை நிதியம்- முதலமைச்சர் நிதியம் இது பற்றிய தவராசாவின் கருத்து அபத்தமானது. மாகாண சபை நிதியம் என்றிருந்தால் சிங்கள தேசம் ஏற்றுக் கொண்டிருக்குமாம்.
இறைமையை தாரைவார்ப்பது
``சிங்கள மக்களுக்கு #சமஸ்டி என்னும் சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனைப் போல தமிழ் மக்களுக்கு #ஒற்றையாட்சி என்று சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது.”
Undivided- indivisible
``பிளவு படாத பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை ஆங்கிலத்தில் undivided and Indivisible country அதனை சிங்களத்தில் Nobethunu, Bethanna Noheki ஒரு நாடு ஒரு நாடாகவே இருக்கும் என்பதை மட்டும் சொல்வதாக தீர்மானித்து ஆட்சி முறையை குறிக்கிற சொல்லை நீக்கி நாடு ஒரு நாடு என்பதை விவரிப்பதான கூற்றாக அது மாற்றப்பட்டது.”
Undivided- indivisible இந்த இரண்டு சொல்லாடல் என்பது பெரும் அர்த்தம் பொருந்தியது. இறைமையை முழுமையாக ஒப்படைத்துவிடுவது ஆகும். இதனை ஏன் ஏற்றுக் கொள் என்று தமிழர் தரப்பு விளக்கம் கொடுக்கின்றார்கள்? சுயநிர்ணயத்தை எவ்வாறு விட்டுக் கொடு என்று தமிழ் தரப்பால் சொல்ல முடிகின்றது. இன்னொரு படி சென்று ஒற்றையாட்சிக்கு வியாக்கியானம் கொடுக்கின்றார்கள்.
அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
தமிழ் தேசத்தினை காயடித்தல்
அரசியல் அற்ற தேசத்தின் மக்கள் கூட்டமாக்குவதே இவர்களின் வேலையாக இருக்கின்றது. குறிப்பாக தேசம், சுயநிர்ணயம், தேச அரசு என்ற விடங்களை முடிந்தவரையில் அரசியல் நீக்கம் செய்து அகற்றுவதாகும். ஏற்கனவே ஆயுதப் போராட்டத்தை (dismantle சமூகத்தளத்தில் இருந்து அகற்றி விட்டார்கள்.
இனி அடுத்த கட்டம் அரசியல் தளத்தில் அகற்றிவிடுவது (dismantle) இதற்காக இறக்கி விடப்பட்ட நபர்கைள் தீயாக வேலை செய்கின்றார்கள். தமிழ் மக்களை அரசியல் போராடாது, இயங்கு நிலையை சிதைத்துக் கொள்ளும் போக்காகும். தமிழ் சமூகத்தில் உள்ள அரசியல் இயக்கத்தை முடக்குவது தான் இவர்களின் வேலை.
சுயநிர்ணயம் என்பரே அரசு பற்றிய பிரச்சனை. அரசு பற்றி மீள மீள பேசவேண்டியிருக்கின்றது.
தொடரும்
பிற்குறிப்பு- முன்னைய குறிப்புகளையும் இணைத்து வாசிக்கவும்

No comments:
Post a Comment