(பதவிற்கு வருவதற்கு முன்னர்- இது வேறவாய்- இப்போ வேறவாய்)
இன்றைய அரசியல் போக்கு- 5
அரசியல் உரையாடலை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதே ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. இந்த உரையாடல்கள் ஒடுக்கப்படும் மக்களின் தேவையில் இருந்து பேசுவதா அல்லது கட்சிகளின் அரசியல் நிலையில் இருந்து பேசுவதா? என்பதே சிக்கலாக இருக்கின்றது. ஆனால் பொதுவாக கட்சி சார்ந்த நிலையில் இருந்து அரசியல் பேசப்படுகின்றது. இதன் ஊடாக அரசியல் நீக்கம் செய்ய முடிகின்றது. தமக்குத் தேவையான கருத்துக்களையும், திரிந்த செய்திகளையும் வெளியிடுவதன் ஊடாக தம்மை நிலை நிறுத்த முயற்சிக்கின்றார்கள். தமது போக்கே யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக கூறுகின்றார்கள்.
மறுபுறத்தே NPP/JVP என்கின்ற அரசியல் அமைப்பின் செயற்பாட்டினை வழிநடத்தும் JVP யின் மையக் குழுவின் அரசியலை விளங்கிக் கொள்ளாத போக்கும் உள்ளது. மீள மீள சொல்வது JVPஇன் உயர்அரசியல் பீடத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியே தான் நாட்டின் ஆட்சி நடைபெறும். நாட்டின் ஆட்சி என்பது சிங்கள பௌத்த பேரினவாதக் கூறுகளை வெளிப்படையாக அது கேள்வி கேட்கப் போவதில்லை.
நிகுநெகும
திடீர் இடதுசாரிகள், புரட்சியாளர்களாக வலம் வரும் விடலைகள் இதனை விளங்கிக் கொள்ளப் போவதில்லை. அவர்களின் கருத்துகள் தாமே அமைப்பின் மைய உறுப்பினர் என்ற பாங்கில் செயற்படுகின்றார்கள். நிகுநெகும முறைமையின் கீழ் பசில் எவ்வாறு வடக்கை நிர்வகித்தாரோ அதே பாணியில் தான் இன்றைய அரசாங்கமும் செயற்படுகின்றது. இந்த அடிப்படையில் மாகாண சபை முறைமை NPP/JVP க்கு அவசியமில்லை. இது இன்றைய இந்திய ஆட்சியாளர்களுக்கு முரணாக இருக்கப் போவதில்லை. 370 பயன்படுத்தி காஸ்மீரை துண்டாடிய ஆட்சியளர்களுக்கு இவை பெரிய விடயமாக இருக்கப் போவதில்லை. இந்திய அரசியல் கொள்கை சுயநிர்ணயம், அதிகாரம் போன்ற விடயங்களில் அதிக அக்கறை கொள்ளப் போவதில்லை. ரில்வின் சில்வா இந்திய சென்று 13ம் பற்றி விளக்க உள்ளாராம். இந்திய ஆட்சியாளர்கள் புதிய பேயை உருவாக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.
வூட்றோ வில்சன் அல்லது அனைத்து முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கு சுயநிர்ணயம் என்பது நிபந்தனைக்கு உட்பட்டதே. அது மலிந்த மூலப் பொருள், மலிந்த மொழிலாளிகள், தமக்குத் தேவையான ஆட்சியாளர்கள் கொண்டதேயாகும். இதன் ஊடாக இன்னொரு தேசத்திற்கு அல்லது நாட்டிற்காக சேமிப்புச் சக்தியாக இருக்கின்றது. இராணுவத் தளங்களை உலகின் பல பாகங்களிலும் நிறுத்தி வைத்து நாட்டாமை செய்யும் உலகப் போக்கு காலத்தில் வாழ்கின்றோம். பெரும் வல்லரசுகள் தமது தேவைக்காக அமையான முறையிலும், ஆயுதங்கள் ஊடாக ஆட்சிகள் மாற்றப் பெறுகின்றன.
உழைப்பாளிக்குச் சுயநிர்ணயம் என்று பேசும் தரப்பு இடதுசாரிய முகாமுக்குள் இருக்கின்றது. இந்த தரப்பே இனமதகுலமற்று ஒன்றாக இணைவோம் என்கின்ற பிரிவாகும். இனமதகுலமற்று என்று மதம், மதவாதிகளின் விண்ணுலகினை நோக்கிய கருத்தாக்கம் போன்றதாகும். இந்தப் போக்கு கற்கால சிந்தனை மரபை பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் போக்காக இருக்கின்றது. அவேளை இடதுசாரியம் அல்லது மார்க்சியம் என்பது இவ்வாறு தான் இனமதகுலம் சமூகம் ஒன்றிருக்க முடியும் என்ற அடிப்படையில் உரையாடப்படுகின்றது. சமூகத்தை ஒற்றைப் பரிமாணத்தில் சிந்திக்கின்றார்கள். இதன் பின்னால் முன்னர் ஈழ விடுதலைபேசியவர்களும் கரைந்து சென்றுள்ளார்கள். முன்னால் ஈழவாதிகள் இன்று சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்ட பின்னர் இவர்களிடம் இருந்த நேர்மையும் இல்லாமல் போய் விட்டது.
நிலப்பிரபுத்துவ சமூக எச்சத்தையும், முதலாளித்துவ அரசியலையும் ஆதரிப்பவர்களேயாகும். அரசை மறுப்பவர்கள் அராஜகவாதிகளாக (Anarchist) இருக்க முடியுமேயன்றி மார்க்சியர்கள் அல்ல. சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்பதும் போலித் தனம் என்கின்றனார்.
சுயநிர்ணயம்- 13
தமிழ் கட்சிகள் தமக்குள் ஒருவரையொருவர் மோதிக் கொள்கின்றார்கள். ஆயுதப் போராட்டம் பற்றிய எண்ணப்பாடு 1969களில் ஏற்படுகின்றது. சுயநிர்ணயம், ஆயுதப் போராட்டம் என்ற அப்படையில் உருவாக்கபட்டது தான் தமிழ் மாணவர் பேரவை. அதில் மூத்தவர்கள் சத்தியசீலன், முத்துக்குமாரசாமி, சிவக்குமார், கிபி அரவிந்தன், இலங்கைமன்னன் போன்றவர்கள் இருந்தார்கள். இந்தப் பிரிவு ஆயுதப் போராட்டம் பற்றிய நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்தார்கள்.
அமிர்தலிங்கம் -தமிழரசுக் கட்சியினால் உருவாக்கப்பட்டதே தமிழ் இளைஞர் பேரவை. அது அமீரின் அடியாள் கூட்டமாகவே இருந்தது. இந்தப் பிரிவே அமீரின் செயற்பாட்டிற்கு மாத்திரம் அல்ல. ஆயுதப் போராட்டம் பற்றிய கருத்துக் கொண்ட இளைஞர்களை மடைமாற்ற இறக்கப்பட்டவர்கள். இதில் புஸ்பராசா, வரதர், மாவை போன்றவர்கள் அங்கம் வகித்தார்கள். 1973ற்கு பின்னர் தான் வரதர் அரசியலுக்குள் வருகின்றார். இந்தக் காலத்தில் தான் முழுமையான செயற்பாட்டுச் சக்தியாக இருக்கவில்லை என்றே அவரின்
அதிலும் சிறை உடைப்பின் பின்னர் தீவிர அரசியலுக்கு வந்தவர்கள் தான் வரதர்.
அரசை மறுக்கின்ற இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வகித்தார். அன்று இந்தியத்தின் அடியாள செயற்பட்ட பின்னர் மீளவும் வந்து 13 ஆக பேசுகின்றார்.
அமைப்புத்துறைப் பிரச்சனை, மூலோபாயம், தந்திரோபாயத்தில் ஏற்பட்ட பிரச்சனையை வைத்து அரசியல் ஆய்வே நடத்திவிட முடியாது. அவ்வாறான உரையாடல் அர்த்தமற்றவை. இன்று வந்தடைந்த சமூக நிலை, தேக்கநிலை, அடுத்த கட்டத்திற்கான வழிபற்றி பேசப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சனையில் மரபார்ந்த இடதுசாரியம், வலதுசாரியத்தின் துரோகத் தனம் பேசுவது தான் அடுத்த கட்டத்திற்கு வழியைத் திறக்கும்.
மாறாக இயங்காவாதிகள் போன்று கடந்த காலத்தில் வாழ்வது அல்ல. வரலாற்றில் கடந்த காலத்தில் வாழ்வது தனிமனித வாழ்வை பாதிப்பதில்லை. ஆனால் மக்கள் கூட்டத்திற்கு பெருங்கேடு. மக்கள் கூட்டத்திற்கு கேடுவிழைவிக்கும் கருத்து பேச்சுரிமை என்ற பெயரில் தொடர்கின்றது. அப்படையில் இது வலதுசாரிய நச்சு விதைக்கப்படுகின்றது. சமூகக் கட்டத்தை மறுக்கும் கருத்துகள் அவை பிற்போக்கானவையே.
மாகாண சபைக்கு அதிகாரம் உள்ளதாக உளறும் பேர்வழிகளுக்கு சிங்கள தேசம் முன்னெடுக்கும் அரசியல் பற்றி புரிதல் இல்லை. காவல்துறை என்பது தேசிய படை பற்றிய பிரச்சனை என்பதையும் வரதர் விளங்கிக் கொள்ளவில்லை.
கல்வி அதிகாரம்
தவராசா கூறுகின்றார் 13 தேசியப் பாடசாலைகளை விட மற்றைய பாடசாலைகளை திறம்பட செயற்படுத்த முடியும் என்கின்றார். ஹரிணி இரண்டு மொழிகளையும் இரண்டு மொழி மக்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார்கள். இங்கு இணைப்பு மொழி என்பது காவல்துறையிடம் உள்ள பொல்காங்க கட்டை போன்றதாகும்.
இலங்கையில் உள்ள கல்விமுறை சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. கல்வித் திணைக்களத்தில் வேலை செய்யும் ஊழியர்களும் கல்வித் திணைக்களத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டே தமது பணியைச் செய்ய வேண்டியுள்ளது.
வரலாறு 6- 11 வகுப்புவரையில் அதாவது க.பொ.த சாதாரண பரீட்சை வரையில் வரலாறு கட்டாயபாடமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பாடத்தில் சித்தியடைந்தால் மாத்திரமே. உயர்தரக் கல்வியை (க.பொத.உ.க) பெறமுடியும். தேசியக் கல்வி நிறுவனம் பாடத்திட்டத்தை தயாரிக்கின்றார்கள். அதனை மொழிபெயர்ப்புச் செய்கின்றார்கள். அதனை பாடவெளியீட்டுப் பிரிவு அதனை வெளியிடுகின்றது.
சிங்கள தேசத்தின் வரலாறே மொழிபெயர்ப்புச் செய்யப்படும். மொழிபெயர்ப்பில் ஏதாவது மாற்றம் வரும் போது ஆலோசனை கொடுக்க முடியும் என்று சம்பிரதாயத்திற்கு ஒப்புக் கொள்வார்கள். ஆலோசனை கொடுத்தாலும் சிலவிடயங்களை ஏற்றுக் கொள்வது போல சிலவற்றை ஏற்பார்கள். ஆனால் மாற்றங்கள் எதனையும் ஒப்பிட்ட ரீதியில்ஏற்றுக் கொள்வதில்லை. வரலாற்று பீடங்களுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் சிங்கள பௌத்த பிக்குகளின் பின்னணியை கொண்டவர்களே. சிங்களச் சொற்கள் திணிக்கப்படுவது பற்றி ஆட்சியாளர்களோ, கல்விப் பின்புலம் கொண்டவர்களே அக்கறை கொள்வதில்லை. சிங்கள மொழிக்கு ஈடாக தமிழ் சொற்கள் இருக்கின்ற போதும் சிங்கள சொற்கள் பயன்படுத்தப்படுகின்றது.
பரீட்சையில் சிங்களச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஏன் அவ்வாறான ஒரு நிலையை தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்பதை முற்போக்கு ஜனநாயக சக்திகள் கேட்பதில்லை. சிங்கள மொழி திணிப்பு மொழியாக்கம் செய்கின்ற போது கலைச் சொற்கள் சிங்களத்தில் உள்ளவாறே மொழிமாற்றம் செய்யப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக யம்பு கோளப்பட்டினம்- காங்கேயன்துறை
ஜகதீப- யாழ்ப்பாணம்
லங்கா பட்டினத்துறை- திருகோணமலை
ஏன் போத்துக்கேய சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதே. ஏன் இவ்வாறு சிங்கள மொழிச் சொற்கள் பயன்படுத்தும் போது தமிழ் தேசியவெறியர்கள் பதறுகின்றார்கள் என்ற எதிர்க் கருத்து முன்வைக்கப்படும்.
22 விழுக்காடு மாணவர்கள் பரீட்சையில் தோல்வியுறுகின்றார்கள்.
ஆசிரியர்கள் பரீட்சைக்காக மட்டுமே படிப்பிக்கின்றார்கள். இந்த ஆசிரியர்களின் நிலை என்பது
மொழிப்புலமை கொண்ட ஆசிரியர்கள்-
நிர்வாகத்தில் 2 விகித தமிழ் மொழியைத் தெரிந்தவர்கள் தான் பொறுப்புக்களில் இருக்கின்றார்கள். இதிலும் தமிழ் மொழியில் அதிவிசேட தேர்ச்சி பெற்றவர்களாக அங்கு பெரும்பான்மையானவர்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு போதிய மொழியாளுமை இருப்பதில்லை.
புத்திஜீவிகளை மௌனமாக்கல்
ஈழ ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் சிங்கள தேசம் முன்னெடுக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் மௌமாக கடந்து போகவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கின்றது. இவைகளை நீங்கள் சட்டரீதியா நிறுவிட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் அழுத்தம் என்பது அரசியல் ரீதியாக நிறுவனமயப்படுத்தப்பட்ட சூழலில் தனிநபர்களாக எதுவும் செய்துவிட முடியாது.
JVP மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
கைதிகள் விடுதலை பற்றி.. JVP கொள்கை என்ன?
யுத்தக் கைதிகள், அரசியல் கைதிகள் பற்றிய பிரச்சனை
திருமதி. லக்மாலி அவர்கள் அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியில்
"சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிகை சம்பவம் உட்பட பாரிய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள். தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டுதான் இப்போது எமது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்."
இன்றைய இளையோர்களே
இன்றைய அரசியல் பொருளாதார போக்கை கற்பது பெரிய இரகசியம் அல்ல. அனைத்து சமூகப் போக்கிற்கும் தெளிவான அரசியல் போக்கு உள்ளது. அரசியல் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொண்டால் நீங்கள் தான் வரலாற்றைப் படைக்கப் போகின்றவர்கள். அரசியலை கட்சியின் நபர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. அரசியல் அற்ற சமூகத்தை வளர்ப்பது தேர்தல் அரசியல்வாதிகளின் விருப்பமாகின்றது. தேர்தல் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தேர்தலின் ஊடாக பதவியை தக்கவைப்பதும் சமூக இருப்பை காப்பாற்றுவதே வாழ்க்கையாகின்றது.
தொடரும்.......
https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2021/12/2018.html இந்தப் பகுதியில் இடது- வலதுசாரி சந்தர்ப்பவாதிகளின் போக்கை விளங்கிக் கொள்ள முடியும்.

No comments:
Post a Comment