இன்றைய அரசியல் போக்கு 11
தேசிய நலன் சார்ந்த அரசியல் முடிவிற்கு வந்துவிடுமா?
தமிழ்தேசிய நலன் சார்ந்த அரசியல் என்பது தொடர்ச்சியான போராட்ட வழியில் நடைபெறுவதாகும். அரசியல் நலனை முன்னெடுக்கும் சக்திகளைப் பொறுத்து அதன் வேகம் இருக்கும். இரத்தம் சிந்தும் அரசியல், இரத்தம் சிந்தா அரசியல் இவை இரண்டிற்கும் அரசியல் உள்ளடக்கம், பெறுமானம் ஒன்றேயாகும். இரத்தம் சிந்தும் அரசியல் ஆதிக்க சக்திகளின் வலுகாரணமாக அடக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது.
இன்று அரசு பற்றிய புரிதலைக் கொண்ட சக்திக்கும்
அதனை மறுக்கின்ற சக்திக்கும் இடையிலான போக்கு உள்ளது.
இதில் தமிழரசுக் கட்சியின் தலைமையானது விதேசியப் போக்கை கொண்டதாகவே இருக்கின்றது. குறிப்பாக சம்பந்தன் (சுமந்திரன் தனது கருத்தை) உயிருடன் இருந்த போது இருந்த நிலை தான் இன்றும் தொடகின்றது. ஏன்ன நபர் சார்ந்த ஆளுகை தான் சம்பந்தர் இருக்கும் போதும் இருந்துள்ளது. இன்று நேரடியாகவே செயற்பட முடிகின்றது. பொத்துவிலில் இருந்து பொலி கண்டிவரை போராட்டம், ஏழுக தமிழ் போன்ற போன்ற போராட்டங்களை இடையூறாகவே சுமந்திரன் கருதியிருந்தார். P2P போராட்டத்தின் முடிவில் முன்வைக்கப்பட்ட முழக்கத்திலும் முரண்பட்டு நின்றார்கள்.
தவறான அரசியல் முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி
தவறான அரசியலை முடிவுகளை எப்பவும் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. சரத் பொன்சேக்கா, மைத்திரி ஆதரவு நிலைப்பாடு என்பது தமிழ் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை. அது அரசியல் சந்தர்ப்பவாதமே. அந்த அரசியல் முடிவினை நியாயப்படுத்த பழியை வேறு நபர்களிடம் காட்டிவிட்டுச் செல்வது அரசியல் நேர்மை அல்ல.
கதிரைப் போராட்டம் கட்சியில் நடைபெறுகின்றது எனக் கூறிட முடியாது. ஏனெனில் 2009 இல் இருந்து மென்வலு அரசியல் போக்கில் தான் செல்கின்றது. இங்கு மென் வலு என்று சொல்லிக் கொள்வது என்னவெனில் சரணடைவு அரசியலுக்கு முலாம்பூசப்பட்ட சொல்லாடலே மென்வலு. மென் வலு என்று கூறிக் கொண்டு சாத்தியமானதைத் தான் முன்வைக்க முடியும் என்று வகுப்பெடுக்கப்பட்டது.
மென்வலு என்றால் ஆயுத ரீதியாக முயற்சிக்கப்பட இலக்கை இருக்கின்ற அரசியல் உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதாகும். அதாவது சிறிலங்காவின் அரசியல் அமைப்புக் கொடுக்கின்ற அரசியல் உரிமையை பயன்படுத்திக் கொள்வதாகும். அந்த இடைவெளியைக் கொண்டு மக்களை அணிதிரட்டி தடைப்பட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகும்.
அரசியல் முன்னெடுப்பைச் செய்யாது தோல்வி மனப்பாங்கை தமிழ் சமூகத்தில் விதைத்த வேலையைத் தான் தமிழ் அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையினர் செய்தார்கள். இதிலும் சுமந்திரன்- சம்பந்தர் அணி தமிழ் மக்களின் அரசியலை முழுமையான சரணாகதி நிலைக்கு கொண்டு சென்றார்கள். இந்த அணியின் தமிழ் தேசிய விரோத அரசியல் என்பது பல தடவைகள் நடைபெற்றுள்ளது.
ஏக்கராட்சியவாதிகள் தாம் இலங்கை அரசின் அங்கம் என்பதையும், தனியாக விசாரணை ஆணையம் தேவையில்லை என்று கூறியதையோ, அல்லது இனவழிப்பு நடைபெற்றது, சர்வதேச விசாரணைதேவை என்பதையும், முதலமைச்சர் நிதியம் தேவை என்பதையும் தமிழர் தரப்பு முன்வைத்தது. ஆனால் ரணிலுடன் சேர்ந்து தமிழர்களின் விடயங்களை எதிர்த்து நின்றதை அரசியல் நேர்மையில் சேர்த்திட முடியுமா? இந்தக் காலத்தில் தான் உலங்குவானூர்தியில் பயணம் சென்றதையும் நினைவில் கொள்க. இதனை வசையாக ஒப்பிப்பதாக கொள்ளமுடியும். ஆனால் ரணிலின் வர்க்கமும், சுமந்திரனின் வர்க்கமும் ஒன்று பட்ட காரணத்தில் அரசியல் போக்கிலும் ஒன்றிணைந்தனர்.
இராசமாணிக்கம், சுமந்திரன் சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு உதவிடும் படிகேட்டு அமெரிக்கா சென்றதையும் கவனத்தில் கொள்வது நல்லது. இவற்றை இன்றைய உலகப் போக்குடன் ஒப்பிட்டு அணுகிட வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் அமெரிக்காவின் முகவர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களே ஏகாதிபத்தியங்களுக்கு உதவிடுகின்றார்கள். தமது சொந்த மக்களுக்கு நேர்மையாக இருப்பதை விட தமக்கு ஊதியம் கொடுக்கும் எசமானர்களுக்கே நம்பிக்கையாக இருப்பார்கள்.
கிவுல் ஓயாத்திட்டம்
இனமத குலமற்று ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியமைப்போம் எனக் கூறிக் கொண்டு அரசியல் செய்ய முடிகின்றது. யாழில் சென்று அந்த மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதே பிரதான இலக்காக கொண்டுள்ளனர்.மழைநீர் தங்கி உவர் நிலத்தில் (தற்போது வந்த வெள்ளத்தில் மாத்திரம் அல்ல. சாதாரண மழைக்கும் அந்த இடங்களில் நீர் தேங்கும்) துருப்பெடுத்தாட்ட மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். இன்றைய ஆட்சியாளர்களுக்கு யாழை மையமாகக் கொண்டே அரசியல் செய்ய முடிகின்றது. இந்த வேளையில் 2011 கொண்டுவரப்பட்ட கிவுல் ஓயாத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றார்கள். சந்திரசேகரன் தான் இனமதகுலமற்றுத் தான் அனைத்து மக்களுக்கான திட்டங்கள் செயற்படுத்தப் போவதாக கூறுகின்றார்.
ஆனால் வரலாறு எங்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்தே வந்துள்ளது. அம்பாறை, கல்லோயோ, சேருவலை, திருமலை நகர்ப்புறம் என செயற்படுத்தி வந்துள்ளது. இது ஒரு நிலஅபகரிப்புத் தான். இன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய திடீர் புரட்சியாளர்கள், இடதுசாரிகளுக்கு இவை பற்றிய போதிய புரிதல் இல்லை. தனிமனிதர்கள் எங்கும் சென்று குடியேறலாம் என்பதும் திட்டமிட்ட குடியேற்றமும் ஒன்றல்ல. சிங்கள தேசத்தில் பல சைவக் கோவில்கள் உள்ளன. ஏன் பௌத்த விகாரை தமிழ் பகுதியில் வைத்தால் என்ன என்றும் வாதிடும் கருத்தாளர்களும் உண்டு.
சைவக் கோவில்கள் இருக்கக் காரணம் முன்னொடு காலத்தில் தமிழர்கள் வாழ்திருந்த அடையாளமேயாகும். அந்த இடத்தில் இருந்த மக்கள் சிதறடிக்கப்பட்டார்கள். எந்த தமிழரும் அரசியல் அதிகாரம் கொண்டு கோவில்கள், குடியிருப்புகளை மேற்கொள்வதில்லை. பௌத்த பேரினஅகங்காரம் அரசியல் (அரசு) அதிகாரத்துடன் செயற்படுவதாகும்.
நிலம்
தமிழ் அரசியல் சக்திகளின் அரசியல் முதிர்ச்சியின்மை, தேசத்தின் நலன் பற்றிய பிரச்சனையில் சந்தர்ப்பவாத அரசியலைத் தான் மேற்கொண்டு வருகின்றார்கள். இன்று சுமந்திரம் நிலம் என்பது போராட்டத்தின் முக்கிய காரணங்கள் ஒன்று என்ற தொனியில் பேசினார். ஆம் உண்மை தான் நிலம் என்பது தேசத்திற்காக முக்கியமான என்பது இன்று தான் தெரிந்து கொண்டாரா? வவுனியாவில் சிங்கள மக்களை குடியேற்றம் செய்த போது வாழ்த்துச் (மைத்திரிகாலம்) செய்தி வாசித்த போது இந்தத் தெளிவு ஏன் வரவில்லை?
தமிழ் தேசத்தின் அரசியல் என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியவையாகும். அரசிற்காக போராடும் ஒரு தேசத்தின் அரசியல் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டிருக்க முடியாது. ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் அரசியல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியவையாகும். தையிட்டிப் போராட்டம் என்பது நபர்களின் எண்ணிக்கை அல்ல. ஆனால் அங்கு தொடர்ச்சியான போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த இடத்தில் அனைத்துத் தரப்பும் சென்று ஆதரவளித்திருக்க வேண்டும். கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தை நையாண்டி செய்தது போலவு தமிழரசுக் கட்சியினர் தையிட்டிப் போராட்டத்தையும் நையாண்டி செய்தார்கள். கிபுல்ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகச் சரியானதே. ஆனால் சுமந்திரனின் சந்தர்ப்பவாத அரசியல் இங்கு கவனிக்கப்பட வேண்டும், விமர்சிக்கப்பட வேண்டும்.
அரசு
அரசு என்பது தேசத்தினைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும். ஆனால் இது விளங்காமல் நாங்கள் லங்காவின் ஒரு அங்கம் சிங்கள தேசத்திற்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரியிருக்க முடியாது. தமிழர்கள் லங்காவின் ஒரு அங்கம் என்றும் கூறியிருக்க முடியாது.
முன்னைய தொடர்களில் அரசின் அவசியத்தைப் பற்றி எழுதியுள்ளேன். தமிழ் கட்சிகளில் தொடர்ச்சியாக அரசு பற்றி வலியுறுத்தி வருவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமேயாகும். மற்றவர்கள் எல்லோரு ஊசலாட்டப் பிரிவினர்களாக உள்ளார்கள்.
இங்கு சிறிதரன் தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டு முன்னணியின் பின்னால் சென்று அரசியல் நிலைப்பாடு எடுப்பாரோ என்பதே சுமந்திரனுக்கு உள்ள அச்சமாகும். சுமந்திரன் என்பவர் சம்பந்தர் இருக்கும் போதே தனியோட்டம் தான் ஓடினார். அந்த ஓட்டத்தை தொடர சிக்கலாக இருப்பதும், கட்சிகளில் உள்ளவர்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் அரசு பற்றிய விளங்கிக் கொள்வார்களோ என்ற அச்சமே காரணமாகும். தேசம் என்கின்ற போது மொழி, நிலம், பண்பாடு, பொருளாதாரம் என்பதை அடங்கியதே.
பேட்ரனிசம்
பேட்ரனிசம் என்பது சுயமாக சிந்திக்க முடியாத மனிதர்கள் எப்பவும் வழிநடத்தக் கூடிய மேய்ப்பர் தேவை என்பதாகும். மற்றவர்கள் மொக்குகள் மோடுகள் என்று எந்த தனிமனிதர்களின் மண்டைக்குள் ஏறிவிட்டால் அரசியல் கட்சியின் நிலையை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஆனால் சுமந்திரன் அடிப்படையில் ஒரு போதகர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக கத்தோலிக்க மதப் சுவாமிமார்களை விட Petrinism என்பது அங்கிலிக்கன் மதக் குருக்களிடம் அதிகமாகவே உள்ளது. அங்கிலிக்கன் திருச்சபைக்கும் மேற்கிற்குமான வலைப்பின்னல் கொண்ட வரலாறு எங்கும் தொடர்கின்றதாகும். பல பாடசாலைகள் மேற்கின் உதவியுடன் நடத்தப்படுவதாகும். பல பாடசாலைகள் அர சாங்கம், பெற்றோர் நிதியில் இயங்குகின்றன. இந்த மத நிறுவனங்களில் பல மேற்கின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும் (NGO's), மேற்கின் ஆளும் வர்க்கத்துடன் உறவைப் பேணிக் கொள்கின்றன.
மதநம்பிக்கையும், தமிழ் அரசியலும், மேற்கு நலன் இவற்றுக்கிடையில் பயணிக்கும் ஒரு அரசியல்வாதிக்கு உள்ள நலன் சார்ந்த பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. மதம், மேற்கின் நலன் இவை இரண்டும் ஒன்றே. எப்பவும் மதங்கள் அதிகாரத்துடன் துணை நிற்கும். மதநிறுவனங்களில் உள்ளவர்கள் கொலனித்துவ கால மனநிலையில் இருந்து செயற்படுபவர்கள். இவர்களின் செயற்பாடு மக்களின் அரசியல் உரிமை என வருகின்ற போது எசமானர்களின் பின்னால் தான் நிற்பார்கள்.
அங்கிலிக்கன் சபை என்பது மேட்டுக்குடிகளின் நம்பிக்கையான இடமாகும். மேட்டுக்குடிகளின் வலைப் பின்னல் என்பது சாதாரண மக்களால் எண்ணிப் பார்க்க முடியாது. இந்த மேட்டுக்குடிகளில் இருந்தே புலமைப்பரிசு பெற்று மேற்கு நாடுகளின் கல்வி கற்றும் வசதி கொண்டுள்ளனர். இந்தப் பிரிவு முதலாளித்துவ தாராளவாதத்தை சமூகத்தில் விதைப்பார்கள். இவர்களே கூட்டு உரிமைக்குப் பதிலாக தனிமனித நலன், உரிமை, வாழ்வியல் சுதந்திரம் என்ற கருத்தை முன்வைப்பார்கள். ஈழப் போராட்ட ஆரம்பத்தில் முதலாளித்துவ தாராளவாதத்தை சமூகத்தில் விதைத்தவர்களும் இவர்களே.
இதில் மறவன் புலவு சச்சிதானந்தம் மதத்தை வைத்து சுமந்திரனை விமர்சிக்கின்றார். இது தவறாக அரசியல் நிலைப்பாடாகும். சுமந்திரனின் சிந்தனை வடிவம் தமிழர்களுக்கு தீங்காக இருக்கின்றது. அவரின் அரசியல் முடிவு என்பது மதத்தைப் பரப்புவதில் இருந்து வந்ததில்லை. ஆனால் மறவன்புலவின் நிலைப்பாடு மதவெறியில் இருந்து வந்ததாகும்.
தேசியம் தோற்றுப் போனதா?
தேசியம் என்பதை தவறாக கற்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் கட்சிகளின் செயற்பாடானது பிற்போக்கு தன்மை கொண்டதாக இருக்கின்றது. இவர்களின் வர்க்கத் தன்மையால் ஒடுக்கப்படும் தேசத்தின் போராட்டம் செயலூக்கமாக இல்லை. இரத்தம் சிந்தும் அரசியலுக்கு எவ்வளவு வலிமை உள்ளதோ. மக்கள் திரள் போராட்டத்திற்கும் அவ்வளவு வலிமை உள்ளது. மக்கள் திரள் போராட்டங்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
இலங்கைச் சுழலில் தேசிய போராட்டம் அல்லது தேசியம் என்பது. என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் அரசியல் சுயநிர்ணயம், அரச சுயாதீனம், தேசி இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும். அது வேறு எதுவாகும் இருக்க முடியாது.
இதனை மறுப்பவர்கள் பெருந்தேசியவாத்தின் பங்காளிகளாக மட்டும் தான் இருக்க முடியும். அரசு என்ற விடயத்தை விடாப்பிடியாக முன்வைக்கும் சக்தியும் தமிழ் தரப்பில் உண்டு. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த வகையில் உறுதியாகச் செயற்படுகின்றனர்.

No comments:
Post a Comment