Popular Posts

Friday, 10 April 2026

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ன கொட்டைப்பாக்கா?

 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ன கொட்டைப்பாக்கா?

 

ஈழத் தமிழர்கள் அரசியல்ரீதியில் ஒரு படித்த சமூகமா? (கருத்துருவாக்கிக்குப் பதில்)


அரசியல் பந்தி எழுத்தாளர்கள் ஏதோ கோட்பாட்டிற்குப் பின்னால் நின்றே தமது சுய எண்ணங்களை வெளிப்படுத்துகின்றார்கள். மனிதர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தி திருப்தி அடையப்படுகின்றது. ஆனால் உலகின் அரசியல் பொருளாதாரப் போக்கின் விளைவுகள் சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் தாக்கத்தை உண்டாக்கும். உலகத்தை எவ்வாறு வியாக்கியானம் செய்வது அல்ல. தாம் உருவாக்க இருக்கின்ற சமூகம் என்பது தமது சித்தத்தினால் உருவாக்க முடியும் என்று நம்புகின்ற போக்கு இருக்கின்றது. வாழ்வியலுக்கும் புறவுலகத்தின் போக்கிற்கும் இடையிலான தொடர்பு என்பது நிதானமாக ஆய்வின் ஊடாக முன்வைக்கப்பட வேண்டும்.

இன்றைய உலகப் போக்கு என்பது மரம் ஓய்வை விரும்பினாலும் ஆனால் காற்று அதனை அமைதியாக இருக்கவிடுவதில்லை. அதே போலதான் இன்றைய ஈரான் மீதான ஆக்கிரமிப்பு யுத்தமும். ஈரான் மக்களின் மனவல்லமையும், எதிர்ப்பும் எமக்கு ஒருபாடமாகும். தொன்மையான பண்பாட்டைக் கொண்ட மக்கள் கூட்டத்தில் எதிர்ப்பு சக்தி தனக்குத் தேவை அற்றதை எதிர்த்து நிற்கும். பொருளாதாரக் கட்டமைப்பை அழித்துவிட்டுச் செல்ல முடியும். ஆனால் மக்களிடம் ஆழப் பதிந்துள்ள பண்பாட்டு மனஅசைவினை அழித்து விட்டுச் சென்றுவிட முடியாது.

ஆகவே தமிழர்கள் அமைதியாகவும், சாத்தியப்பாடான விடயங்களை பேசவேண்டும் என்று இடைவிடாது போதிக்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சி தான் தமிழர்களின் இறையாண்மையை கைவிட்டுவிடும் படி கோரப்படுகின்றது. இந்த அடிப்படையில் தமிழர்களின் போராட்ட வரலாற்றின் மீது கேள்வி தொடுக்கப்படுகின்றது.

வட்டுக் கோட்டைத் தீர்மானம் ஏன் எதிர்க்கப்படுகின்றது. இதனை எதிர்ப்பவர்கள் யாராக இருக்க முடியும்? இதனை எதிர்ப்பவர்களின் பின்னால் உள்ள அரசியல் சிந்தனை என்னவாக இருக்க முடியும்? தமிழர்களின் அரசியல் உரிமை என்பது அரசு பற்றியது என்ற புரிதல் கொண்டு எவர் உரையாடுகின்றார்கள்? இந்த சக்திகளின் அரசியல் புரிதல், நலன் என்னவாக இருக்க முடியும் என்ற அடிப்படையை தவிர்த்து ஆராய முடியுமா?

 

நாட்டரசுகள், தேச அரசுகளின் உருவாக்கம்

தொழில் புரட்சி உருவாக்கிய அரசியல் அமைப்பு வடிவம் முழுமையடைந்த ஒன்றாக இருக்கவில்லை. ஐரோப்பாவில் தொழில்துறை வளர்ச்சியடைந்த போது உலகின் பலநாடுகள் கொலனித்துவ ஆட்சியின் கீழ் தான் இருந்துள்ளது. கொலனித்துவ நாடுகள் விடுதலையடைந்தாலும் தொடர்ச்சியாக பிரச்சனை இருந்து கொண்டே உள்ளது. கொலனித்துவம் வெளியேறுகின்ற போது நாட்டரசுகளை உருவாக்கிக் கொண்டன. அந்த நாட்டரசுகளில் உள்ள தேசங்கள் பற்றி எவ்வித அக்கறையும் எடுக்காமலே கொலனித்துவம் அகன்று சென்றது. அவ்வாறு விடுதலையடையாத நாடுகள் சுதந்திரத்திற்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தன. பல தேசிய இனங்களின் எழுச்சி அடையாத நிலையிலும் இருந்துள்ளன. இதன் வளர்ச்சிப் போக்கில் சுயநிர்ணயத்தை அரசியல் ரீதியான முன்வைத்த காவலூர் நவரத்தினம் அவர்கள்.

தேசிய இனங்கள் பற்றிய பிரச்சனையில் மார்க்சியம் தான் முதன் முதலில் முன்வைத்தனர். முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் சுயநிர்ணயம் பற்றிப வழிகாட்டலாக இருந்தது. ஆனால் முதலாளித்துவம் கருதிய நாடுகளின் சுதந்திரம் என்பது மீளவும் கொலனித்துவத்தின் கீழ் அமைந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரம் என்ற அடிப்படையில் அமைந்ததாகும். சுருக்கமாக சொல்வதெனில் மறுகொலனியாக அமைய வேண்டும் என்பதேயாகும். குறிப்பாக பிரஞ்சுக் கொலனிய நாடுகளை கவனத்தில் கொள்ள முடியும்.

இதற்கு அப்பால் முதலாளித்துவப் புரட்சி முழுமையடைவதற்கு முன்னரே சுவீஸ், பெல்ஜியம், ஸ்பானிய, பிரான்ஸ் போன்றவை பலதேசிய இனங்களைக் கொண்ட நாட்டரசுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று சுமஸ்ரிக்கு உதாரணமாக பெல்ஜியம், கியூபெக், சுவீஸ், இந்தியா போன்ற நாடுகளை முன்ணுதாரனமாக கொள்ளப்படுகின்றது. இதுவும் முதலாளித்துவ வகைப்பட்ட தீர்வாக முன்வைக்கப்படுகின்றது. இவற்றில் ஒன்றை அடிப்படையாக வைத்தே உரையாடல்கள், தூதரகங்கள் நடத்தும் வகுப்புகள், சந்திப்புகள் நடைபெறுகின்றன.

சமஸ்ரி பற்றிய புரிதல் சமூகத்தின் பிரதிநிதிகளிடம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. ஆனால் கடந்த 25 வருடங்களாக நாடு நாடாச் சென்று அரசியல் அமைப்பு பற்றிக் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அரசியல்வாதிகளிடம் புரிதல் இருக்கின்றதா அல்லது முரண்பாடு உள்ளதாக என்பது பற்றி வேண்டுமென்றால் ஆராயலாம். நாடு நாடாக சென்று அரசியல் வகுப்பெடுத்த அரசியல்வாதிகளுக்கு இவை எதுவும் தெரியவில்லையா? அவ்வாறு தெரியாமல் இருக்குமா? சமஸ்ரி பற்றிய புரிதல் சமூகத்தின் பிரதிநிதிகளிடம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. ஆனால் கடந்த 25 வருடங்களாக நாடு நாடாகச் சென்று அரசியல் அமைப்பு பற்றிக் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அரசியல்வாதிகளிடம் புரிதல் இருக்கின்றதா அல்லது முரண்பாடு உள்ளதாக என்பது பற்றி வேண்டுமென்றால் ஆராயலாம். நாடு நாடாக சென்று அரசியல் வகுப்பெடுத்த அரசியல்வாதிகளுக்கு இவை எதுவும் தெரியவில்லையா? அவ்வாறு தெரியாமல் இருக்குமா?


வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றேதான் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததா

ஆயுதப் போராட்டம் என்பது வரலாற்று வழிவகையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக உருவாகும் வழிமுறையாகும். போராட்டம் என்பது இரத்தம் சிந்தும், சிந்தாப் போராட்டம் என்று உள்ளது. ஈழத்தில் சாத்திய வழிப் போராட்டத்தின் நடுத்த கட்ட நகர்வாகத் தான் ஆயுதப்  போராட்டம் உருவாகியது.

இதேபோல சர்வதேச அளவில் வெவ்வேறு நாடுகளில் ஆயுதப் போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகும். அதன் வெற்றிகள் என்பதும் ஈழத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்தது.

வட்டுக்கோட்டை தீர்மானம் வருவதற்கு முன்னரே ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் உருவாகிவிட்டார்கள். குறிப்பாக தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம் முக்கிய திருப்பமாகும். இதன் தொடர்ச்சியாக சிறிய குழுக்களும் உருவாகிக் கொள்கின்றன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்தது என்பது வரலாற்றுத் திரிபாகும்.

 

தகுதி தேவை

``எந்தவொரு விடயத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் முதலில் நமது அரசியல் தகுதிநிலை தொடர்பில் சிந்திக்க வேண்டும். நமது தகுதிநிலை அறிந்தால்தான் மற்றவர்களுக்கு முன்னால் நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.’’ (யதீந்திரா)

இங்கு தகுதி என்பது யாரின் நலனில் (premises) இருந்து அரசியல் பேசுகின்றோம் என்பதே முதல் தகுதியாகும். இராசதந்திரிகள் என்போர் அவர்களின் அறிவு என்பது முதலாளித்துவ தேவை கருதி வடிவமைக்கப்பட்ட கல்வியால் வடிவமைக்கப்பட்டவர்கள். மற்றது தொழில் முறைசார்ந்து அந்த நாட்டின் நலனின் அடிப்படையில் இருந்தே வெளிப்படும் அரசியல் கருத்துகள்.

இவர்கள் பொதுப்புத்தியில் எழுதுகின்றார்களா? சமூக அரசியலை விளங்கி எழுதுகின்றார்களா? வாழ்வியலில் ஏற்படும் சிக்கலை விளங்கி எழுதுகின்றார்களா? சிக்கலை தீர்ப்பது எவ்வாறு என்று ஆராய்ந்து எழுதுகின்றார்களா?

மீள மீள பேசும் விடயம் தமிழர்கள் சந்தர்ப்பத்தை நழுவவிட்டார்கள் என்பதே. தேசியப் பிரச்சனைக்கான தோற்றுவாய்களை முழுமையாக அணுகின்றார்களா? தேசிய இனப்பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு அணுகுமுறைப் போக்கு உள்ளது. புரட்சிக்கும் சந்தர்ப்பவாதத்திற்குமான பிரச்சனை, புரட்சிக்கும் சீர்திருத்தத்திற்குமான பிரச்சனை? முதலில் தேசிய இனப்பிரச்சனைக்கான மூலகாரணத்தை தெரிந்து கொள்ளவேண்டும்.

 

சட்டவாதிகளும் சட்டவாதமும்

தமிழ் மக்களின் தீர்வு பற்றிப் பேசுகின்ற போது எப்பொழுதும் சட்டவாளர்களின் கருத்தை முன்னிறுத்தியே கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு விதிவிலக்கான போக்காக இலங்கையில் உள்ளது. சட்டவாளர்களின் புலமை என்பது தொழில்முறை சார்ந்ததாகும். தொழில் முறையும் புத்திஜீவித் தனமும் ஒன்றல்லை. சட்டம் என்பது சமூகத்தில், பாடவியலில் ஒரு பகுதி மாத்திரமே. ஆனால் சமூகம் பற்றிய விடயங்களை வரலாறு, பொருளாதாரம், சமூகப் பண்பாடு போன்றவை உள்ளடக்கிய அரசியல், சமூகவியல் என்பது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

சட்டத்தின் ஊடாக சில பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று கற்பிக்கப்பட்டது. காணிப்பிரச்சனை,  வெந்நீர் ஊற்றுக் பிரச்சனை, கைதிகள் பிரச்சனை என்று பேசப்பட்டது.

தேசிய இனப்பிரச்சனை சட்டவாதத்தால் தீர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஆனால் அவர்கள் அதனை பொதுவெளியில் ஏற்பதில்லை. சட்டத்தால் தீர்க்க முடியும் என்றால் ஏன் டட்லி, பண்டா, சந்திரிக்கா, ரணில் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற முடியவில்லை? ஏன் இன்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வைத்துள்ள ஜேவிபியினால் கூட முடியவில்லை.

சட்டவாதிகள் என்பது தொழில் முறைசார்ந்த அறிவு சம்பந்தப்பட்ட பிரிவினர். மற்றையது சட்டத்தினால் தீர்வு பெற முடியும் என்பது. இவை இரண்டும் தமிழ் சமூகத்திற்கு பயன்படப் போவதில்லை. இதனையும் சட்டவாதிகளான அரசியல்வாதிகள் விளங்கித் தான் வைத்துள்ளார்கள். பிறகு ஏன் இந்த பித்தலாட்ட அரசியல்?

 

செய்யவேண்டிய…

முன்னைய கட்டுரையில் கோட்பாடுதான் சமூகத்தை வழிநடத்த முடியும் என எழுதியுள்ளேன். இங்கும் அது தான் வலியுறுத்தப்படுகின்றது. குறிப்பாக இராஜதந்திரிகளின் அரசியல் என்பது கோட்பாடு தான் அவர்களையும் வழிநடத்துகின்றது. அது தான் முதலாளித்துவ பொருளாதார நலன் சார்ந்த கோட்பாடு தான். இராஜதந்திரிகளைப் பொறுத்தவரையில் அவர்களின் நலனைப் பாதுகாக்கும் நாடுகளும், பிராந்தியங்களும் தான் அவசியமானது. மாறாக ஒடுக்கப்படும் மக்களின் நலன் என்பது அவசியல் இல்லாத ஒன்று. இவ்வாறு இருக்கையில் இராஜதந்திரிகள் கோட்பாடு இல்லாது வாருங்கள் என்பதும், அவர்களின் உரையை வலியுறுத்தி கருத்தெழுதுவம் எலும்புத் தூக்கியெறியும் எசமானருக்கு விசுவாசமாக இருப்பதே காரணமாகும். தமிழர்களின் அரசியல் உரிமை என்பது இராச தந்திரிகளின் விருப்பின் பொருட்டு அமைய முடியாது. அவ்வாறு அமைய வேண்டுமென்று ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள், கருத்தாளர்கள் முன்வைப்பார்கள்.

அரசியல் கருத்துகள் என்பது மாறிவருக்கின்ற அரசியல் பொருளாதார உறவை நாம் தான்தோன்றித் தனமாகவோ, மனம் போன போக்கிலோ எதனையும் எழுதிவிட்டுச் சென்றிட முடியாது. இங்கு தனிதனிதர்களின் குழப்பல் நிலை என்பதை பொதுத் தளத்திற்கு பொருத்திவிட்டுச் சென்றுவிட முடியாது. இதில் தகுதி பற்றி கேள்வி எழுப்பும் நபரின் அரசியல் புரிதல், தொழில் சார்ந்த தேவை கொண்ட எழுத்துகள் அடிப்படையாகின்றது.

குறிப்பாக வலதுசாரிகளின் போக்கு என்பது வரலாற்றை திரிப்பதும், மறுப்பதும், தனிமனித புரிதலை முன்னிறுத்தி கருத்தை முன்வைக்கின்றார்கள். தமக்குத் தெரிந்தவை மட்டுமே சமூக வரலாற்றுப் போக்காகவும், அதுவே சர்வபொது உண்மையாகவும் வலியுறுத்துவர். 

 

https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2026/03/jathi-jathindra-2.html

https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2026/02/jathi-jathindra.html 

No comments:

Post a Comment