Popular Posts

Tuesday, 31 March 2026

பல்துருவத்தின் விரிவாக்கம்

 




பல்துருவத்தின் விரிவாக்கம்

 

தொடர் 1.

 

இன்றைய உலகப் போக்கானது வெளிப்படையாகவே ஏதோ ஒரு வர்க்க நலனுக்குள் தான் உலகின் மாந்தர்களை சமூகமயப்படுத்துகின்றது. அந்த ஒழுங்கை மீறிய சமூகப் போக்கு அவசியமாகின்றது. உலகில் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார அளவில் பின்தங்கிய மக்கள் கூட்டம் தான் பெரும்பான்மையானவர்கள்.

கியூபாவில் என்ற நடந்து கொண்டிருக்கின்றது? வெனிசுவேலாவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? லெபனானில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? ஈரானில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? கருங்காலிகள் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவைகளை இட்டு பிரக்ஞை பூர்வமாக சிந்திக்க செயற்பட எம்மால் முடிகின்றதா? எமது சிந்தனை சக்தியையும், அரசியல் கோட்பாட்டுப் புரிதலையில் அடகு வைத்துவிட்டோமா?

கடந்த காலங்களில் சோசலிச பூதம் என்பதை வைத்தே அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். மார்க்சியம் ஒரு தோற்றுப் போன சித்தாந்தம், அதற்கு இனிவருங் காலங்களில் இடமில்லை. பழையதை தொடர்ந்து ஒப்பிப்பதால் எவ்வித பலனும் அடையப் போவதில்லை.

 

இந்த ஆக்கிரமிப்பு யுத்தம் என்பது பல வருடங்களாக திட்டமிடப்பட்டவையாகும். முன்னைய ஜெனரல் Wesley Clark ஒன்றில் ஐந்து வருடங்களில் 7 நாடுகள் மீது தாக்குதல் நடத்தி ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும் என்று தமக்கு கட்டளை வந்ததாக கூறினார். அந்த மேற்கு ஆசிய நாடுகளான சிரியா, ஈராக், லெபனான், லிபியா, சூடான், சோமாலியா, ஈரான் என்பவையாகும்.  wesley clarkஇடம் ஏழு நாடுகளின் மீது யுத்தம் தொடுக்கவேண்டும் என்பது யுத்தம், ஆக்கிரமிப்பு என்பது ஒரு எண்ணிம விளையாட்டுப் (data game) போல அமெரிக்க ஆளும் வர்க்கமும், வணிக வர்க்கம் எண்ணிக் கொண்டார்கள் போலும். 

அமெரிக்காவானது 1900 நடுப்பகுதியில் தொடங்கிய தலையீட்டு அரசியல் அதாவது மற்றைய நாடுகள் மீதான தாக்குதல், ஆக்கிரமிப்பு, ஆட்சியாளர்களை மாற்றுவது என்று இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சோசலிச தத்துவத்தின் மீதான தாக்குதலாக தொடங்கியது.  இவைகள் ஏகபோகம் தோற்றுவிக்கப்படல், ஒன்றிணைந்த நிறுவனக் கட்டமைப்பு பொருள் உற்பத்தியை ஒன்று குவிக்கின்றன, வங்கிகள் முறை வலுவாக கட்டமைக்கப்பட்டது, மூலப் பொருட்களுக்கான கட்டுபாட்டைக் கொண்டது, சந்தையைப் பிரித்தல், தேவையான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல் ஆகும். ஆக்கிரமிப்பு அரசியலுக்குப் பின்னால் உள்ள நலனை விளங்கிக் கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தைப் பாதுகாக்க செயற்கையான முறையில் காத்து நீடித்து நிற்பதற்கு வல்லரசுகள் ஆண்டாண்டு காலமாக ஆயுதத்தினால் மிரட்டப்படும் சூழலாகும்.

 

ஈரானின் தாக்குதலில் விமர்சிக்க வேண்டிய பகுதிகள் இருக்கின்றன. இவ்வாறு முன்வைக்க வேண்டிய தேவையும் உள்ளது. காரணம் பெரும்பான்மையானவர்கள் தாராளவாதத்தின் நோய்க்கு உட்பட்டவர்கள். ஈரான் மீதான நிலைப்பாட்டை தெரிவிக்கும் முன்னர் தம்மை தூய்மைவாதிகளாக நிறுவிக் கொண்டே கருத்துக் கூறுவார்கள். தாராளவாதிகளைப் பொறுத்தவரையில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையே இறுதியானது என நம்பிக் கொள்கின்றார்கள்.

ஈரானுக்கு எதிரான செய்திகளை பரப்புவதில் அதன் வேலையாட்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆயுதம் மாத்திரம் யுத்தம் அல்ல. கருத்தியலை பரப்புவதும் யுத்தம் தான். இந்தக் கருத்தாளர்கள் கருத்தை முன்வைக்கின்ற போது பக்கச் சார்பாக இருப்பார்கள் என்பது ஒரு புறமிருக்க; பெண்களை ஒடுக்குகின்றார்கள், எதிர்க்கருத்தாளிகளை கொல்கின்றார்கள், தமது ஜனநாயக உரிமைக்காகப் போராட முடியாத படி அடக்கப்படுகின்றார்கள். முதலாளித்துவ தாராளவாதக் கருத்தியலால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தானது தம்மை ஜனநாயக சக்தி என்ற அடிப்படையில் அமைந்திருக்கும். மனிதர்களின் கூட்டுரிமையை விட தனிமனித உரிமையை முன்னிலைபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.

தலைமையை அகற்றுவது என்பது அனைத்துக்குமான தீர்வு என்று குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் என்பது மதத்தினை மைய உலகக் கண்ணோட்டத்தைக் கொண்ட சமூகமும், ஆட்சிமுறை ஆகும். நிலமானிய இறுக்கம் என்றால் என்னவென விளங்கிக் கொள்ள வேண்டும். கற்கால சிந்தனை மரபை தாங்கிக் கொண்டு வருவதாகும். அன்றாட வாழ்வியல் என்பது குடும்பத்தின் தனிமனிதர்கள் தொடங்கி குடும்ப அலகுவரையில் பழைய மரபை கட்டிக் காப்பதில் பங்கு வகிக்கின்றார்கள்.

 

அமெரிக்காவின் இன்றையப் போக்கானது ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான பின்னடைவாகும். இந்தப் போக்கை பிரபுத்துவ முதலாளித்துவ பண்பைக் கொண்ட மேற்கு நாட்டு தொழிலாளர் வர்க்கம் உடனடியாக விளங்கிக் கொள்ளப் போவதில்லை. குறிப்பாக இஸ்லாமிய போபியாவினுள் சரணடைந்துள்ள உலகக் கண்ணோட்டத்தில் இருந்து மீண்டுவருவது இலகுவான போக்கில்லை.

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை பற்றிய செய்திகள் மட்டுப்படுத்தப்பட்டே வெளிவருகின்றன. இதில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை நிதாதனத்துடன் கையாள வேண்டியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஆதரவான கருத்துகளை உருவாக்குவதற்கு நிதியை வாரி வழங்குகின்றார்கள். ஈழஆக்கிரமிப்பு போரின் போது ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசு நிதி கொடுத்து வாங்கியதாக வரலாறு உண்டு. அவ்வாறே ஏகாதிபத்தியத்தால் விலைக்கு வாங்கப்பட்ட கருத்தாளர்கள் உள்ளார்கள்.

 

பலஸ்தீனத் தலைமை 1967ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குப் பின்னர் பல நாடுகளிலும் தஞ்சமடைந்தார்கள். தலைமை தஞ்சமடைந்த போது எந்த நாட்டிலும் தலைமை நிலையாக தங்கிட முடியவில்லை. பல நாடுகள் இஸ்ரேலுடன் அமைதிப் போக்கை கடைப்பிடித்தன. பல நாடுகளில் மீது இஸ்ரேல் தாக்குதலும் நடத்தின. 50 வருடத்திற்கு மேலாக இஸ்ரேலை திருப்திப்படுத்தும் அரசியல் மேற்கொள்ளப்பட்டு வந்தது; இன்றும் வருகின்றனர். இந்த நாடுகள் பல சியோனிசத்தினை உள்வாங்கினார்களா என்பது அல்ல பிரச்சனை. தமது ஆட்சியைப் பாதுகாப்பதும், செல்வத்தை பாதுகாப்பதிலும் கவனமாக இருந்தார்கள். இந்த நாடுகளின் ஆளும் வர்க்கமும், மன்னர் பரம்பரையும் மக்களை ஏமாற்றியே வந்துள்ளது. எனினும் இந்த நாடுகளின் நிலையானது இனிவரும் காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அமெரிக்கா தன் தளங்களை தன்பக்கத்தில் வைத்திருக்க முடியாத சூழலை ஏற்படுத்தும். இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் கருத்தாளர்கள் ஈரானின் ஆட்சியாளர்களின் வர்க்கத்தை மாத்திரம் கவனத்தில் கொள்கின்றார்கள்.

இரண்டு பேராசிரியர்கள் (Bader Al- Saif -குவைத்) Mohammad Marandi (ஈரான்)  இரண்டு வெவ்வேறு நலன் கொண்ட கருத்துகளை வெளியிடுகின்றார்கள். இந்த ஒருவர் ஒடுக்கப்படும் பக்கமும், மற்றையவர் ஒடுக்குபவர்களை மறைக்கும் கருத்துருவாக்கம் செய்கின்றார்கள். Bader Al- Saif, ஈரான் தம்மை தேவையில்லாமல் இந்த யுத்தத்தினுள் இழுத்துவிட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். ஆனால் சுமார் 50000 துருப்புகள், 10 விமானத் தளங்களைக் கொண்டுள்ளன. அந்த தளங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டன. GCC நாடுகள் தம்மைப் பாதுகாக்கும் என்று நம்பியிருந்த தொழில் நுட்பக் தளங்கள் முதலில் அழிக்கப்பட்டன. இதன் விளைவுகளை மறைக்க வேண்டிய தேவை GCCநாடுகளுக்கு உண்டு. இன்று குற்றத்தை வேறு பக்கம் திருப்ப வேண்டிய கருத்தாக்கம் உள்ளது. GCC நாடொன்றில் இருந்த 137 விலையுயர்ந்த குதிரைகளை வேறு நாட்டிற்கு மாற்றியுள்ளது. இதில் இருந்து அவர்களின் செருக்கினை அறிந்து கொள்ள முடியும். உலக நாடுகளில் பலவற்றின் நடிகர்கள், பிரமுகர்கள், மேட்டுக்குடிகளின் தங்குமடமாக இருந்திருக்கின்றது. கார் ஓட்டம், குதிதைப் பந்தையம் என உயர் மக்களின் போராட்டத் தளமாக இருந்து வந்திருக்கின்றது. 

GCCகளின் பாதுகாப்பு என்பது அமெரிக்காவில் தான் தங்கியிருக்கின்றது என்ற உண்மையை கருத்துருவாக்கிகள் மடைமாற்றுகின்றார்கள். உலகின் 80 நாடுகளில் 200 தளங்களை வைத்திருக்கும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அரசியலை Bader Al- Saif போன்றவர்கள் கடந்து செல்வார்கள். ஆனால் மனிதகுலத்தின் நலனை ஏற்றுக் கொள்பவர்கள் இவற்றை அலட்சியம் செய்ய முடியாது. 

Zanny Minton Beddoes - The Economist இற்கு நத்தான்யாகு வழங்கிய செவ்வியில் அமெரிக்கா கொடுக்கும் 3.8billion டொலர் பெரிய உதவி. இன்னும் பத்துவருடங்களில் அமெரிக்காவின் உதவியில்லாமல் தனித்து இயங்க முடியும் எனக் கூறினார். இந்தக் கூற்றுக்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கமும், இன்று ஈரான், லெபனான், காசாவின் தொடுக்கப்படும் தாக்குதலையும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய தேவையுள்ளது. இன்று லெபனானின் 10 விகித இடத்தை பாதுகாப்பு வலையமாக அமைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

எந்த நாடும் யாருக்கும் யாரும் ஏவல்நாயாக இருக்கக் கூடாது என்ற உலக யுத்தங்களின் அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடுகளும், தேசங்களும் தங்கள் தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்வதன் ஊடாகவே முதலாளித்துவ கட்டமைப்பில் சாத்தியமாகும். அதற்கு அப்பால் யாருக்கும் கீழ் இருப்பது நன்மை தராது. இன்று வளைகுடா நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையை படிப்பினையாகக் கொள்ள வேண்டும். வல்லரசுகள் என்பதற்கு அப்பால் தொன்மையான மக்களின் வாழ்வியல் என்பது தொடரப்பட வேண்டும். மாறாக தொடர்ச்சியற்ற சமூகத்தை உருவாக்குவது முதலாளித்துவ வர்க்க அரசியல் நலனுக்குத் தேவையாகும். 

ஈரானைப் பொறுத்தவரையில் இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தை விளங்கித் தான் வைத்துள்ளது. இந்த நிலையில் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக Hormuz strait கட்டுப்பாட்டை விதித்துள்ளது. Hormuz strait மூடவில்லை என ஈரான் கூறுகின்றது. ஆனால் தன்மீது தாக்குதல் நடத்தும் பிரிவினர் மீதுதான் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாகக் கூறுகின்றது. ஆனால் எண்ணைக் கொள்கலன்களின் உரிமையாளர்கள் கடற்பரப்பை பயன்படுத்த துணியவில்லை என்கின்றார்கள் ஆய்வாளர்கள். ஏனெனில் காப்புரிமை என்பது நவீன கடல்வணிகத்தில் ஆதிக்கம் செலும் கட்டமைப்பாகும்.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடல் எல்லைப் பரப்பு என்ற வகையில் ஈரானுக்கு அந்தக் கடற்பரப்பில் இறைமையும் உள்ளது. இதற்கு அப்பால் ஏகாதிபத்தியமும் அதன் நட்புவட்டமும் தொடுக்கும் கருத்தாக்கம் என்பது ஏகாதிபத்திய நலன் சார்ந்ததே. அதேவேளை இந்தக் கடற்பரப்பை இலகுவில் யாரும் வெற்றி கொள்ள முடியாது. இன்றைய நவீன கடற்படை கொள்கலன்களை இலகுவில் அந்த குறுகிய இடத்தில் நகர்திட முடியாது. 31கி.மீ அகலம் கொண்டதாக இருப்பினும், ஆழம் கொண்ட கடல் பரப்பாக இருப்பதில்லை. குறிப்பிட்ட இடத்தில் மாத்திரமே பயணிக்க முடியும். அந்த கடற்பரப்பினை இராணுவத் தந்திரோபாயத்தில் பிரதான புவிப்பரப்பாகும்.

 

இன்று தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தம் பல்வேறு போக்குகளைக் கொண்டதாகவும், பல்வேறு விடயங்களில் புதிய போக்கை வந்தடைய வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த போர் சந்தை விலையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும், கடல்வழிப்பாதையில் முன்னர் இருந்து ஏகபோகம் என்பது மட்டுப்படுத்தப்படும், வணிகப்பாதையை ஒவ்வொரு சக்தியும் தன்னை மீளக் கட்டமைக்கும். இராணுவம் சார்ந்த சிந்தனைப் போக்கு என்பதிலும் மாற்றத்தை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே போல டொலரின் ஏகபோகம் முடிவிற்கு வருவது உலக வணிகத்திற்கு தேவையானதாக இருக்கின்றது. டொலரின் ஏகபோகம் என்பது பொருளாதாரத் தடையை விதிப்பதற்கும், தொடர்ச்சியாக மக்களின், நாடுகளின் முன்னேற்றம் தடைப்படுவதையும் தடுக்க முடியும். புவிசார் அரசியலில் ஏதோ வகையில் சுயத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

 

கடல்வழிப்பாதையை பயன்படுத்துபவர்கள் யுவானில் தான் வணிகம் செய்ய முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலில் பங்கு கொள்ளும் நாடுகளின் கப்பல்கள் கடப்பதில் கட்டுப்பாடு விதித்துள்ளது. டொலர் செயற்கையாகவே நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாடுகளின் நாணய பெறுமதியை குறைக்கும். இதன் ஊடாக டொலருக்காக இந்த நாடுகள் தங்கியிருக்க வேண்டியிருக்கும். இதனால் இறக்குமதி ஒரு நாட்டினால் மேற்கொள்ள முடியாது. இது தான் பொருளாதாரத் தடையின் நோக்கமாகவும் உள்ளது. ஒரு நாட்டின் பொருளின் வினியோகம், ஏற்றுமதி, பரிமாற்றம் ஏற்படுகின்ற போது நாடுகளின் மூலதனத்தையும் பெருக்க முடியும்.

சந்தையில் ஏற்பட்ட அதிர்வை தடுப்பதற்காக 140 million barrel ஈரான் எண்ணை வணிகத்தை ஏற்படுத்த அனுமதித்துள்ளது. இந்த வணிகம் கூட யுவானில் தான் நடைபெற முடியும். ஆனால் ஹேமூஸ் மூடப்பட்டால் ஈரான் தன்னுடைய வருவாயை இழக்கும் என்று கருதப்பட்டது.  இந்நிலை பொருளாதாரத்தில் தற்கொலை என்று வர்ணிக்கப்பட்டது. சீன, ருசிய வளர்ச்சி என்பது இந்த கடற்பரப்பை மாத்திரம் தங்கியிருப்பதில்லை. இந்த யுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளை எந்த நாடும் சூதாட விரும்பவில்லை. பல நாடுகள் புதிய பொருளாதாரக் கூட்டுகளை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றன. உலகப் பொருளாதாரம் பாதிப்பு ஏற்படும் நிலையில் மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. பழைய யுத்தவெறி கொண்ட யுத்தப் பிரபுபோல சியோனிசமும், அதன் அடிவருடிகளும் செயற்படுகின்றார்கள்.

சில நாடுகள் தமது மக்களுக்கு மலிந்த விலையில் எண்ணையைக் கொடுக்க முடியும். அந்த நாடுகளின் எண்ணை உற்பத்தி செலவு என்பது குறைவாக இருக்கின்றது. அதேவேளை சொந்தப் பொருளைக் கூட விலை தீர்மானிக்க முடியாது. எண்ணை நிறுவனங்களே விலையைத் தீர்மானிக்கின்றன, அதுவும் உலகச் சந்தையை பொருட்டே அமைகின்றது. இதனால் லாபம் அடைபவர்கள் எண்ணை நிறுவனங்களேயாகும்.

அடியாள் இஸ்ரேலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமா? தன்னுடைய நேச சக்தியாகிய அரபு மன்னர் பரம்பரையை காப்பாற்றுமா?  அரபு பொருளாதாரத்தை காப்பாற்றுமா?  இல்லை அனைத்தையும் இஸ்ரேலின் நலனுக்காக விட்டுக் கொடுக்குமா?

இந்த யுத்தம் அரபு தீபகற்பகத்தில் அரசியல் மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகின்றது. மூலதனத்தின் அசைவியம் தீர்மானிக்கும் போக்கானது தவிர்க்க முடியாதபடி பல தாக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளும். மூலதனம் என்னும் போது அதனுள் அடங்கியிருக்கும் அம்சங்களும் முக்கியமானதாகும்.

ஈரான் பொருளாதாரத் தடையில் தனது பொருளாதாரத்தை கட்ட முனையும் நாடாகும்.  முதலீடு, தொழில் நுட்பம் ??  நீண்டகாலத் திட்டம்,

** Hormuz strait மூடப்படுவதால் பலதாக்கங்கள் குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் ஏற்படும். தற்போதுள்ள நிலையில் எண்ணை விலை அதிகரிப்பு, கப்பலின் பயணச் செலவு, பணவீக்கம் ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. ஏற்கனவே எண்ணை விலை ஏற்ற இறக்கம் கொண்ட விலையில் தான் சந்தையின் நடப்பு உள்ளது.

** இன்று ஈரான் தனியே நின்று சமாளிக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த நிலையை சமாளிக்க ஈரானுக்கு உதவிடும் நாடுகளின் மீது தடையைப் போடுமா? யுவானை பயன்படுத்தினால் கொல்கலன்கள் அந்த கடற்பாதையைக் கடக்கு முடியும் என்ற ஈரான்.

**இன்று பின்புறத்தால் இராசதந்திர நகர்வுகளை ஏற்படுத்திக் கொள்கின்றது. கடற்பரப்பை திறக்க ஐ.ஒ, யப்பான், கொரியா, சீன போன்ற நாடுகளிடம் உதவிகோரியுள்ளது. அதேவேளை திறக்காவிடின் மின்சார நிலையத்தை தாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பாக வளைகுடா நாடுகளின் தளங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்துள்ளது. இதனைத் தாக்குவதன் ஊடாக குடிநீர், குளிர்சாதன வசதி, மின்சாரம் எதுவுமற்றுப் போகும் என எச்சரிக்கப்படுகின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றது.

**கையிருப்பில் உள்ள எண்ணையைக் கொண்டு சந்தையைச் சமாளிக்க முடியாத காரணத்தினால் Trump ஏமாற்றுகின்றார் எனக் கொள்ள முடிகின்றது. ஈரானின் கடற்படை, விமானப்படை, தலைமை எதுவும் இல்லை என்கின்றார். அவ்வாறாயினும் தாக்குதல் தொடர்கின்றது.

**கனடா ஆறுநாடுகளுடன் தனது நாணயத்தைக் கொண்டு வணிகத்தை மேற்கொள்ள முயற்சி எடுத்துள்ளது.

**ஏற்கனவே Bricks நாடுகள் மாற்று நாணய பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்றன. இந்த முயற்சி இனிவருங்காலத்தில் வெற்றி பெறுமா? ஆனால் வெற்றி பெறுவதன் ஊடாகவே நாணய மதிப்பீட்டில் தனியுரிமையை எதிர்க் கொள்ள முடியும். டொலரின் தேவை ஏற்படும் போது தேவையான அளவில் அச்சிடும் ஏகபோகம் அமெரிக்காவிடம் உள்ளது. அமெரிக்கா தன்னுடைய பற்றாக் குறையை தீர்த்துக் கொள்ளும் என்கின்றார்கள்.

** ஆட்சிமாற்றம் கொண்டுவரமுடியவில்லை, ** Hormuz strait கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியவில்லை.

**முதலீடுகளின் மீதான நம்பிக்கை என்பது எங்கு எந்த நாடு என்ற பிரச்சனை உள்ளது. வளைகுடா நிலவரம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

 

இன்றையச் சூழலில் அமெரிக்கா என்ற வேட்டை நாயை அடக்குவது என்பது மக்களிடம் தான் சக்தி உள்ளது. ஆயுதங்களை வைத்துக் கொண்டு மக்களை குறிப்பிட்ட காலத்திற்குத் தான் அடக்க முடியும். சந்தைக்காகவும், மூலவளத்தின் இருப்பை தமது கையில் வைத்திருப்பதற்கான போரைத் தொடுத்துள்ளது.

 

உலகத்தை ஆயுத பலம் மூலம் அடக்க முடியும் எற்ற மேலாதிக்க எண்ணமும், மமதையும் சுக்குநூறாகியுள்ளது. அனைவரும் அமைதியாக தூங்கியெழ, மகிழ்ந்து கொள்ள, பொருள்திரட்ட முடியும் என்ற எண்ணப்பாடும், சொர்க்க பூமி என்ற மனப்பாங்கு சுக்குநூறாகியுள்ளது. குறிப்பாக எண்ணை வளநாடுகளின் நிலை இன்று கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றது. உலக அரசியல் போக்கும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது, உலகப் பொருளாதாரத்தையும் மீளக் கட்டமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

தம்மை பாதுகாப்பார்கள் என நம்பிய நண்பரே தம்மை விட்டு அகன்று விட்டார்கள். 45000 படைகளையும், இராணுவத் தளங்களையும் வைத்திருந்தனர். அவைகள் எவையும் வளைகுடா நாடுகளை பாதுகாக்க முடியவில்லை. ஆனால் ஈரான் இந்த நாடுகளின் தளங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த நிலையில் GCC நாடுகள் தம்மை பாதுகாக்கவும், இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே முயற்சி செய்கின்றன. இந்த நாடுகள் அமெரிக்க நிறுவனங்களுக்கும், டொலரில் செய்யும் வணிகமும் அமெரிக்காவிற்குச் செல்கின்றன. இதனால் மூலதனத்தின் வளர்ச்சி என்பது அந்த நாடு இன்னும் பெருக்கிக் கொள்கின்றது. இதனை விளங்கிக் கொண்டு தான் அமெரிக்கா உள்ளது.?????

ஏற்கனவே Raytheom Martin, Northrup Grumman பங்கு கீழ்இறங்கியுள்ளது.

 

கட்டார் கொடுக்கும் அழுத்தம் பலன் தருமா? 200 டொலருக்கு உயர்வதை தடுக்க முடியுமா?  உற்பத்தி செலவு, கப்பல்கூலி, மீளகட்டமைப்பு, உணவுப் பொருட்களின் விலை குறையுமா? பங்குச் சந்தையில் போடப்பட்டுள்ள ஓய்வூதியம், இதர சேமிப்பு நிதிகள் காப்பாற்றப்படுமா?

அமெரிக்கா இக்கட்டான நிலையானது உலகத்தை காப்பாற்றுவதில்லை. இஸ்ரேல் என்ற வேட்டை நாயைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் தான் வந்துள்ளது. இதுதான் மின்நிலையத்திற்கு மேல் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தலாகும்.

 

எண்ணை டொலர்

இந்த உலகம் வெவ்வேறு வரலாற்றுப் போக்குகளைக் கொண்டதாக இருக்கின்றது. தொழிற்துறை வளர்ச்சியும் பின்னர் முதலாளித்துவ தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்டது. இந்தக் காலத்தில் நாடாளுமன்ற ஆட்சிமுறை, நிரந்தப்படைகளைக் கொண்ட அரசு முறை உருவாக்கப்பட்டது.

``அரசுகளிடையில் உலகம் பங்கிடப்படுவதை நிறைவு செய்தது; (202/4) இது ஒப்பீட்டளவில் இங்கிலாந்தின் ஆட்சிப் பரப்பை விட குறைந்தாக இருந்தது. புதிய ஏகாதிபத்திய முகாம்களின் வளர்ச்சி தங்கத்தினை மையமான வணிகத்தை நோக்கிய போர்களாக இருந்தது. (64-78/12). 1974 எண்ணையும் டொலர் என நெருக்கடிக்குத் தீர்வுக்கு வந்தடைந்த காலம். இன்று காதித தங்கத்திற்கும், அசல்தங்கத்தின் இருப்புக்கானதாகவும், டொலரின் ஆதிக்கத்தின் வெளிப்பாடாக முரண்பாட்டிற்கு முடிவு ஏற்படும் நிலையில் உள்ள காலமாகும். ``இந்த மாறுதல் காலகட்ட அம்சங்களால் வேறுபடுத்திக் காட்டப்பெறும் முழுமையான வரலாற்று சகாப்பத்தத்தின் அவசியம்‘ (316/3)அனைவரும் வளர்ச்சியின் தத்துவத்தை எந்தளவுக்காவது அறிந்து கொள்வது வரலாற்று மாணவர்களுக்கு அவசியமானதாகும். முதலாளித்துவ பொருளாதார முறைமை என்பது குறிப்பிட்ட வகையில் தான் மீள மீள சுழற்சியாக வருகின்றதாகும்.

பணத்தைச் சுற்றிய அரசியல் என்பது தொடரவே செய்கின்றது. இதில் நிதிநிறுவனங்களின் திட்டம் என்பது பொதுவெளியில் தெரிவதில்லை. இதற்கென இயங்கும் நிறுவனங்கள் திட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டே இருக்கும்.

பணத்தின் பெறுமதிலை தங்க வைக்க வேண்டிது என்பது ஒரு பிரச்சனையாகும். சந்தை நிலையில் பணத்தின் பெறுமதி ஏற்ற இறக்கத்தை தீர்மானிக்கின்றது. ஊக வணிகத்தின் பின்னால் இருக்கும் கடதாசி தங்கம் மற்றும் அசல் தங்கத்தின் பெறுமதி என்பது தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஊடக வணிகத்தினால் பணத்தை இழப்பவர்கள் கடதாசி தங்கத்தினை பெறுமதியாக வைத்திருப்பவர்கள். இதற்கு மாற்றாக தங்கம் என்பது ஸ்திரமான பெறுமதியை தொடர்ச்சியாக வைத்திருக்கும்.

1974களில் தங்கத்தின் பெறுமதி (200 இருந்து 800 டொலருக்கு மாறியது?????)

 

1974-ல் அமெரிக்கா மற்றும் சவுடி அரேபியாவிற்கிடையேயான உடன்படிக்கை பெட்ரோடொலர் ஒரு இணைந்த பொருளாதார ஒப்பந்தமாக இருந்தது. இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு அதன் எரிசக்தி மிகைபொருளை அமெரிக்காவின் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய அனுமதிக்க முயன்றது. இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவை தன் எண்ணெய் விலையை மட்டும் அமெரிக்க டொலரிலேயே நிர்ணயம் செய்ய வேண்டும்.

 

தாக்குதல் இலக்கு

இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள Iron dome தொழிற்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டது. ஆனாலும் அந்த தொழில் நுட்பம் கடந்தவருடம் ஈரானின் தாக்குதலில் போது அதன் பயன்பாடு பற்றிய மிகைப்படுத்திய விம்பம் தூளாகிப் போனது. Kiryat Shmona interceptor கட்டுப்பாடு அற்று இயங்கியதாக கூறப்படுகின்றது. அதாவது இலக்கை தாக்காது பாதிவழியில் இயக்கம் செயலற்றதாகின்றது.  இதேபோல Tamir interceptor லெபனாலிருந்து இயங்கும் Hezbollahவின் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளது.

இன்று ஈரான் பல தாக்குதலை தொடுத்துக் கொண்டே இருக்கின்றது. மக்கள் பதுக்கு குழிகளுக்கு செல்வதற்கு 90 வினாடிகள் தேவைப்படும்.  ஆனால் இஸ்ரேல் எதிர்ப்பு ஏவுகணை இயங்குநிலைக்கு வருவதற்கு முன்னரே ஈரான் ஏவுகணை இலக்கை அடைந்து விடுகின்றது. இதனால் சேதங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. ஒரு ஊடகவியலாளர் கூறுகையில் இவ்வாறு ஏவுகணை வரும் போது அதனை அலட்சியம் செய்தவர்கள். இன்று அபாயஒலி வருவதை அறிந்தவுடன் பதட்டப்படுவதாக கூறினார். கடந்த சில நாட்களில் 5 patriots batteries, 2 David sling batteries, 4 Iron dome batteries ,  3 arrow system தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. பலஅடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு முறையை 1991க்குப் பின்னர் உருவாக்கிக் கொண்டார்கள். 9 மில்லியன் மக்கள் இந்த பாதுகாப்பு கட்டமைப்பை நம்பியே இவ்வளவு காலமும் வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று அந்தப் பாதுகாப்பே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்ரேல் தன்னுடைய பலவீனத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

 

இதனால் வெறிபிடித்த நாய் என்ன என்ற செய்யும் என்று ஊகிக்க முடியும்.

 

Haifa நகரின் மீது 5 missile waves இனால் தாக்கப்பட்டுள்ளது. எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. Haifa- Bazan group 9.8 million ton crude oil  கொள்கலன் அளவு கொண்டதாகும். அது நாளொன்றிற்கு Barrel 197000 உற்பத்தி செய்யப்படுகின்றது. மூலப்பொருட்களாக Polyethylene, உரம், மருந்துவகை, தொலைபேசி போன்ற தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாகும்.

Tel aviv புகையிரத நிலையம் தாக்குதலுக்குள்ளாகியது.

Ramat Gan Bene Brac lord Petah Tikva-போன்ற நகரங்கள் Tel aviv இன்சுற்றுப் புறத்தை அண்டிதாகும். இந்த நகரங்கள் மக்கள் செறிவுள்ளதாகும். அங்கு cluster bomb வீசியதால் பல இடங்களில் கண்ணி வெடிபோன்று தாக்குதலில் இருந்து சிதறிய குண்டுகள் எங்கும் பரந்திருக்கின்றது. 

ஈரான் பயன்படுத்தும் cluster bomb யுத்தக் குற்றம் என்கின்றார்கள். ஆம் அதனை ஏற்க முடியும். ஆனால் இஸ்ரேல் 2006 இல் இந்தக் குண்டுகளைத் தான் லெபனான் மீதும் வீசினார்கள். இங்கு இவர்களுக்கு ஓரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி. இஸ்ரேலின் நண்பர்கள் யுத்தக் குற்றம் என்பார்கள். US/Israel தாக்குதலை கண்டிக்கத் தயாராக இல்லை. ஆனால் ஈரானை அனைவரும் கண்டிக்க தயங்கவில்லை.

Nasrallah missiles பயன்படுத்தியிருக்கின்றது. அனைத்தையும் அழித்துவிட்டதாக கூறுகின்ற போதிலும், தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றார்கள். dimona nuclear தொகுதி மீதான தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அணுவாயுத சோதனை நிலையம் தாக்குதலுக்குள்ளாகியதால் என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை.

Majid thermal system ஊடாக FC 135 தாக்குதல் நடத்தியுள்ளது. ஏற்கனவே  F-117 Stealth என்ற தாக்குதல் விமானம் யூக்கோஸ்லாவிய யுத்தத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது யாராலும் அதனை எதிர்க் கொள்ள முடியாது என்றார்கள். இப்போதும் இதைத் தான் பேசுகின்றார்கள்.

 

ஏன் ஈரான் எண்ணைத் தளங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகின்றது என்பதை அரசியல் ரீதியாக விளங்கிட வேண்டும். இத் தாக்குதல் ஊடாக குறிப்பிட்ட காலங்களுக்கு அவர்களின் வளர்ச்சி என்பது தடைப்படும், மக்களின் அதிர்ப்தி ஏற்படும், அமெரிக்க படைகளுக்கு தேவையானவை தடுக்கப்படுதல்.

GCC நாடுகளில் அமெரிக்கத் தளம் அமைக்க இடம் கொடுத்தவர்கள். ஈரானின் மீது தாக்குதல் நடத்துபவனின் பொருளாதாரம், இராணுத் தளம், உளவு நிறுவனம், விமான எதிர்ப்பு ஏவுகணை, கண்காணிப்பு நிலையம் போன்றவற்றை கொண்டுள்ளார்கள். அந்த நாடுகளின் முழுமையான பாதுகாப்பை தம்வசம் வைத்திருக்கின்றது அமெரிக்கா. அமெரிக்காவின் நலன் மீது தான் தாக்குதல் நடைபெறுகின்றது. 

 

அந்த தாக்குதலை தமது நாட்டின் இறைமையின் மீது தாக்குதல் நடத்துவதாக கதையாடல் செய்கின்றனர்.

அந்த நாட்டின் தளத்தில் இருந்து தான் இரானின் இறைமை மீறுப்படுகின்றது. கட்டார் தளத்தில் தான் விலையுயர்ந்த (KC-135) தாக்குதல்விமானம் தாக்குதலில் நொருக்கப்பட்டன

இவர்கள் அடியாள் இஸ்ரேலின் எதேர்ச்சாதிகாரம் பற்றி எந்த நாடும் பேசியதில்லை.

முஸ்லீம் நாடுகள் கூடி ஈரானின் தாக்குதலை கண்டித்திருக்கின்றன. இந்த நாடுகளின் தலைமை முட்டாள்கள் அல்லர். அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் என்பதில் சந்தேசம் இல்லை.

இவர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவார்களாக இருந்தால் இவர்களை விட முட்டாள்கள் இருக்க முடியாது.

யூக்கோஸ்லாவியா மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது தோழர் பிடல் காஸ்ரோ கூறியது தான் நினைவிற்கு வருகின்றது. தமது நவீன ஆயுதங்களை சோதிக்கும் யுத்தக்களமாக இருக்கப் போகின்றது என்பதே. இன்றும் அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

யுத்தத்திற்கான காரணத்தை யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தேடுவார்கள். ஆனால் ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தால் ஈரானால் உண்டு என்கின்றார்கள். ஆனால் ஈரானிடம் பல மைல் தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பம் கொண்ட ஆயுத தளபாங்கள் இல்லை என்கின்றார்கள். அமெரிக்காவிற்குப் பக்கத்தில் எந்த நாடுகள் இல்லை. அமெரிக்காவில் இருந்து வேறு கண்டத்தில் தான் பெரும்பான்மையான ஆக்கிரமிப்பு யுத்தத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

யுத்த பிரபுகளின் யுத்த வெற்றி பற்றிய இறுமாப்பு அரசியலை, மற்றவர்களை விட போராடும் மக்கள் கூட்டமாகிய எங்களுக்கு விளங்கிக் கொள்ள முடியும். ஈரான் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தில் யுத்தவெறியர்களின் பேச்சும், இதர முதலாளித்துவ அதிகார பீடத்தின் பேச்சுகள் சாரம்சத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. எப்பவும் பலம்பொருந்தியவர்கள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் அடக்கப்படுபவர்கள் தங்கள் சுயமரியாதை, இறைமை எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க வேண்டும். இன்று ஹேமூஸ் திறக்கும் படியும், வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறுகின்றார்கள். ஏகாதிபத்தியங்களின் சொல்லாடல் கவனத்துக்குரியதாகும். மேற்கு நாடுகள் தமது நட்புநாடுகளையும், தமது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த போவதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் தாம் நேரடியாக இந்த போரில் பங்கு கொள்ள மாட்டோம் என்கின்றார்கள். ட்ரம்ப் (16.03.26) தாம் ஈரானின் தாக்குதலை இட்டு ஆச்சரியம் அடைவதாக கூறுகின்றார். ஆனால் அவர் தான் அனைத்துப் படைகளும் அழிக்கப்பட்டதாக கூறுகின்றார். அதேவேளை ஹேமூஸ் கடற்பரப்பை திறக்க ஒத்துழைக்குமாறு பல நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பலநாடுகள் இராஜதந்திர உதவியைச் செய்யத் தயாராக இருப்பதாக கூறுகின்றன. ஆனால் எவ்விதத்திலும் ஆயுத நடவடிக்கையில் பங்கு கொள்ளமாட்டோம் ஏன்றும், இது தமது யுத்தம் அல்ல என்றும்  கூறுகின்றார்கள். இதனை ட்ரம்பினால் ஜீரணிக்க முடியவில்லை. தாம் 40 வருடமாக காப்பாற்றி வருக்கின்ற நிலையில் இவர்கள் தமது பிரதிக்கடனை செலுத்த தயாராக இல்லை என்கின்றார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் (16.3.26) யுத்த நிறுத்தத்தை கோரவில்லை, எந்த விட்டுக் கொடுப்பை பற்றியும் பேசவில்லை என்றார். எம் மீதுதான் யுத்தம் தொடுக்கப்பட்ட யுத்தமே. நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வோம் என்கின்றார். ஆனால் ட்ரம்ப் ஈரானே சமாதானத்திற்கு அழைப்பதாக கூறுகின்றார்.

 

 

வளைகுடா நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல்களில் சில ஈரானால் நடத்தப்படவில்லை. ஈரானின் ஆளில்லா விமானங்களின் மாதிரிப்படிவத்தை ஒத்து தயாரிப்பின் ஊடாக பிறர் நடத்தியிருக்கலாம் என்கின்றது.

 

வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) ஏன் ஈரானை எதிரியாகக் கொள்கின்றது என்பது ஆராயப்பட வேண்டும். மதம் மாத்திரம் அல்ல. மதம் முதலாளித்துவ வளர்ச்சி அடைகின்ற போது மாறிக் கொள்ளும். ஆனால் மக்கள் அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பில் வலுவாக இருப்பவர்கள், அமெரிக்க தலையீட்டினை எதிர்ப்பவர்களாகவும் உள்ளார்கள். மன்னர் வம்சத்தின் ஊதாரித் தனமான வாழ்வியலுக்கு இடையூறாக மக்கள் சக்தி வளர்ந்துவிடும் என்ற பயம் இருக்கின்றது. தமது ஊதாரித்தனத்தை பாதுகாப்பதும் மன்னர் வம்சத்திற்கு அவசியமானதாகும். மன்னர் பரம்பரை தமது தேவைக்காக அமெரிக்க ஆளும் வர்க்க, வணிக வர்க்கத்தின் உறவை வளர்க்கின்றார்கள். இவ்வாறே Jared Kushner தன்னை வளைகுடாவில் தொடர்புகளை ஏற்படுத்தி தமது சொத்தை வளர்த்துக் கொண்டார் என்ற செய்தியை இணையங்களில் அறிய முடியும். இதை வளைகுடாவைச் சேர்ந்தவர்களும் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

 

 

Cluster bomb, diego garcia, ஐரோப்பா தளம் சைப்பிரசில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். நத்தன்யாகு தான் முன்னர் சொன்னது போல ஈரான் மனிதகுலத்திற்கு ஆபத்தானது என்பதை இத் தாக்குதல் நிறுவுகின்றது. ஈரான் மீதான தாக்குதல் உலக மக்களின் சார்பாக நடத்தப்படும் தாக்குதல் என்கின்றார். ஈரான் பலமிழந்துள்ளது என்ற கருத்தாக்கத்தை மீள மீள கூறி வருகின்றார்கள். இவ்வாறு கூறிக் கொண்டிருப்பதால் பிரச்சனைக்காக தீர்வைப் பெற முடியாது.

us/israel ஆட்சியாளர்களின் பித்தலாட்டக் கதைகளை

 

சர்வதேச சட்ட நியமங்கள் (international law must be respected) மதிக்கப்பட வேண்டும் என்பார்கள். இந்த வார்த்தை பல விடயங்கள் அடங்கியுள்ளது. இவர்கள் தான் சர்வதேச சமூகம் என்று ஐ.நாவின்  ஒப்புதலுடன் சட்டபூர்வமாக யுத்தத்தை நடத்தியவர்கள்.

 

அதிகார பலத்தில் உள்ளவர்கள் இஸ்ரவேல் கொடுத்துள்ள நாசகார அழிவுப் போருக்கு கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்காவும் இறங்கியது. இரண்டு சக்திகளுக்கும் வெவ்வேறு நலன்கள் இருக்கின்றது. அகண்ற இஸ்ரேலிய அரசியல், எண்ணையுடன் சம்பந்தப்பட்ட நிதிமூலதன அரசியல். அகன்ற இஸ்ரேலியக் கனவில் உள்ள சியோனியவாதிகள் நீண்டகாலமாக செயற்பாட்டில் உள்ளார்கள். அவர்கள் மக்களை இல்லாது ஒழித்து அந்த இடங்களை கைப்பற்றும் திட்டம் இதன் தொடர்ச்சியே காசாமீதான ஆக்கிரமிப்பு யுத்தம்.

காசா அழிவின் போதும் சம்பிரதாயத்திற்குத் தான் எதிர்ப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மாறாக

யுத்தம் நிறுத்தம் வேண்டாம் இஸ்ரேல், அமெரிக்காவிற்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு ஏற்பட்டுள்ளது.

  

அரபு- மேற்காசிய நாடுகள்

மேற்காசிய நாடுகளில் புவியியல் என்பது இனிவருங்காலத்தில் எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவதானிக்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் பாலவனமும், நீரும் அற்ற பகுதிகளாக இருக்கின்றது. இந்த நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு மற்றைய பகுதிகளை தங்கியிருக்க வேண்டிய நிலை உள்ளது. உணவு, நீர் என்பது அனைத்துக்கும் அத்தியாவசியமாகும்.

 

ஹேமூஸ் வளைகுடாவின் இருப்பு என்பது கப்பல் போக்குவரத்தை தீர்மானிக்கும் இடதாக இருக்கின்றது. உலகில் 20 வீத விழுக்காடு எண்ணை பிறநாடுகளுக்கு செல்லும் கடல் வழிப்பாதையாகும். கிழக்காசிய நாடுகளான இந்தியா, யப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் கடல்வழிப் பாதையாகும்.இன்று இந்த கடல்வழிப்பாதை இப்போ அபாயகரமானதாக இருக்கின்றது.

 

 

இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதலில் இருந்து தப்பிக்க அன்னிய இராணுவத்தை உள்நாட்டினுள் அனுமதிக்காமை

ஆதிக்கத்தை முடிந்தவரையில் தவிர்க்க முயலும்

சொந்த இராணுவ பலத்தை உருவாக்குதல்

 

 

No comments:

Post a Comment