Popular Posts

Thursday, 5 February 2026

இன்றைய அரசியல் போக்கு 12 -அனுர

 

 


இன்றைய அரசியல் போக்கு 12 

அனுர உரை

அனுரவின் உரையை பலர் கிலாகிக்கின்றார்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதை இங்கு அலசப்படுகின்றது.

 

இலங்கை பெற்றது உண்மையான சுதந்திரமா?

ஒரு மார்க்சிய கட்சியாக இருந்தால் அந்த மதிப்பீடு வளமையான கட்சியைப் போல பேசிவிட முடியாது.

கொலனித்துவம் தமக்குத் தேவையான ஆட்சியாளர்களை தெரிவு செய்து அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றது. 1948- 2026 வரையிலும் எசமானர்கள் சொல்வதன் படிதான் ஆட்சி நடத்தப்படுகின்றது. இலங்கை என்பது மறுகொலனித்துவ நாடுகளில் ஒன்று தான்.

``எமக்கே தனித்துவமான இறைமையின் உரிமை கிடைத்தது.

சிங்கள தேசத்திற்குத் தான் இறைமை கிடைத்தது. தமிழர் தேசத்திற்கு அல்ல. இங்கு அரசியல் கோட்பாட்டு முரண்பாடுகளை கடந்து எதனையும் கிலாகித்திட முடியாது. தமிழர் தேசம் சிங்கள தேசத்தின் சேமிப்பு சக்தியாக இருக்கின்றது.

`` இலங்கையின் சுயாதீனத்தன்மை, இறைமை, எமது சுதந்திரம் ஆகிய மும்மூர்த்தியின் மேல் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.

இவைகள் சிங்கள தேசத்திற்கானது. முதலில் சொந்த நாட்டு எல்லைக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தின் மீதான சுயநிர்ணயம் பற்றிப் பேசப்பட வேண்டும். இதைப் பேசாது யாழில் ஒரு கதை, தெற்கில் ஒரு கதையென அரசியல் செய்யப்படுகின்றது.

நிலம் பற்றிப் பேசுகின்ற போது இனவாதிகள் என்று பேசுவதும் பேரங்கார அரசியல் தான்.

 

``எனவே இந்த 78 ஆவது சுதந்திர தினத்தில் நாம் எமது இதயத்திலும் அறிவிலும் நிலைநிறுத்த வேண்டியது நாட்டைப் பற்றிய உறுதியான அர்ப்பணிப்பாகும்.” இங்கு கவனிக்க வேண்டியது என்பது தமிழ் மக்கள் இலங்கையில் பிரசைகள் என்றில்லாமல் அன்னிய நாட்டின் மீது குண்டு போட்டு அழிக்கப்பட்டார்கள். இதனை மறுத்து அவர்கள் சிங்கள தேசியத்தை கொண்டாடுகின்றார்கள். இதில் தமிழ் மக்கள் எவ்வாறு பங்காளிகளாக இருக்க முடியும்.

 

தாய்நாட்டைக் காப்போம்

``தாய்நாட்டுக்காக அதே போன்று எதிர்கால சந்ததிக்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடுவதாக இருந்தால் அவர்கள் உண்மையில் வீரர்களாக மாறுவதை தடுக்க முடியாது.இவ்வகையான தேசபக்தி/நாட்டுப் பற்று என்பது முதலாளித்துவ தேசியவாதமாகும். அனுர முன்வைக்கும் தேசியவாதம் முதலாளித்துவ வகையாகும். இன்றொரு தேசத்தை ஆக்கிரமிப்பை செய்து கொண்டு பேசும் தேசியவாதம் பிற்போக்குத் தனமாகும்.

ஆம் தாய்நாட்டிற்காக நீங்கள் எவ்வாறு அரசியல் செய்தீர்கள் என வரலாற்றில் அறிந்துள்ளோம்.

 

 பொருளாதார வளர்ச்சி

``மனித வளம் எமக்கு முக்கிய பலமாக உள்ளது என்ற உண்மையான விடயமாகும். ஆனால் அந்தப் பலம் நாம் பிரிந்திருப்பதிலா அல்லது இணைந்திருப்பதிலா தங்கியுள்ளது? அனுர பேசுவது ஒரு உண்மை உள்ளது. தன்தேசத்தை வளர்ப்படுத்துவதற்கு இன்னொரு தேசத்தின் மனிதவளம், மூலப் பொருட்கள், இயற்கை வளம் (கடல்) அவசியம் என்பதாகும்.

தம்மை முற்போக்குவாதிகள் என்போர் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஒன்றும் நடாக்காததுபோல பாவனை செய்திட முடியாது. ஆட்சியாளர்களுக்கு சிங்கள தேசத்தில் அழுத்தம் வரும் என்பதற்காக தமிழ் மக்கள் தங்கள் உரிமையை விட்டுவிட முடியாது. ஆக பொருளாதாரவாதிகளான இருந்து கொண்டு இதனை விமர்சிப்பதற்கு மார்க்சியர்கள் என்பவர்கள் தயாராக இல்லை என்பதே துயரே.

சிங்கள தேசம் எதிர்க்கும் என்றால் சிங்கள மக்களிடம் தமிழர்களின் பிரச்சனையை கொண்டு செல்ல ஜேவிபியும் அதன் கட்சியும் என்ற செய்துள்ளார்கள். சிங்கள மக்களிடம் கொண்டு செல்லவேண்டியது JVP கடமை. அரசியல் ரீதியான சோம்பேறித் தனம், கோட்பாட்டுத் தளத்தில் திரிபுவாதம், அரசியல் தளத்தில் சமூகத் தேசிய வெறியர்களாக இருந்து கொண்டு தமிழ் மக்கள் மீது பொதுமையான (இனவாதம்) என்று பேசிவிட்டுச் சென்றுவிட முடியாது.  

குரோதம், போட்டி பொறாமை என்று அரசியல் அற்ற பேச்சுகள்  அனுரவை பாதுகாக்கும். ஆனால் அதனால் மக்கள் கூட்டத்திற்கு எவ்வித பலனும் கிடைக்காது.

 

``இந்த வேறுபாடுகளை மதித்து ஒவ்வொரு இனக்குழுக்களின் தனித்துவத்தை அங்கீகரித்து அதேவேளை இலங்கையராக சிந்திக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக யுகம் எமக்கு அவசியம்.அரசியல் சுயநிர்ணயம், அரச சுயாதீனம், தேசயின அரசின் உருவாக்கம் என்பதை லெனினிய வாதிகள் முன்வைக்கின்றார்கள். அது சரியான மார்க்சிய வழி என்றும் நம்புகின்றார்கள்.

இந்தப் மார்க்சியமா? அதற்கு அப்பால் உள்ள முதலாளித்துவ அரசியல் போக்கிற்கும் இடையில் நடைபெறும் முரண்பாடுகளாகும்.

``எந்தவொரு நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு அச்சமடைய மாட்டார்.” அரசு என்பதே பலாத்காரத்தை தனி உரிமையாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இதனால் தான் பயங்கரவாதச் சட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துகின்றார்கள். இவர்கள் பேசும் சட்டத்தின் ஆட்சி என்பதே ஒடுக்கப்படும் தேசம் போராடுவதற்கு சுதந்திரம் இல்லை என்பதே. இது தான் ஆறாவதையும், PTAயையும் தொடர்கின்றார்கள். மேல் கூறிய கூற்றை பழைய ஆட்சியாளர்களுக்கு மாத்திரம் என்று இந்தக் கூற்றை மட்டுப்படுத்தி விடமுடியாது. ஏனெனில் அரச நிறுவனம் பற்றிய புரிதல் இல்லாது எதனையும் பேசிவிட முடியாது.

`உங்களுக்கு வேகமாகச் செல்ல வேண்டுமெனில் தனியாகச் செல்லுங்கள். ஆனால் வெகுதூரம் செல்ல வேண்டுமெனில் ஒன்றாகச் செல்லுங்கள்” இங்கு அனுர சொல்ல வருவது சந்தர்ப்பவாத அரசியலாகும். தமிழ் மக்கள் தனியாக செல்ல வேண்டுமென்று தன்னிச்சையாக முடிவெடுக்க வில்லை. 1922- 1972 வரையில் இலங்கைக்குள் தான் தீர்வைத் தேடினர்.  நாட்டு அரசினுள் ஒன்றாக வாழ முடியாது என்ற காரணத்தினால் தான் தனிநாட்டிற்காக போராட்டத்தில் இறங்கினார்கள். எம்மை வலிந்து தான் ஆயுதம் தூக்க வைத்தது. இவர்கள் ஈழப் போராட்டத்தை பிரிவினையாகத் தான் அனுகியிருந்தார்கள். யார் தனியே சென்று வேகமாகச் செல்கின்றார்கள் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும். கூட்டாகச் செல்வது தான் நன்மை என்பது நீங்கள் தீர்மானிக்க முடியாது ஒடுக்கப்படும் மக்கள் தீர்மானிக்கட்டும்.

 

 

இயற்கை அழிவுகள்

இயற்கை அழிவு நடந்துவிட்டது அதற்கு கண்ணீர் விடுங்கள் என்று இவர்கள் கோருகின்றார்கள். இயற்கை அழிவு நடந்தாலும் அரசியல் கோரிக்கையை யாரும் விட்டு விடுவதில்லை. ஏன் 2004 ஆழிப் பேரலை நடத்திய அவலத்தின் போது தான் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி உதவிக்கான அமைப்பை உருவாக்க விடாது  அரசியல் செய்தார்கள்.

ஆனால் இன்று மட்டும் அழிவு என்பது துன்பியலாகத் தோன்றுகின்றது.

 

 

 

No comments:

Post a Comment