இன்றைய அரசியல் போக்கு 13
சுமந்திரம்
தமிழரசுக் கட்சியானது ஒரு தமிழ் மிதவாதக் கட்சியில் வெவ்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய கட்சியாகும். இன்று கட்சியின் தலைமையில் இருப்பவர்கள் தொழில்முறை அரசியல்வாதிகளே உள்ளார்கள். அத்துடன் அமைப்பு விதிகள் சாதாரண உறுப்பினர்களுக்கு தெரிந்துள்ளார்களா என்பது கேள்விக் குறியே.
அரசியல் இலக்கில் இருந்து திசைமாறுவதும் குற்றமாக கருதவில்லை. ஆனால் இன்று அமைப்பு விதியில் ஏற்பட்ட முரண்பாடு என்று தான் உரையாடல் தொடர்கின்றது. அமைப்பு வடிவத்தில் ஏற்படுகின்ற சிக்கலும் பிரச்சனைக்குரியதே.
“அமைப்பு வடிவப் பிரச்சனை”
அமைப்பு வடிவம் என்பது தனிநபர்களின் முடிவுகளால் செயற்பட்டு வந்துள்ளது. 2009 இருந்து இன்று வரையில் தனிமனிதர்களின் முடிவே அமைப்பின் முடிவாக கொள்ளப்பட்டது. எந்த அரசியல் முடிவுகள், செயற்பாடுகள் ஒப்பிற்கு சில உறுப்பினர்கள் பங்கெடுத்துள்ளார்கள்.
2009 பின்னர் கட்சியில் இருந்து பலர் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்கள். அதுவும் தலைமையின் அடிப்படையில் இடம் பெற்றது. இந்த இடைநிறுத்தங்கள் முறையாக விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற விமர்சனம் வந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமைப்பு விதியின் படி தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் முறை கேடு நடைபெற்றதாக தலைவர் பொறுப்பு ஏற்பது நீதிமன்றம் மூலம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அரசியல் அமைப்புப் பேரவையில் இருந்து சிறிதரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதாகவும், அதனை அவர்செவிமடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தெரிவுக்கு சிறிதரன் ஆதரவு அரசாங்கத்திற்கு
கிடைத்துள்ளது. மேற்கண்ட ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்களின்
சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் புதியவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். இன்னொருமொரு
உறுப்பினருக்கு சேவைக்காலம் முடிவடையவில்லை. நல்லாட்சிக் காலத்தில்
நியமிக்கப்பட்டதே இந்த ஆணைக்குழுவாகும். அப்போதே மேஜர் ஜெனரல் பாயித்த பெர்னாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு எழும் கேள்வி ஏன்
நல்லாட்சிக் காலத்தில் விமர்சனத்தை சுமந்திரன் தரப்பால் வைக்க முடியவில்லை? கணக்காளர் நாயகம், உயர் நீதிபதி நியமனம் போன்றவற்றிற்கு அரசாங்கத்துடன் இணைந்து
சிறிதரன் வாக்களித்துள்ளார் என்பதே குற்றச் சாட்டாகும்.
அரசியல் இலக்கில் சறுகல்
2015-2019 நல்லாட்சியால், ஜெயம்பதியின் தலைமையில் வரையப்பட்ட யாப்பு வடிவத்தை தொடர முடியாது. ஏக்கராட்சிய என்பது தமிழர் தேசம் என்பதை மறுப்பதாகும்.
*ஏக்கராட்சியத்திற்கு விளக்கம் கொடுத்தது
*சஜித்தை ஆதரித்தது- சுமந்திரம் என்று பத்திரிகை பிரசாரம்
*விக்கினேஸ்வரனை எதிர்த்தது- ரணிலுடன் மாகாண சபை தீர்மானத்திற்கு எதிரான செயல்
*ரணிலுடன் இணைந்து போனது?
*மைத்திரியுடன் இதயத்தால் இணைந்தது
*போரளிகளிடமிருந்தும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கு என்று இலங்கை அரசிடம் பாதுகாப்பு பெற்ற தமிழ் அரசியல்
*இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம் என்று கூறியதும் தமிழ் மக்கள் மீதான உரிமை மறுப்பே.
இவைகள் எல்லாம் எந்த கணக்கில் சேரும்?
தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் சம்பந்தர் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பை பாதுகாக்கும் அரசியல் நிலைப்பாடு எடுத்ததே வரலாறாகும். லங்காவின் சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதில்லை என்பது செல்வநாயகம் காலத்தில் இருந்த நிலைப்பாடாகும்.
2009 இருந்து காணியை விடுவிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம் போன்றவற்றில் பிரக்ஞை பூர்வமாக பங்கெடுக்கவில்லை.
``சிங்கள மக்களுக்கு #சமஸ்டி என்னும் சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனைப் போல தமிழ் மக்களுக்கு #ஒற்றையாட்சி என்று சொல்லைக் கேட்டால் பயமாக இருக்கிறது.”
Undivided- indivisible
``பிளவு படாத பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை ஆங்கிலத்தில் undivided and Indivisible country அதனை சிங்களத்தில் Nobethunu, Bethanna Noheki ஒரு நாடு ஒரு நாடாகவே இருக்கும் என்பதை மட்டும் சொல்வதாக தீர்மானித்து ஆட்சி முறையை குறிக்கிற சொல்லை நீக்கி நாடு ஒரு நாடு என்பதை விவரிப்பதான கூற்றாக அது மாற்றப்பட்டது.”
Undivided- indivisible இந்த இரண்டு சொல்லாடல் என்பது பெரும் அர்த்தம் பொருந்தியது. இறைமையை முழுமையாக ஒப்படைத்துவிடுவது ஆகும். இதனை ஏன் ஏற்றுக் கொள் என்று தமிழர் தரப்பு விளக்கம் கொடுக்கின்றார்கள்? சுயநிர்ணயத்தை எவ்வாறு விட்டுக் கொடு என்று தமிழ் தரப்பால் சொல்ல முடிகின்றது. இன்னொரு படி சென்று ஒற்றையாட்சிக்கு வியாக்கியானம் கொடுக்கின்றார்கள்.
அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம், தேசிய இன அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
இராணுவமயமாக்கத்தினை ஆதரித்து நிற்பதால் அதற்கு விளக்கம் கேட்கப்பட்டதும், நடவடிக்கை எடுத்தும் சரி என்று வாதிக்கப்படுகின்றது. தமிழர் நலன் சார்ந்து சிந்திக்கின்ற போது இராணுவமயமாக்கம் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால் இராணுவமயமாக்கம் பற்றிய பிரக்ஞை இருந்துள்ளதா என்றால் இல்லை என்பதே கடந்த கால வரலாறு.
சிங்கள தேசத்தின் சட்டத்தை பயன்படுத்தியே தமிழ் மக்களின் கருத்துரிமையை நசுக்கும் தமிழ் விதேசியப் பிரிவு.
இந்தப் போக்கு தவறான முன்னுதாரணம். இவ்வாறான நடவடிக்கை சிங்கள தேசத்தின் ஒடுக்குமுறைசட்டம் இருப்பதை நியாயப்படுத்துகின்றனர்.
தமிழரசுக் கட்சியில் உள்ள விதேசியப் பிரிவை கோட்பாட்டு ரீதியாக விமர்சிப்பதை தடுப்பது தமிழ் மக்களின் நலனில் இருந்து அல்ல.
இறைமைக்காக போராடும் மக்கள் கூட்டத்தின் உரிமைப் போராட்டத்தை சிதைப்பதற்கேயாகும்.
தமிழர்களின் போராட்டத்தை சிதைப்பதற்கு சிங்கள தேசத்தின் சட்டநிறுவனம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.
ஆக இனமதகுமலற்று கலப்போம் என்ற அரசியலை முன்னெடுக்கும் சிங்கள தேசத்திற்கு துணை போகின்ற அரசியலைத் தான் இந்தப் பிரிவு செய்கின்றது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாக அமைப்பில் ஜனநாயகம் இன்மை இருக்கின்ற வேளையில் இவ்வகையான சட்ட உதவி என்பது இன்னும் மோசமான நிலைக்கே கொண்டு செல்லும்.“
கட்சித் தீனமானங்களை விமர்சனம் செய்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை சுமந்திரன் விட்டிருக்கின்ற நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.
ஜனநாயக மறுப்பு அனைத்துப் பரிவினராலும் எதிர்க்கப்பட வேண்டியதாகும். தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற இருக்கின்ற முரண்பாட்டை தமிழ் மக்களினன் நலனில் இருந்து அணுகப்பட வேண்டும்.
ஏக்கராட்சியத் தரப்பின் அரசியல் போக்கிற்கு துணையாக இந்த நகர்வு செல்கின்றது. சிறிதரன் தனிப்பட்ட ரீதியில் நல்லவர் கெட்டவர் என்பதற்கும் அப்பால் தமிழரசுக் கட்சியில் உள்ள சீர்திருத்தப் பிரிவினரினை அழிய விட முடியாது.
படித்த காரியக் காரணை விட சிறிதரன் ஆபத்தானவர் இல்லை.
இங்கு நபர்களுக்கு இடையில் முரண்பாடு என்று நோக்காது. தமிழ் மக்களின் நலனில் இருந்து பேச்சு, எழுத்துச் சுதந்திரம் பாதுகாப்பட வேண்டும்.
இராணுமயமாக்கம் என்று பேசுவதும், ``கிவுல் ஓயாத்திட்டம்” அதற்கான எதிர்ப்பை சுமந்திரன் காட்டியுள்ளார். அதை வரவேற்கின்ற வேளையில் தேசிய இனப்பிரச்சனை என்கின்ற நிலம், பொருளாதாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் ஒரே நிலைப்பாடுகள் கொண்டிருக்க வேண்டும். இன்று நேற்றல்ல இராணுவமயமாக்கம் தொடர்ச்சியான போக்காக இருக்கின்றது.
இவைகள் எல்லாம் சந்தர்ப்பவாத அரசியலாகும். இவற்றை சுட்டிக் காட்டுகின்ற போது சிங்கள தேசத்தின் சட்டத்தை கொண்டு யாரையும் பழிவாங்க முடியும். இது தான் தமிழரசுக் கட்சியின் தமிழ் தேசியம் ஆகும் போல!!!



No comments:
Post a Comment