Popular Posts

Tuesday, 3 March 2026

jathi Jathindra ஒரு பதில் ..!! 2

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjESTj6eGxnsnYve5r94Mvr6Dj9GrDiYNRB1I0RUOhTeLew4s42VyEnrdPAQT7F7h_VP5oZkJ_qh9v25KAaY49r3YYJNEUTmxLzH0qrEOPc7HSWlEk9jZPCprsNlK5V2Q-pGDDLORtD_NFXJlzFHc0yg7op4_Lsd4Ka_qOj7NEAoi4lWf9p4r10ep2Nk7s/s720/Jasithra%201.jpg

 2

இந்த ஆக்கம் ஒரு கருத்துருவாக்கியின் அரசியல் நிலைப்பாடு, அரசியல் நோக்கம், நிலைப்பாடு, சர்வதேச அரசியல் பற்றிய பிரச்சனைக்கு எதிர்வினையாக முதல்பகுதி எழுதப்பட்டது. அரசியல் நீக்கம் செய்யப்படுகின்ற நிலையில் முன்னரை விட அரசியல் உரையாடல் நடைபெற வேண்டும்.

தமிழ் சமூகத்தில் வெவ்வேறு போக்கு 2009 பின்னர் உருவாகியிருக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள நிலை பற்றி இங்கு பேசவேண்டியதில்லை. தாயகத்தில் இருக்கின்ற அரசியல் போக்கைக் கொண்டவர்களின் வெவ்வேறு அணிகளாக இருக்கின்றார்கள். அவர்களின் கருத்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்கின்றது என்பது உண்மையே.

2009 பின்னர் தோல்வி மனப்பான்மை ஊட்டப்பட்டது. பெரும்பான்மை தமிழ் சக்திகள் வெற்றிடத்தை எதிர் நோக்கினர் என்பது உண்மையே. பல்வேறு விடயங்கள் அங்கு போதிய முதிர்ச்சி இருக்கவில்லை என்பது உண்மையே. குறிப்பாக அமைப்புவடிவம், அமைப்பிற்கான செயல்வடிவம், மக்கள் திரள் அமைப்பை எவ்வாறு முன்னெடுப்பது, அந்த மக்களை எவ்வாறு திரளாக வைத்திருப்பது, எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்ற போதிய புரிதல் அன்றும் இருக்கவில்லை, இன்றும் இல்லை. இது தேசிய ஜனநாயக சக்திகளின் பலவீனமான நிலை என்பது உண்மையே. அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள சிறிய காலம் எடுக்கப்பட்டதும் உண்மையே. இங்கு தமிழ் மக்கள் பேரவை என்ற முயற்சி என்பது புதிய சூழலை உருவாக்கியது.

 

நிதிமூலதனத்தின் ஆதிக்கம்

யுத்தங்கள் நீதியான யுத்தம், அநீதியான யுத்தம் என்று உள்ளது. ஈழப் போராட்டம் என்பது ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரச அதிகார ஏகபோகத்திற்கு எதிரான போராட்டமாகும். யூத சியோனிசம் என்பது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட ஆக்கிரமிப்பு அரசியல். இதில் தனிமனிதர்களான பிரச்சனை இல்லை என்று அகன்று விட முடியும் என்கின்றார்கள். எமது போராட்டம் என்பது நீதியான யுத்தம். ஆனால் அநீதியான யுத்தம் என்பதையும் ஒன்றிணைத்து பேசுவது அரசியல் மோசடியாகும்.

``(We will not allow any enemy to obtain weapons of mass destruction that can be turned against us) மத்திய கிழக்குப் பிராந்தியத்தில், எதிரிகள் எவரும் எங்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய மனித குலத்திற்கு எதிரான ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அதற்கு முயற்சித்தால் நாங்கள் அழிப்போம் என்பதுதான் இஸ்ரேலின் கொள்கை. இது 1981இலிலிருந்து இஸ்ரேலின் அடிப்படையான பாதுகாப்புக் கோட்பாடாக (Begin Doctrine) இருக்கின்றது.(யசீந்திரா)

 

இன்று நடந்து கொண்டிருக்கின்ற ஆக்கிரமிப்பு போரில் பயன்படுத்தும் யூத கருத்துருவாக்கத்தை தான் கருத்தாளர் பிரதிபலிக்கின்றார். இசுரேல் என்பதே ஆக்கிரமிக்கப்பட்ட மண்ணில் உருவான நாடாகும். ஈரான் உலகிற்கும், இசுரேலுக்கு, அமெரிக்காவிற்கும் ஆபத்தானதாக இருக்கின்றது. அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திக் கொள்கின்றார்கள். ஈரான் மனித குல விரோதி என்கின்றார் தந்தன்யாகு (2.3.26) அதே மொழிதான் கருத்துருவாக்கியான நபரும் செய்கின்றார். இதற்குத் தான் அந்த நாடு ஊடகவியலாளர்களை அழைக்கின்றது. தனக்குத் தேவையான கருத்துகளை  எழுத ஊக்குவிக்கின்றது. அதற்கு சன்மானமும் வழங்குகின்றது.

 

அரசியல் எழுபவர்களுக்கு சியோனிசத்தின் வரலாறு, ஏகாதிபத்தியங்களின் அரசியல் விளங்கிக் கொள்ளவில்லை என்ற பாவனை செய்து விடமுடியாது. அவ்வாறு இருக்க முடியும் என்று நம்பும் நீங்கள் புதிய அணுகுமுறை வேண்டும் என்று எழுதுவதும் சுயமுரண்பாடாக கொள்ள முடியவில்லை.

 

இந்த உலகப் போக்கு என்பது ஏகபோகம் தோற்றுவிக்கப்படல், ஒன்றிணைந்த நிறுவனக் கட்டமைப்பு பொருள் உற்பத்தியை ஒன்று குவிக்கின்றன, வங்கிகள் முறை வலுவாக கட்டமைக்கப்பட்டது, மூலப் பொருட்களுக்கான கட்டுபாட்டைக் கொண்டது, சந்தையைப் பிரித்தல், தேவையான ஆட்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல் ஆகும். https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2022/08/blog-post_22.html

சந்தைக்காக அலைகின்ற போது தமது நலனைப் பாதுகாக்கின்றது. அதற்கு தேவையாக படைகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவத் தளங்கள் உருவாக்கப்படுகின்றன. 80 நாடுகளில் 800 தளங்களை USA கொண்டுள்ளது. இது மற்றைய நாடுகளிளை பயமுறுத்துவது, இராணுவ மேலாதிக்கத்தை நிறுவது. இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான தொடர்ச்சியான போக்காகும். ஆக்கிரமிப்பு அரசியலை இட்டு கவலை கொள்ள மாட்டேன் என்று கூறிக் கடந்து விட முடியாது.

 

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தேசியம் என்பது சொந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதும், முழு இலங்கையில் அளவில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதாகும். தேசியம் என்ற ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டபட பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடாகும். எனவே நான் எதையும் கவனிக்கமாட்டேன். நான் எவற்றையும் தடுத்து நிறுத்த முடியாது. உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்ற வாதம்  என்பதும் கூட அரசியல் உள்ளடக்கம் கொண்டது தான்.

 

இங்கு மனிதர்கள் எவரும் வர்க்கச் சார்பு அற்ற மனிதர்களாக இருக்க முடியாது. மனிதர்களில் செயற்பாடுகள், சிந்தனைகள் ஒவ்வொரு வர்க்கத்தையும் வெளிப்படுத்தி விடுகின்றது. இவர்களின் ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்பவர்களுக்கும், சமரசவாதப் போக்கைக் கொண்ட நடுநிலைப் போக்கு கொண்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கும் வர்க்கம் உண்டு. ஒடுக்கப்படுபவர்கள் பக்கம் நிற்பவர்கள் முற்போக்கு ஜனநாயக வாதிகளாகவும், சமரச- நடுநிலைப் போக்கு என்பவர்கள் சந்தர்ப்பவாதிகளாகவும், பிழைப்புவாதிகளாகவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

ஒன்றுக்குமே கவலை கொள்ளத் தேவையில்லை எனில் ஏன் எவ்வாறான அரசியல் ஆய்வு முறை தேவை என்று பேசவேண்டியுள்ள? அதுவும் தேவையற்ற ஒன்று தானே.

 

 

 

Thimpu/வட்டுக்கோட்டை/ சமஸ்ரி/மக்கள் திரள் போராட்டம்

``இவைகளின் விளைவுகள் தொடர்பில் ஆராயாமல் மீண்டும் இப்போது புதிதாகப் பேசுவது போன்று திம்புக் கோட்பாடுகள் பற்றியும், புதிய பிரகடணங்கள் தொடர்பிலும் பேசுவது சரியானதா? நேர்மையானதா? இந்த இடத்தில் தான் தமிழ் அரசியல் ஆய்வுத் துறையின் அவலம் தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கின்றது.

``தமிழ் மக்கள் நிம்மதியாக இல்லாவிட்டால் இங்கு எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. இப்படி பிரபாகரன் கூட பேசியதில்லை.”” (யசீந்திரா) ஒரு தேசம் இன்னொரு தேசத்தினை ஒடுக்கும் என்றால் ஒடுக்கும் தேசம் நிம்மதியாக இருக்க முடியாது. இது கால் மாக்சினால் அயர்லாந்து விடயத்தில் பேசப்பட்டதாகும். இங்கிலாந்து பலநூற்றாண்டு காலமாக அயர்லாந்தினை ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள். 1922இல் தான் அயர்லாந்து குடியரசு உருவாகியது. ஆனால் வடஅயர்லாந்து தொடர்ந்தும் பிரித்தானிய ஆக்கிரமிப்பில் உள்ளது. பொதுவாக மார்க்சியர்களின் சொல்லாடலாகும். அதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதார உறவை விளங்கிடாத நிலையில் தவறாக விளங்கிக் கொள்ளப்படுகின்றது.  சிங்கள பௌத்த பேரினவாதம் சிதையப் போவதில்லை. அங்கு அவர்களின் சோசலிசத்திற்கான போராட்டம் என்பது முடக்கியே இருக்கும் என்பது தான் அந்த மேற்கோளின் பொருளாகும்.

இந்த இரண்டு கூற்று 1976 என்று கொள்கின்ற போது 50 வருட வரலாற்றை உள்வாங்கிய கருத்தாளராக கொள்ள முடியவில்லை. ஒரு தேசம் என்கின்ற போது சுயநிர்ணயம் அவசியமானதாகும். சுயநிர்ணயம் என்பதை நடைமுறைப் படுத்த தேவையானது அரச வடிவமாகும். அரச வடிவம் என்பது பற்றி பல முரண்பாடு கொண்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. வட்டுக்கோட்டை தீர்மானம், திம்பு தீர்மானம் அரசு வடிவத்தின் அவசியம் பற்றிப் பேசுகின்றது.

 

விசுவலிங்கம் என்ற ரொட்ஸ்கியர் கூறுகின்றார் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சிக்கு மாத்திரம் தான் உரித்து என்கின்றார். இதே போல தான் . ``திம்பு பேச்சுவார்த்தை இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது – அப்போது நடைபெற்ற விடயத்தின் அடிப்படையில் இப்போது பேசுவது என்றால் எப்படிப் பேசுவது? (யசீந்திரா) என்கின்றார். இவர்களை எண்ணி பரிதாப்படுவதா? கோபம் கொள்வதா? இவர்கள் யாருக்காக இந்தக் கேள்வியை எழுப்புகின்றார்கள்?  

 

 

எவ்வாறானதொரு அரசியல் ஆய்வு முறைமை நமக்கு தேவையானது?

``அணுகும் அரசியல் ஆய்வு முறையொன்றே தமிழ்ச் சூழலுக்குத் தேவையானது. இதனை நான் பொறுப்புணர்வுமிக்க அரசியல் ஆய்வு முறை என்பேன். இது எந்தவொரு கருத்தியல் சார்ந்ததும் அல்ல கடந்தகால கற்பிதங்கள் தொடர்பானதும் அல்ல(யசீந்திரா)

இங்கு யாரும் புதிதாக கோட்பாடு வகுக்க முடியும் என்று நம்புகின்றார்கள். ஆனால் மக்களுக்கான கோட்பாடு, முதலாளி வர்க்கத்திற்கான கோட்பாடு என்பதற்கு அப்பால் புதிய கோட்பாடு வகுக்க முடியாது. அதாவது நடுநிலையான கோட்பாடு என்று ஒன்றும் இல்லை. கலாசாலையில் வெவ்வேறு கோட்பாடுகள் உள்ளன. அவை ஹெகலியம் உள்ளது. ஹெகலியம் என்பது முழுமையான ஆய்வு முறையாக கொள்ள முடியும் என்று ஏற்பவர்களும் உள்ளார்கள். இது முடியாது என்று கூறுகின்ற மார்க்சிய பார்வையும் உள்ளது.

 

அணுகுமுறையாக Structuralism (Levi Struss), functionalism (Emil Durkheim), structural functionalism (Malinowski), contradictions perspective- Marxism & interactional perspective. (தனிமனிதர்களில் நிலையில் இருந்து சமூகத்தினை விளக்கிடும் அணுகுமுறையை முதன்மைப்படுத்தியுள்ளார் சமூக கட்டமைப்பு மட்டத்திற்குப் பதிலாக தனிமனிதர்களின் மையப்போக்காகும்.

https://xn--velan-68n6cxa6nmc.blogspot.com/2018/03/blog-post.html

அணுகுமுறை என்பது தமிழ் பரப்பில் கைலாசபதி, சிவத்தம்பி போன்ற ஆளுமைகள் உருவாக்கிச் சென்றுவிட்டார்கள். இவர்கள் எல்லாம் நேட்காட்சி வாதத்திற்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தில் எதிர்க் கொண்டுள்ளார்கள். அவர்கள் எதிர்க் கொண்டு தான் இயங்கியல் திறனாய்வு முறையை நிலைநிறுத்தினார்கள். எனவே புதிய ஆய்வுமுறை என்பது ஒன்றிருக்க முடியாது.

 

ஒடுக்கப்படும் மக்களின் மீட்சி- பாட்டாளி- தேசம்- மூலதனம்- இறைமை

தேசத்தின்  மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படையான விடயங்கள் அரசியல் ரீதியாக அணுக்கப்பட வேண்டும். யாசகம் எடுக்கும் மனிதருக்கு சில்லறையை போட்டுவிட்டுச் செல்லும் ஜீவகாரூண்யம் போல முடிவெடுக்க முடியாது.

அரசியல் அதிகாரம், மூலதனத்துடனான உறவு இவற்றை தவிர்த்து பொருளாதாரத்தை கட்டமைக்க முடியாது. ஏழைகளையும் நீண்டகாலத்திற்கு வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சிறப்புச் தேர்ச்சியற்ற உழைப்பாளிகளை வைத்திருக்க முடியாத நிலையை ஏற்படும்தும்

 

இறுதியாக

 

ஆய்வுகள் என்பது எழுத்துகளாலும், வார்த்தைகளாலும் விளையாடுவதில்லை. சமூக அமைப்பை பற்றி சமூகத்திற்கு எடுத்துச் செல்வதாக வேண்டும். சமூக வளர்ச்சிப் பொக்கு எவ்வாறு கிக்கல்களை தோற்றுவிக்கின்றது. ஒவ்வொரு சமூக்க் கட்டத்தில் எவ்வாறு சமூக உறவும், மனித வாழ்வும், அரசும் கட்டமைக்கப்படுகின்றது என்பதை சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். மனிதர்களின் வாழ்வியல் எலாற் எங்கம் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. பல்வேறு ஏற்ர இறக்கங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றது. அவ்வாறு ஏற்ர இறக்கம் கொண்டதாக இருந்தாலும் தொடர்ச்சியான வளர்ச்சிப் போக்கு கொண்டதாக இருந்திருக்கின்றது. அனைத்துக் காலத்திலும் சமூகம் மாறிக் கொண்டுதான் இருக்கும். சமூகம் மாறா நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று எவரும் கருதிவிட முடியாது. முன்னோக்கி ஒடிச் சென்ற சமூகப் போக்கு தேக்கத்திற்கு உள்ளாகியது என்பதற்காக அது தொடங்கிய இடத்தில் இருக்க வேண்டும் என்று யாரும் முடிவெடுக்க முடியாது.

 

 

 

தேவை ஏற்படின் தொடரும்..

No comments:

Post a Comment